[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 18.80 காசு[விலை : ரூ. 18.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 40]
சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 2, 2019 புரட்டாசி 15, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
2019 மே 22 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 1/2019.
அவசரச் சட்டமானது, 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்துரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டத்தை மேலும் திருத்தம் செய்ய விழைகிறது.
மாநில சட்டமன்றமானது, அமர்வில் இல்லாது இருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் இதில் இதன் பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள சூழ்நிலைகள் அதற்கு அவசியமானதாக உள்ளதாக அவர் மனநிறைவு அடைந்திருப்பதாலும்;
ஆகையால், தற்பொழுது அரசமைப்பின் உறுப்பு 213 ஆம் கூறு (1)ஆல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்;-
குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
1. (1) அவசரச் சட்டமானது 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்துரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் (திருத்த) அவசரச் சட்டம் என அழைக்கப்படும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாடு
4ஆம் சட்டம் 42/2017.
பிரிவிற்கான திருத்தம்.
(2) 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்துரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முறைப்படுத்துதல் சட்டத்தில் 4ஆம் பிரிவில் (2)ஆம் உட்பிரிவில் "தொண்ணூறு நாட்கள்" எனும் சொற்றொடருக்காக "இருநூற்று பத்து நாட்கள்" எனும் சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
40-IV-2-(T)—1
[ 1 ]2 3 2019, மார்ச் 9 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது
ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 2/2019.
ஆவடி மாநகரத்திற்கென மாநகராட்சி ஒன்றினை அமைப்பதற்கு வகைசெய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.
தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;
தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்;-
1. (1) இந்த அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சி அவசரச் சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் தொடக்கம்.
(2) இது, ஆவடி நகரம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (1) இந்த அவசரச் சட்டத்தில் தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,—
(a) "ஆவடி மாநகரம்" அல்லது "மாநகரம்" என்றால் ஆவடி நகராட்சியில் அடங்கியுள்ள உள்ளாட்சிப் பகுதி எனப் பொருள்படும்; மற்றும் இந்தச் அவசரச் சட்டம் தொடங்கிய தேதிக்கு பின்னர் அம்மாநகரத்துடன் சேர்க்கப்படுகிற உள்ளாட்சிப் பரப்பிடம் எதனையும் உள்ளடக்கும்; ஆனால், இந்த அவசரச் சட்டத்தின் அத்தகைய தொடக்கத் தேதிக்குப் பின்னர் அம்மாநகரத்திலிருந்து விட்டுவிடப்பட்ட பகுதி எதனையும் உள்ளடக்காது.
(b) "மாநகராட்சி" என்றால் 3 ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி எனப் பொருள்படும்.
(c) "மன்றம்" என்றால் ஆவடி மாநகராட்சி மன்றம் எனப் பொருள்படும்.
(d) "அரசு" என்றால் மாநில அரசு எனப்பொருள்படும்.
(e) "நகராட்சி மன்றம்" என்றால் ஆவடி நகராட்சி மன்றம் எனப் பொருள்படும்.
(f) "நகராட்சி" என்றால் ஆவடி நகராட்சி எனப் பொருள்படும்.
(g) "பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்" என்றால் அரசமைப்புச் சட்டத்தின் 366 ஆம் உறுப்பின் (24) மற்றும் (25) ஆம் கூறுகளில் அவற்றுக்கு முறையே குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களையே கொண்டிருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 25/1981.
(2) இந்த அவசரச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள் வரையறை செய்யப்படாத ஆனால், (இதன் பின்பு இதில் 1981 ஆம் ஆண்டுச் சட்டம் எனச் சுட்டப்படுவதான) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தில் பொருள்வரையறை செய்யப்பட்டுள்ள சொற்களும் சொற்றொடர்களும் 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தில் அவற்றுக்கு முறையே அளிக்கப்பட்டுள்ள அதே பொருள்களையே கொண்டிருத்தல் வேண்டும்.
ஆவடி மாநகரத்திற்கென மாநகராட்சியை அமைத்தல்.
3. (1) இந்தச் அவசரச் சட்டம் தொடங்கிய தேதியன்றும் அது முதற்கொண்டும் செயல்விளைவு கொள்ளும் வகையில் இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, ஆவடி நகராட்சியில் உள்ளடங்கியுள்ள உள்ளாட்சிப் பரப்பிடமானது ஆவடி மாநகரமாக அமைதல் வேண்டும்; மற்றும் இந்தச் சட்டம் தொடங்கிய அத்தகைய தேதியிலிருந்து மேற்சொன்ன மாநகரத்திற்கென ஆவடி மாநகராட்சி என்ற பெயரில் மாநகராட்சியொன்று அமைக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும். முதலாம் வரம்புரை:
ஆனால் அரசு, அவ்வப்போது மாநகராட்சியுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கையின் வாயிலாக அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டுள்ள பரப்பிடங்களை அதில் உள்ளடக்கும் வகையிலோ அல்லது அதிலிருந்து நீக்கிவிடும் வகையிலோ இந்த உட்பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட மாநகரத்தின் எல்லை வரம்புகளை மாற்றியமைக்கலாம்.
4இரண்டாம் வரம்புரை:
மேலும், இந்த உட்பிரிவின்படியான அறிவிக்கையொன்றைப் பிறப்பிப்பதற்கான அதிகாரமானது முன்னதான வெளியீட்டிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
(2) இம்மாநகராட்சியானது, மேற்சொன்ன பெயருடன் தொடர்ந்திருக்கும் வழியுரிமையையும் பொதுவான இலச்சினையையும் பெற்று, சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு, வைத்திருப்பதற்கு மற்றும் அதனை முடிவு செய்வதற்கான மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும்; மற்றும் அதனுடைய கூட்டமைப்பின் பெயரில் வழக்கிடலாம் மற்றும் வழக்கிடப்படலாம்.
(3) இந்த அவசரச் சட்டத்தின் தொடக்கத் தேதிக்கு உடனடி முன்னதாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த ஆவடி நகராட்சியானது, இந்தச் சட்டம் தொடங்கப்பட்ட அத்தகைய தேதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
4. இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளை நிறைவேற்றுவதற்குப் பின்வரும் நகராட்சிய அதிகார அமைப்புகள் பொறுப்புடையனவாக இருத்தல் வேண்டும்,-
நகராட்சிய அதிகார அமைப்புகள்.
(1) ஒரு மேயர்;
(2) ஒரு மன்றம்;
(3) ஒரு நிலைக்குழு;
(4) ஒரு சிற்றொகுதிகள் குழு; மற்றும்
(5) ஓர் ஆணையர்.
மன்றத்தை அமைத்து உருவாக்குதல்.
5. (1) (2) ஆம் உட்பிரிவில் பிறவாறாக வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர, மற்றும் அரசினால் அவ்வப்போது அறிவிக்கையின் மூலமாக நிர்ணயிக்கப்படக்கூடியவாறு, இந்த அ வ ச ர ச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தகைய எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். ஆயினும் மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையானது எந்த நேரத்திலும் எழுபத்து இரண்டிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
(2) மன்றத்தில் பின்வரும் நபர்களும் பிரதிநிதித்துவம் செய்யப்படுதல் வேண்டும், அதாவது:-
(a) மாநகராட்சியின் பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக் கொண்டிருக்கிற தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சியின் பரப்பிடத்திற்குள்ளாக வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள்;
(b) மாநகராட்சியின் பரப்பிடத்தை முழுமையாக அல்லது பகுதியாகக் கொண்டிருக்கிற தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் அனைத்து உறுப்பினர்கள்.
(3) (2) ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்டுள்ள நபர்கள் மன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ள உரிமைத்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். ஆனால், மன்றக் கூட்டங்களில் வாக்களிப்பதற்கு உரிமை பெற்றிருத்தல் கூடாது.
(4) மன்றத்தில், பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த நபர்களுக்கு பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கையானது அம்மாநகரத்திலுள்ள பட்டியல் சாதியினர்களின் அல்லது அம்மாநகரத்திலுள்ள பட்டியல் பழங்குடியினர்களின் மக்கள் தொகையானது அம்மாநகரத்தின் மொத்த மக்கள் தொகைக்கு எந்த வீதத்தில் அமைந்திருக்கின்றதோ அதே வீதத்தில் கிட்டத்தட்ட இயலுமளவிற்கு மன்றத்தில் நேரடித் தேர்தலின் மூலம் நிரப்பப்பட வேண்டிய மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கைக்கேற்ப அமைந்திருத்தல் வேண்டும்.
(5) பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களிலிருந்து பட்டியல் சாதிகளையும் பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த பெண்களுக்காக பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். அது பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில் ஐம்பது விழுக்காட்டிற்கு குறைவாக இருத்தல் கூடாது.
(6) மன்றத்தில் பெண்களுக்கென பதவியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கையானது, மன்றத்திலுள்ள பதவியிடங்களின் மொத்த எண்ணிக்கையில், பட்டியல் சாதிகளையும், பட்டியல் பழங்குடிகளையும் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் பதவியிடங்களின் எண்ணிக்கை உள்ளடங்கலாக, ஐம்பது விழுக்காட்டிற்கு குறைவாக இருத்தல் கூடாது.
5(7) (4) ஆம் மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளின்படி ஒதுக்கீடுசெய்யப்படும் பதவியிடங்களானவை அரசமைப்புச் சட்டத்தின் 334 ஆம் உறுப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவு முடிவடைவதன் பேரில் செயல்விளைவு கொள்வது அற்றுப்போதல் வேண்டும்.
மாநகராட்சியின் கால அளவு.
6. (1) மாநகராட்சி குறித்த காலத்திற்கு முன்னரே கலைக்கப்பட்டாலன்றி வழக்கமான ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் அதனுடைய முதல் கூட்டத்திற்கென குறிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுக் கால அளவு வரையில் தொடர்ந்திருத்தல் வேண்டும்; ஆனால் அதற்கு மேலாக அன்று; மற்றும் மேற்சொன்ன ஐந்தாண்டுக் காலஅளவானது மாநகராட்சியைக் கலைப்பதாகச் செயற்படும்.
(2) மாநகராட்சியை அமைத்துருவாக்குவதற்கான தேர்தல் ஒன்று,—
(a) (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்டுள்ள அதனுடைய கால அளவு முடிவடைவதற்கு முன்னதாக, அல்லது
(b) அது கலைக்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத கால அளவு முடிவதற்கு முன்னதாக நடத்தி முடிக்கப்படுதல் வேண்டும்:
வரம்புரை:
கலைக்கப்பட்ட மாநகராட்சி தொடர்ந்திருந்திருக்கக்கூடிய எஞ்சிய கால அளவானது ஆறு மாத காலத்திற்குக் குறைவாக இருந்திருக்குமிடத்து, அத்தகைய கால அளவிற்கென மாநகராட்சியை அமைத்துருவாக்குவதற்காக இந்த உட்பிரிவின்படி தேர்தல் எதனையும் நடத்துவது தேவையானதாக இருத்தல் கூடாது.
தமிழ்நாடு சட்டம் V/1920.
7. (1) (2) ஆம் மற்றும் (3) ஆம் உட்பிரிவுகளின் வகை முறைகளுக்கு உட்பட்டு (இதன் பின்பு மாவட்ட நகராட்சிகள் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டமானது இந்தச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்தும் அது முதற்கொண்டும் ஆவடி மாநகரத்திற்குள் அடங்கியிருக்கும் உள்ளாட்சிப் பரப்பிடங்களுக்குப் பொருந்துவது அற்றுப்போதல் வேண்டும்.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பொருந்தாது எனில்.
(2) அவ்வாறு அற்றுப்போதலானது,- (a) ஆவடி மாநகரத்திற்குள் அடங்கியிருக்கிற உள்ளாட்சிப் பரப்பிடம் எதனையும் பொறுத்த அளவில் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் முந்தைய செயற்பாட்டினை;
(b) மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கு எதிராகப் புரியப்பட்ட குற்றச்செயல் எதனையும் பொறுத்து உள்ளான தண்டம், தண்டஇழப்பு அல்லது தண்டனை எதனையும்; அல்லது
(c) அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை தொடர்பான புலனாய்வு, சட்ட நடவடிக்கைகள் அல்லது தீர் வழி எதனையும் பாதித்தல் கூடாது; மற்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாதிருந்தாற்போன்று அத்தகைய தண்டம், தண்ட இழப்பு அல்லது தண்டனை எதுவும் விதிக்கப்படலாம்.
(3) (1) ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட அல்லது அளிக்கப்பட்ட மற்றும் இந்த அவசரச் சட்டம் தொடங்கிய தேதியன்று நடைமுறையில் இருக்கும் அனைத்து நியமனங்கள், அறிவிக்கைகள், அறிவிப்புகள், விதிகள், துணைவிதிகள், ஒழுங்குமுறை விதிகள், ஆணைகள், பணிப்பாணைகள், உரிமங்கள், அனுமதிகள், திட்டங்கள், படிவங்கள், அதிகாரங்கள் ஆகியன எந்த அளவிற்கு இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு இந்த அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட, பிறப்பிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நியமனங்களால், அறிவிக்கைகளால், அறிவிப்புகளால், விதிகளால், துணை விதிகளால், ஒழுங்குமுறைகளால், ஆணைகளால், பணிப்பானைகளால், உரிமங்களால், அனுமதிகளால், திட்டங்களால், படிவங்களால் மற்றும் அதிகாரங்களால் அவை பதிலாக அமைக்கப்படுவது வரையிலும் ஆவடி மாநகரத்திற்குள் அடங்கியுள்ள உள்ளாட்சிப் பரப்பிடத்தில் நடைமுறையில் தொடர்ந்திருத்தல் வேண்டும்.
1981 ஆம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகள் மாநகராட்சிக்குப் பொருந்துதல்.
8. (1) மற்றபடி இதில் வெளிப்படையாக வகை செய்யப்பட்டுள்ளவாறு தவிர, வரி அல்லது கட்டணம் விதிப்பது மற்றும் வசூலிப்பது தொடர்பான வகைமுறைகள் உள்ளடங்கலான 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் அனைத்து வகைமுறைகளும் இதன்மூலம் மாநகராட்சிக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது உள்ளபடி பொருந்துதல் வேண்டும்; மற்றும் 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் பகுதியாக இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகள் அமைக்கப்பட்டிருந்தாற்போன்று 1981 ஆம் ஆண்டுச் சட்டமானது மாநகராட்சியைப் பொறுத்த அளவில் படிக்கப்பட்டுப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
6(2) மாநகராட்சிக்கு, 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் வகைமுறைகளைப் பொருந்தச் செய்வதை எளிதாக்கும் நோக்கத்திற்காக அரசு, அறிவிக்கையின் வாயிலாக, தேவைப்படக்கூடிய அல்லது உகந்ததாக இருக்கக்கூடிய வகைமுறைகள் எவற்றையும் நீக்குதல், திருத்துதல் அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மூலமாக 1981 ஆம் ஆண்டுச் சட்டம் மற்றும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகள், துணைவிதிகள் ஆகியவற்றுக்குத் தழுவமைவுகளை அல்லது மாற்றங்களைச் செய்யலாம், மற்றும் அதன்பேரில் 1981 ஆம் ஆண்டுச் சட்டமும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகளும் அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும், மாற்றங்களுக்கும் உட்பட்டு மாநகராட்சிக்குப் பொருந்துதல் வேண்டும்.
(3) 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தின் அல்லது அதன்படிச் செய்யப்பட்ட விதிகளின் அல்லது துணைவிதிகளின் வகைமுறைகளைத் தழுவியமைகிற முறையில் வகைமுறை செய்யப்படாமல் அல்லது (2) ஆம் உட்பிரிவின் படி செய்யப்பட்டிருக்கிற வகைமுறை போதுமானதாக இல்லாத நிலையில் இருந்த போதிலும், இந்த வகைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகார அமைப்பு எதுவும், மாநகராட்சிக்கு அவற்றைப் பொருந்தச் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்திற்காக இந்த வகைமுறைகளை நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது அதிகார அமைப்பின் முன்பாக உள்ள பொருட்பாட்டினைக் கருத்திற்கொண்டு அதன் பொருள் பாதிக்காத வகையில் தேவைப்படக் கூடிய அல்லது தக்கதென இருக்கக்கூடிய அத்தகைய முறையில் பொருள் கொள்ளலாம்.
(4) ஆவடி மாநகரத்திற்கு நீட்டிக்கப்பட்டு பொருந்துமாறு செய்யப்படும் 1981 ஆம் ஆண்டுச் சட்டத்தில்,—
(a) கோயம்புத்தூர் மாநகருக்கும், கோயம்புத்தூர் நகராட்சிக்குமான சுட்டுகை எதுவும், இந்த அவசரச் சட்டத்தின் காரணமாக முறையே ஆவடி மாநகருக்கும், ஆவடி நகராட்சிக்குமான சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும்
(b) கோயம்புத்தூர் மாநகராட்சி, கோயம்புத்தூரின் மாநகராட்சி, கோயம்புத்தூர் நகராட்சிய மாநகராட்சி ஆகியவற்றுக்கான சுட்டுகை எதுவும், இந்தச் சட்டத்தின் காரணமாக முறையே ஆவடி மாநகராட்சி, ஆவடியின் மாநகராட்சி மற்றும் ஆவடி நகராட்சிய மாநகராட்சிக்கான சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.
மாறுதல் கால வகைமுறைகள்.
9. (1) அனைத்துச் சொத்துக்களும், நகராட்சி மன்றத்தால் அல்லது மன்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட, அனுபவிக்கப்பட்ட அல்லது உடைமையில் வைத்துவரப்பட்ட அனைத்து உரிமைகளும் அது எந்த வகையினதாக இருந்தாலும் மற்றும் நகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான அல்லது அதனிடம் உற்றமைந்துள்ள அல்லது பொறுப்பாட்சி என்ற வகையில் அதனால் அல்லது அதற்காக வைத்துவரப்பட்ட அனைத்து நலன்கள் அது எந்த வகையினதாக இருந்தாலும், மேற்சொன்ன நகராட்சி மன்றத்தினால் எந்த வகையிலும் பயன்படுத்தப்பட்ட, அனுபவிக்கப்பட்ட அல்லது உடைமையில் வைத்துவரப்பட்ட அனைத்து உரிமைகளுடன் மேற்சொன்ன நகராட்சி மன்றத்திற்கு எதிராகச் சட்ட முறையில் இருந்து வருகிற அனைத்துக் கட்டுப்பாடுகளும் இந்தச் அவசரச் சட்டம் தொடங்கிய தேதியன்றும் அது முதற்கொண்டும், இது குறித்து பொது அல்லது தனி ஆணையின் மூலமாக அரசானது வழங்கக்கூடிய அத்தகைய பணிப்பாணைகளுக்குட்பட்டு மாநகராட்சியிடம் உற்றடைதல் வேண்டும்.
(2) அத்தகைய தொடக்கத் தேதியன்று உள்ளவாறான வரிகளின் அனைத்து நிலுவைகளை, வரியை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கான பிற தொகை செலுத்தங்களை அல்லது செலவுகளுக்குக் கொடுபட வேண்டிய தொகையை, இழப்பீட்டை அல்லது பிறவாறு நகராட்சி மன்றத்திற்குக் கொடுபட வேண்டிய தொகையை அத்தகைய மாநகராட்சிக்குச் சேர்ந்து வரவேண்டிய தொகையாகக் கருதி மேற்சொன்ன நிலுவைகளோ அல்லது செலுத்தங்களோ கருதி இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளின்படி கொடுபட வேண்டிய தொகைகளாகியிருப்பது போன்று வசூலிக்கப்படலாம்.
(3) இந்த அவசரச் சட்டம் தொடங்கிய தேதிக்கு உடனடி முன்பாக மேற்சொன்ன நகராட்சி மன்றத்தால் விதிக்கப்பட்டு வந்த அனைத்து வரிகளும், கட்டணங்களும், தீர்வைகளும், இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளின்படி மாநகராட்சியால் விதிக்கப்பட்டு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய வரிகள், கட்டணங்கள் மற்றும் தீர்வைகள் இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எதனாலும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனாலும் மாற்றியமைக்கப்படுவது, நீக்கப்படுவது அல்லது கலைத்து கைக்கொள்ளப்படுவது வரையிலும் அதற்கிணங்கிய வகையில் நடைமுறையில் தொடர்ந்து இருத்தல் வேண்டும்.
(4) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி நகராட்சி மன்றத்தால் அல்லது நகராட்சி மன்றத்திற்கு எதிராக அல்லது அதிகார அமைப்பால் அல்லது அதிகார அமைப்பிற்கு எதிராக அல்லது நபரெவராலும் அல்லது நபரெவருக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்துச் செயல் நடவடிக்கைகளும், மேற்சொன்ன செயல் நடவடிக்கைகள் இந்த அ வ ச ர ச் சட்டத்தின் வகைமுறைகளின்படி தொடங்கியிருந்தாற் போன்று மாநகராட்சி, அதிகார அமைப்பு அல்லது நபரால் அல்லது அதற்கு அல்லது அவருக்கு எதிராகத் தொடரப்படலாம்.
7(5) தொடக்கத் தேதிக்கு முன்னர் அதிகார அமைப்பு எதனாலும் மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் அவசரச் சட்டம் நடைமுறையில் இருந்தாற்போன்று இந்த அவசரச் சட்டத்தின்படி அத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு உரிய அதிகார அமைப்பால் எடுக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(6) இந்த அவசரச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும் இந்த அவசரச் சட்டத்தின் தொடக்க தேதிக்கு உடனடி முன்பாக நகராட்சியில் பணியில் இருந்த அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும் அத்தகைய தொடக்கத் தேதியன்றும் அது முதற்கொண்டும் மாநகராட்சியின் அலுவலரொருவராக அல்லது பணியாளரொருவராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
வரம்புரை:
ஆனால் (a) மாநகராட்சியின் பணியில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக அத்தகைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொருந்தத்தக்க வரையறைகளும், நிபந்தனைகளும் அத்தகைய தொடக்கத் தேதிக்கு உடனடி முன்பாக அத்தகைய பணியாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகள், விடுப்பு, ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்புநிதியம், ஓய்வுபெறும் வயது வரம்பு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் பொருந்தக்கூடிய அத்தகைய வரையறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் குறைவுபடாது இருத்தல் வேண்டும்; மற்றும்
(b) அத்தகைய தொடக்கத் தேதி வரையிலும் நகராட்சியின் கீழ் அத்தகைய அலுவலர் அல்லது பிற பணியாளர் எவராலும் செய்யப்பட்ட பணியானது, மாநகராட்சியின் கீழ் செய்யப்பட்ட பணியாகக் கொள்ளப்படுதல் வேண்டும், மற்றும் அவர் ஊதிய உயர்வுகள், விடுப்பு, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதியம், பணிக்கொடை ஆகியவற்றின் நோக்கத்திற்காக அந்தப் பணியைக் கணக்கிலெடுத்துக்கொள்ளும் உரிமைத் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்:
இரண்டாம் வரம்புரை:
மேலும், நகராட்சியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர் அல்லது பிற பணியாளர் எவரும் வகுத்துரைக்கக்கூடிய அத்தகைய காலத்திற்குள்ளும் அத்தகைய முறையிலும் மாநகராட்சிப் பணியில் ஈர்த்துக்கொள்ளும்படியாகவோ அல்லது மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 73-A எனும் பிரிவில் சுட்டப்பட்ட பணிக்கு மாற்றீடு செய்யும்படியாகவோ அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய ஆட்குறைப்புப் பலன்களின்பேரில் நகராட்சியின் பணியிலிருந்து நீக்கும் படியாகவோ தமது விருப்பத்தைத் தெரிவிக்க விருப்பத் தெரிவு ஒன்று கொடுக்கப்படுதல் வேண்டும்.
(7) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி ஆவடி நகராட்சியில் சிற்றொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட மற்றும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியன்று நடைமுறையில் உள்ள சிற்றொகுதி எதுவும் அது மாற்றியமைக்கப்படாத வரையிலும் மாநகராட்சியின் கோட்டமாகவே கொள்ளப்படுதல் வேண்டும்.
(8) மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின்படி ஆவடி நகராட்சிக்காகத் தயாரிக்கப்பட்டு இந்த அவசரச் சட்டம் தொடங்கிய தேதியன்று நடைமுறையில் இருக்கும் வாக்காளர் பட்டியலானது, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவது வரையிலும், மாநகராட்சிக்குரிய வாக்காளர் பட்டியலாகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் நகராட்சியின் ஒவ்வொரு சிற்றொகுதி தொடர்பான மேற்சொன்ன வாக்காளர் பட்டியலின் பகுதியானது, மாநகராட்சியின் நேரிணையான கோட்டத்திற்கான வாக்காளர் பட்டியலின் பட்டியாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
10. (1) தனி அலுவலர் ஒருவரை அறிவிக்கை வாயிலாக
தனி அலுவலரை நியமித்தல்.
(a) மன்றம்
(b) நிலைக்குழு
(c) ஆணையர்
(d) சிற்றொகுதிகள் குழு
ஆகியவைகளின் அதிகாரங்களை செலுத்தவும், கடமைகளை நிறைவேற்றவும், செயல்பாடுகளை செய்து முடிப்பதற்கும் அரசினால் நியமிக்கப்படுதல் வேண்டும்.
(2) தனிஅலுவலரானவர்,—
(a) தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் வரும் வரையில், மாநகராட்சியின்
(b) மாநகராட்சியினால் நியமிக்கப்படும் ஒரு நிலைக்குழு நியமனம் செய்யப்படும் வரையில், நிலைக்குழுவின், மற்றும்
(c) அரசால் ஆணையர் நியமிக்கப்படும் வரையில் ஆணையரின் அதிகாரத்தை செலுத்தவும், கடமைகளை செய்யவும், செயல்பாடுகளை செய்து முடிக்கவும் வேண்டும்.
8(3) உட்பிரிவு (1) இன்படி அரசால் புதிய தனி அலுவலர் நியமிக்கப்படும் வரையில், அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளுக்கு உடனடி முன்பு வரையில், நகராட்சியின் தனி அலுவலராக செயல்பட்டுக் கொண்டிருப்பவரை மாநகராட்சியின் தனி அலுவலராக கருதப்படுவார் மற்றும் அவர் உட்பிரிவு (1) ன்படி செலுத்தப்பட்ட, நிறைவேற்றப்பட்ட, செய்து முடிக்கப்பட்ட அதிகாரங்களை செலுத்தவும் கடமைகளை நிறைவேற்றவும் செயல்களை செய்து முடிக்கவும் வேண்டும்.
(4) சாதாரண தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் மன்றத்தின் முதல் கூட்டம் வரை, உட்பிரிவு (1) அல்லது உட்பிரிவு (3) இல் குறிப்பிடப்பட்ட தனி அலுவலர் பணிபுரிவார்.
11. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்.
விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
(2) (a) இந்த அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்த அவசரச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்த அவசரச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதுவும் செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின், அந்த விதியானது அல்லது அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன்பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும். அல்லது நேர்விற்கேற்ப, நடைமுறைக்கு வராது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
12. இந்த அவசரச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்ப்பாடு ஏதேனும் எழுமானால் அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதாகவோ அல்லது உகந்ததாகவோ அதற்குத் தோன்றுகிற, இந்தச் சட்டத்திற்கு முரணாக இல்லாத அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.
ஆனால், இந்த அவசரச் சட்டம் தொடங்கிய தேதியிலிருந்து இரண்டாண்டுக்கால அளவு முடிவடைந்த பின்னர் அத்தகைய ஆணை எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.
9விளக்க விவரவுரை
மக்கள் தொகைப் பெருக்கம், ஆண்டு வருவாய் அதிகரிப்பு, ஆவடி சிறப்பு நிலை நகராட்சியின் மக்கள்தொகை பெருக்கத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்வதை கருத்தில் கொண்டு மற்றும் கூறப்பட்ட நகராட்சியில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, அரசானது கூறப்பட்ட நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது.
2. மேற்சொன் அறிவிப்பிற்கு செயல்வடிம் கொடுப்பதற்காக, அரசானது, தேவைப்படும் அத்தகை மாற்றமைவுகளுடன், 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1981) வகைமுறைகளை தழுவி ஒரு சிறப்புச் சட்டத்தினை இயற்றுவதென முடிவு செய்துள்ளது.
3. இந்த அவசரச் சட்டமானது, மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
10 112019, ஜூன் 22 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும் அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 3/2019.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவசரச் சட்டம்.
தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;
தற்போது, ஆகையால், அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின் (1)ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்கிறார்;-
குறுந்தலைப்பு 1. (1) இந்த அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம் (2) இது உடனடியாக நடைமுறைக்கு வரும்.
261-A ஆம் தமிழ்நாடு சட்டம் 21/1994
பிரிவிற்கான திருத்தம்.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A ஆம் பிரிவில், "2019 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் நாள்வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
12 13தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 23-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது, மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 14/2019சட்ட எண் 14/2019
கல்வி மற்றும் தொடர்புடையவற்றின் வளர்ச்சித் துறைகளுக்காக முனைப்பான தலைமை, ஆராய்ச்சி, அனுபவ அறிவு மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியின் மூலமாக விதிமுறை மாற்றம் ஒன்றை வளர்த்து, பொதுவியல் கோட்பாட்டை உருவாக்கி நடைமுறைக்குக் கொண்டுவரும் பொருட்டு, தனியார் துறையில் பொறுப்புக் கட்டளைகள் அல்லது சங்கங்கள் அல்லது லாப நோக்கில்லாத நிறுவனங்கள் மூலமாக ஒருங்கிணைந்த புதிய பசுமை, பன்முக புலங்கள் அடங்கிய, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை, தமிழ்நாடு மாநிலத்தி் உருவாக்கி, நிறுவி அமைப்பதற்கு வகை செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால்
பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:—
1 . ( 1 ) இ ந் த ச் ச ட் ட ம் , 2 0 1 9 ஆ ம் ஆ ண் டு த மி ழ் ந ா டு த னி ய ா ர்
பல்கலைக்கழகங்கள் சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும், அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்தச்சட்டத்தில், தருவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,— பொருள்
வரையறைகள்.
(a) "கல்வி மன்றம்" என்பது, 27 ஆம் பிரிவின் படி அமைத்துருவாக்கப்பட்ட தனியார்
பல்கலைக்கழகமொன்றின் கல்வி மன்றம் என்று பொருள்படும்;
மையச்சட்டம் 52/1987.
(b) "AICTE" என்பது 1987ஆம் ஆண்டு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமச் சட்டம் 3ஆம் பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் என்று பொருள்படும்;
(c) "BCI" என்பது 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் 4ஆம் பிரிவின்படி
மையச்சட்டம் 25/1961.
ஏற்படுத்தப்பட்ட இந்திய வழக்கறிஞர் மன்றம் என்று பொருள்படும்;
(d) "வேந்தர்", "துணை வேந்தர்" மற்றும் "இணை- துணை வேந்தர்' என்பது, முறையே தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தர், துணை வேந்தர் மற்றும் இணை- துணை வேந்தர் என்று பொருள்படும்;
(e) "முதன்மையர்கள் மற்றும் இயக்குநர்கள்" என்பது, துறையின் அல்லது ஒரு நிறுவனத்தின், ஒரு மையத்தின் அல்லது ஒரு பள்ளியின் தலைமை அல்லது அவர் வராமையால் அத்தகைய செயலுக்கான நோக்கத்திற்காக அமர்த்தப்பட்ட அந்த நபர் என்று பொருள்படும்;
(f) "துறை" என்பது, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளடங்கலாக தனியார்
பல்கலைக்கழகத்தின், கல்வி பயிலும் துறைகள் என்று பொருள்படும்;
(g) "பணியாளர்" என்பது, தனியார் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அல்லது தனியார் பல்கலைக்கழகத்தின் பணியாளரின் பிற உறுப்பினர் எவரும் உள்ளடங்கலாக தனியார் பல்கலைக்கழகத்தினால் அமர்த்தப்பட்ட நபர் எவரும் என்று பொருள்படும்;
(h) "செயலாட்சி மன்றம்" என்பது, 26 ஆம் பிரிவின் படி அமைத்துருவாக்கப்பட்ட ஒரு
தனியார் பல்கலைக்கழகத்தின் செயலாட்சி மன்றம் என்று பொருள்படும்;
(i) "நிபுணர்குழு" என்பது 7ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று
பொருள்படும்;
(j) "புலம்" என்பது, தனியார் பல்கலைக்கழகத்தின் புலம் என்று பொருள்படும்;
(k) "நிர்வாக ஆட்சி மன்றம்" என்பது, 25 ஆம் பிரிவின் படி அமைத்துருவாக்கப்பட்ட
நிர்வாக ஆட்சி மன்றம் என்று பொருள்படும்;
(l) "அரசு" என்பது, மாநில அரசு என்று பொருள்படும்;
( m ) " ப சு ை ம ப ன் மு க பு ல ங் க ள் அ ட ங் கி ய ப ல் க ை ல க் க ழ க ம் " எ ன் ப து த ற் ே ப ா து ள் ள க ல் வி நி று வ ன ங் க ள் எ த ற் கு ம் அ ல் ல து அ த் த ை க ய நிறுவனங்களுக்குத் தொடர்பு இல்லாமல் புதிய பல்கலைக்கழகமொன்றினை தொடங்குதல் என்று பொருள்படும்;
14(n) "மாணவர் விடுதி" என்பது, தனியார் பல்கலைக்கழகத்தால் பேணிவரப்பட்டு அல்லது ஏற்பிசைவு அளிக்கப்பட்டு தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் தங்கியிருப்பதற்கான ஓர் இடம் என்பது பொருள்படும்;
(o) "ICAR" என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி
மையச் சட்டம் 21 /1860.
பதிவுசெய்யப்பட்ட இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் என்று பொருள்படும்;
(p) "கல்வி நிறுவனம்" என்பது, இந்தச் சட்டத்திற்கிணங்க மற்றும் நிலையமை விதிகள் மூலம் தனியார் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட அல்லது பணிவரப்பட்ட அல்லது அதனுடன் தொடர்புடைய அல்லது மூலப் பகுதியாயுள்ள ஒரு கல்லூரி அல்லது ஒரு கல்வி நிறுவனம் என்று பொருள்படும்;
(q) "மேலாண்மைக்குழு" என்பது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக
முன்கொணர்பவர் அமைப்பினால் அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று பொருள்படும்;
(r) "MCI" என்பது 1956ஆம் ஆண்டு மருத்துவ குழுமச் சட்டத்தின்படி
அமைத்துருவாக்கப்பட்ட இந்திய மருத்துவ குழுமம் என்று பொருள்படும்;
மையச் சட்டம் 102 /1956.
(s) "பல பாடப்பிரிவு" என்பது மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கட்டிடக் கலை, மருத்துவம், பல்மருத்துவம், செவிலியம், மருந்தியல், இயன்முறை சிகிச்சை, உடல் சார்ந்த அறிவியல், கல்வி, சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் அறிவு சார்ந்த இதர கிளைகளின் துறைகளிலுள்ள படிப்பு என்று பொருள்படும்;
(t) "NCTE" என்பது 1993ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமச்
சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் என்று பொருள்படும்;
மையச் சட்டம் 73/ 1993.
(u) "PCI" என்பது 1948ஆம் ஆண்டு மருந்தகச் சட்டத்தின் 4ஆம் பிரிவின்படி
அமைத்துருவாக்கப்பட்ட இந்திய மருந்தக மன்றம் என்று பொருள்படும்;
மையச் சட்டம் 8 / 1948.
(v) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது, நிலையமை விதிகளால் மற்றும் அவசர விதிகளால்
வகுத்துரைக்கப்பட்டது என்று பொருள்படும்;
(w) தனியார் பல்கலைக்கழகம் என்பது 3ஆம் பிரிவின்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு
பல்கலைக்கழகம் என்று பொருள்படும்;
(x) "பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர்" என்பது, முறையே தனியார் பல்கலைக்கழகத்தினுடைய பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், நிதி அலுவலர் என்று பொருள்படும்;
(y) "ஒழுங்குமுறை அமைப்பு" என்பது உயர்கல்விக்கான தரங்களின் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட UGC, AICTE, NCTE, MCI, PCI, ICAR, BCI என்று பொருள்படும் மற்றும் உள்ளடங்கும்;
(z) "விதிகள்" என்பது இந்தச் சட்டத்தின் 57 ஆம் பிரிவின்படி வகுக்கப்பட்ட விதிகள்
என்று பொருள்படும்;
(aa) "இணைப்புப் பட்டியல்" என்பது இந்தச் சட்டத்திற்காக இணைக்கப்பட்ட
இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்;
(ab) "முன்கொணர்பவர் அமைப்பு" என்பது:-
(i) 1882 ஆம் ஆண்டு இந்திய பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்ட பொறுப்புக் கட்டளை ஒன்று என்று பொருள்படும்; அல்லது
மையச்சட்டம் 2/1882.
(ii) 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவு
செய்யப்பட்ட சங்கம் ஒன்று என்று பொருள்படும்; அல்லது
மையச்சட்டம் 27/1975.
(iii) 2013ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின்படி பதிவு
செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று என்று பொருள்படும்.
மையச்சட்டம் 13/2013.
(ac) "நிலையமை விதிகள் மற்றும் அவசர விதிகள்" என்பது, முறையே தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிலையமை விதிகள் மற்றும் அவசர விதிகள் என்று பொருள்படும்;
(ad) "மாணவர்" என்பது, தனியார் பல்கலைக்கழகங்களின் பதிவேட்டில் பெயர் பதிவு
செய்யப்பட்ட ஒரு மாணவர் என்று பொருள்படும்;
15(ae) "ஆசிரியர்கள்" என்பது, இதன் பொருட்டு வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில்
தனியார் பல்கலைக்கழகத்தால் அமர்த்தப்பட்ட நபர்கள் என்று பொருள்படும்;
மையச்சட்டம் 3/1956.
(af) "பல்கலைக்கழக மானியக் குழு" என்பது 1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் நான்காம் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு என்று பொருள்படும்.
3. (1) அரசு இணைப்புப் பட்டியலில் முன்கொணர்பவர் அமைப்பின்மூலம் நிறுவப்படவுள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பெயர், இடம் மற்றும் முன்கொணர்பவர் அமைப்பின் விபரங்கள் சேர்ப்பதின் மூலம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு அனுமதிக்கலாம்;
பல்கலைக் கழகத்தை நிறுவுதல்.
(2) தனியார் பல்கலைக்கழகம் என்பது ஒரு புதிய பசுமை, பன்முக புலங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பல்லைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிற்குள் அமைந்திருக்க வேண்டும்;
(3) தனியார் பல்கலைக்கழகம் ஒரு கூட்டமைப்பாக இருத்தல் வேண்டும், தொடர்ந்த நிலைப்பாடும் ஓர் பொது இலட்சினையும் கொண்டு இருக்கும் மற்றும் மேற்சொன்ன பெயரில் தான் வழக்கிடுதலும், வழக்கிடப்படுதலும் வேண்டும்;
(4) தனியார் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த மாதிரியாக இருத்தல் வேண்டும் மற்றும் கல்லூரி அல்லது கல்வி நிறுவனம் எதற்கும் ஏற்பளிப்பு வழங்குவதற்கு அதிகாரம் கொண்டு இருக்காது; மற்றும்
(5) தனியார் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழுவின் மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் கொள்கை நெறிகளுக்கு உட்பட்டு தான் பொருத்தமெனக் கருதலாகிறவாறு மாநிலத்தில் அத்தகைய இடங்களில் உறுப்பமை கல்லூரிகள், மண்டல மையங்கள், கூடுதல் கல்வி வளாகப் பணிகள் மற்றும் கல்வி மையங்கள் ஆகியவற்றை நிறுவலாம்.
4. இந்தச் சட்டத்தின்படி, தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதன் நோக்கமானது, பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்றுகின்ற முன்கொணர்பவர் அமைப்பாக இருத்தல் வேண்டும் அவையாவன:—
தனியார் பல்கலைக் கழகத்தினை நிறுவுவதற்கான நிபந்தனைகள்.
( a ) தனியார் பல்கலைக்கழகத்திற்காக குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு நூறு ஏக்கருக்கு குறையாத நிலத்தை ஒட்டி உள்ளதை உரிமையைக் கொள்ளுவது;
(b) கூற்று (a)-வில் குறிப்பிட்ட நிலத்தின் மீதான கட்டமைப்பு, கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் அலுவலகங்களின் மற்றும் ஆய்வுக்கூடங்களின் தேவையான சாதனங்கள் நிறுவுவது ஆகியவை பல்கலைக்கழக மானிய குழு மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளினால் விதிக்கப்பட்டுள்ள தரங்களின்படி இருத்தல்;
(c) பல்கலைக்கழக மானிய குழுவினால் விதிக்கப்பட்ட தரங்களின்படி கற்பிக்கும்
நோக்கத்திற்காக ஆசிரியர்களை அமர்த்துவது;
( d ) த னி ய ா ர் ப ல் க ை ல க் க ழ க த் ை த நி று வு வ த ற் கு மு ன் ன ர் , அ ர ச ா ல்
வேண்டுறுத்தப்படலாகும் அத்தகைய பிற நிபந்தனைகளை நிறைவேற்றபடுவது.
5. எந்த ஒரு முன்கொணர்பவர் அமைப்பும் சட்டமன்ற விதியின்படி ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஏற்படுத்த விருப்பப்படின் ரூபாய் இருபத்தைந்து இலட்சத்திற்கு மிகாத கட்டணத்துடன் அத்தகைய விவரங்கள் அடங்கியுள்ள அத்தகைய முறையில் செய்முறை திட்ட அறிக்கையை தனியார் பல்கலைக்கழகம் கருதியுள்ள நோக்கத்தின் மற்றும் நோக்கத்தின் கருத்தை உள்ளடக்கி அரசுக்கு விண்ணப்பம் ஒன்றினைச் செய்ய வேண்டும்.
தனியார் பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்கான விண்ணப்பம்.
6. செய்முறைதிட்ட அறிக்கை 5 ஆம் பிரிவின் கீழ் எடுத்துரைக்கப்பட்டுள்ள விபரங்களுடன் பின் வருவனவற்றையும் உள்ளடக்கியதாகி இருத்தல் வேண்டும் அதாவது :-
செய்முறைதிட்ட அறிக்கை.
(a) துவங்கப்பட எத்தனித்துள்ள தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதின்
தேவையை நியாயப்படுத்துதல்;
(b) முன்கொணர்பவர் அமைப்பின் விபரங்கள் மற்றும் நேர்வுக்கேற்ப 1882 ஆம் ஆண்டு இந்திய பொறுப்புக் கட்டளைச் சட்டம் அல்லது 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் அல்லது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட சான்றிதழின் நகல்கள்;
மையச்சட்டம் 2/1882. தமிழ்நாடு சட்டம் 27/1975. மையச் சட்டம் 13/2013.
16(c) கருதப்பட்ட துறைகளில் சாதனைகளின் விபரங்கள், அனுபவம் மற்றும் துறை
வல்லமை;
(d) துவங்கப்பட எத்தனித்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பெயர், இடம் மற்றும்
தலைமையிடம்;
(e) தனியர் பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள்;
(f) முன்கொணர்பவர் அமைப்பின் வசம் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா
பணியாளர்களின் உள்ளடங்கிய கல்வி சார்ந்த வசதிகளின் விபரங்கள்;
(g) தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு தேவையான கட்டடங்கள், கட்டமைப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கொள்முதல் செய்யப்படவுள்ள உபகரணங்கள் அடங்கிய வளாக மேம்பாட்டுத் திட்டங்களின் விபரங்கள்;
(h) மூலதன செலவினங்கள் மற்றும் அதனுடைய நிதி ஆதாரங்கள்;
(i) தனியார் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருதப்படுகிற பாடத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அதன் இயல்புளின் மாதிரி மற்றும் வகைப்பாடு ஆராய்ச்சி மற்றும் புதுப்பிப்பு;
(j) தொடங்குவதெனக் கருதப்பட்ட வசதிகளின் தன்மை;
(k) ஆதாரங்களைப் புரட்டுவதற்கான திட்டம் மற்றும் அதற்குரிய மூலதனச் செலவு
மற்றும் திருப்பிச் செலுத்தும் முறை;
(l) உள்ளிருந்து உருவாக்கப்படவுள்ள வருவாய் மற்றும் விரிவாக திட்டமிடப்பட்டுள்ள
நிதி அறிக்கை, அதன் முக்கிய விகிதங்களுடன்;
(m) தனியார் பல்கலைக்கழகத்தில் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்காக,
தேர்வு செய்யப்படும் பொருட்டு பின்பற்றப்படவுள்ள நடைமுறை;
(n) தனியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பணி
அமர்த்துவதற்காக பின்பற்றபடவுள்ள முறை;
(o) தனியார் பல்கலைக்கழகத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தனியார் பல்கலைக்கழகம் சார்ந்த வட்டாரத்தின் தேவைக்கேற்ப பின்பற்றபடவுள்ள சிறப்பு வாய்ந்த கற்பித்தல் வழிமுறைகள், ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சி முறைகள்;
(p) விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர வசதிகளின் விபரங்கள் அல்லது விளையாட்டுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், மேலும் கூடுதல் செயல்திறன் நடவடிக்கைகளான தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் இவைகளுக்காக உருவாக்கப்படவுள்ள வசதிகள்;
(q) கல்வி மற்றும் சிறப்பு ஆராய்ச்சிக்காக கருதப்பட்ட அணுகுமுறை மற்றும் ஆரம்ப
திட்டங்கள், தேவைப்படுகிற அங்கீகாரம் மற்றும் கல்வி தணிக்கை;
(r) தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய மாணவர்கள் உள்ளடங்கலாக, பொருளாதார அடிப்படையில் அல்லது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கட்டணத்திலுள்ள சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் மற்றும் கல்வி உதவித் தொகைகள் ஏதும் வழங்க முன்வருதல்; மற்றும்
(s) ஒழுங்குமுறை அமைப்புகளின் நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டிய பொறுப்பு.
நிபுணர்குழு 7. (1) அரசு, முன்கொணர்பவர் அமைப்பிலிருந்து பெறப்படும் விண்ணப்பத்தை ஆய்வு
செய்வதற்கு நிபுணர்குழு ஒன்றை அமைத்துருவாக்க வேண்டும்;
(2) நிபுணர் குழுவின் அமைப்பு பின்வருமாறு இருத்தல் வேண்டும்:-
(i) அரசுச் செயலாளர் உயர்கல்வித் துறை தலைவர்
(ii) மாநிலப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அல்லது உறுப்பினர்
பணி செய்து கொண்டிருக்கும் துணைவேந்தர்
(iii) தொழில் நுட்பக் கல்வியின் ஆணையர் உறுப்பினர் செயலர்17 (iv) கல்லூரிக் கல்வி இயக்குநர் உறுப்பினர்
(v) தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ள
உறுப்பினர்
மாவட்டத்தின் ஆட்சியர்
(3) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விதிகளில் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அமர்வு கட்டணத்தை மற்றும் படிகளைப் பெறுவதற்குத் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்;
(4) நிபுணர் குழு பின்வருவனவற்றிற்கான சுட்டுகையுடன் கருத்துருவினை
ஆய்வு செய்ய வேண்டும் :-
(a) முன்கொணர்பவர் அமைப்பின் நிதி ஆதாரம் மற்றும் சொத்து மற்றும் கருதப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தின் உள் கட்டமைப்பை ஏற்படுத்தி அமைப்பதற்தானஅதனுடைய திறன்;
(b) கல்வித் துறையில் அனுபவம் முன்கொணர்பவர் அமைப்பிற்கு
பின்புலமாக அதனுடைய நம்பகத்தன்மை மற்றும் பொதுவான நன் மதிப்பு;
(c) அளிக்கப்படும் படிப்புகளின் தரம் மரபுத் தன்மையுடன் மட்டும் இல்லாமல் புதிதாகத் தோற்றுவிக்கப்படும் பாடப்பிரிவுகள் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப இருத்தல் வேண்டும்;
(d) மாநிலத்தின் நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களுக்கு ஏற்ப கருதப்பட்ட
தனியார் பல்கலைக்கழகத்தின் இலக்குகள் இருத்தல் வேண்டும் ;
(e) உரியவை என நிபுணர்குழுவிற்குத் தோன்றலாகும் பிற பொருண்மை
எதுவும்;
(5) நிபுணர் குழு கருத்துருவினை மற்றும் திட்ட அறிக்கையை பரிசீலிக்கும் பொழுது முன்கொணர்பவர் அமைப்பிடமிருந்து நோக்கத்திற்காக உரியது என தோன்றுகிறவாறான அத்தகைய பிற தகவலைக் கேட்கலாம்;
(6) நிபுணர்குழு, அரசிடம் தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான
பரிந்துரையை செய்ய வேண்டும்.
கருத்துரு கடிதம்.
8. (1) நிபுணர் குழுவின் பரிந்துரையினை கருத்தில் கொள்வதன் பேரில் அரசு, கருத்துருவினை ஏற்பதன் அல்லது மறுப்பதன் பேரில் அல்லது கருத்துருவில் மாற்றமைவினை கோருதல் அல்லது மேலுமான தகவலைப் பெறுவதன் பேரில் முடிவு ஒன்றினை எடுத்தல் வேண்டும்;
(2) நிபுனர் குழுவின் மதிப்பீடு அறிக்கையினை ஏற்பது அல்லது ஏற்காமல் இருப்பது குறித்த உரிமை அரசிடம் மட்டுமே உள்ளது, இது குறித்த அரசின் முடிவே இறுதியானது;
(3) அரசு நேர்வுக்கேற்ப முன்கொணர்பவர் அமைப்பிற்கு கருத்துரு கடிதம் வழியாக வருத்தத்தைத் தெரிவிக்கும் கடிதம், மாற்றமைவு செய்யப்பட்ட கருத்துருவினை எதிர்பார்க்கும் கடிதம் அல்லது மேலுமான தகவல் கோரும் கடிதம் ஒன்றின் மூலம் அதனுடைய முடிவினை தெரிவித்தல்.
விண்ணப்பப் பட்டியலுக்கான திருத்தம்.
9. அரசு, கருத்துரு கடிதத்தின் நிபந்தனைகளை முன்கொணர்பவர் அமைப்பு முழுமையாக நிறைவேற்றிய இணைப்புப்பட்டியலுக்குரிய திருத்தத்தின் வாயிலாக கருதப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தின் பெயர் அமைவிடம் குறித்த விபரங்களை இணைப்புப் பட்டியலில் சேர்த்தல் வேண்டும்.
10. (1) தனியார் பல்கலைக்கழகம் ஒவ்வொன்றும் இது சம்பந்தமாக அரசு, அறிவிக்கையினால் அத்தகைய தேதியன்று அதனுடைய செயற்பணிகளைச் செயலுறுத்தத் தொடங்க வேண்டும்;
தனியார் பல்கலைக் கழகத்தின் தொடக்கம்.
(2) அரசு, இந்தச் சட்டத்தில் சுட்டப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன மற்றும் இது சம்பந்தமாக அரசு திருப்தியடைந்த பிறகு அச்செயல் திறத்துடன் முன்கொணர்பவர் அமைப்பிடமிருந்து ஆவணங்களுடன் சேர்ந்து ஆணை உறுதி ஆவணம் ஒன்றினை பெற்ற பிறகு மட்டும் (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கை ஒன்றினை வழங்க வேண்டும்.
மானியங்கள் மற்றும் நிதி உதவி.
11. ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகமும் சுயநிதி பல்கலைக்கழகமாக இருத்தல் வேண்டும் மற்றும் அரசிடமிருந்து, கோரிக்கை ஒன்று எதுவும் செய்வதற்கோ பேணுதல், பணித்துறை உதவித்தொகை அல்லது பிற நிதி உதவி எதற்குமோ உரிமை கொண்டது ஆகாது :
18வரம்புரை ஆனால், தனியார் பல்கலைக்கழகத்தை, ஆராய்ச்சி திட்டங்களுக்காக அல்லது பிறவற்றின் மூலம் எதிலிருந்தும் நிதிமானியங்கள் அல்லது நிதி ஆதரவை சட்டப்படி வழங்கலாகும் அல்லது, சட்டப்படி வழங்கலாகாத கல்விசார் திட்டங்கள் பிற எதற்காகவும் விண்ணப்பிப்பதிலிருந்து தடைசெய்தல் ஆகாது.
பல்கலைக் கழகத்தின் நோக்கங்கள்.
12. தனியார் பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள்:- தனியார் பல்கலைக்கழகம் தான் பொருத்தமெனக் கருதலாகும் அத்தகைய கற்பிக்கும் பிரிவுகளில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் வசதிகளை நீட்டிப்பதற்கு வகை செய்வதற்கு முன் அறிவு மற்றும் திறமை ஆகியவற்றுடனும் இருத்தல் வேண்டும் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலை மற்றும் வசதிகளை மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் வழங்குவதற்கு பெருமுயற்சி எடுத்தல் வேண்டும் :-
(a) பாடத்திட்டத்தை மீண்டும் அமைப்பதற்காக வழிகாட்டுகின்ற கல்வியில் கல்வி கற்பிப்பதற்கான புதிய முறைகளில் பயிற்சி மற்றும் இணையவழியில் கற்றுணர்தல், கலந்து கற்றுணர்தல் தொடர்கல்வி மற்றும் அத்தகைய பிற முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த மற்றும் ஆளுமை நலம் தருகின்ற வளர்ச்சி உள்ளடங்கலான, கல்வியின்;
(b) பல்வகையான பாடப்பிரிவுகளில் படிப்புகள்;
(c) பல துறைகளில் படிப்புகள்;
(d) தேசிய ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை, சமூக நேர்மை நெறி மற்றும் பொறியியலில்
பன்னாட்டு உடன்பாடு மற்றும் ஒழுக்கவியலின்;
(e) கல்விச் சார்ந்த பட்டயங்கள், பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் முனைவர் பட்டப் படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்புகள் மற்றும் கல்வியின் உயர் தரங்களை பேணுதல்;
(f) தேசிய மற்றும் உலக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் வழிகாட்டி நெறிமுறைகளுக்குட்பட்டு உலகத் தரங்களுக்கேற்ப திட்டங்களை மேம்படுத்துவதற்கான திறன்களை உருவாக்குதல்.
13. தனியார் பல்கலைக்கழகம் ஒவ்வொன்றும், பின்வரும் அதிகாரங்களைக்
கொண்டிருக்கும்:— அதாவது
பல்கலைக் கழகத்தின் அதிகாரங்கள்.
(a) தனியார் பல்கலைக்கழகம், அப்போதைக்கப்போது தீர்மானிக்கலாகும், அத்தகைய கல்வி பிரிவுகளில் பயிற்சியளிப்பதற்கான வகைசெய்வதற்கு மற்றும் ஆராய்ச்சிக்காக மற்றும் மேம்பாட்டிற்காக மற்றும் எங்கும் பரப்புவதற்கும் வகைசெய்வதற்கு; மற்றும் அறிவையும் திறனையும் பயன்படுத்தவும் செய்வதற்கு;
(b) மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், மருத்துவம் மற்றும் தொடர்பான அறிவியல் மற்றும் பிற தொழில்முறை படிப்புகள் ஆகியவற்றை கல்விவளாகப்பணி, மறைவளாகப் பணி அல்லது தொலைதூர கல்வி திட்டத்தின் மூலமாக கற்பதற்கு, பங்களிப்பதற்கு மற்றும் மேம்படுத்துவதற்கு;
(c) கல்வி வல்லுனர்கள் மற்றும் பேராசிய மாண்பமைவை அணி செய்வதுடனான
கல்விசார் மேம்பாட்டிற்கான நபர்கள் ஆகியோரின் நன்மதிப்பிற்கு;
(d) தனியார் பல்கலைக்கழகம் தீர்மானிக்கலாகும் அத்தகைய வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு தேர்வுகளின் அடிப்படையில் பட்டயம் அல்லது சான்றிதழ்களுக்கு மற்றும் பட்டங்கள் அளிப்பதற்கு அல்லது பொருத்தமான மற்றும் போதிய காரணத்திற்காக இதர கல்வி சிறப்புப்பட்டங்கள், சான்றிதழ்கள், பட்டயங்கள், வழங்குவதற்கு மற்றும் அத்தகைய பட்டங்கள், சான்றிதழ்கள், பட்டயங்கள் அல்லது பிறகல்விச் சிறப்புகள் ஆகியவற்றை திரும்ப பெறுவதற்கு;
(e) வகுத்துரைக்கப்பட்ட முறையில் கெளரவ பட்டங்களையோ அல்லது பிற
சிறப்புகளையோ வழங்குவதற்கு;
(f) தான், பொருத்தமென தீர்மானிக்கலாகும் தனியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகயில்லாத அத்தகைய நபர்களுக்கு கல்வி மற்றும் அஞ்சல் வழி உள்ளடங்கலான பயிற்சி வழங்குவதற்கு;
(g) இயக்குநர் பதவிகள், பேராசிரியர் பதவிகள், இணைப் பேராசிரியர் பதவிகள், சிறப்புப் பேராசிரியர் பதவிகள், உதவிப் பேராசிரியர் பதவிகள், விரிவுரையாளர் பதவிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தால் வேண்டுறுத்தப்பட்ட பிற ஆசிரியர்கள் அல்லது கல்விசார் பதவிகள் மற்றும் அது போன்ற அமர்த்தங்களைச் செய்வதற்கு;
19(h) நிருவாகம், அமைச்சகம் மற்றும் பிற பதவிகளை உருவாக்குவதற்கு மற்றும்
அதற்கான அமர்த்தங்களைச் செய்வதற்கு;
(i) நிரந்தரமாகவோ அல்லது குறித்துரைக்கப்பட்ட ஒரு கால அளவிற்காகவோ பிற பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் எதிலும் சிறப்பாக பணிபுரிகின்ற நபர்களை அமர்த்துவதற்கு அல்லது ஈடுபடுத்துவதற்கு;
(j) தனியார் பல்கலைக்கழகம் தீர்மானிக்கலாகும் அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய நோக்கத்திற்காக இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில் பல்கலைக்கழகம் அல்லது அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் எதனையும் பிற எதனுடனும் ஒத்துச் செயலாற்ற, உடனுழைக்க அல்லது பங்குகொள்வதற்கு;
(k) அதன் மேலுமான நோக்கத்திற்கு தேவையானதை தனியார் பல்கலைக்கழகத்தின் கருத்துரையில் பள்ளிகள், மையங்கள், தனி சிறப்பு பெற்ற ஆய்வுக் கூடங்கள் அல்லது ஆராய்ச்சிக்கான பிற அலகுகள் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை நிறுவுவதற்கு மற்றும் மேலாண்மை செய்வதற்கு;
(l) பட்டதாரி உதவித் தொகைகள், படிப்புதவித் தொகைகள், மாணவர்
உதவித்தொகைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை ஏற்படுத்தி வழங்குவதற்கு;
(m) தனியார் பல்கலைக்கழகத்திற்குள் உள்ள குடியிருப்புகள், மாணவர் விடுதிகள் ஆகியவற்றை நிறுவி மற்றும் பேணி மற்றும் மேற்பார்வையிடுவதற்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் உடல் நலன் மற்றும் பொது நலன், நடவடிக்கை ஆகியவற்றை வளர்ப்பதற்கு;
(n) ஆராய்ச்சி மற்றும் கலந்தாய்வு செய்வதற்காக மற்றும் அந்த நோக்கத்திற்காக தனியார் பல்கலைக்கழகம் தேவையெனக் கருதலாகும் பிற நிறுவனங்கள் அல்லது குழுமங்களுடன் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதற்கான வகை முறைகளைச் செய்வதற்கு;
(o) நிலை விதிகளுக்கு இணங்க, ஒரு மையம், ஒரு நிறுவனம், ஒரு துறை அல்லது,
நேர்விற்கேற்ப, பள்ளி ஆகியவற்றை விளம்புகை செய்வதற்கு;
(p) தேர்வு, மதிப்பாய்வு அல்லது சோதனை முறை பிற எதுவும் உள்ளடங்கலான
தனியார் பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கைக்கான தரங்களைத் தீர்மானிப்பதற்கு;
(q) கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளின் செலுத்தத்தை கோரிப் பெறுதலை
வகுத்துரைப்பதற்கு;
(r) குடியிருப்பு, ஒழுங்குமுறை மற்றும் பெண்களுக்கான கற்பித்தல் மற்றும் தனியார் பல்கலைக்கழகம் தான் பொருத்தமெனக் கருதலாகும் பிற குறைபாடுடைய மாணவர்கள் பொறுத்து, அத்தகைய ஏற்பாடுகளை செய்வதற்கு;
(s) தனியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையே ஒழுங்குமுறையை நெறிப்படுத்துவதற்கு மற்றும் செயற்படுத்துவதற்கு மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தால் இதன் பொருட்டு தேவையெனக் கருதலாகும், அத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதற்கு;
(t) தனியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்களின் உடல் நலம் மற்றும் பொது
நலத்தின் வளர்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு;
(u) தனியார் பல்கலைக்கழகத்தின் நலத்திற்காக நன்கொடைகளைப் பெறுவதற்கு மற்றும் விற்பனை அல்லது குத்தகை அல்லது அசையும் அல்லது அசையா சொத்து எதனின் வாடகை ஆகியவற்றின் மூலம் பெறுவதற்கு, வைத்து வருவதற்கு, மேலாண்மை செய்வதற்கு மற்றும் தீர்வு செய்வதற்கு;
(v) முன்கொணர்பவர் அமைப்பின் ஒப்புதலுடன் தனியார் பல்கலைக்கழகத்தின் சொத்திற்கு எதிராக பிணையமில்லாமல் அல்லது அடமானம் ஆகியவற்றின் மூலமாக கடன் வாங்குவதற்கு;
(w) ஒப்பந்தத்தின் பேரிலோ அல்லது பிறவாறான பார்வையிடும் பேராசிரியர்கள், தகைசால் பேராசிரியர்கள், கலந்துரையாளர்கள், புத்தாய்வு மாணவர்கள், வல்லுநர்கள், ஓவியர்கள், பாடத்திட்டத்தை எழுதுபவர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை உயர்த்துவதற்கு பங்கு கொள்ளும் அத்தகைய பிற நபர்களை அமர்த்துவற்கு;
(x) மிகைப்படியான சுவரோவிய கல்விகள் மற்றும் களப்பணி ஆகியவற்றை ஏற்பாடு
செய்வதற்கு மற்றும் ஏற்றுக்கொள்வதற்கு;
20(y) தனியார் பல்கலைக்கழகத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது எதனையும் அடைவதற்கு இடைவிளைவாக, எழுதுகின்ற அல்லது இணக்கமானதற்கு உகந்ததாய் இருக்கலாகும், அத்தகைய பிற செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வதற்கு.
மாணவர் சேர்க்கை. 14. (1) தனியார் பல்கலைக்கழகமானது, இந்தச்சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் தொடர்புடைய நிலையமை மற்றும் ஒழுங்குமுறை விதிகள் தேர்வுக்கேற்ப அனைத்து நபர்களுக்கும் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்;
(2) உட்பிரிவு (1)-இல் அடங்கியுள்ள எதுவும் தனியார் பல்கலைக்கழகத்தைக்
கோருதல் கூடாது,—
(a) வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதியை அல்லது தரத்தைப் பெற்றிருக்காத
நபர் எவரையும் படிப்பு பிரிவு எதிலும் சேர்க்குமாறு;
(b) பட்டம் அல்லது பிற கல்விசார் சிறப்புகள் வழங்குவதற்கு தேவையான குறைந்த அளவு தரத்திற்கும் கீழே இருக்கின்ற கல்விசார் பதிவேட்டில் மாணவர் எவரையும் தனியார் பல்கலைக்கழக பட்டியலில் வைத்திருக்குமாறு;
(c) தனியார் பல்கலைக்கழகத்தின் உரித்தத்திற்கு அல்லது பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்ளும் மாணவர் எவரையும் சேர்க்குமாறோ அல்லது வைத்திருக்குமாறு;
(d) படிப்பிற்காக வகுத்துரைக்கப்பட்டவாறான தேவையான கட்டணங்களை செலுத்துவதற்கு தவறுகிற மாணவர் எவரையும் தனியார் பல்கலைக்கழகத்தின் பதிவேட்டின் வரிசையில் வைத்திருப்பதற்கு;
(3) உட்பிரிவு (1) மற்றும் (2) ஆம் வகைமுறைகளுக்கு உட்பட்டு, வகுத்துரைக்கும் தனியார் பல்கலைக்கழகத்தின் நிலையான சேர்க்கை முறைப்படி தனியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாணவர்கள் தங்குமிடத்திற்காக பாடத்திட்டக் கல்வி ஒவ்வொன்றிலும், முப்பத்தைந்து விழுக்காடு இடங்களை ஒதுக்கீடுச் செய்தல் வேண்டும்;
(4) மாணவர்களின் சேர்க்கைக்கு (3) ஆம் உட்பிரிவின்படி தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் முப்பத்தைந்து விழுக்காட்டை நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி இடஒதுக்கீட்டினை செய்தல் வேண்டும்.
விளக்கம் : இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக "தமிழ்நாடு மாணவர் தங்குமிடம்"
என்பது,—
(i) முந்தைய தகுதிபெறு தேர்வில் ஐந்தாண்டுகளுக்குக் குறையாத ஒரு கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத்தில் தங்கியிருந்த மாணவர் ஒருவரோ அல்லது அவருடைய பெற்றோர்களோ;
(ii) தகுதி பொதுத் தேர்வுக்கு முன் செல்கிற ஐந்தாண்டுகளுக்குக் குறையாத ஒரு கால அளவிற்கு தமிழ்நாடு மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் ஏதொன்றிலும் படித்த ஒரு மாணவர் என்று பொருள்படும்.
15. இப்பல்கலைக்கழகம் பின்வரும் அலுவலர்களை கொண்டிருக்கும், அதாவது :—
தனியார் பல்கலைக் கழகத்தின் அலுவலர்கள்.
(a) வேந்தர்;
(b) துணை வேந்தர்;
(c) இணை - துணை வேந்தர்;
(d) பதிவாளர்;
(e) முதன்மையர்கள் மற்றும் இயக்குநர்கள்;
(f) நிதி அலுவலர்;
(g) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்; மற்றும்
(h) தனியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்களுக்கென நிலையமை விதிகளால்
விளம்பப்படக்கூடிய பிற அலுவலர்.
21வேந்தர். 16. (1) வேந்தர், வகுத்துரைக்கும் மூன்றாண்டுகால அளவு ஒன்றிற்கு பொறுப்புக் கட்டளையின் மேலாண்மைக் குழுவால் அமர்த்தப்படுதல் வேண்டும்;
(2) வேந்தர், அவர் தமது பதவியின் காரணத்தால் தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பார் மற்றும் ஒரு இடைக்கால செயலாட்சி மன்றம் ஒன்றை அமைத்துருவாக்குதல் வேண்டும். அவ்வாறு அமைத்துருவாக்கப்பட்ட இடைக்கால செயலாட்சி மன்றம், 21 ஆம் பிரிவின்படியான செயலாட்சி மன்றத்தின் அமைப்பானது நிலைத்து இல்லாது போகும்;
(3) வேந்தர், தம் பதவி விலகலை முகவரியிட்டு தாம் கையொப்பமிட்டு
எழுத்துவாயிலாக பொறுப்புக் கட்டளை அல்லது மேலாண்மைக் குழுவிற்கு அனுப்பலாம்.
துணை வேந்தர்.
17. (1) துணை வேந்தர், மூன்றாண்டுகால அளவு ஒன்றிற்காக வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் வேந்தரால் அமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் பதவி வகிக்க வேண்டும்;
(2) துணை வேந்தர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச்
செலுத்துதலும் மற்றும் அத்தகைய பிற செயற்பணிகளை ஆற்றுதலும் வேண்டும்.
18. (1) இணை - துணை வேந்தர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்
செயலாட்சி மன்றத்தால் அமர்த்தப்படுதல் வேண்டும்;
இணை - துணை வேந்தர்.
(2) இணை – துணைவேந்தர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் மற்றும் அத்தகைய பிற செயற்பணிகளை ஆற்றுதலும் வேண்டும்.
பதிவாளர்.
19. (1) பதிவாளர், தனியார் பல்கலைக்கழகத்தின் சம்பளம் பெறும் முழு நேர அலுவலராக இருத்தல் வேண்டும். பணிவரையறைகள் மற்றும் பணிவரைக்கட்டுகள் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்;
(2) பதிவாளராக பதவி வகிப்பவர் பல்கலைக்கழக மானியக்குழுவினால்
வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதிகளைக் கொண்டிருத்தல் வேண்டும்;
(3) பதிவாளர், தனியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக உடன்படிக்கைகளும் கையெழுத்திட்ட ஆவணங்கள், உறுதியொப்பம் இடப்பட்ட பதிவுருக்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்கு அதிகாரம் கொண்டிருப்பார் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய பிற செயற்பணிகளை நிறைவேற்றுதலும் வேண்டும்;
(4) பதிவாளர், செயலாட்சி மன்றம் மற்றும் கல்வி அலுவல் குழு ஆகியவற்றின்
பதவி வழிச் செயலாளராக இருந்து வருவார்.
20. முதன்மையர் மற்றும் இயக்குநர் ஒவ்வொருவரும், அத்தகைய முறையில் அமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்.
முதன்மையர்கள் மற்றும் இயக்குநர்கள்.
நிதி அலுவலர்.
21. (1) நிதி அலுவலர், அத்தகைய முறையில் அமர்த்தப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய செயற்பணிகளை ஆற்றுதலும் வேண்டும்;
(2) நிதி அலுவலர், நிதிக்குழுவின் பதவி வழிச் செயலராக இருத்தல் வேண்டும்.
22. (1) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவுக்கும் அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளின் பேரிலும், அமர்த்தப்படும் தனியார் பல்கலைக்கழகத்தின் ஒரு முழு நேர அலுவலராக இருப்பார்;
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்.
(2) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய
அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய கடமைகளைப் புரிதலும் வேண்டும்.
பிற அலுவலர்கள்.
23. தனியார் பல்கலைக்கழகத்தின் பிற அலுவலர்களைப் பணியமர்த்தும் முறையும் அவர்களுக்குள்ள அதிகாரங்களும் கடமைகளும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையவாறு இருத்தல் வேண்டும்.
24. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகள் பின்வருவனவாகும் -- தனியார் பல்கலைக் கழகத்தின் அதிகார அமைப்புகள்.
(a) நிர்வாக ஆட்சி மன்றம்;
(b) செயலாட்சி மன்றம்;
22(c) கல்வி மன்றம்;
(d) நிதிக்குழு;
(e) திட்டவாரியம்; மற்றும்
(f) தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளென நிலையமை
விதிகளினால் விளம்புகை செய்யப்பட்டலாகும் அத்தகைய பிற அதிகார அமைப்புகள்.
25. (1) நிர்வாக ஆட்சி மன்றத்தின் அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும்
நிர்வாக ஆட்சி மன்றம்.
வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்;
(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிர்வாக ஆட்சி மன்றம்,
பின்வரும் அதிகாரங்களையும் செயற்பணிகளையும் உடையது ஆகும், அவையாவன:—
( a ) அ வ் வ ப் ே ப ா து , த னி ய ா ர் ப ல் க ை ல க் க ழ க த் தி ன் வி ரி வ ா ன கொள்கைகளையும் செயல்முறை திட்டங்களையும் ஆய்வு செய்து தனியார் பல்கலைக்கழகத்தின் செயற்பணி, மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கான நடவடிக்கைகளை அறிவுறுத்துதல்;
(b) தனியார் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை மற்றும் ஆண்டுக் கணக்குகள் மற்றும் அத்தகைய கணக்குகள் பற்றிய ஆண்டறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றின் மீது தீர்மானங்கள் நிறைவேற்றுதல்;
(c) ஆலோசனைக்காக அதற்கு குறித்தனுப்பப்படும் பொருட்பாடு எதனையும்
பொறுத்து வேந்தருக்கு ஆலோசனை வழங்குதல்;
(d) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயற்பணிகளைப்புரிதல்.
26. (1) செயலாட்சி மன்றமானது, தனியார் பல்கலைக்கழகத்தின் முதன்மை செயலாட்சி
செயலாட்சி மன்றம்.
அமைப்பாகும்;
(2) செயலாட்சி மன்றம், பத்துக்கு மேற்படாத உறுப்பினர்களை கொண்டிருத்தல்
வேண்டும், அவர்களில் இரண்டு உறுப்பினர்கள், --
(a) உயர்கல்வித்துறையை பொறுப்பில் கொண்டுள்ள அரசுச் செயலாளர்- பதவி
வழி உறுப்பினர்;
(b) கல்லூரிக்கல்வி இயக்குநர்- பதவி வழி உறுப்பினர் ஆவார்.
( 3 ) செயலாட்சிமன்றத்தின் மீதமுள்ள எட்டு உறுப்பினர்கள் தனியார் பல்கலைக்கழகத்தால் வகை செய்யப்பட்ட பாடப் பிரிவுகளில் திறமை வாய்ந்தவர்களிலிருந்து முன்கொண்பவர் அமைப்பினால் நியமனம் செய்யப்படுதல் வேண்டும்;
( 4 ) ெ ச ய ல ா ட் சி ம ன் ற த் தி ன் அ தி க ா ர ங் க ள் ம ற் று ம் ெ ச ய ற் பணி க ள்
வகுத்துரைக்கப்படலாகதவாறு இருத்தல் வேண்டும்.
கல்வி மன்றம். 27. (1) கல்விமன்றமானது, தனியார் பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அமைப்பாகும் மற்றும் நிலையமை விதிகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, அவசர விதிகளும் பொருந்தத்தக்க ஒழுங்குமுறை விதிகளும், தனியார் பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைகள் மீது பொதுவான கண்காணிப்பைச் செலுத்துதல் வேண்டும்;
(2) கல்வி மன்றத்தின் அமைப்பும் அதன் உறுப்பினர்களின் பதவிக் காலமும் அதன் அதிகாரங்களும் செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
நிதிக்குழு. 28. (1) நிதிக்குழுவானது, தனியார் பல்கலைக்கழகத்தின் நிதியியல் பொருட்பாடுகளைக்
கவனித்துக் கொள்வதற்கான அதன் முதன்மை நிதியியல் அமைப்பாகும்;
(2) நிதிக்குழுவின் அமைப்பு அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும்
அதன் அதிகாரங்களும் செயற்பணிகளும், வகுத்துரைப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
திட்ட வாரியம். 29. (1) திட்ட வாரியமானது, தனியார் பல்கலைக்கழகத்தின் முதன்மை திட்ட அமைப்பாகும். திட்ட வாரியம், உள்கட்டமைப்பும் கல்வி ஆதார செயல்திட்டமும் பொருந்தத்தக்க ஒழுங்குமுறை அதிகார அமைப்புகளின் நியதிகளை நிறைவு செய்கிறது என்பதை உறுதி செய்தல் வேண்டும்;
(2) திட்ட வாரியத்தின் அமைப்பும், அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும் அதன்
அதிகாரங்களும் செயற்பணிகளும் வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
2330. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்புகளென நிலையமை விதிகளினால் விளம்புகை செய்யப்படலாகும், தனியார் பல்கலைக்கழகத்தின் புலங்கள், மாணவர் சேர்ப்புக்குழு, தேர்வுக் குழு மற்றும் அத்தகைய பிற அதிகாரஅமைப்புகளின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களை மற்றும் செயற்பணிகளும், வகுத்துரைக்கப்படலாகிறவாறு இருத்தல் வேண்டும்.
தனியார்பல்கலைக் கழகத்தின் புலங்கள், மாணவர் சேர்ப்புக்குழு, தேர்வுக் குழு மற்றும் பிற அதிகார அமைப்புகள். நிலையமை விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்.
31. (1) மேலாண்மைக்குழுவின் ஒப்பேற்பளிப்புக்கு உட்பட்டு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நிருவாகக்குழு நிலையமை விதிகளை வகுத்தல் வேண்டும்;
(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிலையமை விதிகள், பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றில் எதற்கும் வகை செய்யலாம், அவையாவன :—
( a ) அ வ் வ ப் ே ப ா து அ ை ம க் க ப் ப டு ம் , த னி ய ா ர் ப ல் க ை ல க் க ழ க
அதிகாரஅமைப்புகளின் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் செயற்பணிகள்;
(b) மேற்சொன்ன அதிகாரஅமைப்புகளின் உறுப்பினர்களின் நியமனம் மற்றும் பதவியில் தொடர்ந்து இருந்துவருதல், காலியிடங்களை நிரப்புதல் மற்றும் வகை செய்வதற்குத் தேவைப்படலாகும் அந்த அதிகாரஅமைப்புகள் தொடர்பான பிற பொருட்பாடுகள் அனைத்தும்;
(c) தனியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர்களின் பணியமர்த்தம்,
அதிகாரங்கள் மற்றும் கடமைகள் மற்றும் அவர்களுக்குள்ள பணியூதியங்கள்;
(d) தனியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விசார் மற்றும் நிருவாகப் பணியாளர் தொகுதியினர் ஆகியோரைப் பணியமர்த்துதல் மற்றும் அவர்களுக்குள்ள பணியூதியங்கள்;
(e) கூட்டுசெயல்திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காக குறிப்பிட்டக் கால அளவுக்கு, தனியார் பல்கலைக்கழகத்திலோ அல்லது நிறுவனத்திலோ பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி மற்றும் நிருவாகப் பணியாளர் தொகுதியினரைப் பணியமர்த்துதல்;
(f) ஓய்வு கால நலப்பயன்கள் காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதியம், பணி நீக்கம் செய்யும் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய முறை உள்ளடங்கலான, பணியாளர்களின் பணி நிபந்தனைகள்;
(g) பணியாளர்களின் பணி மூப்பினை நெறிப்படுத்தும் நெறிகள்;
( h ) பணி ய ா ள ர் களு க் கு ம் அ ல் ல து ம ாண வ ர் களு க் கு ம் தனி ய ா ர்
பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கான நடைமுறை;
(i) தனியார் பல்கலைக்கழகத்தின் அலுவலர் எவரின் அல்லது பிற அதிகார அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக பணியாளர் எவராலும் அல்லது மாணவர்களால் செயலாட்சி மன்றத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான நடைமுறை;
(j) மதிப்புறு பட்டங்கள் அளித்தல்;
(k) பட்டம், பட்டயம், உறுதிச் சான்று மற்றும் பிற கல்வி சிறப்புப் பட்டங்கள்
ஆகியவற்றை திரும்பப் பெறுதல்;
( l ) ப ட் ட த ா ரி உ த வி த் ெ த ா ை க க ள் , ப டி ப் பு த வி த் ெ த ா ை க க ள் ,
மாணவர் உதவித்தொகைகள் பதக்கங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றை நிறுவுதல்;
(m) மாணவர்களிடையே ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பேணுதல்;
(n) துறை, மையங்கள் மற்றும் பிற நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நீக்குதல்;
(o) தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்புகள் அல்லது அலுவலர்கள் ஆகியோரிடம் உற்றமைந்திருக்கும் அதிகாரங்களை ஒப்படைவு செய்தல் ; மற்றும்
( p ) இ ந் த ச் ச ட் ட த் த ா ல் வ கு த் து ை ர க் க ப் ப ட ே வண் டி ய அ ல் ல து
வகுத்துரைக்கப்படலாகும், பிறபொருட்பாடுகள் அனைத்தும்.
24(3) தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரஅமைப்பு எதனின் அதிகாரங்களை அல்லது அமைப்பைப் பாதிக்கும் வகையில் நிலையமை விதி எதனையும் திருத்தமோ நீக்கறவோ செய்வதற்கு, உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் மீது எழுத்து வடிவில் கருத்து ஒன்றைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஒன்று அத்தகைய அதிகார அமைப்பிற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வரையில், செயலாட்சி மன்றம் அத்திருத்தமோ நீக்கறவோ செய்தல் ஆகாது, மற்றும் அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்து எதுவும் செயலாட்சி மன்றத்தினால் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.
நிலையமை விதிகள், எவ்வாறு செய்யப்படுகிறது.
32. (1) செயலாட்சி மன்றம், அவ்வப்போது, இந்தப் பிரிவில் இதன் பின்பு வகை செய்யப்பட்டுள்ள முறையில், நிலையமை விதிகளைச் செய்யலாம் அல்லது நிலையமை விதிகளைத் திருத்தம் செய்யலாம் அல்லது நீக்கறவு செய்யலாம்;
(2) செயலாட்சி மன்றத்தினால் பிறப்பிக்கப்படும் ஒரு நிலையமை விதியோ அல்லது ஒரு நிலையமை விதிக்கான ஒரு திருத்தமோ, அல்லது நீக்கறவோ மேலாண்மைக்குழு முன் வைக்கப்படுதல் வேண்டும். அவர் அதற்கு ஏற்பிசைவளிக்கலாம் அல்லது அதனை ஏற்பிசைவளிக்க மறுக்கலாம். செயலாட்சிமன்றத்தினால் பிறப்பிக்கப்படும் நிலையமை விதி ஒன்று அல்லது ஒரு நிலையமை விதிக்கான திருத்தம் ஒன்று, அல்லது அதன் நீக்கறவு ஒன்று, அது மேலாண்மைக்குழுவினால் ஏற்பிசைவளிக்கப்படும் வரையில் செல்லுந்தன்மையுடையதாகாது. நிலையமை விதிகளின் நகலொன்று தகவலுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
அவசர விதிகள் செய்வதற்கான அதிகாரம்.
3 3 . இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் நிலையமை விதிகளுக்கும் உட்பட்டு, அவசரச் சட்டங்கள் மேலாண்மைக்குழுவின் ஒப்பேற்பளிப்பிற்கு உட்பட்டு, செயலாட்சிமன்றத்தினால் செய்யப்படுதல் வேண்டும், அது, பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது அவற்றில் எதற்கும் வகை செய்யலாம், அவையாவன:—
(a) தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சேர்த்தல் மற்றும் அவர்களை
அவ்வாறாகப் பதிவு செய்தல்;
(b) தனியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து பட்டங்கள், பட்டயங்கள் மற்றும்
உறுதிச்சான்றுகள் ஆகியவற்றிற்காக விதிக்கப்பட வேண்டிய கல்விப்பாடத்திட்டங்கள்;
(c) பயிற்றுவிக்கும் மற்றும் தேர்வுக்கான மொழி;
(d) பட்டம், பட்டயம், உறுதிச் சான்று மற்றும் பிற கல்வி சிறப்புப்பட்டங்கள் வழங்குதல், அதற்கான தகுதிப்பாடு மற்றும் அதனை வழங்குதல் மற்றும் பெறுதல் பொறுத்து எடுத்துக் கொள்ளப்படும் பொருட்பாடுகள்;
(e) தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வி பாடத்திட்டங்களுக்காகவும் தனியார் பல்கலைக்கழகத் தேர்வுகள், பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் உறுதிச் சான்றுகள் ஆகியவற்றிற்கு அனுமதித்தலுக்காகவும் விதிக்கப்பட வேண்டிய கட்டணங்கள்;
(f) பட்டதாரி உதவித்தொகைகள், படிப்பு உதவித்தொகைகள், மாணவர்
உதவித்தொகைகள், பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்குவதற்கான நிபந்தனைகள்;
(g) தேர்வு செய்யும் அமைப்புகள், தேர்வாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் ஆகியோரின் பதவிக்காலம் மற்றும் பதவியமர்த்தும் முறை மற்றும் அவர்களின் கடமைகள் உள்ளடங்கலாக, தேர்வுகள் நடத்துதல்;
(h) தனியார் பல்கலைக்கழக மாணவர்களின் உறைவிடத்தின் நிபந்தனைகள்;
(i) மாணவிகளுக்கான உறைவிடம், ஒழுங்குக்கட்டுபாடு மற்றும் போதனைக்காக செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகள், எவையேனுமிருப்பின், அவை மற்றும் அவர்களுக்காக தனியார் பல்கலைக்கழகத்திற்குள் சிறப்பு பாடப்பிரிவுகளுக்கான படிப்புகளை வகுத்துரைத்தல்;
(j) நிலையமை விதிகளில் வகைமுறை செய்யப்பட்டிராதவர்கள் அல்லாத பிற
பணியாளர்களைப் பணியமர்த்தம் செய்தல் மற்றும் அவர்களுக்குள்ள பணியூதியங்கள்;
(k) கல்வி மையங்கள், கல்வி வாரியங்கள் பல்வகைப் பயிற்சிக் கல்விகள், சிறப்பு
மையங்கள், தனித்துறை ஆய்வுக்கூடங்கள் மற்றும் பிற குழு ஆகியவற்றை நிறுவுதல்;
( l ) க ற் ற றி ந் த அ ை ம ப் பு க ள் அ ல் ல து ச ங் க ம் உ ள் ள ட ங் க ல ா ன பி ற பல்கலைக்கழகங்களுடனும் அதிகார அமைப்புகளுடனும் ஒத்துழைப்பின் மற்றும் சேர்ந்து செயலாற்றும் முறை;
(m) தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வி பயணத்தூரத்தை மேம்படுத்துவதற்காகத் தேவையெனக் கருதப்படும் பிற அமைப்பு எதனையும் உருவாக்குதல், இணைப்பாக்கம் மற்றும் செயல்பாடுகள்;
25(n) தேர்வாளர்கள், மதிப்பீட்டாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும்
பட்டியல்படுத்துபவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய பணியூதியம்;
(o) நிலையமை விதிகளினால் வகுத்துரைக்கப்படாமல் இருக்கின்ற ஆசிரியர்கள்
மற்றும் பிற கல்வி பணியாளர் தொகுதியினருக்கான அத்தகைய பிற பணி நிபந்தனைகள்.
34. (1) அவசர விதிகளைச் செய்கையில் செயலாட்சி மன்றம், மேலாண்மைக்குழுவை
கலந்தாய்வு செய்தல் வேண்டும்.
அவசர விதிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன.
(2) செயலாட்சிமன்றத்தினால் செய்யப்படும் அவசரவிதிகள் அனைத்தும் அது
பணிக்கிறவாறு அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
ஆண்டறிக்கை.
35. (1) தனியார் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையானது செயலாட்சி மன்றத்தின் பணிப்புரையின்படி தயாரிக்கப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய தேதி அன்றோ அதற்குப் பின்போ நிர்வாக ஆட்சி மன்றம் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் நிர்வாக ஆட்சி மன்றம், அந்த அறிக்கையினை அதன் ஆண்டுக் கூட்டத்தில் ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும்.
(2) நிர்வாக ஆட்சி மன்றம், அந்த ஆண்டறிக்கையினை, அதன் கருத்துரை,
ஏதேனுமிருப்பின், அதனுடன் சேர்த்து, வேந்தருக்கு பணிந்தனுப்புதல் வேண்டும்.
மையச் சட்டம் XXXVIII/1949.
ஆண்டுக் கணக்குகள்.
36. (1) தனியார் பல்கலைக்கழகத்தின் ஆண்டுக் கணக்குகளும் ஐந்தொகைக் குறிப்பும் செயலாட்சி மன்றத்தின் பணிப்புரைகளின்படி தயாரிக்கப்படுதல் வேண்டும் மற்றும், ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு முறையேனும் மற்றும் பதினைந்து மாதங்களுக்கு மேற்படாத இடைவெளிகளில், 1949ஆம் ஆண்டு பட்டயக் கணக்கர் சட்டத்தின் வகைமுறைகளின்படி தணிக்கை செய்வதற்காக, பட்டயக் கணக்கர் பட்டறிவுள்ள மற்றும் தகுதிப்பாடுடைய நிறுவனத்தால் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்;
(2) ஆண்டுக் கணக்குகளின்படியொன்று, அதன் மீதான தணிக்கை அறிக்கையுடன் செயலாட்சி மன்றத்தின் குறிப்புரைகளுடன் சேர்த்து, அவர்களுடைய ஒப்புதலுக்காக நிர்வாக ஆட்சி மன்றத்திற்கும் வேந்தருக்கும் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
37. (1) தனியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர் ஒவ்வொருவரும், நிலையமை விதிகளின் வகைமுறைகளின்படி பணியமர்த்தம் செய்யப்படுதலோ அல்லது ஈடுபடுத்திக் கொள்ளப்படுதலோ வேண்டும்;
பணியாளர்களின் பணி நிபந்தனைகள்.
(2) தனியார் பல்கலைக்கழகத்துக்கும் நிலைபேறுடன் பணியமர்த்தம் செய்யப்பெற்றுள்ள பணியாளர்களில் எவருக்கும் இடையே எழும் பூசல் எதுவும், துணைவேந்தருக்குக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும் அவர், அந்தப் பூசலை, அது குறித்தனுப்பப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், பணியாளருக்கு வாய்ப்பு ஒன்று வழங்கிய பின்பு, முடிவு செய்தல் வேண்டும்;
(3) குறையுற்றப் பணியாளர், துணை வேந்தரின் முடிவுக்கு எதிராக வேந்தரிடம் மேல்முறையீடு ஒன்றை முன்னிடலாம். அத்தகைய மேல்முறையீட்டில் வேந்தரின் முடிவே இறுதியானதாகும்;
(4) தற்காலிகமாகவோ அல்லது தனிநோக்கத்திற்காகவோ அல்லது பகுதி நேரத்திற்காகவோ அல்லது இடைவரவாகவோ ஈடுபடுத்தப்படும் பணியாளர் எவரையும் பொறுத்த பூசல் எதுவும் தொடர்புடைய துறைத் தலைவரால் கேட்கப்பட்டு இறுதியாக முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
38. (1) (a) தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், விருதுகள் அல்லது பட்டயங்கள் ஆகியவற்றிற்கான தேர்வுகளுக்கு அனுமதிப்பதற்கான தனியார் பல்கலைக்கழகத்தின் படிப்புகளுக்கு எவரும்,—
தனியார் பல்கலைக்கழக பாடப் பிரிவுகளுக்கும் தேர்வுகளுக்கும் அனுமதித்தல்.
(i) அவர், அதற்காக வகுத்துரைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலன்றியும்,
மற்றும்
(ii) அவர், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற கல்விசார் நிபந்தனைகளை நிறைவு செய்தாலன்றியும், அப்படிப்புகளுக்கு அவர் அனுமதிக்கப்படுதல் ஆகாது.
26(b) தனியார் பல்கலைக்கழகத் தேர்வு ஒன்றுக்கான தேர்வு நாடுபவர் ஒவ்வொருவரும், கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்கப்படும் செயலாட்சி மன்றத்தின் சிறப்பு ஆணை ஒன்றின் வழி இந்த உட்பிரிவின் வகைமுறைகளிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டாலன்றி, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் ஓர் உறுப்பினராக பதிவு செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய விதிவிலக்கு எதுவும் செயலாட்சி மன்றம் பொருத்தமானதாகக் கருதும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொடுக்கப்படலாம்;
(2) தேர்வு நாடுபவர் எவரும், அவர் தனியார் பல்கலைக்கழகத்தின் ஓர் உறுப்பினராகப் பதிவு செய்யப்பெற்றிருந்தாலன்றியும், மற்றும் அதற்காகத் தேவைப்படும் வருகை பற்றிய வேண்டுதல்களை நிறைவு செய்திருந்தாலன்றியும் மற்றும் கல்விக்குழுவின் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்கப்பட்ட செயலாட்சி மன்றத்தின் ஆணை ஒன்றினால் பதிவு செய்வதற்கான அல்லது வருகைக்கான அல்லது அவை இரண்டுக்குமான அத்தகைய வேண்டுறுத்தங்களிலிருந்து அவர் விதிவிலக்களிக்கப் பட்டாலன்றியும் அவர், தனியார் பல்கலைக்கழகத் தேர்வு எதற்கும் அனுமதிக்கப்படுதல் ஆகாது. இந்தப் பிரிவின்படி வழங்கப்படும் விதிவிலக்குகள் செயலாட்சி மன்றம் பொருத்தமெனக் கருதும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்;
(3) கல்விக்குழுவின் அல்லது நேர்வுக்கேற்ப , தேர்வுகள் கட்டுப்பாட்டாளரின் ஆ ை ண க ளி ன ா ல் அ ல் ல து ப ரி ந் து ை ர யி ன ா ல் த னி ய ா ர் ப ல் க ை ல க் க ழ க த் தி ன் பெயர்ப்பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பவரும், ஓர் ஆண்டுக்கு மேல் தேர்வுகள் எழுதுவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்பவருமான ஓர் தேர்வுக்கான மாணவர் அல்லது தேர்வு நாடுபவர் எவரும், அத்தகைய ஆணையைப் பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், மேற்சொன்ன அதிகார அமைப்புகளின் முடிவை செல்லாநிலையதாக்குமாறு துணை- வேந்தருக்கு மேல்முறையீடு செய்யலாம்;
(4) இது குறித்து துணை-வேந்தரால் எடுக்கப்படும் முடிவு எதுவும்
இறுதியானதாகும்.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியம் மற்றும் ஓய்வூதியங்கள்.
39. தனியார் பல்கலைக்கழகம் அதன் பணியாளர்களின் நலப்பயனுக்காக செயலாட்சி மன்றத்தினால் முடிவு செய்யப்படலாகும், அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாம் பொருத்தமெனக் கொள்ளும் அத்தகைய ஓய்வூதிய அல்லது நலத்திட்டங்களை அல்லது வருங்கால வைப்பு நிதியத்தை அமைக்கலாம் அல்லது அத்தகைய காப்பீட்டுத் திட்டங்களுக்கு வகை செய்யலாம்.
40. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் அல்லது பிற அமைப்பின் ஓர் உறுப்பினராக உரியவாறு நபர் எவரும் நியமனம் செய்யப்பெற்றிருக்கிறாரா அல்லது அமர்த்தப்பெற்றிருக்கிறாரா அல்லது உறுப்பினராக இருப்பதற்கு உரிமை கொண்டிருக்கிறாரா என்பதைக் குறித்து பிரச்சினை எதுவும் எழுமாயின், அந்தப் பொருட்பாடு வேந்தருக்குக் குறித்தனுப்பப்படுதல் வேண்டும். அதன் மீது அவருடைய முடிவே இறுதியானதாகும்.
அதிகார அமைப்புகள் மற்றும் அமைப்புகளின் அமைப்பு மற்றும் அமைப்புகள் பற்றிய பூசல்கள்.
குழுக்களை அமைத்தல்.
41. இந்தச் சட்டத்தின்படியோ அல்லது நிலையமை விதிகளின்படியோ குழுக்களை அமைப்பதற்கு தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதுவும் அதிகாரம் கொடுக்கப்படுகிறவிடத்து, அத்தகைய குழுக்கள், பிறவாறாக வகைசெய்யப்பட்டவாறு, தொடர்புடைய அதிகார அமைப்பின் உறுப்பினர்களையும் மற்றும் ஒவ்வொரு நேர்விலும் அதிகார அமைப்பு பொருத்தமெனக் கருகிறவாறு அத்தகைய பிற நபர்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
காலியிடங்களை நிரப்புதல்.
42. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின் உறுப்பினர்களிடையேயுள்ள காலியிடங்கள் அனைத்தும் இயலக் கூடிய விரைவில், அவர் எவருடைய இடம் காலியானதோ அவர் அமர்த்தப் பெற்றிருக்கும் அல்லது நியமனம் செய்யப்பெற்றிருக்கும் எஞ்சிய காலத்திற்கு உறுப்பினர்களை அமர்த்திய அல்லது நியமனம் செய்த நபராலோ அல்லது அமைப்பாலோ நிரப்பப்படுதல் வேண்டும்.
2743. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதனின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு எதிலும் உள்ள ஒரு காலியிடம் அல்லது அதன் உறுப்பினர் ஒருவரை நியமனம் செய்ததில் உள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின் அல்லது நேர்வின் தகுதிகளைப் பாதிக்காத அத்தகைய செயல் அல்லது நடவடிக்கையிலுள்ள குறைபாடு அல்லது முறைகேடு எதனின் காரணமாகவோ அல்லது தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது பிற அமைப்பு, இந்தச் சட்டத்தின்படி வேண்டுறுத்தப்பட்டுள்ள அத்தகைய இடைவெளிகளில் கூடவில்லை என்ற காரணமாகவோ மட்டுமே செல்லாநிலையதாக்கப்படுதல் ஆகாது.
தனியார் பல்கலைக் கழகத்தின் அதிகார அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளின் நடவடிக்கைகள் அவற்றின் காலியிடங்கள் இருப்பதன் காரணமாக செல்லாதவையாக ஆக்கப்படுதல் ஆகாது.
தனியார் பல்கலைக்கழக உறுப்பினர் நிலையிலிருந்து நீக்குதல்.
44. (1) செயலாட்சி மன்றமானது இதன் பொருட்டு எழுத்து வடிவில் செய்யப்பட்ட ஓர் ஆணையினால் எந்த ஒரு நபரையும், அத்தகைய நபர் ஒழுக்க நெறி தீயொழுக்கம் உள்ளாகிறது என செயலாட்சி மன்றம் கருதும் குற்றச்செயல் ஒன்றுக்காக நீதிமன்றத்தால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பாராயின், செயலாட்சி மன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் ஒரு பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றினாலும் செயலாட்சி மன்றத்தின் கூட்டத்தில் வந்திருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாத ஒரு பெரும்பான்மையினராலும் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கலாம்;
(2) செயலாட்சி மன்றம், இதன்பொருட்டு எழுத்துவடிவில் பிறப்பிக்கப்படும் ஓர் ஆணையினால் கூட நபர் எவரையும், அவர் மனநிலை சரியில்லாதவராக ஆகியிருப்பாராயின் அல்லது ஒரு நொடித்துப் போனவரென நீதிமுறையில் தீர்மானிக்கப் பட்டிருப்பாராயின் தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதனின் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்படலாம்;
(3) இந்தப் பிரிவின்படி நபர் எவருக்கும் எதிரான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு அவருக்குத் தகுவான வாய்ப்பு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தாலன்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது;
(4) உட்பிரிவு (1)-ன் படியோ அல்லது (2)ஆம் உட்பிரிவின்படியோ நேர்வுக்கேற்ப, பிறப்பிக்கப்படும் ஒவ்வொரு ஆணையின்படி ஒன்று, அது, அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைவில், வகுத்துரைக்கப்பட்ட முறையில் தொடர்புடைய நபருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
தனியார் பல்கலைக் கழகத்தின் பதிவணங்களை மெய்ப்பிக்கும் முறை.
45. தனியார் பல்கலைக்கழகத்தின் வசம் இருக்கும் தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு அல்லது குழு எதனின் பற்றுச்சீட்டு, விண்ணப்பம், அறிவிப்பு, நடவடிக்கை, தீர்மானம் எதனின் படி ஒன்று, பதிவாளரால் உறுதிச் சான்றளிக்கப்படுமானால், அத்தகைய பற்றுச்சீட்டு, விண்ணப்பங்கள், அறிவிப்பு, ஆணை, நடவடிக்கை அல்லது தீர்மானம் ஆவணங்களுக்கான அல்லது பதிவேட்டிலுள்ள பதிவு இருப்பதற்கான முதல் நோக்கிலான சான்றாகப் பெறப்படுதல் வேண்டும் மற்றும் மூல ஆவணங்கள் முன்னிடப்படுமானால் சான்றில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவிடத்து, அதிலுள்ள பொருட்பாடுகளுக்கும் நடவடிக்கைக்குச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
46. (1) முன்கொணர்பவர் அமைப்பு குறைந்தது ஐம்பது கோடி ரூபாய்க்கு நிலையான
அறக்கட்டளை ஒன்றை நிறுவுதல் வேண்டும்;
நிலையான அறக்கட்டளை நிதியம்.
(2) தனியார் பல்கலைக்கழகம், வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில்
நிலையான அறக்கட்டளை நிதியத்தை முதலீடு செய்வதற்கு அதிகாரமுடையதாகும்;
( 3 ) தனியார் பல்கலைக்கழகம் பணத்தொகை எதனையும், பொது நிதியத்திலிருந்தோ அல்லது வளர்ச்சி நிதியத்திலிருந்தோ நிலையான அறக்கட்டளை நிதியத்திற்கு மாற்றலாம்;
(4) உட்பிரிவு (1)-இல் குறித்துரைக்கப்பட்ட குறைந்தபட்சத் தொகைக்கு மேற்படும் தொகை எதுவும் தனியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி நோக்கங்களுக்காக தனியார் பல்கலைக்கழகத்தால் நிலையான அறக்கட்டளை நிதியத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படலாம்.
47. (1) தனியார் பல்கலைக்கழகம், ஒவ்வொன்றும் பொது நிதியம் ஒன்றை நிறுவுதல் பொது நிதியம்.
வேண்டும். அதில் பின்வரும் தொகை வரவு வைக்கப்படுதல் வேண்டும். அவையாவன:—
28(a) தனியார் பல்கலைக்கழகத்தால் விதிக்கப்படலாகும் கட்டணங்கள்
அனைத்தும் ;
(b) பிற ஆதாரம் எதிலிருந்தும் பெறப்படும் பணத்தொகைகள் அனைத்தும்;
(c) முன்கொணர்பவர் அமைப்பினால் செய்யப்படும் பங்களிப்புகள்
அனைத்தும்; மற்றும்
(d) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனாலும் தடைசெய்யப்படாத பிற நபர் எவராலும் அல்லது அமைப்பு எதனாலும் இதன் பொருட்டு செய்யப்படும் பங்களிப்புகள் அனைத்தும்
( 2 ) பொது நிதியத்தில் வரவு வைக்கப்படும் பணங்கள், தனியார் ப ல் க ை ல க் க ழ க த் தி ன் ெ த ா ட ர் ெ ச ல வி ன ங் க ள் அ ை ன த் ை த யு ம் ெ ச ய் வ த ற் கு ப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
வளர்ச்சி நிதியம். 48. (1) தனியார் பல்கலைக்கழகம், ஒவ்வொன்றும் வளர்ச்சி நிதியம் ஒன்றையும்
நிறுவுதல் வேண்டும். அதில் பின்வரும் பணங்கள் வரவு வைக்கப்படுதல், அவையாவன:—
(a) மாணவர்களிடமிருந்து விதிக்கப்படலாகும் வளர்ச்சிக் கட்டணங்கள்;
(b) தனியார் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி நோக்கத்திற்காக பிற
ஆதாரங்களிலிருந்து பெறப்படும் பணத் தொகைகள் அனைத்தும்;
(c) முன்கொணர்பவர் அமைப்பினால் செய்யப்படும் பங்களிப்புத் தொகைள்
அனைத்தும்;
(d) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனாலும் தடை செய்யப்படாத பிற நபர் எவராலும் அல்லது அமைப்பு எதனாலும் இதன் பொருட்டு செய்யப்படும் பங்களிப்புத் தொகைகள் அனைத்தும்; மற்றும்
(e) நிலையான அறக்கொடை நிதியத்திலிருந்து பெறப்படும் வருமானங்கள்
அனைத்தும்
(2) அவ்வப்போது, வளர்ச்சி நிதியத்தில் வரவு வைக்கப்படும் பணங்கள் தனியார்
பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
நிதியத்தைப் பேணுதல்.
49. பிரிவு 46, 47 மற்றும் 48 ஆகியவற்றின் படி நிறுவப்பட்ட நிதியங்கள் நிர்வாக ஆட்சி மன்றத்தின் பொதுவான கண்காணிப்பு மற்றும் கட்டளைக்கு உட்பட்டு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் முறைப்படுத்தப்பட்டு பேணிவரப்படுதல் வேண்டும்.
50. (1) அரசு கோருகிறவாறு, தனியார் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் அல்லது நிதி மற்றும் பிற அலுவற்பாடுகள் தொடர்பான அத்தகைய தகவலை அல்லது பதிவணங்களை அளிப்பது, தனியார் பல்கலைக்கழகத்தின் அல்லது தனியார் பல்கலைக்கழக அதிகார அமைப்பு எதனின் அல்லது அலுவலர் எவரின் கடமையாகும்;
தகவலையும் பதிவணங்களையும் கோரிப்பெறுவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்.
(2) அரசு, இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட நிலையமை விதிகளின் அல்லது அவசர விதிகளின் மீறுகையொன்று இருக்கிறது என்று கருதுமாயின், 49ஆம் பிரிவின்படி தனியார் பல்கலைக்கழகத்திற்குத் தாம் தேவையென கொள்கிறவாறு அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம்.
தனியார் பல்கலைக் கழகத்தைக் கலைத்தல்.
51. (1) தனியார் பல்கலைக்கழகம், எந்தக் காரணமாகவும் அதனைக் கலைப்பதற்கு கருதுமாயின், அது அரசுக்குக் குறைந்தது ஆறு மாதங்களேனும் எழுத்து வடிவில் அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்;
(2) உட்பிரிவு (1)-இல் குறிப்பிடப்பட்ட அறிவிப்பைப் பெற்றுக் கொள்வதன் பேரில், அரசு, தனியார் பல்கலைக்கழகத்தைக் கலைக்கும் தேதியிலிருந்து தனியார் பல்கலைக்கழகத்தின் வழக்கமான கல்விப் பயிற்சியில் கடைசி மாணவர்களின் தொகுதி வரையில் அவர்களின் பயிற்சியை அல்லது கல்விகளை முடிக்கும் வரையில் வகுத்துரைக்கப்படலாகும், அத்தகைய முறையில் தனியார் பல்கலைக்கழகத்தை நிருவகிப்பதற்கான அத்தகைய ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.
52. (1) பிரிவு 51-ன்படி தனியார் பல்கலைக்கழகத்தைக் கலைக்கும் நடவடிக்கையின்போது தனியார் பல்கலைக்கழகத்தின் நிருவாகச் செலவினமானது நிலையான அறக்கொடை நிதியம், பொது நிதியம் மற்றும் வளர்ச்சி நிதியம் ஆகியவற்றிலிருந்து ஏற்கப்படுதல் வேண்டும்;
கலைப்பின் போது தனியார் பல்கலைக் கழகத்தின் செலவினம்.
29(2) உட்பிரிவு (1)-இல் சுட்டிக்காட்டப்பட்ட நிதியங்கள், தனியார் பல்கலைக்கழகத்தின் செலவினத்தை எதிர்கொள்வதற்குப் போதுமானவையாக இல்லாதிருக்குமானால், அத்தகைய செலவினம், அரசால், தனியார் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை அல்லது சொத்திருப்புகளை அயலடைவு செய்து எதிர்கொள்ளப்படலாம்.
தனியார் பல்கலைக் கழகத்தின் ஏற்பளிப்பு அரசால் நீக்கப்படுதல்.
53. (1) தனியார் பல்கலைக்கழகம், எதுவும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின்படி செயல்படவில்லை என அரசு முக்கியமான மற்றும் போதிய அளவிலான சாட்டுரைகளுடனான முறையீடு ஒன்றைப் பெறுகிறவிடத்து, அது, அந்த முறையீட்டின்படி ஒன்றைச் சுட்டிக்காட்டி தனியார் பல்கலைக்கழகத்தின் ஏற்பளிப்பு ஏன் நீக்கப்படுதல் ஆகாது என்பதற்கு இரண்டு மாதங்களுக்குக் குறைவாக இருக்கலாகாத, அத்தகைய காலத்திற்குள் காரணம் காட்டுமாறு தனியார் பல்கலைக்கழகத்தை வேண்டுறுத்துதல் வேண்டும்;
( 2 ) உ ட் பி ரி வு ( 1 ) - ன் ப டி ெ க ா டு க் க ப் ப ட் ட அ றி வி ப் பு க் கு த னி ய ா ர் பல்கலைக்கழகத்தின் பதில் பெறப்படுவதன் பேரில், பல்கலைக்கழகம் செயல்படுவதில் தனியார் பல்கலைக்கழகம் தவறாக நடத்தப்படுகிற அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறை மீறுகிற முதல் நோக்கிலான நிகழ்வு ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெளிவுறக் காணுமாயின், அது, தாம் தேவையெனக் கொள்ளலாகும் அத்தகைய விசாரணைக்கு ஆணையிடுதல் வேண்டும்;
(3) உட்பிரிவு (2)-ன்படியான விசாரணை ஒன்றின் நோக்கங்களுக்காக, அரசு, அறிவிக்கை வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மீறியது பற்றிய சாட்டுரைகளை விசாரணை செய்வதற்கு விசாரணை அதிகாரஅமைப்பாக ஓர் அலுவலர் அல்லது அதிகார அமைப்பை அமர்த்துதல் வேண்டும்;
மையச்சட்டம் V/1908.
(4) உட்பிரிவு (3)-ன்படி அமர்த்தப் பெற்ற விசாரணை அதிகார அமைப்பு ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின்படி தம் செயற்பணிகளைப் புரிகையில், உரிமை வழக்கு ஒன்றை மற்றும் குறிப்பாக பின்வரும் பொருட்பாடுகள் பொறுத்து விசாரணை செய்கையில், 1908 ஆம் ஆண்டு உரிமையியல் நெறிமுறைத் தொகுப்புச் சட்டத்தின்படி உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் அனைத்தும் உடையது ஆகும், அவையாவன:—
( a ) சான்றளிப்பவர் எவருக்கும் அழைப்பாணை விடுத்து அவர் முன்னிலையாவதைக் கட்டாயப்படுத்துதல் மற்றும் அவரை ஆணைமொழியின் பேரில் விசாரணை செய்தல்;
(b) ஆவணம் எதனையும் வெளிக் கொணர்தல் மற்றும் முன்னிடுதல்;
(c) அலுவலகம் எதிலிருந்தும் பொது ஆவணம் எதனையும் அல்லது
அதன்படி எதனையும் வேண்டிப் பெறுதல்;
(d) ஆணைமொழி ஆவணங்களின் மீது சான்றினைப் பெறுதல்;
(e) வகுத்துரைக்கப்படலாகும் பிற பொருட்பாடு எதுவும்.
(5) விசாரணை அறிக்கையினைப் பெறுவதன் பேரில், தனியார் பல்கலைக்கழகம், இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் எவற்றையும் மீறியிருக்கிறது என்று அரசு தெளிவுறக் காணுமானால், அது, தேவையான செம்மையினைச் செய்யுமாறு தனியார் பல்கலைக்கழகத்திற்குப் பணிப்புரை கொடுத்து இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை முறையாகச் செயல்படுத்துவதற்காக அறிவுறுத்துதல் வேண்டும்;
(6) தனியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து சட்ட வகைமுறைகளை மீறி வருகிறது என்று கருதும்பட்சத்தில் அத்தகைய மீளுகையானது நிதியைத் தவறாக மேலாண்மை செய்தலுக்கு மற்றும் தனியார் பல்லைக்கழகத்தில் தவறான வகையில் நிர்வாகம் நடைபெறும் நிலையில் இது தனியார் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரங்களை பாதிக்கின்ற வகையில் அமையும் என்கின்ற அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான சூழ்நிலைக்கு செல்கின்றபோது அரசு நிர்வாகி ஒருவரை பணியமர்த்தம் செய்யலாம்.
(7) உட்பிரிவு (6)-ன்படி பணியமர்த்தம் செய்யப்பட்ட நிர்வாகியானவர், இந்தச் சட்டத்தின்படி ஆட்சி மன்றத்தின் மற்றும் மேலாண்மைக் குழுவின் அதிகாரங்கள் அனைத்தையும் மற்றும் கடமைகள் அனைத்தையும் செய்ய வேண்டும் மற்றும் முறையான பாடப்பிரிவுகளில் பயிலும் கடைசித் தொகுதி மாணவர்களின் படிப்புகளை அல்லது பாடத்திட்டத்தை முடிக்கும் வரை மற்றும் அவர்கள் பட்டங்களைப், பட்டயங்களை அல்லது நேர்வுக்கேற்ப பிற கல்விசார் சிறப்புச் சீர்மைகளைப் பெறும்வரை தனியார் பல்கலைக்கழகத்தின் அலுவல்களை நிர்வகிக்க வேண்டும்;
(8) முறையான பாடப்பிரிவுகளில் பயிலும் கடைசித் தொகுதி பட்டங்கள், பட்டயங்கள் அல்லது மாணவர்களுக்கு கல்வி சிறப்புச் சீர்மைகள் வழங்கப் பட்டப்பிறகு நிர்வாகியானவர் அரசுக்கு இதன் தொடர்பாக அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்;
30(9) உட்பிரிவு (8)-ன்படி அறிக்கை பெறப்பட்டதன் பேரில் அரசு உரிய முறையில் கருத்தில் கொண்ட பிறகு ஒரே மாதிரியான நோக்கங்களைக் கொண்டிருக்கும் ஏதேனும் முன்கொணர்பவர் அமைப்பின் ஆட்சி மன்றத்திடம் அதிகாரங்களை ஒப்பளிப்பதன் மூலம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவின் மற்றும் தொடர்புடைய பிற ஒழுங்குமுறை அமைப்புகளின் முந்தைய ஒப்புதலுடன் தனியார் பல்கலைக்கழகத்தின் ஏற்பளிப்பினை ரத்து செய்யலாம்;
(10) உட்பிரிவு (9)-ன்படி ஏற்பளிப்பை நீக்கும் நடைமுறையின்போது, அரசு நிலையான அறக்கொடை நிதியம், பொது நிதியம் அல்லது வளர்ச்சி நிதியம் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகத்தின் அலுவற்பாடுகளை மேலாண்மை செய்யும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தலாம். தனியார் பல்கலைக்கழகத்தின் நிதியங்கள் தனியார் பல்கலைக்கழகத்தின் அவசியமான செலவினத்தை எதிர்கொள்வதற்குப் போதுமானவையாக இல்லையாயின், அரசு, மேற்சொன்ன செலவினங்களை எதிர் கொள்வதற்கு தனியார் பல்கலைக்கழகத்தின் சொத்திருப்புகளை அல்லது சொத்துக்களை அயலடைவு செய்யலாம்.
54. அரசு, தாம் தேவையென கருதுகிறவாறு இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இராத கொள்கை பொருட்பாடுகள் மீது தனியார் பல்கலைக்கழகத்திற்கு, அவ்வப்போது, அத்தகைய பணிப்புரைகளை வழங்கலாம். அத்தகைய பணிப்புரைகள், தனியார் பல்கலைக்கழகத்தால் இணங்கி நடக்கப்படுதல் வேண்டும்.
தனியார் பல்கலைக்கழகத்தின் கொள்கை பொருட்பாடுகள் மீது பணிப்புரைகள் வழங்குவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்.
55. தனியார் பல்கலைக்கழகத்தை கலைக்கும் அல்லது ஏற்பளிப்பை நீக்கும் நேர்வில், தனியார் பல்கலைக்கழகத்தின் நிலையான அறக்கட்டளை நிதியம், பொதுநிதியம், வளர்ச்சி நிதியம் அல்லது பிற நிதியம் எதுவும் உள்ளடங்கலான உடைமைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் மற்றும் கடப்பாடுகளும் கூட, முன்கொணர்பவர் அமைப்புக்குச் சொந்தமானதாக இருக்கும்.
கலைத்தல் அல்லது ஏற்பளிப்பை நீக்குவதன்பேரில் உடமைகள், கடப்பாடுகளின் தகுநிலைகள்.
56. (1) அரசு, மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்குவது குறித்த கற்பித்தல், ஆராய்ச்சியை மேம்படுத்தல் மற்றும் பயிற்சி அளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு ஒன்றை அமைத்துருவாக்க வேண்டும்;
ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பை அமைப்பதற்கு அரசுக்குள்ள அதிகாரங்கள்.
(2) ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு, விதிகளில் வகுத்துரைக்கப்படலாகும் அ த் த ை க ய உ று ப் பி ன ர் க ள் ெ க ாண் டி ரு க் க ே வண் டு ம் ம ற் று ம் அ து வி தி க ளி ல் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அதிகாரங்களை செலுத்த வேண்டும் அத்தகைய செயற்பணிகளை செய்ய வேண்டும்;
(3) இரண்டாம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்படும் கருதப்பட்ட விதிகளின் நகல் ஒன்று தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்ற பேரவையின் முன்பு வரைவாக வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் சட்டமன்றப் பேரவை, விதிகளை பிறப்பிப்பதற்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறதென்றால் அல்லது சட்டமன்ற பேரவை, விதிகளில் மாற்றமைவுகள் எதனையும் செய்வதற்கு ஒத்துக் கொள்கிறதென்றால், அந்த விதிகள் பிறப்பிக்கப்படுதல் ஆகாது அல்லது நேர்வுக்கேற்ப சட்டமன்ற பேரவையினால் ஒத்துக் கொள்ளப்படுவதற்கேற்ப அத்தகைய மாற்றமைசெய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே பிறப்பிக்கப்படுதல் வேண்டும்.
57. (1) அரசு, அறிவிக்கையினால் இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தினையும்
அல்லது எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம்;
விதிகளைச் செய்வதற்கு அரசுக்குள்ள அதிகாரம்.
(2) குறிப்பாக மற்றும் முந்தைய அதிகாரங்களின் பொதுப்பாங்கிற்குக் குந்தகமின்றி பின்வரும் பொருட்பாடுகளின் அனைத்திற்காகவும் அல்லது எதற்காகவும் அத்தகைய விதிகளைச் செய்யலாம் அதாவது:-
(a) செயற்திட்ட அறிக்கையைச் செய்யும் முறை, அதிலடங்கியிருக்கும் விபரங்கள்
மற்றும் 5ஆம் பிரிவின்படி செலுத்தத்தக்க கட்டணம்;
(b) பிரிவு 7-ன் உட்பிரிவு (3)-ன் படி நிபுணர்குழுவின் தலைவருக்கு மற்றும்
உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க அமர்வுக் கட்டணங்கள் மற்றும் படிகள்31 (3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்டக் கூட்டத் தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படுதலோ அல்லது பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அதன் பின்பு அந்த விதியானது அல்லது அறிவிக்கையானது அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் பெறாதல் போகும் எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது செயல்வடிவம் பெறாமை எதுவும் அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்.
58. தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகார அமைப்பு எதையேனும் முதல் முதலில் அமைத்து உருவாக்குதல் குறித்தோ அல்லது மீண்டும் அமைத்துருவாக்குதல் குறித்தோ அல்லது பிறவாறு இந்தச் சட்டத்தின் வகைமுறை செயல்படுத்துதல் குறித்தும் இடர்ப்பாடு எதுவும் எழுமானால் அரசு, அறிவிக்கையின் மூலமாக அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்காக தேவையானது என்று அல்லது உகந்தது என்று தனக்கு தோன்றக் கூடிய இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு ஒவ்வாதவையாயிராத அத்தகைய வகைமுறையைச் செய்யலாம்:
வரம்புரை: ஆனால் அத்தகைய அறிவிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்க
தேதியில் இருந்து இரண்டாண்டுகள் முடிவடைந்த பின்பு பிறப்பிக்கப்படுதலாகாது.
இணைப்புப் பட்டியல்
3 மற்றும் 9ஆம் பிரிவுகளைக் காண்க
வரிசை எண்
முன்கொணர்பவர் அமைப்பின் பதிவு விபரங்கள்
முன்கொணர்பவர் அமைப்பின் பெயர் மற்றும் விலாசம்
தனியார் பல்கலைக்கழகத்தின் பெயர் மற்றும் இருக்குமிடம் (விலாசம்)
(1) (2) (3) (4)
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
32 33தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 23-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 15/2019சட்ட எண் 15/2019
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனைச் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்
குறுந்தலைப்பு இந்தியக் குடியரசின் எழுபதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம், 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குமுறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, 1991, பிப்ரவரி 1 ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்திருப்பதாக
கொள்ளப்படுதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
67ஆம் பிரிவினை 27/1989.
திருத்தம் செய்தல்.
2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 1987 ஆம் ஆண்டு வேளாண் விளைபொருள் விற்பனைச் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) சட்டத்தின் 67 ஆம் பிரிவில், (4) ஆம் உட்பிரிவில், "மேற்சொன்ன சட்டம் நீக்கறவு செய்யப்பட்டபோதிலும், மேற்சொன்ன சட்டத்தின்படி ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட பகுதி என விளம்பப்பட்டுள்ள பகுதி எதுவும் இந்தச் சட்டத்தின்படி ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட பகுதி என கொள்ளப்படுதல் வேண்டும்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேற்சொன்ன சட்டம் நீக்கறவு செய்யப்பட்டுள்ள போதிலும், மேற்சொன்ன சட்டத்தின்படி ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட பகுதி அல்லது ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட அங்காடிப் பகுதி என விளம்புகை செய்யப்பட்டுள்ள பகுதி எதுவும், இந்தச் சட்டத்தின்படி, நேர்விற்கேற்ப, ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட பகுதி அல்லது ஓர் அறிவிக்கைச் செய்யப்பட்ட அங்காடிப் பகுதி என கொள்ளப்படுதல் வேண்டும்" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
செல்லுந்தன்மை-
யாக்குதல்.
3. முதன்மைச் சட்டத்தில் அல்லது நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது ஆணை எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், 1991, பிப்ரவரி 1 ஆம் நாள் அன்று தொடங்கி தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியாகும் தேதியுடன் முடிவடையும் கால அளவின்போது அறிவிக்கைச் செய்யப்பட்ட அங்காடிப் பகுதி எதிலும் கட்டணம் விதித்து வசூலித்தல் உள்ளடங்கலான விற்பனைக்குழுவினால் செய்யப்பட்ட எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி, நேர்விற்கேற்ப, செல்லும் தன்மையுடன் செய்யப்பட்டு அல்லது எடுக்கப்பட்டு அல்லது விதித்து வசூலிக்கப்பட்டு இருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
34 35தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு மே திங்கள் 23-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 18/2019சட்ட எண் 18/2019
1882 1882 ஆம் ஆண்டுஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்டசெய்வதற்கான ஒரு சட்டம்ம்
இந்திய குடியரசின் அறுபத்து ஒன்பதாவது ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக :-
1. (1) இந்தச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் (திருத்தம்) சட்டம் என வழங்கப்பெறும். குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம்.
(2) இது மாநில அரசானது அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அந்தந்த
தேதியன்று நடைமுறைக்கு வரும்.
1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தில் 16 ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும்
(தமிழ்நாடு சட்டம்
16-A எனும் புதிய பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது :—
V/1882)
பிரிவைப் புகுத்துதல்.
"16-A குறித்த சில நிலத்தை ஒதுக்குக் காடாக விளம்புகை செய்தல், -
இந்தச் சட்டத்தில் எது எவ்வாறு காணப்படுவது அரசானது 1969 ஆம் ஆண்டு கூடலூர் ஜன்மம் சொத்துகள் (ஒழிப்பு மற்றும் உழவர் நிலங்களாக மாற்றுதல்) (தமிழ்நாடு சட்டம் 24/1969) சட்டத்தின்படி அரசிடம் உற்றமைந்துள்ள மற்றும் அந்தச் சட்டத்தின்படி ஒரு வனமாக தீர்மானிக்கப்பட்டது ஒரு ஒதுக்குக் காடாகும்."
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
36 37த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 9 - ஆ ம் ஆண் டு ஜூலைத் திங்கள் 25-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 20/2019சட்ட எண் 20/2019
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்தம் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டசெய்வதற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால்
பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக குறுந்தலைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.
18 ஆம் தமிழ்நாடு சட்டம் 8/1971
பிரிவிற்கான திருத்தம்.
2. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 18 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் "வகுப்பு I பதவி வழி" தலைப்பின்கீழ் (g) மற்றும் (h) கூறுகளுக்குப் பதிலாக பின்வரும் கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் , அதாவது:-
"(g) தலைமை வனக்காப்பாளர்;
(h) வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் அல்லது
இயக்குநர்; மற்றும்
(i) பதிவாளர்."
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
38 39தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 25-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 22/2019.சட்ட எண் 22/2019.
-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் 20172017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின்
உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைபடுத்துதல் சட்டத்தை மேலும் திருத்தம் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைபடுத்துதல் சட்டத்தை மேலும் திருத்தம்
செய்வதற்கானதொரு சட்டம்செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம் 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும்
தொடக்கம்.
வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் (திருத்தச்) சட்டம்
என்று வழங்கப்பெறும்.
(2) பிரிவு 3, 2019-ஆம் ஆண்டு மே திங்கள் 22 ஆம் நாளன்றே நடைமுறைக்கு
வந்திருப்பதாக கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் மற்ற பிரிவுகள் உடனடியாக நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
1-ஆம் பிரிவிற்கான 2. (இதில் இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) 2017-ஆம் ஆண்டு
சட்டம் 42/2017.
திருத்தம்.
தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும்
பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் 1 ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவிற்கு பின்பு
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(2-A) அரசு இந்த சட்டத்தின் வகைமுறைகள் அனைத்தும் அல்லது அவற்றில் ஏதேனும் அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகும் நாளன்று பிற பகுதி எதிலும்
நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கை வாயிலாகப் பணிக்கலாம்''.
4-ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில் "தொண்ணூறு நாட்கள்", என்று வருகின்ற சொற்றொடருக்கு பதிலாக "இருநூற்று பத்து நாட்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
47 ஆம் பிரிவிற்கான 4. முதன்மைச் சட்டத்தின் 47-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில் வரம்புரையில்.—
திருத்தம்.
(i) "180 நாட்கள்", என்ற சொற்றொடருக்கு பதிலாக "270 நாட்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) "270 நாட்கள்", என்ற சொற்றொடருக்கு பதிலாக "360 நாட்கள்" எனும்
சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
நீக்கறவும் 5. (1) 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் காப்புரையும்.
தமிழ்நாடு அவசரச் சட்டம் 1/2019.
உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் (திருத்த) அவசரச் சட்டமானது, இதன் மூலம் நீக்கறவு செய்யப்படுகிறது. .
40தமிழ்நாடு சட்டம் (2) அவ்வாறு நீக்கறவு செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச்
42/2017.
சட்டத்தின்படி 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும்
வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் கீழ்
எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் இந்தச் சட்டத்தின் படி செய்யப்பட்டிருப்பதாகவோ, அல்லது
எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபிரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர், சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
41தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 25-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது. மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 25/2019.சட்ட எண் 25/2019.
20072007-ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூகப் பாதுகாப்பு தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். மற்றும் நலம்) சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இது, இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும்
தொடக்கம் 1. (1) இந்தச் சட்டம் 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன் பிடித்தலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
9-ஆம் பிரிவிற்கான சட்டம் 19/2007
திருத்தம் 2. 2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் மீன்பிடித்தலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள செயல்பாடுகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தின் 9-ஆம் பிரிவில் (4) -ஆம் உட்பிரிவில்,-
(i) (iii)-ஆம் கூறில் "ஐந்து பைசா என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "பத்து பைசா என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) (iv)-ஆம் கூறில் "பத்து பைசா என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருபது பைசா என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(iii) (v)-ஆம் கூறில் "5 சதவீதம் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "7 சதவீதம் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(iv) (vi)-ஆம் கூறில் "5 சதவீதம் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "7 சதவீதம் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(v) (vii) கூறுக்குப் பதிலாக பின்வரும் கூறு மாற்றாக அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது :-
"(vii) தமிழ்நாடு மீனவர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களால் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒரு உறுப்பினருக்கும் இருபது ரூபாய் விகிதத்தில்".
(vi) (viii) -ஆம் கூறில் "ஒரு ரூபாய் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "இரண்டு ரூபாய் என்கின்ற விகிதத்தில்" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபிரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர், சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
42 43தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2019-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 31-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 34/2019சட்ட எண் 34/2019
2016 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை 2016 - ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) திருத்தச் சட்டம் என்று வழங்கப் பெறும்.
மற்றும் தொடக்கம் (2) (a) (a) பிரிவு 2, 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(b) (b) பிரிவுகள் 3, 6 மற்றும் 7 ஆம் பிரிவின் (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவு மற்றும் பிரிவு 8, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 11 ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(c) (c) பிரிவு 4, 2017 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 1 ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
(d) (d) பிரிவு 5, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 27 ஆம் நாளன்று செல்லாற்றலுக்கு வந்து விட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
3 ஆம் தமிழ்நாடு சட்டம்
14/2016
பிரிவிற்கான திருத்தம் 2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவில் (j)(j) கூறில், (vii) (vii) ஆம் கூறுக்குப் பதிலாக பின்வரும் உட்கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அதாவது:-
(vii)vii) 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாளுக்கு முன்பு ஆறு மாதங்களுக்கு மேம்பட்டு இராணுவ தபால் பணியில் மாற்றுப் பணியில் இருந்துள்ள நபர் எவரும்;
(viii)(viii) வெளியேற்றப்பட்ட அல்லது மருத்துவ அடிப்படையில் விடுவிக்கப்பட்ட மற்றும் மருத்துவ அல்லது மாற்றுத்திறன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ள நபர் எவரும்;
(ix)(ix) அவருடைய பணி நீண்ட காலத்திற்குத் தேவைப்படாது என்கின்ற காரணத்திற்காக மற்றும் ஓய்வூதியம் பெறப்பட்டுள்ளதற்காக இராணுவ விதி 13(3) III (V) III (V) இராணுவ விதியின்படி 1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் அன்று அல்லது அதன் பின்பு விடுவிக்கப்பட்ட நபர் எவரும்;
(x) x) நேரத்திற்கேற்ப அரசால் அறிவிப்பு செய்யப்படலாகிறவாறான அத்தகைய பிற நபர்
வரம்புரையாக:வரம்புரையாக: அனைத்து நேர்வுகளிலும் பணி எதிலும் பதவி ஒன்றிற்காக அல்லது பிரிவு அல்லது இனத்திற்காக ஒரு தடவை பணி நியமனம் செய்யப்பட்டிருக்கின்ற முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் அவருடைய மேலுமான பணியமர்த்துவதற்காக அவர் ஒரு முன்னாள் இராணுவத்தினராக பணி செய்திருக்கிறேன் என்பதற்காக சலுகையை கோர இயலாது.
மேலும் வரம்புரையாக: மேலும் வரம்புரையாக: இராணுவ விதி 13(3) III(V)III(V)இன்படி 1987 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களுக்கு முன்பு அவருடைய பணி நீண்ட காலத்திற்குத் தேவைப்படாது என்கின்ற காரணத்திற்காக விடுவிக்கப்பட்ட நபர் முன்னாள் இராணுவத்தினராக ஆக மாட்டார்.
3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவு மாற்றாக
4 ஆம் பிரிவிற்கான அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மாற்றாக்கம் "4. அரசின் கீழ் பதவிகளைக் கொண்டிருக்கும் நபர்கள் இணைப்புப் பட்டியல் XIII XIII இல் குறித்துரைக்கப்பட்டவாறு தொகுதிகளாக வகைப்படுத்தப்படுதல் வேண்டும்."44 8 ஆம் பிரிவிற்கான
திருத்தம்
4. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவில் முதலாம் வரம்புரையில் "பட்டப்படிப்பு ஒன்றை வைத்திருப்பவர்" என்கின்ற சொற்றொடர் விட்டுவிடப்படுதல் வேண்டும்.
20 ஆம் பிரிவிற்கான
5. முதன்மைச் சட்டத்தின் 20 ஆம் பிரிவில் (5) ஆம் உட்பிரிவிற்கான திருத்தம்
வரம்புரையில் விட்டுவிடப்பட்டது.
26 ஆம் பிரிவிற்கான
திருத்தம்
6. முதன்மை சட்டத்தின் 26 ஆம் பிரிவில், 2 ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையில், "தர ஊதியம் இரண்டாயிரம் மற்றும் எண்ணூறு ரூபாய்க்கு" மிகாத தர ஊதியத்துடன் உள்ள பதவிகளுக்கான நேரடி பணி நியமனம் என்கின்ற நேர்வில் வகை செய்யப்பட்டிருப்பது" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "ஊதிய அமைப்பு முறையில் நிலை 10 க்கு மிகாத ஊதியத்துடன் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனம் என்கின்ற நேர்வில்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
7. முதன்மைச் சட்டத்தில்
பிற சொற்றொடர்களால்
குறித்த சில சொற்றொடர் களுக்கான சுட்டுகைகளின்
மாற்றாக்கம்
(1) (i)(i) 7 ஆம் பிரிவின் (i)(i) ஆம் உட்பிரிவில், 40 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவின் (ii) (ii) ஆம் மற்றும் (iii)(iii) ஆம் கூறுகளில் மற்றும் XIXI ஆம் இணைப்புப் பட்டியலிலுள்ள "ஊதிய ஏற்றமுறை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக அது எங்கெல்லாம் வருகின்றதோ அங்கெல்லாம் "ஊதிய அமைப்பு முறையிலுள்ள ஊதியத்தின் நிலைகள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii) (ii) 39 ஆம் பிரிவில் "காலமுறைப்படியான ஊதிய ஏற்ற முறை" மற்றும் "காலமுறைப்படியான ஏற்றமுறை" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "ஊதிய அமைப்பு முறையிலுள்ள ஊதியத்தின் நிலைகள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (i)(i) (3)ஆம் பிரிவின் (a)(a) கூறில் 29 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவிற்குரிய வரம்புரையில் 40 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் 41 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்குரிய இரண்டாம் வரம்புரையில் மற்றும் 47 ஆம் பிரிவின் 7 ஆம் உட்பிரிவிலுள்ள "ஊதிய ஏற்ற முறை அல்லது ஊதியக் கட்டு" என்ற சொற்றொடருக்கு பதிலாக அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் "ஊதிய அமைப்பு முறையில் உள்ள ஊதியத்தின் நிலைகள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ii)(ii) 7 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் "கால ஊதிய ஏற்றமுறை அல்லது ஊதிய கட்டு" என்கின்ற சொற்றொடர் வரும் இரண்டு இடங்களில் "ஊதிய அமைப்பு முறையில் உள்ள ஊதிய நிலைகள்" என்ற சொற்றொடர்க்கு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(iii)(iii) 28 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் மற்றும் 47 ஆம் பிரிவின் (6) ஆம் உட்பிரிவில் (ii)(ii) ஆம் கூறில் இரண்டு இடங்களில் எங்கெல்லாம் "காலமுறை ஊதிய ஏற்றமுறை அல்லது ஊதிய கட்டு" என்கின்ற சொற்றொடர்க்கு பதிலாக "ஊதிய அமைப்பு முறையில் உள்ள ஊதியத்தின் நிலைகள்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
8. முதன்மைச் சட்டத்திற்குரிய XIIXII ஆம் இணைப்புப் பட்டியலுக்கு பிறகு பின்வரும் இணைப்புப் பட்டியல் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது :-
45"இணைப்புப் பட்டியல் - "இணைப்புப் பட்டியல் - XIIIXIII
[4 ஆம் பிரிவைப் பார்க்க]
தொகுதி AA 59,300 - 1,87,700 ரூபாயிலிருந்து 1,28,900 - 2,25,000 ரூபாய் வரையிலான ஊதிய அளவினை பெறும் பதவிகளில் உள்ள பணியாளர்கள் (ஊதிய அமைப்பு முறையில் உள்ள 25 முதல் 32 வரையிலான நிலைகள்)
XIII ஆம் புதிய இணைப்பு பட்டியலினை சேர்த்தல் தொகுதி BB 35,900 - 1,13,500 ரூபாயிலிருந்து 57,700 - 1,82,400 ரூபாய் வரையிலான ஊதிய அளவினை பெறும் பதவிகளில் உள்ள பணியாளர்கள் (ஊதிய அமைப்பு முறையில் உள்ள 13 முதல் 24 வரையிலான நிலைகள்)
தொகுதி CC 15,900 - 50,400 ரூபாயிலிருந்து 35,600 - 1,12,800 ரூபாய் வரையிலான ஊதிய அளவினை பெறும் பதவிகளில் உள்ள பணியாளர்கள் (ஊதிய அமைப்பு முறையில் உள்ள 2 முதல் 12 வரையிலான நிலைகள்)
தொகுதி D D 15,700 - 50,000 ரூபாய் வரையிலான ஊதிய அளவினை பெறும் பதவிகளில் உள்ள பணியாளர்கள் (ஊதிய அமைப்பு முறையில் உள்ள 1 ஆம் நிலை)".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபிரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,
உதவி இயக்குநர், சட்ட (ஆட்சி மொழிப்பிரிவு)த் துறை.
46 47த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ல் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 9 - ஆ ம் ஆ ண் டு ஆகஸ்ட் திங்கள் 19 ஆம் நாளன்று குடியரசுத்தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 36/2019.சட்ட எண் 36/2019.
2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் 2013 - ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வளிப்பு மறுகுடியமர்விற்குமான உரிமைச் சட்டத்தை ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வளிப்பு மறுகுடியமர்விற்குமான உரிமைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். தமிழ்நாட்டில் அதனுடைய பொருந்துகை. திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம். தமிழ்நாட்டில் அதனுடைய பொருந்துகை
இந்தியக் குடியரசின் அறுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாக:-
குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் தொடக்கம்.
1. (1) இந்தச் சட்டம் 2014 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வளிப்பு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமை (தமிழ்நாடு இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
(3) இது, 2014 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு
வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
மையச் சட்டம்
24 ஆம் 30/2013
பிரிவிற்கான திருத்தம் 2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக்குறிப்பிடப்படுவதான 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தலில், நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வளிப்பு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டத்தில் 24 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் வரம்புரைக்குப் பின்பு பின்வரும் வரம்புரை மற்றும் விளக்கம் சேர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
மேலும் வரம்புரை:மேலும் வரம்புரை: ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி தொடங்கப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் நேர்வில் 2014 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 1 ஆம் நாளன்று இருந்தவாறு நீதிமன்றத்தின் முன்பு வில்லங்கத்தின்படி நிலம் கையகப்படுத்துதல் அல்லது நிலம் கையுடைமையில் இல்லாமல் இருக்கின்றவிடத்து அல்லது நில உரிமையாளர் சரியீட்டு எதனையும் செய்யாமல் இருக்கிறவிடத்து அல்லது 2014 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 1 ஆம் நாளன்று இருந்தவாறு சரியீட்டுத் தொகைையினை கோராமல் இருக்கிறவிடத்து அல்லது நில உடைமை எடுக்கப்பட்டிருக்கிறவிடத்து, ஆனால் நிலம் அல்லது அதனின் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அல்லது நிலத்தின் கையுடைமை அல்லது நிலத்தின் பகுதி எடுக்கபடாமலிருக்கின்றவிடத்து ஆக்கிரமிப்பு எதனின் கணக்கின் பேரில் பொருந்துலாகாது.
விளக்கம்:- 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி (மையச் சட்டம் 1/1894) செலுத்தத்தக்க சரியீடு கருவூலமொன்றில் அல்லது நீதிமன்றமொன்றில் வைப்பீடு செய்யப்பட்டிருக்கிறவிடத்து அத்தகைய சரியீடு இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக பயனாளிகளின் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் வகைமுறைகளுக்கிணங்க செலுத்தப்பட்டதாகவும் கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபிரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.