Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 23 May 2018

Type
Ordinary
Gazette no.
21
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notifications
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 23, 2018 வைகாசி 9, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 40, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (G1)த் துறை, 26 மார்ச் 2018.] தமிழ்நாடு 1981 ஆம் ஆண்டு தொழிலக நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தர தகுதியை வழங்குதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 46/1981) 10-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1981-ஆம் ஆண்டு (தொழிலக நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நிரந்தர தகுதியை வழங்குதல்) விதிகளில் கீழ்க்காணும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

2. இதன் மூலம் செய்யப்படுகிற திருத்தங்கள், இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

தி ருத்த ங்க ள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) 6-ஆம் விதியில் (2) மற்றும் (3) துணை விதிகளுக்குப் பதிலாக, கீழ்க்கண்டவை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அதாவது:-

(2)" (2) ஒவ்வொரு வேலை அளிப்பவரும், ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், படிவம் 1-ன் (9) நெடும்பத்தி நீங்கலாக, படிவம் 1-ல், நாளதுவரையிலான பட்டியல் ஒன்றைத் தொகுத்து, யாதொரு வேலை நாளின் பணி நேரத்தில், தொழிலாளர்கள், பட்டியலைப் பார்வையிடுவதற்காக, தொழிலக நிறுவனத்தில் அனைவருக்கும் நன்கு தெரிய கூடிய ஏதேனும் பகுதியில் அப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டும்.

(3) அவ்வாறு தொகுக்கப்பட்ட நாளது வரையிலான பட்டியலின் நகல் ஒன்றினை, (2) துணை விதியின் கீழ் ஒவ்வொரு வேலையளிப்பவரும், பட்டியலானது, (2) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, தொழிலக நிறுவனத்தின் தொழிலாளர்கள் பார்வையிடுவதற்காக காட்டி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு ஒன்றுடன், ஒவ்வொரு ஆண்டும் முடிவடைகிற நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள், தொடர்புடைய ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் இந்தத் துணை விதியில் கோரியுள்ளவாறு, படிவம் 1-ல் உள்ள விவரங்களுடன், அந்த ஆண்டுக்கான விவரங்களையும் படிவம் 2-ல் தொடர்புடைய ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். இந்தத் துணை விதியின் கீழ், பதிவு அஞ்சல் மூலம் அல்லது வேறு வகையில் படிவம் 1 மற்றும் படிவம் 2-ல் ஆய்வாளரிடம் விவரங்களை அனுப்பியதற்கான ஒப்புகையைப் பெற வேண்டும்.

ஆனால், தமிழ்நாடு 1950-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளின் 100-ஆம் விதியைச் சேர்ந்த (2) துணைவிதியில் கோரியுள்ளவாறு, படிவம் 22-ல் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டு கணக்கு விவர அறிக்கை அளிக்கப்பட்டிருந்தால், தொழிலக நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த வேலையளிப்பவர், படிவம் 2-ல், ஆண்டு கணக்கு விவர அறிக்கையை அளிக்க வேண்டியதில்லை''.

[ 1 ]

iii-1a-(21) (T Sup)—12 (2) படிவம் 2-ல்,-

(a) ''19-ஜூன் 30 ஆம் நாளுடன் / டிசம்பர் 31 ஆம் நாளுடன் முடிவடைகிற அரையாண்டிற்கான அரையாண்டு கணக்கு விவர அறிக்கை'' என்ற தலைப்பிற்கு பதிலாக, ''20-டிசம்பர் 31 ஆம் நாளுடன் முடிவடைகிற ஆண்டுக்கான ஆண்டு கணக்கு விவர அறிக்கை'' என்ற தலைப்பு அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(b) (6) மற்றும் (7) ஆம் எண்களுள்ள இனத்தில், ''ஜூன் 30 ஆம் நாளுடன் / டிசம்பர் 31 ஆம் நாளுடன் முடிவடைகிற அரையாண்டு'' என்று தொடருக்குப் பதிலாக, முறையே டிசம்பர் 31 ஆம் நாளுடன் முடிவடைகிற ஆண்டு'' என்ற தொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்,

(c) (8) இனத்தில், ''ஜூலை முதல் நாள் / ஜனவரி முதல் நாள்'' என்ற தொடருக்குப் பதிலாக, ''ஜனவரி முதல் நாள்'' என்ற தொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள் இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 45, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 9 ஏப்ரல் 2018.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 40Bஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு மற்றும் 112ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 2005ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாப்பு அலுவலர்கள் விதிகளில் (கடமைகள், தகுதிகள் மற்றும் பணி நிபந்தனைகள்) வெளியிடக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு திருத்தங்கள், இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் சொல்லியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 032, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை, S.F. எண்.47/1, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

திருத் தங் கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 3, துணை விதி (1)ல்,-

(i) பகுதி (a)ல், ''இயற்பியல் அல்லது வேதியியலில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொழிற்சாலையில், ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத கால அளவிற்கு, மேற்பார்வையாளர் பதவித்தரத்தில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது'' என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்.

(ii) பகுதி (b)க்குப் பதிலாக, பின்வரும் பகுதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

''இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிற்சாலை ஆலோசனைப் பணி மற்றும் தொழிலாளர் நிறுவனங்களின் தலைமை இயக்ககத்தின் கீழ் யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தொழிலகப் பாதுகாப்பில் யாதொரு பட்டயப்படிப்பு அல்லது மத்திய அல்லது மாநில சட்டங்களின் அல்லது தொழிற்கல்வித் துறை அல்லது யாதொரு மாநில/மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியின் கீழ் வரும் பகுதிகள்/இந்திய அரசின் தொழில்நுட்பக்கல்வி வாரியத்தின் கீழ் இணைக்கப்பட்ட யாதொரு பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்ட ஒராண்டு கால அளவிற்கு குறையாத, இணையான பாடத்திட்டத்துடன் கூடிய தொழிலகப் பாதுகாப்பில் முழுநேர பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பினை பெற்றிருத்தல்; மற்றும்''

(iii) துணை விதி (2)ல், இரண்டாவது வரம்பு நிபந்தனைக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

''மேலும், தொழிற்சாலையில் நியமனம் செய்யப்பட்ட பாதுகாப்பு அலுவலர், அவர் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்குள், அத்தொழிற்சாலையில் பணிபுரிகிற பெரும்பான்மையான பணியாளர்களால் பேசப்படும் மொழியில் போதிய மொழியறிவினைப் பெற்றிருப்பதை தொழிற்சாலையின் அனுபோகதாரர் உறுதி செய்ய வேண்டும்''.

(2) விதி 5ல்-

(i) துணை விதி (1)ல்,--

(a) ''ஏனையவை ஆங்கிலத்தில்'' என்ற சொற்றொடருக்கு பதிலாக ''ஏனையவை ஆங்கிலத்தில் மற்றும் முக்கியமான இணையவழி வேலைவாய்ப்பு வலைவாயில்''

(b) ''இரண்டாவது வரம்புநிபந்தனையில், முகமைப்பணி அடிப்படையில் தொழிற்சாலைகளின் ஆய்வாளரகத் துறை'' என்ற சொற்றொடருக்கு பதிலாக ''முகமைப்பணி அடிப்படையில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் என்ற சொற்றொடர் மற்றும் முகமைப்பணி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, துணை விதி (1)ல் வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை''.

3

(c) ''இரண்டாவது வரம்புநிபந்தனைக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

மேலும், அதே அனுபோகதாரருக்குச் சொந்தமான தொழிற்சாலை அல்லது தொழிற்சாலை குழுமங்களில் உள்ள பணியாளர் உறுப்பினர்களிடையேயிருந்து பணி மாற்றம் அல்லது பதவி உயர்வு ஆகியவற்றின் வாயிலாக, பதவியிடம் நிரப்பப்படுவதற்கு கருதப்படும் போது, மத்திய அல்லது மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசு சார்பு நிறுவனம், காலிப்பணியிடம் குறித்து உரிய முறையில் வாய்ப்புள்ள பணியாளர்களுக்கிடையே பரந்தளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

(ii) துணை விதி (2)-க்குப் பதிலாக, பின்வரும் துணைவிதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

''(2) பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான பணி நியமனத்திற்காக தெரிவு செய்தல், நேரடி நியமனம் வாயிலாக அல்லது பணியிட மாற்றம் வாயிலாக அல்லது பதவி உயர்வு அல்லது நியமனம் மூலம் பதவிக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடையேயிருந்து தொழிற்சாலையின் அனுபோகதாரரால் நியமிக்கப்பட்ட தெரிவு செய்யும் குழு வாயிலாக செய்யப்பட வேண்டும்.''

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள் இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 46, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 10 ஏப்ரல் 2018.] 1979 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/1979) 35 ஆம் பிரிவின் (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 1983ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) (தமிழ்நாடு) விதிகளில் செய்யக்கருதியுள்ள கீழ்க்காணும் வரைவுத் திருத்தம், மேற்சொன்ன சட்டத்தின் 35 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் கோரியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு மாதம் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று இதனால் அறிவிக்கப்படுகிறது. அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும், மறுப்புரை மற்றும் கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத் திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், 56 ஆம் விதியின் (2) துணை விதிக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

'ஆனால், பின்வருமாறு இருப்பின், முதன்மை வேலை அளிப்பவரால் படிவம் -XXiV இல், ஆண்டு கணக்கு விவர அறிக்கை அனுப்பப்படத் தேவையில்லை. அவையாவன-

(அ) தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு உணவக நிறுவனங்கள் விதிகளின் 42-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் Xiii- இல், ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(ஆ) தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) விதிகளின் 35-ஆம் விதியின் (ii) துணை விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் Xii- இல், ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(இ) தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு மலைத்தோட்ட விதிகளின் 83ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண்.28-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(ஈ) தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளின் 43-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் XiX- இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்''.

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள் இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

4

[அரசாணை (நிலை) எண் 48, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, நாள் 19 ஏப்ரல் 2018.]

அறிவிக்கை

1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 30 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் 1953 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் (தமிழ்நாடு) விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார் இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 30 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாராக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது அதாவது:-

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில் விதி 21-இன்(4) துணை விதியின் பகுதி (iii)-இன் வரம்பு நிபந்தனையில் ''தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகள்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர். ''அல்லது தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும், பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) விதிகளின் 242 ஆம் விதியில் கோரப்பட்டுள்ளவாறாக, அட்டவணை (Xiii)-இன் கீழ் உள்ள படிவம் (XXV)-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள் இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-III_Section-1a-T-Sup.