Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU LA Bill No. 20 of 2018 (TAMIL)

Published 31 May 2018

Type
Extraordinary
Gazette no.
195
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2018-05-31.Extraordinary_195_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2018 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 195A] சென்னை, வியாழக்கிழமை, மே 31, 2018 வைகாசி 17, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2018-ஆம் ஆண்டு மே திங்கள் 31-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 20/2018

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச்சட்டம் 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக (திருத்தச்) குறுந்தலைப்பும் தொடக்கமும்.

சட்டம் என வழங்கப்பெறும்

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

(தமிழ்நாடு

11ஆம் பிரிவிற்கான சட்டம் 8/1971)

திருத்தம் 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11ஆம் பிரிவில் (3)ஆம் உட்பிரிவில் வரம்புரைக்குப் பின்பு பின்வரும் வரம்புரையை புகுத்துதல் வேண்டும் அதாவது:-

"இரண்டாம் வரம்புரை:- மேலும், துணைவேந்தராக நியமிக்கப்படும் நபர் ஒருவர் அவரது பதவிக்காலத்தின்போது எழுபது வயதினை நிறைவெய்துவாரானால், தனது பதவியிலிருந்து அவர் ஓய்வு பெறுதல் வேண்டும்".

துணைவேந்தர் தொடர்ந்து பதவிவகித்தல்.

3. இந்தச்சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முதன்மைச்சட்டத்தில் எது எவ்வாறு காணப்படினும், இந்தச்சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தேதிக்கு முன்பு அடுத்து அவ்வாறு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பதவி வகிப்பவர் அவர் எந்தத் தேதியிலிருந்து பதவி வகித்தாரோ அந்தத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலத்திற்கு அவ்வாறு துணை வேந்தராகத் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும். 195A-Ex-IV-1-T—1 [ 1 ] 2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்க காரண விளக்கவுரை

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 8/1971) துணை வேந்தர் பதவியை வகிப்பதற்கான உச்ச வயது வரம்பினைக் குறித்துரைக்கின்ற வகைமுறை எதுவும் இல்லை. கல்வியாளர்கள் பெறும் அறிவானது இம்மாநிலத்தில் வேளாண் மற்றும் தொடர்புடைய அறிவியலில், கற்பதையும் ஆராய்ச்சி தொடர்வதையும் மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவதற்கு இயல்விக்கும் வகையில் துணை வேந்தரின் ஓய்வு பெறும் வயதினை, 2009ஆம் ஆண்டு மையப்பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் (மையச் சட்டம் 25/2009) உள்ளவாறு துணைவேந்தரின் ஓய்வுபெறும் வயதிற்கு இணையாகக் குறித்துரைப்பதற்குக் கருதப்பட்டுள்ளது. அதற்கிணங்கியவகையில் துணை வேந்தரின் ஓய்வு பெறும் வயதை எழுபதாக குறித்துரைப்பதற்குக் கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 8 / 1971ஐ திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

2. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

இரா. துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 May 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-05-31.Extraordinary_195_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2018-05-31.Extraordinary_195_Part-IV_Section-1.