Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 08 May 2019

Type
Ordinary
Gazette no.
19
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT-Reports
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-05-08.Ordinary_19_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : 3.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 19] சென்னை, புதன்கிழமை, மே 8, 2019 சித்திரை 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 6, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (U2)த் துறை, 10 ஜனவரி 2019.] 1986—ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம்பருவத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 61/1986)18 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு 1994—ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தல்) விதிகளில் செய்யக் கருதப்பட்டுள்ள பின்வரும் வரைவுத் திருத்தங்கள், மேற்சொன்ன சட்டத்தின் 18—ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு அதனால் பாதிக்கக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது முடிவடைந்த பின்னர், இந்த வரைவுத்திருத்தங்கள் கருதிப் பார்க்கப்படும் என்றும், மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், இது தொடர்பாக யாதொரு நபரிடமிருந்து வரப்பெறும் மறுப்புரை அல்லது கருத்துரையைத் தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும் என இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, தொழிலாளர் நலத் துறை ஆணையாளர், டி.எம்.எஸ். வளாகம்,தேனாம்பேட்டை, சென்னை–600 006 வாயிலாக அரசு முதன்மை செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை–600 009 என்ற முகவரிக்கு இருபடிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத்திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில், -

1. விதி 1இன் (1) ஆம் துணைவிதியில், "குழந்தைத்தொழிலாளர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாகக் "குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தொழிலாளர்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்;

2. விதி 2இல்,

(i) பகுதி (a)-க்குப் பதிலாகப் பின்வரும் பகுதி அமைத்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(a) "சட்டம்" என்பது 1986—ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் (மத்தியச்சட்டம் 61/1986) எனப் பொருள்படும்;";

(ii) பகுதி (c)க்குப் பதிலாக, பின்வரும் பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்; அவையாவன:-

"(ca) "நிதி" என்பது சட்டத்தின் 14B ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நிதி எனப் பொருள்படும்;

(cb) "ஆய்வாளர்" என்பவர் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர் எனப் பொருள்படும்;

(cc) "நகராட்சி என்பது அரசமைப்பின் 243Qஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு எனப் பொருள்படும்;

(cd) "ஊராட்சி" என்பது அரசமைப்பின் 243Bஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஊராட்சி எனப் பொருள்படும்;"" iii-1a-(19) (T Sup)—1

[ 1 ]

iii-1a-(19) (T Sup)—1a2 (iii) பகுதி (f) க்குப்பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(g) இந்த விதிகளில் பயன்படுத்தப்பட்டு அங்கு பொருள் விளக்கமளிக்கப்படாமல் ஆனால் சட்டத்தின் பொருள் விளக்கமளிக்கப்பட்ட சொற்களும் சொற்றொடர்களும் சட்டத்தில் அவற்றிற்கு அளிக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும்." 3. விதி 2க்குப்பின்னர், பின்வரும் விதிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"2A. சட்டத்திற்கு முரணாக குழந்தை அல்லது வளரிளம்பருவத்தினரை வேலையில் ஈடுபடுத்துவதைத் தடை செய்வது குறித்த விழிப்புணர்வு.—- மாநில அரசு, குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத் தொழிலாளர்கள் சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக எவ்விதப்பணிகளிலும் அனுமதிக்கப்படவில்லை அல்லது பணியமர்த்தப்படவில்லை என்பதை உரிய நடவடிக்கைகள் வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும், அவை வருமாறு:-

(a) வேலையளிப்பவர்கள் மற்றும் இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக பணியமர்த்தப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத்தினர் உட்பட பொதுமக்களிடம், இச்சட்டத்தின் விதித்துறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, தொலைக்காட்சி, வானொலி, இணையதள அடிப்படையிலான செயலி மற்றும் அச்சு ஊடகம் உள்ளிட்ட மக்கள் ஊடகம் மற்றும் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய ஊடகத்தைப் பயன்படுத்தி பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்வதன் வாயிலாக, வேலையளிப்பவர்கள் மற்றும் ஏனைய நபர்கள் இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக, குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத்தினரை யாதொரு தொழிலில் அல்லது செய்முறையில் பணியமர்த்துவதிலிருந்து தடை செய்தல்;

(b) மாநில அரசினால் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் எளிதில் சென்றடையும் தொலை தொடர்பு வாயிலாக விளம்பரப்படுத்துவதின் பேரில் சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாக குழந்தை அல்லது வளரிளம்பருவத்தினர்களைப் பணியமர்த்துதல் குறித்த நிகழ்வுகள், நிறுவனங்கள் பற்றி தெரிவிப்பதை அறிக்கை அளிக்கும் நிறுவனங்களை ஊக்குவித்தல்;

(c) சட்டத்தின் விதித்துறைகளையும், இவ்விதிகள் தொடர்பான ஏனைய பிற தகவல்களையும் ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், பொருட்காட்சிகள், பெரு வணிக வளாகங்கள், கண்காட்சிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் வணிக மையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், உணவகங்கள், மருத்துவமனைகள், ஊராட்சி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், குடியிருப்பாளர் நல சங்க அமைப்புகள், தொழிலக பகுதிகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்ற வளாகங்கள் மற்றும் சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பெற்ற அனைத்து அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளிட்ட ஏனைய பொது இடங்களில் காட்சிப்படுத்தலாம்;

(d) பள்ளிக்கல்வியில் கற்றல் ஏட்டிலும் பாடத்திட்டத்திலும் சட்டத்தின் விதித்துறைகளைச் சேர்ப்பதற்கு உரிய வழிமுறை வாயிலாக ஊக்குவித்தல்; மற்றும்

(e) மாநிலத் தொழிலாளர் துறை, தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள், வருவாய்த் துறை, காவல் மற்றும் நீதித் துறை மற்றும் குடிமைப்பணிகளுக்கான பயிற்சியகங்கள், மற்றும் ஆசிரியர் பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளில் சட்டத்தின் விதித்துறைகள் மற்றும் அதன் பல்வேறு பொறுப்பாளர்களின் பொறுப்புகள் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏடுகளில் சேர்ப்பதற்கு ஊக்குவித்தல் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், மருத்துவர்கள், வேலை அளிப்பவர்கள் மற்றும் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய பொறுப்பாளர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்;

2B) குழந்தையின் கல்வி பாதிக்காத வகையில் அதன் குடும்பத்திற்கு உதவுதல்.-— ஒரு குழந்தை அதன் பள்ளிக்கல்வி பாதிக்காத வகையில், 3-ஆம் பிரிவின் விதித்துறைகளுக்குட்பட்டு யாதொரு வகையில் பின்வருமாறு செயல்படலாம்,- அவையாவன,

(a) அதன் குடும்பம் அல்லது குடும்பத் தொழிலுக்கு பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு உதவலாம். அத்தகைய உதவியானது,- -—

(i) சட்டத்தின் அட்டவணையில் பட்டியலிடப்பட்ட யாதொரு அபாயகரமான தொழில் அல்லது செய்முறையாக இருக்கக்கூடாது.

(ii) குழந்தையின் அல்லது அதன் குடும்பத்தின் அல்லது குடும்ப தொழிலுக்கு மதிப்பூதியம் தரக்கூடிய தயாரிப்பு, உற்பத்தி, வழங்கல் அல்லது சில்லறை சங்கிலித்தொடரின் யாதொரு நிலையில் உள்ள பணி அல்லது தொழில் அல்லது செய்முறையாக இருக்கக்கூடாது.

(iii) குழந்தை, அதன் குடும்பத்திற்கு அல்லது அதன் குடும்பம் உரிமையாளராக உள்ள குடும்ப தொழிலுக்கு உதவுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்;

(iv) பள்ளி நேரங்கள் மற்றும் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலான இடைப்பட்ட காலத்தில் யாதொரு செயலை மேற்கொள்ளக்கூடாது;

(v) குழந்தையின் கல்வி உரிமை அல்லது பள்ளி வருகைப் பதிவினை தடை செய்கின்ற அல்லது தலையிடுகின்ற அல்லது பள்ளியில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட வீட்டுப்பாடம் அல்லது யாதொரு பாடத்திட்டம் சாரா பிற செயல்பாடுகள் போன்று கல்வியை நிறைவு செய்வதற்குத் தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட குழந்தையின் கல்வி உரிமையை மோசமாக பாதிக்கின்ற அத்தகைய செயல்பாடுகளில் இருக்கக்கூடாது.

(vii) குழந்தையை சோர்வுறச்செய்யும் வகையில் ஓய்வின்றி தொடர்ச்சியாக யாதொரு செயலிலும் ஈடுபடுத்தக்கூடாது. மேலும் குழந்தையின் உடல் நலம் மற்றும் மன நலனைப் புத்துணர்ச்சியாக்குவதற்கு ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் ஒரு நாளில் ஓய்வெடுக்கும் காலம் தவிர்த்து மூன்று மணி நேரத்திற்கு மேல் ஒரு குழந்தை உதவக்கூடாது.

3

(vii) குழந்தை அதன் குடும்பத்திற்கு அல்லது குடும்ப தொழிலுக்கு உதவுகின்ற போது, உரிய வயதடைந்த நபர் ஒருவர் அல்லது வளரிளம் பருவத்தினருக்குப் பதிலாக குழந்தையை மாற்றாக பணியமர்த்தக்கூடாது; மற்றும் (viii) அப்போதைக்கு செயலில் உள்ள ஏனைய யாதொரு சட்டத்திற்கு முரணாக இருக்கக்கூடாது;

(b) யாதொரு தொழில், பணி, வாழ்க்கைத் தொழில், தயாரிப்பு அல்லது வணிகம் அல்லது குழந்தை யாதொரு தொகை பெறுதல் அல்லது பயனடைதல் அல்லது குழந்தையின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு ஊறு விளைவிக்காத வகையில் குழந்தை மீது கட்டுப்பாட்டினை செலுத்துகின்ற ஏனைய யாதொரு நபருக்கு குறுக்கீடு இல்லாத அத்தகைய முறையில் அதன் குடும்பத்திற்கு உதவுதல்

விளக்கம் 1: இந்த விதியின் செயல் நோக்கங்களுக்காக,-

குழந்தையின் குடும்பத்தில் பின்வருவோர் மட்டுமே அடங்குவர். அவர்களின் விவரங்கள் வருமாறு:-

(a) குழந்தையின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி;

(b) குழந்தையின் பெற்றோரால் சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் சகோதரர் அல்லது சகோதரி; மற்றும் (c) குழந்தையின் பெற்றோர்களின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரி

விளக்கம் 2: -முதனிலையாக, ஒரு நபர் உடன் பிறந்த சகோதரரா அல்லது சகோதரியா என்ற யாதொரு ஐயப்பாடு, நேர்விற்கேற்ப சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது ஊராட்சியால் வழங்கப்பட்ட அத்தகைய நபரின் பதிவுரு அல்லது மாநில அரசின் சம்பந்தப்பட்ட அதிகார மன்றத்தால் வழங்கப்பட்ட ஏனைய சட்டப்பூர்வ ஆவணத்தை ஆய்வு செய்வதன் வாயிலாக களையப்படலாம் என விளக்கம் 1இன் செயல் நோக்கங்களுக்காக இதனால் தெளிவுபடுத்தப்படுகிறது.

(2) பள்ளியில் படிக்கின்ற குழந்தை ஒன்று, அப்பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு பள்ளிக்கு வராமல் இருப்பின், முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர், விதி 3(c)-இன் 1 துணை விதி (1) இன் பகுதி (i) –இல் குறிப்பிடப்பட்ட சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு அத்தகைய விடுப்பு குறித்து தகவலுக்காக தெரிவிக்க வேண்டும்.

2C. குழந்தை நட்சத்திரமாக பணி புரிதல்.- (1) பிரிவு 3-இன் விதித்துறைகளுக்குட்பட்டு ஒரு குழந்தை, பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு குழந்தை நட்சத்திரமாகப் பணிபுரிய அனுமதிக்கப்படலாம். அவையாவன:

(a) குழந்தை ஒரு நாளில் 5 மணி நேரத்திற்கு மேற்பட்டும், ஓய்வின்றி 3 மணி நேரத்திற்கு மேற்பட்டும் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது;

(b) யாதொரு ஒலி - ஒளி ஊடகத்தயாரிப்பு அல்லது யாதொரு வணிக ரீதியிலான நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர், அந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்ற மாவட்டத்தின் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே குழந்தையை பங்கேற்க செய்ய வேண்டும்; அவர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் படிவம் 3-இல் உறுதிமொழி ஒன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்ற குழந்தை நட்சத்திரங்களின் பட்டியல், நேர்விற்கேற்ப பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல், குழந்தையின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும் நிகழ்ச்சி தயாரிப்பாளரின் பெயர் ஆகிய விவரங்களை மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் அளித்து படப்பிடிப்பில் யாதொரு குழந்தை ஈடுபடுத்தப்படுமாயின், படப்பிடிப்பின்போது அத்தகைய குழந்தை துன்புறுத்தப்படவில்லை, புறக்கணிக்கப்படவில்லை அல்லது தவறாகப்பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன எனக்குறிப்பிடுகின்ற பொறுப்புத்துறப்புடன் அவருடைய திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன என்பது உறுதி செய்யப்பட வேண்டும்;

(c) பகுதி (b)-இல் குறிப்பிடப்பட்ட உறுதிமொழி, ஆறு மாதங்களுக்கு செல்திறன் உடையதாக இருக்கும். பின்வருவனவற்றை சேர்க்கின்ற அத்தகைய செயல்நோக்கத்திற்காக, அவ்வப்போது மாநில அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஒத்திசைவாக, கல்வி, பாதுகாப்பு மற்றும் குழந்தை துன்புறுத்தல் பற்றி தெரிவித்தல் ஆகியவற்றுக்கான வழிவகைகளைத் தெளிவாகத்தெரிவிக்கும். அவையாவன-

(i) குழந்தையின் உடல் மற்றும் மன நலன் குறித்த வசதிகளுக்கு வகை செய்தல்,

(ii) குழந்தையின் குறித்த காலத்திற்கான ஊட்டச்சத்து உணவு

(iii) அன்றாடத்தேவைகளுக்கான போதுமான வழிவகைகளுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் தூய்மையான புகலிடம்;

மற்றும்

(iv) குழந்தையின் கல்வி, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களுக்கெதிரான அவர்களது உரிமை உட்பட, குழந்தையின் பாதுகாப்பிற்காக அப்போதைக்கு செயலிலுள்ள அனைத்து சட்டங்களுக்கும் இணங்கி நடத்தல்;

(d) குழந்தை, பள்ளியில் அவன் பாடங்கள் விட்டுப்போகாமலிருப்பதை உறுதி செய்வதற்கு குழந்தையின் கல்விக்காக உரிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல். குழந்தை இருபத்தேழு நாட்களுக்கு மேற்பட்டு தொடர்ச்சியாக பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது.

(e) குழந்தை மீதான பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சிறப்பான அக்கறை பற்றி உறுதி செய்வதற்கு, தயாரிப்பு அல்லது நிகழ்ச்சியில் உயரளவாக ஐந்து குழந்தைகளுக்கு ஒரு நபரை நியமித்தல்,

(f) நிகழ்ச்சி தயாரிப்பில் அல்லது நிகழ்ச்சியில் குழந்தையால் ஈட்டப்பட்ட வருமானத்தில் இருபது சதவீதமேனும், குழந்தை பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் குறித்தகால வைப்பீட்டுக்கணக்கில் நேரடியாக வைப்பீடு செய்யப்பட்டு குழந்தை உரிய வயதடைந்த பின்னர் அளிக்கப்படலாம்; மற்றும்

iii-1a-(19) (T Sup)—1a4 (g) குழந்தையின் விருப்பத்திற்கும் ஒப்புதலுக்கும் மாறாக முறைப்படியல்லாத கேளிக்கை நிகழ்ச்சி உள்ளிட்ட யாதொரு ஒலி- ஒளி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யக்கூடாது.

(2) மூன்றாம் பிரிவைச்சேர்ந்த 2 உட்பிரிவின் விளக்கத்தின் பகுதி (c) செயல்நோக்கங்களுக்காகஅதில் இடம்பெற்றுள்ள" அத்தகைய யாதொரு நிகழ்ச்சி" என்ற சொற்றொடர் பின்வருமாறு பொருள்படும். அவையாவன.-

(i) விளையாட்டுப்போட்டியில் அல்லது நிகழ்ச்சியில் அல்லது அத்தகைய விளையாட்டுப் போட்டிக்கான அல்லது நிகழ்ச்சிக்கான பயிற்சியில் குழந்தை தானே பங்கேற்கின்ற யாதொரு நிகழ்ச்சி;

(ii) திரைப்படம் மற்றும் உண்மை நிகழ்ச்சிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தொலைக்காட்சியில் காட்டப்படும் குறும்பட நிகழ்ச்சிகள், வானொலி அல்லது ஏனைய யாதொரு ஊடக நிகழ்ச்சி;

(iii) நாடகத் தொடர்கள்;

(iv) நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்றல்; மற்றும்

(v) பண ஆதாயத்திற்காக தெரு நிகழ்ச்சி நீங்கலாக தனி நபர் இனங்களில் மாநில அரசு அனுமதிக்கிற ஏனைய யாதொரு கலை நிகழ்ச்சிகள்

2D. பணி நேரம்.-— 7ஆம் பிரிவின் விதித்துறைகளுக்குட்பட்டு, ஒரு நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினரின் பணி நேரங்களை முறைப்படுத்துகின்ற அப்போதைக்கு செயலிலுள்ள சட்டத்தின் கீழ் அனுமதிக்கத்தக்கவாறான அத்தகைய பணி நேரங்களைக்காட்டிலும் மிகையான அளவிற்கு வளரிளம்பருவத்தினர் நிறுவனத்தில் பணி புரியக்கூடாது அல்லது பணி புரிய அனுமதிக்கப்படக்கூடாது.

(2E) குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினர் தொழிலாளர் மறுவாழ்வு நிதியிலிருந்து குழந்தைக்கு அல்லது வளரிளம்பருவத்தினருக்கு தொகை வழங்கல்: 14B-ஆம் பிரிவைச்சேர்ந்த 3 உட்பிரிவின் கீழ், நேர்விற்கேற்ப, நிதியில் வரவு வைக்கப்பட்ட, வைப்பீடு செய்யப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் அதன் மீதான சேர்ந்து வந்த வட்டித்தொகை பின்வரும் வகையில் யாருடைய பெயரில் அத்தொகை வரவு வைக்கப்பட்டதோ அந்தக்குழந்தைக்கு அல்லது வளரிளம் பருவத்தினருக்கு வழங்கப்பட வேண்டும்; அவையாவன.-

(i) அதிகார வரம்பிற்குட்பட்ட ஆய்வாளர் அல்லது ஒருங்கிணைப்பு அலுவலர், அவருடைய கண்காணிப்பின் கீழ், அத்தகைய குழந்தை அல்லது வளரிளம்பருவத்தினருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டதை உறுதி செய்வதுடன் 14Bஆம் பிரிவைச்சேர்ந்த (3) உட்பிரிவின் கீழ் தொகையை முதலீடு செய்வதற்கு, நேர்விற்கேற்ப தொகை வைப்பீடு செய்யப்படும் வங்கிக்கு அல்லது பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

(ii) குழந்தையின் அல்லது வளரிளம் பருவத்தினரின் பேரிலுள்ள நிதியின் விழுக்காட்டின் வீதப்படியான தொகையின் மீது சேர்ந்து வந்த வட்டித்தொகையானது, ஆய்வாளருக்கு தகவல் அளிப்பதன் பேரில், தொகையை முதலீடு செய்வதற்கு, நேர்விற்கேற்ப வங்கியில் அல்லது பொறுப்பு வகிக்கும் அலுவலரால் குழந்தையின் அல்லது வளரிளம்பருவத்தினரின் கணக்கிற்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

(iii) சம்பந்தப்பட்ட குழந்தை அல்லது வளரிளம்பருவத்தினர் பதினெட்டு வயது நிறைவடைந்தவுடன், இயன்றவரையில் உடனடியாக அல்லது மூன்று மாத காலத்திற்குள், குழந்தையின் பேரில் வரவு வைக்கப்பட்ட, வைப்பீடு செய்யப்பட்ட அல்லது முதலீடு செய்யப்பட்ட வட்டித்தொகையுடன் கூடிய வங்கியிலுள்ள அல்லது 14Bஆம் பிரிவின் (3) உட்பிரிவின் கீழ் முதலீடு செய்யப்பட்ட மொத்தத்தொகையானது நேர்விற்கேற்ப குழந்தையின் அல்லது வளரிளம்பருவத்தினரின் மேற்சொன்ன வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட வேண்டும், மற்றும்

(iv) ஆய்வாளர் சம்பந்தப்பட்ட குழந்தை அல்லது வளரிளம்பருவத்தினரை அடையாளம் கண்டறிவதற்கு போதிய வகையில், அவர்களைப்பற்றிய விவரங்களுடன் பகுதி (ii) மற்றும் பகுதி (iii)-இன் கீழ் மாற்றப்பட்ட தொகை குறித்த அறிக்கை ஒன்றை தயார் செய்து, அறிக்கையின் நகல் ஒன்றை, தகவலுக்காக ஆண்டுதோறும் மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும்.

(2) இச்சட்டத்தின் விதித்துறைகளை மீறியதற்காகக் குழந்தை அல்லது வளரிளம் பருவத்தினருக்குச்சாதகமான நீதிமன்ற ஆணை அல்லது தீர்ப்பிற்கிணங்க, குற்றங்களுக்கான இழப்பீடு அல்லது அபராதம் என்ற வகையில் ஏதேனும் ஒரு தொகை இழப்பீடாகப் பெறப்படும்போது அத்தொகையை இந்த ஆணை அல்லது தீர்ப்பிற்கிணங்க வைப்பீடு செய்யப்பட்டுச் செலவிடப்பட வேண்டும்.

4. விதி (3) க்கு பதிலாகப் பின்வரும் விதிகள் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.அதாவது:-

"3. வயதுச் சான்றிதழ் - (1) ஏதேனும் ஒரு பணியில் அல்லது தொழிலில் தடை செய்யப்பட்ட யாதொரு வளரிளம்பருவத்தினர் பணிபுரிந்து வருகிறார் என ஆய்வாளருக்குத் தெரியவரும் போது மேற்சொன்ன சட்டத்தின் 3A பிரிவின் கீழ், அவர் அந்த வளரிளம்பருவத்தினரின் வேலை அளிப்பவர் உரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து வயது சான்றிதழைப் பெற்று ஆய்வாளருக்கு அளிக்க வேண்டும்.

(2) உரிய மருத்துவ அதிகாரி, துணைவிதி (1) இன் கீழ் வயதுச்சான்றிதழ் வழங்குவதற்காக வளரிளம்பருவத்தினரைப் பரிசோதிக்கும் போது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

(i) வளரிளம் பருவத்தினரின் ஆதார் அட்டை. அது இல்லாத நேர்வில் பின்வருவனவற்றைக் கருதிப் பார்க்க வேண்டும்.

(ii) கிடைக்கப்பெறுமாயின் பள்ளியிலிருந்து அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து பெறப்படும் பிறப்புச் சான்றிதழ் அல்லது வளரிளம்பருவத்தினர் சம்பந்தப்பட்ட தேர்வு வாரியத்திடமிருந்து அதற்குச் சமமான சான்றிதழ் மற்றும் இவை இல்லாத நேர்வில்,5 (iii) மாநகராட்சி அல்லது நகராட்சி அல்லது ஊராட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட வளரிளம் பருவத்தினரின் பிறப்புச் சான்றிதழ் (i) முதல் (iii) வரையிலான பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு வழிமுறைகள் இல்லாத நேர்வில் மட்டும், அந்த மருத்துவ அதிகாரி எலும்பு இணைப்பு அமைப்பு முறை பரிசோதனை மூலம் அல்லது வயதை உறுதிப்படுத்துவதற்கான ஏனைய ஏதேனுமொரு அண்மை மருத்துவ தொழில்நுட்ப முறை மூலம் வயதை உறுதி செய்ய வேண்டும்.

(3) இது தொடர்பாக, மாநில அரசால் குறிப்பிடப்பட்டவாறு நேர்விற்கேற்ப மாவட்ட ஆட்சியர் பதவித்தரத்தில் உள்ள உரிய அதிகாரியின் ஆணையின் பேரில் எலும்பு இணைப்பு அமைப்பு முறை பரிசோதனை அல்லது வயதை உறுதிப்படுத்துவதற்கான ஏனைய ஏதேனுமொரு மருத்துவத் தொழில்நுட்ப முறை மூலம் பரிசோதனை

மேற்கொள்வதுடன் அவ்வாறு வயதை உறுதி செய்வது அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

(4) துணைவிதி (1)-இல் குறிப்பிடப்பட்டுள்ள வயது சான்றிதழ் படிவம்-1-இல் வழங்க வேண்டும்.

(5) வயது சான்றிதழ் வழங்குவதற்காக மருத்துவ அதிகாரிகள் வழங்க வேண்டிய கட்டணங்கள், நேர்விற்கேற்ப அவர்களுடைய மருத்துவ வாரியத்திற்கு உள்ளதைப் போன்றே, மாநில அரசால் குறிப்பிடப்பட்டவாறான அதே முறையில் வழங்க வேண்டும்.

(6) இந்த விதியின் கீழ், வயதை உறுதிப்படுத்த வேண்டிய அந்த வளரிளம் பருவத்தினருக்கு வேலை அளிப்பவரால் மருத்துவ அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டிய கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

விளக்கம்:— இவ்விதியின் நோக்கங்களுக்காக –

(i) "மருத்துவ அதிகாரி" என்பது மாவட்ட உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பதவித்தரத்திற்குக் குறையாத அரசு மருத்துவரை அல்லது தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகங்கள் அல்லது மருத்துவமனைகளில் பணிபுரியும் முழுநேர மருத்துவர் தகுதிக்கு நிகரான அரசு மருத்துவரைக் குறிக்கும்.

5. விதி 3க்குப்பின்னர் பின்வரும் விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"3A. புகார் அளிக்கக்கூடிய நபர்கள்: பள்ளிக்குழந்தைகள் உட்பட, பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நிருவாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் குற்றப்பிரிவு விதிகளின் கீழ் புகார் செய்யலாம். விதிகளுக்கு மாறாக மாணவர்கள் யாராவது அவர்கள் பள்ளிகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டால், புகார் பதிவு செய்யுமாறு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு, மாநில செயல் திட்டக்குழுவின் செயல்படி, ஊராட்சி அல்லது நகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்தலாம்.

3B. குற்றங்களை இணக்கமாய்த் தீர்த்துக் கொள்ளும் முறை.— (1)குற்றம் சாட்டப்பட்ட நபர்-

(i) 14ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவின் கீழ் முதல் முறையாக அவர் குற்றம் புரிதல் அல்லது

(ii) பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருக்கின்ற நபர், மேற்சொன்ன சட்டத்தின்கீழ் குற்றச் செயலைச் செய்யும் போது, 14Dஆம் பிரிவைச் சேர்ந்த (1)உட் பிரிவின் கீழ், சமரசத்திற்குரிய குற்றத்திற்கான அதிகாரங்களைக் கொண்டுள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு ஆய்வாளர் மூலமாக விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யலாம்.

(2)துணை விதி (1) இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் குறித்துச் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணை செய்த பின்னர், மாவட்ட மாஜிஸ்திரேட் அத்தகைய விண்ணப்பத்தைத் தீர்வு செய்ய வேண்டும் அல்லது விண்ணப்பம் அனுமதிக்கப்படுமாயின், பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு, இணக்கத்தீர்வுச் சான்றிதழை வழங்க வேண்டும்.

(i) அத்தகைய சான்றிதழில் குறிப்பிட்ட காலத்திற்குள் அத்தகைய குற்றத்திற்காக வழங்க வேண்டிய உயரளவு அபராதத் தொகையில் ஐம்பது விழுக்காடு தொகையை வழங்குதல்.

(ii) குற்றம் சாட்டப்பட்ட நபர் மேற்சொன்ன பகுதியில் குறிப்பிட்ட கால அளவுக்குள் கூட்டுத் தொகையை வழங்குவதற்குத் தவறுவாராயின், மேற்சொன்ன பகுதியில் குறிப்பிட்ட கால அளவிற்கு மிகாத கால அளவில், மாவட்ட மாஜிஸ்திரேட்டால் குறிப்பிடப்படுகிறவாறாக மேற்கொண்டும் வழங்கப்படும் அந்தக் கால அளவிற்குள்ளாகத் தாமதமாக, பகுதி (i) இன் கீழ்க் குறிப்பிடப்பட்ட கூட்டுத்தொகையுடன் சேர்த்து (Compounding amount) அத்தகைய குற்றத்திற்காக வழங்கப்படும் உயரளவு அபராதத் தொகையில் இருபத்தைந்து விழுக்காடு கூடுதலாக வழங்க வேண்டும்.

(3) கூட்டுத்தொகை குற்றம் சாட்டப்பட்ட நபரால் மாநில அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும்.

(4) குற்றம் சாட்டப்பட்ட நபர், துணைவிதி (2)இன் கீழ்க் கூட்டுத்தொகையைச் செலுத்தத்தவறுவாராயின், பின்னர் 14D பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவில் குறிப்பிடப்பட்டவாரான நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

(3C) மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கடமைகள் - மாவட்ட மாஜிஸ்திரேட் –

(i) அவசியம் எனக் கருதும் நேர்வில், அவருடைய அத்தகைய சார்நிலை அலுவலர்களைக் குறிப்பிட்டு, கண்காணிப்பு / ஒருங்கிணைப்பு அதிகாரி அழைக்கப்பட்டு, 17-A பிரிவின் கீழ் மாநில அரசால் மாவட்ட மாஜிஸ்திரேட்டிற்கு வரையறுத்து அளிக்கப்பட்டுள்ள அனைத்து அல்லது யாதொரு கடமையைச் செயல்படுத்துவதற்கான அனைத்து அல்லது ஏதேனும் ஒரு அதிகாரத்தை அளிக்க வேண்டும்.

(ii) அவர் பொருத்தமானது எனக் கருதும் நேர்வில் சார்நிலை அதிகாரியாக அவருடைய உள்ளூர் அதிகார எல்லைக்குள் அவரால் அதிகாரம் அளிக்கப்பட வேண்டிய மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய ஒருங்கிணைப்பு/கண்காணிப்பு அதிகாரியிடம் அத்தகைய அதிகாரங்களையும் கடமைகளையும் ஒப்படைக்க வேண்டும்.

6

(iii) ஒரு மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டிய சிறப்பு பணிப்பிரிவின் தலைவராகப் பின்வருபவர்கள் பொறுப்பேற்கலாம்.

(a) அவரது உள்ளூர் அதிகார எல்லையின் நோக்கங்களுக்காக 17 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்;

(b) அவரது உள்ளூர் அதிகார எல்லையின் நோக்கங்களுக்காகக் காவல்துறை கண்காணிப்பாளர்;

(c) அவரது உள்ளூர் அதிகார எல்லையின் நோக்கங்களுக்காக மாவட்டக் கூடுதல் மாஜிஸ்திரேட்;

(d) உள்ளூர் அதிகார எல்லையின் நோக்கங்களுக்காகப் பகுதி (i) இன் கீழ்க் குறிப்பிடப்பட்ட மாவட்டக் கண்காணிப்பு/ ஒருங்கிணைப்பு அதிகாரி

(e) இரண்டாண்டுகளுக்குச் சுழற்சி அடிப்படையில், மாவட்டத்தில் பணிபுரிந்த குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு தொடர்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகள்

(f) மாவட்ட நீதிபதியால் நியமனம் செய்யப்படவுள்ள மாவட்டச் சட்டச் சேவைகள் அதிகாரியின் பிரதிநிதி (g) மாவட்ட ஆள்கடத்தல் தடுப்புப்பிரிவின் உறுப்பினர் ஒருவர்

(h) மாவட்டக் குழந்தை நலக்குழுத்தலைவர்

(i) மாவட்டக் குழந்தைப்பாதுகாப்பு அதிகாரி

(j) மாவட்டக் கல்வி அதிகாரி

(k) மாவட்ட நீதிபதியால் நியமனம் செய்யப்பட்ட ஏனைய யாதொரு நபர்

(l) தலைமை மருத்துவ அதிகாரி

(m) பகுதி (i)-இல் குறிப்பிடப்பட்ட மற்றும் தலைவரால் பரிந்துரை செய்யப்பட்ட ஏதேனுமொரு கண்காணிப்பு அதிகாரி சிறப்புப் பணிப்பிரிவின் செயலாளராக நியமனம் செய்யப்பட வேண்டும்.

(2) துணை விதி (1) ஐச்சேர்ந்த (iii) பகுதியில் குறிப்பிடப்பட்ட சிறப்புப்பணிப்பிரிவானது, குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது கூட்டப்பட வேண்டும். மேலும், மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக இருக்கக்கூடிய கால அளவைக்கணக்கில் கொள்ளுதல், தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்திற்கிணங்க, திடீர்ச் சோதனைக்கான காரணம், திட்டத்தின் கமுக்கத்தன்மை, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, இடைக்கால நிவாரணம், அவ்வப்போது மாநில அரசால் வெளியிடப்படுகின்ற மீட்பு மற்றும் திருப்பியனுப்புவதற்கான வழிகாட்டிக் குறிப்புகளுக்கிணங்குதல் ஆகியவை குறித்து விரிவான திட்ட நடவடிக்கை உருவாக்க வேண்டும். மாநில அரசின் அத்தகைய நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வலைதளத்தில் சிறப்பு பணிப்பிரிவானது, அத்தகைய கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகளைச் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

(3) துணை விதி (1) இல் குறிப்பிடப்பட்ட பணிகளுடன் சேர்த்து மாவட்ட நீதிபதி மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளுக்கு முரணாகப் பணிபுரிந்த குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டியுள்ளது என்பதைக் கண்காணிப்பு/ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மூலமாக உறுதி செய்ய வேண்டும்.

(a) பின்வரும் விதித்துறைகளுக்கிணங்க -

(i) குழந்தைத்தொழிலாளர் முறையை நீக்குதல், வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடைசெய்தல் மற்றும் முறைப்படுத்துதலுக்கான மாநில செயல் திட்டம் ;

(ii) 2015—ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் (மத்தியச்சட்டம் 2/2016) மற்றும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகள்;

(iii) 1976—ஆம் ஆண்டு பிணைத் தொழிலாளர் முறை (நீக்குதல்) சட்டம் (மத்தியச்சட்டம் 19/1976);

(iv) 2016—ஆம் ஆண்டு பிணைத்தொழிலாளர் மறுவாழ்விற்கான மத்தியப் பிரிவுத் திட்டம்;

(v) யாதொரு தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டம்;

(vi) அத்தகைய குழந்தை அல்லது வளரிளம் பருவத்தினர் மறுவாழ்விற்கான அப்போதைக்குச் செயலில் உள்ள ஏனைய யாதொரு சட்டம் அல்லது திட்டம்; பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு-

(i) உரிய அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தின் ஆணைகள் ஏதேனுமிருப்பின்;

(ii) மாநில அரசால் இது குறித்த அவ்வப்போதைக்கான மீட்பு மற்றும் திருப்பியனுப்புதலுக்கான வழிகாட்டி நெறிமுறைகள்.

3D.ஆய்வாளர்களின் கடமைகள் - இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கிணங்கப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக 17—ஆம் பிரிவின் கீழ் மாநில அரசால் நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆய்வாளர் பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும்-

(i) அவ்வப்போது மாநில அரசு வெளியிடும் ஆய்வு நெறிமுறைகளுக்கிணங்கச் செயல்பட வேண்டும்.

(ii) இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கிணங்கப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அவ்வப்போது மாநில அரசு வெளியிடும் நெறிமுறைகளுக்கிணங்கச் செயல்படுதல் மற்றும்;

7

(iii) இச்சட்டத்தின் விதித்துறைகளுக்கிணங்கப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக அவரால் மேற்கொள்ளப்படும் ஆய்வு, அத்தகைய நோக்கங்களுக்காக அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைகளைக் காலாண்டுக்கு ஒருமுறை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும்.

3(E):குறித்த காலத்திற்கொருமுறை ஆய்வும் கண்காணிப்பும்: 17 ஆம் பிரிவைச் சேர்ந்த விதித்துறைகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறை ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். அவற்றில் பின்வருவனவும் சேர்த்துக் கொள்ளப்படலாம்:-

(i) ஆபத்தை விளைவிக்கக் கூடிய தொழில்கள் அல்லது செயல்முறைகளில் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் வேலை செய்ய தடைசெய்யப்பட்டுள்ள இடங்களில் ஆய்வாளரால் அதிக எண்ணிக்கையில் குறித்த காலத்திற்கொருமுறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(ii) பகுதி (i)இன் கீழ் ஆய்வின் பொருண்மை தொடர்பாக ஆய்வாளரால் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அதன் பின்னர் அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்கள் குறித்தும் அவர் மாநில அரசுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை அனுப்ப வேண்டும்.

(iii) மின்னணு/கணினி முறையில் அல்லது மற்ற ஏனைய முறையில் பதிவுகளைப் பராமரிக்கும் போது பின்வரும் விவரங்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

(a) இச்சட்டத்திற்கு எதிராக, குடும்பம் அல்லது குடும்ப நிறுவனத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் உட்பட, விதிமுறைகளுக்கு முரணாக வேலை செய்யும் குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத்தினர்.

(b) மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையும் விவரங்களும்

(c) விதிக்கப்பட்ட மற்றும் வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை குறித்த விவரங்கள், மற்றும்

(d) இச்சட்டத்தின்கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத்தினருக்கு அளிக்கப்பட்ட மறு வாழ்வு குறித்த சேவைகள் 6. விதி 4 இல்,

(i) துணைவிதி (1)இல் "குழந்தைகள்" என்ற வார்த்தைக்குப் பதிலாக "வளரிளம்பருவத்தினர்" என்ற வார்த்தை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;

(ii) துணைவிதி (2)க்குப் பதிலாகப் பின்வரும் துணைவிதி அமைத்துக் கொள்ளப்படவேண்டும். அதாவது - "(2) படிவம் 2-இன் நெடும்பத்தி (4)இல் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த நாளானது 3 ஆம் விதியை சேர்ந்த (1) துணை விதியில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுச் சான்றிதழில் உள்ளவாராக இருக்க வேண்டும்.

7. படிவம் 2இல்,

(i) இத்தலைப்பில் உள்ள "குழந்தை தொழிலாளர்கள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "வளரிளம்பருவத்தொழிலாளர்கள்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்.

(ii) நெடும்பத்தி (2)இல் உள்ள தலைப்பில் "குழந்தையின் பெயர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக " வளரிளம்பருவத்தினர் பெயர்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்.

8. படிவம் 2-க்குப் பின்னர், பின்வரும் படிவம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:-

"படிவம் 3

[2C(1) (b)-ஆம் விதியைக்காண்க]

----------------------ஒலி-ஒளி ஊடகத் தயாரிப்பு அல்லது அமைப்பாளரின்-----------

-----------------------------தயாரிப்பாளராகிய நான், பின்வரும் குழந்தை / குழந்தைகள் ----------வணிக முறையிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக அதாவது,----------

-------------------------------------------நிகழ்ச்சியில் (நிகழ்ச்சியைக் குறிப்பிடவும்).

தொ.எண் குழந்தை/ குழந்தைகளின் பெயர் பெற்றோர்/ பாதுகாவலரின் பெயர் முகவரி

மேற்குறிப்பிட்ட குழந்தை ------------ (நிகழ்ச்சியைக் குறிப்பிடவும்) நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற மேற்குறிப்பிட்ட குழந்தை /குழந்தைகள் 1986ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் சட்டத்தின் (மத்தியச்சட்டம் 61/1986) எந்த ஒரு விதித்துறை, மற்றும் தமிழ்நாடு 2018 ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம்பருவத் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த8 விதிகள் மீறப்பட மாட்டாது என்றும், குழந்தை/குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மனநலன், ஏனைய தேவைகள் தொடர்பாக முழு அளவில் கவனம் செலுத்தப்படும் என்றும், அதனால் அவர்/ அவர்கள் இன்னல்கள் எதையும் அனுபவிக்க மாட்டார்கள் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன். நிகழ்ச்சியின் போது குழந்தைகளின் கல்வி உரிமை உட்பட அவர்களது பாதுகாப்பு தொடர்பாக அந்நேரத்தில் செயலிலுள்ள /நடைமுறையிலுள்ள பொருந்தக் கூடிய அனைத்துச்சட்டங்கள் மற்றும் பாலின ரீதியிலான குற்றங்களுக்கெதிராக உள்ள சட்டப்படிக்கான விதித்துறைகளுக்கிணங்க நடந்து கொள்வேன் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்.

நாள்............................................ தயாரிப்பாளரின் பெயர் மற்றும் கையொப்பம்".

சுனில் பாலிவால்,

அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 08 May 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-05-08.Ordinary_19_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-05-08.Ordinary_19_Part-III_Section-1a-T-Sup.