© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 4.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 18]
சென்னை, புதன்கிழமை, மே 1, 2019 சித்திரை 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 31-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 1/2017
தமிழ்நாடு மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும், சொந்த மண்ணின்
காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதை உறுதி
செய்வதையும் நிச்சயிக்கும் பொருட்டு, 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச்
சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்தி ஏழாம் ஆண்டில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்த சட்டம் 2017-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது 2017ஆம் ஆண்டு, சனவரி 21ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2-ஆம் மையச்சட்டம்
59/1960.
பி ரி வி ற் க ா ன திருத்தம்.
2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் என்று சுட்டப்படுவதான) 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில் (d) எனும் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(dd) "ஜல்லிக்கட்டு" என்பது இது தொடர்பாக மாநில அரசால் அறிவிப்பு செய்யப்படலாகிறவாறான அத்தகைய இடங்களில், சனவரி முதல் மே மாதங்களில் அத்தகைய நாட்களன்று பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பின்பற்றும் நோக்கத்துடன் காளைகளை ஈடுபடுத்தி நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும் என்று பொருள்படும்; மற்றும் இதில் "மஞ்சுவிரட்டு", "வடமாடு" "எருது விடும் விழா" ஆகியவை உள்ளடங்குவதாக இருக்கும்".
3. முதன்மைச் சட்டத்தின் 3-ஆம் பிரிவு, அந்தப் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவாக மறு 3-ஆம்
பிரிவிற்கான திருத்தம்.
எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு மறு எண்ணிடப்பட்டவாறான (1)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2) (1)-ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறாயிருப்பினும், மாநில அரசால் இயற்றப்படலாகிறவாறான அத்தகைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் "ஜல்லிக்கட்டு" அனுமதிக்கப்படுதல் வேண்டும்".
DTP-IV-2-(18) (T Sup)—1
[ 1 ]2 11-ஆம்
4. முதன்மைச் சட்டத்தின் 11-ஆம் பிரிவின், (3)-ஆம் உட்பிரிவில் (e) எனும் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
பிரிவிற்கான திருத்தம்.
"(f) பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி மற்றும் முன்னேற்றும் நோக்கத்துடன் மற்றும் சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுதல் வேண்டும்".
22-ஆம்
5. பின்வரும் வரம்புரை முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவுடன் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
பிரிவிற்கான திருத்தம்.
வரம்புரை: ஆனால் இந்தப் பிரிவில் அடங்கியிருப்பது 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்குப் பொருந்தாது.
27-ஆம்
6. முதன்மைச் சட்டத்தின் 27-ஆம் பிரிவில் (b) எனும் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
பிரிவிற்கான திருத்தம்.
"(c) சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வு மற்றும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு மற்றும் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பின்பற்றி மற்றும் முன்னேற்றும் நோக்கத்துடன் "ஜல்லிக்கட்டு" நடத்தப்படுதல்''.
28-A எனும்
7. முதன்மைச் சட்டத்தின் 28-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
28-A "ஜல்லிக்கட்டு" தொடர்பான காப்பு - இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எதுவும் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றி மற்றும் அதனை முன்னேற்றுவதற்காக நடத்தப்படும் "ஜல்லிக்கட்டுக்கு" பொருந்தாது; மற்றும் அவ்வாறு நடத்தப்படும் "ஜல்லிக்கட்டு" இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றமாக கருதப்படமாட்டாது.
நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு 8. (1) 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) அவசரச் காப்பு
சட்டம் இதன் மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.
அவசரச் சட்டம் 1/2017.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறு இருப்பினும், மேற்சொன்ன அவசர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறாக முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
3தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 3/2017
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்.
இ ந் தி ய க் கு டி ய ர சி ன் அ று ப த் து எ ட் ட ா ம் ஆண் டி ல் த மி ழ் ந ா டு ம ா நி ல த் தி ன் சட்டமன்றப்பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக.-
பகுதி-I
முன்னுரை
1. (1) இந்தச் சட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம் என்று குறுந்தலைப்பு அழைக்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261 எனும் பிரிவிற்குப் பின்பு, தமிழ்நாடு சட்டம்
21/1994
பின்வரும் பிரிவானது புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
261--A எனும் புதிய பிரிவு புகுத்தப்படுதல். 261-A தனி அலுவலர்களை அமர்த்துதல்,-இந்தச் சட்டத்தில் அல்லது அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும் எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது நேர்வுக்கேற்ப மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது நேர்வுக்கேற்ப மாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு தனி அலுவலர்களை அமர்த்தம் செய்யலாம்.
தமிழ்நாடு
நீக்கறவு மற்றும்
காப்பு.
அவசரச் சட்டம் 1/2016.
3. (1) 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (நான்காம் திருத்தம்) அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு
அவசரச் சட்டம் 3/2016.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன அவசரச் சட்டங்களால் திருத்தப்பட்டவாறு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும், மேற்சொன்ன அவசர சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு இந்த சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முறையே இந்த சட்டத்தின்படி செய்யப்பட்டு இருப்பதாக அல்லது எடுக்கப்பட்டு இருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
4 5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 4/2017
தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான
சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் சட்டமாக இயற்றப்படுவதாகுக:-
பகுதி – I
முன்னுரை
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
பகுதி – II
1919 -ஆம் ஆண்டு சென்னை நகர மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
2. 1919-ஆம் ஆண்டு சென்னை நகர மாநகராட்சிச் சட்டத்தின் 414-A எனும் பிரிவுக்குப் பின்பு, தமிழ்நாடு சட்டம்
414-B எனும் IV/1919.
பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
414-B . தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்)சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – III
1920 -ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
375-B எனும் 3. 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-A எனும் பிரிவுக்குப் V/1920.
பின்பு, பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
375-B . தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு நகராட்சிகள் அல்லது நேர்வுக்கேற்ப பேரூராட்சிகளுக்கான சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, நகராட்சிகளின் அல்லது நேர்வுக்கேற்ப பேரூராட்சிகளின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – IV
1971 -ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
4. 1971 -ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AA பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
510-AAA எனும் 15/1971.
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
510-AAA. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும்6 வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – V
1981 -ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
5. 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AA எனும் பிரிவுக்குப் பின்பு,
தமிழ்நாடு சட்டம் பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
25/1981. 511-AAA எனும் புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
511-AAA. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – VI
1994 -ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
6. 1994-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-ஆம் பிரிவுக்குப் பின்பு, 10-A எனும்
தமிழ்நாடு சட்டம்
27/1994.
பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
10- A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – VII
1994 -ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
7. 1994-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-ஆம் பிரிவுக்குப் பின்பு, 10-A எனும்
தமிழ்நாடு சட்டம்
28/1994.
பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
10- A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – VIII
1994-ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10-A எனும்
தமிழ்நாடு சட்டம் 8. 1994-ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10 ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும்
29/1994.
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
10-A . தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் DTP-IV-2-(18) (T Sup)—2a7 வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி–IX
2008- ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
9. 2008-ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு பின்வரும் 7/2008.
பிரிவு, புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
9-A எனும் பிரிவு புகுத்தப்படுதல்.
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – X
2008-ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
10. 2008-ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் தமிழ்நாடு சட்டம்
9-A எனும் பிரிவு புகுத்தப்படுதல். 8/2008.
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – XI
2008 -ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
11. 2008-ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் 9-A எனும் தமிழ்நாடு சட்டம் 26/2008.
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – XII
2008-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
9-A எனும் 12. 2008-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு, தமிழ்நாடு சட்டம் 27/2008.
பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
8பகுதி – XIII
2013 -ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
13. 2013-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் 9-A எனும்
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
தமிழ்நாடு சட்டம் 24/2013.
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
பகுதி – XIV
2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
14. 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் 9-A எனும்
தமிழ்நாடு சட்டம் 25/2013.
பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
புதிய பிரிவு புகுத்தப்படுதல்.
9-A. தனி அலுவலர் அமர்த்தம்.- இந்தச் சட்டத்தில் அல்லது தற்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும், அரசு, அறிவிக்கையின் வாயிலாக 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (திருத்தச்) சட்டம் தொடங்கிய தேதிக்குப் பின்பு மாநகராட்சிக்குரிய சாதாரண தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் மன்றக் கூட்டம் நடக்கும் வரை அல்லது 2017-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை, இதில் எது முந்தியதோ அதுவரை, மாநகராட்சியின் அதிகாரங்களை செயலுறுத்துவதற்கு மற்றும் செயல் பணிகளைச் செய்து முடிப்பதற்கு ஒரு தனி அலுவலரை அமர்த்தம் செய்யலாம்.
நீக்கறவு மற்றும்
தமிழ்நாடு காப்புரை.
அவசரச்சட்டம் 2/2016.
15. (1) 2016-ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (மூன்றாம் திருத்தம்) அவசரச் சட்டம் மற்றும் 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (நான்காம் திருத்தம்) அவசரச் சட்டம் ஆகியவை ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு
அவசரச்சட்டம் 4/2016.
(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், 1919-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம், 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971-ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டம், 1981-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம், 1994-ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம், 1994-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம், 1994-ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டம், 2008-ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டம், 2008-ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டம், 2008-ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம், 2008-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம், 2013-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டம் மற்றும் 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம் ஆகியவற்றிலுள்ளபடி செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும் மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முறையே இந்தச் சட்டங்களின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் IV/1919. தமிழ்நாடு சட்டம் V/1920. தமிழ்நாடு சட்டம் 15/1971. தமிழ்நாடு சட்டம் 25/1981. தமிழ்நாடு சட்டம் 27/1994. தமிழ்நாடு சட்டம் 28/1994. தமிழ்நாடு சட்டம் 29/1994. தமிழ்நாடு சட்டம் 7/2008. தமிழ்நாடு சட்டம் 8/2008. தமிழ்நாடு சட்டம் 26/2008. தமிழ்நாடு சட்டம் 27/2008. தமிழ்நாடு சட்டம் 24/2013. தமிழ்நாடு சட்டம் 25/2013.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
9தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 5/2017
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தை மேலும்
திருத்துவதற்கானதொரு சட்டம்.
இந்தியக்குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச்சட்டம், 2017-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்குரிய ஏழாம் அட்டவணையில்,—
தமிழ்நாடு சட்டம் IV/1919.
ஏழாம் அட்டவணைக் கான திருத்தம் (1) 191 ஆம் பிரிவிற்கு தொடர்பான இனத்திற்காக பின்வரும் இனம் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
"191 பிரதான பணி அமைப்புகளுடன் அனுமதியின்றி
செய்யப்படும் இணைப்பிற்கு —
(a) சாதாரணக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு ஐந்தாயிரம் ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் பத்தாயிரம் ரூபாய்;
உள்ளவற்றிற்கு
(b) சிறப்புக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு இருபத்தி ஐந்தாயிரம்
ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்;
உள்ளவற்றிற்கு
(c) பல அடுக்குமாடிக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு ஒரு இலட்சம் ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் இரண்டு இலட்சம் ரூபாய்.
உள்ளவற்றிற்கு
விளக்கம்.—இந்த இனத்தின் நோக்கத்திற்காக, சாதாரணக் கட்டடம், சிறப்புக் கட்டடம் மற்றும் பல அடுக்குமாடிக் கட்டடம் ஆகியவை முறையே அவற்றிற்கு சென்னை பெருநகர பரப்பிடத்திற்கான மேம்பாட்டு ஒழுங்குமுறையில் குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.";
(2) 202 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவிற்கு தொடர்பான இனத்திற்காக பின்வரும் இனம் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
"202 (5) தெருக்களில் கழிவுநீரை விடுவதற்கு—
(a) சாதாரணக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு ஐந்தாயிரம் ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் பத்தாயிரம் ரூபாய்;
உள்ளவற்றிற்கு10 (b) சிறப்புக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்;
உள்ளவற்றிற்கு
(c) பல அடுக்குமாடிக் கட்டடம்—
(i) குடியிருப்பிற்கு ஒரு இலட்சம் ரூபாய்;
(ii) வணிக நோக்கத்தில் இரண்டு இலட்சம் ரூபாய்.
உள்ளவற்றிற்கு
விளக்கம்.—இந்த இனத்தின் நோக்கத்திற்காக, சாதாரணக் கட்டடம், சிறப்புக் கட்டடம் மற்றும் பல அடுக்குமாடிக் கட்டடம் ஆகியவை முறையே அவற்றிற்கு சென்னை பெருநகர பரப்பிடத்திற்கான மேம்பாட்டு ஒழுங்குமுறையில் குறித்தளிக்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.