| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 27] சென்னை, புதன்கிழமை, ஜூலை 4, 2018 ஆனி 20, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
[அரசாணை (நிலை) எண்அரசாணை (நிலை) எண் 62, 62, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 25 மே 2018.]த் துறை, 25 மே 2018.] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 87-ஆம் பிரிவு மற்றும் 112-ஆம் பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
தி ருத்ததி ருத்தம்
மேற்சொன்ன விதிகளில், 95 ஆம் விதியின் கீழுள்ள விவர அட்டவணை XXIV- இல், 12-A பத்திக்குப் பின்னர், பின்வரும் பத்தி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
" 12-B, சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை.-(1) பட்டாசுத் தொழிற்சாலைகளில், வேதிப்பொருட்களைக் கலத்தல், நிரப்புதல் மற்றும் கையாளுதல் செய்முறையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும், அவர் முதலில் பணியமர்த்தப்படும் நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள், சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அத்தகைய மருத்துவப் பரிசோதனையில், தோல் அழற்சிக்கான தோல் சோதனை, நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை மற்றும் மார்பு ஊடுகதிர் சோதனை ஆகியவை அடங்கும். சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரால் யாதொரு பணியாளரும், அத்தகைய பணியில் பணியாற்றத் தகுதியானவர் எனச் சான்றளிக்கப்பட்டாலன்றி, மற்றபடி அவர் முதலில் பணியமர்த்தப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குப் பின்னர் தொழிற்சாலையில் பணியாற்ற அனுமதிக்கப்படமாட்டாது.
(2) மேற்சொன்ன பணிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு பணியாளரும், குறைந்த அளவு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரால் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும்.் அ்த்தகைய மறுபரிசோதனையில் சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர் சரியெனக் கருதுகின்றவாறு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்படும் மார்பு ஊடுகதிர் சோதனை நீங்கலாக, துணை பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
(3) சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர், பணியாளர் ஒருவரை பரிசோதனை செய்த பின்னர், படிவம் 27-இல் உடற்தகுதிச் சான்றிதழை வழங்க வேண்டும். மறுபரிசோதனை செய்ததற்கான பதிவுகள் சான்றிதழில் பதிவுசெய்யப்பட்டு, தொழிற்சாலை மேலாளரின் பொறுப்பில் அச்சான்றிதழ் வைக்கப்பட்டிருக்க வேண்டு்ம். பரிசோதனைகளின் தன்மை மற்றும் முடிவுகள் உட்பட, துணைப் பத்திகள் (1) மற்றும் (2) இன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிசோதனையின் பதிவுகளும், படிவம் 17 இல் உடல்நலப் பதிவேடு ஒன்றில் சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரால் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
2(4) உடற்தகுதிச் சான்றிதழும் உடல்நலப் பதிவேடும், ஆய்வாளரால் ஆய்வு செய்யப்படுவதற்குத் தயாராக வைத்திருக்கப்பட வேண்டும்.
(5) பணியாளர் ஒருவர் மேற்சொன்ன பணிகளில் தொடர்ந்தால் அவரின் உடல்நலனிற்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் என்னும் காரணத்தினால், அவர் பணியில் தொடர்வதற்குத் தகுதியற்றவர் என, யாதொரு காலத்திலும் சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர் கருதும் நேர்வில், அவரது பரிசோதனை முடிவுகள் குறித்த விவரங்களையும், மேற்சொன்ன நபர் மேற்சொன்ன பணிகளில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என அவர் கருதும் கால அளவையும் குறிப்பிட்டு, அ்ந்த ஆவணங்களில் அவற்றைப் பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படும் நபருக்கு, சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவரின் கூற்றுப்படி, அவர் முழு திறனற்றவராக இருப்பின், அவருக்கு மாற்றுப் பணி வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்து. பாதிக்கப்பட்ட நபருக்கு, அவ்வாறு பொருத்தமான மறுவாழ்வு அமைத்துத்தரப்பட வேண்டும்.
(6) மேற்சொன்ன துணைப்பத்தி (5) இல் கூறப்பட்டுள்ளவாறாக பணிபுரிவதற்குத் தகுதியற்றவராகக் கண்டறியப்பட்டுள்ள யாதொரு நபரும், சான்றளிக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர், மேற்கொண்டும் பரிசோதித்த பின்னர், அத்தகைய செய்முறைகளில் பணியமர்த்துவதற்குத் தகுதிபெற்றிருப்பதாக அவருக்கு மீண்டும் சான்றளித்தாலன்றி, மற்றபடி மேற்சொன்ன செய்முறைகளில் மீண்டும் பணியமர்த்தப்படக் கூடாது அல்லது பணிபுரிவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.''
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.