©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 2.40 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 202A] சென்னை, வியாழக்கிழமை, ஜூன் 7, 2018 வைகாசி 24, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்பொருளடக்கம்
சட்டமுன்வடிவுகள்சட்டமுன்வடிவுகள்
பக்கங்கள்.
எண் 21/2018—தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு
விடுமுறை நாட்கள்) திருத்தச் சட்டம் .. .. .. .. 2-4 எண் 22/2018—தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 5-6 202A-Ex-IV-1-T—1
[ 1 ]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்
130-ஆம் விதியின்கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 21/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 21
1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு
1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய,
பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசால், அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
8ஆம் பிரிவிற்கான
2. (இதன்பின் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான).
திருத்தம்.
(தமிழ்நாடு சட்டம் XXX III/1958). 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு
விடுமுறை நாட்கள்) சட்டத்தின் 8ஆம் பிரிவில்,-
(1) இரண்டு இடங்களில் காணப்படுகின்ற "ஓராயிரம் ரூபாய்" எனும் சொற்றொடருக்காக "ஐந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) "இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக "பத்தாயிரம்
ரூபாய்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
9ஆம்
(3) முதன்மைச் சட்டத்தின் 9ஆம் பிரிவில் "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்காக
"ஆயிரம் ரூபாய்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
பிரிவிற்கான திருத்தம்.
12ஆம்
பிரிவிற்கான திருத்தம்.
(4) முதன்மைச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் "ஐந்நூறு ரூபாய்" எனும் சொற்றொடருக்கு பதிலாக "ஐந்தாயிரம் ரூபாய்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
1958ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் XXXIII/1958) 8, 9 மற்றும் 12ஆம் பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டத் தொகை பத்து ஆண்டுகளுக்கு மேலாக திருத்தம் செய்யப்படவில்லை. ஆகையால் அரசானது, சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக கூறப்பட்ட பிரிவுகளில் குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டத்தொகையை தக்கவாறு அதிகரிப்பதற்கு கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் XXXIII/1958-ஐ திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
2. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க
விழைகிறது.
டாக்டர் நிலோபர் கபில், டாக்டர் நிலோபர் கபில்,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 22/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 22
1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தமிழ்நாடு மாநிலத்திற்கு அதனுடைய 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம் தமிழ்நாடு மாநிலத்திற்கு அதனுடைய
பொருந்துகையில் மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு. பொருந்துகையில் மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு, 1. (1) இந்தச் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு
திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.
அளாவுகை மற்றும் தொடக்கம்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும்.
(3) இது, மாநில அரசால், அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச் சட்டம் LXIII/1948.
7-AA எனும் பிரிவிற்கான திருத்தம்.
2. 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 7-AA எனும் பிரிவில் (1)-ம் உட்பிரிவில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறையாத தொகையொன்று" என்கிற சொற்றொடருக்குப் பதிலாக "ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாத தொகையொன்று" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை.நோக்கக் காரண விளக்கவுரை.
எம்.சி. மேத்தா எதிரிடை தமிழ்நாடு மாநிலம் (AIR 1991 SC 417) எனும் வழக்கில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் ஆபத்தான தன்மையுடைய பணியமர்த்தத்தில் பாதிப்படைபவர்களைக் கருத்தில் கொண்டு பெரியோர் மற்றும் குழந்தைகள் ஆகிய இரு பிரிவினருக்கும் கட்டாயமாகக் காப்பீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.50,000/- மதிப்புடைய தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும். தொகுப்புக் காப்பீட்டிற்கான காப்பீட்டுக் கட்டணத்தை பணி அளிப்பவர் செலுத்தக்கூடிய செயலானது, பணி நிபந்தனையின் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்றும் கூட உச்சநீதிமன்றம் பணிப்புரை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு தீப்பெட்டி அல்லது பட்டாசு தொழிற்சாலை உரிமையாளரின் கடமையாக இதனைச் செய்வதற்கு தமிழ்நாடு மாநிலத்தில் அந்தச் சட்டத்தின் பொருந்துகையில் அது இருக்க வேண்டும் மற்றும் அந்த தொழிற்சாலையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளரும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறையாத தொகை ஒன்றிற்கான காப்பீட்டினைப் பெற வேண்டும் என்பதற்காக 29/2007 எனும் தமிழ்நாடு சட்டத்தால் 7-AA எனும் பிரிவு புகுத்தப்பட்டது. தற்போது அரசு குறைந்த அளவுக் காப்பீட்டுத் தொகை ரூபாய் ஐம்பதினாயிரம் என்று இருப்பதை ரூபாய் ஒரு லட்சமாக அதிகப்படுத்துவதென முடிவு செய்துள்ளது.
2. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க
விழைகிறது.
டாக்டர் நிலோபர் கபில், டாக்டர் நிலோபர் கபில்,
தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.