©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 28.00 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 245A] சென்னை, திங்கள் கிழமை, ஜூலை 9, 2018 ஆனி 25, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
பொருளடக்கம் பக்கங்கள் சட்டமுன் வடிவுகள் :
எண் 40எண் 40/2018 2018 தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம் .. .. .. .. 2-6 எண் 41எண் 41/20182018 தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாம் திருத்தச்) சட்டம் .. .. .. .. 7-20 எண் 42எண் 42/20182018 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்) சட்டம் .. .. .. .. .. 21-24 எண் 43எண் 43/20182018 தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (ஐந்தாம் திருத்தச்) சட்டம் .. .. .. .. 25-30 எண் 44எண் 44/20182018 தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் .. .. .. .. .. .. .. 31-58 எண் 45எண் 45/20182018 தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி (திருத்தச்) சட்டம் .. .. .. .. .. 59-60 எண் 46எண் 46/20182018 சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற (திருத்தச்) சட்டம் .. .. .. .. 61-62 எண் 47எண் 47/20182018 தமிழ்நாடு நிதி ஒதுக்கச் (எண் 3) சட்டம் .. .. .. .. 63-69 245A-Ex-IV-1—1
[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 40/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 40
1971-ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்தவற்கானதொரு
சட்டமுன் வடிவு
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்
1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது மாநில அரசால் அறிவிக்கையினால் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று செயலாற்றலுக்கு வரும்.
2 ஆம் பிரிவிற்கான
திருத்தம்
தமிழ்நாடு சட்டம்
35/1972
2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவில்
(1) (15) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(15-A) "வளர்ச்சி உரிமை சான்றிதழ்" என்பது தொடர்புடைய ஆண்டுக்காக பதிவுத் துறையினால் வழிகாட்டுநெறி மதிப்பில் வகுத்துரைக்கப்படலாகிறவாறு அந்த மனையின் விலை மற்றும் எந்த இடத்திலிருந்து அது உண்டாக்கப்பட்டிருக்கிறதோ கட்டப்பட்ட பரப்பிடத்திற்கு சதுர மீட்டர்களில் தளப்பரப்பு குறியீடு வரவினைக் குறிக்கும் பரப்புக்கு உரிமையுடையதாக இருக்கின்ற உரிமையாளர் அல்லது குத்தகைத்தாரர் கணினி கையெழுத்து உள்ளடங்கலான திட்ட அதிகார அமைப்புகளின் உறுப்பினர் செயலரின் கையெழுத்தின்படி பிறப்பிக்கப்படும் சான்றிதழ் என்று பொருள்படும்.
"(15-B) "வளர்ச்சி உரிமைகள்" என்பது வளர்ச்சி உரிமை சான்றிதழில் குறித்துரைக்கப்பட்ட பரப்பிடத்தில் மேம்பாட்டைச் செய்வதற்கு அல்லது நிலத்தை மேம்படுத்துவதற்கு அல்லது கட்டுவதற்கு அல்லது இரண்டையும் செய்வதற்கான உரிமை என்று பொருள்படும்;".
(2) (17) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:—
"(17-A) "தளப்பரப்பு குறியீடு" என்பது அறிவிக்கை மூலம் விளக்களிக்கப்பட்டுள்ள பரப்பிடங்கள் தவிர, அனைத்து தளங்களிலும் உள்ளடங்கியிருக்கும் பரப்பிடத்தை (கட்டடப் பரப்பு) மனைப் பரப்பளவினால் வகுப்பதானால் பெறப்படும் ஈவு எனப் பொருள்படும்.
அனைத்து தளங்களிலும்
உள்ளடங்கியிருக்கும் பரப்பிடம்
தளப்பரப்பு குறியீடு =
மனைப்பரப்பிடம்;".
(3) (45) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—
"(45-A) "வளர்ச்சி உரிமைகள் மாற்றம்" என்பது கூடுதலான தளப்பரப்பு குறியீடு அல்லது வளர்ச்சி உரிமைகள் என்கிற வகையில் இழப்பீட்டினை இந்தச் சட்டத்தின்படி அரசால் அல்லது அதிகார அமைப்பு ஒன்றால் அத்தகைய விதிகளுக்கு மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு கூடுதலாக கட்டட பரப்பிடம் கட்டுமானத்தின் உரிமையாளர் பெறுவதற்கு உரிமையுடையவராக இருப்பார் மற்றும் தளப்பரப்பு குறியீடு வகுத்துரைக்கப்படலாகிறவற்றை அத்தகைய வடிவத்தில் பிறப்பிக்கப்படுதல் வேண்டும்.".
3. முதன்மைச் சட்டத்தின் 35 ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—
35-A. எனும்
புதிய பிரிவு
புகுத்தப்படுதல்
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3"35-A. வளர்ச்சி உரிமைகள் மாற்றம்.- (1) பொது நலத்திற்காக திட்ட அதிகார அமைப்பு ஒன்றினால் தேவைப்படும் நிலப்பகுதி எதுவுமாக இருக்கின்றவிடத்து மற்றும் உரிமையாளரின் இடம் அல்லது நிலம் அத்தகைய பகுதியில் அடங்கியிருக்கின்றவிடத்து அதனை விலை ஏதுமின்றி இலவசமாக கொடுக்க வேண்டும் மற்றும் எந்தவிதமான வில்லங்கங்களும் இல்லாமல் அதனின் உடைமையை திட்ட அதிகார அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அரசின் தேவையின்படி நிலத்தின் மீதான மேம்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்பட்ட முறையில் நில மேம்பாடு மீது வைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அல்லது ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு விகிதாச்சார முறைப்படி வளர்ச்சி உரிமைகளை மாற்றுவதற்கு அனுமதிக்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அவ்வாறு அனுமதிக்கப்பட்ட வளர்ச்சி உரிமைகளை அது நடைமுறைப்படுத்தக் கூடியதாய் இருக்கிறதென்றால் ஒப்படைக்கப்பட்ட பின்பு அந்த நிலத்தின் மீதமுள்ள பகுதியிலோ அல்லது மாநிலத்திலுள்ள பிற இடம் எதிலுமோ நிலத்தின் மதிப்பில் சரிசமமாக வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டு நிலம் அளித்த நபராலோ அல்லது இக்கட்டுப்பாடுகளால் பாதிப்புக்குள்ளான நபராலோ அல்லது பிற நபர் எவருக்கேனும் வளர்ச்சி உரிமை ஒதுக்கீடு பெற்றவரால் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அத்தகைய நபர்களால் பயன்படுத்தப்படலாம்."
4. முதன்மைச் சட்டத்தின் 36ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:—
36, 37
மற்றும்
38 ஆம்
பிரிவுகளின்
மாற்றாக்கம்.
"36. வளர்ச்சித் திட்டத்திற்காகத் தேவைப்படும் நிலத்தினை கட்டாயமாக கையகப்படுத்துதல்.— நேர்வுக்கேற்ப திட்ட அதிகார அமைப்பு ஒன்றின் அதிகார வரம்பிற்குள் பரப்பிடத்தின் வளர்ச்சிக்காக அல்லது மறு வளர்ச்சிக்காக அல்லது மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவற்றிற்கு அல்லது மண்டல திட்டத்தில், முழுமைத் திட்டத்தில், விரிவான வளர்ச்சித் திட்டத்தில் அல்லது புது நகர் வளர்ச்சித் திட்டத்திற்கு மேம்பாட்டிற்குத் தேவைப்படும் நிலம் எதுவும் 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தின் (மையச் சட்டம் 30/2013) பொருளின்படி பொதுநோக்கத்திற்காகத் தேவைப்படும் நிலமாக கொள்ளப்படுதல் வேண்டும். மற்றும் மேற்சொன்ன சட்டத்தால் கையகப்படுத்தப்படலாம்.
37. வளர்ச்சித் திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நிலங்களை வாங்குவதற்கு அல்லது கையகப்படுத்துவதற்கான அதிகாரம்.— (1) அதிகார அமைப்பு ஒன்றின் அதிகார வரம்பிற்குள் உள்ள நிலப்பகுதியின் வளர்ச்சிக்காக அல்லது மறுவளர்ச்சிக்காக மண்டலத் திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டமொன்றின் தயாரிப்புகளை தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்பு அத்தகைய திட்டத்தில் நிலம் எதுவும் தேவைப்பட்டது, ஒதுக்கப்பட்டது அல்லது பெயரிடப்பட்ட நிலம் எதனையும் உரிய திட்ட அதிகார அமைப்பு நிலத்தைக் கையகப்படுத்தலாம்,—
(a) ஓர் உடன்பாட்டின்படி ஒத்துக்கொண்ட தொகையொன்றினை செலுத்துவதன் மூலம்; அல்லது
(b) அத்தகைய தொகை எதனையும் பெறுகின்றவிடத்து விலையில்லாமல் இலவசமாக மற்றும் எந்தவிதமான வில்லங்கங்களுமில்லாமல் ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக வளர்ச்சி உரிமைகள் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்குவதன் மூலம் மற்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் நில உரிமைதாரர் செலவில் ஏற்படுத்தப்பட்ட மேம்பாடுகள் அல்லது கட்டுமான வசதிகளுக்கு பதிலாக கூடுதல் தளப்பரப்பு குறியீடு அல்லது வளர்ச்சி உரிமைகள் மாற்றம் அளித்தல்; அல்லது
(c) 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தின் (மையச் சட்டம் 30/2013) கீழ் அத்தகைய நிலத்தினை கையகப்படுத்துவதற்காக அரசிற்கு விண்ணப்பமொன்றைச் செய்வதன் மூலம் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அல்லது கட்டடங்களுடன் கூடிய உடன்பாடு மூலம் அல்லது நேர்விற்கேற்ப இந்தப் பிரிவின்படி வளர்ச்சி உரிமைகளை மாற்றும் வகையில் தளபரப்பு குறியீடு மற்றும் கூடுதலான தளபரப்பு குறியீடு வழங்குவதன் மூலம் அல்லது மேற்சொன்ன சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலம் அது உரிய திட்ட அதிகார அமைப்பிடம் அனைத்து வில்லங்கங்களுமில்லாமல் முழுவதுமாக வந்தமைந்ததாக இருக்கும்.
4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(2) (1) ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பமொன்று பெறப்பட்டதன்பேரில் அரசு, விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிலம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொது நோக்கத்திற்காக தேவைப்படுகிறது என்று திருப்தியடைந்திருக்கிறதென்றால் அது, 2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தில் (மையச்சட்டம் 30/2013) வகுத்தமைக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மேற்சொன்ன நிலத்தைக் கையகப்படுத்தலாம்.
38. நிலத்தை விடுவித்தல்.— 26ஆம் அல்லது 27ஆம் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கிறதென்றால் —
(a) அத்தகைய அறிவிப்பினில் உள்ளடங்கியிருக்கும் மண்டல திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது புதுநகர் வளர்ச்சித் திட்டமொன்றில் குறித்துரைக்கப்பட்ட நோக்கம் எதற்காகவும் ஒதுக்கப்பட்ட, ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெயரிடப்பட்ட நிலம் அதனின் தொடர்பாகவும் செய்யப்பட்ட 37ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் வகை செய்யப்பட்டவாறு நிலம் எதுவும் கையகப்படுத்தப்படலாகாது; அல்லது
(b) உடன்பாட்டினால் அத்தகைய நிலம் கையகப்படுத்தப்படாத போது அத்தகைய நிலம் அத்தகைய ஒதுக்கப்பட்ட, ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெயரிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
உரியதென நினைத்தலாகிறவாறான அத்தகைய காலத்திற்காக நீட்டிக்கலாகும் ஆனால், அவ்வாறு நீட்டிக்கப்பட்ட அத்தகைய காலம் எந்த நேர்விலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படுதலாகாது.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5நோக்க - காரண விளக்கவுரை
1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 35/1972) ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களை திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கான முழுமைத் திட்டங்கள், மண்டல திட்டங்கள், புது நகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கு வகை செய்கிறது. நிலம் குறைந்த அளவிலேயே கிடைக்கக்கூடிய ஒரு அரிதான வளமாகும். குறிப்பாக நகரப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியினை உறுதி செய்வதற்கும், அங்கு குடியிருப்பவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் புதிய சாலைகள் அமைத்தல், நிலையில் உள்ள சாலைகளை விரிவுபடுத்துதல், போக்குவரத்து வசதி மற்றும் இதர அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு நிலம் மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கின்றது. மாநிலத்தின் பெருமளவு நிலப்பகுதி தனியாரின் வசம் உள்ளது. மேற்கண்ட நோக்கங்களுக்காக தனியாரிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும் முறை மிகவும் கடினமாகவும் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதுடன் நீண்ட கால நடவடிக்கையாகவும் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான அத்தியாவசியமான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிலத்தை பெறுவதற்கு மேற்கண்ட இடர்ப்பாடுகளை தவிர்க்க வளர்ச்சி உரிமைகள் மாற்றம் (Transfer of Development Rights) எனும் முறை ஒரு திறம்பட கருவியாக இருக்கிறது. மேலும், வளர்ச்சி உரிமைகள் மாற்றத்தின்கீழ் இழப்பீட்டு தொகை ரொக்கமாக அளிக்கப்படுவதில்லை. இம்முறையின்கீழ் நிலத்தின் மதிப்பு கூடுவதற்கேற்ப அதன் மதிப்பும் கூடுவதற்கான சாத்தியமிருக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டு செயல்பாடுகளுக்காக நிலத்தினை கையகப்படுத்துவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் ஒரு எளிமையான முறையாக இருக்கிறது. இத்திட்டத்தின்படி, அரசு, தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தினை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு வளர்ச்சி உரிமைகள் வழங்கப்படும். நில உரிமையாளரால் ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக கூடுதலாக கட்டடப்பரப்பினை பெறுவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் வழிவகை செய்கிறது. மேலும், வளர்ச்சிப் பணிகள் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலத்தில் அனுமதிக்கப்பட்ட தளப்பரப்பு குறியீட்டை காட்டிலும் கூடுதலாக பெறுவதற்கு வளர்ச்சி உரிமைகள் மாற்றம் வழிவகை செய்கிறது. நில உரிமையாளருக்கு வளர்ச்சி உரிமை சான்றிதழ் மூலம் வளர்ச்சி உரிமைகள் மாற்றம் அளிக்கப்படுகிறது. அதனை அவ்வுரிமையாளர் தனது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் அல்லது பிறருக்கு மாற்றம் செய்யலாம்.
(2) வளர்ச்சி உரிமைகள் மாற்ற செயல்முறைக்கு சட்டப்பூர்வமான ஆதரவினை அளிக்கும் பொருட்டு அரசு, 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் 35/1972) பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது.
(3) இந்தச் சட்ட முன்வடிவு, மேற்கூறிய முடிவிற்கு செயல்வடிவம் அளிக்க விழைகிறது.
ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்.
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
இந்தச் சட்ட முன்வடிவின் 3 மற்றும் 6 ஆவது கூறின் மூலம் புகுத்தப்படவுள்ள பிரிவுகளாகிய 35-A மற்றும் 37-இல் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக விதிகளை வகுப்பதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
2. ஒப்படைப்பு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 72018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 41/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 41
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்தொன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாம்
திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்
மற்றும் தொடக்கம் (2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கான 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின்
35/1972
திருத்தம் 2 ஆம் பிரிவில் (இதனில் இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) -
(1) (13) ஆம் கூறில், "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (15) ஆம் கூறில், "விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக, "விரிவான வளர்ச்சித் திட்டம், ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
(3) (22) ஆம் கூறுக்குப்பின்னர், பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும்.
அதாவது:-
"(22-A) "நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்பது உரிய திட்ட அதிகார அமைப்பால் மேம்படுத்தப்பட்ட நிலங்களை உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உரிமையாளரின் உரிமைகளை உரிமை மாற்றத்தின் மூலமாக தனி நபரால் அல்லது தனி நபர்களின் குழுவால் வைத்து வரும் நிலத்தில் உள்ள ஒரு திட்டம் மற்றும் அத்தகைய மேம்பாட்டு நிலத்தின் பகுதியை அசல் உரிமையாளருக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் அத்தகைய நிலத்தின் எஞ்சியுள்ள நிலத்தை பொது வசதிகளை மற்றும் சிறப்பு வசதிகளை அல்லது விற்பனைக்காக உருவாக்குவது என்று பொருள்படும்".
36 ஆம்
பிரிவிற்கான திருத்தம் 3. முதன்மைச் சட்டத்தில் 36 ஆம் பிரிவில் "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
37 ஆம்
பிரிவிற்கான திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில், "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
38 ஆம்
பிரிவிற்கான திருத்தம் 5. முதன்மைச் சட்டத்தின் 38 ஆம் பிரிவில், விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம் புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுIV-A எனும் புதிய 6. முதன்மைச் சட்டத்தின் IV எனும் அத்தியாயத்திற்கு பின்பு, பின்வரும் அத்தியாயம்
புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
அத்தியாயத்தை புகுத்துதல்.
"அத்தியாயம்"அத்தியாயம் – IV A.
நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்.
நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்.
39-A. நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்தல்.— (1) உரிய திட்ட அதிகார உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்தல். அமைப்பானது, ஒழுங்குமுறையான நடைமுறையில் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதி எதனையும் மேம்படுத்தும் திட்டத்திற்காக, (இதன் பின்னர் இந்த அத்தியாத்தில் திட்டம் எனச் சுட்டப்படலாகும்) அந்த பகுதியில் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு அதன் உட்கருத்தை விளம்புகைச்செய்யலாம்.
வரம்புரை ஆனால் உரிய அதிகார அமைப்பு, அத்தகைய விளம்புகையை வெளியிடுவதற்கு முன்னால் அரசினுடைய முன் அனுமதியைப் பெறுதல் வேண்டும். மேலும் வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அல்லாத பிற உரிய திட்ட அதிகார அமைப்பின் இயக்குநர் மூலமாக அரசுக்கு அத்தகைய கருத்துருவை அனுப்புதல் வேண்டும். வரம்புரை ஆனால், உரிய திட்ட அதிகார அமைப்பானது, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனம் எதுவும் அல்லது மாநில அரசு அல்லது மைய அரசால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம் அல்லது திட்டப்பகுதி ஒன்றில் எழுபது விழுக்காடு நில உரிமையாளர்கள் ஆகியோரால் திட்டமிடப்பட்ட திட்டம் எதனையும் மாற்றத்துடனோ அல்லது மாற்றம் எதுவும் இல்லாமலோ ஏற்றுக் கொள்ளலாம்.
விளக்கம்.- இந்தப்பிரிவு மற்றும் 39-F பிரிவின் நோக்கத்திற்காக, "மாநில அரசால் அல்லது மைய அரசால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம்" என்பது 2013 ஆம் ஆண்டு (மையச் சட்டம்.18/2013) நிறுமங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (45) ஆம் கூறின் பொருளின்படியான அரசு நிறுமம் ஒன்று, 1860 ஆம் ஆண்டு (மையச் சட்டம் 21/1860) சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்ட சங்கம் ஒன்று, அல்லது அரசால் நிறுவப்பட்ட அல்லது நிருவகிக்கப்பட்ட சங்கத்தை மாநிலத்தில் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள நேரிணையான சட்டம் எதனின்படியும் அல்லது மைய அரசால் அல்லது மாநில அரசு எதனாலும் அல்லது அரசாங்கங்கள் அல்லது மைய அரசால் பகுதியாக அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளால் பகுதியாக கொடுக்கப்பட்ட பங்கு மூலதனம் ஐம்பத்தொன்று விழுக்காட்டிற்கு குறையாமலிருக்கின்ற மாநிலத்தில் நடைமுறையிலிருக்கின்ற கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்பான இந்தப்பிரிவிற்குள்ள பொருளின்படி ஆகியவை உள்ளடங்கலான மைய அல்லது மாநில சட்டத்தின்படியாகவோ அல்லது அதனடியாகவோ அமைக்கப்பட்ட கூட்டுருமக்குழுமம் எதுவும் என்று பொருள்படும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான விளம்புகையை அந்தப் பகுதி மாவட்ட அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக அத்தகைய முறையில் உரிய திட்ட அதிகார அமைப்பால் அந்தப்பகுதியில் உள்ள முதன்மையான இரண்டு தின நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்று தமிழாக இருத்தல் வேண்டும். அத்தகைய அறிவிக்கையில் திட்டமிட்ட திட்டப்பகுதியின் எல்லைகளைக் காட்டும் திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்யும் பொருட்டு வெளியிடப்படும் நேரம் மற்றும் இடத்தினை குறித்துரைத்து அறிவிக்கை செய்யப்பட வேண்டும்.
39-B. திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பை திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பை
வேண்டுறுத்துவதற்கு அரசுக்கான அதிகாரம்.- வேண்டுறுத்துவதற்கு அரசுக்கான அதிகாரம்
39-A எனும் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், அரசானது, குறித்துரைக்கப்பட்ட பகுதி எதற்காகவும், திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கும் அதன் ஒப்பளிப்பை பணிந்துனுப்ப உரிய திட்ட அதிகார அமைப்பு எதற்கும் பணிப்புரை வழங்கலாம். அத்தகைய நேர்வில், உரிய திட்ட அதிகார அமைப்பு, 39-A எனப்பிரிவின் கீழ் பகுதி திட்டத்தை விளம்புகைக்காக மற்றும் இந்த அத்தியாயத்தில் வகைசெய்யப்பட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக மேலும் செயலாற்றுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 939-C. நிலத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியின் பேரிலான நிலத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியின் பேரிலான கட்டுப்பாடுகள்.கட்டுப்பாடுகள்.— (1) 39-A எனும் பிரிவின்படி ஒரு திட்டம் உருவாக்குவதற்கான உட்கருத்துடன் விளம்புகை செய்யும் தேதியிலோ அல்லது தேதிக்குப்பிறகோ, நபர் எவரும், இந்தத்திட்டத்தில் அடங்கும் பகுதிக்குள், 49 ஆம் பிரிவின்படி உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் மேம்பாட்டுபணி எதனையும் நிறைவேற்றுதலாகாது.
(2) இந்த அத்தியாயத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாதபட்சத்தில் 50 முதல் 58 வரையுள்ள பிரிவுகளின் வகைமுறைகள் அனைத்தும் திட்டப்பகுதியில் அடங்கும் நிலத்தின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டு தொடர்புடன் வேண்டிய மாறுதல்களுடன் பொருந்துதல் வேண்டும்.
39-D. திட்டத்தின் உள்ளடக்கங்கள்.
திட்டத்தின் உள்ளடக்கங்கள்.—இந்தத் திட்டம் பின்வரும்
பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது எதற்கும் வகை செய்யலாம். அதாவது:-
(a) 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a) முதல் (c) வரை மற்றும் (e) முதல்
(n) வரையிலான கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளுக்கு,-
(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அளாவுகை, பொருளாதார நிலையில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் நோக்கத்திற்கான நில ஒதுக்கீட்டிற்கு;
(c) இந்தத் திட்டத்திலடங்கும் மொத்த பகுதியிலிருந்து நிலத்தின்
ஒதுக்கீடானது:-
(i) சாலைகள், பூங்காக்கள், விளையாடுமிடங்கள், தோட்டங்கள் மற்றும்
திறந்தவெளிகளுக்கு;
(ii) அரசுத்துறைகளுக்கு அல்லது அத்தகைய குடிநீர் வழங்கல், மின்சாரம், பள்ளி, தனி மருத்துவமனை (அ) மருந்தகம், சமுதாயக்கூடம், அல்லது திருமண மண்டபங்கள் ஆகிய பொதுமக்கள் நோக்கத்திற்கான குத்தகைக்கு விடப்படுவதற்கான சமூக உள்கட்டமைப்பிற்காக;
(iii) குறைந்தது நாற்பது விழுக்காட்டிற்கான அளவு ஒன்றுக்கு இந்தத்திட்டத்திற்காக அவரின் பங்களிக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக நில உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் பின்னால் திரும்ப வழங்குவதற்காக;
வரம்புரை ஆனால், இந்த உட்கூறின்படி ஒதுக்கீட்டு நிலத்தின் விழுக்காட்டை, மேம்பாட்டின் தன்மை சார்ந்து காரணத்தை எழுத்துமூலமாக பதிவு செய்த பின்பு திட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கலாம்.
(iv) 3வது உட்பிரிவின்படி, நில உரிமையாளருக்கு நிலத்தை திரும்ப வழங்குவதற்குப் பதிலாக, நிலத்தின் சந்தை மதிப்போ (அ) நிலமேம்பாட்டு உரிமை மாற்றமோ வழங்கப்படும்.
(d) அசல் மனை ஒவ்வொன்றின் உரிமையாளர் மற்றும் கால அளவு;
(e) ஒதுக்கீடு செய்யப்பட்ட அத்தகைய நிலம் பொது மக்கள் நோக்கத்திற்காக பொது குறிப்புடன் மற்றும் குறித்துரைக்கலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (K) எனும் கூறின்படி பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் விவரங்கள்;
(f) திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகை மற்றும் உரிய திட்ட அதிகார அமைப்பு மற்றும் தொடர்புடைய முகவாண்மைகளால் ஏற்றுக்கொள்ள வேண்டிய செலவீனங்களுக்காக;
(g) திட்டப்பகுதியில் மேம்பாடுகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான
மண்டலம் மற்றும் மேம்பாட்டு ஒழுங்குமுறை விதிகளுக்காக;
(h) இந்தத்திட்டத்திற்கு உரியதல்லாத இழப்பீடு, எந்த நில உரிமையாளருக்கு ஏற்பட்டதோ அந்த உரிமையாளர், எவருக்கும் வளர்ச்சி உரிமையை மாற்றுவதற்கு அவர் தன் விருப்பத்தை வழங்குவாரேயானால், பணம் சார்ந்த சரியீட்டிற்கு பதிலாக வளர்ச்சி உரிமையை மாற்றம் செய்ய ஒதுக்கீட்டிற்கான கருத்துருவிற்காக;
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(i) மாநில சட்டமன்றப் பேரவையினுடைய சட்டம் எதனின் அல்லது அதன்படி செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட விதி, துணை விதி, ஒழுங்குமுறை விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதனின் வகையும், திட்டம் எதனையும் சரியாக நிறைவேற்றுவதற்கு தேவையானதை கூடிய அளவிற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
வரம்புரை ஆனால், இந்தக்கூறின்படியான தற்காலிக நிறுத்திவைப்பு எதனின்,-
(i) அந்தத் திட்டத்தை ஒப்பளிப்பதற்கு அரசு மறுக்குமானால்;
(ii) அந்தத் திட்டத்தை அரசு திரும்பெறுமானால்;
(iii) அந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான அந்தத் தேதியில்
பெறுவதன்பேரில்; மற்றும்
(j) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையபிற பொருட்பாடுகள்.
39-E. பூசலாக உள்ள உடைமைபூசலாக உள்ள உடைமை.— செய்யப்பட்டிருந்த திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கருத்தில் விளம்புகையின் பொருட்டு, பகுதி ஒன்று உள்ளடங்கலாக நிலம் அல்லது கட்டடம் எதனின் உரிமையாளரரின் பூசல் கோரிக்கை அதில் இருக்குமிடத்து, வருவாய் புதிவுருக்களில் பதிவு செய்யப்பட்ட எதுவும் அல்லது இந்தத் திட்டத்திற்காக அமர்த்தப்பட்ட உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோரின் வேண்டுகோளின்பேரில், துள்ளியமானதாக இல்லாத அல்லது முடிவுறாத அத்தகைய பூசல் கோரிக்கையுடன் தொடர்பான மாறுதல்களுடன் அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால் எந்த நேரத்திலும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வேண்டுறுத்தலை பெறப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய நேரத்திற்குள் அரசால் அமர்த்தப்பட்ட அலுவலரால் நடைபெறப்படும் விசாரணை ஒன்று முடிவு செய்யும் நோக்கத்திற்காக இந்தத்திட்டத்திலடங்கும் சொல்லப்பட்ட நிலத்தின் உரிமையாளராக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய முடிவே இறுதியானதாகும்.
வரம்புரை ஆனால் உரிமையியல் நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் முன்னால் நிலுவையிலிருக்கின்ற இந்தத் திட்டப்பகுதி நிலத்தின் அல்லது கட்டடத்தின் உடைமை தொடர்பான ஏதேனும் பூசல் இருப்பின் அதன்பேரில் உரிமையியல் நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பின் பிறவாறான பணிப்புரைகள் மற்றும் ஆணை அல்லது முடிவு உரிமையியல் நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் அன்றி அத்தகைய திட்டப்பகுதியில் நிலம் அல்லது கட்டடம் உள்ளடக்கத்திற்கு இது தடையாக இல்லாததை உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோர் உண்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
39-F. திட்டத்தை தயாரித்தல்.திட்டத்தை தயாரித்தல்.— (1) 39-A எனும் பிரிவின்படி அறிவிக்கையில் வெளியிடப்படும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அல்லது அரசால் அனுமதிக்கப்படலாகும் ஆறு மாதங்களுக்கு மிகையல்லாத மேலுமான அத்தகைய காலத்திற்குள் உரிய திட்ட அதிகார அமைப்பு வரைபடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் அந்தப்பகுதிக்கான வரைவுதிட்டத்தை தயாரித்தல் வேண்டும். உரிய திட்ட அதிகார அமைப்பு, திட்டப் பகுதியில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களைக் கலந்தாய்வு செய்த பின்னர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அளவை ஆய்வுகள் மற்றும் எழுத்து மூலமாகப் பெறப்பட்ட மறுப்புரைகள் மற்றும் ஆலாசனைகள் ஏதேனுமிருப்பின் மற்றும் திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களையும் கவனமாய் கருதுதல் வேண்டும். உரிய திட்ட அதிகார அமைப்பானது வகுத்தரைக்கப்படலாகும் பொருட்பாடுகளின் சூழ்நிலைகள் அனைத்தையும் தேவையானால் உரிய முகவாண்மையுடனான கலந்தாய்வில் வரைவு திட்டத்தில் பல்வகையான உள்ளடக்கிய பகுதிகளின் மதிப்பீடுகள் மற்றும் செலவுத் தொகைகளை தயாரித்தலும் மற்றும் அரசுக்கு முழுவிபரங்களுடன் திட்டத்தின் வரைவை பணிந்து அனுப்புதல் வேண்டும்.
வரம்புரை ஆனால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அல்லாத பிற உரிய திட்ட அதிகார அமைப்பின் இயக்குநர் மூலமாக அரசுக்கு அதே கருத்துருவை அனுப்புதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 1139-G. திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பு.திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பு.— (1) ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்கு பிற்படாமல் வரைவுத் திட்டம் பெறப்பட்டடபின்னர், உடனேயே, அரசு, தாம் பொருத்தமெனக் கருதலாகும் அந்த வரைவு திட்டத்தில் மாற்றமைவுகள் செய்வதற்கு உரிய திட்ட அதிகார அமைப்புக்கு பணிப்புரை வழங்கலாம், மற்றும் அதன்பேரில் உரிய திட்ட அதிகார அமைப்பு அத்தகைய மாற்றமைவுகள் செய்து அரசுக்கு, ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்கு பிற்படாமல் மீளப்பணிந்தனுப்புதல் வேண்டும்.
(2) அரசு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் வரைவு
திட்டத்திற்கான முதனிலை ஏற்பளிப்பை வழங்குதல் வேண்டும்.
(3) அரசால் வரைவுத்திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் அறிவிக்கைத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இந்தத்திட்டத்தின் நோக்கத்திற்காக, இயக்குநரால், நகரமைப்பு உதவி இயக்குநரின் படிநிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவரை அல்லது நேர்வுகேற்ப சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், துணை திட்டமிடும் அலுவலரின் படிநிலைக்கு குறையாத அலுவலர் ஒருவரை பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலராக அமர்த்துதல் வேண்டும்.
(4) இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அவ்வாறு அமர்த்தப்பட்ட, பெயர் குறித்து அமர்த்தப்பட்ட அலுவலர், அந்த நேரத்திலும், திறமையின்மை அல்லது ஒழுக்கக்கேடு அல்லது குறித்துரைக்கப்பட்ட காரணம் பிற எதற்காகவும் மாற்றலாம் மற்றும் பிற அலுவலரால் அவரை மாற்றிடவும், அத்தகைய பெயர்குறித்து அமர்த்தப்பட்ட அலுவலர் முன்னால் நிலுவையில் இருக்கின்ற நடவடிக்கைகள் எதனையும் புதியதாக பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரால் அது எந்த நிலையில் விட்டுச்செல்லப்பட்டதோ அந்த நிலையில் இருந்து தொடரப்பட்டு முடிவு செய்தல் வேண்டும்.
39-H. அந்த திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் பேரில் அறிவிப்பை அந்த திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் பேரில் அறிவிப்பை வெளியிடுதல்.வெளியிடுதல்.— 39-G பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி அரசிடமிருந்து வரைவு திட்டத்திற்காக முதனிலை ஏற்பளிப்பை பெறப்பட்ட பின்பு, உடனேயே, உரிய திட்ட அதிகார அமைப்பு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுதல்வேண்டும், மற்றும் அந்தப் பகுதியில் முன்னனி தின நாளிதழ்கள் இரண்டில் வெளியிட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்றாவது தமிழில் இருத்தல் வேண்டும். மற்றும் இடம் அல்லது இடங்களில் அதன் ஒரேமாதிரியான படிகள் பார்வையிடுவதற்கும் அந்த அறிவிப்பில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்குள் அந்த நிலத்தில் உரித்தமுடைய நபர் எவரிடமிருந்து எழுத்துமூலமாக திட்டம் பொருத்து ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளையும் வரவேற்கலாம்.
வரம்புரை ஆனால் அத்தகைய கால அளவு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு
வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு குறைவாக இருத்தலாகாது.
(2) அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கால அளவு கழிவுற்ற பின்னர், பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், அரசு துறையின் சார்பாற்றுநர்கள் அல்லது அதே மாதிரியான வேண்டுறுத்தங்கள் செய்த பிற அதிகார அமைப்பு மற்றும் பெறப்பட்ட ஏதேனும் மறுப்புகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் ஆய்வு செய்யவும் மற்றும் அவரால் பொருத்தமெனக் கருதப்படலாகும் அந்தத் திட்டத்திற்கு அத்தகைய திருத்தத்தை செய்வது உள்ளடங்கலாக நபர் எவர்க்கும் கேட்கப்படுவதற்கானதொரு வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.
39-I. பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்
பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்.— (1) பெயர்
குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்,—
(a) பெறப்பட்ட மறுப்புகள் மற்றும் ஆலோசனைகளை ஆய்வு செய்தும் மற்றும்
அதன் தகுதியின்பேரில் இறுதி திட்டத்தைத் தயாரிப்பது;
(b) இறுதி மனைகள் மற்றும் பொது நோக்கத்திற்கான மனைகளின் ஒதுக்கீடு
பெற்றவர்களுடைய இறுதி மனைகளின்பேரில் முடிவு செய்தல்;
(c) விழுக்காட்டளவு பங்கீடுகளின் செலுத்தத்திலிருந்து தொல்லியல் சார்ந்த நினைவுச் சின்னங்களை விளம்புகை செய்யப்படுவதிலிருந்து விலக்களிப்பை உறுதிசெய்தல்;
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(d) நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட
தொகையினை மதிப்பீடு செய்தல்;
(e) கொடுக்கவேண்டிய இழப்பீட்டினை நிர்ணயம் செய்தல்;
(f) இறுதிதிட்டத்தை தீட்டுதல்; மற்றும்
(g) வகுத்துரைத்தப்படலாகும் ஆகியவற்றையும் பிற பொருட்பாடுகள்
உள்ளடக்கும்;.
39-J. இறுதி செய்யப்பட்ட பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் இறுதி செய்யப்பட்ட பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் குறித்த சில முடிவுகள்.குறித்த சில முடிவுகள்.— (1) மதிப்பீட்டு தொகை அல்லாத பிற பொருட்பாடுகளில் பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவரின் முடிவு ஒவ்வொன்றும், உரிமையாளர்களால் கொடுக்கப்படவேண்டிய வரி விதிக்கப்பட்ட தொகை, கொடுபடவேண்டிய இழப்பீடு மற்றும் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி உரிமைகள் மாற்றம் ஆகியவற்றை இறுதியானதாகவும் இருக்கும் மற்றும் நபர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும்.
39-K. மேல்முறையீடுமேல்முறையீடு.— (1) மதிப்பீட்டு தொகைகளையுடைய பொருட்பாட்டில் பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் முடிவு, உரிமையாளர்களால் கொடுக்கப்படவேண்டிய வரி விதிக்கப்பட்ட தொகை, கொடுபடவேண்டிய இழப்பீடு, மற்றும் வந்தடைந்த மேம்பாட்டு உரிமைகள் மாற்றம் ஆகியவற்றை உரிய திட்ட அதிகார அமைப்பு உள்ளடங்கலாக தொடர்புடைய நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
(2) அத்தகைய முடிவினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அந்த முடிவு தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் மேல்முறையீடு செய்யலாம் மற்றும் அதையே வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய முறையும் தீர்வு செய்தல் வேண்டும்.
(3) இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், இடருற்ற நபர் எவரும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையபடிவம், அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய கால அளவிற்குள் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
(4) (3) ஆம் உட்பிரிவின்படியான மேல் முறையீடு ஒன்றை பெற்றதன்பேரில், அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்கப்படுவதற்கானதொரு வாய்ப்பை அளித்த பின்னர் தாம் பொருத்தமெனக்கருதலாகும் அத்தகைய ஆணையை பிறப்பித்தல் வேண்டும்.
39-L. உயர்நீதிமன்றத்தின் மூலமாக சீராய்வு.உயர்நீதிமன்றத்தின் மூலமாக சீராய்வு.— அரசின் ஆணை ஒன்றினால் இடருற்ற நபர் எவரும், அவருக்கு ஆணையின் நகல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து அறுபது நாள் காலஅளவு ஒன்றுக்குள் உயர்நீதிமன்றத்திற்கு அத்தகைய ஆணை சீராய்விற்கான விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்யலாம்.
வரம்புரை ஆனால் உயர்நீதிமன்றம் சொல்லப்பட்ட அறுபது நாள் கால அளவிற்குள் விண்ணப்பதாரர் விண்ணப்பம் செய்யாததற்கு போதுமான காரணம் கொண்டுள்ளார் என அது மனநிறைவு அடையுமானால்சொல்லப்பட்ட அறுபது நாள் கால அளவிற்கு பின்பு செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்று முப்பது நாள் மேலுமான கால அளவிற்குள் ஏற்றுக்கொள்ளலாம்.
39-M. இறுதி திட்டத்தை தயாரித்தல்.இறுதி திட்டத்தை தயாரித்தல்.— பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், வகுத்தரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் திட்டத்திலடங்கும் நில உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கொடுத்த பின்பு இறுதி திட்டத்தை தயாரித்தல் வேண்டும்,—
(a) பல வகையான நோக்கங்கள் மற்றும் இறுதி மனைகளுக்காக ஒதுக்கப்பட்ட
பரப்பிடங்களை தெளிவுபடுத்த மற்றும் எல்லை வரையறைகள்;
(b) இறுதி மனைகளின் ஒதுக்கீட்டாளர்களை தீர்மானித்தல்;
(c) அசல் மனை அல்லது இறுதி மனையின் வளர்ச்சி உரிமைகளை
மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கான விதிமுறைகள்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13(d) அந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட பணிகளுடனான கால அளவை தீர்மானிப்பதை உரிய திட்ட அதிகார அமைப்பால் அல்லது பிற பொது அதிகார அமைப்பு எதனாலும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்;
(e) இந்தத் திட்டத்தை முன்னிட்டு நில உரிமையாளர் எவருக்கும் அவரின் பாதிக்கப்பட்ட உரிமை இழப்பிற்கு செலுத்தப்படும் இழப்பீட்டிற்காக அவருக்கு முன்னிலையில் செய்யப்பட்ட கோரிக்கைகள் குறித்தான மதிப்பீடுகள்;
(f) பொது நோக்கத்திற்காக அல்லது தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது திட்டப்பகுதியில் நில உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நலம் பயக்கின்ற உரிய திட்ட அதிகார அமைப்பினால் மேம்படுத்துவதற்கான பகுதிகளை உறுதி செய்தல்;
(g) இறுதி திட்டத்தின் உள்ளடங்கலான மனை ஒவ்வொன்றின் பேரிலும்
விதிக்கப்படும் பங்களிப்புகளை உறுதி செய்தல்; மற்றும்
(h) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயல்களைச் செய்ய
39-N. அரசின் ஏற்பளிப்பு.அரசின் ஏற்பளிப்பு.— (1) பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், அரசுக்கு, 39-H எனும் பிரிவின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டத் தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் அல்லது அரசால் அனுமதிக்கப்படலாகும், ஆறு மாதங்களுக்கு மேற்படாமல் மேலுமான அத்தகைய காலத்திற்குள் ஏற்பளிப்பிற்காக இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக இறுதி திட்டத்தை பணிந்தனுப்புதல் வேண்டும்.
விளக்கம்:- காலவரம்பை கணக்கிடும் நோக்கத்திற்காக, இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் முன்னால் நிலுவையில் இருக்கின்ற மேல்முறையீடு ஒன்றின் போதான கால அளவு நீக்கப்படுதல் வேண்டும்.
(2) அரசானது, இறுதி திட்டம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், சொல்லப்பட்ட திட்டத்தை தேவையெனக் கருதலாகும் அத்தகைய மாற்றமைகளுடன் அல்லது மாற்றமையில்லாமல் ஏற்பளிக்கப்படலாம் அல்லது அந்த திட்டத்தின் மாற்றமைவிற்காக உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு சொல்லப்பட்ட திட்டத்தை திருப்பி அனுப்பலாம் அல்லது இதன் பொருட்டு அரசால் வழங்கலாகும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்க புதிய திட்டத்தை தயாரிப்பதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பானது, அரசால் பணித்தபடி திட்டத்தை மாற்றமை செய்தோ அல்லது புதிய திட்டம் ஒன்றை தயாரித்தோ ஏற்பளிப்பிற்காக அரசுக்கு அதை பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், அரசுக்கு இதை
நேரடியாக பணிந்தனுப்புதல் வேண்டும்.
39-O. திட்டம் செயற்பாட்டுக்கு வருதல்.திட்டம் செயற்பாட்டுக்கு வருதல்.— (1) அந்த திட்டத்திற்காக அரசினுடைய ஏற்பளிப்பை, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள இரண்டு முதன்மையான நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய அறிவிக்கையில் சொல்லப்பட்ட திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்யும் பொருட்டு வெளியிடப்படும் இடம் மற்றும் நேரத்தை குறிப்பிடுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒன்று, தக்கவாறு செய்யப்பட்ட மற்றும் ஏற்பளிக்கப்பட்ட அந்தத் திட்டம் இறுதிச் சான்றாக அமையும். சொல்லப்பட்ட திட்டம் தமிழ்நாடு அரசிதழில் ஏற்பளிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டத் தேதியிலிருந்து செயற்பாட்டுக்கு வருதல் வேண்டும்.
(3) திட்டம் செயற்பாட்டிற்கு வரும் தேதி முதற் கொண்டு,—
14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(a) உரிய திட்ட அதிகார அமைப்பினால் வேண்டுறுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும், அதன் மேம்பாட்டிற்காகவோ அல்லது அத்தகைய அரசுத் துறைகள், உள்ளாட்சி அதிகார அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகார அமைப்பு ஏதொன்றிலோ அந்த திட்டத்தில் உறுதியளிக்கபடவில்லையெனில் அல்லது வேறு நிலையில் அனைத்து வில்லங்கங்களில் இருந்து முற்றிலும் உரிய திட்ட அதிகார அமைப்பால் உறுதி அளிக்கப்பெறுதல் வேண்டும்;
(b) இறுதி மனைகளுக்கு மறு அமைத்துருவாக்கப்பட்டிருக்கும் அசல் மனைகளின் உரிமைகள் அனைத்தும் உளதாய் இல்லாது போகும் மற்றும் இறுதி மனை பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரால் முடிவு செய்யப்பட்ட உரிமைகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்;
(c) உரிய திட்ட அதிகார அமைப்பு, இறுதி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு இறுதி மனைகளின் அனுபவ உரிமையை ஒப்படைத்தல் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்களில் ஒதுக்கீட்டு உறுதிச் சான்றிதழ் ஒன்றை வழங்குதலும் வேண்டும்.;
(d) திட்ட அதிகார அமைப்பால் நிறுத்தப்பட்ட பகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கு உடைமை நிலங்கள் உள்ளடங்கலான அரசு நிலங்கள் அனைத்தும் வளர்ச்சி நோக்கத்திற்காக உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு மாற்றப்படலாம்.
39-P. திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பு, அந்தத் திட்டம் செயற்பாட்டிற்கு வந்த பின்னர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் உரிய திட்ட அதிகார அமைப்பால் செய்யும்படி நேர்ந்த வெளியேற்றுதல் திட்டத்திற்கு புறம்பாக உள்ள கட்டடங்களை நீக்குதல், மூடி முத்திரையிடுதல், கட்டணம் வசூலித்தல் மற்றும் உள்ளடங்கலான உரிய நடவடிக்கைகள் எடுப்பதினால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
(2) உரிய திட்ட அதிகார அமைப்பு, வேண்டுறுத்தலாகும் இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பை வழங்கும் நோக்கத்திற்காக 39-D எனும் பிரிவில் சுட்டப்பட்ட நில விற்பனையிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்துதல் வேண்டும்.
39-Q. திட்டத்தின் மாறுபாடுதிட்டத்தின் மாறுபாடு.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பினால், செயற்பாட்டிற்கு வரும் இறுதி திட்டத்திற்கு பின்னர், தானாகவோ அல்லது நில உரிமையாளர் ஒருவரின் விண்ணப்பத்தின் மூலமோ அந்த திட்டத்தில் தவறு, முறைகேடு அல்லது உறுதியின்மையின் பொருட்டு குறைபாடுடைய திட்டமாக கருதுமானால், அந்தத் திட்டத்தில் உரிய மாற்றங்களுக்காக அரசிடம் வேண்டுறுத்தலாம்.
வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அந்தத்
திட்டத்தின் மாற்றமைவுக்காக் அரசிடம் நேரடியாக வேண்டுறுத்தலாம் :
மேலும் வரம்புரை ஆனால், அந்தத் திட்டத்தில் மேலுமான மாற்றமைவுகளுக்கான
வேண்டுறுத்தம் எதனையும் அரசால் ஏற்றுக் கொள்ளுதல் ஆகாது :
(2) உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து திருப்தியடையுமானால் வேண்டுறுத்தத்தை பெறப்பட்டதன் பேரில் அரசானது, மனநிறைவடையுமானால் அந்தத் திட்டத்தை மாற்றி தமிழ்நாடு அரசிதழில் மாற்றமைவுகளுடன் வெளியிட வேண்டும். அவற்றுள் மற்றும் அந்தப் பகுதியில் இரண்டு முதன்மையான நாளிதழ்களில் வெளியிடவேண்டும். அவற்றுள் குறைந்தது ஒன்றாவது தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும்.
(3) (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின் அடங்கியுள்ள எது எவ்வாறாயிருப்பினும், இறுதி திட்டம் ஒன்றை, இந்தச் சட்டத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட மற்றும் ஏற்பளிக்கப்பட்ட அடுத்து வரும் திட்டம் ஒன்றால் முறித்தறவு அல்லது வேறானதாக்கவோ செய்யலாம்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 1539-R. உள்ளாட்சிமன்றச் சட்டத்தால் விண்ணப்பத்தை இடைநிறுத்துதல் உள்ளாட்சிமன்றச் சட்டத்தால் விண்ணப்பத்தை இடைநிறுத்துதல்.— (1) நில ஒருங்கிணைப்பு பகுதிகளுக்குள் உள்ளாட்சி மன்றச் சட்டத்தின்படி உள்ளாட்சி அதிகார அமைப்பால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்தவொரு பணிப்புரையும் வழங்கலாம், அத்தகைய நில ஒருங்கிணைப்புப்பகுதி மேம்பாட்டுடனான தொடர்புடைய அறிவிக்கப்படலாகும் அத்தகைய நோக்கங்களுக்காக அத்தகைய கால அளவிற்காக உட்பட்டு உள்ளாட்சி மன்றச் சட்டத்தின்படி உரிய திட்ட அதிகார அமைப்புக்கு மாற்றப்படவோ மற்றும் நிறைவேற்றப்படவோ வேண்டும்மென அரசு அறிவுறுத்தலாம்.
விளக்கம்:- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக,—
(a) "உள்ளாட்சி அதிகார அமைப்பு" என்பது,—
(i) அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனின்படியும்
நிறுவப்பட்ட மாநகராட்சி மன்றச் சட்டம் எதனாலும்;
(ii) 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் V/1920)தின்படி அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சி மன்றம் ஒன்று;
(iii) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்று அல்லது ஊராட்சி ஒன்றியம் ஒன்று அல்லது கிராம ஊராட்சி ஒன்று (தமிழ்நாடு சட்டம் 21/1994); மற்றும்
(iv) 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டம் (தமிழ்நாடு சட்ட எண்.4/1971) அல்லது 1978 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978) ஆகிய சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட வாரியம் ஒன்று.
(b) "உள்ளாட்சி மன்றச் சட்டம்" என்பது",—
(i) 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
IV/1919) ;
(ii) 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
15/1971) ;
(iii) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 25/1981) ;
(iv) 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 27/1994) ;
(v) 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 28/1994) ;
(vi) 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
29/1994) ;
(vii) 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
7/2008) ;
(viii) 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
8/2008) ;
(ix) 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
26/2008) ;
(x) 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 27/2008) ;
(xi) 2013ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம்
24/2013) ;
16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(xii) 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 25/2013) ;
(xiii) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு
சட்டம் V/1920) ;
(xiv) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு
சட்டம் 21/1994);
(xv) 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்
வாரிய சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/1971);
(xvi) 1970 ஆம் ஆண்டு பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்
சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978);
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கப்பட்ட கால அளவு கழிவுற்ற பின்னர், திட்டப்பகுதியில் உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோரால் பொதுவான தெரு, குடிநீர் மற்றும் கழிவுநீர் முறை, தெருவிளக்கு மற்றும் அத்தகைய பிற வசதிகளை அனைத்து சொத்துக்கள் மற்றும் வசதிகளை உருவாக்க (1) ஆம் உட்பிரிவில் கட்டப்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்பிடம் அது தானாகவே பெற்றிருக்கும்.
39-S. நிலுவைத் தொகைகளை வசூலித்தல்நிலுவைத் தொகைகளை வசூலித்தல்.— (1) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறைவழிகள் எதனின் படியும் உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு, கடன் தொகை எதனையும், நில வருவாய் செலுத்தத்திற்கு உட்பட்டு அதன்பேரில் அரசுக்கு நிலுவை ஏதேனும் இருப்பின் எந்த மனையின் பேரில் கடன் உள்ளதோ அந்த மனையின் பேரில் முதல் சாற்றுரைக்கப்படும்.
(2) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறை விதி எதனின்படியான உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உள்ள கடன் தொகை எதனையும், எந்த நாளில் அது கடனாக இருக்கின்றதோ அந்த நாளில் கோரிக்கையின்பேரில் அல்லது உரிய திட்ட அதிகார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் செலுத்தப்படாததை நில வருவாய் நிலுவைத் தொகை போன்றே வசூலிக்கப்படுதல் வேண்டும்.
39-T. உரிய திட்ட அதிகார அமைப்பினால் அந்தத் திட்டத்தில் பணிகளை உரிய திட்ட அதிகார அமைப்பினால் அந்தத் திட்டத்தில் பணிகளை நிறைவேற்றுதல்நிறைவேற்றுதல்.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பு, 39-M எனும் பிரிவின்படியான நிபந்தனையில் குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுதல் வேண்டும்.
(2) திட்ட அதிகார அமைப்பால் நிபந்தனையில் குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள் பணியை நிறைவு செய்வதற்கு அல்லது கால அளவை நீட்டிப்பதற்கு தவறுவாரேயானால், அரசானது, (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறுயிருப்பினும், தான் தகுமானதென கருதலாகும், மேலுமான ஒரு கால அளவிற்குள் பணிகளை முடிப்பதற்கு அல்லது அத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்கு அலுவலர் ஒருவரை அமர்த்துதலுக்கு உரிய திட்ட அதிகார, அமைப்பிற்கு வேண்டுறுத்தலாம்".
39-U. அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்.— அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் உரிய திட்ட அதிகார அமைப்பை பொறுத்தவரை, திட்டத்துடன் தொடர்புடைய பொருட்பாடுகள் அனைத்தையும், அரசுக்கு, சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தினால் பணிந்து அனுப்பப்படுதல் வேண்டும்.
48ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
7. முதன்மைச் சட்டத்தின்48ஆம் பிரிவில், "26 ஆம் பிரிவின் படியான தமிழ்நாடு அரசிதழில் அந்த அறிவிப்பு" என்ற சொற்றொடருக்காக, "26 அல்லது 39-A பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழ்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 1749ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
8. முதன்மைச் சட்டத்தின் 49ஆம் பிரிவில், "26ஆம் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "26 அல்லது 39-A எனும் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
99ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
9. முதன்மைச் சட்டத்தின் 99ஆம் பிரிவில் ஒருத்தலைப்பு உள்ளடங்கலாக, "விரிவான வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடர் அது வருகின்ற இரண்டு இடங்களில் "விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
122ஆம்
10. முதன்மைச் சட்டத்தின் 122ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில் (j) எனும்
கூறுக்காக பின்வரும் கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
பிரிவிற்கானத் திருத்தம்
"(i) மண்டலத் திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப் பகுதி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் படிவமும் உள்ளடக்கமும் மற்றும் அத்தகைய திட்ட வரைபடம் மற்றும் திட்டத்தை தயாரித்தல், பணிந்தனுப்புதல் மற்றும் ஏற்பளிப்பு ஆகியவற்றுடான தொடர்பில் பின்பற்றப்பட்ட நடைமுறை மற்றும் அத்தகைய திட்ட வரைபடம் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய அறிவிப்புகளை வெளியிடும் படிவம் மற்றும் முறை;
(ii) பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள் மற்றும் மனைகளை மறு அமைத்துருவாக்கும் முறை, இறுதிமனைகள் ஒதுக்கீடு, வருவாய்த் துறையின் நில பதிவுகளில் இறுதி திட்டத்தில் முடிவு செய்யப்பட்ட சட்ட உரிமைகளை உள்ளடக்கிப் பதிவு செய்தல்;
(iii) திட்டத்தினை தயாரிப்பதற்காக ஏற்பளிப்பதற்காக மற்றும் திறம்பட நிறைவேற்றுவதற்காக திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகை அத்தகைய ஒப்பந்த கணக்கு போன்ற திட்டத்திற்கான நிதி கணக்கு."18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு
நோக்க - காரண விளக்கவுரை
நில ஒருங்கிணைப்பு (Land Pooling) அல்லது நிலத்தைச் சீரமைப்பது (Land Readjustment) என்பது வளர்ச்சித் திட்டங்களில் நில உரிமையாளர்களை பங்குதாரர்களாகச் சேர்த்து அந்த திட்டங்களை செயல்படுத்த நிலங்களை ஒருங்கிணைக்கும் ஒரு வழியாகும். இந்தத் திட்டம் சிக்கலான மற்றும் அதிககாலம் எடுத்துக்கொள்ளும் தற்போதைய நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளுக்கு ஒரு மாற்றாக அமையும். தமிழ்நாடு விரைவாக நகரமயமாகி வரும் மற்றும் தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலம் ஆதலால் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதிக்கான தேவை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில், முறையான மற்றும் திட்டமிட்ட நிலமேம்பாட்டு வளர்ச்சியினை உருவாக்குவதற்கும், மேலும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை ஊக்கப்படுத்தவும் மற்றும் இவ்வளர்ச்சிகளின் பயன்களை நில உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தற்போது நடைமுறையில் இருக்கும் நில கையகப்படுத்தும் முறைக்கு மாற்றாக மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு தேவைப்படும் நிலங்களை பெறுவதற்கு நில ஒருங்கிணைப்பு பகுதி வளர்ச்சித் திட்டத்தினை (Land Pooling Area Development Scheme) செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் அளிக்கும் வகையில் அரசு, 1971 ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 35/1972) தேவையான திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.
2. இந்தச் சட்ட முன்வடிவு, மேற்கூறிய முடிவிற்கு செயல்வடிவம் அளிக்க விழைகிறது.
ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 19சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
இந்தச் சட்டமுன் வடிவின் 6 ஆவது கூறின் மூலம் புகுத்தப்படவுள்ள பிரிவுகளாகிய 39-A, 39-D, 39-F, 39-I, 39-K, 39M, 39-O மற்றும் 39-P கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு தேவையான விதிகளை வகுப்பதற்கு அல்லது அறிவிக்கைகளைப் பிறப்பிப்பதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கிறது.
2. ஒப்படைப்பு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
ஓ. பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 212018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 42/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 42
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டமுன் வடிவு.செய்வதற்கானதொரு சட்டமுன் வடிவு.
இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (திருத்தச்)
தொடக்கம்.
சட்டம் என வழங்கப்பெறும்.
(2) 2 மற்றும் 4 பிரிவுகளானது 2006 ஜூலை 14ஆம் நாளன்று நடைமுறைக்கு
வரும் என்று கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
3-AA எனும் V/1920.
பிரிவை மாற்றாக அமைத்தல்.
2. 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் (இதில், இதன் பின்பு முதன்மைச்சட்டம் எனச் சுட்டப்பட்டவாறு) 3-AA எனும் பிரிவிற்கு மாற்றாக பின்வரும் பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது: —
"3-AA. சட்டத்தின் வகையங்களானது, குறித்த சில மாற்றமைவுகளுக்குட்பட்டு,
பேரூராட்சி அமைப்புகளுக்குப் பொருந்தும்:-
சட்டத்தின் அனைத்து வகையங்களானது, 5, 7, 12-C, 13-B, 43, 77-AA மற்றும் 77-B பிரிவுகளைத் தவிர்த்து பின்வரும் மாற்றமைவுகளுக்கு உட்பட்டு அனைத்து பேரூராட்சிகளுக்கும் பொருந்தும், அதாவது:—
(1) எங்கெல்லாம் "நகராட்சி" என்ற சொற்றொடர் வருகின்றதோ
அங்கெல்லாம் "பேரூராட்சி" என்ற சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
(2) எங்கெல்லாம் "நகர் மன்றம்" என்ற சொற்றொடர் வருகின்றதோ
அங்கெல்லாம் "மன்றம்" என்ற சொற்றொடரை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(3) எங்கெல்லாம் "மன்ற உறுப்பினர்" மற்றும் "மன்ற உறுப்பினர்கள்" என்ற சொற்றொடர் வருகின்றதோ அங்கெல்லாம் "உறுப்பினர்" மற்றும் "உறுப்பினர்கள்" என்ற சொற்றொடரை முறையே மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(4) எங்கெல்லாம் "நகராட்சி அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் வருகின்றதோ அங்கெல்லாம் "அதிகார அமைப்பு" என்ற சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
(5) எங்கெல்லாம் "ஆணையர்" என்ற சொற்றொடர் வருகின்றதோ அங்கெல்லாம் "செயல் அலுவலர்" என்ற சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
(6) 4ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவிலுள்ள உள்ள "மாநில அரசு" என்ற சொற்றொடருக்கு பதிலாக "பேரூராட்சிகளின் இயக்குநர்" என்ற சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
அறிவிக்கையானது
செயல் விளைவின்றி இருத்தல்.
3. 2014 நவம்பர் 21ஆம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் சிறப்பிதழின் பகுதி II பிரிவு 2இல் எண் II(2)/MAWS/701(c)/2014, என்ற நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அறிவிக்கை, இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து செயல்விளைவின்றி இருக்கும்.
22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசெல்லுந்தன்மை 4. இந்த முதன்மைச் சட்டத்தில் அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள இன்ன பிற சட்டத்தில் அல்லது ஆணையில் அல்லது அறிவிக்கையில் அல்லது ஏதேனும் ஒரு நீதி மன்றம் அல்லது பிற அதிகார அமைப்பின் தீர்ப்பாணையில், தீர்ப்பில் அல்லது ஆணையில் என்ன அடங்கியிருந்த போதிலும், மன்றம், அதிகார அமைப்பு, தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர், அலுவலர்கள், ஆய்வாளர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் குழுக்களால் 2006 ஜூலை 14ஆம் நாள் தொடங்கிய காலத்திலிருந்தும் மற்றும் இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் வரையிலும் முதன்மைச் சட்டத்தின் வகையங்களின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செயல்முறைகள் யாவும், அனைத்து நோக்கங்களுக்காகவும் அத்தகைய நடவடிக்கைகளை அல்லது செயல்முறைகளை செய்யும்போது அல்லது எடுக்கும்போது அனைத்து உகந்த நேரங்களில் இந்தச் சட்டத்தை திருத்தம் செய்ததைப் போன்று அனைத்து நேரங்களிலும் சட்டத்திற்கு இணங்கியவாறு செல்லுபடியாகும்படியாக செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 23நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை
2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் (திருத்தச்) சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் 18/2006) திருத்தம் செய்தவாறு, 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி (தமிழ்நாடு சட்டம் V/1920) அரசானது, சிறப்புநிலை கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மீண்டும் அமைத்துருவாக்கி உள்ளது. கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் V/1920இன் பிரிவு 3-AA இன் படி, அரசானது, அறிவிக்கையின் மூலமாக கூறப்பட்ட சட்டத்தின் வகையங்களை அதனின்படி மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளின்படி அத்தகைய அளவிற்கு மற்றும் அத்தகைய மாற்றமைவுகளுக்கு உட்பட்டு அந்த பேரூராட்சிகளுக்கு பொருந்துதல் வேண்டும் என்று பணிக்கலாம். ஆனால், அரசானது 2006 ஜூலை 14-ஆம் நாளன்று அல்லது அதற்கு பின்பு புதிதாக மறுபடியும் அமைத்துருவாக்கப்பட்ட பேரூராட்சிகளுக்கு அறிவிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை. மேலும் அரசானது, 2014 நவம்பர் 21ஆம் நாளன்று மற்றும் 21ஆம் நாளிலிருந்து மட்டும் செயல்விளைவு பெறுமாறு பேரூராட்சிகளுக்கு 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகளின் வகையங்களை பொருந்தச் செய்வதற்காக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் V/1920 இன் பிரிவு 3-AAஇன் படி 21.11.2014 தேதியிட்ட அறிவிக்கை எண் II(2)/நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்/701(c)/2014-ஐ வெளியிட்டுள்ளது. இருப்பினும் மன்றம், தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள், குழுக்கள், ஆய்வாளர்கள் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநர், 2006-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாளிலிருந்து கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் V/1920 இன் வகையங்களைப் பயன்படுத்தி பேரூராட்சிகள் தொடர்பாக அதிகாரங்களை செலுத்தியும் கடமைகளை ஆற்றியும் வருகிறார்கள்.
2. இந்த சூழ்நிலைகளில், கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் V/1920 இன் வகையங்களை பின் தேதியிட்டு பேரூராட்சிகளுக்கும் மற்றும் மன்றத்தின், அதிகார அமைப்பின், தலைவரின், துணைத்தலைவரின், உறுப்பினர்களின், அலுவலர்களின், குழுக்களின், ஆய்வாளர்களின் மற்றும் பேரூராட்சிகளின் இயக்குநரின் நடவடிக்கைக்கும் கூட பொருந்தச் செய்வது அவசியமாகிறது. ஆகையால், அரசானது நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு கூறப்பட்ட சட்டத்தை திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.
3. இந்தச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ்.பி.வேலுமணி,எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
24 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 252018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43
தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை
மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
பகுதி-I.
முன்னுரை.
1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் குறுந்தலைப்பு (ஐந்தாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி-II.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
326-A எனும்
பிரிவிற்கான தமிழ்நாடு சட்டம் IV/1919.
2. (இதன் பின்பு இந்தப்பகுதியில் 1919-ஆம் ஆண்டு சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 326-A எனும் பிரிவில், (a) எனும் கூறுக்கு பதிலாக பின்வரும் கூறானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
"(a) "விளம்பர பலகை" என்பது, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம், கட்டடம், சுவர் அல்லது கட்டுமானம் ஆகியவற்றின் மீதோ அல்லது மேலோ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ எழுப்பப்பட்ட, முழுவதுமாக அல்லது பகுதியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரத்தை காட்சிக்கு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த கருதப்படும் இடம் எதிலுமுள்ள, சட்டத்தாலான வடிவமைப்பு அல்லது பிற ஆதாரம் உள்ளடங்கலான, மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் விளம்பர அட்டைகள் அல்லாத, பிற பலகையாலான திரை எதுவும் என்று பொருள்படும்.".
3. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் 326-C எனும் பிரிவில்,-
3 2 6 - C எ னு ம் பிரிவிற்கான
திருத்தம்.
(1) உட்பிரிவு (1)ல், "அத்தகைய கட்டணத்துடன்" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) உட்பிரிவு (2)க்கு பதிலாக, பின்வரும் உட்பிரிவானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) ஆணையாளர், உள்ளூர் ஆய்வுக்குப்பின் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உரிமக் கட்டணம் செலுத்தத்தின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் அல்லது பணிப்புரைகளுடன் உரிமம் ஒன்றை வழங்கலாம்.";
(3) உட்பிரிவு (5)ல், "(1)ஆம் உட்பிரிவின்கீழ்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "(1) மற்றும் (2) ஆகிய உட்பிரிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
326-Iஎனும்
பிரிவிற்கான
திருத்தம்.
4. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் 326-ஐ எனும் பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
26 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுVI ஆம்
அட்டவணைக்கான
திருத்தம்.
5. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் ஏஐஆம் அட்டவணையில் "முகச்சவரம் அல்லது முடி திருத்தகம் ஒன்று வைத்திருக்கிற" என்ற பதிவுக்கு பதிலாக, பின்வரும் பதிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"இடைத்தடுப்பு அல்லது அறை இல்லாத முடித்திருத்தகம் அல்லது அழகு நிலையம்.
இடைத்தடுப்பு அல்லது அறை அல்லது நீராவிக்குளியல் அல்லது குளியல் வசதிகளுடன் கூடிய அழகு நிலையம், ஆரோக்கிய நீரூற்று நிலையம் அல்லது தசை வருடுதல் நிலையம்:
வரம்புரையாக ஆணையாளரால் குறித்துரைக்கப்படலாகும் காவல்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையின் தடையின்மைச் சான்றிதழ்கள் இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படலாகாது.".
பகுதி-III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.
285-A எனும்
தமிழ்நாடு சட்டம் V/1920 பிரிவிற்கான திருத்தம்
6. (இதன் பின்பு இந்தப்பகுதியில் 1920ஆம் ஆண்டு சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1920ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 285-ஹ எனும் பிரிவில், (ய) எனும் கூறுக்கு பதிலாக பின்வரும் கூறானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) "விளம்பர பலகை" என்பது, நகராட்சிக்குச் சொந்தமான நிலம், கட்டடம், சுவர் அல்லது கட்டுமானம் ஆகியவற்றின் மீதோ அல்லது மேலோ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ எழுப்பப்பட்ட, முழுவதுமாக அல்லது பகுதியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரத்தை காட்சிக்கு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த கருதப்படும் இடம் எதிலுமுள்ள, சட்டத்தாலான வடிவமைப்பு அல்லது பிற ஆதாரம் உள்ளடங்கலான, மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் விளம்பர அட்டைகள் அல்லாத, பிற பலகையாலான திரை எதுவும் என்று பொருள்படும்.".
7. 1920ஆம் ஆண்டு சட்டத்தின் 285-C எனும் பிரிவில்,-
285-C எனும்
பி ரி வி ற் க ா ன
(1) உட்பிரிவு (1)ல், "அத்தகைய கட்டணத்துடன்" என்ற சொற்றொடருக்கு பதிலாக, திருத்தம்.
"அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) உட்பிரிவு (2)க்கு பதிலாக பின்வரும் உட்பிரிவானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
" (2) மாவட்ட ஆட்சியர், உள்ளூர் ஆய்வுக்குப்பின் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உரிமக் கட்டணம் செலுத்தத்தின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் அல்லது பணிப்புரைகளுடன் உரிமம் ஒன்றை வழங்கலாம்.";
(3) உட்பிரிவு (5)ல், "(1)ஆம் உட்பிரிவின்கீழ்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "(1) மற்றும் (2) ஆகிய உட்பிரிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
285-I எனும்
பி ரி வி ற் க ா ன
திருத்தம்.
8. 1920ஆம் ஆண்டு சட்டத்தின், 285-I எனும் பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
Vஆம்
9. 1920ஆம் ஆண்டு Vஆம் அட்டவணையில் கூறு (jj)க்கு பதிலாக பின்வரும் கூறுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
அட்ட வணைக்கான திருத்தம்.
"(jj) இடைத்தடுப்பு அல்லது அறை இல்லாத முடித்திருத்தகம் அல்லது அழகு நிலையம்;
(jjj) இடைத்தடுப்பு அல்லது அறை அல்லது நீராவிக்குளியல் அல்லது குளியல் வசதிகளுடன் கூடிய அழகு நிலையம், ஆரோக்கிய நீரூற்று நிலையம் அல்லது தசை வருடுதல் நிலையம்:
வரம்புரையாக நிர்வாக அமைப்பால் குறித்துரைக்கப்படலாகும் காவல்துறை அதிகாரி மற்றும் சுகாதாரத் துறை அலுவலரின் தடையின்மைச் சான்றிதழ்கள் இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படலாகாது.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 27பகுதி-IV.
1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
410-A எனும் 15/1971 .
பிரிவிற்கான திருத்தம் 10. (இதன் பின்பு இந்தப்பகுதியில் 1971ஆம் ஆண்டு சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1971ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 410-A எனும் பிரிவில், (a) எனும் கூறுக்கு பதிலாக பின்வரும் கூறானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(a) "விளம்பர பலகை" என்பது, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம், கட்டடம், சுவர் அல்லது கட்டுமானம் ஆகியவற்றின் மீதோ அல்லது மேலோ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ எழுப்பப்பட்ட, முழுவதுமாக அல்லது பகுதியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரத்தை காட்சிக்கு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த கருதப்படும் இடம் எதிலுமுள்ள, சட்டத்தாலான வடிவமைப்பு அல்லது பிற ஆதாரம் உள்ளடங்கலான, மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் விளம்பர அட்டைகள் அல்லாத, பிற பலகையாலான திரை எதுவும் என்று பொருள்படும்.".
. 11. 1971ஆம் ஆண்டு சட்டத்தின் 410-C எனும் பிரிவில்,
410-C எனும்
பிரிவிற்கான திருத்தம் (1) உட்பிரிவு (1)ல், "அத்தகைய கட்டணத்துடன்" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) உட்பிரிவு (2)க்கு பதிலாக, பின்வரும் உட்பிரிவானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) மாவட்ட ஆட்சியர், உள்ளூர் ஆய்வுக்குப்பின் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உரிமக் கட்டணம் செலுத்தத்தின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் அல்லது பணிப்புரைகளுடன் உரிமம் ஒன்றை வழங்கலாம்.";
(3) உட்பிரிவு (5)ல், "(1)ஆம் உட்பிரிவின்கீழ்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "(1) மற்றும் (2) ஆகிய உட்பிரிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
410-I எனும்
பிரிவிற்கான
திருத்தம்.
12. 1971ஆம் ஆண்டு சட்டத்தின் 410-I எனும் பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
VI ஆம் அட்டவணைக்- கான திருத்தம்.
13. 1971ஆம் ஆண்டு சட்டத்தின் IVஆம் அட்டவணையில், "முகச்சவரம் அல்லது முடி திருத்தகம் ஒன்று வைத்திருக்கிற" என்ற பதிவுக்கு பதிலாக, பின்வரும் பதிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"இடைத்தடுப்பு அல்லது அறை இல்லாத முடித்திருத்தகம் அல்லது அழகு நிலையம்.
இடைத்தடுப்பு அல்லது அறை அல்லது நீராவிக்குளியல் அல்லது குளியல் வசதிகளுடன்கூடிய அழகு நிலையம், ஆரோக்கிய நீரூற்று நிலையம் அல்லது தசை வருடுதல் நிலையம்:
வரம்புரையாக ஆணையாளரால் குறித்துரைக்கப்படலாகும் காவல்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையின் தடையின்மைச் சான்றிதழ்கள் இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படலாகாது."28 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு
பகுதி-V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
4 1 0 - A எ னு ம்
த மி ழ் ந ா டு ச ட் ட ம் பிரிவிற்கான
25/1981 .
14. (இதன் பின்பு இந்தப்பகுதியில் 1981ஆம் ஆண்டு சட்டம் என குறிப்பிடப்படுவதான) 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 410-A எனும் பிரிவில், (a) எனும் கூறுக்கு பதிலாக பின்வரும் கூறானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
"(a) "விளம்பர பலகை" என்பது, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம், கட்டடம், சுவர் அல்லது கட்டுமானம் ஆகியவற்றின் மீதோ அல்லது மேலோ முழுவதுமாகவோ அல்லது பகுதியளவிலோ எழுப்பப்பட்ட, முழுவதுமாக அல்லது பகுதியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரத்தை காட்சிக்கு வைப்பதற்காக பயன்படுத்தப்படும் அல்லது பயன்படுத்த கருதப்படும் இடம் எதிலுமுள்ள, சட்டத்தாலான வடிவமைப்பு அல்லது பிற ஆதாரம் உள்ளடங்கலான, மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் விளம்பர அட்டைகள் அல்லாத, பிற பலகையாலான திரை எதுவும் என்று பொருள்படும்.".
15. 1981ஆம் ஆண்டு சட்டத்தின் 410-C எனும் பிரிவில்,-
(1) உட்பிரிவு (1)ல், "அத்தகைய கட்டணத்துடன்" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "அத்தகைய விண்ணப்பக் கட்டணத்துடன்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) உட்பிரிவு (2)க்கு, பதிலாக பின்வரும் உட்பிரிவானது அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) மாவட்ட ஆட்சியர், உள்ளூர் ஆய்வுக்குப்பின் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உரிமக் கட்டணம் செலுத்தத்தின் பேரில், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நிபந்தனைகள் அல்லது பணிப்புரைகளுடன் உரிமம் ஒன்றை வழங்கலாம்.".
(3) உட்பிரிவு (5)ல் "(1)ஆம் உட்பிரிவின்கீழ்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "(1) மற்றும் (2) ஆகிய உட்பிரிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
410-I எனும்
பிரிவிற்கான
16. 1981ஆம் ஆண்டு சட்டத்தின் 410-I எனும் பிரிவில், "பத்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடருக்கு பதிலாக "இருபத்தைந்தாயிரம் ரூபாய்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
திருத்தம்.
IVஆம்
அட்டவ
ணைக்கான
17. 1981ஆம் ஆண்டு சட்டத்தின் IVஆம் அட்டவணையில் "முகச்சவரம் அல்லது முடி திருத்தகம் ஒன்று வைத்திருக்கிற" என்ற பதிவுக்கு பதிலாக, பின்வரும் பதிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
திருத்தம்.
"இடைத்தடுப்பு அல்லது அறை இல்லாத முடித்திருத்தகம் அல்லது அழகு நிலையம்.
இடைத்தடுப்பு அல்லது அறை அல்லது நீராவிக்குளியல் அல்லது குளியல் வசதிகளுடன்கூடிய அழகு நிலையம், ஆரோக்கிய நீரூற்று நிலையம் அல்லது தசை வருடுதல் நிலையம்:
வரம்புரையாக ஆணையாளரால் குறித்துரைக்கப்படலாகும் காவல்துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறையின் தடையின்மைச் சான்றிதழ்கள் இல்லாமல் வரும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படலாகாது.".
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 29நோக்க காரண விளக்க உரை
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான எந்த ஒரு இடத்திலும் விளம்பர பலகைகளை நிறுவுவதற்கு உரிமம் வழங்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விளம்பரப் பலகைகளை நிறுவுவதற்கான உரிமக் கட்டணத்தை உயர்த்தவும், அது போல் விளம்பரப் பலகைகள், மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை அல்லது விளம்பர அட்டைகளை நிறுவுவது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட சட்ட வகையங்களை மீறுபவர்கள் மீது விதிக்கப்படும் தண்டனையை உயர்த்திடவும் அரசு முடிவு செய்துள்ளது. அழகு நிலையம், ஆரோக்கிய நீரூற்று மற்றும் தசை வருடுதல் நிலையம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்தவும்கூட அரசு முடிவு செய்துள்ளதால், அதற்கேற்ப, மேற்படி நோக்கங்களுக்காக, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
2. இந்த சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
எஸ்.பி. வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.
30 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுசட்டமியற்று அதிகார ஒப்படைப்பு பற்றிய குறிப்பு
1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் IV/1919) பிரிவு 326-C-ன் உட்பிரிவு (2), 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் V/1920)-ன் பிரிவு 285-C, உட்பிரிவு (2), 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 15/1971) பிரிவு 410-C, உட்பிரிவு (2) மற்றும் 1981ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1981) பிரிவு 410-C, உட்பிரிவு (2), ஆகியவை, இந்த சட்டமுன்வடிவின்படி மாற்றியமைக்க கருதப்பட்டுள்ள கூறு 3-ன் உட்கூறு (2), கூறு 7-ன் உட்கூறு (2), கூறு 11-ன் உட்கூறு (2) மற்றும் கூறு 15-ன் உட்கூறு (2) ஆகியவற்றில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, நேர்விற்கேற்ப, முறையே அந்தந்த மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு விதிகளை செய்வதற்கு அதிகாரம் அளிக்கிறது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையே அன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
எஸ்.பி. வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்க அமைச்சர்.
கி. சீனிவாசன்கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 312018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 44/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 44
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு, 2018.
கூறுகளின் வகைப்பாடுகள்.
அத்தியாயம் - I.
முன்னுரை.
1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
2. பொருள் வரையறைகள்.
அத்தியாயம் - II.
லோக் ஆயுக்தா அமைப்பினை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு.
3. லோக் ஆயுக்தா அமைப்பினை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு.
4. தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அமர்த்துதல்.
5. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அலுவலக பதவிக்காலம்.
6. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற பணிவரைக்கட்டுகள்.
7. தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்ற பின்னர், நியமனம் செய்வதற்கான கட்டுப்பாடுகள்.
8. குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் உறுப்பினர் தலைவராக அல்லது தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல்.
9. லோக் ஆயுக்தாவின் செயலாளர், பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
அத்தியாயம் - III.
விசாரணைப் பிரிவு.
10. விசாரணைப் பிரிவு.
அத்தியாயம் - IV.
லோக் ஆயுக்தாவின்செலவினங்களை மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.
11. லோக் ஆயுக்தாவின் செலவினங்களை மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படுதல்.
அத்தியாயம் - V.
லோக் ஆயுக்தாவின்அதிகார வரம்பு.
12. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு.
13. விசாரணைக்கு உட்படாத பொருண்மைகள்.
14. நீதிமன்றம் அல்லது குழுவின் அல்லது அதிகார அமைப்பின் முன்பு நிலுவையில் உள்ள பொருட்பாடுகளின் விசாரணை பாதிக்கப்படாதிருத்தல்.
32 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு15. லோக் ஆயுக்தாவின் ஆயங்களை அமைத்துருவாக்குதல்
16. ஆயங்களுக்கிடையே பணிகளை பகிர்ந்தளித்தல்.
17. ஆயங்களுக்கிடையே வழக்குகளை மாறுதல் செய்வதற்கு தலைவரின் அதிகாரம்.
18. பெரும்பான்மையினரால் முடிவு செய்யப்படுதல்.
அத்தியாயம் - VI.
முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பாக நடைமுறை.
19. புகார்கள் மற்றும் முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பாக வகைமுறைகள்.
20. பாதிக்கப்படும் நபர்களின் கூற்றினைக் கேட்டறிதல்.
21. லோக் ஆயுக்தா தகவல் முதலியவற்றை அளிக்குமாறு பொது ஊழியர் அல்லது பிற நபர் எவரையும் வேண்டலாம்.
22. விசாரணைக்கு, முன் அனுமதி தேவையில்லை.
அத்தியாயம் - VII.
லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்.
23. லோக் ஆயுக்தாவின் மேற்பார்வையிடும் அதிகாரங்களை.
24. குறிப்பிட்ட சில நேர்வுகளில் லோக் ஆயுக்தாவானது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களை பெற்றிருக்கும்.
25. லோக் ஆயுக்தாவானது அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம்.
26. ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணிமாறுதல் அல்லது தற்காலிகப் பணிநீக்கம் செய்யவேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்கு உள்ள அதிகாரம்.
27. முதல் நிலை விசாரணையின் போது ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு பணிப்புரைகள் பிறப்பிப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்குள்ள அதிகாரம்.
28. ஒப்படைவு செய்வதற்கான அதிகாரம்.
அத்தியாயம் - VIII.
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கெதிரான புகார்கள்.
29. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும் தற்காலிக பணி நீக்கம் செய்தல்.
30. லோக் ஆயுக்தாவின் அலுவலர்களுக்கு எதிரான புகார்கள்.
அத்தியாயம் - IX.
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.
31. வரவு செலவுத் திட்டம்.
32. அரசால் அளிக்கப்படும் மானியங்கள்.
33. கணக்குகளின் ஆண்டு விவரவுரை.
34. அரசுக்கு விவர அறிக்கைகள் முதலியற்றை அனுப்புதல்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 33அத்தியாயம் - X.
பொய்ப் புகாரின் மீது நடவடிக்கை.
35. பொது ஊழியருக்கு எதிராக பொய்ப் புகார் அளித்ததற்காக மற்றும் இழப்பீடு வழங்குதல் முதலியவற்றிற்காக வழக்கு தொடருதல்.
36. சங்கத்தால் அல்லது நபர்களின் குழுமத்தால் அல்லது பொறுப்புக் கட்டளையால் பொய்ப் புகார் செய்தல்.
அத்தியாயம் - XI.
பல்வகைப்பட்டவை.
37. பொது ஊழியர் எவராலும் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
38. பிற நபர்களால் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
39. லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது ஊழியர்களாக கருதப்படுவர்.
40. காலவரம்பு நிர்ணயம்.
41. அதிகார வரம்பிற்குத் தடை.
42. சட்ட உதவி.
43. சட்டம் மீது ஊர்ந்தியங்கும் தன்மையுடையது.
44. விதிகளைச் செய்வதற்கு அதிகாரம்.
45. ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கு அதிகாரம்.
46. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
34 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுதமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு, 2018.
பொது ஊழியர்கள் சிலருக்கெதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்காக லோக் ஆயுக்தா அமைப்பினை நிறுவுவதற்காக மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது அவற்றிற்குச் சார்வுறுவான பொருட்பாடுகளுக்காக வகை செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் - I.
முன்னுரை.
1. (1) இந்தச் சட்டமானது, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
(2) இச்சட்டமானது அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (1) இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறானாலன்றி,
பொருள் வரையறைகள்.
(a) "ஆயம்" என்பது லோக் ஆயுக்தாவின் ஆயம் என்று பொருள்படும்;
(b) "தலைவர்" என்பது லோக் ஆயுக்தாவின் தலைவர் என்று பொருள்படும்;
(c) "தகுதி வாய்ந்த அதிகார அமைப்பு" என்பது,-
(i) முதலமைச்சருக்கு, ஆளுநர்;
(ii) அமைச்சர்களுக்கு, முதலமைச்சர்;
(iii) அமைச்சரைத் தவிர்த்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டமன்ற பேரவைத் தலைவர்.
(iv) துறை எதனின் அலுவலர்களுக்கு, அரசு;
(v) நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அரசால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது கட்டாளுகை செய்யப்பட்ட அமைப்பு அல்லது வாரியம் அல்லது நிறுவனம் அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுமம் அல்லது சங்கம் அல்லது தன்னாட்சி அமைப்பின் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு, அத்தகைய அமைப்பின் அல்லது வாரியத்தின் துறை அல்லது கழகம் அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுமம் அல்லது சங்கம் அல்லது தன்னாட்சி அமைப்பிற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் அல்லது முதலமைச்சர்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 35(vi) நாடாளுமன்றத்தில் அல்லது மாநிலச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அரசால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது அதனால் கட்டாளுகை செய்யப்பட்டுள்ள அமைப்பின் அல்லது குழுமத்தின் அல்லது கழகத்தின் அல்லது அதிகார அமைப்பின் அல்லது நிறுமத்தின் அல்லது சங்கத்தின் அல்லது தன்னாட்சி அமைப்பின் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) அலுவலருக்கு, அத்தகைய அமைப்பின் அல்லது வாரியத்தின் அல்லது கழகத்தின் அல்லது அதிகார அமைப்பின் அல்லது நிறுமத்தின் அல்லது சங்கத்தின் அல்லது தன்னாட்சி குழுமத்தின் தலைமை.
(vii) மேலே (i) முதல் (vi) வரையிலான உட்கூறுகளின்படி அடங்காத பிற நேர்வு எதிலும், அரசானது அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறு, அத்தகைய துறை அல்லது அதிகார அமைப்பு:
வரம்புரையாக,- மேலே (v) ஆம் உட்கூறில் அல்லது (vi) ஆம் உட்கூறில் சுட்டப்பட்டுள்ள நபர் எவரும் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருப்பாரேயானால், தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது, சட்டமன்ற பேரவைத் தலைவராக இருப்பார்;
(மையச் சட்டம் 49 /1988)
(d) "புகார்" என்பது 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கக் கூடிய குற்றம் ஒன்றிற்காக, வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில், பொது ஊழியர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் என்று பொருள்படும்.
(e) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(f) "நீதித் துறையைச் சார்ந்த உறுப்பினர்" என்பது லோக் ஆயுக்தா அமைப்பின் நீதித்
துறையைச் சார்ந்த உறுப்பினர் என்று பொருள்படும்;
(g) "லோக் ஆயுக்தா" என்பது 3 ஆம் பிரிவின்படி நிறுவப்பட்டுள்ள ஒரு அமைப்பு
என்று பொருள்படும்;
(h) "உறுப்பினர்" என்பது லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர் என்று பொருள்படும்;
(i) "அமைச்சர்" என்பது முதலமைச்சர் உள்ளடங்கலாக மற்றும் அரசின் அமைச்சர்
என்று பொருள்படும்;
(j) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளால்
வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(k) "பொது ஊழியர்" என்பது 12 ஆம் பிரிவின் உட்பிரிவு (1)ன் (a) முதல் (e)
வரையிலான கூறுகளில் சுட்டப்பட்டுள்ள ஒரு நபர் என்று பொருள்படும்;
(l) "ஒழுங்குமுறை விதிகள்" என்பது இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை
விதிகள் என்று பொருள்படும்;
(m) "மாநிலம்" என்பது தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
36 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(மையச்சட்டம் 49/1988) (2) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு ஆனால் பொருள்வரையறை செய்யப்படாத ஆனால் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தில் மற்றும் 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும் சொற்றொடர்களும் அந்தச் சட்டங்களில் அவைகளுக்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.
(மையச்சட்டம் 2/1974)
அத்தியாயம் - II.
லோக் ஆயுக்தா அமைப்பினை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு.
3. (1) இதன் பொருட்டு அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தேதியன்று மற்றும் தேதியிலிருந்து லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படுகின்ற ஒரு அமைப்பினை உருவாக்குதல் வேண்டும்.
லோக் ஆயுக்தா அமைப்பினை நிறுவுதல் மற்றும் கட்டமைப்பு.
(2) லோக்ஆயுக்தா அமைப்பின்-
(a) தலைவரானவர், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருக்கின்ற நபரை அல்லது ஊழல் தடுப்புக் கொள்கையில், பொது நிருவாகத்தில், விழிப்புணர்வில், நிதியில் மற்றும் சட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தை பெற்றுள்ள நபரை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
(b) நான்கு உறுப்பினர்கள், அந்த உறுப்பினர்களில் இரண்டு நபர்கள்
நீதித்துறையைச் சார்ந்த உறுப்பினர்களாக, இருத்தல் வேண்டும்.
(3) நபர் ஒருவர்,-
(a) உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பாரானால் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்திருப்பாரேயானால் அல்லது மாநில நீதித்துறையில் சிறந்த முறையில் பணியாற்றி இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தைக் கொண்டிருப்பாரேயானால், அவரை நீதித்துறையைச் சார்ந்த உறுப்பினராக,
(b) ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிருவாகத்தில், விழிப்புணர்வில், நிதியில் மற்றும் சட்டத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் முன் அனுபவத்தைக் கொண்டிருப்பாரேயானால், அவரை நீதித்துறையைச் சாராத உறுப்பினராக,-
பணியில் அமர்த்தப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.
(4) தலைவர் அல்லது உறுப்பினர்,-
(a) நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினராகவோ அல்லது மாநில அல்லது மத்திய
அரசின் ஆட்சிப் பகுதி ஒன்றின் சட்டமன்ற உறுப்பினராகவோ,
(b) குற்றம் எதற்காகவும் தண்டிக்கப் பெற்ற நபராகவோ,
(c) தலைவர் அல்லது உறுப்பினர் பணியில் சேரும் தேதியன்று நாற்பத்தைந்து
ஆண்டுகள் வயதிற்கு குறைவாக இருக்கின்ற நபராகவோ,தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 37 (d) ஊராட்சி அல்லது நகராட்சி எதனின் ஒரு உறுப்பினராகவோ,
(e) மத்திய அல்லது மாநில பணியிலிருந்து அகற்றப்பட்ட அல்லது நீக்கம்
செய்யப்பட்ட நபராகவோ,
(f) அலுவலக பொறுப்புக் கட்டளை அல்லது ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருந்தாலோ (அவருடைய அலுவலகத்தில் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ இருப்பதைத் தவிர்த்து) அல்லது அரசியல் கட்சியினர் எவருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளுதலோ அல்லது தொழில் எதையும் செய்தலோ அல்லது பதவி எதையும் ஆற்றுதலோ,-
இருத்தல் கூடாது.
(5) தலைவர் அல்லது உறுப்பினராக அமர்த்தப்பட்ட நபர் ஒருவர் அவருடைய அலுவலகப் பணியில் சேருவதற்கு முன்பாக,-
(a) அலுவலகப் பொறுப்பு அல்லது ஆதாயம் தரும் பதவி எதையும் வைத்திருப்பாரானால், அத்தகைய பதவியிலிருந்து அவர் பணிவிலகுதல் வேண்டும், அல்லது
(b) தொழில் எதையும் அவர் செய்வாரானால், அத்தகைய தொழில் மற்றும் மேலாண்மையின் தொடர்பிலிருந்து அவர் விலகிக் கொள்ளுதல் வேண்டும், அல்லது
(c) அவர் தொழில்முறையிலான பணி எதையும் செய்வாரானால் அத்தகைய
தொழில் புரிவதிலிருந்து நிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
4. (1) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரால் அமர்த்துதல் வேண்டும். தெரிவுக் (2) பணியமர்த்துதல், பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் இருத்தல் வேண்டும்:-
குழுவின் பரிந்துரையின் பேரில் தலைவர் மற்றும் உறுப்பினர்- களை அமர்த்துதல்.
(a) முதலமைச்சர் - தலைவர்;
(b) சட்டமன்றப் பேரவைத் தலைவர் - உறுப்பினர்;
(c) எதிர்கட்சித் தலைவர் அல்லது சட்டமன்றத்தில் எதிரணியில் பெரும்பான்மை
உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் - உறுப்பினர்.
(3) தெரிவுக் குழுவானது, தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பணியை மேற்கொள்ள, நபர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்வதற்காக, ஊழல் தடுப்பு கொள்கையில், பொது நிருவாகத்தில், விழிப்புப்பணியில், நிதியில் மற்றும் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ள மூன்று நபர்களை உள்ளடக்கிய தேடுதல் குழுவினை அமைத்துருவாக்குவர்.
(4) தலைவரை மற்றும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தெரிவுக் குழுவானது தன்னுடைய சொந்த நடைமுறையை வெளிப்படையானதாக இருக்கும் வகையில் ஒழுங்கு முறைப்படுத்தலாம்.
38 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(5) உட்பிரிவு (3)-ல் சுட்டப்பட்டுள்ள அமைத்துருவாக்கப்பட்ட தேடுதல் குழுவின் காலம், அதனுடைய உறுப்பினர்களுக்கு செலுத்தக்கூடிய கட்டணங்கள் மற்றும் படித்தொகைகளானது மற்றும் பெயர்ப்பட்டியல்களை தெரிவு செய்யும் முறையானது வகுத்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
தலைவர் மற்றும் உறுப்பினர்- களின் அலுவலகப் பதவிக்காலம்.
5. தலைவர் மற்றும் உறுப்பினர் ஒவ்வொருவரும் தெரிவுக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆளுநரால் அவரால் கையொப்பமிப்பட்ட பணி ஆணையினால் மற்றும் இலச்சினையினால் அமர்த்துதல் வேண்டும் மற்றும் அவருடைய அலுவலகத்தில் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு அல்லது அவர் எழுபது வயதினை அடையும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை அவ்வாறு பதவி வகித்தல் வேண்டும்.
வரம்புரையாக அவர்,-
(a) தானே எழுத்துபூர்வமாக ஆளுநருக்கு தெரிவிப்பதன் வாயிலாக
பதவியிலிருந்து விலகலாம்; அல்லது
(b) இந்தச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டுள்ள முறையில் அவருடைய
பதவியிலிருந்து நீக்கப்படலாம்.
6. ஊதியம், படித்தொகைகள் மற்றும் பிற பணிவரைக்கட்டுகளானது,-
(a) தலைவருக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கும் ஊதியம் மற்றும்
படித்தொகைகளுக்கு சமமானதாக இருத்தல் வேண்டும்;
தலைவர் மற்றும் உறுப்பினர்- களின் ஊதியம், படித் தொகைகள் மற்றும் பிற பணிவரைக்- கட்டுகள்.
(b) பிற உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கும் ஊதியம் மற்றும்
படித்தொகைகளுக்கு சமமானதாக இருத்தல் வேண்டும்:
வரம்புரையாக, தலைவர் அல்லது உறுப்பினர் மத்திய அரசின் கீழ் அல்லது மாநில அரசு எதனின் கீழ் முந்தைய பணி எதுவும் தொடர்பாக அவருடைய பணி அமர்த்தலின்போது ஓய்வூதியத்தை (ஊனமுற்றோர் ஓய்வூதியத்தைத் தவிர்த்து) பெறுவாரேயானால், தலைவராக அல்லது உறுப்பினராக இருக்கும்போது பணி தொடர்பாக அவருடைய ஊதியத்திலிருந்து,-
(i) அந்த ஓய்வூதியத் தொகையை; மற்றும்
(ii) அவர், அத்தகைய பணி அமர்த்தலுக்கு முன்பு முந்தைய பணி தொடர்பாக, மாற்றீட்டு ஓய்வூதியத் தொகை போக, அவருக்கு நிலுவையாக உள்ள ஓய்வூதிய பகுதித் தொகையை,-
கழித்து விடுதல் வேண்டும்.
மேலும் வரம்புரையாக,- தலைவர் அல்லது உறுப்பினருக்கு செலுத்தக்கூடிய ஊதியம், படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியமானது அவருடைய பணி அமர்த்தலுக்கு பின்பு அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாறுபட்டிருத்தல் ஆகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 397. (1) பதவியைவிட்டு விலகியதன் பேரில் தலைவர் மற்றும் உறுப்பினர் எவரும்,- தலைவர் மற்றும் (a) லோக் ஆயுக்தாவிற்கு தலைவராக அல்லது உறுப்பினராக மீண்டும்
அமர்த்தப்படுவதற்கோ;
உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் நியமனம் செய்வதற்- கான கட்டுப்பாடுகள்.
(b) ஆளுநரால் சட்டத்தின்படி வேண்டப்பட்ட பிற செயல் எதையும் செய்வதற்கோ
அல்லது அமர்த்தம் செய்வதற்கோ;
(c) மத்திய அரசின் கீழ் அல்லது அரசின் மாநில கீழ் ஆதாயம் தரும் பதவி எதிலும்
மேலும் பணி செய்வதற்கோ,-
தகுதியற்றவர் ஆகிறார்.
(2) மேலே உட்பிரிவு (1) - ல் எது எவ்வாறு காணப்படினும், உறுப்பினராக மற்றும் தலைவராக பணியாற்றிய மொத்தகாலம் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாது இருக்குமேயானால் உறுப்பினரை தலைவராக அமர்த்தம் செய்வதற்கு தகுதியுடையவர் ஆவார்.
விளக்கம்.- இந்தப்பிரிவின் நோக்கங்களுக்காக உறுப்பினரை ஒரு தலைவராக அமர்த்தம் செய்கிறவிடத்து அவருடைய பதவிக்காலம் உறுப்பினராக மற்றும் தலைவராக செயல்படுவதற்கு மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாது இருத்தல் வேண்டும் என ஈங்கிதனால் தெளிவுபடுத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சில சூழ்நிலை- களில் உறுப்பினர் தலைவராக அல்லது தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல்.
8. (1) தலைவருடைய இறப்பு அல்லது பதவி விலகல் காரணத்தால் அல்லது பிறவாறாக தலைவருடைய அலுவலகத்தில் காலியிடம் எதுவும் ஏற்படுகின்ற நிகழ்வில், ஆளுநர், அறிவிக்கையின் வாயிலாக, அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்கு புதிய தலைவரை அமர்த்தும்வரையில் மிக மூத்த உறுப்பினரை தலைவராக செயல்படுவதற்கு அதிகாரமளிக்கலாம்.
(2) விடுப்பு அல்லது பிறவாறான காரணத்தால் தலைவர், அவருடைய செயற்பணிகளை ஆற்றமுடியாது இருக்கும்போது, அப்போதுள்ள மிக மூத்த உறுப்பினர், ஆளுநர், அறிவிக்கையின் வாயிலாக, இதன்பொருட்டு தலைவர் அவருடைய கடமைகளை மீண்டும் ஆற்றும் வரையில், தலைவருடைய செயற்பணிகளை ஆற்றுதல் வேண்டும்.
9. (1) அரசின் துணைச் செயலாளர் நிலைக்கு குறையாதவர் லோக் ஆயுக்தா அமைப்பின் செயலாளராக இருத்தல் வேண்டும். அவரை, அரசால் அனுப்பப்படும் பெயர்பட்டியலிலிருந்து தலைவரால் அமர்த்துதல் வேண்டும்.
லோக் ஆயுக்தாவின் செயலாளர், பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.
(2) அரசின் துணைச் செயலாளர் நிலைக்கு குறையாதவர் விசாரணை இயக்குநராக இருத்தல் வேண்டும். அவரை அரசால் அனுப்பப்படும் பெயர்ப்பட்டியலிலிருந்து தலைவரால் அமர்த்துதல் வேண்டும்.
(3) லோக் ஆயுக்தா அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு, வேண்டப்பட்டவாறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரசால் வகுத்துரைக்கலாகிறவாறு பணி அமர்த்துதல் வேண்டும்.
(4) லோக் ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற அலுவலர்களின் மற்றும் பணியாளர்களின் பணிவரைக்கட்டுகளானது அவ்வப்பொழுது வகுத்துரைக்கலாகிற அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.
40 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஅத்தியாயம் - III.
விசாரணைப் பிரிவு.
விசாரணைப் பிரிவு. 10. (1) நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும் எது எவ்வாறு இருப்பினும், லோக் ஆயுக்தாவானது பொது ஊழியர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதையும் விசாரணை செய்யும் நோக்கத்திற்காக விசாரணை இயக்குநரின் தலைமையிலான விசாரணைப்பிரிவு ஒன்றினை அமைத்துருவாக்குதல் வேண்டும்:
வரம்புரையாக,- லோக் ஆயுக்தாவானது விசாரணைப் பிரிவினை அமைக்கும் காலம் வரையில், அரசானது, இந்தச் சட்டத்தின்படி விசாரணையை நடத்துவதற்காக வேண்டப்படலாகிற அதனுடைய துறைகளில் இருந்து அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்தல் வேண்டும்.
(2) இந்தச்சட்டத்தின்படி விசாரணையை நடத்துவதில் லோக் ஆயுக்தாவிற்கு உதவி செய்யும் நோக்கங்களுக்காக, விசாரணைப் பிரிவின் அலுவலர்கள் 24 ஆம் பிரிவின்படி லோக் ஆயுக்தாவிற்கு குறித்தளிக்கப்பட்டுள்ள அதே அதிகாரங்களைக் கொண்டிருப்பர்.
அத்தியாயம் - IV.
லோக் ஆயுக்தாவின் செலவினங்களை மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து
பெற்றுக்கொள்ளப்படுதல்.
லோக் ஆயுக்தாவின் செலவினங்களை மாநிலத் தொகுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்
படுதல்.
11. லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் அல்லது செயலாளர் அல்லது பிற அலுவலர்கள் அல்லது பணியாளர்களுக்கு செலுத்தக்கூடிய அனைத்து ஊதியங்கள், படித்தொகைகள் மற்றும் ஓய்வூதியங்கள் உள்ளடங்கலாக லோக் ஆயுக்தாவின் நிருவாகச் செலவினங்களை, மாநிலத் தொகுப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் மற்றும் லோக் ஆயுக்தாவினால் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் மற்றும் எடுத்துக் கொண்ட பிற பணங்களானது நிதியத்தின் ஒரு பகுதியாக இருத்தல் வேண்டும்.
அத்தியாயம் - V.
லோக் ஆயுக்தாவின்அதிகார வரம்பு.
12. (1) இந்தச் சட்டத்தின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு லோக் ஆயுக்தாவானது, பின்வரும் அனைத்து இனங்களின் மீது அதிகார வரம்பினைக் கொண்டிருக்கும். அதாவது:-
(மையச் சட்டம் 49 /1988) (a) அமைச்சராக இருக்கின்ற அல்லது அமைச்சராக இருந்துள்ள நபர் எவரும்;
(b) சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற அல்லது இருந்துள்ள நபர் எவரும்;
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளடங்கலாக லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பு.
(c) 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (c) கூறின் (i) ஆம் மற்றும் (ii) ஆம் உட்கூறுகளில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ள பொது ஊழியர்களுக்கிடையேயிருந்து மாநில அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 41(d) மேலே (c) கூறில் சுட்டப்பட்டுள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமமான, நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி நிறுவப்பட்ட அல்லது அரசால் முழுவதுமாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட அல்லது அதனால் கட்டாளுகை செய்யப்பட்ட அமைப்பில் அல்லது வாரியத்தில் அல்லது நிறுவனத்தில் அல்லது அதிகார அமைப்பில் அல்லது நிறுமத்தில் அல்லது சங்கத்தில் அல்லது பொறுப்புக்கட்டளைக்கு அல்லது தன்னாட்சி அமைப்பில் (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) உள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும்;
வரம்புரையாக,- மேலே (c) மற்றும் (d) கூறுகளில் சுட்டப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைப் பொறுத்த நேர்வில், அவர்கள் மத்திய அரசின் அலுவல்கள் தொடர்பான பணி செய்கிறவிடத்து அல்லது மத்திய அரசின் கட்டாளுகையின் கீழ் உள்ள அமைப்பில் அல்லது வாரியத்தில் அல்லது நிறுவனத்தில் அல்லது அதிகார அமைப்பில் அல்லது நிறுமத்தில் அல்லது சங்கத்தில் அல்லது பொறுப்புக்கட்டளைக்கு அல்லது தன்னாட்சி அமைப்பில் பணி செய்கிறவிடத்து அத்தகைய அலுவலர்கள் தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்பு மட்டுமே இந்தச் சட்டத்தின்படி லோக் ஆயுக்தா மற்றும் அதனுடைய விசாரணைப் பிரிவானது அதிகார வரம்பினைக் கொண்டிருக்கும்;
(e) சங்கங்கள் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளை (எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும்) (அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின்படி பதிவு செய்திருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) அரசால் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ நிதியளிக்கப்பட்ட அல்லது உதவி செய்யப்பட்ட மற்றும் அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கலாகிற அத்தகைய தொகைக்கும் அதிகமான ஆண்டு வருவாய் உள்ள அமைப்புகளில், இயக்குநர், மேலாளர், செயலாளர் மற்றும் பிற அலுவலர்கள் அனைவரும்.
(2) மேலே (1) ஆம் உட்பிரிவில் எது எவ்வாறு காணப்படினும் லோக் ஆயுக்தாவானது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 194 ஆம் உறுப்பின் (2) ஆம் கூறில் காணப்படுகின்ற வகைமுறைகளின்படி மாநில சட்டமன்றத்தில் அல்லது அதனுடைய குழு எதிலும் சட்டமன்ற உறுப்பினரால் கூறப்பட்ட அல்லது அவரால் அளிக்கப்பட்டுள்ள வாக்கு தொடர்பாக அவருக்கு எதிராக அத்தகைய ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ள அல்லது எழுகின்ற அல்லது தொடர்புடைய பொருட்பாடு எதையும் விசாரணை செய்தல் ஆகாது.
(மையச் சட்டம் 49 /1988)
(3) லோக் ஆயுக்தாவானது மேலே (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள நபர்கள் மட்டுமின்றி, 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழான ஊழல் குற்றச்சாட்டு எதுவும் தொடர்பாக, ஊழலுக்கு தூண்டி விடுதல், கையூட்டு அளித்தல் அல்லது கையூட்டு பெறுதல் அல்லது ஊழல் சதி செயலில் மேலே (1) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள நபருக்கு எதிராக ஈடுபடும் எவரின் செயல் அல்லது நடத்தை எதையும் விசாரணை செய்யலாம்:
வரம்புரையாக,- மத்திய அரசின் அலுவல்கள் தொடர்பாக பணிபுரியும் நபரைப் பொறுத்த நேர்வில் மத்திய அரசின் இசைவின்றி இந்தப் பிரிவின்படி நடவடிக்கை எடுத்தல் ஆகாது.
42 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவிசாரணைக்கு
உட்படாத பொருண்- மைகள்.
13. (1) இதில் இதற்கு பின்பு வகை செய்யப்பட்டவாறு தவிர, லோக் ஆயுக்தாவானது, பின்வரும் பொருட்பாடு தொடர்பாக பெறப்படும் புகாரின் மீது விசாரணை எதையும் நடத்துதல் ஆகாது:-
(a) இந்திய பாதுகாப்பு தொடர்பான குற்றத்தை புலன் விசாரணை செய்யும்
நோக்கத்திற்காக எடுக்கப்படும் நடவடிக்கை;
(b) பொருட்பாட்டை நீதிமன்றமானது விசாரணை செய்யுமா அல்லது செய்யாதா என்பதை தீர்மானிப்பது தொடர்பான அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல்;
(c) புகார்தாரர் ஒப்பந்த கடமையை நிறைவு செய்வதில் துன்புறுத்துதல் அல்லது மிகையான காலதாமத குற்றச்சாட்டை தெரிவிப்பதைத் தவிர்த்து வாடிக்கையாளர்களுடன் அல்லது வழங்குநர்களுடன் நிருவாகம் தொடர்பான முழுமையான வணிகம் தொடர்பான நிருவாகத்தை தழுவமை செய்கின்ற ஒப்பந்த நிபந்தனைகளிலிருந்து எழுகின்ற பொருட்பாடுகளில் எடுக்கப்படுகின்ற நிருவாக நடவடிக்கை
(d) பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பணி அமர்த்தம், பணி நீக்கம், சம்பளம், நடத்தை, பணி ஓய்வு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி அல்லது பணி ஓய்வின், பணி நீக்கத்தின் அல்லது பணி அறவின் பேரில் உரிமை கோருகின்ற உரிமை கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் அல்லது பொது ஊழியர்கள் பணி நிபந்தனைகள் தொடர்பான பிற பொருட்பாடுகள்;
(e) வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்;
(f) லோக் ஆயுக்தாவின் முந்தைய ஒத்திசைவுடன் எந்த நடவடிக்கைக்கு தொடர்பாக முறையான மற்றும் பொதுவான விசாரணைக்கு ஆணையிடப்பட்டதோ அந்த நடவடிக்கை எதுவும் தொடர்பாக;
(மையச் சட்டம் 60 /1952) (g) 1952 ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின்படி எந்த நடவடிக்கைக்குத் தொடர்பான பொருட்பாட்டிற்கு விசாரணைக்கு சுட்டியனுப்பப்பட்டதோ அந்த பொருட்பாடு தொடர்பான நடவடிக்கை எதுவும்;
(தமிழ்நாடு சட்டம்
27/2014) (h) 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட முறைமன்ற நடுவரின் அதிகார எல்லையின் கீழ் உள்ள நபர் அல்லது உள்ளாட்சி அமைப்பு தொடர்பான நடவடிக்கை எதுவும்;
(2) புகார் எதனின் பேரில் லோக் ஆயுக்தாவானது உளத் தேர்வினை பயன்படுத்தியதில் உள்ளான கருத்துருக்கள், உளத் தேர்வினை முதல் நோக்கில் முறையற்ற வகையில் பயன்படுத்திய அத்தகைய அளவிற்கு இல்லாமல் இருப்பதைத் தவிர்த்து, உளத் தேர்வினை பயன்படுத்தியதில் உள்ளான நிருவாக நடவடிக்கை எதையும் லோக் ஆயுக்தாவானது மறுப்பு தெரிவிக்கப்பட்டதற்கு அதிகாரம் கொண்டிருப்பதாக இந்தச் சட்டத்தில் எதுவும் இல்லை.
விளக்கம்: ஐயங்களை அகற்றுவதற்காக இந்தச் சட்டத்தின்படி புகாரானது பொது ஊழியர் என்ற நிலையில் தான் செயல்படுகின்ற அல்லது செயலாற்றுகின்ற காலம் தொடர்பானவற்றில் மட்டுமே என ஈங்கிதனால் விளம்புகை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 43நீதிமன்றம் அல்லது (மையச் சட்டம் 49/1988)
குழுவின் அல்லது அதிகார அமைப்பின் முன்பு நிலுவையில் உள்ள பொருட்- பாடுகளின் விசாரணை பாதிக்கப் படாதிருத்தல்.
14. 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான பொருட்பாடு அல்லது நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்குப் பின்பு விசாரணையின் தொடக்கத்திற்கு முன்பு, நீதிமன்றம் அல்லது சட்டமன்றக் குழு எதிலும் நிலுவையில் இருக்கின்ற நேர்வில், அத்தகைய பொருட்பாடு அல்லது நடவடிக்கையானது அத்தகைய நீதிமன்றத்தில், குழுவில் அல்லது அதிகார அமைப்பில் தொடர்ந்திருத்தல் வேண்டும்.
15. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு,- லோக் ஆயுக்தாவின்
ஆயங்களை அமைத்துரு- வாக்குதல் (a) லோக் ஆயுக்தாவின் அதிகார வரம்பினை அதனுடைய ஆயங்களால்
நிறைவேற்றலாம் ;
(b) தலைவர், தான் தக்கதெனக் கருதலாகிறவாறு, இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆயத்தை அமைத்துருவாக்கலாம் ;
(c) ஆயம் ஒவ்வொன்றும் சாதாரணமாக குறைந்தது ஒரு நீதித்துறை உறுப்பினரை உள்ளடக்கியிருத்தல் வேண்டும் மற்றும் அந்த ஆயத்தின் மூத்த உறுப்பினர் ஆயத்திற்கு தலைமை வகித்தல் வேண்டும்
(d) ஆயமானது தலைவரை உள்ளடக்கியிருக்கிறவிடத்து அந்த ஆயத்தை
தலைவரால் தலைமை வகித்தல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தாவானது, லோக் ஆயுக்தாவின் ஆயம் தொடர்பாக தான் செலுத்தலாகும் அதிகார வரம்பில் பரப்பிடங்களை அறிவிக்கை செய்தல் வேண்டும்.
(3) மேலே உட்பிரிவு (2)ல் எது எவ்வாறு காணப்படினும் தலைவர், அவ்வப்பொழுது ஆயங்களை அமைத்துருவாக்குவதற்கு அல்லது மீண்டும் அமைத்துருவாக்குவதற்கான அதிகாரத்தை கொண்டிருப்பார்.
(4) வழக்கு அல்லது பொருட்பாடு எதனின் விசாரணையின் எந்த நிலையிலும் அல்லது வழக்கு அல்லது பொருட்பாட்டின் தன்மையில், அதை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆயத்தால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று தலைவருக்கு தோன்றுமேயானால், தலைவர், வழக்கு அல்லது பொருட்பாட்டினை மாறுதல் செய்யலாம் அல்லது நேர்விற்கேற்ப தலைவர், தான் தக்கதெனக் கருதலாகிறவாறு, அத்தகைய ஆயத்திற்கு மாறுதல் செய்வதற்காக அவருக்கு சுட்டியனுப்பலாம்.
ஆயங்களுக்-
கிடையே பணிகளை பகிர்ந்தளித்தல்.
16. ஆயங்களை அமைத்துருவாக்குகிறவிடத்து, தலைவர் அவ்வப்பொழுது, அறிவிக்கையின் வாயிலாக ஆயங்களுக்கிடையே லோக் ஆயுக்தாவின் பணி- களை பகிர்ந்தளித்தல் குறித்து வகைமுறைகளைச் செய்யலாம் மற்றும் ஒவ்வொரு ஆயத்தால் தீர்வு செய்யப்பட வேண்டிய பொருட்பாடுகளுக்காக வகைமுறைக்கூட செய்யலாம்.
ஆயங்களுக்கிடையே
வழக்குகளை மாறுதல் செய்வதற்கு தலைவரின் அதிகாரம்.
17. ஆயங்களின் மாறுதலுக்காக புகார்தாரரின் அல்லது பொது ஊழியரின் விண்ணப்பத்தின் பேரில், தலைவர், புகார்தாரருக்கு அல்லது நேர்விற்கேற்ப பொது ஊழியருக்கு வாதங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றினை அளித்த பின்பு, ஒரு ஆயத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எதையும் முடிவிற்காக பிற ஆயம் எதற்கும் மாறுதல் செய்யலாம்.
44 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுபெரும்பான்மையினரால் முடிவு செய்யப்படுதல்.
18. ஆயத்தின் உறுப்பினர்கள் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருந்து, கருத்து எதுவும் குறித்து கருத்து வேறுபாடு இருக்குமேயானால், அவர்கள் எந்த கருத்து அல்லது கருத்துக்கள் குறித்து மாறுபடுகின்றாரோ அந்த கருத்து அல்லது கருத்துக்கள் குறித்து குறிப்பிடுதல் வேண்டும் மற்றும் தலைவருக்கு சுட்டியனுப்புதல் வேண்டும். தலைவர், தானே கருத்து அல்லது கருத்துக்களை விசாரணை செய்யலாம் அல்லது அத்தகைய கருத்து அல்லது கருத்துக்கள் குறித்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட லோக் ஆயுக்தாவின் பிற உறுப்பினர்களுக்கு வழக்கினை சுட்டியனுப்பலாம் மற்றும் அத்தகைய கருத்து அல்லது கருத்துக்களை முதலில் விசாரணை செய்த உறுப்பினர் உள்ளடங்கலாக வழக்கினை விசாரணை செய்த லோக் ஆயுக்தாவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்திற்கு இணங்கியவாறு முடிவு செய்தல் வேண்டும்.
அத்தியாயம் - VI.
முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பான நடைமுறை.
புகார்கள் மற்றும் முதல்நிலை விசாரணை மற்றும் விரிவான விசாரணை தொடர்பான வகைமுறைகள்.
19. (1) லோக் ஆயுக்தாவானது, புகாரைப் பெற்றுக் கொண்டதன் பேரில், முதலில் பொருட்பாட்டினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது அதை முடிவுறுத்த வேண்டுமா என்பதை முடிவு செய்தல் வேண்டும் மற்றும் லோக் ஆயுக்தாவானது மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்று முடிவு செய்யுமானால் அது,-
(a) பொருட்பாட்டில் நடவடிக்கைக்காக முதல்நோக்கு வழக்கு உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்கு விசாரணைப் பிரிவில் அல்லது அரசின் முகவாண்மை எதனாலும் 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a), (b) மற்றும் (e) கூறுகளில் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர் எவருக்கும் எதிராக முதல்நிலை விசாரணைக்காக ஆணையிடுதல் வேண்டும்;
(b) பொருட்பாட்டில் நடவடிக்கைக்காக முதல்நோக்கு வழக்கு இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு 12 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (c) மற்றும் (d) கூறுகளில் உள்ள A, B, C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்கள் தொடர்பாக முதல்நிலை விசாரணையை நடத்துவதற்காக விழிப்புப்பணி ஆணையத்திற்கு புகாரினை அனுப்புதல் வேண்டும்:
வரம்புரையாக,- விழிப்புப் பணி ஆணையமானது இந்தக் கூறின்படி அதற்கு சுட்டப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக A மற்றும் B தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்கள் தொடர்பாக முதல்நிலை விசாரணை செய்தபின் (2) ஆம் உட்கூறில் காணப்படுகின்ற வகைமுறைகளுக்கு இணங்கியவாறு அதனுடைய அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பித்தல் வேண்டும் மற்றும் C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்களைப் பொறுத்த நேர்வில், ஆணையமானது நடைமுறையில் உள்ள அறிவுறுத்தங்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்கியவாறு நடவடிக்கை தொடருதல் வேண்டும்.
(2) மேலே உட்பிரிவு (1) ல் சுட்டப்பட்டுள்ள முதல்நிலை விசாரணையை, நேர்விற்கேற்ப, விசாரணைப் பிரிவு அல்லது அரசின் முகவாண்மை அல்லது விழிப்புப் பணி ஆணையமானது மேற்கொள்ளுதல் வேண்டும் மற்றும் சேகரிக்கப்பட்ட பொருள்கள், தகவல் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் பொது ஊழியர்களிடமிருந்து மற்றும் தகுதிவாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்புரைகளை கோருதல் வேண்டும் மற்றும் தொடர்புடைய பொது ஊழியரிடமிருந்து மற்றும் தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிடமிருந்து குறிப்புரைகளை பெற்ற பின்பு, சுட்டுகையினை பெற்றுக் கொண்ட தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் லோக் ஆயுக்தாவிற்கு அறிக்கையினை தாக்கல் செய்தல் வேண்டும்;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 45(3) விழிப்புப்பணி ஆணையமானது, முதல்நிலை விசாரணை செய்யும் நோக்கத்திற்காக நடைமுறையில் உள்ள அறிவுறுத்தங்கள் மற்றும் ஆணைகளுக்கு இணங்கியவாறு உரிய முகவாண்மையின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
(4) லோக் ஆயுக்தாவின் மூன்று உறுப்பினர்களுக்கு குறையாத ஆயமானது விசாரணைப் பிரிவிலிருந்து அல்லது அரசின் முகவாண்மையிடமிருந்து விழிப்புப் பணி ஆணையத்திடமிருந்து மேலே உட்பிரிவு (2) ன்படி பெற்றுக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும் பரிசீலனை செய்தல் வேண்டும் மற்றும் பொது ஊழியருக்கு வாதங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பொன்றினை வழங்கிய பின்பு, முதல்நோக்கு வழக்கு இருப்பது குறித்து முடிவு செய்தல் வேண்டும் மற்றும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது:-
(a) பிரிவு 12, உட்பிரிவு (1) ல் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர்கள் தொடர்பாக (C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்களைத் தவிர்த்து) அதனுடைய விசாரணைப் பிரிவால் அல்லது அரசு முகவாண்மையால் விரிவான விசாரணைக்காக ஆணையிடலாம்;
(b) A மற்றும் B தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்கள் தொடர்பாக துறை
நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யலாம்;
(c) பொது ஊழியருக்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுறுத்தலாம் மற்றும் பிரிவு
35 ன்படி புகார்தாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம்;
(5) புகாரின் அடிப்படையில் விரிவான விசாரணையை நடத்த வேண்டுமென்று முடிவு செய்கிற நேர்வில், அதனுடைய ஆணையின் தேதியிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் முடிந்தவரை உகந்தவாறான விசாரணை செய்வதற்கு அது விசாரணைப் பிரிவிற்கு அல்லது அரசு முகவாண்மைக்கு பணிப்புரை பிறப்பித்தல் வேண்டும்.
வரம்புரையாக,- காரணங்களை எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக ஒரு தடவையில் ஆறுமாத காலங்களுக்கு மிகாத மேலுமான காலமொன்றினால் மேற்சொன்ன காலத்தை நீட்டிக்கலாம்.
(6) அவ்வாறு பணிக்கப்பட்டவாறு விசாரணைப்பிரிவு அல்லது அரசு முகவாண்மையானது லோக் ஆயுக்தாவால் விரிவான விசாரணையொன்றிற்காக அதற்கு சுட்டப்பட்ட நேர்வுகள் தொடர்பாக லோக் ஆயுக்தாவிற்கு விரிவான விசாரணை அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
(7) லோக் ஆயுக்தாவின் மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஆயமொன்று மேலே உட்பிரிவு (6) ன்படி அவ்வாறு பணிக்கப்பட்டவாறு விசாரணைப் பிரிவிடமிருந்து அல்லது முகவாண்மையிடமிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு அறிக்கையையும் பரிசீலித்தல் வேண்டும் மற்றும்,-
(a) பிரிவு 12, உட்பிரிவு (1) ல் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர்கள் தொடர்பாக (C மற்றும் D தொகுதிகளைச் சார்ந்த பொது ஊழியர்களைத் தவிர்த்து) உரிய நடவடிக்கைக்காக தகுதி வாய்ந்த அதிகார அமைப்பிற்கு அறிக்கையை அனுப்பலாம்;
(b) புகாரை முடிவுறுத்துவதற்காக ஆணை பிறப்பிக்கலாம்.
(8) லோக் ஆயுக்தாவானது முதல்நிலை விசாரணையின்போது அல்லது நேர்வுக்கேற்ப விரிவான விசாரணையின் போது தனக்குத் தக்கதெனக் கருதலாகிறவாறான முதல்நிலை விசாரணைக்கு அல்லது நேர்வுக்கேற்ப விரிவான விசாரணைக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதற்கான உரிய ஆணைகளைப் பிறப்பிக்கலாம்.
46 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(9) லோக் ஆயுக்தாவானது, இணையதளம் மூலம் நேரத்திற்கேற்ப மற்றும் ஒழுங்குமுறை விதிகளால் குறிப்பிடப்படுகின்றவாறான அத்தகைய முறையில் அதனிடம் நிலுவையிலுள்ள புகார்களின் மற்றும் அதனால் முடிவு செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கையின் நிலை குறித்து பொதுமக்களுக்கு தெரியும்படிச் செய்தல் வேண்டும்.
(10) லோக் ஆயுக்தாவானது, முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையைச் செய்கின்ற நடவடிக்கையில் தேவைப்படக்கூடிய அசல் பதிவுருக்களை மற்றும் சான்றுகளை இறுத்தி வைத்துக்கொள்ளலாம் அல்லது இறுத்தி வைத்துக்கொள்வதற்கு விழைதல் வேண்டும்.
(11) பிறவாறு வகைசெய்யப்பட்டவாறின்றி இந்தச் சட்டத்தின்படி முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையை நடத்தும் முறை மற்றும் நடைமுறையானது (பொது ஊழியருக்கு கிடைக்கக்கூடிய அத்தகைய சான்றுப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கலாக) குறித்துரைக்கலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
பாதிக்கப்படும்
20. (a) நடவடிக்கையின் எந்த நிலையிலும் லோக் அயுக்தாவானது ,-
நபர்களின் வாதங்களைக் கேட்டறிதல்.
(a) யார் மீது புகார் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நபரைத் தவிர பிற நபர் எவரையும் விசாரிக்க வேண்டிய தேவையாக இருக்கிறது என்று அது கருதுகின்றதென்றால், அல்லது
(b) எந்த நபருக்கு எதிராக புகார் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நபரைத் தவிர பிற நபர் விசாரணையினால் அவருடைய புகழ் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகையில், லோக் ஆயுக்தாவானது அந்த நபருக்கு விசாரணையில் அவர் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கான நியாயமான வாய்ப்பொன்றினை இயற்கை நீதியின் கொள்கைகளுக்கு இணங்கியவாறு அளிக்க வேண்டும் மற்றும் அவர் தரப்பு சான்றுகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
லோக் ஆயுக்தாவானது
தகவல் முதலியவற்றை அளிக்குமாறு பொது ஊழியர் அல்லது பிற நபர் எவரையும் வேண்டலாம்.
21. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை எதனின் நோக்கத்திற்காகவும் லோக் ஆயுக்தாவானது அல்லது விசாரணை இயக்குநர், நேர்வுக்கேற்ப அத்தகைய தகவலை அனுப்புவதற்கு அல்லது அத்தகைய ஆவணம் எதனையும் முன்னிலைப் படுத்துவதற்கு அத்தகைய முதல்நிலை விசாரணைக்கு அல்லது விரிவான விசாரணைக்கு தொடர்புடைய தகவலை அனுப்புவதற்கு அல்லது ஆவணங்களை முன்னிலைப்படுத்துவதற்கு பிற நபர் எவரும் தகுதியுடையவராயிருக்கிறார் என்று அதற்கு தோன்றுகிற பொது ஊழியரை அல்லது பிற நபர் எவரையும் கோரலாம்.
விசாரணைக்கு, முன்அனுமதி தேவையில்லை.
22. பொது ஊழியர் எவருக்கும் எதிராக லோக் ஆயுக்தாவிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் எதன் பேரில் விசாரணைப் பிரிவால் அல்லது விழிப்புப்பணி ஆணையத்தால் அல்லது அரசின் முகவாண்மை எதனாலும் முதல்நிலை விசாரணையை அல்லது விரிவான விசாரணையை செய்யும் நோக்கத்திற்காக லோக் ஆயுக்தாவால் அதிகார அமைப்பு எதனிடமும் முன் அனுமதி வழங்குதல் அல்லது ஒப்புதல் அளித்தல் எதுவும் வேண்டப்படுதலாகாது.
அத்தியாயம் - VII.
லோக் ஆயுக்தாவின் அதிகாரங்கள்.
லோக் ஆயுக்தாவின் மேற்பார்வையிடும் அதிகாரங்கள்.
23. லோக் ஆயுக்தாவின் மேற்பார்வையிடும் அதிகாரங்கள் அப்போதைக்கு செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின்படி விசாரணைக்கு எந்த அளவிற்கு தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த பொருட்பாடுகள் தொடர்பாக விசாரணை இயக்குநரை கண்காணிக்கவும் மற்றும் அறிவுறுத்தலை வழங்குவதற்கும் அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 47குறிப்பிட்ட சில (மையச் சட்டம் V/ 1908)
நேர்வுகளில் லோக் ஆயுக்தாவானது உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்களை பெற்றிருக்கும்.
24. (1) இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு விசாரணையின் எந்த நோக்கத்திற்காகவும் லோக் ஆயுக்தாவின் விசாரணைப் பிரிவு பின்வரும் பொருட்பாடுகள் தொடர்பாக உரிமை வழக்கொன்றை விசாரணை செய்யும் பொழுது, 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி ஒரு உரிமையியல் நீதிமன்றம் கொண்டிருக்கும் அனைத்து அதிகாரங்களையும் அது கொண்டிருக்கும், அதாவது,-
(a) நபர் எவரையும் அழைப்பாணையின் மூலம் மற்றும் கட்டாயமாக வருகை தரும்படியும் மற்றும் சத்திய பிரமாணத்தின் பேரில் அவரை விசாரணை செய்தல்;
(b) ஆவணம் எதனையும் வெளிக்கொணர்ந்து முன்னிலைப்படுத்துமாறு
கோருதல்;
(c) சத்திய பிரமாணத்தின் பேரில் சான்றினைப் பெறுதல் ; (d) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதனிடமிருந்தும் பொது ஆவணம் எதனையும்
அல்லது அதனின் நகல் எதனையும் கேட்டுப் பெறுதல்;
(e) சாட்சியங்களை அல்லது ஆவணங்களை விசாரணை செய்வதற்கான
ஆணையங்களை அமைத்தல்:
வரம்புரையாக,- லோக் ஆயுக்தாவின் நடவடிக்கையில் வருகை தரமுடியாத நிலையில் சாட்சி இருக்கின்றார் என்று லோக் ஆயுக்தா கருதுகின்ற நேர்வில், அத்தகைய ஆணையத்தை அமைக்கலாம்; மற்றும்
(f) வகுத்துரைக்கப் படலாகிறவாறான அத்தகைய பிற பொருட்பாடுகள்.
(2) லோக் ஆயுக்தாவின் முன்புள்ள நடவடிக்கை எதுவும் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் 193ஆவது பிரிவின் பொருளின்படி ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
லோக் ஆயுக்தாவானது 25. (1) லோக் ஆயுக்தாவானது முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை எதனையும் நடத்தும் நோக்கத்திற்காக அரசின் ஒப்புதலுடன் அரசின் அலுவலர் எவரின் அல்லது அரசு முகவாண்மை எதனின் சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அரசு அலுவலர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு அதிகாரம்.
(2) முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணையின் நோக்கத்திற்காக மேலே உட்பிரிவு (1 )-ன்படி அலுவலர் அல்லது முகவாண்மை எதனின் சேவையைப் பயன்படுத்தப்படுபவை லோக் ஆயுக்தாவின் பணிப்புரை மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும்,-
(a) நபர் எவரையும் அழைப்பாணை மூலம் வரவழைப்பதற்கு மற்றும் அலுவலகத்திற்கு கட்டாயமாக வருகை தருமாறும் மற்றும் அவரை விசாரணை செய்யலாம் ;
(b) ஆவணம் எதனையும் வெளிக்கொணர்ந்து மற்றும் முன்னிலைப்படுத்துவதற்கு
வேண்டலாம் மற்றும்,
(c) அலுவலர் எவரிடமிருந்தும் பொது ஆவணங்களை அல்லது அதனின் நகலைத்
தருமாறு கோரலாம்;
(3) மேலே உட்பிரிவு (1 ) -ன்படி பயன்படுத்தப்படுகின்ற அலுவலர் அல்லது முகவாண்மை எவரின் சேவைகளும் முதல்நிலை விசாரணை அல்லது விரிவான விசாரணை தொடர்பான பொருட்பாடு எதனையும் விசாரிக்க வேண்டும் மற்றும் இது சம்பந்தமாக அதனால் குறிப்பிடப்படலாகிறவாறான அத்தகைய காலத்திற்குள் லோக் ஆயுக்தாவிற்கு அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்ய வேண்டும்.
48 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஊழல் குற்றச்சாட்- 26. (1) லோக் ஆயுக்தாவானது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முதல்நிலை விசாரணை ஒன்றைச் செய்கின்றவிடத்து சான்றின் அடிப்படையில் முதல் நோக்கில் ஆதாரம் இருக்கிறது என்று மனநிறைவடைகிறவிடத்து, அதாவது, -
(a) முதல்நிலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது பிரிவு 12, உட்பிரிவு (1)-ன் (c) கூறு அல்லது (d) கூறில் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர் அவருடைய பதவியில் தொடர்ந்திருக்கையில் அத்தகைய முதல்நிலை விசாரணை பாதிக்கப்படக்கூடும் என்றால்; அல்லது
டுடன் தொடர்புடைய பொது ஊழியரை பணிமாறுதல் அல்லது தற்காலிகப் பணிநீக்கம் செய்யவேண்டும் என்று பரிந்துரைப்- பதற்கு லோக் ஆயுக்தாவிற்கு உள்ள அதிகாரம்.
(b) மேலே (a) கூறில் சுட்டப்பட்டுள்ள பொது ஊழியர் சான்றினை எந்த வகையிலும் அழிக்கக்கூடும் அல்லது எந்த வகையிலும் மறைக்கக்கூடும் அல்லது சாட்சிகளை தன்வசப்படுத்தக்கூடும் என்றால்,
அதன்பின்பு லோக் ஆயுக்தாவானது, ஆணையில் குறித்துரைக்கலாகிறவாறான அத்தகைய காலம் வரை அத்தகைய பதவியிலிருக்கும் அத்தகைய பொது ஊழியரை பணி மாறுதல் செய்வதற்கு அல்லது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்வதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யலாம்.
(2) அரசு, நிர்வாகக் காரணங்களுக்காக, அவ்வாறு செய்வதற்கு அது உகந்ததாக இல்லாமல் இருக்கின்றவிடத்து, எழுதி பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக தவிர மேலே (1 ) ஆம் உட்பிரிவின் படி செய்யப்பட்ட பரிந்துரையை அரசு சாதாரணமாக ஏற்க வேண்டும்.
முதல் நிலை
27. லோக் ஆயுக்தாவானது, இந்தச் சட்டத்தின்படி அதனுடைய செயற்பணிகளை ஆற்றுகையில் ஆவணம் அல்லது பதிவுரு எதனையும் தயார் செய்வதற்கு அல்லது வைத்துவருவதற்கு ஒப்படைக்கப்பட்ட பொது ஊழியர் ஒருவருக்கு, -
(a) அழிக்கப்படுவதிலிருந்து அல்லது சேதப்படுத்தப்படுவதிலிருந்து அத்தகைய
ஆவணம் அல்லது பதிவுருவினைப் பாதுகாப்பதற்கு அல்லது,
விசாரணையின் போது ஆவணங்களை அழிப்பதை தடை செய்வதற்கு, பணிப்புரைகள் பிறப்பிப்பதற்கு லோக் ஆயுக்தாவிற்குள்ள அதிகாரம்.
(b) பொது ஊழியர் அத்தகைய ஆவணம் அல்லது பதிவுருவினை திருத்தம் செய்வதிலிருந்து அல்லது மறைத்து வைப்பதிலிருந்து தடுப்பதற்கு; அல்லது,
(c) ஊழல் மூலம் அவரால் தவறான வழியில் பெறப்பட்டதாகக் கருதப்படும் சொத்துக்கள் எதனையும் உரிமை மாற்றம் செய்வதிலிருந்து அல்லது பாராதீனம் செய்வதிலிருந்து தடுப்பதற்கு,
உரிய பணிப்புரைகளை வழங்கலாம்.
ஒப்படைவு
செய்வதற்கான அதிகாரம்.
28. லோக் ஆயுக்தாவானது, எழுத்துபூர்வமாக பொதுவான அல்லது சிறப்பு ஆணை வாயிலாக மற்றும் அதில் குறிப்பிடப்படலாகிறவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கு மற்றும் வரைத்தடைகளுக்கு உட்பட்டு அதனிடம் வழங்கப்பட்டுள்ள நிர்வாகம் அல்லது நிதி அதிகாரம் எதனையும், அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய உறுப்பினர்களால் அல்லது அலுவலர்களால் அல்லது பணியாளர்களால் பயன்படுத்தப்படலாம் அல்லது செய்து முடிக்கப்படலாம் என்று பணிப்புரை பிறப்பிக்கலாம்.
அத்தியாயம் - VIII.
லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும்
அலுவலர்களுக்கெதிரான புகார்கள்.
29. (1) லோக் ஆயுக்தாவானது, தலைவர் அல்லது உறுப்பினர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் எதனையும் விசாரித்தல் கூடாது.
(2) உட்பிரிவு (4)- இன் வகைமுறைகளுக்குட்பட்டு, ஆளுநரால் உயர்நீதிமன்றத்திற்கு சுட்டுகை செய்யப்பட்ட, தலைவர் அல்லது உறுப்பினர்கள் மீதான, சட்டமன்றப் பேரவையின் குறைந்தபட்சம் நாற்பத்தைந்து உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டமனுவின் மீது, ஆளுநரால் உயர்நீதிமன்றத்திற்கு சுட்டுகை ஒன்றினை செய்யப் பட்டிருப்பதின் பேரில், அதன் பின்பு தவறான நடத்தை அடிப்படையின் பேரில், அது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தினால் நடத்தப்படும்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 49 விசாரணையின் பேரில் நேர்வுக்கேற்ப அறிக்கை செய்யப்பட்ட அந்தத் தலைவர் அல்லது உறுப்பினரை ஆளுநரின் ஆணையின் மூலம் அத்தகைய அடிப்படையில் அவருடைய பணியிலிருந்து நீக்கப்படவேண்டும்.
லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும் தற்காலிகப் பணி நீக்கம் செய்தல்.
(3) ஆளுநர், அத்தகைய சுட்டுகையின் பேரில், உயர்நீதிமன்றத்தின் இறுதி அறிக்கை பெறப்பட்டதன் பேரில் ஆளுநர் ஆணையினை பிறப்பிக்கும் வரை, இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தால் செய்யப்பட்ட பரிந்துரையினை அல்லது இடைக்கால ஆணைபெறப்பட்டதன் பேரில், மேலே (2) ஆம் உட்பிரிவின்படி தலைவர் அல்லது உறுப்பினர் எவர் தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கிற சுட்டிகையொன்றின் அடிப்படையில் அலுவலகத்திலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யலாம்.
(4) மேலே உட்பிரிவு (2)-ல் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் தலைவர் அல்லது உறுப்பினர்,-
(a) நொடிப்புநிலையர் என்று தீர்ப்பளிக்கப்பட்டவராக இருக்கின்றாரென்றால், அல்லது
(b) அவருடைய அலுவலகக் கடமைகளை ஆற்றாமல், சம்பளம் பெறும் வேறிடப் பணியில் அவருடைய அலுவலகக் காலத்தின்போது அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறாரென்றால், அல்லது
(c) மூளைக் குறைபாடு அல்லது உடல் நலக்குறைபாடு காரணங்களினால் அவர் அலுவலகத்தில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பது பொருத்தமுடையதாக இருக்காது என்று நினைக்கிறார் என்றால்,
ஆளுநர் தனது ஆணை வாயிலாக நேர்வுக்கேற்ப தலைவர் அல்லது உறுப்பினரை பதவி நீக்கம் செய்யலாம்.
(5) தலைவர் அல்லது உறுப்பினர் எவரும் மத்திய அரசால் அல்லது தமிழ்நாடு அரசால் செய்யப்பட்ட உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் எதிலும் எந்த வகையிலும் தொடர்புடையவராக அல்லது உரித்தமுடையவராக இருக்கிறார் என்றால் அல்லது அதனின் ஆதாயத்திற்காக எந்த வகையிலும் பங்கெடுத்துக் கொள்பவராக இருக்கிறாரென்றால் அல்லது உறுப்பினரைத் தவிர மற்றும் கூட்டுருவான நிறுமத்தின் பிற உறுப்பினர்களுடன் பொதுவாக பிறவாறு அதிலிருந்து ஆதாயம் பெறுதல் அல்லது சம்பளம் பெறுதல் எதிலும் பங்கெடுத்துக் கொள்ளுதலானது மேலே (2) ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக அவர் தவறான செயலைச் செய்திருக்கிறார் என்று கொள்ளப்படுதல் வேண்டும்.
லோக் ஆயுக்தாவின் அலுவலர்களுக்கு எதிரான புகார்கள்.
(மையச் சட்டம் 49/ 1988)
30. (1) லோக் ஆயுக்தாவின் அலுவலர் அல்லது பணியாளர்கள் அல்லது முகவாண்மை எதற்கும் எதிராக செய்யப்பட்ட குற்றச்சாட்டு அல்லது தவறான செயலை புகார் தெரிவிக்க அல்லது லோக் ஆயுக்தாவுடன் சேர்ந்திருப்பதாக இருக்கக்கூடிய, 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தண்டிக்கக்கூடிய குற்றம் ஒன்றிற்காக, இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(2) லோக் ஆயுக்தா அமைப்பானது, புகார் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் செய்யப்பட்ட புகார் அல்லது குற்றச்சாட்டை விசாரணை செய்து முடிக்க வேண்டும்.
(3) லோக் ஆயுக்தா அமைப்பின் அலுவலர் அல்லது பணியாளர், முகவாண்மை எவருக்கும் எதிரான புகாரின் அடிப்படையில் விசாரணை ஒன்றை செய்யும் பொழுது அல்லது லோக் ஆயுக்தாவுடன் முகவாண்மை சேர்ந்து செயல் பட்டிருக்கிறது அல்லது சேர்ந்திருந்தது என்றிருக்கிறபோது கிடைக்கக்கூடிய அந்த சான்றின் அடிப்படையில் முதல்நோக்கில் மனநிறைவு அடையுமானால், அதாவது, -
(a) விசாரணையை நடத்தும் பொழுது லோக் ஆயுக்தாவிலோ அல்லது தொடர்புடைய பதவியிலோ முகவாண்மையிலோ உள்ள அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் தொடர்ந்து பணியாற்றுவது அத்தகைய விசாரணையை எதிர்மறையாக பாதிக்கப் படும்பொழுது அல்லது தன்னுடைய அலுவலகப் பதவியில் முகவாண்மை ஈடுபட்டிருத்தல் அல்லது சேர்ந்திருத்தல்; அல்லது50 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (b) லோக் ஆயுக்தா அமைப்பின் அலுவலர் அல்லது பணியாளர் அல்லது முகவாண்மையானது சான்றினை எந்த வகையிலும் மாற்றுவதில் அல்லது அழிப்பதில் ஈடுபடுதல் அல்லது சேர்ந்து செயல்படுதல் அல்லது சாட்சிகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்தல்.-
அவ்வாறானால், அதன் பின்பு லோக் ஆயுக்தாவானது, அத்தகைய அலுவலரை அல்லது பணியாளரை ஆணை வாயிலாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யலாம் அல்லது அதனால் இதற்கு முன் பயன்படுத்தப்பட்ட லோக் ஆயுக்தாவின் அனைத்து அதிகாரங்களை மற்றும் பொறுப்புகளுடன் ஈடுபட்டுள்ள அல்லது சேர்ந்து செயல்பட்டுள்ள அத்தகைய முகவாண்மையையும் நீக்கலாம்.
(மையச் சட்டம் 49/ 1988) (4) விசாரணை முடிக்கப் பட்டதன்பேரில் 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி குற்றமொன்று செய்யப்பட்டிருப்பதற்கு அல்லது தவறான செயல் எதனின் சான்றின் முதல் நோக்கிலேயே லோக் ஆயுக்தா மனநிறைவடைந்திருக்கிறதென்றால் அல்லது அத்தகைய விசாரணை முடிவடைந்ததன் அடிப்படையில் பதினைந்து நாட்களுக்குள் அது லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலர் அல்லது பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மாநிலத்தின் விழிப்புப்பணி ஆணையத்திற்கு அதனுடைய அறிக்கையை அனுப்ப வேண்டும் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் :
வரம்புரையாக,- அத்தகைய ஆணை எதுவும் அவ்வாறு ஈடுபட்டுள்ள அல்லது இணைந்து செயல்பட்டுள்ள லோக் ஆயுக்தாவின் அத்தகைய அலுவலருக்கு அல்லது பணியாளருக்கு அல்லது முகவாண்மைக்கு அவர்களுடைய தரப்பு வாதத்தை கேட்பதற்கான வாய்ப்பொன்றை கொடுக்காமல் பிறப்பிக்கப்படுதலாகாது.
அத்தியாயம் - IX.
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.
வரவு செலவுத் திட்டம். 31. லோக் ஆயுக்தாவின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவுகளைக் காட்டும் அடுத்த நிதி ஆண்டிற்கான அதனுடைய வரவு செலவு திட்டத்தினை வகுத்துரைக்கப்படலாகிறவாறு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய காலத்தில் தயார் செய்தல் வேண்டும்.
அரசால் அளிக்கப்படும்
மானியங்கள்.
32. அரசு, இது தொடர்பாக மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் சட்டப்படி ஒப்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கத்திற்குப் பின்பு, லோக் ஆயுக்தாவின் அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தொடர்பாக செலுத்தத் தக்கதாக இருக்கக்கூடிய சம்பளங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியம் உள்ளடங்கலாக அதனின் தலைவருக்கு மற்றும் உறுப்பினர்களுக்கு செலுத்தத் தக்கதாக உள்ள சம்பளங்களுக்காக மற்றும் படிகளுக்காக தேவைப்படலாகிறவாறான அத்தகைய தொகைகளை லோக் ஆயுக்தாவிற்கு வழங்கலாம் .
கணக்குகளின் ஆண்டு
விவரவுரை.
33. (1) லோக் ஆயுக்தாவானது தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயருடன் ஆலோசனை செய்து வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய படிவத்தில் கணக்குகளில் வருடாந்திர விவரவுரையொன்றினை தயார் செய்ய வேண்டும் மற்றும் உரிய முறையில் கணக்குகளை மற்றும் பிற தொடர்புடைய பதிவுருக்களை பராமரிக்க வேண்டும் ;
(2) லோக் ஆயுக்தாவின் கணக்குகள் தமிழ்நாட்டின் தலைமைக் கணக்காயர் மூலம் அவரால் குறித்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய இடைவேளைகளில் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும் ;
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 51(3) தமிழ்நாட்டின் தலைமை கணக்காயர், அல்லது இந்தச் சட்டத்தின்படி லோக் ஆயுக்தாவின் கணக்குகளை தணிக்கை செய்வதுடன் இது தொடர்பாக அவரால் பணியமர்த்தம் செய்யப்பட்ட நபர் எவரும், அரசின் கணக்குகளை தணிக்கை செய்யும் தமிழ்நாட்டின் தலைமை கணக்காயர் பெற்றிருக்கும் அதே மாதிரியான உரிமைகளை, சலுகைகளை மற்றும் அதிகார அமைப்பைப் பெற்றிருக்கக் கூடியவராக இருப்பார் மற்றும் குறிப்பாக கணக்குப் புத்தகங்களை, கணக்குகளை, தொடர்புடைய செலவுச் சீட்டுகளை மற்றும் பிற ஆவணங்களை தானே கேட்டுப் பெறுவதற்கு உரிமையுடை- யவராக இருப்பார் மற்றும் லோக் ஆயுக்தாவின் அலுவலகங்கள் எதனையும் ஆய்வு செய்வதற்கும் உரியமையுடையவராக இருப்பார் ;
(4) லோக் ஆயுக்தாவின் கணக்குகள் தமிழ்நாட்டின் தலைமை கணக்காயரால் சான்றளிக்கப்பட்டவாறு அல்லது இது சம்பந்தமாக பணியமர்த்தம் செய்யப்பட்ட பிற நபர் எவரும் தணிக்கை அறிக்கையுடன் சேர்த்து அதன் பின்பு அது அரசுக்கு ஆண்டுதோறும் அனுப்பப்படுதல் வேண்டும் மற்றும் அரசானது மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையின் முன்பு அதனை வைப்பதற்கு விழைதல் வேண்டும் ;
அரசுக்கு விவர
அறிக்கைகள் முதலியவற்றை அளித்தல்.
34. லோக் ஆயுக்தாவானது வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய நேரத்தில் மற்றும் அத்தகைய படிவத்தில் அரசால் கோரப்படுகிறவாறு அரசால் அவ்வப்பொழுது தேவைப்படலாகும் லோக் அயுக்தாவின் அதிகார வரம்பின்படியான பொருட்பாடு எதற்கும் தொடர்பான அத்தகைய அறிக்கைகளை மற்றும் விவரவுரைகளை அரசுக்கு அனுப்புதல் வேண்டும் ;
அத்தியாயம் - X.
பொய் புகாரின் மீது நடவடிக்கை.
பொது ஊழியருக்கு 35. (1) இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின்படி தவறாக, அற்பத்தனமாக அல்லது அடாத வகையில் புகார் செய்கிறவர் எவராக இருப்பினும், தண்டனைத் தீர்ப்பின் பேரில் ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்படலாகும் ஒன்றிற்காக சிறை தண்டனையுடன் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் பணத்தண்டத்துடன், தண்டிக்கப்படுவார்.
எதிராகப் பொய் புகார் அளித்ததற்காக மற்றும் இழப்பீடு வழங்குதல் முதலியவற்றிற்காக வழக்கு தொடருதல்.
(2) நீதிமன்றம் எதுவும், நபர் ஒருவரால் எவருக்கும் எதிராக தவறாக, அற்பத்தனமாக, அடாத வகையில் புகார் செய்யப்பட்டிருந்ததன் பேரில் தவிர மேலே (1) ஆம் உட்பிரிவின்படி குற்றமொன்றினை அல்லது லோக் ஆயுக்தாவால் அதிகாரமளிக்கப்பெற்ற நபர் ஒருவரால் நடவடிக்கை எடுத்தல் ஆகாது.
(3) மேலே உட்பிரிவு (1) - ன்படி குற்றம் ஒன்று தொடர்பாக வழக்கு தொடருதல் அரசு குற்ற வழக்குரைஞரால் நடத்தப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய வழக்கு தொடருதல் தொடர்பாக அனைத்து செலவுகளும் அரசால் எற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்;
(4) இந்தச் சட்டத்தின்படி தவறான புகாரை தொடுத்ததினால் தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நபர், தனி நபராக அல்லது சங்கமாக அல்லது தனி நபர்களின் குழுமமாக அல்லது பொறுப்புக் கட்டளையாக (பதிவு செய்யப்பட்டதோ அல்லது பதிவு செய்யப்படாததோ) உள்ள அத்தகைய நபர், இது தொடர்பான வழக்கை எதிர்கொள்வதற்கு பொது ஊழியருக்கு செலவான வழக்கு செலவுகளுடன் பொது ஊழியர் யாருக்கு எதிராக அவர் தவறான புகார் அளித்திருக்கிறாரோ அத்தயை நபருக்கு தவறான புகாருக்காக அவர் அந்த பொது ஊழியருக்கு இழப்பீடு அளித்தல் வேண்டும் ;
52 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(5) இந்தப் பிரிவில் அடங்கியிருப்பது எதுவும் நன்னம்பிக்கையில் செய்யப்பட்ட புகார்கள் என்கின்ற நேர்வில் பொருந்தாது.
(மையச்சட்டம் 45/1860) விளக்கம்: இதில் உட்பிரிவின் நோக்கத்திற்காக "நன்னம்பிக்கை" என்கின்ற சொற்றொடர் என்பது உரிய கவனத்துடன், எச்சரிக்கையுடன் நன்னம்பிக்கையில் ஒருவரால் நம்பப்பட்டது அல்லது செய்யப்பட்டது மற்றும் பொறுப்புணர்வுடன் ஆன மனநிறைவுடன் அல்லது 1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 79 ஆம் பிரிவின்படியான சட்டத்தின் பொருண்மையை தவறாக புரிந்து கொண்டதன் மூலம் அவரை நம்புவது சரியானது என்று பொருள்படும்.
சங்கத்தால் அல்லது
நபர்களின் குழுமத்தால் அல்லது பொறுப்புக் கட்டளையால் பொய் புகார் செய்தல்.
36. (1) பிரிவு 35, உட்பிரிவு (1) ன்படி சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக் கட்டளை (பதிவு செய்யப்பட்டதோ அல்லது பதிவு செய்யப்படாததோ) எதனாலும் செய்யப்பட்டிருக்கின்றவிடத்து மற்றும் குற்றம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் நேரடியாக அந்தக் குற்றத்தை செய்ததற்கான பொறுப்புக்குள்ளானவராக மற்றும் செய்திருந்த ஒவ்வொரு நபரும், பொறுப்புடையவராக இருந்திருக்கும் சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளை, அலுவல்களை அல்லது அலுவற்பணிகளைச் செய்வதற்காக அல்லது சங்கத்தின் நடவடிக்கைகள் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளை அதைப்போல அத்தகைய சங்கம் அல்லது நபர்களின் குழுமம் அல்லது பொறுப்புக்கட்டளை அக்குற்றத்தை செய்துள்ளவையாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கடப்பாடுடையதாக இருத்தல் வேண்டும் மற்றும் அதன்படி தண்டிக்கப்படுதல் வேண்டும்;
வரம்புரையாக,- இந்த உட்பிரிவில் அடங்கியிருப்பது இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளபடி தண்டனை எதற்கும் கடப்பாடுடையவராக இருக்கும் அத்தகைய நபர் எவரும், அவர் அத்தகைய குற்றம் அவருடைய அளவுக்கு எட்டாத வகையில் நடந்திருக்கிறது எனினும் அல்லது அத்தகைய குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து உரிய முறையில் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தார் என்று நிரூபிக்கிறாரென்றால், அவர் தண்டிக்கப்படக் கூடாது.
(2) மேலே உட்பிரிவு (1)-ல் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் சங்கம் ஒன்றினால் அல்லது நபர்களின் குழுமத்தால் அல்லது பொறுப்புக்கட்டளையால் (அது பதிவு செய்யப்பட்டதோ அல்லது பதிவு செய்யப்படாததோ) இந்தச் சட்டத்தின்படி குற்றமானது இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது அத்தகைய சங்கத்தின் அல்லது நபர்களின் குழுமத்தின் அல்லது பொறுப்புக்கட்டளையின் இயக்குநர், மேலாளர், செயலாளர், பிற அலுவலர் எவரின் கவனமின்மை காரணமாய் இருந்தது என்று நிரூபிக்கப்படுகிறதென்றால் அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளவராகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுதல் வேண்டும்.
அத்தியாயம் - XI.
பல்வகைப்பட்டவை.
பொது ஊழியர்
எவராலும் நல்லெண்- ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.
37. நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட எதற்காகவும் அல்லது அவருடைய அலுவலக செயற்பணிகளை செய்வதற்கு கருதப்பட்ட அல்லது அவருடைய அதிகாரங்களைச் செலுத்துவதில் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட எதனின் தொடர்பானதாகவும் பொது ஊழியருக்கு எதிராக இந்தச் சட்டத்தின்படி உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் தொடரப்படுதல் ஆகாது.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 53பிற நபர்களால்
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.
38. இந்தச் சட்டத்தின்படி அல்லது விதிகள் அல்லது அதன்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதனின் தொடர்பாக லோக் ஆயுக்தா அல்லது அலுவலர் எவருக்கும் பணியாளர், முகவாண்மை அல்லது நபர் எவருக்கும் எதிராக உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரப்படுதல் ஆகாது.
(மையச்சட்டம் 45/1860)
39. லோக் ஆயுக்தாவின் தலைவர், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதற்கும் இணங்க செயல்படும்போது அல்லது செய்வதற்கு கருதும்பொழுது 1860 ஆம் ஆண்டு இந்தியத் தண்டை தொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியர்களாகக் கருதப்படுவர்.
லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொது ஊழியர்களாகக் கருதப்படுவர்.
காலவரம்பு நிர்ணயம்.
40. லோக் ஆயுக்தாவானது, குற்றம் செய்யப் பட்டிருக்கிறது என்று அத்தகைய புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பேரில் குற்றம் நடைபெற்றதாகக் கருதப்படும் தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் செய்யப்பட்ட புகாராக இல்லையென்றால், அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்யக் கூடாது.
அதிகார வரம்பிற்குத்
தடை.
41. இந்தச் சட்டத்தின்படி அதிகாரமளிக்கப்பட்டுள்ள அல்லது தீர்மானிக்கப்படும் லோக் ஆயுக்தாவின் பொருட்பாடு எதனின் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றம் எதுவும் அதிகார வரம்பினைக் கொண்டிருக்காது.
சட்ட உதவி.
42. லோக் ஆயுக்தாவானது இந்தச் சட்டத்தின்படி அதன் முன்பு யாருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவ்வாறு புகாருக்கு உள்ளான நபர் ஒவ்வொருவருக்கும் அவர் தரப்புக்காக வாதாடுவதற்காக சட்ட உதவி தேவைப்படுகிறது என்றால் அதற்கு வகை செய்ய வேண்டும்.
சட்டம் மீது
ஊர்ந்தியங்கும் தன்மையுடையது.
43. மாநில சட்டமன்றப் பேரவையினால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ள பிற சட்டங்கள் எதிலும் அடங்கியிருப்பதற்கு முரணாக எது எவ்வாறிருப்பினும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் செயல்திறம் பெற்றிருக்கும்.
விதிகளைச் 44. (1) அரசானது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
செய்வதற்கு அதிகாரம்.
(2) குறிப்பாகவும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்கு குந்தகமின்றியும் அத்தகைய விதிகள் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் வகை செய்யலாம். அதாவது, -
(a) பிரிவு (2), உட்பிரிவு (1) ன் (d) கூறில் சுட்டப்பட்டுள்ள புகாரின் படிவம் ;
(b) தேடுதல் குழுவின் காலம் மற்றும் பிரிவு (4), உட்பிரிவு (5) ன்படி பெயர்களின் தெரிவுப் பட்டியலின் தெரிவு முறை மற்றும் அதனுடைய உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க கட்டணம் மற்றும் படிகள் ;
(c) வரம்புரையின்படி பதவி அல்லது பதவிகள் தொடர்பான பணியமர்த்தம் ;
(d) பிரிவு 9, உட்பிரிவு (4) ன்படி லோக் ஆயுக்தாவின் செயலாளர் மற்றும் பிற
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிவரைக்கட்டுகள் ;
(e) பிரிவு 24, உட்பிரிவு (1) ன் (F) கூறின்படி எந்த பிற பொருட்பாடுகளுக்காக உரிமையியல் நீதிமன்றமொன்றின் அதிகாரங்களை லோக்ஆயுக்தாவானது பெற்றிருக்கிறதோ, அந்த பிற பொருட்பாடுகள் ;
54 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(f) பிரிவு 31 ன்படி லோக் ஆயுக்தா அமைப்பின் மதிப்பிடப்பட்ட வரவுகளை மற்றும் செலவினைக் காட்டும் அடுத்த நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தயாரிப்பதற்கான படிவம் மற்றும் காலம் ;
(g) பிரிவு 33 , உட்பிரிவு (1 ) ன்படி கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய பதிவுருக்களை பராமரிப்பதற்கான படிவம் மற்றும் கணக்குகளின் ஆண்டு விவரவுரையின் படிவம் ;
(h) பிரிவு 34 ன்படி விபரங்களுடன் விவரவுரைகளைத் தயாரிப்பதற்கான படிவம்,
முறை மற்றும் காலம்;
(i) வகுத்துரைக்கப்படலாகிற அல்லது வகுத்துரைக்கலாகும் பிற பொருட்பாடு
எதுவும் ;
(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட அனைத்து விதிகளும் மற்றும் அறிவிக்கைகளும் அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட நாளன்று செயலாற்றலுக்கு வரும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்டதன் பேரில் அந்த வெளியிடப்பட்ட நாளன்று செயலாற்றலுக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட விதி, அறிவிக்கை அல்லது செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமானால் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுதல் ஆகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் ஆகாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமானால் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை அதன் பின்னர் அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றமைவு அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்குக் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கு அதிகாரம்.
45. (1) இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படி செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்குட்பட்டு லோக் ஆயுக்தா அமைப்பானது அறிவிக்கையினால் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.
(2) குறிப்பாகவும், மற்றும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றியும் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் வகை செய்யப்படலாம். அதாவது,-
(a) பிரிவு 19, உட்பிரிவு (9) ன்படியான சுட்டுகையுடன் நிலுவையில் உள்ள அனைத்து புகார்களின் நிலை அல்லது பதிவுருக்கள் மற்றும் சான்றுடன் முடிவு செய்யப்பட்டதை லோக் அயுக்தாவின் இணையதளத்தில் காட்சிப்படுத்துவதற்கான முறை; மற்றும்
(b) இந்தச் சட்டத்தின்படி வேண்டக்கூடிய அல்லது குறித்துரைக்கப்பட்ட பிற
பொருட்பாடு எதுவும்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 55இடர்ப்பாடுகளை
நீக்குவதற்கான அதிகாரம்.
46. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால், அரசு, அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் அத்தகைய இடர்ப்பாட்டை நீக்குவதற்கு தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகின்ற அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம் :
வரம்புரையாக,- ஆனால் அத்தகைய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் செய்யப்படுதலாகாது.
(2) இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட பின்பு கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்.
56 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
2013 ஆம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை (மையச் சட்டம் 1/2014) மத்திய அரசு இயற்றியுள்ளது. கூறப்பட்ட மையச் சட்டம் 1/2014-இன் 63-ஆம் பிரிவானது, ஒவ்வொரு மாநிலமும் லோக் ஆயுக்தா என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை நிறுவவேண்டும் என்பதற்கு வகை செய்கிறது. அதன்படி பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று தமிழ்நாடு மாநிலத்திற்காக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவுவதென அரசு முடிவு செய்திருக்கிறது.
2. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
D. ஜெயக்குமார், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 57சட்டமியற்று அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 2(c) மற்றும் 2(d), 3, 4, 8, 9, 12, 15, 16, 24, 28, 31, 33, 34, 44, 45 மற்றும் 46 ஆம் கூறுகள், அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நேர்வுக்கேற்ப அறிவிக்கைகளை அல்லது ஆணைகளை அல்லது விதிகளை அல்லது ஒழுங்குமுறை விதிகளைச் செய்வதற்கு, அரசுக்கு மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பிற்கு அதிகாரமளிக்கிறது.
2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவையல்ல.
D. ஜெயக்குமார், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர்.
58 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநிதி விவரக்குறிப்பு
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டமுன்வு, 2018–ஆனது இயற்றப்பட்டு செயற்பாட்டிற்கு கொண்டு வரப்படும்போது, மாநில அரசின் தொகுப்பு நிதியத்திலிருந்து செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதாக இருக்கும். ஆயினும், இது, உத்தேசிக்கப்பட்ட சட்டமியற்றுகையின் விளைவாக செய்ய நேர்தலுக்குரிய செலவினங்களை இந்த நிலையில் துல்லியமான அளவு மதிப்பீடு செய்வது இயலாததாகும்.
D. ஜெயக்குமார், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 592018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 45/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 45
2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி சட்டத்தை மேலும் திருத்தம் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவுசெய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு
இந்தியக்குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி(திருத்தச்)
தொடக்கம்.
சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
நீண்ட தலைப்புக்கான
திருத்தம்.
2. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி சட்டத்திற்கான (இதன் பின்பு முதன்மைச் சட்டம் என சுட்டப்படும்) நீண்ட தலைப்பில், "தேசிய சட்டப்பள்ளி" என்ற சொற்றொடருக்கு பதிலாக, "தேசிய சட்டப்பல்கலைக்கழகம்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
1 ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 1 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்குப் பதிலாக
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(1) இந்தச் சட்டம் 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழகச்
சட்டம் என்று வழங்கப் பெறும்."
2-ஆம் பிரிவிற்கான
4. முதன்மைச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,
திருத்தம்.
(1) (m) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்,
(2) (o) கூறுக்கு பின்பு, பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது;
" (oo) " பல்கலைக் கழகம்" என்பது, தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைலைக்
கழகம் என்று பொருள்படும்".
"பள்ளி" என்ற
சொல்லை மாற்றாக அமைத்தல்.
5. முதன்மைச் சட்டத்தில், "பள்ளி" என்ற சொல் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம், "பல்கலைக்கழகம்" என்ற சொல் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
"தமிழ்நாடு தேசிய
சட்டப்பள்ளி" மற்றும் "தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிச் சட்டம்" என்ற சுட்டுகைக்கான பொருள்கோள்.
6. முதன்மைச் சட்டத்தின் படி செய்யப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையில் உள்ள சட்டம் எதிலும் அல்லது விதி, அறிவிக்கை, நடவடிக்கை, ஆணை ஒழுங்குறுத்து விதி, துணை விதி அல்லது பிற முறையாவணங்கள் எவற்றிலும் "தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி" மற்றும் "தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளிச் சட்டம்" என்பவற்றிற்கான சுட்டுகைகள், முறையே, "தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம்" மற்றும் "தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழகச் சட்டம்" என்பவற்றிற்கான சுட்டுகைகளாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
60 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
தரமான சட்டக்கல்வியை வழங்க வகைசெய்யும் பொருட்டு, தமிழ்நாடு மாநிலத்தில் தேசிய சட்டப்பள்ளியை நிறுவி அமைப்பதற்கு வகைசெய்வதற்கு தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளிச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.
2. தற்போது சுமார் 22 தேசிய சட்டப்பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களால் மாநில சட்டமியற்றுதல் மூலமாக அமைக்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அவற்றின் பெயரில் "தேசிய சட்டப் பல்கலைக் கழகம்" என்ற சொற்களை கொண்டிருக்கின்றன, அது, ஒரு தேசிய சட்டப்பல்கலைக்கழகம் என்ற அவற்றின் படிநிலையை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியானது அதன் பெயரில் " தேசிய சட்டப் பல்கலைக் கழகம்" என்ற சொல்லைக் கொண்டிருக்கவில்லை. அதன் விளைவாக அதனை ஒரு பல்கலைக்கழகம் என, குறிப்பாக, ஒரு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என அறிந்து கொள்வதில் பொது மக்கள் மனதில் சிறிது தயக்கம் உள்ளது.
3. மேற்சொன்ன காரணத்தால், மேற்சொன்ன நிறுவனத்தின் பெயரை "தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகம்" என மாற்றும் வகையிலும், மேலும், "பள்ளி" என்ற சொல்லை "பல்கலைக்கழகம்" என மாற்றியமைப்பதற்கும், 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.
4. இந்தச் சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.
சி.வி. சண்முகம்,சி.வி. சண்முகம், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்கி. சீனிவாசன், செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 612018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 46/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 46
1892 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றச் சட்டத்தை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற (திருத்தச்)
சட்டம் என அழைக்கப்பெறும்.
மற்றும் தொடக்கம் (2) இந்தச் சட்டம், மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
3-A பிரிவிற்கான
திருத்தம்.
மையச்சட்டம் VII/1892
2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறித்திடலாகும்) 1892 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றச் சட்டத்தின் 3-A பிரிவில் ரூபாய் "பத்து இலட்சம்"
என்ற சொற்றொடருக்குப் பதிலாக ரூபாய் "ஒரு கோடி" என்ற சொற்றொடரை மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
4ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் ரூபாய் "இருபத்தைந்து
திருத்தம்.
இலட்சம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக ரூபாய் "ஒரு கோடி" என்கின்ற சொற்றொடர்
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மாறுதற்கான வகைமுறை மற்றும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முதன்மைச் சட்டத்தின் வகை
முறைகளின்படி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும்
உரிமையியல் வழக்குகள் அனைத்தும் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு
உரிமை மாற்றம் செய்யப்படுதல் வேண்டும்.
62 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்கக் காரண விளக்கவுரை
சென்னை மாநகரத்தில் அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்வதன் காரணத்தாலும், வணிக நடவடிக்கைகள் விரிவடைவதாலும் உயர்நீதிமன்றத்தில் முதலேற்பு வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். எனவே, மாநகர நீதிமன்ற பண மதிப்பிலான அதிகார வரம்பினை உரியவாறு நீட்டிப்பு செய்வது உகந்ததாய் உள்ளது எனவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார். எனவே சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மாநகர உரிமையியல் நீதிமன்ற பண மதிப்பிலான அதிகார வரம்பினை இருப்பத்தைந்து இலட்சம் ரூபாயிலிருந்து ரூபாய் ஒரு கோடி என அதிகரிப்பதற்காகப் பரிந்துரை செய்துள்ளார். எனவே அரசு சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளரின் மேற்கூறிய பரிந்துரைகளை மேற்சொன்ன நோக்கத்திற்காக 1892 ஆம் ஆண்டு மாநகர உரிமையியல் நீதிமன்றச் சட்டத்தை (மையச் சட்டம் VII/1892) உரியவாறு திருத்தம் செய்வதனெ முடிவு செய்திருக்கிறது.
2. இந்தச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
சி.வி.சண்முகம்,
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.
கி. சீனிவாசன்கி. சீனிவாசன்,
செயலாளர்.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 632018-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 9-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 47/20182018 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 47
2018 -ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1 -ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின்
பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும், மாநிலத் தொகுநிதியத்திலிருந்து
தொகைகளை ஒதுக்கீடு செய்ய வகைசெய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்ததலைப்பு 1. இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்கச் (எண் 3) சட்டம் என வழங்கப்பெறும்.
தமிழ்நாடு சட்டம்
16/2018.
2. மாநில அரசு, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதி ஒதுக்கச் (முன்னனி மானிய வாக்களிப்பு) சட்டத்தின் 2-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்து அறுபத்து ஒரு கோடியே பதினைந்து இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் தொகையை உள்ளடக்குகின்றதும், 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின் பணிகளுக்காவும் தேவைப்படுவதுமான இரண்டு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் எண்ணூற்று நாற்பத்து ஏழு கோடியே இருபத்து ஆறு இலட்சத்து இருபத்து இரண்டாயிரம் ரூபாய் மேற்படாததொரு தொகையை-
2018-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1-ஆம் நாளில் தொடங்கிய நிதியாண்டின் பணிகளுக்காகவும், நோக்கங்களுக்காகவும் மாநிலத் தொகுதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தல்.
(a) இணைப்புப் பட்டியலில் (3)-ஆம் கலப்பத்தில் (coloumn) அறிவித்துள்ளவாறு, அந்த ஆண்டிற்காக தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையால் அனுமதிக்கப்பட்ட மானியங்களையும்,
(b) இணைப்புப் பட்டியலில் (4)-ஆம் கலப்பத்தில் (coloumn) அறிவித்துள்ளவாறு, அந்த ஆண்டிற்காக மாநிலத் தொகுதியத்திற்குச் சாட்டப்பட்ட செலவினத்தையும்;
எதிர்கொள்வதற்காக மாநிலத் தொகுதியிலிருந்து ஒதுக்கடு செய்யலாம்.
64 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 65 66 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 67 68 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 69கி. சீனிவாசன்கி. சீனிவாசன்,
செயலாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.