Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 22 May 2019

Type
Ordinary
Gazette no.
21
Part
Part IV
Notifications
Ordinance No. 1 of 2019.
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2019

[விலை : ரூ. 10.40 காசு[விலை : ரூ. 10.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 21]

சென்னை, புதன்கிழமை, மே 22, 2019 வைகாசி 8, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 1/2019சட்ட எண் 1/2019

1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம் 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்டம் செய்வதற்கானதொரு சட்டம்

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (திருத்தம்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம் (2) இது, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம் 12-D எனும் புதிய

2. 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின் 12-C எனும்

XX / 1951 பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:-

பிரிவைப் புகுத்துதல்

"12-D முன்னாள் உறுப்பினர்களுக்காக இருப்பூர்தி கட்டணம்.-

வகுத்துரைக்கலாகிற அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு சட்டமன்றப் பேரவை அல்லது சட்டமன்ற மேலவையின் உறுப்பினராக இருந்திருக்கின்ற நபர் ஒவ்வொருவரும் சுதந்திர நாளை மற்றும் குடியரசு நாளை கொண்டாடுவதற்காக கலந்துகொள்வதற்கு மற்றும் திரும்புவதற்கான பயணத்திற்காக அவருடைய வழக்கமான இருப்பிடத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு இரண்டு அடுக்கு குளிர்வசதி செய்யப்பட்ட படுக்கை வசதிக்கான இருப்பூர்தி கட்டணத்திற்கு தகுதி உடையவர் ஆவார்:

ஆனால் இந்தப்பிரிவின்படி மைய அரசால் அல்லது பிற அதிகார அமைப்பால் வழங்கப்பட்டுள்ள இலவச இருப்பூர்தி அனுமதி சீட்டை வைத்துள்ள முன்னாள் சட்டமன்ற பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கு அல்லது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருப்பவருக்கு இருப்பூர்தி கட்டணம் வழங்குதல் கூடாது".

தமிழ் நாடு 3. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் (இரண்டாம் திருத்தம்) நீக்கறவு மற்றும்

அவசரச்சட்டமானது ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

காப்புரைகள்

அவசர சட்டம் 1/2018

[ 1 ]

DTP-IV-2-(21) (T Sup)—12 தமிழ் நாடு

சட்டம் XX /1951

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும் கூறப்பட்ட அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு 1951 ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதையும் இந்தச்சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு செய்யப்பட்டதாகவோ அல்லது எடுக்கப்பட்டதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம்,

சு.ச. பூவலிங்கம்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

3

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 2/2019சட்ட எண் 2/2019

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச்

மற்றும் தொடக்கம்.

சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் உள்ள தமிழ்நாடு சட்டம் 27/1989.

வரம்புரையில் "ஏழு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்ற சொற்றொடர் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு

நீக்கறவு மற்றும்

காப்புரை.

3. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் அவசரச் சட்டம் 3/2018.

(ஒழுங்கு முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்த அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டம்

27/1989.

(2) அத்தகைய நீக்கம் எவ்வாறு இருந்த போதிலும், மேற்சொன்ன அவசர சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம்,

சு.ச. பூவலிங்கம்,

அரசுச் செயலாளர்,

சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

4 5

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 3/2019சட்ட எண் 3/2019

2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம்.திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) (i) 3 மற்றும் 30 ஆகிய பிரிவுகள் 2017 ஜூலை 1-ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்;

(ii) இந்தச் சட்டத்தின் பிற பிரிவுகள், மாநில அரசு, அதிகாரமுறை அரசிதழில் அறிவிக்கை வாயிலாக குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்:

வரம்புரை:- ஆனால், இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகளுக்காக வெவ்வேறு தேதிகள் குறிக்கப்படலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கம் குறித்து, அத்தகைய வகைமுறை எதிலுமுள்ள சுட்டுகை எதுவும் அத்தகைய வகைமுறை நடைமுறைக்கு வருவது குறித்த சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் என்று குறிப்பிடப்படுவதான) 2017-ஆம் தமிழ்நாடு சட்டம் 19/2017.

2-ஆம் பிரிவின் திருத்தம்.

ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 2-ஆம் பிரிவில்,—

(1) (4)-ஆம் கூறில், "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் 171-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (16)-ஆம் கூறில், "மைய ஆயத்தீர்வை மற்றும் சுங்க வாரியம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மைய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(3) (17)-ஆம் கூறில், (h) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(h) குதிரைப் பந்தய குழாமிலுள்ள பந்தய விவரங்களைப் பதிவு செய்யும் கருவி அல்லது உரிமம் பெற்ற பணயக் கணக்கர் மூலமான நடவடிக்கைகள் அல்லது அத்தகைய குழாமிலுள்ள உரிமம் பெற்ற பணயக்கணக்கர் நடவடிக்கைகள்; மற்றும்";

(4) விளக்கம் உள்ளடங்கலாக (18)-ஆம் கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(5) (35)-ஆம் கூறில், "(c) கூறு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "(b) கூறு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(6) (69)-ஆம் கூறில், (f) உட்கூறில், "371-ஆம் உறுப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "மற்றும் 371 J-ஆம் உறுப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

6

(7) (102)-ஆம் கூறில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம்.— ஐயங்களை நீக்குவதற்காக, "சேவைகள்" என்ற சொற்றொடர், "விளக்கம். காப்புறுதிகளிலான நடவடிக்கைகளை எளிதாக்குதல் அல்லது ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை உள்ளடங்கும் என்று இதன் மூலம் தெளிவாக்கப்படுகிறது.".

7-ஆம் பிரிவின்

3. முதன்மைச் சட்டத்தின் 7-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) (b) கூறில், முடிவில் "மற்றும்" என்ற சொல் சேர்க்கப்படுதல் வேண்டும்;

(b) (c) கூறில், முடிவில் "மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(c) (d) கூறு விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவுக்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(1A) ஒரு சில செயல்கள் அல்லது நடவடிக்கைகள், (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க வழங்குதலாக அமைத்துருவாக்கப்படுகிறவிடத்து, அவை, II- ஆம் இணைப்புப் பட்டியலில் சுட்டப்பட்டவாறான ஒன்று சரக்குகளின் வழங்குதல் அல்லது சேவைகளின் வழங்குதலாக பாவிக்கப்படுதல் வேண்டும்.";

(3) (3)-ஆம் உட்பிரிவில், "(1) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "(1), (1A) மற்றும் (2)-ஆம் உட்பிரிவுகளின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

4. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, பின்வரும் 9-ஆம் பிரிவின் திருத்தம்.

உட்பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"(4) அரசு, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, பதிவு பெறாத வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் குறித்துரைக்கப்பட்ட வழங்குதல்கள் பொறுத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பெற்றுக் கொள்பவராக எதிரிடைக் கட்டண அடிப்படையில் வரி செலுத்த வேண்டிய பதிவு பெற்ற நபர்களின் வகையை குறித்துரைத்தல் வேண்டும், மற்றும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அனைத்தும், அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குதல் தொடர்பாக வரி செலுத்துவதற்கு கடப்பாடு உள்ள நபராக அவர் இருப்பாரானால், அத்தகைய பெற்றுக்கொள்பவருக்கும் பொருந்தும்.".

10-ஆம் பிரிவின்

5. முதன்மைச் சட்டத்தின் 10-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) "அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப் படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட தொகையை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அவரால் செலுத்தத்தக்க வரிக்குப் பதிலாக, குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வீதத்தில் கணக்கிடப்பட்ட வரித்தொகையை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், "மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ரூபாய்க்கு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மன்றத்தினால் பரிந்துரைக்கப்படலாகும் ஒரு கோடி ஐம்பது லட்சம் ரூபாய்க்கு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) வரம்புரைக்குப் பின், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:- ஆனால், (a) கூறின்படி அல்லது (b) கூறின்படி அல்லது (c) கூறின்படி வரி செலுத்துவதற்கு தெரிவு செய்திருக்கிற நபர் ஒருவர், முந்தைய நிதியாண்டில் மாநிலத்திலுள்ள விற்பனை அளவின் பத்து சதவீதம் அல்லது ஐந்து லட்ச ரூபாய், இதில் எது அதிகமோ, அதற்கு மேற்படாத மதிப்புடைய, (II-ஆம் இணைப்புப் பட்டியலின் 6-ஆம் பத்தியின் (b) கூறில் சுட்டப்பட்டவை அல்லாத பிற) சேவைகளை வழங்கலாம்.";

7

(2) (2)-ஆம் உட்பிரிவில், (a) கூறுக்குப் பதிலாக, பின்வரும் கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(a) (1)-ஆம் உட்பிரிவில் வகைசெய்யப்பட்டவாறல்லாமல், அவர், சேவைகள் வழங்குதலில் ஈடுபடுதல் ஆகாது;".

12-ஆம் பிரிவின் 6. முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (a) கூறில், "(1)-ஆம்

திருத்தம்.

உட்பிரிவின்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

13-ஆம் பிரிவின் 7. முதன்மைச் சட்டத்தின் 13-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில்

திருத்தம்.

வரும் "(2)-ஆம் உட்பிரிவின்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

8. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில்,— 16-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (b) கூறில், விளக்கத்திற்குப் பதிலாக, பின்வரும் விளக்கம் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம் "விளக்கம்.— இந்தக் கூறின் நோக்கங்களுக்காக—

(i) ஒன்று சரக்குகளின் உரிமை மூல ஆவணத்தின் உரிமை மாற்றம் வாயிலாக அல்லது பிறவாறு, சரக்குகளின் நகர்தலுக்கு முன்பு அல்லது நகர்தலின்போது, முகவராக செயற்பட்டாலும் அல்லது பிறவாறாக இருப்பினும், அறிவுறுத்தலின் பேரில் வழங்குநரால் அத்தகைய பதிவு பெற்ற நபர் பெறுநருக்கு அல்லது பிற நபர் எவருக்கும் சரக்குகள் ஒப்படைக்கப்படுமிடத்து;

(ii) அத்தகைய பதிவு பெற்ற நபரின் அறிவுறுத்தலின் பேரிலும் அவர் பொருட்டும் நபர் எவருக்கும் வழங்குநரால் சேவைகள் அளிக்கப்படுகிறவிடத்து,

பதிவு பெற்ற நபர் சரக்குகளை அல்லது, நேர்வுக்கேற்ப, சேவைகளைப் பெற்றுள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.";

(2) (c) கூறில், "41-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "41-ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

9. முதன்மைச் சட்டத்தின் 17-ஆம் பிரிவில்,— 17-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (3)-ஆம் உட்பிரிவில், பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம்.— இந்த உட்பிரிவின் நோக்கங்களுக்காக,"விலக்களிக்கப்பட்ட வழங்குகையின் மதிப்பு" என்ற சொற்றொடர், III-ஆம் இணைப்புப் பட்டியலின் 5-ஆம் பத்தியில் குறித்துரைக்கப்பட்டவை தவிர, மேற்சொன்ன இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட செயல்கள் அல்லது நடவடிக்கைகளின் மதிப்பை உள்ளடக்குதல் ஆகாது.";

(2) (5)-ஆம் உட்பிரிவில், (a) மற்றும் (b) கூறுகளுக்குப் பதிலாக, பின்வரும் கூறுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(a) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காக அவை பயன்படுத்தப்படும் போது தவிர, (ஓட்டுநர் உள்ளடங்கலாக) பதிமூன்று நபர்களுக்கு மேற்படாத அளவுக்கு இருக்கை வசதிக்கு ஒப்புதலளிக்கப்பட்டுள்ள நபர்களின் போக்குவரத்திற்கான இயக்கூர்திகள்:—

(A) அத்தகைய இயக்கூர்திகளின் மேலுமான வழங்குகை; அல்லது

(B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது

(C) அத்தகைய இயக்கூர்திகளை ஓட்டுவதற்கான பயிற்சி அளித்தல்;

(aa) கலங்கள் மற்றும் வானூர்தி—

(i) பின்வரும் வரிவிதிக்கத்தக்க வழங்குகைகளைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் போது தவிர:—

DTP-IV-2-(21) (T Sup)—

8

(A) அத்தகைய கலங்கள் அல்லது வானூர்தியின் மேலுமான வழங்குகை;

அல்லது

(B) பயணிகளின் போக்குவரத்து; அல்லது

(C) அத்தகைய கலங்களை கடலில் செலுத்துவதற்கான பயிற்சி அளித்தல்;

அல்லது

(D) அத்தகைய வானூர்தியைப் பறக்கவிடுவதற்கான பயிற்சி அளித்தல்;

(ii) சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக;

(ab) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்திக்கு தொடர்புடையதாக இருக்கின்ற பொதுக் காப்பீட்டு சேவைகள், சீர்காப்புமுறை செய்தல், பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல்:

வரம்புரை:- ஆனால்—

(i) (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறவிடத்து;

(ii) வரிவிதிக்கத்தக்க நபர்—

(I) அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தியின் உற்பத்தியில்;

அல்லது

(II) அவரால் காப்பீடு செய்யப்பட்ட அத்தகைய இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி பொறுத்து பொதுக் காப்பீட்டு சேவை வழங்குகையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறவிடத்து,

அத்தகைய சேவைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்;

(b) பின்வரும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குவதைப் பொறுத்து—

(i) உணவு மற்றும் பானங்கள், வெளிப்புற உணவு தயாரிப்பு, அழகு சிகிச்சை, உடல் நல சேவைகள், ஒப்பனை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் (a) கூறில் அல்லது (aa) கூறில் சுட்டப்பட்ட இயக்கூர்திகள், கலங்கள் அல்லது வானூர்தி அதில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் போது தவிர ஒத்தி வைத்தல், வாடகைக்கு விடுதல், அல்லது வாடகைக்கு எடுத்தல், ஆயுள் காப்பீடு மற்றும் உடல் நல காப்பீடு:

வரம்புரை:- அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உள்நோக்கிய வழங்குகை அதே வகையான சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் வெளிநோக்கிய வரிவிதிக்கத்தக்க வழங்குகையைச் செய்வதற்காக அல்லது வரிவிதிக்கத்தக்க கூட்டு அல்லது கலப்பு வழங்குகையின் கூறாக பதிவு பெற்ற நபரால் பயன்படுத்தப்படுகிறவிடத்து கிடைக்கத்தக்கதாகும்;

(ii) குழாம், உடல்நலம் மற்றும் உடற்தகுதி மையத்தின் உறுப்பாண்மை; மற்றும்

(iii) அத்தகைய விடுப்பு அல்லது உள்ளூர் பயணச் சலுகை போன்று விடுமுறையின் மீது பணியாளருக்கு நீட்டிக்கப்பட்ட பயணச் சலுகைகள்:

வரம்புரை:- ஆனால், அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதன்படியும் தன்னுடைய பணியாளருக்கு, அதனை அளிப்பது பணிக்கமர்த்தியவருக்கான கடமைப்பொறுப்பாக இருக்கிறவிடத்து, அத்தகைய சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் பொறுத்து உள்ளீட்டு வரிவரவு கிடைக்கத்தக்கதாகும்.".

20-ஆம் பிரிவின்

திருத்தம்.

10. முதன்மைச் சட்டத்தின் 20-ஆம் பிரிவில், விளக்கத்தில், (c) கூறில், "84-ஆம் பதிவின்கீழ்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "84 மற்றும் 92A-ஆம் பதிவுகளின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

9

11. முதன்மைச் சட்டத்தின் 22-ஆம் பிரிவில்,— 22-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:-"மேலும் வரம்புரை:- ஆனால், அத்தகைய நபர், முதலாம் வரம்புரையில் சுட்டப்பட்ட மொத்த விற்பனை அளவை மைய அரசு அதிகரித்துள்ளது பொறுத்து சிறப்புவகை மாநிலத்திலிருந்து வரிவிதிக்கத்தக்க சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டையும் வழங்குகிறவிடத்து, ஒரு நிதியாண்டில் அவருடைய மொத்த விற்பனை அளவு அத்தகைய உயர்த்தப்பட்ட விற்பனை அளவிற்கு சமமான தொகைக்கு மேற்படுமானால், அவர் பதிவு செய்யப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.";

(2) விளக்கத்தில், (iii)-ஆம் கூறில், முடிவில், பின்வருபவை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மற்றும் அருணாசலப்பிரதேசம், அசாம், ஹிமாசலப்பிரதேசம், மேகாலயா, சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக.".

24-ஆம் பிரிவின் 12. முதன்மைச் சட்டத்தின் 24-ஆம் பிரிவில், (x)-ஆம் கூறுக்குப் பதிலாக, பின்வரும்

திருத்தம்.

கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(x) 52-ஆம் பிரிவின்கீழ் ஆதாரத்தில் வரிவசூல் செய்வதற்கு வேண்டுறுத்தப்படும் மின்னணு வணிகம் இயக்குபவர் ஒவ்வொருவரும்;".

13. முதன்மைச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில்,— 25-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பின்பு மற்றும் விளக்கத்திற்கு முன்பு, பின்வரும் வரம்புரை புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:-"மேலும் வரம்புரை:- சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் (மையச் சட்டம் 28/2005) பொருள் வரையறை செய்யப்பட்டவாறான பிரிவைக் கொண்டிருக்கிற அல்லது சிறப்பு பொருளாதார மண்டல மேம்படுத்துபவராக இருக்கும், நபர் ஒருவர், அதே மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமைந்துள்ள தம்முடைய வியாபார இடத்திலிருந்து தனிப்பட்டதாக இருக்கிறபடியால், தனித்த பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டியவராவார்.";

(2) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்கு பதிலாக, பின்வரும் வரம்புரை அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

"வரம்புரை:-"வரம்புரை:- ஆனால், மாநிலத்தில் பல இடங்களில் வணிக இடங்களைக் கொண்டுள்ள நபர் ஒருவர், வகுத்துரைக்கப்படலாகும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அத்தகைய வணிக இடம் ஒவ்வொன்றுக்காகவும், தனித்த பதிவு வழங்கலாம்.".

14. முதன்மைச் சட்டத்தின் 29-ஆம் பிரிவில்,— 29-ஆம் பிரிவின்

திருத்தம்.

(1) ஓரத்தலைப்பில், "ரத்து செய்தல்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தற்காலிகமாக நிறுத்திவைத்தல்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(2) (1)-ஆம் உட்பிரிவில், (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:-"வரம்புரை:- பதிவுபெற்ற நபரால் தாக்கல் செய்யப்பட்ட பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, அந்தப் பதிவு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம்.";

(3) (2)-ஆம் உட்பிரிவில், வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:—

10

"மேலும் வரம்புரை:- ஆனால், பதிவை ரத்து செய்தல் தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையிலிருக்கும் போது, உரிய அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்கும், அத்தகைய முறையிலும் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.".

34-ஆம் பிரிவின்

15. முதன்மைச் சட்டத்தின் 34-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(i) "வரிவிவரப்பட்டியல் ஒன்று" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "வரவுக் குறிப்பு ஒன்றை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரவுக் குறிப்புகளை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (3)-ஆம் உட்பிரிவில்,—

(i) "வரிவிவரப்பட்டியல் ஒன்று" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிவிவரப்பட்டியல்கள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(ii) "பற்றுக் குறிப்பு" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஒரு நிதியாண்டில் செய்யப்படும் வழங்குகைகளுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்றுக் குறிப்புகள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

35-ஆம் பிரிவின்

16. முதன்மைச் சட்டத்தின் 35-ஆம் பிரிவில், (5)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை திருத்தம்.

சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:-"வரம்புரை:- ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் மைய அரசு அல்லது மாநில அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பின் வரவு செலவு பேரேடு, இந்தியக் கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையாளரால் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள சட்டம் எதனின்கீழ் உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்படும் தணிக்கை உட்பட்டு, அதன் துறை எதற்கும் பொருந்துதல் ஆகாது.".

39-ஆம் பிரிவின்

17. முதன்மைச் சட்டத்தின் 39-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (1)-ஆம் உட்பிரிவில்,—

(a) "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில், முறையில் மற்றும் அத்தகைய காலத்திற்குள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) "அத்தகைய ஆங்கில மாதத்திற்கு அல்லது அதன் பகுதிக்கு அடுத்து வரும் மாதத்தின் இருபதாம் நாள் அன்று அல்லது அதற்கு முன்போ" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்;

(c) பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, ஒவ்வோர் காலாண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கு விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.";

(2) (7)-ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அதில் குறித்துரைக்கப்படலாகும் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, அத்தகைய விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கு அவர் வேண்டுறுத்தப்பட்ட கடைசி தேதியன்று அல்லது அதற்கு முன்பு அந்த விவர அறிக்கையின்படி வரி பாக்கி அல்லது அதன் பகுதியை அரசிடம் செலுத்த வேண்டிய பதிவுபெற்ற நபர்களின் ஒரு சில வகையினரை அறிவிக்கை செய்யலாம்.";

11

(3) (9)-ஆம் உட்பிரிவில்,—

(a) "அத்தகைய விடுகை அல்லது தவறான விவரங்கள் எந்த மாதத்தின் போது அல்லது காலாண்டின்போது அறியப்பட்டனவோ அந்த மாதத்திற்காக அல்லது காலாண்டிற்காக அளிக்கப்பட வேண்டிய விவர அறிக்கையில்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) வரம்புரையில், "நிதியாண்டிற்கு அடுத்து வரும்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "எந்த நிதியாண்டிற்கு அத்தகைய விவரங்கள் தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த நிதியாண்டிற்கு அடுத்து வரும்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

18. முதன்மைச் சட்டத்தின் 43-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல்

வேண்டும், அவையாவன:—

புதிய பிரிவு 43A –வினைப் புகுத்துதல்.

"43A. விவர அறிக்கை அளிப்பதற்கான மற்றும் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை.— (1) 16-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவு, 37-ஆம் பிரிவு அல்லது 38-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பதிவுபெற்ற நபர் ஒவ்வொருவரும், 39-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்ட விவர அறிக்கைகளில், வழங்குநர்களால் வழங்கப்பட்ட வழங்குதல்களின் விவரங்களை சரிபார்த்தல், செல்லத்தக்கதாக்குதல், மாற்றியமைத்தல் அல்லது விட்டுவிடுதல் வேண்டும்.

(2) 41-ஆம் பிரிவு, 42-ஆம் பிரிவு அல்லது 43-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான மற்றும் அதனை சரிபார்ப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

(3) பெற்றுக்கொள்பவரால் உள்ளீட்டு வரிவரவைப் பயன்படுத்துவதற்கான நோக்கங்களுக்காக, பொதுவான நுழைவாயிலில் வழங்குநரால் செய்யப்படும் வெளிப்புற வழங்குகைகளின் விவரங்களை அளிப்பதற்கான நடைமுறை வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.

(4) (3)-ஆம் உட்பிரிவின்படி அளிக்கப்பட்டிராத வெளிப்புற வழங்குகைகள் பொறுத்து உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துவதற்கான நடைமுறை, வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறை, மேற்கண்ட உட்பிரிவின்படி வழங்குநர்களால் அளிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் பயன்படுத்தத்தக்க உள்ளீட்டு வரிவரவின் இருபது சதவீதத்திற்கு மேற்படாத, அவ்வாறு பயன்படுத்தக்கூடிய உள்ளீட்டு வரிவரவுத் தொகையின் அதிகபட்சத்தொகையை உள்ளடக்கும்.

(5) (3)-ஆம் உட்பிரிவின்படி வழங்குநரால் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பான வெளிப்புற வழங்குகைகளில் குறித்துரைக்கப்பட்ட வரித்தொகை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி அவரால் செலுத்தத்தக்க வரியாக கருதப்படுதல் வேண்டும்.

(6) வழங்குநர் மற்றும் வழங்குகையைப் பெற்றுக்கொள்பவர், (3)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (4)-ஆம் உட்பிரிவின்படி விவரங்கள் அளிக்கப்பட்டுள்ள ஆனால் விவர அறிக்கை அளிக்கப்படாத வெளிப்புற வழங்குகைகள் தொடர்பாக, வரியினை செலுத்துதல் அல்லது, நேர்வுக்கேற்ப, பயன்படுத்தப்பட்ட உள்ளீட்டு வரிவரவினை செலுத்துவதற்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் உள்ளாதல் வேண்டும்.

(7) (6)-ஆம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, வசூலித்தல் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நடைமுறையானது, ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வரித்தொகை வசூலிக்காமைக்கு அல்லது உள்ளீட்டு வரிவரவை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு வகை செய்யலாம்.

(8) பதிவு பெற்ற நபர் ஒருவரால் (3)-ஆம் உட்பிரிவின்படி அதனின் விவரங்கள் அளிக்கப்படும் வெளிப்புற வழங்குகைகள் தொடர்பான நடைமுறை, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் வரித்தொகையின் தொடக்கம்,—

(a) பதிவு நடைபெற்ற ஆறு மாதங்களுக்குள்;

12

(b) யாராவது வரி செலுத்துவதில் தவறுயிருக்கிறதென்றால் மற்றும் அத்தகைய கட்டத்தவறிய தொகையின் செலுத்தத்தின் உரிய தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அத்தகைய தவறுதல் தொகை கட்டாமல் இருப்பதானது தொடர்ந்து கொண்டிருக்கிறவிடத்து,

வகுத்துரைக்கப்படலாகுமாறு இருத்தல் வேண்டும்.".

48-ஆம் பிரிவின்

திருத்தம்.

19. முதன்மைச் சட்டத்தின் 48-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், "45-ஆம் பிரிவின்கீழ் அறிக்கை ஆகியவற்றை அளிப்பதற்கு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "மற்றும் அத்தகைய பிற செயற்பணிகளைச் செய்வதற்கு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

49-ஆம் பிரிவின்

20. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (2)-ஆம் உட்பிரிவில், "41-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "41-ஆம் பிரிவு அல்லது 43A-ஆம் பிரிவின்கீழ்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (5)-ஆம் உட்பிரிவில்,—

(a) (c) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், மாநில வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரி செலுத்ததிற்கு பயன்படுத்த இயலாது.";

(b) (d) கூறில், பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"வரம்புரை:- ஆனால், யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஆனால், மைய வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவின் மீதம் ஒருங்கிணைந்த வரியின் செலுத்தத்திற்கு பயன்படுத்த இயலாது.".

புதிய பிரிவு

21. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

49A மற்றும் 49B-களைப் புகுத்துதல்.

"49A. குறித்த சில நிபந்தனைகளுக்குட்பட்டு உள்ளீட்டு வரிவரவை பயன்படுத்துதல்.— 49-ஆம் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒருங்கிணைந்த வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை அத்தகைய செலுத்தம் நோக்கி முழுவதுமாக முதலாவதாக பயன்படுத்தப்பட்ட பின்னர் மட்டுமே, மாநில வரி கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவு நேர்வுக்கேற்ப, ஒருங்கிணைந்த வரி அல்லது மாநில வரியின் செலுத்தம் நோக்கி பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

49B. உள்ளீட்டு வரிவரவினைப் பயன்படுத்துவதற்கான ஆணை.— இந்த அத்தியாயத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மற்றும் 49-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவின் (e) மற்றும் (f) கூறுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, அரசு, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், அத்தகைய வரி எதனின் செலுத்தத்தை நோக்கி ஒருங்கிணைந்த வரி, மைய வரி, மாநில வரி அல்லது, நேர்வுக்கேற்ப, யூனியன் பிரதேச வரியின் கணக்கின் பேரில் உள்ள உள்ளீட்டு வரிவரவினை பயன்படுத்தும் முறை மற்றும் வரிசையை வகுத்துரைக்கலாம்.".

52-ஆம் பிரிவின்

திருத்தம்.

22. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில், (9)-ஆம் உட்பிரிவில், "37-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "37-ஆம் பிரிவு அல்லது 39-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

54-ஆம் பிரிவின்

23. முதன்மைச் சட்டத்தின் 54-ஆம் பிரிவில்,—

திருத்தம்.

(1) (8)-ஆம் உட்பிரிவில், (a) கூறில்,—

(a) "பூஜ்ஜிய வீத வழங்குகைகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "ஏற்றுமதி" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

13

(b) "அத்தகைய பூஜ்ஜிய வீத வழங்குகைகள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "அத்தகைய ஏற்றுமதிகள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) விளக்கத்தில், (2)-ஆம் கூறில்,—

(a) (c) உட்கூறில், (i)-ஆம் இனத்தில், "அந்நியச் செலாவணியாக" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது இந்திய சேம வங்கியினால் எங்கெங்கெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இந்திய ரூபாயில்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;

(b) (e) உட்கூறுக்குப் பதிலாக, பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"(e) (3)-ஆம் உட்பிரிவிற்கான முதல் வரம்புரையின் (ii)-ஆம் கூறின்படி பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிவரவினை திரும்பக் கொடுக்கும் நேர்வில், எந்தக் காலத்தில் திரும்பக் கொடுத்தலுக்காக கோரிக்கை எழுகிறதோ அந்த காலத்திற்கு 39-ஆம் பிரிவின்படி விவர அறிக்கையை அனுப்புவதற்கான உரிய தேதி;".

79-ஆம் பிரிவின் 24. முதன்மைச் சட்டத்தின் 79-ஆம் பிரிவில், (4)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும்

திருத்தம்.

விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம் "விளக்கம்.— இந்த பிரிவின் நோக்கங்களுக்காக, "நபர்" எனும் சொல் (4)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ளவாறு அல்லது, நேர்வுக்கேற்ப, 25-ஆம் பிரிவின் (5)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள "தனித்துவமுள்ள நபர்கள்" என்பதை உள்ளடக்க வேண்டும்.".

107-ஆம் பிரிவின்

திருத்தம்.

25. முதன்மைச் சட்டத்தின் 107-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அதிகபட்சம் இருபத்தைந்து கோடி ரூபாய்க்கு உட்பட்டு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

112-ஆம் பிரிவின்

திருத்தம்.

26. முதன்மைச் சட்டத்தின் 112-ஆம் பிரிவில், (8)-ஆம் உட்பிரிவில், (b) கூறில், "மேற்சொன்ன ஆணையிலிருந்து எழும் பூசலில் உள்ள" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அதிகபட்சம் ஐம்பது கோடி ரூபாய்க்கு உட்பட்டு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

129-ஆம் பிரிவின்

திருத்தம்.

27. முதன்மைச் சட்டத்தின் 129-ஆம் பிரிவில், (6)-ஆம் உட்பிரிவில், வரம்புரை உள்ளடங்கலாக, இரண்டு இடங்களில் வரும், "ஏழு நாட்களுக்குள்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "பதினான்கு நாட்களுக்குள்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

143-ஆம் பிரிவின் 28. முதன்மைச் சட்டத்தின் 143-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (b) கூறில்,

திருத்தம்.

வரம்புரைக்குப் பின்பு, பின்வரும் வரம்புரை சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"மேலும் வரம்புரை:- ஆனால், ஓர் ஆண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் காலம், போதிய காரணம் காட்டப்பட்டுக் கொண்டிருப்பதன் பேரில், முறையே ஓர் ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாத மேலுமான காலமொன்றிற்கு ஆணையரால் நீட்டிக்கப்படலாம்.".

I-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

29. முதன்மைச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலில், 4-ஆம் பத்தியில், "வரி விதிக்கத்தக்க நபரால்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "நபரால்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

II-ஆம் இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

30. முதன்மைச் சட்டத்தின் II-ஆம் இணைப்புப் பட்டியலில், தலைப்பில், "செயல்பாடுகள்" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது பரிமாற்றங்கள்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.

31. முதன்மைச் சட்டத்தின் III-ஆம் இணைப்புப் பட்டியலில்,— III-ஆம் இணைப்புப்

பட்டியலுக்கான திருத்தம்.

(1) 6-ஆம் பத்திக்குப் பின்பு, பின்வரும் பத்திகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:—

14

"7. சரக்குகள் இந்தியாவிற்குள் நுழையாமல், இந்தியாவிற்கு வெளியே உள்ள இடமொன்றிலிருந்து இந்தியாவிற்கு வெளியேயுள்ள மற்றொரு இடத்திற்கு அத்தகைய சரக்குகளை வழங்குதல்.

8. (a) வீட்டு நுகர்விற்காக எடுத்துச் செல்லப்படுவற்கு முன் நபர் எவருக்கும் சேமிப்பு கிடங்கு சரக்குகளின் வழங்குதல்;

(b) பிற நபர் எவருக்கும் சரக்கு பெறுபவரால் இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள துறைமுகத் தொடக்கத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்ட பின்பு, ஆனால் வீட்டு நுகர்விற்காக அனுப்புவதற்கு முன்பான சரக்குகளுக்கான உரிமை மூல ஆவணங்களின் மேற்குறிப்பினால் சரக்குகள் வழங்குதல்.";

(2) தற்போதுள்ள விளக்கம், விளக்கம் 1-ஆக எண்ணிடப்படுதல் வேண்டும் மற்றும் அவ்வாறு எண்ணிடப்பட்டவாறான விளக்கம் 1 என்பதற்குப் பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அவையாவன:—

"விளக்கம்"விளக்கம் 2.— 8-ஆம் பத்தியின் நோக்கங்களுக்காக, "சேமிப்பு கிடங்கு சரக்குகள்" என்ற சொற்றொடர் 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தில் (மையச் சட்டம் 52/1962) அதற்கென குறித்துரைக்கப்பட்டவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்.".

நீக்கறவு மற்றும்

32. (1) 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (திருத்த) அவசரச் காப்பு.

தமிழ்நாடு அவசரச் சட்டம் 2/2018.

சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு சட்டம்

19/2017.

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்படிச் சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

15

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு

ஜனவரி திங்கள் 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது

பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 4/2019சட்ட எண் 4/2019

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும் 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தினை மேலும்

திருத்துவதற்கானதொரு சட்டம்.திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி (திருத்த)ச்

தொடக்கம்.

சட்டம் என அழைக்கப்பெறும்.

(2) இது 2018-ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 30-ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

இரண்டாம் 2. 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் இரண்டாம்

32/2006.

இணைப்புப் பட்டியலில்,-

இணைப்புப் பட்டியலுக்கான திருத்தம்.

(1) வரிசை எண்.3 மற்றும் அது தொடர்பாக (2), (3) மற்றும் (4)-ஆம் நெடும்பத்திகளில்

உள்ள பதிவுகளுக்கு பதிலாக, பின்வருவன, முறையே, அமைக்கப்படுதல் வேண்டும்:-

இம்மாநிலத்தில் 58 விழுக்காடு.

முதலாம் முனை விற்பனையில்.

14.5 விழுக்காடு."

இம்மாநிலத்தில் இரண்டாம் முனை விற்பனையில்.

""3. 1975-ஆம் ஆண்டைய சுங்கவரிச் சட்டம் (மத்திய சட்டம் 51/1975) அல்லது இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க தீர்வைகள் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதனின் கீழ் அடங்குவதுமான வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஒயின்கள், சாராவி மற்றும் பீர்கள் போன்ற வெளிநாட்டு மதுபானங்கள்.

(2) விளக்கம் I-க்கு பின்பு, பின்வரும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"விளக்கம் IA.- வரிசை எண்.3-க்கு எதிராக குறித்துரைக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது வரிவிதிக்கும் நோக்கத்திற்காக, மாநிலத்தின் இரண்டாம் முனை விற்பனையில் அந்த பொருட்களின் மொத்த விற்பனைத் தொகையானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

16 17

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு

ஜனவரி திங்கள் 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது

பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 5/2019சட்ட எண் 5/2019

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டம்

என்று வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இச்சட்டம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

261-A ஆம் 21 / 1994.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2018ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள்வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" எனும் சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

3. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்தம்) அவசரச்

தமிழ்நாடு அவசரச் சட்டம் 4/2018.

நீக்கறவு மற்றும் காப்புரை.

சட்டம் ஈங்கிதனால் நீக்கறவு செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டம்

21/1994.

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் திருத்தப்பட்டவாறு 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறான மேற்சொன்ன சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

18 19

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு

ஜனவரித் திங்கள் 14-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும்

அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 6/2019சட்ட எண் 6/2019

தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை தமிழ்நாடு மாநிலத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப்பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக.-

பகுதி-I.

முன்னுரை.

1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் நடைமுறைக்கு வருதல்.

(2) இது, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் நடைமுறைக்கு வருவதாக

கொள்ளப்படுதல் வேண்டும்.

பகுதி II.

1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம். 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

414-B ஆம் IV / 1994.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டத்தின் 414-B ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி III.

1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

375-B ஆம் V/1920.

பிரிவிற்கான திருத்தம்.

3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 375-B ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி IV.

1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

15/1971.

510-AAA ஆம் பிரிவிற்கான திருத்தம்.

4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 510-AAA ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி V.

1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

511-AAA ஆம் 25/1981.

பிரிவிற்கான திருத்தம்.

5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்தின் 511-AAA ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி VI

1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

10-A ஆம் 27/1994.

பிரிவிற்கான திருத்தம்.

6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

20

பகுதி VII.

1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

28/1994.

பிரிவிற்கான திருத்தம்.

7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி VIII.

1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

10-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

29/1994.

பிரிவிற்கான திருத்தம்.

8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி IX.

2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

7/2008.

பிரிவிற்கான திருத்தம்.

9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி X.

2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

8/2008.

பிரிவிற்கான திருத்தம்.

10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XI.

2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

26/2008.

பிரிவிற்கான திருத்தம்.

11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XII.

2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம்

தமிழ்நாடு சட்டம்

27/2008.

பிரிவிற்கான திருத்தம்.

12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XIII.

2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

24/2013.

13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

பகுதி XIV.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.

9-A ஆம் பிரிவிற்கான

தமிழ்நாடு சட்டம் திருத்தம்.

25/2013.

14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டத்தின் 9-A ஆம் பிரிவில், ''2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.

21

தமிழ்நாடு

நீக்கறவு மற்றும் 15. (1) 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (ஆறாம் திருத்தம்)

காப்புரை.

அவசரச் சட்டம் இதனால் நீக்கறவு செய்யப்பட்டது.

அவசரச்சட்டம் 5/2018.

தமிழ்நாடு சட்டம்

IV/1919.

தமிழ்நாடு சட்டம்

V/1920.

தமிழ்நாடு சட்டம்

15/1971.

தமிழ்நாடு சட்டம்

25/1981.

தமிழ்நாடு சட்டம்

27/1994.

தமிழ்நாடு சட்டம்

28/1994.

தமிழ்நாடு சட்டம்

29/1994.

தமிழ்நாடு சட்டம்

(2) அத்தகைய நீக்கறவு எவ்வாறிருப்பினும், 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம், 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சிச் சட்டம், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சிச் சட்டம், 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சிச் சட்டம், 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சிச் சட்டம், 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சிச் சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சிச் சட்டம் ஆகியவற்றிலுள்ளபடி செய்யப்பட்ட அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும் மேற்சொன்ன அவசரச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முறையே இந்தச் சட்டங்களின்படி செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

7/2008.

தமிழ்நாடு சட்டம்

8/2008.

தமிழ்நாடு சட்டம்

26/2008.

தமிழ்நாடு சட்டம்

27/2008.

தமிழ்நாடு சட்டம்

24/2013.

தமிழ்நாடு சட்டம்

25/2013.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

22 23

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு

ஜனவரித் திங்கள் 18-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது

பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 8/2019சட்ட எண் 8/2019

1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச்

சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக: —

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு

அதிகார அமைப்புச் (திருத்த) சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு சட்டம்

33/1997.

2ஆம் பிரிவின் திருத்தம்.

2. 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நகரியப் பகுதி மேம்பாட்டு அதிகார அமைப்புச் சட்டத்தின் (இதில் இதன் பின்பு முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 2-ஆம் பிரிவில் (e) கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு சேர்க்கப்படுதல் வேண்டும் அதாவது: —

"(f) "சிறப்பு நோக்க நிறுமம்" என்பது திட்டம் மற்றும் மேம்பாடு உள்ளடங்கலாக தொழிற் பகுதியின் அலுவல்களை நிர்வகிப்பது அல்லது பராமரிப்பது உள்ளடங்கலாக தொழில் துறை மேம்பாட்டிற்காக அல்லது தொடர்புடைய நோக்கம் எதற்காகவும் 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் (மையச் சட்டம் 18/2013) 2-ஆம் பிரிவின் (45) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டுள்ளவாறு உருவாக்கப்பட்ட ஒரு அரசு நிறுமம் என்று பொருள்படும்.".

23-A எனும் 3. முதன்மைச் சட்டத்தின் 23ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவைப் புகுத்துதல்

வேண்டும் அதாவது:—

புதிய பிரிவைப் புகுத்துதல்.

"23-A. அதிகாரம் மற்றும் செயற்பணிகள் ஒப்படைவு.—

(1) அதிகார அமைப்பானது, அரசின் முன் ஒப்பளிப்புடன் 25ஆம் பிரிவின்படியான அதிகாரங்களைத் தவிர்த்து அதனுடைய அனைத்து அல்லது எந்தவொரு அதிகாரம் மற்றும் செயற்பணிகளை ஒரே நேரத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மிகாததொரு காலத்திற்கு ஒப்படைவு செய்யலாம்.

வரம்புரையாக இந்த பிரிவின்படி எந்த காலத்திற்காக ஒப்படைவு செய்யப்பட்டதோ அந்த

காலமானது வெவ்வேறு வகையான அதிகாரம் மற்றும் செயற்பணிகளுக்காக மாறுபடலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரம் மற்றும் செயற்பணிகளைக் கூறப்பட்ட சிறப்பு நோக்க நிறுமமானது அரசு நிறுமமாக அற்றுப்போகுமேயானால் திரும்பப் பெறுதல் வேண்டும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

24 25

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி

திங்கள் 8-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத்

தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 9/2019சட்ட எண் 9/2019

1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) 1976 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள்

(ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது 2017ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து

விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

குடியரசுத்

30-A எனும் தலைவருடைய சட்டம் 19/1976.

பிரிவிற்கான திருத்தம்.

2. (இதன்பின்பு முதன்மைச்சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1976ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் 30-A எனும் பிரிவில் (1)ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில் "ஐந்து ஆண்டுகள்" என்கின்ற சொற்றொடருக்குப்பதிலாக "ஏழு ஆண்டுகள்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

செல்லுந்தன்மை.

3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 18 ஆம் நாளன்132று தொடங்கும் காலத்தின்போது மற்றும் தமிழ்நாடு அரசிதழில் இந்தச்சட்டம் வெளியிடப்படும் தேதியுடன் முடிவடையும்போது அரசால் ஈரோட்டிலுள்ள சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் மேலாண்மையினை எடுத்துக் கொண்டிருப்பது தொடர்ந்து இருக்கையில் மற்றும் மேற்சொன்ன காலத்தின்போது மேற்சொன்ன கல்லூரியின் மேலாண்மையினை எடுத்திருப்பது தொடர்ந்திருப்பதற்கு அரசால் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட செயல் எதுவும் இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன் செய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 22 May 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-05-22.Ordinary_21_Part-IV_Section-2-T-Sup.