Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments.

Published 23 May 2018

Type
Ordinary
Gazette no.
21
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notification under the Payment Act
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 21] சென்னை, புதன்கிழமை, மே 23, 2018 வைகாசி 9, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (2ப) எண் 21, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 பிப்ரவரி 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதிய பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடைந்த நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவு அறிவிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, மேற்படி சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 16-07-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு 2-இல், 479 முதல் 482 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/420/2014 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டிடம் கட்டுதலில் ஈடுபட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு ஊதிய வீதங்களை, விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

[1]

DTP-ii-2-(21) (T Sup)—12

விவர அட்டவணை

சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டிடம் கட்டும் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள் தொடர் எண் (1)

(2) (1) கல் உடைப்பவர் அலலது கல்

நொறுக்குபவர் அல்லது கல் நசுக்குபவர் வகை - i வகை - ii

(2) கொத்தனார் அல்லது செங்கல் பாவுபவர் வகை - i வகை - ii

(3) தச்சர்

வகை - i வகை - ii

(4) வண்ணம் பூசுபவர் அல்லது

மெருகெண்ணெய் பூசுபவர் வகை - i வகை - ii

(5) கம்பி வளைப்பவர் உட்பட பொருத்துநர் வகை - i வகை - ii

(6) சாலைக் குழாய்ப் பணிகளுக்காக குழாய் வேலை செய்பவர் வகை - i வகை - ii

(7) மின் பணியாளர்/ஆய்வகத் தொழில் நுட்ப பணியாளர் வகை - i வகை - ii

(8) இயந்திர கம்மியர் வகை - i வகை - ii

(9) கிணறு தோண்டுபவர்

(i) ஆழ்க் கிணறு தோண்டுபவர் (ii) சாதாரணக் கிணறு தோண்டுபவர் (10) பற்றவைப்பவர்

நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் (3)

மண்டலம் மண்டலம் மண்டலம் A

B

C ரூ. காசு ரூ. காசு ரூ. காசு 502.00 486.00

493.00 480.50

474.50 469.50 504.00 493.00

502.00 486.00

480.50 474.00 504.00 493.00

502.00 486.00

480.50 474.00 486.00 474.00

480.50 469.00

469.50 456.00 486.00 474.00

480.50 469.00

469.50 456.00 486.00 474.00

480.50 469.00

469.50 456.00 502.00 486.00

493.00 480.50

474.00 469.50 502.00 486.00

493.00 480.50

474.00 469.50 516.50 486.00

504.00 480.50

493.00 474.00 504.00 502.00 480.50 (11) தலைமைக் கூலியாள் 374.50 371.00 366.00 (12) கூலியாள் மஸ்தூர்

வகை - i வகை - ii

(13) தண்ணீர் தெளிப்பவர் அல்லது

கலவைக்காரர் (சாலை பரத்துதல்) ஒட்டு போடும் கருவி இயக்குபவர்

366.00 358.50

362.00 355.00

357.00 350.00 461.00 454.00 449.50 (14) மரம் அல்லது கல் அடைப்பவர் 461.00 454.00 449.50 (15) சேறு அகற்ற கிணற்றுள் செல்பவர்வகை - i வகை - ii 486.00 474.00 480.50 469.50 474.00 463.00 3 பணியாளர்களின் வகைகள் தொடர் எண் (1)

(2) (16) சுத்தியல்காரர்

(17) ஓலை முடைபவர்

நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் (3)

மண்டலம் மண்டலம் மண்டலம் A

B

C ரூ. காசு ரூ. காசு ரூ. காசு 465.00 461.00 454.00 456.50 451.50 445.00 (18) மேஸ்திரி மேற்பார்வையாளர் 516.50 504.00 493.00 (19) கருமார்

வகை - i வகை - ii

(20) மரம் அறுப்பவர்

504.00 493.00

502.00 486.00

480.50 474.00 493.00 486.00 474.00 (21) இடைவெளி அடைப்பவர் 465.00 461.00 454.00 (22) கலைவை இயந்திரம் இயக்குபவர் உட்பட

கலவைக்காரர்

(23) பம்ப் இயக்குபவர்

(24) கலவை இயந்திரம் இயக்குபவர் (25) லாரி ஓட்டுநர்

480.50 474.00 463.00 493.00 480.50 474.00 (26) லாரி கிளீனர் (Lorry Cleaner) 465.00 461.00 454.00 (27) ரோடு உருளை இயந்திரம் ஓட்டுநர் பாரச்

சக்கர ஓட்டுநர்

(28) குமாஸ்தா எழுத்தர் அல்லது நேரக்

காப்பாளர் பண்டகக் காப்பாளர் (29) கனரக பொறியியல் கட்டுமானம் அல்லது கனரக இயந்திர பாலம் அமைப்பு வேலையில் ஈடுபடுத்தப்படும் கலாசி அல்லது சீராங்கு முதலானோர் வகை - i வகை - ii

493.00 480.50 474.00 474.00 469.50 463.00 516.50 504.00

504.00 502.00

493.00 480.50 (30) பிக்கோட்டா பணியாளர் (Picothaman) 451.50 445.00 440.00 (31) காவலாள் உதவியாள் 451.50 445.00 440.00 (32) மொசைக் மெருகேற்றுபவர் 504.00 502.00 480.50 (33) ஜேசிபி இயக்குபவர்

529.00 516.50 505.50 விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடுகள் பின்வருமாறு:-

மண்டலம்-A: அனைத்து மாநகராட்சிகள் மற்றும் காப்பு வனம் மற்றும் அதனைச் சுற்றி ஐந்து கி.மீ. உட்பட்ட பகுதியில் நடைபெறும் வேலைகளும் கீழ்க்கண்ட மலை வாழிடங்களும் அடங்கும்.

மலை வாழிடங்கள்

(1) நீலகிரிப் பீடபூமி

(2) கோயமுத்தூர் மாவட்டத்தில் வால்பாறை உள்வட்டம் (3) சேர்வராயன் குன்றுகள்

(4) கொடைக்கானல்

(5) பீர்மேடு

(6) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சரக களக்காடு காப்புவனப்பகுதியில் செங்கல்தேரி

(7) விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் சரக திருவில்லிப்புத்தூர் காப்புவனப்பகுதியிலுள்ள முதலியார்ஊத்து (8) நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வட்டம்

DTP-ii-2-(21) (T Sup)—1a DTP-ii-2-(21) (T Sup)—2 DTP-ii-2-(21) (T Sup)—24 (9) வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகள்

மண்டலம்-B: அனைத்து வகை நகராட்சிகளும் அடங்கும்.

மண்டலம்-C: A மற்றும் B மண்டலங்களில் சேர்க்கப்படாத ஏனைய பகுதிகள் அனைத்தும்

(2) தொழிலாளர்களை நிலை-1 மற்றும் நிலை-2 என்ற வகைப்பாடு உடல் திறன், தனித்திறமை, இயங்குதிறம் மற்றும் பணி முடிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலானது.

(3) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தில் அவர்கள் பெறும் ஊதியம் அதே வகையிலான தொழிலாளர்களுக்கு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள ஊதியத்திற்குக் குறையக்கூடாது. மேற்குறிப்பிட்ட கூலி வீதங்களைக் கணக்கிடும்போது ஒரு நாள் பணி என்பது எட்டு மணி நேர வேலையாகும். பணியாளர் எட்டு மணிநேரத்திற்கும் குறைவாகப் பணியாற்றினால் அதற்குத் தக்கவாறான வீதத்தில் ஊதியம் கணக்கிடப்படவேண்டும்.

(4) அகவிலைப்படி : (1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ. 2.17 (இரண்டு ரூபாய் பதினேழு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2ப) எண் 43, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 ஏப்பரல் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு,ம் 04-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு 2-இல், 606 முதல் 607 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/685/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் துணி ஆலைகளில் தனியாக அல்லது ஒன்றாகச் சேர்ந்து பணி மேற்கொள்ளப்படுகிற ஆலைகள், நெசவாலைகள், நூற்பாலைகள், முன்வரையற்ற ஆலைகள் உட்பட துணி ஆலைகளில் பஞ்சடிக்கும் அறை, சிக்கெடுத்தல், நூலாக இழுத்தல், கைவிசைச் சட்டங்கள் நூற்றல், நூலிழைத்தல், முறுக்கேற்றுதல், சுற்றுதல், சிப்பம் செய்தல், பாவு போடுதல் போன்று மேற்சொன்ன ஆலைகளில் பல்வேறு செயல்முறைகளிலும் துணி ஆலைகளில் ஏனைய செயல்முறைகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ள தொழில் பழகுநர்களுக்கு, நாளொன்றுக்கு 261.00 ரூபாயும் (ரூபாய் இருநூற்று அறுபத்து ஒன்று மட்டும்) இதன்கீழ் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களில் வகை செய்துள்ளவாறாக அகவிலைப்படியும் என வழங்கத்தக்கக் குறைந்தளவு ஊதிய5 வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் செளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விளக்கங்கள்:- (1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், தொழிலாளர்களுக்கு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்,

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்களொன்றுக்கு ரூ.01.60 (ரூபாய் ஒன்று மற்றும் அறுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் இடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

அரசாணை (நிலை) எண் 53, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 27 ஏப்ரல் 2018.] வீட்டு உபயோகத் துணி வகை உற்பத்தித் தொழிலில் அதாவது படுக்கையறைத் துணிவகைகள், குளியலறைத் துணிவகைகள், வரவேற்பறைத் துணிவகைகள், அலங்காரத் துணிவகைகள், சமையலறைத் துணிவகைகள் மற்றும் ஒத்த இனங்கள் ஆகியவற்றில் பணியமர்த்துவதற்கு, 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) கீழ் குறைந்தளவு ஊதிய வீதங்கள் நிர்ணயிக்கப்படவேண்டுமென்று தமிழ்நாட்டு ஆளுநர் கருதுவதாலும்;

2. எனவே, தற்போது, மேற்சொன்ன சட்டத்தின் 27 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன பிரிவில் கோரியுள்ளவாறாக, மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையின் பாகம்-i இல் மேற்சொன்ன தொழிலை சேர்ப்பதற்கான அவருடைய நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

3. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு முன்னர், இவ்வாறு மேற்சொன்ன தொழிலை சேர்க்கக் கருதப்பட்டது தொடர்பாக, வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் மறுப்புரை மற்றும் கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006 தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-23.Ordinary_21_Part-II_Section-2-T-Sup.