© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 13, 2019 மாசி 1, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 172, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 17 டிசம்பர் 2018.] தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர நாட்டுப்புற அமைப்புத் திட்டமிடல் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 26-1-2011 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்—ii பிரிவு 2-இல் 31-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ii(2)/HOU/36/2011 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பழனி உள்ளூர் திட்டமிடல் பகுதியில், கூடுதல் பகுதிகளை சேர்ப்பதற்கும் 17-4-1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்- ii பிரிவு 2-இல், 218 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறையின் ii(2)/RUL/2141/74 ஆம் எண் அறிவிக்கையில் பின்வரும் திருத்தத்தை செய்வதற்குமான அவரது நோக்கத்தையும் இதனால் அறிவிக்கிறார்.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைவுத்திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன உள்ளூர் பகுதியிலுள்ள யாதொரு குடியிருப்பாளர் அல்லது யாதொரு உள்ளூர் அதிகாரி அல்லது நிருவனத்திடமிருந்து மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர் வரப்பெறும், மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு உரியவாறு கருதிப்பார்க்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை எழுத்து மூலமாக, அரசுச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்பபுற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தம்
மேற்சொன்ன அறிவிக்கையில், "அட்டவணை" என்பதற்குப் பதிலாக, பின்வரும் "அட்டவணை" அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
அட்டவணை
தொடர் எண்
உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்
உள்ளூர் திட்டமிடல் பகுதி உள்ளடக்கிய பகுதி (நகராட்சி மற்றும் வருவாய் கிராமங்கள்) (1)
(2)
(3)
பழனி பழனி நகராட்சி
35 சிவகிரிபட்டி
31 கலிக்கநாயகன்பட்டி
32 கோதைமங்கலம்
DTP-ii-2-(7) (T Sup)
[ 1 ]2 தொடர் எண்
உள்ளூர் திட்டமிடல் பகுதியின் பெயர்
உள்ளூர் திட்டமிடல் பகுதி உள்ளடக்கிய பகுதி (நகராட்சி மற்றும் வருவாய் கிராமங்கள்) (1)
(2)
(3)
39 தாமரைகுளம்
45 சின்னகலையம்புத்தூர்
43 பெரியகலையம்புத்தூர்
44 நெய்க்காரப்பட்டி
30 ஆயக்குடி (மேற்கு)
23 மொல்லம்பட்டி
42/1 A கலையம்புத்தூர்
42/2 கலையம்புத்தூர்
34 பழனி (கிராமம்)
33 தட்டாங்குளம்".
S. கிருஷ்ணன்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 184, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 11 டிசம்பர் 2018.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 8 ஆம் பிரிவைச் சேர்ந்த 2 உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 20-12-2017 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2-இல், 963 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/1023/2017 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரான திரு. K. மனோகரன், B.Tech., என்பவரை மேற்சொன்ன சட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளராக இதனால் நியமிக்கிறார். சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 118, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 27 டிசம்பர் 2018.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 20-03-2013ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2-இல் 210 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/264/2013 ஆம் எண் அறிவிக்கையையும், 06-06-2018 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு 2-இல் 528-529 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/515/2018 ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், வெட்டுமரத் தொழிலில் பணியமர்த்தப்பட்டு அட்டவணையின் (2) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த தொழிலாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (3)ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கொரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
32. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
வெட்டுமரத் தொழிலில் வேலைவாய்ப்பு
தொழிலாளர் வகைகள் குறைந்தளவு அடிப்படை ஊதிய தொடர் எண்.
வீதங்கள் (நாளொன்றுக்கு)
(ரூ. காசு) (1)
(2)
(3) (I) தேர்ச்சி பெற்றோர்:
(1) மரம் வெட்டுபவர் / மரம் வெட்டு கருவி இயக்குபவர்
(2) இரம்பம் கொண்டு அறுப்பவர்
(3) இரம்பத்திற்குக் கூர் ஏற்றுபவர் (Saw Sharpener)
(4) இரம்பப் பொறி இயக்குபவர் அனைவரும் (All Saw - driver Operators)
(5) மெல்லொட்டுப் பலகை பொருத்தும் பொறியை இயக்குபவர் (Veneering Machine
Operator)
334.00 (6) மின்பணியாளர்
(7) முதலாள்
(8) கடைசல் பொறி இயக்குபவர்
(9) கொதிகலன் இயக்குபவர்
(10) இயந்திரக் கம்மியர்
(11) தச்சர்
(II) ஓரளவு தேர்ச்சிப் பெற்றோர்:
(1) மெருகேற்றுபவர்
(2) வரிச்சட்டங்களைக் கொண்டு சிப்பம் செய்பவர்
(3) சிப்பம் பெட்டி செய்பவர்
325.00 (4) இரம்பப் பொறி இயக்குபவருக்கு உதவியாள் அனைவரும்
(5) மரத் திம்மைகள் அறுப்பவரின் உதவியாள் (Log Helper)
(III) தேர்ச்சி பெறாதோர்:
(1) வெட்டுமரங்களைச் சுமந்து செல்வோர்
(2) பொது உதவியாள்
(3) சிப்பம் கட்டும் உதவியாள்
(4) தேர்ச்சிப் பெறாத உதவியாள்
317.00 (5) காவலர்
(6) வண்டிக்காரர் (Cartman)
(7) வெட்டு மரத் தொகுப்பு எண்ணிக்கை உதவியாள் (Lot Helper)
விளக்கம் : (1) அகவிலைப்படி.-மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன், தொழிலாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
4(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ. 1.95 (ஒரு ரூபாய் தொண்ணூற்று ஐந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட, முதல் கணக்கீடு இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) மாதாந்திர ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 120 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 31 டிசம்பர் 2018.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 05-02-2014 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்—ii பிரிவு 2-ல் 154 முதல் 155 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/102/2014-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைச் செய்கின்ற தொழிலாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் சொல்லியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் வேலைவவாய்ப்பு
தொடர்
பணியாளர்களின் வகைகள் மாதமொன்றுக்கான
எண்
குறைந்தளவு அடிப்படை
ஊதியங்கள்
(ரூ. காசு.)
(1)
(2) 3)
1. இயந்திரக் கம்மியர்
9377.00
2. சுற்றுலாச் சீருந்து இயக்குபவர்களிடம்
பணிபுரிபவர்கள் உள்ளிட்ட ஓட்டுநர்கள்
3. உதவி இயந்திரக் கம்மியர்
9118.00
4. பொருத்துநர்
5. மின்கம்மியர்5 தொடர்
பணியாளர்களின் வகைகள் மாதமொன்றுக்கான
எண்
குறைந்தளவு அடிப்படை
ஊதியங்கள்
(ரூ. காசு.)
(1)
(2) 3)
6. ஆய்வாளர்
9118.00
7. எழுத்தர்
9118.00
8. நடத்துநர்
9. உதவி பொருத்துநர்
8907.00
10. சுத்தியல் அடிப்பவர்
11. பசையிடுபவர்
8642.00
12. ஏவலாள்
13. துப்புரவுப் பணியாளர்
8525.00
14. காவலாள்
15. பெருக்குபவர்
16. கொல்லர் / கருமார்
17. தச்சர்
18. அடைப்பு வேலை செய்பவர் (Tinker)
9118.00
19. கடைசல் பணியாளர்
20. உள் உறையிடுபவர் (Liner)
21. வர்ணம் பூசுபவர் (தெளிப்பு முறை)
22. பற்றவைப்பவர்
23. தையற் பணியாளர்
24. வார்ப்படப் பணியாளர்
25. வர்ணம் பூசுபவர் (பெயிண்டர்)
9011.00
26. டயர் பணியாளர்
8907.00
27. மின்கலப் பணியாளர்
28. வல்கனைசர் மற்றும் அதுபோன்ற
பணியாளர்கள்
29. தள மேற்பார்வை:
(i) வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்துதல் (ii) வாகனங்கள் மற்றும் பணி முற்றத்தைச்
சுத்தம் செய்தல்
9377.00
(iii) வ ா க ன ங் க ை ள க் க ழு வு த ல் ம ற் று ம்
மசகெண்ணெயிடுதல்
(iv) பழுது சொல்லப்பட்ட வாகனங்களை பயணச்
சோதனையிடல்
30. தட்டச்சுப் பணிக்கான அரசு தொழிற்பயிற்சித்
9377.00
தேர்வில் உயர்நிலைத் தேர்வில் தேர்ச்சி
பெற்ற தட்டச்சர்
31. தட்டச்சுப் பணிக்கான அரசு தொழிற்பயிற்சித்
தேர்வில் கீழ்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற
தட்டச்சர்
32. பண்டகசாலைக் காப்பாளர்
9243.00
33. ஷராப் அல்லது காசாளர்
34. பணிமனை தொடக்குநர் (டிப்போ ஸ்டார்ட்டர்)
35. இருக்கை பொருத்துநர்
36. வாகனங்கள் நிறுத்துதல் கட்டுப்பாட்டாளர்
9118.00
(வாகனங்கள் நிறுத்துதலை முறைப்படுத்துதல்
மேற்பார்வை கழுவுதல், மசகெண்ணெயிடுதல்)
37. இயந்திரப் பணியாளர் (மெஷினிஸ்ட்)
38. பயணச்சீட்டு சோதனை எழுத்தர் அல்லது
9011.00
பதிவு செய்யும் எழுத்தர்6 தொடர்
பணியாளர்களின் வகைகள் மாதமொன்றுக்கான
எண்
குறைந்தளவு அடிப்படை
ஊதியங்கள்
(ரூ. காசு.)
(1)
(2) 3)
39. மசகெண்ணெய் ஆய்வாளர்
40. ரேடியேட்டர் பொருத்துநர்
9011.00
41. மின்முலாம் பூசுபவர்
42. பணிமனை நேரக்காப்பாளர்
43. கருணையாளர் (வைண்டர்)
44. நேரங்குறிப்பவர் மற்றும் வாகன நிறுத்த
முகவர்
45. உதவி கருமார்
46. உதவி டயர் பணியாள்
47. உதவி ஓட்டுவேலை செய்பவர்
48. உதவியாள் (அட்டெண்டர்)
49. உதவி மின் கம்மியர்
8907.00
50. கட்டுப்பாட்டாளர்
51. இயந்திரப் பணியாள (மெஷினிஸ்ட்)ரின்
உதவியாள்
52. பற்றவைப்பவரின் உதவியாள்
53. உதவித் தையற் பணியாளர்
54. பணிமனைக் கருவிகள் காப்பாளர்
55. வண்ணம் பூசுபவரின் உதவியாள் 8768.00
56. மசகெண்ணெய் உதவியாள்
8642.00
57. பொருத்துநரின் உதவியாள்
58. நிலக்கரிப் பணியாளர்
59. உதவியாள் (ஹெல்ப்பர்)
60. மஸ்தூர் மற்றும் அது போன்றவர்கள்
8525.00
61. கிளீனர் (சாதாரணம்)
62. கிளீனர் (சிறப்பு மற்றும் வாகன நிறுத்தங்கள்)
63. தண்ணீர் சுமப்பவர்
64. பெட்ரோல் பம்பு இயக்குபவர்
65. வாடிக்கை திரட்டுபவர் (கான்வாசர்)
விளக்கங்கள்:—(1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001=100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும், அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ. 52.95 (ஐம்பத்து இரண்டு ரூபாய் தொண்ணூற்றைந்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) பொதுமக்களுக்கான மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பணியில் செய்யும் வேலைக்கேற்ற ஊதியவீதம் பெறும் தொழிலாளர்கள் பணிக்கமர்த்தப்பட்டால், சாதாரணமான ஒரு வேலை நாளில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஊதியம் நிகரான வகையினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியத்தைவிடக் குறைவாக இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
7(5) 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 2 ஆம் பிரிவைச் சேர்ந்த (h) பகுதியில் 'ஊதியம்' என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள வரையறை இந்த அறிவிக்கையைச் செயல்படுத்துவதற்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
(6) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 1, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(J1)த் துறை, 2 ஜனவரி 2019.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 11-09-2013 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii பிரிவு 2-இல் 169-620 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாப்புத் துறையின் ii(2)/ தொ.வே.வா/701/2013 ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள, கீழ்க்காணும் விவர அட்டவணையின் (1) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை, அந்த விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியின் நிகரான -- இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்:- (1) உட்பிரிவின் (b) பகுதியில் கொரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை காற்றூட்டப்பட்ட பானங்கள் தயாரிப்புத் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ரூ. காசு
(1)
(2)
மண்டலம்--A மண்டலம்--B மண்டலம்--C
(நாளொன்றுக்கு)
குடிசைத் தொழில் பிரிவுகள் :
(1) பொதுவான தொழிலாளர்கள் 193.00 186.00 183.00
(2) உதவியாட்கள் 189.00 184.00 177.50
ஓரளவு தானியங்கிப் பிரிவுகள் :
(1) வேதியியலார்
232.00 226.50 221.50
(2) மேற்பார்வையாளர்/மேலாள் 221.50 215.50 210.00
(3) இயந்திரக் கம்மியர் 210.00 204.00 199.00
(4) பொருத்துநர்
210.00 204.00 199.00
(5) மின் கம்மியர் 210.00 204.00 199.00
207.00 200.00 195.00
(6) புட்டியில் நிரப்புபவர்/ இயந்திரம் இயக்குபவர்
(7) புட்டி கழுவுபவர் 200.00 193.00 189.00
8பணியாளர்களின் வகைகள்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ரூ. காசு
(1)
(2)
மண்டலம்--A மண்டலம்--B மண்டலம்--C
(நாளொன்றுக்கு)
(8) உதவியாள்
(9) சரக்குகளை ஏற்றி இறக்குபவர்
தானியங்கிப் பிரிவுகள் :
(மாதம் ஒன்றுக்கு)
(1) பொது மேலாளர் 9115.00 8681.00 8464.00
(2) உற்பத்தி மேலாளர் 8897.00 8464.00 8249.00
8681.00 8249.00 8030.00
(3) தலைமை வேதியியலர்/ தரக் கட்டுப்பாடு ஆய்வாளர்
8681.00 8249.00 8030.00
(4) முறை மாற்றுப் பணி பொறியாளர்/ உற்பத்தி பொறியாளர்
6947.00 6513.00 6294.00
(5) முதலாள் / மேற்பார்வையாளர்/ கொதிகலன் இயக்குபவர் / இயந்திரக்கம்மியர் / உற்பத்தி உதவியாள்
(நாளொன்றுக்கு)
(6) மின் கம்மியர் 226.50 216.50 210.00
(7) பொருத்துநர்
226.50 216.50 210.00
(8) சரக்குகளை ஏற்றி, இறக்குபவர் 222.00 210.00 204.00
(9) உதவியாள் 222.00 210.00 204.00
நிருவாகப் பணியாளர்கள் (மாதம் ஒன்றுக்கு)
(1) மேலாளர்
6947.00 6513.00 6294.00
(2) காசாளர்/ கணக்காளர் 6730.00 6294.00 6079.00
(3) எழுத்தர் / தட்டச்சர் 5863.00 5645.00 5428.00
(4) ஓட்டுநர்
5863.00 5645.00 5428.00
5645.00 5467.00 4994.00
(5) ஏவலாள்/குற்றேவலர்/காவலாள்/ துப்புரவுப் பணியாளர்
விளக்கங்கள்:—(1) மண்டலங்களின் வகைப்பாடு:- - மண்டலங்கள் - A,B மற்றும் C பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
(1) மண்டலம் - A மாநகராட்சிகள்
(2) மண்டலம் - B அனைத்து வகை நகராட்சிகள்
(3) மண்டலம் - C மண்டலம் A, மண்டலம் B, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக ஏனைய பகுதிகள்.
(2) அகவிலைப்படி : தொழிலாளர்களுக்கு மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு ஊதியங்களுடன், கீழே குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்:-
(i) அகவிலைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது, (அதாவது 2001ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட புள்ளிகள் 161 ஆகும்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதமொன்றுக்குக் கூடுதலாக, ரூ. 31.00 (ரூபாய் முப்பத்து ஒன்று மட்டும்) அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
9(ii) இந்த அகவிலைப்படி, முந்தைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரையிலான நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முதல் கணக்கீடு செயலுக்கு வரும்.
(3) பணியின் தன்மை ஓரே மாதிரியாக இருக்கும்போது, ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களிடையே எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.
(4) (i) நாட்கூலியைக் கணக்கிட, மாத ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(ii) மாத ஊதியத்தைக் கணக்கிட, நாள் ஊதியத்தை 30 ஆல் வகுக்க வேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களில் எல்லாம், அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 2, தொழிலாளர்-வேலைவாய்ப்பு (J1)த் துறை, 3 ஜனவரி, 2019.]
1948—ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 5-2-2014ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்—ii பிரிவு 2-இல் 158 முதல் 159 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)/தொ.வே.வா/106/2014ஆம் எண் அறிவிக்கையினை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக்குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழ்க்காணும் விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்திக்கு நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகை மாதாந்திர குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்கள் தொடர் எண்
(ரூ. காசு)
(1)
(2)
(3)
மண்டலம்-A மண்டலம்-B மண்டலம்-C மண்டலம்-D (1) மேலாளர்
6725.00 6626.00 6540.00 6447.00 (2) இயந்திர கம்மியர்/காசாளர்/
6261.00 6176.00 6098.00 6012.00 எழுத்தர்/விற்பனையாளர்
(3) இலகு ரக சரக்கு வாகன ஓட்டுநர் 6318.00 5984.00 5905.00 5827.00 (4) கிடங்குக் காப்பாளர் 5706.00 5634.00 5563.00 5491.00 (5) விநியோகிப்பவர்/உதவியாள் 5335.00 5271.00 5206.00 5143.00 விளக்கங்கள்:- 1. அகவிலைப்படி:- மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 = 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படி மாதமொன்றுக்கு ரூ.31.90 (முப்பத்தோரு ரூபாய் தொண்ணூறு காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
10(ii) அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக் குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வோராண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து கணக்கிடப்படவேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) மண்டலங்களின் வகைபாடு பின்வருமாறு:
மண்டலம் - A : மாநகராட்சிகள் மற்றும் சிறப்பு நிலை நகராட்சிகள்.
மண்டலம் - B : சிறப்பு நிலை நகராட்சிகள் தவிர அனைத்து நகராட்சிகள்.
மண்டலம் - C : நகரியங்கள் பேரூராட்சிகள், மற்றும் பாளையங்கள்.
மண்டலம் - D : மண்டலங்கள் A, B மற்றும் C மண்டலங்களில் குறிப்பிடப்பட்டவை நீங்கலாக ஏனைய அனைத்துப் பகுதிகள்.
(3) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்கவேண்டும்.
(5) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனில் பாலிவால் அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 3, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (i2)த் துறை. 4 ஜனவரி 2019.] தமிழ்நாடு 1982ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1994ஆம் ஆண்டு உடலுழைப்புத் தொழிலாளர்கள் (கட்டடத் தொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.
திருத்தங்கள்
மேற்சொன்ன திட்டத்தில்,-
(1) பகுதி 3இல், இனம் (8)க்குப் பின்னர் பின்வரும் இனம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் அதாவது:-
"(9) பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கல்";
(2) பகுதி 17-Aக்குப் பின்னர், பின்வரும் இனம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் அதாவது:-
17-B பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கல். (1) பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து நகராட்சிகளால் நடத்தப்பெறும் அம்மா உணவகத்தில் நாளொன்றுக்கு மூன்று முறை இலவசமாக உணவைப் பெற்றுக்கொள்ள முடியும்".
(2) பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட உணவு தொடர்பான கணக்குகளை அம்மா உணவகப் பணியாளர்கள் தனியாகப் பராமரிக்கவேண்டும். அம்மா உணவகத்தை நடத்திடும் நகராட்சியின் சம்பந்தப்பட்ட துறையினரால், பதிவு பெற்ற கட்டடத் தொழிலாளர்களால் பெறப்பட்ட உணவுக்கான மொத்த தொகையின் விரிவான விவரங்களுடன் கூடிய பற்றுச்சீட்டினை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைக்க வேண்டும்.
(3) பற்றுச் சீட்டினைப் பெற்றுக்கொண்டதன் பேரில், அந்தப் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் செலுத்த வேண்டும்."
சுனில் பாலிவால் அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.