Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of interest to a section of the public issued by Secretariat Departments

Published 14 November 2018

Type
Ordinary
Gazette no.
46
Part
Part II
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notification
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : ரூ. 2.40 காசு[விலை : ரூ. 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 46] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 14, 2018 ஐப்பசி 28, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண் 110, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 14 செப்டம்பர் 2018.] 1923-ஆம் ஆண்டு பணியாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் VIII/1923) 20-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் 21-10-2015 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல், 707 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/LE/618/2015 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், அதற்கு பதிலாக கீழ்க்காணும் விவர அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை அதன் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பணியாளர் இழப்பீட்டு ஆணையர்களாக இதனால் நியமனம் செய்கிறார்.

அட்டவணைஅட்டவணை

நபர்கள் பகுதிகள்

தொடர் எண்

(1)

(2)

(3)

1. தொழிலாளர் நல ஆணையர்

தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும்.

2. தொழிலாளர் நல இணை ஆணையர் I, சென்னை. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின் வரையறைகளுக்குள் வரும் பகுதிகள் நீங்கலாக சென்னை மாநகராட்சி.

3. தொழிலாளர் நல இணை ஆணையர் II, சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர்

வருவாய் மாவட்டங்கள்.

4. தொழிலாளர் நல இணை ஆணையர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்

வருவாய் மாவட்டங்கள்.

5. தொழிலாளர் நல இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டங்கள்.

6. தொழிலாளர் நல இணை ஆணையர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும்

சிவகங்கை வருவாய் மாவட்டங்கள்.

7. தொழிலாளர் நல இணை ஆணையர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் வருவாய்

மாவட்டங்கள்.

[1]

DTP-II-2-(46) (T Sup)—12 நபர்கள் பகுதிகள்

தொடர் எண்

(1)

(2)

(3)

8. தொழிலாளர் நல இணை ஆணையர், திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும்

கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.

9. தொழிலாளர் நல இணை ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் வருவாய்

மாவட்டங்கள்.

10. தொழிலாளர் நல இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய்

மாவட்டங்கள்.

11. தொழிலாளர் நல இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு வருவாய்

மாவட்டங்கள்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 91, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 8 அக்டோபர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இந்த அறிவிக்கை குறித்து 12-01-2019 நாளன்று அல்லது அதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 006, DMS வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவு அறிவிக்கைவரைவு அறிவிக்கை

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு 17-12-2014-ஆம் ந ா ளி ட் ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் ப ா க ம் II-பி ரி வு - 2 - ல் , 7 9 5 ம ற் று ம் 7 9 6 ப க் க ங் க ளி ல் ெ வ ளி யி ட ப் ப ட் ட II(2)/(LE)/755/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையில் (3) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் வேலைவாய்ப்பு பாய் நெசவு மற்றும் கூடை முடைதல் தொழிலில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள்

தொடர் எண்

குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள்

(1) (2)

(3)

ரூ. காசு

I. I. விசைத்தறிப் பாய்கள் விசைத்தறிப் பாய்கள் :

(1) கோரை வகை பிரிப்பவர் நாளொன்றுக்கு 197.00

(2) சாயமேற்றுபவர்

நாளொன்றுக்கு 259.003 பணியாளர்களின் வகைகள்

தொடர் எண்

குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள்

(1) (2)

(3)

ரூ. காசு

(3) சாயமேற்றுபவரின் உதவியாள் (உலை உதவியாள்) நாளொன்றுக்கு 197.00

(4) பாய் நெசவாளர்

(i) சாதாரண பாய்

பாய் ஒன்றுக்கு 3.34

பாய் ஒன்றுக்கு 4.46

(ii) அழகுபடுத்திய பாய்

(5) பாய் விளிம்பு தைப்பவர் (நீளப் பக்கங்கள்

பாய் ஒன்றுக்கு 2.23

இரண்டிலும் விளிம்பு தைப்பதற்கு) (துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்)

II. II. கைத்தறிப் பாய்கள் கைத்தறிப் பாய்கள் :

(1) கோரை வகிர்பவர்

நாளொன்றுக்கு 197.00

(2) சாயமேற்றுபவர்

நாளொன்றுக்கு 197.00

(3) பாய் நெசவாளர் :

(i) 40ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 190.00

(ii) 50ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 213.00

(iii) 100ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 305.00

(iv) 120ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 312.50

(v) 140ஆம் எண் பாய் நெசவுக்கு நாளொன்றுக்கு 351.00

பாய் ஒன்றுக்கு 11.16

(4) பாய் விளிம்பு தைப்பவர் (நான்கு விளிம்புகளிலும் தைக்க) (துணி அல்லது நாடா மற்றும் நூல் வேலையளிப்பவரால் வழங்கப்படவேண்டும்)

(5) மெருகேற்றுபவர்

பாய் ஒன்றுக்கு 4.46

(6) எழுத்து வடிவமைப்பவர் வரி ஒன்றுக்கு 55.80

III. III. கூடை முடைதல் கூடை முடைதல் :

(1) மண் கூடை

(2) விவசாயக் கூடை

(3) பரிசுக்கூடை

கூடை ஒன்றுக்கு 44.64

(4) அரிசிக்கூடை

(5) கோழிக்கூடை (பஞ்சாரம்)

(6) காய்கறிக்கூடை மற்றும் இதர கூடைகள்

விளக்கங்கள்.– (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டது) மற்றும் 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூபாய் 1.18 (ஒரு ரூபாய் பதினெட்டு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) அகவிலைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான, விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

4

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு, வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனில் பாலிவால், சுனில் பாலிவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 93, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 12 அக்டோபர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிட கருதப்பட்டுள்ள அறிவிக்கையின் பின்வரும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

(2) இது தொடர்பாக 12-01-2019ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை DMS வளாகம், சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-11-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு-2-இல், 760 மற்றும் 761ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்ட (ஆங்கிலத்தில்) II(2)/LE/711/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் யாதொரு எண்ணெய் ஆலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்கிற பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.

விவர அட்டவணைவிவர அட்டவணை

யாதொரு எண்ணெய் ஆலையில் வேலைவாய்ப்பு யாதொரு எண்ணெய் ஆலையில் வேலைவாய்ப்பு

பணியாளர்களின் வகைகள்

குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் (ரூ. காசு)

(1)

(2)

I. I. அலுவலகப் பணியாளர்கள் அலுவலகப் பணியாளர்கள் :

(1) எழுத்தர்

(2) நேரக்காப்பாளர் / நேரங்குறிப்பவர்

மாதமொன்றுக்கு 6116.00

(3) காசாளர்

(4) தட்டச்சர்

(5) ஏவலாள்

மாதமொன்றுக்கு 5953.00

(6) சிற்றேவலர் (அலுவலகப் பையன்) மாதமொன்றுக்கு 5765.00

(7) காவலாள்

மாதமொன்றுக்கு 6033.005 II. II. தேர்ச்சி பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் :

(1) மின் கம்மியர்

(2) இயந்திரம் ஓட்டுநர்/ இயக்குபவர் நாளொன்றுக்கு 235.00

(3) வெளித்தள்ளும் இயந்திரம் மேஸ்திரி /

மேற்பார்வையாளர்

(4) தச்சர்/ கருமார்

நாளொன்றுக்கு 232.50

(5) பொருத்துநர்/ இயந்திரக் கம்மியர் நாளொன்றுக்கு 231.00

(6) கொதிகலப் பொறுப்பாளர்

நாளொன்றுக்கு 232.50

(7) உருளை இயக்குபவர்

நாளொன்றுக்கு 231.00

உருளை இயக்குபவரைப் பொறுத்த நேர்வில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுமானால், 80 கிலோகிராம் எடையுள்ள வேர்க்கடலை விதை மூட்டை ஒன்றுக்கு ரூ.60.65 என்ற வீதத்திலும் 75 கிலோகிராம் எடையுள்ள எள் விதை மூட்டை ஒன்றுக்கு ரூ.74.40 என்ற வீதத்திலும் ஊதியம் வழங்கப்படவேண்டும்.

(8) அளந்து ஊற்றுபவர்

நாளொன்றுக்கு 231.00

அளந்து ஊற்றுபவரைப் பொறுத்தவரையில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுமானால், 80 கிலோகிராம் எடையுள்ள வேர்க்கடலை விதை மூட்டை ஒன்றுக்கு ரூ.79.40 வீதத்திலும் 75 கிலோகிராம் எடையுள்ள எள் விதை மூட்டை ஒன்றுக்கு ரூ.93.15 வீதத்திலும் ஊதியம் வழங்கப்படவேண்டும்.

(9) அடைப்பு வேலை செய்பவர் (Tinker) டின் எனப்படும் தகரக் கொள்கலன்

ஒன்றுக்கு 6.65

(தேவைப்படும் மூலப்பொருள்களை பணியாளர்களே கொண்டுவருவதற்கும் சேர்த்து உள்ளடங்கும்)

(10) சுத்திகரிப்பு இயந்திரம் இயக்குபவர்

மாதமொன்றுக்கு 7015.00

(11) வடித்தெடுக்கும் கருவி இயக்குபவர்

III. III. தேர்ச்சி பெறாதவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள் :

(1) பெருக்குபவர்

(2) புண்ணாக்கு எடுத்துச் செல்பவர்

நாளொன்றுக்கு 217.00

(3) மஸ்தூர்

(4) டிகார்டிகேட்டர் எனப்படும் கடலை உடைக்கும்

நாளொன்றுக்கு 223.00

இயந்திரம் (வேர்க்கடலை சுமப்பவர், உமி சுமப்பவர், கோணிப்பைகள் நிரப்புபவர், கோணிப்பைகள் தைப்பவர்)

(5) தூசு, உமி நீக்குபவர்

(6) வடித்தெடுக்கும் கருவிக் கையாள்

(7) எண்ணெய்ச் சிப்பமிடுபவர்

நாளொன்றுக்கு 225.00

(8) கொதிகலன் கையாள்

விளக்கங்கள்:(1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 35.80 (முப்பத்தைந்து ரூபாய் எண்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

6

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26ஆல் வகுக்க வேண்டும்.

(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனில் பாலிவால்,சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 14 November 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-11-14.Ordinary_46_Part-II_Section-2-T-Sup.