Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 26 December 2018

Type
Ordinary
Gazette no.
52
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT - Notification
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2018

[விலை : 0.80 காசு[விலை : 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 26, 2018 மார்கழி 11, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைஅறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 143, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 25 அக்டோபர் 2018.] தமிழ்நாடு 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டத்தின் 35-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1975-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) விதிகளில், பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 35-ஆம் பிரிவைச் சேர்ந்த, (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, எற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தம் திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், விதி 82-ன் (2) துணை விதியின் வரம்பு நிபந்தனைக்குப் பின்னர், பின்வருவன சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன,

''மேலும், பின்வருவன அளிக்கப்படுவதன் பேரில்,

(அ) தமிழ்நாடு 1959-ஆம் ஆண்டு உணவக நிறுவனங்கள் விதிகளைச் சேர்ந்த 42-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் XIII-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுமாயின்; அல்லது

(ஆ) தமிழ்நாடு 1968-ஆம் ஆண்டு பீடி மற்றும் சுருட்டுத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு நிலைமைகள்) விதிகளைச் சேர்ந்த 35-ஆம் விதியின் (ii) ஆம் துணை விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் XII-ல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுமாயின்; அல்லது

(இ) தமிழ்நாடு 1955-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் விதிகளைச் சேர்ந்த 83-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் 28-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுமாயின்; அல்லது (ஈ) தமிழ்நாடு 1965-ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் விதிகளைச் சேர்ந்த 43-ஆம் விதியில் கோரியுள்ளவாறாக, படிவம் எண் XIX-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை ஒன்று அளிக்கப்படுமாயின்,

"முதன்மை வேலை அளிப்பவர், படிவம் XXV-இல் ஆண்டு கணக்கு விவர அறிக்கையை அனுப்பத் தேவையில்லை".

சுனில் பாலிவால்,சுனில் பாலிவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை. தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

III-1a-(52) (T Sup)

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 December 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-III_Section-1a-T-Sup.