© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 8.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 5] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 30, 2019 தை 16, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை நிலை எண் 160, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H2)த் துறை, 7 டிசம்பர் 2018.] 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 68/1986) 7-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 07-12-2018 ஆம் நாளிலிருந்து அந்நாள் முதற்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு, பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநிலத்திற்கான நுகர்வோர் பாதுகாப்பு குழுவினை இதனால் நிறுவுகிறார்:-
தலைவர்:
மாண்புமிகு அமைச்சர், உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600 009.
அலுவலக உறுப்பினர்கள்
1. அரசு செயலாளர்,
உறுப்பினர்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.
2. அரசு செயலாளர்,
உறுப்பினர்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை.
3. அரசு செயலாளர்,
உறுப்பினர்
போக்குவரத்துத் துறை.
4. அரசு செயலாளர்,
உறுப்பினர்
தொழில்துறை.
5. அரசு செயலாளர்,
உறுப்பினர்
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
6. அரசு செயலாளர்,
உறுப்பினர்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
7. அரசு செயலாளர்,
உறுப்பினர்
உயர் கல்வி துறை
8. அரசு செயலாளர்,
உறுப்பினர்
பள்ளிக் கல்வி துறை
9. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் உறுப்பினர்-செயலாளர்,
பாதுகாப்புத் துறை ஆணையர்
[ 1 ]
DTP-ii-2-(5) (T Sup)—1
DTP-ii-2-(5) (T Sup)—1a2 உறுப்பினர்
10. இந்திய அரசின் உணவுத்துறையின் பிரதிநிதியாக,
இந்திய உணவுக் கழகத்தின் தெற்கு மண்டல நிருவாக இயக்குனர், சென்னை.
11. இரயில்வே துறை பிரதிநிதியாக, பொது மேலாளர், உறுப்பினர்
தென்னக இரயில்வே, சென்னை.
12. செய்தி மற்றும் ஒளிபரப்பு பிரதிநிதியாக
உறுப்பினர்
மண்டல இயக்குனர், தூர்தர்ஷன் (பொதிகைத் தொலைக்காட்சி), சென்னை.
13. வேளாண்துறை பிரதிநிதியாக மத்திய அரசின் உறுப்பினர்
விற்பனை மற்றும் ஆய்வு இயக்குநர், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்.
14. சுகாதாரத்துறை பிரதிநிதியாக, மத்திய அரசின், உறுப்பினர்
துணை இயக்குநர், தெற்கு மண்டலம், உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்.
அலுவல்சாரா உறுப்பினர்கள்
15. திருமதி. மரகதம் குமாரவேல், நாடாளுமன்ற
உறுப்பினர்
உறுப்பினர், காஞ்சிபுரம் தொகுதி.
16. திரு. C. மகேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர், உறுப்பினர்
பொள்ளாச்சி தொகுதி.
17. திரு. P. மனோன்மணி, சட்டமன்ற உறுப்பினர், உறுப்பினர்
வீரபாண்டி தொகுதி.
18. திரு. P. நீதிபதி, சட்டமன்ற உறுப்பினர்,
உறுப்பினர்
உசிலம்பெட்டி தொகுதி.
19. தலைவர் மற்றும் நிருவாக இயக்குநர், தமிழ்நாடு உறுப்பினர்
மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் லிமிடெட் (TANGEDCO). சென்னை-600 002.
20. தலைமை பொது மேலாளர், BSNL, தமிழ்நாடு உறுப்பினர்
வட்டம், சென்னை-600 006.
21. பொது மேலாளர், சென்னை மாநகர
உறுப்பினர்
போக்குவரத்துக் கழகம், சென்னை-600 002.
22. மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், இந்திய உறுப்பினர்
எண்ணெய் கழகம், சென்னை-600 034.
23. உதவி பொது மேலாளர், மாநில அளவிலான உறுப்பினர்
வங்கிகள் குழு, சென்னை-600 002.
24. அஞ்சல் சேவைகள் இயக்குநர், இந்திய அஞ்சல், உறுப்பினர்
சென்னை-600 002.
25. ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, உறுப்பினர்
சென்னை-600 003.
26. தலைவர், சென்னை தொழில் வர்த்தக சபை
உறுப்பினர்
கருமுத்து மையம், முதல் மாடி, பழைய எண்.498, புதிய எண்.634, அண்ணாசாலை சென்னை-35.
27. தலைவர்,
உறுப்பினர்
தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், கதவு எண்.38, 'மோனித் மான்ஷன்' (4வது தளம்) 27, மோனித் சாலை, எழும்பூர், சென்னை-8.
28. தலைவர்,
உறுப்பினர்
தமிழ்நாடு வர்த்தகர் கழகம், 56, M.K. மூப்பனார் சாலை, தஞ்சாவூர்.
29. தலைவர்,
உறுப்பினர்
நீலகிரி மாவட்ட தொழில் வர்த்தக சபை, 266, பிராதான பஜார் சாலை, ஊட்டி-643 001.
3உறுப்பினர்
30. தலைவர்,
விருதுநகர் வணிக வியாபாரிகள் கூட்டமைப்பு, 102, பிராதான பஜார், விருதுநகர்-626 001.
31. தலைவர்,
உறுப்பினர்
தென்னிந்திய ஆலைகள் கழகம், 42, ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்-641 018.
32. தலைவர்,
உறுப்பினர்
கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழிற்சாலைகள் கூட்டமைப்பு, ஜி.டி.நாயுடு டவர், தபால் பெட்டி எண்.3827, ஹூசூர் சாலை, கோயம்புத்தூர்-641 018.
33. தலைவர்,
உறுப்பினர்
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கம்-அரிசி வியாபாரிகள் கூட்டமைப்பு, 491, GNT சாலை, புழல், சென்னை-600 066.
34. தலைவர்,
உறுப்பினர்
CONCERT, 3/242, இராஜேந்திரா தோட்டம், வெட்டுவாங்கேணி, சென்னை-600 041.
35. தலைவர்,
உறுப்பினர்
பூந்தமல்லி வடக்கு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மையம், 3/20, தந்தை பெரியார் சாலை, அணைக்காட்டுச்சேரி, சோரஞ்சேரி, பட்டாபிராம், திருவள்ளூர் மாவட்டம், சென்னை-600 072.
36. தலைவர்,
உறுப்பினர்
நுகர்வோர்கள் நல பாதுகாப்புச் சங்கம், 387 பெரிய பள்ளிவாசல் தெரு, பேரணாம்பேட்டை, (பழைய முகவரி) 03, அஷ்ரஃ சாலை, பேரணாம்பேட்டை வேலூர் மாவட்டம், தமிழ் நாடு-635 810.
37. தலைவர்,
உறுப்பினர்
குன்னூர் நுதர்வோர் பாதுகாப்பு கழகம், 57-60 YMCA, மவுன்ட் ரோடு, குன்னூர், நீலகிரி-643 102.
38. தலைவர்,
உறுப்பினர்
தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், 8A, நஞ்சப்பன், சந்து, படிக்கட்டுத் துறை, கரூர்.
39. தலைவர்,
உறுப்பினர்
தமிழ் நாடு நுகர்வோர் நல கூட்டமைப்பு எண்.1, காஜாபேட்டை முதன்மை தெரு, ரங்கசாமி பூங்கா அருகில், திருச்சி-620 001.
40. தலைவர்,
உறுப்பினர்
திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், 40-சிவம் நகர் பனங்கல் சாலை, திருவாரூர்-610 001.
41. தலைவர்,
உறுப்பினர்
நுகர்வோர் ஆராய்ச்சி, நடவடிக்கை, பயிற்ச்சி, செயலாக்கம், 2/85, பெருமாள் கோயில் தெரு, ஜெகநாதன் நகர், அதிரங்கம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர்-614 716.
42. தலைவர்,
உறுப்பினர்
குடவாசல் வட்டம் நுகர்வோர் பாதுகாப்புக் கழகம், V.K.P. இல்லம், 2, அக்ரஹாரம் புதுத் தெரு, குடவாசல்-612 601.
43. தலைவர்,
உறுப்பினர்
வேதாரண்யம் வட்டம் நுகர்வோர் பாதுகாப்புக் குழு, 14/2, தெற்கு வடம்போக்கித்தெரு, வேதாரண்யம், நாகப்பட்டிணம் மாவட்டம்-614 810.
444. தலைவர்,
உறுப்பினர்
தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு, 1300, காந்திஜி நகர், நாஞ்சிகோட்டை சாலை, தஞ்சாவூர்-613 006.
45. தலைவர்,
உறுப்பினர்
ஊரகச் சங்கம் மற்றும் பயிற்சிக்கான கல்வி மேம்பாட்டு அமைப்பு. 1A, அருணாசலம் தெரு, வடக்கு வாயில், எஸ்.எஸ். காலனி, மதுரை-625 010.
46. தலைவர்,
உறுப்பினர்
சிட்சன்ஸ் வாய்ஸ் கிளப், பிக் பஜார் தெரு, M.G. கண் மருத்துவமனை, கதவு எண்.117 கோயம்புத்தூர்-1.
47. தலைவர்,
உறுப்பினர்
நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், 1-1-165, டானியேல் தெரு, மீனாட்சி நகர், மதியன்குட்டை, மேட்டூர் அணை, சேலம்-636 452.
48. தலைவர்,
உறுப்பினர்
கடலூர் மாவட்ட பெண்கள் நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை, 7, கிளை சிறைச் சாலை ரோடு, கடலூர் மாவட்டம்-607 001.
49. தலைவர்,
உறுப்பினர்
சென்னை பெருநகர நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு மையம், எண்.118, நான்காவது தெரு, காமராஜ் நகர், ஆவடி, சென்னை-600 071.
50. தலைவர்,
உறுப்பினர்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், மனை எண்.21, இராஜகாளியம்மன் நகர், 'D' மண்டலம், பழைய கரூர் சாலை, திண்டுக்கல்-624 001.
51.
உறுப்பினர்
தலைவர், கன்னியாகுமாரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம், U.G.P. வளாகம், 2 வது தளம், எண்.14, பாதல்விளை, கேப் சாலை, நாகர்கோவில், கன்னியாகுமாரி மாவட்டம்-629 001.
52.
உறுப்பினர்
தலைவர், சங்கரன்கோயில் வட்டம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு நலச் சங்கம், 21/43, கீழவாடி விநாயகர் கோவில் தெரு, சங்கரன்கோயில், திருநெல்வேலி 627 756.
53. தலைவர்,
உறுப்பினர்
ஓசூர் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு கழகம், 7/69 N. பாரதிதாசன் நகர் 6வது குறுக்குத் தெரு, ஓசூர், கிருஷ்ணகிரி-635 109.
தயானந்த கட்டாரியா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
5[அரசாணை (நிலை) எண் 161, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (H2)த் துறை, 7 டிசம்பர் 2018.] 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 68/1986) 8A பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 07-12-2018 ஆம் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும், மூன்று ஆண்டுகளுக்கு, தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கான பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை இதனால் நிறுவுகிறார்:-
தலைவர்:
1. அனைத்து மாவட்டங்களுக்கும் (சென்னை மாநகரம் நீங்கலாக)-சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அதன் தலைவராவர்.
2. சென்னை மாநகரத்திற்காக-கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (கூட்டுறவு தணிக்கை), கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், அதன் தலைவராவர்.
(a) அலுவலக உறுப்பினர்கள்:
துறையின் பெயர்.
சென்னை மாநகரத்திற்கு.
தொடர் எண்.
(1)
(2)
அனைத்து மாவட்டங்களுக்கும்
(சென்னை மாநகரம் நீங்கலாக).
(3)
(4)
1. வருவாய்த் துறை மாவட்ட வருவாய் அலுவலர் -
2. உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாபபுத் துறை
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலர்
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துணை ஆணையர் (சென்னை வடக்கு மற்றும் சென்னை தெற்கு) 3. கூட்டுறவுத் துறை கூட்டுறவு சங்கங்களின் மண்டல
இணை பதிவாளர்
இணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) i மற்றும் ii சென்னை
4. பொது சுகாதாரம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் நோய்தடுப்புத் துறை
5. மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் இணை இயக்குநர், மருந்துகள் கட்டுப்பாட்டுத்
துறை
6. மருத்துவப் பணிகள் துறை. துணை இயக்குநர் இணை இயக்குநர்
7. சட்டபடிக்கான எடைஅளவுகள் தொழில்துறை ஆய்வாளர் சட்டபடியான எடைஅளவுகள் துறை துறை.
கட்டுப்பாட்டாளர்
8. போக்குவரத்துத் துறை. வட்டார போக்குவரத்து அலுவலர் போக்குவரத்துத் துறை துணை ஆணையர் 9. தொழில் வணிகத் துறை. துணை இயக்குநர் இணை இயக்குநர்
10. காவல்துறை. காவல்துறை துணை
கண்காணிப்பாளர்
காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடங்கள்)
11. நகராட்சி நிருவாகத் துறை மண்டல இயக்குநர் நகராட்சி நிருவாக கூடுதல் இயக்குநர் 12. நகர நாட்டுப்புறத் திட்டமிடல் துறை மாவட்ட உதவி இயக்குநர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமப்
பிரதிநிதி, சென்னை.
13. பேரூராட்சிகள் உதவி இயக்குநர் இணை இயக்குநர்
14. மாநகராட்சி/நகராட்சி மாநகராட்சி/நகராட்சி சுகாதார
சுகாதார அலுவலர், சென்னை மாநகராட்சி
அலுவலர்
15. தமிழ்நாடு மின் அனுப்புகைக்
கழகம்
மேற்பார்வைப் பொறியாளர்கள்/
அந்தந்த மாவட்டத்தின் EDC கள்
தலைமை பொறியாளர்/விநியோகம்/தெற்கு/ மண்டலம்
16. தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்கள் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வடிகால் வாரியம்
வாரிய தலைமை பொறியாளர் 17. போக்குவரத்துக் கழகம் மண்டல கிளை மேலாளர், தமிழ்நாடு
போக்குவரத்துக் கழகம்
நிருவாக இயக்குநர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.
6இந்தியன்/ஹிந்துஸ்தான்/பாரத் எண்ணெய் நிறுவன மண்டல தலைமை மேலாளர் 18. எண்ணெய் நிறுவனம் இந்தியன்/ஹிந்துஸ்தான்/பாரத் எண்ணெய் நிறுவன மண்டல மேலாளர்
19. பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட் மாவட்ட மேலாளர் உதவி பொது மேலாளர் (பொதுமக்கள் (BSNL)
குறைதீர்ப்பு)
20. இரயில்வே துறை (BSNL) மண்டல மேலாளர் இணை இயக்குநர் (பொதுமக்கள் குறைதீர்ப்பு) 21. இந்திய தர நிர்ணய ஆணையம் மண்டல மேலாளர் துணை தலைமை இயக்குநர் அலுவல் சாரா உறுப்பினர்கள்:
சென்னை மாநகரத்திற்கு.
தொடர் எண்.
அனைத்து மாவட்டங்களுக்கும் (சென்னை மாநகரம் நீங்கலாக).
1. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்கள்
சென்னை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்றப்பேரவை உறுப்பினர்கள் 2. தலைவரால் நேமகம் செய்யப்பட்ட வணிகர் சங்கங்களின்
இரண்டு பிரதிநிதிகள்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளரால் (கூட்டுறவுத் தணிக்கை) நேமகம் செய்யப்பட்ட வணிகர் சங்கங்களின் இரண்டு பிரதிநிதிகள்
3. தலைவரால் நேமகம் செய்யப்பட்ட பதிவுபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பிலிருந்து நான்கு பிரதிநிதிகள்
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின், கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளரால் (கூட்டுறவுத் தணிக்கை) நேமகம் செய்யப்பட்ட பதிவுபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பிலிருந்து நான்கு பிரதிநிதிகள்
4. தலைவரால் நேமகம் செய்யப்பட்ட சுய உதவிக் குழு
--
அமைப்பு தலைவர்களிலிருந்து நான்கு பிரதிநிதிகள்
தயானந்த கட்டாரியா,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 148, சுற்றுச்சூழல் மற்றும் வனத்(வனம் 5) துறை, 26 நவம்பர் 2018.] மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் 2017 ஆம் ஆண்டு, நன்செய்நிலங்கள் (பாதுகாப்பு & நிருவாகம்) விதிகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன விதிகளின் 5 ஆம் விதியைச் சேர்ந்த (1) துணைவிதியின் கீழ் தமிழ்நாடு மாநில நன்செய்நிலங்கள் அதிகாரமன்றத்தை இதனால் அறிவிக்கிறார்
(i) மாண்புமிகு அமைச்சர் (வனங்கள்)
தலைவர் (ii) அரசு தலைமைச் செயலாளர்
துணைத் தலைவர் (iii) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை.
(iv) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை.
7(v) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை.
(vi) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் பொதுப்பணித்துறை
(vii) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை.
(viii) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை.
(ix) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மை செயலாளர் / அரசுச் செயலாளர்
அலுவல்வழி உறுப்பினர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை.
(x) உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். அலுவல்வழி உறுப்பினர் (xi) பேராசிரியர் மற்றும் இயக்குநர், தொலையுணர்வு நிறுவனம், அண்ணா பல்கலைக்கழகம். அலுவல்வழி உறுப்பினர் (xii) முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் அலுவல்வழி உறுப்பினர் (xiii) உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில பல்வகை உயிரினத்தொகுதி வாரியம். அலுவல்வழி உறுப்பினர் (xiv) சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் மண்டல அலுவலக அலுவல்வழி உறுப்பினர் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்
(xv) 2017 ஆம் ஆண்டு நன்செய்நில (பாதுகாப்பு மற்றும் நிருவாகம்) விதிகளின் 5(1)ஆம்
விதியைச் சேர்ந்த (xvii) பகுதியின் கீழ்.
நன்செய்நில சூழலியல், நீரியல், மீன்வளம், நிலப்பகுதி திட்டம் மற்றும் சமூக - பொருளாதாரத் துறைகள் ஒவ்வொன்றைச் சேர்ந்த ஒரு வல்லுநர்:
(அ) Dr. பாலாஜிநரசிம்மன், இணைப்பேராசிரியர், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள ஆதாரப் பொறியியல் பிரிவு,
உறுப்பினர் கட்டுமான பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை-600 036. (நீரியல் வல்லுநர்)
(ஆ) Dr. கோபாலகிருஷ்ணன், இயக்குநர்,
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், தபால் பெட்டி எண்.1603, கொச்சின்-682 018. (மீன்வளத்துறை வல்லுநர்)
(இ) Dr. R. ஜெகன்நாதன், பேராசிரியர் மற்றும் தலைவர்,
நில நிருவாகம், புவியியல் மற்றும் தொழிநுட்பத் தரவுகள் (Geospatial Technology). சூற்றுச்சூழல் மாற்றம், புவியியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-600 005. (நிலதோற்ற திட்ட வல்லுநர்)
(ஈ) Dr. L.வெங்கடாசலம், பேராசிரியர் (RBi இருக்கை),
உறுப்பினர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்-79, (ii வது முதன்மைச் சாலை, காந்தி நகர், அடையார், சென்னை-600 020. (சமூக-பொருளாதார வல்லுநர்) மற்றும்
(உ) Dr. ஜெயஸ்ரீ வெங்கடேசன்,
நிருவாக அறங்காவலர், கேர் எர்த் அறக்கட்டளை, ஸ்ரீநிவாஸ், எண்5, 21வது தெரு, தில்லைகங்கா நகர், சென்னை-600 061 (நன்செய்நில சூழலியல் வல்லுநர்)
(xvi) தலைமை வனக் காப்பாளர்
உறுப்பினர் செயலர்8 மேற்காணும் தொடர் எண் (XV) இல் உள்ள வல்லுநர் உறுப்பினர்களின் பதவிக்காலமானது மூன்று ஆண்டுகள் ஆகும். மாநில அரசின் முதல் வகுப்பு நிலைக்குழு உறுப்பினர்களுக்கு இணையான அளவு பயணப்படி மற்றும் அகவிலைப்படி வல்லுநர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
சம்பு கல்லோலிகர், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (2D) எண் 100, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, மேற்படி சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 16-07-2014ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2-இல் 479 முதல் 482 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/420/2014 ஆம் எண் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில், சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டிடம் கட்டுதலில் ஈடுபட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு ஊதிய வீதங்களை, இந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்த நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
சாலை அமைத்தல் அல்லது பராமரித்தல் அல்லது கட்டிடம் கட்டும் தொழிலில் வேலைவாய்ப்பு பணியாளர்களின் வகைகள்.
நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை தொடர் எண் (1)
(2)
ஊதியங்கள். (3)
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு (1) கல் உடைப்பவர் அல்லது கல் நொறுக்குபவர் அல்லது
கல் நசுக்குபவர்
வகை-i
502.00
493.00
474.00 வகை-ii
486.00
480.50
469.50 (2) கொத்தனார் அல்லது செங்கல் பாவுபவர்
வகை-i
504.00
502.00
480.50 வகை-ii
493.00
486.00
474.00 (3) தச்சர்
வகை-i
504.00
502.00
480.50 வகை-ii
493.00
486.00
474.00 (4) வண்ணம் பூசுபவர் அல்லது மெருகெண்ணெய் பூசுபவர்
வகை-i
486.00
480.50
469.50 வகை-ii
474.00
469.50
456.50 (5) கம்பி வளைப்பவர் உட்பட பொருத்துநர்
வகை-i
486.00
480.50
469.50 வகை-ii
474.00
469.50
456.509 பணியாளர்களின் வகைகள்.
தொடர் எண் (1)
(2) (6) சாலைக் குழாய்ப் பணிகளுக்காக குழாய் வேலை செய்பவர்
வகை-i
வகை-ii
(7) மின் பணியாளர் / ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர்
வகை-i
வகை-ii
(8) இயந்திரக் கம்மியர்
வகை-i
வகை-ii
(9) கிணறு தோண்டுபவர்
(i) ஆழக் கிணறு தோண்டுபவர்
(ii) சாதாரணக் கிணறு தோண்டுபவர்
(10) பற்றவைப்பவர்
நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை
ஊதியங்கள். (3)
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C ரூ. காசு ரூ. காசு ரூ. காசு 486.00
480.50
469.50 474.00
469.50
456.50 502.00
493.00
474.00 486.00
480.50
469.50 502.00
493.00
474.00 486.00
480.50
469.50 516.50
504.00
493.00 486.00
480.50
474.00 504.00 502.00 480.50 (11) தலைமைக் கூலியாள் 374.50 371.00 366.00 (12) கூலியாள் (மஸ்தூர்)
வகை-i
வகை-ii
(13) தண்ணீர் தெளிப்பவர் அல்லது கலவைக்காரர் (சாலை பரத்துதல்) / ஒட்டு போடும் கருவி இயக்குபவர் (14) மரம் அல்லது கல் அடைப்பவர்
(15) சேறு அகற்ற கிணற்றுள் செல்பவர்
வகை-i
வகை-ii
(16) சுத்தியல்காரர்
(17) ஓலை முடைபவர்
(18) மேஸ்திரி / மேற்பார்வையாளர்
(19) கருமார்
வகை-i
வகை-ii
(20) மரம் அறுப்பவர்
(21) இடைவெளி அடைப்பவர்
(22) கலவை இயந்திரம் இயக்குபவர் உட்பட கலவைக்காரர் (23) பம்ப் இயக்குபவர்
(24) கலவை இயந்திரம் இயக்குபவர்
(25) லாரி ஓட்டுநர்
(26) லாரி கிளீனர் (Lorry Cleaner)
(27) ரோடு உருளை இயந்திரம் ஓட்டுநர் / பாரச் சக்கர ஓட்டுநர்
366.00
362.00
357.00 358.50
355.00
350.00 461.00 454.00 449.50 461.00 454.00 449.50 486.00
480.50
474.00 474.00
469.50
463.00 465.00 461.00 454.00 456.50 451.50 445.00 516.50 504.00 493.00 504.00
502.00
480.50 493.00
486.00
474.00 493.00 486.00 474.00 465.00 461.00 454.00 480.50 474.00 463.00 493.00 480.50 474.00 465.00 461.00 454.00 493.00 480.50 474.0010 பணியாளர்களின் வகைகள்.
நாளொன்றுக்கான குறைந்தளவு அடிப்படை தொடர் எண் (1)
(2)
ஊதியங்கள். (3)
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C
ரூ. காசு ரூ. காசு ரூ. காசு (28) குமாஸ்தா (எழுத்தர் அல்லது நேரக் காப்பாளர்) /
474.00 469.50 463.00 பண்டகக் காப்பாளர்
(29) கனரக பொறியியல் கட்டுமானம் அல்லது கனரக
இயந்திர பாலம் அமைப்பு வேலையில் ஈடுபடுத்தப்படும் கலாசி அல்லது சீரங்கு முதலானோர்
வகை-i
516.50
504.00
493.00 வகை-ii
504.00
502.00
480.50 (30) பிக்கோட்டா பணியாளர் (Picothaman) 451.50 445.00 440.00 (31) காவலாள் / உதவியாள் 451.50 445.00 440.00 (32) மொசைக் மெருகேற்றுபவர்
504.00 502.00 480.50 (33) ஜேசிபி இயக்குபவர்
529.00 516.50 505.00 விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடுகள் பின்வருமாறு :-
1. மண்டலம்-A: அனைத்து மாநகராட்சிகள் மற்றும் காப்பு வனம் மற்றும் அதனைச்சுற்றி ஐந்து கி.மீ. உட்பட்ட பகுதியில் நடைபெறும் வேலைகளும் கீழ்க்கண்ட மலைவாழிடங்களும் அடங்கும்.
மலை வாழிடங்கள்
(1) நீலகிரிப் பீடபூமி
(2) கோயமுத்தூர் மாவட்டத்தில் வால்பாறை உள்வட்டம்
(3) சேர்வராயன் குன்றுகள்
(4) கொடைக்கானல்
(5) பீர்மேடு
(6) திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சரக களக்காடு காப்புவனப்பகுதியில் செங்கல்நேரி
(7) விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் சரக திருவில்லிப்புத்தூர் காப்புவனப்பகுதியிலுள்ள முதலியார் ஊத்து.
(8) நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வட்டம்
(9) வேலூர் மாவட்டத்தில் ஜவ்வாது மற்றும் ஏலகிரி மலைகள்
2. மண்டலம்-B: அனைத்து வகை நகராட்சிகளும் அடங்கும்.
3. மண்டலம்-C: A மற்றும் B மண்டலங்களில் சேர்க்கப்படாத ஏனைய பகுதிகள் அனைத்தும்
(2) தொழிலாளர்களை நிலை-1 மற்றும் நிலை-2 என்ற வகைப்பாடு உடல் திறன், தனித்திறமை, இயங்குதிறம் மற்றும் பணி முடிக்கும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலானது.
(3) செய்யும் வேலைக்கேற்ற ஊதியம் பெறும் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், நாளொன்றுக்கு எட்டு மணி நேரத்தில் அவர்கள் பெறும் ஊதியம் அதே வகையிலான தொழிலாளர்களுக்கு தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ள ஊதியத்திற்குக் குறையக்கூடாது. மேற்குறிப்பிட்ட கூலி வீதங்களைக் கணக்கிடும்போது ஒரு நாள் பணி என்பது எட்டு மணி நேர வேலையாகும். பணிியாளர் எட்டு மணி நேரத்திற்கும் குறைவாகப் பணியாற்றினால் அதற்குத் தக்கவாறான வீதத்தில் ஊதியம் கணக்கிடப்படவேண்டும்.
(4) அகவிலைப்படி:- (1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியங்களுடன், பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கபப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி நாளொன்றுக்கு ரூ.2.17 (இரண்டு ரூபாய் பதினேழு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
11(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 102, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 நவம்பர் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இது தொடர்பாக 04-03-2019 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை ஆணையாளர் மூலம் அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 17-09-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு 2-இல், 640 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/(தொ.வே.வா/557/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்
விவர அட்டவணை
கையால் தயாரிக்கப்படும் காகிதம் தொழிலகத்துடன் தொடர்புடைய காகிதம் மற்றும் ஏனைய இடைநிகழ்வு செய்முறைகள்
தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(மாதமொன்றுக்கு) (ரூ.காசு)
(1)
(2)
(1) தேர்ச்சி பெறாதோர்:
(i) வகைப்படுத்துபவர்
(ii) அழுத்துபவர்
(iii) அடிப்பவர்
(iv) காகிதத்தை உருளை இயந்திரத்தில் அழுத்தி
5587.00
மெருகேற்றுபவர்
(v) தூக்குபவர்
(vi) வெட்டுபவர்
(vii) சீராக்குபவர்
(viii) சிப்பமாக்குபவர்12
(2) ஓரளவு தேர்ச்சி பெற்றோர்:
(i) மின் பணியாளர்
(ii) பொருத்துநர்
5791.00
(iii) பற்றவைப்பவர்
(3) தேர்ச்சி பெற்றவர்கள்:
6199.00
(i) மேலாளர்
5995.00
(ii) மேற்பார்வையாளர் / கணக்காளர்
(4) பொது வகையினர்:
5791.00
(i) ஓட்டுநர்
5741.00
(ii) அலுவலக பையன் / காவலாள்
விளக்கங்கள்:-(1) : அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி் விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ. 34.70 (முப்பத்து நான்கு ரூபாய் மற்றும் எழுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டில் சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(3) நாள் ஊதியத்தை கணக்கிட மாத ஊதியத்தை 26&ஆல் வகுக்க வேண்டும்.
(4) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
(தமிழாக்கம்)
சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 103, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 19 நவம்பர் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள அறிவிக்கையின் கீழ்க்காணும் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இது தொடர்பாக 04-03-2019 ஆம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் வரப்பெறும் யாதொரு மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படுமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006, டி.எம்.எஸ். வளாகத்திலுள்ள தொழிலாளர் துறை ஆணையாளர் வாயிலாக அரசு முதன்மை செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
13வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 26-11-2014-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு 2-இல், 758 முதல் 760 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/(தொ.வே.வா.) 710/2014 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு மாநிலத்தில் தச்சுத்தொழிலில் மற்றும் கருமான் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்
விவர அட்டவணை
தச்சுத்தொழில் மற்றும் கருமான் தொழிலில் வேலைவாய்ப்பு
தொடர் எண் பணியின் / பணியாளர்களின்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் வகைகள்
(1)
(2)
(3)
மண்டலம் A (ரூ. காசு)
மண்டலம் B (ரூ. காசு)
மண்டலம் C (ரூ. காசு) 1. தச்சுத்தொழில்
(A) உயரளவு தேர்ச்சி பெறறவர்கள்
(1) மேற்பார்வையாளர்
(2) மாதிரி படிமத் தயாரிப்பாளர்
(PATTERN MAKER)
464.00 410.50 382.00 (3) உள் அலங்கார வல்லுநர்
(4) மெத்தை திண்டு வேலை
செய்பவர்
(5) மரம் செதுக்குபவர்
(B) தேர்ச்சி பெற்றவர்கள்
(1) தச்சர் / மரக்கடைசல்
435.00 396.00 370.00 பணியாளர்/தேய்த்து வழவழப்பாக்குதல் (மெல்லொட்டுப் பலகைப் பணிகள்)
(C) ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள்
(1) உதவி தச்சர்
(2) பொதித்து வைப்பவர்
(3) மெருகிடுபவர்
410.50 382.00 356.00 (4) மேற்பூச்சு செய்தல் அழுத்துதல்
(மெல்லொாட்டுப் பலகைப் பணிகள்)
(D) தேர்ச்சி பெறாதவர்கள்
(1) கற்பவர்
(2) உதவியாள்
370.00 356.00 342.00 (3) மெல்ரொட்டுப் பலகைப் பணிகளில்
பிறவகைப் பணியாளர்கள்
(E) மேற்சொன்னவற்றின் கீழ்
370.00 356.00 342.00 இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர்14 தொடர் எண் பணியின் / பணியாளர்களின்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் வகைகள்
(1)
(2)
(3)
மண்டலம் A (ரூ. காசு)
மண்டலம் B (ரூ. காசு)
மண்டலம் C (ரூ. காசு) (ii) கருமான் தொழில்
(A) தேர்ச்சி பெற்றவர்கள்
(1) மேற்பார்வையாளர்
435.00 396.00 370.00 (2) பூட்டு தயாரிப்பவர்கள் உட்பட
கருமான்
(3) பற்றவைப்பவர்
(4) மென்னுருக்குப் பாத்திரங்கள்
செய்பவர்
(5) வேளாண் கருவிகள் செய்பவர்
உட்பட கால்நடைகக்ளுகான லாடம் தயாரிப்பவர்
(B) ஓரளவு தேர்ச்சி பெறாதவர்கள்
(1) வெட்டுவர்
410.50 382.00 356.00 (2) வளைப்பவர்
(3) வண்ணம் பூசுபவர்
(C) தேர்ச்சி பெறாதவர்கள் 370.00 356.00 342.00
370.90 356.00 342.00 (D) மேற்சொன்னவற்றின் கீழ்
இடம்பெறாத ஏனைய யாதொரு வகையினர்
(மாதமொன்றுக்கு)
(iii) அலுவலகப் பணியாளர்கள்
(1) மேலாளர்
13478.00 12669.00 11864.00 (2) கணக்காளர் / காசாளர்
(3) எழுத்தர் / தட்டச்சர் 12402.00 11187.00 10390.00 (4) பண்டகசாலைக் காப்பாளர்
(5) அலுவலக உதவியாள்
10790.00 10250.00 9981.00 (6) காவலாள்
(7) துப்புரவுத் தொழிலாளர் / பெருக்குபவர்
(8) மேற்சொன்னவற்றின் கீழ்
9981.00 9714.00 9443.00 இடம்பொறாத ஏனைய யாதொரு வகையினர்
விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு :- A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கும்:-
1. மண்டலம்-A: மாநகராட்சிகள் மற்றும் அம்பத்தூர் நகராட்சி.
2. மண்டலம்-B: அம்பத்தூர் நகராட்சி நீங்கலாக அனைத்து நகராட்சிகள்.
3. மண்டலம்-C: ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி:- (1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது திங்கள் ஒன்றுக்கு ரூ.58.65 (ஐம்பத்தெட்டு ரூபாய் மற்றும் அறுபத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.
15(ii) அகவிலைப்படியானது, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முந்தைய 12 மாதங்களுக்கான விலைப்புள்ளியின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் திங்கள் முதல் நாளிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்ட, முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
(4) நாள் ஊதியத்தை கணக்கிட, மாத ஊதியத்தை 26-ஆல் பெருக்க வேண்டும்.
(5) மாத ஊதியத்தை கணக்கிட, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(6) இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்பட்டும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்படவேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 104, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 26 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 04-09-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு-2 இல் 602 மற்றும் 603-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./681/2013 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், தகரக்கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் மற்றும் தொழிலாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
தகரக் கொள்கலன் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்/தொழிலாளர் வகைகள்.
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்.
தொடர் எண் (1)
(2)
(3)
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C
(ரூ. காசு) (ரூ. காசு) (ரூ. காசு) (1) நறுக்குதல்
6287.00 6159.00 6159.00 (2) விளிம்புப் பட்டையிடுதல் / உருட்டுதல் / துளையிடுதல்
6287.00 6159.00 6159.00 / தறையாணியடித்தல்
(3) சூட்டினைப்பு செய்தல்
6287.00 6159.00 6159.00 (4) சோதனையிடல் / பரிசோதித்தல் 6287.00 6159.00 6159.00 (5) அச்சிடுதல்
6287.00 6159.00 6159.00 (6) சுத்தப்படுத்தல் / மெருகேற்றல் 6287.00 6159.00 6159.00 (7) சிப்பம் கட்டுதல்
6287.00 6159.00 6159.00 (8) உதவியாள்
6023.00 6023.00 6023.00 (9) மேற்பார்வையாளர்
6426.00 6287.00 6287.0016 பணியாளர்/தொழிலாளர் வகைகள்.
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்.
தொடர் எண் (1)
(2)
(3)
மண்டலம் A மண்டலம் B மண்டலம் C
(ரூ. காசு) (ரூ. காசு) (ரூ. காசு) (10) மேலாளர்
6691.00 6552.00 6552.00 அலுவலகப் பணியாளர்
(1) மேலாளர்
6691.00 6552.00 6552.00 (2) கணக்காளர்
6159.00 6023.00 6023.00 (3) எழுத்தர்
6159.00 6023.00 6023.00 (4) தட்டச்சர்
6159.00 6023.00 6023.00 (5) பண்டகக்காப்பாளர்
6159.00 6023.00 6023.00 (6) ஓட்டுநர்
6159.00 6023.00 6023.00 (7) காவலாள்
6023.00 6023.00 6023.00
239.00 (நாளொன்றுக்கு)
237.50 (நாளொன்றுக்கு)
233.50 (நாளொன்றுக்கு) வாளிகள், விசைக் குழாய்கள், பால் கலன்கள், பெட்டிகள், உருள்கலங்கள், பீப்பாய்கள், குடம், நெல் அவிப்பான்களின் இணைப்புகள் முதலியவற்றை கையால் தயாரிப்பதற்கு
விளக்கங்கள்:- (1) மண்டலங்களின் வகைப்பாடு :- A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள் அடங்கும். அவையாவன:-
1. மண்டலம்-A: மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.
2. மண்டலம்-B: ஏனைய நகராட்சிகள்.
3. மண்டலம்-C: A மற்றும் B மண்டலங்களில் குறிப்பிடப்பட்டவை தவிர ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி:- (1) மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படி, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 2001=100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ.37.40 (முப்பத்தி ஏழு ரூபாய் நாற்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழக்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) அகவிலைப்படியின் முதல் கணக்கீடு முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளி குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்க ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதிய வீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(5) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
17[அரசாணை (2D) எண் 105, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 26 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 01-08-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு-2 இல் 1 மற்றும் 2ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./532(d)/2013 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் காடு வளர்ப்பில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழேயுள்ள விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்த ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
காடு வளர்ப்பில் வேலைவாயப்பு
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ. காசு)
(1)
(2)
(1) நாற்றுப்பண்ணை மசூதூர்/
நாற்றுப்பண்ணை தொழிலாளர்
நாளொன்றுக்கு 251.00
(2) மனை மசூதூர் / மனைக்காவலர்
(3) தீத்தடுப்பு ரோந்து காவலாள்
(4) சந்தன மரப்பாதுகாப்பு / சுற்றிவரும்
காவலாள்
(5) மசூதூர்களின் நாள் ஊதியங்கள்:
நிலை-i
நாளொன்றுக்கு 263.50
நிலை-ii
நாளொன்றுக்கு 259.00
நிலை-iii
நாளொன்றுக்கு 251.00
குறிப்பு:-
1. நிலை-i/ வகை-A- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள்.
2. நிலை-ii/ வகை-B- சேலம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்கள்.
(6) சந்தன மர கிடங்கில் மசூதூர் :
வகை-i (இறுதி தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 263.50
வகை-ii (ஓரளவு தூய்மையாக்கல்) நாளொன்றுக்கு 259.00
வகை-iii (ஏனையப் பணி)
நாளொன்றுக்கு 251.00
(7) வேலிப்படல் அமைத்தல் :
பட்டை உரித்தல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 3465.00
சுமை ஏற்றுதல் மெட்ரிக் டன் ஒன்றுக்கு 1035.00
பட்டைகளை வெட்டி அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 798.00
(8) நீலகிரி மலைத் தைல மரம் :
வெட்டுதல் மற்றும் அடுக்குதல் 3 கன மீட்டர்களுக்கான கட்டு ஒன்றுக்கு 725.00
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன், பணியாளர்களுக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.55 (ஒரு ருபாய் ஐம்பத்தைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான, அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை18 அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) ஓரே தன்மையுடைய பணியைச் செய்யும் போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) தினப்படி ஊதியவீதங்களும் அகவிலைப்படியும் வார விடுமுறை ஊதியங்களில் அடங்கும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலொல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 106, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 26 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 04-09-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு-2 இல் 604-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./682/2013 ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், பட்டு முறுக்கேற்றும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, பணி / தொழிலாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்கலை இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
பட்டு முறுக்கேற்றும் தொழிலில் வேலைவாய்ப்பு
குறைந்தளவு அடிப்படை ஊதிய
தொடர் எண் பணி / பணியாளர்களின்
வீதங்கள் (ரூ.காசு)
வகைகள்
(1)
(3)
(2)
(ரூ.காசு
1. நூல் இழைத்தல் நாளொன்றுக்கு 246.00
2. மடித்தல்
3. சுற்றுதல்
நாளொன்றுக்கு 247.00
4. முறுக்கேற்றுதல்
5. பாவு போடுதல் நாளொன்றுக்கு 256.00
6. மேலாள் / எழுத்தர் மாதமொன்றுக்கு 7491.00
7. நிருவாக உதவியாளர் மாதமொன்றுக்கு 8021.00
விளக்கங்கள்:- (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படி, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 2001 = 100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்கு ரூ. 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுகள் மட்டும் கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையில் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முதல் கணக்கீடு முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைப்புள்ளிக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
19(2) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் உதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(4) மாதாந்திர ஊதியங்களைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 107, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 26 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11-09-2013ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு-2 இல் 616 மற்றும் 617-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./698/2013 ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
சவ்வரிசி தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகை குறைந்தளவு அடிப்படை
தொடர் எண்
ஊதியவீதங்கள் ரூ. காசு
(1)
(2)
(3)
1. உரிப்பவர்கள் (செய்யும் வேலைக்கேற்ற ஊதியம்) 70 கிலோ கிராம் பை ஒன்றுக்கு 25.30 2. நசுக்கி, வகைப்படுத்தி, அரைத்து, வறுக்கும் மற்றும் ஏனைய
பல்வகை தொழில்களில் பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள்
நிலை-i
252.00 நாளொன்றுக்கு
நிலை-ii
243.00 நாளொன்றுக்கு
3. ஓட்டுநர்கள்
நிலை-i
6819.00 மாதமொன்றுக்கு
நிலை-ii
6390.00 மாதமொன்றுக்கு
4. எழுத்தர்கள்
நிலை-i
6912.00 மாதமொன்றுக்கு
நிலை-ii
6564.00 மாதமொன்றுக்கு
5. காவலாள்
6390.00 மாதமொன்றுக்கு
விளக்கங்கள்:— 1. (i) உடல்திறன், தேர்ச்சி, திறமை மற்றும் செய்யும் வேலையின் அளவு மற்றும் பணிமூப்பு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நசுக்குதல், வகைப்படுத்துதல், அரைத்தல், வறுத்தல் ஆகியவற்றில் பணியமர்த்தப்பட்டவர்கள் நிலை-i மற்றும் நிலை-ii பணியாளர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்.
20(ii) ஓட்டுநர்களை நிலை-i மற்றும் நிலை-ii ஆக வகைப்படுத்துதல்:-
நிலை-i: பணியில் முறையாக ஐந்து ஆண்டுகள் முடித்தவர்கள்.
நிலை-ii: பணியில் முறையான ஐந்து ஆண்டுகள் முடிக்கப் பெறாதவர்கள்.
(iii) எழுத்தர்களை நிலை-i மற்றும் நிலை-ii ஆக வகைப்படுத்துதல்:-
நிலை-i: பணியில் முறையாக ஐந்து ஆண்டுகள் முடித்தவர்கள்.
நிலை-ii: பணியில் ஐந்து ஆண்டுகள் முடிக்கப் பெறாதவர்கள்.
(2) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், மாதமொன்றுக்கு ரூ. 39.65 (மூப்பத்தி ஒன்பது ரூபாய் அறுபத்தி ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) (i) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 179, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 30 நவம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 27-ஆம் பிரிவில் வழங்கப்ட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையின் பாகம்-1-இல் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார் அவ்வாறு செய்வதற்கான நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் மேற்சொன்ன பிரிவில் கோரியுள்ளவாறாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தம்
மேற்சொன்ன சட்டத்தில், விவர அட்டவணையின் பாகம்-1-இல் "93. 1993-ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் பணியைத் தடை செய்தல் மற்றும் உலர் கழிப்பிடங்களை கட்டுவதை தடை செய்தல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 48/1993) கீழ் தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள் நீங்கலாக பெருக்குதல் மற்றும் சுத்தம் செய்தலில் வேலைவாய்ப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்னர் "94. வீட்டு உபயோகத் துணி வகை உற்பத்தித் தொழிலில் அதாவது படுக்கையறைத் துணிவகைகள் குளியலறைத் துணிவகைகள், வரவேற்பறைத் துணிவகைள், அலங்காரத் துணிவகைகள், சமையலறைத் துணிவகைகள் மற்றும் ஒத்த இனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு" என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
21[அரசாணை (நிலை) எண் 200, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (G1)த் துறை, 27 டிசம்பர் 2018.] தமிழ்நாடு 1948-ஆம் ஆண்டு தொழிலகப் பணிச் (நிலையாணைகள்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 20/1946) 2-ஆம் பிரிவைச் சேர்ந்த (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 05-03-2008-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு-2-இல் 113-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா./131/2008 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (3)-இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் எல்லைகளுக்குள், அதன் குறிப்பிடப்பட்டுள்ள நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்களை, மேற்சொன்ன சட்டத்தின் சான்றளிக்கும் அலுவலரின் அனைத்து அல்லது யாதொரு செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இதனால் நியமனம் செய்கிறார்.
அட்டவணை
அலுவலர்கள் உள்ளூர் எல்லைகள்
தொடர் எண்
(1)
(2)
(3)
1. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், சென்னை. சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மற்றும் விழுப்புரம், வருவாய் மாவட்டங்கள்.
2. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் மற்றும் தேனி வருவாய் மாவட்டங்கள்.
3. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், மதுரை மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி வருவாய் மாவட்டங்கள்.
4. தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி வருவாய் மாவட்டங்கள்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.