© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 3.20 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 44] சென்னை, புதன்கிழமை, அக்டோபர் 30, 2019 ஐப்பசி 13, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்
[அரசாணை (நிலை) எண் 419, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(i2)த் துறை, 15 ஜூலை 2019.] 1955-ஆம் ஆண்டு பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏனைய செய்தித்தாள் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) மற்றும் பலவகை விதித்துறைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 45/1955) 17-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு 30.03.2016 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம்-ii, பிரிவு (2)இல் 241-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii(2)/LE/257/2016-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு, அந்த அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மேற்சொன்ன (1)-ஆம் உட்பிரிவின் கீழ் சான்றிதழ்களை வழங்க அதிகாரம் உள்ளதென இதனால் குறிப்பிடுகிறார்.
அட்டவணை
தொடர்
அலுவலர்கள் பகுதிகள்
எண் (1)
(2)
(3)
1. தொழிலாளர் நல இணை ஆணையர் i, சென்னை. சென்னை மாநகராட்சி நீங்கலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களுக்குள் உள்ள பகுதிகள்.
2. தொழிலாளர் நல இணை ஆணையர் ii, சென்னை. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய
வருவாய் மாவட்டங்கள்.
3. தொழிலாளர் நல இணை ஆணையர், வேலூர். வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய
வருவாய் மாவட்டங்கள்.
4. தொழிலாளர் நல இணை ஆணையர், திருச்சிராப்பள்ளி. திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய வருவாய் மாவட்டங்கள்.
5. தொழிலாளர் நல இணை ஆணையர், மதுரை. மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை
ஆகிய வருவாய் மாவட்டங்கள்.
[ 1 ]
DTP-ii-2-(44) (T Sup)—12 தொடர்
அலுவலர்கள் பகுதிகள்
எண் (1)
(2)
(3)
6. தொழிலாளர் நல இணை ஆணையர், திண்டுக்கல். திண்டுக்கல், தேனி மற்றும் கரூர் ஆகிய வருவாய்
மாவட்டங்கள்.
7. தொழிலாளர் நல இணை ஆணையர், திருநெல்வேலி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி
ஆகிய வருவாய் மாவட்டங்கள்.
8. தொழிலாளர் நல இணை ஆணையர், கோயம்புத்தூர். கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய வருவாய்
மாவட்டங்கள்.
9. தொழிலாளர் நல இணை ஆணையர், சேலம். சேலம், தருமபுரி, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வருவாய்
மாவட்டங்கள்.
10. தொழிலாளர் நல இணை ஆணையர், குன்னூர். நீலகிரி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய வருவாய்
மாவட்டங்கள்.
அறிவிக்கை-ii
[அரசாணை (நிலை) எண் 419, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(i2)த் துறை, 15 ஜூலை 2019.] 1955-ஆம் ஆண்டு பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏனைய செய்தித்தாள் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) மற்றும் பலவகை விதித்துறைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 45/1955) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் மேற்சொன்ன சட்டத்தின் 17-Bஆம் பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவில் கீழ் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிக்கைகளை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் செயல் நோக்கங்களுக்காக, கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை, ஆய்வாளர்களாக இதனால் நியமிப்பதுடன், இந்த அட்டவணையின் நெடும்பத்தி (3)இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டவாறாக, அவர்களின் அதிகாரவரம்பிற்குட்பட்ட பகுதியில் செயல்படும் வகையில் உள்ளூர் எல்லைகளையும் வரையறை செய்கிறார்.
அட்டவணை
நபர்கள் உள்ளூர் வரம்பெல்லைகள் தொடர் எண்
(2)
(3)
(1)
1. தொழிலாளர் நல ஆணையாளர், சென்னை. தமிழ்நாடு மாநிலம் முழுமைக்கும்
2. மண்டலத் தொழிலாளர் நல இணை ஆணையாளர் 1965 - ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல்
சட்டத்தின் கீழ் (மத்தியச் சட்டம் 21/1965) 27-ஆம்
பிரிவைச் சேர்ந்த (1)-ஆம் உட்பிரிவின் கீழ் ஒதுக்கீடு
செய்யப்பட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகள் 3. மக்கள் தொடர்பு அலுவலர், தொழிலாளர் ஆணையர்
அலுவலகம், சென்னை.
சென்னை மாநகராட்சி நீங்கலாக, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களின்
எல்லைக்குட்பட்ட பகுதிகள்.
4. தொழிலாளர் நல உதவி ஆணையாளர் (செயலாக்கம்) 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள்
சட்டத்தின் கீழ், அவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட
உள்ளூர் வரம்பெல்லைகள்.
5. தொழிலாளர் நலத் துணை ஆய்வாளர்கள் 2009-ஆம் ஆண்டு சட்டமுறை எடையளவுகள்
சட்டத்தின் கீழ், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
உள்ளூர் வரம்பெல்லைகள் (மத்தியச் சட்டம் 1/2010).
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்) 3 [அரசாணை (நிலை) எண் 154, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 26 ஆகஸ்ட் 2019] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 9-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பட்டாசு தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக, விசாரணைகள் நடத்துவதற்கும், மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார், அதன் விவரம் வருமாறு:-
தனிப்பட்ட நபர்கள்:—
(1) தொழிலாளர் துறை இணை ஆணையர், மதுரை. தலைவர் (2) தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்), விருதுநகர் செயலாளர் (3) உதவி இயக்குநர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, சிவகாசி கோட்டம், உறுப்பினர் விருதுநகர் மாவட்டம்.
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:—
உறுப்பினர்
(1) திரு. P. முருகன்,
அண்ணா தொழிற்சங்க பேரவை,
எண். 1/241, பிள்ளையார் கோவில் தெரு,
நாராயணபுரம், சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
உறுப்பினர்
(2) திருமதி K. சமுத்திரம்,
அனைத்திந்திய தொழிற்சங்க மையம்,
எண். 2/1860, இந்திரா நகர், விஸ்வநாதம்,
சிவகாசி வட்டம், விருதுநகர் மாவட்டம்.
உறுப்பினர்
(3) திரு. R. கண்ணண்,
இந்திய பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம்,
திருவாளர்கள் ஆகாஷ் பட்டாசு தொழிற்சாலை,
நரிக்குடி, காக்கிவடன்பட்டி, சிவகாசி.
வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:—
(1) திரு. G. அபிரூபன்,
உறுப்பினர்
துணைத் தலைவர், தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கம், அய்யன் பட்டாசு தொழிற்சாலை, (தனியார் வரையறுக்கப்பட்டது) எண். 4, தலைவர் சண்முகம் சாலை, சிவகாசி-626 123.
உறுப்பினர்
(2) திரு. S.S. விஜயகுமார்,
துணைத் தலைவர்,
தமிழ்நாடு பட்டாசு மற்றும் வெடிமருந்து தயாரிப்பாளர்கள் சங்கம்,
ரத்னா பட்டாசு தொழிற்சாலை, எண். 406, சி.ப்பி.கே.எஸ்.ஏ ஆறுமுகம் சாலை, சிவகாசி-626 123.
உறுப்பினர்
(3) திரு. P. கணேசன்,
நிருவாக இயக்குநர்,
சோனி பட்டாசு தொழிற்சாலை, (தனியார் வரையறுக்கப்பட்டது) எண். 74-C, வேலாயுதம் சாலை, சிவகாசி- 626 123.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்) ந. அருள், 4 [அரசாணை (நிலை) எண் 155, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 26 ஆகஸ்ட் 2019] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதி மற்றும் 9-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தீப்பெட்டி தயாரிப்புத் தொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக, விசாரணைகள் நடத்துவதற்கும், மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் பின்வரும் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை இதனால் நியமிக்கிறார், அதன் விவரம் வருமாறு:-
தனிப்பட்ட நபர்கள்:—
(1) தொழிலாளர் துறை இணை ஆணையர், மதுரை. தலைவர் (2) தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்), விருதுநகர். செயலாளர் (3) புள்ளியியல் உதவி இயக்குநர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை,
உறுப்பினர் சிவகாசி கோட்டம், விருதுநகர் மாவட்டம்.
தொழிலாளர்களின் பிரதிநிதிகள்:—
(1) திரு. M.A. சர்தார்,
உறுப்பினர்
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எண். 49, எல்லம்மன் கோவில் தெரு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.
(2) திருமதி R. கிருஷ்ணவேணி,
உறுப்பினர்
இந்திய வணிக தொழிற்சங்க மையம், தூத்துக்குடி மாவட்ட குழு அலுவலகம், எண்.145/1A, எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-628 002.
(3) திருமதி M. மகாலட்சுமி,
உறுப்பினர்
விருதுநகர் மாவட்டம் பட்டாசு/ தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கம், எண்.3/1115-2, முத்துராமலிங்கம் நகர், விருதுநகர் வட்டம், விருதுநகர் மாவட்டம்-626 001.
வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:—
(1) திரு. R. செண்பகராஜன்,
உறுப்பினர்
செயலாளர், சிவகாசி அனைத்திந்திய தீப்பெட்டி தொழிற்சாலைகளின் கழகம், ஸ்ரீ காளீஸ்வரி வண்ண தீப்பெட்டி தொழிற்சாலை, எண். 37/4A, தலைவர் சண்முக நாடார் சாலை, சிவகாசி.
(2) திரு. M. ஜெயகணேசன்,
உறுப்பினர்
மகேஷ் தீப்பெட்டி தொழிற்சாலை, எண். 46-2, முதலியார் வடக்குத் தெரு, கடலையூர், எட்டயபுரம் வட்டம்.
(3) திரு. V.G. தனபால்,
உறுப்பினர்
துணைத் தலைவர்,
அனைத்திந்திய தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம், எண். 2, ஐயக்கார தெரு, காமாட்சி அம்மன் பேட்டை, குடியாத்தம்-632 602.
சுனீல் பாலீவால், அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்) 5 [அரசாணை (2D) எண் 57, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 14 ஆகஸ்ட் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும் 29-11-1995-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii-பிரிவு-2-இல் 1038 முதல் 1040 வரையிலான பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ii(2)தொ.வே.வா./3691/95-ஆம் எண் அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a)-பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப்பார்த்த பின்னர், கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வாங்கிய தேயிலைத்தோட்ட தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் வகையினருக்கு, அந்த விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கத்தக்க குறைந்தளவு ஊதிய வீதங்களை இதனால் திருத்தியமைக்கிறார்.
(2) இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்தும் அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கு வரும்.
விவர அட்டவணை
வாங்கிய தேயிலைத்தோட்டத் தொழிற்சாலை பணியில் வேலைவாய்ப்பு
பணியின் வகைகள்
தொடர் எண்
குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள்
(1) (2)
(3)
ரூ. காசு
1 எழுத்தர் மற்றும் கணினி இயக்குபவர் மாதமொன்றுக்கு 6100.00
2 கணக்கர்
மாதமொன்றுக்கு 6527.00
3 காசாளர்
மாதமொன்றுக்கு 7015.00
4 ஏவலர் அல்லது துணையாள் மாதமொன்றுக்கு 5185.00
5 காவலாள் மாதமொன்றுக்கு 5185.00
6 இயந்திரக் கம்மியர் மாதமொன்றுக்கு 7015.00
7 மின் வினைஞர் மாதமொன்றுக்கு 7442.00
8 மேற்பார்வையாளர் மாதமொன்றுக்கு 6100.00
9 உதவி மேற்பார்வையாளர் மாதமொன்றுக்கு 5612.00
10 சுமையுந்து ஓட்டுநர் மாதமொன்றுக்கு 6527.00
11 சீருந்து ஓட்டுநர் மாதமொன்றுக்கு 6100.00
12 துப்புரவு பணியாளர் மாதமொன்றுக்கு 5185.00
13 தேநீர் தயாரிப்பவர் மாதமொன்றுக்கு 9272.00
14 தேநீர் தயாரிப்பவரின் உதவியாளர் மாதமொன்றுக்கு 7442.00
15 பெருக்குபவர் (முழு நேரம்) மாதமொன்றுக்கு 5185.00
16 *பெருக்குபவர் (பகுதி நேரம்) மாதமொன்றுக்கு 2593.00
17 தொழிற்சாலைப் பணியாளர்கள் நாளொன்றுக்கு 185.00
மேலே குறிப்பிடப்படாத ஏனைய யாதொரு
நாளொன்றுக்கு 185.00
18
வகைப் பணியாளர்
*குறிப்பு: ஒரு நாளில் நான்கு மணி நேரம் அல்லது நான்கு மணி நேரத்திற்கு குறைவாக பணிபுரியும் தொழிலாளர் பகுதி நேரப் பணியாளராக கருதப்படுவார்.
"விளக்கங்கள்.-– (1) அகவிலைப்படி : மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பணியாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை மாநகரத்திற்கு, 2001=100 என்பதன் அடிப்படையில் 161 புள்ளிகள் ஆகும்.
161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 1.10 (ஒரு ரூபாய் பத்து காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படியாக வழங்கப்பட வேண்டும்.
6(ii) ஜூலை முதல் நாள், அக்டோபர் முதல் நாள், ஜனவரி முதல் நாள் மற்றும் ஏப்ரல் முதல் நாளிலிருந்து தொடங்கும் முந்தைய இரண்டாவது காலாண்டிற்கு, 2001=100 என்ற அடிப்படையில் சென்னை மாநகரத்தின் நுகர்வோர் விலைப்புள்ளிகளின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு, முறையே ஜனவரி முதல் நாள், ஏப்ரல் முதல் நாள், ஜூலை முதல் நாள் மற்றும் அக்டோபர் முதல் நாளிலிருந்து அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முதல் கணக்கீடு, மேலே வரையறுக்கப்பட்டுள்ள முறையின் அடிப்படையில், இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) (a) நாள் ஊதியவீதங்களைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26-ஆல் வகுக்க வேண்டும்.
(b) மாதாந்திர ஊதியங்கலைக் கணக்கிடுவதற்கு, நாள் ஊதியத்தை 30-ஆல் பெருக்க வேண்டும்.
(3) ஒரே தன்மையுடைய பணியைச் செய்யும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்களிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (2D) எண் 58, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 14 ஆகஸ்ட் 2019.] 1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியிலும், 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு வெளியிடக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கையின் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோரியுள்ளவாறு, அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இது தொடர்பாக, 14-11-2019 அன்று அல்லது அதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரை தமிழ்நாடு அரசால் பரிசீலிக்கப்படும் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை, சென்னை-600 005, சேப்பாக்கத்திலுள்ள நிலச் சீர்திருத்த இயக்குநர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவு அறிவிக்கை
1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதி, மேற்படி சட்டத்தின் 5-ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டும், 18-03-2015-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் ii பிரிவு-2-இல் 250-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ii/தொவே/133/2015-ஆம் எண்ணுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அறிவிக்கையை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாகவும், தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் அட்டவணையின் பகுதி-ii-இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்கள் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு ஊதிய வீதங்களை, விவர அட்டவணையின் (3)-ஆம் நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைக்கிறார்.
விவர அட்டவணை
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு
தொழிலாளர் வகைகள்
தொடர் எண்
நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (1) (2)
(3)
ரூ.500/-
1 அவரால் வழங்கப்பட்ட ஏர் கலப்பை மற்றும் காளை மாடுகளுடன் ஏர் உழுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்
2 அவரால் வழங்கப்படாத ஏர் கலப்பை காளை மாடுகளுடன்
ரூ.400/-
ஏர் உழுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்7 தொழிலாளர் வகைகள்
தொடர் எண்
நாளொன்றுக்கு குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (1) (2)
(3)
3 நெல் அறுவடை செய்தல், போரடிக்கும் களத்திற்கு கொண்டு செல்லுதல், போரடித்தல், நெல் தூற்றிப் புடைத்தல், அளத்தல் மற்றும் மூட்டை கட்டுதல் போன்ற பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
ஆறு மணி நேரம் பணி செய்பவருக்கு அல்லது நாளொன்றுக்கு மொத்த விளைச்சல் உற்பத்தியில் 1/8 பங்கு அளவிற்கு என இதில் எந்த பணி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறதோ, அதற்கேற்ப, நாளொன்றுக்கு ரூ.299/- 4 நெல் நீங்கலாக, பயிர்களை அறுவடை செய்வதில்
ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்
ஆறு மணி நேரம் பணி செய்பவருக்கு நாளொன்றுக்கு ரூ.299/- 5 விதை விதைத்தல், நாற்று பறித்தல், நாற்றை எடுத்து
ஆறு மணி நேரம் பணி செய்பவருக்கு நாளொன்றுக்கு ரூ.299/- மீண்டும் பயிரிடுதல் அல்லது களையெடுத்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்
6 வரப்பு மற்றும் வயல்வெளிகளை சமன்படுத்துதல், தேனீ
ஆறு மணி நேரம் பணி செய்பவருக்கு நாளொன்றுக்கு ரூ.299/- வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை, மரங்களில் ஏறுதல் போன்ற வேளாண் செயல்பாடுகள் போன்ற பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்
விளக்கங்கள்.-–(1) மேற்சொன்ன திருத்தியமைக்கப்பட்ட குறைந்தளவு ஊதிய வீதங்கள், வேளாண், தோட்டக்கலை மற்றும் ஏனைய அரசுத் துறைகளால் பராமரிக்கப்பட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பண்ணைகளின் கீழ் உள்ள கல்லூரிகள் மற்றும் ஆய்வு நிலையங்களில் பணிபுரியும் வேளாண் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
(2) அன்றாடம் பணிபுரியும் பணி நேரங்களில் யாதொரு மாற்றம் இல்லாத நேர்வில், ஒரே மாதிரியான பணி அல்லது அதே தன்மையுடைய பணியினை செய்யும்போது, 1976-ஆம் ஆண்டு சமமான மதிப்பூதியச் சட்டத்தின்படி (மத்தியச் சட்டம் 25/1976) ஊதியம் அளிப்பதில் ஆண் மற்றும் பெண் பணியாளர்களிடையே எவ்வித பாகுபாடும் இருக்கக்கூடாது.
(3) இந்த அறிவிக்கையின் செயல்நோக்கத்திற்காக, மேலே குறிப்பிடப்பட்ட குறைந்தளவு ஊதிய வீதங்களில், அடிப்படை ஊதிய வீதம், வாழ்க்கை செலவுக்கான படி மற்றும் சலுகைக்கான ரொக்க மதிப்பு, ஏதேனுமிருப்பின், அவற்றிற்கான அனுமதிக்கப்படுகின்ற வீதங்கள் அடங்கும். ஆனால், பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மதிப்பு, ஏதேனுமிருப்பின் அவை அவற்றில் சேர்க்கப்படமாட்டாது மற்றும் அதனால் உணவுக்கான மதிப்பு பணியாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தளவு ஊதிய வீதங்களிலிருந்து குறைக்கப்படாது.
சுனீல் பாலீவால்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.