Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 25 September 2019

Type
Ordinary
Gazette no.
39
Part
Part IV
Notifications
Tamil Nadu Acts Nos. 24, 26,33, 36, 39-40 and 45 of 2017
Section
Section 2-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-IV_Section-2-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

© தமிழ்நாடு அரசு 2019

[விலை : ரூ. 10.40 காசு[விலை : ரூ. 10.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 39]

சென்னை, புதன்கிழமை, செப்டம்பர் 25, 2019 புரட்டாசி 8, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2017-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 25-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 24/2017சட்ட எண் 24/2017

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்சட்டம்..

இந்தியக் குடியரசின் அறுபத்தெட்டாம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

பகுதி-I

முன்னுரையாக

குறுந்தலைப்பு 1. (1) இந்தச்சட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, 2017 மே 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

பகுதி-II

1965 ஆம் ஆண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம்

தமிழ்நாடு சட்டம்

11ஆம் 33/1965

பிரிவிற்கான திருத்தம்.

2. 1965 ஆம் ஆண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

''(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு-

( i ) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை; மற்றும்

39-IV-2-(T)—1

[ 1 ]2 (iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலுமான கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி-III

1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

தமிழ்நாடு சட்டம் 11ஆம்

30/1978 பிரிவிற்கான திருத்தம்.

3. 1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதற்கான வரம்புரைகள் உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்பட்டன, அவையாவன:-

"(2).(1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

( i ) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளராக இருக்கும் ஒருவரை;

3

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும் அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணி புரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளராக இருக்கும் ஒருவரை; மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்,- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்-

(i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசு மற்றும் ஆட்சிக் குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி- IV

1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

12 ஆம் தமிழ்நாடு சட்டம்

1/1982

பிரிவிற்கான திருத்தம்.

4. 1981 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

(i) அரசினால் நியமிக்கப்படுபவரும் அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணி புரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை, அல்லது சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை;

4

(ii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை; மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால் அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) அரசு, ஆட்சிப் பேரவை மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். அந்த குழு மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர், அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்."

பகுதி-V

1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

5. 1981 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 12 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, அதற்குரிய வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

தமிழ்நாடு சட்டம் "(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

12ஆம்

2/1982 பிரிவிற்கான திருத்தம்.

(i) அரசினால் நியமிக்கப்படுபவரும் அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்கு குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணி புரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளருமான ஒருவரை;

5

(ii)ஆட்சிப்பேரவையினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளருமான ஒருவரை; மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற ; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) அரசினால், ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். அந்தக்குழு மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.

ஐயங்களை நீக்குதல் 6. ஐயங்களை நீக்குவதற்காக, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) அவசரச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்பு, அந்தக்குழுவிற்கு ஆட்சிக்குழுவினால் அல்லது ஆட்சிப் பேரவையினால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர் மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறு, 1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 2/1982) 12 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தகுதிகளை உடையவராக இல்லாதிருப்பாரானால், அவர் அத்தகைய உறுப்பினராக இருப்பதினின்றும் நீங்கியதின் பேரில் மற்றும் அவருடைய இடத்தில் ஆட்சிக்குழு அல்லது, ஆட்சிப்பேரவை, நேர்வுக்கேற்ப, மேற்சொன்ன இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறு, 1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 2/1982) 12ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தகுதிகளையுடைய புதிய உறுப்பினரை நியமித்தல் வேண்டும்.

6

பகுதி-VI

1984 ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

தமிழ்நாடு சட்டம்

15/1984 7. 1984 ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகச் சட்டத்தின் திருத்தம் 12ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

12ஆம்

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

பிரிவிற்கான திருத்தம்.

(i) அரசினால் நியமிக்கப்படுபவரும், முதல்வராக குறைந்தது ஐந்தாண்டுகள் பணிபுரிந்துள்ளவருமான மகளிர் கல்லூரியில் பணிபுரிந்து வருபவரும் ஒருவரை;

(ii) கல்விக் குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த மகளிர் கல்வியாளராகவும் இருக்கும் ஒருவரை; மற்றும்

(iii) நிருவாக மன்றத்தினால் நியமிக்கப்படுபவர், சிறந்த மகளிர் கல்வியாளராக இருக்கிற ஒருவரைக் கொண்டது ஆகும்.

விளக்கம்.-இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த மகளிர் கல்வியாளர்" என்பது ,- (i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) அரசினால், கல்விக்குழு மற்றும் நிருவாக மன்றத்தினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும். மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

7

பகுதி-VII

1985ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

தமிழ்நாடு சட்டம்

13ஆம் 23/1985

பிரிவிற்கான திருத்தம்.

8. 1985 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச் சட்டத்தின் 13ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, அதற்குரிய வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு--

(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(iii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை; மற்றும்

(iv) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான இருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்:-

(i) உ ய ர் ந் த ள வு த கு தி , ே ந ர் ை ம , ஒ ழு க் க ம் , அ ை ம ப் பு மூ ல ம ா ன பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசினால், ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும். மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

8

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி-VIII

1990 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம் 11ஆம்

தமிழ்நாடு சட்டம்

31/1990.

பிரிவிற்கான திருத்தம்.

9. 1990 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவு, அதன் வரம்புரை உள்ளடங்கலாக அவற்றிற்கு பின் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு-

(i) அரசினால் நியமிக்கப்படுபவரும் அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை,

(ii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை ; மற்றும்

( i i i ) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும்.

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற ; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) அரசினால், ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறுமாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

9

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலுமான கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.'.

பகுதி-IX

1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

12ம் பிரிவிற்கான 45/1997.

திருத்தம்.

10. 1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் 12ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவுக்கு, அதன் வரம்புரை உள்ளடங்கலாக பின் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு -

(i) அரசினால் நியமிக்கப்படுபவரும் அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை; மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள ; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற ;அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) அரசினால், ஆட்சிப்பேரவை மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

10

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.'.

ஐயங்களை நீக்குதல்

11. ஐயங்களை நீக்குவதற்காக, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) அவசரச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு முன்பு, அந்தக்குழுவிற்கு ஆட்சிக்குழுவினால் அல்லது ஆட்சிப் பேரவையினால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறு, 1997ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 45/1997) 12 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தகுதிகளை உடையவராக இல்லாதிருப்பாரானால், அவர் அத்தகைய உறுப்பினராக இருப்பதினின்றும் நீங்கியதின்பேரில் மற்றும் அவருடைய இடத்தில் ஆட்சிக்குழு அல்லது ஆட்சிப்பேரவை, நேர்வுக்கேற்ப, மேற்சொன்ன இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறு, 1997ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 45/1997) 12ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தகுதிகளையுடைய புதிய உறுப்பினரை நியமித்தல் வேண்டும்.

பகுதி-X

2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

தமிழ்நாடு சட்டம் 10ஆம்

27/2002 பிரிவிற்கான திருத்தம்.

12. 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச்சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமாக ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை; மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

11

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசினால் மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும். மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி-XI

2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச்சட்டத்திற்கான திருத்தம்.

தமிழ்நாடு சட்டம்

12ம் பிரிவிற்கான 32/2002

திருத்தம்.

13. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச்சட்டத்தின் 12 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு-

( i ) வேந்தரால் நியமிக்கப்படுபவரும், உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமாக ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை, மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும்.

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள ; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

12

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசினால் மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும். (2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி-XII

2008ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

10ஆம்

தமிழ்நாடு சட்டம்

33/2008 பிரிவிற்கான திருத்தம்.

14. 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகச்சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு-

(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதி மன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமாக ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை, மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற ; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

13

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசினால் மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.".

பகுதி-XIII

2013ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்திற்கான திருத்தம்

தமிழ்நாடு சட்டம்

9ஆம் 20/2013

பிரிவிற்கான திருத்தம்.

15. 2013ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச்சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (2)ஆம் உட்பிரிவுக்குப்பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு,-

(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும் உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் எதனின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமாக ஒருவரை; அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை, மற்றும்

(iii) ஆட்சிக்குழுவினால் நியமிக்கப்படுபவரும், சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரைக் கொண்டது ஆகும் .

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது,-

(i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக அனுபவம் பெற்றுள்ள புகழ் பெற்ற கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால் அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

14

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்,- (i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருப்பார்;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், வேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்டிருப்பார்.

(2-B) வேந்தரால், அரசினால் மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தரின் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்த பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்குத் தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன கால அளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலும் கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2) ஆம் உட்பிரிவிற்கிணங்க, மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.'.

நீக்கறவு மற்றும்

தமிழ்நாடு 16. (1) 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள்(திருத்தம்) காப்பு

அவசரச்சட்டம் இதன்மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது.

அவசரச் சட்டம் 2/2017

தமிழ்நாடு சட்டம்

33/1965.

தமிழ்நாடு சட்டம்

30/1978.

தமிழ்நாடு சட்டம்

1/1982.

தமிழ்நாடு சட்டம்

2/1982.

தமிழ்நாடு சட்டம்

15/1984.

தமிழ்நாடு சட்டம்

23/1985.

தமிழ்நாடு சட்டம்

31/1990.

தமிழ்நாடு சட்டம் (2) அத்தகைய நீக்கறவு இருந்தபோதிலும், மேற்சொன்ன அவசரச்சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட மாறான 1965ஆம் ஆண்டு மதுரை-காமராசர் பல்கலைக்கழகச்சட்டம், 1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகச்சட்டம், 1981ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகச்சட்டம், 1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகச்சட்டம், 1984ஆம் ஆண்டு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகச்சட்டம், 1985ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகச்சட்டம், 1990 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகச்சட்டம், 1997 ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகச்சட்டம், 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகச்சட்டம், 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகச்சட்டம், 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகச்சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகச்சட்டம் ஆகியவற்றின்படி செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான அந்தந்த சட்டங்களின்படி செய்யப்பட்டவையாக அல்லது எடுக்கப்பட்டவையாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

45/1997.

தமிழ்நாடு சட்டம்

27/2002

தமிழ்நாடு சட்டம்

32/2002

(ஆளுநரின் ஆணைப்படி)

தமிழ்நாடு சட்டம்

33/2008

தமிழ்நாடு சட்டம்

20/2013

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

15

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஜூலைத் திங்கள் 26-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 26/2017சட்ட எண் 26/2017

1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு

சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்) சட்டம் குறுந்தலைப்பு என்று வழங்கப் பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கையினால் குறித்திடலாகும் அத்தகைய தேதியில் உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

3 ஆம் தமிழ்நாடு சட்டம்

X / 1937.

பிரிவிற்கான திருத்தம்.

2. (இதன் பின்னர் முதன்மைச் சட்டம் என குறிப்பிடும்) 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (19) ஆம் கூறில், "அல்லது புளித்தல் இல்லாத" என்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.

19 ஆம் 3. முதன்மைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவிற்குப் பதிலாக, பின்வரும் பிரிவு அமைக்கப்படுதல் வேண்டும் அதாவது:-

பிரிவிற்கு பதிலாக அமைத்தல்.

"19. நீரா அல்லது பதனி, முதலியவை எடுப்பதற்கான உரிமம்.- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையின் ஆணையர் அல்லது தமிழ்நாடு பனைப்பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் செயற்பணி பதிவாளர் அல்லது இதன் பொருட்டு மாநில அரசால் அதிகாரமளிக்கப்பட்ட பிற அலுவலர் எவரும்,-

(a) புளிக்க வைக்காமல் அதனை அருந்துவதற்காக நீரா அல்லது பதனியை எடுப்பதற்காக அல்லது பனைவெல்லம், தேன், பிஸ்கட்டுகள், சர்க்கரை மற்றும் மாநில அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதில், பயன்படுத்துவதற்காக நீரா அல்லது பதனி வடித்தலுக்கான உரிமங்கள் அனுமதி வழங்கலாம்; அல்லது

(b) அத்தகைய நீரா அல்லது பதனியை உடைமையில் வைத்திருத்தல், ஏற்றிச் செல்லுதல் அல்லது விற்பனைச் செய்வதற்கான அனுமதிகளை வழங்கலாம்."

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

16 17

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஜூலைத் திங்கள் 26-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 33/2017சட்ட எண் 33/2017

1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்டம்

இந்தியக் குடியரசின் அறுபத்து-எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக,-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் (இரண்டாம் திருத்த) சட்டம் என்று வழங்கப்படும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும் தேதியன்று நடைமுறைக்கு வரும்.

3 ஆம் 2. 1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில்,-

தமிழ்நாடு சட்டம்

X / 1937.

பிரிவிற்கான திருத்தம்.

(1) (6)-ஆம் கூறின், (b) உட்கூறுக்கு பதிலாக பின்வரும் உட்கூறு அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(b) இந்திய சுங்க எல்லைப்பகுதிகளை கடக்கும் இடம் உள்ளடங்கலானவற்றை தமிழ்நாடு மாநிலத்திலிருந்து கொண்டு செல்லுதல்;"

(2) (7) -ஆம் கூறின், (b) உட்கூறுக்கு பதிலாக பின்வரும் உட்கூறு மற்றும் விளக்கத்தை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது;-

"(b) இந்திய சுங்க எல்லைப்பகுதிகளை கடக்கும் இடம் உள்ளடங்கலானவற்றை தமிழ்நாடு மாநிலத்திற்குக் கொண்டு வருதல்;

விளக்கம்.- (6)-ஆம் கூறில் (b) உட்கூறின் மற்றும் (7) ஆம் கூறில் (b) உட்கூறின் நோக்கத்திற்காக,-

(i) "இந்திய சுங்க எல்லைகள்" என்பது, சுங்கஅதிகார அமைப்புகளால் தடைநீக்கம் செய்யப்படும் முன்பு இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் அல்லது ஏற்றுமதி செய்யப்படுவதற்கான சரக்குகளை வழக்கமாக வைத்துவரப்படும் சுங்கச்சாவடி பகுதியின் எல்லைகள் என்று பொருள்படும்;

(ii) "சுங்கச் சாவடி" என்பது, சுங்கத் துறைமுகம், சுங்க வானூர்தி நிலையம், அல்லது நில சுங்கச் சாவடி நிலையம் என்று பொருள்படும்.".

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

18 19

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஆகஸ்ட் திங்கள் 04-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 36/2017சட்ட எண் 36/2017

1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை

விடுமுறை நாட்கள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) திருத்தச் சட்டம் என்று அழைக்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசால், அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு

2. (இதன்பின் முதன்மைச் சட்டம் என குறிப்பிடப்படுவதான)

நீண்ட சட்டம் XXX III/1958

தலைப்பிற்கான திருத்தம். 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்திற்குரிய நீண்ட தலைப்பில் "தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

முகப்புரைக்கான

திருத்தம் 3. முதன்மைச் சட்டத்திற்குரிய முகப்புரையில் "தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

1-ஆம்

பிரிவிற்கான திருத்தம் 4. முதன்மைச் சட்டத்தின் 1-ஆம் பிரிவில் (1)-ஆம் உட்பிரிவில் "(தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்)" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "(தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்)" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

5. முதன்மைச் சட்டத்தின் 3-ஆம் பிரிவில்,

3-ஆம்

பிரிவிற்கான திருத்தம் (1) ஓரத்தலைப்பில் "தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

(2) 3-ஆம் பிரிவானது அந்தப் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவாக மறு எண்ணிடப்படுதல் வேண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவு என மறு எண்ணிடப்பட்டவாறானதற்குப் பின்பு பின்வரும் உட்பிரிவு சேர்க்கப்படுதல் வேண்டும்.

"(2) (1)-ஆம் உட்பிரிவில் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பினும் அரசு, அவசரநிலை எதன் தொடர்பாகவும் அல்லது மாநிலத்தில் சிறப்பு சூழ்நிலைகள் நிலவி வருவதன் அடிப்படையில் அல்லது அதன் பகுதி எதற்கும் அறிவிக்கையின் வாயிலாக அது பொருத்தமென நினைக்கலாகிறவாறு பிற எந்த நாளையும் சிறப்பு விடுமுறை நாளாக தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு விளம்புகை செய்யலாம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

20 21

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஆகஸ்ட் திங்கள் 04-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 39/2017சட்ட எண் 39/2017

1982-ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்

இந்தியக் குடியரசின் அறுபத்தெட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. ( 1) இந்தச்சட்டம், 2017 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு சட்டம்

12-ஆம் 9/1982.

பிரிவிற்கான திருத்தம்.

2. 1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 12-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவுக்குப் பதிலாக, அதன் வரம்புரை உள்ளடங்கலாக, பின்வரும் உட்பிரிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"(2). (1)ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, அந்தக்குழு-

(i) வேந்தரால் நியமிக்கப்படுபவரும், உச்சநீதிமன்றத்தின் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஒருவரை அல்லது சிறந்த கல்வியாளர் ஒருவரை;

(ii) அரசினால் நியமிக்கப்படுபவரும், அரசு முதன்மைச் செயலாளர் படிநிலைக்குக் குறையாத மாநில அரசின் ஓய்வுபெற்ற அல்லது பணிபுரியும் அலுவலராக இருப்பவருமான ஒருவரை;

(iii) ஆட்சிப் பேரவையினால் நியமிக்கப்படுபவரும் சிறந்த கல்வியாளராக இருப்பவருமான ஒருவரை; மற்றும்

(iv) ஆட்சிக்குழுவினரால் நியமிக்கப்படுபவர்களும் சிறந்த கல்வியாளர்களுமான இருவரைக் கொண்டது ஆகும்.

விளக்கம்.- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, "சிறந்த கல்வியாளர்" என்பது - (i) மாநில அரசால் அல்லது மைய அரசால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் எதனின் துணைவேந்தராக இருக்கிற அல்லது இருந்துள்ள; அல்லது

(ii) மாநில அல்லது மைய பல்கலைக்கழகத்தில் அல்லது இரண்டினையும் சேர்த்து குறைந்தது பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ள சிறந்த கல்வியாளராக இருக்கிற; அல்லது

(iii) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் எதனின் இயக்குநராக அல்லது தலைவராக இருக்கிற அல்லது இருந்துள்ள நபர் என்று பொருள்படும்:

வரம்புரை: ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர், பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளில் எதனின் உறுப்பினராக இருத்தல் ஆகாது அல்லது பல்கலைக்கழகத்துடன் அல்லது பல்கலைக்கழகத்தின் கல்லூரி எதனுடனும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் எதனுடனும் தொடர்புடையவராக இருத்தல் ஆகாது.

(2-A) துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்காக குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நபர்-

(i) உயர்ந்தளவு தகுதி, நேர்மை, ஒழுக்கம், அமைப்பு மூலமான பொறுப்புடைய புகழ்பெற்ற கல்வியாளராக இருத்தல் வேண்டும் ;

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் மூலம், துணைவேந்தருடன் கலந்தாய்வு செய்து மாநில அரசால் குறித்துரைக்கப்படலாகும் கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தை கொண்டிருத்தல் வேண்டும்.

22

(2-B) வேந்தரால், அரசால், ஆட்சிப் பேரவையினால் மற்றும் ஆட்சிக்குழுவினால் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு ஆறு மாதங்களில் தொடங்குதல் வேண்டும் மற்றும் துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய தேதிக்கு முன்பு நான்கு மாதங்களில் முடிவடைதல் வேண்டும்.

(2-C) துணைவேந்தராக நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களின் தேர்ந்தோர்ப் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கான நடைமுறையானது, துணைவேந்தர் பதவியில் காலியிடம் நியாயமாக ஏற்படக்கூடிய நாளுக்கு முன்பு குறைந்தது நான்கு மாதங்களில் தொடங்குதல் வேண்டும்.

(2-D) அந்தக்குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள் வேந்தருக்கு தன்னுடைய பரிந்துரையை அனுப்புதல் வேண்டும். மேற்சொன்ன காலஅளவிற்குள் வேந்தருக்கு அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்பாதிருக்குமானால், வேந்தர் அந்தக்குழு தன்னுடைய பரிந்துரையை அனுப்புவதற்கு மேலுமான கால அவகாசம் அளிக்கலாம் அல்லது (2)-ஆம் உட்பிரிவிற்கிணங்க மற்றொரு குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்."

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

23

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஆகஸ்ட் திங்கள் 04-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 40/2017சட்ட எண் 40/2017

1975ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்தெட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு (திருத்தம்) சட்டம் என்று அழைக்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கை வாயிலாக குறித்திடலாகும் தேதியன்று தமிழ்நாடு சட்டம்

நடைமுறைக்கு வரும்.

27/1975.

இணைப்புப் 2. 1975 -ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் இணைப்புப்பட்டியலில்,- . பட்டியலின் திருத்தம்.

(a) 1-ஆம் இனத்தில், "இரண்டாயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக, "நான்காயிரம் ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) 2 -ஆம் இனம் மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பதிலாக முறையே பின்வரும் இனம் மற்றும் பதிவுகள் அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

"2. (1) சங்கத்தின் முதல் நிதியாண்டின் போது ஆவணம்

இருநூறு ரூபாய்.

எதனையும் தாக்கல் செய்வதற்காக.

(2) சங்கத்தின் இரண்டாம் நிதியாண்டிலிருந்து ஆவணம்

எதனையும் தாக்கல் செய்வதற்காக,-

(i) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின்

நூறு ரூபாய்.

ஆண்டு வரவு அல்லது செலவு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் போது;

இருநூறு ரூபாய்.

(ii) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின் ஆண்டு வரவு அல்லது செலவு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மிகையாக இருந்து ஆனால் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் போது;

முன்னூறு ரூபாய்

(iii) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின் ஆண்டு வரவு அல்லது செலவு ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மிகையாக இருந்து பத்து இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் போது;

நானூறு ரூபாய்.

(iv) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின் ஆண்டு வரவு அல்லது செலவு பத்து இலட்சம் ரூ ப ா ய் க் கு மி ை க ய ா க இ ரு ந் து ஆ ன ா ல் பதினைந்து இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் போது;

ஐ நூ று ரூ ப ா ய் .

(v) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின் ஆண்டு வரவு அல்லது செலவு பதினைந்து இலட்சம் ரூபாய்க்கு மிகையாக இருந்து ஆனால் இருபது இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் போது;

24

அறுநூ று ரூ ப ா ய் .";

(vi) முந்தைய நிதியாண்டின் போது சங்கத்தின் ஆண்டு வரவு அல்லது செலவு இருபது இலட்சம் ரூபாய்க்கு மிகையாக இருக்கும் போது;

(c) 3-ஆம் இனத்தில் "இருநூற்று ஐம்பது ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "நானூறு ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(d) 4-ஆம் இனத்தில் "இருநூற்று ஐம்பது ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "ஐநூறு ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(e) 5-ஆம் இனத்தில் "பக்கம் ஒன்றுக்கு பத்து ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "பக்கம் ஒன்றுக்கு இருபது ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(f) 6-ஆம் இனத்தில் "நூறு ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்;

(g) 7-ஆம் இனத்தில் "ஆயிரம் ரூபாய்" என்ற சொற்களுக்குப் பதிலாக "இரண்டாயிரம் ரூபாய்" என்ற சொற்கள் அமைக்கப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

25

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 7 -ஆ ம் ஆண் டு ஆகஸ்ட் திங்கள் 04-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 45/2017சட்ட எண் 45/2017

1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தை 1988-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தை

மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம். மேலும் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் இந்தியக் குடியரசின் அறுபத்து எட்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு (2) இது மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தமிழ்நாடு சட்டம் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

மற்றும் தொடக்கம். 43/1998.

2ஆம் 2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1998-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தின் 2ஆம் பிரிவில்.

பிரிவிற்கான திருத்தம் (1) (aa) கூறுக்காக பின்வரும் கூறை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் அதாவது:-

"(aa) உள்நாட்டு நிறுவனம்" என்றால், 2006-ஆம் ஆண்டு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் பொருள்வரையறுக்கப்பட்டு, மாநிலத்திற்குள் பொருள்களை உற்பத்தி செய்யும் அல்லது தயாரிக்கும், சேவைகளை வழங்கும் அல்லது அளிக்கும், தொழில்முனைவோர் விவரக்குறிப்பின் பகுதி II ஐ மாவட்ட தொழில் மையங்களில் பதிவு செய்துள்ள அல்லது உத்யோக் ஆதார் விவரக்குறிப்பை உத்யோக் ஆதார் வலைதளத்தில் பதிவு செய்துள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்கள் என்று பொருள்படும்.

(2) (d) எனும் கூறில், "ஏதேனும் ஒரு முறையில்" என்ற சொற்றொடருக்குப் பதிவாக மின்னணு முறை உள்ளிட்ட "ஏதேனும் ஒரு முறையில்" என்னும் சொற்றொடரானது அமைக்கப்படுதல் வேண்டும்.

(3) (f) எனும் கூறில், செய்யப்படும் முறையான வழங்கு விருப்பம் "எனும் சொற்றொடருக்கு முன்பு" "மின்னணு முறை உள்ளிட்ட ஏதேனும் ஒரு முறையில்" என்னும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;

(4) (i) எனும் கூறில், "தாள்களின் தொகுப்பு" என்ற சொற்றொடருக்கு முன்பு மின்னணு ஆவணங்கள் "உள்ளிட்ட" என்ற சொற்றொடாரானது புகுத்தப்படுதல் வேண்டும்,;

3. முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவில்.-

(i) "(dd)- எனும் கூறில், அதில் உள்ள வரம்புரைகள் நீங்கலாக, பின்வரும் கூறானது பதிலாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-

"(dd)- உள்நாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் அல்லது தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் வழங்கப்படும் அல்லது அளிக்கப்படும் சேவைகளைப் பொருத்தவரை மட்டும்."26 (ii)(h)- எனும் கூறுக்குப்பின்பு, பின்வரும் கூறானது சேர்க்கப்படுல் வேண்டும் அதாவது:-

(i) கொள்முதல் செய்யும் அமைப்பினால் கீழ்கண்ட படிவத்தில் சான்றிதழை பதிவு செய்வதற்குட்ப்பட்ட தேர்வுகளை நடத்துவதற்காகத் தேவைப்படும் வினாத்தாள்களின் கொள்முதல், அதாவது:-

"கொள்முதல் செய்யப்பட்டுள்ள பொருட்கள் தேவையான தரம் மற்றும் விவரக் குறிப்புகளுடன் நம்பத்தகுந்த வழங்குனரிடமிருந்து, நியாயமான விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என நான் சுயமாக மனநிறைவு அடைந்துள்ளேன்."

(ஆளுநரின் ஆணைப்படி)

ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 September 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-IV_Section-2-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-09-25.Ordinary_39_Part-IV_Section-2-T-Sup.