| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 223A] சென்னை, திங்கட்கிழமை, ஜூன் 25, 2018 ஆனி 11, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 25-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 24/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 24
1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்கள் 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்தல்) சட்டத்தை நீக்கறவு (தனி அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்தல்) சட்டத்தை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு. செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டமானது 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்களைப் பணியமர்த்தம் செய்தல்) நீக்கறவு செய்தல் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இந்தச் சட்டமானது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 17/1986.
17/1986 தமிழ்நாடு சட்டம் நீக்கறவு செய்தல்.
2. 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்களை பணியமர்த்தம் செய்தல்) சட்டமானது ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.
2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்க காரண விளக்க உரை.நோக்க காரண விளக்க உரை.
தொடக்க வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்களின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு பொது நலன் கருதி வரையறுக்கப்பட்ட ஒரு கால அளவிற்கு தனி அலுவலர்களைப் பணியமர்த்துவதற்காகவும், குழுக்களுக்கும் அல்லது குழுமங்களுக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கு வகைசெய்வதற்கென 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பணி கூட்டுறவுச் சங்கங்கள் (தனி அலுவலர்களைப் பதவியமர்த்தம் செய்தல்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 17/1986) இயற்றப்பட்டது. அனைத்து தொடக்க வேளாண்மைப்பணிக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேர்தல்கள் நடத்தி 1990 அக்டோபர் திங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுமங்கள் பதவியேற்றதன் விளைவாக மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 17/1986, பழையதாகி செயலிழந்த சட்டமாகிவிட்டது. எனவே மேற்சொன்ன 17/1986 தமிழ்நாடு சட்டத்தை நீக்கறவு செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.
2. இச்சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
செல்லூர் கே. ராஜூ,செல்லூர் கே. ராஜூ,
கூட்டுறவுத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன்,
செயலாளர்.