Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 31 October 2018

Type
Ordinary
Gazette no.
44
Part
Part III
Notifications
Labour and Employment Department - Notifications
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-10-31.Ordinary_44_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 44] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 31, 2018 ஐப்பசி 14, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 132, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 28 செப்டம்பர் 2018.] தமிழ்நாடு 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 115 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின்படியும் 112 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 115ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

(2) இந்த வரைவுத் திருத்தங்கள் 1-1-2019 முதல் செயலுக்கு வரும்:-

வரைவுத் திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்:-

(1) 4 ஆம் விதியில் உள்ள "விவர அட்டவணைக்கு" பதிலாக பின்வரும் விவர அட்டவணை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"விவர அட்டவணை.

நடமாடும் சாதனம் உட்பட நிறுவப்பட்ட சாதனத்தில் மொத்த பரித்திறன் அந்த ஆண்டில் ஏதேனுமொரு நாளில் பணியில் அமர்்த்தப்படக்கூடிய அதிக அளவு நபர்களின் எண்ணிக்கை
9 20 50 100 250 500 1000 2000 5000 10000 10000 க்கு மேல்
(1) (2) (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11)
(செலுத்தப்பட வேண்டிய தொகை ரூபாயில்)
பரித் திறனற்றவை 800 1600 2400 3200 7200 10800 24000 36000 66000 96000 120000
10 பரித்திறன் வரையில் 1600 2400 3200 4800 10800 18000 48000 72000 108000 144000 180000
10 பரித்திறனுக்கு மேல் 50 பரித்திறன் வரையில் 2400 3200 4800 7200 18000 28800 72000 108000 144000 180000 216000

[ 1 ]

III-1a-(44) (T Sup)—12

50 பரித்திறனுக்கு மேல் 129 பரித்திறன் வரையில் 3200 4800 7200 12000 28800 48000 108000 144000 180000 216000 240000
129 பரித்திறனுக்கு மேல் 250 பரித்திறன் வரையில் 4800 7200 12000 19200 48000 72000 144000 180000 216000 240000 264000
250 பரித்திறனுக்கு மேல் 500 பரித்திறன் வரையில் 7200 12000 16000 25600 72000 96000 180000 216000 240000 264000 288000
500 பரித்திறனுக்கு மேல் 1000 பரித்திறன் வரையில் 12000 12800 25600 48000 96000 120000 216000 240000 264000 288000 312000
100-0 பரித்திறனுக்கு மேல் 2000 பரித்திறன் வரையில் 12800 25600 48000 64000 120000 144000 240000 264000 288000 312000 336000
200-0 பரித்திறனுக்கு மேல் 5000 பரித்திறன் வரையில் 25600 48000 64000 80000 144000 168000 264000 288000 312000 336000 360000
500-0 பரித்திறனுக்கு மேல் 7500 பரித்திறன் வரையில் 48000 64000 80000 96000 168000 192000 288000 312000 336000 360000 384000
750-0 பரித்திறனுக்கு மேல் 10000 பரித்திறன் வரையில் 64000 80000 96000 112000 192000 216000 312000 336000 360000 384000 408000
10000 பரித்திறனுக்கு மேல் 80000 96000 112000 128000 216000 240000 336000 360000 384000 408000 432000

(2) 56-B விதியில், துணை விதி (2)-க்கு பதிலாக, பின்வரும் துணை விதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(2) அழுத்த தளவாடம் அல்லது கலம் அல்லது நீர் புகாமல் காப்பிடப்பட்ட வாயுக் கலனை (Gas Holder) ஆய்வு மற்றும் சோதனை செய்வதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் பின்வருமாறு இருக்க வேண்டும்:-

(i) அளவு மற்றும் திறனைக் கருதிப் பாராமல், தளவாடம் அல்லது கலம் ஒன்றின் வெளிப்புறச் சோதனைக்கு, ரூ.800/- (ரூபாய் எண்ணூறு மட்டும்)

(ii) நீர்ம நிலையியல் சார்ந்த சோதனைக்கு, 4 kgf/sq.cm.(g) வரையிலான தளவாடம் அல்லது கலம் ஒன்றுக்கு ரூபாய் 2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்)(iii) நீர்ம நிலையியல் சார்ந்த சோதனைக்கு, 4 kgf/sq.cm.(g) மேலுள்ள தளவாடம் அல்லது கலம் ஒன்றுக்கு ரூபாய் 4000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) (iv) உட்புறச் சோதனைக்கு, அளவு மற்றும் திறனைக் கருதிப் பாராமல், தளவாடம் அல்லது கலம் ஒன்றுக்கு, ரூபாய் 2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) 3 (v) அளவு அல்லது திறனை கருதிப்பாராமல், தளவாடம் அல்லது கலம் ஒன்றிற்கான, பாதிப்பு ஏற்படுத்தாத மீயொலி அதிர்வுத் தடிமப்பாதை சோதனைக்கு, ரூபாய் 8000/- (ரூபாய் எட்டாயிரம் மட்டும்)

(3) விதி 67-A இல், பகுதி (iv) இல், துணைப்பகுதி (a) இல், "ரூபாய் 100/- (ரூபாய் நூறு மட்டும்) என்ற தொடருக்குப் பதிலாக "ரூபாய் 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) என்ற தொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

(4) விதி 86-A இல், துணை விதி (b) இல், "ரூபாய் 100/- (ரூபாய் நூறு மட்டும்)" என்ற தொடருக்குப் பதிலாக "ரூபாய் 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) என்ற தொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்; மற்றும்

(5) விதி 95இல், துணை விதி (1-A) இல், பகுதி (a) இல் "ரூபாய் 100/- (ரூபாய் நூறு மட்டும்)" என்ற தொடருக்குப் பதிலாக "ரூபாய் 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) என்ற தொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 134, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 3 அக்டோபர் 2018.] 1979 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 30/1979) 35 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1983 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்தல்) (தமிழ்நாடு) விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 35 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் கோரியுள்ளவாறு, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, அவையாவன:-

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், 56 ஆம் விதியின் (2) துணை விதிக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-

"ஆனால், பின்வருமாறு இருப்பின், முதன்மை வேலை அளிப்பவரால் படிவம்-XXIV இல், ஆண்டு கணக்கு விவர அறிக்கை அனுப்பப்படத் தேவையில்லை,

(அ) தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு உணவக நிறுவனங்கள் விதிகளின் 42-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் XIII- இல், ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(ஆ) தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) விதிகளின் 35-ஆம் விதியின் (ii) துணை விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் XII-இல், ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(இ) தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் விதிகளின் 83 ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் 28-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்; அல்லது

(ஈ) தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் வாகனப் போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளின் 43-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் XIX- இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டிருப்பின்''.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள் இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 31 October 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-10-31.Ordinary_44_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-10-31.Ordinary_44_Part-III_Section-1a-T-Sup.