GOVERNMENT OF TAMIL NADU 2019
[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[Price : Re. 0.80 Paise.
| TAMIL NADU GOVERNMENT GAZETTE PUBLISHED BY AUTHORITY | ||
No. 27] CHENNAI, WEDNESDAY, JULY 3, 2019 Aani 18, Vikari, Thiruvalluvar Aandu–2050
Part VI—Section 3(b)
Notifications issued by Quasi - Government bodies and
Public Sector undertakings.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
Pages.
UNIVERSITY AUTHORITIES
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 18(எ) வகுப்பு-II (6)இன் கீழ் பேரவைத்
தேர்தல் அறிவிப்பு .. .. .. .. .. .. 54 54 [Part VI—Sec.3(b) TAMIL NADU GOVERNMENT GAZETTE
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
UNIVERSITY AUTHORITIES
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 18(எ) வகுப்பு-II (6)இன் கீழ் பேரவைத் தேர்தல் அறிவிப்பு
(ந.க.எண். 1717/க/2019)
No.VI-3(b)/20/2019.
கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களிலிருந்து தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 28-06-2019 பிற்பகலுடன் முடிவுறுகிறது. இப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் மேலே குறிப்பிடப்பட்ட நாளில் முடிவுறுவதைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 18(எ) வகுப்பு-II(6)-இன்படி கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களிலிருந்து ஒருவரை, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இவ்வுறுப்பினரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது பேரவை மீன்டும் திருத்தி அமைக்கப்படும் நாள்வரை இவற்றில் எது முந்தியதோ அதுவரையாகும். தேவையெனில், இதற்காக நேரடியான மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பத்தி-1 இல் நிர்ணயிக்கப்பட்டபடி தங்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்களை நியமனம் செய்யலாம். ஒவ்வொரு வேட்பு மனுவும் அதற்குரிய படிவத்தில் எழுத்து மூலமாக அதன் தேர்வாளரால் முன்மொழியப்பட்டு மற்றொரு தேர்வாளரால் வழிமொழியப்பட்டு அமைய வேண்டும். வேட்புமனுவுடனும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் பேரவையில் பணியாற்றுவதற்கு இசைவதாக வேட்பாளர் ஒவ்வொருவரும் உறுத்ி மொழி கூறும் படிவத்தை நிறைவு செய்து கையொப்பம் இட்டு இணைத்தனுப்ப வேண்டும்.
காலியிடங்களைப் பொறுத்து ஒவ்வொரு தேர்வாளரும் முன்மொழிபவராகவோ, வழிமொழிபவராகவோ இருக்கலாம்.
ஒவ்வொரு வேட்பு மனுவும் ஓர் உறையிலிடப்பட்டு அதன்மேல் "பேரவைக்குக் கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களிலிருந்து வேட்பாளர் நியமனம்'' என்று எழுதப்பட்டு ஒப்புகைச் சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலில், "பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010'' என்னும் முகவரிக்கு 22-07-2019 பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். வேட்பு மனுக்களை அலுவலக நேரத்தில் தேர்தல் அலுவலரான இப்பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களிடம் நேரடியாகவோ நபர் மூலமாகவோ குறித்த காலத்திற்குள் கிடைக்குமாறும் அனுப்பி வைக்கலாம்.
மேலே கூறப்பட்டுள்ளபடி முறையாக அனுப்பப்படாத வேட்பு மனுக்கள் செல்லுடமையற்றவை எனச் சாற்றப்படும்.
வேட்பு மனுக்கள் 22-07-2019 பிற்பகல் 5.00 மணிக்குப் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். செல்லுடைமையுள்ள வேட்பாளர் பட்டியல் அன்றைய நாளே வெளியிடப்படும்.
எந்த வேட்பாளரும் தம் வேட்பு மனுவை எழுத்து மூலம் அறிவித்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய திரும்பப் பெறும் அறிவிப்பை 29-07-2019 பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்குமாறு பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010 என்ற முகவரிக்கு ஒப்புகைச் சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலிலோ, மேலே குறித்த நாள் மற்றும் நேரத்திற்குள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாகவோ ஆள் மூலமாகவோ சேர்ப்பிக்கலாம்.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் முடிந்த பிறகு அன்றைய நாளே (29-07-2019 பிற்பகல் 5.00 மணிக்கு) இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களைவிடக் கூடுதலாக இருந்தால் 27-08-2019 முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையிலுள்ள இடைப்பட்ட நேரத்தில் மந்தண வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.
ச. முத்துக்குமார், தஞ்சாவூர், 2019 ஜூன் 26.
பதிவாளர்.