Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU. L.A. Bill No. 23 of 2018 (TAMIL)

Published 11 June 2018

Type
Extraordinary
Gazette no.
204
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1T
Identifier
in.gazette.tamilnadu.2018-06-11.Extraordinary_204_Part-IV_Section-1T
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2018 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 204A] சென்னை, திங்கட்கிழமை, ஜூன் 11, 2018 வைகாசி 28, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 11-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க-காரண

விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின்

130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 23/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 23

1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தை மேலு882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தை மேலும் திருத்தம் ம் திருத்தம் செய்வதற்கானசெய்வதற்கான

ஒரு சட்ட முன் வடிவுஒரு சட்ட முன் வடிவு

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக :—

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 2. 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் 2-ம் பிரிவில், "மரம்" என்பதற்கான பொருள் 2 ஆம் பிரிவிற்கான

v/1882.

திருத்தம்.

வரையறைக்குப் பதிலாக, பின்வரும் பொருள் வரையறை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :—

"மரம்" என்பது அடிமரங்களையும் புதர் செடிகளையும் உள்ளடக்கும்;".

[ 1 ] 204A-Ex-IV-1-T 2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்க-காரண நோக்க-காரண விபரபரவுரைவுரை

1927-ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டத்தின்படி (மையச்சட்டம் XVI/1927) மரத்தை வெட்டிச் சாய்த்து அல்லது கொண்டு செல்வதற்கு அனுமதி தேவைப்படுவதிலிருந்து வனம் அல்லாத பகுதிகளில் வளர்ந்துள்ள மூங்கில் மரத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் பொருட்டு "மரம்" என்ற பொருள் வரையறையிலிருந்து "மூங்கில் மரங்கள்" என்ற சொல்லை விட்டு விட்டு ஒன்றியத்து அரசு 2017-ஆம் ஆண்டு இந்திய வனத் (திருத்தச்) அவசர சட்டத்தை (மைய அவசரச் சட்டம் 6/2017) சாற்றம் செய்திருக்கிறது.

2. 1927-ஆம் ஆண்டு இந்திய வனச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மேற்சொன்ன மாற்றத்திற்கு ஒத்தியைவாக, 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் v/1882) "மரம்" என்ற சொல்லுக்கான பொருள் வரையறையிலிருந்து "மூங்கில் மரங்கள்" என்ற சொல்லை விட்டுவிடுவதற்கு மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

3. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

திண்டுக்கல் சி. சீனிவாச‹,

வனத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

செய லாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 11 June 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-06-11.Extraordinary_204_Part-IV_Section-1T/. Archive identifier in.gazette.tamilnadu.2018-06-11.Extraordinary_204_Part-IV_Section-1T.