[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2018
[விலை : ரூ. 2.40 காசு[விலை : ரூ. 2.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 45] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 7, 2018 ஐப்பசி 21, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 184, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள (FS-3)த் துறை, நாள்: 27 செப்டம்பர் 2018.] தமிழ்நாடு, 2007 ஆம் ஆண்டு மீனவர்கள், மீன்பிடித்தல் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 19/2007) இன் பிரிவு 19 இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன அட்டவணையில்,-
(1) நெடும்பத்தி (2) இல் உள்ள "விபத்து நிவாரணம்" என்ற தலைப்பின் கீழ்,-
(i) நெடும்பத்தி (2) இல் உள்ள "(a) விபத்தின் காரணமாக ஏற்படும் மரணம்" என்ற பதிவிற்கு நிகரான நெடும்பத்தி (3) இல் உள்ள "1,00,000" என்ற எண்ணிற்குப் பதிலாக "2,00,000" என்ற எண் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(ii) நெடும்பத்தி (2) இல் உள்ள "(f) ஒரு கை அல்லது கால் இழப்பு" என்ற பதிவிற்கு நிகரான நெடும்பத்தி (3) இல் உள்ள "50,000" என்ற எண்ணிற்குப் பதிலாக "1,00,000" என்ற எண் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(iii) நெடும்பத்தி (2) இல் உள்ள "(g) மேற்குறிப்பிடப்பட்டவை நீங்கலாக திவீர காயங்களினால் அவயங்கள் இழப்பு" என்ற பதிவிற்கு நிகரான நெடும்பத்தி (2) இல் உள்ள "20,000" என்ற எண்ணிற்குப் பதிலாக "50,000" என்ற எண் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(2) நெடும்பத்தி (2) இல் உள்ள "விபத்தின் காரணமாக அல்லாமல் மீன்பிடிக்கும் போது இறத்தல் அல்லது அதற்குப் பின்னர் உடனடியாக இறத்தல்" என்ற பதிவிற்கு நிகரான நெடும்பத்தி (3) இல் உள்ள "1,00,000" என்ற எண்ணிற்கு பதிலாக "2,00,000" என்ற எண் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(3) நெடும்பத்தி (2) இல் உள்ள மீன்பிடிக்கும் போது காணாமல் போதல்" என்ற பதிவிற்கு நிகரான நெடும்பத்தி (3) இல் உள்ள "1,00,000" என்ற எண்ணிற்கு பதிலாக "2,00,000" என்ற எண் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
K. கோபால்கோபால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை
[1]
DTP-II-2-(45) (T Sup)—12 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 24 செப்டம்பர் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தொடர்பாக 31-12-2018 அன்று அல்லது அதற்கு முன்னர், ஏதேனும் நபரிடமிருந்து வரப்பெறுகிற மறுப்புரையை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை எவையேனும் இருப்பின், அவற்றை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-8-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு-2இல், 537 முதல் 539 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/480/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரிகிற பணியாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்த அளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் வேலைவாய்ப்பு ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் வேலைவாய்ப்பு
மாதமொன்றுக்கு குறைந்த அளவு அடிப்படை ஊதியங்கள்
தொழிலாளர்களின் வகை
(2)
(1)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C
(1) (2) (3)
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு
(1) நிலை-I 7819.00 7774.00 7713.00
(2) நிலை-II 7749.00 7667.00 7607.00
(3) நிலை-III 7667.00 7607.00 7538.00
(4) நிலை-IV 7597.00 7538.00 7513.00
(5) நிலை-V 7538.00 7513.00 7492.00
குறிப்பு:-குறிப்பு:-
(1) (1) (i) மண்டலம்-மண்டலம்-A A : : அனைத்து மாநகராட்சிகள் மற்றும் சிறப்புநிலை
நகராட்சிகளைக் கொண்டிருக்கும்.
(ii) மண்டலம்-மண்டலம்-B: சிறப்புநிலை நகராட்சிகள் நீங்கலாக ஏனைய அனைத்து வகை நகராட்சிகளைக் கொண்டிருக்கும்.
(iii) மண்டலம்-மண்டலம்-C:C: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் நீங்கலாக ஏணைய அணைத்துப் பகுதிகளையும் கொண்டிருக்கும்.
3(2) தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படாதவிடத்து, தொழிலாளர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை ஊதியங்களுடன், ஒரு மாதத்தில் பணியாற்றிய மொத்த நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 58.15 (ஐம்பத்து எட்டு ரூபாய் மற்றும் பதினைந்து காசுகள்) வீதம் உணவு மற்றும் சிற்றுண்டிக்குச் சமமான ரொக்கம் வழங்கப்படும். மேற்சொன்ன ஐந்து நிலைகள் ஒவ்வொன்றின் கீழ் வருகிற தொழிலாளர் வகையினர் (4) ஆம் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான தொழிலாளர்களாக இருப்பர்.
(3) "உறைவிட வசதியுள்ள ஓட்டல்" மற்றும் "உணவகம்" ஆகிய சொற்கள் தமிழ்நாடு 1958 ஆம் ஆண்டு உணவக நிறுவனங்கள் (தமிழ்நாடு சட்டம் 13/1958) சட்டத்தின் 2(11) மற்றும் 2(12) ஆம் பிரிவுகளின் கீழ் விளக்கம் அளித்துள்ளவாறான பொருளைக் கொண்டிருக்கும்.
(4) I, II, III, IV, மற்றும் V நிலைகள், பின்வரும் பதவித்தரங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருக்கும், அவையாவன:-
நிலை-I
(1) தலைமைச் சமையலர்
(2) தலைமை ரொட்டி தயாரிப்பவர்
(3) இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்
(4) வரவேற்பாளர்
(5) மேற்பார்வையாளர்
(6) எழுத்தர் (பட்டி எழுதுபவர் உட்பட)
(7) சுருக்கெழுத்து தட்டச்சர்
(8) தட்டச்சர்
(9) தொலைபேசி இயக்குபவர்
(10) காசாளர்
(11) உதவி மேலாளர்
(12) கணக்காளர்
(13) கொள்முதல் அலுவலர்
(14) பிரியாணி மாஸ்டர்
நிலை-II
(1) உதவி சமையலர்
(2) ரொட்டி தயாரிப்பவர்
(3) உணவுப்பொருள் துறை மேலாளர்
(4) மது அருந்தகப் பணியாளர்
(5) தலைமை இல்லப் பராமரிப்பாளர்
(6) சரக்கறைப் பொறுப்பாளர்
நிலை-III
(1) உதவி சமையலாள் (சின்ன அடுப்பு)
(2) தோசை தயாரிப்பவர்
(3) இட்லி தயாரிப்பவர்4 (4) ஐஸ்க்ரீம், காப்பி, தேநீர் மற்றும் பால் தயாரிப்பவர்
(5) பரோட்டா மற்றும் ரொட்டி தயாரிப்பவர்
(6) தலைமை பரிமாறுபவர்
(7) அரைப்பவர்
(8) ஓட்டுநர்
(9) மின்கம்மியர்
(10) சீர்வளி சாதன தொழில்நுட்பப் பணியாளர்
(11) குழாய் பணியாளர்
(12) தச்சுவேலை செய்பவர்
(13) தையற்காரர்
(14) காவலாள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்
நிலை-IV
(1) உணபுப்பொருள் வழங்குபவர்
(2) அறையில் பரிமாறுபவர்
(3) பரிமாறுபவர்
(4) உணவுப்பொருட்களைச் சுமந்து வருபவர்
(5) பண்டகசாலை உதவியாளர்
(6) காய்கறி வெட்டுபவர்
(7) காப்பிக்கொட்டை வறுப்பவர் மற்றும் அரைப்பவர்
(8) சரக்கறை பணியாளர்
(9) மிக்கால்ஸ் (Mikkals)
(10) சமையலறை உதவியாளர்
(11) ஸ்டால் பணியாளர்
நிலை-V
(1) அனைத்து வகைகளைச் சேர்ந்த சுத்தம் செய்பவர் (பாத்திரங்களைத் தூய்மை செய்பவர், தட்டுகளைக் கழுவுபவர், மேசை சுத்தம் செய்பவர் போன்ற பணிகளைச் செய்பவர்கள்)
(2) அறை ஏவலாள்
(3) சுமை தூக்குபவர்கள்
(4) லஸ்கர்
(5) மசால்ச்சி
(6) தோட்டக்காரர்
(7) அறை பணிப்பெண்
(8) நீர் சுமந்து செல்பவர்
(9) அலுவலகப் பையன்
(10) குற்றேவற் சிறுவன்
(11) மின்தூக்கி இயக்குபவர்
விளக்கங்கள்.-அகவிலைப்படி.-(1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதியங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும்5 அகவிலைப்படி திங்கள் ஒன்றுக்கு ரூ. 57.35 (ஐம்பத்தேழு ரூபாய் மற்றும் முப்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டெண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியத்தைக் கணக்கிட மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) இங்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களில் எல்லாம் அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 87, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 24 செப்டம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கக்கூடிய நபர்கள் அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இது தொடர்பாக 31-12-2018 அன்று அல்லது அதற்கு முன்னர், வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் துறை ஆணையர் வாயிலாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-11-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு-2-இல், 758 ஆம் பக்கத்தில்(ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே.வா/709/2014-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பதநீர் இறக்கும் தொழிலில் பணியமர்த்தப்பட்டு கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, இந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
பதநீர் இறக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு பதநீர் இறக்கும் தொழிலில் வேலைவாய்ப்பு
தொடர் தொழிலாளர்களின் வகைகள் நாளொன்றுக்கு
எண்
குறைந்தளவு அடிப்படை
ஊதிய வீதங்கள்
(ரூ. காசு.)
(1) (2)
(3)
(1) பனைவெல்லம் தயாரிப்பவர் 396.00
(2) உதவியாள் 396.00
(3) பதநீர் இறக்குபவர் 425.00
6விளக்கங்கள்:-(1) அகவிலைப்படி.-மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாள் ஒன்றுக்கு ரூ. 2.45 (இரண்டு ரூபாய் நாற்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30 ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.