GOVERNMENT OF TAMIL NADU 2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 27] CHENNAI, WEDNESDAY, JULY 3, 2019 Aani 18, Vikari, Thiruvalluvar Aandu–2050
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சியர், சென்னை
நில அளவை முடிவான அறிவிப்பு
சோழிங்கநல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமம் முன்னோடி கிராமமாக தேர்வு
செய்யப்பட்டது மறுநிலஅளவை பணிகளை துவங்குவது குறித்த அறிவிக்கை .. 88 88 [Part VI—Sec. 2 TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
மாவட்ட ஆட்சியர், சென்னை.
நில அளவை முடிவான அறிவிப்பு
சோழிங்கநல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமம் முன்னோடி கிராமமாக தேர்வு செய்யப்பட்டது மறுநிலஅளவை பணிகளை துவங்குவது குறித்த அறிவிக்கை
(ந.க.ஆ1/4628/18)
முதலாவது வெளியீடு
No. VI(2)/67/2019.
1923-ம் ஆண்டு தமிழ்நாடு நிலஅளவையையும் எல்லைகளையும் குறித்த சட்டம் VIII பிரிவு 6(1)ன் கீழ் தனக்குள்ள அதிகார ஒப்படைப்பின்படி அடியில் கையொப்பமிட்டிருக்கிறவர்கள் 1923-ம் ஆண்டு தமிழ்நாடு நிலஅளவையையும் எல்லைகளையும் குறித்த சட்டம் VIII 6-வது பிரிவு 1-வது உட்பிரிவின்படி இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டம் கிராம எண் செம்மஞ்சேரி கிராமத்தில் 1923-ம் ஆண்டு தமிழ்நாடு நிலஅளவையையும் எல்லைகளையும் குறித்த சட்டம் VIII-ல் சொல்லப்பட்ட வழிவகைப்படி கடாஸ்டரல் முறையில் நவீன நிலஅளவை கருவியான DGPS-RTK மூலம் மறு நிலஅளவைப்பணி 2019-ம் ஆண்டு மார்ச் திங்களில் தொடங்கப்படும்.
அச்சமயம் மேற்படி கிராம எல்லைக்குள் பதிவு பெற்ற நில உரிமையாளர்கள் அல்லது நிலங்களின் மீது பற்றுள்ளவர்கள் என கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சொந்தமான எல்லைகளை காட்டும் பொருட்டும் அவை தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் பொருட்டும் நேரடியாகவோ அல்லது அவர்களின் அதிகாரம் அளிக்கப்பெற்றவர்கள் மூலமாகவோ குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் அதற்கு பிறகு அவ்வப்போது அழைக்கப்படும் பொழுதும் உடனிருந்து உரிமை கொண்டாடும் நிலங்களின் எல்லைகளை காட்டவும் நிலஅளவைக்கு தேவைப்படும் விவரங்களை வழங்கவும் வேண்டும்.
மேற்படி நிலஅளவை பணிகள், கீழ்க்குறிப்பிட்டுள்ள நிலஅளவை அலுவலரின் நேர் விசாரணையின் கீழ் நடைபெறும், நிலஅளவை சம்பந்தமான எல்லா மனுக்களையும் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவேண்டும்.
நகர அளவை ஆய்வாளர் நிலஅளவை பதிவேடுகள் துறை, சென்னை-1
நவீன நிலஅளவை கருவியான DGPS-RTK மூலம் மறு நிலஅளவைப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் கிராமம் விவரம் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், செம்மஞ்சேரி கிராமம்.
அ. சண்முகசுந்தரம்,
சென்னை, 2019 ஜூன் 11.
மாவட்ட ஆட்சியர்.