© தமிழ்நாடு அரசு 2019
[விலை : 0.80 காசு[விலை : 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 10] சென்னை, புதன்கிழமை, மார்ச் 6, 2019 மாசி 22, விளம்பி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைதுறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 4, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 7 ஜனவரி 2019.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு, தொழிற்சாலைகள் விதிகளில் செய்யக்கருதியுள்ள கீழ்காணும் திருத்தங்களின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் முடிவடைந்தப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, 47/1, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 600 032-இல் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு இருபடிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி (4)-இல், துணை விதி (6-A)-இல், ''தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''தொடர்ச்சியான பதினைந்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்.
(2) 7 ஆம் விதியில், துணை விதி (3) இன், இரண்டாவது வரம்பு நிபந்தனையில் ''தொடர்ச்சியான பத்து ஆங்கில ஆண்டுகள்'', என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''தொடர்ச்சியான பதினைந்து ஆங்கில ஆண்டுகள்'' என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால்,சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
III-1a-(10) (T Sup)