[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : 1.60 காசு[விலை : 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 10, 2019 ஆனி 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 61, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 28 மே 2019.] 1961-ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 40-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) (2) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதிய பின்வரும் அறிவிக்கையின் வரைவுத்திருத்தம், தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளில், மேற்சொன்ன சட்டத்தின் 40 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஆறு வாரங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பின்வரும் இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசுச்செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு (இருபடிகளில்) அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத்திருத்தங்கள்வரைவுத்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில், -
(1) விதி 4-இல்,-
(a) துணை விதி (1)-இல், ''தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)'' என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(b) துணை விதி (5)-இல், ''தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடர் இடம்பெறுகிற இடங்களிளெல்லாம் அதற்குப்பதிலாக, "மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(2) விதி (5)-இன், துணை விதி (2)-இல் ''தலைமை ஆய்வாளர் என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(3) விதி (7)-இன், துணை விதி (1)-இல் ''தலைமை ஆய்வாளர் அல்லது" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(4) விதி (8)-இல், வரம்பு நிபந்தனை இரண்டில் ''தலைமை ஆய்வாளர்'' அல்லது மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
III-1a-(28) (T Sup)—1
[ 1 ]2 (5) விதி (11)-இல்,
(a) துணை விதி (1)-இல் ''தலைமை ஆய்வாளர் மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(b) துணை விதி (2)-இல் ''தலைமை ஆய்வாளர் அல்லது மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(6) மேற்சொன்ன விதிகளிலும் படிவங்களிலும் "தொழிலாளர் துறை ஆய்வாளர்", "தொழிலாளர் துறை ஆய்வாளர்கள்" என்ற சொற்றொடர்கள் இடம்பெறும் இடங்களிளெல்லாம், அதற்குப்பதிலாக "தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)", "தொழிலாளர் துறை உதவி ஆணையர்கள் (செயலாக்கம்)", என்ற சொற்றொடர்கள் முறையே அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
(7) படிவம் எண். II-க்குப்பதிலாக, பின்வரும் படிவம் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
"படிவம் எண்.II
(தமிழ்நாடு 1965-ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளின், 5-ஆம் விதியைக்காண்க) 1961 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் படிவம்.
பதிவு எண். கட்டணம் ரூ.
1961 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) விதித்துறைகளுக்கும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கும் உட்பட்டு அந்த ஆண்டில் ஏதாவது ஒரு நாளில் .............................. க்கும் மேற்பட்ட நபர்கள் பணியமர்த்தப்படாமல் .................... என அறியப்படுகிற மோட்டார் போக்குவரத்து சேவைகளை இயக்குவதற்கு.............(தொழிலாளரின் பெயர்) என்பவருக்கு பதிவுச் சான்றிதழ் இதனால் வழங்கப்படுகிறது.
இதனால் வழங்கப்பட்ட இந்தப் பதிவுச் சான்றிதழ், அடுத்த இரண்டு நாட்காட்டி ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும்.
நாள்:
தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)
புதுப்பித்தல்.
புதுப்பிப்பு நாள் செலுத்தப்பட்ட கட்டண காலாவதி ஆகும் நாள் தொழிலாளர் துறை
தொகை
உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4)
திருத்தங்கள்.
திருத்தம் செய்யப்பட்ட திருத்தத்தின் தன்மை செலுத்தப்பட்ட கட்டண
தொழிலாளர் துறை நாள்
தொகை மற்றும் நாள்
உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4)
மாற்றல்.
மாற்றல் நாள்
மாற்றல் செய்பவரின் பெயர்
மாற்றலுக்குரியவரின்
பெயர்
மாற்றல் செய்வதற்கான காரணம்
செலுத்தப்பட்ட கட்டண தொகை மற்றும் நாள்
தொழிலாளர் துறை உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4) (5) (6)
சுனீல் பாலீவால்,சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
3[அரசாணை (நிலை) எண் 63, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 28 மே 2019.] 1970-ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதலும், நீக்குதலும்) சட்டத்தின் (மத்தியச்சட்டம் 37/1970) 35-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1975 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதலும், நீக்குதலும்) விதிகளின் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 35-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் சொல்லியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) 17ஆம் விதியில்,
(a) துணை விதி (2) இல், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழி தொகை செலுத்துதல்'', என்ற சொற்றொடருக்குப்பின்னர் ''அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழியில் தொகை செலுத்தியதற்கான சான்று'', என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்;
(b) துணை விதி (3)-இல், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்''. என்ற சொற்றொடருக்குப்பின்னர், ''அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) 21ஆம் விதியில்,
(a) துணை விதி (3)-இல், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்'', என்ற சொற்றொடருக்குப் பின்னர், ''அல்லது தொழிலாளர் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'', என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்;
(b) துணை விதி (5)-இல், ''அல்லது தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழி தொகை செலுத்துதல்'', என்ற சொற்றொடருக்குப்பின்னர், ''அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழியில் தொகை செலுத்தியதற்கான சான்று'', என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(3) 29ஆம் விதியில்,
(a) ''(2A)-ஆம் துணை விதியில், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக செலுத்தப்பட வேண்டும்'', என்ற சொற்றொடருக்குப் பின்னர்,'' அல்லது தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வாயிலாக'' என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்;
(b) (2A)-ஆம் துணை விதியின் வரம்பு நிபந்தனையில், ''தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இணையவழி வலைவாசல் வாயிலாக இணையவழி தொகை செலுத்துதல்,'' என்ற சொற்றொடருக்குப் பின்னர், தொழிலாளர் நலத் துறையின் இணையவழி வலைவாசல் வழியாக இணையவழியில் தொகை செலுத்தியதற்கான சான்று'', என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால்,சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை [அரசாணை (நிலை) எண் 64, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 30 மே 2019.] 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் செய்யக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு திருத்தங்கள், இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 115 ஆம் பிரிவில் சொல்லியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து நாற்பத்தைந்து நாட்கள் முடிவடைந்தப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 032, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை, எண்.47/1, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு (இருபடிகளில்) அனுப்பி வைக்க வேண்டும்.
4வரைவுத் திருத்தங்கள்வரைவுத் திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 6-இல், துணை விதி (3)-இல், ''ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) விதி 8-இல், துணை விதி (2)-இல், "ஐம்பது ரூபாய்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(3) விதி 10-இல், "ஐம்பது ரூபாய்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
சுனீல் பாலீவால்,சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.