Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments

Published 23 October 2019

Type
Ordinary
Gazette no.
43
Part
Part III
Notifications
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT -Notification
Section
Section 1a-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-10-23.Ordinary_43_Part-III_Section-1a-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 43] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 23, 2019 ஐப்பசி 6, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 139, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M1)த் துறை, 13 ஆகஸ்ட் 2019.] தமிழ்நாடு 2009-ஆம் ஆண்டு சட்டமுறையிலான எடையளவு சட்டத்தின் (மத்தியச் சட்டம் 1/2010) 53-ஆம் பிரிவைச் சேர்ந்த (1), (2) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, வெளியிடக் கருதியுள்ள தமிழ்நாடு 2011-ஆம் ஆண்டு சட்டமுறையிலான எடையளவு (செயலாக்கம்) விதிகளின் பின்வரும் வரைவுத்திருத்தம் மேற்சொன்ன சட்டத்தின் மேற்சொன்ன 53-ஆம் பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முப்பது நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், பின்வரும் இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவான முப்பது நாட்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் நல ஆணையாளர் வாயிலாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு (இருபடிகளில்) அனுப்பி வைக்க வேண்டும்.

வரைவுத்திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், விவர அட்டவணை-i-இல் (விதி 10இல் குறிப்பிடப்பட்டது), அட்டவணையில், 26-ஆம் வரிசை எண்ணிற்கு பின்னர், நெடும்பத்தி (1) மற்றும் நெடும்பத்தி (2) மற்றும் நெடும்பத்தி (3)இன் நிகரான பதிவுகளில், பின்வரும் பதிவுகள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், அதாவது:-

"(27) பால் எடை மற்றும் அளவு"

சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

iii-1a-(43) (T Sup)—1

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 23 October 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-10-23.Ordinary_43_Part-III_Section-1a-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-10-23.Ordinary_43_Part-III_Section-1a-T-Sup.