| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 14, 2018 ஐப்பசி 28, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 101, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 23 ஆகஸ்ட் 2018.] 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதலும், நீக்குதலும்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 37/1970) 35-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள திருத்தங்களின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 35-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ், அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பின்வரும் வரைவு திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை- 600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையர் வாயிலாக அரசுச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு இரு படிகளில் அனுப்பிவைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) 17-ஆம் விதியில்,-
(a) துணை விதி (2) இல், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழி தொகை செலுத்துதல்'', என்ற சொற்றொடருக்குப் பின்னர் ''அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழியில் தொகை செலுத்தியதற்கான சான்று'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(b) துணை விதி (3)-இல், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்''. என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலாளர் நலத்துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) 21-ஆம் விதியில்,-
(a) துணை விதி (3)-இல், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுளதப்பட வேண்டும்'', என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலாளர் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
2(3) 29-ஆம் விதியில்,
(a) ''(12A)-ஆம் துணை விதியில், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்'', என்ற சொற்றொடருக்குப் பின்னர்,'' அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'' என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(b) (2A)-ஆம் துணை விதியின் வரம்பு நிபந்தனையில், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழி தொகை செலுத்துதல்,'' என்ற சொறறொடருக்குப் பின்னர், தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசலின் சான்று'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
மங்கத் ராம் சர்மா,மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்,
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.