© தமிழ்நாடு அரசு 2018
[விலை : 0.80 காசு[விலை : 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 48] சென்னை, புதன்கிழமை, நவம்பர் 28, 2018 கார்த்திகை 12, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 148, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 29 அக்டோபர் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 30 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 1953 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் (தமிழ்நாடு) விதிகளில் கீழ்க்காணும் திருத்தத்தை இதனால் செய்கிறார். மேற்சொன்ன சட்டத்தின் 30 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, இதன் வரைவு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது, அதாவது:-
திருத்தம் திருத்தம்
மேற்சொன்ன விதிகளில், 21 ஆம் விதியைச் சேர்ந்த (4) ஆம் துணைவிதியின் வரம்பு நிபந்தனைக்குப் பின்னர், பின்வரும் வரம்பு நிபந்தனை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"ஆனால், பின்வருமாறு இருப்பின், வேலையளிப்பவரால் படிவம் III-இல் ஆண்டு கணக்கு விவர அறிக்கை அனுப்பத் தேவையில்லை, அதாவது:-
(அ) தமிழ்நாடு 1959 ஆம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகளைச் சேர்ந்த 42 ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் 13-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுவதால்; அல்லது
(ஆ) தமிழ்நாடு 1968 ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர்கள் (பணி நிலைமைகள்) விதிகளின் 35 ஆம் விதியைச் சேர்ந்த (ii) ஆம் துணைவிதியில் கோரியுள்ளவாறாக படிவம் எண், 12-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுவதால்; அல்லது
(இ) தமிழ்நாடு 1955 ஆம் ஆண்டு மலைத்தோட்ட தொழிலாளர் விதிகளின் 83 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணைவிதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் 28-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுவதால்; அல்லது (ஈ) தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் விதிகளைச் சேர்ந்த 43 ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் 19-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுவதால்;
சுனில் பாலிவால்,சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்,
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. [ 1 ]
III-1a-(48) (T Sup)—1