[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 12.80 காசு[விலை : ரூ. 12.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 46]
சென்னை, புதன்கிழமை, நவம்பர் 13, 2019 ஐப்பசி 27, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது, மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 27/2018.
1947&ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும்
திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:—
குறுந்தலைப்பு 1. (1) இந்த சட்டமானது 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இது, மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(தமிழ்நாடு சட்டம் XXXVI / 1947)
2-ஆம் 2. 1947-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் (இதில் இதன்பின்பு முதன்மைச்சட்டம் என சுட்டப்பட்டவாறு) 2-ஆம் பிரிவில் (17)-ஆம் கூறுக்குப்
பிரிவிற்கான திருத்தம்.
பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(17-a) "நேரம்" என்பது இந்திய நிலையான நேரம் அது கிரீன்விச் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட ஐந்தரை மணி நேரங்களை உடையது என்று பொருள்படும்."
3-ஆம்
3. முதன்மைச்சட்டத்தின் 3-ஆம் பிரிவிற்காக, பின்வரும் பிரிவுகளைப் மாற்றாக புகுத்துதல் வேண்டும் அதாவது:-
"3. கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பதிவு செய்தல்.-
பிரிவிற்கு மாற்றான பிரிவு.
(1) 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று மற்றும் தொடக்கத் தேதியிலிருந்து பத்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்கள் பணிபுரிகின்ற ஒவ்வொரு நிறுவனத்தின் பணிக்கு அமர்த்துநர், தன்னுடைய வணிகம் தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் பதிவிற்காக விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழைப் பெறுதல் வேண்டும்.
[ 1 ]
DTP-IV-2-(46) (T Sup)—12 (2) உட்பிரிவு (1)-ன் படி பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றையும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவம் மற்றும் அத்தகைய முறையில் இருத்தல் வேண்டும்.
(3) உட்பிரிவு (2)-ன் படி ஆய்வாளர், விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டதன் பேரில் நிறுவனங்களை பதிவு செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் பணி அமர்த்துநருக்கு பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(4) ஆய்வாளர், நிறுவனங்களின் பதிவேட்டை பராமரித்தல் வேண்டும் மற்றும் ஆய்வாளரால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை பணி அமர்த்துநர் நிறுவனத்தில் பகிரங்கமாக காட்சிக்கு வைத்தல் வேண்டும்.
(5) (a) பதிவுச்சான்றிதழானது ஐந்து ஆண்டு காலத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய கட்டணங்களை செலுத்துவதன் பேரில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் வேண்டும் மற்றும் (2) மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகளின் வகையங்களானது பதிவுச் சான்றிதழை புதுப்பித்தலுக்காக பொருந்தும்;
(b) பணி அமர்த்துநர் ஒவ்வொருவரும் புதிவுச் சான்றிதழின் செல்லும் காலம் முடிவடைந்ததிலிருந்து முப்பது நாட்களுக்கு முன்பாக அவருடைய பதிவுச் சான்றிதழை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தல் வேண்டும்.
(6) ஆய்வாளரால் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட தேதியிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் பதிவு செய்தலுக்கான அல்லது பதிவுச் சான்றிதழை புதுப்பித்தலுக்கான சான்றிதழை வழங்காதிருக்குமேயானால் இந்தச் சட்டத்தின்படி பதிவுச்சான்றிதழை வழங்கியதாகவோ அல்லது நேர்விற்கேற்ப புதுப்பிக்கப்பட்டதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.
(7) பணி அமர்த்துநர், (2) ஆம் உட்பிரிவின்படி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் எதிலும் செய்த மாற்றம் எதையும் அத்தகைய மாற்றம் செய்ததிலிருந்து முப்பது நாட்கள் காலத்திற்குள் ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில் பதிவுச்சான்றிதழை திருத்தம் செய்தல் வேண்டும் அல்லது புதிய பதிவுச் சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
(8) பணி அமர்த்துநர், நிறுவனத்தை மூடிய முப்பது நாட்கள் காலத்திற்குள் அத்தகைய மூடிய தகவலை ஆய்வாளருக்கு தெரிவித்தல் வேண்டும் மற்றும் அத்தகைய தகவலைப் பெற்றுக் கொண்டதன் பேரில், அவர் பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
ஆனால், நிறுவனம் மூடப்பட்ட தகவலை பெற்றுக் கொண்டது பிறவாராக இருப்பினும், ஆய்வாளர் மனநிறைவடைகிறவிடத்து அவர் அத்தகைய பதிவுச் சான்றிதழை ரத்து செய்தல் வேண்டும்.
(9) (1) ஆம் உட்பிரிவில் எது எவ்வாறு காணப்படினும், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியன்று பத்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலை செய்கிற தற்போதுள்ள நிறுவனத்தின் பணி அமர்த்துநர் வகுத்துரைக்கலாகிற அத்தகைய3 படிவத்தில் தானே செய்யப்பட்ட விளம்புகையுடன் நிறுவனத்தின் விவரங்களை 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் ஆய்வாளருக்குத் தெரிவித்தல் வேண்டும். ஆய்வாளர் பணி அமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவலை பதிவேட்டில் பதிவு செய்த பின்பு, பதிவுச்சான்றிதழை வழங்குதல் வேண்டும்.
3-A பத்து வேலையாட்களுக்கு குறைவாக வேலைக்கு அமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் தகவல் அளித்தல்,-
(1) பத்து வேலையாட்களுக்குக் குறைவாக வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்தின் பணி அமர்த்துநர் ஒவ்வொருவருக்கும் 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தச்) சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து ஆறு மாதங்கள் காலத்திற்குள் அல்லது அவருடைய வணிகம் தொடங்கிய தேதியிலிருந்து ஆறு மாதங்கள் காலத்திற்குள் அவருடைய வணிகத்தை வகுத்தரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில் தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர், வகுத்துரைக்கலாகிற அத்தகைய பதிவேட்டில் பணி அமர்த்துநரால் அளிக்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தல் வேண்டும்:
ஆனால்: எந்த நேரத்திலும் நிறுவனத்தில் பணி செய்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை பத்து அல்லது அதற்கு அதிகமாக இருக்குமேயானால், இந்தச் சட்டத்தின் வகையங்கள் அனைத்தும் அத்தகைய நிறுவனத்திற்கு பொருந்துதல் வேண்டும் மற்றும் அத்தகைய நிறுவனத்தின் பணி அமர்த்துநர் பதிவிற்காக விண்ணப்பித்தல் வேண்டும் மற்றும் 3-ஆம் பிரிவின் வகையங்களின்படி பதிவுச்சான்றிதழை பெறுதல் வேண்டும்.
(2) பத்துக்கும் குறைவாக வேலை செய்கிற நிறுவனத்தின் பணி அமர்த்துநர் நி று வ ன த் ை த மூ டி ய தி லி ரு ந் து மு ப் ப து ந ா ட் க ள் க ா ல த் தி ற் கு ம் , அ த் த ை க ய மூடியதை ஆய்வாளருக்கு தகவல் அளித்தல் வேண்டும். ஆய்வாளர் தகவலை பெற்றுக் கொண்டதன் பேரில் அவரால் வைத்துவரும் பதிவேட்டிலிருந்து அத்தகைய நிறுவனத்தின் பதிவை நீக்கிவிடுதல் வேண்டும்.
9-ஆம் 4. முதன்மைச் சட்டத்தின் 9-ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் விலக்கக் கூறில் "பத்து மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து நான்கு மணி நேரங்கள்" எனும் சொற்றொடருக்காக
பிரிவிற்கான திருத்தம்.
"பத்தரை மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து ஏழு மணி நேரங்கள்" எனும் சொற்றொடரை முறையே மாற்றாக அமைத்தல் வேண்டும்.
14-ஆம் 5. முதன்மைச் சட்டத்தின் 14-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் விலக்கக் கூறில் "பத்து மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து நான்கு மணி நேரங்கள்" எனும் சொற்றொடர்களுக்காக
பிரிவிற்கான திருத்தம்.
"பத்தரை மணி நேரங்கள்" மற்றும் "ஐம்பத்து ஏழு மணி நேரங்கள்" எனும் சொற்றொடர்களை முறையே மாற்றாக அமைத்தல் வேண்டும்.
45-ஆம் 6. முதன்மைச் சட்டத்தின் 45-ஆம் பிரிவில் "பிரிவுகள் 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை மற்றும் 47" எனும் சொற்றொடருக்காக "பிரிவுகள் 3,
பிரிவிற்கான திருத்தம். 3-A, 7 முதல் 11 வரை, 13 முதல் 23 வரை, 25, 26, 29 முதல் 41 வரை மற்றும் 47" எனும் சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
47-ஹ எனும் 7. முதன்மைச் சட்டத்தின் 47-ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது,-
புதிய பிரிவைப் புகுத்தல்.
"47-A ஆண்டு விவர அறிக்கை,-
நிறுவனத்தின் பணி அமர்த்துநர் ஒவ்வொருவரும் வகுத்துரைக்கலாகிற அத்தகைய படிவத்தில் மற்றும் முறையில் அத்தகைய அதிகார அமைப்பிற்கு ஆண்டு விவர அறிக்கையை அளித்தல் வேண்டும்."4 49-ஆம்
8. முதன்மைச் சட்டத்தின் 49-ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில், "ஐம்பது ரூபாய் வரை நீட்டிக்கலாகும்" எனும் சொற்றொடருக்காக "இரண்டாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்" பிரிவிற்கான திருத்தம்.
எனும் சொற்றொடரை மாற்றாக அமைத்தல் வேண்டும்.
50-A எனும்
9. முதன்மைச் சட்டத்தின் 50-ஆம் பிரிவிற்குப் பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும் அதாவது:-
புதிய பிரிவைப் புகுத்தல்.
"50-A பெண் பணியாளருக்கு எதிராக வேறுப்படுத்திக் காட்டுதலை தடை செய்தல் பணிக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, பணி மாறுதல், பதவி உயர்வு அல்லது ஊதியங்கள் தொடர்பான பொருட்பாடுகளில் பெண் பணியாளரை வேறுப்படுத்திக் காட்டுதல் ஆகாது."
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்(மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
5தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 28/2018.
குறித்த சில இயற்றுச்சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக் கூடியது அற்றுப் போகக் கூடியவையாக இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டம் என்று வழங்கப் பெறும்.
குறித்த சில 2. இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால் அதனின்
இயற்றுச் நான்காவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அளாவுகைக்கு நீக்கறவு செய்யப்பட்டது.
சட்டங்களின்
நீக்கறவு.
காப்புரை.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்; மற்றும் இந்தச் சட்டம் செல்லுந் தன்மையையோ, செல்லாத தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அ ல் ல து ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது தேவையையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகார வரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின் போதோ, வ ழ க் க த் ை த ே ய ா அ ல் ல து ந ை ட மு ை ற ை ய ே ய ா அ ல் ல து இ ரு ந் து வ ரு ம் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அ லு வ ல க த் ை த ே ய ா அ ல் ல து பணி ய ம ர் த் த த் ை த ே ய ா எ வ் வ ா றி ரு ப் பி னு ம் அ ை வ முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் ச ட் ட ம் எ தி லி ரு ந் து ம் எ ந் த மு ை ற யி லு ம் உ று தி ெ ச ய் ய ப் ப ட் டி ரு க் க ல ா ம் அ ல் ல து ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகார வரம்பு எதனையும் மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்க வழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
6இணைப்புப் பட்டியல்
நீக்கறவுகள்
(2-ஆம் பிரிவைப் பார்க்க)
ஆண்டு எண் குறுந்தலைப்பு நீக்கறவின் அளாவுகை (1) (2) (3)
(4)
குடியரசுத் தலைவருடைய சட்டங்கள்குடியரசுத் தலைவருடைய சட்டங்கள்
1976 25 1976 ஆம் ஆண்டு – தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) சட்டம்
1988 7 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாவது திருத்தச் சட்டம்.
1988 23 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்தமிழ்நாடு சட்டங்கள்
முழுவதும் 1954 IV 1 9 5 4 ஆ ம் ஆண் டு த மி ழ் ந ா டு கூ ட் டு ற வு ச ங் க ங் க ள் ( மீண் டு ம் அமைத்துருவாக்குதல் மற்றும் உருவாக்குதல்) சட்டம்.
1978 34 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1979 38 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1979 48 1979 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1980 23 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1981 4 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1981 52 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1982 45 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1983 25 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
71984 4 1984 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1985 12 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1986 15 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1986 25 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1987 5 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1989 35 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1989 38 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) சட்டம்.
1990 3 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) சட்டங்கள் (திருத்தச்) சட்டம்.
1991 23 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1991 30 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) சட்டம்.
1992 17 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1992 50 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1993 2 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1993 3 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1993 10 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1993 29 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1994 5 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1994 23 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1994 59 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
81995 5 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1995 8 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1995 31 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1996 3 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) மூன்றாம் திருத்தச் சட்டம்.
1996 12 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1996 13 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1996 20 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1997 5 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1997 6 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1997 25 1997 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1998 12 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1998 56 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
1999 4 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
1999 49 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2000 34 2000 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2001 11 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2002 41 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2003 35 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி
முழுவதும் அலுவலர்களை அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2004 19 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி
முழுவதும் அலுவலர்களை அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2005 12 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
92006 14 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2007 2 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2007 36 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2008 1 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2008 52 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2009 3 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2009 16 2009ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2010 3 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2010 38 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2011 3 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2011 12 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
2012 1 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) திருத்தச் சட்டம்.
2012 33 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் (தனி அலுவலர்களை
முழுவதும் அமர்த்துதல்) இரண்டாம் திருத்தச் சட்டம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
10 11தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 29/2018.
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கும் மற்றும் இயற்றுச் குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கும் மற்றும் இயற்றுச்
சட்டமொன்றினை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம் . சட்டமொன்றினை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம் .
மு த ல ா ம் இ ணை ப் பு ப் ப ட் டி ய லி ல் கு றி ப் பி ட ப் ப ட் டு ள் ள இ ய ற் று ச் ச ட் ட ங் க ள் வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு நடைமுறையில் இருக்கக் கூடியது அற்றுப் போகக் கூடியவையாக இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
மற்றும் மேலும் இரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு.
1. இந்தச் சட்டம் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் சட்டம் என்று வழங்கப் பெறும்.
குறித்த சில 2. முதலாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால்
இயற்றுச் அதனின் நான்காவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அளாவுகைக்கு நீக்கறவு செய்யப்பட்டது.
சட்டங்களின்
நீக்கறவு.
இயற்றுச் சட்டம்
ஒன்றிற்கான
திருத்தம்.
3. இரண்டாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டம் ஈங்கிதனால் அதனின் நான்காம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் மற்றும் அளாவுகைக்கு திருத்தம் செய்யப்பட்டது.
காப்புரை.
4. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந் தன்மையையோ, செல்லாத தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது தேவையையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அ தி க ா ர வ ர ம் ை ப அ ல் ல து அ ை ம வு மு ை ற ை ய ே ய ா அ ல் ல து வ ா து ை ர யி ன் போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும் பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும் எந்தமுறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
12இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகார வரம்பு எதனையும் மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்க வழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
13முதலாம் இணைப்புப் பட்டியல்முதலாம் இணைப்புப் பட்டியல்
நீக்கறவுகள்நீக்கறவுகள்
(2 ஆம் பிரிவைப் பார்க்க)
(2 ஆம் பிரிவைப் பார்க்க)
ஆண்டு எண் குறுந்தலைப்பு நீக்கறவின் அளாவுகை (1) (2)
(3)
(4)
வட்டாரப் பயன்பாட்டிலுள்ள மையச் சட்டங்கள்வட்டாரப் பயன்பாட்டிலுள்ள மையச் சட்டங்கள்
1837 XXXVI 1837 ஆம் ஆண்டு – தமிழ்நாடு பொதுச்சொத்து நம்பிக்கை மோசடி
முழுவதுமாக நடத்தைச் சட்டம்.
1925 XXXV 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு, வங்காள மற்றும் மும்பை குழந்தைகள்
முழுவதுமாக (துணைச்) சட்டம்.
தமிழ்நாடு ஒழுங்குமுறை விதிகள்தமிழ்நாடு ஒழுங்குமுறை விதிகள்
1802 III 1802 ஆம் ஆண்டு தமிழ்நாடு பண்ணைச் சொத்து நிர்வாக
முழுவதுமாக ஒழுங்குமுறை விதி.
1802 XIX 1802 ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி (தமிழ்நாடு) கடன்கள் தடை
முழுவதுமாக செய்தல் ஒழுங்குமுறை விதி.
1802 XXV 1802 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிரந்தரத் தீர்வு ஒழுங்குமுறை விதி. முழுவதுமாக 1816 XII 1816 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம – நிலங்கள் பூசல்கள் ஒழுங்குமுறை
முழுவதுமாக விதி.
முழுவதுமாக 1817 VII 1817-ஆம் ஆண்டு தமிழ்நாடு அறக்கட்டளை நிதியம் மற்றும் வாரிசுகள் இல்லாதவர்கள் சொத்துக்கள் அரசுக்கு சென்றடைதல் ஒழுங்குமுறை விதி.
1817 VIII 1817 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் நிலுவைத் தொகைகளை
முழுவதுமாக வசூலித்தல் (இராணுவ உரிமையாளர்கள்) ஒழுங்குமுறை விதி.
1822 IV 1822 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிரந்தரத் தீர்வு (பொருள் விளக்கம்)
முழுவதுமாக ஒழுங்குமுறை விதி.
1829 V 1829 – ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து உயில்கள் ஒழுங்குமுறை விதி. முழுவதுமாக 1831 V 1831 ஆம் ஆண்டு தமிழ்நாடு முத்திரைத்தாள் தண்டங்கள்
முழுவதுமாக ஒழுங்குமுறை விதி.
14இரஇரண்டாம் இணைப்புப் பட்டியல்டாம் இணைப்புப் பட்டியல்
திருத்தம்திருத்தம்
(3 ஆம் பிரிவைப் பார்க்க(3 ஆம் பிரிவைப் பார்க்க))
ஆண்டு (1)
எண் (2)
குறுந்தலைப்பு (3)
திருத்தம்
(4)
தமிழ்நாடு சட்டம்தமிழ்நாடு சட்டம்
25 ஆம் பிரிவுக்குப் பின்பு பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
1864 II 1864 ஆம் ஆண்டு தமிழ்நாடு வ ரு வ ா ய் நி லு ை வ த் தொகைகள் வசூலித்தல் சட்டம்.
"25-A. இராணுவ பணியாளர்கள் என்கின்ற நேர்வில் அறிவிப்பினை சார்வு செய்தல்.-
(1) நபர் எவரும் இராணுவத்தில் பணிபுரிபவராக இருக்கின்றவர் அவரிடத்தில் நிலம் எதனையும் வைத்திருக்கிறவராக இருக்கின்றாரென்றால் அத்தகைய நபர் எந்தப் பதவியில் இருக்கக்கூடியவராக மற்றும் அவர் எந்தப் படைப்பிரிவில் உள்ளவராக இருக்கின்றாரோ அவர் அவரிடம் உள்ள சொத்துகள் விபரத்தை மாவட்ட ஆட்சியரிடம் கூறலாம் மற்றும் அத்தகைய தகவலின் பதிவு மாவட்ட ஆட்சியரால் அத்தகைய நிலத்திற்குத் தொடர்புடைய மற்றும் அதனுடைய மதிப்பீட்டிற்குத் தொடர்புடைய கணக்குகள் பதிவேட்டில் மற்றும் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
(2) அத்தகைய நபருக்குச் சொந்தமான நிலம் எதனின் தொடர்பாக வருவாய் நிலுவையாக இருக்கின்றவிடத்து இந்தச் சட்டத்தின்படி எடுக்கக் கருதப்பட்ட நடவடிக்கை பற்றி படைத்தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்திருந்தாலன்றி நடவடிக்கை எதுவும் அவருக்கு எதிராக எடுக்கப்படுதலாகாது.
(3) மாவட்ட ஆட்சியர், படைத்தலைவருக்கு ஒப்புகையுடனான பதிவுத் தபால் மூலம் அலுவலகக் கடிதமொன்றினை முகவரியிட்டு அனுப்ப வேண்டும் மற்றும் அவரால் முறைப்படி கையொப்பமிடப்பட்ட நில வருவாய் நிலுவையை செலுத்துவதற்குக் கடப்பாடுடைய நபருக்கு எழுத்து மூலமான அறிவிப்பு ஒன்றினை மேற்சொன்ன கடிதத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரால் அதிகாரமளிக்கப்பெற்ற பிற அலுவலரால் அனுப்பப்பட வேண்டும்.
(4) அத்தகைய அறிவிப்பில் வரி பாக்கியை செலுத்த வேண்டியவர் எந்த இடத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றவிடத்தும் அதனைக் கருத்தில் கொண்டு அத்தகைய வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் மேற்சொன்ன நிலுவைத்தொகையை செலுத்த வேண்டியவராய் இருக்கும் அத்தகைய நபருக்கு மற்றும் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை எவ்வளவு என்றும் மற்றும் அது எந்தத் தேதியிலியிந்து நிலுவைத் தொகையாக இருக்கின்றது என்பது பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும் மற்றும் மேற்சொன்ன அறிவிப்பினை அனுப்புவதற்காக எடுத்துக் கொள்ளும் காலத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம்.
(5) படைத்தலைவரால் பெறப்பட்ட கடிதத்தின் ஒப்புகையானது இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக போதுமான சார்வு என்று கொள்ளப்படுதல் வேண்டும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்(மு.கூ.பொ), சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
15தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 30/2018.
1971-ஆம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்தவற்கானதொரு சட்டம்
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம் (2) இது மாநில அரசால் அறிவிக்கையினால் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று செயலாற்றலுக்கு வரும்.
தமிழ்நாடு சட்டம் 35/1972
2. (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் 2ஆம் பிரிவில்
2 ஆம் பிரிவிற்கான திருத்தம் (1) (15) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
"(15-A) "வளர்ச்சி உரிமை சான்றிதழ்" என்பது தொடர்புடைய ஆண்டுக்காக பதிவுத் துறையினால் வழிகாட்டுநெறி மதிப்பில் வகுத்துரைக்கப்படலாகிறவாறு அந்த மனையின் விலை மற்றும் எந்த இடத்திலிருந்து அது உண்டாக்கப்பட்டிருக்கிறதோ கட்டப்பட்ட பரப்பிடத்திற்கு சதுர மீட்டர்களில் தளப்பரப்பு குறியீடு வரவினைக் குறிக்கும் பரப்புக்கு உரிமையுடையதாக இருக்கின்ற உரிமையாளர் அல்லது குத்தகைத்தாரர் கணினி கையெழுத்து உள்ளடங்கலான திட்ட அதிகார அமைப்புகளின் உறுப்பினர் செயலரின் கையெழுத்தின்படி பிறப்பிக்கப்படும் சான்றிதழ் என்று பொருள்படும்.
"(15-B) "வளர்ச்சி உரிமைகள்" என்பது வளர்ச்சி உரிமை சான்றிதழில் குறித்துரைக்கப்பட்ட பரப்பிடத்தில் மேம்பாட்டைச் செய்வதற்கு அல்லது நிலத்தை மேம்படுத்துவதற்கு அல்லது கட்டுவதற்கு அல்லது இரண்டையும் செய்வதற்கான உரிமை என்று பொருள்படும்;".
(2) (17) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:—
"(17-A) "தளப்பரப்பு குறியீடு" என்பது அறிவிக்கை மூலம் விளக்களிக்கப்பட்டுள்ள பரப்பிடங்கள் தவிர, அனைத்து தளங்களிலும் உள்ளடங்கியிருக்கும் பரப்பிடத்தை (கட்டடப் பரப்பு) மனைப் பரப்பளவினால் வகுப்பதானால் பெறப்படும் ஈவு எனப் பொருள்படும்.
தளப்பரப்பு குறியீடு :
அனைத்து தளங்களிலும் உள்ளடங்கியிருக்கும் பரப்பிடம் மனைப்பரப்பிடம்;".
(3) (45) ஆம் கூறுக்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—
"(45-A) "வளர்ச்சி உரிமைகள் மாற்றம்" என்பது கூடுதலான தளப்பரப்பு குறியீடு அல்லது வளர்ச்சி உரிமைகள் என்கிற வகையில் இழப்பீட்டினை இந்தச் சட்டத்தின்படி அரசால் அல்லது அதிகார அமைப்பு ஒன்றால் அத்தகைய விதிகளுக்கு மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு கூடுதலாக கட்டட பரப்பிடம் கட்டுமானத்தின் உரிமையாளர் பெறுவதற்கு உரிமையுடையவராக இருப்பார் மற்றும் தளப்பரப்பு குறியீடு வகுத்துரைக்கப்படலாகிறவற்றை அத்தகைய வடிவத்தில் பிறப்பிக்கப்படுதல் வேண்டும்.".
3. முதன்மைச் சட்டத்தின் 35 ஆம் பிரிவிற்கு பின்பு பின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:—
35-A. எனும் புதிய பிரிவு புகுத்தப்படுதல்16 "35-A. வளர்ச்சி உரிமைகள் மாற்றம்.- (1) பொது நலத்திற்காக திட்ட அதிகார அமைப்பு ஒன்றினால் தேவைப்படும் நிலப்பகுதி எதுவுமாக இருக்கின்றவிடத்து மற்றும் உரிமையாளரின் இடம் அல்லது நிலம் அத்தகைய பகுதியில் அடங்கியிருக்கின்றவிடத்து அதனை விலை ஏதுமின்றி இலவசமாக கொடுக்க வேண்டும் மற்றும் எந்தவிதமான வில்லங்கங்களும் இல்லாமல் அதனின் உடைமையை திட்ட அதிகார அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அரசின் தேவையின்படி நிலத்தின் மீதான மேம்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கு அதிகார அமைப்பு வகுத்துரைக்கப்பட்ட முறையில் நில மேம்பாடு மீது வைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அல்லது ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு விகிதாச்சார முறைப்படி வளர்ச்சி உரிமைகளை மாற்றுவதற்கு அனுமதிக்கலாம்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அவ்வாறு அனுமதிக்கப்பட்ட வளர்ச்சி உரிமைகளை அது நடைமுறைப்படுத்தக் கூடியதாய் இருக்கிறதென்றால் ஒப்படைக்கப்பட்ட பின்பு அந்த நிலத்தின் மீதமுள்ள பகுதியிலோ அல்லது மாநிலத்திலுள்ள பிற இடம் எதிலுமோ நிலத்தின் மதிப்பில் சரிசமமாக வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய வரைக்கட்டுகளுக்குட்பட்டு நிலம் அளித்த நபராலோ அல்லது இக்கட்டுப்பாடுகளால் பாதிப்புக்குள்ளான நபராலோ அல்லது பிற நபர் எவருக்கேனும் வளர்ச்சி உரிமை ஒதுக்கீடு பெற்றவரால் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அத்தகைய நபர்களால் பயன்படுத்தப்படலாம்."
4. முதன்மைச் சட்டத்தின் 36ஆம் பிரிவிற்காக பின்வரும் பிரிவு மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்:—
36, 37 மற்றும் 38 ஆம் பிரிவுகளின் மாற்றாக்கம்.
"36. வளர்ச்சித் திட்டத்திற்காகத் தேவைப்படும் நிலத்தினை கட்டாயமாக கையகப்படுத்துதல்.— நேர்வுக்கேற்ப திட்ட அதிகார அமைப்பு ஒன்றின் அதிகார வரம்பிற்குள் பரப்பிடத்தின் வளர்ச்சிக்காக அல்லது மறு வளர்ச்சிக்காக அல்லது மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவற்றிற்கு அல்லது மண்டல திட்டத்தில், முழுமைத் திட்டத்தில், விரிவான வளர்ச்சித் திட்டத்தில் அல்லது புது நகர் வளர்ச்சித் திட்டத்திற்கு மேம்பாட்டிற்குத் தேவைப்படும் நிலம் எதுவும் 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தின் (மையச் சட்டம் 30/2013) பொருளின்படி பொதுநோக்கத்திற்காகத் தேவைப்படும் நிலமாக கொள்ளப்படுதல் வேண்டும். மற்றும் மேற்சொன்ன சட்டத்தால் கையகப்படுத்தப்படலாம்.
37. வளர்ச்சித் திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நிலங்களை வாங்குவதற்கு அல்லது கையகப்படுத்துவதற்கான அதிகாரம்.— (1) அதிகார அமைப்பு ஒன்றின் அதிகார வரம்பிற்குள் உள்ள நிலப்பகுதியின் வளர்ச்சிக்காக அல்லது மறுவளர்ச்சிக்காக மண்டலத் திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டமொன்றின் தயாரிப்புகளை தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்புகளை வெளியிட்ட பின்பு அத்தகைய திட்டத்தில் நிலம் எதுவும் தேவைப்பட்டது, ஒதுக்கப்பட்டது அல்லது பெயரிடப்பட்ட நிலம் எதனையும் உரிய திட்ட அதிகார அமைப்பு நிலத்தைக் கையகப்படுத்தலாம்,—
(a) ஓர் உடன்பாட்டின்படி ஒத்துக்கொண்ட தொகையொன்றினை செலுத்துவதன் மூலம்; அல்லது
(b) அத்தகைய தொகை எதனையும் பெறுகின்றவிடத்து விலையில்லாமல் இலவசமாக மற்றும் எந்தவிதமான வில்லங்கங்களுமில்லாமல் ஒப்படைக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக வளர்ச்சி உரிமைகள் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்குவதன் மூலம் மற்றும் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய முறையில் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் நில உரிமைதாரர் செலவில் ஏற்படுத்தப்பட்ட மேம்பாடுகள் அல்லது கட்டுமான வசதிகளுக்கு பதிலாக கூடுதல் தளப்பரப்பு குறியீடு அல்லது வளர்ச்சி உரிமைகள் மாற்றம் அளித்தல்; அல்லது
(c) 2013-ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தின் (மையச் சட்டம் 30/2013) கீழ் அத்தகைய நிலத்தினை கையகப்படுத்துவதற்காக அரசிற்கு விண்ணப்பமொன்றைச் செய்வதன் மூலம் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட அல்லது கட்டடங்களுடன் கூடிய உடன்பாடு மூலம் அல்லது நேர்விற்கேற்ப இந்தப் பிரிவின்படி வளர்ச்சி உரிமைகளை மாற்றும் வகையில் தளபரப்பு குறியீடு மற்றும் கூடுதலான தளபரப்பு குறியீடு வழங்குவதன் மூலம் அல்லது மேற்சொன்ன சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலம் அது உரிய திட்ட அதிகார அமைப்பிடம் அனைத்து வில்லங்கங்களுமில்லாமல் முழுவதுமாக வந்தமைந்ததாக இருக்கும்.
17(2) (1) ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பமொன்று பெறப்பட்டதன்பேரில் அரசு, விண்ணப்பத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிலம் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொது நோக்கத்திற்காக தேவைப்படுகிறது என்று திருப்தியடைந்திருக்கிறதென்றால் அது, 2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீட்டினைப் பெறுதல் உரிமை மற்றும் நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்து சட்டத்தில் (மையச்சட்டம் 30/2013) வகுத்தமைக்கப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் மேற்சொன்ன நிலத்தைக் கையகப்படுத்தலாம்.
38. நிலத்தை விடுவித்தல்.— 26ஆம் அல்லது 27ஆம் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இருக்கிறதென்றால் —
(a) அத்தகைய அறிவிப்பினில் உள்ளடங்கியிருக்கும் மண்டல திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது புதுநகர் வளர்ச்சித் திட்டமொன்றில் குறித்துரைக்கப்பட்ட நோக்கம் எதற்காகவும் ஒதுக்கப்பட்ட, ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெயரிடப்பட்ட நிலம் அதனின் தொடர்பாகவும் செய்யப்பட்ட 37ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவில் வகை செய்யப்பட்டவாறு நிலம் எதுவும் கையகப்படுத்தப்படலாகாது; அல்லது
( b ) உ ட ன் ப ா ட் டி ன ா ல் அ த் த ை க ய நி ல ம் ை க ய க ப் ப டு த் த ப் ப ட ா த போது அத்தகைய நிலம் அத்தகைய ஒதுக்கப்பட்ட, ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெயரிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படுவதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
உரியதென நினைத்தலாகிறவாறான அத்தகைய காலத்திற்காக நீட்டிக்கலாகும் ஆனால், அவ்வாறு நீட்டிக்கப்பட்ட அத்தகைய காலம் எந்த நேர்விலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்படுதலாகாது.".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்(மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்க. நரசிம்மன்,
உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
18 19தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 13-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 31/2018.
1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்தொன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (மூன்றாம் திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்
மற்றும் தொடக்கம் (2) இது, மாநில அரசு, அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தின் 35/1972
2 ஆம் பிரிவில் (இதனில் இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்) -
பிரிவிற்கான திருத்தம் (1) (13) ஆம் கூறில், "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) (15) ஆம் கூறில், "விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக, "விரிவான வளர்ச்சித் திட்டம், ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
(3) (22) ஆம் கூறுக்குப்பின்னர், பின்வரும் கூறானது புகுத்தப்படுதல் வேண்டும்.
அதாவது:-
"(22-A) "நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்பது உரிய திட்ட அதிகார அமைப்பால் மேம்படுத்தப்பட்ட நிலங்களை உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உரிமையாளரின் உரிமைகளை உரிமை மாற்றத்தின் மூலமாக தனி நபரால் அல்லது தனி நபர்களின் குழுவால் வைத்து வரும் நிலத்தில் உள்ள ஒரு திட்டம் மற்றும் அத்தகைய மேம்பாட்டு நிலத்தின் பகுதியை அசல் உரிமையாளருக்கு உரிமை மாற்றம் செய்தல் மற்றும் அத்தகைய நிலத்தின் எஞ்சியுள்ள நிலத்தை பொது வசதிகளை மற்றும் சிறப்பு வசதிகளை அல்லது விற்பனைக்காக உருவாக்குவது என்று பொருள்படும்".
36 ஆம்
பிரிவிற்கான திருத்தம் 3. முதன்மைச் சட்டத்தில் 36 ஆம் பிரிவில் "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
37 ஆம்
பிரிவிற்கான திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில், "விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
38 ஆம்
பிரிவிற்கான திருத்தம் 5. முதன்மைச் சட்டத்தின் 38 ஆம் பிரிவில், விரிவான வளர்ச்சித் திட்டம் அல்லது ஒரு புது நகர் வளர்ச்சித் திட்டம் என்ற சொற்றொடருக்கு மாற்றாக "விரிவான வளர்ச்சித் திட்டம் புது நகர் வளர்ச்சித் திட்டம் அல்லது நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்று அமைக்கப்படுதல் வேண்டும்.
6. முதன்மைச் சட்டத்தின் IV எனும் அத்தியாயத்திற்கு பின்பு, பின்வரும் அத்தியாயம் புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
IV-A எனும் புதிய அத்தியாயத்தை புகுத்துதல்.
20"அத்தியாயம்"அத்தியாயம் – IV A.
நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம். நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்.
39-A. நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்தல்.— (1) உரிய திட்ட அதிகார உருவாக்குவதற்கான உட்கருத்தை விளம்புகை செய்தல். அமைப்பானது, ஒழுங்குமுறையான நடைமுறையில் அதன் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதி எதனையும் மேம்படுத்தும் திட்டத்திற்காக, (இதன் பின்னர் இந்த அத்தியாத்தில் திட்டம் எனச் சுட்டப்படலாகும்) அந்த பகுதியில் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு அதன் உட்கருத்தை விளம்புகைச்செய்யலாம்.
வரம்புரை ஆனால் உரிய அதிகார அமைப்பு, அத்தகைய விளம்புகையை வெளியிடுவதற்கு முன்னால் அரசினுடைய முன் அனுமதியைப் பெறுதல் வேண்டும். மேலும் வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அல்லாத பிற உரிய திட்ட அதிகார அமைப்பின் இயக்குநர் மூலமாக அரசுக்கு அத்தகைய கருத்துருவை அனுப்புதல் வேண்டும். வரம்புரை ஆனால், உரிய திட்ட அதிகார அமைப்பானது, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனம் எதுவும் அல்லது மாநில அரசு அல்லது மைய அரசால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம் அல்லது திட்டப்பகுதி ஒன்றில் எழுபது விழுக்காடு நில உரிமையாளர்கள் ஆகியோரால் திட்டமிடப்பட்ட திட்டம் எதனையும் மாற்றத்துடனோ அல்லது மாற்றம் எதுவும் இல்லாமலோ ஏற்றுக் கொள்ளலாம்.
விளக்கம்.- இந்தப்பிரிவு மற்றும் 39-F பிரிவின் நோக்கத்திற்காக, "மாநில அரசால் அல்லது மைய அரசால் சொந்தமாக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சட்டப்படி அமைந்த குழுமம்" என்பது 2013 ஆம் ஆண்டு (மையச் சட்டம்.18/2013) நிறுமங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (45) ஆம் கூறின் பொருளின்படியான அரசு நிறுமம் ஒன்று, 1860 ஆம் ஆண்டு (மையச் சட்டம் 21/1860) சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்ட சங்கம் ஒன்று, அல்லது அரசால் நிறுவப்பட்ட அல்லது நிருவகிக்கப்பட்ட சங்கத்தை மாநிலத்தில் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள நேரிணையான சட்டம் எதனின்படியும் அல்லது மைய அரசால் அல்லது மாநில அரசு எதனாலும் அல்லது அரசாங்கங்கள் அல்லது மைய அரசால் பகுதியாக அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளால் பகுதியாக கொடுக்கப்பட்ட பங்கு மூலதனம் ஐம்பத்தொன்று விழுக்காட்டிற்கு குறையாமலிருக்கின்ற மாநிலத்தில் நடைமுறையிலிருக்கின்ற கூட்டுறவு சங்கங்களுடன் தொடர்பான இந்தப்பிரிவிற்குள்ள பொருளின்படி ஆகியவை உள்ளடங்கலான மைய அல்லது மாநில சட்டத்தின்படியாகவோ அல்லது அதனடியாகவோ அமைக்கப்பட்ட கூட்டுருமக்குழுமம் எதுவும் என்று பொருள்படும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படியான விளம்புகையை அந்தப் பகுதி மாவட்ட அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக அத்தகைய முறையில் உரிய திட்ட அதிகார அமைப்பால் அந்தப்பகுதியில் உள்ள முதன்மையான இரண்டு தின நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்று தமிழாக இருத்தல் வேண்டும். அத்தகைய அறிவிக்கையில் திட்டமிட்ட திட்டப்பகுதியின் எல்லைகளைக் காட்டும் திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்யும் பொருட்டு வெளியிடப்படும் நேரம் மற்றும் இடத்தினை குறித்துரைத்து அறிவிக்கை செய்யப்பட வேண்டும்.
39-B. திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பை திட்டங்களை உருவாக்குவதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பை வேண்டுறுத்துவதற்கு அரசுக்கான அதிகாரம்.- வேண்டுறுத்துவதற்கு அரசுக்கான அதிகாரம்
39-A எனும் பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறு இருப்பினும், அரசானது, குறித்துரைக்கப்பட்ட பகுதி எதற்காகவும், திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கும் அதன் ஒப்பளிப்பை பணிந்துனுப்ப உரிய திட்ட அதிகார அமைப்பு எதற்கும் பணிப்புரை வழங்கலாம். அத்தகைய நேர்வில், உரிய திட்ட அதிகார அமைப்பு, 39-A எனப்பிரிவின் கீழ் பகுதி திட்டத்தை விளம்புகைக்காக மற்றும் இந்த அத்தியாயத்தில் வகைசெய்யப்பட்ட திட்டத்தை தயாரிப்பதற்காக மேலும் செயலாற்றுதல் வேண்டும்.
39-C. நிலத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியின் பேரிலான நிலத்தின் பயன்பாடு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியின் பேரிலான கட்டுப்பாடுகள்.கட்டுப்பாடுகள்.— (1) 39-A எனும் பிரிவின்படி ஒரு திட்டம் உருவாக்குவதற்கான உட்கருத்துடன் விளம்புகை செய்யும் தேதியிலோ அல்லது தேதிக்குப்பிறகோ, நபர் எவரும், இந்தத்திட்டத்தில் அடங்கும் பகுதிக்குள், 49 ஆம் பிரிவின்படி உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி பெறாமல் மேம்பாட்டுபணி எதனையும் நிறைவேற்றுதலாகாது.
21(2) இந்த அத்தியாயத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாதபட்சத்தில் 50 முதல் 58 வரையுள்ள பிரிவுகளின் வகைமுறைகள் அனைத்தும் திட்டப்பகுதியில் அடங்கும் நிலத்தின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டு தொடர்புடன் வேண்டிய மாறுதல்களுடன் பொருந்துதல் வேண்டும்.
39-D. திட்டத்தின் உள்ளடக்கங்கள்.
திட்டத்தின் உள்ளடக்கங்கள்.—இந்தத் திட்டம் பின்வரும் பொருட்பாடுகள் அனைத்திற்கும் அல்லது எதற்கும் வகை செய்யலாம். அதாவது:-
(a) 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (a) முதல் (c) வரை மற்றும் (e) முதல் (n) வரையிலான கூறுகளில் குறித்துரைக்கப்பட்ட பொருட்பாடுகளுக்கு,-
(b) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய அளாவுகை, பொருளாதார நிலையில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு வீட்டுவசதி வழங்கும் நோக்கத்திற்கான நில ஒதுக்கீட்டிற்கு;
(c) இந்தத் திட்டத்திலடங்கும் மொத்த பகுதியிலிருந்து நிலத்தின் ஒதுக்கீடானது:-
(i) சாலைகள், பூங்காக்கள், விளையாடுமிடங்கள், தோட்டங்கள் மற்றும் திறந்தவெளிகளுக்கு;
(ii) அரசுத்துறைகளுக்கு அல்லது அத்தகைய குடிநீர் வழங்கல், மின்சாரம், பள்ளி, தனி மருத்துவமனை (அ) மருந்தகம், சமுதாயக்கூடம், அல்லது திருமண மண்டபங்கள் ஆகிய பொதுமக்கள் நோக்கத்திற்கான குத்தகைக்கு விடப்படுவதற்கான சமூக உள்கட்டமைப்பிற்காக;
(iii) குறைந்தது நாற்பது விழுக்காட்டிற்கான அளவு ஒன்றுக்கு இந்தத்திட்டத்திற்காக அவரின் பங்களிக்கப்பட்ட நிலத்திற்கு பதிலாக நில உரிமையாளர் ஒவ்வொருவருக்கும் பின்னால் திரும்ப வழங்குவதற்காக;
வரம்புரை ஆனால், இந்த உட்கூறின்படி ஒதுக்கீட்டு நிலத்தின் விழுக்காட்டை, மேம்பாட்டின் தன்மை சார்ந்து காரணத்தை எழுத்துமூலமாக பதிவு செய்த பின்பு திட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் நிர்ணயிக்கலாம்.
(iv) 3வது உட்பிரிவின்படி, நில உரிமையாளருக்கு நிலத்தை திரும்ப வழங்குவதற்குப் பதிலாக, நிலத்தின் சந்தை மதிப்போ (அ) நிலமேம்பாட்டு உரிமை மாற்றமோ வழங்கப்படும்.
(d) அசல் மனை ஒவ்வொன்றின் உரிமையாளர் மற்றும் கால அளவு;
(e) ஒதுக்கீடு செய்யப்பட்ட அத்தகைய நிலம் பொது மக்கள் நோக்கத்திற்காக பொது குறிப்புடன் மற்றும் குறித்துரைக்கலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகளுக்கு உட்பட்டு 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (K) எனும் கூறின்படி பங்கீடு அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் விவரங்கள்;
(f) திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகை மற்றும் உரிய திட்ட அதிகார அமைப்பு மற்றும் தொடர்புடைய முகவாண்மைகளால் ஏற்றுக்கொள்ள வேண்டிய செலவீனங்களுக்காக;
(g) திட்டப்பகுதியில் மேம்பாடுகளை ஒழுங்குமுறைப் படுத்துவதற்கான மண்டலம் மற்றும் மேம்பாட்டு ஒழுங்குமுறை விதிகளுக்காக;
(h) இந்தத்திட்டத்திற்கு உரியதல்லாத இழப்பீடு, எந்த நில உரிமையாளருக்கு ஏற்பட்டதோ அந்த உரிமையாளர், எவருக்கும் வளர்ச்சி உரிமையை மாற்றுவதற்கு அவர் தன் விருப்பத்தை வழங்குவாரேயானால், பணம் சார்ந்த சரியீட்டிற்கு பதிலாக வளர்ச்சி உரிமையை மாற்றம் செய்ய ஒதுக்கீட்டிற்கான கருத்துருவிற்காக;
(i) மாநில சட்டமன்றப் பேரவையினுடைய சட்டம் எதனின் அல்லது அதன்படி செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட விதி, துணை விதி, ஒழுங்குமுறை விதி, அறிவிக்கை அல்லது ஆணை எதனின் வகையும், திட்டம் எதனையும் சரியாக நிறைவேற்றுவதற்கு தேவையானதை கூடிய அளவிற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
வரம்புரை ஆனால், இந்தக்கூறின்படியான தற்காலிக நிறுத்திவைப்பு எதனின்,-
(i) அந்தத் திட்டத்தை ஒப்பளிப்பதற்கு அரசு மறுக்குமானால்;
(ii) அந்தத் திட்டத்தை அரசு திரும்பெறுமானால்;
22(iii) அந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கான அந்தத் தேதியில் பெறுவதன்பேரில்; மற்றும்
(j) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையபிற பொருட்பாடுகள்.
39-E. பூசலாக உள்ள உடைமைபூசலாக உள்ள உடைமை.— செய்யப்பட்டிருந்த திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான கருத்தில் விளம்புகையின் பொருட்டு, பகுதி ஒன்று உள்ளடங்கலாக நிலம் அல்லது கட்டடம் எதனின் உரிமையாளரரின் பூசல் கோரிக்கை அதில் இருக்குமிடத்து, வருவாய் புதிவுருக்களில் பதிவு செய்யப்பட்ட எதுவும் அல்லது இந்தத் திட்டத்திற்காக அமர்த்தப்பட்ட உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோரின் வேண்டுகோளின்பேரில், துள்ளியமானதாக இல்லாத அல்லது முடிவுறாத அத்தகைய பூசல் கோரிக்கையுடன் தொடர்பான மாறுதல்களுடன் அந்தத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னால் எந்த நேரத்திலும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வேண்டுறுத்தலை பெறப்பட்ட தேதியிலிருந்து அத்தகைய நேரத்திற்குள் அரசால் அமர்த்தப்பட்ட அலுவலரால் நடைபெறப்படும் விசாரணை ஒன்று முடிவு செய்யும் நோக்கத்திற்காக இந்தத்திட்டத்திலடங்கும் சொல்லப்பட்ட நிலத்தின் உரிமையாளராக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய முடிவே இறுதியானதாகும்.
வரம்புரை ஆனால் உரிமையியல் நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதனின் முன்னால் நிலுவையிலிருக்கின்ற இந்தத் திட்டப்பகுதி நிலத்தின் அல்லது கட்டடத்தின் உடைமை தொடர்பான ஏதேனும் பூசல் இருப்பின் அதன்பேரில் உரிமையியல் நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பின் பிறவாறான பணிப்புரைகள் மற்றும் ஆணை அல்லது முடிவு உரிமையியல் நீதிமன்றம் அல்லது பிற அதிகார அமைப்பு எதுவும் அன்றி அத்தகைய திட்டப்பகுதியில் நிலம் அல்லது கட்டடம் உள்ளடக்கத்திற்கு இது தடையாக இல்லாததை உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோர் உண்மையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
39-F. திட்டத்தை தயாரித்தல்.திட்டத்தை தயாரித்தல்.— (1) 39-A எனும் பிரிவின்படி அறிவிக்கையில் வெளியிடப்படும் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அல்லது அரசால் அனுமதிக்கப்படலாகும் ஆறு மாதங்களுக்கு மிகையல்லாத மேலுமான அத்தகைய காலத்திற்குள் உரிய திட்ட அதிகார அமைப்பு வரைபடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் அந்தப்பகுதிக்கான வரைவுதிட்டத்தை தயாரித்தல் வேண்டும். உரிய திட்ட அதிகார அமைப்பு, திட்டப் பகுதியில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்களைக் கலந்தாய்வு செய்த பின்னர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் அளவை ஆய்வுகள் மற்றும் எழுத்து மூலமாகப் பெறப்பட்ட மறுப்புரைகள் மற்றும் ஆலாசனைகள் ஏதேனுமிருப்பின் மற்றும் திட்டத்தில் தேவைப்படும் மாற்றங்களையும் கவனமாய் கருதுதல் வேண்டும். உரிய திட்ட அதிகார அமைப்பானது வகுத்தரைக்கப்படலாகும் பொருட்பாடுகளின் சூழ்நிலைகள் அனைத்தையும் தேவையானால் உரிய முகவாண்மையுடனான கலந்தாய்வில் வரைவு திட்டத்தில் பல்வகையான உள்ளடக்கிய பகுதிகளின் மதிப்பீடுகள் மற்றும் செலவுத் தொகைகளை தயாரித்தலும் மற்றும் அரசுக்கு முழுவிபரங்களுடன் திட்டத்தின் வரைவை பணிந்து அனுப்புதல் வேண்டும்.
வரம்புரை ஆனால் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அல்லாத பிற உரிய திட்ட அதிகார அமைப்பின் இயக்குநர் மூலமாக அரசுக்கு அதே கருத்துருவை அனுப்புதல் வேண்டும்.
39-G. திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பு.திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பு.— (1) ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்கு பிற்படாமல் வரைவுத் திட்டம் பெறப்பட்டடபின்னர், உடனேயே, அரசு, தாம் பொருத்தமெனக் கருதலாகும் அந்த வரைவு திட்டத்தில் மாற்றமைவுகள் செய்வதற்கு உரிய திட்ட அதிகார அமைப்புக்கு பணிப்புரை வழங்கலாம், மற்றும் அதன்பேரில் உரிய திட்ட அதிகார அமைப்பு அத்தகைய மாற்றமைவுகள் செய்து அரசுக்கு, ஆனால் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்கு பிற்படாமல் மீளப்பணிந்தனுப்புதல் வேண்டும்.
(2) அரசு, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் வரைவு திட்டத்திற்கான முதனிலை ஏற்பளிப்பை வழங்குதல் வேண்டும்.
23(3) அரசால் வரைவுத்திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் அறிவிக்கைத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இந்தத்திட்டத்தின் நோக்கத்திற்காக, இயக்குநரால், நகரமைப்பு உதவி இயக்குநரின் படிநிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவரை அல்லது நேர்வுகேற்ப சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், துணை திட்டமிடும் அலுவலரின் படிநிலைக்கு குறையாத அலுவலர் ஒருவரை பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலராக அமர்த்துதல் வேண்டும்.
(4) இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அவ்வாறு அமர்த்தப்பட்ட, பெயர் குறித்து அமர்த்தப்பட்ட அலுவலர், அந்த நேரத்திலும், திறமையின்மை அல்லது ஒழுக்கக்கேடு அல்லது குறித்துரைக்கப்பட்ட காரணம் பிற எதற்காகவும் மாற்றலாம் மற்றும் பிற அலுவலரால் அவரை மாற்றிடவும், அத்தகைய பெயர்குறித்து அமர்த்தப்பட்ட அலுவலர் முன்னால் நிலுவையில் இருக்கின்ற நடவடிக்கைகள் எதனையும் புதியதாக பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரால் அது எந்த நிலையில் விட்டுச்செல்லப்பட்டதோ அந்த நிலையில் இருந்து தொடரப்பட்டு முடிவு செய்தல் வேண்டும்.
39-H. அந்த திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் பேரில் அறிவிப்பை அந்த திட்டத்தின் முதனிலை ஏற்பளிப்பின் பேரில் அறிவிப்பை வெளியிடுதல்.வெளியிடுதல்.— 39-G பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி அரசிடமிருந்து வரைவு திட்டத்திற்காக முதனிலை ஏற்பளிப்பை பெறப்பட்ட பின்பு, உடனேயே, உரிய திட்ட அதிகார அமைப்பு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுதல்வேண்டும், மற்றும் அந்தப் பகுதியில் முன்னனி தின நாளிதழ்கள் இரண்டில் வெளியிட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்றாவது தமிழில் இருத்தல் வேண்டும். மற்றும் இடம் அல்லது இடங்களில் அதன் ஒரேமாதிரியான படிகள் பார்வையிடுவதற்கும் அந்த அறிவிப்பில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்குள் அந்த நிலத்தில் உரித்தமுடைய நபர் எவரிடமிருந்து எழுத்துமூலமாக திட்டம் பொருத்து ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளையும் வரவேற்கலாம்.
வரம்புரை ஆனால் அத்தகைய கால அளவு, தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு குறைவாக இருத்தலாகாது.
(2) அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கால அளவு கழிவுற்ற பின்னர், பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், அரசு துறையின் சார்பாற்றுநர்கள் அல்லது அதே மாதிரியான வேண்டுறுத்தங்கள் செய்த பிற அதிகார அமைப்பு மற்றும் பெறப்பட்ட ஏதேனும் மறுப்புகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் ஆய்வு செய்யவும் மற்றும் அவரால் பொருத்தமெனக் கருதப்படலாகும் அந்தத் திட்டத்திற்கு அத்தகைய திருத்தத்தை செய்வது உள்ளடங்கலாக நபர் எவர்க்கும் கேட்கப்படுவதற்கானதொரு வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும்.
39-I. பெயர் குறித்தபெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்ர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்.— (1) பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள்,—
(a) பெறப்பட்ட மறுப்புகள் மற்றும் ஆலோசனைகளை ஆய்வு செய்தும் மற்றும் அதன் தகுதியின்பேரில் இறுதி திட்டத்தைத் தயாரிப்பது;
(b) இறுதி மனைகள் மற்றும் பொது நோக்கத்திற்கான மனைகளின் ஒதுக்கீடு பெற்றவர்களுடைய இறுதி மனைகளின்பேரில் முடிவு செய்தல்;
(c) விழுக்காட்டளவு பங்கீடுகளின் செலுத்தத்திலிருந்து தொல்லியல் சார்ந்த நினைவுச் சின்னங்களை விளம்புகை செய்யப்படுவதிலிருந்து விலக்களிப்பை உறுதிசெய்தல்;
(d) நில உரிமையாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட தொகையினை மதிப்பீடு செய்தல்;
(e) கொடுக்கவேண்டிய இழப்பீட்டினை நிர்ணயம் செய்தல்;
(f) இறுதிதிட்டத்தை தீட்டுதல்; மற்றும்
(g) வகுத்துரைத்தப்படலாகும் ஆகியவற்றையும் பிற பொருட்பாடுகள் உள்ளடக்கும்;.
39-J. இறுதி செய்யப்பட்ட பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் குறித்த சில இறுதி செய்யப்பட்ட பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் குறித்த சில முடிவுகள்.முடிவுகள்.— (1) மதிப்பீட்டு தொகை அல்லாத பிற பொருட்பாடுகளில் பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவரின் முடிவு ஒவ்வொன்றும், உரிமையாளர்களால் கொடுக்கப்படவேண்டிய வரி விதிக்கப்பட்ட தொகை, கொடுபடவேண்டிய இழப்பீடு மற்றும் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி உரிமைகள் மாற்றம் ஆகியவற்றை இறுதியானதாகவும் இருக்கும் மற்றும் நபர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும்.
2439-K. மேல்முறையீடுமேல்முறையீடு.— (1) மதிப்பீட்டு தொகைகளையுடைய பொருட்பாட்டில் பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் முடிவு, உரிமையாளர்களால் கொடுக்கப்படவேண்டிய வரி விதிக்கப்பட்ட தொகை, கொடுபடவேண்டிய இழப்பீடு, மற்றும் வந்தடைந்த மேம்பாட்டு உரிமைகள் மாற்றம் ஆகியவற்றை உரிய திட்ட அதிகார அமைப்பு உள்ளடங்கலாக தொடர்புடைய நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்.
(2) அத்தகைய முடிவினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அந்த முடிவு தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் மேல்முறையீடு செய்யலாம் மற்றும் அதையே வகுத்துரைக்கப்படலாகும். அத்தகைய முறையும் தீர்வு செய்தல் வேண்டும்.
(3) இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால், இடருற்ற நபர் எவரும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகையபடிவம், அத்தகைய முறையில் மற்றும் அத்தகைய கால அளவிற்குள் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம்.
(4) (3) ஆம் உட்பிரிவின்படியான மேல் முறையீடு ஒன்றை பெற்றதன்பேரில், அரசானது, மேல்முறையீட்டாளருக்கு கேட்கப்படுவதற்கானதொரு வாய்ப்பை அளித்த பின்னர் தாம் பொருத்தமெனக்கருதலாகும் அத்தகைய ஆணையை பிறப்பித்தல் வேண்டும்.
39-L. உயர்நீதிமன்றத்தின் மூலமாக சீராய்வு.உயர்நீதிமன்றத்தின் மூலமாக சீராய்வு.— அரசின் ஆணை ஒன்றினால் இடருற்ற நபர் எவரும், அவருக்கு ஆணையின் நகல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து அறுபது நாள் காலஅளவு ஒன்றுக்குள் உயர்நீதிமன்றத்திற்கு அத்தகைய ஆணை சீராய்விற்கான விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்யலாம்.
வரம்புரை ஆனால் உயர்நீதிமன்றம் சொல்லப்பட்ட அறுபது நாள் கால அளவிற்குள் விண்ணப்பதாரர் விண்ணப்பம் செய்யாததற்கு போதுமான காரணம் கொண்டுள்ளார் என அது மனநிறைவு அடையுமானால்சொல்லப்பட்ட அறுபது நாள் கால அளவிற்கு பின்பு செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்று முப்பது நாள் மேலுமான கால அளவிற்குள் ஏற்றுக்கொள்ளலாம்.
39-M. இறுதி திட்டத்தை தயாரித்தல்.இறுதி திட்டத்தை தயாரித்தல்.— பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், வகுத்தரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் திட்டத்திலடங்கும் நில உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கொடுத்த பின்பு இறுதி திட்டத்தை தயாரித்தல் வேண்டும்,—
(a) பல வகையான நோக்கங்கள் மற்றும் இறுதி மனைகளுக்காக ஒதுக்கப்பட்ட பரப்பிடங்களை தெளிவுபடுத்த மற்றும் எல்லை வரையறைகள்;
(b) இறுதி மனைகளின் ஒதுக்கீட்டாளர்களை தீர்மானித்தல்;
(c) அசல் மனை அல்லது இறுதி மனையின் வளர்ச்சி உரிமைகளை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ மாற்றுவதற்கான விதிமுறைகள்;
(d) அந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட பணிகளுடனான கால அளவை தீர்மானிப்பதை உரிய திட்ட அதிகார அமைப்பால் அல்லது பிற பொது அதிகார அமைப்பு எதனாலும் நிறைவேற்றப்படுதல் வேண்டும்;
(e) இந்தத் திட்டத்தை முன்னிட்டு நில உரிமையாளர் எவருக்கும் அவரின் பாதிக்கப்பட்ட உரிமை இழப்பிற்கு செலுத்தப்படும் இழப்பீட்டிற்காக அவருக்கு முன்னிலையில் செய்யப்பட்ட கோரிக்கைகள் குறித்தான மதிப்பீடுகள்;
(f) பொது நோக்கத்திற்காக அல்லது தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது திட்டப்பகுதியில் நில உரிமையாளர்கள் அல்லது குடியிருப்பவர்களுக்கு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நலம் பயக்கின்ற உரிய திட்ட அதிகார அமைப்பினால் மேம்படுத்துவதற்கான பகுதிகளை உறுதி செய்தல்;
(g) இறுதி திட்டத்தின் உள்ளடங்கலான மனை ஒவ்வொன்றின் பேரிலும் விதிக்கப்படும் பங்களிப்புகளை உறுதி செய்தல்; மற்றும்
(h) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயல்களைச் செய்ய25 39-N. அரசின் ஏற்பளிப்பு.அரசின் ஏற்பளிப்பு.— (1) பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர், அரசுக்கு, 39-H எனும் பிரிவின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டத் தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் அல்லது அரசால் அனுமதிக்கப்படலாகும், ஆறு மாதங்களுக்கு மேற்படாமல் மேலுமான அத்தகைய காலத்திற்குள் ஏற்பளிப்பிற்காக இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மூலமாக இறுதி திட்டத்தை பணிந்தனுப்புதல் வேண்டும்.
விளக்கம்:- காலவரம்பை கணக்கிடும் நோக்கத்திற்காக, இயக்குநர் அல்லது நேர்வுக்கேற்ப சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் முன்னால் நிலுவையில் இருக்கின்ற மேல்முறையீடு ஒன்றின் போதான கால அளவு நீக்கப்படுதல் வேண்டும்.
(2) அரசானது, இறுதி திட்டம் பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள், சொல்லப்பட்ட திட்டத்தை தேவையெனக் கருதலாகும் அத்தகைய மாற்றமைகளுடன் அல்லது மாற்றமையில்லாமல் ஏற்பளிக்கப்படலாம் அல்லது அந்த திட்டத்தின் மாற்றமைவிற்காக உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு சொல்லப்பட்ட திட்டத்தை திருப்பி அனுப்பலாம் அல்லது இதன் பொருட்டு அரசால் வழங்கலாகும் அத்தகைய பணிப்புரைகளுக்கு இணங்க புதிய திட்டத்தை தயாரிப்பதற்கு உரிய திட்ட அதிகார அமைப்பானது, அரசால் பணித்தபடி திட்டத்தை மாற்றமை செய்தோ அல்லது புதிய திட்டம் ஒன்றை தயாரித்தோ ஏற்பளிப்பிற்காக அரசுக்கு அதை பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.
வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், அரசுக்கு இதை நேரடியாக பணிந்தனுப்புதல் வேண்டும்.
39-O. திட்டம் செயற்பாட்டுக்கு வருதல்.திட்டம் செயற்பாட்டுக்கு வருதல்.— (1) அந்த திட்டத்திற்காக அரசினுடைய ஏற்பளிப்பை, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கையின் வாயிலாக வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள இரண்டு முதன்மையான நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது ஒன்று தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும், மற்றும் அத்தகைய அறிவிக்கையில் சொல்லப்பட்ட திட்டத்தினை பொதுமக்கள் ஆய்வு செய்யும் பொருட்டு வெளியிடப்படும் இடம் மற்றும் நேரத்தை குறிப்பிடுதல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்படி வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒன்று, தக்கவாறு செய்யப்பட்ட மற்றும் ஏற்பளிக்கப்பட்ட அந்தத் திட்டம் இறுதிச் சான்றாக அமையும். சொல்லப்பட்ட திட்டம் தமிழ்நாடு அரசிதழில் ஏற்பளிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டத் தேதியிலிருந்து செயற்பாட்டுக்கு வருதல் வேண்டும்.
(3) திட்டம் செயற்பாட்டிற்கு வரும் தேதி முதற் கொண்டு,—
(a) உரிய திட்ட அதிகார அமைப்பினால் வேண்டுறுத்தப்பட்ட நிலங்கள் அனைத்தும், அதன் மேம்பாட்டிற்காகவோ அல்லது அத்தகைய அரசுத் துறைகள், உள்ளாட்சி அதிகார அமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அதிகார அமைப்பு ஏதொன்றிலோ அந்த திட்டத்தில் உறுதியளிக்கபடவில்லையெனில் அல்லது வேறு நிலையில் அனைத்து வில்லங்கங்களில் இருந்து முற்றிலும் உரிய திட்ட அதிகார அமைப்பால் உறுதி அளிக்கப்பெறுதல் வேண்டும்;
(b) இறுதி மனைகளுக்கு மறு அமைத்துருவாக்கப்பட்டிருக்கும் அசல் மனைகளின் உரிமைகள் அனைத்தும் உளதாய் இல்லாது போகும் மற்றும் இறுதி மனை பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலரால் முடிவு செய்யப்பட்ட உரிமைகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்;
(c) உரிய திட்ட அதிகார அமைப்பு, இறுதி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமையாளர்களுக்கு இறுதி மனைகளின் அனுபவ உரிமையை ஒப்படைத்தல் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர்களில் ஒதுக்கீட்டு உறுதிச் சான்றிதழ் ஒன்றை வழங்குதலும் வேண்டும்.;
(d) திட்ட அதிகார அமைப்பால் நிறுத்தப்பட்ட பகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், கோவில்கள் ஆகியவற்றிற்கு உடைமை நிலங்கள் உள்ளடங்கலான அரசு நிலங்கள் அனைத்தும் வளர்ச்சி நோக்கத்திற்காக உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு மாற்றப்படலாம்.
39-P. திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பு, அந்தத் திட்டம் செயற்பாட்டிற்கு வந்த பின்னர் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையில் உரிய திட்ட அதிகார அமைப்பால் செய்யும்படி நேர்ந்த வெளியேற்றுதல் திட்டத்திற்கு புறம்பாக உள்ள கட்டடங்களை நீக்குதல், மூடி முத்திரையிடுதல், கட்டணம் வசூலித்தல் மற்றும் உள்ளடங்கலான உரிய நடவடிக்கைகள் எடுப்பதினால் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம்.
26(2) உரிய திட்ட அதிகார அமைப்பு, வேண்டுறுத்தலாகும் இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பை வழங்கும் நோக்கத்திற்காக 39-D எனும் பிரிவில் சுட்டப்பட்ட நில விற்பனையிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்துதல் வேண்டும்.
39-Q. திட்டத்தின் மாறுபாடுதிட்டத்தின் மாறுபாடு.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பினால், செயற்பாட்டிற்கு வரும் இறுதி திட்டத்திற்கு பின்னர், தானாகவோ அல்லது நில உரிமையாளர் ஒருவரின் விண்ணப்பத்தின் மூலமோ அந்த திட்டத்தில் தவறு, முறைகேடு அல்லது உறுதியின்மையின் பொருட்டு குறைபாடுடைய திட்டமாக கருதுமானால், அந்தத் திட்டத்தில் உரிய மாற்றங்களுக்காக அரசிடம் வேண்டுறுத்தலாம்.
வரம்புரை ஆனால், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அந்தத் திட்டத்தின் மாற்றமைவுக்காக் அரசிடம் நேரடியாக வேண்டுறுத்தலாம் :
மேலும் வரம்புரை ஆனால், அந்தத் திட்டத்தில் மேலுமான மாற்றமைவுகளுக்கான வேண்டுறுத்தம் எதனையும் அரசால் ஏற்றுக் கொள்ளுதல் ஆகாது :
(2) உரிய திட்ட அதிகார அமைப்பிடமிருந்து திருப்தியடையுமானால் வேண்டுறுத்தத்தை பெறப்பட்டதன் பேரில் அரசானது, மனநிறைவடையுமானால் அந்தத் திட்டத்தை மாற்றி தமிழ்நாடு அரசிதழில் மாற்றமைவுகளுடன் வெளியிட வேண்டும். அவற்றுள் மற்றும் அந்தப் பகுதியில் இரண்டு முதன்மையான நாளிதழ்களில் வெளியிடவேண்டும். அவற்றுள் குறைந்தது ஒன்றாவது தமிழ் நாளிதழாக இருத்தல் வேண்டும்.
(3) (1) மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின் அடங்கியுள்ள எது எவ்வாறாயிருப்பினும், இறுதி திட்டம் ஒன்றை, இந்தச் சட்டத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட மற்றும் ஏற்பளிக்கப்பட்ட அடுத்து வரும் திட்டம் ஒன்றால் முறித்தறவு அல்லது வேறானதாக்கவோ செய்யலாம்.
39-R. உள்ளாட்சிமன்றச் சட்டத்தால் விண்ணப்பத்தை இடைநிறுத்துதல் உள்ளாட்சிமன்றச் சட்டத்தால் விண்ணப்பத்தை இடைநிறுத்துதல்.— (1) நில ஒருங்கிணைப்பு பகுதிகளுக்குள் உள்ளாட்சி மன்றச் சட்டத்தின்படி உள்ளாட்சி அதிகார அமைப்பால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்தவொரு பணிப்புரையும் வழங்கலாம், அத்தகைய நில ஒருங்கிணைப்புப்பகுதி மேம்பாட்டுடனான தொடர்புடைய அறிவிக்கப்படலாகும் அத்தகைய நோக்கங்களுக்காக அத்தகைய கால அளவிற்காக உட்பட்டு உள்ளாட்சி மன்றச் சட்டத்தின்படி உரிய திட்ட அதிகார அமைப்புக்கு மாற்றப்படவோ மற்றும் நிறைவேற்றப்படவோ வேண்டும்மென அரசு அறிவுறுத்தலாம்.
விளக்கம்:- இந்தப்பிரிவின் நோக்கத்திற்காக,—
(a) "உள்ளாட்சி அதிகார அமைப்பு" என்பது,—
(i) அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனின்படியும் நிறுவப்பட்ட மாநகராட்சி மன்றச் சட்டம் எதனாலும்;
(ii) 1920-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் V/1920)தின்படி அமைத்துருவாக்கப்பட்ட நகராட்சி மன்றம் ஒன்று;
(iii) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி ஒன்று அல்லது ஊராட்சி ஒன்றியம் ஒன்று அல்லது கிராம ஊராட்சி ஒன்று (தமிழ்நாடு சட்டம் 21/1994); மற்றும்
(iv) 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியச் சட்டம் (தமிழ்நாடு சட்ட எண்.4/1971) அல்லது 1978 ஆம் ஆண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978) ஆகிய சட்டத்தின்படி அமைத்துருவாக்கப்பட்ட வாரியம் ஒன்று.
(b) "உள்ளாட்சி மன்றச் சட்டம்" என்பது",—
(i) 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் IV/1919) ;
(ii) 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 15/1971) ;
(iii) 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/1981) ;
27(iv) 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/1994) ;
(v) 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1994) ;
(vi) 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 29/1994) ;
(vii) 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 7/2008) ;
(viii) 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 8/2008) ;
(ix) 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 26/2008) ;
(x) 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 27/2008) ;
(xi) 2013ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/2013) ;
(xii) 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/2013) ;
(xiii) 1920ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் V/1920) ;
(xiv) 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 21/1994);
(xv) 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய சட்டம் (தமிழ்நாடு சட்டம் 4/1971);
(xvi) 1970 ஆம் ஆண்டு பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 28/1978);
(2) (1) ஆம் உட்பிரிவின்படி அறிவிக்கப்பட்ட கால அளவு கழிவுற்ற பின்னர், திட்டப்பகுதியில் உரிய திட்ட அதிகார அமைப்பு அல்லது பெயர் குறித்தமர்த்தப்பட்ட அலுவலர் ஆகியோரால் பொதுவான தெரு, குடிநீர் மற்றும் கழிவுநீர் முறை, தெருவிளக்கு மற்றும் அத்தகைய பிற வசதிகளை அனைத்து சொத்துக்கள் மற்றும் வசதிகளை உருவாக்க (1) ஆம் உட்பிரிவில் கட்டப்பட்ட உள்ளாட்சி அதிகார அமைப்பிடம் அது தானாகவே பெற்றிருக்கும்.
39-S. நிலுவைத் தொகைகளை வசூலித்தல்நிலுவைத் தொகைகளை வசூலித்தல்.— (1) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி வகுக்கப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறைவழிகள் எதனின் படியும் உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு, கடன் தொகை எதனையும், நில வருவாய் செலுத்தத்திற்கு உட்பட்டு அதன்பேரில் அரசுக்கு நிலுவை ஏதேனும் இருப்பின் எந்த மனையின் பேரில் கடன் உள்ளதோ அந்த மனையின் பேரில் முதல் சாற்றுரைக்கப்படும்.
(2) இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறை விதி எதனின்படியான உரிய திட்ட அதிகார அமைப்பிற்கு உள்ள கடன் தொகை எதனையும், எந்த நாளில் அது கடனாக இருக்கின்றதோ அந்த நாளில் கோரிக்கையின்பேரில் அல்லது உரிய திட்ட அதிகார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட நாளில் செலுத்தப்படாததை நில வருவாய் நிலுவைத் தொகை போன்றே வசூலிக்கப்படுதல் வேண்டும்.
39-T. உரிய திட்ட அதிகார அமைப்பினால் அந்தத் திட்டத்தில் பணிகளை உரிய திட்ட அதிகார அமைப்பினால் அந்தத் திட்டத்தில் பணிகளை நிறைவேற்றுதல்நிறைவேற்றுதல்.— (1) உரிய திட்ட அதிகார அமைப்பு, 39-M எனும் பிரிவின்படியான நிபந்தனையில் குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுதல் வேண்டும்.
(2) திட்ட அதிகார அமைப்பால் நிபந்தனையில் குறிப்பிடப்பட்ட கால அளவிற்குள் பணியை நிறைவு செய்வதற்கு அல்லது கால அளவை நீட்டிப்பதற்கு தவறுவாரேயானால், அரசானது, (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறுயிருப்பினும், தான் தகுமானதென கருதலாகும், மேலுமான ஒரு கால அளவிற்குள் பணிகளை முடிப்பதற்கு அல்லது அத்தகைய பணிகளை நிறைவேற்றுவதற்கு அலுவலர் ஒருவரை அமர்த்துதலுக்கு உரிய திட்ட அதிகார, அமைப்பிற்கு வேண்டுறுத்தலாம்".
2839-U. அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம்.— அரசுக்கு, குறித்த சில பொருட்பாடுகள் பேரிலான அறிக்கையை முன்னிடும் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் உரிய திட்ட அதிகார அமைப்பை பொறுத்தவரை, திட்டத்துடன் தொடர்புடைய பொருட்பாடுகள் அனைத்தையும், அரசுக்கு, சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தினால் பணிந்து அனுப்பப்படுதல் வேண்டும்.
48ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
7. முதன்மைச் சட்டத்தின்48ஆம் பிரிவில், "26 ஆம் பிரிவின் படியான தமிழ்நாடு அரசிதழில் அந்த அறிவிப்பு" என்ற சொற்றொடருக்காக, "26 அல்லது 39-A பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். 49ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
8. முதன்மைச் சட்டத்தின் 49ஆம் பிரிவில், "26ஆம் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு" என்ற சொற்றொடருக்கு மாற்றாக "26 அல்லது 39-A எனும் பிரிவின்படி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
99ஆம்
பிரிவிற்கானத் திருத்தம்
9. முதன்மைச் சட்டத்தின் 99ஆம் பிரிவில் ஒருத்தலைப்பு உள்ளடங்கலாக, "விரிவான வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடர் அது வருகின்ற இரண்டு இடங்களில் "விரிவான வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப்பகுதி வளர்ச்சித் திட்டம்" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
122ஆம்
10. முதன்மைச் சட்டத்தின் 122ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில் (j) எனும் கூறுக்காக பின்வரும் கூறுகள் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—
பிரிவிற்கானத் திருத்தம்
"(j) மண்டலத் திட்டம், முழுமைத் திட்டம், விரிவான வளர்ச்சித் திட்டம், புது நகர் வளர்ச்சித் திட்டம் மற்றும் நில ஒருங்கிணைப்புப் பகுதி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் படிவமும் உள்ளடக்கமும் மற்றும் அத்தகைய திட்ட வரைபடம் மற்றும் திட்டத்தை தயாரித்தல், பணிந்தனுப்புதல் மற்றும் ஏற்பளிப்பு ஆகியவற்றுடான தொடர்பில் பின்பற்றப்பட்ட நடைமுறை மற்றும் அத்தகைய திட்ட வரைபடம் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய அறிவிப்புகளை வெளியிடும் படிவம் மற்றும் முறை;
(jj) பெயர்குறித்தமர்த்தப்பட்ட அலுவலரின் கடமைகள் மற்றும் மனைகளை மறு அமைத்துருவாக்கும் முறை, இறுதிமனைகள் ஒதுக்கீடு, வருவாய்த் துறையின் நில பதிவுகளில் இறுதி திட்டத்தில் முடிவு செய்யப்பட்ட சட்ட உரிமைகளை உள்ளடக்கிப் பதிவு செய்தல்;
(jjj) திட்டத்தினை தயாரிப்பதற்காக ஏற்பளிப்பதற்காக மற்றும் திறம்பட நிறைவேற்றுவதற்காக திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகை அத்தகைய ஒப்பந்த கணக்கு போன்ற திட்டத்திற்கான நிதி கணக்கு."
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்(மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
29தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 10-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 43/2018.
11882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தை மேலு882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச் சட்டத்தை மேலும் திருத்தம் ம் திருத்தம் செய்வதற்கானசெய்வதற்கான
ஒரு சட்டஒரு சட்டம்ம்
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்ற பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக :—
1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும். குறுந்தலைப்பு
மற்றும் தொடக்கம்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம் 2. 1882-ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்சட்டத்தின் 2-ம் பிரிவில், "மரம்" என்பதற்கான பொருள் 2 ஆம் பிரிவிற்கான v/1882.
திருத்தம்.
வரையறைக்குப் பதிலாக, பின்வரும் பொருள் வரையறை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது :—
"மரம்" என்பது அடிமரங்களையும் புதர் செடிகளையும் உள்ளடக்கும்;".
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார், ச. கோபி ரவிக்குமார், அரசுச் செயலாளர்(மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
30 31தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பின்வரும் சட்டமானது, 2018-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
சட்ட எண் 45/2018.
1892 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றச் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2018 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற (திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
மற்றும் தொடக்கம்.
(2) இந்தச் சட்டம், மாநில அரசால் அறிவிக்கையின் வாயிலாக குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
3-A பிரிவிற்கான
திருத்தம்.
மையச்சட்டம் VII/1892
2. (இதன் பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறித்திடலாகும்) 1892 ஆம் ஆண்டு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றச் சட்டத்தின் 3-A பிரிவில் ரூபாய் "பத்து இலட்சம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக ரூபாய் "ஒரு கோடி" என்ற சொற்றொடரை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
4ஆம் பிரிவிற்கான 3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவில் (2) ஆம் உட்பிரிவில் ரூபாய் "இருபத்தைந்து
திருத்தம்.
இலட்சம்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக ரூபாய் "ஒரு கோடி" என்கின்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
மாறுதற்கான 4. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியில் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்
வகைமுறை.
உள்ள மற்றும் இந்தச் சட்டத்தால் திருத்தம் செய்யப்பட்டவாறு முதன்மைச் சட்டத்தின் வகை முறைகளின்படி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் உரிமையியல் வழக்குகள் அனைத்தும் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சு.ச. பூவலிங்கம், சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன்,க. நரசிம்மன், உதவி இயக்குநர்,
சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.
PRINTED AND PUBLISHED BY THE DIRECTOR OF STATIONERY AND PRINTING, CHENNAI ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU