தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 28] சென்னை, புதன்கிழமை, ஜூலை 10, 2019 ஆனி 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 31, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (D1)த் துறை,
நாள்: 22 மே, 2019.]
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்
(உணவு மற்றும் பொது விநியோகத் துறை), ஆணை, புது டில்லி, 8 பிப்ரவரி 2018.
G.S.R.149(E)–1955 ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 10/1955) 3ஆம் பிரிவு மற்றும் 1966 ஆம் ஆண்டு சர்க்கரை (கட்டுப்பாடு) ஆணையின் 5ஆம் பகுதி ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, சர்க்கரை உற்பத்தியாளர் முறையே 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் இறுதியில், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறான அளவிற்கு அதிகமாக யாதொரு சர்க்கரை இருப்பை வைத்திருக்கக் கூடாது என இதனால் உத்தரவிடுகிறது:-
(a) 2018 பிப்ரவரி: 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி நாளின் போதுள்ளவாறான இறுதி இருப்பின் 83%க்கு குறையாத இருப்பு + 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை அளவு - 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின்போது ஏற்றமதி செய்யப்பட்ட சர்க்கரை அளவு.
(b) 2018 மார்ச்: 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதி நாளின் போதுள்ளவாறான இறுதி இருப்பின் 86%க்கு குறையாத இருப்பு + 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு - 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின்போது ஏற்றமதி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு.
2. மாத இறுதியில் தனிநபர் சர்க்கரை உற்பத்தியாளரின் இறுதி சர்க்கரை இருப்பு பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்:
"மாதத்தின் முதல் நாளன்றுள்ளவாறான சர்க்கரையின் ஆரம்ப இருப்பு + அம்மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு - அம்மாதத்தின் போது சர்க்கரை ஆலையிலிருந்து விற்பனை செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு - அம்மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட சர்க்கரையின் அளவு." 2 3. மேலும், 1966 ஆம் ஆண்டு சர்க்கரை (கட்டுப்பாடு) ஆணையின் 15ஆம் பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, மத்திய அரசு, இந்த ஆணையைச் செயல்படுத்துவதற்கு மாநில அரசுக்கும், மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதி நிருவாகங்களுக்கும் இதனால் அதிகாரமளிக்கிறது.
4. இந்த ஆணை, அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்,
[கோப்பு எண். 1(2)/2018-SP-I]
சுபாசிஷ் பாண்டா, இணைச் செயலாளர்.
(ஆளுநரின் ஆணைப்படி மீண்டும் வெளியிடப்படுகிறது)
தயானந்த கட்டாரியா, அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.