Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

L.A. Bill Nos. 28 of 2018 and No. 29 of 2018 (Tamil)

Published 28 June 2018

Type
Extraordinary
Gazette no.
229
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2018-06-28.Extraordinary_229_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2018

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 229A] சென்னை, வியாழக்கிழமை, ஜூன் 28, 2018 ஆனி 14, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம் பக்கங்கள் சட்டமுன் வடிவுகள் :

எண் 28/2018 - தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (நான்காம் திருத்தச்) சட்டம் .. .. 2-6 எண் 29/2018 - தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் .. .. 7-9 229A-Ex-IV-1—1

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 28-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 28/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 28

தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு. சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப்பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை.

குறுந்தலைப்பு மற்றும்

1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள்

தொடக்கம்.

(நான்காம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

பகுதி II.

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

414-B ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

IV/1919.

2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி III.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

375-B ஆம்

தமிழ்நாடு சட்டம்

V/1920.

பிரிவிற்கான திருத்தம்.

3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி IV.

1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

15/1971. 510-AAA ஆம் பிரிவிற்கான திருத்தம்.

4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி V.

1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

511-AAA ஆம்

தமிழ்நாடு சட்டம்

25/1981.

பிரிவிற்கான திருத்தம்.

5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

பகுதி VI.

1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

27/1994.

6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி VII.

1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

28/1994.

7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி VIII.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-Aஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

29/1994.

8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி IX.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

7/2008.

9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி X.

2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

8/2008.

10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XI.

2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

9-A ஆம் பிரிவிற்கான 26/2008.

திருத்தம்.

11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XII.

2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

9-A ஆம் பிரிவிற்கான 27/2008.

திருத்தம்.

12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

பகுதி XIII.

2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

24/2013.

13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XIV.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

25/2013.

14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5

நோக்கக் - காரண விளக்கவுரை

பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் / மன்ற உறுப்பினர்கள் பதவிகளில் உள்ள சாதாரண காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக தேர்தல்கள் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம், நீதிப் பேராணை மனு எண்.33984/2016-ல் 04.10.2016 தேதியிடப்பட்ட அதன் ஆணையில், பிறவற்றுக்கிடையே, அரசாணைகளை உறுதிசெய்தும் தேர்தலை நடத்துவதற்கு புதிய அறிவிக்கையை வெளியிடுமாறும், அத்தகைய தேர்தல் நடைமுறையை 2016 டிசம்பர் 31 ஆம் நாளுக்கு பிந்தாமல் விரைவாக முடிக்கும் படியும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தைப் பணித்து இருக்கிறது. மேலும், உள்ளாட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவுற இருப்பதாலும், அவற்றை ஐந்தாண்டு காலத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதாலும், தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்திட தனி அலுவலர்களை பணியமர்த்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்குமாறு அரசை பணித்திருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மேற்சொன்ன அறிவுறுத்தலின்படி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் வரையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றிற்கு தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர் மற்றும் மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக்காலமும் 2018 ஜுன் 30 அன்று முடிவடையவுள்ளது.

2. மேலும், நீதிப்பேராணை மனு எண். 33984/2016-ல் உள்ள ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற அமர்வு முன்பு நீதிப்பேராணை மேல்முறையீட்டு எண்.1268/2017, என்ற மேல்முறையீட்டு மனு ஒன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன மேல்முறையீட்டில், 2017 செப்டம்பர் 4 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை அறிவிக்கும் அறிவிக்கையானது 2017 செப்டம்பர் 18-க்குள் உறுதியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் 2017 நவம்பர் 17-க்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முடிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த உத்தரவு 06.09.2017 அன்று, உச்சநீதி மன்றத்தால் மேல்முறையீட்டில் பிறப்பிக்கப்படக்கூடிய ஆணைகள் எவற்றுக்கும் உட்பட்டிருக்கும் என்றும் ஆணையிட்டிருந்தது. மேற்சொன்ன சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணையின் காரணமாக, குறிப்பாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பது குறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணைகள் மீது பணிப்புரை வேண்டி உச்சநீதி மன்றத்தில் வழக்கிடை மனு (I.A) தாக்கல் செய்திருக்கிறது மற்றும் அது உச்சநீதி மன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீதிப்பேராணை மேல்முறையீட்டு எண்.1268/2017-இல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளை இணங்கி நடக்காமைக்காக சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.1697/2017 தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் மேற்சொன்ன நீதிமன்ற அவமதிப்பு மனுவில் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

3. உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி எல்லை வரையறை செய்வது தொடர்பாக நீதிப்பேராணை மனு எண்.23411/2016, 23417/2016 மற்றும் 23418/2016 ஆகியவற்றில் உள்ள ஆணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் மேல்முறையீட்டு மனு எண்.5467-5469/2017 மற்றும் அது தொடர்புடைய பொறுப்பாடுகளுக்காவும் தாக்கல் செய்யப்பட்ட மேற்சொன்ன உரிமையியல் மேல்முறையீடுகள் இன்றளவும் உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்கின்றன. மற்றொரு நீதிப்பேராணை மனு (உரிமையியல்) எண்.769/2017 (PIL-W) என்ற மனுவானது உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஆணைகள் வேண்டி உச்சநீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அது மேற்சொன்ன உரிமையியல் மேல்முறையீட்டு எண்.5467-5469/2017 உடன் சேர்க்கப்பட்டது. மேற்சொன்ன நீதிப்பேராணை மனு (உரிமையியல்) எண்.769/2017 (PIL-W)-ல், 2017 நவம்பர் 27 தேதியிடப்பட்ட ஆணையில், இந்திய அரசமைப்பின் 226 ஆம் உறுப்பின்படி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அனுகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியான, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிப்பேராணை எண்.22646/2017 சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

4. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியான மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களின் வார்டுகளின் எல்லைகளை வரையறை செய்வதற்காக உரிமையில் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதையும் அதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் வரும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டும் கிராம ஊராட்சிகள், ஊராட்சி6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் வார்டுகள் எல்லைகளை வரையறை மேற்கொள்வதற்காக வரையறை ஆணையத்தை அரசு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 23/2017) கீழ் அமைத்துள்ளது. கடைசி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அதாவது அரசமைப்பின் 243(f),243P(g) ஆகிய உறுப்புகளின்படி 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் பொருட்டு வரையறை ஆணையம் பல கூட்டங்களை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆட்சிநில தொகுதிகளை வரையறை செய்ததை முடிப்பதற்கான கால அட்டவணைகளை வரைந்து அதன் மீதான பரிந்துரைகளை விரைவில் அரசிற்கு அனுப்ப உள்ளது. வார்டுகள் எல்லை வரையறை செய்வது தொடர்ந்து நடந்துவரும் வேலையின் காரணமாக தொடர்புடைய புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடைசி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) வார்டு எல்லை வரையறை செய்யப்பட்டதின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பொருட்டு 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்கள் (திருத்தச்) சட்டத்தால் (தமிழ்நாடு சட்டம் 12/2018) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் தொடர்பான சட்டங்களை அரசு திருத்தம் செய்திருக்கிறது.

5. வார்டு எல்லை வரையறை செய்யும் நடவடிக்கையைக் கருத்திற் கொண்டு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து மற்றும் பொதுமக்களிடமிருந்து சார்பாற்றங்கள், மறுப்புரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன. 10950-க்கும் மேற்பட்ட மனுக்கள் நகர்ப்பகுதியில் இருந்து பெறப்பட்டு அவைகள் எல்லை வரையறை ஆணையத்தால் முனைப்புடன் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் சென்னை மாநகராட்சி வார்டுகளில் மக்கள் தொகை ஐம்பது சதவீதத்திற்கு குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கும்போது, வரையறை ஆணையத்தால் மீண்டும் பரிசீலனை செய்யவும் கூர்ந்து நோக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகள் மறு வரையறை செய்யும் பணியை வரையறை ஆணையம் மேற்கொண்டுள்ளதாலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளாலும், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் தாமதப்பட்டுள்ளது தெளிவாகிறது. எல்லை மறுவரையறை முடிந்தபின் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிட இயலும்.

எனவே தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2018 ஜூன் 30 அன்று முடிவடைவதை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க உரிய ஏற்பாடு செய்ய கருதப்பட்டது. ஆதலால் அரசு தனி அலுவலர்களின் பதவிக் காலத்தை 2018 டிசம்பர் 31 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அல்லது சாதாரண தேர்தல்களுக்கு பின்பு மன்றத்தின் முதலாம் கூட்டம் நடைபெறும் வரையில் இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப்பதற்கு அரசை இயல்விக்கும் வகையில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.

7. இந்த சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். பி. வேலுமணி,எஸ். பி. வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7

2018-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 28-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 29/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 29

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்துவதற்கானதொரு

சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.

மற்றும் மற்றும் தொடக்கம்.தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2018 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக

261261-A-A ஆம் ஆம் பிரிவிற்கான பிரிவிற்கான திருத்தம்.திருத்தம்.

சட்டம் 21 / 1994.

"2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் - காரண விளக்கவுரைநோக்கக் - காரண விளக்கவுரை

கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் / மன்ற உறுப்பினர்களின் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் உள்ள சாதாரண காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக தேர்தல்கள் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிப் பேராணை மனு எண்.33984/2016 மீது 04.10.2016 தேதியிடப்பட்ட அதன் ஆணையில் பிறவற்றுக்கிடையே அரசாணைகளை உறுதிசெய்தும் தேர்தலை நடத்துவதற்கு புதிய அறிவிக்கையை வெளியிடுமாறும் அத்தகைய தேர்தல் நடைமுறையை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாளுக்கு பிந்தாமல் விரைவாக முடிக்கும் படியும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தைப் பணித்து இருக்கிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் விரைவில் முடிவுற இருப்பதாலும் அவற்றை ஐந்தாண்டு காலத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்பதாலும், தேர்தல்கள் நடத்தப்படும் வரையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை பணியமர்த்தம் செய்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்குமாறு அரசை பணித்திருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் மேற்சொன்ன பணிப்புரைகளின் வழி 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 261-A பிரிவின் கீழ் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்தப்படும் வரையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு தனி அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர் மற்றும் மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக்காலமும் 2018 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று முடிவடையவுள்ளது.

2. மேலும், நீதிப்பேராணை மனு எண். 33984/2016 இல் உள்ள ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பு நீதிப்பேராணை மேல்முறையீட்டு எண்.1268/2017 என்ற மேல்முறையீட்டு மனு ஒன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன மேல்முறையீட்டில், 2017 செப்டம்பர் 4 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை அறிவிக்கும் அறிவிக்கையானது 2017 செப்டம்பர் 18-க்கு உறுதியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் 2017 நவம்பர் 17-க்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முடிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த பணிப்புரைகள் 06.09.2017 அன்று மேல்முறையீட்டில் உச்சநீதி மன்றத்தால் பிறப்பிக்கப்படக்கூடிய ஆணைகள் எவற்றுக்கும் உட்பட்டிருக்கும் என்று சென்னை உயர்நீதி மன்றம் ஆணையிட்டிருக்கிறது. மேற்சொன்ன சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணையின் காரணமாக குறிப்பாக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் இருப்பது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணைகள் மீது பணிப்புரை வேண்டி உச்சநீதி மன்றத்தில் வழிக்கடை மனு (I.A) தாக்கல் செய்திருக்கிறது மற்றும் அது உச்சநீதி மன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நீதிப்பேராணை மேல்முறையீட்டு எண்.1268/2017இல் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆணைகளை இணங்கி நடக்காமைக்காக சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண்.1697/2017 தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மேற்சொன்ன நீதிமன்ற அவமதிப்பு மனுவில் ஆணைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

3. இதற்கிடையில், உள்ளாட்சி அமைப்புகளின் தொகுதி எல்லை வரையறை செய்வது தொடர்பாக நீதிப்பேராணை மனு எண்.23411/2016, 23417/2016 மற்றும் 23418/2016 ஆகியவற்றில் உள்ள ஆணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமையியல் மேல்முறையீட்டு மனு எண்.5467-5469/2017 மற்றும் அது தொடர்புடைய பொறுப்பாடுகளுக்காகவும் தாக்கல் செய்யப்பட்ட மேற்சொன்ன உரிமையியல் மேல்முறையீடுகள் இன்றளவும் உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்கின்றன. மற்றொரு நீதிப்பேராணை மனு (உரிமையியல்) எண்.769/2017 (PIL-W) என்ற மனுவானது உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான ஆணைகள் வேண்டி உச்சநீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேற்சொன்ன நீதிப்பேராணை மனு உரிமையியல் மேல்முறையீட்டு எண்.5467-5469/2017 உடன் சேர்க்கப்பட்டிருக்கிறது, மேற்சொன்ன நீதிப்பேராணை மனு (உரிமையியல்) எண்.769/2017 (PIL-W)-ல் 2017 நவம்பர் 27 தேதியிடப்பட்ட ஆணையில், இந்திய அரசியல் அமைப்பின் 226 ஆம் உறுப்பின்படி மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அனுகவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான நீதிப்பேராணை எண்.22646/2017 சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

4. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களின் ஆட்சி நிலவரை சிற்றொகுதிகளை வரையறை செய்வதற்காக உரிமையியல் மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதையும் அதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் வரும் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டும் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் ஆட்சி நிலவரை சிற்றொகுதிகளை எல்லை வரையறை மேற்கொள்வதற்காக தொகுதி வரையறை ஆணையத்தை அரசு 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு மறுவரையறை ஆணையச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்ட எண்.23/2017) கீழ் அமைத்துள்ளது. கடைசி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அதாவது அரசமைப்பின் 243(f) 243P(g) ஆகிய உறுப்புகளின்படி 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்தும் பொருட்டு மறுவரையறை ஆணையம் பல கூட்டங்களை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஆட்சிநில தொகுதிகளை வரையறை செய்து முடிப்பதற்கான கால அட்டவணைகளை வரைந்து அதன் மீதான பரிந்துரைகளை விரைவில் அரசிற்கு அனுப்ப உள்ளது. ஆட்சிநிலவறை தொகுதிகளை எல்லை வரையறை செய்வது தொடர்ந்து நடந்துவரும் வேலையின் காரணமாக தொடர்புடைய புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடைசி முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) ஆட்சி நிலவறை தொகுதிகளை எல்லை வரையறை செய்யப்பட்டதின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தும் பொருட்டு 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டங்கள் (திருத்தச்) சட்டத்தால் (தமிழ்நாடு சட்டம் 12/2018) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தொடர்பான சட்டங்களை அரசு திருத்தம் செய்திருக்கிறது.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9

5. சிற்றொகுதிகளின் எல்லையை வரையறை செய்யும் நோக்கத்திற்காக கிராம ஊராட்சிகளின், ஊராட்சி ஒன்றியங்களின், மாவட்ட ஊராட்சிகளின் சிற்றொகுதிகளின் எல்லை வரையறைக்காக மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவரின் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழுவின் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் பதவியிடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக அரசியல் தலைவர்களிடமிருந்து மற்றும் பொதுமக்களிடமிருந்து சார்பாற்றங்கள், மறுப்புரைகள் மற்றும் ஆலோசனைகள் எட்டாயிரத்திற்கும் மேலாக பெறப்பட்டது. அவைகள் எல்லை வரையறை ஆணையத்தால் முனைப்புடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவற்றின் சிற்றொகுதிகளின் மக்கள் தொகை இருபது சதவீதத்திற்கு குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கும்போது, அச்சிற்றொகுதிகளை எல்லை வரையறை ஆணையத்தால் மீண்டும் பரிசீலனை செய்யவும் கூர்ந்து நோக்கவும் முடிவு செய்துள்ளது.

6. மேற்சொன்ன சூழ்நிலைகளின் காரணமாகவும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு சாதாரண தேர்தல்களை இன்று வரை நடத்த இயலவில்லை. எல்லை மறுவரையறை முடிந்தபின் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிட இயலும். எனவே தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று முடிவடைவதை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி மன்றங்களின் அமைப்புகளின் பணிகளை நிர்வாகம் செய்வதற்காக பொருத்தமான ஏற்பாடுகள் செய்யக் கருதப்படுகிறது. 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994)-ல் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே தனி அலுவலர்களின்பதவிக் காலத்தை 2018 டிசம்பர் 31 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றிற்கான சாதாரன தேர்தல்களுக்கு பின்பு மன்றத்தின் முதலாம் கூட்டம் நடைபெறும் வரையில் இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப்பதற்கு அரசை இயல்விக்கும் வகையில் ஊராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.

7. இந்த சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எஸ். பி. வேலுமணி,எஸ். பி. வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 28 June 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-06-28.Extraordinary_229_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2018-06-28.Extraordinary_229_Part-IV_Section-1.