Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications by Government - Tamil Translations

Published 26 December 2018

Type
Ordinary
Gazette no.
52
Part
Part II
Notifications
Labour and Employment Department - Notifications
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-II_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2018

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 26, 2018 மார்கழி 11, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (2D) எண் 51, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 15 மே 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 20-03-2013ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-II, பிரிவு 2 இல் 210ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட II(2)/தொ. ந.வே.வா/264/2013 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தபின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், வெட்டுமரத் தொழிலில் பணியமர்த்தப்பட்டு கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2)ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

விவர அட்டவணை

வெட்டுமரத் தொழிலில் வேலைவாய்ப்பு

தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய தொடர் எண்.

வீதங்கள் (நாளொன்றுக்கு)

(ரூ. காசு) (1)

(2)

(3) (I) தேர்ச்சி பெற்றோர் (Skilled):

(1) மரம் வெட்டுபவர் / மரம் வெட்டும் கருவி இயக்குபவர் (Cutter/Operator)

(2) இரம்பம் கொண்டு அறுப்பவர் (Saw Man)

(3) இரம்பத்திற்குக் கூர் ஏற்றுபவர் (Saw Sharpener)

(4) இரம்பப் பொறி இயக்குபவர் அனைவரும் (All Saw-driver Operator)

(5) மெல்லொட்டுப் பலகை பொருத்தும் பொறியை இயக்குபவர் (Veneering Machine

Operator)

334.00 (6) மின்பணியாளர் (Electrician)

(7) முதலாள் (Foreman)

(8) கடைசல் பொறி இயக்குபவர் (Lathe Operator)

(9) கொதிகலன் இயக்குபவர் (Boiler Operator)

(10) இயந்திரக் கம்மியர் (Mechanic)

(11) தச்சர் (Carpenter)

[ 1 ]

DTP-II-2-(52) (T Sup)2 (II) ஓரளவு தேர்ச்சி பெற்றோர் (Semi-Skilled):

(1) மெருகேற்றுபவர் (Polishing)

(2) வரிச்சட்டங்களைக் கொண்டு சிப்பம் செய்பவர் Packer (Packing Wooden Craters)

(3) சிப்பம் பெட்டி செய்பவர் Box Making (Packing)

325.00 (4) இரம்பப் பொறி இயக்குபவருக்கு உதவியாள் அனைவரும் (All Saw Operator Helper)

(5) மரத்திம்மைகள் அறுப்பவரின் உதவியாள் (Log Helper)

(III) தேர்ச்சி பெறாதோர் (Un-Skilled):

(1) வெட்டுமரத்தை சுமந்து செல்பவர்கள் (Timber Carriers)

(2) பொது உதவியாள் (General Helper)

(3) சிப்பம் கட்டும் உதவியாள் (Packing Helper)

(4) தேர்ச்சி பெறாத உதவியாள் (Un-Skilled Helper)

317.00 (5) காவலர் (Watchman)

(6) வண்டிக்காரர் (Cartman)

(7) வெட்டு மரத் தொகுப்பு எண்ணிக்கை உதவியாள் (Lot Helper)

விளக்கம் : (1) அகவிலைப்படி.-மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்;-

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ. 1.95 (ரூபாய் ஒன்று மற்றும் தொண்ணூற்றைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.

(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

மங்கத் ராம் சர்மா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (2D) எண் 95, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 8 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 20-11-2013ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2 இல் 766 மற்றும் 767ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/LE/874/2013ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் படக்காட்சித் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2)ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச்சோர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.

3

விவர அட்டவணை

படக்காட்சித் தொழிலில் வேலைவாய்ப்பு

தொடர் பணியாளர்களின் வகை. திங்களொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் எண் ரூ. காசு

(1) (2)

(3)

மண்டலம் A மண்டலம் B மண்டலம் C வகை-I

1. மேலாளர்

9360.00 8787.00 8288.00 வகை-II

1. உதவி மேலாளர்

2. மேற்பார்வையாளர்

3. திரைப்படம் இயக்குபவர்

8787.00 8427.00 8092.00 4. கணக்காளர்

5. காசாளர் / எழுத்தர்

6. மின் கம்மியர்

வகை-III

1. திரைப்படம் இயக்கும் பயிற்சி பெறுபவர்

2. நுழைவுச் சீட்டு வழங்குபவர்

3. வாயிற் காப்பாளர்

8245.00 8007.00 8007.00 4. நுழைவுச் சீட்டு சேகரிப்பவர்

5. இயந்திரக் கம்மியர்/சீர்வளி சாதனம் இயக்குபவர்

6. காவலாள் / வழிகாட்டுபவர்

வகை-IV

1. துடைப்பவர்

2. அலுவலகப் பையன்

3. சிப்பமாக்கும் உதவியாளர்

4. மிதிவண்டிப் பையன்

8136.00 8007.00 8007.00 5. துப்புரவுப் பணியாளர்

6. தோட்டக்காரர்

7. பெருக்குபவர்

8. மேற் குறித்தவற்றில் சேராத பணியாளர் வகையினர்

விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு: A,B மற்றும் C மண்டலங்களில் பின்வரும் பகுதிகள் அடங்கும்:-

1. மண்டலம்-A: மாநகராட்சிகள், முதல்நிலை நகராட்சிகள், தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.

2. மண்டலம்-B: இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகள், நகரியங்கள், பாளையங்கள் மற்றும் பேரூராட்சிகள்.

3. மண்டலம்-C: கிராம ஊராட்சிகள்.

(2) அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கபப்பட வேண்டும்:-

4

(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் திங்கள் ஒன்றுக்கு ரூ.49.70 (நாற்பத்தொன்பது ரூபாய் எழுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.

(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.

(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும் போது ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.

(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.

(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

[அரசாணை (நிலை) எண் 162, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 14 நவம்பர் 2018.]

அறிவிக்கை-

-&I

தமிழ்நாடு 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1947) 1ஆம் பிரிவைச் சேர்ந்த 3ஆம் உட்பிரிவின் (b) பகுதியில், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 1ஆம் பிரிவைச் சேர்ந்த (3) ஆம் உட்பிரிவின் (a) மற்றும் (b) பகுதிகளை பயன்படுத்துவதன் வாயிலாக, இது வரையில் மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகள் செயலுக்கு வராத இடங்களில், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் மேற்சொன்ன சட்டம் 14-11-2018ஆம் நாள் முதல் செயலுக்கு வரும் என்று இதனால் உத்தரவிடுகிறார்.

அறிவிக்கை-

-&II

தமிழ்நாடு 1947ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 36/1947) 27ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தில், 25ஆம் பிரிவைச் சேர்ந்த 1 ஆம் உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளின்படி சேர்த்து வைக்கக்கூடிய வகையில், ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களின் உயரளவு எண்ணிக்கையை 45 நாட்களாக இதனால் அதிகரிக்கிறார்.

சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 26 December 2018. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-II_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2018-12-26.Ordinary_52_Part-II_Section-2-T-Sup.