Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications of interest to a section of the public issued by Heads of Departments, etc.

Published 03 July 2019

Type
Ordinary
Gazette no.
27
Part
Part IV
Notifications
Government Employees Act 2016
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-07-03.Ordinary_27_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 39.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 27]

சென்னை, புதன்கிழமை, ஜூலை 3, 2019 ஆனி 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம்

கூறுகளின் அமைப்பு

கூறுகள்:

1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

2. பொருந்துகை.

3. பொருள் வரையறைகள்.

4. வகைப்படுத்துதல்.

5. சம்பளம், படித்தொகைகள், விடுப்பு, விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற பணி வரைக் கட்டுகள்.

6. பணிமுறை தரநிலை.

7. ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்.

8. நியமனத்திற்கான விண்ணப்பக் கட்டணம்.

9. ஆள் எடுக்கும் முறை.

10. மறுபடியும் அமர்த்தப்படுவதற்கு தகுதி காண் பருவத்தினருக்கான உரிமைகள்.

11. தகுதிகாண் பருவத்தினர், ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர் மற்றும் முழு உறுப்பினர்கள் விடுவிக்கப்படுதல் மற்றும் மறு அமர்த்துகை.

12. பணிக்கு வராத உறுப்பினர்கள்.

13. இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட பணிகளில் தகுதிகாண் பருவத்தினராக, ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்திற்காக இருப்பதற்குரிய உரிமை.

[ 1 ]

DTP-IV-2-(27) (T Sup)—12 14. முந்தைய பணியிலுள்ள பணியுரிமை.

15. கருணை அடிப்படையின் பேரில் பதவியமர்த்தம் செய்வதற்கான வயது சலுகை.

16. சாரணியர் திறமைக்கான வேலைவாய்ப்பு சலுகை.

17. தற்காலிக பதவியமர்த்தங்கள்.

18. தேர்வாணையத்தின் உள்ளீட்டெல்லைக்கு அப்பாலுள்ள பணியிடங்களுக்கான ஆளெடுப்பு.

19. உடன்படிக்கை வாயிலாக பணியமர்த்தம் செய்தல்.

20. தகுதிகள்.

21. மொழியியல் தகுதி.

22. மொழித் தேர்வு.

23. ஒரு சில பட்டங்கள் தொடர்பான சிறப்பு வகைமுறைகள்.

24. தகுதிகாண் பருவத்தின் போது பெறப்பட்ட சிறப்பு தகுதியிலிருந்து அல்லது தேர்ச்சி பெற்ற சிறப்பு தேர்விலிருந்து விதிவிலக்கு.

25. சிறப்பு தகுதிகள்.

26. பெண்களுக்கான நியமனம்.

27. நியமனங்களுக்கான ஒதுக்கீடு.

28. தற்காலிகமாக முதலில் நியமிக்கப்பட்ட நபர்களின் தகுதிகாண் பருவத்தின் தொடக்கத் தேதி.

29. தகுதிகாண் பருவத்திற்கான வெவ்வேறு பணியிலுள்ள பணிக்காலத்தைக் கணக்கிடுதல்.

30. தகுதிகாண் பருவம் நிறைவடைதல் மற்றும் ஊதிய உயர்வின் நிலுவைகளைப் பெறுதல்.

31. தகுதிகாண் பருவத்தினை முடிவுறுத்துதல் அல்லது நீட்டித்தல்.

32. முழு உறுப்பினருக்குரிய தகுதிகாண் பருவத்தினரின் பொருத்தம்.

33. தகுதிகாண் பருவத்தை நீட்டித்தல்.

34. பணியமர்த்தும் அதிகாரியின் குறித்த சில அதிகாரங்கள் உயர் அதிகாரிகளால் செலுத்தப்படுதல்.

35. பணியமர்த்தும் அதிகாரியின் குறித்த சில அதிகாரங்கள் கீழ்நிலை அதிகாரிகளால் செலுத்தப்படுதல்.

36. விடுவிப்பிற்கு எதிரான மேல் முறையீடு.

37. முழு உறுப்பினர்களின் பணியமர்த்தம்.

38. முழு நேர உறுப்பினர்களை அமர்த்துதல், தகுதிகாண் பருவத்தினராகவோ ஏற்பளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினராகவோ இல்லாத உறுப்பினர்களை மீண்டும் பணியமர்த்தல்.

39. வகுத்துரைக்கப்பட்ட தேர்வில் தவறியதற்கான தண்டனை.

40 பணிமூப்பு நிர்ணயம்.

3

41. பதவி உயர்வு

42. மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு மேல் தொடர்ந்து விடுப்பில் செல்லும் நபர் உயர்வகைப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு பரிசீலிக்கப்படமாட்டார்.

43. பணி மாறுதல் மூலம் நியமனம்.

44. பணிநீட்டிப்பு காலத்தின் போது பதவி உயர்வு அல்லது மாற்றுப்பணியிலிருந்து மாற்றல் மூலம் நியமனம்.

45. பதவி உயர்வு மூலம் அல்லது பணிமாறுதல் மூலமாக நியமனத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் திருத்தம்.

46. அரசால் பணி நியமனம் அல்லது பதவி உயர்விற்காக ஒப்புதலளிக்கப்பட்ட பணியாளர் பட்டியலிலிருந்து பணியாளர்களை நீக்குதல் அல்லது மாற்றுதல்.

47. தற்காலிக பதவி உயர்வு.

48. பதவி அமர்த்துகை மற்றும் மாற்றல்.

49. பதவி விலகலினால் ஏற்படும் விளைவு.

50. பதவி விலகலை ஏற்றல்.

51. ஓய்வூதியத்திற்காக இராணுவப் பணியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்.

52. முழுநேரப் பணியாளரின் பதவியிறக்கம் மற்றும் மறு பதவியமர்த்தல்.

53. பணிநீக்கம், பணியகற்றம், கட்டாய ஓய்வு அல்லது படிநிலையிறக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களிடத்தில் பதவியமர்த்தம்.

54. காப்புரைகள்.

55. ஓய்வூதியதாரர்களை மீண்டும் பணியமர்த்துதல்.

56. அனைத்து இந்திய பணி அலுவலர்களை மாநில பணியிடங்களில் பதவியமர்த்தம் செய்தல்.

57. உறுப்பினர்களால் உரிமைகளை துறத்தல்.

58. குறித்த சில நேர்வுகளில் நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான அதிகாரம்.

59. பிறந்த தேதி மாற்றுவது.

60. பிறந்த தேதி திருத்தம் செய்தல்.

61. விடுவிக்கப்பட்ட அரசு பணியாளர்களுக்கு அல்லது தற்காலிக அரசு பணியாளர்களுக்கு வயது சலுகை.

62. தற்காலிக விதிகளின் பொருந்துகை.

63. முன்னாள் இராணுவத்தினருக்கான சலுகை.

64. மாற்றுத் திறனாளிகளுக்கான வயது சலுகை.

65. நேரடி நியமனம் தடைசெய்யப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கான வயது சலுகை.

66. மேல்முறையீடு அல்லது மறு ஆய்வு.

4

67. மேல்முறையீட்டுக்கான குழு.

68. சிறப்பு விதிகள் மீதூர்ந்து இயங்கும் செயல் திறம் உடையது.

69. குறித்த சில விதிகளின் பொருந்துகை.

70. செல்லுந்தன்மை.

71. சிறப்பு வகைமுறைகள்.

72. இடர்ப்பாடுகளை அகற்றுவதற்கான அதிகாரம்.

73. இணைப்புப் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான அதிகாரம்.

இணைப்புப் பட்டியல் - I

இணைப்புப் பட்டியல் - II

இணைப்புப் பட்டியல் - III

இணைப்புப் பட்டியல் - IV

இணைப்புப் பட்டியல் - V

இணைப்புப் பட்டியல் - VI

இணைப்புப் பட்டியல் - VII

இணைப்புப் பட்டியல் - VIII

இணைப்புப் பட்டியல் - IX

இணைப்புப் பட்டியல் - X

இணைப்புப் பட்டியல் - XI

இணைப்புப் பட்டியல் - XII5 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்

மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 14/2016

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணி நிபந்தனைகளை

முறைப்படுத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து ஏழாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக :-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்

தொடக்கம்.

(பணி நிபந்தனைகள்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) 40 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவு 1955 ஜனவரி 1 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச்

சட்டத்தின் எஞ்சியுள்ள வகைமுறைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு

வருதல் வேண்டும்.

பொருந்துகை.

2. இந்தச்சட்டம்-

(அ) அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தினாலோ அல்லது

அதன் வழியிலோ; அல்லது

(ஆ) அத்தகைய உறுப்பினருக்கும் அரசுக்கும் இடையே இருந்துவரும்

ஒப்பந்தம் அல்லது உடன்பாட்டின் மூலம் அத்தகைய பணியிலுள்ள உறுப்பினர்

எவரையும் பொறுத்து

பிறவாறு வெளிப்படையாக வகைசெய்யப்பட்டு இருந்தாலன்றி மாநில

மற்றும் சார்நிலைப்பணிகள் அனைத்திலும் தற்காலிகமானதாயினும், அல்லது

நிரந்தரமானதாயினும் பணியிடங்கள் அனைத்தையும் வகித்து வருபவர்களுக்குப்

பொருந்தும்.

3. இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறானாலன்றி , - பொருள்

வரையறைகள் (அ) "மாற்றல் மூலமான பதவியமர்த்தம்" என்பது, ஒரே மாதிரியான

சம்பள விகிதத்தை அல்லது சம்பள ஏற்றமுறை கொண்ட அதே பணியிலுள்ள ஒரு

வகையிலிருந்து மற்றொரு வகைக்கு பதவியமர்த்தப்பட்ட பணியின் உறுப்பினர்

என்று பொருள்படும்;

(ஆ) "பணிக்கான பதவியமர்த்தம்" என்பது இந்த சட்டத்திற்கிணங்க

அல்லது நேர்வுக்கேற்ப, அந்த நேரத்தில் பொருந்தத்தக்க விதிகளுக்கிணங்க

அத்தகைய பணியின் பணிநிலைப் பிரிவிலுள்ள பணியிடத்திற்கான

கடமைகளை முதன்முறையாக ஆற்றுகிறபோது அல்லது அந்த உறுப்பினர்களுக்கு

வகுத்துரைக்கப்பட்ட தகுதிகாண்பருவம், போதனை அல்லது பயிற்சியை

மேற்கொள்கிற நபர் என்று பொருள்படும்.

விளக்கம் - ஒரு பணியின் பணிநிலைப் பிரிவிலுள்ள பணியிடம் ஒன்றை

வகிக்கும் ஒருவரை அதே பணியிலுள்ள உயர் பணியிடம் ஒன்றின் அல்லது

வேறொரு பணியின் பணிநிலைப் பிரிவில் உள்ள பணியிடம் ஒன்றின்

கூடுதல் பொறுப்பு வகிப்பதற்கு அல்லது நடப்பு பணிகளை ஆற்றுவதற்குப்

பணியமர்த்துவதானது பிந்திய பணிக்கான பணியமர்த்தமாக ஆகாது;

(இ) "ஒப்பேற்பளிக்கப்பட்ட பணிக்கு விண்ணப்பித்தவர்" என்பது,

எந்த ஒரு பணிக்கு விண்ணப்பித்தவரின் பெயர் ஒரு பணிப்பிரிவு அல்லது

வகை எதிலும் பணியமர்த்தம் செய்வதற்காக ஒப்பேற்பளிக்கப்பட்ட பணிக்கு

விண்ணப்பித்தவர்களின் அதிகார உறுதி பெற்ற பட்டியல் ஒன்றில் காணப்படுகிறதோ

அந்த பணிக்கு விண்ணப்பித்தவர் என்று பொருள்படும்;

6

(ஈ) "தகுதி காண் பருவத்தை முடித்தவர்" என்பது, அந்தப் பணி, பிரிவு

அல்லது வகையில் தன் தகுதிகாண் பருவத்தை மனநிறைவாக முடித்திருக்கிறவரும்

மற்றும் அத்தகைய பணியின் முழு நேர உறுப்பினராக பதவியமர்த்தம்

செய்யப்படுவதை எதிர்நோக்கியிருக்கும் உறுப்பினர் என்று பொருள்படும்;

(உ) "அருந்ததியர்கள்" என்பது, அவ்வப்போது திருத்தம்

செய்யப்பட்டவரான 1950-ஆம் ஆண்டு அரசமைப்பு (பட்டியலில் கண்ட சாதியினர்)

ஆணையினால் இந்திய அரசமைப்பின் 341 ஆம் உறுப்பின்படி இந்திய குடியரசு

தலைவரால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலில் கண்ட சாதியினர் இனங்களை

உள்ளடக்கியுள்ள 76 இனங்களை உள்ளடக்கியுள்ள பட்டியலுக்குள் இருக்கிற

அருந்ததியர், சக்கிலியன், மாதாரி, மதிகா, பகடை, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா

சாதியினர் என்று பொருள்படும்;

(ஊ) "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்பது, I-ஆம் இணைப்புப்பட்டியலின்,

முறையே அ, ஆ, இ மற்றும் ஈ பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

மற்றும் சீர் மரபினர் ஆக குறித்துரைக்கப்பட்ட சமுதாயத்தினர் என்று பொருள்படும்;

விளக்கம் - I ஆம் இணைப்புப்பட்டியலில், குறித்துரைக்கப்பட்டுள்ள

சமுதாயத்தினரில் ஒரு பிரிவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள்

மட்டுமே அத்தகைய சமுதாயத்தினை சேர்ந்தவராகப் பாவிக்கப்படுதல் வேண்டும்;

(எ) "ஆணையம்" என்பது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

என்று பொருள்படும் ;

(ஏ) "மேல்முறையீடுகள் குழு" என்பது, 67 ஆம் பிரிவில்

குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு குழு என்று பொருள்படும் ;

(ஐ) "தகுதிகாண் பருவத்தினர் ஒருவரை விடுவித்தல்" என்பது,

தகுதிகாண் பருவத்தினர் வேறொரு பணி, பிரிவு அல்லது வகை இவற்றின் ஒரு முழு

உறுப்பினராகவோ அல்லது ஒரு தகுதி காணப்பெற்றவராகவோ இருக்கும் நேர்வில்

அத்தகைய பணி, பிரிவு அல்லது வகைக்குத் திருப்பி அனுப்புதல் என்றும் பிற நேர்வு

எதிலும் அவருடைய பணிகளிலிருந்து விடுவித்தல் என்று பொருள்படும்;

(ஒ) "முன்னால் இராணுவத்தினர்" என்பது –

(i) ஒன்றியத்தின் ஆயுதப் படைகளில் (போரிடுபராகவோ இல்லாமலோ) எந்தப்

படிநிலையிலும் பணியாற்றியிருந்து, தவறான நடத்தை அல்லது திறமையின்மை

காரணமாக பணிநீக்கம் அல்லது பணிவிடுவிப்பு மூலமாக அல்லாமல்

பிறவாறாக 1968, ஜூன் 30 ஆம் தேதியன்றோ அதற்கு முன்போ அதிலிருந்து

விடுவிக்கப் பெற்றிருக்கும் நபர் எவரும் என்று பொருள்படும்; அல்லது

(ii) உறுதிச் சான்றுக்குப் பின்பு ஆறு மாதங்களுக்குக் குறையாத

தொடர்ச்சியான காலஅளவு ஒன்றுக்கு ஒன்றியத்து ஆயுதப்படைகளில்

(போரிடுபவராகவோ இல்லாமலோ) எந்த ஒரு படிநிலையிலும் பணியாற்றியிருந்து,

தவறான நடத்தை அல்லது திறமையின்மை காரணமாக பணிநீக்கம் அல்லது

பணிவிடுப்பு மூலமாக அல்லாமல் பிறவாறாக, 1968, ஜூலை 1 ஆம் தேதிக்கும்

1979, ஜூன் 30 ஆம் தேதிக்கும் இடையே (இரண்டு நாட்களும் உள்ளடங்கலாக)

அதிலிருந்து விடுவிக்கப் பெற்றிருக்கும் நபர் எவரும் என்று பொருள்படும்; அல்லது

(iii) உறுதிச் சான்றுக்குப் பின்பு ஆறு மாதங்களுக்குக் குறையாத

தொடர்ச்சியான காலஅளவு ஒன்றுக்கு ஒன்றியத்து ஆயுதப்படைகளில்

(போரிடுபவராகவோ இல்லாமலோ) எந்த ஒரு படிநிலையிலும் பணியாற்றியிருந்து,7 (அ) தம் சொந்த வேண்டுகோளிலோ அல்லது தவறான நடத்தை அல்லது

திறமையின்மை காரணமாக பணிநீக்கம் அல்லது பணிவிடுவிப்பு மூலமாகவோ

அல்லாத பிற காரணத்திற்காக: அல்லது

(ஆ) ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத கால அளவு ஒன்றுக்கு

பணியாற்றிய பின்பு தம் சொந்த வேண்டுகோளின் பேரில்

1979, ஜூலை 1ஆம் தேதிக்கும் 1987, ஜூன் 30 ஆம் தேதிக்கும் (இரண்டு

நாட்களும் உள்ளடங்கலாக) இடையே விடுவிக்கப்பட்டிருப்பாராயின் அந்த நபர்

என்று பொருள்படும்; அல்லது

(iv) ஒன்றியத்தின் ஆயுதப் படைகளில் (போரிடுபவராகவோ இல்லாமலோ)

எந்த ஒரு படிநிலையிலும் பணியாற்றியிருந்து அத்தகைய பணியிலிருந்து,

(அ) தம் ஓய்வூதியத்தை ஈட்டிய பின்பு தம் சொந்த வேண்டுகோளிலோ

அல்லது;

(ஆ) இராணுவப் பணிக்கு சார்ந்ததக்க மருத்துவ காரணங்களின்

பேரிலோ அல்லது தம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின் பேரிலோ

மற்றும் மருத்துவ அல்லது பிற தகவுக்கேடு ஓய்வூதியம் வழங்கி; அல்லது

(இ) படைக்குறைப்பின் விளைவாகக், தம் ஓய்வூதியத்தை ஈட்டியபின்பு

தம் சொந்த வேண்டுகோளில் அல்லாமல் பிறவாறாக; அல்லது

(ஈ) தம் சொந்த வேண்டுகோளிலோ அல்லது தவறான நடத்தை அல்லது

திறமையின்மை காரணமாக பணிநீக்கம் அல்லது பணிவிடுப்பு மூலமாகவோ

அல்லாமல் பிறவாறாக குறிப்பிட்ட கால போர் நடவடிக்கையை முடித்த பின்பு மற்றும்

பணிக்கொடை ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது;

1987 ஜூலை 1ஆம் தேதியன்றோ அதற்கு பின்போ ஓய்வு பெற்றிருக்கும்

அல்லது விடுவிக்கப் பெற்றிருக்கும் நபர் எவரும் என்று பொருள்படும்;

(v) பின்வரும் வகையினர்களின் மண்டல இராணுவத்தின் நபர் எவரும்,

அவர்களாவர், 1986, நவம்பர் 15 அன்றோ அதற்கு பின்போ ஓய்வு பெற்ற இராணுவப்

பணிக்கு சாரத்தக்க மற்றும் போர்க்களத்தில் பரிசுப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்

மற்றும் போர்க்களத்தில் வீர செயல் புரிந்தமைக்காக;

(vi) 1989 ஜூலை 19 அன்றோ அதற்குப் பின்போ இராணுவப் பணியிலிருந்து

நேரடியாக, ஓய்வூதியத்துடன் அஞ்சல் மற்றும் தந்தித்துறைக்கு திருப்பியனுப்பாமல்

ஓய்வு பெற்ற அல்லது அத்தகைய பணியிலிருந்து இராணுவப் பணிக்கு சார்ந்ததக்க

மருத்துவக் காரணங்களின் பேரில் அல்லது தம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட

சூழ்நிலைகளில் அத்தகைய பணியிலிருந்து 1989 ஜூலை 19 அன்றோ அதற்குப்

பின்போ விடுவிக்கப்பட்டிருக்கும் மற்றும் மருத்துவ அல்லது பிற தகவுக்கேட்டு

ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கும் நபர் எவரும் என்று பொருள்படும்; அல்லது

(vii) இராணுவ விதி 13(3) III (V)-ன்படி அவருடைய பணி இனி மேலும்

தேவையில்லை என்ற காரணத்திற்காக 1987 ஜூலையிலோ அதற்குப் பின்போ

விடுவிக்கப்பட்டு ஓய்வூதியம் பெறும் நபர் எவரும் என்று பொருள்படும்:

வரம்புரையாக, அனைத்து நேர்வுகளிலும், எந்த ஒரு பிரிவு அல்லது பணி

அல்லது வகை எதிலும் உள்ள ஒரு பணியிடத்திற்கு ஒருமுறை ஆளெடுக்கப்பட்ட

முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், அவருடைய எதிர்காலப் பணியமர்த்தத்திற்காக

ஒரு முன்னாள் இராணுவ வீரருக்கான சலுகையை கோர முடியாது:

8

மேலும் வரம்புரையாக, இராணுவ விதி 13(3)III(V)-ன்படி அவருடைய பணி

இனிமேலும் தேவையில்லை என்ற காரணத்திற்காக 1987-ல் ஜூலைக்கு முன்பு

பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் அல்ல.

(ஓ) "முழு நேர உறுப்பினர்" என்பது எந்தப் பணியில் ஒருவர் முதலில்

பணியமர்த்தம் செய்யப் பெற்றிருக்கிறாறோ அந்தப்பணியில் நிரந்தரப்படுத்தப்

பெற்றிருக்கும் ஓர் உறுப்பினர் என்று பொருள்படும்.

(ஒள) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்.

(க) "பணி ஒன்றின் உறுப்பினர்" என்பது, அந்த பணிக்கு பணிமர்த்தம்

செய்யப் பெற்றிருப்பவரும் ஓய்வு பெறாமலோ பதவி விலகாமலோ, பணிநீக்கம்

அல்லது பணியறவு செய்யப்படாமலோ, வேறொரு பணிக்கு நிலையாக பணிமாற்றம்

செய்யப் பெற்றிராமலோ பணியிறக்கம் செய்யப்படாமலோ அல்லது காலியிடம் நிலை

அல்லாமல் பிறவாறாக விடுவிக்கப் பெற்றிராத ஒருவர் என்று பொருள்படும்;

(ங) "இராணுவப் பணி" என்பது, -

(i) கடற்படை, தரைப்படை அல்லது வான்படை சட்டத்தின் ஆளுகைக்கு

உட்பட்ட (பயிற்சி காலம் உள்ளடங்கலான) எந்த வகையிலுமான பணி, அல்லது;

(ii) கடல்கடந்து அல்லது கடற்படை, தரைப்படை அல்லது வான்படை

தொகுதியில் போர் நடவடிக்கை எதிலும் அல்லாத தரைப்படை, போர்த்தளவாடங்கள்

அல்லது பொருட்குவை அதிகார அமைப்புகளின் கீழ் அல்லது தொழிற்சாலைகளில்

பணிபுரிவதற்கு கட்டுப்பாட்டுடன் (பயிற்சி காலம் உள்ளடங்கலான) பணி; அல்லது;

(iii ) முழு நேரப் பணியில் -

(அ) குடிமை முன்னோடிப் படை, மெட்ராஸ் குடிமை தொழிலாளர்

அலகுகள் அல்லது இலங்கைக்கான மெட்ராஸ் தொழிலாளர் அலகுகள், அல்லது

(ஆ) மைய அரசால் குறித்துரைக்கப்பட்ட ஆயுதப்படை அல்லது பிற

குடிமை பாதுகாப்பு அமைப்பு அல்லது

(இ) அத்தகைய பணியிடம் இராணுவப் பணி என மைய அரசால்

விளம்பப்படுமாயின் 1939-1946 போரினைத் திறம்பட நடத்துவதற்காக

உருவாக்கப்பட்ட அல்லது போர் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி

கொடுப்பதுடன் இணைந்த பணியிடம் எதுவும்.

விளக்கம்.- எந்த ஒரு பணியும் பின்வரும் வரைக்கட்டுகளில் ஏதொன்றும்

நிறைவு செய்யப்பட்டாலன்றி, இராணுவப் பணியாகக் கருதப்படுதல் ஆகாது:-

(i) அது, 1939, செப்டம்பர் 3 அன்று தொடங்கி 1948, நவம்பர் 21 அன்றுடன்

முடிவடையும் காலஅளவிற்குள் ஆற்றியிருத்தல் வேண்டும்;

வரம்புரையாக, அது 1946, ஏப்ரல் 2 அன்றோ அதற்குப் பின்போ

தொடங்கியிருந்தால், அது இராணுவப்பணியாகக் கணக்கிடப்படுதல் ஆகாது;

அல்லது

(ii) அது, 1952 அக்டோபர் 26 அன்று தொடங்கி 1968 ஜனவரி 10 அன்று

முடிவடையும் காலஅளவிற்குள் ஆற்றப்பட்டிருத்தல் வேண்டும்;

(ச) "பணியில் இருத்தல்" என்பது ஒருவர் ஒரு பணியின் ஓர் உறுப்பினராக, -

(i) அத்தகையப் பணி பிரிவின் தொகுதி ஒன்றை கொண்ட ஒரு பணியிடத்தின்

பணிகளை புரிந்து வரும் போது அல்லது அத்தகைய பணிக்காக வகுத்துரைக்கப்பட்ட

தகுதிகாண்பருவம், போதனை அல்லது பயிற்சி இவற்றை மேற்கொள்ளும்போது;

(ii) அவர் பணியேற்பிடை காலத்தின்போது, அல்லது;

9

(iii) அவர் பணியில் சேருவதற்கான சமயத்தில் இருக்கும் போது, அல்லது

பருவ விடுமுறையின் போது அல்லது அதிகாரம் பெற்ற விடுமுறைகளின்

போது அல்லது தற்செயல்விடுப்பை முறைப்படுத்தும் அரசால் வெளியிடப்பட்ட

நெறியுறுத்ததங்களின் படி எடுக்கப்பட்ட தற்செயல் விடுப்பில் இருக்கும் போது

பணிக்கு வாராதுபோது அத்தகைய வாராமைக்கு ஒட்டி முன்பும் ஒட்டி பின்பும்

பணியில் இருந்திருக்கும் போது;

(iv) அவர் விடுப்பிலிருந்து திரும்புவதின்பேரில் நியமன ஆணைகளுக்காக,

கட்டாயமாக காத்திருக்கும்போது, பணியில் உள்ள ஒரு நபர் என்று பொருள்படும்.

(ஞ) "பணி ஒன்றில் தகுதிகாண் பருவத்தினர்" என்பது ஒருவருக்கு

பொருந்தத்தக்க சிறப்பு விதிகளில் வகுத்துரைக்கப்பட்டவாறு தகுதிகாண்

பருவத்தில் வைக்கப்பட்டிருந்து தகுதிகாண் பருவத்தை முடித்திராத அந்தப் பணியில்

உள்ள ஓர் ஒறுப்பினர் என்று பொருள்படும்.

(ட) "பதவி உயர்வு" என்பது, பணியின் அல்லது பணிப் பிரிவின் எந்த வகை

அல்லது நிலை உறுப்பினரையும் அத்தகைய பணியின் அல்லது பிரிவின் உயர் வகை

அல்லது நிலை ஒன்றிற்கு பணியமர்த்தம் செய்தல் என்று பொருள்படும்.

(ண) "நேரடி ஆளெடுப்பு" என்பது பணி நாடுபவர் ஒருவர், பணி, பிரிவு, வகை

அல்லது பணியிடம் ஒன்றுக்கான அவருடைய முதல் பணியமர்த்தும் ஆணையத்துடன்

கலந்தாய்வு செய்த பின்பு செய்யப்பட வேண்டியிருக்கும் நேர்வில் ஆளெடுப்பதற்கான

விண்ணப்பங்களை அழைக்கும் அதன் அறிவிக்கையின் தேதியன்றும் பிற நேர்வு

எதிலும், அதற்கு அவரது முதல் பணியமர்த்தத்தின் சமயத்திலும், அவர் மைய

அரசின் அல்லது ஒரு மாநில அரசின் பணியில் இல்லாதிருக்கும் போது அந்த பணி,

பிரிவு, வகை அல்லது பணியிடம் ஒன்றிற்கு "நேரடியாக ஆளெடுக்கப்பட்டவர்" என

சொல்லப்படுவார்:

வரம்புரையாக, இந்த பொருள் வரையறையின் நோக்கங்களுக்காக ஒருவர்,

(i) இந்திய அரசின் அல்லது ஒரு மாநில அரசின் பணி ஒன்றுக்கு

தம் முதல் பணியமர்த்தத்திலிருந்து ஐந்து ஆண்டுகள் கால அளவு ஒன்று

கழிவுறாதிருக்குமானால்; அல்லது

(ii)அவர், பட்டியலில் கண்ட சாதியினர் அல்லது பட்டியலில் கண்ட பழங்குடியினர்

அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சார்ந்தவராக இருப்பாராயின்,

அவர் இந்திய அரசின் அல்லது ஒரு மாநில அரசின் பணியில் இல்லாதவரென

கொள்ளப்பெறுவார்.

(த) பணி மாற்றம் மூலமாக ஆளெடுப்பு பணிக்கு விண்ணப்பித்துள்ள ஒருவர்-

(i) அதற்கான தம் முதல் பணியமர்த்தத்தின் சமயத்தில், அவர் மெட்ராஸ்

உயர்நீதிமன்றப் பணியில் அல்லது பிற பணி எதிலும் ஒரு தகுதிகாணப்

பெற்றவராகவோ இருப்பாராயின், அதற்கான விதிகள் அதன் உறுப்பினர்களுக்காக

தகுதிகாண் பருவ கால அளவு ஒன்று வகுத்துரைக்குமானால்; அல்லது

(ii) அதில் அவரது முதல் பணியமர்த்தத்தின் சமயத்தில், வேறொரு பணியில்

உள்ளடக்கப்பட்டு அதற்கு தகுதிகாண் பருவம் வகுத்துரைக்கப்படாதிருக்கும்

பணியிடம் ஒன்றை வகிக்கிற நேர்வில், அவர் அந்தப் பணியிடத்தில் மூன்று

ஆண்டுகள் தொடர்ச்சியான கால அளவு ஒன்றுக்குள் இரண்டு ஆண்டுகள்

மொத்தக் கால அளவு ஒன்றுக்கு அந்தப் பணியிடத்தில் மனநிறைவான பணி

புரிந்திருப்பாராயின், அவர் பணிமாற்றம் மூலமாக ஆளெடுக்கப் பெற்றவராகச்

சொல்லப்படுவார்.

10

விளக்கம்.- பணி ஒன்றுக்கான சிறப்பு விதிகள் அந்தப் பணிக்கு அல்லது அதன்

பிரிவு அல்லது வகை எதற்கும் குறித்துரைக்கப்பட்ட பணி, பிரிவு அல்லது வகைக்கு

விண்ணப்பித்தவர் ஒருவர் அவர் பிற பணி பிரிவு அல்லது வகை எதிலும் ஒரு முழு

உறுப்பினராகவோ ஒரு தகுதிகாணப் பெற்றவராகவோ இருப்பதற்கு உட்பட்டு

அத்தகைய ஆளெடுப்பின் நோக்கங்களுக்காக, அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட

பணி, பிரிவு அல்லது வகையில் ஒரு முழு உறுப்பினராகவோ அல்லது தகுதிகாணப்

பெற்றவராகவோ இருக்கத் தேவையில்லை.

(ந) "பணிக்கு ஆள் எடுக்கும் முகமை" என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர்

தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு

வாரியம், தமிழ்நாடு மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மற்றும் பணியமைப்பு

அதற்குமான பணியமர்த்திற்கான விண்ணப்பதாரர்களைத் தேர்தெடுப்பதற்காக

அமைக்கப்பட்ட பிற அமைப்புகள் என்று பொருள்படும்;

(ப) "காப்புப்பட்டியல்" என்பது, முறையான பட்டியலில் பொது

சுழற்சி உள்ளடங்கலாக ஒவ்வொரு ஒதுக்கீட்டு தொகுதியின் பணிக்கு

விண்ணப்பித்தவர்களில் 25 சதவீதம் குறையாதவர்களை அடக்கும் வகையில்

தயாரிக்கப்படும் ஒரு பட்டியல் என்று பொருள்படும் மற்றும்.

(ம) "இணைப்புப் பட்டியல்" என்பது, இந்தச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள

பட்டியல் என்று பொருள்படும்.

(ய) "பட்டியலில் கண்ட சாதியினர்" என்பது, இந்தப்பகுதிக்கான

இணைப்புப்பட்டியல் II-இன் பகுதி அ-வில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தினர் என்று

பொருள்படும்:

விளக்கம்.- இந்து அல்லது சீக்கிய அல்லது புத்த சமயங்களிலிருந்து

மாறுபடும் சமயம் ஒன்றை ஒம்பிவரும் நபர் எவரும் ஒரு பட்டியலில் கண்ட

சாதியினரின் உறுப்பினராக கொள்ளப்படுதல் ஆகாது:

வரம்புரையாக இந்த விளக்கத்தில் அடங்கியுள்ள எதுவும் 1990, ஜூன்

3-ஆம் தேதி 2008, ஆகஸ்ட் 1&ஆம் தேதி வரையிலுள்ள அளவின் போது

வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் செய்யப்பட்ட தெரிவுகள் அல்லது

பணியமர்த்தங்கள் ஆகியவற்றை எதிராக பாதித்தல் ஆகாது

(ர) "பட்டியலில் கண்ட பழங்குடியினர்" என்பது, இந்த பகுதிக்கான இணைப்புப்

பட்டியல் II-ன் பகுதி-ஆ வில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தினர் என்று பொருள்படும்.

(ல) "பணி" என்பது, சார்நிலை அல்லது, நேர்வுக்கேற்ப, ஒரு மாநில பணி

என மாநில அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் தொகுதியினர் என்று

பொருள்படும்;

விளக்கம்.- தருவாய் அவ்வாறு வேண்டுறுத்தும் போது, "பணி என்பது மேலே

பொருள் வரையறை செய்யப்பட்டவாறு ஒருவர் எந்த காலஅளவின் போது பணியிடம்

ஒன்றை அல்லது பணியிடம் ஒன்றில் மீள் உரிமை ஒன்றை வகித்து வரும் கால அளவு

என்று பொருள்படும்.

(வ) "சிறப்பு விதிகள்" என்பது, ஒவ்வொரு பணிக்கும் அல்லது பணியின்

பிரிவிற்கும் பொருந்தத்தக்க தமிழ்நாடு மாநில மற்றும் சார் நிலைப்பணி

விதிகள் பகுதி III-ல் உள்ள விதிகள் என்று பொருள்படும்.

(வ.அ) "போர் பணி" என்பது,-

(i) கடல்கடந்த பணிக்கோ அல்லது போர் நடவடிக்கைப் பகுதி எதிலுமோ

அல்லது இந்திய தேசியப்படை (INA) யிலோ உள்ளாகும் தொகுதி அல்லது

அமைப்பு ஒன்றில் எந்த வகையிலுமான பணி என்றும்;

11

(ii) கடல்கடந்த பணிக்கோ அல்லது போர் நடவடிக்கைப் பகுதி எதிலுமோ

பணிபுரிய உள்ளாகும் இராணுவம், படைக்கலன்கள் அல்லது பொருட்குவைகள்

அதிகார அமைப்பின் கீழோ தொழிற்சாலைகளிலோ இந்தியாவில் ஆற்றும் பணி

என்றும்;

(iii) கடற்படை, தரைப்படை அல்லது வான்படைச் சட்டத்தின் ஆளுகைக்கு

உட்படும் பிற பணி அனைத்தும் என்றும்;

(iv) கடல்கடந்த பணி அல்லது போர் நடவடிக்கைப் பகுதி எதிலும் கடப்பாடு

உள்ளாகும் தரைப்படைத் தொகுதி அல்லது அமைப்பு ஒன்றுடன் பயிற்சிக் காலம்;

(v) வேறு வழிகளில் போரிடும் படைகளுக்கு ஆற்றப்படும் மதிப்புமிகு பணி;

உதாரணம் ஆளெடுப்பு மூலமாக;

(vi) ஆயுதபடையிலோ அல்லது மைய அல்லது மாநில அரசால் இதற்கென

குறித்துரைக்கப்பட்ட பிற குடிமை பாதுகாப்பு அமைப்பு எதிலும் உள்ள பணி;

(vii) அப்போதைக்குச் செயலாற்றலிலுள்ள சட்டம் எதனின் வகையங்களின்படி

தகுதிறமுள்ள அதிகார அமைப்பு ஒன்றினால் ஒருவர் மேற்கொள்ளப்பட

வேண்டுறுத்தப்பட்ட போர்தொடுத்தலுடன் தொடர்புடைய பணி;

(viii) பின்வருவனவற்றில் எதிலும் உள்ள பணி:-

(அ) தேசிய போர் முன்னணி அமைப்பு;

(ஆ) உருமறைப்பு அமைப்பு;

(இ) சிறு தொழில்கள் மூலமாக போர் பொருள் வழங்கல்கள்

உற்பத்திக்கான சிறப்பு அமைப்பு;

(ஈ) போர் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பயிற்சியளிப்பதுடன் இணைந்த

பணியிடம் எதுவும், அத்தகைய பணியிடத்தில் ஆற்றப்படும் பணி, இராணுவப் பணி

என மைய அரசால் விளம்பப்பட்டிருக்குமானால்,

(உ) கடலோர ரோந்துப் பணியில் உள்ள சிறப்பு கோட்டைக் காவலர்

பணியிடம்; மற்றும்

(ஊ) இந்தியாவை அளவாய்வு செய்யவும் பணி தற்காலிகமாக இருந்து

கடல் கடந்த பணிக்குக் கடப்பாடு உள்ளாகும் நேர்வு ;

விளக்கம்.- (1) மேலே குறித்துரைக்கப்பட்ட வகைகளில் எதிலும் உள்ள முழு

நேரப் பணி மட்டுமே போர்ப் பணியாக ஏற்பளிக்கப்படும்.

(2) குடிமை முன்னோடிப் படை, மெட்ராஸ் குடிமை தொழிலாளர் தொகுதிகள்

மற்றும் இலங்கைக்கான மெட்ராஸ் தொழிலாளர் தொகுதியினர் இவற்றில் உள்ள

பணிக்கூறு (iii ) இன் நோக்கத்திற்குள் வருவதாகக் கொள்ளப்படும்.

(3) மேலே குறித்துரைக்கப்பட்ட வகைகளில் எதிலும் உள்ள பணி அவர்களுடைய

விடுவிப்பு உறுதிச் சான்றிலோ பிற ஆவணங்களிலோ "நடுநிலை" அல்லது

"மோசம்" என குறிப்புரை கொடுக்கப்பட்டிருக்கும் நபர்கள் இந்த விதிகளினால்

அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகளுக்குத் தகுதியுடையவர் ஆகார்.

(4) தரைப்படை, கடற்படை, வான்படை இவற்றிலிருந்தோ அல்லது போர்ப்

பணியின் பிற வகை எதிலுமிருந்தும் கீழே குறித்துரைக்கப்பட்டவையாக அல்லாத

பிற காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டிருக்கும் நபர்கள், இந்த விதிகளினால்

அனுமதிக்கப்படும் சலுகைகளுக்குத் தகுதியுடையவர் ஆகார்.

12

(i) மருத்துவ ஆலோசனையின் படி இயலாதவர்கள்

(ii) படைக் கலைப்பு

(iii) போர் நடவடிக்கை நிறைவடைதல்

(iv) திறமையான ராணுவ வீரர் அல்லது விமானி முதலானோராக ஆவதற்குக்

கூடாதவர்கள்

(v) இனிமேலும் தேவைப்படாத பணிகள்

(vi) நற்குணம் சோதிக்கப்படாமை

(vii) கருணை அடிப்படை காரணங்கள்

(viii) பணிக்குப் பொருத்தமின்மை

(ix) கீழ்நிலைத் தரம்

(5) பணியானது, 1939-1946 போருடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.

வகைப்படுத்துதல். 4. அரசுப் பதவி வகிக்கும் நபர்கள் பின்வரும் நான்கு தொகுதிகளில்

வகைப்படுத்தப்படுவர், அவர்களாவர்:-

தொகுதி -A : ரூ. 6,600 அதற்கு மேல் பதவி நிலை சம்பளம் பெறுகின்ற

பணியிடங்களின் பணியாளர்கள்;

தொகுதி-B : ரூ. 4,400 அதற்கு மேல் ஆனால் ரூ 6,600 க்கு கீழ் பதவி நிலை

சம்பளம் பெறுகின்ற பணியிடங்களின் பணியாளர்கள்;

தொகுதி- C : ரூ. 1,400 அதற்கு மேல் ஆனால் ரூ.4,400 க்கு கீழ் பதவி

நிலை சம்பளம் பெறுகின்ற பணியிடங்களின் பணியாளர்கள்;

தொகுதி-D: ரூ.1,300 பதவி நிலை சம்பளம் பெறுகின்ற பணியிடங்களின்

பணியாளர்கள்.

5. தமிழ்நாடு குடிமுறை அரசு பணிகள் (ஓழுங்கு மற்றும் மேல்முறையீடு)

விதிகள், சம்பள இணைப்பு பட்டியல் உள்ளடங்கலான பணித்தொகுதிகளின்

சம்பளத்தை ஒழுங்கு முறைப்படுத்தும் விதிகள், 1973&ஆம் ஆண்டு தமிழ்நாடு

சம்பளம், படித்தொகைகள், விடுப்பு, விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற பணி வரைக் கட்டுகள்

அரசு ஊழியர் நடத்தை விதிகள், அடிப்படை விதிகள், 1933 ஆம் ஆண்டு

தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1978&ஆம் ஆண்டு ஓய்வூதிய விதிகள் எந்த அளவிற்கு

கூடுமோ அந்த அளவிற்கு பொருந்துதல் வேண்டும் மற்றும் இந்த விதிககளில்

வெளிப்படையாக வழங்கப்பட்டதை நீட்டிப்பதை தவிர, அவர்களின் சம்பளம்,

படித்தொகை, பிடிப்பு, விடுப்பு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற வகைக் கட்டுகளின்

ஒவ்வொரு பணியாளர் தொகுதிக்குள் வரும் உறுப்பினர்களுக்கு பொருந்துதல்

வேண்டும்:

வரம்புரையாக, சிறப்பு விதிகளில் பிறவாறாக வெளிப்படையாக வகை

செய்யப்பட்டவாறல்லாமல் இந்த விதிகளில் அடங்கியுள்ள எதுவும், 1978 ஆம் ஆண்டு

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் 16 ஆம் விதியின் வகையங்களின் செயல்பாடு ,

இராணுவ ஓய்வூதியம் எந்த ஒரு உறுப்பினர் பணிக்காலத்தில் பெறப்பட்டதோ அந்த

உறுப்பினரின் சம்பள அறுதியிடுதலுடனான தொடர்பில் இருத்தலாகாது:

13

மேலும் வரம்புரையாக, நபர் ஒருவர் இந்தியஅரசியலமைப்பின் 258 ஆம்

உறுப்பின் (1) ம் கூறின் வகையகங்களை செயற்படுத்துவதில் மைய அரசிற்கு

பதிலான செயற்பணிகளை முகவர்களினால் செய்து முடிக்கின்ற ஒரு துறையினால்

அமர்த்தபட்டு மைய அரசினால் அதன் பொருட்டு வழங்கப்பட்ட விதிகளினால்

அவரின் விடுப்பு மற்றும் ஓய்வூதியம் போன்ற பொருட்பாட்டினை முறைப்படுத்துதல்

வேண்டும்:

இன்னும் வரம்புரையாக, மேற்சொல்லப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறை

விதிகள் ஆளுநரின் செயலக உறுப்பினர்களுக்கு பொருந்தச்செய்கையில்

அந்த விதிகள் மற்றும் ஒழுங்குமறை விதிகளின் படியான மாநில

அரசின் செயற்பணிகள் ஆளுநரின் செயற்பணிகளாக இருப்பதாகப் பொருள்

கொள்ளப்படுதல் வேண்டும்.

பணிமுறை தரநிலை.

6. பணி, வகை, இனம் மற்றும் தரவரிசை ஒவ்வொன்றின் நிரந்தர

படிநிலையானது மாநில அரசால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.

ஒப்புதலளிக்கப்பட்ட 7. (i) மாநில அல்லது தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி

அல்லது வகை அல்லது இனம் அல்லது படிநிலைக்கு, நேரடி நியமனம்

விண்ணப்ப தாரர்கள்.

மூலமாகவாயினும் அல்லது மாற்றுபணி மூலமாகவாயினும் அல்லது பதவி உயர்வு

மூலமாகவாயினுமான முதல் பதவியமர்த்துக்கள் அனைத்தும், ஒப்புதலளிக்கப்பட்ட

விண்ணப்பதாரர்களின் பட்டியலிலிருந்து பதவியமர்த்தும் அதிகார

அமைப்பினால் செயல்படுதல் வேண்டும். அதேப் பணியில் ஒத்த சம்பள

ஏற்ற முறையிலுள்ள ஒருவகை பதவியிலிருந்து மற்றொரு பதவிக்கு மற்றும்

ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்திற்கு மாற்றல் மூலம் செய்யப்படும்

பதவியமர்த்தங்கள் அனைத்தும், ஒப்புதளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்

பட்டியலிருந்து பதவியமர்த்தும் அதிகாரியினால் செய்யப்படுதல் வேண்டும்.

இந்த விதிகளின் XI-ஆம் இணைப்பு பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட

முறையில் பதவியமர்த்தும் அதிகாரியினால் அல்லது இதன் பொருட்டு

சிறப்பு விதிகளில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள பிற அதிகார அமைப்பு

எதனாலும் அத்தகைய பட்டியல் தயார் செய்யப்படுதல் வேண்டும் மற்றும்

பதவியமர்த்தும் அதிகாரியின் அலுவலகத்திலுள்ள அறிவிப்பு பலகையில்

காட்சிக்கு வைக்கப்படுதல் வேண்டும். அந்த பட்டியல் அதில் சம்பந்தப்பட்ட

நபர்களுக்கு எவருடைய பெயர்கள் காணப்படுகிறதோ அவர்களுக்கு

பதிவு அஞ்சலிலும், அதோடுகூட பட்டியலில் எவருடைய பெயர்கள்

சேர்க்கப்படவில்லையோ மிகவும் இளநிலையில் உள்ளவர்களுக்கு

முதியவர்களாக இருக்கின்ற நபர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

அத்தகைய பட்டியலில் உள்ள விண்ணப்பதார்கள், அந்தப் பணிக்குரிய

முந்துரிமை பதவியமர்த்தம் செய்யும் வரிசையில் சீராக வைக்கப்படுதல்,

அத்தகைய வரிசைப்படி செய்யப்படுதல் வேண்டும்.

14

வரம்புரையாக: தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளிலுள்ள

பதவிகளின் வகைகள் அனைத்திற்கும் பதவியுயர்வு மூலமும், மாற்றுப் பணி மூலமும்

செய்யப்படும் பதவியமர்த்துகைக்கான ஒப்புதளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்

பட்டியல், அந்த ஆண்டின்போது ஏற்படுவதாக எதிர்ப்பார்க்கப்படும் காலியிடங்களின்

மதிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு எதிராக ஆண்டுதோறும் தயார் செய்யப்படும்

மதிப்பிடப்பட்ட காலியிடங்கள், அந்த வகையிலுள்ள நிரந்தர பதவியின் மொத்த

எண்ணிக்கை, இருந்து வரும் தற்காலிக பதவிகளின் எண்ணிக்கை, அடுத்த

ஆண்டில் ஒப்பளிக்கப்படுவதாக எதிர்ப்பார்க்கப்படும் புதிய பதவிகள், அடுத்த

ஆண்டில் விடுப்பிற்காக ஒதுக்கப்பட்ட பதவிகளின் அமர்த்துகை, ஓய்வு, பதவியுயர்வு

முதலியவையின் பொருட்டு ஏற்படுவதாக எதிர்ப்பார்க்கப்படும் காலியிடங்கள்

மற்றும் அந்த வகையில் ஏற்கனவே இருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை

ஆகியவற்றை கணக்கில் கொண்டு தயார் செய்யப்படும். அவ்வாறு தயார்

செய்யப்பட்ட ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் ஓராண்டு கால

அளவிற்கு மட்டுமே நடைமுறையிலிருக்கும் மற்றும் அந்த ஆண்டின் முடிவில்

காலாவதியாகிவிடும். முந்தைய பட்டியலில் உள்ளடக்கப்பட்டு ஆனால் நியமனம்

செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் பெயர்கள் ஓராண்டு கால அளவிற்கு மட்டுமே

நடைமுறையிலிருக்கும் மற்றும் அந்த ஆண்டின் முடிவில் காலாவதியாகிவிடும்.

முந்தையப் பட்டியல் தயாரிக்கப்படும்போது, முதுநிலையில் உள்ளவர்களுடன்

அடுத்தாண்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்கு தகுதியுடையவர்களாக

இருப்பார்களானால், அவர்கள் தகுதி உடையவர்களாக இருப்பதன்

காரணமாக அல்லது அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக தகுதியற்றவர்களாக இருப்பதன்

காரணமாக இருப்பார்களானால், முந்தைய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, ஆனால்

பதவியமர்த்தம் செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்படும்:

மேலும் வரம்புரையாக: காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அத்தகைய

பட்டியல்கள் தயார் செய்வதற்காக, வகை, இனம் அல்லது பணியிலுள்ள பணிமூப்பு

பட்டியலிலுள்ள தகுதியுடைய விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் (பின்னங்கள்

அடுத்த முழு எண்ணாக ஆக்கப்படும்) பின்வரும் விகிதங்களில் பரிசீலனை

செய்யப்படும்:-

காலிப் பணியிடங்களின் பரிசீலக்கப்படவேண்டிய தகுதியுடைய

எண்ணிக்கை

விண்ணப்பதாரர்களின் பெயர்

1-20 மதிப்பிடப்பட்ட காலியிடங்களின் உள்ளபடியான

எண்ணிக்கையின் 200%

21-80 குறைந்தப்பட்சம் 40-க்கு உட்பட்டு மதிப்பிடப்பட்ட

காலியிடங்களின் உள்ளபடியான எண்ணிக்கையின்

175 %

81 மற்றும் அதற்கு மேல் குறைந்தபட்சம் 140-க்குட்பட்டு மதிப்பிடப்பட்ட

காலியிடங்களின் எண்ணிக்கையின் 150 %

மேலும் வரம்புரையாக: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய

கோரிக்கைகள் பரிசீலக்கப்பட்ட பின்பு அந்தப்பதவிக்குத் பொருத்தமற்றவராக

காணப்படுவாரானால், தேவையான அளவுக்கு அடுத்து தகுதியுடைய

விண்ணப்பதாரரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்:

15

மேலும் வரம்புரையாக: ஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடம் பொறுத்து பிற்பட்ட

வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்கள் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர் மற்றும் பட்டியலினத்தவரல்லாத இனத்தவர் அல்லது பட்டியலினத்தவர்

அல்லது பட்டியல் பழங்குடியினரை சேர்ந்த விண்ணப்பதாரரிடையே இருந்து

நிரப்பப்படுதல் வேண்டும். கிடைக்கக்கூடிய தன்மைக்கு உட்பட்டு, நேர்வுக்கேற்ப,

பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அல்லது மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் பட்டியலினத்தவரல்லாத இனத்தவர் அல்லது

பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த முதல் இரண்டு

தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும் மற்றும்

நேர்வுக்கேற்ப பிற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு இஸ்லாமியர்கள்

அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலினத்தவரல்லாத

இனத்தவர் அல்லது பட்டியலினத்தவர் அல்லது பட்டியல் பழங்குடியினரை சேர்ந்த

முதல் இரண்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பொறுத்துமற்றவர்களாக

காணப்படுவார்களானால், அந்த ஒதுக்கீடு செய்யப்ட்ட இனத்தைச் சார்ந்த

அடுத்த இரண்டு தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள்

பரிசீலனை செய்யப்படும். பரிசீலனைக்காக இருக்கக்கூடிய அந்த ஒதுக்கீடு

செய்யப்பட்ட இனத்தைச் சார்ந்த வகை இனம் அல்லது பணிமூப்புப் பட்டியலிலுள்ள

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் எவரும் இல்லாத போது, ஒதுக்கீடு செய்யப்பட்ட

காலிப்பணியிடம் எதுவும் நிரப்பப்படாமல் விட்டுவைக்கப்படுவதில்லை.

பொதுப்பிரிவு மூலம் நிரப்பப்பட வேண்டிய காலியிடம் பொறுத்து வகுப்பு, இனம்

அல்லது பணியிலுள்ள பணிமூப்பு நிலையில் பிற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்

பட்ட வகுப்பு இஸ்லாமியர்கள்அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

மற்றும் பட்டியலினத்தவரல்லாத இனத்தவர் அல்லது பட்டியலினத்தவர் அல்லது

பட்டியல் பழங்குடியினரை சேர்ந்தவர்கள் உள்ளடங்கலாக தகுதியுடைய

விண்ணப்பதாரர்களின் பெயர்களும் கூட பரிசீலனை செய்யப்படும்:

மேலும் வரம்புரையாக, துறைத்தலைமை பதவியிலுள்ள காலியிடங்களை

நிரப்புதல் பொறுத்து பரிசீலனை செய்யப்படவேண்டிய தகுதியுடைய

விண்ணப்பதாரர்களின் பெயர்களின் எண்ணிக்கையானது, வகுப்பு, இனம் அல்லது

பணியிலுள்ள காலியிடங்களையும் எண்ணிக்கையின் இரண்டு மடங்குடன் சேர்த்து

பணிமூப்பு பட்டியலிலுள்ள மூன்று என்று நிர்ணயிக்கப்படும்.

விளக்கம் I.

ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பதாரரின் பட்டியலுக்கான செல்லுந்தன்மையின்

ஓராண்டுக் கால அளவு, தகுதியுடைய அதிகாரியினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தோர்

பெயர்ப்பட்டியலின் ஒப்புதல் தேதியிலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

விளக்கம் II.

ஆணையத்தின் வரம்பிற்குட்பட்ட பணியிடங்களுக்கான பணியமர்த்தத்தை

பொறுத்த வரை பணியின் உடனடி தேவைகளை சமாளிக்கும் பொருட்டும்

நிருவாக காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் முறையான பட்டியல்களுக்கான

நிர்ணயிக்கப்பட்ட தேதியன்று உள்ள தகுதியை குறித்த வகையில் மேற்சொன்னவாறு

தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படலாம். முறையான பட்டியலுக்காக

நிர்ணயிக்கப்பட்ட உரிய தேதியன்று உள்ள தகுதியை குறித்த வகையில் ஒரு முறை

தற்காலிகப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தகுதியான விண்ணப்பதாரர் ஒருவர்

அவருடைய தற்காலிக பணி அமர்தலுகான உரிமைகள் காக்கப்படுதல் வேண்டும்

மற்றும் அந்த உரிய தேதியில் தகுதியில்லாத ஒருவர் தற்காலிக பட்டியலில்

சேர்க்கப்படாமல் அல்லது பிந்தியதாக தகுதிபெற்ற ஒருவருக்கு உள்ள முந்துரிமையில்

அவர் கருத்தில் கொள்ளப்படாமல் இருத்தல் ஆகாது. தற்காலிகப் பட்டியலானது

முறையான பட்டியல் ஏற்பளிக்கப்பட்டு அந்த முறையான பட்டியல் வகையில்

முறையான பணியமர்த்தங்கள் செய்யப்படும் முறையில் தற்காலிக பணியமர்த்தங்கள்

கொடுப்பதற்காக ஏற்று மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

16

விளக்கம் III.

தற்காலிக பட்டியல் எதுவும் ஆணைத்துடன் கலந்தாய்வு செய்வது

தேவைப்படாத பணியிடங்கள் கொடுத்து தயாரிக்கப்படுதல் ஆகாது மற்றும்

தயாரிக்கப்பட்ட பெயர்பட்டியல் எதுவும் இருப்பின், அது முறையான ஒன்றாக

இருத்தல் வேண்டும்;

மேலும் வரம்புரையாக: "நெகிழ்வான உயர்வு" திட்டத்தின்படி உயர் தற்காலிக

பணியிடங்களுக்கு உயர்வுக்கு வகைசெய்யப்பட்டு இருக்கும் இடத்தெல்லாம்

ஓராண்டின் ஜுன் 1-ஆம் நாளிலிருந்து அதற்கு அடுத்த ஆண்டின் மே 31-ஆம் நாள்

வரையிலான கால அளவின்போது பத்து ஆண்டுகள் மனநிறைவான பணி முடித்து

அடுத்த உயர்பணியிடத்திற்கான உயர்வுக்கு பொருத்தமாக இருக்கும் நபர்களின்

பெயர் பட்டியல் ஒன்று பத்து ஆண்டுகள் மனநிறைவான பணி முடிப்பதன் பேரில்

உயர்வு ஒப்பளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தயராக வைக்கப்படுதல்

வேண்டும்.

பத்து ஆண்டுகள் கால அளவினை கணிக்கையில் படித்தொகைகள் இன்றி

அசாதாரண விடுப்பாக அல்லது பிற வகுப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல்

வேண்டும். கீழ்நிலைப்பணியில் உள்ள பத்தாண்டு கால அளவானது அந்தப்

பணியிடத்திற்கான முறையான பணியமர்த்த தேதியிலிருந்து கணிக்கப்படும்.

ஆனால் பதவியிறக்க கால அளவுகள் உள்ளடங்காது. அவ்வாறு தயாரிக்கப்படும்

பெயர்பட்டியலானது முறையான வரிசைப்படியில் உயர்பணியிடங்களுக்கான

பணியமர்த்தத்துக்கான பெயர்ப்பட்டியலை தயாரிப்பதற்காக ஆணையத்துடன்

கலந்தாய்வு செய்வது தேவைப்படும் பணியிடங்கள் பொறுத்து தவிர முறையான

வரிசைப்படி உயர்பணியிடங்களுக்கு பதவி உயர்வுகளுக்காக பயன்படுத்தப்படுதல்

வேண்டும்.

விளக்கம். - நெகிழ்வு உயர்வு" திட்டமானது, கீழ்பணியிடத்தில் பத்தாண்டுகள்

மனநிறைவான பணிகள் முடிப்பதன்பேரில், அடுத்த உயர் பணியிடங்களுக்கு

உயர்வுக்கு வகை செய்கிறது.

(2) ஒரு விண்ணப்பதாரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்கான

ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறவிடத்து

அத்தகைய விண்ணப்பதாரரை முதலில் பணியமர்த்துவதற்கு புரிவுரை செய்கிற

பணியமர்த்தம் அலுவலர் அவர் எந்தப் பணியில் பணியமர்த்தப்பட விரும்புகிறாறோ

அந்தப் பணியை தேர்வு செய்யும்படி அவரை வேண்டுறுத்தலாம். அவ்வாறு

தேர்ந்தெடுப்பதன்பேரில், அந்த விண்ணப்பதாரரின் பெயர் அவர் பணியமர்த்தப்பட

விரும்பாத பணி அல்லது பணிகளுக்கான ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்

பட்டியல் அல்லது பட்டியல்கள் இருந்து நீக்கப்படுதல் வேண்டும்.

(3) பணி எதற்காகவும் அல்லது அதன் பிரிவு அல்லது வகை எதற்காகவுமான

ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவர் அவர் எந்தப்பணி, பிரிவு, அல்லது

வகைக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறாறோ அந்தப்பணி, பிரிவு அல்லது

வகைக்கு பணியமர்த்தப்படுவதற்கு முன்பு தேசிய நெருக்கடி நிலைத் தொடர்பான

தரைப்படையில் சேரும் அல்லது அத்தகைய இராணுவப்பணியில் இருக்கும்

குடிமையியல் பணி ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அதற்கான பணி அல்லது பிரிவு

அல்லது வகைக்கு பணியமர்த்ததிற்காக ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்

பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் ஒருவர் அவர் உரியவாறு திரும்பிவருவதன்

பேரில் இராணுவப்பணியின் பேரில்அவர் வாராதுயிருப்பராயின் அவர் அவ்வாறு

பணியமர்த்தம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய தேதியிலிருந்து நடைமுறைக்கு

வருவதான அத்தகைய பணி, பிரிவு அல்லது வகைக்கு பணியமர்த்தப்படுதல்

வேண்டும். அவ்வாறு பணியமர்த்தப்படும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்

வகையில், தம்முடைய இராணுவப்பணிக்காலத்தை குடிமை பணியிடத்தில்

தகுதிகாண் பருவத்தின் பொருட்டு கணக்கிடப்படுவதற்கு உரிமையுடையவராக

இருப்பார். அவர் அதேதேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குடிமை17 பணியிடத்திற்கு பொருந்தத்தக்க சம்பளகட்டுக்கு வந்திருப்பதாக கொள்ளப்படுவார்.

இராணுவப்பணியானது அந்த இராணுவப்பணியை அவர் மேற்கொள்ளாது

இருந்திருப்பாராயின் அவருக்கு அனுமதிக்கதக்கதாக இருந்திருக்கக்கூடிய அதே

முறையில் அவர் தகுதியுடையவராக இருந்திருக்கும் சம்பள ஏற்றமுறையில் அல்லது

சம்பள கட்டில் ஊதிய உயர்வுகளுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல்

வேண்டும். இராணுவப்பணியிலிருந்து விடுவிக்கப்படுவதன் பேரில், அவர்

அத்தகைய விடுவிப்பு தேதியிலிருந்து ஆறுமாதங்கள் காலஅளவு ஒன்றுக்குள்

குடிமைப்பணியை மேற்கொள்ளுதல் வேண்டும் மற்றும் அதன்பின்பு இந்த

உட்பிரிவின்படி இராணுவப்பணிக்கான காலத்தை கணக்கில் எடுத்து கொண்ட

பின்பு, எஞ்சியிருக்கும் தகுதிகாண் பருவ கால அளவில் அத்தகைய பகுதியை

செய்வதற்கு உள்ளாகுதல் வேண்டும். அவர் சிறப்பு விதிகளில் இராணுவப்பணியில்

இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு குடிமைப்பணியிடத்தில் சேர்ந்ததேதியில் இருந்து

மேற்சொன்ன சிறப்பு விதிகளில் வகுத்துரைக்கப்பட்டிருக்கலாகும் அல்லது

வகுத்துரைக்கப்பட்ட கால அளவு ஒன்றுக்கு அல்லது அத்தகைய பிற காலஅளவிற்கு

சமமான கால அளவு ஒன்றுக்குள் வகுத்துரைக்கப்பட்டிருந்திருக்கலாகும்

அத்தகைய பயிற்சியை மேற்கொள்ளுதலும் அத்தகைய தேர்வுகளில் தேர்ச்சி

பெறுதல் வேண்டும்:

வரம்புரையாக: இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாதங்கள் கால

வரம்பானது இராணுவப்பணியின் போது காயம் உள்ள அல்லது அந்தக்காலத்திற்குள்

அவருடைய குடிமைப்பணியிடத்தை மேற்கொள்வதற்கு அத்தகைய பணியின்

விளைவாக பிறவாறாக தகுதியின்மை அடைந்திருக்கிற நபர் ஒருவருக்கு

பொருந்தாது. இராணுவப் பணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து

பதவியமர்த்தம் செய்யும் அதிகார அமைப்பால் வழங்கப்படலாகிறவறான இரண்டு

ஆண்டு காலத்திற்குள் அல்லது அத்தகைய மேலுமான காலத்திற்கு அவர்

பணியில் சேருவதற்குத் தகுதியுடையவராக இருப்பார் என மருத்துவ ஆய்வின்

பேரில் விளம்புகை செய்யப்பட்டுள்ளதற்குப் பின்பு அவர் அவருடைய குடிமைப்பணி

பதவிக்கு சேர்த்துக்கொள்ளப்படலாம்.

(4) பணி ஒன்றிலுள்ள பிரிவு அல்லது வகை எதற்குமான ஏற்பளிக்கப்பட்ட

விண்ணப்பதாரர்கள் பட்டியல் எதிலும் விண்ணப்பதாரர் ஒருவரின் பெயரை

சேர்ப்பதானது, அந்தப்பணியில் உள்ள பிரிவு அல்லது வகைக்கான

பணியமர்த்தக்திற்கான கோரிக்கை எதுவும் அவருக்கு அளிப்பது ஆகாது.

(5) நேரடி நியமனம் மூலமாக பணியமர்த்தத்திற்காக ஆணையத்தால்

தெரிவு செய்யப்பட்ட ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஒருவர் அவரை பணியில்

சேரும்படி பணிக்கும் ஆணையை பெற்ற தேதியிலிருந்து வழக்கமாக மூன்று

மாதங்களுக்குள்ளோ அல்லது சிறப்பு சூழ்நிலைகளில் பணியமர்த்தம் அதிகாரியால்

அவ்வாறு குறிப்பிடப்படுமானால் முந்திய தேதி ஒன்றுக்குள், பணியில் சேர

தவறுவாராயின் அவர் அந்தப் பணியிடத்திற்கு பணியமர்தலித்திற்கான தம்முடைய

உரிமையை இழத்தல் வேண்டும் மற்றும் அவருடைய பெயர் ஒப்பளிக்கப்பட்டப்

பட்டியலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக: சிறப்பு சூழ்நிலைகளில் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள

கால வரம்பினை செல்லுந்தன்மையுடைய காரணங்களுக்காக ஆறுமாதங்கள் வரை

நீட்டிக்கலாம்:

மேலும் வரம்புரையாக: விதிவிலக்கான சூழ்நிலைகளில் விண்ணப்பதாரர்

எவரும் ஆறு மாதங்கள் கால வரம்பிற்கு அப்பால் பணியில் சேருவதற்கு

அனுமதிக்குப்படுவாராயின் அந்தப் பணியிடத்தில் அவருடைய பணி மூப்பானது

அவர் பணியில் சேர்ந்த தேதியன்று அந்தப்பணியில் உள்ள அந்தப் பணியிடத்திற்கு

பணியமர்த்தப்பட்ட பணிமூப்பில் மிகவும் இளையவர்க்குக் கீழ் நிர்ணயிக்கப்படுதல்

வேண்டும்:

18

8. ஆணையத்தினால் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின் பொருட்டு, பணி

எதிலும் அமர்த்தப்படுவதற்கான விண்ணப்பதாரர் ஒவ்வொருவரும், விண்ணப்பம்

நியமனத்திற்கான விண்ணப்பக் கட்டணம்.

செய்கையில், அவ்வப்போது அரசால் வகுத்துரைக்கப்படலாகும் கட்டணத்தை

செலுத்துதல் வேண்டும்.

வரம்புரையாக, இந்த விதி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எதனையும்

சேர்ந்த மற்றும் அது குறித்து விண்ணப்பம் செய்யப்படுகிற பதவி அல்லது பணி

எதுவேயாயினும் பட்டம் பெற்றிருக்கிற விண்ணப்பதாருக்கு பொருந்துதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, இந்த விதி, அது குறித்து விண்ணப்பம் செய்யப்படுகிற

பதவி அல்லது பணி எதுவேயாயினும் பட்டியல் சாதிகள் அல்லது பட்டியல்

பழங்குடியினரில் எதனையும் சேர்ந்த விண்ணப்பதாரருக்குப் பொருந்துதல் ஆகாது:

இன்னும் வரம்புரையாக, இந்த விதி, இராணுவப்பணி செய்கிற

விண்ணப்பதாரருக்குப் பொருந்துதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, இயக்க சார்நிலைப் பணியின் மற்றும்

மின்சாரத்துறை நிறுவனங்களில் பணிசுமத்தப்பட்ட உறுப்பினர்களுக்கு,

அத்தகைய உறுப்பினர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு

விண்ணப்பித்துள்ளவர்களுக்குப் பொருந்துதல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, இந்த விதி, தமிழ்நாடு மின்சார்நிலைப் பணியில்

தரம் II மேற்பார்வையாளர்கள் (மின்சாரம்) பதவிகளுக்குரிய நியமனத்திற்காக

விண்ணப்பித்திருக்கிறவரும், மின்பொறியாளர் (பொது) பதவியின் படியாக

பணிசுமத்தப்பட்ட நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குப் பொருந்துதல் ஆகாது:

இன்னும் வரம்புரையாக, முதலாம் வரம்புரையின்படியான

சலுகையானது, பிற்பட்ட வகுப்பினர்களை பொறுத்த ேநர்வில் மூன்று வாய்ப்பு

மட்டுமே வழங்கப்படுதல் வேண்டும்.

விளக்கம்.- ஒவ்வொரு தொகுதிக்கான தேர்வு அந்தத் தொகுதியில்

சேர்க்கப்பட்டுள்ள பணிகளிலுள்ள காலியிடங்களை நிரப்பும் நோக்கத்திற்காக ஒரே

தேர்வாக ஒன்றிணைக்கப்படும். ஒரு விண்ணப்பதாரர், அவர் ஒரே ஒரு விண்ணப்பம்

மட்டுமே அனுப்பப்பட வேண்டிய அதே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட

பணிக்கு விண்ணப்பதாரராக அவர் அனுமதிக்கப்படுவதற்கு விரும்புவாரானால்,

ஒவ்வொரு தொகுதியிலுள்ள பணிகள் அனைத்திற்கும் அல்லது அவற்றில்

எதற்கும் அனுமதிக்கப்படலாம். ஆனால், அவர் ஒன்று மேற்பட்ட தொகுதியிலுள்ள

பணிகளுக்கு அனுமதிக்கப்படுவாரானால், அவர் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அவர், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று

என, இந்த விதியில் குறிப்பிடப்பட்ட கட்டணங்களை செலுத்துமாறு கோரப்படுவார்

மற்றும் அவர் விண்ணப்பித்துள்ள தொகுதியிலுள்ள பணி ஒவ்வொன்றிற்குமாக

தனிப்பட்ட கட்டணங்களைச் செலுத்துமாறும் வேண்டுறுத்தப்படமாட்டார். எனினும்,

அவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிக்கு விண்ணப்பிப்பாரானால், அவர் ஒவ்வொரு

தொகுதிக்காகவும் தனிப்பட்ட கட்டணங்கள் செலுத்துமாறு வேண்டுறுத்தப்படுவார்.

வரம்புரையாக, இந்தப் பிரிவு, பிரிவு 3-ன் உட்கூறு (ஒ) இல் பொருள் வரையறை

செய்யப்பட்டவரான முன்னாள் ராணுவத்தினருக்கு பொருந்தாது. ஆனால்,

இங்கு வழங்கப்பட்டுள்ள விதி விலக்கு இரண்டு இலவச வாய்ப்புகளுக்கு என்று

கட்டுப்படுத்தப்படும்.

மேலும் வரம்புரையாக, இந்த விதி, மாற்றுத்திறனாளியான விண்ணப்பதாரருக்கு

பொருந்தாது.

இன்னும் வரம்புரையாக, இந்த விதி, பிரிவு 20 ன் உட்கூறு (8)-இன்படி விளக்கம்

I-இல் பொருள் வரையறை செய்யப்பட்ட ஆதரவற்ற விதவைக்குப் பொருந்தாது.

19

ஆள் எடுக்கும் முறை.

9. பல்வேறு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் என்ன

அடங்கியிருந்த போதிலும், ஏதேனும் பணி, வகை அல்லது இனத்திற்கு வழக்கமாக

ஆள் எடுக்கும் முறை ஒன்று முழுவதும் நேரடி நியமன வாயிலாகவோ, மாற்றுப்பணி

வாயிலாகவோ ஆனால், நேரடி நியமன வாயிலாகவும் மாற்றுப் பணி வாயிலாகவுமாக

இருக்கிறவிடத்து,-

(அ) எந்த விகிதத்தில் அல்லது வரிசையில் சிறப்பு விதிகளில், நேரடி

நியமனம் வாயிலாகவும் மாற்றுப் பணி வாயிலாகவும் காலியிடங்கள் நிரப்பப்படுதல்

வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதோ அந்த விகிதத்தில் அல்லது வரிசையில்,

நிரந்தரப் பணிநிலையிலுள்ள காலியிடங்களுக்கு மட்டுமே பொருந்தத்தக்கதாகும்.

(ஆ) நபர் ஒருவர், அத்தகைய நிரந்தரப் பணிநிலையிலுள்ள

காலியிடத்திற்கு எதிராக மட்டுமே நேரடியாக நியமிக்கப்படுவார் மற்றும் அந்தக்

காலியிடம் அரசிதழில் குறிப்பிடப்பட்ட சிறப்பு விதிகளின்படி நேரடி நியமனம்

வாயிலாக நிரப்படுதல் வேண்டும்; மற்றும்

(இ) பிற காலியிடங்கள் அனைத்திற்குமான நியமனம், மாற்றுப்பணி

நியமனம் வாயிலாக செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரையாக, ஐந்தாண்டுகளுக்கு மேல் இருந்து வரும் தற்காலிகப் பதவி

எதுவும், இந்த விதியின் நோக்கத்திற்காக நிரந்தரப் பதவியாக பாவிக்கப்படுதல்

வேண்டும்.

மறுபடியும் 10. பிரிவு 9&இன் உட்கூறு (அ)-&வில் குறிப்பிடப்பட்ட சிறப்பு விதிகளின்படி

நியமனம் வாயிலாக நிரப்பப்பட வேண்டிய இடமாக இராத பணி, வகை அல்லது இனம் எதிலுமுள்ள காலியிடமானது அத்தகைய நியமனத்திற்காக கிடைக்கக்கூடிய

ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினராக அல்லது தகுதிகாண்

அமர்த்தப்படுவதற்கு தகுதிகாண் பருவத்தினருக்கான உரிமைகள்.

பருவத்தினராக இருக்கிறபோது அத்தகைய பணி, வகை அல்லது இனத்திலுள்ள

அவருடைய தகுதிகாண் பருவம் இன்னும் தொடங்காதிருக்கிற நபரை நியமிப்பதன்

வாயிலாக நிரப்பபடுதல் ஆகாது.

11. (1) தகுதிகாண் பருவத்தினர், ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர்

மற்றும் முழு உறுப்பினர்கள், இளநிலைத் தன்மை வரிசையில் தேவைப்படும்

காலியிடங்களுக்காக விடுவிக்கப்படுதல் வேண்டும்.

தகுதிகாண் பருவத்தினர், ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர் மற்றும் முழு உறுப்பினர்கள் விடுவிக்கப்படுதல் மற்றும் மறு அமர்த்துகை.

(2) தேவைப்படும் காலியிடங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ள முழு

உறுப்பினர்கள், ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர் மற்றும் தகுதிகாண்

பருவத்தினர் பணி மூப்பு நிலையில் மறுபடியும் அமர்த்தப்படுதல் வேண்டும்

பணிக்கு வராத 12. விடுப்பின்பேரில் அல்லது மாற்றுப் பணியின் பேரில் அல்லது வேறு எந்தக்

உறுப்பினர்கள்.

காரணத்திற்காகவும் அத்தகைய பணியிலிருந்து பணியின் உறுப்பினரின் வாராமை மற்றும் அத்தகைய பணியில் அந்நிலையில் அவருடைய மீள் விரிமை நிறுத்தி

வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், அவரை தம்முடைய வாய்ப்பிற்கு

தகுதியற்றவராக்கிவிடும்.-

(அ) வகை, இனம், நிலை அல்லது பதவியில் நிலைப் பேறுள்ள அல்லது நிலைப்பேறில்லாத காலியிடம் எதற்கும் மறுபடியும் அமர்த்தப்படுவதற்கு தகுதிகாண் பருவத்தினராக அல்லது ஒப்புதலளிக்கப்பட்ட பருவத்தினராக இருக்கலாம்,

(ஆ) அத்தகைய பணியில் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்கு பதவி

உயர்வு பெறுவதற்கு,

(இ) நேர்வுகேற்ப, அவர் ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பதாராக

இருக்கலாகும் பிற பணியிலுள்ள நிலைபேறுள்ள அல்லது நிலைபேறில்லாத

காலியிடம் எதற்கும், அதே போன்று அவர் வாராதிருந்திருப்பாரானால்,

அமர்த்தப்படுவதற்கு, அவர் அனுபவிக்ககூடிய முழு உறுப்பினராக அமர்த்தப்படுதல்,

பணிமூப்பு நிலை, பதவியுயர்வு மற்றும் அமர்த்துகை பொதுத் சிறப்புரிமைகள்

அனைத்திற்கும் உரிமையுடையவராவார். ஆனால், அவருடைய வாராமை தம்முடைய

முறைப்படி தகுதிகாண் பருவ கால அளவை திருப்திகரமாக நிறைவு செய்வதற்கு

உட்பட்டிருக்கும்.

20

(ஈ) மற்றொரு பணியில் நிலைப்பேறுள்ள அல்லது நிலைப்பேறில்லாத,

காலியிடம் எதற்குமான அமர்த்துகை, இந்த விதிகளுக்கு இணங்க, அத்தகைய பிற

பணிக்குரிய அமர்த்துகையை கட்டுப்படுத்துமானால்-

(i) அத்தகைய அமர்த்துகைக்கு அவர் உரிமையுடையவராவர் மற்றும்,

(ii) அவர் உறுப்பினராக இருக்கும் வகை அல்லது அந்த இனத்தின்

பணியிலிருந்து மாற்றல் மூலமாக அத்தகைய பிற பணிக்கு வழக்கமான முறைப்படி

நியமிக்கப்படுதல்.

வரம்புரையாக, பணியின் எந்த உறுப்பினர், தம்முடைய முறையான பணிக்கு

வெளியேயுள்ள மற்றொரு பணிக்கு அமர்த்தப்படு ஐந்தாண்டுகளுக்கு அப்பால்

அந்த பணியில் தொடர்ந்து இருக்கிறாரோ அந்த உறுப்பினர், தம்முடைய

முறையான பணிக்கான பதவி உயர்விற்கு தகுதியுடைவராக இருந்தபோதிலும்,

அவர் முந்தைய பணிக்கு திரும்பி, அப்பணியில் ஓராண்டிற்கும் குறையாத

காலஅளவிற்கு பணியாற்றி இருந்தாலன்றி, அத்தகைய பதவி உயர்வு அல்லது

பணி மாறுதல் முறையில் பணி அமர்த்துகைக்கு அவர் பரிசீலிக்கபடமாட்டார்.

இரண்டு அல்லது

13. இன்னொரு பணியில் பணியமர்த்தம் செய்யப்பட்டு பிந்தையப்

பணியில் ஒரு தகுதிகாண் பருவத்தினராகவோ ஒப்பேளிக்கப்பட்ட தகுதிகாண்

பருவத்தினராகவோ இருக்கும் ஒரு பணியின் உறுப்பினர் ஒருவர், பிந்தைய

பணியில் தம்முடைய உரிமையை துறந்தாலன்றி அவர் ஒர் ஒப்பேற்பளிக்கப்பட்ட

விண்ணப்பதாராக இருக்கலாகும் பிற பணி எதற்கும் பணியமர்த்தம்

செய்யப்படுதல் ஆகாது.

அவற்றிற்கு மேற்பட்ட பணிகளில் தகுதிகாண் பருவத்தினராக ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்திற்காக இருப்பதற்குரிய உரிமை.

முந்தைய பணியிலுள்ள

14. பணியிலுள்ள உறுப்பினர் ஒருவர் அரசுப் பணியிலோ அல்லது பிற மாநில

பணியுரிமை.

அரசிலோ அல்லது மைய அரசிலோ பல்கலைக்கழகங்களிலோ அல்லது பிற அரசுப்

போன்றதொரு பிற அமைப்புகளில் எதிலும் பணி அமர்த்தத்திற்கு நேரடியாக பணிக்கு

தேர்ந்தெடுக்கும் போது முந்தைய பணியிலிருந்து விடுவிப்பு பெறும் தேதியிலிருந்து

ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு முந்தைய பணியில் பணியாற்றுவதற்கு உரிமை

உடையவர் ஆவர்.

வரம்புரையாக, பிற மாநில அரசுகளில் மைய அரசின், அரசுத் துறை

நிறுவனங்களில் அல்லது பிற அமைப்புகளில் கழகங்களில் பல்கலைக் கழகங்களின்

அல்லது பிற அரசு போன்றதொரு அமைப்புகளுக்கு பணியில் அமர்த்தப்பட்ட

நபர்களுக்கு அத்தகைய பிற மாநில அரசுகளால், மைய அரசால், அரசு பொது

நிறுவனங்களால், உள்ளாட்சி அதிகார அமைப்புகளால், கழகங்களால் அல்லது

பிற அரசு போன்றதொரு அமைப்புகளால் அல்லது தனிப்பட்ட நபரால் ஒராண்டு

காலத்திற்கு பணி ஊதியம், விடுப்பு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பங்களிப்புகளை

அவர்களுடைய முந்தைய பணிகளில் செலுத்துவதன் மூலமாக அத்தகைய

பணிகளில் உரிமையை நிலைநிறுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

,

15. நேரடி நியமனம் மூலம் செய்யப்படும் பதவியமற்தத்திற்கான

பெருமளவு வயது வரம்பு தொடர்பாக பல்வேறுபட்ட மாநிலத்திற்கான சிறப்பு

விதிகளில் மற்றும் கீழமை பணிகளில் அடங்கியுள்ளது எது எவ்வாறு இருந்த

கருணை அடிப்படையின் பேரில் பதவியமர்த்தம் செய்வதற்கான வயது சலுகை.

போதிலும் கருணை அடிப்படையின் பேரில் பதவியமர்த்தம் என்கின்ற நேர்வில்

மகன்கள் அல்லது திருமணமாகாத மகள்கள் தொடர்பாக பெறும் வயது 35

என்றிருத்தல் வேண்டும். மற்றும் அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர், அவர்

பணியிலுள்ளபோது இறந்து விட்டாரென்றால் அல்லது நேர்விற்கேற்ப 53 வயதை

நிறைவெய்துவதற்கு முன்பு மருத்துவ தகுதியின்மையின் பேரில் பணியிலிருந்து

ஓய்வுபெற்றவரென்றால் அந்நிகழ்வில் கருணை அடிப்படையின் பேரில்

பதவியமர்த்தம் செய்வதற்கான வயது சலுகை பெறும் வயது 50 ஆகும்.

21

விளக்கம் I.- பெருமளவு வயது வரம்பை கருத்தில் கொள்ளும்

நோக்கத்திற்காக அரசு ஊழியரின் இறந்த தேதி அல்லது நேர்விற்கேற்ப 53 வயதை

நிறைவெய்துவதற்கு முன்பு மருத்துவதகுதியின்மை அடிப்படையின் பேரில் ஓய்வு

பெறும் தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.

விளக்கம் II.- இந்தப் பிரிவில் மகன்கள் மற்றும் மகள்கள் என்கின்ற

சொற்றொடர் ஒரு விதவையாக உள்ள மகளையும், விவகாரத்து பெற்ற

மகளையும், அல்லது அவளுடைய கணவனால் முழுவதுமாக ஆதரவில்லாமல்

விடப்பட்ட திருமணமான மகள் ஒருவரையும் மற்றும் இறந்து போன அரசு ஊழியரின்

குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவரையும், சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட மகன்

ஒருவரையும் உள்ளடக்கும் அந்த தத்தெடுப்பு இறந்த அரசு ஊழியர் உயிருடன்

வாழ்ந்து கொண்டிருக்கும் போது செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்;

வரம்புரையாக, சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட மகன் தொடர்பாக அது 1982

ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி அன்று மற்றும் அதனிலிருந்து செல்திரத்துடன்

இருத்தல் வேண்டும் சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட திருமண மாகாத மகள்

தொடர்பாக அது 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று மற்றும்

அதனிலிருந்து செல்திரத்துடன் இருத்தல் வேண்டும் ஒரு விதவை மகள் அல்லது

விவகாரத்து செய்துள்ள மகள் தொடர்பாக அது 1991-ஆம் ஆண்டு ஜுன் 17

அன்று அந்த தேதியிலிருந்து செல்திரத்துடன் இருத்தல் வேண்டும் மற்றும்

ஆதரவில்லாமல் கணவனால் முழுவதுமாக கைவிடப்பட்ட திருமணமான மகள்

இறந்த அரசு ஊழியரின் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் தொடர்பாக,

அது 1993-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று மற்றும் அன்றிலிருந்து செல்திரத்துடன்

இருத்தல் வேண்டும்.

மேலும் வரம்புரையாக, விதவை மகள் அல்லது விவகாரத்து பெற்றுள்ள மகள்

கணவனால் ஆதரவில்லாமல் முழுவதுமாக கைவிடப்பட்ட திருமணமான மகள்

மற்றும் இறந்த அரசு ஊழியரின் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் இறந்த

அரசு ஊழியரின் விதவை அல்லது மனைவியை இழந்தவரால் எழுத்து பூர்வமாக

அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அன்றி கருணை அடிப்படையில் பேரில்

பதவி அமர்த்தத்தின் சலுகையை பெறுவதற்கு தகுதியுடையவராக இருக்க மாட்டார்.

16. இந்தச் சட்டத்தில் அல்லது பல்வேறுபட்ட மாநில மற்றும் சார்நிலை சாரணியர் திறமைக்கான வேலைவாய்ப்பு சலுகை.

பணிகளுக்கான விதிகளில் அடங்கியுள்ளது எது எவ்வாறு இருந்த போதிலும் பிற

விஷயங்கள் சரிசமமாக இருக்கு போது நேரடி நியமனத்தின் மூலமான பதவி

எதற்குமான பதவி அமர்த்தத்திற்கு திறமையான சாரணியர்க்கு முன்னுரிமை

கொடுக்கப்பட வேண்டும்.

விளக்கம் - இந்த பிரிவின் நோக்கிற்கு "திறமைமிகு சாரணியர்" என்பது

இந்திய குடியரசு தலைவரின் பரிசு பெற்ற ஒரு சாரணியர் என்று பொருள்படும்.

தற்காலிக 17. (1) பணியின் படிநிலையில், வகுப்பில் அல்லது வகையில் உள்ள

பதவியமர்த்தங்கள்.

பணிக்காலியிடத்தை உடனடியாக நிரப்புவதற்கு பொது நலனில் அவசர நிலையில்

தேவையென எழுகிறவிடத்து மற்றும் இந்த சட்டவகை முறைகளில் மற்றும் தனி

விதிகளின்படி அவ்வாறு பணியமர்த்தம் செய்வதற்கு தேவையற்ற காலதாமதம்

ஏற்படுமானால், பதவியமர்த்தம் செய்யும் அதிகார அமைப்பானது, அவ்வாறு

கூறப்பட்ட விதிகளுக்கு இணங்கியவாறு வகுத்துரைக்கப்பட்ட தகுதிகளை உடைய

நபரை தற்காலிகமாக பதவியமர்த்தம் செய்யலாம்.

வரம்புரையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்பிற்குட்பட்ட

பணியிடங்களுக்கு அதனுடைய தேர்ச்சியடைந்த வழக்கமான அல்லது காப்பு

பட்டியலில் இருந்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரை

செய்யப்பட்ட நபர் எவரையும் தவிர்த்து, இந்த பிரிவின்படி நேரடியாகத்

தேர்ந்தெடுப்பதன் மூலமாக பதவியமர்த்தம் செய்தல் ஆகாது.

22

மேலும் வரம்புரையாக, ஆணையத்தின் வரம்பிற்குட்பட்ட பணியிடங்களை

பொறுத்து இந்தப் பிரிவின்படியான நேரடிப் பதவியமர்த்தத்தின் மூலமான

பணியமர்த்தமானது, புதிய தகுதிகளுடன் புதிய பணியிடங்கள் தற்காலிகமாக

உருவாக்கப்பட்டவிடத்தும் மற்றும் ஆணையம் அனுப்புவதற்கு வெற்றிகரமான

விண்ணப்பதாரர்களின் முறையான அல்லது காப்பு பட்டியல் கொண்டிராதவிடத்து

மட்டுமே செய்யப்படுதல் வேண்டும்.

(2) பணி, பிரிவு அல்லது வகையின் பணிப்பிரிவு சார்ந்த பணியிடம்

ஒன்றில் குறுகிய காலியிடம் ஒன்றை நிரப்பத் தேவையாயிருந்து மற்றும் இந்தச்

சட்டத்தின்படியும் சிறப்பு விதிகளின்படியும் அத்தகைய பணியமர்த்தத்திற்கு

உரிமை கொண்டவரான ஒருவரைப் பணியமர்த்துவது பயணப்படி மீது மிகையான

செலவுகளோ அல்லது விதிவிலக்கான நிருவாக இடரோ உள்ளாகக் கூடியதாக

இருக்கிறவிடத்து, பணியமர்ந்த அலுவலர் மேற்சொன்ன பணி, பிரிவு அல்லது

வகைக்காக வகுத்துரைக்கப்பட்ட தகுதிகள், எவையேனுமிருப்பின், அதனைக்

கொண்டிருக்கும் பிற நபர் எவரையும் பணியமர்த்தம் செய்யலாம்.

(3) (1)-ஆம் உட்பிரிவின்படி பணியமர்த்தம் பெற்ற ஒருவர், இந்தச் சட்டத்தின்படி

அந்தப் பணியிடத்தை வகிப்பதற்குத் தகுதியுடைய ஓர் உறுப்பினர் அல்லது

ஒப்பேற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரரைக் கொண்டு கூடிய விரைவில் பதிலாக

அமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் எந்நேர்விலும் அவர் தற்காலிகப் பணியமர்த்தத்

தேதியிலிருந்து ஓர் ஆண்டுக்கு மேற்படும் கால அளவு ஒன்றுக்குத் தொடர்ந்து

இருத்தல் ஆகாது.

(4) ஊழல் அல்லது தவறான நடத்தை எனும் கட்டுரைகள் மீது அவருக்கு எதிராக

விசாரணை ஒன்று நிலுவையில் இருந்து ஆனால் குற்ற வழக்கில் குற்றச்சாட்டு

தாக்கல் செய்யப்படாதிருக்கிறவிடத்து அல்லது தமிழ்நாடு குடிமைப் பணிகள்

(ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 17 ஆம் விதியின் (ஆ) கூறின்படி

குற்றச்சாட்டு எதுவும் வனையப்பட்டிராதவிடத்து அல்லது ஒழுங்கு நடவடிக்கைத்

தீர்பாயத்தின் முன்பு நடவடிக்கைகள் எவையும் நிலுவையில் இல்லாதவிடத்து,

பணியமர்த்தும் அதிகாரி, அவரை, அவருக்கு எதிரான சாட்டுரைகள் மீது

விசாரணை நிலுவையில் இருக்கும் போதிலும் தற்காலிகமாகப் பணியமர்த்தம்

செய்யலாம்.

(5) (1), (2) அல்லது (4) உட்பிரிவுகளின்படி பணியமர்த்தம் செய்யப்பெற்ற ஒருவர்

அத்தகைய பணி, பிரிவு அல்லது வகையில் ஒரு தகுதிகாண் பருவத்தினராகக்

கருதப்படுதல் ஆகாது அல்லது அத்தகைய பணியமர்த்தத்தின் காரணமாக மட்டுமே

அத்தகைய பணி, பிரிவு அல்லது வகைக்கு எதிர்கால பணியமர்தத்திற்கான

முன்னுரிமை கோரிக்கை எதற்கும் உரிமையுடையவர் ஆகார். (1), (2) அல்லது (4)

உட்பிரிவுகளின்படி பணியமர்த்தம் செய்யப்பெற்ற ஒருவரின் பணிகள் அறிவிப்பு

எதுவும் இன்றியும் காரணம் எதுவும் குறித்தளிக்காமலும் எச்சமயத்திலும்

பணியமர்த்தும் அதிகாரியால் முடிக்கப்படுவதற்கு உள்ளாதல் வேண்டும்.

(6) பணி, பிரிவு அல்லது வகை ஒன்றின் பணிப்பிரிவைச் சார்ந்த

முழுநேரப்பணியிடம் ஒன்றுக்கு பதிலாக உருவாக்கப்பட்ட பகுதிநேரப்

பணியிடம் எதற்கும் பணியமர்த்தம் செய்யப்பெற்ற ஒருவர், அத்தகைய பணியில்

ஒரு தகுதிகாண் பருவத்தினராகக் கருதப்படுதலோ அல்லது அத்தகைய

பணியமர்த்தத்தின் காரணமாக மட்டுமே அத்தகைய பணி, பிரிவு அல்லது வகைக்கு

எதிர்காலப் பணியமர்த்தத்திற்கான முன்னுரிமைக் கோரிக்கை எதற்கும் உரிமை

கொண்டிருத்தலோ ஆகாது.

(7) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், பணி, பிரிவு

அல்லது வகை எதனின் பணிப்பிரிவிற்கு கூடுதலாக தற்காலிகப் பணியிடம் ஒன்று

உருவாக்கப்பட்டு மற்றும் அதனை வகிப்பவர் சிறப்பு தகுதி, தனியறிவு அல்லது

பட்டறிவு எதுவும் கொண்டிருக்க அரசால் வேண்டப்படுமாயின், வேண்டும் போது

அத்தகைய தகுதி, சிறப்பு தகுதி, தனியறிவு அல்லது பட்டறிவு கொண்டிருப்பவரும்,23 மற்றும் பிற கருத்தாய்வைப் பொருட்படுத்தாமல் அத்தகைய பணியமர்த்தத்திற்கான

கடமைகளை ஆற்றுவதற்கு மிகவும் பொருத்தமானவரென கருதப்படுகிறவருமான

ஒருவர் பணியமர்த்தும் அதிகாரியால் அந்தப் பணியிடத்திற்குப் பணியமர்த்தம்

செய்யப்படலாம், ஆனால் அவ்வாறு பணியமர்த்தம் செய்யப்பெற்ற ஒருவர்,

அத்தகைய பணியமர்த்தத்தின் காரணமாக மட்டுமே அத்தகைய பணி, பிரிவு

அல்லது வகையில் ஒரு தகுதிகாண் பருவத்தினராகக் கருதப்படுதலோ ஆகாது

அல்லது அத்தகைய பணி, பிரிவு அல்லது வகைக்கு எதிர்காலப் பணியமர்த்தத்திற்கு

முன்னுரிமை எதுவும் பெறவும் மாட்டார்.

18. (1) தேர்வாணையத்தின் வரம்பிற்குட்படாதா பணியிடங்கள்

இருக்கிறவிடத்து, ஆளெடுப்பு வேலைவாய்ப்பு அலுவல்களிலிருந்து

தேர்வாணையத்தின் வரம்பிற்குட்படாத பணியிடங்களுக்கான ஆளெடுப்பு.

தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் பெயர்களைக் கோருதல், அதோடுகூட

பிரபலமான தினசரி செய்தித்தாளில் அதற்கான விளம்பரங்கள் கொடுத்த

விண்ணப்பங்களை வரவேற்றல்.

வரம்புரையாக, இந்த உட்பிரிவு இறந்த அரசுப் பணியாளர்களை

சார்ந்திருத்தற்குரிய நியமனங்களைப் பொறுத்தவரை அல்லது ஐம்பத்து மூன்று

ஆண்டுகள் வயது எய்துவதற்கு முன்பு மருத்துவக் காரணங்களால் இயலாமையினால்

பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குப்

பொருந்தாது.

(2) நியமிக்கப்படவேண்டிய விண்ணப்பதாரர்கள் வாய்மொழித்தேர்வு

நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு பொருந்தக்கூடிய இடஒதுக்கீட்டு விதிக்கு

உட்பட்டு, தேவைப்படுமாயின் எழுத்துத் தேர்வு எழுதி, அதற்குரிய காலத்தில்

மதிப்பிடப்பட்டு, தேர்வுசெய்யப்பட்டு நியமன அதிகாரியால் அல்லது நியமன

அதிகாரியால் சுட்டியமர்த்தப்பட்ட அலுவலரால் அல்லது நியமன அதிகாரியால்

உரியவாறு அமைக்கப்பட்ட மூன்றுக்கும் மேற்படாத அலுவலர்களின் குழுவினால்

தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

19. (1) மாநில அரசின் கருத்துப்படி, இந்த விதிகளுக்கு அல்லது இந்திய உடன்படிக்கை வாயிலாக பணியமர்த்தம் செய்தல்.

அரசியலமைப்பின் 309 ஆம் உறுப்பின் விளக்கக்கூறின்படி அல்லது அரசியலமைப்பின்

313 ஆம் உறுப்பினால் இதில் இதன் பின்பு கூறப்பட்ட விதிகளாக இந்த விதியில்

சுட்டப்பட்டுள்ள தொடர்ந்து இருப்பதால் தனி விதிகளான முரண்பட்டதாக

இருக்கின்ற போது குறிப்பிட்டதொரு பணி எதற்கும் அல்லது அவைகளில் எதற்கும்

பணியில் வரைக்கட்டுகள், ஊதியம் மற்றும் படித் தொகைகள், ஓய்வூதியம், ஒழுங்கு

மற்றும் நடத்தை தொடர்பாக வேண்டப்படும் போது, அந்த விதிகளுக்கு அல்லது

கூறப்பட்ட விதிகளுக்கு இணங்கியவாறில்லாமல் அத்தைகைய பணியிடங்களுக்கு

மாநில அரசானது பணி அமர்த்தத்தை வெளிப்படையாக செய்யலாம் மற்றும்

மாநில அரசின் கருத்துப்படி பொருட்பாடுகள் எதற்காகவும் அல்லது அமர்த்தப்பட்ட

நபருடன் இந்த விதிகளின்படி அல்லது கூறப்பட்ட விதிகளின்படி உடன்படிக்கை

செய்துகொண்டாலன்றி மற்றும் அந்த வகையங்களானது உடன்படிக்கையில் எந்த

அளவிற்கு செய்து கொள்ளப்பட்டதோ அந்த அளவிற்கு இந்த விதிகள் அல்லது

கூறப்பட்ட விதிகளானது உடன்படிக்கையில் உருவாக்கப்பட்ட வகையத்திற்கான

பொருட்பாடு எதுவும் தொடர்பாக அவ்வாறு அமர்த்தப்பட்ட நபர் எவருக்கு இந்த

விதிகள் அல்லது கூறப்பட்ட விதிகள் பொருந்தாது.

வரம்புரையாக, இந்த உட்பிரிவால் குறித்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை

பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உடன்படிக்கை ஒவ்வொன்றும், பொருட்பாடு எதுவும்

தொடர்பாக, அது தொடர்பாக உடன்படிக்கையில் வகையாக இல்லாது இருக்கையில்

இந்த விதிகளின் அல்லது கூறப்பட்ட விதிகளின் வகையங்களில் பொருந்தும்.

24

(2) (1) ஆம் உட்பிரிவின்படி அமர்த்தப்பட்ட நபர் எந்த பணியிடத்தில் அவர்

அமர்த்தப்பட்ட அந்த பணியிடத்தில் பணியின் ஒரு உறுப்பினராக இருப்பதாக

கொள்ளப்படுதல் ஆகாது. மற்றும் அந்த பணியில் அல்லது பிற பணி எதிலும்

பணி அமர்த்தம் செய்யப்பட்டிருப்பதன் காரணத்தினால் மட்டுமே முன்னுரிமை

கோரிக்கைக்கு உரிமை கோருதல் ஆகாது.

20. (1) சிறப்பு விதிகளில் சுட்டப்பட்டுள்ள குறைந்தளவு பொதுதகுதிகள்

கல்வித் தகுதி என்பது, இந்த பகுதியில் III-ஆம் இணைப்புப்பட்டியலில்

குறித்துரைக்கப்பட்டுள்ள தகுதி என்று பொருள் படும்.

(2) சிறப்பு விதிகளானது, அத்தகைய பணியில் அல்லது அதனுடைய பிரிவு

அல்லது இனத்தில் அல்லது அத்தகைய பணியில் பிற பிரிவு அல்லது இனத்திற்கு

பதவி உயர்விற்காக முழு உறுப்பினராக பணி அமர்த்தம் செய்வதற்கான (i)கூறில்

சுட்டப்பட்டுள்ள குறைந்தளவு கல்வித் தகுதியை கொண்டிருத்தலுக்கு பணி எதற்கு

வகுத்துரைப்பதற்காக பணியின் உறுப்பினராக ஒருவர் இதற்கு முன்பே இருந்து அவர்

குறைந்த கல்வித் தகுதியை பெற்றிராதவர், ஆனால் அவரை, துறையின் தலைமையை

பொருத்தவரையில் முழு நேர உறுப்பினராக அல்லது பதவி உயர்விற்காக

அல்லது நேர்விற்கேற்ப பணி மாறுதலுக்காக பிறவாராக பணி செய்வதற்கு

சான்றளிக்கவிடத்து தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பொதுக் கல்வி பள்ளி

இறுதி தேர்விற்கான (SSLC) அவர் முன்னிலையாகி, கீழே குறித்துரைக்கப்பட்டுள்ள

குறைந்தளவு சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறவிடத்து குறைந்த பொதுக்

கல்வித் தகுதி பெற்றிருப்பதாக கருதப்படுதல் வேண்டும்:-

தேர்விற்கான பாடம் குறைந்தளவு சதவீத

மதிப்பெண்கள்

(1) ஆங்கிலம் 35

(2) பொது அறிவு 35

வரம்புரையாக, பணியில் உள்ள நபர்கள் தமிழில் போதிய அறிவின்றி

அவருடைய தமிழ் அறிவானது தமிழில் இந்த உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள

தேர்வுகளை எழுதுவது குறித்த தரநிலையில் இல்லாது இருக்கையில் அந்த

தேர்வுகளை தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது அல்லது இந்தி போன்ற

ஏதாவது ஒரு மொழிகளில் எழுதலாம் மற்றும் பணி மாறுதலினால் அல்லது பதவி

உயர்வினால் அவர்களின் பணி அமர்த்தத்திற்கு தமிழில் மொழி தேர்வில் தேர்ச்சி

பெற அவசியம் இல்லை.

(3) கீழ்நிலை பதவி ஒன்றிலிருந்து மேல்நிலை பதவி ஒன்றிற்கு பணியமர்த்தம்

செய்கின்ற நேர்வு எதிலும் குறைந்தளவு பொதுக்கல்வித் தகுதியைக் கொண்டிருத்தல்

தொடர்பான விதி தளர்த்தப்படமாட்டாது.

(4) நபர் எவரும் அவர் அதன் அல்லது அதிகாரஅமைப்பு ஆலோசனையில்

செய்யப்படக் கூடியதாக இருக்கிற பணியமர்த்தமாக இருக்கின்ற விடத்தான

நேர்வுகளில் ஆணையம் அவருடைய பணி நிமித்தமாக திருப்தியடைந்திருந்தாலன்றி,

நேரடி நியமனம் மூலம் பணி எதற்கும் பணியமர்த்தம் செய்வதற்கு

தகுதியுடையவராக இருக்கமாட்டார், பிற நேர்வுகளில்,-

(i) அத்தகையப் பணிக்காக அவரைத் தகுதியுடையதாக்குவதானது

அத்தகைய அவருடைய நடத்தை மற்றும் முந்தைய நிகழ்ச்சி இருக்கும்.

(ii) அத்தகைய நபர் ஒரு மனைவியுடந்தான் வாழ வேண்டும் அல்லது அவர்

ஒரு பெண்ணாக இருக்கையில் மனைவியுடன் வாழும் நபர் எவரையும் திருமணம்

செய்து கொள்ளக் கூடாது.

(iii) அத்தகைய நபர் காலியிடம் அறிவிப்பு செய்யப்பட்டதில் சூலை முதல்

நாளன்று சிறப்பு விதிகளில் ஆண்டின் வகுத்துரைக்கப்பட்ட வயதை உடையவராக

இருக்கிறார் என்றால், மற்றும்25 (iv) சிறப்பு விதிகளில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் அத்தகைய

நபர் ஒருவர் காலியிடத்திற்கான அறிவிக்கை தேதியன்று பதவி ஒன்றிற்காக

வகுத்துரைக்கப்பட்ட அனுபவம் உள்ளடங்கலாக மேலுமான தகுதிகளைக்

கொண்டிருக்கிறார் என்றால்,

வரம்புரையாக, ஆனால் தொகுதி 1 பணியில் உள்ளடங்கலான பதவிகளுக்கு

நியமனம் செய்வதற்கான முதல் நிலைத் தேர்வுக்கு பட்டப்படிப்பு இறுதி ஆண்டு

தேர்வு எழுதியுள்ளவர்கள் அனுமதியளிக்கப்படுதல் வேண்டும் அத்தகைய

நபர்கள் கட்டாயமாக அவர்கள் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்கள்

என்பதற்கான சான்றினை இறுதிநிலைத் தேர்விற்கான விண்ணப்பத்துடன்

அளித்தல் வேண்டும் அவ்வாறு அளிக்கத் தவறுகிற நேர்வில் இறுதிநிலைத் தேர்வு

எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

(5) நபர் எவரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்

வரம்பிற்குட்பட்ட அல்லது உட்படாத பணியிடம் எதுவாகயிருப்பினும் அந்தப்

பதவிக்கான அவருடைய உடல்தகுதி தொடர்பாக பணியமர்த்தம் அதிகாரஅமைப்பு

திருப்தியடைந்திருந்தாலன்றி நேரடி நியமனம் மூலம் பணி எதற்குமான

பணியமர்த்தத்திற்கு தகுதியுடையவராக இருக்கமாட்டார். அதற்காக அளிக்கப்படும்

உடல்தகுதி சான்றிதழ் வகுத்துரைக்கப்பட்ட முறையில் இருக்க வேண்டும்:

வரம்புரையாக, மாற்றுத் திறனாளியாக இருக்கிற நபர்கள் அத்தகைய

குறைபாடு அந்த பதவிக்கான பணிக்காக திறம்பட செய்வதற்குத் தடையாக

இல்லை என்று இருக்கிறதென்றால் பணியமர்த்தம் செய்யப்படலாம். அவர்களுடைய

பணிக்கான தகுதி அவர்கள் கோரும் பணி தொடர்பாக அவர்கள் செயற்பணியை

செய்யும் தகுதியின் தன்மை மற்றும் அளவின் அடிப்படையின் பேரில் பணிக்கான

அவர்களுடைய தகுதி மதிப்பீடு செய்யப்படும்.

(6). (அ) நபர் எவரும், காலியிடம் அறிவிக்கை செய்யப்பட்ட ஆண்டின் ஜுலை

முதல் நாளன்று 18 வயது நிறைவெய்திருந்திருந்தாலன்றி நேரடி நியமனத்தின்

மூலமான பதவியமர்த்தத்திற்குத் தகுதியுடையவர் ஆகார்.

(ஆ) நபர் எவரும் அரசு ஊழியரின் இறப்புத் தேதியிலிருந்து மூன்றாண்டு

காலத்திற்குள் உரிய அதிகார அமைப்பிற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்ட தேதியன்று

18 ஆண்டுகள் நிறைவெய்தியவராக இருந்தாலன்றி நேரடி நியமனம் மூலம் பணி

எதற்கும் பணியமர்த்தம் செய்வதற்கு தகுதியுடையவராக இருக்கமாட்டார்.

(7) மாநிலத்தில் பதவி ஒன்றிற்கு பணியமர்த்தம் செய்யப்படுவதற்கான நபர்

ஒருவர்-

(அ) இந்தியக் குடிமகன் ஒருவராக அல்லது

(ஆ) நேபாளத்தின் குடிமகன் ஒருவராக

(இ) பூடானின் குடிமகன் ஒருவராக

(ஈ) இந்தியாவில் நிரந்தரமாக குடியேற வேண்டும் என்கின்ற

நோக்கத்துடன் பாகிஸ்தான், பர்மா, இலங்கை அல்லது கிழக்கு ஆப்பிரிக்க

நாடுகளாகிய கென்யா, உகாண்டா ஐக்கிய குடியரசாகிய தான்சானியா சாம்பியா,

மாளவி ஸெய்ரா மற்றும் எத்தியேர்பியாவிலிருந்து இந்திய வம்சாவழியின்ராக

இருத்தல் வேண்டும்:

வரம்புரையாக, ஆனால் மாநில (ஆ), (இ), மற்றும் (ஈ) இனங்களிலிருந்து வரும்

நபர் ஒருவருக்கு அவர் சார்பாக மாநில அரசால் அளிக்கப்பட்டிருக்கிற தகுதிச்

சான்றிதழ் ஒன்றை வைத்திருக்கின்ற நபர் அவர் ஒருவராக இருத்தல் வேண்டும்:

26

மேலும் வரம்புரையாக, நபர் ஒருவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர்

தேர்வாணையம் அல்லது பிற நியமன அதிகார அமைப்பினால் நடத்தப்படும்

தேர்வு அல்லது நேர்காணலுக்கு அவருடைய தகுதிச் சான்றிதழ் தேவையானதாக

இருக்கின்றது என்கின்ற நேர்வில் அனுமதிக்கப்படலாம். மற்றும் மாநில அரசால்

வழங்கப்படுவதாக உள்ள தேவையானதாக உள்ள சான்றிதழுக்குட்பட்டு அவர்

தற்காலிகமாக பணியமர்த்தம் செய்யப்படலாம்.

(8) சிறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பு பொருந்தாத

இனங்கள்-

(i) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு

முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர் மற்றும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இனங்கள் அல்லது அனைத்து

சாதியினருக்கென கைவிடப்பட்ட விதவைகள் ஆகிய எவரையும் பணியமர்த்தம்

செய்வதற்கு பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட

பல்கலைக் கழகம் எதனின் பட்டமொன்றிற்குக் குறைவான தகுதியொன்றிற்கு

வகுத்துரைக்கப்படும் அந்த சிறப்பு விதிகள் உள்ளடங்கலாக அத்தகைய நபர்

உள்விதி (அ) வில் சுட்டப்பட்டுள்ளவற்றிற்கு மேலான பொதுக் கல்வித் தகுதி

ஒன்றினைக் கொண்டிருக்கிறார் என்றால் மற்றும் அவர் பிறவாறு பணியமர்த்தத்திற்கு

தகுதியுடையவராக இருப்பார்; அல்லது

(ii) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட

வகுப்பு முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர்கள் மற்றும் சீர் மரபினர் அல்லது அனைத்து சாதியினரின் கைவிடப்பட்ட

விதவைகள் எதிலிருந்தும் வரும் பணியிலுள்ள நபர் ஒருவர் உள்ளடங்கலாக பதவி

ஒன்றிற்கு பணியமர்த்தம் செய்வதற்கு பல்கலைக்கழக மானிய குழுவினால்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் பட்டமொன்றினை வைத்திருக்கும்

நபர் எவரும் அத்தகைய பதவிக்கு பணியமர்த்தம் செய்வதற்காக சிறப்பு விதிகளில்

வகுத்துரைக்கப்பட்டுள்ள பட்டத்திற்கு குறைவானதை வைத்திருக்கிறவிடத்து

மற்றும் அவர் பிறவாறு பணியமர்தத்திற்கு தகுதியுடையவராக இருப்பார்.

வரம்புரையாக, ஒரு பதவிக்கு நேரடி நியமனத்திற்காக ஒரு பணியில்

அதற்காகத் தேவைப்படும் குறைந்தபட்ச தகுதி பொதுக்கல்வித் தகுதியை விட

மேலாக இருக்கிறவிடத்து வகுத்துரைக்கப்பட்ட வயது வரம்பு பட்டியல் சாதியினர்

அல்லது பட்டியல் பழங்குடியினரிலிருந்து வரும் நபர்கள் அல்லது அனைத்து

சாதியினரின் கைவிடப்பட்ட விதவைகள் தொடர்பாக நபர் எவர் பொதுக்கல்வித்

தகுதியைப் பெற்றிராமல் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கு அதிகமாக

பெற்றிருந்தால், அவர் தொடர்பாக ஐந்து வருடங்கள் அதிகரிக்கப்படுதல்

வேண்டும்:

மேலும் வரம்புரையாக, எந்தப் பணிக்குத் தேவைப்படும் குறைந்தபட்சத்

தகுதியானது குறைந்தபட்ச பொது கல்வித் தகுதிக்கு மேல் இல்லையோ அந்தப்

பணியில் உள்ளடக்கப்பட்ட பணியிடம் ஒன்றுக்கு நேரடியாக ஆளெடுப்பதற்காக,

குறைந்தபட்ச பொது கல்வித் தகுதிக்கு மேல் இருக்கும், பொது கல்வித் தகுதி

ஒன்று பெற்றிராத, பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட

சமூகத்தினர் ஆகியோரைச் சார்ந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பொறுத்து,

வகுத்துரைக்கப்பட்ட வயது வரம்பானது இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படுதல்

வேண்டும்.

விளக்கம்.-I (i) இந்த விதியின் நோக்கத்திற்கு, "ஆதரவற்ற விதவை"

என்பது, அவரது மொத்த மாதாந்திர வருமானம், அனைத்து ஆதாரங்களிலிருந்தும்

குடும்ப ஓய்வூதியம் அல்லது விழைதொழிலாளர்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட

தொழிலாற்றுவதிலிருந்து வருமானம் உள்ளடங்கலாக பிற பெறுகைகள் எவையும்

உள்ளடங்கலாக ரூ.4,000/- (ரூபாய் நான்காயிரம் மட்டும்) என்ற தொகைக்கு

மேற்படாமல் இருக்கும் ஒரு விதவை என்று பொருள்படும், ஆனால் மனமுறிவுபெற்ற

ஒருவரை உள்ளடக்காது.

27

(ii) ஒரு "ஆதரவற்ற விதவை" என்பது, தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே

பிறந்து தமிழ்நாடு மாநிலத்தைச் சார்ந்த ஒருவரைத் திருமணம் செய்த பின்பு ஒரு

விதவையாகி தமிழ்நாடு மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் ஒரு பணிக்கு

விண்ணப்பம் செய்தவரை உள்ளடக்கும் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் பிறந்து

வேறு மாநிலத்தைச் சார்ந்த ஒருவரை அவர் திருமணம் செய்த பின்பு விதவையாகி

தமிழ்நாடு மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியேறி ஒரு பணிக்கு விண்ணப்பம்

செய்தவரையும் கூட உள்ளடக்கும். ஆனால் மேற்சொன்ன வகைகளின் கீழ்

அடங்காத பிற மாநிலத்தைச் சார்ந்த நபர்களுக்கு விண்ணப்பம் செய்தவரை

உள்ளடக்காது.

(iii) "ஆதரவற்ற விதவை" என உரிமைகோரும் பணிக்கு விண்ணப்பம்

செய்தவர் ஒவ்வொருவரும், தொடர்புற்ற வருவாய் கோட்ட அலுவலர் அல்லது உதவி

ஆட்சியர் அல்லது சார்நிலை ஆட்சியர் இவர்களிடமிருந்து இந்தப் பகுதிக்காண

இணைப்புப்பட்டியல்-ஓ இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உறுதிச்சான்று ஒன்றை

முன்னிடுதல் வேண்டும்.

விளக்கம் II.-(i) ஆம் கூறின் நோக்கத்திற்கு, பல்கலைக்கழகப் புதுமுகத்

தேர்வு அல்லது மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி அல்லது தமிழ்நாடு, மாநில தொழில்

நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி அல்லது தமிழ்நாடு அரசால் அல்லது பிற மாநில அரசு

எதனாலும் அல்லது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியம்

எதனாலும் வழங்கப்பட்ட பட்டயம், (அ) உள்விதியில் குறிப்பிடப்பட்டதற்கு

உயரிய தகுதியாகக் கொள்ளப்படும்.

(ii) எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்பு சூழ்நிலைகளில், ஒரு

பணிக்கு அல்லது அதன் பிரிவு அல்லது வகை ஒன்றுக்கு பணியமர்த்தத்திற்காகத்

தெரிவு செய்யப்பட்ட ஒருவரை வேறொரு பணி அல்லது அதன் பிரிவு அல்லது

வகை ஒன்றுக்குப் பணியமர்த்துவதற்காக, அதற்குப் பணியமர்த்துவதற்காக

வகுத்துரைக்கப்பட்ட தகுதிகள் முந்திய பணி, பிரிவு அல்லது வகைக்குப்

பணியமர்த்தத்திற்காக வகுத்துரைக்கப்பட்டவைக்கும் ஒத்திருத்தல்.

(9). (i) போர்ப் பணி ஆற்றியிருக்கும் ஒரு பணிக்கு விண்ணப்பித்தவரைப்

பொறுத்தவரை, அவருடைய போர்ப் பணியானது பணியமர்த்தத்திற்காக

அவருடைய வயதைக் கணக்கிடுகையில் நீக்கப்படுதல் வேண்டும்.

(ii) இந்த 17ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி தற்காலிகமாகப்

பணியமர்த்தம் செய்யப்பட்டு இராணுவப் பணியை எடுத்துக் கொள்ளும்

பணிக்கு விண்ணப்பம் செய்த ஒருவர் அத்தகைய இராணுவப் பணியிலிருந்து

விடுவிப்பின் பேரில், பணியமர்த்தத்திற்காக அவருடைய வயதினைக் கணக்கிடும்

நோக்கத்திற்காக அவருடைய இராணுவப் பணி காலத்தைக் கழித்துக் கொள்வதற்கு

உரிமையுடையவர் ஆவார்; மற்றும்

(iii) இந்த 17ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின்படி தற்காலிகமாகப்

பணியமர்த்தம் செய்யப்பட்டு, இந்திய அரசின் எல்லைப்புற சாலைகள் மேம்பாட்டு

வாரியத்தின் கீழ் பொது ஒதுக்கீட்டு பொறியாளர் படையில் உள்ள பணியை

எடுத்துக் கொள்ளும் பணிக்கு விண்ணப்பம் செய்யும் ஒருவர், இந்திய

அரசால் வரையறுக்கப்பட்ட, தம் பணியுரிமைக் காலத்தை முடித்ததன் பேரில்

அத்தகைய பணியிலிருந்து விடுவிப்பின் பேரில், பொது ஒதுக்கீட்டு பொறியாளர்

படையில் குறைந்தது ஆறு மாதங்களேனும் அவர்கள் பணியாற்றியிருக்க

வேண்டும் என்பதற்கு உட்பட்டு, பணியமர்த்தத்திற்கு தம் வயதைக் கணக்கிடும்

நோக்கத்திற்கு பொது ஒதுக்கீட்டு பொறியாளர் படையில் அவரது பணிக் கால

அளவைக் கழித்துக் கொள்வதற்கு உரிமைக் கொண்டிருப்பர்.

(10) தமிழ்நாடு மாநிலத்தில் மக்கட் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்திலிருந்து

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட அல்லது ஆட்குறைப்பை எதிர்கொள்ளும் மிகையான

தற்காலிகப் பணியாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமிழ்நாடு மாநிலத்தில்

மக்கட்தொகை கணக்கெடுப்பு நிறுவனத்தில் குறைந்தது ஆறு மாதங்களேனும்

தற்காலிகப் பணி ஆற்றியிருப்பதற்கு உட்பட்டு, பணியமர்த்தத்திற்காக தம் வயதைக்

கணக்கிடுகையில் மூன்று ஆண்டுகள் காலஅளவு ஒன்று நீக்கப்படுதல் வேண்டும்:

28

வரம்புரையாக, இந்த உள்விதியின்படி சலுகையைத் தாம் பயன்படுத்திவரும்

நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்

தேர்வு எழுதுவதற்கு ஒரே ஒரு வாய்ப்பிற்கு மட்டுமே தகுதியுடையவர் ஆவர்.

மொழி சார்ந்தத் தகுதி 21. (1) எவரும், மாநிலத்தின் ஆட்சிமொழியில், அதாவது, தமிழில், போதுமான

தனியறிவு ஒன்று கொண்டிருந்தாலன்றி நேரடி ஆளெடுப்பின் மூலமாக எந்தப்

பணியிலும் பணியமர்த்தம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவர் ஆகார்:

வரம்புரையாக, எந்தப் பணியிடத்திற்கு ஆளெடுக்கப்படுகிறதோ அந்தப்

பணியிடத்திற்கு பணியமர்த்தம் செய்வதற்குப் பிறவாறாக தகுதியுடையவராக

இருக்கும் ஒருவர், அத்தகைய விண்ணப்பத்தின் போது, அவர் தமிழில் போதுமான

தனியறிவு கொண்டிருக்கவில்லை என்ற பொருண்மை இருந்த போதிலும் அவர்

அந்தப் பணியிடத்திற்கு ஆளெடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

விளக்கம்.- இந்த விதியின் நோக்கத்திற்கு, பின்வரும் தகுதியை பெற்றிருக்கும்

ஒருவர் தமிழில் போதிய தகுதி உடையவராக கருதப்படுவார்-

(i) பணியிடம் ஒன்றுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியும் அதற்கு மேலும்

கல்வித் தகுதி வகுத்துரைக்கப்பட்டிருக்கும் அந்தப் பணியிடத்தைப் பொறுத்தவரை,

அவர் SSLC அரசுத் தேர்வில் அல்லது மொழிகளில் ஒன்றாக தமிழுடன் அதற்கு

சமமான தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பவராயின் அல்லது தமிழ்வழி உயர்நிலைப் பள்ளிப்

படிப்பு படித்திருப்பராயின் மற்றும் SSLC அரசுத் தேர்வு அல்லது தமிழ்வழி அதற்குச்

சமமான தேர்வு தேர்ச்சி அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்

நடத்தப்படும் தமிழில் இரண்டாம் பிரிவு மொழித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பாராயின்;

(ii) பணியிடம் ஒன்றுக்கு VIII ஆம் வகுப்பும் அதற்கு மேலும் ஆனால் SSLC

க்குக் கீழ் என கல்வித் தகுதி வகுத்துரைக்கப்பட்டிருக்கும் பணியிடம் ஒன்றைப்

பொறுத்தவரை, அந்த வகுப்புகளில் தமிழ்வழி பயின்றிருப்பாராயின் அல்லது

22ஆம் பிரிவில் (2)ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழில் மொழித் தேர்வில்

தேர்ச்சிபெற்றிருப்பாராயின்

(iii) ஒரு பதவிக்கு எட்டாம் வகுப்பிற்கும் குறைந்த கல்வித்தகுதி

வரையறுக்கப்பட்டிருக்கும் நேர்வில், அந்த வகுப்பினை தமிழ்வழியில் பயின்றவர்

அல்லது 22ஆம் பிரிவில் (2) ஆம் பிரிவில் உட்பிரிவில் குறிபிட்டடுள்ளவாறு தமிழ்

வாய்மொழித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்.

2. (i)ஆம் உட்பிரிவிற்குரிய வரம்புரையில் சுட்டப்பட்ட ஒவ்வொரு

விண்ணப்பதாரரும் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று அல்லது அதற்கு பின்பு

தேர்ந்தெடுக்கபட்டு நியமிக்கப்பட்டிருந்தால் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்

நடத்தப்படும் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

அல்லது நேர்வுக்கேற்ப 22ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிட்டுள்ளவாறு

தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அல்லது 22ஆம் பிரிவின்

(i) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட நியமன அதிகாரியால் நடத்தப்படும்

வாய்மொழித் தேர்விலோ தேர்ச்சி பெற வேண்டும். பணிநியமனம் செய்யப்பட்டு

இரண்டு ஆண்டுகட்கு மிகாமல் இருக்கும் நேர்வில், நியமன அதிகாரியால்

நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவர் மேற்சொன்ன இரண்டு

ஆண்டுகள் கால அளவிற்குள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர் பணிநீக்கம்

செய்யப்படுவார்.

(3) இந்தப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழில் இரண்டாம் வகுப்பு

மொழித் தேர்விற்கான பாடத்திட்டம் IV-ஆம் இணைப்புபட்டியலில்

குறித்துரைக்கப்பட்டுள்ளதாகும்.

29

மொழித் தேர்வு 22 (1) எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு அதிகமாகவும், பத்தாம் வகுப்பிற்குக்

குறைவாகவும் கல்வித் தகுதி பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, எட்டாம்

வகுப்பிற்கான தரத்தில் மொழித்தேர்வு அமையும். மேலும், தமிழ்நாடு மாநிலத்தில்

ஆட்சி மொழியில் போதுமான திறமை பெற்றிருக்காத விண்ணப்பதாரர்களுக்கு

பின்வருமாறு அமையும்.

தேர்விற்கான கால அளவு

பாடத் திட்டம் அதிக அளவு மதிப்பெண்

தேர்ச்சிக்கான

குறைந்த

அளவு

மதிப்பெண்

தேர்ச்சி பெறுவதற்குத் தேவையான மொத்த மதிப்பெண்கள்

(1) (2) (3)

(4)

(5)

60 24

50

10 நிமிடங்கள்

16

-

பகுதி - I தட்டச்சு செய்யப்பட்ட பாதி பக்கத்தினை வாசித்தல்

40

பகுதி-II - வாசித்தல்

(2) எட்டாம் வகுப்பிற்கும் குறைவான கல்வித் தகுதி பெற்றுள்ள

விண்ணப்பதாரர்களுக்கும் போதிய தமிழ் அறிவு பெறாதவர்களுக்கும், அவர்கள்

இயல்பாகவும் சரளமாகவும் தமிழில் உரையாட இயலமா என்பதைக் கண்டறிய,

நான்காம் வகுப்பிற்கான தரத்தில் மொழித் தேர்வு அமையும். மேற்சொன்ன தேர்வுகள்

பணிநியமன அதிகாரிகளால் நடத்தப்படும்.

குறித்த சில குறிப்பிட்ட 23. கீழ்கண்ட அட்டவணையில், பத்தி எண் (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள

பட்டங்களை பெற்ற நபர், அதற்கு நேரான பத்தி (1)-இல் குறிப்பிடப்பட்டுள்ள

பட்டங்கள் தொடர்பான சிறப்பு விதிமுறைகள்:-

சிறப்புத் தகுதிக்கான பட்டங்களில் ஒன்றினைப் பெற்றிருப்பின், சிறப்பு விதிகளில்

குறிப்பிடப்பட்டுள்ளனவற்றிற்கு முரணாக அமையாத பட்சத்தில் குறிப்பிடப்பட்ட

சிறப்புத் தகுதியினைக் கொண்டிருப்பதாகக் கொள்ளலாம்.

அட்டவணை

(1)

(2)

1. பி.ஏ (ஆனர்ஸ்), அல்லது

பி.எஸ்.சி (ஆனர்ஸ்) அல்லது

பல்கலைக் கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பி.காம் (ஆனர்ஸ்) அல்லது எம்.காம். பட்டம்

எம்.ஏ. அல்லது எம்.எஸ்.சி. பட்டம்

2. இப்பகுதியில் பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. பட்டம்

பல்கலைக் கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் ஏதேனும் ஒன்றில், பி.காம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் பி.ஓ.எல்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பி.பி.ஏ

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.லிட்

3. பி.ஏ, பி.எஸ்.சி அல்லது (i) அண்ணாமலைப் பல்கலைக் கழத்தில்

பி.காம் பட்டம்

பி.ஓ.எல்

(ii) மதுரை காமராஜர் பல்கலைக்

கழகத்தில் பி.பி.ஏ

(iii) சென்னை பல்கலைக் கழகத்தில்

பி.லிட்.

(iv) பாரதியார் பல்கலைக் கழகத்தில்

பி.பி.எம் மற்றும் பி.லிட்.

30

24. தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒருவர், சிறப்பு

விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு சிறப்பு தகுதியை பெற்றிருந்தாலோ அல்லது

சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலோ அல்லது சிறப்புத் தகுதி அல்லது

சிறப்புத் தேர்விற்கு இணையானதாக கருதி மாநில அரசின் ஒப்புதலுக்குப் பின்

தகுதிகாண் பருவத்தின் போது பெற வேண்டிய சிறப்பு தகுதியிலிருந்து அல்லது தேர்ச்சி பெற வேண்டிய சிறப்பு தேர்விலிருந்து விலக்கு.

மாநில அரசாலோ அல்லது பணிநியமன அதிகாரியாலோ ஏற்றுக் கொள்ளக்கூடிய

அத்தகைய தகுதிகளை பெற்றிருந்தாலோ, அவர் தகுதிகாண் பருவம் தொடங்கிய

பின்னர், இது போன்ற சிறப்புத் தகுதிகளை மீண்டும் பெறவோ, அல்லது மீண்டும்

சிறப்புத் தேர்வில் தேர்ச்சிப் பெறவோ தேவையில்லை.

சிறப்பு தகுதிகள்.

25. யாதொரு நபரும்,-

(அ) சிறப்பு விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு சிறப்புத் தகுதிகளைப்

பெற்றிருந்தாலும் அல்லது இதுபோன்ற சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி

பெற்றிருந்தாலும் அல்லது

(ஆ) சிறப்புத் தகுதிகள் அல்லது சிறப்புத் தேர்வுகளுக்கு அதிகமான அல்லது

இணையான பிற தகுதிகளைப் பெற்றிருந்தாலன்றி, யாதொரு பணியிலோ,

தரத்திலோ, இனத்திலோ அல்லது தரநிலையிலோ அல்லது யாதொரு பதவிலோ

நியமிக்கப்பட தகுதியற்றவராவார்.

(i) ஆணையத்தைக் கலந்தாலோசித்து பணிநியமனம் செய்யப்பட வேண்டிய

நேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரின்

தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் கலந்தாலோசனையின் பேரில் மாநில

அரசால்,

(ii) பிற இனங்களில், மாநில அரசாலோ அல்லது மாநில அரசின் ஒப்புதலைப்

பெற்றபின் பணிநியமன அதிகாரியாலோ

விளக்கம் I ஒரு பட்டயத்தியையோ அல்லது ஒரு பட்டத்தினையோ அல்லது

ஒரு முதநிலைப் பட்டத்தினையோ பணிநியமனம் செய்வதற்கு போதுமான கல்வித்

தகுதியாக சிறப்பு விதிகள் குறிப்பிடும் நேர்வுகளில்,-

பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு

பல்கலைக் கழகத்திலோ அல்லது நிறுவனத்திலோ,

(அ) பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின்

பெறப்பட்ட ஒரு பட்டயம், [10+3 (3 ஆண்டுகள் பட்டயம்)] அல்லது 10+2 +2 (பிந்தைய

சேர்க்கை)] அல்லது

(ஆ) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின்

பெறப்பட்ட ஒரு பட்டம் [10+2+3 அல்லது அதற்கு மேல்] அல்லது

(இ) பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பட்டப்படிப்பில்

தேர்ச்சி பெற்றபின் பெறப்பட்ட ஒரு முதநிலைப்பட்டம் (10+2+3+2 அல்லது 3)

பெற்றிருப்பின் அது தேவையான தகுதியாகக் கொள்ளப்படும்.

விளக்கம் II.- சிறப்பு விதிகளில், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பட்டயம்

பெற்றிருப்பது, கல்வித் தகுதியாகக் குறிப்பிடப்பட்டிருப்பின், அப்பாடத்தில் பட்டம்

பெற்றிருப்பதை உயர் தகுதியாகக் கருத வேண்டும்.

விளக்கம் III.- சிறப்பு விதிகளில் கல்வி/தொழில் நுட்பத் தகுதிகளுக்கும்

கூடுதலாக செய்முறை அறிவும் அனுபவமும் தேவை எனப் குறிப்பிடப்பட்டிருப்பின்,

சிறப்பு விதிகளில் வேறுவிதமாக குறிப்பிடப்படாதபட்சத்தில் கல்வித் தகுதியை

பெற்ற பின்னரே தொழில்நுட்பத் தகுதி, செயல்முறை அறிவு ஆகியன பெற்றிருத்தல்

வேண்டும்.

பெண்களுக்கான 26(1) பெண்களுக்கென தனியாக உருவாக்கப்பட்ட நிருவனங்களிலோ

நியமனம்.

அல்லது அமைப்புகளிலோ பெண்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட வேண்டும்:

இத்தகைய நியமனத்திற்கு பொருத்தமான மற்றும் தகுதிவாய்ந்த பெண்கள்

கிடைக்காத நேர்வுகளில், ஆண்களும் பணியமர்த்தப்படலாம்.

31

(2) குறிப்பிட்ட பதவிகளுக்காக இடஒதுக்கீடு விதி நடைமுறையில்

இருந்தாலும் அல்லது இல்லாவிடினும், நேரடி நியமனத்தின் போது அனைத்து

காலிப்பணியிடங்களுக்கும் குறைந்தளவு 30 விழுக்காடு காலிப்பணியிடங்கள்

பெண்களுக்கென ஒதுக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டு விதி நடமுறையில்

இருக்கும் பணியிடங்களில் பெண்களுக்கென ஒதுக்கப்படும் 30 விழுக்காடு

பணியிடங்களிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர்,

பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமியர், பிற்படுத்தப்பட்டோர்,

மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் பொதுப்பிரிவு போன்றோருக்கான

இடஒதுக்கீட்டு விதிகளும் பின்பற்றப்பட வேண்டும். எஞ்சியுள்ள 70 விழுக்காடு

காலிப்பணியிடங்களுக்கும் பெண்கள் ஆண்களுடன் போட்டியிட உரிமை

பெற்றவர்களாவார்.

வரம்புரையாக, தரஊதியம் ரூ.2800 (ரூபாய் இரண்டாயிரத்து எண்ணூறுக்கு)

மிகாமல் இருக்கும் பணியிடங்களுக்கான நேரடி பணி நியமனத்தின்போது,

பெண்களுக்கென ஒதுக்கப்படும் 30 விழுக்காட்டில் பத்து விழுக்காட்டினை

ஆதரவற்ற விதவைக்கென ஒதுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பத்து

காலிப்பணியிடங்களிலும் முதல் காலிப்பணியிடம் ஆதரவற்ற விதவைக்கெனவும்

பெண்களுக்கென இனவாரியாக பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்ட

இசுலாமியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்/

சீர்மரபினர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் என்றவாறு

ஒதுக்கப்பட்ட பணியிடங்களிலும் ஒவ்வொரு பத்து காலிப்பணியிடங்களிலும்

முதல் காலிப்பணியிடம் ஆதரவற்ற விதவைகளுக்கென ஒதுக்கப்படவேண்டும்.

தகுதிவாய்ந்த பொருத்தமான ஆதரவற்ற விதவை இல்லாத நேர்வில், ஆதரவற்ற

விதவைகளுக்காக ஒதுக்கப்பட்ட சுழற்சி முறையான குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த

(ஆதரவற்ற விதவை அல்லாத) பெண்களுக்காக ஒதுக்கப்படும்.

விளக்கம்.- பிரிவு 20ல் உட்பிரிவு 8ன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ள, அதே

பொருளினை கொண்டிருத்தல் வேண்டும்.

(3) "ஆதரவற்ற விதவை" என முன்னுரிமை கோரும் விண்ணப்பத்தாரர்

X-ஆம் இணைப்புப்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளவாறு வருவாய் கோட்ட

அலுவலரிடமிருந்தோ அல்லது மாவட்ட உதவி ஆட்சியரிடமிருந்தோ அல்லது

துணை ஆட்சியரிடமிருந்தோ சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும்.

(4) VIII-ஆம் இணைப்புப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள இனசுழற்சி முறையின்படி

இவ்விதியின் கீழான பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்படும்.

(5) பெண்களுக்கான சுழற்சி முறையின் போது, பட்டியில் சாதியினர் பட்டியல்

பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் அல்லது பொதுப்பிரிவினர் போன்ற

இனங்களில் தகுதிவாய்ந்த மற்றும் பொருத்தமான பெண் விண்ணப்பத்தாரர்

இல்லாத நேர்வுகளில் அச்சுழற்சி முறையானது குறிப்பிட்ட அதே இனத்தை

சேர்ந்த ஆண் விண்ணப்பத்தாரருக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கீடு விதி

பின்பற்றப்படாத பணியிடங்களுக்கு, பெண்களுக்குரிய சுழற்சிமுறை அடுத்த ஆண்

விண்ணப்பதாரருக்கு ஒதுக்கப்படும்.

நியமனங்களுக்கான 27. நியமனங்களுக்கான இட ஒதுக்கீடு, கொள்கை எந்த ஒரு பணி வகுப்பு

இட ஒதுக்கீடு.

அல்லது வகையில் நியமனத்திற்குரிய தெரிவிற்க்கும் பொருந்தும். அவை பின்வரும்

அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

(அ) இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக நியமனத்திற்கான

தேரிவின் அளவு இருநூறாக இருக்கும் அவற்றில் 36 இடம் பட்டியல்

சாதியினரிடையே முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 6

இடம் உள்ளடங்கலாக, பட்டியல் சாதியினருக்கு, பட்டியல் பழங்குடியினருக்கு 2 இடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 53ம், (பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர், மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்கள் அல்லாத பிற) பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர்களுக்கு 7ம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்

சீர்மரபினருக்கும் 40 இடம் ஒதுக்கீடு செய்யப்படும் மற்றும் 62 இடம் தகுதியின்

அடிப்படையில் நிரப்பப்படும்.

32

வரம்புரையாக, இதன்பின்பு, V-ஆம் இணைப்புப்பட்டியலிலுள்ள பட்டியல்

சாதியினருக்கிடையே அருந்ததியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தேவைப்படும்

நியமனங்கள் அல்லது பணியிடங்கள் நிரப்பப்படுமானால் அதிகப்படியான

எண்ணிக்கையில் தகுதியுடைய அருந்ததியர்கள் இருப்பார்களானால், அத்தகைய

மிகையான எண்ணிக்கையிலுள்ள அருந்ததியர்கள், அவர்களிடையேயான

தகுதியின்படி பிற பட்டியல் சாதியினருடன் போட்டியிடுவதற்கு

உரிமையுடையவர்களாவர் மற்றும் அருந்ததியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடம்,

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல்

நிரப்பப்படாமல் இருக்குமானால், அது அருந்ததியர்கள் அல்லாத பிற பட்டியல்

சாதியினர்களிடையேயிருந்து நிரப்பப்படும்.

(ஆ) நேரடி நியமனம் மூலம் செய்யப்படும் நியமனத்தைப் பொறுத்தவரை,

(அ) கூறில் குறிப்பிடப்பட்ட வகைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நியமனங்களின்

மொத்த எண்ணிக்கையிலிருந்து, அத்தகையவகை ஒவ்வொன்றிலும் ஒரு

விழுக்காடு, பார்வையற்றோர், காது கேளாதவர் மற்றும் அங்ககீன மாற்றுத்திறனாளி

விண்ணப்பதாரர்களுக்காக தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் மற்றும் அந்த நியமனம் முறைப்படியும் VI-ஆம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட சுழற்சி

முறைப்படியும் செய்யப்படும்:

வரம்புரையாக, ஒதுக்கப்பட்ட முறைகளுக்கான மாற்றுத்திறனாளி

விண்ணப்பதாரர்களின் நியமனமானது அத்தகைய விண்ணப்பதாரர்களில்

கிடைக்கக்கூடியவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டிருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, குறிப்பிட்ட வகையான மாற்றுத்திறனாளி அதாவது,

பார்வையற்றோர், காது கேளாதவர் அல்லது அங்ககீன மாற்றத்திறனாளிகளிடையே

தகுதியுடைய மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர் எவரும் கிடைக்கவில்லை

என்றால், அந்தக் காலிப்பணியிடம் பிற இரண்டு வகையினர்களின் ஒன்றைச் சேர்ந்த

விண்ணப்பதாரர்களால் நிரப்பப்படுதல் வேண்டும். இந்த நடைமுறை இந்த கூறில்

மூன்றாவது வரம்புரைக்குட்பட்டது.

இன்னும் வரம்புரையாக, பள்ளிக்கல்வித் துறை, ஆதி திராவிடர் மற்றும்

பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும்

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் துறையின் கல்வி கற்பிக்கும் பணியிடங்களில்

அங்ககீன மாற்றுத்திறனாளி, அதோடுகூட பார்வையற்றோருக்கான இட ஒதுக்கீடு

இரண்டு விழுக்காடு ஆகும் மற்றும் காது கேளாதவர்களுக்காக இட ஒதுக்கீடு

ஏதும் கிடையாது. மேலே சொல்லப்பட்ட துறைகளிலுள்ள கல்வி கற்பிப்பவர்கள்

அல்லாத பணியிடங்களில் அங்ககீன மாற்றுத்திறனாளிகள், அதோடுகூட

காது கேளாதவர்களுக்கான இட ஒதுக்கீடு இரண்டு விழுக்காடு ஆகும் மற்றும்

பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு ஏதும் கிடையாது.

மேற்கொண்டு வரம்புரையாக இட ஒதுக்கீடு செய்யப்பட்ட முறைகள்

அடங்கிய நியமனத்திற்கான தெரிவு செய்ய பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல்

பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர் மரபினர்

சமுதாயத்தைச் சேர்ந்த தகுதியுடைய மற்றும் பொருத்தமான மாற்றுத்திறனாளிகள்

எவரும் கிடைக்கவில்லை என்றால், அத்தகைய முறை, அந்த வகையைச் சேர்ந்த

மாற்றுத்திறனாளி அல்லாத பிற விண்ணப்பதாரரால் நிரப்பப்படும், பின்னர்,

அத்தகைய முறை (ஈ) கூறில் வகை செய்யப்பட்டவாறு முன்னெடுத்துச் செல்லப்படும்:

இன்னும்கூடவரம்புரையாக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்/

மிகவும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் அல்லாத பிற

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் நியமனத்தைப்

பொறுத்து அல்லது தகுதியின் அடிப்படையிலான விண்ணப்பதாரர்களின்

நியமனத்தைப் பொறுத்தவரை, இட ஒதுக்கீடு செய்யப்பட்ட முறைப்படியிலான

நியமனத்திற்கான தேர்விற்கு தகுதியுடைய மற்றும் பொறுத்தமான மாற்றுத்திறனாளி

எவரும் கிடைக்கவில்லை என்றால், அத்தகைய முறையானது, அந்த இனத்தைச்

சேர்ந்த மாற்றுத்திறனாளி அல்லாத பிற விண்ணப்பதாரரால் நிரப்பப்படுதல் வேண்டும்

மற்றும் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட முறைப்படியான நியமனத்திற்காக தேர்விற்காக

அந்த இனத்தில் அத்தகைய விண்ணப்பதாரர் எவரும் கிடைக்கவில்லை என்றால்

அத்தகைய முறையானது செல்லாது போவதற்கு அனுமதிக்கப்படும்:

33

இன்னும்கூட வரம்புரையாக, தொடர்புடைய நிருவாகப் பணியிடங்களை

பொறுத்தளவு நியமனத்திற்கு முன்பு மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்

தம்முடைய ஊனம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை செய்வதை பாதிக்கவில்லை

என்றபடிக்கு மருத்துவக் குழுவிடமிருந்து உடற்தகுதிச் சான்றிதழ் பெற்று

தாக்கல் செய்தல் வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, மாற்றுத்திறனாளி

விண்ணப்பதாரர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட

பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்ட 'அ' மற்றும் 'ஆ' தொகுதிகளிலுள்ள பொருத்தமான

பணியிடங்கள் மற்றும் 'இ' மற்றும் 'ஈ' தொகுதிகளிலுள்ள அனைத்துப்

பணியிடங்கள் பொறுத்து பொருந்தத்தக்கதாகும்:

மேற்கொண்டும்கூட வரம்புரையாக, அறிவிக்கை செய்யப்பட்ட

காலிப்பணியிடங்கள், மாற்றுத் திறனாளியின் அதாவது பார்வையற்றோர் மற்றும் காது

கேளாதவர் அல்லது காது கேளாதவர் மற்றும் அங்ககீன மாற்றுத்திறனாளி அல்லது

பார்வையற்றோர் மற்றும் அங்ககீன மாற்றுத்திறனாளி ஆகிய மூன்று வகையினர்களில்

ஏதேனும் இரண்டில் மட்டுமே பொருத்தமான அடையாளம் காணப்படுவாரானால்

மற்றும் மாற்றுத்திறனாளி இனத்தில் தகுதியில்லாதவர்களுக்கான

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையானது, பிற இரண்டு தகுதியுடைய

வகையினர்களுக்கிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுமானால் அல்லது

சொல்லப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை ஒற்றைப்படையில்

இருக்குமானால், எஞ்சிய காலியிடம், அண்மைக்கால மக்கட்தொகை

கணக்கெடுப்பின்படி அதிகளவு மக்கட்தொகை கொண்ட தகுதியுடைய

மாற்றத்திறனாளி வகையினரில் இரண்டில் ஒன்றுக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும்:

மேலும், வரம்புரையாக, அறிவிக்கை செய்யப்பட்ட அல்லது அடையாளம்

காணப்பட்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளி வகையில் ஒன்றுக்கு மட்டும்

பொருத்தமானதாக இருக்குமானால், அப்போது, மொத்த மூன்று விழுக்காடு

காலிப்பணியிடமும், அந்த குறிப்பிட்ட மாற்றுத்திறனாளி வகையினருக்கு

ஒதுக்கப்படுதல் வேண்டும்.

(இ) தொகுதி 'இ' பணியிடங்களுக்கான நேரடி மூலமான நியமனத்தைப்

பொறுத்தவரை, (அ) கூறில் சுட்டப்பட்ட வகைகளிலுள்ள இட ஒதுக்கீடு செய்யப்பட்ட

நியமனங்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து, ஒவ்வொரு வகையினருக்கும்

ஐந்து விழுக்காடு முன்னாள் இராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்

மற்றும் அத்தகைய விண்ணப்பதாரர்கள் கிடைக்கக்கூடிய தன்மைக்குட்பட்டு, அந்த

நியமனம், முறைப்படியும், VII-ஆம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட

சுழற்சி முறை வரிசைப்படியும் செய்யப்படுதல் வேண்டும்:

வரம்புரையாக, ஒதுக்கீடு முறைப்படியான நியமனத்திற்காக

தேர்ந்தெடுத்தவர்களுக்கு குறிப்பட்ட வகையைச் சேர்ந்த தகுதியுடைய மற்றும்

பொருத்தமான முன்னாள் இராணுவத்தினர் எவரும் கிடைக்கவில்லை என்றால்,

அத்தகைய முறை, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்

அல்லாத பிற விண்ணப்பதாரர்களால் நிரப்பப்படுதல் வேண்டும் மற்றும் ஒதுக்கீடு

செய்யப்பட்ட முறைப்படியான நியமனத்திற்கான தேர்ந்தெடுத்தலுக்காக அந்த

இனத்தில் அத்தகைய விண்ணப்பதாரர் எவரும் கிடைக்கவில்லை என்றால்,

அத்தகைய முறை, (ஈ) கூறில் வகை செய்யப்பட்டவாறு முன்னெடுத்துச்

செயல்படுத்துதல் வேண்டும்.

(ஈ) பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர் (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர் அல்லாத

பிற) பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர்கள்/ சீர்மரபினர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முப்பத்தொன்று

நியமனங்களுக்காகவும்கூட பரிசீலிக்கப்படுதல் வேண்டும் மற்றும் பட்டியல்

சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, / சீர்மரபினர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட34 வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர்கள் அல்லது மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு / சீர்மரபினர் தகுதியடிப்படையில்

தேர்ந்தெடுக்கப்படுகிறவிடத்து, நேர்வுக்கேற்ப, பட்டியல் சாதியினர்,

பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், (மிகவும் பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர்/ சீர்மரபினர் அல்லாத பிற) பிற்படுத்தப்பட்ட வகுப்பு

இசுலாமியர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், எந்த

வழியிலும் பாதிக்கப்படுதலாகாது.

(உ) இந்தப் பிரிவின்படியான நியமனத்திற்கான தேர்ந்தெடுத்தல், V-ஆம்

இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கபட்ட சுழற்சி முறை வரிசைப்படி செய்யப்படுதல்

வேண்டும்.

விளக்கம்.- 2009 ஏப்ரல் 29 அன்றும் அதுமுதற்கொண்டும் ஏற்படும்

காலிப்பணியிடங்கள், V-ஆம் இணைப்புப்பட்டியலின்படி நிரப்பப்படுதல் வேண்டும்

மற்றும் நியமனத்திற்கான தேர்ந்தெடுப்புகள் அனைத்தும், மேற்சொன்ன

தேதியன்றும் அதுமுதற்கொண்டும் நடைமுறைக்கு வருமாறு மேற்சொன்ன V-ஆம்

இணைப்புப்பட்டியலுள்ள வரிசை எண்ணிலிருந்து புதிதாக தொடங்கப்படுதல்

வேண்டும்.

(ஊ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

மற்றும் சீர்மரபினர் உள்ளடங்கலான பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர்களில்

எவரையும் சேர்ந்த தகுதியுடைய மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர்கள்,

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முறையில் பணி மாற்றல் மூலமாக அல்லது பதவி உயர்வு

மூலமான நியமனத்திற்கான தேர்விற்கு கிடைக்கவில்லையென்றால், அவ்வாறு

ஒதுக்கப்பட்ட முறை செல்லாது போகும் மற்றும் அந்தக் காலிப்பணியிடங்களுக்குரிய

நியமனத்திற்கான தேர்வு, சுழற்சி முறையிலுள்ள அடுத்த முறைப்படி செய்யப்படுதல்

வேண்டும்:

வரம்புரையாக, பட்டியல் சாதியனர் மற்றும் பட்டியல் பழங்குடியினரில்

எவரையும் சேர்ந்த தகுதியுடைய மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர்,

மாற்றல் மூலமான பணி நியனத்திற்கான அல்லது சுழற்சி

முறையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முறைப்படி பதவிவுயர்வு மூலமான

தேர்விற்கு கிடைக்கவில்லையென்றால், அவர்களுக்கு அவ்வாறு ஒதுக்கப்பட்ட

முறை செல்லாது போதல் ஆகாது மற்றும் அந்த ஆளெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட

வேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையானது அவர்களுக்கு

ஒதுக்கப்பட்ட முறைப்படியான தேர்வுக்கு கிடைக்காதிருக்கிற பட்டியல்

சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின்

எண்ணிக்கையில் கழிக்கப்படுதல் வேண்டும். பணி மாற்றல்

மூலம் அல்லது பதவிவுயர்வின் மூலம் ஆளெடுப்பிற்காக

நிரப்பப்படவேண்டிய பட்டியல் சாதியினர் மற்றும்

பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட நிரப்பப்படாத காலிப்

பணியிடங்கள் நான்கு தொடர்ச்சியான ஆளெடுப்பு ஆண்டுகளுக்கு அதாவது,

ஆளெடுப்பு ஆண்டுடன் சேர்த்து மூன்று பிந்தைய ஆளெடுப்பு

ஆண்டுகளுக்கு நிலுவையாக கொண்டு செல்லப்படுதல் வேண்டும். அடுத்த

ஆளெடுப்பில் காலிப்பணியிடங்களுக்கான நியமனத்திற்குரிய தேர்வு,

நிலுவையாகக் கொண்டு செல்லப்பட்ட முறைகளுக்காக முதலில்

செய்யப்படுதல் வேண்டும். அதற்குப்பின் மாற்றல் மூலம் அல்லது பதவி உயர்வு

மூலமான ஆளெடுப்பிற்கான தேர்வுக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்

பழங்குடியினரில் எவரையும் சேர்ந்த தகுதியுடைய மற்றும் பொருத்தமான

விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லையென்றால் அதன்பின்பு, அந்த

வகையினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்கள், சுழற்சி

முறை வரிசைப்படி அடுத்த முறையிலுள்ள விண்ணப்பதாரர்களால்

அவர்களை நிரப்பும்முன்பு அரசின் ஆணைகளைப் பெற்று முதலில் ஒதுக்கீட்டை

நீக்குதல் வேண்டும்:

35

மேலும் வரம்புரையாக, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரைச்

சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்களின்

வழக்கான எண்ணிக்கை மற்றும் முதல் வரம்புரையில் குறித்துரைக்கப்பட்டவாறான

முன்னெடுத்துச் செல்லப்பட்ட காலிப்பணியிடங்கள், குறிப்பிட்ட ஆளெடுப்பிற்கான

காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் ஐம்பது விழுக்காட்டிற்கு

மேற்படுதல் ஆகாது. இரண்டு காலியிடங்கள் மட்டுமே இருக்குமானால் அவற்றில்

ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடமாகக் கருதப்படும். ஓரே ஒரு

காலிப்பணியிடம் மட்டும் இருக்குமானால், ஒதுக்கீடு செய்யப்படாததாகக்

கருதப்படுதல் வேண்டும். ஐம்பது விழுக்காட்டிற்கு மிகையான காலிப்பணியிடம்,

மூன்று ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து இருப்பதாக காலம் கடந்ததாகிவிடாமல்

முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, பிந்தைய

ஆளெடுப்பிற்கு முன்னெடுத்துச் செல்லப்படுதல் வேண்டும். முன்னெடுத்துச்

செல்லப்பட்ட காலிப்பணியிடங்கள் குறித்த காலத்திற்குமுன் நியமனத்திற்கான

தேர்வு முதலில் செய்யப்படுதல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, 1989 ஏப்ரல் 1 அன்றும் அது முதற்கொண்டும்

நடைமுறைக்கு வருமாறு நேரடி ஆளெடுப்பு மூலமான நியமனத்திற்கான

தேர்வினைப் பொறுத்தவரை, நேரடி ஆளெடுப்பு மூலம் நியமிக்கப்பட வேண்டிய

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களில் மிகவும் பிற்படுத்ததப்பட்ட

/சீர்மரபினர் எவரையும் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட

காலிப்பணியிடங்களில் ஒதுக்கீட்டை நீக்குவதற்கு தடையாக இருத்தல் வேண்டும்.

ஆனால் காலிப்பணியிடங்களில் ஒதுக்கீட்டை நீக்குவதற்காக மேலேயுள்ள

தடையானது (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் அல்லாத

பிற) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்காக

ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பொருந்துதல் ஆகாது மற்றும்

ஆகையால், (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் அல்லாத பிற)

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களில் எவரையும்

சேர்ந்த தகுதியுடைய மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர் நியமனத்திற்காக

கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த முறையானது

செல்லாது போகிவிடும் மற்றும் சுழற்சி முறை வரிசைப்படியான அடுத்த முறைக்கான

வகுப்பினரைக் கொண்டு நிரப்படுதல் வேண்டும். முதல் ஆளெடுப்பு முயற்சியில்

நேரடி ஆளெடுப்பு மூலம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடத்திற்குரிய

நியமனத்திற்கான தெரிவிற்கு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்

பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் எவரையும் சேர்ந்த

தகுதியுடைய மற்றும் பொருத்தமான விண்ணப்பதாரர்கள் போதுமான

எண்ணிக்கையில் கிடைக்கவில்லை என்றால், அப்போது, இரண்டாம் முயற்சி,

அதே ஆளெடுப்பாண்டில் அல்லது அத்தகைய பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களின் தெரிவிற்கு அடுத்த நேரடி ஆளெடுப்பிற்கு முன்பு,

சாத்தியமான விரைவில், நேரடி ஆளெடுப்புமூலம் அந்தந்த

வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய வகுப்பினரைச் நிரப்பப்படாமல் சேர்ந்த

தேவையான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால்,

அப்போது காலிப்பணியிடங்கள் "பின்னடைவு" காலிப்பணியிடங்களாக அவை

கருதப்பட்டு அடுத்த ஆளெடுப்பு ஆண்டுவரையில் தொடர்ந்து நிரப்பப்படாமல்

இருக்கும். பிந்திய ஆண்டில், அந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்காக

நேரடி ஆளெடுப்பு செய்யப்படும்போது, அதாவது, நடப்புக் காலிப்பணியிடங்கள், "பின்னடைவு" காலிப்பணியிடங்களாக, IX-ஆம் இணைப்புப்பட்டியலில்

விளக்கிக்கூறப்பட்டவாறு இரண்டு தனிப்பட்ட தொகுதிகளாக குறிப்பிட்ட

ஆண்டுகளின் காலிப்பணியிடங்களாக வைத்து வரப்பட்டு நேரடி ஆளெடுப்பிற்காக

அறிவிக்கப்படுதல் வேண்டும். "பின்னடைவு" காலிப்பணியிடங்களாக அடுத்த நேரடி ஆளெடுப்பிற்குரிய நியமனத்திற்கான தெரிவு முதலில் செய்யப்படுதல் வேண்டும்

மற்றும் அதற்கு பின்னர் வழக்கமான சுழற்சி முறை பின்பற்றப்பட வேண்டும்:

36

வரம்புரையாக, விதிவிலக்கான நேர்வுகளில், அந்தந்த ஒதுக்கீட்டு

காலிப்பணியிடங்களுக்கு பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினரைச் சேர்ந்த பொருத்தமான

விண்ணப்பதாரர்கள் தொகுதி 'அ' மற்றும் 'ஆ' பணியிடங்களுக்காக

கிடைக்காதிருப்பின் மற்றும் பணியிடங்கள் நிரப்பப்படாமை நிருவாகத்தை

நடத்த கடினத்தை ஏற்படுத்துமாயின், அரசு, அத்தகைய காலிப்பணியிடங்களை

முன்னெடுத்துச் செல்வதிலிருந்து விதிவிலக்கு அளிக்கலாம் மற்றும் அதற்கான

நடைமுறை, IX-ஆம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டவாறு இருக்க

வேண்டும்:

வரம்புரையாக, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், மிகவும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு இசுலாமியர்கள்

அல்லது பொது முறைக்கான காலிப் பணியிடங்கள் நியமனத்திற்காக ஒரு

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும்போது, அவர் நியமிக்கப்பட்ட பணியிடத்தில்

பணியில் சேராதிருக்கும்போது அல்லது காரணம் எதற்காகவும் அந்தப்

பணியிடத்திற்கான அவருடைய தற்காலிக தெரிவு ரத்து செய்யப்படுகிறபோது

அந்த விண்ணப்பதாரர் இடத்தில் அந்தந்த வகையிலிருந்து மற்றும் ஒதுக்கீட்டு

தெரிவுபட்டியலிலிருந்து படிநிலைப்படி நியமிக்கப்படுதல் வேண்டும்:

மேலும் வரம்புரையாக, ஒதுக்கீட்டு தெரிவு பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட

விண்ணப்பதாரர்கள், காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ள அதே காலவரிசையில்

முறையான பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்

கீழே வைக்கப்படுதல் வேண்டும்:

இன்னும் வரம்புரையாக, காப்புப் பட்டியல் நடைமுறையில் இருக்கையில்,

விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்த பின்னர் பணியை விட்டு சென்றுவிட்டார்

என்ற பொருண்மையின் பொருட்டு ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு எதிரிராக,

செயற்படுத்தப்படும்.

(எ) இந்தப் பிரிவிலும் பல்வேறு மாநில மற்றும் சார்நிலைப்பணிகளுக்கான

சிறப்பு விதிகளிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், ஒதுக்கீட்டு விதி,

கருணையடிப்படையில் செய்யப்படும் நியமனங்களுக்கு பொருந்துதலாகாது.

(ஏ) இந்தப் பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும் பணியில்

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை

மீட்டெடுக்கும்பொருட்டு அந்தப் பிரதிநிதித்துவம் பதினெட்டு விழுக்காட்டிற்குக்

குறைவாக இருக்கிறவிடத்து மற்றும் ஒரு விழுக்காடாக இருக்கும்போது

முறையே ஒவ்வொரு துறையிலும் அத்தகைய காலியிடங்களை அ, ஆ, இ

மற்றும் ஈ தொகுதிகள் ஒவ்வொன்றிலுமுள்ள பணியிடங்களில்

குறைந்த அளவில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்

குறைபாடுடைய காலிப்பணியிடங்களாக தெரிவித்தல் வேண்டும்.

அதோடுகூட, அரசு தமிழ்நாடு அமைச்சுப் பணியிலுள்ள மற்றும் அரசு

தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியிலுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர்

மற்றும் சுருக்கெழுத்தர்-தட்டச்சர் நிலை-III மற்றும் முறைப்படி, ஒரே முறை

நடிவடிக்கையாக நேரடி நியமனத்திற்கான காலிப்பணியிடங்களை அறிவிக்கை

செய்வதற்காக ஆளெடுக்கும் முகமைகளுக்கு அதனைத் தெரிவித்தல் வேண்டும்:

வரம்புரையாக, மகளிர், மாற்றுத் திறனாளி மற்றும் முன்னாள்

இராணுவத்திற்கான ஒதுக்கீடு, மேற்சொன்ன ஆளெடுப்பிற்குப் பொருந்துதலாகாது.

37

முதலில் தற்காலிகமாக 28.(1) நபர் ஒருவரது நியமனம் உள்ளடக்கிய வகை முறைகளுக்கிணங்க

அல்லாமல் பிறவாறு பணி வகை அல்லது இனம் எதிலுமுள்ள காலியிடத்தை

நிரப்புவதற்கென்று 17ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் அல்லது (2) ஆம் உட்பிரிவின்படி

நியமிக்கப்பட்ட நபர்களின் தகுதிகாண் பருவத்தின் தொடக்கத் தேதி.

தற்காலிகமாக அத்தகைய காலியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படக்கூடிய

காலியிடமாக இருந்து, பின்னர் அந்தப்பணி வகை அல்லது இனத்திற்கு

நியமிக்கப்படுவாரானால், அவர் தம்முடைய தகுதிகாண் பருவம் ஏதேனுமிருப்பின்,

அதனை அத்தகைய இனத்தின் பணியிடம் ஓன்று தம்முடைய முதலாவது

தற்காலிக நியமனத் தேதியிலிருந்து அல்லது அத்தகைய பிந்தைய தேதியிலிருந்து

தொடங்குதல் வேண்டும் என்று நியமன அதிகாரி முடிவு செய்யலாகும். அந்தப்

பணியிடம் மாற்றல் மூலம் செய்யப்படலாகும் நியமனம் ஒன்றாக இருக்குமானால்

மற்றும் அதற்கு நியமிக்கப்பட்டிருந்த நபர், ஒருவர் 17 ஆம் பிரிவின் (1) ஆம்

உட்பிரிவின்படி அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி மாற்றல் மூலம் அதற்கு பின்னர்

நியமிக்கப்பட்டிருந்து, ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் பட்டியலில்

சேர்க்கப்பட்டிருந்தால், நியமன அதிகாரி, தம்முடைய உளத்தேர்வின்படி தம்முடைய

முதலாவது தற்காலிக நியமனத் தேதியிலிருந்து அல்லது நியமன அதிகாரி

முடிவு செய்யலாகும் பிந்திய தேதியிலிருந்து அவருடைய தகுதிகாண் பருவம்,

ஏதேனுமிருப்பின், அதனை தொடங்குவதற்கு அனுமதிக்கலாம்:

வரம்புரையாக, இந்தப் பிரிவில் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு நியமன

அதிகாரியால் அவ்வாறு முடிவு செய்யப்பட்ட தேதி, ஏற்கெனவே பணியிலுள்ள

மிகவும் இளநிலையிலுள்ளவரின் தகுதிகாண் பருவம் தொடங்கும் தேதிக்கு

முந்தியதாக இருத்தல் ஆகாது:

மேலும் வரம்புரையாக, இந்தப் பிரிவில் தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு

நியமன அதிகாரியால் அவ்வாறு முடிவு செய்யப்பட்ட தேதியன்று, அந்த

நபர் அந்தப்பணிக்குரிய நியமனத்திற்காக வகுத்துரைக்கப்பட்ட தகுதிகள்

அனைத்தையும் மட்டுமே உடையவராக இருத்தல் ஆகாது, ஆனால்

ஆணையத்தினால் அல்லது, நேர்வுக்கேற்ப, நியமன அதிகாரியினால் தயார்

செய்யப்படும் ஒப்புதலளிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியலில் சேர்ப்பதற்கு

தகுதியுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

(2)(1) ஆம் உட்பிரிவின்படி தகுதிகாண் பருவம் தொடங்குகிற நபர் ஒருவர்,

தம்முடைய தகுதிகாண் பருவம் தொடங்குகிற தேதியிலிருந்து அவருக்குப்

பொருந்தக்கூடிய ஊதிய ஏற்ற முறையில் அல்லது ஊதிய விகிதத்தில் ஊதிய

உயர்வுகள் பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பார். அந்த ஆணையின்

தேதியைவிட முந்தைய தேதியிலிருந்து தகுதிகாண் பருவம் தொடங்குவதற்கு

ஆணையிடப்படுமிடத்து மற்றும் இது விதி எதனையும் தளர்த்துவதன் மூலம்

இயல்விக்கப்பட்டிருந்திருக்குமானால் அவர் அத்தகைய முந்தியத் தேதியிலிருந்து

அவருக்குப் பொருந்தக்கூடிய ஊதிய ஏற்ற முறையில் அல்லது ஊதிய விகிதத்தில்

நிலுவைத் தொகைகள் உள்ளடங்களாக, ஊதிய உயர்வுகளைப் பெறுவார். நியமன

அதிகாரி, அத்தகைய நேர்வுகள் அனைத்திலும் ஆணைகள் பிறப்பிக்கையில்

இந்தப்படிக்கு வகைமுறை ஒன்றினை சேர்த்தல் வேண்டும்.

தகுதிகாண் 29. (1) பணி அல்லது வகை அல்லது இனத்திலுள்ள தகுதிகாண் பருவத்தினர்

ஒருவர், நேர்வுக்கேற்ப, இந்தப்பணி வகை அல்லது இனத்திலிருந்து விதிகளுக்கு

இணங்க பிந்தியப் பணிக்கு வழக்கமான ஆளெடுப்பு முறை மாற்றல் மூலம்

செய்யப்படுமானால், விதிகளுக்கு இணங்க மற்றொரு பணிக்கு முறையான

பருவத்திற்காக வெவ்வெறு பணியிலுள்ள பணிக்காலத்தைக் கணக்கிடுதல் நியமனத்தின் பேரில் போதுமான திறம் அல்லது பிறவாறு தம்முடைய பணிக்காலம்

ஏதேனுமிருப்பின், அதை நிறைவு செய்வதற்கு தகுதிகாண் பருவத்தினை

கணக்கீடுவதற்கு தகுமையுடையவராவார்.

38

(2) பணியின் இனம் அல்லது பணியின் வகை எதிலுமுள்ள தகுதிகாண்

பருவத்தினர் ஒருவர், ஒரே பணியில் உயர்வகை அல்லது, நேர்வுக்கேற்ப, பணியின்

வகைக்கு முறையான நியமனத்தின் பேரில் போதுமான திறம் அல்லது பிறவாறு புரிந்த

தம்முடைய பணிக்காலம் ஏதேனுமிருப்பின், அதனை தகுதிகாண் பருவத்திற்காக

கணக்கிடுவதற்கு தகுமையுடையவராவார்:

வரம்புரையாக, இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், 41 ஆம் பிரிவிற்கு

முரணான உயர் வகைக்குரிய வகையில் தகுதிகாண் பருவத்தினரின் பதவி

உயர்விற்கு அதிகாரமளிப்பதாக பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.

(3) ஒரு பணியிலுள்ள எந்த தகுதிகாண் பருவத்தினர் ஒருவர் 17 ஆம்

பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் அல்லது (4) ஆம் உட்பிரிவின்படி, மற்றொரு பணிக்கு

தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறாரோ அந்த தகுதிகாண் பருவத்தினர் ஒருவர்,

அத்தகைய தற்காலிக நியமனத்திற்காக முந்திய பணியிலுள்ள பணியிடத்தில் அவர்

வகித்திருக்கக்கூடிய பிந்திய பணிக் காலத்தின் போது அவரால் புரியப்பட்ட பணிக்

காலஅளவு முந்திய பணியிலுள்ள அவருடைய தகுதிகாண் பருவத்தைப் பொறுத்து

கணக்கிடுவதற்கு உரிமையுடையவராவார்.

(4) எந்த தகுதிகாண் பருவத்தினர் ஒருவர், அதே பணியிலுள்ள உயர்

வகைக்கு 47 ஆம் பிரிவின் வகைமுறைகளின்படி தற்காலிகமாக பதவி உயர்வு

பெற்றிருக்கிறாரோ அந்த தகுதிகாண் பருவத்தினர் ஒருவர், அத்தகைய தற்காலிக

பதவி உயர்வு முந்திய வகையிலுள்ள பணியிடத்தை அவர் வகித்திருக்கக்கூடிய

காலத்தின் போது பிந்திய வகையில் அவரால் புரியப்பட்ட பணிக்கால அளவு முந்திய

பணியிலுள்ள அவருடைய தகுதிகாண் பருவத்தைப் பொறுத்து கணக்கிடுவதற்கு

உரிமையுடையவராவார்.

(5) தகுதிகாண் பருவத்தினர் ஒருவரின் ராணுவப் பணிக் கால அளவு

அவருடைய ராணுவப் பணிக் காலத்திற்கு முன்னர் அவர் வகித்து வந்த

பணியிடத்தில் அவருடைய தகுதிகாண் பருவம் பொறுத்து கணக்கிடப்படும்; அது 12

ஆம் பிரிவின்படி அவர் நியமிக்கப்படலாகும். பணியிடத்திலுள்ள அவரது தகுதிகாண்

பருவத்தைப் பொறுத்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

(6) அயல் பணிக்கு மாற்றுப் பணியில் இருக்கிற அல்லது இருந்துள்ளவரும்,

பணியின் இனத்தில் அல்லது வகையிலுள்ள தகுதிகாண் பருவத்தினர் ஒருவர்,

முந்திய பணியின் போது அவர் வகித்திருக்கக் கூடிய அயல்பணியில் அவர்

பணிபுரிந்த கால அளவு, அவரது முந்திய பணியின் குறிப்பிட்ட இனம் அல்லது

வகையிலுள்ள அவரது தகுதிகாண் பருவம் பொறுத்து கணக்கிடுவதற்கு

உரிமையுடையவராவார்:

வரம்புரையாக, அயல்பணியிலுள்ள பணியிடத்திற்குப் பொருந்தக்கூடிய ஊதிய

ஏற்றமுறை அல்லது ஊதிய விகிதம் ஒன்று, தாய்த் துறையிலுள்ள பணியிடத்திற்குப்

பொருந்தக்கூடியதைவிட ஒன்று சமமாக அல்லது உயர்வானதாக இருந்து அந்தப்

பணியிடங்களுக்கான பணிகளும் பொறுப்புகளும் ஒன்றுக்கொன்று ஒப்பீடு

செய்யத்தக்கதாகும்.

39

தகுதிகாண் பருவத்தை 30. தகுதிகாண் பருவத்தினர் ஒருவர், பொருத்தமற்ற தன்மையுடைய

காரணங்களுக்காக தகுதிகாண் பருவத்தின் நீட்டிப்பிற்குத் தொடர்புடைய

அளவுக்கு 33 ஆம் பிரிவின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, தகுதிகாண்

நிறைவு செய்தல் மற்றும் ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையைப் பெறுதல் பருவத்தினை திருப்திகரமாக நிறைவு செய்துள்ளார் என்று விளம்புகை செய்வதை

பொருட்படுத்தாமல் வழக்கமான தேதிகளில் ஊதிய உயர்வுகள் வழங்கப்படுவதற்கு

தகுமையுடையவராவார். தகுதிகாண் பருவத்தினர், சிறப்புத் தகுதி எதனையும்

பெற்றிருக்கிற அல்லது தகுதிகாண் பருவக்கால அளவிற்குள் அல்லது 33 ஆம்

பிரிவில் சுட்டப்பட்ட தகுதிகாண் பருவத்தின் நீட்டிப்புக் கால அளவுவிற்குள்

வகுத்துரைக்கப்பட்ட தேர்வு எதிலும் தேர்வு பெற்றிருக்கிற நேர்வில், தகுதிகாண்

பருவக் கால அளவு ஓராண்டாக இருக்கும் நேர்வில், முதல் ஊதிய உயர்வு,

தகுதிகாண் பருவக்கால அளவு இரண்டாண்டாக இருக்கும் நேர்வில், இரண்டாம்

ஊதிய உயர்வு , தகுதியை பெற்ற அல்லது தேர்வு பெற்ற பின்பு வழங்கப்படுதல்

வேண்டும்.

31. (1) பணியின் சிறப்பு விதிகளில் பணியின் முழு உறுப்பினருக்குரிய

நியமனத்திற்கான தகுதிகாண் பருவகால அளவு வகுத்துரைக்கப்பட்டு

தகுதிகாண் பருவத்தினை முடிவுறுத்துதல் அல்லது நீடடித்தல்.

இருக்கிறவிடத்து அல்லது நேர்வுக்கேற்ப, அத்தகைய தகுதிகாண் பருவகால அளவு

33ஆம் பிரிவின்படி நீட்டிக்கப்படுகிறவிடத்து, நியமன அதிகாரி, வகுத்துரைக்கப்பட்ட

தகுதிகாண் பருவகால அளவு காலாவதி ஆவதற்கு முன்பு எந்த நேரத்திலும் அல்லது

தகுதிகாண் பருவகால அளவின் நீட்டிப்பிற்குள்-

( i) காலிப் பணியிடத் தேவைக்காக தகுதிகாண் பருவத்தினரை பணியிலிருந்து

விடுவிக்கலாம்; அல்லது

(ii) 33ஆம் பிரிவின்படி தகுதிகாண்பருவம் நீட்டிக்கப்படாதிருப்பது குறித்து

தகுதிகாண் பருவத்தினரின் தகுதிகாண்பருவகால அளவை, ஆணையின்

மூலம் தன்னுடைய உளதேர்வின்படி நீட்டிக்கலாம் அல்லது அவர் இராணுப்

பணியில் சேருவதற்கு உத்தேசிக்கப்பட்ட பணி முடிவுறுத்தத்திற்கு எதிராக

காரணம் காட்டுவதற்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் பணியிலிருந்து

விடுவிக்கப்படலாம்:

வரம்புரையாக, தமிழ்நாடு குடிமையியல் பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும்

மேல்முறையீடு) விதிகளில் 8ஆம் விதியின் (iv), (vi), (vii), (viii) ஆகிய கூறுகளில்

குறித்துரைக்கப்பட்ட தண்டனைகளில் எதனையும் அவருக்கு விதிப்பதற்கு

எதிராக நியாயமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளவிடத்து மற்றும் அவருடைய

தகுதிகாண்பருவம் முடிவுறுவதற்கு தற்காலிக ஒழுங்கு நடவடிக்கைகள் முடிவு,

மேலும் சிறப்பாக காரணம் காட்டுவதற்கு மேலுமான வாய்ப்பு அவருக்கு வழங்கத்

தேவையில்லை.

(2) தகுதிகாண் பருவகாலத்திற்குள் தகுதிகாண் பருவத்தினர் சிறப்பு தகுதி

பெறுவதற்கு தவறுவாரானால் அல்லது சிறப்பு விதிகளில் வகுத்துரைக்கப்பட்ட,

சிறப்புத்தேர்வு, ஏதேனும் இருப்பின், அதில் தேர்ச்சிபெறுவாரானால் அரசால்

அல்லது நியமன அலுவலரால் விளம்பப்படலாகும் பிற தகுதியை பெறுவாரானால்

அல்லது மேற்சொன்ன சிறப்பு தகுதிக்கு சமமாக இருக்கக்கூடிய அரசினால்

விளம்பப்படலாகும் அத்தகைய பிற தகுதிகளை ஒப்புதலுடன் அல்லது அதிகார

அமைப்பால் மேற்சொன்ன சிறப்புத் தேர்வு அல்லது சிறப்பு தகுதிக்கு சமமாக

இருக்கக்கூடிய நியமன அலுவலர் வாயிலாக 33ஆம் பிரிவின்படி தகுதிகாண்பருவம்

நீட்டிக்கப்பட்டிருந்த காலப்படி பணியிலிருந்து அறிவிக்கப்படவேண்டும்.

(3) பணிக்கான சிறப்பு விதிகளில் வகுத்துரைக்கப்பட்ட தகுதிகாண்

பருவகாலத்திற்குள் அல்லது, நேர்வுக்கேற்ப, நீட்டிக்கப்பட்ட தகுதிகாண்பருவத்திற்கும்

அல்லது ஒரு தகுதிகாண்பருவத்தினர் அத்தகைய காலம் முடிவடைவதற்கு முன்பு

அவ்வாறு அவர் வந்திருக்கிறார் எனில், அத்தகைய தகுதி எதனையும் மற்றும் தேர்வு

முடிவு அல்லது தேர்வினை முடித்திருத்தல் தொடர்பான தேர்வு எதற்காகவும் அவர்40 அந்த தேர்வு அல்லது பரீட்சையின் முடிவு வெளியிடப்படும்வரை அவர் தகுதிகாண்

பருவத்தினராகவே இருப்பார். அவர்களில் முதலில் இருப்பவர், நேர்வுக்கேற்ப, அவர்

தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் நியமன அதிகாரியின் ஆணைவாயிலாக

பணியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

(4) ஒரு அரசு ஊழியரின் தகுதிகாண்பருவ நீட்டிப்பு காலம், அவருக்கு

போதுமான காலம் அதிகப்பட்சமாக ஐந்தாண்டு காலமாக இருத்தல் வேண்டும்.

அத்தகைய ஐந்தாண்டு காலத்திற்குள் அவர் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்

பதவியிறக்கம் செய்யப்படவேண்டும். தகுதியடைந்துள்ளவர் மற்றும் தகுதியுள்ள

இளநிலையாளர் பதவி உயர்விற்கு பரிசீலிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய நேரடி

நியமனம் மூலம் பதவி அமர்த்தம் செய்யப்பட்டுள்ள நபர் பெருமளவு ஐந்து வருட

காலத்திற்குள் அவர் தேர்வு தகுதியை பெற்றிருக்கவில்லையென்றால் அவருடைய

தகுதிகாண்பருவம் இல்லா நிலையாகிவிடும்.

(5) (2)ஆம் உட்பிரிவின்படி அல்லது (3)ஆம் உட்பிரிவின்படி

தகுதிகாண்பருவத்தினர் ஒருவரை விடுவிக்கும் ஆணை ஒன்றை பிறப்பித்ததில்

தாமதம் எதுவும் இருந்தால் அவர் தகுதிகாண் பருவத்தினை மனநிறைவாக நிறைவு

செய்துள்ளதாகக் கொள்ளப்பட மாட்டார்.

முழுநேர பணியாளர்

32. (1) வகுத்துரைக்கப்பட்ட அல்லது நேர்விற்கேற்ப நீட்டிக்கப்பட்ட காலத்தின்

இறுதியில் நியமன அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணியின், வகுப்பின்

அல்லது இனத்தின் முழு நேர உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதிகாண்

ஆவதற்காக தகுதிகாண் பருவத்தினருடைய தகுதி,

பருவத்தினருடைய தகுதியை நேர்வு செய்தல் வேண்டும்.

(2) நியமன அலுவலர் தகுதிகாண் பருவத்தினர் பதவி உறுப்பினர் நிலைக்கு

தகுதியானவர் என தீர்மானித்தால் அது கூடிய விரைவில் தகுதிகாண் பருவத்தினர்

தன்னுடைய தகுதிகாண் பருவத்தை மனநிறைவளிக்குமாறு நிறைவு செய்து

விட்டார் என விளம்புகைக்கான ஆணையை பிறப்பித்தல் வேண்டும். அத்தகைய

விளம்புகைக்கான தகுதி தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அத்தகைய

ஆணையை பிறப்பிக்காது இருப்பின் தகுதி காண் பருவத்தினர் வகுத்துரைக்கப்பட்ட

அல்லது நீட்டிக்கப்பட்ட தகுதிகாண் பருவம் முடிவடைந்த தேதியில் அவருடைய

தகுதி காண் பருவத்தை மனநிறைவாக நிறைவு செய்ததாக கொள்ளப்படுதல்

வேண்டும். தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்வதற்கான விளம்புகையின்

ஆணையை எனினும் நியமன அலுவலரால் பிறப்பிக்கப்படுதல் வேண்டும்.

கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கும் அனைத்து நேர்வுகளிலும் தகுதிகாண்

பருவத்தை விளம்புகை செய்தல் ஆகாது. தகுதிவாய்ந்த அதிகார அமைப்பானது

ஆறு மாதத்திற்குள் கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள்

நிலுவையில் இருக்கும் போது தகுதிகாண் பருவத்திற்கான விளம்புகையை

செய்தலாகாது. மேலும் ஒரு மாதத்திற்குள் அல்லது ஆறு மாதத்திற்குள் எந்த

நேர்விலும் கூடிய விரைவில் தகுதிகாண் பருவம் தொடர்பாக இறுதி ஆணையை

பிறப்பித்தல் வேண்டும்.

விளக்கம்.- தகுதிகாண் பருவத்தினருடைய தகுதிகாண் பருவத்தை

கணக்கிடும் நோக்கத்திற்காக ஒவ்வொரு மாதத்தை முதலில் கணக்கிடுதல்

வேண்டும். பிறகு ஒற்றை எண் நாட்களை கணக்கிடுதல் வேண்டும். தகுதிகாண்

பருவத்தில் எடுக்கப்பட்ட விடுப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளுதல் ஆகாது.

(3) அமர்த்துகை அதிகார அமைப்பானது, பணிக்கு தகுதியுடையவர்

இல்லையென கருதுமேயானால், அந்த அதிகார அமைப்பானது, 33 ஆம் பிரிவின்

படி தகுதிகாண் பருவத்தை நீட்டிக்காது இன்றி மற்றும் இது குறித்து காரணங்களை

விளக்குவதற்கான அறிவிப்பு கொடுக்காமல் பணியிலிருந்து விடுவித்தல் ஆகாது:

41

வரம்புரையாக, தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும்

மேல்முறையீடு) விதி 8இன் கூறு (iv), (vi), (vii) மற்றும் (viii) ஆம் கூறுகளில்

குறித்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகள் எதற்கும் காரணம் கேட்பதற்கான

விளக்கத்தை அளித்தல் வேண்டும். மேலும் அவரை பணியிலிருந்து

விடுவித்தலுக்கான தற்காலிக முடிவை எடுத்தல் வேண்டும் மேலும், காரணம்

கேட்பதற்கான நியாயமான வாய்ப்பினை அவருக்கு அளிக்கத் தேவையில்லை.

விளக்கம் I. அமர்த்துகை அதிகார அமைப்பானது அவருடைய பணியின்

அடிப்படையில் முழு பணி உறுப்பினருக்கு தகுதியில்லை என கருதுகிறபோது

அல்லது நீட்டிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்திற்குள் தகுதிகாண் பருவத்தினர்

தகுதியில்லையென கருதுகிறபோது அவருடைய பணியின் மற்றும் நடத்தையின்

அடிப்படையில் முடிவு செய்தல் வேண்டும்.

விளக்கம் II. தகுதி வாய்ந்த அதிகார அமைப்பானது குறித்திட்ட

குற்றச்சாட்டுகளுக்கான விசாரணக்காக அவருடைய பொதுவான

மனநிறைவில்லாத பணிக்காக 31 ஆம் பிரிவின்படி தகுதிகாண் பருவத்தினருடைய

பணியை நீக்கம் செய்யலாம் அல்லது தகுதியின்மைக்கான பொதுவான

திறமையின்மை குறித்திட்ட குற்றச்சாட்டுகளுக்காக தகுதிகாண் பருவத்தினரை

பணிநீக்கம் செய்ய கருதுமேயானால் அல்லது பணி நீக்கம் செய்யலாம். மேலும்

தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 7(b)

இன் விதிகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளவாறான நெறிமுறையைப் பின்பற்றுதல்

வேண்டும். அவ்வாறான தகுதிகாண் பருவத்தை பணிதண்டத்தின் மூலமாக

நீக்கறவு செய்வதானது அரசமைப்பின் 311(2) உறுப்பின் வகையல்களுக்கு

பொருந்தத்தக்கதாய் இருக்கும்.

தகுதிகாண் பருவம் 33. (1) பிரிவு 31 அல்லது 32&ன் கீழ் தகுதிகாண்பருவத்தினை நீட்டிப்பதில்

நீட்டிப்பு கீழுள்ள யாதொரு தகுதிகாண்பருவத்தினருக்கும் சிறப்பு விதிகளை அவர்

பெறுமாறு அல்லது வரையறுக்கப்பட்ட தேர்வுகளில் தேர்வு பெறுமாறு கோரியும்

தகுதிவாய்ந்த அதிகாரி அவரின் தகுதிகாண்பருவத்தினை நீட்டிக்கலாம்

அல்லது இத்தகைய நேர்வில் தகுதிகாண்பருவத்தினர் முழு உறுப்பினர் பதவிக்கு

தகுதியுடையவரா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம்.

(2) பிரிவு 31 அல்லது 32&ன் கீழ் நீட்டிக்கப்பட்டவாறான தகுதிகாண்

பருவ கால அளவின் போது காலிப் பணியிடம் இல்லாததால் தகுதிகாண்

பருவத்தினர் ஒருவர் பழைய நிலைக்கு செல்லும் நேர்வில் தகுதிகாண் பருவத்தினர்

அவர் தகுதிகாண்பருவத்தில் உள்ள பணி, வகை அல்லது தனித்தரத்திற்கு

வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவத்திற்கான காலஅளவு முடிவடைந்த பின்னர்

அத்தகைய பணி, வகை, அல்லது பதவி தரத்தில் அவருடைய பணியை 3 ஆண்டுகள்

முடிக்கிற போது அவர் பணி நீக்கம் செய்யப்படலாம். பிரிவு 31&ன் கீழ் நீட்டிக்கப்பட்ட

தகுதிகாண் பருவ காலஅளவில் தகுதிகாண் பருவத்தின் தற்போது வகிக்கும்

நிலையில் இருந்து பணி நிறுத்தம் செய்யப்படுவார். அவர் தகுதிகாண் பருவத்திலுள்ள

பணி, வகை அல்லது பதவி தரத்திற்காக வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ கால

அளவானது முடிவடைந்த நாளிற்கு பின் மூன்றாண்டுகளுக்குள் அத்தகைய பணி,

வகை, பதவி தரத்தை முடிக்க வேண்டும்.

(3) தகுதிகாண் பருவத்தினரின் தகுதிகாண்பருவமானது

நீட்டிக்கப்படும் நேர்வுகளில் தகுதிகாண் பருவத்தினை நீட்டிப்பு செய்யப்பட்ட

ஆணையினை இணைப்பதால் தகுதிகாண்பருவத்தினை நிறைவாக முடித்து

விட்டார் என்பதை அறிவிக்கும் வகையில் அவரது ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும்.

42

அத்தகைய ஊதிய உயர்விற்கான நிறுத்தம் என்பது தண்டணையாக கருதப்படாது.

ஆனால் தகுதிகாண்பருவத்தினை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலைக்கானது மட்டுமே

வரையறுக்கப்பட்ட சோதனை அல்லது தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின் அல்லது

அவரின் தகுதிகாண்பருவத்தினை விரைவாக முடித்து விட்டார் என்பதை அறிவித்த

பின் அவரின் எதிர்கால ஊதிய உயர்வினை பெறுகையில் எவ்வித விளைவையும்

ஏற்படுத்தாது.

பணியமர்த்தும்

34. மாநில அரசு நீங்கலாக நியமன அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள

அதிகாரங்களை உயர் அதிகாரிகள் மூலம் நியமன அதிகாரி சில அதிகாரங்களை

செலுத்துதல் யாதொரு உயர் அதிகாரியும் செலுத்தலாம். அந்த உயர் அதிகாரிக்கு

அதிகாரியின் குறித்த சில அதிகாரங்கள் உயர் அதிகாரிகளால் செலுத்தப்படுதல்.

கீழ்காணும் நேர்வுகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக நியமன அதிகாரி நிர்வாக

ரீதியாக சார் அதிகாரியாக இருப்பார்.

(அ) 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ii) கூறின்படி

தகுதிகாண்பருவத்தினரின் தகுதிகாண் பருவத்தினை ரத்து செய்தல்.

(ஆ) 32 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்படி தகுதிகாண்பருவத்தினரை

பணி நிறுத்தம் செய்தல்.

(இ) 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ii) கூறின்படி

தகுதிகாண்பருவத்தினை நீட்டிப்பு செய்தல்.

பணியமர்த்தும்

35. நேர்விற்கேற்ப, நியமன அதிகாரிக்கு அல்லது 32 ஆம் பிரிவு அல்லது 31

ஆம் பிரிவின் படி கீழ் அதிகாரிகள் மூலம் நியமன அதிகாரி சில அதிகாரங்களைச்

செலுத்துதல் மன நிறைவளிக்கும் வகையில் தகுதிகாண்பருவத்தை முடித்ததாக,

அல்லது 33 ஆம் பிரிவின் படி தகுதிகாண்பருவத்தை நீட்டிப்பதாக அறிவிப்பதற்கு

அதிகாரியின் குறித்த சில அதிகாரங்கள் கீழ்நிலை அதிகாரிகளால் செலுத்தப்படுதல்.

வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை, அரசுப் பணியாளர் ஒருவரின் ஊதிய உயர்வினை

நிறுத்தி வைப்பதற்கு தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரும் செலுத்துவார்.

வரம்புரையாக, பிரிவு 32 இன்படி தொகுதி (D)-ல் உள்ள அரசுப் பணியாளர்கள்

தகுதிகாண்பருவத்தினை மன நிறைவளிக்கும் வகையில் முடித்ததாக அறிவிக்க

நியமன அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அலுவலகம் ஒன்றின்

தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

விடுவிப்பிற்கு எதிரான

36. (1) 31 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்(ii) கூறின்படி மற்றும் 32 ஆம்

மேல் முறையீடு.

உட்பிரிவு (3)&ன் படி பணி வெளியேற்றம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீடு

உட்பிரிவின் படி தகுதிகாண்பருவத்தினர் பணியிலிருந்து வெளியேற்றம்

செய்யப்பட்டதை எதிர்த்து அதிகாரம் பெற்ற அலுவலரின் ஆணைக்கு எதிராக

மேல்முறையீடு செய்கையில், அதே பணி, வகை, பணித்தரத்தில் முழு உறுப்பினராக

உள்ள ஒருவர் மேல்முறையீடு செய்யத் தகுதி பெற்ற அலுவலருக்கு நிர்ணயிக்கப்பட்ட

காலத்திற்குள்ளும் உரிய அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு அலுவலருக்கு

மேல்முறையீடு செய்ய உரிமையுடையவர் ஆவார்.

வரம்புரையாக, மாநில அரசுப் பணியிலுள்ள தகுதிகாண்பருவத்தினர்

ஒருவர், மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் நிலை அதிகாரியால் பணியறவு

செய்யப்படும் நேர்வில் உரிய பணியாளர் மாநில அரசிடம் தமது மேல்முறையீட்டினை

அளிக்க வேண்டும்.

(2). (1) ஆம் உட்பிரிவின் படி தகுதிவாய்ந்த அதிகாரி தொடரும் போது, தன்

சுயமுயற்சியினாலோ அல்லது வேறு வகையிலோ, அத்தகைய ஆணை வழங்கப்பட்ட

நாளிலிருந்து ஒரு ஆண்டிற்குள் மேற்குறிப்பிட்ட துணைவிதியில் பரிந்துரைக்கப்பட்ட

யாதொரு விதிமுறைகளின் கீழ் பணிவிடுவிப்பு செய்யப்பட்ட தகுதிகாண்

பருவத்தினரின் யாதொரு ஆணைகளையும் திருத்தி அமைக்கலாம்.

43

(3) (i) தகுதிகாண் பருவத்தினர் ஒருவரை விடுவிக்கும் ஆணை ஒன்று

மேல்முறையீட்டின் பேரிலோ அல்லது (2)ஆம் உட்பிரிவின்படி மேலாய்வின்

பேரிலோ இரத்து செய்யப்பட்டு தகுதிகாண் பருவத்தினர் மீட்டளிக்கும் போது

விடுவிப்பின் தேதி அன்றும் அதிலிருந்தும் மற்றும் அத்தகைய மீட்டளிப்பின் தேதி

வரையிலான கால அளவானது அரசின் முன் ஒப்பளிப்புடன், தகுதிகாண்

பருவத்தின் நோக்கங்களுக்கு தவிர, பணிக்காலமாக கருதப்படலாகும். அத்தகைய

விடுவிப்பின் சமயமாக இருப்பினும், அத்தகைய தகுதிகாண் பருவத்தினரால்

மேற்கொள்ளப்பட்ட தகுதிகாண் பருவகால அளவானது, தகுதிகாண் கால அளவின்

பொருட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அத்தகைய தகுதிகாண்

பருவத்தினர், அவருடைய விடுவிப்பின் தேதியன்றும் அது முதற்கொண்டும்

இருந்து அவருடைய பணிமீட்டளிப்பின் தேதிவரையிலான காலஅளவின்போது

(1) அல்லது (2)ஆம் உட்பிரிவுகளின்படி ஆணை பிறப்பிக்கும் அதிகார அமைப்பு

அரசின் முன் ஒப்பளிப்புடன் தீர்மானிக்கலாகிறவாறு அவர் விடுவிக்கப்பட்டிராமல்

இருந்திருப்பாராயின் அவர் உரிமை கொண்டு இருந்திருக்கக்கூடிய சம்பளம் மற்றும்

படிகளுக்கு மேற்படாமல் அத்தகைய சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படுதல்

வேண்டும்.

முழு உறுப்பினர்களின் 37. 12 ஆம் பிரிவின் மற்றும் 40 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்

பணியமர்த்தம் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர்,

தம்முடைய தகுதிகாண் பருவத்தின் விளம்புகைக்குப் பின்பு உடனடியாக

பணியில் நிரந்தரம் செய்வதற்வாக பரிசீலிக்கப்படுதல் வேண்டும். அவர் முதலில்

நியமிக்கப்பட்ட நுழைவுநிலைப் பணியிடத்தில் அத்தகை பணி நிரந்தரமாக்கல்

செய்யப்படுதல் வேண்டும். பணி நிரந்தரமாக்குதலுக்குரிய குறித்தவகை ஆணை

வழங்கப்படுதல் வேண்டும்.

முழு நேர உறுப்பினர்களை 38. பதவி உயர்வு மூலம் பணியின் வகுப்பு அல்லது வகை எதிலும்

நியமிக்கப்பட்டு அவர் பொறுத்து நியமிக்கப்பட்டுள்ள வகுப்பு அல்லது வகையில்

தகுதிகாண் பருவக் கால அளவு வகுத்துறைக்கப்படாதிருக்கிற நபர் குறித்து 10, 11, 37

ஆகிய பிரிவுகள் 'தகுதிகாண் பருவம்' மற்றும் 'தகுதிகாண் பருவத்தினர்' அல்லது

'ஒப்புதலளிக்கப்பட்ட பருவத்தினர்' என்பன முறையே 'அலுவல் முறைப்பணி' மற்றும்

'அலுவல்முறையாற்றும் நபர்' என்று பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

அமர்த்துதல், தகுதிகாண் பருவத்தினராகவோ ஒப்புதலளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினராகவோ இல்லாத உறுப்பினர்களை மீண்டும் பணியமர்த்தல்.

வகுத்துரைக்கப்பட்ட 39. இந்த விதிகளில் வகுத்துரைக்கப்பட்ட சிறப்புத் தேர்வில் தவறியதற்கான

அல்லது சிறப்புத்தகுதி பெறத் தவறியதற்கான தண்டனையாக ஊதிய உயர்வு

நிறுத்தப்படுதல் சிறப்பு விதிகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ளவிடத்து அத்தகைய

தேர்வில் தவறியதற்கான தண்டனை.

தவறுகை அவருக்கு பொருந்தக்கூடிய ஊதிய ஏற்ற முறையில் அதிகபட்ச அளவினை

உறுப்பினர் ஒருவர் அடைந்துள்ள நேர்வில், அவருடைய ஊதிய ஏற்ற முறையிலுள்ள

அடுத்த கீழ்நிலைக்கு இறங்கக்கூடிய தண்டனைக்கு அவரை உள்ளாகச் செய்தல்

வேண்டும்.

பணிமூப்பு நிர்ணயம் 40. (1) பணி, பிரிவு, வகை அல்லது நிலை ஒன்றில் ஒருவருடைய பணிமூப்பு

ஆனது, அவர் ஒரு தண்டனை என்ற வகையில் கீழ்படி நிலை ஒன்றுக்கு

பதவி இறக்கம் செய்யப்பட்டிருந்தால் அன்றி 5-ஆம் இணைப்புப்பட்டியலில்

குறித்துறைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு விதியின் படியும் சுழற்சி வரிசையின் படியும்

பொருந்துகின்ற இடத்தெல்லாம் பணியமர்த்தும் முகமையினாலோ பணியமர்த்தும்

அதிகாரியாலோ தயாரிக்கப்படும் பட்டியலில் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும்

வரிசையிடத்தின்படி தீர்மானிக்கப்படுதல் வேண்டும். அவருடைய தகுதிகாண்

பருவதத்தின் தொடக்க தேதியானது அவருடைய பணிமூப்பை பொருட்படுத்தாமல்

அவர் பணியில் சேர்ந்த தேதியாக இருத்தல் வேண்டும்.

44

(2) பணி, பிரிவு, வகை அல்லது நிலை ஒன்றில் ஒருவருடைய பணிமூப்பானது

அந்தபணி, பிரிவு, வகை அல்லது நிலைக்கான பதவியமர்த்தல் வழக்கமான

முறையானது ஒன்றுக்கு மேற்பட்ட பணியமர்த்த முறையாக இருக்கிறவிடத்து அந்த

தனிநபர் தண்டனை என்ற முறையில் கீழ்நிலைப்படி நிலை ஒன்றுக்கு பதவி இறக்கம்

செய்யப்பட்டு இருந்தாலன்றி, அவர் அந்தபணி, பிரிவு, வகை அல்லது நிலைக்கு

எந்த தேதியன்று பணியமர்த்தப்படுகிறாறோ அந்தத்தேதியை சுட்டும் வகையில்

தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

வரம்புரையாக, பணிமூப்பில் இளையவர் ஒருகுறிப்பிட்ட பணியமர்த்த

முறையில், பணி, பிரிவு, வகைநிலை ஒன்றில் அதே பணியமர்த்தின் மூலமாக

பணிமூப்பு உடையவருக்கு முன்னர் பணியமர்த்தப்பட நேர்கின்றவிடத்து பணிமூப்பு

உடையவர் அந்த பணி, பிரிவு, வகை அல்லது நிலை ஒன்றில் இளையவர்

அவ்வாறு பணியமர்த்தப்பட்ட அதே தேதியன்று பணியமர்த்தப்பட்டு இருப்பதாகக்

கொள்ளப்படுதல் வேண்டும்.

மேலும் வரம்புரையாக, மேற்சொன்ன வரன்முறையின் பலனானது பணிமூப்பு

உடையவருக்கு பணியமைப்பில் பணிமூப்பை அவர்களுக்கு இடையேயான

பணிமூப்பை நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே இருப்பதாகும்.

இன்னும் வரம்புரையாக, ஒன்றுக்கு மேற்பட்ட பணியமர்த்த முறையில்

பணியமர்த்தப்பட்ட நபர்கள் அந்தப்பணி, பிரிவு, வகை அல்லது நிலைக்கு பணி

அமர்த்தப்பட்டு இருக்கிற பணியமர்த்தப்பட்டு இருப்பதாக கொள்ளப்பபடுகிறவிடத்து

அவர்களுக்கு இடையேயான பணிமூப்பானது அவர்களுடைய வயதைக் குறிக்கும்

முறையில் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.

(3) ஒருவரை பணிஒன்றில் பிரிவு அல்லது வகையிலிருந்து ஒரே சம்பள

ஏற்றமுறையையோ அல்லது சம்பள கட்டையோ கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு

அல்லது வகைக்கு மாற்றம் செய்வதானது அவ்வாறு மாற்றப்பட்ட ஒருவருடைய

பணிமூப்பின் நோக்கத்திற்காக பிந்தியவருக்கு முதல் பணியமர்த்தமாக

கருதப்படுதல் ஆகாது. அவ்வாறு மாற்றப்பட்ட நபரின் பணிமூப்பானது அவ்வாறு

எந்த பிரிவு அல்லது வகையில் இருந்து மாற்றப்பட்டா நேர அதன்படி நிலை

குறித்த வகையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்; இந்த வகைமுறையை பயன்

படுத்துவதில் இடற்பாடு அல்லது ஐயப்பாடு எதுவும் எழுகிறவிடத்து பணிமூப்பானது

பணியமர்த்தும் அதிகாரியால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(4) பணி, பிரிவு, வகை அல்லது நிலை எதிலும் உள்ள ஓர் உறுப்பினர்

கீழ்நிலைப்பணி, பிரிவு, வகை அல்லது நிலை ஒன்றுக்கு குறைக்கப்படுகிறவிடத்து

அத்தகைய குறைப்புக்கு ஆணையிடும் அதிகாரி அவர் அத்தகைய கீழ்நிலை பணி,

பிரிவு, வகை, நிலையில் அதன் குறித்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவருக்கு அடுத்த

கீழ்நிலையில் படிநிலைப்பெறுவார் என பணித்தால் அன்றி அவர் பணிமூப்பு மேல்

நிலையில் வைக்கப்படுதல் வேண்டும்.

(5) தமிழ்நாடு அரசின் கீழ் ஒருபணியிலோ அல்லது ஒருபணியிடத்திலோ

முழுமையாக பணியில் இருக்கும் புதுக்கோட்டை இணைக்கப்பட்ட ஆட்சி

நிலவரையின் பணிஒன்றிலோ, பணியிடம் ஒன்றிலோ உள்ள நபர் ஒருவரின்

பணிமூப்பானது பின்வருமாறு தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(i) அவர் புதுக்கோட்டை இணைக்கப்பட்ட ஆட்சி நிலவரையின்

பணியில் முன்னதாக வகித்ததற்கு அதேபோன்ற பணியிடம் ஒன்றில்

எடுத்துக்கொள்ளபடுவாறாயின், அவருடைய பணிமூப்பானது அவர்

முந்திய பணியிடத்தை எந்தத்தேதியிலிருந்து தொடர்ந்து வைத்து வந்தாரோ

அந்தத்தேதியினில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

45

(ii) அவர் புதுக்கோட்டை இணைக்கப்பட்ட ஆட்சி நிலவரையின் பணியில்

முன்னதாக வகித்ததைவிட ஓர் உயரிய சம்பள ஏற்றமுறை கொண்டிருக்கும் ஓர்

உயர் பணியிடைப்பிரிவின் பணியிடம் ஒன்றில் எடுத்துக்கொள்ளப்படுவாறாயின்

அவருடைய பணிமூப்பானது அவர் தமிழ்நாடு அரசின் கீழ்உள்ள பணியிடத்தில்

பணியில் சேர்ந்த தேதியினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(iii) அவர் புதுக்கோட்டை இணைக்கப்பட்ட ஆட்சி நிலவரையின் பணியில்

அவருடைய பணியிடைப்பிரிவையும் சம்பள ஏற்றமுறையையும் மேம்படுத்தாத

கூறுகள் (i) மற்றும் (ii)-இல் குறித்து வைக்கப்பட்டவையாக அல்லாத பிற பணியிடம்

ஒன்றில் எடுத்துக்கொள்ளப்படுவாராயின் அவருடைய பணிமூப்பானது தகுதியின்

அடிப்படையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

(6) பணி, பிரிவு, வகை, நிலை ஒன்றில் உள்ள ஒருவருடைய பணிமூப்பை

திருத்தம் செய்வதற்கான விண்ணப்பமானது அத்தகைய பணி, பிரிவு, வகை

அல்லது நிலைக்கு பணியமர்த்த தேதியிலிருந்து மூன்றாண்டுகள் காலஅளவு

ஒன்றிற்குள்ளோ அல்லது நேர்வுக்கேற்ப பணிமூப்பை நிர்ணயம் செய்யும் ஆணையின்

தேதியிலிருந்து மூன்றாண்டுகள் காலஅளவு ஒன்றிற்குள்ளோ பணியமர்த்து

அதிகாரிக்கு பணிந்து அனுப்பப்படுதல் வேண்டும். மேற்சொன்ன மூன்றாண்டுகள்

காலஅளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பம் எதுவும், நடவடிக்கையின்றி

நிராகரிக்கப்படுதல் வேண்டும். இருப்பினும் இது பொருண்மைகளின் தவறுகையில்

இருந்து ஏற்படும் ஆணைகளை சரிசெய்யும் நேர்வுகளுக்குப் பொருந்தாது.

பதவி உயர்வு 41 .(1). பணி ஒன்றின் அல்லது பணி ஒன்றின் வகை ஒன்றின் உறுப்பினர்

எவரும் அவர் அந்த வகையில் தம்முடைய தகுதிகாண்பருவத்தினை

மனநிறைவாக முடித்திருந்தாலன்றி, அவர் அந்தப் பணிக்கு அமர்த்தப்பட்டவகையில்

பதவி உயர்வுக்குத் தகுதியுடையவராகார்.

வரம்புரையாக, பணி ஒன்றின் அல்லது பணியின் வகை ஒன்றின் உறுப்பினர்

ஒருவர் அந்தப் பணியில் அவர் பணியமர்த்தப்பட்ட வகையில் தம்முடைய

தகுதிக்காண் பருவத்தை மனநிறைவாக முடித்திருந்து அடுத்த உயர்வகைக்கு

பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கும் அவர் அத்தகைய உயர்வகையில்

தம்முடைய தகுதிகாண் பருவத்தை மனநிறைவாக முடித்திருக்கிறாரென்று

விளம்பப்பட்டிராதபோதிலும் அத்தகைய உயர்வகையிலிருந்து பதவி உயர்வுக்கு

தகுதியுடையவர் ஆவார்.

மேலும் வரம்புரையாக, ஊட்டுவகைகளில் உள்ள பணியிடங்களில் சம்பள

ஏற்றுமுறையோ அல்லது சம்பளக்கட்டோ வெவ்வேறாக இருக்குமானால்

ஊட்டுவகையில் ஓர் உயர் சம்பள ஏற்றமுறையோ அல்லது சம்பளக்கட்டோ

கொண்டிருக்கும் பணியிடத்தை வகிக்கும் நபர்கள் முதலில் கருத்தில்

கொள்ளப்படுதல் வேண்டும். மற்றும் அந்த ஊட்டுவகையில் உள்ள பணியிடத்தை

வகிக்கும் தகுதியுள்ள மற்றும் பொருத்தமான நபர்கள் இல்லையாயின் பிற

ஊட்டுவகைகளில் இறங்குவரிசையில் அடுத்த உயர் சம்பள ஏற்றமுறையோ அல்லது

சம்பளக்கட்டோ கொண்டிருக்கும் பணியிடத்தை வகிக்கும் நபர்கள் கருத்தில்

கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) தெரிவு வகை ஒன்றுக்கு அல்லது தேர்வுநிலை ஒன்றுக்கு பணி அல்லது

பிரிவில் பதவி உயர்வானது தகுதி மற்றும் திறமையின் காரணமாக செய்யப்படுதல்

வேண்டும். பணிமூப்பானது தகுதியும், திறமையும் ஏறக்குறைய சமமாக

இருக்கும்போது மட்டுமே கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். அத்தகைய பதவி

உயர்வுக்கு பொருத்தமென காணப்படும் நபர்களுக்கு இடையேயான பணியமைப்பில்

பணிமூப்பானது கீழ்நிலைப் பணியிடத்தில் அத்தகைய நபர்களுக்கிடையேயான

பணிமூப்பு குறித்த வகையில் இருத்தல் வேண்டும்.

(3) தெரிவு நிலை வகை ஒன்றுக்கு அல்லது தேர்வுநிலை ஒன்றுக்கு அல்லாத

பிறவற்றிற்கு செய்யப்படும் பதவி உயர்வுகள்:-

46

(i) ஓர் உறுப்பினருடைய பதவி உயர்வு தண்டனையாக நிறுத்தி

வைக்கப்பட்டிருந்தாலன்றி; அல்லது

(ii) உறுப்பினர் ஒருவர் தெளிவாகத் தெரிகிற தகுதி மற்றும் திறமைக்காக

சிறப்புப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருந்தாலன்றி பணிமூப்பின் அடிப்படையில்

பதவி உயர்வுகள் செய்யப்படுதல் வேண்டும்.

மூன்று அல்லது

42. 41, 43 ஆகிய பிரிவுகளில் என்ன அடங்கியிருந்த போதிலும்,

தவிர ஏதேனும் காரணத்திற்காக உயர் படிப்புகளுக்காக தொடர்ந்து

மூன்றாண்டுகள் கால அளவிற்கு அல்லது உயர் படிப்புகளுக்காக தொடர்ந்து

நான்காண்டுகள் கால அளவிற்கு விடுப்பில் சென்றிருக்கிற பணியின்

உறுப்பினர் ஒருவர் அவர் விடுப்பிலிருந்து திரும்பி வந்து

நான்காண்டுகளுக்கு மேல் தொடர்ந்து விடுப்பில் செல்லும் நபர் உயர்வகைப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு பரிசீலிக்கப்படமாட்டார்.

பணியில் சேர்ந்த தேதியிலிந்து ஓராண்டு கால அளவை நிறைவு

செய்திருந்தாலன்றி ஒன்று பதவி உயர்வு மூலம் அல்லது மாற்றல்

மூலமாக நியமனம் மூலம் உயர் பதவிக்கு நியமிக்க படுவதற்கு

பரிசீலிக்கப்படமாட்டார்.

பணி மாறுதல் மூலம்

43. சார்நிலைப்பணிகளில் உள்ள பணியிடங்களை வகித்து

நியமனம்.

வருபவர்களிடையேயிருந்து மாநில பணியிலுள்ள வகுப்பு அல்லது வகைக்கு மாற்றல்

மூலம் செய்யப்படும் நியமனங்கள், தகுதி மற்றும் திறமை அடிப்படையிலும், தகுதி

மற்றும் திறமை ஏறக்குறைய சமமாக இருக்கிறவிடத்து மட்டுமே பணிமூப்பு

காரணங்களின் பேரில் செய்யப்படுதல் வேண்டும்.

44. ஓய்வு காலத்திற்கு பின்பு பணிநீட்டிப்பு பெற்றிருக்கிற, பணி உறுப்பினர்

எவரும், பணிநீட்டிப்பு கால அளவின் போது உயர்பதவிக்கு ஒன்று பதவி உயர்வு

மூலம் அல்லது மாற்றுப்பணியிலிருந்து மாற்றல் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு

பணிநீட்டிப்பு காலத்தின் போது பதவி உயர்வு அல்லது மாற்றுப் பணியிலிருந்து மாற்றல் மூலம் நியமனம்.

பரிசீலிக்கப்படுதல் ஆகாது.

45. பதவி உயர்வு மூலம் அல்லது பணிமாறுதல் மூலம் பதவி உயர்வுக்கு

தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு உரிய ஆணையமானது,

அத்தகைய பட்டியலில் திருத்தம் செய்யும் பொருட்டான ஆணை நிலுவையில்

இருக்குமானால் பணி, பிரிவு, நிலை அல்லது தகுதி குறித்து மேல்முறையீட்டு

ஆணையம் அல்லது ஆய்வு செய்யும் ஆணையம் அல்லது அக்குறிப்பிட்ட

பதவி உயர்வு மூலம் அல்லது பணி மாறுதல் மூலமாக நியமனத்திற்காக தேர்ந்தெடுக்கப் பட்டோர் பட்டியலில் திருத்தம்.

செயலுக்கு மேற்சொன்ன ஆலோசனை அதிகார அமைப்பு ஒப்புதலுடன்

ஆணையத்தின் மேற்பார்வையில் அல்லது தாமாகவே எந்தநிலையிலும் முன்வந்து

ஆணையம் செய்து கொடுக்கும் நிலையில் முறையீட்டாளர் மனுசெய்த இரண்டு

மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாநில சார்நிலை அரசுப்பணியாக இருப்பின், பணிநியமன அலுவலகத்தின்

அறிவிப்புப் பலகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள்ளாக

மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட கால நிர்ணயதிற்குள் எவ்வித

விண்ணப்பமும் வரப்பெறவில்லையெனில், அறிவிக்கப்பட்ட பணியாளர்களின்

பட்டியல் இறுதியானதாக அறிவிக்கப்படும்.

வரம்புரையாக, கால நிர்ணயம் அவசியமான காரணம் கருதி ஆட்சேபனை

வரவேற்க அவசியம் என கருதப்படும் பட்சத்தில் ஆணையத்தால் அல்லது ஆய்வு

செய்யும் அமைப்பினால் நீட்டிப்பு செய்யப்படும்.

அரசால் பணிநியமனம்

46. மாற்றம் செய்தல் அல்லது திருத்தம் செய்தல் மேற்சொன்ன விதிகள் மற்றும்

சிறப்பு விதிகளின் எவ்வாறு சொல்லப்பட்டிருப்பினும், ஒப்புதலளிக்கப்பட்ட பணியாளர்

பட்டியலிலிருந்து பணியாளர்களின் பெயர்களை நீக்க, மாற்றம் செய்ய அல்லது

திருத்தம் மேற்கொள்ள மாநில அரசின் தலைமைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்

படி சிறப்பு விதிகளின் படி எந்தவொரு பணிக்கும் மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம்

உண்டு.

அல்லது பதவி உயர்விற்காக ஒப்புதலளிக்கப்பட்ட பணியாளர் பட்டியலிலிருந்து பணியாளர்களை நீக்குதல் அல்லது மாற்றுதல்.

47

தற்காலிக பதவி உயர்வு 47. (1) பதவியியர்வு மூலம் கீழ்நிலைப் பணியிலிருந்து மேல்நிலைப் பணி அல்லது

வகையிலான பணிப்பிரிவிலுள்ள பணியிடத்திற்கான காலியிடத்தை பொதுநலனின்

பொருட்டு உடனடியாக நிரப்புவது தேவையாகிறவிடத்து, அது, இந்தச் சட்டத்தின்

வகைமுறையின்படி, அத்தகைய பதவியுயர்வு அளிப்பதால் தேவையற்ற தாமதம்

இருக்கக்கூடிய நிலை ஏற்படுமிடத்து பணியமர்த்தும் அதிகாரி இந்தச் சட்டத்தின்

வகைமுறைகளின்படி பிறவாறு அந்தப் பதவிக்கு வகுத்துரைக்கப்பட்டபடி

தகுதியுடையவர்களுக்கு தற்காலிகமாக பதவியுயர்வு அளிக்கலாம்.

(2) கீழ்நிலைப் பதவியிலிருந்து மேல்நிலைப் பதவியில் உள்ள குறுகிய

கால காலியிடம் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படுவது அவசியமாகிவிடத்தும்

இந்த சட்டத்தின் வகைமுறைகளின்படி பதவி உயர்வுக்கு உரிமையுடைய நபரின்

நியமனமானது போக்குவரத்து படிக்கான செலவினம் மிகையாகிற போது அல்லது

எதிர்பாராத நிருவாக அசெளகரியம் ஏற்படுகிற போது, நியமன அதிகாரி, உயர்நிலை

பதவிக்கு வகுத்துரைக்கப்பட்ட தகுதி, ஏதேனுமிருப்பின், அதனை கொண்டிருக்கிற

பிற நபர் எவருக்கும் பதவி உயர்வு அளிக்கலாம்.

(3) (1) ஆம் உட்பிரிவின்படி தற்காலிகமாக பதவி உயர்வு அளிக்கப்பட்ட நபர்,

சாத்தியமான அளவுக்கு, இந்த சட்டத்தின்படி பதவியுயர்வுக்கு உரிமையுடையவரும்

அப்பணியின் உறுப்பினருமான நபரால் மாற்றாக அமர்த்தப்படலாம்.

(4) ஒரு அலுவலருக்கு பதவியுயர்வு அளிப்பது அவசியமாகிறவிடத்து

அவருக்கெதிராக ஊழல் அல்லது நடத்தை கேடு குற்றச்சாட்டு தொடர்பான

விசாரணை நடப்பிலிருக்கிறவிடத்தில் இருப்பினும் குற்ற வழக்கில்

குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் இருக்கிறவிடத்து அல்லது

தமிழ்நாடு குடிமைப்பணிகள், (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் 17-ஆம்

விதியில் (ஆ) கூறின்படி குற்றப்பத்திரிக்கை எதுவும் வனையப்படாதவிடத்து

அல்லது தீர்ப்பாயத்தின் முன்பு ஒழுங்கு நடவடிக்கைக்கான நடவடிக்கைகள் எதுவும்

நடப்பில் இல்லாத விடத்தில் விசாரணை எதுவும் நடப்பில் இருக்கிற போது அவருக்கு

தற்காலிகமாக பதவியுயர்வு அளிக்கலாம்.

(5), (1) (2) அல்லது (4) ஆகிய உட்பிரிவின்படி பதவியுயர்வு அளிக்கப்பட்ட

நபர், தகுதிகாண் பருவத்தினராக கருதப்படுதலாகாது அல்லது அத்தகைய உயர்

பதவிக்கு வருங்கால பதவியுயர்வினை பெறுவதற்கு அத்தகைய பதவியுயர்வு

அளிக்கப்பட்ட காரணத்தினால் மட்டுமே முன்னுரிமை கோரிக்கைகளைக்

கோருவதற்கு உரிமையுடையவராகிறார். (1), (2) அல்லது (4) ஆகிய உட்பிரிவின்படி

பதவியுயர்வு அளிக்கப்பட்ட நபரின் பணிகள், எந்த நேரத்திலும் அறிவிப்பு இல்லாமல்

காரணம் எதுமின்றியும் நியமன அதிகாரியால் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு

உட்பட்டதாகும்.

(6)(i). (1), (2) அல்லது (4) ஆகிய உட்பிரிவின்படி பதவியுயர்வு அளிக்கப்பட்ட

நபர், ஒன்று தம்முடைய தற்காலிக பதவியுயர்வு தேதியிலிருந்து அல்லது நியமன

அதிகாரியால் முடிவு செய்யப்படும், பிந்தைய தேதியிலிருந்து அத்தகைய பதவி

பிரிவில் ஏதேனும் இருப்பின், அதிலிருந்து அவருடைய தகுதிகாண் பருவம்

தொடங்குதல் வேண்டும்.

வரம்புரையாக அவ்வாறு முடிவு செய்யப்பட்ட நாளன்று, நேர்விற்கேற்ப, பணி,

வகை அல்லது இனத்திற்குரிய பதவியுயர்வுக்காக வகுத்துரைக்கப்பட்ட தகுதிகள்

அனைத்தையும் அந்த நபர் கொண்டிருப்பாரானால்:

(ii) அவர், தம்முடைய பதவியுயர்வு தொடங்கிய நாளிலிருந்து அவருக்கு

பொருந்தக்கூடிய ஊதிய விகிதத்தில் ஊதிய உயர்வுகள் பெறுவதற்கு

தகுதியுடையவராவார். அந்த ஆணை தேதிக்கு முந்தைய தேதியிலிருந்து

தகுதிகாண் பருவம் தொடங்குவதாக ஆணையிடப்படுகிறவிடத்து மற்ற இந்தச்

சட்டத்தின் வகைமுறைகளில் எதனையும் தளர்வு செய்வதன் மூலம் இது

செய்யப்படாமல் இருந்தால் அதை முந்தைய தேதியிலிருந்து ஊதிய விகிதத்தில்,

நிலுவை தொகைகள் உள்ளடங்கலாக அவர் ஊதிய உயர்வு பெறுதல் வேண்டும்.

நியமன அதிகாரி அத்தகைய நேர்வுகள் அனைத்திலும் ஆணைப் பிறப்பிக்கையில்

இது குறித்து வகைமுறையை சேர்த்தல் வேண்டும்.

48

(7) இந்த சட்டத்தின்படி பதவியுயர்வு அளிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக

தற்காலிக பணி செய்து வருகிற நபர், பணி, வகை அல்லது இனத்தின் நிலையில்

அந்த பதவியினை வகித்து வருவரானால் சிறப்புத் தகுதி பெறுவதற்கு இந்த

சட்டத்தின்படி வகுத்துரைக்கப்படாத நிபந்தனைக்குட்பட்டு அல்லது அத்தகைய

ஊதிய உயர்வு பெறுவதற்குரிய நிபந்தனையாக தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருத்தல்

அல்லது தண்டனையாக ஊதிய உயர்வு மறுக்கப்படாதிருத்தல் ஆகியவற்றிற்கு

உட்பட்டு அந்த பதவிக்கான ஊதிய விகிதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெறுவதற்கு

உரிய தகுதியுடையவராவார்.

பதவி அமர்த்துகை மற்றும்

48 (1) பணியின் அல்லது வகையின் உறுப்பினர் ஒருவர் அவர் தகுதியுடையவராக

மாற்றல்.

இருக்கக்கூடிய அத்தகைய பணி அல்லது வகையின் நிலையில் உள்ள பணியிடம்

எதிலும் பணியாற்றுமாறு கோரப்படலாம்.

(2) பதவி அமர்த்துகைகள் மற்றும் மாற்றல்கள் நியமன அதிகாரியால்

செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரையாக, நியமன அதிகாரி அரசாக இல்லாதவிடத்து நிருவாக ரீதியில்

நியமன அதிகாரி எவருக்கு கீழ் நிலையில் உள்ளாரோ அந்த அதிகாரி எவரும்,

நியமன அதிகாரியின் அதிகார வரம்பிற்குள்ள பணியிடம் எதனையும் பொறுத்து,

மேற்சொன்ன அதிகார வரம்பிற்குள் பதவி அமர்த்துகையும், மாற்றல்களையும்

செயல்படுத்துவதற்கு தகுதியுடையவராவார்:

மேலும் வரம்புரையாக, அடிப்படை விதி 66-ன்படி அதிகார ஒப்படைவு

காரணமாக அலுவலருக்கு விடுப்பு வழங்குவதனால் அரசுக்கு மிகைச் செலவினம்

ஏற்படாதவிடத்து துறைத் தலைமை அல்லது தொடர்புடைய கீழ் நிலை அதிகாரி

அதே இடத்தில் அவரால் விடுப்பு வழங்கப்பட்டதிலிருந்து அதே இடத்தில் முறைப்படி

அந்த அலுவலரே மறுபடியும் அமர்த்தலாம்.

(3) இந்த சட்டத்தில் அல்லது சிறப்பு விதிகள் அல்லது தற்காலிக விதிகள்

எவற்றிலும் என்ன அடங்கியிருந்த போதிலும் அரசு நிருவாக காரணங்களின் பேரில்

அரசுப் பணியாளர் எவரையும் மாநிலத்திற்குள்ள ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து

மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றலாம்.

49. பணியின் உறுப்பினர், தம்முடைய பதவியிலிருந்து விலகுவரானால் பதவி

பதவி விலகலினால் ஏற்படும் விளைவு.

விலகல் செய்யும் சமயத்தில், குறிப்பிடப்பட்ட பதவியில் அவரால் செய்யப்பட்ட பணி

மட்டுமல்லாது, ஆனால் அவருடைய முந்திய அரசுப் பணிகள் அனைத்தையும்

இழத்தல் வேண்டும் அத்தகைய நபரின் மறுநியமனம் நேரடி நியமனம் வாயிலாக

அத்தகைய பணிக்கு அதே முறையில் முதலாவதாக நியமனம் செய்யப்பட்டதாக

பாவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய நியமனத்தை உள்ளடக்கிய வகை

முறைகள் அனைத்திற்கும் பொருந்தும் மற்றும் அத்தகைய மறு நியமனத்தின்

பேரில் அவர், இந்தச் சட்டத்தின்படி அனுமதிக்கத்தக்க நலன் அல்லது சலுகை பெற

முந்திய பணியின் எந்த பகுதியையும் கணக்கிட தகுதியற்றவராகிறார்.

வரம்புரையாக, இந்தப் பிரிவில் அடங்கியுள்ள எதுவும் 1978 ஆம் ஆண்டு

தமிழ்நாடு தராளமாக்கப்பட்ட ஓய்வூதிய விதிகளில் 23-ஆம் விதி அல்லது 25 ஆம்

விதியின் வரம்புரையின் செயற்பாட்டினை பாதித்தல் ஆகாது.

மேலும் வரம்புரையாக, பணியமைப்பின் உறுப்பினர் ஒருவர், தம்முடைய

பதவியிலிருந்து விலகி, நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றத்திற்கான

பொதுத் தேர்தலில் அல்லது உள்ளாட்சி அமைப்புக்குரிய தேர்தல்களில் ஒன்று கட்சி

சார்பான வேட்பாளராக அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவாரானால்

அவர், பணி எதற்கும் மறு நியமனம் செய்யப்படுவதற்கு தகுதியுடையராகார்.

49

பதவி விலகலை ஏற்றல் 50. (1) அரசுப் பணியாளர் ஒருவர், தம்முடைய உடனடி மேல்நிலை

அலுவலருக்கு நகல் அனுப்புவதோடு நியமன அதிகாரிக்கு எழுத்துவடிவில் மூன்று

மாதங்களுக்குறையாக அறிவிப்பு கொடுப்பதன் மூலம் பதவி விலகலாம். மூன்று

மாத அறிவிப்பு காலஅளவு, நியமன அதிகாரியினால் அத்தகைய அறிவிப்பு பெற்ற

தேதியிலிருந்து கணக்கிடப்படுதல் வேண்டும்.

(2) அரசுப் பணியாளர், அது ஏற்கப்படும் முன்பு தம்முடைய பதவி விலகல்

அறிவிப்பினை திரும்பப் பெறலாம் மற்றும் நியமன அதிகாரியால் ஏற்றுக்

கொள்ளப்பட்ட பின்பு, பதவி விலகலைத் திரும்ப பெறுதல், அனுமதிக்கப்படுதல்

ஆகாது.

(3) நியமன அதிகாரி, அறிவிப்பு காலாவதியாகிற தேதிக்கு முன்பு பதவி

விலகல் அறிவிப்பின் பேரில், ஒன்று அறிவிப்புக் காலாவதியாகிற தேதி பிந்தையது

அல்லாத தேதியிலிருந்து பதவி விலகலை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது

அதற்கான காரணங்களை கூறி, அதனை நிராகரிப்பதற்கு ஆணைகள் பிறப்பித்தல்

வேண்டும். அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்பட வில்லையென்றால், அந்த

பதவி விலகலானது அறிவிப்பு கால அளவு காலாவதி ஆகியதின் பேரில், ஏற்றுக்

கொள்ளப்பட்டதாக கருதப்படும்.

(4) அரசுப் பணியாளரால் கொடுக்கப்பட்ட பதவி விலகல் அறிவிப்பானது

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு நியமன அதிகாரியால் ஏற்றுக்

கொள்ளப்படும்:-

(i) தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி

17-ஆம் விதியின் (ஆ) உள்விதியின்படி தொடர்புடைய அரசுப் பணியாளருக்கெதிராக

தொடரப்பட்ட அல்லது நடப்பிலிருக்கிற ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில்

இல்லை

(ii) தொடர்புடைய அரசுப் பணியாளருக்கு எதிராக விசாரணை எதுவும்

தொடரப்படவில்லை அல்லது நடப்பில் இல்லை என்றபடிக்கு விழிப்பு பணி மற்றும்

ஊழல் தடுப்பு இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை;

(iii) தொடர்புடைய அரசுப் பணியாளரிடமிருந்து அரசினால் வசூலிக்கப்பட

வேண்டிய தொகைகள் எவையும் நிலுவையில் இல்லை அறிவிப்பு எதுவும் இல்லை.

(iv) தொடர்புடைய அரசுப் பணியாளர் பதவி விலகுவதற்கு விரும்புகிற

காலத்தின் போது அரசுக்குப் பணியாற்ற ஒப்பந்த கடைமைப் பொறுப்பு

உள்ளடங்கலாக உள்ள ஒப்பந்த கடமைப் பொறுப்பு எதுவும் இல்லை.

(5). (4) ஆம் உட்பிரிவின் (i) மற்றும் (ii) கூறுகளில் என்ன அடங்கி இருந்த

போதிலும், பதவி விலக விரும்பும் இடை நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளர்

அல்லது அவருக்கெதிராக ஒழுங்கு நடவடிக்கை அல்லது குற்ற நடவடிக்கை அல்லது

விழிப்பு பணி விசாரணை எதுவும் நடப்பில் இருக்கிறவிடத்து, நியமன அதிகாரி

நேர்வின் தன்மை மற்றும் அளவினை ஆய்வு செய்தல் வேண்டும், அந்நேர்வு, பதவி

விலகல் அறிவிப்பை நிராகரிப்பதற்கானதாக இல்லாததிருக்குமானால், அப்பதவி

விலகலை ஏற்கலாம்.

ஓய்வூதியத்திற்காக 51 (1) இந்தச் சட்டத்தில் அல்லது சிறப்பு விதிகளில் அல்லது அடிப்படை

விதிகளில் அல்லது 1978 ஆம் ஆண்டு ஓய்வூதிய விதிகளில் என்ன அடங்கியிருந்த

போதிலும், இராணுவப் பணிக்காக அனுப்பப்பட்ட பணியமைப்பின் உறுப்பினர்,

இராணுவப் பணியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல்.

தம்முடைய குடிமைப் பணி துறையில் பிறகு அவருடைய பணிக்காலத்தை ஓய்வூதிய

நோக்கத்திற்காக கணக்கில் எடுத்துக் கொள்வாரானால், அந்த நோக்கத்திற்காக

இராணுவப் பணியில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள உரிமை

உடையவராவார்.

50

விளக்கம் I.- இந்த உட்பிரிவு பாதுகாப்பு பணிகள் மதிப்பீட்டிலிருந்து

ஊதியம் வழங்கப்படும் பணிக்கு அழைக்கப்பட்ட அல்லது அமர்த்தப்பட்ட

உறுப்பினர் ஒருவருக்கு பொருந்துகையில், 1944 செப்டம்பர் 6 ஆம் நாளிட்ட நிதித்

துறையின் அரசாணை எண்.465-ல் குறிப்பிடப்பட்ட, 1944 ஜுன் 11 ஆம் நாளிட்ட

எண்.11008/ AG.13(a) இந்திய தலைமைக் கணக்கர், போர்த் துறை (இராணுவக் கிளை)

இந்திய அரசின் கடிதத்தில் குறித்துரைக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டிருத்தல்

வேண்டும்.

விளக்கம் II.- (அ) இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் மதராஸ்

ஆயுத காவல்படை பணி விதிகளில் குறிப்பிடப்பட்ட தற்காலிக பணிகளிலுள்ள

பணியிடம் எதனையும் வகித்து வருகிறவரும், ஓய்வூதியத்தின் பொருட்டு

அத்தகைய பணியிடத்திலுள்ள தங்களுடைய பணிக்காலத்தை கணக்கில்

எடுத்துக் கொள்வதற்கு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் எவற்றின் உறுப்பினராக

இல்லாதவருமான நபர் ஒருவருக்கு அதிகாரம் அளித்தல் ஆகாது.

(ஆ) அலுவலர்களின் உறுப்பினர் ஒருவர், 1939 ஆம் ஆண்டு

இந்திய சேமக் காவல்படை அதிகாரிகளுக்குரிய பிற்சேர்க்கை 'அ'-ல் உள்ள

விதிகளால், அத்தகைய பணியின் இந்திய சேமப்படையிலுள்ள இராணுவப்பிரிவில்

பணியாற்றிவரும் பணிக்காலத்தை முறைப்படுத்துவது குறித்து ஆளப்படும்.

52. முழு நேரப் பணியாளர் ஒருவர், உயர் நிலைப் பதவியில் இருக்கக்கூடிய

பணியிடங்களின் எண்ணிக்கைக்கு மேல் பதவி உயர்வுக்கு உரிமை உடைய

முழு நேரப் பணியாளரின் பதவியிறக்கம் மற்றும் மறு பதவியமர்த்தல்

நபர்களின் எண்ணிக்கை இருக்குமானால், எந்த நேரத்திலும் அவர் பதவி உயர்வு

பெற்ற நபர் கீழ்நிலைப் பதவியிறக்கம் செய்யப்படலாம்.

விளக்கம்.- நபர் ஒருவர் அந்தப் பதவியில் நிரந்தரப்படுத்தப்படுவாரானால்

அல்லது அவருடைய உயர்நிலைப் பதவியில் தகுதிகாண் பருவ காலத்தை நிறைவு

செய்துள்ளதாக விளம்பப்படுவாரானால் அல்லது முறையான அடிப்படையின் பேரில்,

தகுதிகாண் பருவம் எதுவும் இல்லாத உயர் பதவியை வகித்து வருவாரானால்

மாற்றுப் பணி அல்லது அயற்பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்படுவாரானால்

மற்றும் அந்த வகைப் பணியில் அவர் தொடர்ந்து இருப்பதற்கு காலியிடம் எதுவும்

இல்லாதிருக்குமானால் அந்தப் பணியிடத்திற்கு நியமிக்கப்பட்ட பணி மூப்பில்

இளையவராக உள்ளவர் பதவியிறக்கம் செய்யப்படுவார். எனினும், மாற்றும் பணி

அல்லது அயற்பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்ட நபர் பணிமூப்பில்

இளையவராக இருப்பாரானால், அவர் முன்னதாக பதவி உயர்வு பெற்ற

பதவியிலிருந்து அடுத்த கீழ்நிலைப் பதவிக்கு இறக்கம் செய்யப்படுவார்.

53. ஒருவர் எந்த பணி, பிரிவு, வகை அல்லது நிலையிலிருந்தும் பணி

நீக்கமோ பணியகற்றமோ, கட்டாய ஓய்வோ அல்லது நிரந்தரமாக பதவியிறக்கமோ

செய்யப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய பணி, பிரிவு, வகை அல்லது நிலையில்

பிந்தையராக அதன்மூலம் ஏற்படும் அல்லது எழும் காலியிடம் எதுவும் அத்தகைய

பணிநீக்கம் பணியகற்றம், கட்டாய ஓய்வு அல்லது படிநிலையிறக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களிடத்தில் பதவியமர்த்தம்.

பணி நீக்கம், பணியகற்றம், கட்டாய ஓய்வு அல்லது பதவியிறக்க தேதியிலிருந்து

ஓராண்டு கால அளவு கழிவுறும்வரையில் அல்லது அத்தகைய பணிநீக்கம்,

பணியகற்றம், கட்டாய ஓய்வு அல்லது படிநிலையில் இறக்கத்திற்கு எதிராக அவரால்

கொணரப்பட்டிருக்கும் மேல்முறையீடு ஏதேனுமிருப்பின் அது முடிவடையும் வரையில்,

இவற்றில் எது பிந்தியதோ, அதுவரையில் அத்தகைய நபருக்கு குந்தகமான

வகையில் நிரந்தரமாக நிரப்பப்படுதல் ஆகாது.

காப்புரைகள் 54. (1) இந்த சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும் அதில் மாறான கருத்து

வெளிப்படையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலன்றி இந்தச் சட்டத்தின் வகை

முறைகள் நடைமுறைக்கு வரும் தேதியன்று எந்தப் பணியிலும் ஓர் உறுப்பினராக

இருந்த நபர் எவரையும் குந்தகமாக பாதித்தல் ஆகாது.

51

(2) பணி ஒன்றை முறைப்படுத்தும் சிறப்பு விதிகள் எதிலும் அடங்கியுள்ள

எதுவும், அதில் முறணான கருத்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலன்றி இந்த சட்டம்

நடைமுறைக்கு வரும் தேதியன்று அத்தகைய பணியில் ஓர் உறுப்பினராக இருந்த

நபர் எவரையும் குந்தகமாக பாதித்தல் ஆகாது.

(3). (4)ஆம் உட்பிரிவின் வகைமுறைக்குட்பட்டு அதன் நடைமுறைக்கு

வரும் தேதிக்கு முன்பு எந்த பணியிலும் ஓர் உறுப்பினராக இருந்த நபர் எந்த

பொருட்பாடு பொருத்தும் இந்தச் சட்டமோ அல்லது சிறப்பு விதிகளோ குந்தகமாக

பாதிக்கின்றவிடத்து, அவர் அத்தகைய பொருட்பாடு குறித்து அத்தகைய

தேதியையொட்டி முன்பு அவருக்கு பொருந்தத்தக்கதான விதிகள் மற்றும்

ஆணைகள் எவையேனும் இருப்பின் அவற்றால் முறைப்படுத்தப்படுதல் வேண்டும்.

(4) பணி ஒன்றுக்கான சிறப்பு விதிகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அந்தப்

பணியில் அல்லது பிரிவு ஒன்றில் அல்லது வகையில் பிந்தியவராக உள்ளடக்கப்பட்ட

பணியிடமொன்றில் பதிலியாக இருந்து (5)ஆம் உட்பிரிவின்படி ஒரு தகுதிகாண்

பருவத்தினராகவோ அல்லது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு தகுதிகாண்

பருவத்தினராகவோ கருதப்படுவதற்கு உரிமையுடையவராய் இராத ஒருவர் அரசு

ஆணைகள் எவற்றிற்கும் குந்தகமின்றி சிறப்பு விதிகள் பிறப்பிக்கப்பட்ட பின்பு

அத்தகைய பணியிடத்தில் மீண்டும் பதவியமர்த்தப்படுவராயின் அத்தகைய

பணியிடத்தில் தன்னுடைய முந்தைய பணியை தகுதிகாண் பருவத்தில்

வகுத்துரைக்கப்பட்ட கால அளவின் பொருட்டு கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு

உரிமையுடையவராவார்:

வரம்புரையாக, அத்தகைய முந்திய பணியானது, அவர் அதே அல்லது உயர்

வகையில் உள்ள பணியிடத்தை வகித்திராதபோது இரண்டு ஆண்டுகள் அல்லது

அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான கால அளவு இடைவெளி ஒன்று இருக்குமாயின்,

அந்தக் கால அளவு தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதல்

ஆகாது.

விளக்கம்.- இந்த உட்பிரிவின்படி ஒருவரை மீண்டும் பதவியமர்த்துவதானது,

ஆளெடுப்பதை முறைப்படுத்தும் நோக்கத்திற்காக, தொடர்புற்ற அந்தப் பணி, பிரிவு

அல்லது வகைக்கான முதல் பதவியமர்த்தமாக கருதப்படலாகாது.

(5) சிறப்பு விதிகள் வெளியாவதற்கு முன்பு, அப்போது நடைமுறையிலுள்ள

ஆணைகளின்படி, தகுதி எதுவும் கொண்டிருப்பதிலிருந்து அல்லது தேர்வு எதுவும்

தேர்ச்சி பெறுவதிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருப்பாராயின் மற்றும்

அத்தகைய தகுதி கொண்டிருப்பவரோ தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவரோ

அத்தகைய சிறப்பு விதிகளால் வகுத்துரைக்கப்பட்டிருக்குமாயின் விதி விலக்கு

ஆணையினால் சிறப்பாக அடங்கியிருக்கும் அளவிற்கும் வகை, நிலை அல்லது

பதவி பொருத்தும் அத்தகைய நபருக்கு பொருந்தாது.

ஓய்வூதியதாரர்களை 55. இந்தச் சட்டத்திலோ சிறப்பு விதிகளிலோ உள்ள எதுவும், 1978-ஆம்

ஆண்டு தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் அடங்கியுள்ள வகைமுறைகளின்படி

மீண்டும் பணியமர்த்துதல்.

எந்த பணியிலும் குடிமை ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை ஒன்றில் ஓய்வு

பெற்ற அல்லது பணியிலிருக்கும்போது பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியம்

ஒன்றுக்கு பங்களித்தவர்களாக இருந்தால், அத்தகைய நபர்களை மீண்டும்

பணியமர்த்துவதற்கு அரசின் அல்லது சார்நிலை அதிகார அமைப்புகளின்

அதிகாரங்களை வரம்பிடுவதாகவோ குறைப்பதாகவோ பொருள்

கொள்ளப்படுதலாகாது. எந்தப் பணியிலும் அத்தகைய நபர் ஒருவரை மீண்டும்

பணியமர்த்துவதானது அந்தப் பணியில் முதல் பணியமர்த்தமாக கருதப்படலாகாது.

52

அனைத்து இந்திய பணி

56. இந்தச் சட்டத்திலோ சிறப்பு விதிகளிலோ அடங்கியுள்ள எதுவோ

எவ்வாறிருப்பினும் அனைத்து இந்திய பணி ஒன்றின் தற்காலிக அல்லது

நிரந்தர அலுவலர் ஒருவர் மாநிலப் பணி அல்லது அதன் பிரிவு அல்லது வகை

அலுவலர்களை மாநில பணியிடங்களில் பதவியமர்த்தம் செய்தல்.

பதவியமர்த்தப்படலாம். அத்தகைய பதவியமர்த்தத்தின் காரணமாக அனைத்திந்திய

பணியின் உறுப்பினராக இருக்க அற்றுப்போதலாகாது:

வரம்புரையாக, இந்திய ஆட்சிப்பணியின் அல்லது இந்திய காவல் பணியின்

உறுப்பினர் எவரும், மாநில பணி எதிலும் உள்ள பணியிடம் ஒன்றுக்கு அவ்வப்போது

நடைமுறையில் இருக்கலாகும் 1954-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி

(சம்பளம்) விதிகளுக்கான ஐஐஐ-ஆம் இணைப்புப் பட்டியலிலோ அல்லது

நேர்வுக்கேற்ப, 1954-ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (சம்பளம்) விதிகளுக்கான

ஐஐஐ-ஆம் இணைப்புப் பட்டியலிலோ குறித்துரைக்கப்பட்ட பதவியிடம் ஒன்றுக்கான

தகுநிலை மற்றும் பொறுப்பில் அத்தகைய பதவி சமமானதென அரசால் விளம்புகை

செய்யப்பட்டிருந்தாலன்றி பதவியமர்த்தப்படுதலாகாது.

உறுப்பினர்களால்

57. (1) நபர் எவரும் இந்தச் சட்டத்தின்படியோ அல்லது சிறப்பு விதிகளின்படியோ

உரிமைகளை துறத்தல்

உரிமை உடையவராகும் உரிமை அல்லது சிறப்பு உரிமை எதனையும் எழுத்து

வடிவில் துறக்கலாம். அத்தகைய துறப்பதானது பொது நலனுக்கு எதிரானதாக

இருக்காது என பதவியமர்த்தும் அதிகார அமைப்பு கருதுமாயின் துறக்கலாம் மற்றும்

இந்தச் சட்டத்தில் அல்லது சிறப்பு விதிகளில் அடங்கியுள்ள எதுவும் அது அவ்வாறு

துறந்திருக்கும் அளவிற்கு உரிமை அல்லது சிறப்புரிமை எதனையும் ஏற்பளிக்க

வேண்டுறுத்தவதாக கொள்ளப்படலாகாது.

(2) தற்காலிக காலஅளவு ஒன்றுக்கு ஓர் உரிமையோ சிறப்பு உரிமையோ

துறப்பதானது, அது மூன்றாண்டுகளுக்கு குறைவான ஒரு காலஅளவு ஒன்றுக்கு

இருக்குமாயின், அத்தகைய கால அளவு கழிவுற்றப் பின்பு, துறக்கப்பட்ட

உரிமையோ சிறப்புரிமையோ கோருதல், துறக்கப்பட்ட கால அளவு கழிவுறும்

தேதியன்று இருந்த மாநில அலுவல் பாடுகள் குறித்த வகையிலும் முதல் பணிமூப்பு

மீட்பளிக்கப்படாமலும் இருப்பதென்ற நிபந்தனைக்குட்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுதல்

வேண்டும். உரிமையோ அல்லது சிறப்பு உரிமையோ நிரந்தரமாக துறக்கப்பட்டு

ஏற்கப்படுமாயின் பிந்தியதாக உரிமையோ அல்லது சிறப்பு உரிமையோ துறப்பது

ஏற்றுக்கொள்ளப்படலாகாது.

குறித்த சில நேர்வுகளில்

58. இந்த சட்டத்திலோ அல்லது சிறப்பு விதிகளிலோ அடங்கியுள்ள

எவ்வாறுயிருப்பினும், ஆளுநர் அவருக்கு நேரியகம் நியாயமானதும் என

அவருக்கு தோன்றும் அத்தகைய முறையில் அரசின்கீழ் குடியியல் தகுநிலை

நடவடிக்கை மேற்கொள்ளு- வதற்கான அதிகாரம்

ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவரின் அல்லது நபர்களின் பிரிவினரின் அல்லது

மேற்கண்டவாறு பணியாற்றிய நபர் எவரின் அல்லது நபர்களின் பிரிவினர் எவரின்

அல்லது அத்தகைய பணியில் அத்தகைய முறையில் பதவியமர்த்தப்பட்டிருக்கும்

பணிநாடுவோர்களின் வகையினர் எவரின் பொருண்மையும் நடவடிக்கை

மேற்கொள்ளுவதற்கு அதிகாரமுடையவர் ஆவார்:

வரம்புரையாக, இந்தச்சட்டத்தின் வகைமுறை அல்லது சிறப்பு விதிகள்

நபர் எவரின் அல்லது நபர்களின் வகையினர் எவரின் பொருண்மைக்கும்

பொருந்ததக்கவராக இருக்கிறவிடத்தில், அந்தப்பொருண்மையானது அவருக்கு

அல்லது அவர்களுக்கு அந்த விதியினால் வகைசெய்யப்பட்டதற்கு குறைவான

சாதகமான முறை எதிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாகாது.

53

பிறந்த தேதி மாற்றுவது.

59. (1) பணிநாடுபவர் ஒருவர் பதவியமர்த்தத்தின் சமயத்தில் அவருடைய

பிறந்த தேதியானது எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மெட்ரிகுலேஷன் பதிவேட்டிலோ

அல்லது பள்ளி பதிவணங்களிலோ பதிவு செய்யப்பட்டதிலிருந்து வேறுபடுகிறது

என்று கோருவராயின், பதவியமர்த்தம் ஆணையத்துடன் கலந்தாய்வு செய்தபின்பு

செய்யப்பட்டிருக்கும் நேர்வுகளில் ஆணையத்திற்கும் பிறநேர்வுகளில்

பதவியமர்த்தும் அதிகாரிக்கும் அவர் நம்பும் அதற்கான சான்றுகளுடனும் அந்த

தவறு எவ்வாறு ஏற்பட்டது என்பதை விளக்கியும் ஓர் விண்ணப்பம் செய்தல்

வேண்டும் மற்றும், பிறநேர்வுகளில் அந்த விண்ணப்பமானது துணை ஆட்சியர்

ஒருவர் படிநிலைக்கு குறையாத அலுவலர் ஒருவரால் ஆய்வு செய்த பின்பு வருவாய்

நிருவாக ஆணையருக்கு அறிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்

மற்றும், அந்த அறிக்கையை பெறுவதன் பேரில் ஆணையம் அல்லது, நேர்வுக்கேற்ப,

பணியமர்த்தும் அதிகாரி, பிறந்த தேதி மாற்றம் அனுமதிக்கப்படலாமா அல்லது அந்த

விண்ணப்பம் நிராகரிக்கப்படலாமா என்பதை முடிவுசெய்தல் வேண்டும்:

வரம்புரையாக, தமிழ்நாடு மாநிலத்திற்கு வெளியே பிறந்த பணிநாடுபவர்

ஒருவரை பொறுத்தவரையில், வருவாய் நிருவாக ஆணையர் மூலமாக ஆய்வு

செய்வதை விட்டுவிடுதல் வேண்டும் மற்றும் ஆணையமோ அல்லது, நேர்வுக்கேற்ப,

பணியமர்த்தும் அதிகாரியோ பணிநாடுபவரால் முன்னிடப்பட்ட ஆவணங்களை

ஆய்வு செய்தும் சரிபார்த்தும் பிறந்ததேதி மாற்றம் அனுமதிக்கப்படலாமா அல்லது

விண்ணப்பம் நிராகரிக்கப்படலாமா என்பதை முடிவுசெய்தல் வேண்டும்.

(2) ஒருவர் பணியில் சேர்ந்த பின்பு அலுவலகப் பதிவணங்களில் பதிவு

செய்யப்பட்ட பிறந்ததேதியில் மாற்றுவதற்கான விண்ணப்பம் ஒன்று அவர்

அவ்வாறு பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அத்தகைய விண்ணப்பம்

செய்யப்பட்டிருக்குமானால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

அத்தகைய விண்ணப்பமானது விண்ணபதாரர் அந்த விண்ணப்பத்தை செய்யும்

சமயத்தில் வகித்த பணியிடத்திற்கு பணியமர்த்தம் செய்வதற்கு தகுதிறமுள்ள

அதிகாரிக்கு செய்யபடுதல் வேண்டும் மற்றும் 1ஆம் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள

நடைமுறையின்படி தீர்வு செய்யப்படுதல் வேண்டும்.

(3) பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு பெறப்படும்

விண்ணப்பம் எதுவும் அல்லது எஸ்.எஸ்.எல்.சி, பள்ளி, கல்லூரி அல்லது

பல்கலைக்கழக பதிவணங்களில் உள்ள பதிவுகளில் உள்ளாட்சி அமைப்புகளின்

பதிவணங்களிலிருந்து பிறந்ததேதி எடுக்குறிப்பு அல்லது இராணுவ விடுவிப்பு

வருகைச்சான்றுகள் இவற்றை ஆதாரமாக கொண்டிராத விண்ணப்பம் எதுவும்

முற்றிலும் நிராகரிக்கப்படுதல் வேண்டும்.

(4) அலுவல் பதிவணங்களில் பதிவு செய்யப்பட்ட பிறந்ததேதி மாற்றத்தை

அனுமதிக்கும் பிரச்சனையை கருத்தில் கொள்ளும்போது அத்தகைய பதிவானது

உண்மையான தவறின் காரணமானது என மெய்ப்பிக்கப்பட்டிருப்பினும் அரசு அல்லது

பணியமர்த்தும் அதிகாரி அவருடைய வயது சரியாக சொல்லப்பட்டிருக்குமாயின்

அவர் பணியில் சேரும் சமயத்தில் அந்த பணியிடத்தில் பணியமர்த்தம் பெறுவதற்கு

தகுதியுடையவராக இருந்திருக்கக்கூடுமா என்பதை கருத்தில் கொள்ளுதல்

வேண்டும் மற்றும் அவருடைய பணியின் மற்றும் பணியிலுள்ள பிற அலுவலரின்

பணிநிபந்தனைகளின் விளைவு என்னவாக இருந்திருக்கக்கூடும் என்பதையும்

கருத்தில் கொள்ளுதல் வேண்டும் மற்றும் அவர்கள் அல்லது விதிப்பதற்கு

பொருத்தமென கொள்ளும் அத்தகைய நிபந்தனைக்கு உட்பட்டு இந்த மாற்றத்தை

அனுமதிக்கலாம்:-

வரம்புரையாக, விண்ணப்பதாரர் ஒருவரின் முதல் பணியமர்த்தும்

ஆணையத்தின் மூலமாக செய்யப்பட்டிருக்கும் நேர்வில் பிறந்ததேதி மாற்றத்திற்கான

அவருடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள கருதுமானால் ஆணையம்

கலந்தாய்வு செய்யப்படுதல் வேண்டும்.

54

(5) பிறந்த தேதி மாற்றமானது பிற அதிகாரம் பெற்ற பதிவணங்கள் எவையும்

இல்லாத போது மருத்துவ ஆலோசனை அடிப்படையின் அலுவலகத்தின் தலைவரால்

தாமேமுற்பட்டு புரிவிரை செய்கிற அனைத்து நேர்வுகளிலும் ஒன்றாம் உட்பிரிவில்

விவரிக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றபடுதல் வேண்டும்.

விளக்கம்.- இந்த உள்விதியின் நோக்கத்திற்கு, ''அதிகாரம் பெற்ற''

பதிவணங்கள் என்பது எஸ்.எஸ்.எல்.சி அல்லது பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது

பள்ளி பதிவணங்கள் அல்லது இராணுவ விடுப்பு உறுதிசான்று என்பவனவாகும்,

(6) நேர்வுக்கேற்ப ஆணையம், பணியமர்த்தும் அதிகாரி அல்லது அரசு

இவர்களின் முடிவு அறுதியானதாகும்.

பிறந்த தேதி திருத்தம்

60. (1) ஒருவர் பணியில் சேர்ந்த பின்பு, அவருடைய பணிப்பதிவேட்டில்

செய்தல்.

பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய பிறந்த தேதியானது எஸ்.எஸ்.எல்.சி அல்லது

இராணுவ விடுவிப்பு உறுதிசான்று இவற்றின் பதிவிலிருந்து வேறுபடுகிறது என்று

காணப்படுமாயின் பணிப்பதிவேட்டில் அது சில எழுத்துப்பிழை அல்லது பிறவாறு

தவறான பதிவுகள் காரணமாக இருக்குமாயின் அத்தகைய எழுத்துப்பிழை

தவறான பதிவுகள் இவற்றை சரிசெய்வதற்கான விண்ணப்பம் பணியமர்த்தும்

அதிகாரிக்கு செய்யப்படுதல் வேண்டும். பணிப்பதிவேட்டில் அத்தகையை

திருத்தங்கள் பணியமர்த்தும் அதிகாரியால் நேரடியாக செய்யப்படுதல் வேண்டும்.

பணிப்பதிவேட்டில் உள்ள பிறந்த தேதியானது எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழில் பதிவு

செய்யப்பட்டிருக்குமாயின் எழுத்துப்பிழை அல்லது தவறான பதிவுகள் எஸ்.எஸ்.எல்.சி

சான்று குறித்த வகையில் மட்டுமே செய்யப்படுதல் வேண்டும். பணிப்பதிவேட்டில்

உள்ள பிறந்த தேதியானது இராணுவ விடுவிப்பு உறுதிசான்றின் அடிப்படையில்

பதிவு செய்யப்பட்டதாயின் எழுத்துப்பிழை அல்லது தவறான பதிவுகள் திருத்தம்

செய்வது இராணுவ விடுவிப்பு சான்று குறித்து மட்டுமே செய்யப்படுதல் வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி சான்றும் இராணுவ விடுவிப்பு உறுதிசான்றும் வெவ்வேறு பிறந்த

தேதியை கொண்டிருக்குமிடத்து எஸ்.எஸ்.எல்.சி. சான்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்

பிறந்ததேதி ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி.

சான்று இல்லாத போது இராணுவ விடுவிப்பு உறுதி சான்றில் உள்ள பதிவுகள்

பதிவுசெய்யப்பட்டுள்ள பிறந்த தேதியானது ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(2) குறைந்தபட்ச பொதுகல்வி தகுதிக்கு குறைவான தகுதிகொண்டிருக்கும்

ஒருவருடைய பிறந்த தேதியானது பணிப்பதிவேட்டில் மருத்துவச்சான்றின்

அடிப்படையின் பேரிலோ அல்லது அவர் படித்த பள்ளியிலிருந்து பெறப்பட்ட மாற்று

சான்றிதழின் பேரிலோ அல்லது குற்றவியல் நடுவர் ஒருவர் முன்பு ஏற்கப்பட்ட

உறுதிமொழி ஆவணத்தின் பேரிலோ பதிவு செய்யபட்டிருக்குமிடத்தில் மற்றும்

அவ்வாறு செய்யப்பட்ட பதிவில் பிழையிருக்குமாயின் பணியமர்த்தும் அதிகாரி

விண்ணப்பத்தின் பேரில் பணிப்பதிவேட்டில் செய்யப்பட்ட பிறந்ததேதி பொறுத்த

பதிவு எந்த முதல்பதிவின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில்

மட்டுமே தேவையான திருத்தம் செய்யலாம்.

61. இந்தச் சட்டத்தில் அல்லது பல்வேறுபட்ட மாநிலத்திற்கான சிறப்புவிதிகளில்

அடங்கியிருப்பது எது எவ்வாறு இருந்தபோதிலும் விடுவிக்கப்பட்ட அரசு

ஊழியர் அல்லது தற்காலிக ஊழியர் என்கின்ற நேர்வில் அவர் 40 வயதை நிறை

வெய்தியவராக இல்லாமல் இருக்கிறார் என்றால் அரசின் கீழுள்ள அவரின் பணியின்

விடுவிக்கப்பட்ட அரசு பணியாளர்களுக்கு அல்லது தற்காலிக அரசு பணியாளர்களுக்கு வயது சலுகை

உண்மையான காலமானது தொடர்சியானதாகவோ அல்லது தொடர்சியற்றதாகவோ

இருக்கிறதென்றால் ஆணையத்தின் மூலம் செய்யப்டும் பதவியமர்த்தம்

உள்ளடங்களாக அரசின் கீழுள்ள பதவியெதற்கும் பதவியமர்த்தம் செய்வதற்கான

அவரின் வயதை கணக்கிடுகையில் சேர்த்துக்கொள்ளப்படுதல் ஆகாது.

55

விளக்கம்.- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக விடுவிக்கப்பட்ட அரசு ஊழியர்

என்பவர் பணியமைப்பைக் குறைப்பதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு ஆனால்

ஒழுங்கு நடவடிக்கை அல்லாமல் பிற காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டு

மாநிலத்தின் பணியில் இருந்தவர் ஆவார்.

தற்காலிக விதிகளின் 62. தற்காலிக பதவி ஒன்று நிரந்தரமாக்கப் படுகின்றவிடத்து மற்றும்

பொருந்துகை.

எந்த காரணத்திற்காகவும் சிறப்பு விதிகள் எதுவும் அத்தகைய பதவிக்காக

செய்யப்படாமலிருக்கிறதென்றால் தற்காலிக விதிகள் மேற்சொன்ன

பதவிக்கு பொருந்த தக்கதாக இருக்கும், மேற்சொன்ன பதவிக்காக சிறப்பு

விதிகள் செய்யப்படுகின்ற வரை அது மேற்சொன்ன பதவிக்கு தொடர்ந்து

பொருந்தக்கூடியதாக இருக்கும்.

63. (1) இந்தச்சட்டத்தில் அல்லது மாநிலத்திற்கான பல்வேறுபட்ட முன்னாள் இராணுவத்- தினருக்கான சலுகை.

சிறப்புவிதிகளின்படி முன்னால் இராணுவத்தினர் ஒருவர் 48 வயதை நிறைவடையாத

போது அவர் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் அல்லது பிற்படுத்தப்பட்ட

வகுப்பினர் மற்றும் 53 வயதை நிறைவடையாதவராக இருக்கிறவற்றில் இருந்து

அவர் வராமல் இருக்கிறாரென்றால் அந்த ஆண்டின் ஜுலை முதல் நாளன்று பதவி

அமர்த்தம் செய்யப்பட்டதன் பேரில் அவர் பட்டியல் ஜாதியினர் பட்டியல் பழங்குடியினர்

அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலிருந்து வருகிறாரென்றால் ஆனால் பிறவாறு

தகுதி உடையவராக இருப்பார் மற்றும் அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதன்படி

காலியிடத்திற்கு பதவியமர்த்துவதற்காக வட்டார வேலைவாய்ப்பு அலுவலகம்

ஒன்றினால் அவரின் பெயர் கூறப்பட்டிருக்கிறதென்றால் அவர் அத்தகைய பதவி

அமர்த்ததிற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.

(2) ஆயுதப்படையில் பணிபுரியும் நபர்கள் அந்த ஆயுதப்படையில்

குறிப்பிட்டுள்ள வரையறைகளை, அரசுப் பதவிகளில் நியமனம் செய்ய

விண்ணப்பிக்க கடைசி நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் நிறைவு

செய்திருப்பின், அரசுப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். அவ்வாறு

விண்ணப்பிப்பவர்கள், சுய பொறுப்பேற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் மற்றும்

இணைப்புப் பட்டியல்&ஓஐஐ-இல் உள்ள படிவத்தில் உள்ளவாறு அவர்களின்

உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் 64. இந்தச்சட்டத்தில் அல்லது பல்வேறுபட்ட மாநிலத்திற்கான சிறப்பு

விதிகளில் அடங்கியிருப்பது எது எவ்வாறு இருந்த போதிலும் ஒரு மாற்று

திறனாளிகளுக்கான வயது சலுகை திறனாளியாக உள்ள நபர் 10 ஆண்டுகள் முடிவடையும் வரை வயது சலுகை

ஒன்றை பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பார் மற்றும் நேரடி நியமனம்

மூலம் மட்டுமே பதவி ஒன்றிற்கு பணியமர்த்தத்திற்காக மேற்கண்ட வயது

வரம்புகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளது. வரம்புரையாக விண்ணப்பதாரர் பிறவாராக

முழுமையான அளவில் பொருந்த தக்கவராகவும் மற்றும் அவர் தேர்வுசெய்யப்பட்டுள்ள

பதவியினை திறமையுடன் செய்து முடிப்பதற்கு அவருடைய குறைபாடு தடையாக

இல்லாமல் இருக்கிறதென்றால் தகுதியுடையவராவார்.

65. 2001 –ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாளன்று விதிக்கப்பட்டிருந்த

நேரடி நியமனத்தின் மீதான தடையினால் பாதிக்கப்பட்டிருக்கிற நபர் ஒருவர்

என்கிற நேர்வில் தற்காலிக பதவி எதற்கும் பொருந்தத் தக்க தற்காலிக விதிகள்

எதிலும் அல்லது கீழமை பணிகள் மற்றும் பல்வேறுப்பட்ட மாநிலத்திற்கான சிறப்பு

நேரடி நியமனம் தடை செய்யப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கான வயது சலுகை.

விதிகளிலும் அல்லது அடங்கியுள்ளது எது எவ்வாறு இருந்த போதிலும் ஆசிரியர்கள்,

மருத்துவர்கள் மற்றும் காவலர்கள் தவிர அரசின் கீழ் உள்ள பதவி எதற்கும் பதவி

அமர்த்தத்திற்காக அவருடைய வயது கணக்கிடப்படுகையில் 2006 ஆம் ஆண்டு

ஜுலை 17 ஆம் நாள் முதல் 2011 ஆம் ஆண்டு ஜுலை 16 ஆம் நாள் வரை

அதிகபட்ச வயது வரம்பை ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் உயர்த்தியும் மற்றும்56 பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் தொடர்பாக அல்லது உரிய நியமன அதிகார

அமைப்புகளால் செய்யப்பட்ட தேர்வுகள் அல்லது மேற்சொன்ன காலத்தின் போது

பதவி அமர்த்தம் செய்யும் அதிகார அமைப்புகளால் செய்யப்பட்ட பதவி அமர்த்தங்கள்

தொடர்பாக பொருந்தத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

மேல்முறையீடு அல்லது

66. (1) குறைகளை தீர்ப்பதற்கான மேற்சொன்ன விதிகளின் படி

மறு ஆய்வு

நிறைவேற்றப்பட்ட ஆணை எதற்கும் எதிராக இந்தச் சட்டத்தில் அல்லது சிறப்பு

விதிகளில் செய்யப்பட்ட மேல்முறையீடு அல்லது மறுஆய்விற்கான குறித்த வகை

வகைமுறை இல்லாமல் இருக்கின்ற விடத்து நேர்விற்கேற்ப மேல்முறையீடு அல்லது

மறுஆய்வு ஒன்று அதிகார அமைப்பிடம் செய்யப்படலாம். அந்த மேல்முறையீடு

ஒன்று அல்லது மறுஆய்விற்கு நிராகரிக்கப்பட்ட ஆணை ஒன்றிற்கெதிராக மனு

அளிக்கப்படலாம்.

(2) நேர்விற்கேற்ப மறு ஆய்வு மனுதாரர் பேரில் மேல்முறையீட்டாளரால்

ஆணைகள் பெறப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ஒன்றாம்

(உட்பிரிவின் படி) மேல்முறையீடு அல்லது மறுஆய்வு ஒன்று தேர்வு செய்யப்படுதல்

வேண்டும்.

(3) ஒன்றாம் உட்பிரிவின்படியான மேல்முறையீடு மறுஆய்வு ஒவ்வொன்றும்

மேல்முறையீடு அல்லது மறுஆய்வு மனு பெறப்பட்ட தேதியிலிருந்து நான்கு

மாதங்களுக்குள் முடித்து வைக்கப்படுதல் வேண்டும்.

(4) அதன்பிறகான நிலுவையிலுள்ள இறுதி முடிவினை மேல்முறையீட்டாளருக்கு

அல்லது மறுஆய்வு மனுதாரருக்கு, நிர்வாகத்தில் ஏற்படும் இடையூறுகளை

தவிர்க்கும் விதமாக மேல்முறையீட்டு அல்லது மறுஆய்வு செய்யும் அதிகார அமைப்பு

அதற்கு பொருத்தமென தோன்றுகின்றவாறு இடைக்கால அறிவுறுத்தங்களை

வழங்கலாம்.

மேல்முறையீட்டுக்கான

67. (1) மேல்முறையீட்டுக் குழு கீழ்கண்டவர்களை உள்ளடக்கியதாக அமையும்:-

குழு

விழிப்புப்பணி ஆணையர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த

தலைவர்

ஆணையர்

பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறையின்

நடத்துபவர்

அரசுச் செயலாளர்

அந்த நிர்வாக துறை தொடர்பான அரசுச் செயலாளர் உறுப்பினர்

சட்டத்துறையின் அரசுச் செயலாளர் உறுப்பினர்

நிதித்துறை செயலாளர் அல்லது அவருடைய நியமனதாரரர்

உறுப்பினர்

(நிதி தொடர்பான பொருட்பாடுகள்)

செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்

உறுப்பினர்

(சிறப்பு அழைப்பாளர் நோக்கங்கள் தேவையாக

இருக்கின்றவிடங்களில் நேர்வுகளில் தேவைப்படுவதாக

இருக்குமென்றால்).

(2) இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள கால அளவிற்குட்பட்டு இந்த

விதிகளில் அல்லது சிறப்பு விதிகளில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும்,

40ஆம் பிரிவின் (6)ஆம் உட்பிரிவின்படி மூப்பு நிலையின் சீராய்வுக்கான விண்ணப்பம்

ஒன்று 45ஆம் பிரிவின் ஒப்புதலுக்காக ஒப்புதலளிக்கப்பட்ட நபர்களின் பட்டியல்

சீராய்வுக்கான மனு ஒன்று அல்லது 66 ஆம் பிரிவின் படி மேல்முறையீடு அல்லது

மறுஆய்வு ஒன்றினை பதவியமர்த்தம் செய்யும் மேல்முறையீடு அல்லது அதிகார

அமைப்பாக அரசு இருக்கும் நேர்வுக்கு ஏற்ப இதன்பிறகு வகைசெய்யப்பட்டுள்ளவாறு

முடித்துவைக்கப்படுதல் வேண்டும்.

57

(3). (2)ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள விண்ணப்பம் அல்லது மனு ஒன்று

அதனுடைய அறிவுறுத்தலுக்காக வழக்கின் முழு உண்மைக்காக எடுத்து கூறும்

பொருட்டு நிர்வாக துறையினரால் மேல்முறையீடுகளின் பேரில் சுட்டி அனுப்பப்படுதல்

வேண்டும். மேல்முறையீடுகள் பேரில் குழு அதனை கருத்தில் கொள்ள வேண்டும்

மற்றும் அரசிடம் இருந்து ஆணைகளை பெறுவதற்காக குழுவிற்கு சுட்டப்பட்டுள்ள

அந்த பொருட்பாடுகளின் பேரில் அதன் அறிவுறுத்தலை கேட்கலாம். நிர்வாக துறை

தொடர்பாக (1) ஆம் உட்பிரிவில், உள்விதியின் சுட்டப்பட்டுள்ள அத்தகையான

பணியாளர் மற்றும் நிருவாகம் சீர்திருத்தத்ச் சட்டம், நிதித்துறைகள் முதலான

ஆலோசனை வழங்கும் துறைகளுக்கு அதன்பிறகு பொருட்பாடினை மறுபடியும் சுட்டி

அனுப்பாமல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசனைக்கு

உட்பட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மற்றும் 1954ஆம் ஆண்டு தமிழ்நாடு

அரசுப் பணியாளர் தேர்வாணய ஒழுங்குமுறைகளில் அத்தகைய ஆலோசனை

தேவையானதாக இருக்கின்றவிடத்து நேர்விற்கு ஏற்ப விண்ணப்பத்தின் அல்லது

மனுவின் பேரில் ஆணையை வழங்கலாம் அது இறுதியானதாக இருக்க வேண்டும்.

68. இந்தச் சட்டத்தின் வகைமுறை எதுவும் குறிப்பிட்ட பணி எதற்கும்

பொருந்தத்தக்க சிறப்பு விதிகளின் வகைமுறை எதற்கும் முரண்படுமாயின், சிறப்பு

சிறப்பு விதிகள் மீதூர்ந்து இயங்கும் செயல்திறம் உடையது.

விதிகள், அந்தப் பணி பொறுத்து, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு மீதூர்ந்து

இயங்கும்.

குறித்த சில விதிகளின் 69. பணி எதனையும் பொறுத்து அல்லது அதன் பிரிவு அல்லது வகை

பொருந்துகை.

எதனையும் பொறுத்து அரசமைப்பின் 313 ஆம் உறுப்பினாலோ அல்லது

அரசமைப்பின் 309 ஆம் உறுப்பிற்கான வரம்புரையின்படியோ தொடர்ந்து வரும் விதி

எதுவும் அத்தகைய விதி எந்தத் தேதியன்று செய்யப்பட்டதோ அந்தத் தேதியன்று

அந்தப் பிரிவின் உறுப்பினர்களால் வகிக்கப்பட கருதப்பட்ட பணியிடங்களை

வகிக்கும் நபர்கள் அனைவருக்கும் பொருந்துவதாகும்.

வரம்புரையாக அத்தகைய விதியிலுள்ள எதுவும், அதில் முறணான கருத்து

சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலன்றி, நபர் எவரும் அத்தகைய விதி செய்யப்படுவதற்கு

முன்னர் அவர் உரிமை கொண்டிருக்கக்கூடிய அல்லது அவருக்கு பொருந்தக்

கூடிய விதி எதனாலுமோ அல்லது அதன் வழியாலோ அவருக்குரிய உரிமையைப்

பறிப்பதாக செயற்படுத்தலாகாது:

மேலும் வரம்புரையாக, அத்தகைய விதி எதுவும், அத்தகைய பணிவகை

அல்லது பிரிவு எதற்குமான பணியமர்த்தத்திற்காக அல்லது அத்தகைய விதி

செய்யப்படும் முன்னர் இதற்கெனவுள்ள பிற தகுதிறமுடைய அதிகாரஅமைப்பினால்

அல்லது ஆணையத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டிருக்கும் அல்லது அத்தகைய

ஆணையத்தினால் அல்லது பிற தகுதிறமுடைய அதிகாரஅமைப்பினால்

வெளியிடப்பட்ட விண்ணப்பங்களைக் கோரும் விளம்பரம் எதற்கும் இணங்க

அத்தகைய ஒப்புதளிப்பதற்கு விண்ணப்பித்திருக்கிற விண்ணப்பத்தாரருக்கு

பொருந்துதல் ஆகாது.

செல்லுந்தன்மை.

70. நீதிமன்ற தீர்ப்பிலோ, தீர்ப்பாணையிலோ அல்லது

ஆணையிலோ அல்லது பிற அதிகார அமைப்பிலோ எது எவ்வாறு காணப்படினும்,

தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான விதிகளின் பொதுவிதி

22 (இ) இன் கூறின்படி IIIஆம் இணைப்புப்பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள

இனச்சுழற்சியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ள பணிக்கு, வகுப்பிற்கு

அல்லது இனத்திற்கான பணி அமர்த்துகைக்காக நபர்களின் பணிமூப்பு நிலையை

தேர்வு செய்யும்போது, 1955 ஜனவரி 1 இல் தொடங்குகின்ற காலத்தின்போது மற்றும்

இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட தேதிவரையிலும் அத்தகைய

பணிமூப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட58 நடவடிக்கை எதுவும் அனைத்து நோக்கங்களுக்காகவும் அத்தகைய பணி

மூப்பை தீர்மானிக்கும் போது மற்றும் அவ்வாறு செய்யப்பட்ட செயலை அல்லது

எடுக்கப்பட்ட நடவடிக்கையை அனைத்து நேரிய காலங்களிலும் இந்தச்சட்டமானது

செயல்முறைக்கு வந்ததை போன்று சட்டத்தின்படி செல்லுபடியாகுமாறு அனைத்து

நேரங்களிலும் தீர்மானிக்கப்பட்டதாக செய்யப்பட்டதாக அல்லது எடுக்கப்பட்டதாக

கொள்ளப்படுதல் வேண்டும்.

சிறப்பு வகைமுறைகள் 71. 1955 ஜனவரி 1 ஆம் நாள் அன்று தொடங்கும், காலஅளவின்

தொடக்கத்தின் போதும், 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்

(பணி நிபந்தனைகள்) சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியின்

முடிவிலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப்பணிகளுக்கான விதிகளின்படி

செய்யப்பட்ட செயல்கள் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும்,

இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் தொடர்புடைய அந்தக் காலத்தில்

நடைமுறையில் இருந்தாற்போன்றே, இந்தச் சட்டத்தின் நேரிடையான

வகைமுறைகளுக்கு இணங்க, செல்லத்தக்கதாக செய்யப்பட்டதாக அல்லது

எடுக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.

இடர்ப்பாடுகளை

72. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு செயல்விளைவு அளிப்பதற்கு

இடர்பாடு எதுவும் எழுமானால், அரசானது, ஆணையின் வாயிலாக தமிழ்நாடு

அகற்றுவதற்கான அதிகாரம்.

அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின் வாயிலாக இடர்பாட்டினை

அகற்றுவதற்காக தனக்கு தேவையென அல்லது உகந்தெனக் கருதலாகிற இந்தச்

சட்டத்தின் வகை முறைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைய வகையங்களை

இயற்றலாம்:

வரம்புரையாக, அத்தகைய ஆணையை , இந்தச் சட்டத்தை தமிழ்நாடு

அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் கழிவுற்ற பின்பு

பிறப்பித்தல் ஆகாது.

இணைப்புப் பட்டியல்களை

73. (1) அரசானது, அறிவிக்கையின் வாயிலாக இணைப்புப் பட்டியல்கள்

எதையும் திருத்தம் செய்யலாம், சேர்க்கலாம் அல்லது நீக்கம் செய்யலாம்.

திருத்தம் செய்வதற்கான அதிகாரம்.

(2) இந்தச்சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு அல்லது

ஆணை ஒவ்வொன்றையும் அவைகளை வெளியிட்ட பின்பு, கூடியவிரைவில்

எந்தக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்டதோ, அந்தக் கூட்டத்தொடர்

முடிவடைவதற்கு முன்போ அல்லது அடுத்தக் கூட்டத்தொடரிலோ

சட்டமன்றத்தில் வைக்கப்படுதல் வேண்டும். சட்டமன்றமானது, அறிவிக்கை

அல்லது ஆணை எதிலும் மாற்றமைவு எதையும் செய்யுமானால்

அல்லது சட்டமன்றமானது அறிவிக்கை அல்லது ஆணையை பிறப்பிப்பதல்

ஆகாது என தீர்மானிக்குமாயின், அறிவிக்கை அல்லது ஆணையானது

அதன் பின்பு அவ்வாறு மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் மட்டும் செயல்

விளைவு பெறும் அல்லது செயல் விளைவு பெறாது போகும். இருப்பினும்,

அத்தகைய மாற்றமைவு அல்லது அழித்தறவு எதுவும் அந்த அறிவிக்கையின்படி

அல்லது ஆணையின்படி முன்னதாக செய்யப்பட்ட எதனின் செல்லுந்தன்மைக்கும்

குந்தகம் இன்றி இருத்தல் வேண்டும்.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 03 July 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-07-03.Ordinary_27_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-07-03.Ordinary_27_Part-IV_Section-2-T-Sup.