©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 4.80 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 227A] சென்னை, புதன்கிழமை, ஜூன் 27, 2018 ஆனி 13, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம்
சட்டமுன் வடிவுகள் :-
பக்கங்கள்.
எண் 25/2018 - சென்னை மாநகராட்சித் (திருத்தச்) சட்டம் .. 2 - 4
எண் 26/2018 - தமிழ்நாடு வேளாண் விளைபொருளை
சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் .. .. .. .. 5 - 6
எண் 27/2018 - தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள்
(திருத்தச்) சட்டம் .. .. .. .. 7 - 12
[1]
227A-Ex-IV-1—12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 27-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 25/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 25
1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டமுன் வடிவு.
இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் (திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (இதில், இதன் பின்பு முதன்மைச்சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) தமிழ்நாடு சட்டம் IV/1919.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் IV-ஆம் இணைப்புப் பட்டியலில், IV-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.
பகுதி VI-இல், 29-C எனும் விதிக்கு பின்னர், பின்வரும் விதிகள் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"29-D. செலுத்தங்களுக்கான உரிய தேதிக்குப்பின்னர், தொகை ஏதேனும் செலுத்தப்படாது இருந்தால், வரிவிதிப்புக்குரியவர், செலுத்தவேண்டிய தொகையுடன் கூடுதலாக, இரண்டு விழுக்காட்டிற்கு மிகையல்லாத அத்தகைய வீதத்தில் வகுத்துரைக்கப்படலாகிறவாறு தனிவட்டி செலுத்துதல் வேண்டும்.
29-E. வரிவிதிப்புக்குரியவரால் செய்யப்பட்ட மேல்முறையீட்டில்
வரிவிதிப்பு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட ஆணைகளின்
விளைவாக மாநகராட்சிக்கு உரிய நிலுவைத் தொகை இருக்கிறவிடத்து,
வரிவிதிப்புக்குரியவரானவர், ஆணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பதினைந்து
நாட்களுக்குள், சொல்லப்பட்ட தொகையை, செலுத்த வேண்டிய தேதியிலிருந்து,
இரண்டு விழுக்காடு தனி வட்டியுடன் செலுத்துதல் வேண்டும்.
29-F. எந்த ஒரு சொத்துவரி செலுத்துபவரும் அரையாண்டு தொடக்கத்
தேதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் சொத்துவரி செலுத்துகிறாரோ
அவருக்கு, நிகர சொத்து வரி செலுத்தும் தொகைக்கு ஐந்து சதவீதம் அல்லது
அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுதல் வேண்டும்.".
3. முதன்மைச் சட்டத்தின் V -ஆம் இணைப்புப் பட்டியலில், பகுதி II விதி 14 இல், (h) எனும் கூறுக்கு பின்னர் மற்றும் வரையறைக்கு முன்னர் பின்வரும் கூறானது, புகுத்தப்படுதல் V-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.
வேண்டும், அதாவது: -
"(i) IV-ஆம் இணைப்பு பட்டியலின் 29-F எனும் விதியின்படி
வரிவிதிப்புக்குரியவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3நோக்கக்-காரண-விளக்கவுரை.நோக்கக்-காரண-விளக்கவுரை.
1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் IV/1919), குறிப்பிட்ட காலத்தில் சொத்து வரி செலுத்தும் வரிசெலுத்துநருக்கு வரிசெலுத்தத்திற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கும் மற்றும் உரிய காலத்திற்குள் கூறப்பட்ட வரியை செலுத்தாத வரிசெலுத்துநருக்கு வட்டியை விதிப்பதற்கும் தற்பொழுது வழிவகை இல்லை. நான்காவது மாநில நிதி ஆணையமானது சொத்துவரியை காலந்தாழ்த்தாமல் செலுத்தும் வரி செலுத்துநருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும் மற்றும் கூறப்பட்ட வரியை காலந்தாழ்த்தி செலுத்துவதற்காக வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது.
அரசானது, அப்பரிந்துரைகளை கவனமுடன் ஆய்வு செய்த பின்பு, ஏற்றுக்கொள்வதென முடிவு செய்துள்ளது. அதன்படி அரசானது தமிழ்நாடு சட்டம் IV/1919ஐ தக்கவாறு திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது.
2. இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ்.பி. வேலுமணி,எஸ்.பி. வேலுமணி,
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன்,
செயலாளர்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 52018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 27-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண
விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம்
விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 26/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 26
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் 987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக.-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளை
சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, 2018-ஆம் ஆண்டு, மே 31-ஆம் நாள் நடைமுறைக்கு வந்திருப்பதாக
கொள்ளப்படுதல் வேண்டும்.
33 ஆம் 2. 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல்
(முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33-ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் வரம்புரையில்
தமிழ்நாடு சட்டம் 27/1989.
பிரிவிற்கான திருத்தம்.
"ஏழு ஆண்டுகள்" என்கின்ற சொற்றொடருக்கு பதிலாக "ஏழு ஆண்டுகள் மற்றும் ஆறு
மாதங்கள்" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் 2018-ஆம் ஆண்டு செல்லுந்தன்மை- யுடையதாகுதல்.
மே திங்கள் 31-ஆம் நாளன்று மற்றும் நாளிலிருந்து செல் திறத்துடன் சந்தைக் குழுக்களின்
தனி அலுவலர் ஒருவரின் அதிகாரங்களைச் செயலுறுத்தம் மற்றும் செயற்பணிகளைச்
செய்து முடிக்கும் ஒவ்வொரு நபரும் இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறு
முதன்மைச் சட்டத்தின் 33-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி மேற்சொன்ன சந்தைக்
குழுக்களின் அத்தகைய தனி அலுவலராக பணி அமர்த்தம் செய்யப்பட்டிருப்பதாகக்
கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும்
தேதியுடன் முடிவடையும் மற்றும் 2018-ஆம் ஆண்டு மே திங்கள் 31-ஆம் நாளன்று
தொடங்கும் காலத்தின்போது மேற்சொன்ன தனி அலுவலர்களால் செய்யப்பட்ட
எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின்படி திருத்தம்
செய்யப்பட்டவாறு முதன்மை சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக
அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்க - காரண - விளக்கவுரைநோக்க - காரண - விளக்கவுரை
1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளை சந்தைப்படுத்துதல் (முறைபடுத்துதல்) சட்டத்தின் 33-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது மொத்தத்தில் மூன்றாண்டுகளுக்கு மிகாத காலமொன்றிற்காக நிலுவையிலுள்ள ஒரு புதிய சந்தைக் குழுவை அமைப்பதற்கும் சந்தைக் குழுவின் அலுவற்பணிகளை மேலாண்மை செய்வதற்கு ஒரு தனி அலுவலரை பணியமர்த்தம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கிறது. மேற்சொன்ன வகைமுறையின் விளைவாக மேற்சொன்ன சந்தைக் குழுக்களின் அலுவற் பணிகளை மேலாண்மை செய்வதற்கு 23 சந்தை குழுக்களுக்கு தனி அலுவலர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்தனர் மற்றும் அவர்களுடைய பதவிக் காலம் 25/2017 தமிழ்நாடு சட்டத்தின் விளைவாக ஏழு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. தனி அலுவலர்களின் பதவிக்காலம் 30-05-2018 அன்று முடிவடைவதால் மற்றும் சந்தைக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு சிறிது காலம் ஆகும் என்பதால் 30-05-2018 தேதிக்கு பின்பு மேலுமான ஆறு மாதங்கள் காலத்திற்காக அல்லது சந்தைக் குழுக்களை மறுபடியும் அமைத்துருவாக்கும் வரை இதில் எது முந்தையதாக இருக்குமோ அதுவரை மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதென்பது கட்டாயத் தேவையாக இருக்கின்ற படியால் அதன் காரணமாக முன்பு மேலே கூறியுள்ளபடியான நோக்கத்திற்காக அரசு மேற்சொன்ன 27/1989 தமிழ்நாடு சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இச்சட்டமுன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
இரா. துரைக்கண்ணு,
வேளாண்மைத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன்,
செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 72018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 27-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 27/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 27
1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்த சட்டமானது 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(தமிழ்நாடு சட்டம் XXXVI / 1947).
2-ஆம் 2. 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (இதில் இதன்பின்பு முதன்மைச்சட்டம் என சுட்டப்பட்டவாறு) 2-ஆம் பிரிவில் (17)-ஆம் கூறுக்குப்
பிரிவிற்கான திருத்தம்.
பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(17-a) "நேரம்" என்பது இந்திய நிலையான நேரம் அது கிரீன்விச் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஐந்தரை மணி நேரங்களை உடையது என்று பொருள்படும்."
3-ஆம் 3. முதன்மைச்சட்டத்தின் 3-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவுகளைப் மாற்றாக புகுத்துதல் வேண்டும் அதாவது:-
"3. கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல்.-
பிரிவிற்கு மாற்றான பிரிவு.
(1) 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மற்றும் தொடக்கத் தேதியிலிருந்து பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு நிறுவனத்தின் பணிக்கு அமர்த்துநர், தன்னுடைய வணிகம் தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவிற்காக விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழைப் பெறுதல் வேண்டும்.
(2) உட்பிரிவு (1)-ன் படி பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றையும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவம் மற்றும் அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.
(3) உட்பிரிவு (2)-ன் படி ஆய்வாளர், விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதன் பேரில் நிறுவனங்களை பதிவு செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் பணி அமர்த்துநருக்கு பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(4) ஆய்வாளர், நிறுவனங்களின் பதிவேட்டை பராமரித்தல் வேண்டும் மற்றும் ஆய்வாளரால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை பணி அமர்த்துநர் நிறுவனத்தில் பகிரங்கமாக காட்சிக்கு வைத்தல் வேண்டும்.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(5) (a) பதிவுச்சான்றிதழானது ஐந்து ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய கட்டணங்களை செலுத்துவதன் பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் வேண்டும் மற்றும் (2) மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகளின் வகையங்களானது பதிவுச் சான்றிதழை புதுப்பித்தலுக்காக பொருந்தும்;
(b) பணி அமர்த்துநர் ஒவ்வொருவரும் புதிவுச் சான்றிதழின் செல்லும் காலம் முடிவடைந்ததிலிருந்து முப்பது நாட்களுக்கு முன்பாக அவருடைய பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
(6) ஆய்வாளரால் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் பதிவு செய்தலுக்கான அல்லது பதிவுச் சான்றிதழை புதுப்பித்தலுக்கான சான்றிதழை வழங்காதிருக்குமேயானால் இந்தச் சட்டத்தின்படி பதிவுச்சான்றிதழை வழங்கியதாகவோ அல்லது நேர்விற்கேற்ப புதுப்பிக்கப்பட்டதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.
(7) பணி அமர்த்துநர், (2)-ஆம் உட்பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் எதிலும் செய்த மாற்றம் எதையும் அத்தகைய மாற்றம் செய்ததிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில் பதிவுச்சான்றிதழை திருத்தம் செய்தல் வேண்டும் அல்லது புதிய பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(8) பணி அமர்த்துநர், நிறுவனத்தை மூடிய முப்பது நாட்கள் காலத்திற்குள் அத்தகைய மூடிய தகவலை ஆய்வாளருக்கு தெரிவித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில், அவர் பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
ஆனால், நிறுவனம் மூடப்பட்ட தகவலை பெற்றுக் கொண்டது பிறவாராக இருப்பினும், ஆய்வாளர் மனநிறைவடைகிறவிடத்து அவர் அத்தகைய பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
(9) (1)-ஆம் உட்பிரிவில் எது எவ்வாறு காணப்படினும், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலை செய்கிற தற்போதுள்ள நிறுவனத்தின் பணி அமர்த்துநர் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் தானே செய்யப்பட்ட விளம்புகையுடன் நிறுவனத்தின் விவரங்களை 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் ஆய்வாளருக்குத் தெரிவித்தல் வேண்டும். ஆய்வாளர் பணி அமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவலை பதிவேட்டில் பதிவு செய்த பின்பு, பதிவுச்சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 93-A பத்து வேலையாட்களுக்கு குறைவாக வேலைக்கு அமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் தகவல் அளித்தல்,-
(1) பத்து வேலையாட்களுக்குக் குறைவாக வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தின் பணி அமர்த்துநர் ஒவ்வொருவருக்கும் 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் காலத்திற்குள் அல்லது அவருடைய வணிகம் தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாதங்கள் காலத்திற்குள் அவருடைய வணிகத்தை வகுத்தரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில் தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர், வகுத்துரைக்கலாகிற அத்தகைய பதிவேட்டில் பணி அமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தல் வேண்டும்:
ஆனால்: எந்த நேரத்திலும் நிறுவனத்தில் பணி செய்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து அல்லது அதற்கு அதிகமாக இருக்குமேயானால், இந்தச் சட்டத்தின் வகையங்கள் அனைத்தும் அத்தகைய நிறுவனத்திற்கு பொருந்துதல் வேண்டும் மற்றும் அத்தகைய நிறுவனத்தின் பணி அமர்த்துநர் பதிவிற்காக விண்ணப்பித்தல் வேண்டும் மற்றும் 3-ஆம் பிரிவின் வகையங்களின்படி பதிவுச்சான்றிதழை பெறுதல் வேண்டும்.
(2) பத்துக்கும் குறைவாக வேலை செய்கிற நிறுவனத்தின் பணி அமர்த்துநர் நிறுவனத்தை மூடியதிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்கும், அத்தகைய மூடியதை ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர் தகவலை பெற்றுக் கொண்டதன் பேரில் அவரால் வைத்துவரும் பதிவேட்டிலிருந்து அத்தகைய நிறுவனத்தின் பதிவை நீக்கிவிடுதல் வேண்டும்.
9-ஆம் 4. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் விலக்கக் கூறில் "பத்து மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து நான்கு மணி நேரங்கள்" எனும் சொற்றொடருக்காக
பிரிவிற்கான திருத்தம்.
"பத்தரை மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து ஏழு மணி நேரங்கள்" எனும் சொற்றொடரை முறையே மாற்றாக அமைத்தல் வேண்டும்.
14-ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 14-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் விலக்கக் கூறில் "பத்து மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து நான்கு மணி நேரங்கள்" எனும்
பிரிவிற்கான திருத்தம்.
சொற்றொடர்களுக்காக "பத்தரை மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து ஏழு மணி நேரங்கள்" எனும் சொற்றொடர்களை முறையே மாற்றாக அமைத்தல் வேண்டும்.
45-ஆம் 6. முதன்மைச் சட்டத்தின் 45-ஆம் பிரிவில் "பிரிவுகள் 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை மற்றும் 47" எனும் சொற்றொடருக்காக "பிரிவுகள் 3,
பிரிவிற்கான திருத்தம். 3-A, 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை மற்றும் 47" எனும் சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
47-A எனும் 7. முதன்மைச் சட்டத்தின் 47-ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது,-
புதிய பிரிவைப் புகுத்தல்.
"47-A ஆண்டு விவர அறிக்கை,-
நிறுவனத்தின் பணி அமர்த்துநர் ஒவ்வொருவரும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில் அத்தகைய அதிகார அமைப்பிற்கு ஆண்டு விவர அறிக்கையை அளித்தல் வேண்டும்."10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 49-ஆம்
8. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில், "ஐம்பது ரூபாய் வரை நீட்டிக்கலாகும்" எனும் சொற்றொடருக்காக "இரண்டாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்" பிரிவிற்கான திருத்தம்.
எனும் சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
50-A எனும்
9. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:-
புதிய பிரிவைப் புகுத்தல்.
"50-A பெண் பணியாளருக்கு எதிராக வேறுப்படுத்திக் காட்டுதலை தடை செய்தல் பணிக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, பணி மாறுதல், பதவி உயர்வு அல்லது ஊதியங்கள் தொடர்பான பொருட்பாடுகளில் பெண் பணியாளரை வேறுப்படுத்திக் காட்டுதல் ஆகாது."தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11
நோக்கக்-காரண-விளக்கவுரை
1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் XXXVI/1947) வேலை செய்யும் பணிநேரங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக, வார ஓய்விற்காக, கடைகளை திறத்தல் மற்றும் மூடுதலுக்கான பணிநேரங்களுக்கு வகை செய்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டம் XXXVI/1947-இன்படி கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வதற்காக குறிப்பிட்டதொரு வகைமுறை இல்லை.
2. இந்திய அரசானது 2016-ஆம் ஆண்டு மாதிரி கடைகள் மற்றும் நிறுவன (வேலையை ஒழுங்கு முறைப்படுத்துதல் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டமுன்வடிவிற்கு ஆலோசனை கூறியுள்ளது. ஆலோசனை சட்டமானது ஆண்டில் 365 நாட்கள் நிறுவனத்தை இயக்குவதற்கு வகைசெய்கிறது. நிறுவனத்தை சுதந்திரமாக திறப்பதற்கு மற்றும் மூடுவதற்கான காலத்தை வகுத்துரைப்பதற்கு, பெண்கள் தங்குவதற்கு, ஓய்வறைக்கு வகைசெய்கிறது. பெண்களுடைய மாண்பிற்கு, போதிய பாதுகாப்பிற்கு மற்றும் போக்குவரத்து வசதி போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இரவு பணிக்கு பெண்களை அனுமதிக்க முடியும். பணிக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, பணிமாறுதல் அல்லது பதவி உயர்வுகள் பொருட்பாட்டில் பெண்ணுக்கு எதிராக வேற்றுமை இருத்தல் கூடாது. எளிமையான நடைமுறையின் மூலமாக இணையதளப் பதிவு, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு நடவடிக்கைகள் போன்றவைகளுக்கும் வகை செய்கிறது மற்றும் கூறப்பட்ட மாதிரி சட்டமுன்வடிவை அதில் உள்ளது போன்று ஏற்றுக் கொள்வதினால் அல்லது அரசின் வேண்டுகோளுக்கு இணங்கியவாறு அதனுடைய வகை முறைகளை மாற்றமைவு செய்வதன் மூலமாக மாநிலக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மாற்றமைவு செய்வதற்கு மாநில அரசை வேண்டியுள்ளது.
அவ்வாறே, தற்போதுள்ள சூழ்நிலையை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டின் பயனை பரிசீலனை செய்தபின்பு பதிவை அறிமுகப்படுத்துவதற்காக, கடைகளை மற்றும் நிறுவனங்களை புதுப்பிப்பதற்காக, பெண்பணியாளருக்கு எதிரான வேறுபாட்டை தடைசெய்வதற்காக தமிழ்நாடு சட்டம் XXXVI/1947-இல் குறித்த சில திருத்தங்களை கொண்டுவருவது அவசியமானது மற்றும் தேவையானது.
3. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
டாக்டர். நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைப்பு பற்றிய குறிப்பு
சட்டமுன்வடிவின் 3 மற்றும் 7-ஆம் கூறுகளால் புகுத்தப்படுவதற்கு திட்டமிட்டுள்ள கூறுகள் 1 (2) மற்றும் புதிய பிரிவுகள் 3, 3A மற்றும் 47 ஆனது அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, அறிவிக்கையை மற்றும் ஆணைகளை அல்லது நேர்விற்கேற்ப விதிகளை இயற்றுவதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
ஒப்படைப்பு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
டாக்டர். நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்,கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.