© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : 6.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 2] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 9, 2019 மார்கழி 25, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2049
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 136, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H2)த் துறை, 1 அக்டோபர் 2018.] மத்திய அரசின் முன் அனுமதியுடன் [காண்க: நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோக அமைச்சகம், உணவு & பொது விநியோகத் துறையின் 09-09-2016ஆம் நாளிட்ட 21/18/2014-iT (தொகுதி-ii) ஆம் எண் கோப்பு] தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பின்வரும் ஆணையை இதனால் வெளியிடுகிறார், அதாவது:-
குறுந்தலைப்பு, அளவு மற்றும் தொடக்கம்:-
1. இந்த ஆணை, "தமிழ்நாடு 2018-ஆம் ஆண்டு நேரடி விற்பனை வழிகாட்டி குறிப்புகள் ஆணை," என அழைக்கப்படலாம்.
2. இது தமிழ்நாடு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும்
3. இந்த ஆணை உடனடியாக செயலுக்கு வரும்.
பகுதி - 1:-பொருள் விளக்கங்கள்.-
இந்த வழிகாட்டி குறிப்புகளில், வேறு பொருள் குறித்தாலன்றி மற்றபடி
1. "சட்டம்" என்பது 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (மத்தியச் சட்டம் 68/1986) என்று பொருள்படும் 2. "நுகர்வோர்" என்பது 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வகைசெய்யப்பட்டவாறான அதே பொருளையே கொண்டிருக்கும்.
3. "வாடிக்கையாளராகத்தக்க நபர்" என்பது நேரடி விற்பனை வாய்ப்புடன் இணைவதற்காக நேரடி விற்பனையாளரால் வாய்ப்பு அல்லது செயற்குறிப்பு அளிக்கப்பட்ட நபர் என்று பொருள்படும்.
4. "நேரடி விற்பனையாளர்" என்பது முதலுக்கு முதல் என்கிற அடிப்படையில் நேரடி விற்பனை வணிகத்தை மேற்கொள்வதற்கு சட்டப்படி செயல்படுத்தத்தக்க எழுத்து வடிவிலான ஒப்பந்தத்தின் வாயிலாக நேரடி விற்பனை நிறுவனத்தால் நேரடியாக அல்லது மறைமுகமாக நியமனம் செய்யப்பட்ட அல்லது அனுமதியளிக்கப்பட்ட நபர் என்று பொருள்படும்.
'எழுத்து வடிவிலான ஒப்பந்தம்' என்பதில் மின்னணு ஒப்பந்தங்கள் அல்லது எண்மிய ஒப்பந்தங்கள் அடங்கும். மேலும், 2000-ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 21/2000) விதித்துறைகளின்படி இவை நிருவகிக்கப்படும்.
5. "நேரடி விற்பனை கட்டமைப்பு" என்பது விநியோகத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள நேரடி விற்பனையாளர்களின் கட்டமைப்பு என்று பொருள்படும். இத்தகைய நேரடி விற்பனையாளர்கள், அடுத்தடுத்த நிலைகளிலுள்ள நேரடி விற்பனையாளர்களை நியமிப்பர் அல்லது அறிமுகப்படுத்துவர் அல்லது முன்மொழிவர். இவர்கள் அத்தகைய நேரடி விற்பனையாளர்களுக்கு அப்போதைக்கு ஆதரவாக இருப்பர்.
[ 1 ]
iii-1a-(2) (T Sup)2 விளக்கம்- "நேரடி விற்பனை கட்டமைப்பு" என்பது இந்த வழிகாட்டிக் குறிப்புகளுக்கேற்ப நேரடி விற்பனை வணிகத்தை மேற்கொள்வதற்காக நேரடி விற்பனை நிறுவனத்தால் பின்பற்றப்படும் யாதொரு பகிர்ந்தளிப்பு அல்லது விற்பனை ஏற்பாட்டுமுறை என்று பொருள்படும். இதில் விநியோகத்தின் பன்முக நிலையிலான விற்பனை முறையும் அடங்கும்.
6. "நேரடி விற்பனை" என்பது, பொருட்களை சந்தைப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் அல்லது பிரமிட் திட்டத்தின் கீழ் நீங்கலாக, நேரடி விற்பனை கட்டமைப்பின் ஒரு அங்கமாக சேவைகளை வழங்குதல் என்று பொருள்படும் ஆனால், "நிரந்தர சில்லறை அமைவிடம்" ஒன்றின் வாயிலாக அல்லது பொதுவாக நுகர்வோர்களுக்கு அத்தகைய பொருட்கள் அல்லது சேவைகளின் விற்பனை, அவர்களது இல்லம்அல்லது பணியிடத்தில் நடைபெறும் அல்லது அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த விவரிப்பு மற்றும் செயல்முறை விளக்கம் வாயிலாக குறிப்பிட்ட இடத்தில் அத்தகைய விற்பனை நடைபெறும்.
நிரந்தர சில்லறை அமைவிடத்திலிருந்து செய்யப்படும் விற்பனையை பகுதி 1.6 கட்டுப்படுத்தாது / தடுக்காது. எனினும் நேரடி விற்பனை நிறுவனம், இத்தகைய வழிகாட்டி நெறிமுறைகளால் நிருவகிக்கப்படும்.
விளக்கம்:- "நிரந்தர சில்லறை அமைவிடம்" என்பதில் வழக்கமான வணிக நடைமுறைகளில், விற்பனையாளர் விற்பனை மேற்கொள்ளும் அத்தகைய இடம், அமைவிடம் அல்லது வளாகங்கள் ஆகியவை அடங்கும்.
7. "நேரடி விற்பனை நிறுவனம்" என்பது பிரமிட் திட்டத்தில் ஈடுபடாமல், நேரடி விற்பனையாளர் ஒருவர் வாயிலாக சரக்குகள் அல்லது சேவைகளை விற்கும் அல்லது விற்பனை செய்வதற்காக அவற்றை வழங்கும் ஒரு நிறுவனம் என்று பொருள்படும்.
ஆனால், "நேரடி விற்பனை நிறுவனம்" என்பதில் அவ்வப்போது மேற்சொன்ன நோக்கத்திற்காக அரசால் வேறுவகையில் அறிவிக்கையிடப்பட்ட யாதொரு நிறுவனம் அல்லது வணிகம் அடங்காது.
8. "சரக்கு" என்பது 1930-ஆம் ஆண்டு சரக்குகள் விற்பனைச் சட்டத்தில் (மத்தியச் சட்டம் 3/1930) பொருள்விளக்கமளிக்கப்பட்டவாறான சரக்குகள் என்று பொருள்படும். சேவைகள் என்பது 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் (மத்தியச் சட்டம் 68/1986) பொருள் விளக்கமளிக்கப்பட்டவாறான சேவை என்று பொருள்படும்.
9. சரக்குகள் அல்லது சேவைகள் குறித்த நேர்வில், "விற்பனை செய்யத்தக்கவை" என்பது பயன்படுத்தப்படாத மற்றும் விற்பனை செய்யத்தக்க, காலாவதியாகாத மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஏற்றதாக இல்லாத, தொடரப்படாத அல்லது சிறப்பு விற்பனை சரக்குகள் அல்லது சேவைகள் என்று பொருள்படும்
10. "தீர்மான காலம்" (cooling-off period) என்பது நேரடி விற்பனையாளரும் நேரடி விற்பனை நிறுவனமும் பகுதி 4-இன் கீழ் உடன்படிக்கை செய்து கொண்ட நாள் முதல் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட வேண்டிய நாள் வரையிலான காலம் என்றும் இதற்குள்ளாக, நேரடி விற்பனையாளர், ஒப்பந்ததை மீறியதற்கான தண்டனைக்கு உட்படாமல், உடன்படிக்கையை ஏற்க மறுக்கலாம் என்றும் பொருள்படும் 11. "பிரமிட் திட்டம்" என்பது ஒரு திட்டத்தில் கூடுதல் சந்தாதாரர்களை சேர்த்ததனாலும் அவர்களின் நடவடிக்கை அல்லது செயல்பாட்டின் விளைவாகவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ யாதொரு பயனை அடைவதற்காக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களை இணைக்கும் சந்தாதாரர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்திற்கான சந்தாதாரர்களின் பல அடுக்கு கட்டமைப்பு என்று பொருள்படும். புதிய சந்தாதாரர்களை சேர்க்கும் சந்தாதாரர்கள் உயரிய நிலையிலும் புதிதாக இணைந்தவர்கள் அடுத்த நிலையிலுமென அடுத்ததடுத்த சேர்க்கைகளால் அவர்கள் பல-அடுக்கிலான சந்தாதாரர்கள் கட்டமைப்பை உருவாக்குவர்.
ஆனால், சந்தாதாரர்கள், சரக்குகள் அல்லது சேவைகளை விற்பனை செய்ததால் பெறப்பட்ட பயனின் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ யதொரு பயனை பெறும் நோக்கத்தில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்களை சேர்க்கும் சந்தாதாரர்களைக் கொண்ட நேரடி விற்பனை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட திட்டத்திற்கான சந்தாதாரர்களின் பல நிலையிலான கட்டமைமைப்பிற்கு இது பொருந்தாது. பின்வரும் அனைத்திற்கும் இத்திட்டம் / நிதி ஏற்பாடு இணங்கி செயல்படும். அவையான:-
(a) புதிய பங்கேற்பாளர்களை சேர்ப்பதற்கு / நியமனம் செய்வதற்கு நேரடி விற்பனையாளர் உழைப்பூதியம் அல்லது ஊக்கத்தொகை பெறுவதற்கான எந்தவொரு வழிவகையும் இல்லை
(b) i. நுகர்வோர்களிடம் அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் விற்கப்படும் அல்லது மறு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட விலையை விட அதிகமான தொகை மற்றும்
ii. நுகர்வோர்களால் பயன்படுத்தப்பட்ட அல்லது அவர்களிடம் விற்கப்படும் அல்லது மறு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகைக்கு மிகையான சரக்குகள் அல்லது சேவைகள் அளவிற்கு பங்கேற்பாளர், சரக்குகள் அல்லது சேவைகளை கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதில்லை
(c) யாதொரு நுழைவு / பதிவு கட்டணம், விற்பனையை அதிகரிக்கும் சாதனம் மற்றும் பொருட்களின் விலை அல்லது பங்கேற்பு தொடர்பான ஏனைய கட்டணங்களை பங்கேற்பாளர்கள் செலுத்த வேண்டியதில்லை
(d) பங்கேற்பு குறித்த "முக்கிய சொற்களை" விவரிக்கும் எழுத்து மூலமான ஒப்பந்தத்தை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும்.
(e) இத்திட்டத்தில் இணைவதற்கு அல்லது பங்கேற்பை ரத்து செய்வதற்கு இத்திட்ட செயல்பாடுகளில் பங்கேற்பவர்களுக்கு அளிக்கப்படும் யாதொரு தொகையை பெறுவதற்கு பங்கேற்பாளர்களுக்கு போதிய கால அவகாசத்திற்கு அனுமதிக்கிறது/ வகைசெய்கிறது.
(f) நியாயமான வரையறைகளுடன், பங்கேற்பாளரின் வேண்டுகோளின் பேரில் அவருக்கு விற்கப்பட்ட "உடனடியாக விற்பனை செய்யததக்க" சரக்குகள் அல்லது சேவைகளுக்கான மீள்பெறுகை அல்லது மறுகொள்முதல் கொள்கைக்கு அனுமதிக்கிறது அல்லது வகைசெய்கிறது3 (g) நுகர்வோர்களுக்கு, குறிப்பாக, இதன் நேரடி விற்பனை நிறுவனத்தின் பொருள்விளக்கத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளவர்களுக்கான குறை தீர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறது.
விளக்கம் 1:- இந்த வரம்பு நிபந்தனையின் செயல் நோக்கத்திற்காக, "முக்கிய சொற்கள்" என்ற சொல் மீள்பெறுகை அல்லது மறுகொள்முதல் கொள்கை, தீர்மான காலம், உத்திரவாதம் மற்றும் திருப்பியளிக்கும் கொள்கை என்று பொருள்படும்.
12. "பண சுழற்சி திட்டம்" என்பது 1978ஆம் ஆண்டு பரிசுச் சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் (தடை) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 43/1978) கீழ் வரையறுக்கப்பட்டவாறான அதே பொருளையே கொண்டிருக்கும்.;
13. "உழைப்பூதிய ஏற்பாட்டு முறை" என்பது நேரடி விற்பனையாளருக்கு ஈடு செய்வதற்காக நேரடி விற்பனை நிறுவனத்தால் பின்பற்றப்பட்டு நேர்விற்கேற்ப மாதாந்திர அல்லது காலமுறையான அல்லது ஆண்டு அடிப்படையில் அல்லது இவ்விருவகையிலும் நேரடி விற்பனை நிறுவனத்தால் நேரடி விற்பனையாளர்களுக்கு செலுத்தப்பட்ட, நிதி மற்றும் நிதி சாரா பயன்கள் உள்ளிட்ட ஊக்கத்தொகைகள், இலாபங்கள் மற்றும் தரகு ஆகியவற்றை பகிரும் முறையை விளக்குகின்ற ஏற்பாட்டுமுறை என பொருள்படும். ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனத்திற்கான இந்த ஏற்பாட்டுமுறையானது, பின்வருமாறு செயல்படும். அவையாவன-
(a) அத்தகைய நேரடி விற்பனையில் பங்கேற்பதற்கு, ஆட்சேர்ப்பிலிருந்து நேரடி விற்பனையாளர் உழைப்பூதியம் பெறுவதற்கான வழிவகை இல்லை.
(b) அத்தகைய நேரடி விற்பனையாளர்கள் விற்பனை செய்த சரக்குகள் மற்றும் சேவைகள் மூலம் பெறப்பட்ட உழைப்பூதியத்தை நேரடி விற்பனையாளர்கள் பெறுகின்றனர் என்பதை உறுதி செய்யும்.
(c) உழைப்பூதியத்தை கணக்கிடும் முறையை தெளிவாக தெரிவிக்கும்.
14. "மாநிலம்" என்பதற்கு தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்
15. "பதிவு செய்யும் அதிகாரி" என்பதற்கு தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரையில், அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியின் தொழில் மற்றும் வர்த்தக துறை ஆணையர் என்று பொருள்படும்.
16. "ஒழுங்கு முறை அதிகாரி" என்பதற்கு தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரையில், அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியின் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் என்று பொருள்படும்.
17. "மேல்முறையீட்டு அலுவலர்" என்பதற்கு தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரையில், அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியின் மாவட்டங்களின் ஆட்சியர் என்று பொருள்படும்.
18. "திருத்த அலுவலர்" என்பதற்கு என்பதற்கு தமிழ்நாடு மாநிலத்தை பொறுத்தவரையில், அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியின் தொழில் மற்றும் வர்த்தக துறை ஆணையர் என்று பொருள்படும்.
பகுதி 2. நேரடி விற்பனை வணிகத்தை ஏற்படுத்துவதற்கான நிபந்தனைகள்:-
தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, நேரடி விற்பனை வணிகத்தை நடத்த கருதுகிற ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனமும், நேரடி விற்பனை வணிகத்தை நடத்துவதற்காக தொன்னூறு நாட்களுக்குள் பின்வரும் நிபந்தனை தொகுப்புகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். அவையாவன:-
1. இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற சட்ட நிறுவனமாக இருக்க வேண்டும்
2. புதிதாக சேர்க்கப்பட்ட நேரடி விற்பனையாளர்களுக்கான உழைப்பூதிய ஏற்பாட்டுமுறை மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உழைப்பூதியம் குறித்து வரையறுக்கப்படாத ஆனால் நேரடி விற்பனை நடவடிக்கையின் அனைத்து அம்சங்கள் குறித்த நியாயமான மற்றும் துல்லியமான தகவல்களை வளர்ந்துவரும் அனைத்து நேரடி விற்பனையாளர்களுக்கு கட்டாயமாக புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
நேரடி விற்பனை நிறுவனத்தால் அல்லது நேரடி விற்பனையாளரால் அல்லது நேரடி விற்பனை நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட யாதொரு நபரால், நேரடியாக அல்லது யாதொரு எண்மிய முறையில் பயிற்சியளிக்கப்படும்.
3. புதிதாக வளர்ந்து வருகிற மற்றும் தற்போதுள்ள நேரடி விற்பனையாளர்களுக்கு உழைப்பூதிய வாய்ப்பு மற்றும் அதுதொடர்பான உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் குறித்த துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்க வேண்டும்.
4. அனைத்து நிலுவைகளையும் செலுத்தி வணிக ரீதியாக நியாயமான முறையில் நேரடி விற்பனையாளர்களிடமிருந்து தொகை பெற்று அரசிடம் செலுத்த வேண்டும்.
5. நேரடி விற்பனையாளருக்கு சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், செயல்படுத்தக்கூடிய நியாயமான வணிக வறையறைகளின் அடிப்படையில் ஒவ்வொரு நேரடி விற்பனையாளருக்கும் முழுமையாக திருப்பி அளிக்கும் அல்லது மீள்பெறுகை உத்திரவாதத்திற்கு அறிவிக்கையிட்டு வகைசெய்ய வேண்டும்
(6) ஒவ்வொரு நேரடி விற்பனையாளருக்கும், அவர்களுக்கான தீர்மானக் காலத்தை (Cooling off period) அறிவித்து வழங்க வேண்டும். அத்தகைய தீர்மானக் காலத்தை பெற்ற ஒவ்வொரு நேரடி விற்பனையாளரும், கீழ்க்காண்பவற்றை பெறுவதற்கு தகுதியுடையவர்களாவர்.
(a) உறுப்பினராக சேர்ந்த நேரத்தில் பெறப்பட்ட அனைத்து சரக்குகளையும் திருப்பி அளிப்பதற்காக செலுத்தப்பட்ட யாதொரு பயிற்சி கட்டணம், உரிமையாளர் கட்டணம், பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கான கட்டணம் அல்லது நேரடி விற்பனையாளராக பங்கேற்பதற்கு முழு உரிமையுடைவர்கள் தொடர்பான ஏனைய கட்டணங்கள் உட்பட, யாதொரு கட்டணத்தை திருப்பியளித்தல்;
4(b) தீர்மானக் காலத்தின் போது, நேரடி விற்பனையாளர்களால் கொள்முதல் செய்யப்பட்ட ஏனைய யாதொரு சரக்குகளை திருப்பி அனுப்புதல்;
(7) பொருட்களின் விற்பனையை ஊக்குவிப்பவர் அல்லது முக்கிய நிருவாக மேலாளர், உரிய வாய்ந்த அதிகாரவரம்பெல்லையுடைய யாதொரு நீதிமன்றத்தால், குற்றச் செயலுக்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறைத்தண்டனையுடன் கூடிய தண்டனை விதிக்கப்பட்டிருக்கக்கூடாது;
(8) விற்பனை பொருட்களின் விலை, பொருட்களை திருப்பி அளித்தல் அல்லது அதனை மாற்றுதல் மற்றும் செம்மையான முறையில் சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்குதல், விற்பனைக்கு பிந்தைய குறைகளை களைதல் போன்றவைகளை நுகர்வோர் மற்றும் நேரடி விற்பனையாளர்கள் அறிந்திருப்பதற்கு ஏதுவாகவும், அவர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் வகையிலும், மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட அதன் செயல்பாட்டு அதிகாரவரம்பெல்லையில் அலுவலகம் ஒன்றை வைத்திருக்க வேண்டும்;
நேரடி விற்பனையாளர்கள்/நுகர்வோர்கள், நேரடி விற்பனை நிறுவனம் / நேரடி விற்பனை நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியுடன் தொடர்பு கொள்ளும் இடங்களில், நுகர்வோர்கள் அணுகுவதற்கு ஏதுவாக, அதிகாரவரம்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாநிலம் ஒன்றில் அலுவலகம் ஒன்றை அமைக்கலாம்.
(9) மேற்சொன்ன நிபந்தனையை / பகுதியை பின்பற்றாத யாதொரு வணிகம் அல்லது சந்தைப்படுத்துதல் அல்லது விற்பனை செயல்பாடு, நேரடி விற்பனையாக கருதப்படக்கூடாது. மேலும், அவை இது தொடர்பான சட்டங்களின் கீழ் உரியவாறு கையாளப்பட வேண்டும்.
பகுதி 3 : நேரடி விற்பனை வணிகத்தை நடத்துவதற்கான நிபந்தனைகள்;-
ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனமும், கீழ்க்காணும் நிபந்தனைகளுக்கு இணக்கமாக இருத்தல் வேண்டும்;- (1) விற்பனை செய்யப்பட வேண்டிய சரக்குகள் அல்லது சரக்குகளை வழங்குதல் அல்லது வழங்கப்பட வேண்டிய சேவைகளை அடையாளம் காணும் வகையில் வணிகக்குறியீடு, சேவைக் குறியீடு அல்லது ஏனைய யாதொரு அடையாளக்குறியீட்டினை உடைய உரிமையாளராகவும், உடைமையாளராகவும், உரிமதாரராகவும் நிறுவனம் இருக்க வேண்டும்;
(2) அதன் நேரடி விற்பனையாளர்களுக்கு முறையான அடையாள ஆவணங்களை நிறுவனம் வழங்க வேண்டும்;
(3) நிறுவனத்தில் பதிவு செய்தல், இடைநிறுத்தம், செயல்பாட்டு நிலை, வருமானங்கள் போன்றவற்றுடன் நின்று விடாமல், நிறுவனத்தின் சரக்குகள், சேவைகள், ஒப்பந்தக்கால அளவு, விலை, வருமானத் திட்டம், நேரடி விற்பனையாளர்களின் விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் உட்பட, அவர்களின் வணிக நடவடிக்கைகளை, ஆட்களின் உதவியுடன் அல்லது மின்னணு முறையில் கீழ்க்காணும் முறையான பதிவுருக்களை நிறுவனம் வைத்து வர வேண்டும்;-
(a) ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனமும் "நேரடி விற்பனையாளார்களின் பதிவேடு ஒன்றை வைத்து வர வேண்டும்.
அதில், பதிவு செய்த ஒவ்வொரு நேரடி விற்பனையாளர் தொடர்பான விவரங்கள் நாளது வரையாக்கப்பட்டு, வைத்துவரப்பட வேண்டும்;
(b) நேரடி விற்பனையாளர்களின் விவரங்களில், சரிபார்க்கப்பட்ட அவர்களின் முகவரி சான்று, அடையாளச் சான்று மற்றும் நிரந்தர கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் கீழ்க்காண்பவற்றையும் சேர்க்க வேண்டும்.
1961-ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் (மத்தியச்சட்டம் 43/1961) விதித்துறைகளின் படி, நிரந்தர கணக்கு எண் அவசியமாகும். நேரடி விற்பனையாளர்கள், அவர்களின் யாதொரு புகைப்படம், மாநில அல்லது மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை நேரடி விற்பனை நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த அடையாள அட்டைகள், பின்வருவனவற்றிலிருந்து ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
ஆதார் அட்டை
ஓட்டுநர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
கடவுச்சீட்டு மற்றும்
குடும்ப அட்டை அல்லது
மாநில அல்லது மத்திய அரசால் வழங்கப்பட்ட சரிபார்க்கக்கூடிய ஏனைய யாதொரு அடையாள ஆவணம்
(c) நேரடி விற்பனையாளர்களின் பதிவேடு, கணினியால் படிக்கத்தக்க வகையிலும், அச்சடிக்கத்தக்க வகையிலும் இருக்க வேண்டும்.
(4) நேரடி விற்பனை நிறுவனத்தை தொடர்பு கொள்வதற்கான தகவல், அதன் நிருவாகம், விற்பனை பொருட்கள், விற்பனை பொருட்கள் குறித்த தகவல், விற்பனை பொருட்களின் தரச்சான்றிதழ், விலை, முழு வருமான திட்டம், நேரடி விற்பனையாளர்களுடனான ஒப்பந்தக்காலம், நேரடி விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களுகளின் புகார்களுக்கு தீர்வு காணுதல் போன்ற நிறுவனம் தொடர்பான விவரங்களுடன், வலைத்தளம் முறையாக பராமரிக்கப்பட்டு, நாளது வரையாக்கப்பட வேண்டும். அந்த வலைதளத்தில், நுகர்வோர் புகார்களை பதிவுசெய்வதற்கான இடம் இருப்பதுடன், அத்தகைய புகார்கள் பெறப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும்;
5(5) நிறுவனம், நேரடி விற்பனையாளர்களுடனான ஒப்பந்தத்திற்கிணங்க, பொருந்துகிறவாறான, அவர்களின் குறிப்பிட்ட கால முறை கணக்கு/தகவல், விற்பனைகள், கொள்முதல்கள், வருமான விவரங்கள், பங்குத் தொகைகள், மிகையூதியம் மற்றும் ஏனைய தொடர்பான தரவுகளை அனைத்து நேரடி விற்பனையாளர்களுக்கும் அளிக்க வேண்டும். அனைத்து நிலுவைகளும் செலுத்தப்பட வேண்டும். வணிக ரீதியில் நியாயமான முறையில் தொகை பெற்று அரசிடம் நேரடியாக செலுத்த வேண்டும்.
(6) நிறுவனம், மாதாந்திர அடிப்படையில், அதன் அனைத்து நேரடி விற்பனையாளர்களின்/விநியோகிப்பவரின் கொள்முதல் மதிப்பினை கண்காணிக்க வேண்டும்; கொள்முதல் மதிப்பு, வரி விதிப்பின் அளவை கடந்ததும், சரக்குகள் மற்றும் சேவை வரி உட்பட, தொடர்புடைய வரியினை செலுத்துவதற்கு நேரடி விற்பனையாளருக்கு/விநியோகிப்பவருக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்;
(7) நிறுவனம், பொதுவாக, பயிற்சி அல்லது செய்முறை பொருட்கள், பட்டியல் தொகுப்பு, சிற்றேடு முதலானவற்றை நேரடி விற்பனையாளர்களுக்கு இலவசமாக அல்லது குறிப்பிட்ட விலையில் வழங்க வேண்டும்;
(8) நேரடி விற்பனை நிறுவனம் கீழ்க்காணும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது,-
(a) நிறுவனம், இனி வருகிற அல்லது தற்போதுள்ள நேரடி விற்பனையாளர்களுடன் தொடர்பு கொள்கையில், உள்ளபடியான அல்லது திறன் மிகு விற்பனைகள் அல்லது வருமானங்களை தவறாகத் தெரிவித்தல் உள்ளிட்ட தவறாக வழி நடத்துகின்ற, ஏமாற்றுகின்ற அல்லது முறையற்ற வகையிலான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை பயன்படுத்தக்கூடாது.
(b) வருங்கால நேரடி விற்பனையாளர்களுக்கு, சரிபார்க்க இயலாத யாதொரு உண்மைத்தகவலையும் அல்லது மனநிறைவளிக்காத யாதொரு வாக்குறுதியையும் அளிக்கக்கூடாது;
(c) யாதொரு வருங்கால நேரடி விற்பனையாளருக்கு, பொய்யான அல்லது ஏமாற்றுகிற வகையில், நேரடி விற்பனையின் யாதொரு பயன்களை தெரிவிக்கக்கூடாது;
(d) நேரடி விற்பனை நிறுவனத்துக்கும், நேரடி விற்பனையாளருக்கும் இடையேயான ஊதிய ஏற்பாட்டு முறை மற்றும் ஒப்பந்தம் உள்ளிட்ட அதன் நேரடி விற்பனை நடைமுறை, அல்லது பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் வகையில், நேரடி விற்பனை நிறுவனத்தால் அல்லது நேரடி விற்பனையாளரால் விற்கப்படுகிற சரக்குகள் மற்றும் சேவைகள், தொடர்பாக யாதொரு முறையீடு செய்யக்கூடாது அல்லது காரணமாக இருக்கக்கூடாது அல்லது அனுமதியளிக்கக்கூடாது
(e) நேரடி விற்பனை நிறுவனத்துக்கும், நேரடி விற்பனையாளருக்கும் இடையேயான ஊதிய ஏற்பாட்டு முறை மற்றும் ஒப்பந்தம் உள்ளிட்ட அதன் நேரடி விற்பனை நடைமுறை அல்லது நேரடி விற்பனை நிறுவனத்தால் அல்லது நேரடி விற்பனையாளரால் விற்கப்படுகிற சரக்குகள் மற்றும் சேவைகள் தொடர்பான அதன் நேரடி விற்பனை நடைமுறைக்கு தொடர்புடைய யாதொரு குறிப்பிட்ட பொருளை தவறாக வழிநடத்துகிற அல்லது அவ்வகையிலான யாதொரு நடவடிக்கையில் ஈடுபட கூடாது அல்லது காரணமாக இருக்கக்கூடாது அல்லது அதற்கு அனுமதிக்கக்கூடாது;
(f) நேரடி விற்பனை நிறுவனத்துக்கும், நேரடி விற்பனையாளருக்கும் இடையேயான ஊதிய ஏற்பாட்டு முறை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான அதன் நேரடி விற்பனை நடைமுறை, நேரடி விற்பனை நிறுவனத்தால் அல்லது நேரடி விற்பனையாளரால் விற்கப்படுகிற சரக்குகள் மற்றும் சேவைகள் உட்பட, அதன் நேரடி விற்பனை நடைமுறையை ஊக்குவிப்பதில் ஏமாற்றுகிற, கட்டாயப்படுத்துகிற, தொல்லையளிக்கிற அல்லது அறிவுக்கு ஒவ்வாத அல்லது சட்டவிரோதமான முறையை பயன்படுத்த அல்லது காரணமாக அல்லது பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவோ கூடாது;
(g) மறு விற்பனையில் விற்பனை செயல்முறை விளக்க உபகரணம் அல்லது பொருட்களின் கொள்முதல் நீங்கலாக, (இதற்கான தரகுத் தொகை, மிகையூதியம் அல்லது ஏனைய யாதொரு பயனுக்கு அல்லாத அவற்றின் அடக்க விலைக்கு மேற்படாத விலை யாதொரு நபருக்கும் அளிக்கப்படமாட்டாது.)
அதன் நேரடி விற்பனை நடவடிக்கைகளில் பங்கேற்கும் பொருட்டு, நுழைவுக் கட்டணங்கள் மற்றும் புதுப்பிப்பு கட்டணங்கள் உட்பட யாதொரு சரக்குகள் அல்லது சேவைகளை வாங்குமாறு அல்லது பெறுமாறு அல்லது யாதொரு ஆதாயத்திற்கு வகை செய்யுமாறு அதன் நேரடி விற்பனையாளர்களிடம் கோரக்கூடாது.
(h) நேரடி விற்பனையாளர்களாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை அறிமுகப்படுத்துவதற்கு அல்லது தெரிவு செய்வதற்காக, யாதொரு நபருக்கும், யாதொரு பயனை வழங்கக்கூடாது;
(i) குறைந்தளவு மாதாந்திர சந்தாதொகை அல்லது புதுப்பித்தல் கட்டணங்கள் வகையில், யாதொரு தொகையை செலுத்துமாறு நேரடி விற்பனையாளர்களைக் கேட்கக்கூடாது;
நேரடி விற்பனை நிறுவனத்துக்கும், நேரடி விற்பனையாளருக்கும் இடையேயான ஊதிய ஏற்பாட்டு முறை மற்றும் ஒப்பந்தம் அல்லதுநேரடி விற்பனை நிறுவனத்தால் அல்லது நேரடி விற்பனையாளரால் பொய்யாக அல்லது தவறான வழிமுறையில் விற்கப்பட்டு வருகிற சரக்குகள் மற்றும் சேவைகள் உட்பட, அதன் நேரடி விற்பனை நடைமுறை தொடர்பான யாதொரு முறையீட்டை தெரிந்தே செய்வது, தவிர்ப்பது, ஈடுபடுவது அல்லது அதற்கு காரணமாக இருப்பது அல்லது செய்வதற்கான அனுமதியளிப்பது போன்றவைகளை செய்தல் கூடாது;
(9) நேரடி விற்பனை நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விநியோக ஏற்பாட்டு முறை எதுவாக இருப்பினும், இந்த வழிகாட்டி குறிப்புகளை, நேரடி விற்பனை கட்டமைப்பின் யாதொரு உறுப்பினரை தவறாது கடைபிடிக்கச் செய்வது நேரடி விற்பனை நிறுவனத்தின் பொறுப்பாகும். (அந்த உறுப்பினர், நேரடி விற்பனை நிறுவனத்தால், நேரடியாக அல்லது மறைமுகமாக நியமிக்கப்பட்டிருப்பினும்)6 இந்த பகுதிக்கு இணங்கி செயல்படுவதற்கு , தற்போதுள்ள நேரடி விற்பனையாளர்களுடனான நடப்பு ஒப்பந்தங்களின் பின் இணைப்பில் நேரடி விற்பனை நிறுவனம் கையொப்பமிட வேண்டும். இனிமேல், நேரடி விற்பனையாளர்கள் நியமிக்கப்படுவதற்கு, இந்த பகுதியானது, இரு தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும். அதன் நேரடி விற்பனையாளர்கள் இந்த வழிகாட்டி குறிப்புகளுக்கு இணக்கமாக ஒப்பந்தத்தின் படி, நடப்பதை நேரடி விற்பனை நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும், அவ்வாறு இணங்கி செயல்படாததற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பகுதி 4: நேரடி விற்பனையாளர்/விநியோகிப்பவர் மற்றும் நேரடி விற்பனை நிறுவனத்திற்கு இடையேயான நேரடி விற்பனை ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள்,-
(1) பதிவு செய்வதற்கு முன்னர், நேரடி விற்பனையாளர்களுடன் ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனமும், நேரடியாக அல்லது மறைமுகமாக, ஒப்பந்த உடன்படிக்கையை ஒன்றை செய்து கொள்ள வேண்டும்.
(a) 1872 ஆம் ஆண்டு இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 9/1872) 10-ஆம் பிரிவுக்கு இணக்கமான வகையில், ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட வேண்டும்.
(b) இந்த வழிகாட்டி குறிப்புகள் அல்லது செயலில் உள்ள ஏனைய யாதொரு சட்டத்தின் கீழ், இந்த ஒப்பந்தத்திற்கான தரப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் ஆகியவற்றுடன், 1872-ஆம் ஆண்டு (மத்தியச் சட்டம் 9/1872) இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் கீழ், தரப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடப்பாடுகளுடன் ஒரே கால அளவில் நீடித்திருக்கிறவாறாக, உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை தரப்பினர்கள் பெற்றிருப்பர்.
(2) இந்த ஒப்பந்தம் கீழ்க்காணும் வகையில், பங்கேற்பின் மூலம் ஆதாயம் ஈட்டும் வரையறைகளை வரையறுக்கும் வகையில், எழுத்து பூர்வமாக செய்து கொள்ளப்பட வேண்டும்;-
(a) ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்துவதற்கு அல்லது நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் தொகைக்கு அதிகமாக, நியாயமற்ற முறையில் அதிகமான தொகைக்கு, சரக்குகள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்கு நேரடி விற்பனையாளரை கட்டாயப்படுத்த அல்லது தூண்டக் கூடாது;
(b) நேரடி விற்பனையாளர், அவர் பங்கேற்பதை இரத்து செய்வதற்கும், கொள்முதல் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளுக்கான தொகையையும், விண்ணப்பதாரரின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அளிக்கப்பட்ட யாதொரு தொகையையும் திரும்ப பெறுவதற்கு நியாயமான கால அளவுக்கு அனுமதிக்க வேண்டும் அல்லது வகை செய்ய வேண்டும்;
(c) நேரடி விற்பனையாளர் ஒப்பந்தத்தில் இணைந்த நாளிலிருந்து அல்லது கடைசியாக விற்பனை செய்த நாளிலிருந்து, இரண்டு ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கு, , சரக்குகள் மற்றும் சேவைகளில் யாதொரு விற்பனையும் நேரடி விற்பனையாளர் மேற்கொள்ளாதது, தெரிய வரும் போது, அத்தகைய நிகழ்வுகள் மற்றும் அத்தகைய நேர்வுகளில், நியாயமான அறிவிப்புடன், ஒப்பந்தத்தை நிறுத்தி கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்;
நேரடி விற்பனை நிறுவனத்திற்கும், நேரடி விற்பனையாளருக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த நிபந்தனைகள் வாயிலாக அல்லது இந்திய ஒப்பந்த சட்டத்தின் விதித்துறைகளின் படி, அல்லது இரு தரப்பினரால் ஒரு மாதம் என்ற நியாயமான கால அளவிற்கு அறிவிப்பு அளிப்பதன் வாயிலாக, இடை நிறுத்த நாளுக்கு வகை செய்யப்படும் அல்லது நிருவகிக்கப்படும்.
(d) நியாயமான வரையறைகளின் பேரிலும், மேற்சொன்ன நேரடி விற்பனையாளர் கேட்டுக்கொள்வதன் பேரிலும், நேரடி விற்பனையாளரிடம் விற்கப்பட்ட சந்தைப்படுத்தத்தக்கதான தற்போதைய சரக்குகள் அல்லது அளிக்கப்படும் சேவைகளை மறுபடியும் வாங்குதல் அல்லது மறுகொள்முதல் செய்யும் கொள்கையை அனுமதித்தல் அல்லது வழங்குதல்.
பகுதி 5: நேரடி விற்பனையாளர் பின்பற்ற வேண்டிய சில கடப்பாடுகள்
(1) நேரடி விற்பனையில் ஈடுபடும் நேரடி விற்பனையாளர்கள், அடையாள அட்டையை தங்களுடன் வைத்திருக்க வேண்டும் மற்றும் முன் அனுமதி/ஒப்புதல் இல்லாமல் வாடிக்கையாளரின் வளாகத்திற்குள் செல்லக்கூடாது;
(2) விற்பனை பிரதிநிதித்துவத்தை தொடங்குகையில், கேட்டுக்கொள்ளப்படாவிட்டாலும், தங்களை அடையாளப்படுத்துதல், நேரடி விற்பனை நிறுவனத்தை அடையாளப்படுத்துதல், விற்கப்பட்ட சரக்குகள் அல்லது அளிக்கப்படும் சேவைகளின் தன்மை மற்றும் வருங்கால நுகர்வோரைக் கேட்டுக்கொள்வதன் நோக்கம் ஆகியவற்றில் உண்மையாகவும் தெளிவாகவும் இருத்தல்;
(3) தங்களை அணுகும் நுகர்வோரிடம், சரக்குகள் மற்றும் சேவைகள், விலை, கடன் காலவரையறை, பணம் செலுத்துவதற்கான கால அளவு, பொருட்களை திருப்பி அளிப்பது குறித்த கொள்கை மற்றும் உத்தரவாத நிபந்தனைகள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை குறித்து துல்லியமாக முழு விளக்கமளித்தல் மற்றும் செயல் விளக்கமளித்தல்;
(4) வருங்காலத்தில் வாடிக்கையாளராகக் கூடியவர்கள்/நுகர்வோர்களுக்கு விற்பனையின்போது, பின்வரும் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும், அவையாவன:-
(a) நேரடியாக விற்பனை செய்பவரின் பெயர், முகவரி, பதிவெண் அல்லது சேர்க்கை எண், தொலைபேசி எண் மற்றும் நேரடியாக விற்பனை செய்யும் நிறுவனத்தின் விவரங்கள்;
(b) வழங்கப்பட வேண்டிய சரக்குகள் அல்லது சேவைகளின் விவரம்;
(c) அது குறித்த விவரங்களில், சரக்குகளை திருப்பி அளிப்பதற்கான நிறுவனத்தின் கொள்கை குறித்து வணிக நடவடிக்கைக்கு முன்னர், நுகர்வோரிடம் விளக்கமளித்தல்;
7(d) தொகைப்பட்டி மற்றும் இரசீதுடன் நுகர்வோர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை மற்றும் தேவை குறிப்பாணையிடப்பட்ட நாள்;
(e) மாதிரியை ஆய்வு செய்வதற்கான நேரம் மற்றும் இடம் மற்றும் சரக்குகளை வழங்குதல்;
(f) ஆணையை இரத்து செய்வதற்கான அவருடைய உரிமை மற்றும் / அல்லது விற்பனை செய்யத்தக்க நிலையிலிருக்கும் உற்பத்தி பொருட்கள் மற்றும் செலுத்தப்பட்ட தொகை முழுவதையும் திரும்பப் பெறுவது குறித்த தகவல்;
(g) புகார் தீர்வுக்கான ஏற்பாட்டுமுறை குறித்த விவரங்கள்;
(5) உற்பத்தி பொருட்கள், விலை, வரி மற்றும் அளவு குறித்த விவரங்களை குறிப்பிடும் வரவு செலவுப் பேரேட்டினை நேரடியாக விற்பனை செய்பவர், வைத்துவர வேண்டும். அத்தகைய ஏனைய விவரங்கள், அவர் விற்பனை செய்த சரக்குகள் குறித்த நேர்வில், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அல்லது சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டவாறு பரிந்துரைக்கப்படலாம்.
(6) நேரடி விற்பனையாளர் கீழ்க்காணும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்,-
(a) தவறான வழிகாட்டுதல், ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள் மற்றும்/அல்லது நியாயமற்ற வணிக நடவடிக்கைகள்;
(b) தங்களை அணுகும் நேரடி விற்பனையாளர்களோடு, வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது உண்மையான அல்லது சாத்தியமான விற்பனை அல்லது வருவாயை மறைத்து மற்றும் தங்களை அணுகும் யாதொரு நேரடி விற்பனையாளருக்கும் நேரடி விற்பனையின் சாதகங்களை குறித்து தவறான தகவலை அளித்தல் உட்பட தவறாக வழிகாட்டுதல், பொய்யான, ஏமாற்றக்கூடிய செயல்பாடுகள் மற்றும் /அல்லது நியாயமற்ற ஆட்சேர்ப்பு முறைகள்; ஆகியவற்றில்
(c) சரிபார்க்க இயலாத யாதொரு உண்மையான அறிவிப்பை அளித்தல் அல்லது நிறைவேற்ற இயலாத யாதொரு வாக்குறுதியை தங்களை அணுகும் நேரடி விற்பனையாளரிடம் அளித்தல்;
(d) நேரடி விற்பனையின் யாதொரு சாதகமான பயன்களை, பொய்யான மற்றும்/அல்லது ஏமாற்றும் நடைமுறையில் தங்களை அணுகும் நேரடி விற்பனையாளரிடம் அளித்தல்;
(e) எந்தவொரு தகவலையும் ஊதிய நடைமுறை நேரடியாக விற்பனை செய்யும் நிறுவனத்திற்கும், நேரடியாக விற்பனை செய்பவருக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் மற்றும் ஊதிய முறை, தவறான அல்லது தவறான வழிகாட்டுதலின் படி அத்தகைய நேரடி விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்ட சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் உட்பட நேரடி விற்பனை நடவடிக்கை தொடர்பாக, அறிந்தே செய்கின்ற, விட்டுவிடுகின்ற, ஈடுபடுகின்ற, அல்லது காரணமாக அமைகின்ற, அல்லது செய்ய அனுமதிக்கப்பட வேண்டியவை;
(f) காரணமின்று பெரியளவிலான மதிப்பில், சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளை பெறுவதற்கு, முதலில் குறிப்பிடப்பட்ட நேரடி விற்பனையாளரால் பணியமர்த்தப்பட்டுள்ள நேரடி விற்பனையாளர்களை கோருதல் அல்லது ஊக்குவித்தல்;
(g) நேரடி விற்பனை நிறுவனம் வாயிலாக, வருங்கால அல்லது தற்போதுள்ள நேரடி விற்பனையாளர்களுக்கு, முதன்மை நேரடி விற்பனை நிறுவனத்திற்குள்ளாகவும் வெளியிலும், இரண்டிற்கும் யாதொரு ஒத்திசைவான புத்தகக் குறிப்புகள் அல்லது பயிற்சி சாதனங்கள் வழங்குவது குறித்து வரையறைப்படுத்தப்படாததால், இதற்கு முதன்மை நேரடி விற்பனை நிறுவனம் ஒப்புதல் அளிக்கவில்லை; மற்றும்
(h) வருங்கால அல்லது தற்போதுள்ள நேரடி விற்பனையாளர்களுக்கு தேவையான அல்லது அவர்களை ஊக்குவிப்பதற்காக யாதொரு புத்தகக் குறிப்புகள் அல்லது பயிற்சி சாதனங்கள் அல்லது விற்பனை செயல் விளக்க கருவிகளை கொள்முதல் செய்வது மற்றும் அத்தகைய கொள்முதல் எவ்வகையிலும் அவசியமாக இருப்பின் அது சாதனங்களின் விலையைக் காட்டிலும் மிகையாக இருக்கக்கூடாது.
பகுதி 6: நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் நேரடி விற்பனையாளருக்குமிடையேயான தொடர்பு
(1) நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் நேரடி விற்பனையாளருக்குமான வணிகத் தொடர்பு, இரு தரப்பினருக்குமிடையேயுள்ள எழுத்துபூர்வ ஒப்பந்தத்தின்படி தீர்மானிக்கப்பட வேண்டும்:
(a) நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் நேரடி விற்பனையாளருக்கான வழிகாட்டிகுறிப்புகளின் கீழ், நேரடி விற்பனை வணிகம் நடைபெறுவதற்கான உரிமைகள் மற்றும் கடப்பாடுகளுக்காக, நிபந்தனைகள் வெளிப்படையாக அளிக்கப்படும் மற்றும் அவையே வழக்கத்தில் இருக்க வேண்டும்;
(b) நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் மற்றும் நேரடி விற்பனையாளருக்கும் இடையேயான ஒப்பந்தத்தில், வெளிப்படையாக தெரிவித்தாலன்றி மற்ற வகையில், எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, ஏனைய அனைத்து உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும்;
(2) நேரடி விற்பனையாளர்களால், விற்பனை செய்யப்படும் உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் அல்லது வணிக வாய்ப்புகளால் எழும் குறைகளை தீர்வு செய்வது, நேரடி விற்பனை நிறுவனத்தின் பொறுப்பாகும்.
(3) நேரடி விற்பனையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகள்/வழிமுறைகளை கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும், நேரடி விற்பனை செய்யும் நிறுவனத்தின் பொறுப்பாகும்.
8உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்திற்கு, நேரடி விற்பனை செய்யும் நிறுவனமே பொறுப்பாகும் என்றும், நுகர்வோரின் நலனில், சிறந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு, நேரடி விற்பனையாளருக்கு நிறுவனம் வழிகாட்டி, உதவி புரியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நேரடி விற்பனையாளரின் நோக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க பொறுப்பு குறித்த அத்தகைய நேர்வுகளில், அவை கையொப்பமிட்ட ஒப்பந்தத்தில் தெளிவான விதிமுறைகளுடன் வரையறுக்கப்படும். ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறான வகையில், நேரடியாக விற்பனை செய்யும் ஒவ்வொரு நிறுவனமும், அதன் நேரடி விற்பனையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற வழிமுறைகளை கண்காணிப்பதற்கு ஏதேனும் ஏற்பாட்டுமுறைகளை வரையறுக்கப்பட்டு உருவாக்கப்படும்.
பகுதி 7: நுகர்வோர் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்
(1) நுகர்வோரால் அளிக்கப்படும் அனைத்து தனிப்பட்ட தகவல்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, நேரடியாக விற்பனை செய்பவர்களும் நேரடி விற்பனை செய்யும் நிறுவனமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
(2) 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 68/1986) விதித்துறைகளால், நேரடியாக விற்பனை செய்பவர்கள் மற்றும் நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் வழிநடத்தப்பட வேண்டும்.
(3) தொலைபேசி, மின்னஞ்சல், வலைதளம், அஞ்சல் மற்றும் நேரடியாக பெறப்பட்ட அனைத்து புகார்களும் அவற்றை கண்டறிந்து கண்காணிப்பதற்கும், அப்புகாரினை தீர்வு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கால அளவை பதிவு செய்வதற்காக, புகார் எண்ணை பெற்றிருக்க வேண்டும்;
(4) ஒவ்வொரு நேரடி விற்பனை நிறுவனமும், குறைதீர் குழு ஒன்றினை அமைக்க வேண்டும். அக்குழுவிலுள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் பொறுப்புகள் கீழ்கண்டவற்றில் அடங்கும். ஆனால் அவை வரையறுக்கப்படவில்லை.
(a) குறைதீர் குழுவில், குறைந்தது நேரடி விற்பனை நிறுவனத்தின் மூன்று அலுவலர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
(b) குறைதீர் குழு புகார்களுக்கு தீர்வு காண வேண்டும். மேலும், அப்புகாரின் மீது எடுக்கப்பட்ட யாதொரு நடவடிக்கையை, புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
(c) நிறுவனத்தின் நேரடி விற்பனையாளர், பணியாளர் அல்லது அந்நிறுவனத்தின் எந்தவொரு ஏனைய அலுவலருக்கும் எதிராக பொது மக்களின் யாதொரு உறுப்பினரால் அளிக்கப்படும் புகார்கள்;
(d) அத்தகைய அனைத்து புகார்களும், நேரடி விற்பனை செய்யும் நிறுவனத்தால் நேரடியாக தீர்வு செய்யப்படும்;
(5) கொள்முதல் செய்யும்போது, நுகர்வோருக்கு, நேரடி விற்பனை செய்யும் நிறுவனம் தகவல் அளிக்கும். அவற்றில் கீழ்கண்டவை இடம்பெற்றிருக்கும்:-
(a) கொள்முதல் செய்பவர் மற்றும் விற்பனை செய்பவரின் பெயர்;
(b) சரக்குகள் அல்லது சேவைகளை வழங்கும் நாள்; மற்றும்
(c) பொருட்களை திருப்பி அளிப்பதற்கான நடைமுறைகள்; மற்றும்
(d) சரக்குகளின் உத்தரவாதம் மற்றும் குறைபாடு இருக்கும் நேர்வில் சரக்குகளை பரிமாற்றம்/மாற்றம் செய்தல்:
இருப்பினும், நேரடி விற்பனை செய்யும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளுடன், விற்பனையைத் தொடர்ந்து, நேரடி விற்பனையாளர், உறுதியற்ற கோரிக்கையை மேற்கொள்ள மாட்டார்.
(6) நேரடி விற்பனை செய்யும் நிறுவனத்தின் யாதொரு பொருள் அல்லது சேவையை, விற்பனை செய்கிற அல்லது விற்பனைக்கு கோருகிற மின்-வணிக தளம்/சந்தை உட்பட எந்தவொரு நபரும், அத்தகைய விற்பனை அல்லது சலுகைகளை மேற்கொள்வதற்கு அல்லது அதைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட நேரடி விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து எழுத்துபூர்வமான இசைவைப் பெற்றிருக்க வேண்டும்.
பகுதி 8: பிரமிட் திட்டம் மற்றும் பண சுழற்சித் திட்டத்தை தடுத்தல்
(1) ஆடை சம்பந்தப்பட்ட நேரடி விற்பனை செய்யும் வணிகத்தில், பகுதி 1, துணைப் பகுதி (11)ல் வரையறுக்கப்பட்டவாறு, யாதொரு நபர் அல்லது நிறுவனம், பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்தக்கூடாது அல்லது அத்தகைய திட்டத்தில் யாதொரு நபரையும் பதிவு செய்வதோ அல்லது யாதொரு வகையில் அத்தகைய அமைப்பில் பங்கேற்க கூடாது.
(2) ஆடை சம்பந்தப்பட்ட நேரடி விற்பனை செய்யும் வணிகத்தில், பகுதி 1, துணைப் பகுதி (12)ல் வரையறுக்கப்பட்டவாறு, யாதொரு நபர் அல்லது நிறுவனம், பண சுழற்சித் திட்டத்தில் பங்கேற்க கூடாது.
பகுதி 9: கண்காணிக்கும் அதிகார அமைப்பை நியமித்தல்
(1) ஒருங்கிணைப்புத் துறையானது, தமிழ்நாடு மாநிலத்தில், நேரடி விற்பனை தொடர்பான விவகாரங்களை கையாளும். கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு, நேரடி விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
9பின்வரும் அதிகாரிகளைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது, அவை பின்வருமாறு:-
அதிகாரிகளின் பெயர்
(2)
பதவிப்பெயர் (3)
தொடர் எண். (1)
1. ஆணையர்,
தலைவர்
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்
துறை, சேப்பாக்கம், சென்னை-600 005.
2. தொழிலாளர் துணை ஆணையர்,
உறுப்பினர்
தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம், DMS வளாகம்,
தேனாம்பேட்டை, சென்னை-600 006
3. கூடுதல் ஆணையர்/இணை ஆணையர்,
உறுப்பினர்
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாக ஆணையர் அலுவலகம், DMS வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006
4. கூடுதல் ஆணையர் (PR)
உறுப்பினர்
மாநில வரி ஆணையர் அலுவலகம், சென்னை-600 005.
5. துணை ஆணையர் (நகரம்) வடக்கு மற்றும் தெற்கு,
உறுப்பினர்
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, எழிலகம் இணைப்பு கட்டடம், சேப்பாக்கம், சென்னை - 600 005.
6. இரண்டு புகழ்பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள். உறுப்பினர்கள் (2) உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணை ஆணையர் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஆனால், மாவட்ட அளவில் குழுவிற்கு தேவையில்லை. மாவட்ட வழங்கல் அலுவலர் ஒவ்வொரு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலராவார்.
(3) ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இந்த வழிக்காட்டிக் குறிப்புகளை செயல்படுத்துவதில் தங்களுக்கு உதவுவதற்கு தேவையான தகுதியுடைய பொருத்தமான யாதொரு நபர்களை அந்தந்த துறைகளிலிருந்து ஏனைய அலுவலர்களை நியமனம் செய்யலாம்.
(4) தமிழ்நாடு மாநிலத்தில் நேரடி விற்பனை செயல்பாடுகளை மேற்கொள்ளும் யாதொரு நேரடி விற்பனை நிறுவனமும், இந்த வழிக்காட்டிக்குறிப்புகளுடன் இணக்கமாக செயல்படுகிறது என்பதை தெரிவித்து முறையாக இணைக்கப்பட்ட படிவத்தை ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.
(5) நேரடி விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றவாறான ஏனைய வணிக விவரங்களையும் அதன் ஒருங்கிணைப்பு விவரங்களையும் அளிக்க வேண்டும். இத்தகைய உறுதிமொழிகள் ஆண்டுதோறும் துறையிடம் அளிக்க வேண்டும் என்பது அவசியமாகும்.
பகுதி 10: நேரடி விற்பனையாளர் வளாகத்தில் / நேரடி விற்பனை நிறுவனத்தில் வழிக்காட்டிக்குறிப்புகளில் விதிமீறல்கள் ஏதேனும் நடந்திருப்பின் அது குறித்த ஆய்வு மற்றும் பதிவு அதிகாரங்கள்.
(1) தொழில் துறையின் பொது மேலாளர் பதவி தரத்திற்கு குறையாத அமலாக்கப்பிரிவு அலுவலர் மற்றும், விழிப்புப்பணி அமலாக்கத்துறையின் அரசிதழில் பதிவுப்பெற்ற அலுவலர் மற்றும் நோய் தடுப்பு மருந்து கழகத்தின் அரசிதழில் பதிவு பெற்ற உணவு அலுவலர் மற்றும் சட்டப்படியான எடையளவு ஆய்வாளர் இந்த ஆணையின் இணக்கமான பாதுகாப்புடன் அல்லது இந்த ஆணையின் இணக்கத்துடன் அவர் மனநிறைவடையும் பொருட்டு,
(a) ஆய்வு அல்லது ஆய்வு செய்யப்பட வேண்டியதன் காரணம்.
(b) நேரடி விற்பனை நிறுவனத்தின் / நேரடி விற்பனையாளரின் சரக்குகள் / சேவைகள் குறித்து அவரது உடைமையின் யாதொரு தகவல்களை அளிப்பதற்கு தேவையான யாதொரு நபர்;
(c) தேவைப்படுகின்ற நேர்வில் உதவியுடன் உடனடியாக நிறுத்துதல் மற்றும் ஆய்வு செய்தல் ;
(d) தேவைப்படுகின்ற நேர்வில் உதவியுடன் உட்சென்று ஆய்வுசெய்தல்;
(e) அமலாக்க அலுவலர், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும்.
101973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை விதிக்கோவையில் (மத்திய சட்டம் 2/1974) கண்டுள்ள வரம்பு நிபந்தனைகள் தொடர்பாக இந்த ஆணைகளின் கீழ் தேடுதல்களுக்காக ஆய்வுகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
பகுதி 11: மேல்முறையீடு:-
(1) மாவட்ட வருவாய் அதிகாரியால் பிறப்பிக்கப்பட்ட யாதொரு ஆணையினால் பாதிப்பிற்குள்ளான யாதொரு நபரும், அத்தகைய ஆணை பெறப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அத்தகைய ஆணைக்கு எதிராக மேல்முறையீட்டு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம்.
(i). சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் ஆட்சியாளரின் அதிகார வரம்பெல்லைக்கு உட்பட்ட பகுதிவரை ஆட்சியாளர் மேல்முறையீட்டு அதிகாரியாவார்.
பகுதி 12: சீராய்வு:
(i). இத்தகைய ஆணையினால் பாதிப்பிற்குள்ளான யாதொரு நபரும் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் ஆணையாளருக்கு இத்தகைய ஆணை குறித்து தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சீராய்வு வேண்டி மனு தாக்கல் செய்யலாம்.
(ii). நிலுவையிலுள்ள சீராய்வு மனுவை தீர்வு செய்வதற்காக, மேற்சொன்னவை தீர்வு காணும்வரையில் சீராய்வின் கீழ் உள்ள ஆணைகள் செயலுக்கு வரக்கூடாது என அரசு உத்தரவிடலாம்.
பகுதி - அ
(பகுதி - 2)
1. (i) நிறுவனத்தின் பெயர் (பதிவு செய்யப்பட்டுள்ளவாறு)
(ii) CiN எண்:
(iii) நிறுவனத்தின் இயக்குநர்களின் பெயர் (விவரங்கள் இணைக்கவும்)
2. பதிவு விவரங்கள்(அதிகாரவரம்புடன்)
(a) பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தின் முகவரி (பதிவுச் சான்றிதழின் நகலினை இணைக்கவும்)
(b) மின்னஞ்சல்:
(c) தொலைபேசி எண்கள்:
(d) நிறுவனத்தின் வலைதளம்:
(e) ஏனைய பதிவுகள் குறித்த விவரங்கள் (அதிகாரவரம்புடன்), ஏதேனும் இருப்பின் (பதிவுச் சான்றிதழின் நகலை இணைக்கவும்)
(f) நிறுவனத்தின் வகை (தனியார், பொது, அறக்கட்டளை, நிறுவனம், முதலியன)
3. தலைமை அலுவலகம் & வட்டார அலுவலகம்
(a) முகவரி
(b) மின்னஞ்சல்
(c) நிறுவனங்கள் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டவாறான முதன்மை நிருவாகப் பணியாளர்களின் விவரங்கள்:
(d) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வட்டார அலுவலகத்தின் விவரங்கள்
(e) நுகர்வோர் விவகாரங்கள் துறையுடன் தொடர்பு கொள்வதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரி;
(பெயர், பதவிப்பெயர் தொலைபேசி எண், மின்னஞ்சல், நிகரி, அலைபேசி எண்)
(f) தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைப்பதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியின் விவரங்கள் (பெயர், பதவி, தொலைபேசி எண்.,மின்னஞ்சல், நிகரி, அலைபேசி எண்)
4. கடந்த 5 ஆண்டுகளில் நிருவாகத்திலுள்ள எவரேனும் யாதொரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளாரா?.
(விண்ணப்பித்த நாள் முதல்). அவ்வாறெனில், அதன் விவரங்களை அளிக்கவும்;
5 பொருட்களுக்கான அல்லது சேவைக்கான அல்லது இரண்டிற்குமான நேரடி விற்பனை மேற்கொள்ளப்படுகின்றனவா?
6 உரிமம் (உரிமங்கள்), நிறுவனத்தினை அடையாளப்படுத்தும் வணிகக் குறியீடு அல்லது முதன்மை வணிக அடையாளத்தின் விவரங்கள்:
117 (i). வாடிக்கையாளர் சேவை & குறைதீர்ப்பு பிரிவுகளின் முகவரி/ தொலைபேசி எண்கள்/மின்னஞ்சல்கள் முதலியன (தலைமையிடம் & தமிழ்நாட்டிலுள்ள மாநிலக் கிளை(கள்))
(ii). வழிகாட்டி குறிப்புகளின் படி நுகர்வோர் குறைதீர்ப்பு குழுவின் விவரங்கள்:
(a) உறுப்பினரின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்:
(b) உறுப்பினரின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்:
(c) உறுப்பினரின் பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல்:
8 வழங்கப்படும் பொருட்கள்/சேவைகளின் விவரங்கள் (வலைதளங்களின் முகவரியை அளிக்கவும்) ஆம்/இல்லை 9 உங்கள் நேரடி விற்பனைத் திட்டம் பற்றி பின்வருவனவற்றை உறுதிப்படுத்தவும்:-
ஆம்/இல்லை (a) புதிய பங்கேற்பாளர்களைச் சேர்த்தல் / பதிவுசெய்தலுக்காக ஒரு நேரடி விற்பனையாளர் உழைப்பூதியம் அல்லது ஊக்கத்தொகை பெறுவார் என்பதற்கு வழிவகை ஏதும் இல்லை மற்றும் சரக்குகள் விற்பனையிலிருந்து அல்லது சேவைகளிலிருந்து கிடைக்கப்பெறும் உழைப்பூதியத்தை மட்டுமே நேரடி விற்பனையாளர் பெறுவார்.
ஆம்/இல்லை (b) (i) நுகர்வோருக்கு விற்பனை அல்லது மறுவிற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிற அத்தகைய
சரக்குகள் அல்லது சேவைகளுக்கான தொகையை விட அதிகமான தொகை;
ஆம்/இல்லை (ii) நுகர்வோர்களால் கொள்முதல் செய்யப்படவேண்டிய அல்லது விற்பனை செய்யப்படும் அல்லது மறுவிற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகையை விட அதிகமான சரக்குகள் மற்றும் சேவைகளின் அளவு;
ஆகியவற்றிற்கு ஒரு பங்கேற்பாளர் சரக்குகள் கொள்முதல் மற்றும் சேவைகளைப் பெற அவசியமில்லை.
ஆம்/இல்லை (c) நுழைவு/ பதிவுக்கட்டணம், விற்பனை செயல்விளக்கத்திற்கான கருவிகள் மற்றும் சாதனங்களுக்கான செலவு மற்றும் கலந்துகொள்வது தொடர்பான ஏனைய கட்டணங்களைப் பங்கேற்பாளர் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
(d) பங்கேற்பின் "பொருள் வரையறைகளை"விளக்கும் ஒரு எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை இது வழங்கும். ஆம்/இல்லை
ஆம்/இல்லை (e) பங்கேற்பாளர் இதில் கலந்து கொள்வதற்கு அல்லது கலந்துகொள்வதை இரத்து செய்வதற்கு ஒரு உரிய கால அளவையும், இந்த நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான நிதியைப் பெறுவதற்கும் இது வகை செய்யும் அல்லது அனுமதி அளிக்கும்.
ஆம்/இல்லை (f) பங்கேற்பாளர் உரிய வரையறைகளின் பேரிலும், அவர் கேட்டுக்கொள்வதன் பேரில் பங்கேற்பாளருக்கு விற்பனை செய்யப்பட்ட "நடப்பிலுள்ள சந்தைப்படுத்தக்கூடிய "சரக்குகள் அல்லது சேவைகளுக்குத் திரும்ப வாங்கும் அல்லது மறு கொள்முதல் கொள்கையை இது அனுமதிக்கும் அல்லது வழங்கும்.
குறிப்பு: 1. மேற்சொன்னவை தொடர்பான விவரங்களை இணைப்புடன் அளிக்கவும்.
2. ஒரு வேளை இந்தப் பத்தியில் யாதொரு பதில் 'இல்லை' என்று அளிக்கப்படுமாயின், இணைப்பில் காரணத்துடன் அதன் விவரங்களை அளிக்கவும்.
10 (a) அனைத்து நேரடி விற்பனையாளர் (விற்பனையாளர்களுக்கும்) உரிய அடையாள ஆவணங்கள் ஆம்/இல்லை வழங்கப்பட்டுள்ளதா.
ஆம்/இல்லை (b) வருமான வரிச் சட்டத்தின் படி ஒவ்வொரு பதிவுசெய்யப்பட்ட நேரடி விற்பனையாளர் தொடர்புடைய விவரங்கள், சரிபார்க்கத்தக்க முகவரிச் சான்று, அடையாளச் சான்று மற்றும் PAN (நிரந்தரக் கணக்கு எண்) உட்பட்ட விவரங்கள் நாளதுவரையாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்ற "நேரடி விற்பனையாளர்களின் பதிவேட்டை" நீங்கள் பராமரிக்கின்றீர்களா?
ஆம்/இல்லை (c) நேரடி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகதாரர்களிடமிருந்து உடன்பாட்டினை உறுதிப்படுத்தும் நடைமுறை உட்படச் சரக்குகள் அல்லது சேவைகள் விற்பனை தொடர்பான யாதொரு வரிகள் மற்றும் தீர்வைகள் செலுத்துவதற்கான நடைமுறை யாது என்ற விவரங்களை அளிக்கவும்.
ஆம்/இல்லை 11 (a) அனைத்துத் தொடர்புடைய விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான தகவல்கள், நிருவாகம் தொடர்பான விவரங்கள் உற்பத்திப் பொருட்கள், பொருட்கள் குறித்த தகவல் மற்றும் நேரடி விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் புகாரைத் தீர்வு செய்யும் நடைமுறைகள் போன்றவை கொண்டு வலைதளத்தில் உரியவாறும், முறையாகவும் நாளதுவரையாக்கப்பட்டுள்ளது.
(b) இணையவழியில் நுகர்வோரின் புகாரைப் பதிவுசெய்யவும் அல்லது புகார் அளித்த நாள் முதல் 45 ஆம்/இல்லை நாட்களுக்குள் குறைகள் தீர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவரங்கள் அளிக்கப்படவேண்டும்.
12 குறிப்புகள் / குறிப்புரைகள் எவையேனும் இருப்பின், விவரங்களை அளிக்கவும்.
12............................நிறுவனத்தின்............................அதிகாரம் பெற்ற.............................ஆகிய நான்/நாங்கள் பின்வருவனவற்றிற்கு இணக்கமாக உள்ளதாக உறுதி அளிக்கிறேன்/அளிக்கிறோம்.
(a) பகுதி 1(11) இல் வரையறுக்கப்பட்டவாறு பிரமிட் திட்டத்தினை ஊக்குவிக்கவில்லை அல்லது அத்தகைய திட்டத்தில் யாதொரு நபரையும் பதிவுசெய்யவில்லை அல்லது நேரடி விற்பனை வணிகம் செய்யும் நோக்கில் யாதொரு வழியிலும் அத்தகைய ஏற்பாட்டு முறைகளில் பங்கேற்கவில்லை.
(b) வணிக வாய்ப்புகளை நேரடி விற்பனை செய்யும் நோக்கில் பகுதி 1(12) இல் வரையறுக்கப்பட்டவாறாகப் பணச் சுழற்சி திட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை.
(c) நுகர்வோர் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டி குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள எஞ்சிய அனைத்து அம்சங்களுக்கும் நாங்கள் இணக்கமாக உள்ளோம் என்பதுடன் (காண்க.GSR1013(E), 26.10.2016(இந்திய அரசிதழ்)) தமிழ்நாடு அரசுக்கு அவ்வப்போது தேவைப்படும் அத்தகைய விவரங்களையும் அளிப்போம்.
இடம்:
ஒம்/
நாள்:
பெயர்:
நிறுவனத்தின் முத்திரை
பதவிப் பெயர்:
தொ.பே.எண்:
மின்னஞ்சல்:
அளிக்கப்படவேண்டிய ஆவணங்களின் பட்டியல்:
1. பதிவு/துணை விதிகள்/சங்க அமைப்பு விதிக்குறிப்புப் பதிவுக்கான சான்றிதழ்
2. தொடர்பு கொள்ளவேண்டிய விவரங்களுடன் இயக்குநர்கள் குழுமத்தின் பட்டியல்.
3. நேரடி விற்பனைத் திட்டம் மற்றும் இழப்பீட்டு திட்ட விவரங்களின் சுருக்கம்
4. நேரடி விற்பனையாளர்/ விநியோகதாரர்களுடனான ஒப்பந்தத்தின் மாதிரி
5. மத்திய அரசின், நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு அளிக்கப்பட்ட உறுதி ஆவணத்தின் நகல்.
6. உரிமங்கள் அல்லது சரக்குகள் அல்லது சேவைகள் விற்பனைக்கான பதிவுகள் உட்பட உடன்படிக்கைகளின் நகல்கள்.
தயானந்த் கதாரியா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
13தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 169, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(K2)த் துறை, 22 நவம்பர் 2018.] 1951-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவு, 18 ஆம் பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1955-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர் விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 43-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்.
மேற்சொன்ன விதிகளில், iV-ஆம் அத்தியாயம் மற்றும் அதன் கீழுள்ள விதிகளுக்குப் பின்னர், பின்வரும் அத்தியாயம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"அத்தியாயம் iV-A
நல அலுவலர்கள்.
68-A. நல அலுவலர்கள்.-முந்நூறு அல்லது மேற்பட்ட தொழிலாளர்கள் சாதாரணமாகப் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு மலைத்தோட்டத்தின் வேலை அளிப்பவர், ஒரு நல அலுவலரையேனும் நியமிக்க வேண்டும்:
ஆனால், தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறுக்கு மேற்படுகிறபோது, ஆயிரத்து ஐநூறு தொழிலாளர்களுக்கு அல்லது அதன் பின்ன எண்ணிக்கைக்கு (அத்தகைய பின்னம் முந்நூறுக்கு மேற்படுமாயின்) நல அலுவலர் ஒருவர், உதவி நல அலுவலராக நியமிக்கப்பட வேண்டும்:
மேலும், ஒரு மலைத்தோட்டத்தில்,-
(i) முந்நூறு அல்லது அதற்கு மேற்பட்டு, ஆனால் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்படாத தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருக்கின்றபோது, ஒரு பெண், நல அலுவலராக நியமிக்கப்பட வேண்டும்.
(ii) தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டு, அதில் முந்நூறுக்கு மேற்பட்ட, ஆனால் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்படாத தொழிலாளர்கள் பெண்களாக இருக்கின்றபோது, முதலாம் வரம்பு நிபந்தனையின் கீழ் நியமிக்கப்படும் உதவி நல அலுவலர், ஒரு பெண் அலுவலராக இருக்க வேண்டும்; மற்றும்
(iii) பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறுக்கு மேற்படுகின்றபோது, ஒவ்வொரு ஆயிரத்து ஐநூறு பெண் தொழிலாளர்களுக்கு அல்லது அதன் பின்ன எண்ணிக்கைக்கு (அத்தகைய பின்ன எண்ணிக்கை முந்நூறுக்கும் மேற்படுமாயின்) ஒரு பெண் அலுவலர், ஒரு உதவி நல அலுவலர் என்ற வீதத்தில் உதவி நல அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
68-B. தகுதிகள்.- (1) பின்வரும் தகுதிகளைப் பெற்றிருந்தாலன்றி மற்றபடி யாதொரு நபரும் நல அலுவலராக நியமிக்கப்படத் தகுதியற்றவராகிறார், அவையாவன:-
(a) தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மேற்படிப்பு; அல்லது
(b) சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும், தொழிலாளர் மேலாண்மையில் பட்டம்; அல்லது (c) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், சமூகப் பணி, சமூக அறிவியல், தொழிலாளர் மேலாண்மை, தொழிலகத் தொடர்புகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்த தொழிலாளர் சட்டங்களுடன் சமூக நலன் அல்லது தொழிலகத் தொடர்புகள் ஆகியவற்றில் ஒன்றை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்ட மேற்படிப்பு; அல்லது
(d) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், சமூகப் பணி, சமூக அறிவியல், தொழிலாளர் மேலாண்மை, தொழிலகத் தொடர்புகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்த தொழிலாளர் சட்டங்களுடன் சமூக நலன் அல்லது தொழிலகத் தொடர்புகள் ஆகியவற்றில் ஒன்றை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டய மேற்படிப்பு; அல்லது
(e) சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் நிருவாகத்தில் பட்டய மேற்படிப்பு; அல்லது (f) தமிழ்நாட்டில் உற்பத்தித் திறன் மேம்பாட்டுக் கழகங்களில் அல்லது இதெற்காக மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய யாதொரு நிறுவனங்களில் தொழிலாளர் மேலாண்மை, தொழிலகத் தொடர்புகள் மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றில் பட்டய மேற்படிப்பு; அல்லது
(g) சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிருவாகச் சட்டங்களில் பட்டய மேற்படிப்பு; அல்லது
(h) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு மற்றும் புதுடில்லி, தேசிய சட்டக் கல்வி நிறுவனத்தில் தொழிலாளர் சட்டங்களில் பட்டயப்படிப்பு; அல்லது (i) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம்; மற்றும்14 (2) தமிழ் மொழி மற்றும் தொழிலாற்ற வேண்டிய மலைத்தோட்டத்திலுள்ள பெரும்பான்மைத் தொழிலாளர்களால் பேசப்படும் மொழி குறித்த போதிய அறிவு:
68-C. நல அலுவலர்களை நியமனம் செய்தல்.- (1) நல அலுவலர்கள் பதவிக்கான காலிப் பணியிடங்கள், மாநிலத்தில் அதிக அளவில் விற்பனையாகிற இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். அதில் ஒன்று தமிழ் நாளிதழாகவும் மற்றொன்று ஆங்கில நாளிதழாகவும் இருக்க வேண்டும்:
ஆனால், அரசுத் துறை நிறுவனத்தைச் சேர்ந்த மலைத்தோட்டங்கள் மற்றும் அரசின் நிதியுதவி பெறும் தனியார் மலைத்தோட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், மாநிலத்தில் அதிக அளவில் விற்பனையாகிற இரண்டு நாளிதழ்களில் (ஒன்று தமிழ் நாளிதழாகவும் மற்றொன்று ஆங்கில நாளிதழாகவும் இருக்க வேண்டும்) விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன், வேலைவாய்ப்பகத்திலிருந்து தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் கோரப்பட்டுப் பெறப்பட வேண்டும்.
(2) மலைத்தோட்டத்தின் வேலை அளிப்பவரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்றின் வாயிலாக, நல அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கின்ற நபர்களிலிருந்து, அப்பதவிக்கான தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
(3) பணிநியமனம் செய்யப்பட்டவுடன், வேலையளிப்பவர், பணிநியமனம் செய்யப்பட்ட அலுவலரின் தகுதிகள், வயது, சம்பளம், முன் அனுபவம் மற்றும் ஏனைய தொடர்புடைய விவரங்கள் மற்றும் அவருடைய பணியின் வரையறை நிபந்தனைகள் ஆகியவற்றை அளித்து, மாநில அரசிடம் அல்லது மலைத்தோட்டங்களுக்கான தலைமை ஆய்வாளரிடம் அல்லது தொழிலாளர் (மலைத்தோட்டங்கள்) உதவி ஆணையாளரிடம் அறிவிக்க வேண்டும்.
68-D. நல அலுவலரின் பணி நிலைமைகள்.- (1) நல அலுவலர் ஒருவருக்கு, மலைத்தோட்ட நிருவாக உறுப்பினர் ஒருவரின் தகுதிநிலைக்கு நிகரான உரிய தகுதிநிலை வழங்கப்பட வேண்டும்.
(2) நல அலுவலர் ஒருவரின் பணி நிலைமைகள், மலைத்தோட்ட நிருவாக உறுப்பினர் ஒருவருக்கு வரையறுக்கப்பட்டிருக்கும் பணி நிலைமைகளுடன் ஒத்திருக்க வேண்டும்;
இருப்பினும், பணி விடுப்பு அல்லது பணி நீக்கம் குறித்த நேர்வில், நல அலுவலர் / உதவி நல அலுவலருக்கு மலைத்தோட்ட தலைமை ஆய்வாளரிடம் மேல்முறையீடு செய்வதற்கு உரிமை உண்டு. இது குறித்த அவரின் முடிவு இறுதியானதாக இருப்பதுடன் மலைத்தோட்டத்தில் வேலையளிப்பவரையும் கட்டுப்படுத்தும். நல அலுவலர் பணி விடுவிப்பு / பணி நீக்க ஆணை நல அலுவரால் பெறப்பட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும்.
(3) நல அலுவலர்/ உதவி நல அலுவலரின் சம்பளவீதம் மற்றும் படிகள் மற்றும் ஏனைய பணி நிலைமைகள் மலைத்தோட்ட நிருவாக உறுப்பினர் ஒருவருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதை ஒத்திருக்க வேண்டும்.
(4) நல அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் கருதப்படும் காரணங்கள் எழுத்து மூலமாக முதலில் அவருக்கு தெரிவிக்கப்பட்டு அவரை தற்காத்துக் கொள்வதற்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலன்றி மற்றபடி, அவருக்கு நிருவாகத்தால் தண்டத்தொகை விதிக்கப்படக்கூடாது.
68-E. நல அலுவலரின் கடமைகள்.-நல அலுவலரின் கடமைகள் பின்வருமாறு:-
(a) மலைத்தோட்ட நிருவாகத்திற்கும் தொழிலாளர்களுக்குமிடையே நல்லுறவை பேணும் நோக்கில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு கலந்தாலோசனைகளை நடத்துதல்;
(b) தனிநபர்கள் மற்றும் தொழிலாளர்களின் குறைகளை விரைவில் களைவதற்காக மலைத்தோட்ட நிருவாகத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லுதல் மற்றும் நிருவாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தொடர்பு அலுவலராகச் செயல்படுதல்;
(c) தொழிலாளர் கொள்கைகளை வடிவமைத்து உருவாக்குவது தொடர்பாக, மலைத்தோட்ட நிருவாகத்திற்கு உதவும் வகையில், தொழிலாளர்களின் பார்வையில் ஆய்வு செய்து அறிந்துகொள்வதுடன் தொழிலாளர்களுக்குப் புரியும் மொழியில் அத்தகைய கொள்கைகளை எடுத்துரைத்தல்;
(d) மலைத்தோட்ட நிருவாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் நேர்வில், அவரின் செல்வாக்கைப் பயன்படுத்தும் நோக்கில் தொழிலகத் தொடர்புகளைக் கண்காணித்து இணக்கமான முறையில் தீர்வுசெய்வதற்கு உதவுதல்;
(e) பணி நேரங்களை முறைப்படுத்துதல், மகப்பேறு பயன்கள், மருத்துவ சிகிச்சை, நோய் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு மற்றும் ஏனைய நலன் மற்றும் சமூக நல நடவடிக்கைகள் தொடர்புடைய சட்டப்படியான அல்லது சட்டப்படி அல்லாத கடப்பாடுகளை, நிருவாகமும் சம்பந்தப்பட்ட துறைகளும் நிறைவு செய்வது குறித்து அறிவுரை வழங்குதல்;
(f) தனிநபருக்கு காயங்களை ஏற்படுவதை தடுத்தல் மற்றும் பாதுகாப்பான பணி சூழலை பேணுதல் தொடர்பான சட்டப்படியான அல்லது ஏனைய கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து, நிருவாகத்திற்கு அறிவுரை வழங்குதல் மற்றும் உதவுதல்;
(g) சம்பந்தப்பட்ட மலைத்தோட்டத் துறைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தல். இது உற்பத்தித் திறனையும் பணிச்சூழலையும் மேம்படுத்துவதுடன், தொழிலாளர்கள், பணிச்சூழலுக்கு தகுந்தவாறு அவர்களை மாற்றிக்கொள்வதற்கும் உதவும்;
(h) பணிகள் மற்றும் கூட்டு உற்பத்திக் குழு, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பணிக்குழு, துணைக்குழு போன்ற நலக்குழுக்களை அமைக்க ஊக்கமளித்தல் மற்றும் அவற்றின் பணிகளைக் கண்காணித்தல்;
15(i) பணியக உணவகங்கள், ஓய்விடங்கள், பள்ளி, மழலையர்க் காப்பகங்கள், போதியக் கழிவறை வசதிகள், குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் போன்ற வசதிகளுக்கு வகை செய்ய ஊக்குவித்தல்;
(j) ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவதை முறைபடுத்துவது குறித்து மலைத்தோட்ட நிருவாகத்திற்கு உதவுதல் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் ஏனைய விடுப்பு உரிமைகள் தொடர்பான விதித்துறைகளைத் தொழிலாளர்களிடம் எடுத்துரைத்தல் மற்றும் அனுமதி பெறப்பட்டு துய்த்த விடுப்புகளை முறைப்படுத்துவதற்கு, விடுப்பு கோரும் விண்ணப்பம் வழங்குவது தொடர்பாகத் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுதல்;
(k) வீட்டுவசதி, சமூக மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், துப்புரவு போன்ற நல வசதிகள் வழங்குவதற்கான வழிவகை குறித்து அறிவுரை வழங்குதல் மற்றும் தனிநபர் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி தொடர்பாக அறிவுரை வழங்குதல்;
(l) புதிய தொழிலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குதல், தொழிலாளர்களுக்கு மேலும் கல்வி அளிப்பது தொடர்பான செய்தி வெளியீடுகள் மற்றும் அறிவிப்பு பலகையைக் கண்காணித்துக் கட்டுப்பாட்டில் வைத்தல் தொடர்பான ஐயங்களில் மலைத்தோட்ட நிருவாகத்திற்கு அறிவுரை வழங்குதல் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் அவர்களுடைய வருகையை ஊக்குவித்தல்;
(m) தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தவும் அவர்களது நலனை மேம்படுத்தவும் உதவும் நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
(n) தொழிலாளர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துதல் குடும்ப நலத் திட்டங்கள் பின்பற்றப்படுவதை ஊக்கப்படுத்துதல்;
மற்றும்
(o) நேர்விற்கேற்ப கல்வித்துறை அதிகாரிகள் அல்லது ஏனைய முகவரமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தொழிலாளர்களின் கல்லாமையை அடியோடு நீக்குவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துதல்.
68-F. நல அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை இனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது அல்லது தொழிலாளர்களுக்கு எதிராக நிருவாகத்தின் சார்பாக ஆஜராகக் கூடாது.-
யாதொரு நல அலுவலரும், கணக்கிணக்க அலுவலர், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தால் தனிப்பட்ட சாட்சியாக ஆஜராகுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டாலன்றி, மலைத்தோட்டப் பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள நபர் அல்லது நபர்களுக்கு எதிரான யாதொரு ஒழுங்கு நடவடிக்கை சார்ந்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்கவோ அல்லது மலைத்தோட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள நபர் அல்லது நபர்களுக்கு எதிராக மலைத்தோட்ட நிருவாகத்தின் சார்பில் கணக்கிணக்க அலுவலர், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்திற்கு முன்னர் ஆஜராகவோ கூடாது;
இருப்பினும், இந்த விதியில் கண்டுள்ள எவையும், மலைத்தோட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள நபர் அல்லது நபர்கள், அவருக்கு / அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யாதொரு ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக ஏற்படும் குறைபாடுகள் குறித்து, நல அலுவலரை அணுகுவதற்குத் தடைசெய்வதாகக் கருதப்படக்கூடாது".
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
வரைவு அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 181, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 5 டிசம்பர் 2018.] 1936 ஆம் ஆண்டு ஊதியங்கள் வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 4/1936) 26 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1937 ஆம் ஆண்டு ஊதியங்கள் வழங்கல் விதிகளில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 26 ஆம் பிரிவைச் சேர்ந்த (5) உட்பிரிவில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
16வரைவுத் திருத்தம்
மேற்சொன்ன விதிகளில் 18 ஆம் விதியின் வரம்பு நிபந்தனையில், "தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகள்" என்ற சொற்றொடருக்குப் பின்னர், "அல்லது தமிழ்நாடு 2006 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) விதிகளின் 242 ஆம் விதியில் கோரியுள்ளவாறாக விவர அட்டவணை Xiii-இன் கீழ் படிவம் XXV-இல் ஒருங்கிணைந்த ஆண்டு கணக்கு விவர அறிக்கை" என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.