©
GOVERNMENT OF TAMIL NADU 2018
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price: Rs. 1.60 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 39] CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 26, 2018 Purattasi 10, Vilambi, Thiruvalluvar Aandu–2049
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
பக்கங்கள்
பள்ளிக் கல்வித் துறைபள்ளிக் கல்வித் துறை
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து - ஆணை வெளியிடப்படுகிறது. .. .. 78-79
[ 77]
DTP—II-1 (39)—178 TAMIL NADU GOVERNMENT GAZETTE [Part II—Sec. 1
NOTIFICATIONS BY GOVERNMENT
பள்ளிக் கல்வித் துறைபள்ளிக் கல்வித் துறை
தலைமைச் செயலகம், 2018 செப்டம்பர் 26.
No.II(1)/SE/17/2018.
[பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (SSLC), (SSLC), மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு [பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தமிழகத்தில் இடைநிலைக் கல்வி (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு, செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.] 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:–
[அரசாணை (நிலை) எண்.164, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, 6 ஆகஸ்ட் 2018, ஆடி 21, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049.] படிக்கப்பட்டவை:படிக்கப்பட்டவை:–
1. அரசாணை (நிலை) எண்.301, பள்ளிக் கல்வித் துறை, நாள். 20-02-1980.
2. அரசாணை (நிலை) எண்.139, பள்ளிக் கல்வித் (வி1)துறை, நாள். 12-09-2011.
3. அரசாணை (நிலை) எண்.100, பள்ளிக் கல்வித் (அ.தே) துறை, நாள். 22-05-2017.
4. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடித.ந.க.எண்.214685/எச்எப்.1/2018, நாள். 14-05-2018 மற்றும் 12-06-2018.
ஆணை:ஆணை:– – அரசாணை (நிலை) எண் 164, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, 2018 ஆகஸ்ட் 6. அரசாணை (நிலை) எண் 164, பள்ளிக் கல்வி (அ.தே)த் துறை, 2018 ஆகஸ்ட் 6.
தமிழகத்தில் 1911–ஆம் ஆண்டு முதல், இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் மார்ச் மாத பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1952–ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வி பொதுத் தேர்விற்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, 1980 முதல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் பருவத்திலும் அதற்கான துணைத் தேர்வு செப்டம்பர் பருவத்திலும் நடத்தப்பட்டு வந்தது.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, 2012 ஜூன் / ஜூலை முதல், ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் பருவத்தேர்வில் பள்ளி மாணாக்கராகவும், தனித் தேர்வர்களாகவும் பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணாக்கர்கள், தேர்ச்சியடையாத அனைத்து பாடங்களையும் (எண்ணிக்கை வரம்பின்றி) சிறப்பு துணைத் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, 2017–2018–ஆம் கல்வியாண்டிலிருந்து பொதுத் தேர்வெழுதும், மேல்நிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கும் தோல்வியுற்ற பாடத்தை / பாடங்களை, ஜூன் / ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின் போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப் பாடமாக (arrear) கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் தேர்வு எழுத ஆணையிடப்பட்டுள்ளது.
4. தற்போது அரசுத் தேர்வுகள் இயக்குநர் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்:–
இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2) தேர்வுகள், மார்ச் / ஏப்ரல், ஜூன் / ஜூலை மற்றும் செப்டம்பர் / அக்டோபர் ஆகிய மூன்று பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன், ஜூன் / ஜூலை சிறப்பு துணைத்தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி, தேர்வுக்குப்பின் அனைத்து பணிகளும் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவடையும்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் / அக்டோபர் பருவ துணைத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டு, தேர்வுக்குப் பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என்றும், உடனே இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்குபெறும் மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத்தேர்வுகளுக்கு, புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே துவங்கிவிடும், என்றும், மார்ச் பொதுத்தேர்வுக்கான முன்னிலைப் பணிகள் நடைபெறும் சமயத்திலேயே, செப்டம்பர் துணைத்தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஜூன் / ஜூலை பருவத்தில் சிறப்புத் துணைத்தேர்வு அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர் / அக்டோபர் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும், அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் விகிதமும் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும், அவ்வாறு குறைவான தேர்வர்களே விண்ணப்பித்தாலும், மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவதைப் போலவே, அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.
Sep. 26, 2018] TAMIL NADU GOVERNMENT GAZETTE 79ஜூன் / ஜூலை பருவத்தில் சிறப்புத் துணைத்தேர்வு அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர் / அக்டோபர் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இத்தேர்வினை நடத்துவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தை தவிர்க்கலாம் என்பதாலும், பொதுத் தேர்வில் தோல்வியுறும் மாணாக்கர்கள் ஆண்டு விரயமின்றி இரண்டாம் ஆண்டிற்குச் செல்லவும், தோல்வியுற்ற பாடத்தை / பாடங்களை, ஜூன் / ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வின் போதோ அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப் பாடமாக (arrear) கல்லூரிகளில் உள்ளது போன்ற நடைமுறையில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என ஆணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், மேல்நிலை முதலாம் ஆண்டினைப் போல, இடைநிலை (SSLC) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கும் மார்ச்/ ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன் / ஜூலை பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகளை மட்டும் நடத்தி, செப்டம்பர்/ அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை இரத்து செய்து, இனிவருங்காலங்களில் இடைநிலை (SSLC), மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) தேர்வர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மற்றும் ஜூன் / ஜூலை ஆகிய பருவங்களில் மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்திட உரிய அரசாணையினை வெளியிடுமாறு அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
' '
5. அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று, மேலே பத்தி 4–இல் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், தமிழகத்தில், இடைநிலை (10th), மேல்நிலைகல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்கு ஜூன் / ஜூலை மாதத்தில் நடைபெறும் உடனடி சிறப்புத் தேர்வு அறிமுகப்படுத்தியபின், செப்டம்பர்/அக்டோபர் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால், வரும் கல்வியாண்டு முதல் அதாவது 2019–2020 முதல் நடத்தவிருக்கும் அரசு பொதுத் தேர்வுகளான இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதி தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு, மார்ச் / ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன் / ஜூலை பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகளை மட்டும் நடத்தவும், அதனைத் தொடர்ந்து வரும் பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற இடைநிலைக் கல்வி (SSLC) மற்றும் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2) மாணாக்கர்களுக்காக நடத்தப்படும் செப்டம்பர் / அக்டோபர் பருவ துணைத்தேர்வினை இரத்து செய்யலாம் என கருதி அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
பிரதீப் யாதவ், பிரதீப் யாதவ்,
அரசு முதன்மைச் செயலாளர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.