[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 8.00 காசு[விலை : ரூ. 8.00 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 37] சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 11, 2019 ஆவணி 25, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
[அரசாணை நிலை எண் 116, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 16 ஜூலை 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 9-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்களில் (அரசு மற்றும் தொழிலாளர் காப்புறுதித்திட்ட மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) பணியமர்த்தப்படுவோருக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கவும், விசாரணைகள் மேற்கொள்ளவும் பின்வரும் உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார்.
தனி நபர்கள்.
(1) தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர், சென்னை. தலைவர் (2) தொழிலாளர் துறை உதவி ஆணையர்-III வட்டம் (செயலாக்கம்), சென்னை. செயலாளர் (3) உதவி இயக்குநர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சென்னை-600 006. உறுப்பினர் பணியாளர்களின் பிரதிநிதிகள்.
(1) திரு. க. சங்கரதாஸ்,
உறுப்பினர்
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எண். 6, A தொகுதி, லாயிட்ஸ் காலனி,
இராயப்பேட்டை, சென்னை-600 014
(2) திரு. P. குமார்,
உறுப்பினர்
தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு,
எண். 10/2, வசந்தா கார்டன், 2 -ஆம் சந்து,
அயனாவரம், சென்னை-600 023.
[ 1 ]
DTP-II-2-(37) (T Sup)—12 உறுப்பினர்
(3) திரு. A. ராஜ்,
உலகளாவிய தமிழ்நாடு செவிலியர் சங்கம் (GNAT),
80, கணேஷ் பவன்,
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்,
அயப்பாக்கம், சென்னை-600 077.
உறுப்பினர்
(4) டாக்டர். A.R. சாந்தி,
அனைத்திந்திய வர்த்தக தொழிற்சங்க கூட்டமைப்பு, A1, அம்மன் அடுக்குக் குடியிருப்புகள்,
41, சாவடி சாலை, பல்லாவரம்,
சென்னை-600 043.
(5) டாக்டர். ஜெயசீலன், M. தேவதாசன்,
உறுப்பினர்
இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்களின் சங்கம்,
தமிழ்நாடு மாநில கிளை, 8/1214,
மனப்பள்ளம், வாசவி கல்லூரி (அ), லட்சுமி நகர்,
ஈரோடு-638 316.
உறுப்பினர்
(6) திரு. R. ரமேஷ் சுந்தர்,
இந்திய வர்த்தக தொழிற்சங்க மையம், 112-A, பாலாஜி நகர், குபேரன் நகர்,
14-ஆவது தெரு விரிவாக்கம்,
மடிப்பாக்கம், சென்னை-600 091.
வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்.
(1) டாக்டர். S. கார்த்திக் பிரபு,
உறுப்பினர்
கார்த்திக் பலவகை நோய் சிகிச்சை மருத்துவமனை,
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை,
மருத்துவ சிகிச்சை நிலைய வாரியம்,
0-25 படுக்கை வசதி வகைப்பாடு 101/67,
கருணாநிதி நகர், திருச்சி சாலை,
கோயம்புத்தூர்-641 045.
உறுப்பினர்
(2) டாக்டர். S. அசோகன்,
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை,
மருத்துவ சிகிச்சை நிலைய வாரியம்,
151-200 படுக்கை வசதி வகைப்பாடு
16-17, துரைசாமி காலனி, மாங்காளி நகர்,
இரண்டாவது தெரு, அரும்பாக்கம்,
சென்னை-600 106.
(3) டாக்டர். S. கனகசபாபதி,
உறுப்பினர்
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை,
0-25 படுக்கை வசதி வகைப்பாடு C-23, இரண்டாவது குறுக்குத் தெரு, ஸ்ரீநகர் காலனி, கும்பகோணம்-612 001.
உறுப்பினர்
(4) டாக்டர். R. அன்புராஜன்,
இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை,
மருத்துவ சிகிச்சை நிலைய வாரியம்,
25-50 படுக்கை வசதி வகைப்பாடு பீஸ் (Peace) நல்வாழ்வு நிலையம், 48 H/5, தெற்கு புறவழிச்சாலை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
பாளையங்கோட்டை-627 005.
3உறுப்பினர்
(5) டாக்டர். அரவிந்த் ஸ்ரீனிவாசன், அரவிந்த் கண் மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில கிளை, 200 -க்கு மேற்பட்ட படுக்கை வசதி வகைப்பாடு பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, நூம்பல், சென்னை-600 077.
உறுப்பினர்
(6) டாக்டர் நல்ல G பழனிசுவாமி, தலைவர், கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை, அவினாசி சாலை, கோயம்புத்தூர்-641 014.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 121, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 19 ஜூலை 2019.] 1961-ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 4-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 13-09-1989-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு 2-இல் 706-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/5256/89-ஆம் எண் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாகவும் தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், (1) சென்னை, தொழிலாளர் இணை ஆணையரை தமிழ்நாடு மாநிலத்திற்கான (குறைந்தளவு ஊதியங்கள்) தலைமை ஆய்வாளராகவும்;
(2) தொழிலாளர் உதவி ஆணையர்கள் (செயலாக்கம்), தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமை ஆய்வாளருக்கான சார்நிலை ஆய்வாளர்களாகவும், இதனால் நியமனம் செய்கிறார்:-
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 47, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 27 ஜூன் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 01-05-2013-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 304 முதல் 312-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)/தொ.வே/345/2013-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், கைத்தறி பட்டு நெசவுத் தொழில் வேலைவாய்ப்பிலுள்ள பணி வகைகளுக்கு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதன் நெடும்பத்தி (2)-இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்ட பணி வகையினை பொறுத்தவரையில், கீழேயுள்ள விவர அட்டவணையில் நெடும்பத்தி (4)-இல் குறிப்பிடப்பட்டவாறாக, இதனால் திருத்தியமைக்கிறார். இதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைச்சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும், அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
4விவரஅட்டவணைவிவரஅட்டவணை
கைத்தறிப் பட்டு நெசவுத் தொழிலில் வேலைவாய்ப்புகைத்தறிப் பட்டு நெசவுத் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் | பணி வகை | நாளொன்றுக்கு சராசரி உற்பத்தி ( மீட்டரில்) | குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் ( ரூ . காசு) |
| (1) | (2) | (3) | (4) |
| (I) காஞ்சிபுரம் ரகங்கள் : | |||
| ஊதியங்கள் (பொது) | |||
| (1) | ஒரு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டர் | 0.70 | 3144.58 |
| (2) | இரண்டு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டர் | 0.60 | 3868.10 |
| (3) | சாதாரண பட்டுப் புடவை 16.5 மீட்டர் | 1.00 | 2643.66 |
| (4) | பாவாடை 103 செ.மீ. (21/2 முழம்) 91.5 செ.மீ (16.5 மீட்டர்) (2 முழம்) | 0.80 | 2838.62 |
| (5) | பாவாடை 80 செ.மீ (1 முழம்) 58.5 செ.மீ (1.5.முழம்) 16.5 மீட்டர் | 0.85 | 2560.18 |
| (6) | ஷட்டில் பீஸ் ரகங்கள் 6.5 மீட்டர் | 1.70 | 1335.75 |
| (7) | ஷட்டில் ரகங்கள் 16.5 மீட்டர் | 1.60 | 1391.41 |
| சிறப்பு மிகையான வேலைப்பாட்டுக்கு ஊதியங்கள் : பேட்டு ஊதியங்கள் | |||
| (1) | இரு பக்க பேட்டு 10 குளிகைக்கு | -- | 48.43 |
| (2) | ஒரு பக்க பேட்டு | -- | 43.42 |
| (3) | உடற்பகுதி பேட்டு 10 குளிகை பெட்னிக்கு | -- | 45.07 |
| பெட்னி : பெட்னி : | |||
| (4) | 4 கோர் அச்சு பெட்னி | -- | 108.23 |
| (5) | 8 கோர் அச்சு பெட்னி | -- | 129.68 |
| (6) | கிள்ளு பெட்னி | -- | 54.54 |
| (7) | கரை பெட்னி | -- | 108.23 |
| புனைப்பு : | |||
| (8) | சரிகை சீர் புனைப்புடன் கூடிய புடவையின் உடற்பகுதி (புனைப்பு) 10 குளிகைக்கு | -- | 34.79 |
| (9) | புடவையின் உடற்பகுதியில் புனி சரிகை 10 குளிகைக்கு | -- | 34.79 |
| (10) | புடவையின் உடற்பகுதி மற்றும் கரைப் பகுதியில் வண்ண சீர் புனைப்பு (புனைப்பு ஒன்றுக்கு) | -- | 21.43 |
| பீட்டு விவரம் : | |||
| (11) | பிள்ளையார் மொக்கு - புடவை ஒன்றுக்கு | -- | 43.42 |
| (12) | 5 கிளை தாழம்பூ ரேக்கு - புடவை ஒன்றுக்கு | -- | 194.79 |
| (13) | 7 கிளை மீரா ரேக்கு - 3 புடவைகளுக்கு | -- | 325.60 |
| (14) | ஒரு பக்க புனியில் - சரிகை தாழம்பூ ரேக்கு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 87.11 |
| (15) | இரு பக்க புனியில் - சரிகை தாழம்பூ ரேக்கு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 129.68 |
| (16) | பனாரஸ் தாழம்பூ ரேக்கு - இரு பக்கம் 8 அச்சு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 129.68 |
| (17) | பனாரஸ் தாழம்பூ ரேக்கு - ஒருபக்கம் 8 அச்சு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 109.10 |
| (18) | மீரா ரேக்கு - இரு பக்கம் - 8 அச்சு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 193.75 |
| (19) | மீரா ரேக்கு - ஒரு பக்கம் - 8 அச்சு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 135.24 |
| (20) | பெரிய ரேக்கு (28 செ.மீ.க்கு மேல்) (11 அங்குலத்திற்கு) (45.7 செ.மீ) (1முழம்) | -- | 196.74 |
| (21) | இரு பக்கங்களில் கோர்வையில் 30.5 செ.மீக்கு மேல் (12 அங்குலம்) பீட்டு வாங்கி நெய்ய 3 புடவைகளுக்கு | -- | 224.28 |
| புட்டா வடிவமைப்புகள் : | |||
| (22) | 1 முதல் 100 குளிகை வரை | -- | 51.20 |
| (23) | 100 குளிகைக்கு மேல் புட்டா (100 குளிகைக்கு) | -- | 69.61 |
| (24) | உடற்பகுதி பட்டு சுங்குடி புட்டா (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 50.13 |
| (25) | தொடர் புட்டா 23 குளிகை 21-20 121 வரிசை (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 174.75 |
| (26) | உடற்பகுதி பட்டு மல்லி மொக்கு (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 12.53 |
| (27) | உடற்பகுதி 21 குளிகை - 85 முதல் 190 வரிசை நெய்ய 12-13 முடிச்சுக்கு (45.7 செ.மீ) (1 முழம் அதாவது ½ கஜம்) | -- | 117.97 |
| (28) | உடற்பகுதி பட்டு சரிகை - மீனா வண்ண புட்டா 10 குளிகைக்கு | -- | 11.67 |
| குறுகிய கட்டம் : | |||
| (29) | கட்டம் - 10 குளிகை வரை புடவை ஒன்றுக்கு | -- | 54.01 |
| (30) | கட்டம் - 10 குளிகைக்கு மேல் | -- | 42.74 |
| (31) | குறுக்கே சரிகை முத்து பனாரஸ் 8 கோர் அச்சில் 600 குளிகை வரை (45.7 செ.மீக்கு) | -- | 10.59 |
| (32) | 60 முதல் 100 குளிகை (1 முழம்) (45.7 செ.மீ) | -- | 15.87 |
| (33) | 1000 குளிகை வரிசை (100 குளிகைக்கு) | -- | 18.92 |
| (34) | 100 குளிகை வரிசைக்கு ஒரே மாதிரியான புடவை | -- | 64.86 |
| (35) | ½ குளிகை வரிசைக்கு ஒரே மாதியான புடவை | -- | 88.23 |
| முந்தி விவரம் : | |||
| (36) | முந்தி முத்து சீர் 5.5 மீட்டர் புடவைக்கு | -- | 43.42 |
| (37) | முந்தி முத்து சீர் செல்ஃப் முந்தி | -- | 10.59 |
| (38) | முந்தி செல்ஃப் 100 குளிகைக்கு | -- | 86.56 |
| (39) | முந்தி செல்ஃப் 100 குளிகைக்கு (½ குளிகை வரிசை) | -- | 129.68 |
| (40) | சரிகை டிஷ்யூ பட்டையுள்ள முந்தி புடவை ஒன்றுக்கு | -- | 32.28 |
| (41) | சரிகையுள்ள முந்தி (அல்லது) பட்டு புட்டா 100 குளிகைக்கு | -- | 86.56 |
| (42) | 8 கோர் அச்சு பனாரஸ் முந்தி 100 குளிகைக்கு | -- | 54.01 |
| (43) | வண்ண முந்தி - 3 புடவைக்கு (வண்ணம் ஒன்றுக்கு) | -- | 21.71 |
| (44) | காலை மாலை இருவேறு வண்ண வகைகளுக்கு தனியாக | -- | 674.53 |
| (45) | டிஷ்யூ முந்தி நெய்ய - 100 குளிகைக்கு | -- | 27.82 |
| (46) | ஒரு பக்க சரிகை டிஷ்யூ வகை | -- | 278.84 |
| (47) | இரு பக்க சரிகை டிஷ்யூ வகை | -- | 371.79 |
| (48) | இரு பக்க சாதாரண டிஷ்யூ | -- | 418.25 |
| II. ஆரணி வகைகள் ஊதிய விவரம் (பொது) | |||
| (1) | ஒரு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டர் | 0.85 | 2560.18 |
| (2) | இரு பக்க கோர்வை புடவைகள் - 16.5 மீட்டர் | 0.75 | 2949.77 |
| (3) | சாதாரண பட்டுப் புடவைகள் 16.5 மீட்டர் | 2.60 | 1057.46 |
| (4) | டோபி பட்டுப் புடவை 16.5 மீட்டர் | 2.00 | 1140.94 |
| சிறப்பு அல்லது மிகையான வேலைப்பாட்டுக்கு ஊதியங்கள் A.A. சாதாரண சிறப்பு அல்லது மிகையான வேலைப்பாட்டுக்கு ஊதியங்கள் சாதாரண வகைகள் : | |||
| (1) | ஒரு பக்க கூடுதல் 20 குளிகை - 4 தாவணி அளவுக்கு நெய்யப்படும் ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 2.81 |
| (2) | இரு பக்க 20 குளிகை - 4 தாவணி அளவு | -- | 3.36 |
| (3) | குறுக்கு பாவு கருவியை மாற்றி நெய்தல் தாவணி ஒன்றுக்கு | -- | 21.16 |
| (4) | ஒவ்வொரு கூடுதல் குறுக்கு பாவுக்கு | -- | 6.95 |
| (5) | டோபி கட்டம் ஒற்றை பிக்குடன் கட்டம் நெய்தல் | -- | 21.16 |
| (6) | ஒவ்வொரு கூடுதல் குறுக்குப் பாவுக்கும் | -- | 6.95 |
| (7) | டோபி கட்டம் டோபி கட்டம் | ||
| (a) 8x4 கட்டம் யூனிட் ஒன்றுக்கு (அதாவது தாவணி ஒன்றுக்கு) | -- | 41.70 | |
| (b) 8x4 கட்டம் யூனிட் ஒன்றுக்கு (இரு வண்ண தாவணி ஒன்றுக்கு) | -- | 52.02 | |
| (c) 5x4 கட்டம் யூனிட் ஒன்றுக்கு | -- | 52.02 | |
| (d) ஒவ்வொரு கூடுதல் குறுக்குப் பாவுக்கும் (அதாவது 5க்கு அதிகமான) | -- | 6.95 | |
| (8) | டோபி வண்ணக் கட்டம் தாவணி ஒன்றுக்கு | -- | 47.88 |
| (9) | ஒவ்வொரு 20 வட்டு பட்டு புட்டா (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 1.39 |
| (10) | ஒவ்வொரு வட்டு பட்டு புட்டாவுக்கும் | -- | 1.12 |
| (11) | ஒவ்வொரு 20 வட்டு சரிகை புட்டா (45.7 செ.மீ) (1 முழம்) | -- | 8.65 |
| (12) | ஒவ்வொரு 100 வட்டுக்கும் முத்து சீர் | -- | 41.83 |
| (13) | தாவணி ஒன்றுக்கு ரேக்கு கட்டம் | -- | 139.41 |
| B.B. கோர்வை ஒரு பக்கம் : கோர்வை ஒரு பக்கம் : | |||
| (1) | 3 யூனிட்டுகளுக்கு 30 குளிகை வரை (அதாவது 3 தாவணி) | -- | 73.73 |
| (2) | தாவணி ஒன்றுக்கு 30 குளிகை வரை | -- | 24.75 |
| (3) | 3 தாவணிக்கு ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 2.81 |
| (4) | தாவணி ஒன்றுக்கு 7" முதல் 20" வரையிலான பார்டர் ஊதியம் | -- | 36.74 |
| (5) | 10 அங்குலத்திற்கு அதிகமான ஒவ்வொரு அங்குலத்திற்கும் (2.54 செ.மீ) | -- | 18.35 |
| (6) | தாழம்பூ ரேக்கு 3"-5" வரை | -- | 61.49 |
| (7) | கூடுதலான ஒவ்வொரு அங்குலத்திற்கும் (2.54 செ.மீ) | -- | 12.53 |
| (8) | பிள்ளையார் ரேக்கு 1" முதல் 3"வரை | -- | 36.74 |
| (9) | ஒவ்வொரு 100 வட்டுக்கும் பட்டு புட்டா ½ குளிகை வரிசை | -- | 27.56 |
| (10) | ஒவ்வொரு 100 வட்டுக்கும் சரிகை புட்டா | -- | 30.63 |
| (11) | ஒவ்வொரு 100 வட்டுக்கும் பட்டு புட்டா 1 குளிகை வரிசை | -- | 55.66 |
| (12) | ஒவ்வொரு 100 வட்டுக்கும் சரிகை புட்டா | -- | 55.93 |
| (13) | ஒரே மாதிரியான புடவை முந்தி 100 வட்டுக்கு - ½ குளிகை வரிசை | 10.00 | 49.27 |
| (14) | ஒரே மாதிரியான புடவை முந்தி 100 வட்டுக்கு - 1 குளிகை வரிசை | -- | 55.66 |
| (15) | ஒரு பக்க பெட்னி | -- | 184.50 |
| (16) | புடவைக்கு பெட்னி ஊதியங்கள் | -- | 322.53 |
| (17) | ஜரி பாவு ஊதியங்கள் | -- | 32.31 |
| C.C. இரு பக்க கோர்வை : இரு பக்க கோர்வை : | |||
| (1) | தாவணி ஒன்றுக்கு 300 குளிகை வரை குறைந்தளவு ஊதியங்கள் | -- | 38.96 |
| (2) | 3 தாவணிக்கு ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 3.07 |
| (3) | தாவணி ஒன்றுக்கு 7" - 10" வரையிலான பார்டர் | -- | 123.00 |
| (4) | கூடுதலாக நெய்யப்படும் ஒவ்வொரு அங்குலத்திற்கும் (தாவணி ஒன்றுக்கு 2.54 செ.மீட்டருக்கு) | -- | 23.93 |
| (5) | பிள்ளையார் ரேக்கு 1 முதல் 3 வரை | -- | 61.49 |
| (6) | பிள்ளையார் ரேக்கு முள் ரேக்கு 1 முதல் 3 வரை | -- | 55.09 |
| (7) | தாழம்பூ ரேக்கு 3 முதல் 5 வரை | -- | 91.85 |
| (8) | ஒவ்வொரு கூடுதல் அங்குலத்திற்கு நெய்யப்படும் தாழம்பூ ரேக்குவுக்கு (2.54 செ.மீ) | -- | 18.35 |
| (9) | தாவணி ஒன்றுக்கு ஒவ்வொரு பெட்னிக்கும் | -- | 123.00 |
| (10) | 100 வட்டுக்கு முத்து சீர் நெய்ய | -- | 36.74 |
| (11) | 100 வட்டுக்கு முத்து சீர் செல்ஃப் நெய்ய | -- | 73.46 |
| (12) | பிள்ளையார் ரேக்குவில் முள் ரேக்கு | -- | 73.46 |
| (13) | மிகையாக குறுக்கு பாவு ஒன்று பயன்படுத்தப்பட்டால் | -- | 24.75 |
| (14) | ஒவ்வொரு கூடுதல் குறுக்கு பாவுக்கு | -- | 18.35 |
| (15) | நிழல் ரேக்கு - தாவணி ஒன்றுக்கு | -- | 166.15 |
| (16) | மல்லி அரும்பு புட்டா - தாவணி ஒன்றுக்கு | -- | 101.55 |
| (17) | ஒரே மாதிரியான புடவை முந்தி - 100 வட்டு நெய்ய | -- | 49.27 |
| (18) | பனாரஸ் பார்டர் - அரை குளிகை வரிசை 100 வட்டு நெய்ய | -- | 55.09 |
| (19) | 100 வட்டுக்கு உடற்பகுதி பட்டு புட்டா ½ குளிகை வரிசை | -- | 27.56 |
| (20) | 100 வட்டுக்கு உடற்பகுதி சரிகை புட்டா ½ குளிகை வரிசை | -- | 30.63 |
| (21) | பட்டு புட்டா - 100 வட்டுக்கு | -- | 55.39 |
| (22) | சரிகை புட்டா 100 வட்டுக்கு 1 குளிகை வரிசை | -- | 61.49 |
| (23) | தாவணி ஒன்றுக்கு சுங்குடி புட்டா | -- | 253.26 |
| (24) | ஜரி-பாவு ஊதியங்கள் | -- | 465.86 |
| (25) | கட்டு சாயம் டானா கூலி (ஒரு பக்கம் இரு பக்கம்) | -- | 106.86 |
| III. III. கும்பகோணம் வகைகள் : ஊதிய விவரம் (பொது) கும்பகோணம் வகைகள் : ஊதிய விவரம் (பொது) | |||
| (1) | ஒரு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டர் | 0.70 | 3088.92 |
| (2) | இரு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டர் | 0.60 | 3868.10 |
| (3) | சாதாரண பட்டுப் புடவை 16.5 மீட்டர் | 0.85 | 3145.14 |
| (4) | பாவாடை 103 செ.மீ (2¼ முழம்) 91.5 செ.மீ (2 முழம்) 16.5 மீட்டருக்கு | 0.85 | 2638.10 |
| (5) | பாவாடை 80 செ.மீ (1¾ முழம்) 68.5 செ.மீ. (1.5 முழம்) 16.5 மீட்டருக்கு | 0.85 | 2560.18 |
| சிறப்பு அல்லது மிகையான வேலைப்பாட்டுக்கு ஊதியங்கள் : ஒரு பக்கம் | |||
| (1) | 5.5 மீட்டர் அளவுள்ள புடவைகளுக்கு 100 குளிகை வரை | -- | 78.57 |
| (2) | ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 0.82 |
| இரு பக்கம் : | |||
| (3) | 5.5 மீட்டர் அளவுள்ள புடவைகளுக்கு 100 குளிகை வரை | -- | 112.69 |
| (4) | ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 1.12 |
| குறிப்பு : இரு பக்க கரைக்கு சீட பக்கத்தில் மொத்த குளிகையின் பாதி அளவு என்ற கணக்கில் ஒரு பக்க பேட்டுக்கான ஊதியத்துடன் சேர்க்கப்பட வேண்டும். | |||
| (5) | உடற்பகுதி பேட்டு நெய்வதற்கு : | ||
| ஒவ்வொரு குளிகைக்கும் 500 குளிகை வரை | -- | 0.82 | |
| ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் | -- | 0.55 | |
| ஒவ்வொரு குளிகைக்கும் பட்டு நெய்வதற்கு | -- | 0.55 | |
| (6) | புடவையின் நடுப்பகுதி (உடம்பு): (துண்டு புட்டா) புட்டா மொத்த எண்ணிக்கையும் (தில்லானா புட்டா) மொத்த குளிகை சுங்குடி எண்ணிக்கையும் (குளிகை ஒன்றுக்கு 2.50 காசு ஊதியங்கள்) கணக்கிடுவதன் மூலம் துண்டு புட்டாவுக்கான ஊதியங்களைக் கணக்கிட வேண்டும். | ||
| (7) | பாவு கயிறு : | ||
| 20 வரை (குளிகை ஒன்றுக்கு) | -- | 0.17 | |
| 21 முதல் 50 வரை (குளிகை ஒன்றுக்கு) | -- | 0.65 | |
| 51 முதல் 70 வரை (குளிகை ஒன்றுக்கு) | -- | 0.94 | |
| 71 முதல் 100 வரை (குளிகை ஒன்றுக்கு) | -- | 1.04 | |
| 100க்கு மேல் | -- | 0.17 | |
| (8) | கரை மேல் புட்டா : | ||
| 50 வரை | -- | 0.94 | |
| 51 முதல் 75 வரை | -- | 0.10 | |
| 75க்கு மேல் | -- | 0.17 | |
| (9) | முழுவதும் ஒரே மாதிரியான முந்தி : | ||
| (1) குறைந்தளவு ஊதிய வீதங்கள் 300 குளிகை வரை | -- | 147.51 | |
| (2) ஒவ்வொரு கூடுதலான குளிகைக்கும் | -- | 0.35 | |
| (3) 2-3-1 கிரப்பர் (Grapper) குளிகை மூலம் முழுவதும் ஒரே மாதிரியான டையமண்ட் டிசைன் நெய்வதற்கு | -- | 0.38 | |
| (4) இடைவெளியின்றி மேலே நெய்வதற்கு குளிகை ஒன்றுக்கு | -- | 0.43 | |
| (10) | ஒரு பக்க தாழம்பூ ரகம் : | ||
| (1) மொக்கு நெய்வதற்கு (மொக்கு புதிய முகூர்த்த நாள்) கூலி ஒவ்வொரு 45.7 செ.மீ (1முழும்) (அதாவது ½ கெஜம்) | -- | 11.14 | |
| (2) 45.7 செ.மீக்கு தாழம்பூ டிசைன் நெய்ய (1முழம்) (1½ கெஜம்) | -- | 13.93 | |
| (3) 15.2 செ.மீட்டருக்கு மேலாகவும் 30.5 செ.மீ. வரையுள்ள அளவில் தாழம்பூ டிசைன் நெய்ய (அதாவது 6 அங்குலத்திற்கு மேற்பட்டு 12 அங்குலம் வரை) | -- | 2.56 | |
| (4) ஒரு தாவணி நெய்வதற்கு தனி ஊதியங்கள் | -- | 56.21 | |
| (5) 30.5 செ.மீட்டருக்கும் மேலாக (12") தாழம்பூ டிசைன் நெய்ய தாவணி ஒன்றுக்கு | -- | 13.86 | |
| (6) 45.7 செ.மீட்டருக்கு அரும்பு மொக்கு நெய்வதற்கு (1 முழம்) (½ கெஜம்) | -- | 28.09 | |
| (7) 25.4 செ.மீட்டருக்கு (10") வசந்த மாளிகை தாழம்பூ டிசைன் நெய்வதற்கு (45.7 செ.மீட்டர் அளவில்) (1 முழம்) | -- | 24.55 | |
| (8) 45.7 செ.மீ அளவில் ஒரு பக்க ஏர் இந்தியா டிசைன் நெய்வதற்கு (1 முழம்) ( ½ கெஜம்) | -- | 244.89 | |
| (9) 5 மீட்டர் அளவில் நட்சத்திரம் டயமண்ட் டிசைன் நெய்வதற்கு நட்சத்திர டிசைன் நெய்வதற்கு குறுக்காக நட்சத்திர டிசைன் (கிராஸ் ஸ்டார்) நெய்வதற்கு உயரளவாக 5.5 மீட்டரில் தாழம்பூ நட்சத்திரம் உட்பட தாழம்பூ ரகம் | -- | 293.87 | |
| (11) | இருபக்க தாழம்பூ டிசைன் ரகம் : | ||
| (1) ஒவ்வொன்றும் 45.7 செ.மீ அளவிற்கு மொக்கு டிசைன் நெய்வதற்கு (1 முழம் அதாவது ½ கெஜம்) கெஜம்) | -- | 22.55 | |
| (2) 45.7 செ.மீ அளவில் தாழம்பூ டிசைன் நெய்வதற்கு (1 முழம் அதாவது ½ கெஜம்) | -- | 28.09 | |
| (3) 45.7 செ.மீ. அளவில் அரும்பு மொக்கு நெய்வதற்கு (1 முழம் அதாவது ½ கெஜம்) | -- | 33.95 | |
| (4) 45.7 செ.மீ. அளவில் ஏர் இந்தியா டிசைன் இரு பக்கமும் நெய்வதற்கு (1 முழம் அதாவது ½ கெஜம்) | -- | 49.00 | |
| (12) | புடவையின் நடுப்பகுதியில் (உடம்பு) புட்டா டிசைன் ரகங்கள் | ||
| (1) எஸ். புட்டா டிசைனுடன் கூடிய ரகங்களை நெய்வதற்கு (100/100) ½ கெஜம் ஒன்றுக்கான ஊதிங்கள் (1 முழம்) | -- | 39.23 | |
| (2) 45.7 செ.மீ என்ற அளவில் பட்டு மற்றும் டிஸ்யூ துணியில் புதிய முகூர்த்த நாள் மீனா டிசைன் நெய்வதற்கு (அதாவது 1 முழத்திற்கு) (½ கெஜம்) | -- | 42.87 | |
| (3) முகூர்த்தநாள் டிசைனில் 45.7 செ.மீ. அளவிற்கு பட்டு மற்றும் டிஸ்யூ துணியில் மீனா டிசைனுடன் கூடிய புட்டா நெய்வதற்கு (1 முழம்) (½ கெஜம்) | -- | 36.47 | |
| (4) முகூர்த்தநாள் டிசைனில் 45.7 செ.மீ அளவிற்கு பட்டு மற்றும் டிஸ்யூ துணியில் 1-1 அளவில் மீனா டிசைன் நெய்வதற்கு (1 முழம் ½ கெஜம்) | -- | 33.67 | |
| (5) 45.7 செ.மீ. அளவில் பட்டு மற்றும் டிஸ்யூ துணியில் மீனா டிசைன் இன்றி முகூர்த்த நாள் டிசைன் நெய்வதற்கு | -- | 30.90 | |
| (6) 45.7 செ.மீ. அளவிற்கு பட்டு மற்றும் டிஸ்யூ துணியில் மீனா டிசைன் இன்றி கிராஸ் கொடி நெய்ய (½ கெஜம்) | -- | 89.88 | |
| (7) மீனா டிசைனுடன் கிராஸ் கொடி நெய்வதற்கு | -- | 95.72 | |
| (8) 100 குளிகைக்கு 100 மீட்டர் சாதா துணியில் உடல் ஜங்லா நெய்வதற்கு | -- | 35.60 | |
| (9) 100 குளிகைக்கு 100 மீட்டர் கோர்வையில் உடல் ஜங்லா நெய்வதற்கு | -- | 36.21 | |
| (10) 5.5 மீட்டர் அளவிற்கு உடல் வைர ஊசி நெய்வதற்கான ஊதியங்கள் (6 கெஜம்) (ஐந்தாவது நாடாவிற்கு ஒரு நாடா தூக்கி நெய்யும் டிசைன்) | -- | 84.60 | |
| (11) ஒவ்வொரு குளிகைக்கும் பனாரஸ் பட்டுடன் உடல் பகுதி நெற்வதற்கு | -- | 0.10 | |
| (12) ஒவ்வொரு குளிகைக்கும் கோர்வை பனாரஸ்சுடன் உடல் பகுதி நெய்வதற்கு | -- | 0.17 | |
| (13) முந்தியில் பனாரஸ் பட்டை நெய்வதற்கு (ஒவ்வொரு குளிகைக்கும்) | -- | 0.17 | |
| (14) 5.5 மீட்டர் அளவில் புதிய பூமி மொரிப்பூவிற்கு (6 கெஜங்கள் ஒரு கோல் அமுக்கி ஒரு நாடா மறிக்க கூலி) | -- | 67.62 | |
| (15) 45.7 செ.மீ அளவுள்ள பட்டு மற்றும் டிஸ்யு துணியில் கொஞ்சும் சலங்கை டிசைன் நெய்வதற்கு (1 முழம்) (½ கெஜம்) | -- | 45.07 | |
| (16) 300 குளிகைக்கு உடல் சரிகை மரிப்பூ நெற்வதற்கான ஊதியங்கள் | -- | 33.67 | |
| (17) 300 குளிகைக்கும் மேலாக உடல் சரிகை மரிப்பூ நெய்வதற்கான ஊதியங்கள் | -- | 45.36 | |
| (18) 45.7 செ.மீ. அளவிற்கு சாட்டின் புட்டா நெய்வதற்கு (1 முழம்) இழைக்கு டைமண்ட் கட்டி இழை வரிசையில் நெய்வதற்கு | -- | 67.62 | |
| (19) 5.5 மீட்டர் அளவிற்கு தனியாக சரிகை ஜக்கார்டு ஜங்லா நெய்வதற்கு (6 கெஜங்கள்) | -- | 1947.97 | |
| (20) 5.5 மீட்டர் என்ற அளவிற்கு ஜக்கார்டு பேட்டு ஜங்லா நெய்வதற்கு | -- | 2254.07 | |
| (21) 45.7 செ.மீ. அளவிற்கு (½ கெஜம்) யாதோன்-கி-பாரத் புட்டா ரகம் நெய்வதற்கு | -- | 22.55 | |
| (22) 100 குளிகைக்குள் பேட்டுடன் கூடிய வெவ்வேறு ரகங்களையும், 91.5 செ.மீ. அளவிற்கு சாதாரண சீர் முந்தியுடன் (1 கெஜம்) புடவையின் நடுப்பகுதியையும் நெற்வதற்கு | -- | 5.58 | |
| (23) 5.5 மீட்டர் அளவிற்கு (6 கெஜங்கள்) ஒரு பக்க கரை கொண்ட தாவணி நெய்வதற்கான ஊதியங்கள் | -- | 22.55 | |
| (24) 5.5 மீட்டர் என்ற அளவில் (6 கெஜங்கள்) இரண்டு பக்கங்களிலும் கரை கொண்ட தாவணி நெய்வதற்கான ஊதியங்கள் | -- | 56.21 | |
| (25) இடைவெளி விடாது டயமண்ட் டிசைனுடன் ரகங்களை நெய்வதற்கு 1 முதல் 20 குளிகை வரையில் ஒவ்வொரு கூடுதல் குளிகைக்கும் 45.7 செ.மீ. | -- | 16.68 | |
| (26) பேட்டு டிசைன் இல்லாமல் கரையில் புட்டா டிசைன் நெய்வதற்கு 100 முடிச்சுகளுடன் (கயிறு) ஒவ்வொரு குளிகைக்கான கூலி. 100 முடிச்சுகளுக்கும் மேலாக புட்டா டிசைன் நெய்வதற்கு (குளிகை ஒன்றுக்கு பாவு கயிறுக்கான ஊதியங்கள்) | -- | 0.10 | |
| (27)5.5 மீட்டர் அளவுள்ள (6 கெஜம்) இருபக்க கோர்வை-முப்பாக்கம் நெய்வதற்கான தனி ஊதியங்கள். | -- | 0.17 | |
| (28)புடவையின் கரைப்பகுதியில் உடல்பகுதி புட்டா டிசைன் நெய்யும்போது அதே புட்டா குளிகையைப் புடவையின் உடல் பகுதி புட்டாவுடன் சேர்த்து அதன் பின்னர் கணக்கிடுவதற்கு | -- | 112.69 | |
| (29) 8.2 மீட்டரில் டிஸ்யூவில் டிசைன் நெய்வதற்கு (9 கெஜங்கள்) | 78.74 | ||
| (30) ஜங்லாவில் மீனா டிசைன் நெய்வதற்கு (இந்த டிசைனில் மீனா குளிகை, ஒன்றுக்கான ஊதியங்கள் அதாவது ஜரிகைக் குளிகையுடன் மீனாக் குளிகையைச் சேர்க்கப்படாமல்.) | 0.38 | ||
| (13) | மேற்சொன்ன கரையுடைய புட்டா டிசைனுடன் கூடிய ரகங்கள் | ||
| 1) புடவையின் உடல்பகுதியில் ஒரு வரிசைக்கு 20 புட்டாக்களுடன் இரு பக்கங்களில் கரைகளுள்ள ரகங்களுக்கு குளிகை ஒன்றுக்கு 2.50 காசு என்ற வீதத்தில், இத்தகைய டிசைன் புடவை ரகங்களுக்கு ஊதியங்கள் கணக்கிடப்பட வேண்டும். (1முழம்) (10x10) வத்தி வைத்து சுங்கு கட்டி 100 வரிசை நெய்யும் ரகங்களுக்கு (45.7 செ.மீ.) | 45.36 | ||
| 2) 45.7 செ.மீ. அளவிற்கு புடவையின் உடல் பகுதியில், புடவையின் கரையின் மேல் நவரத்தினம் புட்டா நெய்வதற்கும் பெரிய புட்டா மற்றும் சிறிய புட்டா நெய்வதற்கும் (1 முழம்) (½ கெஜம்) | 56.21 | ||
| 3) 45.7 செ.மீ. அளவிற்குப் புடவையின் உடல் பகுதியில் மல்லிகை மொக்கு ஜரிகை புட்டா நெய்வதற்கு (½ கெஜம்) | 11.14 | ||
| 4) 45.7 செ.மீ. அளவிற்குப் புடவையின் உடல் பகுதியில் மல்லிகை மொக்கு பட்டுப் புட்டா நெய்வதற்கு (½ கெஜம்) | 6.18 | ||
| 5) சங்கு(Jungu) இல்லாமல் பனாரஸ் வகை வசந்த மாளிகை புடவையில் 45.7செ.மீ அளவிற்கு தாழம்பூ பார்டரில் தொடர்ச்சியாக அரும்பு சரிகை நெய்ய (½ கெஜம்) | 90.15 | ||
| 6) 45.7 செ.மீ அளவிற்கு சங்கு இல்லாமல் பனாரஸ் வரிசையில் புட்டா டிசைன் நெய்வதற்கு (1 முழம்) (½ கெஜம்) | 78.74 | ||
| 7) முந்தியில் 1 முதல் 20 குளிகை வரை புட்டாக்களை நெய்வதற்கு. | 71.26 | ||
| 8) முந்தியில் 20 குளிகைக்கு மேலாக, புட்டாக்களை நெய்வதற்கு. | 112.84 | ||
| (14) | பல்வகை ரகங்கள் | ||
| (1) முந்தியில் சால்ராவில் மீனா டிசைன் வரைவதற்கு | 11.14 | ||
| (2) பொறை இழப்பு தாவணி ஒன்றுக்கு | 22.55 | ||
| (3) முத்து சீர் நெய்வதற்கு தாவணி ஒன்றுக்கு | 11.14 | ||
| (4) ஆராதானா கட்டம் பாவு பிணைப்பிற்குத் தாவணி ஒன்றுக்கு, | 22.55 | ||
| (5) அப்சார கட்டம் பாவு பிணைப்பிற்குத் தாவணி ஒன்றுக்கு | 26.72 | ||
| (6) ஒரு ரகத்தில் புடவையின் உடல் பகுதியில் உள்ள வண்ணங்களில் வேறுபாடு இருக்குமாயின், அத்தகைய ஒவ்வொரு தனி வண்ணத்திற்கும் யூனிட் ஒன்றுக்கு ஊதியங்கள் (அதாவது தாவணி ஒன்றுக்கு) | 17.80 | ||
| (7) 5.5 மீட்டர் அளவிற்கு ஒரு பக்கத்தில் 2 பேட்டு வாங்கி நெய்யும் ரகங்களுக்கு (6 கெஜங்கள்) தனி ஊதியங்கள் . | 56.21 | ||
| (8) இரண்டு பக்கங்களில் 2 பேட்டு வாங்கி நெய்யும் ரகங்களுக்கு 5.5 மீட்டர் அளவிற்கு (6 கெஜங்கள்) தனி ஊதியங்கள். | 112.14 | ||
| (9) முந்திபுட்டா போடும் ரகங்களுக்கு முந்தி முத்து நேரியில் பட்டைக்குக் குளிகைக்கு 8.50 காசு வீதம் முந்தியுடன் சேர்த்து சீர் முந்தி கூலியும் போட வேண்டும். | |||
| (15) | ஏனைய ரகங்கள் : | ||
| (1) ஜரிகை இழைத்து ஓடவும் ஜரிகை இழைத்து இன்-டை போடவும் மார்க்கு ஒன்றுக்கு. | 56.48 | ||
| (2) பனாரஸ் மரிக்கை புடவையின் உடல் பகுதியில் (குளிகை ஒன்றுக்கு) ஒரு பக்க கோர்வை போட | 0.10 | ||
| (3) குளிகை ஒன்றுக்கு இரு பக்க கோர்வை போட | 0.17 | ||
| (4) யூனிட் ஒன்றுக்கு (சிறப்பு ஊதியங்கள்) சீர்முந்தி, புட்டா முந்தி, தாவணி. | 91.53 | ||
| (5) யூனிட் ஒன்றுக்கு செல்ஃப் முந்தி தாவணி போட (சிறப்பு ஊதியங்கள்) 5.5மீ | 140.80 | ||
| தாவணிக்கான சிறப்பு ஊதியங்கள்-(5.5மீட்டருக்கு) தாவணிக்கு ஆர்டர் ஊதிய வீத விவரங்கள் (ஆர்டர் கூலிகள்) | |||
| (1) தாவணி ஒன்றுக்கு, சீர்முந்தி வகைகளுக்கான (100 மீ) ஆர்டர் தறிக்கு மட்டும் | 91.85 | ||
| (2) தாவணி ஒன்றுக்கு புட்டா முந்தி வகைகள் | 91.85 | ||
| (3) தாவணி ஒன்றுக்கு (செல்ஃப்) முந்தி வகைகளுக்கு | 134.69 | ||
| IV. IV. தஞ்சாவூர் வகைகள் :- தஞ்சாவூர் வகைகள் :- | |||
| (1) பாவாடை, 206 செ.மீ. (2¼ கெஜம்) 229 செ.மீ. (4.5 முழம்) 16.5 மீட்டருக்கு | 0.75 | 3088.92 | |
| (2) பாவாடை 183 செ.மீ (2 கெஜம்) (4 முழம்) 16.5 மீட்டருக்கு | 0.75 | 3005.43 | |
| (3) ஒரு பக்க சாதா முந்தி (16.5 மீட்டருக்கு) | 0.70 | 3172.40 | |
| (4) ஒரு பக்க முழுகோர்வை (16.5 மீட்டருக்கு) | 0.65 | 3339.37 | |
| (5) சாதா முந்தி ஒன்றின் இரு பக்க முழுகோர்வை (16.5 மீட்டருக்கு) | 0.60 | 3701.14 | |
| V.V. சேலம் வகைகள்:- ஊதியங்கள் (பொது) சேலம் வகைகள்:- ஊதியங்கள் (பொது) | |||
| (1) | ஒரு பக்க கோர்வை புடவை (16.5 மீட்டருக்கு) | 0.75 | 2949.77 |
| (2) | இரு பக்க கோர்வை புடவை (16.5 மீட்டருக்கு) | 0.65 | 3581.20 |
| (3) | சாதா பட்டுப்புடவை (16.5 மீட்டருக்கு) | 2.00 | 1636.28 |
| வேட்டிகள் : | |||
| (4) | சாதா வேட்டி(சாதாரணம்) (ரூ 26.65 x 16.5மீ) | 1.75 | 2448.87 |
| (5) | அங்கவஸ்திரம் (ரூ.24 x 16.5மீ) | 2.00 | 2203.98 |
| (6) | கோர்வை இருபக்கம் (ரூ.71.65 x 16.5மீ) | 0.70 | 6581.34 |
| (7) | கோர்வை வஸ்திரம் இருபக்கம் (ரூ.71.65 x 16.5மீ) | 0.70 | 6581.34 |
| (8) | சட்டை துணி (ரூ. 24 x 16.5மீ) | 2.00 | 2203.98 |
| (9) | அஜந்தா பீஸ்( சாதாரணம் ) (ரூ.19.65 x 16. 5 மீ) | 2.40 | 1806.05 |
| தனி/கூடுதல் பணிக்கான ஊதியங்கள்: | |||
| (1) சாதா புடவைகள்: | |||
| 10 குளிகை | 8.22 | ||
| 20 குளிகை | 8.92 | ||
| 30 குளிகை | 9.47 | ||
| 40 குளிகை | 10.02 | ||
| 50 குளிகை | 11.02 | ||
| 60 குளிகை | 12.88 | ||
| 70 குளிகை | 15.03 | ||
| 80 குளிகை | 17.15 | ||
| 90 குளிகை | 19.92 | ||
| 100 குளிகை | 21.71 | ||
| 110 குளிகை | 23.90 | ||
| 120 குளிகை | 27.82 | ||
| 130 குளிகை | 29.73 | ||
| 140 குளிகை | 31.85 | ||
| 150 குளிகை | 34.60 | ||
| (2) கோர்வை புடவை: | |||
| 10 குளிகை | 0.94 | ||
| 20 குளிகை | 6.13 | ||
| 30 குளிகை | 6.75 | ||
| 40 குளிகை | 7.68 | ||
| 50 குளிகை | 8.57 | ||
| 60 குளிகை | 7.68 | ||
| 70 குளிகை | 13.48 | ||
| 80 குளிகை | 15.70 | ||
| 90 குளிகை | 16.52 | ||
| 100 குளிகை | 18.35 | ||
| 110 குளிகை | 21.16 | ||
| 120 குளிகை | 24.47 | ||
| 130 குளிகை | 27.27 | ||
| 140 குளிகை | 29.39 | ||
| 150 குளிகை | 31.55 | ||
| 200 குளிகை | 40.15 | ||
| (3) சாதா வேட்டிகள் : | |||
| 10 குளிகை | 6.75 | ||
| 15 குளிகை | 7.35 | ||
| 20 குளிகை | 8.30 | ||
| 25 குளிகை | 8.92 | ||
| 30 குளிகை | 9.77 | ||
| 35 குளிகை | 11.02 | ||
| 40 குளிகை | 13.21 | ||
| 45 குளிகை | 16.25 | ||
| 50 குளிகை | 18.35 | ||
| 55 குளிகை | 25.10 | ||
| 70 குளிகை | 29.99 | ||
| 80 குளிகை | 51.44 | ||
| 100 குளிகை | 71.64 | ||
| 120 குளிகை | 104.68 | ||
| 160 குளிகை | 195.91 | ||
| (4) கோவை வேட்டிகள் : | |||
| 30 குளிகை | 86.59 | ||
| 40 குளிகை | 91.53 | ||
| (5) சாதா வஸ்திரம் | |||
| 10 குளிகை | 8.92 | ||
| 15 குளிகை | 9.50 | ||
| 20 குளிகை | 10.40 | ||
| 25 குளிகை | 11.02 | ||
| 30 குளிகை | 11.62 | ||
| 35 குளிகை | 14.08 | ||
| 40 குளிகை | 15.31 | ||
| 45 குளிகை | 18.35 | ||
| 60 குளிகை | 29.11 | ||
| (6) வஸ்திர கோர்வை: | |||
| 30 குளிகை | 91.53 | ||
| (7) புட்டா கோட்ட புடவைகள் | |||
| 10x10x400 புட்டா கோட்ட புடவைகள் | 20.19 | ||
| 20x20x300 புட்டா கோட்ட புடவைகள் | 20.19 | ||
| 30x25x240 புட்டா கோட்ட புடவைகள் | 20.19 | ||
| 40x25x80 புட்டா கோட்ட புடவைகள் | 38.49 | ||
| 50x25x80 புட்டா கோட்ட புடவைகள் | 38.49 | ||
| (8) கோடுபோட்ட வகை (சாதா ) | |||
| ஒரு ஷட்டில் /புடவை | 20.19 | ||
| இரண்டு ஷட்டில்/புடவை | 40.41 | ||
| மூன்று ஷட்டில்/புடவை | 58.93 | ||
| நான்கு ஷட்டில்/புடவை | 80.81 | ||
| ஐந்து ஷட்டில்/புடவை | 101.02 | ||
| (9) கோடு கோர்வை வகை | |||
| ஒரு ஷட்டில் | 33.67 | ||
| இரண்டு ஷட்டில் | 67.33 | ||
| மூன்று ஷட்டில் | 101.02 | ||
| நான்கு ஷட்டில் | 134.69 | ||
| ஐந்து ஷட்டில்/ புடவை | 168.35 | ||
| (10) | கம்பை கோர்வை புடவை | 202.02 | |
| (11) | பேட்னி புடவை | 47.14 | |
| VI. திருச்செங்கோடு வகைகள் : ஊதிய விவரங்கள் (பொது) | |||
| (1) | ஒரு பக்க கோர்வை புடவை (16.5மீ) | 2949.77 | |
| (2) | இரு பக்க கோர்வை புடவை (16.5மீ) | 3172.40 | |
| (3) | சாதா பட்டுப்புடவை | 1753.17 | |
| (4) | ராசிபுரம் கோர்வை வகைகள் | 3868.10 | |
| தனி/கூடுதல் பணிக்கான ஊதியங்கள் (5.5 மீட்டர் புடவை) | |||
| (1) | வெவ்வேறு இரு வண்னங்களில் யூனிட் ஒன்றுக்கு | 118.27 | |
| (2) | வெவ்வேறு மூன்று வண்னங்களில் யூனிட் ஒன்றுக்கு | 138.88 | |
| (3) | சாதா ஷட்டில் 3/1 கோர்வை யூனிட் ஒன்றுக்கு | 147.78 | |
| (4) | சாதா ஷட்டில் 6/1 கோர்வை யூனிட் ஒன்றுக்கு | 79.02 | |
| (5) | முள்ளும் மலரும் இருபக்கம் | 39.51 | |
| (6) | முள்ளும் மலரும் ஒருபக்கம் | 35.87 | |
| (7) | சாதா வகை பட்டாபட்டி 3 ஷட்டில் | 59.02 | |
| (8) | சாதா வகை பட்டாபட்டி 4 ஷட்டில் | 67.62 | |
| (9) | சாதா வகை பட்டாபட்டி 5 ஷட்டில் | 79.02 | |
| (10) | சாதா வகை பட்டாபட்டி 6 ஷட்டில் | 88.76 | |
| (11) | சாதா வகை பட்டாபட்டி 7 ஷட்டில் | 98.53 | |
| (12) | சாதா வகை பட்டாபட்டி 8 ஷட்டில் | 108.55 | |
| (13) | சாதா வகை பட்டாபட்டி 9 ஷட்டில் | 118.27 | |
| (14) | சாதா வகை பட்டாபட்டி 10 ஷட்டில் | 128.29 | |
| (15) | கோர்வை கட்டம் புனைத்து கட்டம் போட்டது 3 ஷட்டில் கட்டம் | 157.76 | |
| (16) | கோர்வை எண்ணிக்கை O/S கோர்வை | 98.53 | |
| (17) | பெட்னி ஊதியங்கள் | 44.81 | |
| (18) | அணில் கோடு | 49.27 | |
| (19) | அன்புரோஜா | 69.00 | |
| (20) | 12 பட்டா பட்டி | 29.48 | |
| (21) | 1.27 செ.மீ ½ அங்குலம் பட்டாபட்டி | 34.49 | |
| (22) | செல்ஃப் ஊசி கட்டம் -கொடிமலர் வைர ஊசி | 47.88 | |
| (23) | முள்ளும் மலரும் (12 அங்குலம்) (30.5 செ.மீ) | 76.27 | |
| (24) | முள்ளும் மலரும் (12 அங்குலம்) (30.5 செ.மீ)-க்கு மேல் | 98.53 | |
| (25) | சிறப்பு (12 அங்குலம் )கரைக்கு மேல் கொட்டடி 30 செ.மீ க்கு மேல் | 98.53 | |
| (26) | பார்டருக்கு அடுத்து கட்டம் இருபக்கம் | 35.87 | |
| (27) | பார்டருக்கு அடுத்து கட்டம் ஒருபக்கம் | 25.77 | |
| (28) | சிறப்பு தாழம்பூ 38 செ.மீ (15") முதல் 51 செ.மீ (20") வரை | 118.27 | |
| (29) | சிறப்பு தாழம்பூ 53.3 செ.மீ (21") முதல் 63.5 செ.மீ (25") வரை | 167.52 | |
| (30) | பார்டரில் ஜரிகை தாழம்பூ | 9.75 | |
| (31) | பனாரஸ் பார்டரில் ஜரிகை கட்டம் குளிகை ஒன்றுக்கு | 1.39 | |
| (32) | சங்கர் சலீம் சைமன் O/S கோர்வை | 116.60 | |
| (33) | சங்கர் சலீம் சைமன் D/S கோர்வை | 156.68 | |
| (34) | இரு பக்கவும் 2 பட்டு பெட்டி 100 குளிகைக்கு மேல் | 147.78 | |
| (35) | வெவ்வேறு வண்ணங்களில் "சோலை முந்திப்பூ" | 29.48 | |
| (36) | மீனா குளிகை ஒன்றுக்கு | 2.51 | |
| (37) | ஒரு பனாரஸ் பூ குளிகை ஒன்றுக்கு | 5.85 | |
| (38) | சப்புரி ஊதியம் கரை உடற்பகுதி | 1.82 | |
| (39) | சப்புரி ஊதியம் உடற்பகுதி மட்டும் | 19.79 | |
| (40) | சப்புரி ஊதியம் கரை மட்டும் | 9.75 | |
| (41) | பாவாடை வகை பாவு பட்டு கிந்தம சிறப்பு ஊதியம் | 24.47 | |
| (42) | டயண்ட் ஒரு பக்கம் | 49.27 | |
| (43) | ஒரு பக்க புடவை 12 க்கு மேல் | 97.96 | |
| (44) | அட்டை ரகம் | 40.88 | |
| (45) | டயமண்ட் இரு பக்கம் | 65.13 | |
| (46) | சிறப்பு முந்தி-கோ ஆப்டெக்ஸ் | 32.57 | |
| சரிகை பேட்டு ஊதியங்கள் | |||
| (47) | 10 குளிகை வரை | 3.07 | |
| (48) | 11 லிருந்து 50 குளிகை வரை | 13.06 | |
| (49) | 51 லிருந்து 100 குளிகை வரை | 16.68 | |
| (50) | 101 லிருந்து 200 குளிகை வரை | 20.32 | |
| (51) | 201 லிருந்து 300 குளிகை வரை | 24.47 | |
| (52) | 301 லிருந்து 400 குளிகை வரை | 27.82 | |
| (53) | 401 லிருந்து 500 குளிகை வரை | 33.40 | |
| (54) | 501 லிருந்து 600 குளிகை வரை | 39.51 | |
| (55) | 601 லிருந்து 700 குளிகை வரை | 44.26 | |
| பட்டு பேட்டு ஊதியங்கள் | |||
| (56) | 10 குளிகை வரை | 4.19 | |
| (57) | 11 லிருந்து 50 குளிகை வரை | 21.39 | |
| (58) | 51 லிருந்து 100 குளிகை வரை | 30.33 | |
| (59) | 101 லிருந்து 200 குளிகை வரை | 34.49 | |
| (60) | 201 லிருந்து 300 குளிகை வரை | 37.94 | |
| புட்டா ஊதிடங்கள் | |||
| (61) | 1 வாட்டம் 10 கயிறு | 4.19 | |
| (62) | 10 வாட்டம் 20 கயிறு | 47.88 | |
| (63) | 15 வாட்டம் 20 கயிறு | 55.09 | |
| (64) | 20 வாட்டம் 15 கயிறு | 89.06 | |
| (65) | 30 வாட்டம் 20 கயிறு | 121.89 | |
| (66) | 40 வாட்டம் 30 கயிறு | 214.85 | |
| (67) | 50 வாட்டம் 40 கயிறு | 266.87 | |
| (68) | 60 வாட்டம் 50 கயிறு | 325.88 | |
| (69) | 70 வாட்டம் 60 கயிறு | 377.92 | |
| (70) | 80 வாட்டம் 70 கயிறு | 422.43 | |
| (71) | 90 வாட்டம் 80 கயிறு | 540.70 | |
| (72) | 100 வாட்டம் 90 கயிறு | 591.61 | |
| (73) | 110 வாட்டம் 100 கயிறு | 660.85 | |
| (74) | 120 வாட்டம் 110 கயிறு | 709.92 | |
| (75) | 130 வாட்டம் 120 கயிறு | 768.88 | |
| (76) | 140 வாட்டம் 130 கயிறு | 818.42 | |
| (77) | 150 வாட்டம் 140 கயிறு | 871.87 | |
| VII. ஈரோடு வகைகள்:& | |||
| (1) | தூய பட்டுப் புடவை ஒரு பக்க கரை 16.5 மீட்டருக்கு | 1.00 | 2226.24 |
| (2) | கோரா பட்டுப்புடவை 16.5 மீட்டருக்கு | 2.50 | 888.42 |
| VIII. திருச்சி வகைகள்:& | |||
| 1. | ஒரு பக்க கோர்வை புடவை 16.5 மீட்டருக்கு | 0.75 | 3005.43 |
| சிறப்பு/கூடுதல் பணிகளுக்கான ஊதியங்கள்: பேட்டு ஊதியங்கள் ஒரு பக்க கோர்வை புடவைகள் 5.5 மீட்டருக்கு | |||
| (1) | 100 குளிகைக்கு பேட்டு ஊதியங்கள் | 79.29 | |
| (2) | பொறை ஊதியங்கள் | 35.87 | |
| (3) | முத்துசீர் ஊதியங்கள் | 9.20 | |
| (4) | உடல் புட்டா ஊதியங்கள் | 178.94 | |
| (5) | சப்புரி ஊதியங்கள் | 59.84 | |
| (6) | முந்தி புட்டா ஊதியங்கள் | 75.43 | |
| (7) | தாழம்பூ வகைக்கான ஊதியங்கள் | 130.49 |
விளக்கங்கள்: (1). அகவிலைப்படி :-
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டில் சென்னை மாநகருக்கான நுகர்வோர் விலை புள்ளி சராசரி குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டு (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) வழங்கப்பட வேண்டும். 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் அகவிலைப்படியானது நாளொன்றுக்கு 30 காசுகள் (முப்பது காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) இந்த அகவிலைப்படியானது முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்படவேண்டும்.
(iii) முதல் கணக்கீடு முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது , ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது.
3. இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் தற்போது வழங்கப்படும் ஊதியங்கள் அதிகமாக இருக்குமிடங்களிலெல்லாம் அதே ஊதியங்கள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
4. பொதுவான பணி இனங்களைப் பொறுத்தவரையில், (3) - ஆம் நெடும்பத்தியின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட சராசரி உற்பத்திஅளவுகோல்களுக்கு மிகையாக தொழிலாளர்கள் எடுத்துகொண்ட கூடுதல் நாட்களுக்கான அகவிலைப்படியினை பெறுவதற்கு, அவர்கள் உரிமையுடையவர்களாக மாட்டார்கள். சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 48, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 17 ஜூலை 2019.] 1948 ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும் 5 ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்,மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமனம் செய்யப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப் பார்த்த பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், பூத்தையல், சரிகை போன்ற கைவேலைப்பாட்டுத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்கத்தக்க குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் நிர்ணயம் செய்கிறார்:-
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
19விவர அட்டவணை விவர அட்டவணை
பூத்தையல், சரிகை போன்ற கைவேலைப்பாட்டுத் தொழிலில் வேலைவாய்ப்பு பூத்தையல், சரிகை போன்ற கைவேலைப்பாட்டுத் தொழிலில் வேலைவாய்ப்பு
| தொடர் எண் ( 1 ) | பணியாளர்களின் வகைகள் ( 2 ) | குறைந்தளவு அடிப்படை ஊதியங்கள் ( நாளொன்றுக்கு) ( 3 ) ( ரூ . காசு) |
| (1) | தேர்ச்சி பெற்றவர்கள் : 1. வடிவமைப்பாளர் (Designer) 2. சட்டத்தில் துணி பொருத்துநர் (Frame Fitting and Setting Worker) 3. காகித உருவரை பதியவைத்தல் / சாயம் தோய்ப்பவர் (Paper Tracing / Dyeing Worker) 4. பூ வேலைப்பாடு, கல் பதித்தல் போன்ற பணி செய்யும் பணியாளர் (Aari Worker) 5. சரிகை வேலைப்பாடு பணியாளர் (Zardosi Worker) 6. பூ வேலைப்பாடு, கல் பதித்தல் போன்ற பணி செய்யும் மற்றும் சரிகை வேலைப்பாடு பணியாளர் (Aari and Zardosi Worker) | 328.00 |
| (2) | ஓரளவு தேர்ச்சி பெற்றவர்கள்: 1. மாதிரி உருவாக்குபவர் (Sample Maker) 2. வண்ணம் அமைக்கும் பணியாளர் (Colour Setting Worker) | 312.00 |
| (3) | தேர்ச்சி பெறாதவர்கள்: 1. காகித உருவரை பதியவைத்தல் மற்றும் சாயம் தோய்த்தல் உதவியாளர் (Paper Tracing and Dyeing Helper) 2. நேர்த்தியாக்கும் பணிகள் (Trimming Works) 3. ஓர வேலைப்பாடுகள் (தண்டி, டிக்கி, கர்டானா, போத்) (Outline Works) | 297.00 |
விளக்கங்கள்விளக்கங்கள்: (1). அகவிலைப்படி :-மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டில் சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூ.1.84 (ஒரு ரூபாய் எண்பத்துநான்கு காசு மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
2. பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் காட்டக்கூடாது.
3. மாதாத்திர ஊதிய வீதங்களை கணக்கிடுவதற்கு நாள் ஊதியத்தை 30ஆல் பெருக்க வேண்டும்.
4. தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியவீதங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.