[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 3.20 காசு[விலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 42] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 17, 2018 புரட்டாசி 31, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 76, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 1 ஆகஸ்ட் 2018.] தமிழ்நாடு 1958ஆம் ஆண்டு தொழிலக நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1958) பிரிவு 6 உட்பிரிவு (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் 04-11-2015ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 728 மற்றும் 729ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்ட II(2)/LE/646/2015ஆம் எண் அறிவிக்கை 05-05-2010-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 238 மற்றும் 239ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்ட II(2)/LE/258/2010ஆம் எண் அறிவிக்கை, 27-09-2017ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 789ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்ட II(2)/LE/809/2017ஆம் எண் அறிவிக்கை ஆகியவற்றை ரத்து செய்துவிட்டும், அதற்கு பதிலாகவும், கீழ்க்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் அதிகார எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்சொன்ன சட்டத்தின் செயல்நோக்கங்களுக்காக ஆய்வாளர்களாக இதனால் நியமனம் செய்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
நபர்கள் (2)
(3)
(1)
1. தொழிலாளர் நல ஆணையர், சென்னை.
2. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் (இணக்கம்), சென்னை.
3. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் (நிருவாகம்) சென்னை.
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 4. தொழிலாளர் நல இணை ஆணையர் (ஆய்வுகள்), சென்னை.
5. தொழிலாளர் நல சிறப்பு இணை ஆணையர், சென்னை.
6. தொழிலாளர் நல இணை ஆணையர் (குறைந்தளவு
ஊதியங்கள்), சென்னை.
[1]
DTP-II-2-(42) (T Sup)—12 உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
நபர்கள் (2)
(3)
(1)
7. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், சென்னை. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மற்றும் விழுப்புரம் வருவாய் மாவட்டங்கள்.
8. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
9. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.
10. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வருவாய் மாவட்டங்கள்.
11. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர்-I, சென்னை. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்ட வரையறைக்குள்ளாக வரும் பகுதிகள் நீங்கலாக சென்னை மாநகராட்சி.
12. தொழிலாளர் நல கூடுதல் ஆணையர்-II, சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் வருவாய்
மாவட்டங்கள்.
13. தொழிலாளர் நல இணை ஆணையர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் வருவாய்
மாவட்டங்கள்.
14. தொழிலாளர் நல இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.
15. தொழிலாளர் நல இணை ஆணையர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை
வருவாய் மாவட்டங்கள்.
16. தொழிலாளர் நல இணை ஆணையர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய் மாவட்டங்கள்.
17. தொழிலாளர் நல இணை ஆணையர், திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
வருவாய் மாவட்டங்கள்.
18. தொழிலாளர் நல இணை ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய் மாவட்டங்கள்.
19. தொழிலாளர் நல இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய்
மாவட்டங்கள்.
20. தொழிலாளர் நல இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்கள்.
21. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மலைத்தோட்டத் தொழில்)
1951ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர் அதிகார எல்லைகள்.
22. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்)
சென்னை.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்கள்.
23. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்)
திருநெல்வேலி.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் வருவாய் மாவட்டங்கள்.
24. தொழிலாளர் நல உதவி ஆணையர், (மகளிர் நலன்)
கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி வருவாய் மாவட்டங்கள்.
கோயம்புத்தூர்.
25. தொழிலாளர் நல உதவி ஆணையர், (செயலாக்கம்).
27. தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்.
26. தொழிலாளர் நல துணை ஆய்வாளர். 2009ஆம் ஆண்டு எடை அளவைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ளூர் அதிகார எல்லைகள்.
3உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
நபர்கள் (2)
(3)
(1)
சம்பந்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.
28. தமிழ்நாட்டிலுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களின்
மேம்பாட்டு ஆணையாளர்கள்.
29. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர்
30. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதுநிலை கூடுதல்
இயக்குநர்
31. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (கட்டடம் மற்றும்
ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள்) முதுநிலை கூடுதல்
இயக்குநர்
32. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல்
இயக்குநர்கள்
33. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை
இயக்குநர்கள்
34. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (சோதனை மற்றும்
பாதுகாப்பு) இணை இயக்குநர்
35. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (சுகாதாரம் மற்றும்
பாதுகாப்பு) இணை இயக்குநர்
தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 36. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (பதிவு) இணை
இயக்குநர்கள்
37. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்
(பயிற்சி மையம்)
38. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்
(சோதனை மற்றும் பாதுகாப்பு)
39. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துணை இயக்குநர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்
அலுவலகம், திருச்சி
40. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
இயக்குநர்கள் I, II.III (பயிற்சி மையம்)
41. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
(சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு)
42. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
(சோதனை மற்றும் பாதுகாப்பு)
43. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்
அலுவலகம், திருச்சி.
1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 44. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை
(மத்தியச்சட்டம் 63/1948) 8 ஆம் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள்
(1)ஆம் உட்பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 45. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர்கள்
உள்ளூர் அதிகார எல்லைகள்.
4உள்ளூர் அதிகார எல்லைகள் தொடர் எண்
நபர்கள் (2)
(3)
(1)
46. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள்)
1996 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய இணை இயக்குநர்கள்
கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும்,
பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்)
47. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள்) துணை
சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1996, 42 ஆம் பிரிவைச் இயக்குநர்கள்
சேர்ந்த (3) ஆம் உட்பிரிவின் கீழ் அவர்களுக்கு
ஒதுக்கப்பட்ட உள்ளூர் அதிகார எல்லைகள் 48. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார (கட்டடம் மற்றும்
ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள்) உதவி இயக்குநர்கள்
49. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர்
(நடமாடும் குழு)
விருதுநகர் வருவாய் மாவட்டம்
50. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர்
(நடமாடும் குழு)
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 79, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 9 ஆகஸ்ட் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 11-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2இல், 617-618 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/ LE/699/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் கருங்கல் தொழிலில் பணியமர்த்தப்பட்டு கீழே விவர அட்டவணையின் நெடும்பத்தி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
கருங்கல் தொழிலில் வேலைவாய்ப்புகருங்கல் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் ( 1 ) | பணியாளர்களின் வகை (2) | மாதாந்திர குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |||
| ( 3 ) | |||||
| மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C | மண்டலம்-D | ||||
| ( ரூ . காசு) | ( ரூ . காசு) | ( ரூ . காசு) | ( ரூ . காசு) |
நிலை-I
1 மேலாளர் 10851.00 10687.00 10522.00 10358.00 2 அடையாளமிடுபவர்/வடிவமைப்பவர்
3 தரக்கட்டுப்பாட்டாளர்/செதுக்குபவர் 10031.00 9866.00 9702.00 9539.00 4 இயந்திர மேற்பார்வையாளர்
5 மின் மேற்பார்வையாளர் 9539.00 9375.00 9210.00 9046.005
| தொடர் எண் ( 1 ) | பணியாளர்களின் வகை (2) | மாதாந்திர குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் | |||
| ( 3 ) | |||||
| மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C | மண்டலம்-D | ||||
| ( ரூ . காசு) | ( ரூ . காசு) | ( ரூ . காசு) | ( ரூ . காசு) |
6 தானியங்கி மெருகேற்றுபவர்
B நிலைநிலை - II
7 துளையிடுபவர்
8 மின்பணியாளர் 9210.00 9088.00 8966.00 8843.00 9 பொருத்துநர்
10 பற்றவைப்பவர்
11 சாணை பிடிப்பவர்
12 மெருகேற்றுபவர்
13 வெட்டுங்கருவி இயக்குபவர்
14 உளி கொத்துபவர்
15 குழாய்வேலை செய்பவர் 9046.00 8924.00 8801.00 8679.00 16 டிப்பர் ஓட்டுநர் (Tipper Driver)
17 டிரெயிலர் ஓட்டுநர் (Trailor Driver)
18 காங் ட்ரீ ஓட்டுநர் (Gang Tree Driver)
19 பாரந்தூக்கி இயக்குபவர்
20 காங் அறுப்பான் இயக்குபவர் (Gang
Saw Operator)
21 கணினி இயக்குபவர்
22 கணக்காளர்
23 பண்டகசாலை காப்பாளர்
C நிலை - நிலை - III
24 எழுத்தர்/காசாளர்
25 பண்டகசாலை உதவியாளர்
26 ஸ்லிங்கர் (Slinger)
27 சாம்பரிங்மேன் (Chambering Man) 8554.00 8473.00 8390.00 8227.00 28 சாமணந்தூக்கி இயக்குபவர்
29 தச்சுவேலை செய்பவர்/சிப்பமாக்குபவர்
30 கணினி உதவியாளர்
31 மின் உதவியாளர்
32 இயந்திர உதவியாளர்
D நிலை - நிலை - IV
33 அலுவலக உதவியாளர்
34 காவலாள்/பாதுகாவலாள் 8227.00 8187.00 8145.00 8104.00 35 சுத்தம் செய்பவர்/பெருக்குபவர்
36 சுமை ஏற்றுபவர் (மற்றும் மேற்சொன்ன
எந்த வகைகளின் கீழ் வராத
தொழிலகத்தின் ஏனைய பணியாளர்
அனைவரும்)
விளக்கங்கள்:— (1) மண்டலங்களின் வகைப்பாடு பின்வருமாறு :
மண்டலம்-A - அனைத்து மாநகராட்சிகள்.
மண்டலம்-B - மூன்றாம் நிலை நகராட்சிகள் தவிர அனைத்து நகராட்சிகள்.
6மண்டலம்-C - அனைத்து பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் பாளையங்கள்.
மண்டலம்-D - மண்டலம் A, B மற்றும் C-இன்கீழ் வராத ஏனைய பகுதிகள்.
II (1). அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(a) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் மாதமொன்றுக்கு ரூ. 50.30 காசுகள் (ஐம்பது ரூபாய் முப்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(b) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(c) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிட மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா, மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 108, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (I2)த் துறை, 7 செப்டம்பர் 2018.] தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு 1994 ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டுமான தொழிலாளர்கள்) நலத் திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
திருத்தங்கள்
மேற்சொன்ன திட்டத்தில்-
(1) பகுதி 8-இல், உட்பகுதி (2)-க்கு பின்னர், பின்வரும் உட்பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"(3) அந்தந்த மாவட்டத்தின் வாரியமும் தொழிலாளர் துறை அலுவலரும் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) விவர அட்டவணை II-இன் படிவம் AA - இல் உறுப்பினர்கள் குறித்த பதிவேடு ஒன்றை வைத்து வரவேண்டும்.
(2) விவர அட்டவணை II - இல்,-
(i) படிவம்-A- இல், "பதிவு செய்வதற்கான விண்ணப்பம்" என்ற தலைப்பின் கீழ் "1 தொழிலாளரின் பெயர்". என்ற இனத்திற்குப் பதிலாக பின்வருபவை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும். அவையாவன:-
"1 (a) தொழிலாளரின் பெயர் :
| ஆண் | பெண் | மூன்றாம் பாலினம் |
(b) பாலினம் :
(c) மதம் :
(d) சாதி :
| ஆதி திராவிடர் | பழங்குடியினர் | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | ஏனைய வகுப்பினர் |
(ii) படிவம்-A-க்குப் பின்னர், பின்வரும் படிவம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் அதாவது:-
"படிவம்-AA
[8(3) ஆம் பகுதியைக் காண்க]
உறுப்பினர்களை பதிவு செய்தல்
| தொடர் எண் | கட்டுமானத் தொழிலாளரின் பெயர் | பாலினம் | மதம் | சாதி | வகை | நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி | பதிவு செய்யப்பட்ட நாள் | பதிவெண் |
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) |
(iii) படிவம்-J-இல், "அடையாள அட்டை" என்ற தலைப்பின் கீழ், "1 பதிவு பெற்ற உடலுழைப்பு தொழிலாளரின் பெயர்", என்ற இனத்திற்குப் பதிலாக பின்வருபவை அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-
"1 (a) தொழிலாளரின் பெயர் :
| ஆண் | பெண் | மூன்றாம் பாலினம் |
(b) பாலினம் :
(c) மதம் :
(d) சாதி :
| ஆதி திராவிடர் | பழங்குடியினர் | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் | ஏனைய வகுப்பினர் |
சுனில் பாலிவால், சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.