Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILLS - No. 1 of 2019 - No. 8 of 2019 (Tamil)

Published 07 January 2019

Type
Extraordinary
Gazette no.
7
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2019-01-07.Extraordinary_7_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU

2019

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 33.60 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 7A] சென்னை, திங்கள் கிழமை, ஜனவரி 7, 2019 மார்கழி 23, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம் பக்கங்கள் சட்டமுன் வடிவுகள் :-

எண் 40/2018 எண் 1/2019 தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தம்) சட்டம் .. 2--4 எண் 41/2018

எண் 2/2019 தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டம் .. .. .. .. .. .. .. .. 5--6 எண் 42/2018

எண் 3/2019 தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் (திருத்த) சட்டம் .. .. .. .. .. 7--8 எண் 43/2018

எண் 4/2019 தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் .. .. .. .. 9--10 எண் 44/2018 எண் 5/2019 தமிழ்நாடு முத்திரைச் சட்டம் .. .. .. .. 3 11--68- எண் 45/2018 எண் 6/2019 தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) சட்டம். 569--80 எண் 46/2018 எண் 7/2019 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் (திருத்த) சட்டம் .. 81--83

63-69 எண் 47/2018

7A-Ex-IV-1—1

[1]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1/2019

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தம்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

12-D எனும் புதிய

2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 12-C எனும் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:-

பிரிவைப் புகுத்துதல்

(தமிழ்நாடு சட்டம் XX / 1951) "12-D முன்னாள் உறுப்பினர்களுக்காக இருப்பூர்தி கட்டணம்.-

வகுத்துரைக்கலாகிற அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சட்டமன்றப் பேரவை அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்திருக்கின்ற நபர் ஒவ்வொருவரும் சுதந்திர நாளை மற்றும் குடியரசு நாளை கொண்டாடுவதற்காக கலந்துகொள்வதற்கு மற்றும் திரும்புவதற்கான பயணத்திற்காக அவருடைய வழக்கமான இருப்பிடத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு இரண்டு அடுக்கு குளிர்வசதி செய்யப்பட்ட படுக்கை வசதிக்கான இருப்பூர்தி கட்டணத்திற்கு தகுதி உடையவர் ஆவார்:

ஆனால் இந்தப்பிரிவின்படி மைய அரசால் அல்லது பிற அதிகார அமைப்பால் வழங்கப்பட்டுள்ள இலவச இருப்பூர்தி அனுமதி சீட்டை வைத்துள்ள முன்னாள் சட்டமன்ற பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கு அல்லது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருப்பவருக்கு இருப்பூர்தி கட்டணம் வழங்குதல் கூடாது".

தமிழ் நாடு நீக்கறவு மற்றும்

3. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தம்) காப்புரைகள்

அவசரச்சட்டமானது ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

அவசர சட்டம் 1/2018

தமிழ் நாடு

சட்டம் XX /1951 (2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும் கூறப்பட்ட அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதையும் இந்தச்சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு செய்யப்பட்டதாகவோ அல்லது எடுக்கப்பட்டதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 3

நோக்கக் காரண விளக்கவுரை

2018-2019-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 05-07-2018 அன்று முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளை கொண்டாடுவதற்காக அவர்களுடைய வழக்கமான இடத்திலிருந்து சென்னைக்கு வருவதற்கும் மற்றும் திரும்பி செல்வதற்கும் இரண்டாம் வகுப்பு குளிர்வசதி செய்யப்பட்ட இருப்பூர்திப் பெட்டியில் பயணம் செய்வதற்கு வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார். மேலே கூறப்பட்ட அறிவிக்கைக்கு செயல்விளைவு அளிக்கும் பொருட்டு அரசானது, 1951 ஆம் ஆண்டு தமிழ் நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் XX/1951) தக்கவாறு திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2018), ஆளுநரால் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் நாளன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அது 2018 ஆகஸ்டு 13-ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த சட்டமுன்வடிவானது கூறப்பட்ட அவசரச் சட்டத்தை மாற்றியமைக்க விழைகிறது.

எடப்பாடி கே. பழனிச்சாமி,

முதலமைச்சர்.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நிதி பற்றிய குறிப்பு

2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தம்) சட்ட முன்வடிவு இயற்றப்படும் பொழுது மற்றும் செயல்முறைக்கு கொண்டுவரும் பொழுது இந்தச் சட்டத்தினை அமல் படுத்துகையில் அதற்காக ஏற்படும் செலவானது மாநிலத்தின் தொகுப்பு நிதியத்திலிருந்து செலவு செய்யப்படும். எனினும் கருதப்பட்டுள்ள இச்சட்டத்தை இயற்றுவதன் விளைவாக ஏற்படக்கூடிய செலவினை இந்த நிலையில் எந்தக்கோணத்திலும் துல்லியமாக மதிப்பிட இயலாது.

எடப்பாடி கே. பழனிச்சாமி, முதலமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 5

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2019

1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது 2017ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

குடியரசுத்

30-A எனும் தலைவருடைய சட்டம் 19/1976.

பிரிவிற்கான திருத்தம்.

2. (இதன்பின்பு முதன்மைச்சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1976ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் 30-A எனும் பிரிவில் (1)ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில் "ஐந்து ஆண்டுகள்" என்கின்ற சொற்றொடருக்குப்பதிலாக "ஏழு ஆண்டுகள்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

செல்லுந்தன்மை.

3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 18 ஆம் நாளன்று தொடங்கும் காலத்தின்போது மற்றும் தமிழ்நாடு அரசிதழில் இந்தச்சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும்போது அரசால் ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் மேலாண்மையினை எடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து இருக்கையில் மற்றும் மேற்சொன்ன காலத்தின்போது மேற்சொன்ன கல்லூரியின் மேலாண்மையினை எடுத்திருப்பது தொடர்ந்திருப்பதற்கு அரசால் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும் இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்க காரண விளக்கவுரை

1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் (குடியரசுத் தலைவருடைய சட்டம் 19/1976) 30 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவு கல்லூரிக் கல்வியின் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கல்லூரி ஒன்றின் மேலாண்மையினை எடுத்துக் கொள்வதற்கு அரசுக்கு அதிகாரமளிக்கிறது. முதலாவதாக இரண்டாண்டுகள் காலமொன்றிற்காகவும் எவ்வாறிருப்பினும் அது பத்து ஆண்டுகளுக்கு மிகாத கால அளவு ஒன்று வரைக்கும் நீட்டிக்கப்படலாம்.

2. அதைப்போன்று, மேற்சொன்ன சட்டத்தின் 30-A எனும் பிரிவின் (1)ஆம் உட்பிரிவு, மேலும் உரிமையியல் நீதிமன்றமொன்றில் நிலுவையில் இருந்து கொண்டிருக்கிற கல்வி முகவாண்மையின் அமைப்பு தொடர்பான பூசல் ஒன்றின் காரணத்திற்காக தனியார் கல்லூரியின் கல்வி முகவாண்மையிடம் மேலாண்மையினை மீட்டெடுத்துக் கொடுக்க முடியாமல் இருக்கின்றவிடத்தான சூழ்நிலை ஒன்றில் அல்லது அத்தகைய தனியார் கல்லூரியின் சொத்தின் உடைமையாளருக்கு அளிக்க முடியாமல் போகின்றவிடத்து அல்லது அத்தகைய பிற காரணங்களுக்காக மேற்சொன்ன பத்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட மேலாண்மையானது தொடர்ந்து இருப்பதற்காக மேலுமான ஓர் ஆண்டு கால அளவு ஒன்றிற்காக, எவ்வாறிருப்பினும் அது மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மிகாத கால அளவு ஒன்று வரை நீட்டிக்கப்படலாம் என்பதற்கு வகை செய்கிறது.

3. தனியார் கல்லூரி ஒன்றின் மேலாண்மை அதாவது ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் மேலாண்மை 19/1976 மேற்சொன்ன குடியரசுத் தலைவருடைய சட்டத்தின் 30(1) பிரிவின்படி அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக 19/1976 மேற்சொன்ன குடியரசுத் தலைவருடைய சட்டத்தின் 30(A) எனும் பிரிவின்படி மேற்சொன்ன கல்லூரியின் மேலாண்மை தொடர்ந்து அரசின் கீழ் இருந்து வந்தது. மேற்சொன்ன 19/1976 குடியரசுத் தலைவருடைய சட்டத்தின் 30-A எனும் பிரிவின்படி குறித்துரைக்கப்படலாகிறவாறானது ஐந்து ஆண்டுகள் கால அளவு 18.12.2017 அன்று முடிவடைந்து விட்டது மற்றும் அதன் காரணமாக மேற்சொன்ன தேதியிலிருந்து மேலுமான இரண்டு ஆண்டுகள் கால அளவு ஒன்றிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் மேற்சொன்ன கல்லூரியினுடைய மேலாண்மையின் கால அளவு நீட்டிக்கப்படுவதானது கட்டாயத் தேவையானதாக இருக்கின்றபடியால் அரசு, அதன் காரணமாக, அந்த நோக்கத்திற்காக 18.12.2015க்குப் பின்பும் மேற்சொன்ன கல்லூரியின் மேலாண்மையானது தொடர்ந்து செல்லுந்தன்மையுடன் இருப்பதற்காக மேற்சொன்ன 19/1976 எனும் குடியரசுத் தலைவருடைய சட்டத்தின் 30-A எனும் பிரிவை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது.

4. இந்தச் சட்டமுன்வடிவு, மேற்சொன்ன நோக்கத்தை அடைய விழைகிறது.

கே.பி. அன்பழகன்,

உயர்கல்வித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 7

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 3/2019

1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச்

சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக: —

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் (திருத்த) சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு சட்டம்

33/1997.

2ஆம் பிரிவின் திருத்தம்.

2. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் சட்டத்தின் (இதில் இதன் பின்பு முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 2-ஆம் பிரிவில் (e) கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு சேர்க்கப்படுதல் வேண்டும் அதாவது: —

"(f) "சிறப்பு நோக்க நிறுமம்" என்பது திட்டம் மற்றும் மேம்பாடு உள்ளடங்கலாக தொழிற் பகுதியின் அலுவல்களை நிர்வகிப்பது அல்லது பராமரிப்பது உள்ளடங்கலாக தொழில் துறை மேம்பாட்டிற்காக அல்லது தொடர்புடைய நோக்கம் எதற்காகவும் 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 18/2013) 2-ஆம் பிரிவின் (45) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறு உருவாக்கப்பட்ட ஒரு அரசு நிறுமம் என்று பொருள்படும்.".

23-A எனும் 3. முதன்மைச் சட்டத்தின் 23ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:—

புதிய பிரிவைப் புகுத்துதல்.

"23-A. அதிகாரம் மற்றும் செயற்பணிகள் ஒப்படைவு.—

(1) அதிகார அமைப்பானது, அரசின் முன் ஒப்பளிப்புடன் 25ஆம் பிரிவின்படியான அதிகாரங்களைத் தவிர்த்து அதனுடைய அனைத்து அல்லது எந்தவொரு அதிகாரம் மற்றும் செயற்பணிகளை ஒரே நேரத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மிகாததொரு காலத்திற்கு ஒப்படைவு செய்யலாம்.

வரம்புரையாக இந்த பிரிவின்படி எந்த காலத்திற்காக ஒப்படைவு செய்யப்பட்டதோ அந்த காலமானது வெவ்வேறு வகையான அதிகாரம் மற்றும் செயற்பணிகளுக்காக மாறுபடலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் மற்றும் செயற்பணிகளைக் கூறப்பட்ட சிறப்பு நோக்க நிறுமமானது அரசு நிறுமமாக அற்றுப்போகுமேயானால் திரும்பப் பெறுதல் வேண்டும்.".

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரை.

இந்திய அரசானது தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் வளாகவழித் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொழில் வளாகவழித் திட்டமும் பல தொழில் முனையங்களைப் பெற்றிருக்கும். அத்தொழில் முனையங்களில் உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையானது ஒவ்வொரு தொழில் முனையத்திற்கும் ஒரு நிறுவன கட்டமைப்பு இருக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு தொழில் முனையமும் சிறப்பு நோக்க நிறுமத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் இந்த சிறப்பு நோக்க நிறுமமானது திட்டம் மற்றும் மேம்பாட்டு அதிகார அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளை கொண்டிருத்தல் வேண்டும். தற்பொழுது 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1997) பிரிவு 3-ன்படி அமைத்துருவாக்கப்பட்ட அதிகார அமைப்பானது தன்னுடைய அதிகாரம் மற்றும் திட்டம் மற்றும் மேம்பாட்டு செயற்பணிகளை எந்தவொரு அமைப்பிற்கும் ஒப்படைவு செய்ய இயலாது. தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கும் பொருட்டு, தன்னுடைய அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகளை அதிகார அமைப்பு சிறப்பு நோக்க நிறுமத்திற்கு ஒப்படைவு செய்ய அதிகாரம் அளிக்கும் பொருட்டு மேற்கூறப்பட்ட சட்டத்தை திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது.

2. இந்தச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

எம்.சி. சம்பத், தொழில் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 9

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது. விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 4/2019 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 4/2019

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு

முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச்

சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்

(ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் உள்ள

தமிழ்நாடு சட்டம் 27/1989.

வரம்புரையில் "ஏழு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்கின்ற சொற்றொடருக்குப்

பதிலாக "எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர் மாற்றி

அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு

நீக்கறவு மற்றும் 3. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்

காப்புரை.

(ஒழுங்கு முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கம்

அவசரச் சட்டம் 3/2018.

செய்யப்படுகிறது.

(2) அத்தகைய நீக்கம் எவ்வாறு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசர சட்டத்தால்

திருத்தம் செய்யப்பட்டவாறான 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச்

தமிழ்நாடு சட்டம் 27/1989.

சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது

எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான

மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக

கொள்ளப்படுதல் வேண்டும்.

10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்க காரண விளக்கவுரை

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது, ஒரு புதிய சந்தைக்குழு அமைக்கப்படும் வரையில் மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு புதிய சந்தைக் குழுவினை அமைப்பது நிலுவையிலிருக்கும்பொழுது சந்தைக் குழுவின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு, தனி அலுவலர் ஒருவரை பணிஅமர்த்தம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேற்சொன்ன வகைமுறையின் விளைவாக, மேற்சொன்ன சந்தைக் குழுக்களின் அலுவற் பணிகளை மேலாண்மை செய்வதற்கு 23 சந்தைக் குழுக்களுக்கு தனி அலுவலர்கள் பணிஅமர்த்தம் செய்யப்பட்டிருந்தனர்.

2. தனி அலுவலர்களின் பதவிக்காலம் காலத்திற்கேற்ப மேற்சொன்ன 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையை திருத்தம் செய்வதன் மூலம் மேற்சொன்ன மூன்று ஆண்டுகள் காலத்திற்கு மேல் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 38/2018 தமிழ்நாடு சட்டத்தால் அவர்களுடைய பதவிக்காலம் ஏழு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைவதன் பொருட்டு சந்தைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதாக இருப்பதால் மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 29.11.2018-க்கு பிறகு மேலுமான ஓர் ஆண்டு காலத்திற்கு நீட்டிப்பதென்பது கட்டாயத் தேவையாக இருந்ததாலும் அல்லது சந்தைக்குழுக்களை மறுபடியும் அமைத்துருவாக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை பணி அமர்த்தம் செய்வதற்கு அரசு, அதன் காரணமாக மேற்சொன்ன நோக்கத்திற்காக மேற்சொன்ன 27/1989 தமிழ்நாடு சட்டத்தைத் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது.

3. அதற்கிணங்க ஆளுநர், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதிக்கு பிறகு மேலுமான ஓர் ஆண்டு கால அளவிற்கு அல்லது சந்தைக் குழுக்களை அமைக்கும் வரையில், இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டத்தைப் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 3/2018) பிறப்பித்தார் .

4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன அவசரச் சட்டத்திற்குப் பதிலாக அமைகிறது.

இரா. துரைக்கண்ணு,

வேளாண்மைத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 11

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 5/2019

தமிழ்நாடு முத்திரைச் சட்டமுன்வடிவு, 2019.

கூறுகளின் அமைப்பு

அத்தியாயம்-I.

முன்னுரை.

1. குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் தொடக்கம்.

2. பொருள் வரையறைகள்.

அத்தியாயம்-II.

முத்திரைத் தீர்வைகள்.

A. முறையாவணங்களுக்குத் தீர்வைச் செலுத்துவதற்கான கடமைப்பொறுப்பு.

3. தீர்வை விதிக்கத்தக்க முறையாவணங்கள்.

4. ஒரு உரிமை மாற்ற நடைமுறையில் பயன்படுத்தப்படும் பல முறையாவணங்கள்.

5. பல்வேறுப்பட்ட பொருட்பாடுகள் தொடர்பான முறையாவணங்கள்.

6. இணைப்புப் பட்டியலில் பல்வேறு விவரக் குறிப்புகளுக்குள் வரும் முறையாவணங்கள்.

7. கடன்களின் பேரில் வழங்கப்படும் பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள்.

8. தீர்வைகளை, வட்டிகளை அல்லது கூட்டுத்தீர்வைகளை குறைப்பதற்கு, தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம்.

B. முத்திரைத்தாள்களும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளும்.

9. வங்கி எதனின் கிளையை முழுமையான துணைவங்கியாக மாற்றுதல் அல்லது பங்கை வைத்துள்ள வங்கியை, தீர்வைக்கு கடப்பாடில்லாத கட்டுப்படுத்தும் நிறுமத்திற்கு உரிமை மாற்றம் செய்தல்.

10. தீர்வைகள் எவ்வாறு செலுத்தப்படுதல் வேண்டும் எனல்.

11. ஒட்டுவகை முத்திரை வில்லைகளின் பயன்பாடு

12. ஒட்டு வகை முத்திரை வில்லைகளை இரத்து செய்தல்.

13. பதிப்பு வகை முத்திரைத் தாள்களுடன் முத்திரையிடப்பட்ட முறையாவணங்கள் எவ்வாறு எழுதப்படுதல் வேண்டும் எனல்.

14. ஒரே முத்திரைத்தாளின் மீது ஒரு முறையாவணம் மட்டுமே இருத்தல் வேண்டும் எனல்.

12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

15. 13-ஆம் அல்லது 14-ஆம் பிரிவிற்கு முரணாக எழுதப்பட்ட முறையாவணம் முத்திரைத் தீர்வை செலுத்தப்படாதது எனல்.

16. தீர்வையைக் குறிப்பிடுதல்.

ஊ. முறையாவணங்களுக்கு முத்திரை இடவேண்டிய நேரம்.

17. இம்மாநிலத்தில் நிறைவேற்றப்படும் முறையாவணங்கள்.

18. இந்தியாவிற்கு வெளியே நிறைவேற்றப்படும் முறையாவணங்கள்.

19. உயர்த்தப்படும் தீர்வைக்குப் பொறுப்பாகும் ஒருசில முறையாவணங்களின் பேரில் தீர்வை செலுத்தப்படுதல்.

20. அசல் முறையாவணத்தின் பேரில் தீர்வை செலுத்தப்படாதபோது முறையாவணத்தின் நகலின்பேரில் தீர்வை செலுத்தப்படுதல்.

D. தீர்வைக்கான மதிப்பீடுகள்

21. அயல்நாட்டு நாணயங்களில் வெளிப்படுத்தப்படும் தொகையின் மாற்றம்.

22. இருப்பும் சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களும் எவ்வாறு மதிப்பிடப்படுதல் வேண்டும் எனல்.

23. பணமாற்று வீதத்திற்கான விளக்கவுரையின் அல்லது சராசரி விலையின் விளைவு.

24. வட்டியை ஒதுக்கீடு செய்யும் முறையாவணங்கள்.

25. உடன்பாடுகளாக தீர்வை விதிக்கப்படவேண்டிய சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களின்அடைமானங்கள் தொடர்பான ஒருசில முறையாவணங்கள்.

26. அடைமானம் தொடர்பாக சொத்தின் உரிமை மாற்றமானது எவ்வாறு கட்டணம் விதிக்கப்படுகின்றது எனல்.

27. ஆண்டுத் தொகை முதலானவற்றின் நேர்வில் மதிப்பீடு செய்தல்.

28. பொருட்பாட்டின் மதிப்பானது நிர்ணயம் செய்யப்பட முடியாதவிடத்து கோரப்படும் முத்திரைத் தீர்வை.

29. முறையாவணத்தில் குறிப்பிடப்படவேண்டிய தீர்வையைப் பாதிக்கும் பொருண்மைகள்.

30. குறைவாக மதிப்பிடப்பட்ட உரிமை மாற்றளிப்பின் முறையாவணங்கள் முதலானவை எவ்வாறு கையாளப்படுதல் வேண்டும் எனல்.

31. மதிப்பீட்டுக்குழுவை அமைத்துருவாக்குதல்.

32. முறையாவணத்தின் பிழைகளை சரி செய்வதற்காக விதிக்கத்தக்க முத்திரைத்தாள் தீர்வை.

33. ஒருசில உரிமை மாற்றாவணங்களின் நேர்வில் தீர்வை குறித்த பணிப்புரை.

E. தீர்வை எவரால் செலுத்தத்தக்கதாகும் எனல்.

34 தீர்வை எவரால் செலுத்தத்தக்கதாகும் எனல்.

அத்தியாயம் III.

முத்திரைத்தீர்வை குறித்து தீர்ப்பு வழங்குதல்.

35. முறையான முத்திரைத்தீர்வை குறித்து தீர்ப்பு வழங்குதல்.

36. ஆட்சியர் சான்றிதழ் அளித்தல்.

அத்தியாயம்-IV.

உரிய வகையில் முத்திரை இடப்படாத முறையாவணங்கள்.

37. முறையாவணங்களை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றை முடக்கி வைத்தல்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 13

38. முத்திரைத் தீர்வைப் பற்றாக்குறையை வசூல் செய்தல்.

39. உரியவாறு முத்திரை இடப்படாத முறையாவணமானது சான்று முதலானவையாக அனுமதிக்கப்பட இயலாதது எனல்.

40. ஐயப்பாடு எழுதல் கூடாது எனுமிடத்து முறையாவணத்தை அனுமதித்தல்.

41. முறையற்ற முத்திரை இடப்பட்ட முறையாவணங்களை அனுமதித்தல்.

42. முடக்கி வைக்கப்பட்ட ஆவணமானது எவ்வாறு கையாளப்படுதல் வேண்டும் எனல்.

43. 42-ஆம் பிரிவின்படி செலுத்தப்பட்ட பணத்தண்டத்தை திருப்பி அளிப்பதற்கான ஆட்சியரின் அதிகாரம்.

44. முடக்கி வைக்கப்பட்ட முறையாவணங்களை முத்திரைத்தாள் இடுவதற்கான ஆட்சியரின் அதிகாரம்.

45. உரியவாறு முத்திரை இடப்படாத முறையாவணங்கள்.

46. 39, 44 அல்லது 45-ஆம் பிரிவுகளின்படி தீர்வை செலுத்தப்பட்டுள்ள முறையாவணங்களின் மீதான மேலெழுத்துச் செய்தல்.

47. முத்திரைச் சட்டத்திற்கு எதிரான குற்றச்செயலுக்காக குற்ற வழக்குத் தொடருதல்.

48. தீர்வை அல்லது பணத்தண்டத்தை செலுத்தும் நபர்கள் அதனை ஒருசில நேர்வுகளில் வசூலிக்கலாம் எனல்.

49. பணத்தண்டம் அல்லது அதிகப்படியான தீர்வையைத் திருப்பி அளிப்பதற்கு வருவாய் அதிகாரிக்கு உள்ள அதிகாரம்.

50. 42-ஆம் பிரிவின்படி அனுப்பப்பட்ட முறையாவணங்களின் இழப்பிற்குப் பொறுப்பாதல் கூடாது எனல்.

51. தீர்வைகளையும் பணத் தண்டங்களையும் வசூலித்தல்.

அத்தியாயம் - V.

ஒருசில நேர்வுகளில் முத்திரைத்தாள்களுக்கான சலுகைப் படிகள்.

52. பாழான முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படிகள்.

53. 52-ஆம் பிரிவின்படியான தீர்வழிக்கு விண்ணப்பம் எப்பொழுது செய்யப்படுதல் வேண்டும் எனல்.

54. தவறாகப் பயன்படுத்தப்பட்ட முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படி.

55. பாழாக்கப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட முத்திரைத் தாள்களுக்காக படித்தொகை எவ்வாறு வழங்கப்படுதல் வேண்டும் எனல்.

56.பயன்பாட்டிற்கென கோரப்படாத முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படி.

அத்தியாயம்-VI.

மேல் முடிவும் சீராய்வும்.

57. முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கட்டுப்படுதல் மற்றும் வழக்கினை எடுத்துரைத்தல்.

58. முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு உயர்நீதிமன்றத்திற்கு வழக்கினை எடுத்துரைத்தல்.

59. எடுத்துரைக்கப்பட்ட வழக்கு குறித்து மேலுமான விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்.

60. எடுத்துரைக்கப்பட்ட வழக்கைத் தீர்வு செய்வதில் உள்ள நடைமுறை.

61. பிற நீதிமன்றங்களால் வழக்கானது உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்படுதல்.

62. முத்திரைத்தாள்களின் போதுமான தன்மை குறித்த நீதிமன்றங்களின் ஒருசில முடிவுகளுக்கான சீராய்வு.

14 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

அத்தியாயம்-VII.

குற்றச்செயல்களும் நடைமுறையும்

63. உரியவாறு முத்திரை இடப்படாத முறையாவணத்தை நிறைவேற்றுதல் முதலானவற்றிற்கான தண்டனை.

64. ஒட்டு வகை முத்திரையை இரத்து செய்யத் தவறுவதற்கான தண்டனை.

65. 20-ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்கத் தவறுவதற்கான பணத்தண்டம்.

66. 29-ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு இணங்காமல் விட்டு விடுவதற்கான பணத்தண்டம்.

67. முத்திரைத் தீர்வைப் பற்றாக்குறையான தொகையினை வசூலித்தல்

68. முத்திரைத்தாள்களின் விற்பனை மற்றும் அதிகாரம் அளிக்கப்படாமல் விற்பனை செய்வது தொடர்பான விதி எதனையும் மீறுவதற்கான தண்டனை.

69. குற்ற வழக்குகளைத் தொடருதல் மற்றும் நடத்துதல்.

70. விசாரணைக்கான இடம்.

அத்தியாயம் VIII.

துணை வகைமுறைகள்.

71. புத்தகங்கள் முதலானவை ஆய்வு செய்வதற்கென திறந்து வைக்கப்படுதல்.

72. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.

73. அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.

74. நீதிமன்றக் கட்டணங்கள் குறித்த காப்பு.

75. தீர்வை அல்லது படித்தொகையை முழுமையாக்குதல்.

76. 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் பொருந்துகை.

இணைப்புப் பட்டியல்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 15

முத்திரைத்தீர்வை தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் திருத்துவதற்குமானதொரு சட்டமுன்வடிவு.

தமிழ்நாடு மாநிலத்தில் முத்திரைத்தீர்வை தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதும் திருத்துவதும் உகந்ததாகுமிடத்து;

இந்தியக்குடியரசின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

அத்தியாயம்-I.

முன்னுரை.

1. (1) இது 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு முத்திரைச் சட்டம் என வழங்கப்பெறும். குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் தொடக்கம்.

(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.

(3) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

2. இந்தச் சட்டத்தில் தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி,- பொருள்

வரையறைகள்.

(1) ''கூட்டமைவு'' என்றால், பதிவு செய்யப்பட்டதாயிருப்பினும் இல்லாவிடினும் பொருள்களின் அல்லது சந்தைப்படுத்தப்படும் பிணையங்கள் தொடர்பான விற்பனையின் அல்லது கொள்முதலின் வணிக நடைமுறையை அல்லது பிற அலுவல் நடைமுறைகளை ஒழுங்குமுறைப்படுத்துகிற, கட்டுப்பாடு செய்கிற அல்லது நடத்துகிற நோக்கத்திற்காக நிறுவியமைக்கப்பட்ட கூட்டமைவு, இணைப்பகம், கழகம் அல்லது நபர்களின் குழுமம் எதுவும் எனப்பொருள்படும்;

(2) ''வங்கியாளர்'' என்பது வங்கி ஒன்றையும் வங்கியாளர் ஒருவராக செயல்படும் நபர் எவரையும் உள்ளடக்கும்;

(3) ''பிணைமுறி'' என்பது-

(a) குறித்துரைக்கப்பட்ட செயல் ஒன்று நிறைவேற்றப்படுமாயின் அல்லது நேர்விற்கேற்ப நிறைவேற்றப்படாமலிருக்குமாயின் அந்த கடப்பாடானது இல்லாநிலையாதல் வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், நபர் ஒருவர் தனக்குத்தானே மற்றொருவருக்குப் பணம் கொடுப்பதற்கான கடப்பாட்டை ஏற்படுத்திக்கொள்கிற முறையாவணம் எதனையும்;

(b) நபர் ஒருவர் தனக்குத்தானே மற்றொருவருக்குப் பணம் கொடுப்பதற்கான கடப்பாட்டை ஏற்படுத்திக்கொள்கிற, சாட்சி ஒருவரால் சான்றொப்பமிடப்பட்ட மற்றும் ஆணையின்படி அல்லது அதைக்கொண்டு வருபவருக்கு செலுத்தத்தக்கதல்லாத முறையாவணம் எதனையும்; மற்றும்

(c) நபர் ஒருவர் தானியம் அல்லது பிற வேளாண் விளைபொருளை மற்றொருவருக்கு அளிப்பதாக தனக்குத்தானே கடப்பாட்டை ஏற்படுத்திக்கொள்கிற, அவ்வாறு சான்றொப்பமிடப்பட்ட முறையாவணம் எதனையும் உள்ளடக்கும்;

(4) ''கட்டணம் விதிக்கத்தக்கது'' என்றால் இந்தச் சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்ட அல்லது இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்குப் பின்னர் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட முறையாவணம் ஒன்றுக்குப் பொருந்துகிறவாறான மற்றும் அத்தகைய முறையாவணம் நிறைவேற்றப்பட்டபோது இம்மாநிலத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி தீர்வைக் கட்டணம் விதிக்கத்தக்க பிற முறையாவணம் எதற்கும் பொருந்துகிறவாறான அல்லது பல்வேறு நபர்கள் அந்த முறையாவணத்தை வெவ்வேறான தருணங்களில் நிறைவேற்றுமிடத்து முதலாவாதாக நிறைவேற்றப்பட்ட முறையாவணத்திற்குப் பொருந்துகிறவாறான தீர்வைக் கட்டணம் விதிக்கத்தக்கது எனப்பொருள்படும்;

16 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

மையச் சட்டம் XVI1908.

(5) ''முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரி'' என்றால் 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 3-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி பதிவுத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட அலுவலர் அல்லது அந்தச் சட்டத்தின்படி முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் ஏதொன்றையும் செலுத்துவதற்கு அரசால் அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரும் என்று பொருள்படும்;

(6) ''தீர்வுப்பட்டியல்'' என்றால் கூட்டமைவின் விதிகள் அல்லது துணை விதிகளுக்கு இணங்கிய வகையில் கூட்டமைவு ஒன்றின் தீர்வகத்திற்கு பணிந்தனுப்பப்படுவதற்குக் கோரப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பான அலுவல் நடைமுறைகளின் பட்டியல் ஒன்று எனப்பொருள்படும்;

(7) ''ஆட்சியர்'' என்றால் மாவட்டம் ஒன்றின் ஆட்சியர் எனப்பொருள்படும்; மற்றும் இந்தச் சட்டத்தின்படி ஆட்சியரின் அலுவற்பணிகளை நிறைவேற்றுவதற்கென அரசால் திட்டவட்டமான முறையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர் எவரையும் உள்ளடக்கும்;

(8) ''உரிமை மாற்றளிப்பு'' என்பது -

(a) விற்பனையின் பேரிலான உரிமை மாற்றம் ஒன்றின்;

(b) முறையாவணம் ஒவ்வொன்றின்;

மையச் சட்டம்

1/1956.

(c) நிறுமங்களின் ஒருங்கிணைப்பு அல்லது மறுகட்டமைப்பு தொடர்பாக, 1956-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் 394-ஆம் பிரிவின்படி அல்லது 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் 232 ஆம் பிரிவின்படி உயர்நீதிமன்றத்தால் செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றின்; மற்றும்

மையச் சட்டம் 10/1949.

(d) இந்தச் சட்டத்தின் 9-ஆம் பிரிவின்படி அடங்காதவைகளை தவிர்த்து 1949-ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தின் 44-A எனும் பிரிவின்படி இந்திய சேமநல வங்கியினால் செய்யப்பட்ட ஆணை ஒவ்வொன்றின் வாயிலாக, அசையும் சொத்தோ அல்லது அசையாச் சொத்தோ அல்லது சொத்து எதனின் நலன் எதுவுமோ வாழ்வோர்களுக்கிடையே உரிமை மாற்றம் செய்யப்படுவதையும் இணைப்புப்பட்டியலில் இதற்கென திட்டவட்டமாகப் பிறவாறு வகைசெய்யப்படாதவற்றையும் உள்ளடக்கும்;

(9) முறையாவணம் ஒன்றுக்குப் பொருந்துகிறவாறு ''உரியவாறு முத்திரைத்தாள் இடப்பட்டது'' என்றால் சரியான தொகைக்குக் குறையாமல், ஒட்டுவகை அல்லது பதிப்புவகை முத்திரைத்தாள் ஒன்றைத் தாங்கியுள்ளதும் மற்றும் இம்மாநிலத்தில் அப்போதைக்கு நடைமுறையிலிருந்து வரும் சட்டத்திற்கு இணங்கிய வகையில் அத்தகைய முத்திரைத்தாள் ஒட்டப்பட்டுள்ளதுமான அல்லது பயன்படுத்தப்பட்டுள்ளதுமான முறையாவணம் எனப்பொருள்படும்;

மையச் சட்டம் 21/2000.

(10) முறையாவணங்கள் குறித்துப் பயன்படுத்தப்படும் ''நிறைவேற்றப்பட்டது'' மற்றும் ''நிறைவேற்றம்'' என்றால் முறையே ''கையெழுத்திடப்பட்டது'' மற்றும் ''கையெழுத்து'' எனப்பொருள்படும்; விளக்கம். ''கையெழுத்திடப்பட்டது'' மற்றும் ''கையெழுத்து'' என்ற சொற்கள் 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 11ஆம் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள மின்னணு பதிவுருவையும் உள்ளடக்கும்;

(11) ''அரசு'' என்றால் மாநில அரசு எனப்பொருள்படும்;

(12) ''அசையாச்சொத்து'' என்பது நிலம், கட்டிடங்கள், பரம்பரை வழியிலான படித்தொகை, பாதைகளுக்கான உரிமைகள், விளக்குகள், தோணித்துறை உரிமை, மீன்பிடிக்கும் உரிமை அல்லது நிலத்திலிருந்து எழும் பிற ஆதாயம் எதனையும் மற்றும் நிலத்துடன் இணைந்துள்ள பொருள்கள் அல்லது நிலத்துடன் இணைந்துள்ள பொருள் எதனுடனும் நிலையாக இணைந்திருக்கும் எதனையும் உள்ளடக்கும்; ஆனால் அது நிற்கும் மரங்களையோ, வளரும் பயிர்களையோ மற்றும் புற்களையோ உள்ளடக்காது;

(13) ''பதிப்புவகை முத்திரைத்தாள்'' என்பது-தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 17 (a) உரிய அலுவலரால் ஒட்டப்பட்ட மற்றும் பதிக்கப்பட்ட முகப்புச்சீட்டுக்களையும்;

(b) முத்திரைத்தாள் மீது செதுக்கப்பட்ட அல்லது பொறிக்கப்பட்ட முத்திரைகளையும்; மற்றும்

(c) முத்திரைப்பொறியாலான அல்லது அரசானது அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக்கூடியவாறான அத்தகைய பொறி எதனாலுமான பதிப்பையும் உள்ளடக்கும்;

(14) ''இந்தியா'' என்றால் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் நீங்கலாக உள்ள இந்திய எல்லைப்பரப்பு எனப்பொருள்படும்;

(15) ''முறையாவணம்'' என்பது உரிமை அல்லது கடமைப்பொறுப்பு எதுவும் உருவாக்கப்படும், உரிமை மாற்றம் செய்யப்படும், மட்டுப்படுத்தப்படும், விரிவுபடுத்தப்படும், முடிவுறுத்தப்படும் அல்லது பதிவுருவில் செய்யப்படும் அல்லது அவ்வாறு செய்யக் கருதப்படும் உரிமை அல்லது கடமைப்பொறுப்புக்கான ஆவணம் ஒவ்வொன்றையும் உள்ளடக்கும்; ஆனால் மாற்றுமுறையாவணம், கடன் பத்திரம், கப்பல் சரக்கு ஏற்றுமதிச் சீட்டு, நாணய உறுதிக் கடிதம், காப்புறுதியாவணம், பங்குமாற்றாவணம், கடனீட்டு ஆவணம், பதிலி ஆவணம் மற்றும் பற்றுச் சீட்டு ஒன்றை உள்ளடக்காது;

(16) ''கொடையாவணம்'' என்றால் இருந்து வரும் ஒருசில அசையும் அல்லது அசையா சொத்தானது தன்னிச்சையாகவும் மறுபயனின்றியும் கொடையாளர் என அழைக்கப்படும் நபர் ஒருவரால், கொடைபெறுபவர் என அழைக்கப்படும் மற்றொரு நபருக்குச் செய்யப்பட்டு, கொடை பெறுபவர் அல்லது அவர் சார்பாக ஏற்கப்படும் வகையில் உரிமைமாற்றம் செய்யப்படும் முறையாவணம் எதுவும் எனப் பொருள்படும்;

(17) ''பாகப்பிரிவினைக்கான ஆவணம்'' என்றால் சொத்து எதனின் கூட்டு உரிமையாளர்கள் அத்தகைய சொத்தை பல்வேறு பங்காகப் பிரிப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு உடன்படுவதற்குச் செய்யப்படும் முறையாவணம் எதுவும் எனப்பொருள்படும்; மேலும் வருவாய் அதிகார அமைப்பு எதனாலும் அல்லது உரிமையியல் நீதிமன்றம் எதனாலும் பாகப்பிரிவினை ஒன்றை செயல்விளைவிற்குக் கொண்டுவருதற்காகப் பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை ஒன்றையும், இசைவுத் தீர்வாளரால் பாகப்பிரிவினை ஒன்றினைச் செய்யுமாறு பணித்து வழங்கப்பட்ட தீர்வம் ஒன்றையும் உள்ளடக்கும்;

(18) ''குத்தகை'' என்றால் அசையாச் சொத்து ஒன்றுக்கான குத்தகை எனப்பொருள்படும்; மேலும் -

(a) பட்டா ஒன்றையும்;

(b) அசையாச் சொத்தை பயிரிடுவதற்கு, கையுடைமை கொள்வதற்கு அல்லது வாடகை செலுத்துவதற்கு அல்லது கொடுப்பதற்கான, குத்தகையின் எதிர்பிரதி ஒன்றாக இல்லாத எழுத்துருவிலான குபிலியட் அல்லது பிற ஆவணத்தையும்;

(c) தீர்வைக் கட்டணங்கள் எதற்குமான விவரக்குறிப்புகள் அடங்கிய ஆவணம் எதனையும்;

(d) குத்தகை ஒன்றுக்கான விண்ணப்பம் ஒன்றின் மீது அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை தெரிவிக்கக் கருதும் எழுத்துருவிலான எதனையும் உள்ளடக்கும்;

(19) ''சந்தைப்படுத்தத்தக்க பிணையம்'' என்றால் இந்தியாவில் இருப்புச் சந்தை எதிலும் விற்பனை செய்வதற்குத் தகுந்தவாறான அத்தகைய விவரக்குறிப்புக்கான பிணையம் ஒன்று எனப்பொருள்படும்;

18 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(20) முறையாவணம் ஒன்றின் பொருட்பாடாக உள்ள சொத்து எதனின் தொடர்பாக, ''சந்தை மதிப்பு'' என்றால் ஆட்சியரின் அல்லது முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் அல்லது நேர்விற்கேற்ப உயர்நீதிமன்றத்தின் கருத்தில், அந்த முறையாவணத்தின் நிறைவேற்றத்தேதியில் வெளிச்சந்தையில் அது விற்பனை செய்யப்படுமாயின் அத்தகைய சொத்தானது அடைந்திருக்கும் அல்லது அடையும் மதிப்பாகக் கணக்கிடப்படவேண்டிய மதிப்பு எனப்பொருள்படும்:

வரம்புரை: ஆனால், மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு ஒன்று அல்லது அப்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் சட்டம் எதனாலும் அல்லது எதன்படியும் அமைத்துருவாக்கப்பட்ட பிற அதிகார அமைப்பு அல்லது மைய அரசு அல்லது மாநில அரசு எதனாலும் முழுமையாக சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்பாடு செய்யப்பட்ட கூட்டுருமம் ஒன்று ஆகியவற்றால் அல்லது ஆகியவற்றிற்காக அல்லது அவற்றின் சார்பாக நிறைவேற்றப்பட்ட முறையாவணம் ஒன்றைப்பொறுத்த அளவில் அந்தச் சொத்தின் சந்தை மதிப்பானது, அந்த முறையாவணத்தில் குறிப்பிடப்பட்டவாறான அத்தகைய உரிமை மாற்றளிப்பிற்கான மறுபயன்மதிப்பாக இருத்தல் வேண்டும்.

(21) ''அடைமான ஆவணம்'' என்பது கடன் ஒன்றின் வாயிலாக அல்லது இருந்து வரும் அல்லது எதிர்கால கடன் ஒன்றின் வாயிலாக அளிக்கப்பட்ட அல்லது அளிக்கப்படவேண்டிய பணத்திற்கு உறுதி அளிக்கும் நோக்கத்திற்காக அல்லது உறுதி அளிக்கப்பட்ட செயல் ஒன்றை நிறைவேற்றுவதற்காக, நபர் ஒருவர் குறித்துரைக்கப்பட்ட சொத்தின் மீது அல்லது அது தொடர்பாக மற்றொருவருக்கு அல்லது அவரின் சார்பாக உரிமை ஒன்றை மாற்றம் செய்யும் அல்லது உருவாக்கும் முறையாவணம் ஒவ்வொன்றையும் உள்ளடக்கும்;

(22) ''பகராள் செயலுரிமை ஆவணம்'' என்பது அதனை நிறைவேற்றும் நபருக்காகவும் அந்நபரின் பெயரிலும் செயல்படுவதற்கு குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு அதிகாரம் அளிக்கும் (அப்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் நீதிமன்றக் கட்டணங்கள் தொடர்பான சட்டத்தின்படி கட்டணம் ஒன்று விதிக்கத்தக்கதல்லாத) முறையாவணம் எதனையும் உள்ளடக்கும்;

மையச் சட்டம் XVI/1908

(23) ''பதிவு செய்யும் அலுவலர்'' என்றால் 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 6வது பிரிவின்படி நியமனம் செய்யப்பட்ட பதிவாளர் அல்லது சார்பதிவாளர் எனப்பொருள்படும்;

(24) ''இணைப்புப்பட்டியல்'' என்றால் இந்தச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்புப்பட்டியல் எனப்பொருள்படும்;

(25) ''ஏற்பாடு'' என்றால் அசையும் அல்லது அசையாச் சொத்து ஒன்றுக்கான உயில் வழி அல்லாத எழுத்துருவினாலான-

(a) திருமணத்தின் மறுபயனாக;

(b) ஏற்பாடு செய்பவரின் சொத்தை அவரது குடும்பத்தினரிடையே அல்லது அவர் வழங்க விரும்பும் நபர்களிடையே பகிர்ந்தளிக்கும் நோக்கத்திற்காக அல்லது அவரைச் சார்ந்துள்ள சில நபருக்காக வழங்கும் நோக்கத்திற்காக; அல்லது

(c) சமயம் சார்ந்த அல்லது அறம் சார்ந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்ட எதுவும் எனப்பொருள்படும்; மற்றும் அத்தகைய உரிமையளிப்பு ஒன்றைச் செய்வதற்கான எழுத்துருவிலான உடன்பாடு ஒன்றை அத்தகைய உரிமையளிப்பு எதுவும் எழுத்துருவில் செய்யப்பட்டிராதவிடத்து, பொறுப்பாட்சியின் விளம்புகை என்றவாறாகவோ அல்லது பிறவாறாகவோ அத்தகைய உரிமையளிப்பு எதனின் வரையுரைகள் ஆனவை பதிவுசெய்யப்பட்ட முறையாவணம் எதனையும் உள்ளடக்கும்;

(26) ''முத்திரைத்தாள்'' என்றால் அரசால் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட முகமை அல்லது நபர் எவராலும் செய்யப்பட்ட அடையாளக்குறி, முத்திரை அல்லது மேலெழுத்து எதுவும் எனப்பொருள்படும்; மற்றும் இந்தச் சட்டத்தின்படி தீர்வை விதிக்கும் நோக்கத்திற்காக, ஒட்டுவகை அல்லது பதிப்பு வகை முத்திரைத்தாள் ஒன்றையும் உள்ளடக்கும்;

(27) ''மாநிலம்'' என்றால் தமிழ்நாடு மாநிலம் எனப்பொருள்படும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 19

அத்தியாயம்-II.

முத்திரைத் தீர்வைகள்.

A. முறையாவணங்களுக்குத் தீர்வைச் செலுத்துவதற்கான கடமைப்பொறுப்பு.

தீர்வை

விதிக்கத்தக்க முறையாவணங் கள்.

3. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் இணைப்புப்பட்டியலில் அடங்கியுள்ள விலக்களிப்புகளுக்கும் உட்பட்டு, பின்வரும் முறையாவணங்களுக்கு அந்த இணைப்புப்பட்டியலில் அவற்றுக்கான உரிய முறையான தீர்வையாகக் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வைத் தொகையானது விதிக்கத்தக்கதாதல் வேண்டும், அதாவது,-

(a) நபர் எவராலும் முன்னதாக நிறைவேற்றப்பட்டிராததும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதியில் அல்லது அதன் பின்பு இம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டதும் அந்த இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதும் ஆகிய முறையாவணம் ஒவ்வொன்றும்;

(b) இம்மாநிலத்தில் அமைந்துள்ள சொத்து எதனின் தொடர்பாக அல்லது செய்யப்படும் அல்லது செய்யப்படவேண்டிய பொருட்பாடு அல்லது பொருள் எதனின் தொடர்பாக மற்றும் இம்மாநிலத்தில் பெறப்பட்ட சொத்து எதனின் தொடர்பாக, நபர் எவராலும் முன்னதாக நிறைவேற்றப்பட்டிராததும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்தேதியில் அல்லது அதன் பின்பு இம்மாநிலத்திற்கு வெளியே நிறைவேற்றப்பட்டுள்ளதும், அந்த இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளதும் ஆகிய முறையாவணம் ஒவ்வொன்றும்:

வரம்புரை: ஆனால் தீர்வையானது-

(1) மைய அரசு அல்லது மாநில அரசு எதனாலும் அல்லது அவற்றுக்காக அல்லது அவற்றின் சார்பாக நிறைவேற்றப்பட்ட முறையாவணம் எதனின் தொடர்பாகவும் அத்தகைய முறையாவணத்தைப் பொறுத்த அளவில், இந்த விலக்கின்றி, விதிக்கத்தக்க தீர்வையினைச் செலுத்துவதற்கு மைய அரசு அல்லது மாநில அரசு கடமைப் பொறுப்புடையதாக இருக்குமாயின், விதிக்கத்தக்கதாதல் கூடாது;

மையச் சட்டம் 44/1958.

(2) 1958-ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட கப்பல் அல்லது கலம் எதனின் அல்லது முழுமையாகவோ அல்லது அடைமானம் அல்லது பிறவாறாகவோ செய்யப்பட்ட விற்பனை, கப்பல் அல்லது கலம் எதனின் அல்லது எதிலுமான பகுதி, நலன், பங்கு அல்லது சொத்து எதுவும் விற்பனை உரிமை மாற்றம் அல்லது பிற உரிமையளிப்பு ஆகியவற்றுக்கான முறையாவணம் எதனின் தொடர்பாகவும் விதிக்கத்தக்கதாதல் கூடாது;

(3) மேம்பாட்டாளர் அல்லது மேம்பாட்டுத் தொகுதி ஆகியவற்றால் அல்லது அவற்றின் சார்பாக அல்லது அவற்றின் பெயரில் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் நோக்கங்களை செயல்படுத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முறையாவணம் எதனின் தொடர்பாகவும் விதிக்கத்தக்கதாதல் கூடாது.

மையச் சட்டம் 28/2005.

விளக்கம்.- இந்தக்கூறின் நோக்கத்திற்காக, ''மேம்பாட்டாளர்'' ''சிறப்புப் பொருளாதார மண்டலம்'' மற்றும் ''மேம்பாட்டுத் தொகுதி'' ஆகிய சொற்றொடர்கள் முறையே, 2005-ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டத்தின் 2-ஆம் பிரிவின் (g), (za), (zc) ஆகிய கூறுகளில் முறையே அவற்றுக்கு குறித்தளிக்கப்பட்ட பொருள்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு உரிமை மாற்ற நடைமுறையில் பயன்படுத்தப்- படும் பல முறை - யாவணங் கள்.

4. (1) உரிமை மாற்ற நடைமுறை எதனின் நேர்விலும் பல்வேறு முறையாவணங்கள் அந்த உரிமை மாற்ற நடைமுறையை நிறைவுசெய்வதற்காக பயன்படுத்தப்படுமிடத்து, முதன்மை முறையாவணமானது இணைப்புப்பட்டியலில் வகுத்துரைக்கப்பட்ட தீர்வை மட்டுமே விதிக்கத்தக்கதாதல் வேண்டும்; மற்றும் பிற முறையாவணங்கள் ஒவ்வொன்றும், அந்த இணைப்புப்பட்டியலில் அதற்கென தீர்வை எதுவும் வகுத்துரைக்கப்பட்டிருப்பின், அதற்குப் பதிலாக நூறு ரூபாய்க்கான தீர்வை ஒன்று விதிக்கத்தக்கதாதல்வேண்டும்.

20 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(2) (1)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக அவ்வாறு பயன்படுத்தப்பட்ட முறையாவணங்களில் முதன்மை முறையாவணமாகக் கொள்ளப்படவேண்டிய முறையாவணத்தை தரப்பினர்கள் தங்களுக்குள்ளேயே தீர்மானிக்கலாம். தரப்பினர்கள் தங்களுக்குள்ளேயே முதன்மை முறையாவணத்தைத் தீர்மானிப்பதற்குத் தவறினால், பதிவு செய்வதற்காக எந்தப் பதிவு செய்யும் அலுவலர் முன்பு அந்த முறையாவணம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அலுவலரானவர், இந்தப்பிரிவின் நோக்கங்களுக்காக முதன்மை முறையாவணத்தைத் தீர்மானிக்கலாம்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட முறையாவணத்தின் மீது விதிக்கத்தக்க தீர்வையானது, பயன்படுத்தப்பட்ட மேற்சொன்ன முறையாவணங்கள் எதனையும் பொறுத்த அளவில் விதிக்கத்தக்க அதிக அளவிலான தீர்வையாக இருத்தல் வேண்டும்.

பல்வேறுப்பட்ட

பொருட்பாடுகள் தொடர்பான முறையாவணங்கள்.

5. பல்வேறுபட்ட பொருட்பாடுகள் அடங்கப்பெற்ற அல்லது அவை தொடர்பான முறையாவணம் எதுவும் அத்தகைய பொருட்பாடுகளில் ஒன்று அடங்கப்பெற்ற அல்லது அதன் தொடர்பான தனித்தனியான முறையாவணங்கள் ஒவ்வொன்றுக்கும் இந்தச் சட்டத்தின்படி விதிக்கத்தக்கதாகும் தீர்வைகளின் மொத்தத் தீர்வைத் தொகையுடன் விதிக்கத்தக்கதாதல் வேண்டும்.

இணைப்புப் பட்டியலில் பல்வேறு விவரக் குறிப்புகளுக்குள் வரும் முறையாவணங் கள்.

6. 5-ஆம் பிரிவின் வகைமுறைகளுக்குட்பட்டு, இணைப்புப்பட்டியலில் உள்ள விவரக்குறிப்புகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவரக்குறிப்புகளுக்குள் வரும் வகையில் அவ்வாறு வகுக்கப்பட்ட முறையாவணம் ஒன்றானது, அவற்றுக்கு விதிக்கத்தக்க தீர்வைகள் வெவ்வேறாக இருக்குமிடத்து, அத்தகைய தீர்வைகளில் அதிக அளவு தீர்வையுடன் மட்டுமே விதிக்கத்தக்கதாதல் வேண்டும்:

வரம்புரை: ஆனால், இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் இணைப்புப்பட்டியலில் வகுத்துரைக்கப்பட்டத் தீர்வைக்கு மேற்படும் தீர்வையை, எதிர்பிரதி ஒன்றுக்காக அல்லது முறையாவணம் எதனின் நகலுக்காக மற்றும் சரியான தீர்வையானது செலுத்தப்பட்டிருக்கின்ற முறையாவணத்தைப் பொறுத்த அளவில் விதிக்கப்படுவதற்கு வகை செய்தல் ஆகாது.

கடன்களின் பேரில் வழங்கப்படும் பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள்.

7. (1) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அப்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் சட்டம் எதனின் வகைமுறைகளின்படி, பிணைமுறிகள் அல்லது கடனீட்டுப்பத்திரங்கள் அல்லாத பிற பிணையங்களை அளிப்பதன் மூலமாக கடன் ஒன்றை அளிக்கும் உள்ளாட்சி அதிகார அமைப்பு எதுவும் அத்தகைய கடனைப் பொறுத்த அளவில் அதனால் வழங்கப்பட்ட அந்தப் பிணைமுறிகளின் அல்லது பிற பிணையங்களின் மொத்தத்தொகையின் மீது நூற்றுக்கு ஒரு விழுக்காட்டளவு தீர்வை ஒன்று விதிக்கத்தக்கதாதல் வேண்டும்; மற்றும் அத்தகைய பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள் முத்திரைத்தாள் இடப்படத்தேவையில்லை; மற்றும் அவற்றைப் புதுப்பித்தல், ஒருங்கிணைத்தல், உட்பிரிவு செய்தல் அல்லது பிறவற்றின்பேரில் மேலுமான தீர்வை எதுவும் விதிக்கத்தக்கதாதல் கூடாது.

(2) (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளானவை கடனீட்டுப்பத்திரங்கள் அல்லாத பிற ஒருசில பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள் ஆகியவற்றை முத்திரைத் தீர்வையிலிருந்தும் மற்றும் அவற்றில் குறிப்பிடப்பட்ட நிலுவையிலுள்ள அனைத்துவகை கடன்களுக்கான கடனீட்டுப்பத்திரங்கள் அல்லாத பிற பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும் மேலுமான ஒருசில தீர்வை விதிக்கப்படுவதிலிருந்தும் விலக்களிப்பு செய்கிறது; மற்றும் அத்தகைய பிணைமுறிகள் அல்லது பிற பிணையங்கள் அனைத்தும் அவை முத்திரைத் தீர்வை இடப்பட்டிருப்பினும் இல்லாவிடினும் செல்லத்தக்கதாதல் வேண்டும்.

(3) இந்தப்பிரிவின்படி கோரப்படும் தீர்வையை செலுத்துவதில் வேண்டுமென்றே தவிர்க்கும் நேர்வில், உள்ளாட்சி அதிகார அமைப்பானது செலுத்தத்தக்கத்தீர்வைத் தொகையின்மீது நூற்றுக்குப் பத்து விழுக்காட்டிற்குச் சமமான தொகை ஒன்றை அரசுக்குத் தண்டமாக இழப்பதற்குப் பொறுப்புடையதாதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு தவிர்ப்பது தொடரும் முதல் மாதத்திற்குப் பின்பு ஒவ்வொரு மாதத்திற்கும் அதுபோன்றதொரு பணத்தண்டத்திற்குப் பொறுப்புடையதாதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 21

8. அரசானது அறிவிக்கையின் வாயிலாக,-

(a) அதன் நிருவாகத்தின் கீழேயுள்ள மாநிலம் முழுவதற்கும் அல்லது அதன் பகுதி எதற்கும் முன்தேதியிட்டோ அல்லது பின்தேதியிட்டோ முறையாவணங்கள் எதற்கும் அல்லது முறையாவணங்களின் குறித்த வகை எதற்கும் அல்லது அத்தகைய வகையைச் சார்ந்த முறையாவணங்கள் எதற்கும் அல்லது குறிப்பிட்ட வகையைச்

தீர்வைகளை, வட்டிகளை அல்லது கூட்டுத் தீர்வைகளை குறைப்பதற்கு, தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம்.

சார்ந்த நபர்கள் எவராலும் அல்லது எவரின் சார்பாகவும் அல்லது அத்தகைய வகையின் உறுப்பினர்கள் எவராலும் அல்லது எவரின் சார்பாகவும் நிறைவேற்றப்படும் முறையாவணம் எதற்கும் விதிக்கத்தக்க அல்லது நேர்விற்கேற்ப வசூலிக்கத்தக்க தீர்வைகளை அல்லது வட்டிகளை குறைக்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம்; மற்றும் 9. அப்போதைக்கு நடைமுறையில் உள்ள இந்தச் சட்டத்தில் அல்லது பிற சட்டம் எதிலும் எது எவ்வாறு காணப்படினும், வங்கிதெனின் கிளையை முழுமையான சொந்தமான துணைவங்கியாக மாற்றுதல் அல்லது பங்கை வைத்துள்ள வங்கியை, தீர்வைக்கு கடப்பாடில்லாத கட்டுப்படுத்தும் நிறுமத்திற்கு உரிமை மாற்றம் செய்தல்.

(a) இந்திய சேம வங்கியின் திட்டத்தின் அல்லது வழிகாட்டி நெறிமுறைகளின் வரையுரைகளின்படி வங்கி எதனின் கிளையை முழுமையான சொந்தமான துணைவங்கியாக மாற்றுதல் அல்லது பங்கை வைத்துள்ள வங்கியை தீர்வைக்கு கடப்பாடில்லாத கட்டுப்படுத்தும் நிறுமத்திற்கு உரிமை மாற்றம் செய்வதாவது இந்தச்சட்டத்தின்படி அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டத்தின்படி தீர்வைக்கு கடப்பாடு உடையது ஆகாது.

(b) வங்கிக் கிளையை முழுவதுமாக சொந்தமாக வைத்துவரும் பங்கை வைத்துவரும் வங்கியை வைத்துவரும் துணைவங்கியாக மாற்றுதல் நோக்கத்திற்காக அல்லது தொடர்பாக சொத்து, வணிகம், அசையும் அல்லது அசையா சொத்திருப்புகள், ஒப்பந்தம், உரிமை, கடப்பாடு மற்றும் கடமை எதையும் உரிமை மாற்றம் தொடர்பாக முறையாவணம் உள்ளடங்களாக முறையாவணம் எதுவும் அல்லது இதன்பொருட்டு இந்திய சேம வங்கியினால் வழங்கப்பட்டுள்ள திட்டதின் அல்லது வழிகாட்டு நெறிகளின் வரையுரைகளின்படி வங்கியின் கட்டுப்படுத்தும் நிறுமத்திற்கு வங்கியின் வைத்துவரும் பங்கை உரிமை மாற்றம் செய்வதற்கு இந்தச்சட்டத்தின்படி அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிறசட்டம் தெனின்படி தீர்வைக்கு கடப்பாடு உடையதாகாது.

விளக்கம்.-(i) இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக "வங்கி" எனும் சொற்றொடர் என்பது –

(மையச் சட்டம்10/1949) (அ) 1949 வங்கி ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தின் 5-ஆம் பிரிவின் (உ)கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறான "ஒரு வங்கி நிறுமம்";

கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான "தொடர்புடைய புதிய வங்கி";

அமைத்துருவாக்கப்பட்டுள்ள "இந்திய அரசு வங்கி";

பிரிவின் (K) கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான "துணை வங்கி";

நிறுவப்பட்டுள்ள "ஒரு மண்டல கிராமிய வங்கி";

(cci) கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ளவாறான "கூட்டுறவு வங்கி";

22 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(மையச் சட்டம்

2/1934) (ii) இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக "இந்திய சேம வங்கி" எனும் சொற்றொடறானது 1934 இந்திய சேம வங்கிச் சட்டத்தின் 3ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்டுள்ள இந்திய சேம வங்கி என்று பொருள்படும்.

B. முத்திரைத்தாள்களும் அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளும்.

தீர்வைகள் எவ்வாறு செலுத்தப்படுதல் வேண்டும் எனல்.

10. (1) இந்தச் சட்டத்தில் பிறவாறு வெளிப்படையாக வகைசெய்யப்பட்டாலன்றி, தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் எதற்குமான தீர்வைகள் அனைத்தும் செலுத்தப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய செலுத்தமானது-

(a) இதில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில்;

அல்லது

(b) அத்தகைய வகைமுறை எதுவும் அதற்குப் பொருந்தாதபோது, அரசானது விதிகளின் வாயிலாக பணிக்கக்கூடியவாறு

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விதிகள் பிறபொருட்பாடுகளிடையே,-

(a) முறையாவணத்தின் வகை ஒவ்வொன்றின் நேர்விலும்- பயன்படுத்தப்படக்கூடிய முத்திரைத்தாள்களின் விவரக்குறிப்புகள்;

(b) பதிப்பு வகை முத்திரைகளுடன் கூடிய முத்திரைத்தாள் இடப்பட்ட முறையாவணங்களின் நேர்வில்- பயன்படுத்தப்படக்கூடிய முத்திரைத்தாளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்தலாம்.

11. பின்வரும் முறையாவணங்கள் ஒட்டுவகை முத்திரை வில்லைகளுடன் முத்திரை இடப்படலாம், அதாவது:-

ஒட்டுவகை முத்திரை வில்லைகளின் பயன்பாடு

(a) ஒரு ரூபாய்க்கு மேற்படாமல் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணங்கள்;

(b) மாநில வழக்குரைஞர் மன்றத்தினால் பேணி வரப்படும் வழக்குரைஞர்கள் பட்டியலில் பதிவுபெற்றதற்கான சான்றிதழ்;

(c) சான்றுறுதி சார்ந்த செயல் முறையாவணங்கள்; மற்றும்

(d) அரசு அறிவிக்கையின் வாயிலாக குறித்துரைக்கக்கூடிய பிற முறையாவணம் எதுவும்.

ஒட்டு வகை முத்திரை

வில்லைகளை இரத்து செய்தல்.

12. (1) (a) நபர் எவராலும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ள தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் எதன் மீதும் ஒட்டுவகை முத்திரை வில்லை ஒட்டும் நபரெவரும், அத்தகைய முத்திரை வில்லையை ஒட்டும்போது அது மறுபடியும் பயன்படுத்தப்படமுடியாதவாறு அதனை இரத்து செய்தல் வேண்டும்; மற்றும்

(b) ஒட்டுவகை முத்திரை வில்லை ஒன்றைத் தாங்கியுள்ள காகிதம் எதன்மீதும் முறையாவணம் எதனையும் நிறைவேற்றும் நபரெவரும், அதன் நிறைவேற்றத்தின்போது, மேற்சொன்ன முறையில் ஏற்கெனவே அத்தகைய முத்திரை வில்லையை இரத்து செய்யப்படாதிருக்குமாயின், அது மறுபடியும் பயன்படுத்தப்படமுடியாதவாறு அதனை இரத்து செய்தல் வேண்டும்.

(2) மறுபடியும் பயன்படுத்தப்பட முடியாதவாறு அவ்வாறு இரத்து செய்யப்பட்டிராத ஒட்டுவகை முத்திரை வில்லை ஒன்றைத் தாங்கியுள்ள முறையாவணம் எதுவும், அத்தகைய முத்திரைத்தாளை பொறுத்தவரையில் அது முத்திரை இடப்படாததாகவே கொள்ளப்படுதல் வேண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவின்படி ஒட்டுவகை முத்திரை வில்லை ஒன்றை இரத்து செய்யக்கோரப்படும் நபரானவர், அந்த முத்திரை வில்லையின் மீது அல்லது அதன் குறுக்கே அவரது பெயரையோ அல்லது முதல் எழுத்தையோ அல்லது அவரது நிறுவனத்தின் பெயரையோ அல்லது முதல் எழுத்துக்களையோ அவ்வாறு எழுதப்படும் நாளுடன் சேர்த்து எழுதுவதன் வாயிலாக அல்லது பிற திறம்பட்ட முறை எதிலும் அதனை இரத்து செய்யலாம்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 23

13. காதிதத்தின் மீது எழுதப்பட்டுள்ள, பதிப்பு வகை முத்திரைத்தாள் ஒன்றுடன் முத்திரையிடப்பட்ட முறையாவணம் ஒவ்வொன்றும், அந்த முத்திரைத்தாள் அந்த முறையாவணத்தின் முகப்பின்மீது தோன்றும்படியாகவும் பிற முறையாவணம் எதற்கும் அதனை பயன்படுத்தப்படமுடியாதவாறான அல்லது பொருந்தாதவாறான அத்தகைய முறையிலும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

பதிப்பு வகை முத்திரைத் தாள்களுடன் முத்திரையிடப் பட்ட முறை - யாவணங்கள் எவ்வாறு எழுதப்படுதல் வேண்டும் எனல்.

ஒரே முத்திரைத் 14. ஏற்கெனவே தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் ஒன்று எழுதப்பட்டுள்ள முத்திரைத்தாள் காகிதத் துண்டு ஒன்றின் மீது, இரண்டாவதாக தீர்வை விதிக்கத்தக்க முறையாவணமானது எழுதப்படுதல் கூடாது:

தாளின் மீது ஒரு முறையாவணம் மட்டுமே இருத்தல் வேண்டும் எனல்.

வரம்புரை: ஆனால், இந்தப்பிரிவில் உள்ள எதுவும், உரியவாறு முத்திரைத்தாள் இடப்பட்ட மேலெழுத்து எதனையும் அல்லது உருவாக்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட உரிமை எதனையும் மாறுதல் செய்யும் நோக்கத்திற்காக அல்லது பணம் எதனின் செலுத்தத்தை அல்லது பொருள்கள் எதனையும் ஒப்படைவு செய்வதை அதன் மூலம் உறுதி செய்வதற்கான பற்றுச்சீட்டுக்கு ஒப்புகை அளிக்கும் நோக்கத்திற்காக முறையாவணம் எதன்மீதும் செய்யப்பட்டுள்ள தீர்வை விதிக்கத்தக்கதல்லாத மேலெழுத்து எதனையும் தடைசெய்தல் கூடாது.

13-ஆம் அல்லது 15. 13-ஆம் அல்லது 14-ஆம் பிரிவிற்கு முரணாக எழுதப்பட்ட முறையாவணம் ஒவ்வொன்றும் முத்திரைத் தீர்வை செலுத்தப்படாததாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

14-ஆம் பிரிவிற்கு முரணாக எழுதப் பட்ட முறையா- வணம் முத்திரைத் தீர்வை செலுத்தப் படாதது எனல்.

தீர்வையைக்

குறிப்பிடுதல்.

16. முறையாவணம் ஒன்றுக்கு விதிக்கத்தக்க தீர்வை அல்லது தீர்வையிலிருந்து அதற்கு அளிக்கப்படும் விலக்களிப்பானது, மற்றொரு முறையாவணம் தொடர்பாக உண்மையில் செலுத்தப்பட்ட தீர்வையினை எந்த வகையிலும் சார்ந்திருக்குமிடத்து, கடைசியாக குறிப்பிடப்பட்ட அத்தகைய தீர்வையின் செலுத்தமானது, அந்த நோக்கத்திற்காக எழுத்துருவிலான விண்ணப்பமானது ஆட்சியருக்கு செய்யப்பட்டிருக்குமெனில் மற்றும் அந்த முறையாவணங்கள் இரண்டும் சமர்ப்பிக்கப்படுவதன்பேரில் அல்லது பிந்தைய முறையாவணம் தொடர்பாக சரியான தீர்வை செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியரானவர் பிறவாறு மனநிறைவு கொள்வாராயின், அதற்கான காரணங்களைப் பதிவு செய்வதன்பேரில் அத்தகைய முந்தைய முறையாவணத்தின் மீது ஆட்சியரின் கைகளால் மேலெழுத்து செய்வதன் மூலம் அல்லது அரசானது விதியின் வாயிலாக வகுத்துரைக்கக்கூடியவாறான பிற முறை ஏதெனுமிருப்பின் அத்தகைய முறையில் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

C. முறையாவணங்களுக்கு முத்திரை இடவேண்டிய நேரம்.

இம்மாநிலத்தில் 17. நபரெவராலும் இம்மாநிலத்தில் நிறைவேற்றப்படும் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணங்கள் அனைத்தும், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அல்லது நிறைவேற்றப்படும் நேரத்தில் முத்திரை இடப்படுதல் வேண்டும்.

நிறைவேற்றப்- படும் முறை யாவணங்கள்

இந்தியாவிற்கு 18. (1) இந்தியாவிற்கு வெளியே நிறைவேற்றப்படும் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் ஒவ்வொன்றும், இம்மாநிலத்தில் அது முதலில் பெறப்பட்டதற்குப்பின்பு மூன்று திங்களுக்குள் முத்திரை இடப்படலாம்.

வெளியே நிறை வேற்றப்படும் முறையாவணங்கள்.

(2) தனி நபர் ஒருவரால் அத்தகைய முறையாவணம் எதற்கும் அதற்கென வகுத்துரைக்கப்பட்ட முத்திரை விவரக்குறிப்புக்குச் சுட்டப்பட்ட உரிய முத்திரை இடப்பட முடியாதவிடத்து, மேற்சொன்ன மூன்று திங்கள் காலஅளவுக்குள் அது ஆட்சியரிடம் எடுத்துச்செல்லப்படுதல் வேண்டும்; அரசானது விதிகளின் வாயிலாக வகுத்துரைக்கக்கூடிய அத்தகைய முறையில் அவர், அந்த நபர் அவ்வாறு எடுத்துச்செல்லும் அத்தகைய முறையாவணத்திற்குத் தேவைப்படும் அத்தகைய மதிப்புடைய முத்திரைத் தீர்வை ஒன்றை அந்த முறையாவணத்திற்காகச் செலுத்துதல் வேண்டும்.

24 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

19. இம்மாநிலத்தில் அமைந்துள்ள மற்றும் 1997-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29-ஆம் நாளுக்கு முன்னர் சொத்து எதனின் தொடர்பாக இம்மாநிலத்திற்கு வெளியே நிறைவேற்றப்பட்ட, 3-ஆம் பிரிவின்படி தீர்வை விதிக்கத்தக்கதாக இருக்கும் முறையாவணம் எதுவும் இம்மாநிலத்தில் பெறப்படுமிடத்து,-

உயர்த்தப்படும் தீர்வைக்குப் பொறுப்பாகும் ஒருசில முறையா வணங் களின் பேரில் தீர்வை செலுத்தப் படுதல்.

(a) 3-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அத்தகைய முறையாவணத்தின்பேரில் விதிக்கத்தக்க தீர்வைத் தொகையானது, இணைப்புப் பட்டியலின்படி அதற்கு விதிக்கத்தக்கதாக இருக்கும் தொகையிலிருந்து மாநிலத்திற்கு வெளியே அதன்பேரில் ஏற்கெனவே தீர்வைத்தொகை எதுவும் செலுத்தப்பட்டிருப்பின் அந்தத் தீர்வைத்தொகையைக் கழித்த பின்பு உள்ள தொகையாக இருத்தல் வேண்டும்;

(b) முதல் தடைவையாக இம்மாநிலத்தில் பெறப்பட்ட முறையாவணம் ஒன்றாக அத்தகைய முறையாவணம் இருப்பினும், அதில் ஏற்கெனவே ஒட்டப்பட்டுள்ள முத்திரைத்தாள்களுக்குக் கூடுதலாக அது அதிகமான தீர்வை விதிக்கத் தக்கதாக இருக்கக்கூடிய அந்த நேரத்தில், (a) எனும் கூறின்படி அதன்பேரில் விதிக்கத்தக்க தீர்வை ஏதுமிருப்பின், அத்தீர்வையின் செலுத்தத்திற்காகத் தேவைப்படும் முத்திரைத் தீர்வையுடன் அதே முறையிலும் அதே நேரத்திலும் மற்றும் அதே நபர்களாலும் முத்திரையிடப்படுதல் வேண்டும்; மற்றும்

(c) 35-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையின் (b) எனும் கூறில் அடங்கியுள்ள வகைமுறைகள் அத்தகைய முறையாவணத்திற்குப் பொருந்துதல் வேண்டும்.

அசல்

மையச் சட்டம் XVI/1908.

20 (1) (3)-ஆம் உட்பிரிவின்படி முறையாவணம் எதுவும் தீர்வை விதிக்கத்தக்கதாக இருக்குமிடத்து, அத்தகைய முறையாவணத்தின் நகலானது 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின்படி இம்மாநிலத்தில் பெறப்படும்போது, அதற்கான அசல் முறையாவணத்தின் பேரில் விதிக்கத்தக்கதாக இருக்கும் தீர்வையின் வேறுபாட்டுடன் விதிக்கத்தக்கதாதல் வேண்டும்.

முறையாவணத்தின் பேரில் தீர்வை செலுத்தப்படாத போது முறையாவணத்தின் நகலின்பேரில் தீர்வை செலுத்தப் படுதல்.

(2) தீர்வையின்வேறுபாடானது,-

(a) இம்மாநிலத்தில் அமைந்துள்ள சொத்தின் அளவு; மற்றும்

(b) சொத்தின் அத்தகைய அளவின் விகிதாச்சார மறுபயன் அல்லது மதிப்பு அல்லது சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

(3) அசல் முறையாவணத்தின்பேரில் தீர்வை செலுத்துவதற்குப் பொறுப்புடைய தரப்பினர், பதிவு செய்யும் அலுவலரிடமிருந்து அறிவிப்பைப் பெறுவதன்பேரில், அத்தகைய பதிவு செய்யும் அலுவலரால் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்வையின் வேறுபாட்டினைச் செலுத்துதல் வேண்டும்;

(4) முறையாவணம் எதனின் நகலில் இருந்தும் தீர்வை செலுத்தியதில் குறைபாடு காணப்படுமிடத்து, ஆட்சியரானவர் தாமாகவோ அல்லது பிறவாறாகவோ தன்னால் குறித்துரைக்கப்படும் காலஅளவுக்குள் அதில் போதுமான அளவிற்கு தீர்வை செலுத்தப்பட்டிருப்பது குறித்துத் தாம் மனநிறைவு கொள்ளும் நோக்கத்திற்காக, அவர்தம் முன்னர் அந்த அசல் முறையாவணத்தை முன்னிலைப்படுத்தக்கோரலாம்; அவ்வாறு ஆட்சியரின் முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட முறையாவணமானது அவரது அலுவற்பணிகளை நிறைவேற்றுவதில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதாக அல்லது அவர் முன்பு வந்துள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் 29-ஆம் பிரிவின் வகைமுறைகள் தேவையான மாறுதல்களுக்குட்பட்டு பொருந்துதல் வேண்டும்:

மையச் சட்டம் XVI/1908.

வரம்புரை: ஆனால், 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின்படி, இம்மாநிலத்தில் அத்தகைய முறையாவணத்தின் நகலானது பெறப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகள் கொண்டதொரு காலஅளவுக்குப் பின்னர், இந்த உட்பிரிவின்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் கூடாது.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 25

(5) அசல் முறையாவணமானது ஆட்சியரால் குறித்துரைக்கப்பட்ட கால அளவுக்குள் முன்னிலைப்படுத்தப்படாத நேர்வில் அந்த முறையாவணத்தின் நகலின்பேரில் பற்றாக்குறையாகவுள்ள தீர்வை செலுத்தம் எதுவுமிருப்பின், 44-ஆம் பிரிவின்படி பணத்தண்டத்துடன் சேர்த்து வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய காலஅளவுக்குள் அவர் அதனைச் செலுத்துவதற்குக் கோரலாம்.

D. தீர்வைக்கான மதிப்பீடுகள்

அயல்நாட்டு

நாணயங்களில் வெளிப்படுத்தப் படும் தொகையின் மாற்றம்.

21 (1) இந்திய நாணயமல்லாத பிற பண மதிப்பில் வெளிப்படுத்தப்படும் பணம் எதனின் தொடர்பாக முறையாவணம் ஒன்று விலை மதிப்பீட்டின்படி தீர்வை விதிக்கத்தக்கதாகுமிடத்து, அத்தகைய தீர்வையானது அந்த முறையாவணத்தின் தேதிக்கான நாளில் தற்போதைய பண மாற்று வீதத்திற்கு இணங்கிய வகையில் இந்திய நாணயத்தில் அத்தகைய பணத்திற்கான மதிப்பின்பேரில் கணக்கிடப்படுதல் வேண்டும்.

மையச் சட்டம் II/1899. (2) 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் 20-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி மைய அரசால் வகுத்துரைக்கப்படும் பணமாற்று வீதமானது, (1)-ஆம் உட்பிரிவின்படி தீர்வையைக் கணக்கிடும் நோக்கத்திற்காக அயல்நாட்டு நாணயம் எதனையும் மாற்றுவதற்கான தற்போதைய பணமாற்று வீதமாகக்கொள்ளப்படுதல் வேண்டும்.

இருப்பும் சந்தைப் படுத்தத்தக்க பிணையங்களும் எவ்வாறு மதிப்பிடப்படுதல் வேண்டும் எனல்.

22. இருப்பு எதனின் அல்லது கடனீட்டு ஆவணங்கள் அல்லாத பிற சந்தைப்படுத்தத்தக்க பிணையம் எதனின் தொடர்பாக முறையாவணம் ஒன்றானது விலை மதிப்பீட்டின்படி தீர்வை விதிக்கத்தக்கதாகுமிடத்து, அத்தகைய தீர்வையானது அத்தகைய இருப்பின் அல்லது பிணையத்தின் மதிப்பின்பேரில் சராசரி விலைக்கு அல்லது அந்த முறையாவணத்தின் தேதிக்கான நாளில் அதன் மதிப்பிற்கு இணங்கிய வகையில் கணக்கிடப்படுதல் வேண்டும்.

பணமாற்று

வீதத்திற்கான விளக்கவுரையின் அல்லது சராசரி விலையின்

விளைவு.

23. முறையாவணம் ஒன்று தற்போதைய பணமாற்று வீதத்தின் விவரவுரை ஒன்றை அல்லது நேர்விற்கேற்ப கோரப்படக்கூடிய சராசரி விலையை உள்ளடக்கியும் அத்தகைய விவரவுரைக்கு இணங்கிய வகையிலும் முத்திரைத்தாள் இடப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய விவரவுரையின் பொருட்பாட்டினைப் பொறுத்த வரையில் மாறாக எதுவும் நிரூபிக்கப்பட்டாலன்றி அது உரிய முத்திரை இடப்பட்டதாக அனுமானிக்கப்படுதல் வேண்டும்.

வட்டியை ஒதுக்கீடு

செய்யும் முறையா- வணங்கள்.

24. முறையாவணம் ஒன்றின் வரையுரைகளின்படி வட்டியானது வெளிப்படையாக செலுத்தத்தக்கதாக செய்யப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய முறையாவணமானது அதில் வட்டி எதுவும் குறிப்பிடப்படாதபோது அதற்கு விதிக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய தீர்வையை விட அதிக அளவிலான தீர்வை விதிக்கத்தக்கதாக இருத்தல் கூடாது.

உடன்பாடுகளாக 25. (1) முறையாவணம் ஒன்றானது,-

தீர்வை விதிக்கப் பட வேண்டிய சந்தைப்படுத்தத் தக்க பிணையங் களின் அடை மானங்கள் தொடர்பான ஒருசில முறை- யாவணங்கள்.

(a) கடன் என்பதன் வாயிலாக முன்பணமாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படவேண்டிய பணத்திற்காக, அல்லது இருந்துவரும் அல்லது எதிர்கால கடன் ஒன்றுக்காக பிணையம் என்றபடியாக சந்தைப்படுத்தத்தக்க பிணையம் எதனையும் வைப்பீடு செய்யும் தருணத்தில் அளிக்கப்படுமிடத்து; அல்லது

(b) பிணையம் ஒன்றாகக் கருதப்படும் சந்தைப்படுத்தத்தக்க பிணையம் எதனின் உரியவாறு முத்திரையிடப்பட்ட உரிமை மாற்றம் ஒன்றை மீட்கத்தக்கதாக அல்லது தகுதியுடையதாகச் செய்யுமிடத்து, இணைப்புப்பட்டியலின் 5 (5) எனும் பிரிவின்படி தீர்வை விதிக்கத்தக்கதொரு உடன்பாடாகவோ அல்லது உடன்பாடு ஒன்றின் குறிப்பாணையாகவோ அது இருந்தவாறு தீர்வை விதிக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

26 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(2) அத்தகைய முறையாவணம் எதனின் விடுதலை அல்லது விடுவிப்பு ஒன்றுக்கு, அது போன்றதொரு தீர்வை மட்டுமே விதிக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

அடைமானம்

26. அடைமானம் ஒன்றின் பொருட்பாடாக உள்ள சொத்து அடைமானம் பெறுபவருக்கு மாறுதல் செய்யப்படுமிடத்து, அவர் அந்த அடைமானத்தின் தொடர்பாக ஏற்கெனவே செலுத்தப்பட்ட தீர்வைத் தொகையை அதன் உரிமை மாற்றத்தின்பேரில் செலுத்தத்தக்கத் தொகையிலிருந்து கழித்துக்கொள்வதற்கு உரிமைத் தகுதியுடையவராதல் வேண்டும்.

தொடர்பாக சொத்தின் உரிமை மாற்றமானது எவ்வாறு கட்டணம் விதிக்கப்படு- கின்றது எனல்.

உதாரணம்.

A என்பவர் வீடு ஒன்றை B என்பவருக்கு ரூபாய் 50,000/-த்திற்கு அடைமானம் செய்கிறார். அதன் பின்னர் A அந்த வீட்டை B-க்கு விற்பனை செய்கிறார். விற்பனையின்போது அந்த வீட்டின் சந்தை மதிப்பு ரூபாய் 1,00,000/- ஆகும். விற்பனைக்கான ரூபாய் 1,00,000-தின் பேரிலான முத்திரைத் தீர்வையானது, ஏற்கெனவே அடைமானத்திற்காக செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வைத் தொகையைக் கழித்தபின்னரே செலுத்தத்தக்கதாகும்.

ஆண்டுத் தொகை

.

முதலானவற்றின் நேர்வில் மதிப்பீடு செய்தல்

27. முறையாவணம் ஒன்று ஆண்டுத்தொகை ஒன்றை அல்லது காலமுறைப்படி செலுத்தத்தக்க பிற தொகையைச் செலுத்துவதை உறுதி செய்வதற்காக நிறைவேற்றப்படுமிடத்து, அத்தகைய முறையாவணத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்ட தொகையானது இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக,-

(a) செலுத்தப்படவேண்டிய மொத்தத்தொகையானது முன்னரே நிர்ணயம் செய்யப்பட இயலும் வகையில் நிச்சயிக்கப்பட்ட கால அளவு ஒன்றுக்குத் தொகையானது செலுத்தத்தக்கதாகுமிடத்து அத்தகைய மொத்தத்தொகையாக;

(b) அத்தொகையானது தொடர்ச்சியான அல்லது அத்தகைய முறையாவணத்தின் தேதியில் இருந்து வரும் நபரெவரின் வாழ்நாளுக்குள் முடிவுறாத நிச்சயிக்கப்படாத காலஅளவுக்கு செலுத்தத்தக்கதாகுமிடத்து, அத்தகைய முறையாவணத்தின் வரையுரைகளுக்கு இணங்கிய வகையில் முதல் செலுத்தமானது கொடுபடவேண்டிய தேதியிலிருந்து கணக்கிடப்படும் இருபது ஆண்டுகள் கால அளவிற்கு செலுத்தத்தக்கதாக இருக்கும் அல்லது செலுத்தத்தக்கதாக இருக்கக்கூடிய அந்த மொத்தத்தொகையாக; மற்றும்

(c) அத்தொகையானது அத்தகைய முறையாவணத்தின் தேதியில் இருந்து வரும் நபரெவரின் வாழ் நாளுக்குள் முடிவுறத்தக்க நிச்சயிக்கப்படாத காலம் ஒன்றுக்குச் செலுத்தத்தக்கதாக இருக்குமிடத்து - முதல் செலுத்தமானது கொடுபடவேண்டிய தேதியிலிருந்து கணக்கிடப்படும் மேற்சொன்னவாறான பன்னிரண்டு ஆண்டுகள் காலஅளவிற்குள் செலுத்தத்தக்கதாக இருக்கும் அல்லது செலுத்தத்தக்கதாக இருக்கக்கூடிய அந்த பெருமளவுதொகையாகக் கொள்ளப்படுதல்வேண்டும்.

பொருட்பாட்டின் மதிப்பானது நிர்ணயம் செய்யப்பட முடியாதவிடத்து கோரப்படும் முத்திரைத் தீர்வை.

28. விலை மதிப்பீட்டின்படி தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் எதனின் பொருட்பாட்டிற்கான தொகை அல்லது மதிப்பானது அதன் நிறைவேற்ற நாளில் அல்லது முதல் நிறைவேற்றத்தின்போது அளவிட முடியாத அல்லது அளவிட முடிந்திராதவிடத்து, அத்தகைய நிறைவேற்றத்தேதியில் அதே விவரக்குறிப்புகளுடன் கூடிய முறையாவணம் ஒன்றில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாளானது போதுமானதாக உள்ளது என்பதாக குறிப்பிடப்பட்டிருக்குமெனில் அந்த மதிப்பிற்கும் அதிகமான தொகை எதுவும் கூடுதலாக அத்தகைய முறையாவணத்தின் கீழ் கோரத்தக்கதாக இருத்தல் கூடாது:

வரம்புரை: ஆனால், பங்கு வீத உரிமைத்தொகை அல்லது விளைபொருளின் பங்கானது வாடகையாக அல்லது வாடகையின் பகுதியாக பெறப்படும் சுரங்கமொன்றின் குத்தகை என்கின்ற நேர்வில்,-தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 27 (a) ஆட்சியரானவர் வழக்கின் சூழ்நிலைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு குத்தகையின்படி பங்குவீத உரிமைத் தொகை மூலமாக அல்லது பங்கு மூலமாக அரசுக்கு செலுத்தப்படவேண்டியதாக கணக்கிடப்பட்டிருக்கக்கூடியது போன்றவாறான அத்தகைய தொகை அல்லது மதிப்பில் குத்தகையானது அரசால் அல்லது அரசின் சார்பாக வழங்கப்பட்டிருக்கும்போது; அல்லது

(b) குத்தகையானது பிற நபர் எவராலும் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கு வழங்கப்பட்டிருக்கும் போது முத்திரைத் தீர்வை நோக்கத்திற்காக அத்தகைய பங்குவீத உரிமைத்தொகை அல்லது அத்தகைய பங்கின் மதிப்பைக் கணக்கிட்டுக்கொள்வதற்கு அது போதுமானதாக இருத்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய பங்குவீத உரிமைத் தொகை அல்லது பங்கு எதுவாக இருப்பினும் அதன் மொத்தத்தொகையானது அத்தகைய குத்தகையின்படி கோரத்தக்கதாக இருத்தல் வேண்டும்:

இரண்டாம் வரம்புரை: மேலும், 34-ஆம் அல்லது 45-ஆம் பிரிவின்படி முறையாவணம் ஒன்றின் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமிடத்து, ஆட்சியரால் சான்றிதழ் அளிக்கப்பட்ட தொகையானது, நிறைவேற்றத்தேதியில் உண்மையில் பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாள் என்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

29. முறையாவணம் எதுவும் தீர்வை விதிக்கத்தக்கதாகும் தன்மை அல்லது அதற்கு விதிக்கத்தக்க தீர்வைத் தொகையைப் பாதிக்கும் மறுபயன் ஏதுமிருப்பின் அதுவும் மற்றும் சந்தை மதிப்பு மற்றும் பிற பொருண்மைகள், சூழ்நிலைகள் ஆகிய அனைத்தும் அதில் முழுமையாகவும் உண்மையாகவும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

முறையாவணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய தீர்வையைப் பாதிக்கும் பொருண்மைகள்.

குறைவாக

மதிப்பிடப்பட்ட உரிமை மாற்றளிப்பின் முறையா வணங்கள்

முதலானவை

எவ்வாறு

கையாளப்படுதல் வேண்டும் எனல்.

30. (1) பதிவு அலுவலரானவர், சொத்து தொடர்பான முறையாவணம் எதனையும் பதிவு செய்யும்போது முறையாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பானது அந்த முறையாவணத்தில் உண்மையாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என நம்புவதற்குக் காரணம் கொண்டிருப்பாரெனில், அவர் அதற்கிணங்கிய வகையில் தீர்வையைச் செலுத்துமாறு பொறுப்புடைய நபருக்குத் தெரிவித்தல் வேண்டும்; மற்றும் மேற்சொன்ன நபர் அதனை சரி செய்வதற்குத் தவறுவாரெனில், அத்தகைய முறையாவணத்தை பதிவு செய்ததற்குப் பின்பு, அவர் அத்தகைய சொத்தின் சந்தை மதிப்பையும் மற்றும் அதன்பேரில் செலுத்தத்தக்க முறையான தீர்வையையும் நிர்ணயம் செய்வதற்காக அந்தப் பொருட்பாட்டினை ஆட்சியருக்குச் சுட்டி அனுப்புதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி சுட்டுகை ஒன்றைப் பெற்றதன் பேரில் ஆட்சியரானவர், தரப்பினருக்கு அவர்தம் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கான நியாயமானதொரு வாய்ப்பை வழங்கிய பின்னரும், வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் விசாரணையை மேற்கொண்டதற்குப் பின்னரும், மேற்சொன்ன முறையாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பையும் மேற்சொன்னவாறு அதற்கான தீர்வையையும் நிர்ணயம் செய்தல் வேண்டும். தீர்வைத் தொகையில் வேறுபாடு ஏதுமிருப்பின் அது தீர்வையைச் செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபரால் செலுத்தப்படுதல் வேண்டும்.

(3) ஆட்சியரானவர் தாமாகவோ அல்லது பிறவாறாகவோ, (1)-ஆம் உட்பிரிவின்படி அவருக்கு ஏற்கெனவே சுட்டியனுப்பப்படாத சொத்து தொடர்பான முறையாவணம் எதனையும் பதிவு செய்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கால அளவுக்குள், அத்தகைய முறையாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பு குறித்து மற்றும் அதன்பேரில் செலுத்தத்தக்க தீர்வையானது சரியாக செலுத்தப்பட்டுள்ளது குறித்து அவருக்கு மனநிறைவு அளிக்கும் நோக்கத்திற்காக அந்த முறையாவணத்தைக் கோரிப் பெறலாம் மற்றும் விசாரணை செய்யலாம்; அத்தகைய விசாரணைக்குப் பின்னர் அந்த முறையாவணத்தில் சொத்தின் உண்மையான சந்தை மதிப்பானது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என தான் நம்புவதற்கு காரணம் இருக்குமாயின், அவர் (2)-ஆம் உட்பிரிவில் வகை செய்யப்பட்ட நடைமுறைக்கு இணங்கிய வகையில் அத்தகைய சொத்தின் சந்தை மதிப்பையும் மேற்சொன்னவாறு அதற்கான தீர்வையையும் நிர்ணயம் செய்யலாம். தீர்வைத் தொகையில் வேறுபாடு ஏதுமிருப்பின் அது தீர்வையைச் செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபரால் செலுத்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

28 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(4) (2)-ஆம் உட்பிரிவின் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி தீர்வைத் தொகையில் உள்ள வேறுபாட்டை செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபர் ஒவ்வொருவரும், அத்தகைய தீர்வையை வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலஅளவுக்குள் செலுத்துதல் வேண்டும். நிலுவையிலுள்ள அத்தகைய தீர்வைத் தொகையின் அத்தகைய செலுத்தத்தின் தவறுகையானது, அந்தத் தவறுகையின் தேதியில் அத்தகைய முறையாவணத்தின்பேரில் உள்ள சொத்தைப் பாதிக்கும் ஒரு பற்றாக ஆதல் வேண்டும். தீர்வைத் தொகையின் செலுத்தத்திற்காக குறித்துரைக்கப்பட்ட தேதிக்குப் பின்னரும் செலுத்தப்படாமல் இருந்து வரும் தொகை எதனின்பேரிலும், தீர்வையைச் செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபரானவர் கொடுபடவேண்டிய தொகைக்கும் கூடுதலாக, தவறுகையின் மொத்த காலஅளவுக்கான அத்தகைய தொகையின்பேரில், மாதம் ஒன்றுக்கு நூற்றுக்கு ஒரு விழுக்காடு அளவிலான வட்டியையும் செலுத்துதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

II/1864.

(5) இந்தப்பிரிவின்படி ஆட்சியரின் அலுவற்பணிகளை நிறைவேற்றுவதற்கு அலுவலர் எவரும் குறிப்பாக நியமனம் செய்யப்பட்டிருப்பாராயின், 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலிப்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அத்தகைய அலுவலர் (2)-ஆம் உட்பிரிவின் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி செலுத்தத்தக்க தீர்வைத் தொகையை வசூலிக்கும் நோக்கத்திற்காக அந்தச் சட்டத்தின்படி ஆட்சியர் ஒருவரின் அதிகாரங்களைக் கொண்டவராக இருப்பார்.

(6) (2)-ஆம் உட்பிரிவின் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படியான ஆட்சியரின் ஆணை ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் எவரும், இதற்கென வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய அதிகார அமைப்பிற்கு மேல் முறையீடு செய்யலாம். அத்தகைய மேல் முறையீடுகள் அனைத்தும் அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு திங்களுக்குள் அளிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் கேட்கப்படுதலும் தீர்வு செய்யப்படுதலும் வேண்டும்:

வரம்புரை: ஆனால், பாதிப்படைந்த நபரானவர் (2)-ஆம் உட்பிரிவின்படி அல்லது நேர்விற்கேற்ப (3)-ஆம் உட்பிரிவின்படி நிர்ணயம் செய்யப்பட்ட தீர்வைத் தொகைக்கும் செலுத்தத்தக்க தீர்வைத் தொகைக்கும் உள்ள வேறுபாட்டில் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காடு தொகையை வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் வைப்பீடு செய்தாலன்றி மேல்முறையீடு எதுவும் அளிக்கப்படுதல் ஆகாது.

(7) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியானவர் தாமாகவோ அல்லது பிறவாறாகவோ, (2)-ஆம் உட்பிரிவின் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றைக் கோரிப் பெறலாம் மற்றும் விசாரணை செய்யலாம்; மற்றும் அவரது கருத்தில் அத்தகைய ஆணையானது வருவாய் நலன்களுக்கு ஊறுவிளைவிப்பதாக இருக்குமாயின், அவர் அத்தகைய விசாரணையைச் செய்யலாம் அல்லது அத்தகைய விசாரணை செய்யப்படுவதற்கு ஆவன செய்யலாம்; மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குட்பட்டு தான் பொருத்தமெனக் கருதுகிறவாறு அதன்பேரில் அத்தகைய ஆணையை மாற்றியமைப்பதற்கு, திருத்தியமைப்பதற்கு அல்லது புறந்தள்ளுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கலாம்.

(8) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியானவர் (2)-ஆம் உட்பிரிவின் அல்லது (3)-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதற்கும் எதிரான நடவடிக்கைகளை,-

(a) அந்த ஆணைக்கு எதிரான மேல் முறையீட்டிற்கான கால அளவு முடிவடைந்திருக்கவில்லையெனில்; அல்லது

(b) அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்குப் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால அளவு முடிவடைந்துள்ளது எனில் தொடங்குதல் கூடாது.

(9) நபர் ஒருவரை எதிரிடையாக பாதிக்கும் (6)-ஆம் உட்பிரிவின்படியான ஆணை எதுவும், அந்த நபருக்கு அவர்தம் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கான நியாயமானதொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலன்றி பிறப்பிக்கப்படுதல் கூடாது.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 29

(10) (7)-ஆம் உட்பிரிவின் (b) எனும் கூறுக்குச் சுட்டப்பட்ட காலஅளவை கணக்கிடுகையில், நீதிமன்றம் ஒன்றின் ஆணையின்படி முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் முன்பு அந்த நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டு இருந்துவந்த காலஅளவானது கழித்துக்கொள்ளப்படுதல் வேண்டும்.

(11) (5)-ஆம் உட்பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்ட அதிகார அமைப்பின் அல்லது (6)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் ஆணை ஒன்றினால் பாதிக்கப்பட்ட நபரெவரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு திங்களுக்குள் மற்றும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் உயர்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.

(12) மேல்முறையீட்டின்பேரில் அல்லது சீராய்வின்பேரில் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றின் விளைவாக செலுத்தப்பட்ட தீர்வையானது அதிகம் என்பதாக காணப்படுமிடத்து, அதிகமாக செலுத்தப்பட்ட தீர்வையானது திருப்பி அளிக்கப்படுதல் வேண்டும்.

மதிப்பீட்டுக்குழுவை

அமைத்துரு- வாக்குதல்.

31. (1) மாநில அரசானது அறிவிக்கையின் வாயிலாக பதிவுத் துறைத் தலைவரின் தலைமையின்கீழ் மற்றும் 29-ஆம் பிரிவின் நோக்கத்திற்காக இம்மாநிலத்தில் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் அத்தகைய இடைவெளிகளில் பரப்பிடம் எதிலுமுள்ள சொத்துக்களின் சந்தை மதிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மதிப்பிடுவதற்காக, வெளியீடு செய்வதற்காக மற்றும் சீராய்வு செய்வதற்காகக் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய பிற உறுப்பினரின் தலைமையின் கீழ் மதிப்பீட்டுக்குழு ஒன்றை அமைத்துருவாக்குதல் வேண்டும்.

(2) மதிப்பீட்டுக்குழுவானது, இம்மாநிலத்தில் சந்தை மதிப்பிற்கான வழி காட்டு நெறிமுறைகளுக்கான கொள்கையை உருவாக்குதல், அதன் அணுகுமுறை, நிர்வாகம் ஆகியவற்றிற்கான அறுதியான அதிகார அமைப்பாகும்; மற்றும் மேற்சொன்ன நோக்கத்திற்காக வகுத்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய உறுப்பினர்கள் அடங்கிய மதிப்பீட்டுத் துணைக் குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும் சந்தை மதிப்பிற்கான வழி காட்டு நெறிமுறைகளை மதிப்பிடுவதற்காகவும் சீராய்வு செய்வதற்காகவும் அமைத்துருவாக்கலாம்.

(3) அவ்வாறு அமைத்துருவாக்கப்பட்ட துணைக்குழுவானது மதிப்பீட்டுக்குழுவின் கீழ் செயலாற்றுதல் வேண்டும்; மற்றும் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும் மற்றும் தேவையெனப்படும் போதெல்லாம் மீண்டும் அமைத்துருவாக்கப்படுவதற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.

முறையாவணத்தின் பிழைகளை சரி செய்வதற்காக விதிக்கத்தக்க முத்திரைத்தாள் தீர்வை.

32. இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், முறையாவணம் ஒன்றானது முந்தைய முறையாவணம் எதிலும் குறிப்பிடப்பட்டவாறான சொத்தின் விவரக்குறிப்பில் உள்ள பிழை எதனையும் சரி செய்வதற்குக் கருதுமிடத்து, அத்தகைய முறையாவணத்தை சரி செய்வதற்காகச் செலுத்தத்தக்க தீர்வைத் தொகையானது, அந்த முந்தைய ஆவணம் முன்னிலைப்படுத்தப்பட்ட தேதியில் இணைப்புப்பட்டியலின்படி அத்தகைய முந்தைய ஆவணம் தொடர்பாக ஏற்கெனவே அதன்பேரில் விதிக்கத்தக்க தொகை எதுவும் செலுத்தப்பட்டிருப்பின், அத்தொகையினைக் கழித்து வரும் தொகையாக இருத்தல் வேண்டும்;

ஒருசில உரிமை

மாற்றா- வணங்களின் நேர்வில் தீர்வை குறித்த பணிப்புரை.

33. துணைக் கொள்முதலாளர் ஒருவர் அவருக்கு விற்பனை செய்பவரின் நலனுக்கானதும், அந்த உரிமை மாற்றளிப்பின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பு தொடர்பாக விலை மதிப்பீட்டின்படியான தீர்வை விதிக்கத்தக்கதானதும் மற்றும் அதன்படி உரிய முத்திரை இடப்பட்டதுமான உண்மையான உரிமை மாற்றளிப்பு ஒன்றை உடனடியாக எடுத்துக்கொள்ளுமிடத்து, அசல் விற்பனையாளரால் அதே சொத்தின் உரிமை மாற்றளிப்பு எதுவும் அதற்குப்பின்னர் செய்யப்படுமிடத்து, அது உரிமை மாற்றளிப்பின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பிற்கான உரிமை மாற்றளிப்பு ஒன்றின்பேரில் விதிக்கத்தக்கதாக இருக்கும் தொகைக்குச் சமமான தீர்வை ஒன்றுடன் அல்லது அத்தகைய தீர்வை இருபது ரூபாய்க்கு மேற்படுமிடத்து இருபது ரூபாய்க்கான தீர்வை ஒன்றுடன் விதிக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

30 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

E. தீர்வை எவரால் செலுத்தத்தக்கதாகும் எனல்.

தீர்வை எவரால்

34. உடன்பாடு ஒன்று மாறாக இல்லாத நேர்வில், முறையான முத்திரைத்தீர்வை வழங்குவதற்கான செலவானது,-

செலுத்தத்தக்க- தாகும் எனல்.

(a) இணைப்புப்பட்டியலின் பின்வரும் பிரிவுகள் எதிலும் விவரிக்கப்பட்ட முறையாவணம் எதனின் நேர்வில், அதாவது:-

எண்.2 (நிருவாகம் சார்ந்த பிணைமுறி),

எண்.6 (உரிமை ஆவணங்களை வைப்பீடு செய்தல், அடகு அல்லது அடைமானம் தொடர்பான உடன்பாடு),

எண்.12 (பிணைமுறி),

எண்.13 (கப்பலை வைத்துக் கடன் பெறும் பிணைமுறி),

எண்.23 (சுங்கம் சார்ந்த பிணைமுறி),

எண்.27 (மேலுமான பிணைமுறி),

எண்.29 (ஈட்டுறுதிக்கான பிணைமுறி),

எண்.34 (அடைமான ஆவணம்),

எண்.45 (விடுதலை),

எண்.46 (பொறுப்பு சார்ந்த பிணைமுறி),

எண்.47 (காப்புறுதிப் பிணைமுறி அல்லது அடைமான ஆவணம்),

எண்.48 (ஏற்பாடு), எண்.52(a) (கடனீட்டுப் பத்திரமானது தீர்வைக்குக் கடமைப் பொறுப்புடையதாக இருப்பினும் இல்லாவிடினும் சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களாக உள்ள கடனீட்டுப் பத்திரங்களின் உரிமை மாற்றம்)

எண்.52(b) (பிணைமுறி அல்லது அடைமான ஆவணம் ஒன்றினால் காப்புறுதி செய்யப்பட்ட நலன் எதனின் உரிமை மாற்றம்) ஆகியவற்றின் நேர்வில்

- அத்தகைய முறையாவணத்தை வரைகின்ற, தயாரிக்கின்ற அல்லது நிறைவேற்றுகின்ற நபரால்;

(b) உரிமை மாற்றளிப்பின் நேர்வில் (அடைமானம் செய்யப்பட்ட சொத்தின் மறு உரிமை மாற்றளிப்பு ஒன்று உள்ளடங்கலாக)- அதனை வழங்கப்பெற்றவரால்;

(c) குத்தகை அல்லது குத்தகைக்கான உடன்பாடு ஒன்றின் நேர்வில்- குத்தகை பெறுபவரால் அல்லது குத்தகையைப் பெறுபவராகக் கருதப்படுபவரால்;

(d) குத்தகை ஒன்றின் எதிர் பிரதி ஒன்றின் நேர்வில்- குத்தகை வழங்குபவரால்;

(e) மாநில வழக்குரைஞர் மன்றத்தினால் பேணிவரப்படும் வழக்குரைஞர்கள் பட்டியலில் பதிவு பெறுவதற்கான சான்றிதழ் ஒன்றின் நேர்வில்- பதிவு பெற்ற வழக்குரைஞர்களால்;

(f) மாற்று முறையாவணம் ஒன்றின் நேர்வில்- சமமான பங்குகளைக் கொண்டுள்ள தரப்பினர்களால்;

(g) விற்பனைக்கான சான்றிதழ் ஒன்றின் நேர்வில்- அத்தகைய சான்றிதழுக்குத் தொடர்புடைய சொத்தை வாங்குபவரால்; மற்றும்

(h) பாகப்பிரிவினைக்கான முறையாவணம் ஒன்றின் நேர்வில்- பிரிவினை செய்யப்பட்ட மொத்த சொத்தில் தங்களுக்குரிய பங்குகளுக்கான விகிதாச்சாரத்தில் அல்லது வருவாய் அதிகார அமைப்பு ஒன்றினால் அல்லது உரிமையியல் நீதிமன்றம் ஒன்றினால் அல்லது இசைவுத்தீர்வாளர் ஒருவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றை நிறைவேற்றுகையில் அந்த பாகப்பிரிவினையானது செய்யப்படும்போது, அத்தகைய அதிகார அமைப்பு, நீதிமன்றம் அல்லது இசைவுத்தீர்வாளர் பணிக்கக்கூடியவாறான அத்தகைய விகிதாச்சாரத்தில் அதன் தரப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 31

அத்தியாயம் III.

முத்திரைத்தீர்வை குறித்து தீர்ப்பு வழங்குதல்.

முறையான

முத்திரைத் தீர்வை குறித்து தீர்ப்பு வழங்குதல்.

35. (1) முறையாவணம் எதுவும் நிறைவேற்றப்பட்டிருப்பினும் இல்லாவிடினும் முன்னரே முத்திரை இடப்பட்டிருப்பினும் இல்லாவிடினும், ஆட்சியரிடம் கொண்டுவரப்படும்போது, அதனைக் கொண்டுவரும் நபர் அதற்கு விதிக்கத்தக்க தீர்வை ஏதுமிருப்பின், அது குறித்து அந்த அலுவலரின் கருத்தை அறிந்து கொள்வதற்கு விண்ணப்பித்தால், அதற்காக நூறு ரூபாய்க்கான கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டும். ஆட்சியர் தனது தீர்ப்பில் அந்த முறையாவணத்திற்கு விதிக்கத்தக்க தீர்வை ஏதுமிருப்பின், அதனை நிர்ணயம் செய்தல் வேண்டும்.

(2) இந்நோக்கத்திற்காக ஆட்சியரானவர் அந்த முறையாவணமானது அதன் சாரம் ஒன்றுடன் அளிக்கப்படுவதற்கு மற்றும் அதோடு கூட தீர்வை விதிக்கத்தக்க அந்த முறையாவணத்தின் தீர்வை விதிக்கத்தக்கதன்மையை அல்லது அதற்கு விதிக்கத்தக்க தீர்வைத் தொகையை பாதிக்கும் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் அனைத்தும் அதில் முழுவதுமாக மற்றும் உண்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை நிரூபிப்பதற்குத் தேவையெனத் தான் கருதக்கூடிய அத்தகைய ஆணையுறுதி ஆவணம் அல்லது பிற சான்றுடன் அளிக்கப்படுவதற்கு கோரலாம்; மற்றும் அத்தகைய சாரமும் சான்றும் அதற்கிணங்கிய வகையில் அளிக்கப்பட்டிருந்தாலன்றி அத்தகைய விண்ணப்பம் எதன் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் மறுக்கலாம்:

வரம்புரை: ஆனால்,-

(a) இந்தப்பிரிவிற்கு இணங்க அளிக்கப்பட்ட சான்று எதுவும் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் தொடர்பான தீர்வை குறித்த விசாரணை ஒன்றைத் தவிர, உரிமையியல் நடவடிக்கை எதிலும் நபர் எவருக்கும் எதிராக பயன்படுத்தப்படுதல் கூடாது; மற்றும்

(b) அத்தகைய சான்று எவரால் அளிக்கப்பட்டதோ அந்த நபர் ஒவ்வொருவரும் அதற்குத் தொடர்புடைய தீர்வை விதிக்கத்தக்க முறையாவணத்திற்கான தொடர்பாக முழுத் தீர்வையையும் செலுத்துவதன்பேரில், அத்தகைய முறையாவணத்தில் மேற்சொன்னவாறான பொருண்மைகள் அல்லது சூழ்நிலைகள் எதனையும் உண்மையாக குறிப்பிடாமல் விட்டுவிடுவதன் காரணமாக இந்தச் சட்டத்தின்படி அவர் உள்ளாகியிருக்கக்கூடிய பணத்தண்டம் எதனில் இருந்தும் விடுவிப்பு செய்யப்படுதல் வேண்டும் .

ஆட்சியர் சான்றிதழ்

அளித்தல்.

36. (1) 34-ஆம் பிரிவின்படி ஆட்சியரிடம் கொண்டு வரப்பட்ட முறையாவணம் ஒன்றின் விவரக்குறிப்பானது அவரது கருத்தில் தீர்வை விதிக்கத்தக்க ஒன்றாக இருக்கும்போது மற்றும்,-

(a) ஆட்சியரானவர் ஏற்கெனவே அது முழுமையாக முத்திரையிடப்பட்டுள்ளது என நிர்ணயம் செய்கிறார்; அல்லது

(b) 34-ஆம் பிரிவின்படி ஆட்சியரால் நிர்ணயம் செய்யப்பட்ட தீர்வையானது அல்லது அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட தீர்வைக்குச் சமமான அத்தகைய தொகை ஒன்று அந்த முறையாவணம் தொடர்பாக ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள தீர்வையுடன் சேர்த்துச் செலுத்தப்பட்டுள்ளது எனும்போது;

ஆட்சியரானவர், அத்தகைய முறையாவணத்தின் மீது அதற்கு விதிக்கத்தக்க முழுத் தீர்வையானது செலுத்தப்பட்டுள்ளது என மேலெழுத்து செய்வதன் மூலம் சான்றிதழ் அளித்தல் வேண்டும்; மற்றும் அதோடுகூட அதன்பேரிலான தீர்வைத் தொகையைக் குறித்துரைத்தல் வேண்டும்.

(2) ஆட்சியரானவர், தனது கருத்தில் அத்தகைய முறையாவணம் தீர்வை விதிக்கத்தக்கதல்லாதது என எண்ணும்போது, மேற்சொன்னவாறான முறையில் அத்தகைய முறையாவணம் அவ்வாறு தீர்வை விதிக்கத்தக்கதல்ல என்று சான்றிதழ் அளித்தல் வேண்டும்.

32 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(3) இந்தப் பிரிவின்படி மேலெழுத்து ஒன்று செய்யப்பட்டுள்ள முறையாவணம் எதுவும், உரியவாறு முத்திரை இடப்பட்டதாகவோ அல்லது நேர்விற்கேற்ப தீர்வை விதிக்கத்தக்கது அல்லாததாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் தீர்வை விதிக்கத்தக்கது எனில் அது சான்றாகவோ அல்லது பிறவாறாகவோ பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும்; மற்றும் அது உரியவாறு முதலிலேயே முத்திரை இடப்பட்டிருந்தாற்போன்று அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் பதிவு செய்யப்படலாம்:

வரம்புரை: ஆனால், இந்தப்பிரிவில் உள்ள எதுவும்-

(a) இம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டு அல்லது முதலாவதாக நிறைவேற்றப்பட்டு மற்றும் அதன் நிறைவேற்றத் தேதியிலிருந்து அல்லது நேர்விற்கேற்ப முதலாவதாக அது நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதம் முடிவடைந்த பிறகு அவரிடம் கொண்டு வரப்படும் முறையாவணம் எதனையும்;

(b) இம்மாநிலத்திற்கு வெளியே நிறைவேற்றப்பட்டு அல்லது முதலாவதாக நிறைவேற்றப்பட்டு மற்றும் இம்மாநிலத்தில் முதலாவதாக அது பெறப்பட்டதற்குப் பின்பு மூன்று திங்கள் முடிவடைந்த பின்னர் அவரிடம் கொண்டு வரப்படும் முறையாவணம் எதனையும்; அல்லது

(c) உரியவாறு முத்திரை இடப்படாத காகிதத்தின் மீது ரூபாய் ஒன்றுக்கு மேற்படாமல் தீர்வை ஒன்று விதிக்கத்தக்க முறையாவணம் எதனையும் அல்லது பயிருக்கான அடைமானம் ஒன்று, அதனின் நிறைவேற்றத்திற்கு பின்னர் அவரிடம் கொண்டுவரப்படும் போது அதனையும் மேற்குறிப்பு செய்வதற்கு ஆட்சியருக்கு அதிகாரம் அளித்தல் கூடாது.

அத்தியாயம்-IV.

உரிய வகையில் முத்திரை இடப்படாத முறையாவணங்கள்.

முறையா-

வணங்களை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றை முடக்கி வைத்தல்.

37. (1) (a) சட்டத்தின்படி அல்லது தரப்பினர்களின் இசைவின்படி சான்றினைப் பெறுவதற்கு அதிகாரம் கொண்டுள்ள நபர் ஒவ்வொருவரும் மற்றும் காவல் அலுவலர் ஒருவர் தவிர பொது அலுவலகம் ஒன்றின் பொறுப்பில் உள்ள நபர் ஒவ்வொருவரும், எவர்முன்பு அவரது அலுவலின் நிறைவேற்றத்தில் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் ஒவ்வொன்றும் முன்னிலைப்படுத்தப்படுமோ அல்லது வருமோ, அவரது கருத்தில் அத்தகைய முறையாவணமானது உரியவாறு முத்திரை இடப்படவில்லை என அவருக்குத் தோன்றுமாயின் அதனை முடக்கி வைக்கலாம்.

(b) 34-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஆனால் (a) எனும் கூறின் வகைமுறைகளுக்கு ஊறின்றி ஆட்சியரானவர், அந்த முறையாவணத்திற்கு விதிக்கத்தக்க தீர்வையினை நிர்ணயம் செய்வதற்காக, 34-ஆம் பிரிவின்படி தம்முன்னர் கொண்டுவரப்பட்ட முறையாவணம் எதனையும், அத்தகைய முறையாவணமானது உரியவாறு முத்திரை இடப்படவில்லை என தனக்குத் தோன்றுமாயின் அதனை முடக்கி வைக்கலாம்:

வரம்புரை: ஆனால், இந்தக் கூறில் அடங்கியுள்ள எதுவும், நிறைவேற்றம் செய்யப்பட்டிராத ஆனால் 34-ஆம் பிரிவின்படி அந்த முறையாவணத்திற்கு விதிக்கத்தக்க தீர்வையினை நிர்ணயம் செய்வதற்காக தன்னிடம் கொண்டுவரப்பட்ட முறையாவணம் எதனையும் அல்லது 35-ஆம் பிரிவின்படி மேலெழுத்து செய்வதற்குத் தான் அதிகாரம் பெற்றுள்ள முறையாவணம் எதனையும் முடக்கி வைப்பதற்கு ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பதாகக் கொள்ளுதல் கூடாது.

(2) இந்நோக்கத்திற்காக அத்தகைய நபர் ஒவ்வொருவரும் மற்றும் ஆட்சியரும் அவ்வாறு தீர்வை விதிக்கத்தக்கதும் மற்றும் அவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டதும் அல்லது வருவதும் அல்லது தம்முன்பு கொண்டு வரப்பட்டதுமான முறையாவணம் ஒவ்வொன்றையும் அத்தகைய முறையாவணமானது நிறைவேற்றம் செய்யப்பட்டபோது அல்லது முதலாவதாக நிறைவேற்றப்பட்டபோது, இம்மாநிலத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி கோரப்படும் மதிப்புடைய மற்றும் விவரக்குறிப்புடைய முத்திரைத் தீர்வையுடன் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை நிச்சயம் செய்வதன் பொருட்டு ஆய்வு செய்தல் வேண்டும்:

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 33

வரம்புரை: ஆனால்,-

மையச் சட்டம் 2/1974.

(a) இதில் அடங்கியுள்ள எதுவும் குற்றவியல் நடுவர் அல்லது குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி எவரையும் 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தின் IX அல்லது X-ஆம் அத்தியாயத்தின்படியான நடவடிக்கை ஒன்றைத் தவிர, பிற நடவடிக்கை எதன்போதும் தம் முன்னர் வரும் முறையாவணம் எதனையும் அவ்வாறு செய்வதை தான் பொருத்தமெனக் கருதவில்லை எனில் அதனை ஆய்வு செய்வதற்கு அல்லது முடக்கி வைப்பதற்குக் கோருவதாகக் கொள்ளப்படுதல் கூடாது:

(b) உயர்நீதி மன்றம் ஒன்றின் நீதிபதி என்கின்றநேர்வில், இந்தப் பிரிவின்படி முறையாவணம் எதனையும் ஆய்வு செய்யும் மற்றும் முடக்கி வைக்கும் அலுவலை இதற்கென நீதிமன்றம் நியமிக்கிறவாறான அத்தகைய அலுவலருக்கு ஒப்படைவு செய்யலாம்.

(3) இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக ஐயப்பாடு எழுகின்ற நேர்வில்,-

(a) அரசானது, பொது அலுவலகங்கள் என்பதாகக் கொள்ளப்படவேண்டிய அலுவலகங்கள் எவை என்பதை நிர்ணயம் செய்யலாம்; மற்றும்

(b) அரசானது, பொது அலுவலகங்களின் பொறுப்பில் உள்ள நபர்களாகக் கொள்ளப்படவேண்டியவர்கள் யாவர் என்பதை நிர்ணயம் செய்யலாம்.

முத்திரைத் தீர்வைப் பற்றாக்குறையை வசூல் செய்தல்.

மையச் சட்டம் XVI/1908. 38. (1) 36-ஆம் பிரிவில் அல்லது இந்தச் சட்டத்தின் பிற வகைமுறை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின்படி முறையாவணம் எதனையும் பதிவு செய்ததற்குப் பின்பு, அத்தகைய முறையாவணம் தொடர்பாக இந்தச் சட்டத்தின்படி செலுத்தத்தக்க முறையான முத்திரைத் தீர்வையானது செலுத்தப்பட்டிருக்கவில்லை அல்லது குறைவாக செலுத்தப்பட்டுள்ளது என காணப்படும் நேர்வில், அத்தகைய தீர்வை அல்லது நேர்விற்கேற்ப தீர்வைப் பற்றாக்குறையானது மேற்சொன்ன மையச் சட்டத்தின்படி மாவட்டப் பதிவாளரிடமிருந்து சான்றிதழ் ஒன்றைப்பெறுவதின்பேரில், தீர்வை செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபரிடமிருந்து நில வருவாய் நிலுவைத் தொகை ஒன்றைப்போல் வசூலிக்கப்படலாம்:

வரம்புரை: ஆனால், அத்தகைய சான்றிதழ் எதுவும் செய்யவேண்டிய விசாரணை ஒன்றைச் செய்தாலன்றி மற்றும் அத்தகைய நபருக்கு அவர் தம் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கான வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பெற்றாலன்றி வழங்கப்படுதல் கூடாது:

இரண்டாம் வரம்புரை: மேலும், அத்தகைய விசாரணை எதுவும் அந்த முறையாவணம் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் தொடங்கப்படுதல் கூடாது.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி மாவட்டப் பதிவாளரின் சான்றிதழானது, (3)-ஆம் உட்பிரிவின்படியான மேல்முறையீட்டுக்கு மட்டும் உட்பட்டு அறுதியானதாதல் வேண்டும்: மற்றும் நீதிமன்றம் எதிலுமான அல்லது அதிகார அமைப்பு எதனின் முன்பும் அது குறித்து ஐயப்பாடு எழுதல் கூடாது.

(3) (1)-ஆம் உட்பிரிவின்படி மாவட்டப்பதிவாளரின் சான்றிதழ் ஒன்றினால் பாதிப்படைந்த நபர் எவரும், முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மேல்முறையீடு செய்து கொள்ளலாம். அத்தகைய மேல்முறையீடு எதுவும் மேற்சொன்ன சான்றிதழ் பெறப்பட்ட தேதியில் இருந்து மூன்று திங்களுக்குள் அளிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியால் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய முறையில் கேட்கப்படுதலும் தீர்வு செய்யப்படுதலும் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் II/1864. (4) 1864-ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் வசூலிப்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், (1)-ஆம் உட்பிரிவின்படி செலுத்தக்தக்க தொகையை வசூல் செய்யும் நோக்கத்திற்காக, ஆட்சியர் ஒருவரின் அந்தச் சட்டத்தின்படியான அதிகாரங்களை மாவட்டப் பதிவாளரானவர் கொண்டிருத்தல் வேண்டும்.

34 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

உரியவாறு முத்திரை

இடப்படாத முறையா வணமானது சான்று முதலானவையாக அனுமதிக்கப்பட இயலாதது எனல்.

39. சட்டத்தின்படியோ அல்லது தரப்பினர்களின் இசைவின்படியோ சான்றினைப் பெறுவதற்கு அதிகாரம் கொண்டுள்ள நபர் எவரும், எந்த நோக்கத்திற்காகவும் தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் எதனையும் சான்றாக அனுமதித்தல் கூடாது அல்லது அத்தகைய முறையாவணம் உரியவாறு முத்திரை இடப்பட்டாலன்றி அத்தகைய நபர் எவரும் அல்லது பொது அலுவலர் எவரும் அதன்பேரில் செயல்படுதல், பதிவு செய்தல் அல்லது அதிகாரம் அளித்தல் கூடாது;

வரம்புரை: ஆனால்,-

(a) ஒரு ரூபாய்க்கு மேற்பட்டு தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் ஒன்றாக அல்லது பயிரின் அடைமானம் ஒன்றுக்கான முறையாவணமாக இல்லாத அத்தகைய முறையாவணம் எதுவும், அதன் நியாயமான விலக்களிப்புகள் அனைத்திற்கும் உட்பட்டு அதற்கு விதிக்கத்தக்க தீர்வையின் செலுத்தத்தின்பேரில் அல்லது குறைவாக முத்திரை இடப்பட்ட முறையாவணம் ஒன்றின்நேர்வில் அத்தகைய தீர்வையைச் சரி செய்வதற்கு ஐந்து ரூபாய்க்கான பணத்தண்டம் ஒன்றுடன் சேர்த்துக் கோரப்படும் அந்தத் தொகையின் செலுத்தத்தின்பேரில் அல்லது முறையான தீர்வைத் தொகையின் அல்லது அதன் பற்றாக்குறையான பகுதியின் பத்து மடங்கானது ஐந்து ரூபாய்க்கு மேற்படும்போது, அத்தகைய தீர்வை அல்லது பகுதியின் பத்து மடங்குக்குச் சமமான தொகை ஒன்றைச் செலுத்துவதன்பேரில் சான்றாக அனுமதிக்கப்படுதல் வேண்டும்;

(b) ஒப்பந்தம் ஒன்று அல்லது உடன்பாட்டின் வகை எதுவும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடிதங்கள் அடங்கிய கடிதத்தொடர்பின் மூலமாக செயல்விளைவு கொள்ளுமிடத்தும் அந்தக் கடிதங்களில் ஏதேனும் ஒன்று முறையான முத்திரைத்தீர்வையைத் தாங்கியிருக்குமிடத்தும் அந்த ஒப்பந்தம் அல்லது உடன்பாடானது உரியவாறு முத்திரை இடப்பட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

மையச் சட்டம்

2/1974.

(c) இதில் அடங்கியுள்ள எதுவும், 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தின் IX அல்லது X-ஆம் அத்தியாயத்தின்படியான நடவடிக்கை ஒன்றைத்தவிர, குற்றவியல் நீதிமன்றம் ஒன்றின் பிற நடவடிக்கை எதிலும் முறையாவணம் எதுவும் சாட்சியமாக அனுமதிக்கப்படுவதைத் தடைசெய்தல் கூடாது;

(d) இதில் அடங்கியுள்ள எதுவும் நீதிமன்றம் எதிலும் முறையாவணம் எதுவும் அனுமதிக்கப்படுவதை, அத்தகைய முறையாவணமானது மைய அரசால் அல்லது அதன் சார்பாக அல்லது அரசு எதனாலும் அல்லது எதனின் சார்பாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கும்போதோ அல்லது 36-ஆம் பிரிவினால் அல்லது இந்தச் சட்டத்தின் பிற வகைமுறை எதனாலும் வகை செய்கிறவாறு ஆட்சியரின் சான்றிதழை அது தாங்கியிருக்குமிடத்தோ, தடை செய்தல் கூடாது.

ஐயப்பாடு எழுதல்

கூடாது எனுமிடத்து முறையா- வணத்தை அனுமதித்தல்.

40. முறையாவணம் ஒன்று சாட்சியமாக அனுமதிக்கப் பட்டிருக்கின்றவிடத்து, அத்தகைய அனுமதியானது 61-ஆம் பிரிவில் வகைசெய்யப்பட்டவாறு தவிர, அதே உரிமை வழக்கின் அல்லது நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும் அந்த முறையாவணம் உரியவாறு முத்திரை இடப்பட்டிருக்கவில்லை என்ற அடிப்படையில் ஐயப்பாடு எழுதல் கூடாது.

முறையற்ற

முத்திரை இடப்பட்ட முறையா- வணங்களை அனுமதித்தல்.

41. அரசானது, முறையாவணம் ஒன்று போதுமான தொகைக்கு முத்திரைத் தீர்வை ஒன்றை ஆனால் முறையில்லாத விவரக்குறிப்புகளை தாங்கியிருக்குமிடத்து, அதற்கு விதிக்கத்தக்க தீர்வையின் செலுத்தத்தின் பேரில் உரியவாறு முத்திரை இடப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கப்படுவதற்கான மற்றும் அவ்வாறு சான்றிதழ் அளிக்கப்பட்ட முறையாவணம் எதுவும் அதன் நிறைவேற்றத் தேதியில் இருந்து உரியவாறு முத்திரை இடப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என வகை செய்வதற்கான விதிகளைச் செய்யலாம்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 35

முடக்கி

வைக்கப்பட்ட ஆவணமானது எவ்வாறு கையாளப்படுதல் வேண்டும் எனல்.

42. (1) சட்டத்தின்படி அல்லது தரப்பினர்களின் இசைவின்படி சாட்சியத்தைப்பெறுவதற்கும் 38-ஆம் பிரிவின்படி வகை செய்யப்பட்டவாறான பணத்தண்டம் ஒன்றின் அல்லது 40-ஆம் பிரிவின்படி வகைசெய்யப்பட்டவாறான தீர்வையின் செலுத்தத்தின்பேரில் அத்தகைய முறையாவணத்தை சாட்சியமாக அனுமதிப்பதற்கும் அதிகாரம் உள்ள நபர், 36-ஆம் பிரிவின்படி முறையாவணம் ஒன்றை முடக்கி வைக்கும்போது, அவர் அத்தகைய முறையாவணத்தின் அதிகாரபூர்வமான நகல் ஒன்றை, அது தொடர்பாக வசூலிக்கப்படும் தீர்வைத் தொகையையும் பணத்தண்டத்தையும் குறிப்பிடும் எழுத்துருவிலான சான்றிதழ் ஒன்றுடன் சேர்த்து ஆட்சியருக்கு அனுப்புதல் வேண்டும்; மற்றும் அத்தகைய தொகையை ஆட்சியருக்கு அல்லது இதற்கென அவர் நியமனம் செய்யக்கூடியவாறான அத்தகைய நபருக்கு அனுப்புதல் வேண்டும்.

(2) பிற நேர்வு ஒவ்வொன்றிலும், அவ்வாறு முறையாவணம் ஒன்றை முடக்கி வைக்கும் நபரானவர், அதனை அதன் அசல் படிவத்தில் ஆட்சியருக்கு அனுப்புதல் வேண்டும்.

42-ஆம் பிரிவின் 43. (1) 42-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி, முறையாவணம் ஒன்றின் நகல் ஒன்று ஆட்சியருக்கு அனுப்பப்படும்போது, அவர் அத்தகைய முறையாவணம் தொடர்பாக நூறு ரூபாய்க்கு மேற்பட்டு செலுத்தப்பட்டுள்ள பணத் தண்டத்தில் தான் தக்கதெனக் கருதும் பகுதி எதனையும் திருப்பி அளிக்கலாம்.

படி செலுத்தப்பட்ட பணத்தண்டத்தை திருப்பி அளிப்பதற் கான ஆட்சியரின் அதிகாரம்.

(2) அத்தகைய முறையாவணமானது, 12-ஆம் பிரிவிற்கு அல்லது 13-ஆம் பிரிவிற்கு மாறாக அது எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக மட்டுமே முடக்கி வைக்கப்பட்டுள்ளபோது, ஆட்சியரானவர் அவ்வாறு செலுத்தப்பட்ட முழு பணத்தண்டத்தையும் திருப்பி அளிக்கலாம்.

முடக்கி வைக்கப்- பட்ட முறையா- வணங்களை முத்திரைத்தாள் இடுவதற்கான ஆட்சியரின் அதிகாரம்.

44. (1) ஆட்சியரானவர், 36-ஆம் பிரிவின்படி முறையாவணம் எதனையும் முடக்கி வைக்கும்போது அல்லது 41-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி தனக்கு அனுப்பப்பட்ட ஒரு ரூபாய்க்கு மேற்படாமல் தீர்வை ஒன்று விதிக்கத்தக்க முறையாவணம் ஒன்றுக்கான அல்லது பயிரின் அடைமானம் ஒன்றுக்கான முறையாவணம் ஒன்றாக இல்லாத முறையாவணம் எதனையும் பெறும்போது, அவர் பின்வரும் நடைமுறையைக் கடைபிடித்தல் வேண்டும்:-

(a) அத்தகைய முறையாவணமானது உரியவாறு முத்திரை இடப்பட்டுள்ளது அல்லது தீர்வை விதிக்கத்தக்கதல்லாதது என அவர் கருதுவாராயின், அது உரியவாறு முத்திரை இடப்பட்டுள்ளது அல்லது நேர்விற்கேற்ப அவ்வாறு தீர்வை விதிக்கத்தக்கதல்லாதது என அதன்மீது மேலெழுத்துச் செய்வதன் வாயிலாக சான்றிதழ் அளித்தல் வேண்டும்;

(b) அத்தகைய முறையாவணமானது தீர்வை விதிக்கத்தக்கது மற்றும் அது உரியவாறு முத்திரை இடப்படாதது என அவர் கருதுவாராயின், முறையான தீர்வையைச் செலுத்துவதற்கு அல்லது நூறு ரூபாய்க்கான பணத்தண்டம் ஒன்றுடன் சேர்த்து அதனைச் சரி செய்வதற்குக் கோரப்படும் தொகையைச் செலுத்துவதற்குக் கோருதல் வேண்டும்; அல்லது முறையான தீர்வைத்தொகையின் பத்து மடங்குக்கு அல்லது அதன் பற்றாக்குறையான பகுதியின் பத்து மடங்குக்கு மேற்படாத தொகை ஒன்றை, அத்தகைய தொகை நூறு ரூபாய்க்கு மேற்பட்டிருப்பினும் அல்லது குறைவாகயிருப்பினும் அதனைச் செலுத்துவதற்குக் கோருதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால், அத்தகைய முறையாவணமானது 12-ஆம் பிரிவிற்கு அல்லது 13-ஆம் பிரிவிற்கு மாறாக எழுதப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக மட்டுமே அது முடக்கி வைக்கப்பட்டுள்ளபோது, ஆட்சியரானவர் தான் தக்கதெனக் கருதுவாராயின் முழு பணத்தண்டத்தையும் தள்ளுபடி செய்யலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின் (a) எனும் கூறின்படியான சான்றிதழ் ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடுகளுக்கான அறுதிச் சான்றாதல் வேண்டும்.

36 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(3) 41-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி முறையாவணம் ஒன்று ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளவிடத்து, ஆட்சியரானவர் இந்தப்பிரிவின் வாயிலாக வகை செய்யப்பட்டவாறு தான் அதனைக் கையாளும்போது, முடக்கி வைக்கும் அலுவலருக்கு அதனைத் திருப்பி அனுப்புதல் வேண்டும்.

உரியவாறு

முத்திரை இடப்படாத முறையா- வணங்கள்.

45. தீர்வை விதிக்கத்தக்கதும், உரியவாறு முத்திரை இடப்படாததுமான ஒரு ரூபாய்க்கு மேற்பட்டு தீர்வை ஒன்று விதிக்கத்தக்க முறையாவணம் ஒன்றாக அல்லது பயிரின் அடைமானம் ஒன்றுக்கான முறையாவணம் ஒன்றாக இல்லாத முறையாவணம் எதுவும் அதன் நிறைவேற்றத் தேதியில் அல்லது முதல் நிறைவேற்றத் தேதியில் இருந்து ஓராண்டுக்குள் நபர் எவராலும் தன்னுடைய சொந்த செயற்பாட்டால் ஆட்சியர் முன்பு முன்னிலைப்படுத்தப்படுமாயின் மற்றும் அத்தகைய நபர் அத்தகைய முறையாவணமானது உரியவாறு முத்திரை இடப்படவில்லை என்ற பொருண்மையை ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டு வருவாராயின், மற்றும் முறையான தீர்வைத் தொகையை அல்லது அதனை சரி செய்வதற்குக் கோரப்படும் தொகையைச் செலுத்துவதற்கு முனைவாராயின் மற்றும் ஆட்சியரானவர் அத்தகைய முறையாவணத்திற்கு உரியவாறு முத்திரை இடுவதில் ஆன தவறுகையானது தற்செயலாக, தவறுதலாக அல்லது அவசரத் தேவையின்பால் ஏற்பட்டுள்ளது என மனநிறைவு கொள்வாராயின், அவர் 36-ஆம் மற்றும் 43-ஆம் பிரிவுகளின்படியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அத்தகைய தொகையைப் பெறலாம்; மற்றும் இதன்பின்பு இதில் வகுத்துரைக்கப்படக்கூடியவாறு அடுத்த நடவடிக்கையைத் தொடரலாம்.

39, 44 அல்லது 45-ஆம் பிரிவுகளின்படி தீர்வை செலுத்தப் 46 (1) 39-ஆம், 44-ஆம் அல்லது 45-ஆம் பிரிவின்படி முறையாவணம் ஒன்றின் தொடர்பாக வசூலிக்கத்தக்க தீர்வை மற்றும் பணத்தண்டம் ஏதேனுமிருப்பின் அவை செலுத்தப்பட்டிருக்கும் அத்தகைய முறையாவணத்தைச் சான்றாக அனுமதிக்கும் நபர் அல்லது நேர்விற்கேற்ப ஆட்சியர் அது தொடர்பான முறையான தீர்வைக்கான அல்லது நேர்விற்கேற்ப முறையான தீர்வை மற்றும் பணத்தண்டத்திற்கான உரிய தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக அவற்றை செலுத்தும் நபரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை அதன்மீது மேலெழுத்துச் செய்வதன் வாயிலாக சான்றிதழ் அளித்தல் வேண்டும்.

பட்டுள்ள முறையா- வணங்களின் மீதான மேலெழுத்துச் செய்தல்.

(2) அவ்வாறு மேலெழுத்து செய்யப்பட்ட முறையாவணம் ஒவ்வொன்றும் அதன் பேரிலான சான்றாக அனுமதிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது உரியவாறு முத்திரை இடப்பட்டிருந்தாற்போன்று பதிவு செய்யப்படலாம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் அதிகாரம் அளிக்கப்படலாம்; மற்றும் இதற்கென அவரது விண்ணப்பத்தின்பேரில் அது எவருடைய உடைமையிலிருந்து அதனை முடக்கி வைக்கும் அலுவலரின் கைகளுக்கு வந்ததோ அந்த நபரிடம் அல்லது அத்தகைய நபர் பணிக்கக்கூடியவாறான நபரிடம் அது ஒப்படைக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரை: ஆனால்,

(a) 38-ஆம் பிரிவின்படி தீர்வை மற்றும் பணத்தண்டம் ஒன்றைச் செலுத்துவதன்பேரில் சான்றாக அனுமதிக்கப்பட்டுள்ள முறையாவணம் எதுவும், அத்தகைய முடக்கி வைத்தலின் தேதியிலிருந்து ஒரு திங்கள் முடிவடைவதற்கு முன்பு அல்லது ஆட்சியரானவர் அதனை மேலும் நிறுத்தி வைப்பது தேவையானது என சான்றிதழ் அளித்துள்ளாராயின் மற்றும் அத்தகைய சான்றிதழை நீக்கம் செய்யாதிருப்பாராயின் அவ்வாறு ஒப்படைக்கப்படுதல் கூடாது;

மையச் சட்டம் V/1908. (b) இந்தப் பிரிவில் உள்ள எதுவும் 1908-ஆம் ஆண்டு உரிமையியல் வழக்கு நடைமுறை சட்டத்தொகுப்பின் முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆணை XIII, விதி 9 ஆகியவற்றைப் பாதித்தல் கூடாது.

முத்திரைச் 47. முறையாவணம் எதனின் தொடர்பாக இந்த அத்தியாயத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செலுத்தப்பட்ட பணத்தண்டம் ஒன்றானது, அத்தகைய முறையாவணத்தைப் பொறுத்த நேர்வில் முத்திரைத் தீர்வை தொடர்பான சட்டத்திற்கு எதிரான குற்றச் செயல் ஒன்றைப் புரிந்துள்ளதாகத் தோன்றும் நபர் எவரின் பேரிலும் குற்ற வழக்கு தொடரப்படுவதை தடைசெய்தல் கூடாது:

சட்டத்திற்கு எதிரான குற்றச் செயலுக்காக குற்ற வழக்குத் தொடருதல்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 37

வரம்புரை: ஆனால், அத்தகைய பணத்தண்டம் ஒன்று செலுத்தப்பட்டுள்ள முறையாவணம் எதனையும் பொறுத்த நேர்வில், முறையான தீர்வையைச் செலுத்துவதை ஏய்க்கும் நோக்கம் ஒன்றுடன் அந்த குற்றச்செயல் புரியப்பட்டுள்ளது என ஆட்சியருக்குத் தோன்றினாலன்றி அத்தகைய குற்றவழக்கு எதுவும் தொடரப்படுதல் கூடாது.

தீர்வை அல்லது

பணத்தண்டத்தை செலுத்தும் நபர்கள் அதனை ஒருசில நேர்வுகளில் வசூலிக்கலாம் எனல்.

48(1) முறையாவணம் ஒன்றின் தொடர்பாக தீர்வை அல்லது பணத்தண்டம் எதுவும், 38-ஆம் பிரிவு, 40-ஆம் பிரிவு, 41-ஆம் பிரிவு அல்லது 42-ஆம் பிரிவு ஆகியவற்றின்படி நபர் எவராலும் செலுத்தப்பட்டுள்ள போதும் மற்றும் உடன்பாட்டின்வாயிலாக அல்லது 33-ஆம் பிரிவின் வகைமுறைகளின்படி அல்லது அத்தகைய முறையாவணம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் நடைமுறையில் இருந்த பிற சட்டம் எதன்படியும், பிறநபர் சிலர் அத்தகைய முறையாவணத்திற்கான முறையான முத்திரைத்தீர்வை செலுத்துவதற்கான செலவை ஏற்றுக்கொள்வதற்கு கட்டுப்பட்டிருந்தபோதும், முதலில் குறிப்பிடப்பட்ட நபர் அத்தகைய பிற நபரிடமிருந்து அவ்வாறு செலுத்தப்பட்ட தீர்வைத் தொகையை அல்லது பணத்தண்டத்தை வசூலிப்பதற்கு உரிமைத் தகுதி உடையவராதல் வேண்டும்.

(2) அத்தகைய வசூலிப்பின் நோக்கத்திற்காக, இந்தச் சட்டத்தின்படி அத்தகைய முறையாவணம் தொடர்பாக வழங்கப்பட்ட சான்றிதழ் எதுவும், அதில் சான்றளிக்கப்பட்ட பொருட்பாடுகளுக்கான அறுதிச் சான்றாகுதல் வேண்டும்.

(3) நீதிமன்றம் தக்கதெனக் கருதுமாயின் அத்தகைய தொகையானது அத்தகைய நபர்கள் தரப்பினர்களாக உள்ள மற்றும் அத்தகைய முறையாவணம் சாட்சியமாக அளிக்கப்பட்டுள்ள உரிமை வழக்கு எதிலும் அல்லது நடவடிக்கை எதிலுமான செலவுகளுக்கான ஆணை எதிலும் உள்ளடக்கப்படலாம். நீதிமன்றமானது அத்தகைய ஆணையில் அந்தத் தொகையை உள்ளடக்கவில்லையெனில், அந்தத் தொகையை வசூலிப்பதற்கான மேலுமான நடவடிக்கைகள் எதுவும் நிலைக்கத்தக்கதாக இருத்தல் கூடாது.

பணத்தண்டம் அல்லது

அதிகப்படியான தீர்வையைத் திருப்பி அளிப்பதற்கு வருவாய் அதிகாரிக்கு உள்ள அதிகாரம்.

49 (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதன்படியும் பணத்தண்டம் எதுவும் செலுத்தப்படுமிடத்து, முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியானவர் அதை செலுத்தும் தேதியில் இருந்து ஓராண்டுக்குள் எழுத்துருவிலான விண்ணப்பம் பெறப்பட்டதன்பேரில், அத்தகைய பணத்தண்டத்தை அல்லது அத்தொகையின் ஏதேனுமொரு பகுதியை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பி அளிக்கலாம்.

(2) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் கருத்தில், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எதன்படியும் சட்டப்படி விதிக்கத்தக்க தொகைக்கு அதிக அளவில் முத்திரைத் தீர்வையானது விதிக்கப்பட்டு செலுத்தப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய அதிகாரி அதை செலுத்தும் தேதியிலிருந்து ஓராண்டுக்குள் எழுத்துருவில் செய்யப்பட்ட விண்ணப்பம் பெறப்பட்டதன் பேரில் அந்த அதிகப்படியான தொகையைத் திருப்பி அளிக்கலாம்.

50 (1) 42-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட முறையாவணம் எதுவும் பரிமாற்றத்தின்போது காணாமல் போயிற்று, அழிந்து போயிற்று அல்லது சேதம் அடைந்துள்ளது எனில், அதனை அனுப்பும் நபர் அத்தகைய இழப்பிற்கு, அழிவிற்கு அல்லது சேதத்திற்கு பொறுப்பாகுதல் கூடாது.

42-ஆம் பிரிவின்படி அனுப்பப்பட்ட முறையா- வணங்களின் இழப்பிற்குப் பொறுப்பாதல் கூடாது எனல்.

(2) முறையாவணம் எதுவும் அவ்வாறு அனுப்பப்படவுள்ளபோது, அது எந்த நபரின் உடைமையில் இருந்து அதனை முடக்கி வைக்கும் நபரின் கைகளுக்கு வந்ததோ அந்த நபர், அவ்வாறு முதலில் குறிப்பிடப்பட்ட நபரின் செலவில் அதன் நகல் ஒன்று அளிக்கப்படுவதற்கும் அத்தகைய முறையாவணத்தை முடக்கி வைக்கும் நபரால் அதிகாரம் அளிக்கப்படுவதற்கும் கோரலாம். பரிமாற்றத்தின்போது அசல் முறையாவணமானது காணாமல் போயிற்று அழிந்து போயிற்று அல்லது சேதமாயிற்று எனும் நேர்வில் மேற்சொன்ன நகலானது அசலாகப் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதற்கு செயல்விளைவு கொடுக்கும் வகையில் சான்றிதழ் ஒன்றானது அதன்மீது மேலெழுத்துச் செய்யப்படுதல்வேண்டும்.

38 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

தீர்வைகளையும்

51. இந்தச் சட்டத்தின்படி செலுத்துவதற்குக் கோரப்படும் தீர்வைகள், பணத்தண்டங்கள் மற்றும் பிற தொகைகள் அனைத்தும் நிலவருவாய் நிலுவைத்தொகை ஒன்றை வசூலிப்பது போன்று வசூலிக்கத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

பணத் தண்டங்- களையும் வசூலித்தல்.

அத்தியாயம் - V.

ஒருசில நேர்வுகளில் முத்திரைத்தாள்களுக்கான சலுகைப் படிகள்.

பாழான முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படிகள்.

52. விசாரணையின்பேரில் அளிப்பதற்குக் கோரப்படவேண்டிய சான்று குறித்து அரசால் செய்யப்படக்கூடிய அத்தகைய விதிகளுக்குட்பட்டு ஆட்சியரானவர், 53-ஆம் பிரிவில் வகுத்துரைக்கப்பட்ட கால அளவுக்குள் செய்யப்படும் விண்ணப்பத்தின்பேரில் அதன் பொருண்மைகள் குறித்துத் தாம் மனநிறைவுகொள்வாராயின், இதன்பின்பு இதில் குறிப்பிடப்படும் நேர்வுகளில், அதாவது:-

(a) நபரெவராலும் காகிதம் எதன் மீதும் எழுதப்பட்ட முறையாவணம் எதுவும் அது நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கவனக்குறைவாகவும் உருத்தெரியாமலும் பாழாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அல்லது பிழையாக எழுதப்பட்டு அல்லது பிற வழி முறைகள் எதனாலும் கருதப்பட்ட நோக்கத்திற்குப் பொருந்தாதவாறு செய்யப்படும் காதிதம் எதனின் மீதான முத்திரைத்தாள் ஒன்றின் நேர்வில்;

(b) முழுமையாக அல்லது பகுதியாக எழுதப்பட்ட ஆனால் கையெழுத்திடப்படாத அல்லது அதன் தரப்பினர் எவராலும் நிறைவேற்றப்படாத ஆவணம் எதனின் மீதான முத்திரைத்தாள் ஒன்றின் நேர்வில்;

(c) அதன் தரப்பினர் எவராலும் நிறைவேற்றப்பட்ட முறையாவணம் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாளானது-

(1) அதன் பின்பு தொடக்கத்திலேயே செல்லாதது என கண்டறியப்படும் நேர்வில்;

(2) பிழை அல்லது தவறு ஏதேனும் அதில் இருக்கின்றது எனும் காரணத்திற்காக, கருதப்படும் நோக்கத்திற்கு பொருந்தாததாக உள்ளது என கண்டறியப்படும் நேர்வில்;

(3) நபர் எவராலும் அது நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்பது தேவையாகுமிடத்து, அந்த நபருடைய மரணத்தின் காரணமாக அதனை நிறைவேற்றாதிருப்பதனால் அல்லது அத்தகைய நபர் அதனை நிறைவேற்றுவதற்கு மறுப்பதன் காரணமாக கருதப்பட்ட வடிவில், கருதப்பட்ட உரிமை மாற்ற நடைமுறைக்கு செயல்விளைவு கொடுக்கும் வகையில் நிறைவுபெற இயலாதநேர்வில்;

(4) அதனை நிறைவேற்றுவதற்கு சில முக்கிய நபர் தேவைப்படும்போது அதனில் கையெழுத்திடுவதற்கு அவரால் இயலாமை அல்லது கையெழுத்திட அவர் மறுப்பதானது, எந்த நோக்கத்திற்காக அது கருதப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக, உண்மையில் நிறைவுறாமலும் போதுமானதாக இல்லாமலும் இருக்கும் நேர்வில்;

(5) அதன்படி நபர் எவரும் செயல்படுவதற்கு அல்லது அதில் உறுதி செய்யக்கருதப்பட்ட பணம் எதனையும் முன்பணமாக செலுத்துவதற்கு மறுப்பதன் காரணமாகவோ அல்லது அதன்படி வழங்கப்பட்ட அலுவல் எதனையும் மறுப்பதன் அல்லது ஏற்றுக்கொள்ளாதிருப்பதன் காரணமாகவோ மொத்தத்தில் கருதப்பட்ட நோக்கமானது தவறும் நேர்வில்;

(6) செயல்விளைவு கொடுப்பதற்குக் கருதப்பட்ட உரிமைமாற்ற நடைமுறையானது, அதே நபர்களுக்கிடையே மற்றும் அதைவிட குறைவான மதிப்புடையதல்லாத முத்திரை ஒன்றைத் தாங்கியுள்ள பிற முறையாவணம் சிலவற்றால் செயல் விளைவுகொண்டிருப்பதன் விளைவாக பயனற்றுப்போகும் நேர்வில்;

(7) அதன் மதிப்பு குறைவாக உள்ள போதும் செயல் விளைவு கொடுக்கப்படிருக்கும் நேர்விலும், செயல்விளைவு கொடுப்பதற்குக் கருதப்பட்ட உரிமை மாற்ற நடைமுறையானது அதே தரப்பினர்களிடையே மற்றும் அதைவிடக் குறைவான மதிப்புடையதல்லாத முத்திரை ஒன்றைத் தாங்கியுள்ள பிற முறையாவணம் சிலவற்றால் செயல்விளைவு கொடுக்கப்பட்டிருக்கும் நேர்வில்;

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 39

(8) அது கவனக்குறைவாகவும் உருத்தெரியாமலும் பாழாக்கப்பட்டு அங்கே அதற்குப் பதிலாக மற்றொரு முறையாவணமானது அதே தரப்பினர்களிடையேயும் அதே நோக்கத்திற்காகவும் நிறைவேற்றம் செய்யப்பட்டு உரியவாறு முத்திரை இடப்பட்டிருக்கும் நேர்வில், பாழான பதிப்புவகை முத்திரைத்தாள்களுக்கான சலுகைப்படிகளை அளிக்கலாம்.

வரம்புரை: ஆனால், நிறைவேற்றப்பட்ட முறையாவணம் ஒன்றானது சாட்சியமாக அளிக்கப்பட்டிருந்த அல்லது அளிக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய அல்லது சாட்சியமாக முன் வைக்கப்பட்டிருந்த அல்லது முன் வைக்கப்பட்டிருந்திருக்கக்கூடிய மற்றும் அந்த முறையாவணமானது இரத்து செய்யப்படுவதற்கு விட்டுவிடப்பட்டுள்ள நேர்வில் சட்ட நடவடிக்கை எதுவும் தொடங்கப்பட்டிருத்தல் கூடாது.

விளக்கம்: முறையாவணம் ஒன்றுக்கு விதிக்கத்தக்க சரியான அல்லது குறைபாடான தீர்வையானது செலுத்தப்பட்டுள்ளது என்பதாக, 35-ஆம் பிரிவின்படி ஆட்சியரால் செய்யப்பட்ட சான்றிதழ் அல்லது மேலெழுத்து அல்லது குறிப்பு ஒவ்வொன்றும் இந்தப்பிரிவின் பொருளுக்குள் பதிப்பு வகை முத்திரைத்தாள் ஒன்று எனப்பொருள்படும்.

52-ஆம் பிரிவின் 53. 52-ஆம் பிரிவின்படி தீர்வழிக்கான விண்ணப்பமானது, பின்வரும் கால அளவுகளுக்குள், அதாவது-

படியான தீர்வழிக்கு விண்ணப்பம் எப்பொழுது செய்யப்படுதல் வேண்டும் எனல்.

(1) (c) (5) எனும் கூறில் குறிப்பிடப்பட்ட நேர்வில் முறையாவணத்தின் தேதியிலிருந்து இரண்டு திங்களுக்குள்;

(2) முத்திரைத்தாள் இடப்பட்ட காகிதம் ஒன்றின் மீது அதற்கான தரப்பினர்கள் எவரும் முறையாவணம் எதனையும் நிறைவேற்றம் செய்திராத நேர்வில், அந்த முத்திரைத்தாள் பாழாக்கப்பட்டதற்குப் பின்பு ஆறு திங்களுக்குள்;

(3) முத்திரைத்தாள் இடப்பட்ட காகிதம் ஒன்றில் அதற்கான தரப்பினர்கள் எவரும் முறையாவணம் ஒன்றை நிறைவேற்றம் செய்துள்ள நேர்வில், அந்த முறையாவணத்தின் தேதிக்குப்பின்பு ஆறு திங்களுக்குள் அல்லது அதில் தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையெனில் அது முதலில் அல்லது தனியே எவரால் நிறைவேற்றப்பட்டதோ அந்த நபரால் அதனின் நிறைவேற்றத்திற்குப் பின்பு ஆறு திங்களுக்குள் செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால்,-

(a) பாழாக்கப்பட்ட முறையாவணமானது போதுமான காரணங்களுக்காக மாநிலத்தை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருக்கும்போது, மாநிலத்தில் அது திரும்பப் பெறப்பட்டதற்குப் பின்பு ஆறு திங்களுக்குள் விண்ணப்பமானது செய்யப்படலாம்;

(b) தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் முறையாவணம் ஒன்றுக்குப் பதிலாக மற்றொரு முறையாவணம் அமைக்கப்பட்டுள்ள முறையாவணம் எதனையும் மேற்சொன்னவாறான காலஅளவுக்குள் இரத்து செய்யப்படுவதற்கு விட்டுவிட இயலாதபோது, அதற்குப் பதிலாக அமைக்கப்பட்ட முறையாவணத்தின் நிறைவேற்றத்தேதிக்குப் பின்னர் ஆறு திங்களுக்குள் விண்ணப்பமானது செய்யப்படலாம்.

தவறாகப் பயன் படுத்தப்பட்ட முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படி.

54. (a) தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் ஒன்றுக்காக, இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகளினால் அத்தகைய முறையாவணத்திற்காக வகுத்துரைக்கப்பட்ட விவரக்குறிப்பு ஒன்று அல்லாத பிற முத்திரைத்தாள் ஒன்றை நபரெவரும் கவனக்குறைவாக பயன்படுத்தியிருக்கும்போது அல்லது தேவைப்படுவதை விட அதிகமான மதிப்புடைய முத்திரைத்தாள் ஒன்றை அல்லது தீர்வை எதுவும் விதிக்கத்தக்கதல்லாத முறையாவணம் ஒன்றுக்காக முத்திரைத்தாள் எதனையும் கவனக்குறைவாகப் பயன்படுத்தியிருக்கும்போது; அல்லது40 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (b) 13-ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு முரணாக அத்தகைய முறையாவணம் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக அது பயனற்றது என 15-ஆம் பிரிவின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் முறையாவணம் ஒன்றுக்குக் கவனக்குறைவாக முத்திரைத்தாள் எதுவும் பயன்படுத்தப்படும்போது,

ஆட்சியரானவர், அந்த முறையாவணத்தின் தேதிக்குப்பின்னர் ஆறு திங்களுக்குள் அல்லது அது தேதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லையெனில் அது முதலில் அல்லது தனியே எவரால் நிறைவேற்றப்பட்டதோ, அந்த நபரால் அது நிறைவேற்றப்பட்டதற்குப் பின்பு ஆறு திங்களுக்குள் செய்யப்படும் விண்ணப்பத்தின்பேரில் மற்றும் அந்த முறையாவணம் அதன் மீது தீர்வை விதிக்கத்தக்கதாக இருந்து முறையான தீர்வையுடன் அது மீண்டும் முத்திரைத்தாள் இடப்பட்டிருப்பின், அவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்ட அல்லது பயனற்றதாகச் செய்யப்பட்ட முத்திரைத்தாளை பாழானது என இரத்து செய்யலாம் மற்றும் அனுமதிக்கலாம்.

பாழாக்கப்பட்ட அல்லது 55. பாழாக்கப்பட்ட அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்ட முத்திரைத்தாள்களுக்காக படித்தொகை எதுவும் வழங்கப்படும் நேர்வு எதிலும், ஆட்சியரானவர் அதற்குப் பதிலாக –

தவறாகப் பயன் படுத்தப்பட்ட முத்திரைத் தாள்களுக்காக படித்தொகை எவ்வாறு வழங்கப்படுதல் வேண்டும் எனல்.

(a) அதே விவரக்குறிப்பு மற்றும் அதே மதிப்புடைய பிற முத்திரைத்தாள்களை வழங்கலாம்; அல்லது

(b) அதே மதிப்புடைய தொகைக்கான பிற விவரக்குறிப்பு எதற்குமான முத்திரைத்தாள்களை அவை கோரப்படுமாயின் மற்றும் தான் பொருத்தமெனக் கருதுவாராயின் வழங்கலாம்; அல்லது

(c) தனது உளத்தேர்வில் அதே மதிப்புடைய பணத்தை அதன் ஒவ்வொரு ரூபாய்க்கும் அல்லது ரூபாய் ஒன்றின் பகுதி ஒவ்வொன்றுக்கும் பத்து பைசா கழித்துக்கொண்டு வழங்கலாம்.

பயன்பாட்டிற்கென கோரப்படாத முத்திரைத் தாள்களுக்கான சலுகைப்படி.

56. நபரெவரும் பாழாக்கப்பட்டிராத அல்லது கருதப்பட்ட நோக்கத்திற்குப் பொருந்தாததாக அல்லது பயனற்றதாகச் செய்யப்பட்ட ஆனால் உடனடியாகத் தான் பயன்படுத்துவதல்லாத முத்திரைத்தாள் ஒன்றை அல்லது முத்திரைத்தாள்களை உடைமையில் கொண்டுள்ளபோது, ஆட்சியரானவர் அத்தகைய முத்திரைத்தாளின் அல்லது முத்திரைத்தாள்களின் மதிப்பிற்கான பணத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கு அல்லது ரூபாய் ஒன்றின் பகுதிக்கு பத்து பைசா கழித்துக்கொண்டு அத்தகைய நபருக்கு திரும்பச் செலுத்துதல் வேண்டும்; ஆட்சியரின் உள நிறைவில் –

(a) அத்தகைய முத்திரைத்தாள் அல்லது முத்திரைத்தாள்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்கானதொரு நல்லெண்ணத்துடன் அத்தகைய நபரால் வாங்கப்பட்டவை;

(b) அதற்கான முழு விலையையும் அவர் செலுத்தியுள்ளார்; மற்றும்

(c) அவை அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட தேதிக்கு அடுத்து முன்னர் ஆறு திங்கள் காலஅளவுக்கு அவை அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டன என்பதாக நிரூபிக்கப்படுவதன்பேரில் அந்த முத்திரைத்தாளானது இரத்து செய்யப்பட்டதாக அத்தகைய நபரிடம் ஒப்படைவு செய்யப்படலாம்:

வரம்புரை: ஆனால், அந்த நபர் ஒரு உரிமம் பெற்ற முத்திரைத்தாள்கள் விற்பனையாளராக இருக்குமிடத்து, ஆட்சியரானவர் தான் தக்கதெனக் கருதுவாராயின் மேற்சொன்னவாறான அத்தகைய கழிவு எதுவுமின்றி அந்த விற்பனையாளரால் உண்மையில் செலுத்தப்பட்ட தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு ஆவன செய்யலாம்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 41

அத்தியாயம்-VI.

மேல் முடிவும் சீராய்வும்.

முதன்மை 57. (1) IV-ஆம் மற்றும் V-ஆம் அத்தியாயத்தின்படியும் 27-ஆம் பிரிவிற்கான முதலாம் வரம்புரையின் (a) எனும் கூறின்படியும் ஆட்சியர் ஒருவரால் செலுத்தத்தக்க அதிகாரங்கள் ஆனவை, அனைத்து நேர்வுகளிலும் முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாதல் வேண்டும்.

வருவாய்ச் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கட்டுப்படுதல் மற்றும் வழக்கினை எடுத்துரைத்தல்.

(2) 34-ஆம் பிரிவு, 43-ஆம் பிரிவு அல்லது 44-ஆம் பிரிவு ஆகியவற்றின்படி செயல்படும் ஆட்சியர் எவரும், முறையாவணம் எதற்கும் விதிக்கத்தக்க தீர்வைத் தொகை குறித்து சந்தேகம் கொள்வாராயின், அந்த வழக்கின் விவரவுரை ஒன்றை வரைந்து மற்றும் அதன்பேரிலான அவரது சொந்தக் கருத்தையும் சேர்த்து முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியின் மேல் முடிவிற்குச் சுட்டியனுப்பலாம்.

(3) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரி வழக்கினை பரிசீலித்து தனது முடிவின் நகல் ஒன்றை, அத்தகைய முடிவிற்கு இணங்கிய வகையில் தீர்வையை கணிக்கவும் விதிக்கவும் செய்யவேண்டிய ஆட்சியருக்கு அனுப்புதல் வேண்டும்.

58. (1) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பானது 56-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி அல்லது பிறவாறு தனக்குச் சுட்டி அனுப்பப்பட்டு தனது கவனத்திற்கு வரும் வழக்கு எதனையும், அதன்பேரிலான தனது சொந்த கருத்துடனும் சேர்த்துக் குறிப்பிட்டு அத்தகைய வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல் முடிவுக்குச் சுட்டியனுப்பலாம்.

முதன்மை வருவாய் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு உயர்நீதி மன்றத்திற்கு வழக்கினை எடுத்துரைத்தல்.

(2) அத்தகைய வழக்கு ஒவ்வொன்றும் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்குக் குறையாத அளவில் முடிவு செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் அதில் வேறுபாடு இருக்கும் நேர்வில் பெரும்பான்மையானவர்களின் கருத்தே மேலோங்கியிருத்தல் வேண்டும்.

59. உயர்நீதிமன்றமானது, அந்த வழக்கில் அடங்கியுள்ள விவர உரைகள் ஆனவை அதன் வாயிலாக எழுப்பப்படும் கேள்விகளை தீர்மானிப்பதற்கு தன்னை இயல்விப்பதற்கு போதுமானதாக உள்ளது என மனநிறைவுகொள்ளாவிடின், எந்த அதிகார அமைப்பால் அது எடுத்துரைக்கப்பட்டதோ அந்த வருவாய் அதிகார அமைப்பிற்கு அதற்கென நீதிமன்றம் பணிக்கக்கூடியவாறான அத்தகைய சேர்க்கைகள் அல்லது மாற்றங்கள் அதனில் செய்வதற்கு அந்த வழக்கைத் திரும்பச் சுட்டி அனுப்பலாம்.

எடுத்துரைக்கப்பட்ட வழக்கு குறித்து மேலுமான விவரங்களை கேட்டுப் பெறுவதற்கான உயர்நீதி மன்றத்தின் அதிகாரம்.

எடுத்துரைக்கப்பட்ட

வழக்கைத் தீர்வு செய்வதில் உள்ள நடைமுறை.

60. (1) உயர்நீதிமன்றமானது வழக்கு எதற்குமான விசாரணையில் அதன் வாயிலாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு முடிவு காணுதல் வேண்டும்; மற்றும் அதன்பேரிலான அந்த முடிவு கண்டறியப்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் அடங்கிய தனது தீர்ப்பை வழங்குதல் வேண்டும்.

(2) நீதிமன்றமானது எந்த அதிகார அமைப்பால் அவ்வழக்கு எடுத்துரைக்கப்பட்டதோ அந்த வருவாய் அதிகார அமைப்புக்கு, நீதிமன்றத்தின் முத்திரையின் கீழும் மற்றும் பதிவாளரின் கையொப்பத்துடனும் உள்ள அத்தகைய தீர்ப்பின் நகல் ஒன்றை அனுப்புதல் வேண்டும்; மற்றும் அந்த வருவாய் அதிகார அமைப்பானது அத்தகைய நகலைப் பெறுவதன்பேரில் அத்தகைய தீர்ப்பிற்கு இணங்கிய முறையில் அந்த வழக்கினைத் தீர்வு செய்தல் வேண்டும்.

பிற நீதிமன்றங்-

களால் வழக்கானது உயர்நீதி மன்றத்திற்கு எடுத்துரைக்கப்- படுதல்.

61. (1) உயர்நீதிமன்றம் ஒன்று அல்லாத பிற நீதிமன்றம் எதுவும் 38-ஆம் பிரிவிற்கான (a) எனும் வரம்புரையின்படியான முறையாவணம் எதனையும் பொறுத்த அளவில் செலுத்தப்படவேண்டிய தீர்வைத்தொகை குறித்து சந்தேகம் கொள்ளுமாயின், அந்த வழக்கின் விவரவுரை ஒன்றை வரைந்து அதன்பேரிலான தனது சொந்த கருத்தையும் சேர்த்து, 57-ஆம் பிரிவின்படி முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பாக இருந்திருந்தால் அதனைத் தான் சுட்டி அனுப்பியிருந்திருக்கக்கூடிய உயர்நீதிமன்றத்திற்கு அதன் மேல் முடிவிற்காகச் சுட்டியனுப்பலாம்.

42 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(2) அத்தகைய நீதிமன்றமானது 58-ஆம் பிரிவின்படி தனக்குச் சுட்டி அனுப்பப்பட்டிருந்தாற்போன்று அந்த வழக்கினைக் கையாளுதல் வேண்டும்; மற்றும் நீதிமன்றத்தின் முத்திரையுடனும் பதிவாளரின் கையொப்பத்துடனுமான தனது தீர்ப்பின் நகல் ஒன்றை முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புக்கும் அத்தகைய நகலைப்பெறுவதன்பேரில் அத்தகைய தீர்ப்பிற்கு இணங்கிய வகையில் அந்த வழக்கை தீர்வு செய்யும், அந்த மேல் முடிவுக்கான சுட்டுகையைச் செய்த மற்றொரு நீதிபதிக்கும் அனுப்புதல் வேண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட மேல்முடிவுக்கான சுட்டுகைகள், மாவட்ட நீதிமன்றம் ஒன்றிற்குக் கீழ் இயங்கும் நீதிமன்றம் ஒன்றினால் செய்யப்படும்போது மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலாக செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் கீழ் நிலையில் உள்ள வருவாய் நீதிமன்றம் எதனாலும் செய்யப்படும்போது அதற்கு அடுத்ததாக மேல் நிலையில் உள்ள நீதிமன்றத்தின் வாயிலாக செய்யப்படுதல் வேண்டும்.

முத்திரைத்

மையச் சட்டம் 2/1974.

தீர்வையின் போதுமான தன்மை குறித்த நீதிமன்றங்- களின் ஒருசில முடிவுகளுக்கான சீராய்வு.

62. (1) நீதிமன்றம் எதுவும் அதன் உரிமையியல் அல்லது வருவாய் அதிகார வரம்பைச் செலுத்தும்போது அல்லது குற்றவியல் நீதிமன்றம் எதுவும் 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின் அத்தியாயம் IX அல்லது அத்தியாயம் X ஆகியவற்றின்படியான நடவடிக்கை எதிலும் முறையாவணம் எதுவும் உரியவாறு முத்திரை இடப்பட்டுள்ளது அல்லது முறையாவணம் எதற்கும் முத்திரைத் தீர்வை தேவைப்படவில்லை என்பதற்குச் சான்றாக அதனை அனுமதிக்கும் ஆணை எதனையும் பிறப்பிக்கும்போது அல்லது 38-ஆம் பிரிவின்படி தீர்வை மற்றும் பணத்தண்டத்தை செலுத்துவதன்பேரில், எந்த நீதிமன்றத்திற்கு மேல்முறையீடுகள் அதில் இருந்து எழுமோ அல்லது மேல்முடிவுக்குச் சுட்டுகை செய்யப்படுமோ அத்தகைய முதலில் குறிப்பிடப்பட்ட நீதிமன்றமானது அவரது சொந்த முயற்சியாலோ அல்லது ஆட்சியரின் விண்ணப்பத்தின் பேரிலோ அத்தகைய ஆணையை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

(2) அத்தகைய நீதிமன்றமானது அத்தகைய பரிசீலனைக்குப்பின்பு, அத்தகைய முறையாவணமானது 39-ஆம் பிரிவின்படியான தீர்வை மற்றும் பணத்தண்டத்தைச் செலுத்தாமல் அல்லது செலுத்தப்பட்ட தீர்வைக்கும் பணத்தண்டத்திற்கும் அதிகமானதொரு தொகையைச் செலுத்தாமல் சான்றாக அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது எனக் கருதுமாயின், அதற்கு செயல்விளைவு கொடுக்கும் வகையில் விளம்புகை ஒன்றைப் பதிவு செய்யலாம்; மற்றும் அத்தகைய முறையாவணத்திற்கு விதிக்கத்தக்க தீர்வைத் தொகையையும் தீர்மானிக்கலாம்; மற்றும் எவருடைய உடைமையில் அல்லது அதிகாரத்தில் அத்தகைய முறையாவணம் அப்போது இருந்ததோ அந்த நபர் எவரையும் அதனை முன்னிலைப்படுத்துவதற்குக் கோரலாம்; மற்றும் முன்னிலைப்படுத்தப்படும்போது அதனை முடக்கி வைக்கலாம்.

(3) (2)-ஆம் உட்பிரிவின்படி விளம்புகை எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளபோது, அதனைப் பதிவு செய்யும் நீதிமன்றமானது அதனின் நகல் ஒன்றை ஆட்சியருக்கு அனுப்புதல் வேண்டும்; மற்றும் அது தொடர்பான அந்த முறையாவணமானது முடக்கி வைக்கப்பட்டுள்ளவிடத்து அல்லது பிறவாறு அத்தகைய நீதிமன்றத்தின் உடைமையில் இருக்குமிடத்து அதோடுகூட அவருக்கும் அத்தகைய முறையாவணத்தை அனுப்புதல் வேண்டும்.

(4) ஆட்சியரானவர் அத்தகைய முறையாவணத்தைச் சான்றாக அனுமதிக்கும் ஆணையில் அல்லது 45-ஆம் பிரிவு அல்லது 47-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட சான்றிதழ் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும் அதன்பேரில், முத்திரைச் சட்டத்திற்கு எதிரான குற்றச்செயலை புரிந்துள்ளதாக ஆட்சியர் தான் கருதும் நபர் எவர் மீதும், எதற்காகவும் அத்தகைய முறையாவணம் தொடர்பாக குற்ற வழக்குத்தொடரலாம்:

வரம்புரை: ஆனால்-

(a) அத்தகைய நீதிமன்றம் தீர்மானித்ததற்கு இணங்கிய வகையில், 38-ஆம் பிரிவின்படி அந்த முறையாவணம் தொடர்பாக செலுத்தத்தக்கதாக இருந்த தீர்வை மற்றும் பணத்தண்டம் உள்ளடங்கலான அந்தத் தொகையானது ஆட்சியருக்கு செலுத்தப்பட்டுள்ளபோது, அந்தக் குற்றச்செயலானது முறையான தீர்வையைச் செலுத்துவதை ஏய்க்கும் நோக்கம் ஒன்றுடன் புரியப்பட்டுள்ளது என தான் நினைத்தாலன்றி அத்தகைய குற்ற வழக்கு எதுவும் தொடங்குதல் கூடாது;

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 43

(b) அத்தகைய குற்ற வழக்கு தொடரும் நோக்கத்திற்காக தவிர, இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட விளம்புகை எதுவும் முறையாவணம் எதனையும் சாட்சியமாக அனுமதிக்கும் ஆணை எதனின் அல்லது 46-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்ட சான்றிதழ் எதனின் செல்லும் தன்மையை பாதித்தல் கூடாது.

அத்தியாயம்-VII.

குற்றச்செயல்களும் நடைமுறையும்

உரியவாறு முத்திரை 63. (1) தீர்வை விதிக்கத்தக்க முறையாவணம் எதுவும் அது உரியவாறு முத்திரை இடப்படாதிருக்கும்போது, அதனை நிறைவேற்றும் அல்லது கையெழுத்திடும் சாட்சி ஒன்றாக அல்லாத பிற நபர் எவரும் அத்தகைய குற்றச் செயல்கள் ஒவ்வொன்றுக்காகவும் ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடன் தண்டிக்கப்படுதல் வேண்டும்:

இடப்படாத முறை- யாவணத்தை நிறைவேற்றுதல் முதலானவற்றிற்- கான தண்டனை.

வரம்புரை: ஆனால், பணத்தண்டம் எதுவும் அத்தகைய முறையாவணம் எதனையும் பொறுத்த அளவில் செலுத்தப்பட்டிருக்கும்போது, அத்தகைய பணத்தண்டத்திற்கான தொகையானது அதனைத் தொடர்ந்து அதே முறையாவணம் தொடர்பாக அத்தகைய பணத்தண்டத்தைச் செலுத்திய அந்த நபரின் மீது இந்தப்பிரிவின்படி விதிக்கப்பட்ட பணத்தண்டம் ஏதேனுமிருப்பின் அதிலிருந்து கழித்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும்.

(2) பங்குச் சான்றாணை ஒன்று உரியவாறு முத்திரை இடப்படாமல் வழங்கப்படுமாயின், அதனை வழங்கும் நிறுமமும் அதோடுகூட அது வழங்கப்பட்ட நேரத்தில் நிறுமத்தின் மேலாண்மை இயக்குநராக அல்லது செயலாளராக அல்லது பிற முதன்மை அலுவலராக உள்ள நபர் ஒவ்வொருவரும், ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடன் தண்டிக்கத்தக்கவராவர்.

ஒட்டு வகை 64. 12-ஆம் பிரிவின்படி ஒட்டுவகை முத்திரை ஒன்றை இரத்து செய்யக் கோரும் நபரெவரும் அந்தப் பிரிவின்படி வகுத்துரைக்கப்பட்ட முறையில் அத்தகைய முத்திரையை இரத்து செய்வதற்கு தவறுகையில், ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடன் தண்டிக்கத்தக்கவராவார்.

முத்திரையை இரத்து செய்யத் தவறுவதற்கான தண்டனை.

20-ஆம் பிரிவின் வகைமுறை- களுக்கு இணங்கத் தவறுவதற்கான பணத்தண்டம்.

65. (3)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (4)-ஆம் உட்பிரிவின்படி கோரப்பட்டவாறான தீர்வையின் வேறுபாட்டினை அல்லது 20-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின்படி கோரப்பட்டவாறான தொகை எதனையும் செலுத்துவதற்குத் தரப்பினர் தவறுமிடத்து, அவர் ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடன் தண்டிக்கத்தக்கவராவார்.

66. அரசினை ஏமாற்றுவதற்கான நோக்கத்துடன் நபர் எவரும்,- 29-ஆம் பிரிவின்

வகைமுறை களுக்கு இணங்காமல் விட்டு விடுவதற்கான பணத்தண்டம்.

(a) 29-ஆம் பிரிவின்படி அத்தகைய முறையாவணத்தில் இருக்கும்படி கோரப்படும் பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் அனைத்தும் முழுமையாக மற்றும் உண்மையாக சொல்லப்பட்டிராத முறையாவணம் எதனையும் நிறைவேற்றினால்; அல்லது

(b) முறையாவணம் எதனின் தயாரிப்பில் அல்லது அது குறித்து பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் அல்லது அதைச் சார்ந்த நபர் எவரும் அத்தகைய பொருண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் அனைத்தையும் அதில் முழுவதுமாக மற்றும் உண்மையாக குறிப்பிடுவதற்குக் கவனமின்றி இருந்தால் அல்லது தவறினால்; அல்லது44 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (c) இந்தச் சட்டத்தின்படியான தீர்வை அல்லது பணத்தண்டம் எதனையும் அரசிடமிருந்து பறிப்பதற்கு எண்ணி பிற செயல் எதனையும் செய்தால், ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய கால அளவு ஒன்றுக்கு மெய்க்காவல் சிறைத் தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டம் ஒன்றுடனோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்.

முத்திரைத் தீர்வைப்

பற்றாக்குறையான தொகையினை வசூலித்தல்

67. (1) இந்தச் சட்டத்தின்படி தீர்வை செலுத்துவதற்குப் பொறுப்புடைய நபர் எவரும் முறையாவணம் எதனின் தொடர்பாக 66-ஆம் பிரிவின்படி குற்றச்செயல் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டிருக்குமிடத்து, குற்றவியல் நடுவர் அத்தகைய குற்றச்செயலுக்காக விதிக்கப்படக்கூடிய தண்டனைக்கும் கூடுதலாக இந்தச் சட்டத்தின்படி அந்த முறையாவணம் தொடர்பாக கொடுபடவேண்டிய தீர்வைத் தொகையை, சுருக்கு முறையில் அத்தகைய நபரிடமிருந்து வசூலித்து ஆட்சியருக்குச் செலுத்துதல் வேண்டும்; மற்றும் ஆட்சியரானவர் அந்த முறையாவணம் தொடர்பாக அதன் பேரில் முறையான தீர்வை விதிக்கப்பட்டுள்ளதென அதன் மீது மேலெழுத்துச் செய்வதன் மூலம் சான்றிதழ் அளித்தல் வேண்டும்:

வரம்புரை: ஆனால், அத்தகைய நபர் அந்த முறையாவணத்தைப் பொறுத்த அளவில் இதற்காக தண்டிக்கப்பட்டாலோ அது தொடர்பாக இந்தச் சட்டத்தின்படி செலுத்தத்தக்க தீர்வைக்காக தொகை எதனையும் ஏற்கெனவே செலுத்தியிருப்பாராயின், குற்றவியல் நடுவரானவர் தீர்வைத் தொகையில் அதற்கான வேறுபாட்டினை மட்டும் வசூலித்தல் வேண்டும்.

மையச் சட்டம்

2/1974.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி வசூலிக்கத்தக்கத் தொகையானது 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின்படி விதிக்கப்பட்ட பணத்தண்டம் ஒன்றாக அது இருந்தாற்போன்று குற்றவியல் நடுவரால் வசூலிக்கப்படுதல் வேண்டும்.

68. முத்திரைத்தாள்களை விற்பனை செய்வதற்கென நியமிக்கப்பட்ட, 72-ஆம் பிரிவின்படி செய்யப்பட்ட விதி எதற்கும் பணிந்து நடக்காத நபர் எவரும் மற்றும் அவ்வாறு நியமனம் செய்யப்படாத நபர் எவரும், ஒரு ரூபாய்க்கான ஒட்டு வகை முத்திரைத்தாள் ஒன்றாக அல்லாத பிற முத்திரைத்தாள் எதனையும் விற்பனை செய்வதற்கு அல்லது விற்பனை செய்ய முனைவதற்கு, ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய கால அளவு ஒன்றுக்கு சிறைத்தண்டனையுடனோ அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டத்துடனோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டிக்கத்தக்கவராவார்.

முத்திரைத்தாள்களின் விற்பனை மற்றும் அதிகாரம் அளிக்கப்படாமல் விற்பனை செய்வது தொடர்பான விதி எதனையும் மீறுவதற்கான தண்டனை.

குற்ற வழக்குகளைத் தொடருதல் மற்றும் நடத்துதல்.

69. (1) இந்தச் சட்டத்தின்படி அல்லது இதன் மூலம் நீக்கம் செய்யப்பட்ட சட்டம் எதனின்படியும் தண்டிக்கத்தக்க குற்றச் செயல் எதனையும் பொறுத்து, குற்ற வழக்கு எதுவும் ஆட்சியரின் அல்லது அரசு பொதுவாக அதிகாரம் அளிக்கும் அல்லது ஆட்சியர் இதற்கென தனியாக அதிகாரம் அளிக்கும் அத்தகைய பிற அலுவலரின் ஒப்பளிப்பு இன்றி தொடங்கப்படுதல் கூடாது.

(2) முதன்மை வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகார அமைப்பு அல்லது பொதுவாக அல்லது தனியாக அதனால் இதற்கென அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர் எவரும், அத்தகைய குற்ற வழக்கு எதனையும் நிறுத்தி வைக்கலாம் அல்லது செலுத்தத்தக்க தீர்வைக்குக் கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாததொரு தொகையை வசூல் செய்வதன் மூலம் அத்தகைய குற்றச்செயல் எதனையும் சமரசம் செய்யலாம்.

(3) அத்தகைய தொகை எதுவும், 51-ஆம் பிரிவில் வகை செய்யப்பட்ட முறையில் வசூலிக்கத்தக்கதாதல் வேண்டும்.

விசாரணைக்கான

மையச் சட்டம் இடம்.

2/1974.

70. முறையாவணம் எதனையும் பொறுத்து இழைக்கப்பட்ட இந்தச் சட்டத்தின்படியான குற்றம் ஒவ்வொன்றும், அத்தகைய முறையாவணம் எங்கு நிறைவேற்றப்பட்டதோ அல்லது காணப்பட்டதோ அல்லது 1973-ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின்படி அத்தகைய குற்றச்செயல் எங்கு விசாரணை செய்யத்தக்கதோ அந்த மாவட்டம் எதிலும் அல்லது பெருமாநகர் பகுதி ஒன்றில் விசாரணை செய்யப்படலாம்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 45

அத்தியாயம் VIII.

துணை வகைமுறைகள்.

புத்தகங்கள்

முதலானவை ஆய்வு செய்வதற்- கென திறந்து

வைக்கப்படுதல் 71. பொது அலுவலர் ஒவ்வொருவரும் தனது பாதுகாப்பில் உள்ள பதிவேடுகள், புத்தகங்கள், காகிதங்கள், ஆவணங்கள், பதிவுறுக்கள், மின்னணு சேமிப்பில் உள்ள தகவல் மற்றும் தகவல் திரும்பப்பெறும் சாதனம் அல்லது ஊடகம் அல்லது நடவடிக்கைகள் எதுவும் கடமை எதனையும் செய்வதற்காக அல்லது கடமை எதனின் தொடர்பாக மோசடி அல்லது விடுபாடு எதனையும் நிரூபணம் செய்வதற்காக அல்லது அதனைக் கண்டுபிடிப்பதற்காக, ஆட்சியரால் எழுத்து மூலமாக அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் எவரையும் தகுந்த நேரங்கள் அனைத்திலும் அத்தகைய பதிவேடுகளை, புத்தகங்களை, காகிதங்களை, ஆவணங்களை, பதிவுறுக்களை, மின்னணு சேமிப்பில் உள்ள தகவலை மற்றும் தகவல் திரும்பப் பெறும் சாதனத்தை அல்லது ஊடகத்தை மற்றும் நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் நோக்கத்திற்காகவும் மற்றும் தான் தேவையெனக் கருதக்கூடிய அத்தகைய குறிப்புகளையும் சாரங்களையும் கட்டணத் தொகை அல்லது கட்டணமின்றி எடுத்துக்கொள்வதற்கும் அனுமதித்தல் வேண்டும்.

விதிகளைச் 72 (1) அரசானது இந்தச் சட்டத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதற்கான விதிகளைச் செய்யலாம்.

செய்வதற்கான அதிகாரம்.

(2) குறிப்பாகவும் முன்சொன்ன அதிகாரத்தின் பொதுப் பாங்கிற்கு ஊறின்றியும் அத்தகைய விதிகள்-

(a) முத்திரை வில்லைகள், முத்திரைத்தாள் இடப்பட்ட காகிதங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும்;

(b) முத்திரை வில்லைகளையும், முத்திரைத்தாள் இடப்பட்ட காகிதங்களையும் முறையாகப் பயன்படுத்துவதற்காகவும், அத்தகைய முத்திரை வில்லை, முத்திரைத்தாள் இடப்பட்ட காகிதங்கள் ஆகியவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடை செய்வதற்காகவும்;

(c) அத்தகைய விற்பனையானது எவரால் மட்டும் நடத்தப்படுதல் வேண்டும் என்பதற்காகவும்;

(d) அத்தகைய நபர்களின் கடமைகள் மற்றும் ஊதியத்திற்காகவும்;

(e) அந்த விதிகளின் வகைமுறை எதனையும் மீறியதற்காக ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாத பணத்தண்டத்தை விதிப்பதற்காகவும் வகைசெய்யலாம்.

(3) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருவதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்;

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வருவதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில் சட்டமன்றப்பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாற்றம் எதனையும் சட்டமன்றப்பேரவையானது செய்யுமாயின் அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை பிறப்பிக்கப்படுதல் கூடாது எனச் சட்டமன்றப்பேரவையானது முடிவு செய்யுமாயின், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையானது, அதன்பின்பு அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும்; அல்லது நேர்விற்கேற்ப, செயல்வடிவம் பெறாமலே போதல் வேண்டும்; எனினும், அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது நீக்கம் செய்வதெதுவும் விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

46 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

அதிகாரங்களை

ஒப்படைவு செய்தல்.

73. (1) அரசானது, 1-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவு, 71-ஆம் பிரிவு மற்றும் இந்தப்பிரிவின் வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ளவை நீங்கலாக, அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின்படியான தனது அதிகாரங்கள் அனைத்தையும் அல்லது அவற்றில் எதனையும் நபர் எவருக்கும் அல்லது அரசின் கீழ் இயங்கும் அதிகார அமைப்பு எதற்கும் ஒப்படைவு செய்யலாம்; மற்றும் அவ்வாறு ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் எதனையும் அதுபோன்ற முறையில் திரும்பப்பெறலாம்.

(2) அரசால் வகுத்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய கட்டுப்பாடுகள், வரம்புகள், நிபந்தனைகள் ஏதுமிருப்பின் அவற்றிற்கு உட்பட்டு, (1)-ஆம் உட்பிரிவின்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் எதனையும் செலுத்துதல் வேண்டும்.

நீதிமன்றக் கட்டணங்கள் குறித்த

காப்பு.

74. நீதிமன்றக் கட்டணங்கள் தொடர்பாக இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், அப்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் செய் சட்டம் எதன்படியும் விதிக்கத்தக்க தீர்வைகளைப் பாதிப்பதாகக் கொள்ளப்படுதல் கூடாது.

தீர்வை அல்லது

படித்தொகையை முழுமையாக்குதல்.

75. இந்தச் சட்டத்தின்படி செய்யப்படவேண்டிய செலுத்தத்தக்க தீர்வைத் தொகை அல்லது படியானது அதன் அடுத்த ரூபாய்க்கு முழுமையாக்கப்படுதல் வேண்டும்; இந்த நோக்கத்திற்காக அத்தகைய தொகை பைசாக்கள் அடங்கிய ரூபாய் ஒன்றின் பகுதி ஒன்றைக் கொண்டிருக்கும்போது, அத்தகைய பகுதி ஐம்பது பைசா அல்லது அதற்கு மேற்பட்டு இருப்பின், அது ஒரு ரூபாய்க்கு உயர்த்தப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய பகுதி ஐம்பது பைசாவிற்குக் குறைவாக இருக்குமாயின் அது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

1899-ஆம் ஆண்டு

மையச் சட்டம்

II/1899.

இந்திய முத்திரைச் சட்டத்தின் பொருந்துகை.

76 (1). தமிழ்நாடு மாநிலத்தில் நடைமுறையில் உள்ளவாறான 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டமானது, சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும் தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும் அளாவி நிற்கும்; மற்றும் அத்தகைய சட்டம் அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையில் III-ஆம் பட்டியலின் 44-ஆம் பதிவில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாட்டிற்குத் தொடர்புடையதாக இருக்கும் வரையில், மேற்சொன்ன அட்டவணையின் I-ஆம் பட்டியலின் 91-ஆம் பதிவில் குறித்துரைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக நடைமுறையில் இருத்தல் வேண்டும்.

மையச் சட்டம்

II/1899.

(2) (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டவாறு தவிர 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டமானது அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையின் III-ஆம் பட்டியலின் 44-ஆம் பதிவில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாட்டிற்குத் தொடர்புடையதாக இருக்கும் வரையில், தமிழ்நாடு மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் மேற்சொன்ன அட்டவணையின் II-ஆம் பட்டியலின் 63-ஆம் பதிவின் கீழ் வரும் ஆவணங்களைப் பொறுத்த அளவில், இதன் மூலம் நீக்கம் செய்யப்படுகிறது:

வரம்புரை: ஆனால், அத்தகைய நீக்கமானது -

(a) மேற்சொன்ன செய் சட்டங்களின் முந்தைய செயல்பாட்டை அல்லது அதன் கீழ் முறையே செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட எதனையும்;

(b) மேற்சொன்ன செய் சட்டங்களின்படி அடையப்பெற்ற உரிமை, சேர்ந்தடைந்த சிறப்புரிமை அல்லது உள்ளான கடப்பாடு அல்லது கடமைப்பொறுப்பு எதனையும்;

(c) மேற்சொன்ன செய் சட்டங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்செயல் எதனின் தொடர்பாகவும் உள்ளான பணத்தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையும்; அல்லது

(d) மேற்சொன்னவாறான அத்தகைய உரிமை, சிறப்புரிமை, கடப்பாடு, கடமைப்பொறுப்பு, தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனின் தொடர்பான விசாரணை, சட்ட நடவடிக்கை அல்லது தீர்வழி எதனையும் மற்றும் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால் தொடங்கக்கூடிய விசாரணை, தொடரக்கூடிய சட்ட நடவடிக்கை அல்லது நிறைவேற்றக்கூடிய தீர்வழி எதனையும், மற்றும் விதிக்கப்படக்கூடிய அத்தகைய பணத்தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதனையும் பாதித்தல் கூடாது.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 47

இணைப்புப் பட்டியல்.

முறையாவணங்களின் மீதான முத்திரைத் தீர்வை.

(3-ஆம் பிரிவைக் காண்க.)

முறையாவணத்தின் விவரக்குறிப்பு. முறையான முத்திரைத் தீர்வை.

(1)

(2)

ஒரு ரூபாய்.

உறுப்பு 1. கடனாளர் ஒருவரால் அல்லது அவரின் சார்பாக (வங்கியாளர் ஒருவரின் வங்கி கணக்குப் புத்தகம் அல்லாத பிற) புத்தகம் எதிலும் அல்லது தனிப்பட்ட காகிதத் துண்டு ஒன்றில், கடன் கொடுப்பவரின் உடைமையில் அத்தகைய புத்தகம் அல்லது காகிதம் இடப்படும்போது அத்தகைய கடனுக்கான சான்றாக அதனை வழங்கும் பொருட்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையில் அல்லது மதிப்பில் எழுதப்பட்ட அல்லது கையெழுத்திடப்பட்ட கடன் ஒன்றுக்கான ஒப்புகைக்கு:

வரம்புரை: ஆனால், அத்தகைய ஒப்புகையானது கடன் செலுத்துவதற்கான உறுதி எதனையுமோ அல்லது வட்டியைச் செலுத்துவற்கான அல்லது பொருள்கள் அல்லது பிற சொத்து எதனையும் ஒப்படைப்பதற்கான நிபந்தனை எதனையுமோ கொண்டிருத்தல் கூடாது.

ஐயாயிரம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு உட்பட்ட பிணை முறிக்கான மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு நான்கு ரூபாய்.

உறுப்பு 2. 1925-ஆம் ஆண்டு இந்திய உரிமை இறக்கச் சட்டத்தின்(மையச் சட்டம் XXXIX/1925) 291- ஆம் பிரிவின் அல்லது 375-ஆம் பிரிவின்படி அல்லது 1873-ஆம் ஆண்டு அரசு சேமிப்பு வங்கிகள் சட்டத்தின் 6-ஆம் பிரிவின்படி (மையச் சட்டம் V/1873) கொடுக்கப்பட்டுள்ள பிணைமுறி ஒன்று உள்ளடங்கலான நிருவாகம் சார்ந்த பிணை முறிக்கு.

ஓராயிரம் ரூபாய்.

உறுப்பு 3. மகவேற்பு ஒன்றைப் பதிவு செய்யும் அல்லது மகவேற்பு செய்வதற்கு அதிகாரம் ஒன்றை அளிக்கும் அல்லது அதிகாரம் அளிப்பதற்குக் கருதும்(விருப்பாவணம் ஒன்று அல்லாத பிற) முறையாவணம் எதற்கும் அதாவது மகவேற்பு ஆவணத்திற்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 4. உறுதிமொழி ஏற்பிற்குப் பதிலாக சட்டத்தின் வாயிலாக உறுதி செய்வதற்கு அல்லது விளம்புகை செய்வதற்கு அனுமதிக்கப்படும் நபர்களின் நேர்வில், உறுதி கூறல் அல்லது விளம்புகை ஒன்று உள்ளடங்கலான ஆணை உறுதிப் பத்திரத்திற்கு.

விலக்களிப்புகள்.-

(a) 1950-ஆம் ஆண்டு தரைப்படைச் சட்டத்தின்படி (மையச் சட்டம் XLVI/1950) ஆள் சேர்ப்புக்கான நிபந்தனை ஒன்றாக;

(b) நீதிமன்றம் எதிலும் அல்லது நீதிமன்றம் எதனின் அலுவலர் முன்பும் உடனடியாக தாக்கல் செய்யப்படும் அல்லது பயன்படுத்தப்படும் நோக்கத்திற்காக; அல்லது48 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (c) நபர் எவரையும் ஓய்வு ஊதியத் தொகை எதனையும் அல்லது அறம்சார்ந்த படி எதனையும் பெறுவதற்கு இயல்விக்கும் ஒரே நோக்கத்திற்காக செய்யப்படும் போதான எழுத்துருவிலான ஆணை உறுதிப் பத்திரம் அல்லது விளம்புகை

உறுப்பு 5. உடன்பாடு அல்லது உடன்பாடு ஒன்றிற்கான

குறிப்பாணையானது-

(1) (A) மாற்று முறையாவணம் ஒன்றின் விற்பனை

தொடர்பானதாக இருக்குமாயின் ;

நூறு ரூபாய் ஒன்றுக்கான பெரும அளவு ஒன்றுக்கு உட்பட்டு கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில், அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

( B) அரசு பிணையம் ஒன்றின் கொள்முதல் அல்லது

விற்பனை தொடர்பானதாக இருக்குமாயின்;

கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அந்த பிணையத்திற்கான மதிப்பின் ஒவ்வொரு ஒரு இலட்ச ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐம்பது பைசா.

( C) பதிவு செய்யப்பட்ட நிறுமம் அல்லது பிற கூட்டுருமம் எதிலும் அல்லது எதனின் பங்குகள், கூடுதல் பங்குகள், இருப்புகள், பிணைமுறிகள், கடனீட்டுப்பத்திரங்கள், கடனீட்டுப்பத்திர இருப்புகள் அல்லது அதுபோன்ற வகையினதான பிற சந்தைப்படுத்தத்தக்க பிணையம் எதனின் கொள்முதல் அல்லது விற்பனை தொடர்பானதாக இருக்குமாயின்-

( i) அத்தகைய உடன்பாடு அல்லது உடன்பாடு ஒன்றிற்கான குறிப்பாணையானது 1956-ஆம் ஆண்டு பிணையங்களுக்கான ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின்படி (மையச் சட்டம் 42/1956) அங்கீகரிக்கப்பட்ட பங்கு மாற்று அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவருடன் அல்லது அவர் மூலமாக அல்லது அதன் உறுப்பினர்களுக்கிடையேயானதாக இருக்கும்போது-

(a) பிணையங்களை ஒப்படைக்கும் நேர்வில்; பிணையமானது கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(b)பிணையங்கள் ஒப்படைவு செய்யப்படாத நேர்வில்; பிணையமானது கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு முப்பது பைசா.

(c) பிணையங்களைத் தேர்வு செய்யும் நேர்வில்; பிணையமானது கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு முப்பது பைசா.

(ii) பிற நேர்வு எதிலும்; பிணையமானது கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 49

விளக்கம்.-இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக, ''பிணையங்களைத் தேர்வு செய்தல்'' எனும் சொற்றொடரானது 1956-ஆம் ஆண்டு பிணையங்களுக்கான ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் (மையச் சட்டம் 42/1956) 2(d) எனும் பிரிவில் அதற்கு குறித்தொதுக்கக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அத்தகைய பொருள்கள் கொள்முதல் அல்லது நேர்விற்கேற்ப விற்பனை செய்யப்படும் நேரத்தில் அதன் மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(D) கூட்டமைவு ஒன்றின் மூலமாக அல்லது பிறவாறு உணவுப் பொருள்கள் அல்லாத ஆனால் மசாலாப் பொருள்கள் உள்ளடங்கலான பண்டங்களுக்கான மற்றும் பணத்தை விற்பனை அல்லது கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பானதாக இருக்குமாயின்.

(2) அசையாச் சொத்தின் விற்பனை தொடர்பானதாக

இருக்குமாயின்.

கருதப்படும் விற்பனைக்கான மறுபயனின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

ஒப்பந்தத்தில் உடன்பட்ட தொகையில் ஒவ்வொரு ஓராயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு இரண்டு ரூபாய்.

(3) (a) உற்பத்திப் பொருள் எதனின் மேம்பாட்டிற்காக பெரும் ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரம் எதனின்; அல்லது ஆதாயங்கள் அல்லது வணிகத்தை அதிலிருந்து அடையக் கருதும் நோக்கம் ஒன்றுடன் செய்யப்படும் நிகழ்ச்சி நிரல் அல்லது நிகழ்வு எதனின் தொடர்பானதாக இருக்குமாயின்;

ஒப்பந்தத்தில் உடன்பட்ட தொகையில் ஒவ்வொரு ஓராயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசா.

(b) நிகழ்வு ஒன்றை அல்லது படச்சுருள் ஒன்றை ஒளி பரப்புவதற்காக, ஒலி பரப்புவதற்காக அல்லது திரையில் காண்பிப்பதற்காக வழங்கப்படும் முழுமையான உரிமைகள் தொடர்பானதாக இருக்குமாயின்;

ஒப்பந்தத்தில் உடன்பட்ட தொகையில் ஒவ்வொரு ஓராயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு இரண்டு ரூபாய்.

(c) ஒப்பந்தத்தின் மதிப்பானது ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்படுமிடத்து நபரெவராலுமான அல்லது நபர்களின் குழுமம் ஒன்றாலான குறித்த வகை நிறைவேற்றம் தொடர்பானதாக இருக்குமாயின்.

(4) கட்டிடத்தின் கட்டுமானம் தொடர்பானதாக

இருக்குமாயின்.

கருதப்பட்ட கட்டுமானத்தின் மதிப்பு அல்லது கட்டுமானத்தின் மதிப்பு அல்லது உடன்பாட்டில் குறித்துரைக்கப்பட்ட மறுபயன் இவற்றில் எது அதிகமோ அதன் மதிப்பிற்கான தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய் ஒன்றுக்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

விளக்கம்.- இந்தக் கூறின் நோக்கத்திற்காக, ''கட்டிடம்'' என்பதில் பிரிக்கப்படாத நிலத்தின் பங்கு ஒன்றில் கட்டுமானம் செய்யக் கருதப்படும் தொகுதி, குடியிருப்பு, வணிகம், நிறுவனம், தொழிலகம் அல்லது பிற வகை சார்ந்த எதுவும் உள்ளடங்கும்.

(5) பிறவாறாக வகை செய்யப்படாதவை நூறு ரூபாய்.

தொடர்பானதாக இருக்குமாயின்50 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு விலக்களிப்பு.- இந்தப்பிரிவின் 1 (D) எனும் கூறின்படி தீர்வை விதிக்கத்தக்க உடன்பாடு ஒன்றாக அல்லது உடன்பாட்டிற்கான குறிப்பாணை ஒன்றாக அல்லது 37-ஆம் உறுப்பின்படி விதிக்கத்தக்க குறிப்பின் அல்லது குறிப்பாணை ஒன்றாக இல்லாத பொருள்களின் அல்லது வணிக சரக்குகளின் கொள்முதலுக்காக அல்லது விற்பனைக்காக அல்லது கொள்முதல் அல்லது விற்பனை தொடர்பான உடன்பாடு அல்லது உடன்பாட்டிற்கான குறிப்பாணை.

உறுப்பு 6. உரிமை மாற்று ஆவணங்களை வைப்பீடு செய்தல், அடகு வைத்தல், ஈடு செய்தல் அல்லது அடைமானம் செய்தல் தொடர்பான உடன்பாட்டுக்கு அதாவது -

அத்தகைய ஆவணத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையின் நூற்றுக்கு 0.5 விழுக்காடு.

(1) சொத்து எதுவாக இருப்பினும் அதற்கான உரிமை மூலத்தை கொண்டிருக்கின்ற அல்லது அதற்குச் சான்றாக இருந்து வருகின்ற (சந்தைப்படுத்தத்தக்க பிணையம் ஒன்று அல்லாத பிற)உரிமை மாற்று ஆவணங்களை அல்லது முறையாவணங்களை வைப்பீடு செய்வதானது பிணையத்தின் மூலமாக செய்யப்பட்டிருக்கின்றவிடத்து அத்தகைய வைப்பீடு தொடர்பான உடன்பாடு ஒன்றுக்குச் சான்றாக அமையும் முறையாவணம் எதற்கும்; அல்லது

அத்தகைய ஆவணத்தால் உறுதியளிக்கப்பட்டுள்ள தொகையின் நூற்றுக்கு 0.5 விழுக்காடு.

(2) கடன் எனும் பேரில் செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படவேண்டிய அல்லது இருந்து வரும் அல்லது எதிர்கால கடன் ஒன்றின் மூலமாக முன்பணமாக செலுத்தப்பட்ட அல்லது செலுத்தப்படவேண்டிய பணத்தை திரும்பச் செலுத்துவதற்காக அசையும் சொத்திற்கான அடகு அல்லது அடைமானம் ஆனது பிணையத்தின் மூலமாக செய்யப்பட்டிருக்கின்றவிடத்து, அத்தகைய வைப்பீடு, அடகு, ஈடுசெய்தல் அல்லது அடைமானம் ஆகியவை தொடர்பான உடன்பாடு ஒன்றுக்குச் சான்றாக அமையும் முறையாவணம் எதற்கும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 51

விளக்கம்.-இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக நீதி மன்றம் எதனின் தீர்ப்புரை, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அல்லது அதிகார அமைப்பு எதனின் ஆணை எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், உரிமை மூல ஆவணங்களை வைப்பீடு செய்தல் தொடர்பான கடிதம், குறிப்பு, குறிப்பாணை அல்லது எழுத்து எதுவும், அந்த உரிமை மூல ஆவணங்களின் வைப்பீட்டிற்கு செயல்விளைவுகொடுப்பதற்கு முன்பு அல்லது செயல்விளைவு கொடுக்கும் நேரத்தில் அல்லது செயல்விளைவு கொடுத்ததற்குப் பின்னர் எழுதப்பட்டதாயினும் அல்லது செய்யப்பட்டதாயினும் மற்றும் அத்தகைய கடிதம், குறிப்பு, குறிப்பாணை அல்லது எழுத்தானது கடன் எதற்குமான பிணையம் எதனின் தொடர்பானதாகவும் இருக்குமாயின், அது உரிமை மூல ஆவணங்களை வைப்பீடு செய்வது தொடர்பான உடன்பாடு ஒன்றுக்குச் சான்றாக அமையும் முறையாவணமாக கொள்ளப்படுதல் வேண்டும்.

விலக்களிப்பு,- (i) மாற்று முறையாவணம் ஒன்றுடன்

இணைந்து வரும் அடைமானத்திற்கான கடிதம்.

(ii) பொருள்களை அடகு செய்வது அல்லது ஈடு செய்வதற்கான முறையாவணம் சான்றொப்பம் இடப்படாதிருக்குமாயின் அம்முறையாவணம்.

நூறு ரூபாய்.

உறுப்பு 7. அதிகாரத்தைச் செலுத்தி அசையும் சொத்தாகவோ அல்லது அசையாச் சொத்தாகவோ உள்ள சொத்து எதற்கும் விருப்பாவணம் ஒன்றாக இல்லாமல் எழுத்துருவில் செய்யப்படும் பொறுப்பாட்சியாளர்களின் நியமனத்திற்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 8. வழக்கு ஒன்றின் நடவடிக்கையில் நீதிமன்றம் ஒன்றின் ஆணை ஒன்றின்படி அல்லாமல் பிறவாறு செய்யப்பட்ட விலை கணிப்பிற்கு அல்லது மதிப்பீட்டிற்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 9. தொழில் பழகுநர், எழுத்தர் அல்லது பணியாள் எவரும் தொழில், வர்த்தகம் அல்லது வேலை எதனையும் கற்றுக்கொள்வதற்காக எஜமானர் எவருடனும் அதனைக் கற்பிக்கும் சேவையைப் பெறுவதற்காக அமர்த்தப்படுவது தொடர்பான எழுத்துருவிலான ஆவணம் ஒவ்வொன்றும் உள்ளடங்கலான தொழில் பழகுநருக்கான ஆவணத்திற்கு.

உறுப்பு 10. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பு விதிகளுக்கு. ஐம்பது இலட்சம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு உட்பட்ட பங்கு முதலீட்டின் ஒவ்வொரு ஐந்து இலட்சம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஓர் ஆயிரம் ரூபாய்.

விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 1 8/2013) 8-ஆம் பிரிவின்படி பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு எதனின் விதிகள்.

52 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

உறுப்பு 11. வழக்கு ஒன்றின் நடவடிக்கையில் நீதி மன்றம் ஒன்றின் ஆணை ஒன்றின் வாயிலாக அல்லாமல் பிறவாறு செய்யப்பட்ட சுட்டுகை ஒன்றின் மீது, பாகப் பிரிவினை ஒன்றுக்குப் பணிப்புரை வழங்கும் தீர்வம் ஒன்றாக இல்லாத, நடு நிலையாளர் அல்லது நடுவர் ஒருவரால் எழுத்துருவில் செய்யப்படும் முடிவு எதற்கும் அதாவது தீர்வத்திற்கு-.

(i) அத்தீர்வமானது பணம் சார்ந்த கோரிக்கை

தொடர்பானதாக இருக்குமாயின்,

ஓர் ஆயிரம் ரூபாய் பெரும அளவுக்கு உட்பட்ட தீர்வைத்தொகையில் நூற்றுக்கு ஒரு விழுக்காடு .

அந்த சொத்தின் சந்தை மதிப்பில் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு.

(ii) அத்தீர்வத்தில் அசையாச்சொத்தைப் பொறுத்த அளவிலான உரிமை அல்லது கடமைப் பொறுப்பு ஒன்றானது இருக்குமாயின் அல்லது அதனை உருவாக்குவதற்கு, உரிமை மாற்றம் செய்வதற்கு, மட்டுப்படுத்துவதற்கு, விரிவுபடுத்துவதற்கு, தவிர்ப்பதற்கு அல்லது பதிவு செய்வதற்குக் கருதப்படுமாயின்;

(iii) பிற நேர்வு எதிலும் ஆயிரம் ரூபாய்.

உறுதியளிக்கப்பட்ட தொகையின் அல்லது மதிப்பின் நூற்றுக்கு ஒரு விழுக்காடு.

உறுப்பு 12. கடனீட்டுப் பத்திரம் ஒன்றாக அல்லாததும் மற்றும் இந்தச் சட்டத்தினால் அல்லது 1955-ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதி மன்றக் கட்டணங்கள் மற்றும் வழக்குகளை மதிப்பீடு செய்தல் சட்டத்தினால்(தமிழ்நாடு சட்டம் XIV/1955) பிறவாறாக வகை செய்யப்பட்டிராததும் 2(3) எனும் பிரிவில் வரையறை செய்யப்பட்டதுமான பிணைமுறிக்கு.

கடன் தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

உறுப்பு13.கடலில் செல்லும் கப்பல் ஒன்றின் எஜமானர் அந்தக் கப்பலை காப்பதற்கும் அதன் பயணத்தைத் தொடருவதற்கும் தன்னை இயல்விப்பதற்கு அந்தக் கப்பலை பிணையமாக்கி அதன்பேரில் கடன் பெறுமிடத்து அதற்கான முறையாவணம் எதற்கும் அதாவது கப்பலை வைத்துக் கடன் பெறும் பிணைமுறிக்கு.

உறுப்பு 14. இரத்து செய்தல்-

(முன்னதாக நிறைவேற்றம் செய்யப்பட்ட முறையாவணம் எதனையும் இரத்து செய்வதற்கு முறையாவணம் எதுவும் உள்ளடங்கலான) இரத்து செய்வதற்கான முறையாவணமானது சான்றொப்பம் இடப்பட்டிருக்குமாயின் மற்றும் -

முதன்மை ஆவணத்தின் வாயிலாக செலுத்தப்பட்டவாறான அதே தீர்வை.

(a) அது விற்பனை அல்லது பரிமாற்றம் அல்லது கொடை அல்லது விடுதலை அல்லது ஏற்பாடு அல்லது பாகப்பிரிவினை ஆகியவற்றிற்காக பிறவாறு வகைசெய்யப்படாது இருக்குமாயின்;

(b) பிற நேர்வு எதிலும் பிறவாறு வகை செய்யப்படாது ஆயிரம் ரூபாய்.

இருக்குமாயின்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 53

விலக்களிப்பு.- விருப்பாவணம் ஒன்றை இரத்து செய்தல் அல்லது நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கான முறையாவணம் .

எழுநூறு ரூபாய்.

உறுப்பு 15. 1961-ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 25/1961) மாநில வழக்குரைஞர் மன்றத்தினால் தயாரிக்கப்பட்டு பேணிவரப்படும் வழக்குரைஞர்களுக்கான பட்டியலில் பதிவு பெற்றதற்கான சான்றிதழுக்கு.

கொள்முதல் பணத்தின் தொகைக்குச் சமமான மதிப்புடைய சந்தை மதிப்பு ஒன்றுக்கான உரிமை மாற்றாவணம் ஒன்றுக்கான அதே தீர்வை (உறுப்பு 21).

உறுப்பு 16. நீதிமன்றம் அல்லது வருவாய் நீதிமன்றம் ஒன்றினால் அல்லது ஆட்சியர் அல்லது அரசின் பிற அலுவலர் ஒருவரால் அல்லது பொது ஏலத்தின் மூலம் சொத்தை விற்பனை செய்வதற்காக செய் சட்டம் எதன்படியும் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற அதிகார அமைப்பு எதனாலும் பொது ஏலத்தின் மூலமாக (தனிப்பட்ட குலுக்கல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்ட சொத்து ஒவ்வொன்றையும் பொறுத்த அளவில்) விற்பனை செய்யப்பட்ட சொத்து எதனையும் வாங்குபவருக்கு வழங்கப்படும் விற்பனைச் சான்றிதழுக்கு.

ஒவ்வொரு ஆயிரம் ரூபாயிக்காக அல்லது பங்குகளின், கூடுதல் பங்குகளின் அல்லது பங்கு இருப்பின் அதனுடைய பகுதியளவிற்காக ஒரு ரூபாய்.

உறுப்பு 17. பதிவுபெற்ற நிறுமம் அல்லது பிற கூட்டுருமம் எதிலும் அல்லது எதனின் பங்குகள், கூடுதல் பங்கு அல்லது பங்கு இருப்பு எதற்குமான அல்லது அத்தகைய நிறுமம் அல்லது கூட்டுருமம் எதிலும் அல்லது எதனின் பங்குகள், கூடுதல் பங்கு அல்லது பங்கு இருப்பு ஆகியவற்றின் உரிமையாளராவதற்கோவான அந்த ஆவணத்தைக் கொண்டிருப்பவரின் உரிமை அல்லது உரிமை மூலத்திற்குச் சான்றாக அமையும் மின்னணு அல்லது பிறவாறான சான்றிதழ் அல்லது பிற ஆவணத்திற்கு.

விளக்கம்.-இந்த உறுப்பின் நோக்கத்திற்காக பங்கு, கூடுதல் பங்கு அல்லது பங்கு இருப்பு ஆகியவற்றின் மதிப்பானது தவணைத் தொகை ஏதுமிருப்பின் அதனையும் உள்ளடக்கும்.

நூறு ரூபாய்.

உறுப்பு 18. (இழுவை நீராவிப் படகு ஒன்றிற்கான வாடகை ஒப்பந்தம் ஒன்றைத் தவிர) கலம் ஒன்று அல்லது அதனின் குறித்துரைக்கப்பட்ட சில முதன்மைப் பகுதியானது அந்த வாடகை ஒப்பந்தத்தின் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக விடப்பட்டிருக்குமிடத்து அது தண்டனைக்கான கூறு ஒன்றை உள்ளடக்கி இருப்பினும் அல்லது இல்லாவிடினும் ஆகிய முறையாவணம் எதற்கும் அதாவது கப்பல் வாடகை ஒப்பந்தத்திற்கு.

54 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நூறு ரூபாய்.

உறுப்பு 19. தனது சொத்தை தனக்கு கடன் கொடுத்தவர்களின் நலனுக்காக உரிமை மாற்றம் செய்யுமிடத்து அல்லது தங்களது கடன்களின் பேரில் பங்கு வீதம் ஒன்றை அல்லது ஈட்டுறுதிப் பங்கு ஒன்றைக் கடன் கொடுத்தவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் அவற்றை உறுதி செய்யுமிடத்து அல்லது தனக்குக் கடன் கொடுத்தவர்களின் நலனுக்காக கடனாளர்களின் வணிகத்தை தொடர்வதற்காக ஆய்வாளர்களின் கண்காணிப்பின் கீழ் அல்லது உரிமத்திற்கான கடிதங்களின்படி வகைமுறை செய்யப்படுமிடத்து கடனாளர் ஒருவரால் நிறைவேற்றம் செய்யப்பட்ட முறையாவணம் எதுவும் அதாவது கூட்டமைவு ஆவணத்திற்கு.

உறுப்பு 20. (52-ஆம் உறுப்பின்படி தீர்வை விதிக்கப்பட்ட அல்லது விலக்களிக்கப்பட்ட உரிமை மாற்றம் ஒன்றாக அல்லாத, 2(8) எனும் பிரிவில் வரையறை செய்யப்பட்டவாறான) -

(a) அசையாச் சொத்திற்கான உரிமை

மாற்றாவணத்திற்கு

உரிமை மாற்றாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்து ரூபாய்.

(ii) உரிமை மாற்றாவணத்தின் பொருட்பாடாக உள்ள, உரிமை மாற்றம் செய்யும் நிறுமத்தின் அசையாச் சொத்திற்கான சந்தை மதிப்பின் நூற்றுக்கு 2 விழுக்காடு;

(b) 1956-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்(மையச் சட்டம் 1/1956) 394-ஆம் பிரிவின்படி நிறுமங்களின் ஒருங்கிணைப்பு அல்லது மறு கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்த அளவிலான உயர் நீதிமன்றத்தின் ஆணை தொடர்பானதாக அல்லது 1949- ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தின் (மையச் சட்டம் 10/1949) 44A எனும் பிரிவின்படி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணை தொடர்பானதாக அந்த உரிமை மாற்றாவணம் இருப்பின் அதற்கு;

(ii) உரிமை மாற்றாவணத்தின் பொருட்பாடாக உள்ள, பரிமாற்றத்தில் அல்லது பிறவாறாக வழங்கப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும் பங்குகளின் அல்லது பிற சந்தைப்படுத்தத்தக்க பிணையங்களின் சந்தை மதிப்பிற்கான மொத்தத் தொகை மற்றும் அத்தகைய ஒருங்கிணைப்பிற்காக செலுத்தப்பட்ட மறுபயனுக்கான தொகை, இவற்றில் எது அதிகமோ அத்தொகையின் நூற்றுக்கு 0.6 விழுக்காடு.

(c) மேற்சொன்ன (b) எனும் கூறில் அல்லாத பிற அசையும் சொத்திற்கான உரிமை மாற்றாவணத்திற்கு.

முறையாவணத்தில் அறிவிக்கப்பட்ட சொத்தின் மதிப்பில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்து ரூபாய்.

விளக்கம் (i).- (b) எனும் கூறின் நோக்கங்களுக்காக,-

(a) எந்த நிறுமத்தின் பங்குகள், பங்கு மாற்று அலுவலகம் ஒன்றின் பேரிலான வர்த்தகத்திற்காக பட்டியலிடப்பட்டு மற்றும் குறியிடப்பட்டுள்ளதோ அந்த உரிமை மாற்றம் பெறும் நிறுமம் தொடர்பாக, பங்குகளின் சந்தை மதிப்பு என்றால், ஒருங்கிணைத்தலுக்கான திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறான குறிக்கப்பட்ட நாளில் அல்லது அவ்வாறு குறிக்கப்படும் நாள் நிச்சயிக்கப்படாதவிடத்து, உயர்நீதிமன்றத்தின் ஆணையின் தேதியில் உள்ளவாறான பங்குகளின் சந்தை மதிப்பு எனப்பொருள்படும்; மற்றும்தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 55 (b) எந்த நிறுமத்தின் பங்குகள், பங்கு மாற்று அலுவலகம் ஒன்றின் பேரிலான வர்த்தகத்திற்காக பட்டியலிடப்படாமல் அல்லது பட்டியலிடப்பட்டு ஆனால் குறியிடப்படாமல் உள்ளதோ அந்த உரிமை மாற்றம் பெறும் நிறுமம் தொடர்பாக பங்குகளின் சந்தை மதிப்பு என்றால், உரிமை மாற்றம் செய்யும் நிறுமத்திற்கான பங்குகளின் சந்தை மதிப்பு குறித்து வழங்கப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும் அல்லது உரிமை மாற்றம் பெறும் நிறுவனத்திற்கு அதன் தரப்பைக் கேட்பதற்கான நியாயமான வாய்ப்பு ஒன்றை வழங்கியதற்குப் பின்பு ஆட்சியரால் தீர்மானிக்கப்பட்டவாறான பங்குகளின் சந்தை மதிப்பு எனப்பொருள்படும்.

விளக்கம் (ii).- (b) எனும் கூறின் நோக்கங்களுக்காக, பரிமாற்றத்தில் அல்லது பிறவாறாக வழங்கப்படும் அல்லது ஒதுக்கீடு செய்யப்படும் பங்குகளின் எண்ணிக்கை என்றால், குறிக்கப்பட்ட தேதியில் பரிமாற்றத்திற்கான விகிதாச்சாரப்படி உரிமை மாற்றம் செய்யும் நிறுமத்தால் கணக்கீடு செய்யப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை எனப்பொருள்படும்.

விலக்களிப்பு.- 1957-ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டத்தின் (மையச் சட்டம் 14/1957) 18-ஆம் பிரிவின்படி உரிமை மாற்றம் செய்யப்படும் பதிப்புரிமை.

நூறு ரூபாய்.

உறுப்பு 21. பொது அலுவலர் எவராலும் அல்லது அவரது ஆணையின்படி உண்மை நகல் ஒன்று அல்லது அதன் சுருக்கம் ஒன்று என்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்ட மற்றும் நீதிமன்றக் கட்டணங்கள் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின்படி தீர்வை விதிக்கத்தக்கதல்லாத நகல் அல்லது அதன் சுருக்கத்திற்கு.

விலக்களிப்பு.- (a) பொது அலுவலகம் எதிலும் உள்ள பதிவுறுக்காக அல்லது பொது நோக்கம் எதற்காகவும், பொது அலுவலர் ஒருவர் கொடுப்பதற்கு அல்லது அளிப்பதற்கு சட்டத்தினால் வெளிப்படையாகக் கோரப்படும் காகிதம் எதனின் நகல்.

(b) பிறப்பு, ஞானஸ்நானம், இலக்கு, உரிமை ஒப்படைப்பு, திருமணங்கள், விவாகரத்துகள், இறப்புகள் அல்லது புதைத்தல்கள் தொடர்பான பதிவேடு எதிலிருந்தும் அதனின் நகல் அல்லது சுருக்கம்.

நூறு ரூபாய்.

உறுப்பு 22. தீர்வை விதிக்கத்தக்க மற்றும் முறையான தீர்வையானது அதன் தொடர்பாக செலுத்தப்பட்டிருக்கின்ற முறையாவணம் எதனின் எதிர் பிரதி அல்லது அதன் போலி.

56 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

விலக்களிப்பு.- உழவர் ஒருவருக்கு வழங்கப்படும் குத்தகை எதுவும், அத்தகைய குத்தகையானது தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளபோது அதனின் எதிர் பிரதி.

நூறு ரூபாய்.

உறுப்பு 23. அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனின் வகைமுறைகளை அல்லது சுங்கத்துறை அல்லது ஆயத்துறை எதனின் அலுவலர் எவரின் பணிப்புரையைத் தொடர்ந்து அல்லது சுங்கத்துறை அல்லது ஆயத்துறை ஆகியவற்றின் கடமைகள் எதனையும் பொறுத்து அல்லது மோசடிகள் அல்லது வரி ஏய்ப்புகள் ஆகியவற்றைத் தடைசெய்வதற்காக அதனின் அல்லது அதனோடு தொடர்புடைய பிற பொருட்பாடு அல்லது பொருள் எதற்காகவும் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி எதுவும் அதாவது சுங்கத்துறை பிணைமுறிக்கு அல்லது ஆயத்துறை பிணைமுறிக்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 24. செயற்கைத் துறைமுகம் அல்லது துறைமுகம் எதிலும் அல்லது வாடகை அல்லது கூலியின் பேரில் சரக்குகள் சேமிக்கப்பட்டுள்ள அல்லது வைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கு எதிலும் அல்லது நாவாய்த்துறை எதன் மீதும் இருக்கும் சரக்குகள் எதனையும் ஒப்படைவு செய்வதற்கு, அதில் குறிப்பிடப்பட்ட நபர் எவருக்கும் அல்லது அவரால் உரிமை மாற்றம் பெறும் நபருக்கு அல்லது அதனைக் கொண்டிருப்பவருக்கு உரிமை அளிக்கும் முறையாவணம் எதுவும், அதிலுள்ள சொத்தின் விற்பனை அல்லது உரிமை மாற்றத்தின் பேரில் அத்தகைய சரக்குகளின் மதிப்பானது ஓர் ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்டு இருக்கும்போது அத்தகைய சரக்குகளின் உரிமையாளரால் அல்லது அவரின் சார்பாக கையெழுத்திடப்பட்டிருக்கும் அத்தகைய முறையாவணத்திற்கு, அதாவது அந்த சரக்குகள் தொடர்பான ஒப்படைவு ஆணைக்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 25. நபரெவரும் தனது திருமணத்தை முடிவுறச்செய்வதை செயல்விளைவுக்குக் கொண்டு வரும் முறையாவணம் எதற்கும் அதாவது விவாகரத்திற்கான முறையவாணத்திற்கு.

உறுப்பு 26. சொத்தின் பரிமாற்றத்திற்கான

முறையாவணத்திற்கு.

பரிமாற்றத்தின் பொருட்பாடாக உள்ள பெருமதிப்புடைய சொத்தின் சந்தை மதிப்பிற்குச் சமமான சந்தை மதிப்பு ஒன்றுக்கான உரிமை மாற்றளிப்பு (உறுப்பு 20) ஒன்று என்பதற்கான அதே தீர்வை.

உறுப்பு 27. அடைமானம் செய்யப்பட்ட சொத்தின் மீது

மேலுமொரு பொறுப்பை விதிக்கும் -

அத்தகைய முறையாவணத்தினால் உறுதி செய்யப்பட்ட மேலுமான பொறுப்பிற்கான தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு மூன்று ரூபாய் .

(a) 34-ஆம் உறுப்பின் (a) எனும் கூறில் சுட்டப்பட்டுள்ள விவரக்குறிப்பு ஒன்றாக அசல் அடைமான ஆவணம் உள்ளபோது (உடைமையுடன் கூடிய அடைமானம்);

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 57

(b) 34-ஆம் உறுப்பின் (b) எனும் கூறில் சுட்டப்பட்டுள்ள விவரக்குறிப்பு ஒன்றாக அத்தகைய அடைமானமானது உள்ளபோது (உடைமையுடன் கூடியதல்லாத அடைமானம்),-

(i) மேலுமான பொறுப்பிற்கான முறையாவணத்தின் நிறைவேற்றத்தின்போது அத்தகைய முறையாவணத்தின்படி சொத்தின் உடைமையானது வழங்கப்பட்டால் அல்லது வழங்கப்படுவதற்கு உடன்பட்டால்;

அத்தகைய அசல் அடைமானம் மற்றும் மேலுமான பொறுப்பின் பேரில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தீர்வைபோக (அசல் அடைமானம் மற்றும் ஏற்கெனவே செய்யப்பட்ட மேலுமான பொறுப்பு உள்ளடங்கலாக) பொறுப்பிற்கான தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு மூன்று ரூபாய்.

(ii) உடைமையானது அவ்வாறு வழங்கப்படாதிருக்கு

மாயின்

அத்தகைய முறையாவணத்தினால் உறுதி செய்யப்பட்ட மேலுமான பொறுப்பிற்கான தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய் .

உறுப்பு 28. ஏற்பாடு அல்லது விருப்பாவணம் அல்லது உரிமை மாற்றம் ஒன்றாக இல்லாத கொடை முறையாவணமானது,-

(i) குடும்ப உறுப்பினருக்குச் சாதகமாக உள்ளபோது; கொடையாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய் .

(ii) பிற நேர்வு எதிலும், கொடையாவணத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பிற்கான உரிமை மாற்றளிப்பு (உறுப்பு 20) ஒன்று என்பதற்கான அதே தீர்வை .

விளக்கம்.- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக 'குடும்பம்' எனும் சொல் 39-ஆம் உறுப்பின்படி வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

உறுப்பு 29. ஈட்டுறுதிப் பிணைமுறி. இரு நூறு ரூபாய்.

உறுப்பு 30. கீழ் குத்தகை அல்லது உள் குத்தகை ஒன்று உள்ளடங்கலான குத்தகைக்கு மற்றும் வாடகைக்கு அல்லது உள் வாடகைக்கான உடன்பாடு எதற்கும்-

(a) குத்தகைக்கான கால அளவானது

30-ஆண்டுகளுக்கு மேற்படாமல் இருக்குமிடத்து;

மொத்த வாடகை தொகை மற்றும் பணத்தண்டம், தவணைத் தொகை அல்லது முன்பணம் ஆகியவற்றின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(b) குத்தகைக்கான கால அளவானது முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஆனால் நூறு ஆண்டுகளுக்கு மேற்படாது இருக்குமிடத்து;

மொத்த வாடகை தொகை மற்றும் பணத்தண்டம், தவணைத் தொகை அல்லது முன்பணம் ஆகியவற்றின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்து ரூபாய்.

(c) குத்தகைக்கான கால அளவானது நூறு

ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருக்குமிடத்து;

குத்தகையின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஐந்து ரூபாய்:

வரம்புரை: ஆனால், குத்தகைக்கான உடன்பாடு ஒன்றானது, குத்தகை ஒன்றிற்காக கோரப்படும் விலை மதிப்பீட்டின்படியான முத்திரைத் தீர்வையுடன் முத்திரை இடப்பட்டிருக்கும்போது மற்றும் அத்தகைய உடன்பாட்டிற்கு இணங்கிய வகையில் குத்தகை ஒன்று அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டிருக்கும்போது அத்தகைய குத்தகையின்பேரிலான தீர்வையானது நூறு ரூபாய்க்கு மேற்பட்டிருத்தல் கூடாது.

58 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

விலக்களிப்பு.- வரையறுக்கப்பட்ட கால அளவு ஒன்று சொல்லப்பட்டிருக்கும்போது மற்றும் அத்தகைய காலஅளவு ஓர் ஆண்டுக்கு மேற்படாமல் இருக்கும்போது அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆண்டு வாடகையின் சராசரியானது நூறு ரூபாய்க்கு மேற்படாது இருக்கும்போது பணத்தண்டம் அல்லது தவணைத் தொகை எதனையும் செலுத்தாமல் அல்லது ஒப்படைவு செய்யாமல் (உணவு அல்லது குடிநீர் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக மரங்களின் குத்தகை ஒன்று உள்ளடங்கலான) பயிரிடும் நோக்கங்களுக்காக உழவர் ஒருவர் என்கின்ற நேர்வில் நிறைவேற்றம் செய்யப்பட்ட குத்தகை.

விளக்கம்.-குத்தகை பெறுபவர் ஒருவர் குத்தகை கொடுப்பவரிடமிருந்து சட்டத்தின் வாயிலாக வசூலிக்கத்தக்கதாக உள்ள அத்தகைய அரசு வருவாய், நில உரிமையாளருக்கான மேல் வரிகளின் பங்கு அல்லது உடைமையாளருக்கான நகராட்சித் தீர்வைகள் அல்லது வரிகளின் பங்கு என்பதான கட்டணம் எதனையும் செலுத்துவதற்கு உறுதியளிக்கும்போது, குத்தகை பெறுபவர் செலுத்துவதற்கு அவ்வாறு உடன்பட்ட அந்தத் தொகையானது வாடகையின் பகுதியாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பத்து ரூபாய்.

உறுப்பு 31. நிறுமம் எதிலும் அல்லது கருதப்பட்ட நிறுமம் எதிலுமான அல்லது நிறுமம் எதனாலும் அல்லது கருதப்பட்ட நிறுமம் எதனாலும் எடுத்துக்கொள்ளப்படும் கடன் எதனையும் பொறுத்த அளவிலான பங்குகளின் ஒதுக்கீட்டிற்கான கடிதத்திற்கு.

நூறு ரூபாய்.

உறுப்பு 32. கடன்பெறுபவர் ஒருவருக்கும் அவருக்கு கடன் கொடுப்பவருக்கும் இடையே, குறித்துரைக்கப்பட்ட கால அளவு ஒன்றுக்காக பின்னவர் தங்களுடைய கோரிக்கைகளை நிறுத்தி வைக்கும் மற்றும் கடன் பெறுபவரை அவரது சொந்த உளத்தேர்வில் வணிகத்தை மேற்கொள்வதற்கு அனுமதிக்கும் உடன்பாடு எதற்கும் அதாவது, உரிமக் கடிதத்திற்கு.

உறுப்பு 33. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பு விதிக்

குறிப்பானது-

ஐந்நூறு ரூபாய்.

(a) 1956-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 1/1956) சங்க அமைப்பு விதிகளுடன் இணைக்கப்பட்டிருக்குமாயின்;

(b) அவ்வாறு இணைக்கப்படாதிருக்குமாயின். 10-ஆம் பிரிவின்படி சங்க அமைப்பு விதிகளின்பேரில்

விதிக்கத்தக்கவாறான அதே தீர்வை.

விலக்களிப்பு.- ஆதாயத்திற்காக உருவாக்கப்படாத மற்றும் 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பெறாத நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பு விதிக் குறிப்பு.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 59

உறுப்பு 34. உரிமை மூல ஆவணங்களை வைப்பீடு செய்தல், அடகு, ஈடு செய்தல் அல்லது அடைமானம் (உறுப்பு 6), கப்பலை வைத்துக் கடன் பெறும் பிணைமுறி (உறுப்பு 13), பயிர் ஒன்றிற்கான அடைமானம் (உறுப்பு 35), பொறுப்பு சார்ந்த பிணைமுறி (உறுப்பு 46) அல்லது பிணையத்திற்கான பிணைமுறி (உறுப்பு 47) ஆகியவை தொடர்பான உடன்பாடு ஒன்றாக அல்லாத அடைமான ஆவணத்திற்கு,-

அத்தகைய ஆவணத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்ட அந்தத் தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு மூன்று ரூபாய்.

(a) அத்தகைய ஆவணத்தில் அடங்கியுள்ள அசையா சொத்தின் அல்லது அச்சொத்தின் பகுதி எதனின் உடைமையை அடைமானம் கொடுப்பவர் வழங்கும்போது அல்லது வழங்குவதற்கு உடன்படும்போது;

உறுதி செய்யப்பட்ட அந்தத் தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(b) மேற்சொன்னவாறு உடைமையை வழங்காதபோது அல்லது வழங்குவதற்கு உடன்படாதபோது.

விளக்கம்.- (1) அடைமானம் செய்பவர் ஒருவர், அடைமானம் செய்யப்பட்ட சொத்தின் அல்லது அதனின் பகுதிக்கான வாடகைத் தொகைகளை வசூலிப்பதற்குப் பொது அதிகாரப் பத்திரம் ஒன்றை அடைமானம் பெறுபவருக்கு வழங்கினால் அல்லது வழங்கியிருந்தால் அல்லது குத்தகை ஒன்றை அடைமானம் பெறுபவருக்கு வழங்கினால் அல்லது வழங்கியிருந்தால், அது இந்தப்பிரிவின் பொருளுக்குள் அதனின் உடைமையானது வழங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) அடைமான ஆவணம் ஒன்று நிறைவேற்றப்படாமல் அடைமானம் செய்பவருக்கு அடைமானத்திற்கான உடன்பாடு ஒன்றின் நேர்வில் அத்தகைய உடன்பாடு ஒன்றினால் உறுதி செய்யப்படுவதற்குக் கருதப்பட்ட அந்தத் தொகை அல்லது அதனின் பகுதி முன்பாக செலுத்தப்படுமிடத்து அல்லது பிரித்துக் கொடுக்கப்படுமிடத்து, அத்தகைய அடைமானத்திற்கான உடன்பாடு ஒன்றானது 2-ஆம் பிரிவின் (21)-ஆம் கூறில் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தப் பிரிவின்படி அத்தகைய முன்பணம் அல்லது பிரித்துக் கொடுத்தலானது பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ செய்யப்பட்ட தேதியில் அடைமான ஆவணம் ஒன்றாக தீர்வை விதிக்கத்தக்கதாதல் வேண்டும்.

உறுதி செய்யப்பட்ட முதல் நிலை தொகையில் நூற்றுக்கு 0.5 விழுக்காடு.

(c) முதல் நிலை அல்லது ஆரம்ப நிலை பிணையமானது உரியவாறு முத்திரைத்தாள் இடப்பட்டுள்ள விடத்து மேலே குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக இணையான அல்லது துணையான அல்லது கூடுதலான அல்லது பதிலியான பிணையம் அல்லது மேலுமான வழியில் உறுதியளிக்கப்படும் போது.

60 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

விலக்களிப்பு.- 1883-ஆம் ஆண்டு நில மேம்பாட்டுக் கடன்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 19/1883) அல்லது 1884-ஆம் ஆண்டு வேளாண் பயிரிடுவோர்களுக்கான கடன்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 12/1884) முன்பணங்களை எடுக்கும் நபர்களால் அல்லது தங்களின் பிணையதாரர்களால் அத்தகைய முன்பணங்களை திரும்பச் செலுத்துவதற்கான பிணையமாக நிறைவேற்றப்பட்ட முறையாவணங்கள்.

அத்தகைய ஆவணத்தினால் உறுதி செய்யப்பட்ட தொகையில் நூற்றுக்கு 0.5 விழுக்காடு.

உறுப்பு 35. பயிர் ஒன்றிற்கான அடைமானம் எதன்பேரிலும், அடைமானம் செய்யும் நேரத்தில் அந்தப் பயிர் இருப்பினும் அல்லது இல்லாவிடினும் அளிக்கப்பட்ட கடன் ஒன்றை திரும்பச் செலுத்துவதை உறுதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றிற்குச் சான்றாக அமையும் முறையாவணம் எதுவும் உள்ளடங்கலான பயிர் ஒன்றிற்கான அடைமானத்திற்கு.

இருபது ரூபாய்.

உறுப்பு36.சான்றுறுதி அலுவலர் ஒருவர் தனது அலுவலகத்தின் அலுவல்களை நிறைவேற்று- கையில், அவரால் அல்லது சான்றுறுதி அலுவலர் ஒருவராக சட்டப்படியாகச் செயல்படும் பிற நபர் எவராலும் செய்யப்பட்ட அல்லது கையெழுத்திடப்பட்ட மறுப்புரை ஒன்றாக (பிரிவு 42) இல்லாத முறையாவணம், மேலெழுத்து, குறிப்பு, சான்றொப்பம், சான்றிதழ் அல்லது பதிவு எதற்கும், அதாவது சான்றுறுதி சார்ந்த நடவடிக்கைக்கு.

உறுப்பு 37. தரகர் அல்லது முகவர் ஒருவர் தனக்கு அதிகாரம் அளிக்கும் முதல்வருக்கு அத்தகைய முதல்வரின் சார்பாக -

ஒரு ரூபாய்.

(a) இருபது ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட பொருள்கள் எதனின் கொள்முதல் அல்லது விற்பனையைத் தெரிவித்து அனுப்பும் குறிப்பிற்கு அல்லது குறிப்பாணைக்கு.

அந்த பங்கு இருப்பின் அல்லது பிணையத்திற்கான மதிப்பின் ஒவ்வொரு பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு நாற்பது பைசா.

(b) நூறு ரூபாய் மதிப்பிற்கு மேற்பட்ட பங்கு இருப்பு அல்லது சந்தைப்படுத்தத்தக்க பிணையம் எதனின் கொள்முதல் அல்லது விற்பனையைத் தெரிவித்து அனுப்பும் குறிப்பிற்கு அல்லது குறிப்பாணைக்கு.

உறுப்பு 38. கப்பல் ஒன்றின் எஜமானரால் செய்யப்படும் இருபது ரூபாய்.

மறுப்புரைக் குறிப்பிற்கு.

உறுப்பு 39. (2(17) எனும் பிரிவில் வரையறை செய்யப்பட்டவாறான) பாகப்பிரிவினைக்கான முறையாவணத்திற்கு,-

(a) அந்த பாகப்பிரிவினைக்கான முறையாவண- மானது குடும்ப உறுப்பினர்களிடையேயானதாக இருக்குமாயின்;

பாகப்பிரிவினையின் கீழ் இருக்கும் சொத்தின் பங்கு ஒவ்வொன்றிற்குமான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(b) பிற நேர்வு எதற்கும். பாகப்பிரிவினையின் கீழ் இருக்கும் சொத்தின் பங்கு ஒவ்வொன்றிற்குமான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு நான்கு ரூபாய்:

வரம்புரை: ஆனால்,-தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 61 (a) சொத்தை பல பாகங்களாகப் பிரிப்பதற்கான உடன்பாடு ஒன்றைக் கொண்டுள்ள பாகப்பிரிவினைக்கான முறையாவணமானது நிறைவேற்றப்பட்டுள்ள போது மற்றும் அத்தகைய உடன்பாட்டினைத் தொடர்ந்து பாகப்பிரிவினை ஒன்றுக்குச் செயல் விளைவு கொடுக்கப்பட்டுள்ளபோது, அத்தகைய பாகப்பிரிவினையை செயல்விளைவு கொள்ளச்செய்யும் முறையாவணத்தின் மீது விதிக்கத்தக்க தீர்வையானது, அந்த முதல் முறையாவணத்தைப் பொறுத்து செலுத்தப்பட்ட தீர்வைத்தொகையினால் கழித்துக் கொள்ளப்படுதல் வேண்டும். ஆனால் அது நூறு ரூபாய்க்கு குறைவாக இருத்தல் கூடாது.

(b) பாகப்பிரிவினை ஒன்றைச் செயல் விளைவுக் கொள்ளச் செய்வதற்கான இறுதி ஆணை ஒன்றானது அல்லது இசைவுத் தீர்வாளர் ஒருவரால் பாகப்பிரிவினை ஒன்றுக்கு பணிப்புரை வழங்கும் தீர்வம் ஒன்றானது, வருவாய் அதிகார அமைப்பு எதனாலும் அல்லது உரிமையியல் நீதிமன்றம் எதனாலும் பிறப்பிக்கப்படுமிடத்து அத்தகைய ஆணை அல்லது தீர்வத்தினைத் தொடர்ந்து அதன்படி நிறைவேற்றப்படும் பாகப்பிரிவினைக்கான முறையாவணம் ஒன்று அதற்காகக் கோரப்படும் முத்திரைத்தாளுடன் முத்திரைத்தாள் இடப்பட்டிருக்குமிடத்து அத்தகைய முறையாவணத்தின் மீதான தீர்வைத்தொகையானது நூறு ரூபாய்க்கு மேற்பட்டிருத்தல் கூடாது.

விளக்கம்.-இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக, 'குடும்பம்' என்பதில் தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், முன்னரே இறந்துபோன மகனின் மனைவி, முன்னரே இறந்துபோன மகளின் கணவன், பேரக்குழந்தை, சகோதரன் அல்லது சகோதரி ஆகியோர் அடங்குவர்.

உறுப்பு 40. கூட்டாண்மை.-

(a) கூட்டாண்மைக்கான முறையாவணத்திற்கு. ஆயிரம் ரூபாய்.

(b) கூட்டாண்மை நிறுமம் ஒன்று, அது கலைப்பிற்கு உட்பட்டிருப்பினும் அல்லது இல்லாவிடினும் அதன் சொத்துக்களுக்கான பாகப்பிரிவினையானது,-

(i) குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஆனதாக

இருப்பின்;

பாகப்பிரிவினையின் கீழ் உள்ள பங்கு ஒவ்வொன்றிற்குமான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(ii)குடும்ப உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கிடையேயானதாக இருப்பின்;

பாகப்பிரிவினையின் கீழ் உள்ள பங்கு ஒவ்வொன்றிற்குமான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஏழு ரூபாய்.

(c) சொத்தின் பாகப்பிரினையை உள்ளடக்கியிராத முந்நூறு ரூபாய்.

கூட்டாண்மை நிறுமம் ஒன்றின் கலைப்பிற்கு;

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, 'குடும்பம்' எனும் சொல் 39-ஆம் உறுப்பின் கீழ் உள்ள விளக்கத்தில் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

62 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

உறுப்பு 41. (பதிலாள் ஒருவராக அல்லாத 2(22) எனும் பிரிவில் வரையறை செய்யப்பட்டவாறான) பகராள் அதிகாரப் பத்திரமானது -

நூறு ரூபாய்.

(a) ஒரே ஒரு உரிமை மாற்ற நடவடிக்கை தொடர்பான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆவணங்களின் பதிவிற்கு வகை செய்யும் ஒரே நோக்கத்திற்காக அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தகைய ஆவணங்களை நிறைவேற்றுவதை அனுமதிப்பதற்காக நிறைவேற்றப்படும் போது;

ஆயிரம் ரூபாய்.

(b) (a) எனும் கூறில் குறிப்பிடப்பட்ட நேர்வு தவிர பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை மாற்ற நடவடிக்கைகளில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செயல்படுவதற்கு குடும்ப உறுப்பினர்களான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும்போது;

பகராள் அதிகாரப் பத்திரத்தின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு இரண்டு ரூபாய்.

(c) (a) எனும் கூறில் குறிப்பிடப்பட்ட நேர்வு தவிர பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமை மாற்ற நடவடிக்கைகளில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செயல்படுவதற்கு குடும்ப உறுப்பினர்களாக அல்லாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிகாரம் அளிக்கும்போது;

பகராள் அதிகாரப் பத்திரத்தின் பொருட்பாடாக உள்ள சொத்தின் சந்தை மதிப்பிற்கான உரிமை மாற்றளிப்பு (உறுப்பு 20) ஒன்று என்பதற்கான அதே தீர்வை.

(d) மறு பயனுக்காக வழங்கப்பட்டு, அசையாச் சொத்து எதனையும் விற்பனை செய்வதற்கு அந்தப் பகராளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்போது;

(e) பிற நேர்வு எதிலும். ஐந்நூறு ரூபாய்.

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, 'குடும்பம்' எனும் சொல் 39-ஆம் உறுப்பின் கீழ் உள்ள விளக்கத்தில் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

நூறு ரூபாய்.

உறுப்பு 42. சான்றுறுதி அலுவலர் ஒருவரால் அல்லது சட்டப்படி அவ்வாறு செயல்படும் பிற நபரால் மாற்று முறையாவணம் அல்லது கடனுறுதிப் பத்திரம் ஒன்று ஏற்கப்படாததற்கு உறுதிச் சான்றளிக்கும் எழுத்துருவில் செய்யப்பட்ட விளம்புகை எதற்கும் அதாவது ஆவணம் அல்லது குறிப்பு ஒன்றிற்கான மறுப்புரைக்கு.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 63

நூறு ரூபாய்.

உறுப்பு 43.கப்பல் ஒன்றின் எஜமானரால், இழப்புகளைச் சரி செய்வதற்காக அல்லது பொதுவாக மதிப்பிடுவதற்கான நோக்கத்துடன் அதன் கடற்பயணம் பற்றித் தான் வரைந்து வைத்துள்ள விவரக்குறிப்புகளின் விளம்புகை எதுவும் மற்றும் கப்பல் வாடகை தாரர்களுக்கு அல்லது சரக்கு பெறுபவருக்கு எதிராக கப்பலில் சரக்குகளை ஏற்றாததற்காகவோ அல்லது இறக்காதற்காகவோ தன்னால் எழுத்துருவில் செய்யப்படும் ஒவ்வொரு விளம்புகையும், சான்றுறுதி அலுவலர் ஒருவரால் அல்லது சட்டப்படி அவ்வாறு செயல்படும் பிற நபரால் சான்றுறுதி அளிக்கப்பட்டுள்ளபோது அல்லது சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளபோது அத்தகைய விளம்புகை ஒவ்வொன்றுக்கும் அதாவது கப்பல் ஒன்றின் எஜமானரால் செய்யப்படும் மறுப்புரைக்கு.

உறுப்பு 44. அடைமானம் செய்யப்பட்ட சொத்திற்கான மறு நூறு ரூபாய்.

உரிமை மாற்றளிப்பிற்கு.

உறுப்பு 45. நபர் ஒருவர் மற்றொரு நபரின் மீதான அல்லது

சொத்தின் மீதான உரிமை ஒன்றை,-

(a) குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ; விடுதலையின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(b) குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பிற,

விடுதலையின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஏழு ரூபாய்.

விட்டுக்கொடுக்குமிடத்து (25-ஆம் பிரிவினால் வகைசெய்யப்பட்டவாறான விடுதலை ஒன்றாக அல்லாத) அந்த முறையாவணம் எதற்கும் அதாவது விடுதலைக்கு.

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, 'குடும்பம்' எனும் சொல் 39-ஆம் உறுப்பின் கீழ் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

உறுதி அளிக்கப்பட்ட கடனுக்கான தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

உறுப்பு 46. கப்பல் ஒன்றின் தளத்தின் மீது ஏற்றப்பட்ட அல்லது ஏற்றப்படக்கூடிய சரக்கின் பேரில் கடன் ஒன்றுக்கு உறுதி அளிக்கும் முறையாவணம் எதற்கும் மற்றும் சரக்கானது சேரவேண்டிய துறைமுகத்திற்கு அது சென்று சேரும் வரு நிகழ்வு சார்ந்து பணத்தை திரும்பச் செலுத்துவதற்காகச் செய்யப்படும் முறையாவணம் எதற்கும் அதாவது பொறுப்பு சார்ந்த பிணைமுறிக்கு.

உறுதி அளிக்கப்பட்ட தொகையின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

உறுப்பு 47. அலுவல் ஒன்றை நிறைவேற்றுவதற்காக உரிய நிறைவேற்றுவதற்காக அல்லது பணத்திற்கு அல்லது அதனின் வழி பெறப்பட்ட பிற சொத்திற்கு கணக்கு கொடுப்பதற்காக பிணையத்தின் மூலமாக நிறைவேற்றப்படும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தம் ஒன்றின் நிறைவேற்றத்தை உறுதி செய்வதற்கு பிணையதாரர் ஒருவரால் நிறைவேற்றப்படும் பிணையம் சார்ந்த பிணைமுறிக்கு அல்லது பிணைய அடைமான ஆவணத்திற்கு.

64 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

விலக்களிப்பு.- (a) 1883-ஆம் ஆண்டு நில மேம்பாட்டுக் கடன்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 19/1883) அல்லது 1884-ஆம் ஆண்டு வேளாண் பயிரிடுவோருக்கான கடன்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 12/1884) எடுக்கப்படும் முன்பணங்களை திரும்பச் செலுத்துவதற்காக அத்தகைய முன்பணங்களை எடுக்கும் நபர்களால் அல்லது அவர்களின் பிணையதாரர்களால் பிணையமாக நிறைவேற்றப்படும்போது அந்தப் பிணைமுறி அல்லது பிற முறையாவணங்கள்.

(b) நிறைவேற்றப்படவேண்டிய அலுவல் ஒன்றின் நிறைவேற்றத்தை அல்லது கணக்கிடப்படவேண்டிய பணத்திற்காக அல்லது அதனின் வழி பெறப்படும் பிற சொத்திற்காக உரிய கணக்கு கொடுப்பதை உறுதி செய்வதற்கு அரசின் அலுவலர்களால் அல்லது அவர்களின் பிணையதாரர்களால் நிறைவேற்றப்படும்போது அந்தப் பிணைமுறி அல்லது பிற முறையாவணங்கள்.

உறுப்பு 48.

(a) (மணக்கொடை ஒன்றுக்கான ஆவணம் ஒன்று

உள்ளடங்கலான) ஏற்பாடு-

(i) ஏற்பாட்டிற்கான முறையாவணமானது குடும்பம் ஒன்றின் உறுப்பினர் ஒருவரின் சார்பாக இருக்குமாயின்;

ஏற்பாட்டின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, 'குடும்பம்' எனும் சொல் 39-ஆம் உறுப்பின் கீழ் வரையறை செய்யப்பட்டவாறான அதே பொருளை கொண்டிருத்தல் வேண்டும்.

(ii) பிற நேர்வு எதிலும். ஏற்பாட்டின் பொருட்பாடாக உள்ள சொத்திற்கான சந்தை மதிப்பின் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஏழு ரூபாய்.

விலக்களிப்பு.- முகமதியர்களிடையே திருமணம் ஒன்று நடைபெறுவதன்பேரில் நிறைவேற்றப்படும் மணக்கொடைக்கான ஆவணம்.

(b) ஏற்பாடு ஒன்றை இரத்து செய்வதற்கு. ஏற்பாடு ஆவணத்தினால் செலுத்தப்பட்டவாறான அதே

தீர்வை.

அந்தச் சான்றாணையில் குறித்துரைக்கப்பட்ட பங்குகளின் விற்பனை மதிப்பிற்கான தொகையில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒன்பது ரூபாய்.

உறுப்பு 49. 2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) அதனைக் கொணர்பவருக்கு வழங்கப்படும் பங்குச் சான்றாணைகளுக்கு.

விலக்களிப்பு.-2013-ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) நிறுமம் ஒன்றினால் முத்திரைத்தீர்வை வருவாய்க்கான ஆட்சியருக்கு அதன் தீர்வைக்கான கூட்டுப்பகுதியாக செலுத்துவதன்பேரில் மட்டுமே செயல் விளைவு கொள்ளும் வகையில் வழங்கப்படும் பங்குச் சான்றாவணம்

(a) நிறுமத்தின் மொத்த பங்கு முதலீட்டின்

நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு அல்லதுதமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 65 (b) மேற்சொன்ன தீர்வையை அல்லது அதற்கான கூட்டுப்பகுதியை முழுவதுமாக செலுத்தியுள்ள நிறுமம் எதுவும் அதனைத் தொடர்ந்து தனது பங்கு மூலதனத்திற்குக் கூடுதலாக அவ்வாறு வழங்கப்பட்ட கூடுதல் மூலதனத்தில் நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு சேர்த்து.

நூறு ரூபாய்.

உறுப்பு 50. கலம் எதனின் தளத்தில் சரக்குகளின் மாற்றளிப்புக்கான அல்லது அவை தொடர்பான கப்பல் ஏற்றுமதி ஆணைக்கு.

உறுப்பு 51. குத்தகைக்கான ஒப்புவிப்பிற்கு இருநூறு ரூபாய்.

விலக்களிப்பு.-குத்தகையானது தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போது குத்தகைக்கான ஒப்புவிப்பு.

உறுப்பு 52. (மறுபயன் உடனோ அல்லது மறுபயன்

இன்றியோ)-

கடனீட்டுப்பத்திரத்தின் முக மதிப்பிற்குச் சமமான மறுபயன் ஒன்றுக்கான ஒவ்வொரு நூறு ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.

(a) கடனீட்டுப்பத்திரமானது தீர்வைக்குக் கடமைப் - பொறுப்புடையதாக இருப்பினும் இல்லாவிடினும் சந்தைப்படுத்ததக்க பிணையங்களாக உள்ள கடனீட்டுப்பத்திரங்களின் உரிமை மாற்றத்திற்கு;

நூறு ரூபாய்.

(b) பிணைமுறி ஒன்றினால் அல்லது அடைமான ஆவணம் ஒன்றினால் உறுதி செய்யப்பட்ட நலன் எதனின் உரிமை மாற்றத்திற்கு;

நூறு ரூபாய்.

(c) 1963-ஆம் ஆண்டு ஆட்சியாளர்கள் பொதுச்- சட்டத்தின்(மையச் சட்டம் 45/1963) 22-ஆம் பிரிவின்படி சொத்து எதனின் உரிமை மாற்றத்திற்கு;

நூறு ரூபாய்.

(d) பொறுப்பாட்சியாளர் ஒருவரிடமிருந்து அதே பொறுப்பாட்சியின் மற்றொரு பொறுப்பாட்சியாளருக்கு அல்லது பொறுப்பாட்சியாளர் ஒருவரிடமிருந்து பயனாளி ஒருவருக்கு பொறுப்பாட்சியின் சொத்து எதற்குமான உரிமை மாற்றத்திற்கு.

விலக்களிப்பு.- மேலெழுத்து செய்வதன் வாயிலாக,-

(a) கப்பல் சரக்கு ஏற்றுமதிச்சீட்டு, ஒப்படைவு ஆணை, சரக்குகளுக்கான சான்றாவணம் அல்லது சரக்குகளின் உரிமை மூலத்திற்கான பிற வணிக ஆவணத்தின் உரிமை மாற்றம்;

(b) மாற்றுமுறையாவணம், காசோலை அல்லது

கடனுறுதிப்பத்திரம் ஒன்றின் உரிமை மாற்றம்;

(c) காப்புறுதி ஆவணம் ஒன்றின் உரிமை மாற்றம்;

(d) மைய அரசின் பிணையங்களுக்கான உரிமை

மாற்றம்.

உறுப்பு 53. உரிமை மாற்றத்தின் வாயிலாக மற்றும் கீழ் குத்தகையின் வாயிலாக அல்லாத குத்தகையின் உரிமை மாற்றத்திற்கு.

உரிமை மாற்றத்திற்கான மறுபயன் தொகைக்குச் சமமான சந்தை மதிப்பிற்கான மாற்றளிப்பு (உறுப்பு 20) ஒன்று என்பதற்கான அதே தீர்வை.

விலக்களிப்பு.- தீர்வையிலிருந்து விலக்களிக்கப்படும்

குத்தகை எதனின் உரிமை மாற்றம்.

இருநூறு ரூபாய்.

உறுப்பு 54. (a) சொத்து எதனின் அல்லது எதனையும் சார்ந்த பொறுப்பாட்சிக்கான விளம்புகை எதுவும் விருப்பாவணம் ஒன்றாக இல்லாமல் எழுத்துருவில் செய்யப்படும்போது.

66 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

இருநூறு ரூபாய்.

(b) சொத்து எதனின் அல்லது எதனையும் சார்ந்த பொறுப்பாட்சியின் இரத்தானது விருப்பாவணம் தவிர பிற முறையாவணம் எதனின் வாயிலாக செய்யப்படும்போது.

நூறு ரூபாய்.

உறுப்பு 55. கப்பல் துறைமுகம், சேமிப்புக் கிடங்கு அல்லது நாவாய்த்துறை எதிலும் அல்லது எதன் மீதும் இருக்கும் சரக்குகள் எதனையும் ஒப்படைவு செய்வதற்கு, அதில் குறிப்பிடப்பட்ட நபர் எவரின் அல்லது அவரால் உரிமை மாற்றம் பெறும் நபரின் அல்லது அதனைக் கொண்டிருப்பவரின் உரிமை மூலத்திற்குச் சான்றாக அமையும் முறையாவணம் எதுவும், அத்தகைய சரக்குகள் எந்நபரின் பாதுகாப்பில் உள்ளனவோ, அந்நபரால் அல்லது அவரின் சார்பாக கையெழுத்திடப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கும் அத்தகைய முறையாவணத்திற்கு, அதாவது அந்த சரக்குகள் தொடர்பான சான்றாணைக்கு.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 67

நோக்க-காரண விளக்கவுரை.

முத்திரைத் தீர்வை தொடர்பாக இம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வரும் சட்டமானது, 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தில் (மையச் சட்டம் II/1899) அடங்கியுள்ளது. தற்போது, மேற்சொன்ன சட்டத்திற்கான திருத்தங்களைக் கொண்ட சட்டமுன்வடிவுகளானவை, அரசமைப்புச் சட்டத்தின் ஏழாம் அட்டவணையில் உள்ள பொதுப் பட்டியலில் விவரிக்கப்பட்டுள்ள பொருட்பாடுகளில் ஒன்று தொடர்பாக இருந்து வரும் சட்டம் ஒன்றாக இருப்பதால், அவை அரசமைப்புச் சட்டத்தின் 254(3) எனும் உறுப்பின்படி குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காகச் சுட்டி அனுப்பப்பட வேண்டியவையாக உள்ளன. எனவே மேற்சொன்ன மையச்சட்டத்திற்கெனக் கருதப்பட்ட திருத்தங்களை இம்மாநிலத்தில் விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர இயலவில்லை. கருதப்பட்ட திருத்தங்களை இம்மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கும், முத்திரைத் தீர்வை மாநில அரசால் வசூலிக்கப்படுவது தொடர்பான நடைமுறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும், அரசானது மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா, இராஜஸ்தான் ஆகிய ஒரு சில மாநிலங்களில் செய்யப்பட்டிருப்பதைப் போன்றவாறு இம்மாநிலத்தில் முத்திரைத் தீர்வை தொடர்பான தனிப்பட்டதொரு சட்டத்தை இயற்றுவதென முடிவு செய்துள்ளது.

2. இச்சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

கே.சி. வீரமணி,

வணிகவரித் துறை அமைச்சர்.

68 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

அதிகார ஒப்படைவு பற்றிய குறிப்பு

சட்டமுன்வடிவின் 1(3), 2(7), 2(13), 8, 10(1), 11, 16,18(2), 20(5), 30(2), 30(4), 30(6), 30(11), 31(1), 31(2), 31(3), 38(3), 41, 52, 72 கூறுகள் அறிவிக்கைகளை அல்லது ஆணைகளை பிறப்பிப்பதற்கு அல்லது நேர்விற்கேற்ப விதிகளை செய்வதற்கு அதிகாரமளிக்கிறது மற்றும் சட்டமுன்வடிவின் 30(2) மற்றும் 30(3) கூறுகளானது ஆட்சியருக்கு மற்றும் சட்டமுன்வடிவின் 30(7) கூறானது முதன்மை கட்டுப்பாட்டு வருவாய் அதிகார அமைப்பிற்கு அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக ஆணைகளைப் பிறப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்களானது இயல்பானவையேயன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 69

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 6/2019

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை

திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்

தொடக்கம்.

சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) (i) 3 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் 2017 ஜூலை 1-ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(ii) இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகள், மாநில அரசு, அதிகாரமுறை அரசிதழில் அறிவிக்கை வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்:

வரம்புரை:- ஆனால், இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகளுக்காக வெவ்வேறு தேதிகள் குறிக்கப்படலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கம் குறித்து, அத்தகைய வகைமுறை எதிலுமுள்ள சுட்டுகை எதுவும் அத்தகைய வகைமுறை நடைமுறைக்கு வருவது குறித்த சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 19/2017.

2-ஆம் பிரிவின் திருத்தம்.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படுவதான) 2017- ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,—

(1) (4)-ஆம் கூறில், "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் 171-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (16)-ஆம் கூறில், "மைய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரியம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மைய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (17)-ஆம் கூறில், (h) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு

அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(h) குதிரைப் பந்தய குழாமிலுள்ள பந்தய விவரங்களைப் பதிவு செய்யும் கருவி அல்லது உரிமம் பெற்ற பணயக் கணக்கர் மூலமான நடவடிக்கைகள் அல்லது அத்தகைய குழாமிலுள்ள உரிமம் பெற்ற பணயக்கணக்கர் நடவடிக்கைகள்; மற்றும்";

(4) விளக்கம் உள்ளடங்கலாக (18)-ஆம் கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(5) (35)-ஆம் கூறில், "(c) கூறு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "(b) கூறு"

என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(6) (69)-ஆம் கூறில், (f) உட்கூறில், "371-ஆம் உறுப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "மற்றும் 371 J-ஆம் உறுப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

70 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(7) (102)-ஆம் கூறில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

"விளக்கம்.— ஐயங்களை நீக்குவதற்காக, "சேவைகள்" என்ற சொற்றொடர், காப்புறுதிகளிலான நடவடிக்கைகளை எளிதாக்குதல் அல்லது ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை உள்ளடங்கும் என்று இதன் மூலம் தெளிவாக்கப்படுகிறது.".

3. முதன்மைச் சட்டத்தின் 7-ஆம் பிரிவில்,— 7-ஆம் பிரிவின் திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) (b) கூறில், முடிவில் "மற்றும்" என்ற சொல் சேர்க்கப்படுதல் வேண்டும்;

(b) (c) கூறில், முடிவில் "மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல்

வேண்டும்;

(c) (d) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல்

வேண்டும், அவையாவன:—

"(1A) ஒரு சில செயல்கள் அல்லது நடவடிக்கைகள், (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க வழங்குதலாக அமைத்துருவாக்கப்படுகிறவிடத்து, அவை, II-ஆம் இணைப்புப் பட்டியலில் சுட்டப்பட்டவாறான ஒன்று சரக்குகளின் வழங்குதல் அல்லது சேவைகளின் வழங்குதலாக பாவிக்கப்படுதல் வேண்டும்.";

(3) (3)-ஆம் உட்பிரிவில், "(1) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "(1), (1A) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

4. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, 9-ஆம் பிரிவின் திருத்தம்.

பின்வரும் உட்பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(4) அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, பதிவு பெறாத வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் குறித்துரைக்கப்பட்ட வழங்குதல்கள் பொறுத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பெற்றுக் கொள்பவராக எதிரிடைக் கட்டண அடிப்படையில் வரி செலுத்த வேண்டிய பதிவு பெற்ற நபர்களின் வகையை குறித்துரைத்தல் வேண்டும், மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அனைத்தும், அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குதல் தொடர்பாக வரி செலுத்துவதற்கு கடப்பாடு உள்ள நபராக அவர் இருப்பாரானால், அத்தகைய பெற்றுக்கொள்பவருக்கும் பொருந்தும்.".

5. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில்,— 10-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) "அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட தொகையை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட வரித்தொகையை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், "மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ரூபாய்க்கு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய்க்கு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) வரம்புரைக்குப் பின், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 71

"மேலும் வரம்புரை:- ஆனால், (a) கூறின்படி அல்லது (b) கூறின்படி அல்லது (c) கூறின்படி வரி செலுத்துவதற்கு தெரிவு செய்திருக்கிற நபர் ஒருவர், முந்தைய நிதியாண்டில் மாநிலத்திலுள்ள விற்பனை அளவின் பத்து சதவீதம் அல்லது ஐந்து லட்ச ரூபாய், இதில் எது அதிகமோ, அதற்கு மேற்படாத மதிப்புடைய, (II-ஆம் இணைப்புப் பட்டியலின் 6-ஆம் பத்தியின் (b) கூறில் சுட்டப்பட்டவை அல்லாத பிற) சேவைகளை வழங்கலாம்.";

(2) (2)-ஆம் உட்பிரிவில், (a) கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறு

அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(a) (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டவாறல்லாமல், அவர், சேவைகள்

வழங்குதலில் ஈடுபடுதல் ஆகாது;".

12-ஆம் பிரிவின்

திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (a) கூறில், "(1)-ஆம் உட்பிரிவின்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

13-ஆம் பிரிவின்

திருத்தம்.

7. முதன்மைச் சட்டத்தின் 13-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் "(2)-ஆம் உட்பிரிவின்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

16-ஆம் பிரிவின் 8. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில்,

திருத்தம்.

(2)-ஆம் உட்பிரிவில்,—

(1) (b) கூறில், விளக்கத்திற்குப் பதிலாக, பின்வரும் விளக்கம் அமைக்கப்படுதல்

வேண்டும், அவையாவன:—

"விளக்கம்.— இந்தக் கூறின் நோக்கங்களுக்காக—

(i) ஒன்று சரக்குகளின் உரிமை மூல ஆவணத்தின் உரிமை மாற்றம் வாயிலாக அல்லது பிறவாறு, சரக்குகளின் நகர்தலுக்கு முன்பு அல்லது நகர்தலின்போது, முகவராக செயற்பட்டாலும் அல்லது பிறவாறாக இருப்பினும், அறிவுறுத்தலின் பேரில் வழங்குநரால் அத்தகைய பதிவு பெற்ற நபர் பெறுநருக்கு அல்லது பிற நபர் எவருக்கும் சரக்குகள் ஒப்படைக்கப்படுமிடத்து;

(ii) அத்தகைய பதிவு பெற்ற நபரின் அறிவுறுத்தலின் பேரிலும் அவர் பொருட்டும்

நபர் எவருக்கும் வழங்குநரால் சேவைகள் அளிக்கப்படுகிறவிடத்து,

பதிவு பெற்ற நபர் சரக்குகளை அல்லது, நேர்வுக்கேற்ப, சேவைகளைப்

பெற்றுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.";

(2) (c) கூறில், "41-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "41- ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

9. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில்,— 17-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (3)-ஆம் உட்பிரிவில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

"விளக்கம்.— இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக, "விலக்களிக்கப்பட்ட வழங்குகையின் மதிப்பு" என்ற சொற்றொடர், III-ஆம் இணைப்புப் பட்டியலின் 5-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டவை தவிர, மேற்சொன்ன இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகளின் மதிப்பை உள்ளடக்குதல் ஆகாது.";

(2) (5)-ஆம் உட்பிரிவில், (a) மற்றும் (b) கூறுகளுக்குப் பதிலாக, பின்வரும்

கூறுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

72 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

"(a) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காக அவை பயன்படுத்தப்படும் போது தவிர, (ஓட்டுநர் உள்ளடங்கலாக) பதிமூன்று நபர்களுக்கு மேற்படாத அளவுக்கு இருக்கை வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ள நபர்களின் போக்குவரத்திற்கான இயக்கூர்திகள்:—

(A) அத்தகைய இயக்கூர்திகளின் மேலுமான வழங்குகை; அல்லது

(B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது

(C) அத்தகைய இயக்கூர்திகளை ஓட்டுவதற்கான பயிற்சி அளித்தல்;

(aa) கலங்கள் மற்றும் வானூர்தி—

(i) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காகப்

பயன்படுத்தப்படும் போது தவிர:—

(A) அத்தகைய கலங்கள் அல்லது வானூர்தியின் மேலுமான வழங்குகை;

அல்லது

(B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது

(C) அத்தகைய கலங்களை கடலில் செலுத்துவதற்கான பயிற்சி அளித்தல்;

அல்லது

(D) அத்தகைய வானூர்தியைப் பறக்கவிடுவதற்கான பயிற்சி அளித்தல்;

(ii) சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக;

(ab) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்திக்கு தொடர்புடையதாக இருக்கின்ற பொதுக் காப்பீட்டு சேவைகள், சீர்காப்புமுறை செய்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்:

வரம்புரை:- ஆனால்—

(i) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறவிடத்து;

(ii) வரிவிதிக்கத்தக்க நபர்—

(I) அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தியின் உற்பத்தியில்;

அல்லது

(II) அவரால் காப்பீடு செய்யப்பட்ட அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி பொறுத்து பொதுக் காப்பீட்டு சேவை வழங்குகையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறவிடத்து,

அத்தகைய சேவைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்;

(b) பின்வரும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும்

வழங்குவதைப் பொறுத்து—

(i) உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற உணவு தயாரிப்பு, அழகு சிகிச்சை, உடல் நல சேவைகள், ஒப்பனை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் போது தவிர ஒத்தி வைத்தல், வாடகைக்கு விடுதல், அல்லது வாடகைக்கு எடுத்தல், ஆயுள் காப்பீடு மற்றும் உடல் நல காப்பீடு:

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 73

வரம்புரை:- அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உள்நோக்கிய வழங்குகை அதே வகையான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வெளிநோக்கிய வரிவிதிக்கத்தக்க வழங்குகையைச் செய்வதற்காக அல்லது வரிவிதிக்கத்தக்க கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின் கூறாக பதிவு பெற்ற நபரால் பயன்படுத்தப்படுகிறவிடத்து கிடைக்கத்தக்கதாகும்;

(ii) குழாம், உடல்நலம் மற்றும் உடற்தகுதி மையத்தின் உறுப்பாண்மை; மற்றும்

(iii) அத்தகைய விடுப்பு அல்லது உள்ளூர் பயணச் சலுகை போன்று

விடுமுறையின் மீது பணியாளருக்கு நீட்டிக்கப்பட்ட பயணச் சலுகைகள்:

வரம்புரை:- ஆனால், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன்படியும் தன்னுடைய பணியாளருக்கு, அதனை அளிப்பது பணிக்கமர்த்தியவருக்கான கடமைப்பொறுப்பாக இருக்கிறவிடத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்.".

20-ஆம் பிரிவின்

திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 20-ஆம் பிரிவில், விளக்கத்தில், (c) கூறில், "84- ஆம் பதிவின்கீழ்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "84 மற்றும் 92A-ஆம் பதிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

11. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவில்,— 22-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை

சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:- ஆனால், அத்தகைய நபர், முதலாம் வரம்புரையில் சுட்டப்பட்ட மொத்த விற்பனை அளவை மைய அரசு அதிகரித்துள்ளது பொறுத்து சிறப்புவகை மாநிலத்திலிருந்து வரிவிதிக்கத்தக்க சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குகிறவிடத்து, ஒரு நிதியாண்டில் அவருடைய மொத்த விற்பனை அளவு அத்தகைய உயர்த்தப்பட்ட விற்பனை அளவிற்கு சமமான தொகைக்கு மேற்படுமானால், அவர் பதிவு செய்யப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.";

(2) விளக்கத்தில், (iii)-ஆம் கூறில், முடிவில், பின்வருபவை சேர்க்கப்படுதல்

வேண்டும், அவையாவன:—

"ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மற்றும் அருணாசலப்பிரதேசம், அசாம், ஹிமாசலப்பிரதேசம், மேகாலயா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக.".

24-ஆம் பிரிவின்

திருத்தம்.

12. முதன்மைச் சட்டத்தின் 24-ஆம் பிரிவில், (x)-ஆம் கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(x) 52-ஆம் பிரிவின்கீழ் ஆதாரத்தில் வரிவசூல் செய்வதற்கு

வேண்டுறுத்தப்படும் மின்னணு வணிகம் இயக்குபவர் ஒவ்வொருவரும்;".

13. முதன்மைச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில்,— 25-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பின்பு மற்றும் விளக்கத்திற்கு முன்பு,

பின்வரும் வரம்புரை புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:- சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் (மையச் சட்டம் 28/2005) பொருள் வரையறை செய்யப்பட்டவாறான பிரிவைக் கொண்டிருக்கிற அல்லது சிறப்பு பொருளாதார மண்டல மேம்படுத்துபவராக இருக்கும், நபர் ஒருவர், அதே மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள தம்முடைய வியாபார இடத்திலிருந்து தனிப்பட்டதாக இருக்கிறபடியால், தனித்த பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டியவராவார்.";

74 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(2) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பதிலாக, பின்வரும் வரம்புரை

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"வரம்புரை:- ஆனால், மாநிலத்தில் பல இடங்களில் வணிக இடங்களைக் கொண்டுள்ள நபர் ஒருவர், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய வணிக இடம் ஒவ்வொன்றுக்காகவும், தனித்த பதிவு வழங்கலாம்.".

14. முதன்மைச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில்,— 29-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) ஓரத்தலைப்பில், "ரத்து செய்தல்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது

தற்காலிகமாக நிறுத்திவைத்தல்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவில், (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை

சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- பதிவுபெற்ற நபரால் தாக்கல் செய்யப்பட்ட பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, அந்தப் பதிவு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.";

(3) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை

சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"மேலும் வரம்புரை:- ஆனால், பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, உரிய அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.".

15. முதன்மைச் சட்டத்தின் 34-ஆம் பிரிவில்,— 34-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(i) "வரிவிவரப்பட்டியல் ஒன்று" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "வரவுக் குறிப்பு ஒன்றை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரவுக் குறிப்புகளை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3)-ஆம் உட்பிரிவில்,—

(i) "வரிவிவரப்பட்டியல் ஒன்று" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "பற்றுக் குறிப்பு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்றுக் குறிப்புகள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

35-ஆம் பிரிவின்

திருத்தம்.

16. முதன்மைச் சட்டத்தின் 35-ஆம் பிரிவில், (5)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பின் வரவு செலவு பேரேடு, இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையாளரால் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதனின்கீழ் உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்படும் தணிக்கை உட்பட்டு, அதன் துறை எதற்கும் பொருந்துதல் ஆகாது.".

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 75

17. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில்,— 39-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "அத்தகைய ஆங்கில மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு அடுத்து வரும் மாதத்தின் இருபதாம் நாள் அன்று அல்லது அதற்கு முன்போ" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(c) பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, ஒவ்வோர் காலாண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கு விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.";

(2) (7)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, அத்தகைய விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கு அவர் வேண்டுறுத்தப்பட்ட கடைசி தேதியன்று அல்லது அதற்கு முன்பு அந்த விவர அறிக்கையின்படி வரி பாக்கி அல்லது அதன் பகுதியை அரசிடம் செலுத்த வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.";

(3) (9)-ஆம் உட்பிரிவில்,—

(a) "அத்தகைய விடுகை அல்லது தவறான விவரங்கள் எந்த மாதத்தின் போது அல்லது காலாண்டின்போது அறியப்பட்டனவோ அந்த மாதத்திற்காக அல்லது காலாண்டிற்காக அளிக்கப்பட வேண்டிய விவர அறிக்கையில்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், "நிதியாண்டிற்கு அடுத்து வரும்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "எந்த நிதியாண்டிற்கு அத்தகைய விவரங்கள் தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த நிதியாண்டிற்கு அடுத்து வரும்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

புதிய பிரிவு 43A –வினைப் 18. முதன்மைச் சட்டத்தின் 43-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு

புகுத்துதல்.

புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

"43A. விவர அறிக்கை அளிப்பதற்கான மற்றும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை.— (1) 16-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவு, 37-ஆம் பிரிவு அல்லது 38-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், 39-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்ட விவர அறிக்கைகளில், வழங்குநர்களால் வழங்கப்பட்ட வழங்குதல்களின் விவரங்களை சரிபார்த்தல், செல்லத்தக்கதாக்குதல், மாற்றியமைத்தல் அல்லது விட்டுவிடுதல் வேண்டும்.

(2) 41-ஆம் பிரிவு, 42-ஆம் பிரிவு அல்லது 43-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான மற்றும் அதனை சரிபார்ப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

76 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

(3) பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்துவதற்கான நோக்கங்களுக்காக, பொதுவான நுழைவாயிலில் வழங்குநரால் செய்யப்படும் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

(4) (3)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்டிராத வெளிப்புற வழங்குகைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை, வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறை, மேற்கண்ட உட்பிரிவின்படி வழங்குநர்களால் அளிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பயன்படுத்தத்தக்க உள்ளீட்டு வரிவரவின் இருபது சதவீதத்திற்கு மேற்படாத, அவ்வாறு பயன்படுத்தக்கூடிய உள்ளீட்டு வரிவரவுத் தொகையின் அதிகபட்சத்தொகையை உள்ளடக்கும்.

(5) (3)-ஆம் உட்பிரிவின்படி வழங்குநரால் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பான வெளிப்புற வழங்குகைகளில் குறித்துரைக்கப்பட்ட வரித்தொகை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி அவரால் செலுத்தத்தக்க வரியாக கருதப்படுதல் வேண்டும்.

(6) வழங்குநர் மற்றும் வழங்குகையைப் பெற்றுக்கொள்பவர், (3)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (4)-ஆம் உட்பிரிவின்படி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ள ஆனால் விவர அறிக்கை அளிக்கப்படாத வெளிப்புற வழங்குகைகள் தொடர்பாக, வரியினை செலுத்துதல் அல்லது, நேர்வுக்கேற்ப, பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரிவரவினை செலுத்துவதற்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் உள்ளாதல் வேண்டும்.

(7) (6)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வசூலித்தல் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறையானது, ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வரித்தொகை வசூலிக்காமைக்கு அல்லது உள்ளீட்டு வரிவரவை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.

(8) பதிவு பெற்ற நபர் ஒருவரால் (3)-ஆம் உட்பிரிவின்படி அதனின் விவரங்கள் அளிக்கப்படும் வெளிப்புற வழங்குகைகள் தொடர்பான நடைமுறை, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வரித்தொகையின் தொடக்கம்,—

(a) பதிவு நடைபெற்ற ஆறு மாதங்களுக்குள்;

(b) யாராவது வரி செலுத்துவதில் தவறுயிருக்கிறதென்றால் மற்றும் அத்தகைய கட்டத்தவறிய தொகையின் செலுத்தத்தின் உரிய தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அத்தகைய தவறுதல் தொகை கட்டாமல் இருப்பதானது தொடர்ந்து கொண்டிருக்கிறவிடத்து,

வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.".

48-ஆம் பிரிவின்

திருத்தம்.

19. முதன்மைச் சட்டத்தின் 48-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், "45-ஆம் பிரிவின்கீழ் அறிக்கை ஆகியவற்றை அளிப்பதற்கு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "மற்றும் அத்தகைய பிற செயற்பணிகளைச் செய்வதற்கு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

20. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில்,— 49-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (2)-ஆம் உட்பிரிவில், "41-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "41-ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5)-ஆம் உட்பிரிவில்,—

(a) (c) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 77

"வரம்புரை:- ஆனால், மாநில வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரி செலுத்ததிற்கு பயன்படுத்த இயலாது.";

(b) (d) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்கு பயன்படுத்த இயலாது.".

புதிய பிரிவு 49A 21. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவுகள்

புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

மற்றும் 49B-களைப் புகுத்துதல்.

"49A. குறித்த சில நிபந்தனைகளுக்குட்பட்டு உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துதல்.— 49-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒருங்கிணைந்த வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை அத்தகைய செலுத்தம் நோக்கி முழுவதுமாக முதலாவதாக பயன்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே, மாநில வரி கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு நேர்வுக்கேற்ப, ஒருங்கிணைந்த வரி அல்லது மாநில வரியின் செலுத்தம் நோக்கி பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

49B. உள்ளீட்டு வரிவரவினைப் பயன்படுத்துவதற்கான ஆணை.— இந்த அத்தியாயத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் 49-ஆம் பிரிவின் (5)- ஆம் உட்பிரிவின் (e) மற்றும் (f) கூறுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அத்தகைய வரி எதனின் செலுத்தத்தை நோக்கி ஒருங்கிணைந்த வரி, மைய வரி, மாநில வரி அல்லது, நேர்வுக்கேற்ப, யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை பயன்படுத்தும் முறை மற்றும் வரிசையை வகுத்துரைக்கலாம்.".

52-ஆம் பிரிவின்

திருத்தம்.

22. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (9)-ஆம் உட்பிரிவில், "37-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "37- ஆம் பிரிவு அல்லது 39-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

23. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில்,— 54-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (8)-ஆம் உட்பிரிவில், (a) கூறில்,—

(a) "பூஜ்ஜிய வீத வழங்குகைகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக,

"ஏற்றுமதி" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "அத்தகைய பூஜ்ஜிய வீத வழங்குகைகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அத்தகைய ஏற்றுமதிகள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) விளக்கத்தில், (2)-ஆம் கூறில்,—

(a) (c) உட்கூறில், (i)-ஆம் இனத்தில், "அந்நியச் செலாவணியாக" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது இந்திய சேம வங்கியினால் எங்கெங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இந்திய ரூபாயில்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(b) (e) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல்

வேண்டும், அவையாவன:—

78 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

"(e) (3)-ஆம் உட்பிரிவிற்கான முதல் வரம்புரையின் (ii)-ஆம் கூறின்படி பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவினை திரும்பக் கொடுக்கும் நேர்வில், எந்தக் காலத்தில் திரும்பக் கொடுத்தலுக்காக கோரிக்கை எழுகிறதோ அந்த காலத்திற்கு 39-ஆம் பிரிவின்படி விவர அறிக்கையை அனுப்புவதற்கான உரிய தேதி;".

79-ஆம் பிரிவின்

திருத்தம்.

24. முதன்மைச் சட்டத்தின் 79-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம்.— இந்த பிரிவின் நோக்கங்களுக்காக, "நபர்" எனும் சொல் (4)- ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ளவாறு அல்லது, நேர்வுக்கேற்ப, 25-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள "தனித்துவமுள்ள நபர்கள்" என்பதை உள்ளடக்க வேண்டும்.".

107-ஆம் பிரிவின்

திருத்தம்.

25. முதன்மைச் சட்டத்தின் 107-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அதிகபட்சம் இருபத்தைந்து கோடி ரூபாய்க்கு உட்பட்டு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

112-ஆம் பிரிவின்

திருத்தம்.

26. முதன்மைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவில், (8)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அதிகபட்சம் ஐம்பது கோடி ரூபாய்க்கு உட்பட்டு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

129-ஆம் பிரிவின்

திருத்தம்.

27. முதன்மைச் சட்டத்தின் 129-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், வரம்புரை உள்ளடங்கலாக, இரண்டு இடங்களில் வரும், "ஏழு நாட்களுக்குள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "பதினான்கு நாட்களுக்குள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

143-ஆம் பிரிவின்

திருத்தம்.

28. முதன்மைச் சட்டத்தின் 143-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:- ஆனால், ஓர் ஆண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் காலம், போதிய காரணம் காட்டப்பட்டுக் கொண்டிருப்பதன் பேரில், முறையே ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத மேலுமான காலமொன்றிற்கு ஆணையரால் நீட்டிக்கப்படலாம்.".

I-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

29. முதன்மைச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலில், 4-ஆம் பத்தியில், "வரி விதிக்கத்தக்க நபரால்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "நபரால்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

II-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

30. முதன்மைச் சட்டத்தின் II-ஆம் இணைப்புப் பட்டியலில், தலைப்பில், "செயல்பாடுகள்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது பரிமாற்றங்கள்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

31. முதன்மைச் சட்டத்தின் III-ஆம் இணைப்புப் பட்டியலில்,— III-ஆம் இணைப்புப்

பட்டியலுக்கான திருத்தம்.

(1) 6-ஆம் பத்திக்குப் பின்பு, பின்வரும் பத்திகள் புகுத்தப்படுதல் வேண்டும்,

அவையாவன:—

"7. சரக்குகள் இந்தியாவிற்குள் நுழையாமல், இந்தியாவிற்கு வெளியே உள்ள இடமொன்றிலிருந்து இந்தியாவிற்கு வெளியேயுள்ள மற்றொரு இடத்திற்கு அத்தகைய சரக்குகளை வழங்குதல்.

8. (a) வீட்டு நுகர்விற்காக எடுத்துச் செல்லப்படுவற்கு முன் நபர் எவருக்கும்

சேமிப்பு கிடங்கு சரக்குகளின் வழங்குதல்;

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 79

(b) பிற நபர் எவருக்கும் சரக்கு பெறுபவரால் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள துறைமுகத் தொடக்கத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்ட பின்பு, ஆனால் வீட்டு நுகர்விற்காக அனுப்புவதற்கு முன்பான சரக்குகளுக்கான உரிமை மூல ஆவணங்களின் மேற்குறிப்பினால் சரக்குகள் வழங்குதல்.";

(2) தற்போதுள்ள விளக்கம், விளக்கம் 1-ஆக எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு எண்ணிடப்பட்டவாறான விளக்கம் 1 என்பதற்குப் பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம் 2.— 8-ஆம் பத்தியின் நோக்கங்களுக்காக, "சேமிப்பு கிடங்கு சரக்குகள்" என்ற சொற்றொடர் 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தில் (மையச் சட்டம் 52/1962) அதற்கென குறித்துரைக்கப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்.".

தமிழ்நாடு அவசரச் சட்டம்

நீக்கறவு மற்றும் காப்பு.

32. (1) 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

2/2018.

(திருத்த) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டம் 19/2017.

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்படிச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

80 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக்-காரண விளக்கவுரை.

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 19/2017), மாநில அரசால் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் மாநிலத்திற்குள்ளான வழங்குதலின் பேரில் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்குமான வகைமுறை செய்வதன் பொருட்டு இயற்றப்பட்டது.

2. புதிய சரக்குகள் மற்றும் சேவைகள் வரி முறைக்கு தற்போதுள்ள வரி செலுத்துவோர்களின் எளிதான நடவடிக்கைக்காக ஒருசில வகைமுறைகளை தமிழ்நாடு சட்டம் 19/2017 வழங்கியுள்ளது. எனினும், புதிய வரி முறையானது ஒருசில இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. வரி செலுத்துவோர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அசெளகரியங்களில் ஒன்று, குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவர அறிக்கையை தாக்கல் செய்தல் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டங்களின்படி வரிச் செலுத்துதல் ஆகும். இது குறித்து, உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும் முறையானது குறைந்தளவு தாள் பணிகளுடன் சேர்த்து சிறிய வரி செலுத்துவோர்கள், காலாண்டு முறையில் விவர அறிக்கையை தாக்கல் செய்தல் மற்றும் வரி செலுத்துதலை எதிர்கொள்கிறது. புதிய விவர அறிக்கையை தாக்கல் செய்யும் முறையினை நிறைவேற்றும் பொருட்டு மற்றும் மேலேயுள்ள இடர்பாடுகளை களைவதன் பொருட்டு, அரசு, மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 19/2017-க்கு திருத்தம் செய்ய முடிவு செய்தது.

3. அவ்வாறே, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) அவசரச் சட்டம் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 2/2018), 2018 நவம்பர் 13 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்டது மற்றும் அது 2018 நவம்பர் 14-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.

4. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டத்தினை மாற்றிட விழைகிறது.

கே.சி. வீரமணி, வணிகவரித் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 81

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 7/2019

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் (திருத்த) சட்டம் குறுந்தலைப்பு என அழைக்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

((2) இது 2018-ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 30-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

இரண்டாம் தமிழ்நாடு சட்டம்

2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு

32/2006.

வரிச் சட்டத்தின் இரண்டாம் இணைப்புப் பட்டியலில்,-

இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

(1) வரிசை எண்.3 மற்றும் அது தொடர்பாக

(2), (3) மற்றும் (4)-ஆம் நெடும்பத்திகளில் உள்ள

பதிவுகளுக்கு பதிலாக, பின்வருவன, முறையே, அமைக்கப்படுதல் வேண்டும்:-

58 விழுக்காடு.

இம்மாநிலத்தில்

3. 1975-ஆம் ஆண்டைய சுங்கவரிச் சட்டம்

முதலாம்

(மத்திய சட்டம் 51/1975) அல்லது இந்தியாவிற்குள்

முனை

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க

விற்பனையில்.

தீர்வைகள் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையில்

உள்ள பிற சட்டம் எதனின் கீழ் அடங்குவதுமான

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி

செய்யப்பட்ட ஒயின்கள், சாராவி மற்றும் பீர்கள்

போன்ற வெளிநாட்டு மதுபானங்கள்.

14.5

இம்மாநிலத்தில்

விழுக்காடு."

இரண்டாம்

முனை

விற்பனையில்.

(2) விளக்கம் I-க்கு பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:- "விளக்கம் IA.- வரிசை எண்.3-க்கு எதிராக குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது வரிவிதிக்கும் நோக்கத்திற்காக, மாநிலத்தின் இரண்டாம் முனை விற்பனையில் அந்த பொருட்களின் மொத்த விற்பனைத் தொகையானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.".

நோக்க-காரண விளக்கவுரை.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 32/2006) கீழ், தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்கள் மீது முதலாம் முனை விற்பனையின் மீது மட்டும் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

2. மாநிலத்தின் வருவாயினை பெருக்கும் நோக்கில், மாநிலத்தில் வெளிநாட்டு மதுபானங்களின் முதலாம் முனை விற்பனையின் மீது தற்போது விதிக்கப்படும் 58% வரிக்கு கூடுதலாக, இரண்டாம் முனையில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் மொத்த விற்பனைத் தொகை மீது 14.5% வரிவிதித்திட, அரசானது மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 32/2006-க்கு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. அதற்கிணங்க, மேற்சொன்ன நோக்கத்திற்காக, மேற்சொன்ன தமிழ்நாடு சட்டம் 32/2006-ன் 86-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அந்த சட்டத்தின் இரண்டாம் இணைப்புப் பட்டியலுக்கு திருத்தம் செய்ய அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. மேற்சொன்ன சட்டத்தின் 86-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் கீழ், மேற்சொன்ன அறிவிக்கையை மாற்றமைவு செய்வதற்கு சட்டமன்ற பேரவையில் சட்டமுன்வடிவு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

3. இச்சட்டமுன்வடிவு மேற்சொன்ன முடிவிற்குச் செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

கே.சி. வீரமணி, வணிகவரித் துறை அமைச்சர்

கி. சீனிவாசன், செயலாளர்.

82 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 7-ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 8/2019

1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன்வடிவு, தமிழ்நாடு மாநிலத்தில் அதனுடைய பொருந்துகை.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் தகராறுகள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

அளாவுகை மற்றும் தொடக்கம்.

(2) இது தமிழ்நாடு முழுவதற்கும் அளாவி நிற்கும்.

(3) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

11-B

2. 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் 11-B பிரிவில் "நடுவர் மையச் சட்டம் XIV/1947 தீர்ப்பு'' என்கின்ற சொல்லுக்குப் பதிலாக "நடுவர் தீர்ப்பு மற்றும் ஆணை" என்கின்ற பிரிவிற்கான திருத்தம்.

சொல் அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 83

நோக்கக் காரண விளக்கவுரை

1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டம் (மையச் சட்டம் XIV/1947) 07.11.2008-லிருந்து செல்திறத்துடன் 11-B எனும் புதிய பிரிவு ஒன்றினை புகுத்தும் வகையில் 45/2008 தமிழ்நாடு சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டது. அது பின்வருமாறு படிக்கப்படுகிறது:-

"11-B. தீர்ப்பாணையினால் அதனுடைய தீர்ப்பினை செயலுறுத்துவதற்கான தொழிலாளர் நீதிமன்றத்தின் அல்லது தீர்ப்பாயத்தின் அதிகாரம் ஒரு தொழிலாளர் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் உரிமையியல் நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பாணை ஒன்றைப் போல் அதனுடைய சொந்தத் தீர்ப்பைச் செயலுறுத்துவதற்கு மற்றும் 2-ஆம் பிரிவின் (p) கூறில் பொருள்வரையறை செய்யப்பட்டவாறு தீர்வு எதையும் நிறைவேற்றுவதற்கு கூட உரிமையியல் நீதிமன்றமொன்றின் அதிகாரத்தைப் பெற்றிருக்கும்." மேற்சொன்ன வகைமுறையானது உரிமையியல் நீதிமன்றமொன்றினைப் போன்று அதனுடைய சொந்தத் தீர்ப்பை செயலுறுத்துவதற்கு தொழிலாளர் நீதிமன்றமொன்றிற்கு அல்லது தீர்ப்பாயமொன்றிற்கு அதிகாரமளிக்கிறது.

ஆனால், அதனால் நிறைவேற்றப்பட்ட ஆணை ஒன்றாக இருக்காது. தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதியிட்ட அதனுடைய பத்தாவது அறிக்கையில், மற்றவைகளுக்குள்ளே குறித்தவகை சட்டப்பூர்வ அதிகார அமைப்பு எதுவுமின்றி மேலும் ஆணைகள் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றங்கள் செயலுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கூறியிருக்கிறது மற்றும் தொழிலாளர் நீதிமன்றங்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயலுறுத்தும் நடவடிக்கைகளின் செல்லுந்தன்மை தொடர்பாக மேல்நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட எதிர்மறையான ஆணை என்கின்ற நேர்வில் 45/2008-ஆம் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான தொழில் தகராறுகள் சட்டத்தின் முக்கியத்துவம் தோல்வியடையும். மாநில சட்ட ஆணையம் அதன் காரணமாக இந்த நோக்கத்திற்காக மேற்சொன்ன 11-B பிரிவு திருத்தம் செய்யப்படலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அரசு, தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் மேற்சொன்ன பரிந்துரையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. மேற்சொன்ன பிரிவு 11-Bயை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது.

டாக்டர். நிலோபர் கபில்,

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 January 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-01-07.Extraordinary_7_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2019-01-07.Extraordinary_7_Part-IV_Section-1.