Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Tamil Nadu Acts and Ordinances

Published 04 December 2019

Type
Ordinary
Gazette no.
49
Part
Part IV
Notifications
Act No. 44/2018
Section
Section 2T sup
Identifier
in.gazette.tamilnadu.2019-12-04.Ordinary_49_Part-IV_Section-2T-sup
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 15.20 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 49]

சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 4, 2019

கார்த்திகை 18, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு

த மி ழ் ந ா டு ச ட் ட ம ன் ற ப் ே ப ர ை வ யி ன் பி ன் வ ரு ம் ச ட் ட ம ா ன து , 2 0 1 8 -ஆ ம் ஆண் டு நவம்பர் திங்கள் 30-ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது, மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெளியிடப்படுகிறது:-

சட்ட எண் 44/2018.

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தினைச் சேர்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நிருவகிப்பப்படும் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகளையும் நிலைக்கொடைகளையும் பாதுகாப்பதற்கும் பேணிவருவதற்கும் மற்றும் அதனோடு தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்குமானதொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் அறுபத்து இரண்டாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

அத்தியாயம்-I

முன்னுரை

1. (1) இந்தச் சட்டம், 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணிவருதல்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு அளாவுகை மற்றும் தொடக்கம் (2) இது, தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.

(3) இஃது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

இந்தச் சட்டத்தின் பொருந்துகை 2. இந்தச் சட்டமானது, வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு நிருவகிக்கப்படும் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகளுக்கும் நிலைக்கொடைகளுக்கும் பொருந்துதல் வேண்டும்.

3. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறு பொருள் குறித்தாலன்றி,-

பொருள்

வரையறைகள் (a) "நிருவாக அலுவலர்" என்றால், 34-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி நிருவாகக் குழுமத்தால் நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் எனப் பொருள்படும்;

(b) "பயனாளர்" என்றால், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையொன்று எவருடைய நலனுக்காக உருவாக்கப்படுகிறதோ அந்த நபரொருவர் அல்லது நிலையமொன்று எனப் பொருள்படும்; மற்றும் அதில் அறநிலை தொடர்பான நோக்கங்களும் பொதுப் பயன்பாட்டிற்கான பிற நோக்கங்கள் எவையும் உள்ளடங்கும்;

(c) "நிருவாகக்குழுமம்" என்றால், 8-ஆம் பிரிவின்படி அமைத்துருவாக்கப்பட்ட நிருவாகக்குழுமம் எனப் பொருள்படும்;

(d) "முதன்மை நிருவாக அலுவலர்" என்றால், 19-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட அலுவலர் எனப் பொருள்படும்.

[ 1 ]

DTP-IV-2-(49) (T Sup)—12 (e) "தலைமையாளர்" என்றால், 9-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் (a) எனும் கூறின்படி நியமிக்கப்பட்ட தலைமையாளர் எனப் பொருள்படும்.

(f) "அறநிலை நோக்கம்" என்பது, ஏழைகளுக்கு இடருதவி, பொது மக்களுக்கு அல்லது அவர்களின் ஒரு பகுதியினருக்கு, கல்வி, மருத்துவ உதவி, பயனுள்ள பிறநோக்கம் எதனையும் மேம்படுத்துவது, அல்லது நல்வாழ்வு அல்லது அது போன்ற நோக்கங்களை உள்ளடக்கும்

(g) "நீதிமன்றம்" என்றால், -

(i) சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்து ஒன்று தொடர்பாக, சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம்;

(ii) வேறெங்கும் அமைந்துள்ள பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்து ஒன்று தொடர்பாக, அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்தானது அமைந்துள்ள பரப்பிடத்தின் மீது அதிகார வரம்பு கொண்டுள்ள (முதுநிலைக் கோட்டம்) உரிமையியல் நீதிபதியின் நீதிமன்றம், அல்லது அவ்வாறான நீதிமன்றம் எதுவுமில்லையானால், அத்தகைய அதிகார வரம்பு கொண்டிருக்கிற மாவட்ட நீதிமன்றம்;

(iii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிமன்றங்களின் வரம்பிற்குள்ளாக அமைந்த பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்து ஒன்று தொடர்பாக, அத்தகைய சொத்துகள் அனைத்தும் அல்லது அவற்றுள் எதொன்றும் தொடர்பாக மேற்சொன்னவாறு அதிகாரவரம்பு பெற்றிருக்கக் கூடிய நீதிமன்றம் எதுவும் எனப்பொருள்படும்.

(h) நிலைக்கொடை என்றால், ஒய்வு இல்லங்கள், சத்திரங்கள், பாடசாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஏழைகளுக்கு உணவளிக்கும் இல்லங்கள், கல்வி மேம்பாட்டிற்கான நிறுவனங்கள், மருத்துவ உதவி, மக்கள் நல்வாழ்வு அல்லது அது போன்ற இயல்பினதான பிற நோக்கங்கள் போன்ற வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தின் அல்லது அதன் பிரிவு எதற்கும் பயன்படும் வகையிலான நோக்கங்களுக்கு ஆதரவு தருவதற்கு அல்லது அவற்றைப் பேணிவருவதற்கு வன்னியகுல சத்திரியர் சமுதாயம் அல்லது அதன் பிரிவு எதனின் நலனுக்காக அல்லது அதனால் உரிமை என்ற வகையில் பயன்படுத்தப்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட அல்லது நிலைக் கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் எனப் பொருள்படும், மற்றும் அதில் தொடர்பான நிறுவனமும் உள்ளடங்கும்.

(i) "அரசு" என்றால், மாநில அரசு எனப் பொருள்படும்;

(j) "மரபு வழி பொறுப்பாட்சியர்" என்றால், மரபுரிமை வழியாக வருகிற அல்லது வழக்காறு வழியாக முறைப்படுத்தப்படுகிற அல்லது மரபுரிமை வழியானது வகை செய்யப்பட்ட திட்டமானது எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்கிறதோ அது வரையில் என்பதற்கு உட்பட்டு, நிறுவனரால் திட்டவட்டமாக வகை செய்யப்படுகிற முறையில் எவருடைய பதவியின் வழியுரிமையானது வருகிறதோ அந்த அறநிலைப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பொறுப்பாட்சியர் எனப் பொருள்படும்.

(k) "உறுப்பினர்" என்றால், நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர், பதவி வழி உறுப்பினர் உறுப்பினர் செயலர் மற்றும் தலைமையாளரை உள்ளடக்கும்.

(l) "அக்கறையுள்ள நபர்" என்றால், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் இருந்து நிதி சார்ந்த அல்லது பிற நலன்கள் எவற்றையும் பெறுவதற்கு உரிமைத் தகுதியுள்ள நபர் எவரும் எனப் பொருள்படும், மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய பணி அல்லது அறப்பணியை நிறைவேற்றுவது குறித்து கவனிப்பதற்கு உரிமைத் தகுதியுள்ள அல்லது அவ்வாறு கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிற அல்லது அறச்செயல் எதிலுமோ அல்லது அங்குள்ள பரிசுகளை பகிர்ந்து வழங்குதல் குறித்ததான நலனில் பங்கெடுத்துக்கொள்ள உரிமைத்தகுதியுடைய அல்லது பங்கெடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிற நபரொருவரையும் உள்ளடக்கும்;

(m) "வகுத்துரைக்கப்பட்டது" என்றால், விதிகளின் மூலம் வகுத்துரைக்கப்பட்டது எனப் பொருள்படும்;

(n) "நில அளவை அலுவலர்" என்றால், 4-ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின்படி நியமிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் எனப் பொருள்படும்;

(o) "பொறுப்பாட்சி" என்றால், வன்னியகுல சத்திரியரைச் சேர்ந்த நபரொருவரால், அல்லது நபர்கள் அடங்கிய குழுவால், அல்லது நிறுவனங்களால் பொறுப்பாட்சியை உருவாக்குகிறவர் கருதுகிறவறான அறச்செயல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி எனப் பொருள்படும்;

(p) "பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி" என்றால், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனையும் மேலாண்மை செய்து நிருவகிப்பதற்கு நியமிக்கப்பட்ட நபரெவரும் எனப் பொருள்படும்;

தமிழ்நாடு சட்டம்.

45/1994.

(q) "வன்னிய குல சத்திரியர்" என்றால், 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிலையங்களில் இடங்களையும் அரசின் கீழ்வரும் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல் சட்டத்தின்படி அரசினால் அறிவிக்கை3 செய்யப்பட்டவாறான (வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னிகுல சத்திரியா ஆகியோர் உள்ளடங்கலாக) வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தினர் எனப் பொருள்படும்;

அத்தியாயம் II

பொறுப்பாட்சிகளின் மற்றும் நிலைக்கொடைகளின் சொத்துக்கைப் பட்டியலிடுதல்

4. (1) அரசானது, ஆணையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து அத்தகைய ஆணையில் குறித்துரைக்கக்கூடிய அத்தகைய பரப்பிடங்களுக்குள்ளாக இருந்து வருகின்ற பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்குச் சொந்தமான சொத்துக்களை நில அளவை செய்வதற்காக வட்டாட்சியர் படிநிலைக்குக் கீழ் அல்லாத நில அளவை அலுவலரொருவரை நியமிக்கலாம்.

பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகளின் சொத்துக்களின் முதனிலை நில அளவை.

(2) நில அளவை அலுவலர், தேவையானதாக இருக்கக் கூடிய அத்தகைய விசாரணையைச் செய்த பின்னர், பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் சொத்துக்களைப் பொறுத்த அளவில் பின்வரும் தகவல்கள் அடங்கியதான தனது அறிக்கையைப் பணிந்தனுப்புதல் வேண்டும், அதாவது:-

(a) அப்பரப்பிடத்தில் உள்ள பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகளின் எண்ணிக்கை;

(b) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை ஒவ்வொன்றும் அமைக்கப்பட்டதன் இயல்பும், நோக்கமும்;

(c) ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையிலிருந்தும் வரும் மொத்த வருமானம்;

(d) ஒவ்வொரு பொறுப்பாட்சியையும் நிலைக்கொடையையும் பொறுத்த அளவில் செலுத்தப்பட வேண்டிய நிலவருவாய், கட்டணங்கள் மற்றும் வரிகள்;

(e) ஒவ்வொரு பொறுப்பாட்சியாலும் மற்றும் நிலைக்கொடையாலும் உள்ளாகும் செலவுகள்; மற்றும்

(f) ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை தொடர்பாக வகுத்துரைக்கப்படக் கூடியவாறான, பிற தகவல்கள்;

மையச் சட்டம்

V/1908

(3) நில அளவை அலுவலர், விசாரணை எதனையும் செய்யும் போது, பின்வரும்ரும் பொருட்பாடுகளைப் பொறுத்த அளவில், 1908-ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமையியல் நீதிமன்றமொன்றில் உற்றமைந்துள்ள அதே அதிகாரங்களைப் பெற்றிருத்தல் வேண்டும், அதாவது:-

(a) சாட்சி எவருக்கும் அழைப்பாணை அனுப்பி வரவழைத்து விசாரணை செய்தல்;

(b) ஆவணம் எதனையும் கண்டறியுமாறும் முன்னிடுமாறும் கோருதல்;

(c) நீதிமன்றம் அல்லது அலுவலகம் எதிலிருந்தும் பொதுப்பதிவுரு எதனையும் கோரிப் பெறுதல்;

(d) சாட்சிகள் அல்லது கணக்குகளை ஆய்வு செய்வதற்காக ஆணையங்களை பிறப்பித்து ஆணையிடுதல்;

(e) உள்ளூர் ஆய்வுகளையும் அல்லது உள்ளூர் புலனாய்வுகளையும் செய்தல்;

(f) வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய பிற பொருட்பாடுகள்.

(4) அத்தகைய விசாரணை எதனின் போதும் குறிப்பிடப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்று தனிப்பட்டதொரு பொறுப்பாட்சியா அல்லது நிலைக்கொடையா அல்லது பொது பொறுப்பாட்சியா அல்லது நிலைக் கொடையா என்பது குறித்து பூசல் எதுவும் எழுமானால் மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை ஆவணத்தில் அதன் இயல்வு குறித்து தெளிவான குறிப்புகள் இருக்கின்றன என்ற நிலையில் அப்பூசலானது அத்தகைய ஆவணத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.

(5) அரசானது, ஆணையின் வாயிலாக, பரப்பிடம் எதிலும் உள்ள பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையைப் பொறுத்த அளவில் இரண்டாவது அல்லது அதற்கடுத்த நில அளவை செய்யுமாறு நில அளவை அலுவலரைப் பணிக்கலாம்; மற்றும் (2), (3), (4) ஆகிய உட்பிரிவுகளின் வகைமுறைகள், (1)-ஆம் உட்பிரிவின்படி பணிக்கப்பட்டவாறான நில அளவை ஒன்றுக்கு அவை பொருந்துவது போன்றே பொருந்துதல் வேண்டும்;

வரம்புரை: அடுத்து முன்நிகழ்ந்த நில அளவை தொடர்பாகக் கொடுக்கப்பட்ட அறிவிக்கையின் தேதியிலிருந்து இருபது ஆண்டுகள் என்பதான கால அளவு முடிவடைவது வரையிலும் அத்தகைய இரண்டாம் அல்லது அதற்கடுத்த நில அளவையானது செய்யப்படுதல் கூடாது.

4

பொறுப்பாட்சி

5. நிருவாக் குழுமமானது, 4-ம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி அதற்குப் பணிந்தனுப்பப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தல் வேண்டும்; மற்றும் இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் சொத்துக்களின் பட்டியலை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடுதல் வேண்டும்:

மற்றும் நிலைக் கொடையின் சொத்துகளின் பட்டியலை வெளியிடுதல்.

பொறுப்பாட்சி

6. (1) சொத்துக்களின் பட்டியலில் குறித்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட சொத்து எதுவும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றுக்குச் சொந்தமானதா என்பது குறித்து வினா அல்லது பூசல் எதுவும் எழுமானால், அதில் நபர் எவரும் அந்த வினா அல்லது பூசலின் முடிவிற்காக நீதிமன்றமொன்றில் உரிமை வழக்கொன்றைத் தொடுக்கலாம்:

மற்றும் நிலைக் கொடைக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான பூசல்கள்.

வரம்புரை: ஆனால், அத்தகைய உரிமை வழக்கு எதுவும், பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடைக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டு முடிவடைந்ததன் பின்னர், நீதிமன்றம் எதனாலும் எடுத்துக் கொள்ளப்படுதல் கூடாது.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படியான உரிமை வழக்கு எதற்கும் நில அளவை அலுவலரை தரப்பினரொருவராகச் செய்தல் கூடாது; மற்றும் இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகள் எதற்கும் இணங்கிய வகையில் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதப்பட்ட செயல் எதனையும் பொறுத்த அளவில் அவருக்கெதிராக உரிமை வழக்கோ, குற்றவியல் வழக்கோ அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவுமோ எழாது.

(3) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றுக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியலானது, (1)-ஆம் உட்பிரிவின்படி நீதிமன்றமொன்றின் முடிவுக்கு இணங்கிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டாலன்றி கடைசியும் இறுதியுமானதாக இருத்தல் வேண்டும்.

நில அளவைக்கான செலவினத்தை திரும்பப் பெறுதல்.

7. (1) இந்த அத்தியாயத்தின்படி பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்குச் சொந்தமான சொத்துக்களின் பட்டியலை வெளியிடுவதற்கான செலவு உள்ளடங்களான, நில அளவை ஒன்றைச் செய்வதற்கான மொத்த செலவினமானது, முதன்மை நிருவாக அலுவலரால் கணிக்கப்பட்டவாறான, பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிகர ஆண்டு வருமானத்திற்கான விகிதத்தில் அந்தந்த பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையால் ஏற்கப்படுதல் வேண்டும்.

(2) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது ஏற்படுத்தப்பட்ட ஆவணம் அல்லது முறையாவனத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், (1)-ஆம் உட்பிரிவின்படி, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையிலிருந்து தரவேண்டிய தொகை எதனையும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்களின் வருமானத்திலிருந்து செலுத்தலாம்.

அத்தியாயம் III

வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் நிருவாகக்

குழுமத்தை அமைத்துருவாக்குதல் மற்றும் அதன் பணிகள்

நிறுவியமைத்தல்.

8. (1) இது குறித்து, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்க கூடிய அத்தகைய தேதியிலிருந்து செயல்விளைவு கொள்ளும் வகையில், "வன்னியகுல சத்திரியா பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் நிருவாகக்குழுமம்" என்ற பெயரில் அல்லது அந்த அறிவிக்கையில் குறித்துரைக்கப்படக் கூடிய அத்தகைய பிற பெயரில் அமைத்துருவாக்கப்படுதல் வேண்டும்.

(2) நிருவாகக்குழுமானது, கூட்டுரும அமைப்பாக இருத்தல் வேண்டும். அது நிலையான தொடர் வழியுரிமையையும் பொது இலச்சினை ஒன்றையும் பெற்றிருக்கும். சொத்துக்களைப் பெறவும் வைத்திருப்பதற்கும் வகுத்துரைக்கப்படக் கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு அத்தகைய சொத்தினை மாற்றம் செய்வதற்கும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும், மற்றும் அது மேற்சொன்ன பெயரில் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும் வேண்டும்.

நிருவாகக்

9. (1) நிருவாகக்குழுமமானது பின்வரும் நபர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(a) ஒரு தலைமையாளர், அவர் வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தைச் சேர்நத நபர் ஒருவராக இருத்தல் வேண்டும்.

குழுமத்தில் எவரொவர் அடங்கியிருப்பர் என்பது.

(b) பின்வரும் உறுப்பினர்கள், அவர்கள் வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

(i) உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு இடையே இருந்து ஒரு நபர்;

(ii) அகில இந்திய பணிகளில் இருந்து ஒரு நபர்;

(iii) சட்ட மன்றப் பேரவையின் உறுப்பினர்களுக்கு இடையே இருந்து இரண்டு நபர்கள்;

5

(iv) பொறுப்பாட்சிகளின் பொறுப்பாட்சியர்கள் மற்றும் நிலைக்கொடையின் நிருவாகிகள் ஆகியோருக்கிடையே இருந்து ஒரு நபர்;

(v) வன்னியகுல சத்திரியர் சமுதாய நிறுவனங்களைச் சார்பாற்றம் செய்கிற ஒருநபர்;

(vi) சட்டத் தொழில், தணிக்கை, வணிகம், கல்வி, பொறியியல் மற்றும் தொழிற்சாலை ஆகிய துறைகளில் நல்ல பெயர் பெற்றுள்ள புகழ்வாய்ந்த நபர்கள் இருவர்;

(vii) வன்னியகுல சத்திரியர் நலத்திற்காகப் பணியாற்றி உள்ள இரண்டு பெண்கள்;

(c) பின்வரும் பதவி வழி உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும், அதாவது:-

(i) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசுச் செயலாளர்; மற்றும்

(ii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் ஆணையர் அல்லது இயக்குநர்:

வரம்புரை: ஆனால், பதவிவழி- உறுப்பினர்கள், வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்பது தேவையில்லை.

(d) உறுப்பினர் - செயலாளர்.

(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, அரசானது, அறிவிக்கையின் வாயிலாக, அதில் குறித்துரைக்கப்படக் கூடிய அத்தகைய தேதியிலிருந்து தலைமையாளரையும், உறுப்பினர்களையும் நியமித்து நிருவாகக் குழுமத்தை அமைத்துருவாக்கலாம் அல்லது மீண்டும் அமைத்துருவாக்கலாம்.

பதவிக் கால

அளவு.

10. நிருவாகக் குழுமத்தின் தலைமையாளர்களும் இது குறித்து அரசினால் குறித்துரைக்கப்படக்கூடிய மூன்றாண்டுக் கால அளவுக்கு மேற்படாத அத்தகைய கால அளவிற்குப் ஒவ்வொரு உறுப்பினரும் பதவி வகித்தல் வேண்டும்.

நிருவாகக் 11. (9) ஆம் பிரிவின் (1)-ஆம் உட்பிரிவின் (c) எனும் கூறில் சுட்டப்பட்ட பதவி வழி உறுப்பினர்கள் அல்லாத பிறவாறான, நிருவாகக்குழுமத்தின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு அல்லது அவ்வாறு தொடர்ந்து இருப்பதற்கு பின்வரும் நேர்வுகளில் நபரொருவர் தகுதிக்கேடுற்றவராதல் வேண்டும்.

(i) அவர் இருபத்தொன்று வயதுக்கு குறைவானவராக இருந்தால்;

(ii) அவர் மனச்சீர்கேடுற்றநபர் ஒருவராகக் கண்டறியப்பட்டால்;

குழுமத்தின் உறுப்பினர் ஒருவராக நியமிக்கப் படுவதற்கு அல்லது அவ்வாறு தொடர்ந்து இருப்பதற்கான தகுதிக்கேடுகள்.

(iii) அவர் விடுக்கப்படாத நொடிப்பு நிலையர் ஒருவராக இருத்தல்;

(iv) அவர் ஒழுக்கக்கேட்டினை உள்ளங்கிய குற்றச்செயல் ஒன்றுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இருந்து, அத்தகைய தீர்ப்பானது எதிர்மாறாக்கப்படாமல் இருந்தால் அல்லது அத்தகைய குற்றச் செயலைப் பொறுத்தளவில் முழுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கவில்லையானால்;

(v) அவர் அதற்கு முன்னர் நிகழ்வுகளில்,-

(a) இரண்டு கால அளவுகளில் நிருவாகக் குழுமத்தின் தலைமையாளர் ஒருவராக அல்லது உறுப்பினராக பணியாற்றி இருந்தால்.

விளக்கம்:- இந்தக் கூறில் சுட்டப்பட்ட இரண்டு கால அளவுகளை கணக்கிடும் நோக்கத்திற்காக, நபரொருவர், தலைமையாளர் ஒருவராகவோ அல்லது உறுப்பினர் ஒருவராகவோ அல்லது இரண்டிலுமோ பதவி வகித்த கால அளவானது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(b) உறுப்பினர் ஒருவராக அல்லது நிருவாகக் குழுமத்தின் உள்ளீட்டெல்லையில் உள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி ஒருவராக இருக்கும் பதவியிலிருந்து அகற்றப்பட்டவராக இருந்தால்;

(c) தவறான மேலாண்மை அல்லது ஊழல் செய்ததற்காக பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை எதிலும் உள்ள நிலை எதிலிருந்தும் தகுதி வாய்ந்த நீதிமன்றம் ஒன்றின் ஆணை ஒன்றினால் அகற்றப்பட்டிருந்தால்.

நிருவாகக் 12. (1) நிருவாகக் குழுமமானது அலுவல் நடவடிக்கைக்காக ஒழுங்குமுறை விதிகளால் வகுத்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய நேரத்திலும் இடத்திலும் கூடுதல் வேண்டும்.

குழுமத்தின் கூட்டங்கள்6 (2) தலைமையாளர் அல்லது அவர் வராத போது, உறுப்பினர்களுக்கிடையேயிருந்து உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எவரும் நிருவாகக் குழுமத்தின் கூட்டமொன்றுக்குத் தலைமை வகித்தல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, நிருவாகக்குழுமத்தின் கூட்டம் எதனின் முன்பாக வரும் பிரச்சினைகள் அனைத்தும், உறுப்பினர்களின் வாக்குகளின் பெரும்பான்மை ஒன்றினால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் வாக்குகள் சமமாக இருக்கின்ற நேர்வில், தலைமையாளர் அல்லது தலைமை வகிக்கிற பிற நபர் எவரும் இரண்டாம் அல்லது அறுதி வாக்கு ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

கோரெண் வரம்பு.

13. நிருவாகக்குழுமத்தின் கோரெண் வரம்பானது, தலைமையாளர் உள்ளிட்ட, ஆனால் காலியிடங்களின் எண்ணிக்கை நீங்கலாக உறுப்பினர்களில் நூற்றுக்கு ஐம்பதுக்கு குறையாததாக இருத்தல் வேண்டும்.

நிருவாகக்

குழுமத்தின் குழுக்கள்.

14 (1) நிருவாகக் குழுமமானது, அது தேவையானதெனக் கருதும் போதெல்லாம், பொதுவாக அல்லது குறிப்பிட்டதொரு நோக்கமொன்றுக்காக, அல்லது குறித்துரைக்கப்பட்ட பரப்பிடம் எதற்காகவும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தினை மேற்பார்வை செய்வதற்கான குழுக்களை நிறுவியமைக்கலாம்.

(2) அத்தகைய குழுக்களை அமைத்துருவாக்குதல், அதன் பணிகள், கடமைகள், பணி பற்றிய வரையரைகள், நிபந்தனைகள் ஆகியன நிருவாகக் குழுமத்தால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

தலைமையாளரும் உறுப்பினர்களும் பதவி விலகுதல்

வரம்புரை: ஆனால், அத்தகைய குழுக்களின் உறுப்பினர்கள் நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை.

15. தலைமையாளரோ அல்லது பதவி வழி உறுப்பினர்கள் அல்லாத பிற உறுப்பினர் எவருமோ, எந்த நேரத்திலும் எழுத்துருவில் அரசுக்கு முகவரியிட்டு அனுப்புவதன் மூலம் தலைமையாளர் அல்லது நேர்விற்கேற்ப உறுப்பினர் பதவியை விட்டு விலகலாம்; ஆனால் அவர்தம் பதவிவிலகலானது ஏற்கப்படுவது வரையிலும், அவர் பதவியில் தொடர்ந்திருத்தல் வேண்டும்.

16. அரசானது, அறிவிக்கையின் வாயிலாக நிருவாகக் குழுமத்தின் தலைமையாளர் அல்லது பதவி தலைமை&

வழி உறுப்பினர் அல்லாத எவரையும் அவர்,

(i) 11-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட தகுதிக்கேடு எதற்கும் உட்பட்டிருந்தால் அல்லது உட்பட்டவராகி இருந்தால்; அல்லது

யாளரையும் உறுப்பின& ரையும் பதவியி& லிருந்து அகற்றுதல்.

(ii) செயற்படுவதற்கு மறுத்தால் அல்லது செயற்படுவதற்கத் தகுதியற்றவராக இருந்தால், அல்லது அரசு, அவர் கொடுக்கக்கூடிய விளக்கம் எதனையும் கேட்ட பின்னர், அவர் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கருதினால்;

அல்லது

(iii) போதுமான காரணமின்றி நிருவாகக்குழுமத்தின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு வரத் தவறியிருக்கிறார் என நிருவாகக் குழுமம் கருதினால்,

அவரைப் பதிவியிலிருந்து அகற்றலாம்.

காலியிடத்தை நிரப்புதல்.

17. பதவியிலிருந்து அகற்றுதல், பதவி விலகல், மரணம் அல்லது பிறவாறு தலைமையாளர் அல்லது உறுப்பினர் ஒருவரின் பதவியிடம் காலியிடமாகிற போது, புதிய தலைமையாளர் ஒருவர் அல்லது புதிய உறுப்பினர் ஒருவர் அவர்தம் இடத்தில் நியமிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அந்தத் தலைமையாளர் அல்லது அந்த உறுப்பினர், எந்தத் தலைமையாளரின் அல்லது உறுப்பினரின் இடத்தை அவர் நிரப்புகிறாரோ அவர் அக்காலியிடம் ஏற்படாதிருந்தால், எவ்வளவு கால அளவிற்குப் பதவி வகித்திருக்கக் கூடுமோ அவ்வளவு கால அளவுக்கு மட்டுமே பதவி வகித்து வருதல் வேண்டும்.

காலியடங்கள்

18. நிருவாகக் குழுமத்தின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், அதன் உறுப்பினர்களுக்கிடையே காலியிடம் எதுவும் இருக்கிறது அல்லது அதன் அமைப்புருவாக்கத்தில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே செல்லத்தகாததாக ஆக்குதல் கூடாது.

முதலானவை நிருவாகக் குழுமத்தின் நடவடிக்கை- களை செல்லத்தகாதது ஆக்குதல் கூடாது.

7

முதன்மை நிருவாக 19. (1) நிருவாகக் குழுமத்தின் முதன்மை நிருவாக அலுவலர் ஒருவர் இருத்தல் வேண்டும்; அவர் வன்னியகுல சத்திரியா சமுதாயத்தைச் சேர்ந்த நபரொருவராக இருத்தல் வேண்டும்; மற்றும் அவர் நிர்வாகக் குழுமத்தின் ஆலோசனையுடன் அரசினால் நியமிக்கப்படுதல் வேண்டும்.

(2) முதன்மை நிருவாக அலுவலரின் பதவிக்காலமும், பிற பணிபற்றிய நிபந்தனைகளும் வகுத்துரைக்கப்படக் கூடியவாறு இருத்தல் வேண்டும்.

அலுவலரின் நியமனமும் அவர்தம் பதவிக்காலம் பிற பணி பற்றிய நிபந்தனைகளும் (3) முதன்மை நிருவாக அலுவலர், நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர்-செயலராக இருத்தல் வேண்டும்; அவர் நிருவாகக் குழுமத்தின் நிருவாகக் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.

நிருவாகக் 20. (1) இந்தச் சட்டத்தின்படி நிருவாகக் குழுமமானது திறம்பட பணிகளை ஆற்றுவதற்காக, நிருவாகக்குழுமமானது, அரசின் அனுமதியுடன், தேவைப்படக் கூடியதாக இருக்கிற அத்தகைய எண்ணிக்கையிலான அலுவலர்களையும் பிற பணியாளர்களையும் நியமிக்கலாம்.

(2) அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களின் நியமனம், பதவிக்கால அளவு, பணிபற்றிய

குழுமத்தின் அலுவலர்களும் பிற பணியார்களும் நிபந்தனைகள் ஆகியன, ஒழுங்குமுறை விதிகளில் வகை செய்யப்படக்கூடியவாறு இருத்தல் வேண்டும்.

21. (1) இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகளின் மற்றும் நிருவாகக்குழுமத்தின் பணிப்புரைகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, முதன்மை நிருவாக அலுவலரின் பணிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:-

முதன்மை நிருவாக அலுவலரின் கடமைகளும் அதிகாரங்களும்.

(i) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களின் இயல்பையும் அளவையும் கவனமாக ஆய்வு செய்தல், மற்றும் தேவைப்படும் போதெல்லாம் பொறுப்பாட்சியரிடமிருந்தும் நிருவாகிகளிடமிருந்தும் சொத்துக்களின் விவரப்பட்டியலைக் கோருதல்; மற்றும் கணக்குகளை, விவரவுரைகளை மற்றும் தகவல்களைக் கோருதல்;

(ii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைகளின் சொத்து, கணக்குகள், பதிவுருக்கள், ஆவணங்கள் அல்லது அவை தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தல் அல்லது ஆய்வு செய்ய ஆவன செய்தல்;

(iii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையை கட்டுபாடு செய்வதற்கு, பேணிவருவதற்கு மற்றும் கண்காணிப்பதற்கு தேவைப்படக் கூடியவாறான அத்தனை செயல்களைப் பொதுவாகச் செய்தல்.

(2). (1)-ஆம் உட்பிரிவின்படியான பணிப்புரைக்களைக் கொடுக்கும் அதிகாரத்தைச் செயற்படுத்துகையில் நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி ஆவணத்தில் அல்லது நிலைக் கொடையில் காணப்படும் பணிப்புரைகளுக்கு இணங்கிய வகையில் செயற்படுதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தில் பிறவாறு வெளிப்படையாக வகை செய்யப்பட்டிருந்தால் தவிர, முதன்மை நிருவாக அலுவலர், இந்தச் சட்டத்தின்படி அவருக்கு ஒதுக்கியளிக்கப்பட்டுள்ள அல்லது ஒப்படைவு செய்யப்பட்டுள்ள அத்தகைய அதிகாரங்களைச் செயற்படுத்துவதுடன் அத்தகைய கடமைகளை ஆற்றுதல் வேண்டும்.

22. (1) முதன்மை நிருவாக அலுவலர், நிருவாகக் குழுமத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணை, நிருவாகக் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது,-

குழுமத்தின் ஆணை- களையும், தீர்மானங்- களையும் பொருத்த அளவில் முதன்மை நிருவாக அலுவலரின் அதிகாரம்.

(i) சட்டத்திற்கு இணங்கிய வகையில் பிறபிக்கப்பட்டிருக்கவில்லை அல்லது நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை என; அல்லது

(ii) இந்தச் சட்டத்தாலோ அல்லது அதன்படியோ அல்லது பிற சட்டம் எதனின் படியோ நிருவாகக் குழுமத்திடம் வழங்கப்பட்ட அதிகாரங்களை மிஞ்சிய வகையில் அல்லது அவற்றை தவறாகவும் பயன்படுத்திய வகையில் இருக்கிறதென; அல்லது

(iii) நடைமுறை படுத்தப்பட்டால்,

(a) நிருவாகக்குழுமத்திற்கு அல்லது தொடர்புள்ள பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக் கொடைக்கு பெரும்பாலும் நிதி இழப்பினை ஏற்படக்கூடும் என;

(b) கலகத்தை அல்லது அமைதிக் குலைவை ஏற்படுத்தக் கூடும் என; அல்லது8 (c) மனித வாழ்க்கை, நல்வாழ்வு அல்லது பாதுகாப்பிற்கு அபாயம் உண்டாக்கக்கூடும் என

(d) பொதுவாக நிருவாகக்குழுமத்திற்கோ அல்லது பொறுப்பாட்சிக்கோ அல்லது நிலைக் கொடைக்கோ நலன் தருவதாக இல்லை எனக் கருதினால், அவர் அத்தகைய ஆணையை அல்லது தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, இந்தப் பொருட்பாட்டினை நிருவாகக் குழுமத்தின் முன்பு அதன் மறுபரிசீலனைக்காக வைக்கலாம்.

(2) நிருவாகக்குழுமமானது, முதன்மை நிருவாக அலுவலரால் குறிப்பிடப்பட்ட பொருட்பாடுகளைப் பரிசீலனை செய்வதற்கு 14-ஆம் பிரிவின்படி, குழு ஒன்றை அமைத்துருவாக்கலாம்; மற்றும் அந்தக் குழுவின் ஆலோசனைகளின் பேரில் , நிருவாகக்குழுமமானது இந்தப் பொருட்பாட்டினை மறுபரிசீலனை செய்யலாம் அல்லது, இந்தப் பெருட்பாட்டினை, குழுவின் அறிக்கை, முதன்மை நிருவாக அலுவலரின் குறிப்புரைகள், நிருவாகக்குழுமத்தின் ஆணை அல்லது தீர்மானம் ஆகியவற்றுடன் அரசுக்குச் சுட்டியனுப்பலாம்; மற்றும் அதன்மீதான அரசின் முடிவானது இறுதியானதாக இருத்தல் வேண்டும்.

நிருவாகக்

குழுமத்தின் அதிகாரங்களை ஒப்படைவு செய்தல்.

23. நிருவாகக்குழுமமானது, எழுத்துருவிலான, பொது அல்லது தனி ஆணையொன்றினால், மேற்சொன்ன ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டு, தலைமையாளருக்கோ பிற உறுப்பினர் எவருக்குமோ அல்லது நிருவாகக் குழுமத்தின் பிற அலுவலர் அல்லது பணியாளர் எவருக்குமோ, அல்லது குழு எதற்குமோ, அது தக்கதெனக் கருதுகிறவாறு, இந்தச் சட்டத்தின்படியான அத்தகைய அதிகாரங்களையோ கடமைகளையோ ஒப்படைவு செய்யலாம்.

முதன்மை

24. (1) இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்படிச் செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, முதன்மை நிருவவக அலுவலர்;

நிருவாக அலுவலர் ஆட்சியர் முதலானவர்கள் மூலமாக அதிகாரங்களைச் செலுத்துதல்.

(a) இந்தச் சட்டத்தினால் அல்லது இந்தச் சட்டத்தின்படி தம்மிடம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றுள் ஏதொன்றையுமோ, நிருவாகக்குழுமத்தின்முன் ஏற்பளிப்புடன் தொடர்பான பொறுப்பாட்சியானது அல்லது நிலைக்கொடையானது அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியர் மூலமாகவோ அல்லது அந்த நோக்கத்திற்காக, ஆட்சியர் நியமிக்கக்கூடிய பிற பொறுப்பான அலுவலர் மூலமாகவோ செலுத்தலாம்;

(b) அவ்வப்போது ஆட்சியர் எவருக்குமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அத்தகைய நபர் எவருக்குமோ தமது அதிகாரங்களில் எவற்றையும் ஒப்படைவு செய்யலாம்; மற்றும்

(c) அவரால் அவ்வாறு செய்யப்பட்ட ஒப்படைவினை எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம்.

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால், அதிகார ஒப்படைவானது செய்யப்பட்ட நபர், அத்தகைய ஒப்படைவானது செய்யப்பட்ட நபர், அத்தகைய அதிகாரங்களை, ஒப்படைவு என்பதாக இல்லாமல் தம்மிடமே இந்தச் சட்டத்தினால் அவை நேரடியாக வழங்கப்பட்டிருந்தாற்போன்றே அதே முறையிலும் அதே அளவிலும் செலுத்தலாம்.

பதிவுருக்கள்

பதிவேடுகள் முதலானவற்றை ஆய்வு செய்வதற்கு முதன்மை நிருவாக அலுவலரின் அதிகாரம்

25. முதன்மை நிருவாக அலுவலரோ அல்லது அவரால் உரிய முறையில் அதிகாரமளிக்கப்பட்ட நிருவாகக்குழுமத்தின் அலுவலர் எவருமோ, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டும் மற்றும் அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனின்படி அத்தைகயை கட்டணங்கள் எவையேனும் இருப்பின், அத்தகைய கட்டணத்தைச் செலுத்துவதற்கு உட்பட்டும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்களாக இருக்கிற அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்களாகக் கோரப்படும் அசையும் அல்லது அசையாச் சொத்து தொடர்பான பதிவுருக்கள், பதிவேடுகள் அல்லது பிற ஆவணங்கள் எவற்றையும் பொது அலுவலகம் எதிலும் நியாயமான எல்லாக் காலங்களிலும் ஆய்வு செய்வதற்கு உரிமைத்தகுதியுடையவராதல் வேண்டும்.

பதிவுருக்கான

ஆய்வு செய்தல்.

26. (1) நிருவாகக் குழுமமானது, வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய கட்டணத்தைச் செலுத்துவதன் பேரிலும், அத்தகைய நிபந்தனைகளுக்கு உட்பட்டும், அதன் நடவடிக்கைகளை அல்லது பதிவுருக்களை ஆய்வு செய்ய அனுமதிக்கலாம் மற்றும் அவற்றின் நகல்களை வழங்கலாம்.

மையச் சட்டம்

1/1872.

(2) இந்தப் பிரிவின்படி வழங்கப்படும் அனைத்து நகல்களும், 1872-ஆம் ஆண்டு இந்தியச் சாட்சியச் சட்டத்தின் 76-ஆம் பிரிவில் வகை செய்யப்பட்ட முறையில் நிருவாகக் குழுமத்தின் முதன்மை நிருவாக அலுவலரால் சான்றளிக்கப்படுதல் வேண்டும்.

(3) (2)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரிடம் வழங்கப்பட்ட அதிகாரங்கள்;

இது குறித்து நிருவாகக் குழுமத்தால் பொதுவாக அல்லது தனிப்பட்ட முறையில் அதிகாரமளிக்கப்பட்ட நிருவாக குழுமத்தின் அத்தகைய பிற அலுவலர்களால் செலுத்தப்படலாம்.

நிருவாகக்

குழுமத்தின் அதிகாரங்களும் அலுவற் பணிகளும்.

27. இந்தச் சட்டத்தின்படி செய்யப்படக்கூடிய விதிகள் எவற்றுக்கும் உட்பட்டு, அனைத்துப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகளின் பொதுவான கண்காணிப்பானது, நிருவாகக் குழுமத்திடம் உற்றடைதல் வேண்டும்; மற்றும் தனது கண்காணிப்பின் கீழ் உள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையானது, தக்க முறையில் பேரவரப்படுவதையும் கட்டுப்பாடு செய்யப்படுவதையும் நிருவகிக்கப்படுவதையும் மற்றும் அதிலிருந்து வரும் வருமானமானது அதன் நோக்கத்தை9 நிறைவேற்றுவதற்கு உரிய முறையிலும், அத்தகைய பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை உருவாக்கப்பட்ட அல்லது கருதப்பட்ட நோக்கங்களுக்காகச் செலவிடப்படுகிறதா என்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்தச் சட்டத்தின்படியான அதன் அதிகாரங்களைச் செலுத்துவது நிருவாகக் குழுமத்தின் கடமையாக இருத்தல் வேண்டும்.

வரம்புரை: ஆனால், நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை எதனையும் பொறுத்த அளவில் இந்தச் சட்டத்தின்படியான அதிகாரங்களைச் செயற்படுத்துகையில், பொறுப்பாட்சி ஆவணத்தின் அல்லது எந்த ஆவணங்களின் மூலமாக, இந்தச் சொத்தானது அறச் செயல் நோக்கங்களுக்காக காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டதோ அந்த ஆவணங்களின் பணிப்புரைகளுக்கு இணங்கிய வகையில் செயற்படுதல் வேண்டும்.

விளக்கம்: ஐயங்களை அகற்றுவதற்காக, இந்த உட்பிரிவில், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை என்பது, இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாக அல்லது அதற்குப் பினனர், சட்டமுறையிலான நீதிமன்றம் எதனாலும் செய்யப்பட்டுள்ள திட்டம் ஏதொன்றின் தொடர்பாகவும் உள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையொன்றை உள்ளடக்கும்.

(2) முன் சொன்ன அதிகாரத்தின் பொதுத்தன்மைக்கு ஊறின்றி, நிருவாகக் குழுமத்தின் பணிகள் பின்வருவன ஆகும்:-

(i) ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் தோற்றம், வருமானம், நோக்கம், நலன் பெறுபவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய பதிவுரு ஒன்றினைப் பேணி வருதல்;

(ii) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையானது எந்தக் குறிக்கோள்களுக்காவும் நோக்கங்களுக்காவும் கருதப்பட்டதோ அல்லது உருவாக்கப்பட்டதோ அவற்றுக்காகச் செலவிடப்படுவதை உறுதி செய்தல்;

(iii) பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் நிருவாகத்திற்குப் பணிப்புரைகளை வழங்குதல்;

(iv) பொறுப்பாட்சியின் மற்றும் நிலைக்கொடையின் மேலாண்மைக்கான திட்டங்களைத் தீர்வு செய்தல்:

வரம்புரை: ஆனால், அத்தகைய திட்டம் எதுவும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு, அவர்தம் தரப்பினைக் கேட்பதற்கு வாய்ப்பு ஒன்றினை வழங்காமல், அத்தகைய திட்டம் எதுவும் தீர்வு செய்யப்படுதல் கூடாது.

(v) பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால் பணிந்தனுப்பப்பட்ட வரவு செலவு திட்டங்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் ஏற்பளித்தல்; மற்றும் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கு ஏற்பாடு செய்தல்;

(vi) இ ந் த ச் ச ட் ட த் தி ன் வ ை க மு ை ற க ளு க் கு இ ண ங் கி ய வ ை க யி ல் பொறுப்பாட்சியர்களையும் நிருவாகிகளையும் நியமித்தலும் அவர்களை அகற்றுதலும்;

(vii) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் தொலைந்துபோன சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்;

(viii) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் சொத்து தொடர்பாக வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொகுத்தல் மற்றும் எதிர் வழக்காடுதல்;

(ix) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில், விற்பனை, பரிசில், அடமானம் பரிமாற்றம் அல்லது குத்தகை மூலமாக பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் அசையாச் சொத்தின் உரிமை மாற்றம் எதற்கும் ஒப்பளிப்பு வழங்குதல்:

வரம்பரை: ஆனால் அத்தகைய ஒப்பளிப்பு எதுவும், அத்தகைய நடவடிக்கைக்கு ஆதரவாக, நிருவாகக் குழுமத்தின் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு மொத்த உறுப்பினர்கள் வாக்களித்தாலன்றி வழங்கப்படுதல் கூடாது;

(x) வன்னியகுல சத்திரியா பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) நிதியத்தை நிருவாகம் செய்தல்;

(xi) நிருவாக் குழுமமானது அவ்வப்போது கோரக் கூடியவாறு பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்து தொடர்பாக பொறுப்பாட்சியாளர்கள் அல்லது நிருவாகிகளிடம் இருந்து அத்தகைய விவரவுரைகள், புள்ளி விவரங்கள், கணக்குகள் மற்றும் பிற தகவல்கள் ஆகியவற்றைக் கோரிப் பெறுதல்;

(xii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களையும் அது தொடர்பான கணக்குகள் பதிவுருக்கள் அல்லது ஒப்பாவணங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல் அல்லது ஆய்வு செய்வதற்கு ஆவண செய்தல்;

(xiii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மற்றும் அதன் சொத்துக்களின் இயல்பினையும் அளவையும் புலனாய்வு செய்து தீர்மானித்தல்; மற்றும் அத்தகைய பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்தின் நில அளவை ஒன்றை, தேவையானபோதெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு செய்தல்.

10

(xiv) (a) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் மிகையான வருமானத்தை, பொறுப்பாட்சியின் மற்றும் நிலைக்கொடையின் நோக்கத்திற்கு இணங்கிய வகையில் பயன்படுத்துவதற்குப் பணித்தல்;

(b) எழுதப்பட்ட ஆவணத்தில் தெளிவான நோக்கங்கள் இல்லாத பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானம் எந்த முறையில் பயன்படுத்தப்படுதல் வேண்டும் எனப்பணித்தல்;

(c) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நோக்கம் எதுவும் இருப்பது அற்றுப்போயிருக்கிற அல்லது அதனை எய்துவது இயலாத நிலைக்குப் போயிருக்கிற நேர்வில், பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் வருமானமானது அந்த நோக்கத்திற்காக முன்னர் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டதோ, அந்த அளவிற்கு அதுபோன்ற பிற நோக்கம் எதற்குமே அல்லது கிட்டத்தட்ட அது போன்று நோக்கம் எதற்குமோ அல்லது முதலில் இருந்த நோக்கம் எதற்குமோ அல்லது ஏழைகளுக்கு நலன் வழங்குவதற்கும் அல்லது வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தினாரின் அறிவையும் கற்றலையும் மேம்படுத்தும் நோக்கத்திற்காகவோ, பயன்படுத்தப்படுதல் வேண்டும் எனப் பணித்தல்;

வரம்புரை: ஆனால், இந்தக் கூறின்படி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவர் தம் தரப்பினைக் கேட்பதற்கு வாய்ப்பினைக் கொடுக்காமல் பணிப்புரை எதுவும் வழங்கப்படுதல் கூடாது.

(xv) பொதுவாக பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் கட்டுப்பாடு, பேணிவருதல் மற்றும் நிருவாகத்திற்கு தேவைப்படக்கூடிய அத்தகைய அனைத்துச் செயற்பாடுகளையும் செய்தல்;

(3) (iv)-எனும் கூறின்படி நிருவாகக் குழுமமானது மேலாண்மை திட்டம் எதனையும் தீர்வு செய்துள்ளவிடத்து அல்லது (2)-ஆம் உட்பிரிவின் (xiv) எனும் கூறின்படி பணிப்புரை எதனையும் கொடுத்துள்ளவிடத்து, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் அக்கறை கொண்டுள்ள அல்லது அத்தகைய தீர்வினால் அல்லது பணிப்புரையினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும் அத்தகைய தீர்வு அல்லது பணிப்புரைகளைத் தள்ளுபடி செய்வதற்கு நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்றைத் தொடுக்கலாம்; மற்றும் அதன் பேரிலான மேற்சொன்ன நீதிமன்றத்தின் முடிவானது அறுதியானதாக இருத்தல் வேண்டும்.

(4) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதற்கும் சொந்தமான நிலம் எதுவும் விற்பனை மையமாக, அங்காடியாக, வீட்டுக்குடியிருப்புகளாக மற்றும் அது போன்றவையாக மேம்படுத்துவதற்கு இயலும் வகையில் வாய்ப்பு வளம் பொருந்தியதாக இருக்கிறது என நிருவாகக்குழுமமானது நிறைவுறுமாயின், தொடர்புள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு, அறிவிப்பு ஒன்றினைச் சார்வு செய்யலாம்; மேற்சொன்ன அறிவிப்பில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான, அறுபது நாட்களுக்குக் குறையாத காலஅளவுக்குள்ளாக, அந்த அறிவிப்பில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான, அத்தகைய மேம்பாட்டினை நிறைவேற்றுவதற்கு அவர்கள் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்களா என்பதான அரசு முடிவினைத் தெரிவிக்குமாறு அதில் கோரலாம்.

(5) 4-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பிற்கான பதிலுரை ஏதேனும் பெறப்பட்டிருப்பின் அதனைப் பரிசீலனை செய்ததன் பேரில், பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்டவாறு நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு விருப்பப்படவில்லை அல்லது அதற்குத் தகுதியுடையவராக இல்லை என நிருவாகக் குழுமமானது, நிறைவுறுமாயின் நிருவாகக் குழுமமானது, அரசின் முன் ஏற்பளிப்புடன், சொத்தினை எடுத்துக் கொண்டு, அதன் மீது உள்ள கட்டிடங்களை அல்லது கட்டமைப்புகளை அகற்றி, பொறுப்பாட்சிகள் அல்லது நிலைக்கொடைகளின் நிதியங்களிலிருந்து அல்லது தொடர்புள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்களைப் பிணையமாக வைத்து நிதி பெற்று அத்தகைய பணிகளை நிவைேற்றலாம் மற்றும் நிருவாக் குழுமத்தினால் உள்ளாகி ஏற்கப்பட்ட செலவினங்கள் அனைத்தையும் அத்தகைய பணிகளைப் பேணி வருவதன் பேரிலான செலவினத்தையும் சொத்துக்களின் மீது உள்ளான சட்டமுறையான பிற கட்டணங்களையும் சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானத்திலிருந்து வசூலிக்கப்படுவது வரையிலும், சொத்துக்களைக் கட்டுப்படுத்தி மேலாண்மை செய்யலாம்:

வரம்பரை: ஆனால், நிருவாக்குழுமமானது தொடர்புள்ள பொறுப்பாட்சியரையும், நிருவாகக் குழுமத்தினால் சொத்தானது எடுத்துக் கொள்ளப்படுவதற்கு உடனடி முன்பாக மூன்று ஆண்டுக்கால அளவின்போது அச்சொத்திலிருந்து பெறப்பட்ட சராசரி ஆண்டு நிகர வருமானம் என்ற அளவுக்கு ஆண்டுதோறும் இழப்பீடு வழங்குதல் வேண்டும்.

(6) (5)-ஆம் உட்பிரிவில் விவரிக்கப்பட்டவாறு செலவினங்கள் அனைத்தையும் மேம்படுத்தப்படட சொத்தின் வருமானத்திலிருந்து மீளப் பெற்றதன் பேரில், மேம்படுத்தப்படட சொத்தானது, தொடர்புள்ள பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியிடம் ஒப்புவித்தல் வேண்டும்.

11

முதன்மை 28. (1) நிருவாகக் குழுமத்தின் முன் ஏற்பளிப்புடன் முதன்மை நிருவாக அலுவலர் தாமே அல்லது அவரால் இது குறித்து எழுத்துருவில் அதிகாரமளிக்கப்பட்ட பிற நபர் எவரும், பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி தமது நிருவாகம் அல்லது நிருவாகக் கடமைகளை ஆற்றி வருகையில் அவர் தம் பேரிலான தவறுகை அல்லது கவனக் குறைவின் காரணத்தால், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைக்கு இழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யும் நோக்கத்திற்காக, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் அவை தொடர்பான அனைத்துப் பதிவுருக்கள், தகவல் தொடர்புகள், திட்டங்கள், கணக்குகள் பிற ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யலாம்.

நிருவாக அலுவலரால் அல்லது அவரால் அதிகாரமளிக்- கப்பட்ட நபர்களால் ஆய்வு செய்வதற்கான அதிகாரம்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அத்தகைய ஆய்வானது செய்யப்படும்போதெல்லாம் தொடர்பான பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி மற்றும் அவர் கீழ் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பிற பணியாளர்களும் மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிருவாகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரும், ஆய்வினைச் செய்யும் நபர் தமது பணியை நிறைவேற்றுவற்கு நியாயமான முறையில் கோருகிறவாறான, அவருக்குத் தேவைப்படக்கூடிய அத்தகைய உதவிகளையும் வசதிகளையும் வழங்குதல் வேண்டும்; மற்றும் ஆய்வினைச் செய்கிற நபரால் கோரப்படக்கூடியவாறான, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் தொடர்பான அசையும் சொத்து அல்லது ஆவணங்களையும் முன்னிடுதல் வேண்டும்; மற்றும் அவரால் கோரப்படக்கூடியவறான பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான அத்தகைய தகவலைக் கொடுத்தல் வேண்டும்.

(3) அத்தகைய ஆய்வு எதற்கும் பின்னர், பொறுப்பாட்சி அல்லது நிருவாகி அல்லது அவரின் கீழ் பணியாற்றி வந்த அலுவலர் அல்லது பிற பணியாளர் எவரும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பணம் அல்லது சொத்து எதையும் உரிமையின்றி கையாடல் செய்திருந்தார், தவறாகப் பயன்படுத்தியிருந்தார் அல்லது மோசடியாக வைத்திருந்தார் என்றோ அல்லது பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் நிதியங்களிலிருந்து சட்டத்திற்கு எதிரான அதிகாரமளிக்கப்படாத தவறான செலவினத்தைச் செய்திருந்தார் என்றோ தோன்றுமானால் முதன்மை நிருவாக அலுவலர் அந்தப் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு எதிராக அந்தத் தொாகையை அல்லது சொத்தினை மீளப் பெறுவதற்கான ஆணை ஒன்றை ஏன் பிறப்பிக்கப்படக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுமாறு அவருக்கு நியாயமான வாய்ப்பினை கொடுத்தற்கு பின்னரும் அவரால் கொடுக்கப்பட்ட அத்தகைய விளக்கம் ஏதேனும் இருப்பின், அதனை பரிசீலனை செய்த பின்னரும் அத்தகைய நபரால் உரிமையின்றி கையாடல் செய்யப்பட்டுள்ள தவறாக பயன்படுத்தப்பட்டுள்ள அல்லது மோசடியாக வைக்கப்பட்டுள்ள தொகையை அல்லது சொத்தினை அல்லது அவரால் செய்யப்பட்டுள்ள சட்டத்திற்கெதிரான அதிகாரமளிக்கப்படாத தவறான செலவினத் தொகையை தீர்மானிக்கலாம்; மற்றும் அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட தொகையைச் செலுத்துமாறும் அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய கால அளவிற்குள்ளாக பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் மேற்சொன்ன சொத்தினை மீள அளிக்குமாறும் அத்தகைய நபரை பணிக்கிற ஆணை ஒன்றினைச் செய்யலாம்.

(4) அத்தகைய ஆணையினால் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பிற நபர் அவரால் ஆணைப் பெறப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.

வரம்புரை: ஆனால், அந்த மேல்முறையீட்டால் அவரால் செலுத்தப்பட வேண்டிய 3-ஆம் உட்பிரிவின்படி தீர்மானிக்கப்பட்டுள்ள தொகையை முதலில் முதன்மை நிருவாக அலுவலரிடம் வைப்பீடு செய்தாலன்றி நீதிமன்றத்தால் அத்தகைய மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் கூடாது; மற்றும் மேல்முறையீடானது முடிவு செய்யப்படுவது நிலுவையில் இருக்கும்போது (3)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால் செய்யப்பட்ட ஆணையை செயற்படுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான ஆணை எதனையும் செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

(5) நீதிமன்றமானது, அது கருதுகிறவாறான சாட்சியத்தை எடுத்த பின்பு, (3)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால் செய்யப்பட்ட ஆணையை உறுதி செய்யலாம், எதிர்மாறாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம்; அல்லது அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்பட்ட தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ குறைக்கலாம்; மற்றும் அது தக்கதெனக் கருதக்கூடியவாறு செலவுக்கான அத்தகைய ஆணைகளை பிறப்பிக்கலாம்.

(6). (5)-ஆம் உட்பிரிவின்படி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையானது இறுதியானதாக இருத்தல் வேண்டும்.

28-ஆம்

பிரிவின்படி தீர்மானிக்கப்- பட்ட தொகையை வசூலித்தல்.

29. 28-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் அல்லது (5)-ஆம் உட்பிரிவின்படி பணத்தைச் செலுத்துமாறு அல்லது சொத்து எதனின் உடைமையை மீள அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ள பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பிற நபர் எவரும் அத்தகைய ஆணையில் குறித்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்ளாக அவ்வாறு செய்யாமல் இருக்கிறவிடத்து அல்லது செய்ய தவறுகிறவிடத்து, நிருவாகக் குழுமத்தின் முன் ஏற்பளிப்புடன், முன் சொல்லப்பட்ட சொத்தின் உடைமையை மீளப் பெறுவதற்குத் தாம் தக்கதெனக் கருதுகிற அத்தகைய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்; மற்றும் பொறுப்பாட்சியரின் அல்லது நிருவாகியின் அல்லது பிற நபரின் சொத்தானது அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியருக்கு சான்றிதழ் ஒன்றையும் அனுப்புதல் வேண்டும். அதில் அந்தப் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பிற நபரால் செலுத்ததக்கவாறான, 28-ஆம் பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால் அல்லது நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறான தொகையை அதில் குறிப்பிடுதல் வேண்டும்; மற்றும்12 அதன்பேரில் ஆட்சியர், அத்தகைய சான்றிதழை குறித்துரைக்கப்பட்ட தொகையை நில வருவாய் நிலுவை ஒன்றைப் போல அதனைக்கருதி வசூலித்தல் வேண்டும்; மற்றும் அத்தகைய தொகையை வசூலித்ததன் பேரில், அதனை முதன்மை நிருவாக அலுவலருக்குச் செலுத்துதல் வேண்டும்; அவர் தொடர்புள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிதியத்திற்கு அந்தத் தொகையை வரவு வைத்தல் வேண்டும்.

அத்தியாயம் IV

பொறுப்பாட்சியையும் நிலைக்கொடையையும் பதிவு செய்தல்

30. (1) பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடை ஒவ்வொன்றும், இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாகவே அல்லது அதன் பின்னரோ உருவாக்கப்பட்டிருந்தாலும், நிருவாகக் குழுமத்தின் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.

பெறுப்பாட்சி- யையும் நிலைக் கொடையையும் பதிவு செய்தல் (2) பதிவுக்கான விண்ணப்பமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால் செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால், அத்தகைய விண்ணப்பமானது, பெறுப்பாட்சியால் அல்லது நிலைக்கொடையால் அல்லது அதன் பயனாளரால் அல்லது மரண சாசனம் எழுதியவரின் வழியுரிமையாளரால் அல்லது வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தைச் சேர்ந்த நபர் எவராலும் செய்யப்படலாம்.

(3) பதிவு செய்வதற்கான விண்ணப்பமொன்று, நிருவாகக் குழுமமானது, அவ்வப்போது ஒழுங்குமுறை விதிகளால் வகைசெய்யக்கூடிய அத்தகைய வடிவத்திலும் அத்தகைய முறையிலும் அத்தகைய இடத்திலும் செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய விண்ணப்பமானது, பின்வரும் தகவல்களைக் கொண்டிருத்தல் வேண்டும்:-

(a) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அடையாளத்திற்கும் போதுமான விவரிப்பு;

(b) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்திலிருந்து வரும் ஆண்டு மொத்த வருமானம்;

(c) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்துக்காக ஆண்டுதோறும் செலுத்தத்தக்க நிலவருவாய், தீர்வைகள், வீதங்கள், வரிகள் தொடர்பான தொகை;

(d) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்திலிருந்து வருமானத்தை பெறுவதற்கு ஆண்டுதோறும் செலவாகும் செலவுகளின் மதிப்பீடு ஒன்று;

(e) பின்வருவனவற்றுக்கு ஒதுக்கப்படும் தொகை:- \

(i ) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அலுவலர்களுக்கும் பிற பணியாளர்களுக்குமான சம்பளம் மற்றும் பிற படித்தொகைகள்;

(ii) அறச்செயல் நோக்கங்களுக்காக;

(iii) பயனாளர்களுக்காக; மற்றும்

(iv) அத்தகைய பிற நோக்கங்களுக்காக;

(f) நிருவாகக் குழுமத்தால் ஒழுங்குமுறை விதிகளின்படி வகுத்துரைக்கப்படக்கூடிய பிற தகவல்கள் எவையும்

(4) அத்தகைய விண்ணப்பமானது, பொறுப்பாட்சி ஆவணத்தின் அல்லது உயிலின் படியுடன் அல்லது அவ்வாறான ஆவணம் எதுவும் எழுதிக் கொடுக்கப்படவில்லையென்றால் அல்லது அதன் படியொன்றைப் பெற இயலாத நிலையில், விண்ணப்பத்தாரருக்குத் தெரிந்த அளவிலான, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் தோற்றம், இயல்பு மற்றும் நோக்கம் குறித்ததான தகவல்களையும் அதன் பயனாளர்கள் குறித்த தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.

மையச் சட்டம்

v/1908 (5). (2)-ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட அத்தகைய விண்ணப்பமானது, கையொப்பமிருத்தல் மற்றும் சரிபார்த்தல் குறித்து 1908-ஆம் ஆண்டு உரிமை வழக்கு விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தாரரால் கையொப்பமிடப்பட்டு சரிபார்க்கப்படுதல் வேண்டும்.

(6) நிருவாகக்குழுமமானது, விண்ணப்பத்தாரரை நிருவாகக் குழுமம் தேவையானதெனக் கருதுகிற மேலுமான விவரங்களையும் அல்லது தகவல்களையும் வழங்குமாறு கோரலாம்.

(7) நிருவாகக்குழுமமானது, பதிவு செய்வதற்கான விண்ணப்பமானது வரப்பெற்றதன் பேரில், விண்ணப்பத்தின் நம்பகத்தன்மையையும், செலுத்தும் தன்மையையும் பொறுத்த அளவிலும் அதில் அடங்கியுள்ள விவரங்களின் சரியான தன்மையைப் பொறுத்த அளவிலும், அது தக்கதெனக் கருதுகிறவாறான அத்தகைய விசாரணைகளைச் செய்யலாம்; மற்றும் அந்த விண்ணப்பமானது, பொறுப்பாட்சியை அல்லது நிலைக் கொடையை நிருவாகம் செய்கின்ற நபர் அல்லாத பிற நபரால் செய்யப்படகிறபோது, அவர்தம் தரப்பைக் கேட்பதற்கு அவர் விரும்பினால் அவ்வாறு அவர்தம் தரப்பினைக் கேட்டல் வேண்டும்.

13

(8) இந்தச் சட்டமானது, தொடங்கியதற்கு முன்னரே உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நேர்வில், பதிவு செய்வதற்கான விண்ணப்பம் ஒவ்வொன்றும், அவ்வாறான தொடக்கத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகச் செய்யப்படுதல் வேண்டும்; மற்றும் அவ்வாறான தொடக்கத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நேர்வில், அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாகச் செய்யப்படுதல் வேண்டும்.

பெறுப்பாட்சி 31. நிருவாகக் குழுமமானது, ஓழுங்குமுறை விதிகளால் வகை செய்யப்படகூடியவாறான, அத்தகைய விவரங்களுடன், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பதிவேட்டினைப் பேணிவருதல் வேண்டும்.

மற்றும் நிலைக் கொடையின் பதிவேடு.

சொத்தென்ற

பொறுப்பாட்- சியை அல்லது நிலைக் கொடையா என்பது குறித்த முடிவு.

32. (1) சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும், நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் சொத்தானது, வன்னியக் குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை என நம்புவதற்குக் காரணம் இருந்தால், நிருவாகக் குழுமமானது, அத்தகைய சொத்து குறித்து விசாரணை ஒன்றை நடத்தலாம்; மற்றும் அத்தகைய விசாரணைக்குப் பின்னர், நிருவாகக் குழுவானது, அத்தகைய சொத்தானது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்து என நிறைவுறுமானால், அந்தப் பொறுப்பாட்சியை அல்லது நேர்விற்கேற்ப நிலைக்கொடையை, இந்தச் சட்டத்தின்படி வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையாக பதிவு செய்யுமாறோ அல்லது அத்தகைய சொத்தானத அவ்வாறு ஏன் பதிவு செய்யப்படுதல் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு கோரலாம்:

வரம்புரை: ஆனால், அத்தகைய நேர்வுகள் அனைத்திலும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது பதிவு செய்யப்பட்ட அதிகாரிக்கு இந்த உட்பிரிவின்படி எடுக்கக் கருதப்படும் நடவடிக்கை குறித்து அறிவிப்பு கொடுத்தல் வேண்டும்.

(2) நிருவாகக் குழுமமானது, (1) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பிற்கு இணங்கிய வகையில் காட்டப்படக்கூடிய அத்தகைய காரணத்தை உரிய முறையில் பரிசீலனை செய்ததற்குப் பின்னர், அது தக்கதெனக் கருதுகிறவாறான அத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்; அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையானது அது, இந்தச் சட்டத்தின்படி தகுதிவாய்ந்த நீதிமன்றம் ஒன்றினால் தள்ளுபடி செய்யபட்டாலன்றி அல்லது மாற்றியமைக்கப்பட்டாலன்றி அறுதியானதாக இருத்தல் வேண்டும்.

பெறுப்பாட்சி 33. நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி அல்லது நிருவாகியை பொறுப்பாட்சியை அல்லது நிலைக்கொடை அல்லது பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்குமாறும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பாக தகவல் எதனையும் வழங்குமாறும் பணிக்கலாம்; அல்லது தானே பொறுப்பாட்சியை அல்லது நிலைக்கொடையை பதிவு செய்வதற்கு ஆவன செய்யலாம்; அல்லது எந்த நேரத்திலும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை பதிவேட்டினைத் திருத்தலாம்.

மற்றும் நிலைக் கொடையை பதிவு செய்வதற்கு ஆவன செய்வதற்கும் பதிவேட்டினைத் திருத்து- வதற்குமான அதிகாரம்

அத்தியாயம் V

பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிருவாகம்

நிருவாகக் 34. (1) இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நலனின், அவ்வாறு செய்வது தேவையானதெனக் கருதினால், சம்பளத்துடனோ அல்லது கெளரவ நிலையிலோ அதற்கென குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வரையரைகளுடனும், நிபந்தனைகளுடனும் முழு நேர அல்லது பகுதிநேர அடிப்படையில், நிருவாக அலுவலரொருவரை நியமிக்கலாம்.

குழுமமானது பெறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடைக்கு நிருவாக அலுவலரை நியமித்தல் (2) (1)-ஆம் உட்பிரிவின்படி அவ்வாறு நியமிக்கப்பட்ட நிருவாக அலுவலர், அவர் நியமிக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிருவாகம் தொடர்பாக, அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துதலும் அத்தகைய கடமைகளை ஆற்றுதலும் வேண்டும்; மற்றும் அவர், நிருவாகக் குழுமத்தின் பணிப்புரை, கட்டுப்பாடு, கண்காணிப்பின் கீழ் அந்த அதிகாரங்களைச் செலுத்துதல் வேண்டும்; மற்றும் கடமைகளை ஆற்றுதல் வேண்டும்.

(3) பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் வருமானத்தையும், நிருவாக அலுவலரின் மற்றும் அவர்தம் பணியாளர்களின் கடமைகள் குறித்த இயல்பையும் உரிய முறையில் கவனத்தில் கொண்டு, நிருவாக அலுவலரின் மற்றும்அவர்தம் பணியாள் சம்பளங்கள் மற்றும் படித்தொகைகள் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்.

(4) நிருவாக அலுவலரின் மற்றும் அவர்தம் பணியாளர்களின் சம்பளங்களும், படித்தொகைகளும் நிருவாகக் குழுமத்தினால் அதன் நிதியிலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்; மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையானது நிருவாக அலுவலரின் நியமனத்தின் காரணமாக, கூடுதல் வருமானம் எதனையும்14 உருவாக்கினால் நிருவாக் குழுமமானது, தொடர்புள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிதியத்திலிருந்து சம்பளங்களுக்கும் படித்தொகைகளுக்கும் செலவிடப்பட்ட தொகையை ஈடுசெய்யுமாறு கோரலாம்.

(5) நிருவாகக் குழுமமானது, போதுமான காரணங்களுக்காக, நிருவாக அலுவலருக்கு அல்லது அவர்தம் பணியாளர் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு அவர்தம் தரப்பினரைத் கேட்பதற்கு நியாயமான வாய்ப்பு ஒன்றினை வழங்கியதற்குப் பின்னர், நிருவாக அலுவலரை அல்லது அவர்தம் பணியாளர் குழுவின் உறுப்பினர் ஒருவரை அவர்தம் பதவியிலிருந்து அகற்றலாம் அல்லது நீக்கம் செய்யலாம்.

(6) (5)-ஆம் உட்பிரிவின்படி, பதவியிலிருந்து அகற்றுவதற்கான அல்லது நீக்குவதற்கான ஆணை எதனாலும் பாதிக்கப்பட்ட நிருவாக அலுவலர் அல்லது அவர்தம் பணியாளர் குழுவின் உறுப்பினர் எவரும், அந்த ஆணையானது தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள்ளாக அந்த ஆணைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்யலாம்; மற்றும் நீதிமன்றமானது, அத்தகைய இந்தப் பொறுப்பாட்டில், நிருவாக் குழுமமானது செய்யக்கூடிய முறையீட்டினைப் பரிசீலனை செய்ததற்குப் பின்னரும் நிருவாக அலுவலர் அல்லது அவர்தம் பணியாளர் குழுவின் உறுப்பினரொவருக்கு அவர்தம் தரப்பினைக் கேட்பதற்கான நியானமானதொரு வாய்ப்பினைக் கொடுத்ததற்குப் பின்னரும், அந்த ஆணையை உறுதி செய்யலாம்; மாற்றியமைக்கலாம் அல்லது எதிர்மாறாக்கலாம்.

35. (1) நிருவாக்குழுமமானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நோக்கங்கள் அல்லது அவற்றின் பகுதி எதுவும் தற்போது அற்றுப்போயிருக்கிறது என நிறைவுறுமாயின் அவ்வாறு அற்றுப் போவதானது, இந்தச் சட்டம் தொடங்கியதற்கு முன்னரோ அல்லது பின்னரோ நடத்திருந்தாலும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான சொத்தினையும் நிதியங்களையும் உறுதியாக அறிவதற்கு வகுத்துரைக்கப்பட்ட முறையில் முதன்மை நிருவாக அலுவலரால் நடத்தப்படவேண்டிய விசாரணையொன்று நடத்தப்படுவதற்கு ஆவண செய்தல் வேண்டும்.

பெறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பாக விசாரணைச் செய்வதற்கு ஆவண செய்தல்.

(2) முதன்மை நிருவாக அலுவலரின் விசாரணை அறிக்கையானது வரப்பெற்றதன் பேரில், நிருவாகக் குழுமமானது,

(a) அத்தகைய பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்து மற்றும் நிதியங்களைக் குறித்துரைக்கின்ற;

(b) அத்தகைய பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் மீளப்பெறப்பட்ட சொத்து மற்றும் நிதியங்கள், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையைப் புதுப்பிப்பதற்குச் செலவிடப்படுதல் வேண்டும் அல்லது பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்றோ அல்லது அவ்வாறு புதுப்பித்தல் எதையும் செய்வதற்கு தேவை எதுவும் இல்லாதபோது அல்லது அத்தகைய புதுப்பித்தலுக்கு, நிதியத்தைப் பயன்படுத்துவது என்பது இயலாதவிடத்து, 27-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் (v)–எனும் கூறில் (c) எனும் உட்கூறில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்கள் எவற்றுக்காகவும் ஒதுக்கப்படுதல் வேண்டும் என்றோ பணிக்கிற ஆணையொன்றைப் பிறப்பிக்கலாம்.

(3) நிறுவாகக்குழுமமானது அறச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டிடம் அல்லது பிற இடம் எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவது அற்றுப்போய் இருக்கிறது என நம்புவதற்கு அதற்குக் காரணம் இருக்குமானால் நிருவாகக் குழுமமானது அத்தகைய கட்டிடம் அல்லது பிற இடத்தின் உடைமையினை மீள அளிக்குமாறு பணிக்கின்ற ஆணையொன்றுக்காக நீதிமன்றத்திடம் விண்ணப்பம் ஒன்றைக் செய்யலாம்.

(4) நீதிமன்றமானது, அது தக்கதெனக் கருதுகிறவாறான அத்தகையை விசாரணையைச் செய்ததற்கு பின்னர் அத்தகைய கட்டிடம் அல்லது பிற இடமானது:-

(a) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்து என்பதாக;

(b) நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையால் உள்ள சட்டம் எதனிம்படியேனும் கையகப்படுத்தப்படவில்லை என்பதாகவோ அல்லது அத்தகைய சட்டம் எதனின் படியும் கையகப்படுத்துதல் வழிமுறை எதனின் கீழும் இல்லை என்பதாகவோ அல்லது நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பாக அப்போதைக்கு நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதன்படியேனும் அரசிடம் உற்றமையச் செய்யப்படவில்லை என்பதாகவோ; மற்றும்

(c) அத்தகைய கட்டிடம் அல்லது பிற இடத்தை கையுடமையில் வைத்திருப்பதற்கு அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனாலுமோ அல்லது அதன் படியோ அதிகாரமளிக்கப்பட்டுள்ள நபர் எவரின் கையுடமையில் இல்லை என்பதாகவே நிறைவுறுமானால்:-

(i) அதிகாரமற்ற உடைமையில் அதில் இருக்கக்கூடிய நபர் எவரிடமிருந்தும் அத்தகைய கட்டிடம் அல்லது இடத்தை மீளப்பெறுமாறு பணிக்கின்ற ; மற்றும்

(ii) அத்தகைய சொத்து, கட்டிடம் அல்லது இடத்தை அறச்செயல் நோக்கத்திற்காக அல்லது முன்னர் சொல்லப்பட்ட அறிவுறுத்தத்தின்படி செய்யுமாறு பணிக்கின்ற அல்லது அத்தகைய பயன்பாடானது இயலாததாக இருப்பின் 27-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின் (v) எனும் கூறின் (c) எனும் உட்கூறில் கொடுக்கப்பட்ட நோக்கம் எதற்கும் பயன்படுத்தலாம் என பணிக்கின்ற ஆணை ஒன்றைச் செய்யலாம்.

15

பொறுப்பாட்சி 36. (1) பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியின் மரணம் அல்லது பணி ஓய்வு அல்லது பணி அகற்றுதல் காரணமாக, பதிவு செய்யப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றின் மேலாண்மையில் மாற்றம் எதுவும் நிகழும்நேர்வில், புதிதாக வருகின்ற பொறுப்பாட்சி அல்லது நிருவாகி அல்லது பிற நபர் எவரும் நிருவாகக் குழுவில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அறிவிப்பினை செய்ய ஆவன செய்யலாம்.

மற்றும் நிலைக் கொடையின் மேலாண்மையில் நிகழும் மாற்றமானது தெரிவிக்கப்- படுதல் (2) 30-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் எதிலும் பிற மாற்றம் எதுவும் இருக்கிற நேர்வில், பொறுப்பாட்சியர் மற்றும் நிருவாகி அந்த மாற்றம் ஏற்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக நிருவாகக் குழுமத்திற்கு அத்தகைய மாற்றம் குறித்து அறிவிப்பு கொடுக்க ஆவன செய்தல் வேண்டும்.

அத்தியாயம் VI

பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வரவு செலவு திட்டம்

நிருவாாகக் 37. (1) பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் ஒவ்வொரு பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி, குறித்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வடிவிலான மதிப்பிடப்பட்ட வரவு மற்றும் செலவுகளைக் காட்டுகின்ற அடுத்த நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் ஒன்றை தயாரித்தல் வேண்டும்.

(2) பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் ஒவ்வொரு பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி, நிதி ஆண்டு தொடங்குவதற்கு குறைந்தது தொண்ணூறு நாட்களுக்கு முன்னதாக அத்தகைய வரவு செலவு திட்டத்தை நிருவாகக் குழுவிற்குப் பணிந்தனுப்புதல் வேண்டும் மற்றும் பின்வருவனவற்றுக்கு போதுமான வகைப்பாடு செய்தல் வேண்டும்:-

குழுமத்தின் நேரடி மேலாண்- மையில் இல்லாத பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் வரவு செலவுத் திட்டம் (i) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு;

(ii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களைப் பாதுகாத்துப் பேணி வருவதற்கு;

(iii) இந்தச் சட்டத்தின்படியும் அல்லது அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதனிப்படியும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையைக் கட்டுப்படுத்துகின்ற அனைத்துக் கட்டுப்பாடுகளையும், இருந்துவருகின்ற பொறுப்புகளையும் தீர்ப்பதற்கு;

(3) நிருவாகக் குழுமமானது தான் தக்கதென கருதுகிறவாறு, வரவு-செலவு திட்டத்தில் மாற்றங்கள், விடுகைகள் அல்லது சேர்த்தலைச் செய்வதற்கு, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் நோக்கத்திற்கும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கும் இணங்கிய வகையிலான அத்தகைய பணிப்புரையைப் கொடுக்கலாம்.

(4) அந்த நிதியாண்டில் பல்வேறு தலைப்புகளின்கீழ் வரவு அல்லது செலவு செய்யப்படவேண்டிய தொகையை பகிர்ந்தளித்தல் தொடர்பாக வரவு செலவு திட்டத்தில் செய்யப்பட்ட வகைமுறையை மாற்றி அமைப்பது தேவையானதென பொறுப்பாட்சியின் பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் நிருவாகி காண்பாராயின் அவர் துணை அல்லது திருத்திய வரவு செலவுத் திட்டமொன்றை நிருவாகக் குழுமத்திற்குப் பணிந்தனுப்பலாம்; மற்றும் (3) ஆம் உட்பிரிவின் வகைமுறையானது அத்தகைய துணை அல்லது திருத்திய வரவு செலவுத் திட்டத்திற்கு இயன்ற அளவில் பொருந்துதல் வேண்டும்.

பொறுப்பாட்சி 38. (1) நிருவாகக் குழுமத்தின் நேரடி நிருவாகத்தின் கீழ் வரும் ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடைக்காகவும் அடுத்த நிதி ஆண்டிற்கான, மதிப்பிடப்பட்ட வரவையும் செலவினைக் காட்டுகின்ற வரவு செலவுத் திட்டமானது முதன்மை நிருவாக அதிகாரியால் வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய வடிவத்திலும் அத்தகைய நேரத்திலும் தயாரிக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அது, நிருவாகக் குழுமத்திடம் அதன் ஏற்பளிப்பிற்காகப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்.

மற்றும் நிலைக் கொடையின் வரவு செலவுத் திட்டமானது நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையில் இருத்தல் (2) (1)-ஆம் உட்பிரிவின்படி வரவு செலவுத் திட்டத்தை பணிந்தனுப்புகையில், முதன்மை நிருவாக அலுவலர், நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழ் வரும் ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடைக்காகவும் வருமான அதிகரிப்பு ஏதேனுமிருப்பின் அந்த விவரங்களுடனும் அந்த ஆண்டின்போது மேம்பட்ட மேலாண்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விவரவுரையைப் பணிந்தனுப்புதல் வேண்டும்.

(3) முதன்மை நிருவாக அலுவலர், ஒழுங்கான கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும், மற்றும் நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழ் வரும் ஒவ்வொரு பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையை தக்க முறையில் மேலாண்மை செய்வதற்குப் பொறுப்பானவராக இருத்தல் வேண்டும்.

(4) (1)-ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால் பணிந்தனுப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒவ்வொன்றும், 37-ஆம் பிரிவின் தேவைப்பாடுகளுக்கு இணங்கியிருத்தல் வேண்டும்; மற்றும் இந்நோக்கத்திற்காக, பொறுப்பாட்சியின் பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் நிருவாகி குறித்து அதில் உள்ள சுட்டுகைகள், முதன்மை நிருவாக அலுவலருக்கான சுட்டுகைகளாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

16

(5) நிருவாகக்குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழ் வரும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் கணக்குகளின் தணிக்கையானது, பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் வருமானம் என்னவாக இருந்தபோதிலும் உள்ளாட்சி நிதியங்களுக்கான மாநில ஆய்வாளரால் அல்லது இந்த நோக்கத்திற்காக அரசினால் நியமிக்கப்பட்ட பிற அலுவலர் எவராலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

(6) 40-ஆம் பிரிவின் (2)-ஆம் மற்றும் (3)-ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகளும் 41,42- ஆகிய பிரிவுகளின் வகைமுறைகளும் இந்தப் பிரிவின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத அளவிற்கு இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்ட கணக்குகளின் தணிக்கைக்குப் பொருந்துதல் வேண்டும்.

(7) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதுவும் நிருவாகக்குழுமத்தின் நேரடி மேலாண்மையில் இருக்குமிடத்து, முதன்மை நிருவாக அலுவலரால் குறித்துரைக்கப்படக் கூடியவறான அத்தகைய நிருவாகக் கட்டணங்கள், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையால் நிருவாகக்குழுமத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும்:

வரம்புரை: ஆனால், நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழ் வரும் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் மொத்த ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு பத்து விழுக்காட்டிற்கு மேல் நிருவாகக் கட்டணமாக முதன்மை நிருவாக அலுவலர் வசூலித்தல் கூடாது.

அத்தியாயம் VII

பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் கணக்குகள்

பொறுப்பாட்சி

39. (1) ஒவ்வொரு பொறுப்பாட்சியரும் நிருவாகியும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் குறித்த ஒழுங்கான கணக்குகளை வைத்திருத்தல் வேண்டும்.

மற்றும் நிலைக் கொடையின் கணக்குகளைப் பணிந்தனுப்புதல்.

(2) ஒவ்வோர் ஆண்டிலும், மார்ச் மாதம் முப்பத்து ஒன்றாம் நாளில் முடிவடைந்த பன்னிரண்டு மாத கால அளவின்போது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சார்பாக, பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால் பெறப்பட்ட அல்லது செலவிடப்பட்ட அனைத்தும் பணத் தொகைகளுக்குமான கணக்குகளின் முழுமையான மற்றும் உண்மையான விவரவுரையை நிருவாகக்குழுமத்தின் ஒழுங்குமுறை விதிகளில் வகைசெய்யப்படக்கூடிய அத்தகைய படிவத்திலும் அத்தகைய விவரங்களுடனும் நிருவாகக்குழுமத்திற்குக் கொடுத்தல் வேண்டும்; அதன் பின்பு அது ஏப்ரல் மாதம் முப்பதாம் நாளன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ நிருவாகக் குழுமத்திற்குப் பணிந்தனுப்பப்படுதல் வேண்டும்:

வரம்புரை: ஆனால் , ஆண்டுக் கணக்குகள் முடிக்கப்படவேண்டிய தேதியானது, நிருவாகக் குழுமத்தின் உளத் தேர்வின்படி மாற்றியமைக்கப்படலாம்.

பொறுப்பாட்சி

40. (1) 39-ஆம் உட்பிரிவின் படி நிருவாகக் குழுமத்திற்கு பணிந்தனுப்பப்பட்ட பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் கணக்குகள் பின்வரும் முறையில் தணிக்கை செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.

மற்றும் நிலைக் கொடைகளின் தணிக்கை.

(a) வருமானம் எதுவும் இல்லாத அல்லது நிகர ஆண்டு வருமானம் ரூபாய் பத்தாயிரத்திற்கு மேற்படாத நேர்வில் கணக்குகளுக்கான விவரஉரையினைப் பணிந்தனுப்புவது 39-ஆம் பிரிவின் வகைமுறையின்படி இணங்கிய நடப்பதற்குப் போதுமானதாகும் மற்றும் நூற்றுக்கு பத்து விழுக்காடு அளவிலான அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைகளின் கணக்குகள் நிருவாக குழுமத்தால் அமர்த்தப்படும் தணிக்கையர் ஒருவரால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும்.

(b) நிகர ஆண்டு வருமானம் பத்தாயிரத்திற்கு மேற்படாத பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைகளின் கணக்குகள் ஆண்டு தோறும் அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய அத்தகைய கால இடைவெளியில் அரசினால் தயாரிக்கப்படும் தணிக்கையாளர் பெயர்ப்பட்டியலிலிருந்து நிருவாக குழுமத்தால் அமர்த்தப்படும் தணிக்கையர் ஒருவரால் தணிக்கை செய்யப்படுதல் வேண்டும். தணிக்கையர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும்போது அரசானது தணிக்கையரின் ஊதிய ஏற்ற முறைகளை குறித்துரைக்கலாம்.

(2) அரசானது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் கணக்குகள் உள்ளாட்சி நிதியங்களின் மாநிலத் தணிக்கையரால் அல்லது அரசு அந்த நோக்கத்திற்காக குறித்துரைக்கிற பிற அலுவலர் எவராலும் தணிக்கை செய்யப்படுவதற்கு ஆவன செய்யலாம்.

(3) தணிக்கையர் நிருவாகக்குழுமத்திற்கு தனது அறிக்கையைப் பணிந்தனுப்புதல் வேண்டும். அந்த தணிக்கையாளரின் அறிக்கையானது மற்றவற்றிக்கிடையே, ஒழுங்கற்ற, சட்ட முரணான அல்லது முறையற்ற செலவினங்களையோ அல்லது அசட்டையினால் அல்லது தவறான நடத்தையால் பணம் அல்லது பிற சொத்தினை மீட்கக் தவறியதையும் அறிக்கை செய்வதற்கு தேவையானது எனத் தணிக்கையர் கருதுகிற பிற பொருட்பாடு எதனையோ குறித்துரைத்தல் வேண்டும் மற்றும் அந்த அறிக்கையானது தணிக்கையரின் கருத்துப்படி அத்தகைய செலவினத்திற்கு அல்லது தவறுகைக்கு பொறுப்பானவராக இருப்பவரின் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்; மற்றும் அந்தத் தணிக்கையர் அத்தகைய ஒவ்வொரு நேர்விலும் அத்தகைய நபரிடமிருந்து கொடுபட வேண்டிய செலவினத்தின் தொகை குறித்து உறுதிச் சான்று வெளியிடல் வேண்டும்.

17

(4) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைகளின் கணக்குகளின் தணிக்கைக்கான செலவானது அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை நிதியங்களிலிருந்து செய்யப்படுதல் வேண்டும்:

முதலாம் வரம்புரை:-

ஆனால், பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட ஆனால் பதினைந்தாயிரத்திற்குக் குறைவான நிகர ஆண்டு வருமானம் கொண்டிருக்கிற பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பாக அரசு தயாரித்த பெயர் பட்டியலிலிருந்து அமர்த்தப்பட்ட தணிக்கையரின் ஊதியமானது, (1)-ஆம் உட்பிரிவின் (b)-எனும் கூறில் அரசினால் குறித்துரைக்கப்பட்ட ஊதிய ஏற்ற முறைக்கு இணங்க செலுத்தப்படுதல் வேண்டும்:

இரண்டாம் வரம்புரை:-

பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் கணக்குகள் உள்ளாட்சி நிதியங்களின் மாநிலத் தணிக்கையரால் அல்லது அரசால் குறித்துரைக்கப்படும் பிற அலுவலரால் செய்யப்படுகிறவிடத்து அத்தகைய தணிக்கையின் செலவானது அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிகர ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு என்ற அளவிற்கு மேற்படாது இருத்தல் வேண்டும் மற்றும் அத்தகைய செலவுகள் தொடர்புடைய பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் நிதியங்களிலிருந்து செய்யப்படுதல் வேண்டும்.

41. (1) நிருவாகக்குழுமமானது தணிக்கையர்களின் அறிக்கையை ஆய்வு செய்தல் வேண்டும் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடு எதுவும் தொடர்பாக நபர் எவரிடமும் விளக்கம் கோரலாம் மற்றும் 40-ஆம் பிரிவின் (3)-உட்பிரிவின்படி தணிக்கையரால் உறுதிச்சான்று இடப்பட்ட தொகையை மீள பெறுவது உள்ளடங்கலான அது பொருத்தமானதெனக் கருதுகிறவறான அத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும் .

தணிக்கையர்களின் அறிக்கையின் பேரில் நிருவாகக் குழுமம் ஆணைகளை பிறப்பித்தல்.

(2) நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனாலும் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சி நிருவாகி அல்லது நபர் எவராலும் அந்த ஆணை பெறப்பட்ட முப்பது நாட்களுக்குள்ளாக, அந்த ஆணையை மாற்றியமைப்பதற்காக அல்லது நீக்குவதற்காக நீதிமன்றத்தை அணுகலாம் மற்றும் அந்த நீதிமன்றமானது தேவை என கருதும் சாட்சியத்தை எடுத்து அது ஆணையை உறுதி செய்யலாம் அல்லது மாற்றி அமைக்கலாம் அல்லது முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அவ்வாறு உறுதி செய்யப்பட்ட தொகையைக் குறைக்கலாம் மற்றும் அந்த வழக்கின் சூழ்நிலைகளுக்கு பொருத்தமானது எனக் கருதலாகிற செலவுகள் குறித்து அத்தகைய ஆணையைப் பிறப்பிக்கலாம்.

(3) (2)-ஆம் உட்பிரிவின்படி செய்யப்பட்ட விண்ணப்பமானது 40-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி தணிக்கையரால் உறுதி செய்யப்பட்ட தொகையானது முதலில் வைப்பீடு செய்யப்பட்டாலன்றி, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படுதல் கூடாது மற்றும் அந்த நீதிமன்றமானது (1)-ஆம் உட்பிரிவின்படி நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் செயல்பாட்டை நிறுத்திவைப்பதற்கு அதிகாரம் எதுவும் கொண்டிருத்தல் கூடாது.

(4) (2)-ஆம் உட்பிரிவின்படி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையானது அறுதியானதாகும்.

(5) (1)-ஆம் உட்பிரிவின்படி அல்லது (2)-உட்பிரிவின்படி தொகையை மீளப் பெறுவதற்காக ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு தொகையும், அந்தத் தொகை செலுத்தப்படாது இருக்கும்போது, 42-ஆம் பிரிவின் (2)-ஆம் உட்பிரிவின்படி தீர்மானிக்கப்பட்ட தொகை எதையும் மீளப் பெறுவதற்காக பிறப்பிக்கப்பட்டதொரு ஆணையாக மேற்சொன்ன ஆணை இருந்தாற்போன்றே 28-ஆம் பிரிவில் அல்லது 29-ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்டவறான முறையில் மீளப்பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

கொடுபட

வேண்டிய தொகைக்கு நிலவரி போன்று மீளத்தக்கது.

42 (1) 40-ஆம் பிரிவின்படி நபர் எவரிடமிருந்தும் கொடுபட வேண்டியதாக தணிக்கையர் ஒருவர் தமது அறிக்கையில் உறுதி சான்றிடப்பட்ட தொகை ஒவ்வொன்றும், அந்தச் சான்றிதழானது சான்றானது 41-ஆம் பிரிவின்படி நிருவாகக்குழுமத்தின் அல்லது நீதிமன்றத்தின் ஓர் ஆணையினால் மாற்றியமைக்கப்பட்டாலன்றி அல்லது நீக்கப்பட்டாலன்றி அந்தத் தொகை ஒவ்வொன்றும் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட சான்றிதழின்படி கொடுபட வேண்டிய தொகை ஒவ்வொன்றும் நிருவாகக் குழுமத்தால் அந்தத் தொகையைக் கொடுக்குமாறு கேட்ட அறிவிப்பானது சார்வு செய்யப்பட்ட, பின்னர் அறுபது நாட்களுக்குள் அந்த நபரால் செலுத்தப்படுதல் வேண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவின் வகை முறைகளுக்கு இணங்கிய வகையில் அத்தகைய தொகை செலுத்தப் பெறாவிட்டால் தொடர்புடைய நபருக்கு அவர் தரப்பானது விசாரிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர், நிருவாகக் குழுமத்தால் வழங்கப்பட்ட சான்றிதழியொன்றின் பேரில் செலுத்தப்படவேண்டிய அத்தொகையை நில வருவாய் நிலுவையை வசூலிப்பது போன்று அதே முறையில் வசூலிக்கப்படலாம்.

18

அத்தியாயம் VIII

பொறுப்பாட்சியர் மற்றும் நிலக்கொடையின் மேலாண்மை

பொறுப்பாட்சியர்

43. (i) இந்தச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணைகளின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில் நிருவாகக் குழுமத்தின் பணிப்புரைகளை நிறைவேற்றுவதும்;

மற்றும் நிர்வாகியின் கடமைகள்

(ii) இந்த சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதனின் வகைமுறைக்கு இணங்கிய வகையில், அவ்வப்போது, நிருவாகக் குழுமத்தால் கோரப்படக்கூடிய விவரவுரைகளை, தகவலை அல்லது விவரங்களை அளிப்பதும்,

(iii) நிருவாகக் குழுமத்தால் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்கள், அவை தொடர்பான கணக்குகள் அல்லது பதிவுருக்கள் அல்லது ஒப்பாவாணங்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுவதை அனுமதிப்பதும்;

(iv) பொது கடன்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதும்;

(v) இந்தக் சட்டத்தினால் அல்லது இதன்படியாக செய்யுமாறு அவர் சட்டப்படி கோரப்படுகிற பிற செயல் எதனையும் செய்வதும்

பொறுப்பாட்சியர் மற்றும் நிர்வாகி ஒவ்வொருவரின் கடமையாகும்.

44. பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் ஒப்பாவணத்தில் என்ன அடங்கியுள்ள போதிலும், பொறுப்பாட்சி அல்லது நிருவாகி ஒவ்வொருவரும், 30-ஆம் பிரிவின்படி விவரங்கள், ஆவணங்கள் அல்லது படிகளை அல்லது 39-ஆம் பிரிவின்படி கணக்குகள் எவற்றையும் அல்லது நிருவாகக் குழுவினால் கோரப்படுகிற பிற தகவல் எதனையும் அல்லது ஆவணங்கள் எவற்றையும் அளிப்பதற்கு அவரை இயல்விக்கும் நோக்கத்திற்காக அல்லது நிருவாக குழுவின் பணிப்புரைகளை நிறைவேற்றுவதற்கு அவரை இயல்விக்கும் நோக்கத்திற்காக, அவரால் முறையாகச் செய்யப்பட்ட செலவுகள் எவற்றுக்கும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்திலிருந்ததான வருமானத்திலிருந்து செலுத்தலாம்.

பொறுப்பாட்- சியரும் நிருவாகியம் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் வருமானத்தி- லிருந்து குறித்த சில செலவுகளைச் செய்வதற்கு உரிமைத் தகுதியுடையவர்.

நிருவாகக் குழுமம்

45. (1) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் ஒப்பாவணத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் அசையாச் சொத்து எதனின் பரிசில், கொடை விற்பனை மாற்றும் அல்லது அடமானம் எதுவும், அத்தகைய பரிசில், விற்பனை, மாற்றும் அல்லது அடமானம் நிருவாக குழுவின் முன் ஒப்பளிப்புடன் செய்யப்பட்டாலன்றி விழலானதாகும்.

விளக்கம்: பொறுப்பாட்சிக்கு இனாம் சொத்து எதுவும் அளிக்கப்பட்டிருந்து, அது பொறுப்பாட்சியின் சொத்தில் சேர்க்கப்பட்டிருந்தால், (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறையானது அந்த சொத்தினைப் பிறருக்கு உரிமை மாற்றும் செய்வது எதற்கும் பொருத்துதல் வேண்டும்.

ஒப்பளிப்பு இன்றி பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் சொத்தினால் பிறருக்கு உரிம மாற்றம் செய்வது விழலானதாகும்.

2. நிருவாகக்குழுமமானது, (1)-ஆம் உட்பிரிவில் சொல்லப்பட்ட நடவடிக்கை தொடர்பானதான விவரங்களை தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிட்டதற்கு பிறகும் அது குறித்த மறுப்புகள் மற்றும் ஆலோசனைகள் எவற்றையும் கோரிய பின்னரும் தொடர்புடைய பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியிடமிருந்து அல்லது அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையில் அக்கறையுடைய பிற நபர் எவரிடமிருந்தும் அதனால் பெறப்படலாகும் மறுப்புகளையும் ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பிறகு, அந்த நடவடிக்கையானது:-

(i) பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக்கொடைக்கு தேவையானது அல்லது பயன் அளிப்பது;

(ii) அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நோக்கங்களுக்கு இணங்கியது;

(iii) அதனை பரிசீலனை செய்து நியாயமானது மற்றும் போதுமானது என்று கருதுமாயின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒப்பளிப்பு அளிக்கலாம்;

வரம்புரை: ஆனால், நிருவாகக் குழுமத்தால் ஒப்பளிப்பு செய்யப்பட்ட சொத்தின் விற்பனையானது பொது ஏலத்தினால் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படக்கூடிய கால அளவிற்குள்ளாக அது நிருவாகக் குழுமம் உறுதி செய்யவதற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்;

இரண்டாம் வரம்புரை:

நீதிமன்றமானது அதனால் எழுதி பதிவு செய்யப்பட்ட காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிர்வாகி அல்லது பிற நபரின் விண்ணப்பத்தின் பேரில் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நலனுக்காக அவ்வாறு செய்வது தேவை என அது கருதுமாயின் பொது ஏலம் வாயிலாக அல்லாது மற்றபடி அந்த விற்பனையைச் செய்வதற்கு அனுமதி அளிக்கலாம்.

19

(3) சொத்து எதனையும் விற்பனை செய்வது அல்லது மாற்றுவது அல்லது அடமானம் வைப்பது வாயிலாக பெறப்பட்ட தொகையைப் பயன்படுத்துவது அல்லது முதலீடு செய்வது நிருவாகக் குழுமத்தின் ஒப்பளிப்பிற்கு உட்பட்டு, பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால் செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய சொத்து எதனையும் அடமானம் வைப்பதன் வாயிலாக தொகை எதுவும் பெறப்படுமிடத்து பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பிற நபர் அடமானக் கடனை திருப்பி செலுத்தி நிருவாக குழுமம் குறித்துரைக்கூடிய நியாயமான காலத்திற்குள் அடமானம் பெறுவோரிடமிருந்து அடமான கடனுக்கான விடுவிப்பு ஒன்றினைப் பெறுதல் வேண்டும்.

(4), (3)-ஆம் உட்பிரிவின்படி நிருவாகக் குழுமத்தால் அளிக்கப்பட்ட ஒப்பளிப்பு ஒவ்வொன்றும் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்குத் தெரிவிக்கப்படுதல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்பட்ட முறையில் ஒப்பளிப்பு ஒவ்வொன்றும் வெளியிடப்படுதல் வேண்டும்.

(5) பொறுப்பாட்சியர் மற்றும் நிலைக்கொடையில் அக்கறையுள்ளவராக இருந்த, (3)-ஆம் உட்பிரிவின்படி கொடுக்கப்பட்ட முடிவினால் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பிற நபர் எவரும் அந்த முடிவு அவருக்குத் தெரிவிக்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது நேர்விற்கேற்ப அந்த முடிவு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள், அந்த முடிவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்யலாம் மற்றும் அதன் பேரில் நீதிமன்றமானது மேல் முறையீட்டாளருக்கும் நிருவாகக் குழுமத்திற்கும் அவர்தம் தரப்பினைக் கேட்பதற்கு நியாயமான வாய்ப்பினைக் கொடுத்ததற்கு பின்பு அந்த முடிவினை உறுதி செய்யலாம், மாற்றி அமைக்கலாம் அல்லது தள்ளுபடி செய்யலாம்.

(6) இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பாக, பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடை எதற்கும் சொந்தமான அசையாச் சொத்து எதனின் விற்பனை, மாற்றம், அல்லது அடமானம் எதுவும், அந்தப் பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் நலனுக்குப் பாதகமான வகையில் உரிய அதிகார அமைப்பு அல்லது நீதிமன்றத்திடமிருந்து முன் ஒப்பளிப்பின்றி செய்யப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகைய நடவடிக்கையானது, வெறிதாகி விழலாதல் வேண்டும் மற்றும் எப்போதும் செய்யப்பட்டிராததாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அந்த நடவடிக்கையின் மூலம் சொத்து எதனையும் பெறுகிற நபர் எவருக்கும் அதற்கிணங்கிய வகையில் அந்தச் சொத்தில் உரிமை அல்லது உரிமை மூலம் எதுவும் உற்றமைதல் ஆகாது மற்றும் அத்தகைய சொத்து எதுவும் தொடர்புடைய பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய சொத்தினை உடைமையில் கொண்டிருக்கிற நபர் எவரும், அத்துமீறி கைகொண்டிருப்பவராகக் கொள்ளப்படுதல் வேண்டும்; மற்றும் அதன்பின்பு 51, 52 ஆகிய பிரிவுகளின் வகைமுறைகள் பொருந்துதல் வேண்டும்.

45-ஆம் 46. (1) வகுத்துரைக்கப்படக்கூடிய முறையில் விசாரணை எதுவும் செய்யப்பட்ட பின்னர், 31-ஆம் பிரிவின் படி பேணி வரப்படுகிற பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவறான பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் அசையாச் சொத்து எதுவும் 45- ஆம் பிரிவின் வகைமுறையை மீறிய வகையில், நிர்வாகக் குழுமத்தின் முன் ஒப்பளிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று நிர்வாகக் குழுமம் தெளிவுற காணுமாயின் அது, எந்த ஆட்சியரின் வரம்பிற்குள்ளாக அந்தச் சொத்து அமைந்து இருக்கிறதோ அந்த ஆட்சியருக்கு அந்த சொத்தினைப் பெற்று அதனுடைய உடமையை ஒப்படைக்கும்படி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பலாம்.

பிரிவிற்கு மீறியவகையில் மாற்றம் செய்யப்பட்ட பொாறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடைகளின் சொத்தினை மீளப்பெறுதல் (2) (1)-ஆம் உட்பிரிவின் படி கோரிக்கை மனு ஒன்று பெற்றதின் பேரில், ஆணை சார்வு செய்யப்பட்டத் தேதியிலிருந்து முப்பது நாட்கள் என்பதான கால அளவுக்குள் அந்தச் சொத்தினை நிருவாகக் குழுமத்திடம் ஒப்படைக்கும்படி அந்தச் சொத்தின் உடைமையைக் ெ க ா ண் டி ரு க் கி ற ந ப ை ர ப் ப ணி க் கி ற ஆ ை ண ஒ ன் றி ை ன ப் பி ற ப் பி த் த ல் ே வ ண் டு ம் .

(3) (2)-ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும்;-

(i) அது எவருக்கென கருதப்பட்டதோ அந்த நபரிடம் கொடுப்பதன் வாயிலாக அல்லது வழங்குவதன் முற்படுவதன் வாயிலாக அல்லது அஞ்சலின் மூலமாக அனுப்புவதன் வாயிலாக;

அல்லது

(ii) அத்தகைய நபர் காணப்படாவிட்டால், அந்த ஆணையை அவர் கடைசியாக வசித்த அல்லது தொழில் செய்த இடத்தில் வெளிப்படையான பகுதியில் ஒட்டுவதன் வாயிலாக அல்லது அவரது குடும்பத்தின் வயது வந்த ஆண் உறுப்பினர் அல்லது வேலையாள் எவரிடமோ அந்த ஆணையை அளிப்பதன் வாயிலாக அல்லது அந்த சொத்து தொடர்புடையதாயிருக்கிற அந்தச் சொத்தின் எடுப்பான பகுதியில் அது ஒட்டப்படுமாறு செய்வதன் வாயிலாக சார்வு செய்யப்படலாம்.

வரம்புரை: ஆனால், எவருக்கு அந்த ஆணை சார்வு செய்யப்பட வேண்டுமோ அவர் வயது வராதவராக இருக்கிறவிடத்து, அவருடைய காப்பாளரிடமோ அல்லது அவருடைய குடும்பத்தின் வயது வந்த ஆண் உறுப்பினர் அல்லது வேலையாள் எவரிடமோ சார்வு செய்வது, வயது வராத அந்த நபரிடம் சார்வு செய்யப்பட்டதாக கொள்ளப்படுதல் வேண்டும்.

(4) (2)-ஆம் உட்பிரிவின்படி ஆட்சியரின் ஆணையினால் பாதிக்கப்பட்ட நபர் எவரேனும் அந்த ஆணை சார்வு செய்யப்பட்ட முப்பது நாட்கள் என்பதான கால அளவுக்குள் எந்த நீதிமன்றத்தின்20 அதிகார வரம்பிற்குள் அந்தச் சொத்து அமைத்துள்ளதோ அந்த நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு ஒன்றை முறையிடலாம் மற்றும் அத்தகைய மேல்முறையீட்டின் பேரிலான நீதிமன்றத்தின் முடிவு அறுதியானது ஆகும்.

(5) (2)–ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இணங்கி நடக்காமலிருந்தால், மற்றும் அந்த ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான காலமானது அந்த மேல்முறையீடு செய்யப்படாமலேயே கழிந்து இருக்கிறவிடத்து, அல்லது அந்தக் காலத்திற்குள் செய்யப்பட்ட மேல்முறையீடு எதுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறவிடத்து, ஆட்சியர் எந்தச் சொத்தினைப் பொறுத்து ஆணை பிறப்பிக்கப்பட்டதோ அந்தச் சொத்தின் உடமையை அந்த நோக்கத்திற்காக தேவைப்படக் கூடிய அந்தகைய காவல் துறையின் உதவியைப் பெற்று அதனை நிருவாகக் குழுமத்திடம் ஒப்படைவு செய்தல் வேண்டும்.

(6) ஆட்சியர், அந்த பிரிவின்படி தன்னுடைய பணிகளை ஆற்றுகையில் வகுத்துரைப்படலாகும் விதிகளால் வழி நடத்தப்பட வேண்டும்.

பொறுப்பாட்சி

அல்லது நிலைக் கொடையின் சார்பாக சொத்தினை வாங்குவதற்கான வரம்புகள்.

47. பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் ஒப்பாவணத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், நிருவாகக் குழுமத்தின் முன் ஒப்பளிப்பின்றி பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை எதனின் நிதியங்களிலிருந்து பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதற்கும் அல்லது அதன் சார்பாக அசையாச் சொத்து எதுவும் வாங்கப்படுவதால் ஆகாது மற்றும் நிருவாகக் குழுமமானது அந்தச் சொத்தினை ஈட்டுவது அந்தப் பொறுப்பாட்சி அல்லது அந்த நிலைக்கொடைக்கு தேவையானது அல்லது நலன் பயப்பது என்றும் அதற்காக செலுத்தப்பட கருதியிருக்கிற விலையானது போதியதாகவும் நியாயமானதாகவும் இருக்கிறதென்றும் கருதினாலன்றி அந்த ஒப்பளிப்பினை வழங்குதலாகாது.

வரம்புரை: ஆனால், அந்த ஒப்பளிப்பினை அளிப்பதற்கு முன்பு, கருதப்பட்ட நடவடிக்கை தொடர்பான விவரங்கள், அதுகுறித்த மறுப்புரைகளையும், ஆலோசனைகளையும் கோரி தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்படல் வேண்டும் மற்றும் நிருவாகக் குழுமமானது பொறுப்பாட்சியரிடமிருந்து அல்லது நிருவாகத்திடமிருந்து அல்லதுஅந்த பொறுப்பாட்சியிலும், நிலைக்கொடையிலும் அக்கறையுள்ள பிற நபர் எவரிடமிருந்தும் அதனால் பெறப்படலாகும் மறுப்புரைகளையும் ஆலோசனைகளையும் பரிசீலனை செய்த பின்னர்தான் பொருத்தமெனக் கருதக் கூடிய அத்தகைய ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்.

பொறுப்பாட்சி

48. (1) பொறுப்பாட்சியர் அல்லது நிலைக்கொடையின் சொத்தாக இருக்கிற அசையாச் சொத்து எதனின் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட கால அளவு எதற்குமான குத்தகைக்கு விடுவது எதுவும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் ஒப்பாவணத்தில் அல்லது முறையாவனத்தில் அல்லது அப்போதைக்கு செல்லாற்றலில் உள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியுள்ள போதிலும் விழலானது ஆகும் மற்றும் செல்லுந்தன்மையற்றதாகும்.

அல்லது நிலைக் கொடையின் சொத்துக்- களைக் குத்தகைக்கு விடுவதற்கான அதிகாரத்திற் கான வரம்பு.

(2) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தாக இருக்கிற அசையாச் சொத்து எதனையும் ஓராண்டுக்கு மேற்படுகிற ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு குத்தகைக்கு விடுவதானது, பொறுப்பாட்சி அல்லது நிலக்கொடையின் ஓப்பாவணத்தில் அல்லது முறையாவணத்தில் அல்லது அப்போதைக்கு செல்லாற்றலில் உள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும் அது நிருவாக குழுமத்தின் முன் ஒப்பளிப்புடன் செய்யப்பட்டாலன்றி விழலாகும் மற்றும் செல்லுந்தன்மையற்றதாகும்.

(3) நிருவாகக் குழுமமானது இந்த உட்பிரிவுகளின்படி குத்தகைக்கு அல்லது அதனைப் புதுப்பித்தலுக்கு ஒப்பளிப்பு அளிக்கையில் அந்த குத்தகை அல்லது எந்த வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் குழுமத்தின் பேரில் வழங்க அல்லது புதுப்பிக்க கருதப்பட்டுள்ளதோ அந்த வரையறைகளையும் நிபந்தனைகளையும், மறு ஆய்வு செய்தல் வேண்டும் மற்றும் அது பணிக்கலாகும் முறையிலும் பணிக்கலாகும் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளை நிருவாகக் குழுமம் மறு ஆய்வு செய்வதற்கு உட்பட்டு தன் ஏற்பளிப்பினை வழங்குதல் வேண்டும்.

(4) பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை ஒவ்வொன்றும், சொத்தின் குத்தகை குறித்து நிருவாகக் குழுமத்திற்கு தெரிவித்து அந்த குத்தகையைத் தொடர்வதற்கான அனுமதியையும் குத்தகை அல்லது அதை புதுப்பித்தலுக்கான ஒப்பளிப்பினை வழங்குவதற்கான அனுமதியையும் இந்தப் பிரிவின் வகை முறைகளுக்கு உட்பட்டு பெறுதல் வேண்டும்.

49. பொறுப்பாட்சி அல்லது நிருவாகி எவரும் அவர் எந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் பொறுப்பாட்சியராக அல்லது நிருவாகியாக இருக்கிறாரோ அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் நிதியங்களிலிருந்து பணம் எதனையும், அவரை பதவிலிருந்து அகற்றியதற்கான அல்லது அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்கான அல்லது அதற்கு இடை விளைவான உரிமை வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற நடவடிக்கை எதுவும் தொடர்பாக அவருக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படலாகும் செலவுகள், கட்டணங்கள் அல்லது செலவு தொகை எவற்றையும் ஏற்பதற்காக செலவு செய்தல் ஆகாது.

பொறுப்பாட்சி அல்லது நிர்வாகி பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றுக்குச் சொந்தமான பணம் எதனையும் தற்காப்பிற்காகச் செலவு செய்தல்ஆகாது.

21

பதிவுருக்கள் 50. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்கிய வகையில், அல்லது நிருவாகக் குழுமத்தால், செய்யப்பட்ட திட்டம் எதற்கும் இணங்கிய வகையில் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி எவரும் அல்லது மேலாண்மைக் குழு எதுவும் அகற்றப்படுகிறவிடத்து, அவ்வாறு பதவியிலிருந்து அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது குழு (இந்தப் பிரிவில் இதற்கு பின்பு அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது குழு ஒன்று எனச் சுட்டப்படுவது) அந்தப் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் (ரொக்கம் உள்ளடங்களான) பதிவுருக்கள், கணக்குகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தின் பொறுப்பையும், உடைமையையும் அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் பின்வரும் பொறுப்பாட்சியருக்கு அல்லது பின்வரும் நிருவாகிக்கு அல்லது பின்வரும் குழுவிற்கு ஒப்படைத்தல் வேண்டும்.

முதலானவற்றின் உடைமையை ஒப்படைப்பதற்கு பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது குழுவிற்குள்ள கடமைகள் (2) அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி எவரும் அல்லது குழு எதுவும் (1)-ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பின்வரும் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு அல்லது குழுவிற்கு (ரொக்கம் உள்ளடங்களான) பதிவுருக்கள், கணக்குகள் மற்றும் சொத்துக்களின் பொறுப்பையும், உடைமையையும் ஒப்படைக்கத் தவறுகிறவிடத்து அல்லது மேற்சொன்ன கால அளவு முடிவடைந்த பிறகு அதன் உடைமையைப் பெற்றுக் கொள்வதில் இருந்து அந்த பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அல்லது குழுவினைத் தடை செய்கிற அல்லது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கிறவிடத்து, பின்வரும் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பின்வரும் குழுவின் உறுப்பினர் எவரும் அத்தகைய பின்வரும் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது குழுவினை அமர்த்துகின்ற உறுதிச் சான்றிடப்பட்ட ஆணையின்படி ஒன்றுடன் சேர்த்து விண்ணப்பம் படியொன்றினை, அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்தின் பகுதி எதுவும் எந்த நீதித் துறை ஒருவரின் அதிகார வரம்பின் வட்டார எல்லையில் அமைந்திருக்கிறதோ அந்த நீதித்துறையின் நடுவர் எவருக்கோ செய்யலாம் மற்றும் அதன் பேரின், அந்த நீதித்துறையின் நடுவர், அகற்றப்பட்ட பொறுப்பாட்சியருக்கு அல்லது நிர்வாகிக்கு அல்லது அகற்றப்பட்ட குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கொடுத்ததன் பின்பு, ஆணையில் குறித்துரைக்கப்படலாகும், கால அளவிற்குள், நேர்வுக்கேற்ப, பின்வரும் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு அல்லது குழுவிற்கு பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் (ரொக்கம் உள்ளடங்களான) பதிவுருக்களின், கணக்குகளின் மற்றும் சொத்துக்களின் பொறுப்பையும் உடைமைகளையும் ஒப்படைக்குமாறு பணிக்கிற ஆணையொன்றினைப் பிறப்பிக்கலாம்.

(3) அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது அகற்றப்பட்ட குழுவின் உறுப்பினர் எவரும் (2)ஆம் உட்பிரிவின்படி நீதித்துறைக் குற்றவியல் நடுவரால் குறித்துரைக்கப்படும் காலத்திற்குள் (ரொக்கம் உள்ளடங்கலான) பதிவுருக்களின், கணக்குகளின் மற்றும் சொத்துக்களின் பொறுப்பினையும் உடைமையினையும் ஒப்படைக்காது விடுகிறவிடத்து அல்லது ஒப்படைக்க தவறுகிறவிடத்து, நேர்வுக்கேற்ப, அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது அகற்றப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவரும் அல்லது ஆறு மாதம் காலங்கள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்கு ஒரு சிறை தண்டனையையோ அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார்.

(4) அகற்றப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது அகற்றப்பட்ட குழுவின் எவரும், (2)ஆம் உட்பிரிவின்படி நீதித்துறைக் குற்றவியல் நடுவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு இணங்காதிருக்கிற போதெல்லாம் அல்லது இணங்க தவறுகிறபோதெல்லாம், அந்த நீதித்துறைக் குற்றவியல் நடுவர் (ரொக்கம் உள்ளடங்கலான) அந்தப் பதிவுருக்களின், கணக்குகளின் மற்றும் சொத்துக்களின் பொறுப்பையும் உடைமையினையும் எடுத்துக் கொள்வதற்கு பின்வரும் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு அல்லது குழுவிற்கு அதிகாரம் அளிக்கலாம் மற்றும் அந்த நோக்கத்திற்காக தேவைப்படலாகும் காவல் துறையின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கும் அந்த நபருக்கு அதிகாரம் அளிக்கலாம்.

(5) பின்வரும் பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அல்லது குழுவினை அமர்த்துகை செய்கின்ற ஆணை எதுவும், இந்தப் பிரிவின்படி நீதித்துறை குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன்பான நடவடிக்கைகளின் எதிர்க்கப்படுதல் ஆகாது.

(6) இந்தப் பிரிவில் அடங்கி உள்ள எதுவும், இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனாலும் பிறப்பிக்கப்பட்ட நபர் எவரும், (2)ஆம் உட்பிரிவின்படி நீதித்துறைக் குற்றவியல் நடுவரால் பாதிக்கப்பட்ட ஆணையில் குறித்துரைக்கப்பட்ட சொத்துக்களில் தனக்கு உரிமை, உரிமை மூலம் மற்றும் அக்கறை உள்ளது என்பதை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றம் ஒன்றில் உரிமை வழக்கு எதனையும் தொடுப்பதை தடை செய்தல் ஆகாது

அத்தியாயம் IX

ஆக்கிரமிப்பை அகற்றுதல்

பொறுப்பாட்சி 51. (1) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தாக இருந்து இந்தச் சட்டத்தின்படி அத்தகையதாக பதிவு செய்யப்பட்டிருக்கிற நிலம், கட்டடம், திறந்த இடம் அல்லது பிற சொத்து எதிலும் ஆக்கிரமிப்பு இருக்கிறது என்று முறையீடு எதுவும் பெறப்பட்டதன் பேரிலோ அல்லது தானாக முற்பட்டோ, முதன்மை நிருவாக அலுவலர், கருதுகிறபோதெல்லாம், அவர் ஆக்கிரமிப்பின் விவரங்களை குறித்துரைைக்கிறதும், அந்த அறிவிப்பில் இருந்து நீக்குமாறு அவரை கோருகிற ஆணையொன்று ஏன் பிறப்பிக்கப்படுதல் ஆகாது என்பதற்கு இந்த அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட தேதிக்கு முன்பு காரணம்

மற்றும் நிலைக் கொடை சொத்துக்- களிலிருந்து ஆக்கிரமிப்பை அகற்றுதல்22 காட்டுமாறு கோருகின்ற அறிவிப்பு ஒன்று சார்வு செய்யப்படும்படி செய்தல் வேண்டும் மற்றும் தொடர்புடைய பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு அந்த அறிவிப்பின்படி ஒன்றினை அனுப்புதலும் வேண்டும்.

(2) (1)ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட அறிவிப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் முறையில் சார்வு செய்யப்படுதல் வேண்டும்.

(3) அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட கால அளவின்போது பெறப்பட்ட மறுப்புரைகளை பரிசீலனை செய்த பின்பும், வகுத்துரைக்கப்படலாகும் முறையில் விசாரணை ஒன்றினை நடத்தியதற்குப் பின்பும், முதன்மை நிருவாக அலுவலர், வினாவில் உள்ள சொத்தானது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தாகும் என்றும் அத்தகைய பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்து எதுவும் ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும், தெளிவுற காணுமிடத்து, ஆணை வாயிலாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின், கட்டடத்தின், திறந்தவெளியின் அல்லது பிற சொத்தின் உடைமையினை பொறுப்பாட்சியின் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிலைக்கொடையின் நிருவாகிக்கு அந்த ஆணையில் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய கால அளவிற்குள்ளாக ஒப்படைக்குமாறு கோரலாம்.

(4) (3)ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அந்த உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரின் ஆணையினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அந்த நிலத்தில், கட்டிடத்தில், திறந்த இடத்தில் அல்லது பிற சொத்தில் உரிமை, உரிமை மூலம் அல்லது அக்கறை எதுவும் தனக்குள்ளது என்பதை நிலைநாட்டுவதற்காக நீதிமன்றத்தில் உரிமை வழக்கொன்றை தொடுப்பதிலிருந்து அவரைத் தடை செய்யாது.

வரம்புரை :

அத்தகைய உரிமை வழக்கு எதுவும், பொறுப்பாட்சியின் பொறுப்பாட்சியரால் அல்லது நிலைக்கொடையின் நிருவாகியால் அல்லது இதன் பொருட்டு அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிற நபர் எவராலும், இந்த நிலத்தை, கட்டிடத்தை, திறந்த இடத்தை அல்லது பிற சொத்தினை குத்தகைக்கு எடுத்தவராக உரிமம் பெற்றவர் அல்லது அடைமானம் பெற்றவர் என்ற நிலையில் அதில் உடைமையில் விடப்பட்டுள்ள நபர் ஒருவரால் தொடுக்கப்படுதல் ஆகாது.

51-ஆம்

பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையை செயலுறுத்தல்

52. (1) 51-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின்படி ஆக்கிரமிப்பு எதனையும் அகற்றுமாறு ஆணையிடப்பட்ட நபர், அந்த ஆணையில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், அந்த ஆக்கிரமிப்பை அகற்றாது விட்டுவிடுகிறவிடத்து அல்லது அகற்ற தவறுகிறவிடத்து அல்லது நேர்வுக்கேற்ப அந்த ஆணை தொடர்புடையதாயிருக்கிற நிலம், கட்டிடம், திறந்த இடம் அல்லது பிற சொத்தினை மேற்சொன்ன கால அளவிற்குள் காலி செய்யத் தவறுகிறவிடத்து முதன்மை நிருவாக அலுவலர், எந்த நீதித்துறைக் குற்றவியல் நடுவரின் அதிகார வரம்பின் வட்டார எல்லைக்குள் அந்த நிலம், கட்டிடம், திறந்த இடம் அல்லது பிற சொத்து அமைந்துள்ளதோ, அந்த நீதித் துறைக் குற்றவியல் நடுவருக்கு அந்த ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றுமாறு விண்ணப்பிக்கலாம் மற்றும் அதன்பேரில், அந்த நீதித்துறைக் குற்றவியல் நடுவர், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி அல்லது நேர்வுக்கேற்ப அந்த நிலம், கட்டிடம், திறந்த இடம் அல்லது பிற சொத்தினை காலி செய்து அதனுடைய உடைமையை தொடர்புடைய பொறுப்பாட்சியரிடம் அல்லது நிருவாகியிடம் ஒப்படைக்குமாறு பணிக்கிற ஆணை ஒன்றினை பிறப்பித்தல் வேண்டும், மற்றும் அந்த ஆணைக்கு இணங்கி நடக்கத் தவறுகிறபோது அந்த ஆக்கிரமிப்பினை அகற்றி அல்லது நேர்வுக்கேற்ப அந்த நிலம், கட்டிடம், திறந்த இடம் அல்லது பிற சொத்திலிருந்து அந்த ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றலாம் மற்றும் அந்த நோக்கத்திற்காக, தேவைப்படலாகும் காவல்துறை உதவியை பெற்றுக் கொள்ளலாம்.

(2) (a) இந்தச் சட்டத்தின் தொடக்க நாளன்று அல்லது அதற்கு பின்னர் அறநிலைப் பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக்கொடைக்கு சொந்தமான ஒரு நிலத்தினை சட்டப்படி உடைமையில் கொள்ளாமல் வேறு வகையில் தொடர்ந்து கையுடைமையில் கொண்டிருக்கிற நபர் எவரும், இந்தச் சட்டத்தின்படி ஒரு குற்றச் செயலைச் செய்தவர் ஆவார்.

(b)(a)கூறின் வகைமுறைகளை மீறுகிற எவரொருவரும், குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பேரில், ஆறு மாதங்களுக்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்கு சிறை தண்டனையும் ஐநூறு ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதம் விதித்தும் தண்டிக்கப்படுவார்.

( c).(b) கூறின்படி தண்டிக்கப்படத் தக்க குற்றச் செயல் ஒன்றை, முதன்மை நிருவாக அலுவலரின் எழுத்துவடிவிலான முறையீட்டின் பேரில் எதுவும், நீதிமன்றம் தவிர விசாரணைக்குழு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது.

(d). (b) எனும் கூறின் தண்டிக்கப்படத் தக்க குற்றச்செயல் எதுவும், முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின் நீதிமன்றத்திற்கு கீழ்நிலையில் உள்ள நீதிமன்றம் எதனாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுதலோ அல்லது விசாரணை செய்யப்படுதலோ ஆகாது.

23

அத்தியாயம் X

பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை நிருவாகத்தின் நிருவாக குழுமத்திற்கு உள்ள அதிகாரம்

பொறுப்பாட்சியர் 53. (1) பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அரசிற்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்கும் அல்லது சட்டமுறையிலான நிருவாகக் குழுமம் அல்லது அரசு நிறுமம் எதற்கும் கொடுபட வேண்டிய வருவாய், கட்டணங்கள் அல்லது வரிகள் எவற்றையும் செலுத்துவதற்கு மறுக்கிறவிடத்து அல்லது செலுத்த தவறுகிறவிடத்து, நிருவாகக் குழுமமானது நிருவாகக் குழுமத்தின் நிதியத்திலிருந்து கொடுபட வேண்டியவைகளைச் செலுத்தித் தீர்க்கலாம் மற்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையினை பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை சொத்திலிருந்து மீளப் பெறலாம் மற்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையில் நூற்றுக்குப் பனிரெண்டரை விழுக்காட்டளவிற்கு மேற்படாததை இழப்பீடுகளாகவும் மீளப் பெறலாம்.

(2) (1)ஆம் உட்பிரிவின்படி கொடுபட வேண்டிய பணத்தொகை எதுவும், தொடர்புடைய பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகிக்கு அவர் தம் தரப்பினை விசாரிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பினை கொடுத்த பிறகு நிருவாக குழுமத்தால், பிறப்பிக்கப்பட்ட ஓர் சான்றிதழின் பேரில், நிலவரி நிலுவையைப் போன்ற அதேமுறையில் வசூலிக்கப்படலாம்.

அல்லது நிருவாகி கொடுபட வேண்டியவை- களை செலுத்தத் தவறுகிற நேர்வில் அதனைச் செலுத்துவதற்கு நிருவாக குழுமத்திற்- குள்ள அதிகாரம்

ஒதுக்கு

நிதியத்தை உருவாக்குதல் 54. அரசுக்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு அல்லது சட்டமுறையிலான குழுமம் அல்லது அரசு நிறுமம் எதற்கும் கொடுபட வேண்டிய வாடகையையும், நிலவரி, கட்டணங்கள், வரிகள் ஆகியவற்றை செலுத்துவதற்காகவும், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்தினைப் பழுதுபார்ப்பதற்கான செலவுகளைச் செலுத்தி தீர்ப்பதற்காகவும், பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் சொத்தினை பாதுகாப்பதற்காகவும் வகைமுறை செய்யும் நோக்கத்திற்காக, நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் வருமானத்திலிருந்து ஒதுக்கு நிதியம் ஒன்றை, தான் பொருத்தமென நினைக்கலாகிற முறையில் உருவாக்கிப் பேணி வருமாறு பணிக்கலாம்.

காலநீட்டிப்பு 55. நிருவாகக் குழுமமானது, அவ்வாறு செய்வது தேவையானது எனத் தெளிவுறக் காரணுமாயின், இந்தச் சட்டத்தின்படி பொறுப்பாட்சியரால் மற்றும் நிருவாகியால் செயல் எதுவும், எந்தக் காலத்திற்குள் செய்யப்பட வேண்டுமென்று கோரப்படுகிறதோ அந்தக் காலத்தை நீட்டிக்கலாம்.

56. (1) பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி ஒருவர் -

தண்டனைகள் (i) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையினைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பிற்பதற்கு

(ii) இந்த சட்டத்தின்படி கோரப்பட்டவறான விவரங்கள் அல்லது கணக்குகள் அல்லது விவர உரைகளை அளிப்பதற்கு ;

(iii) நிருவாகக் குழுமத்தால் கோரப்பட்ட தகவலை அல்லது விவரங்களை வழங்குவதற்கு;

(iv) பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடைகளின் சொத்துக்களை, அவை தொடர்பான கணக்குகளை பதிவிருக்களை அல்லது ஒப்பாணங்களை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதிப்பதற்கு;

(v) நிருவாகக் குழுமத்தால் அல்லது நீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டால், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடை எதனின் உடைமையை ஒப்படைப்பதற்கு;

(vi) நிருவாகக் குழுமத்தின் பணிப்புரைகளை நிறைவேற்றுவதற்கு;

(vii) பொதுக் கடன்கள் எவற்றையும் தீர்ப்பதற்கு; அல்லது

(viii) இந்தச் சட்டத்தினாலோ அதன் வழியாலோ செய்ய வேண்டுமென்று சட்டப்படி கோரப்பட்ட பிற செயல் எதனையும் செய்வதற்கு தவறுவாரேயானால், அவர், தன்னுடைய தவறுகைக்கு நியாயமான காரணமிருந்தது என நிருவாகக் குழுமம் அல்லது நீதிமன்றம் தெளிவுறக் காணுமாறு செய்வாராயின், ஐயாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதம் விதித்துத் தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார்.

(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், -

(a) (i) இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையைப் பொறுத்த நேர்வில், 30-ஆம் பிரிவின் (8)ஆம் உட்பிரிவில் அதற்காக குறித்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்;

(ii) அத்தகைய தொடக்கத்திற்கு பின்பு உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனையும் பொறுத்த நேர்வில், அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள்24 ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை இருப்பதை மறைக்கும் கருத்துடன், இந்தச் சட்டத்தின்படி அதனைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்காது பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி விட்டுவிட்டால் அல்லது விண்ணப்பிக்கத் தவறினால்; அல்லது

(b) முக்கியமான விவரம் எதிலும் பொய்யானது, தவறாக வழிகாட்டக் கூடியது, உண்மையற்றது அல்லது சரியற்றது என்று அவர் அறிந்திருக்கிற அல்லது நம்புவதற்கு காரணம் பெற்றிருக்கிற விவர உரை, விவர அறிக்கை அல்லது தகவல் எதனையும் நிருவாகக் குழுமத்திற்கு, பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அளிப்பாரானால்

அவர், ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாகும் ஒரு கார அளவிற்குச் சிறைத் தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார்.

(3) நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கப்படத் தக்க குற்றச் செயல் ஒன்றை நிருவாகக் குழுமத்தால் அல்லது இதன்பொருட்டு நிருவாகக் குழுமத்தால் உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரால் செய்யப்பட்ட முறையீட்டின் பேரில் தவிர, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது.

(4) பெருநகர் குற்றவியல் நடுவரின் அல்லது முதல் வகுப்பு நீதித்துறைக் குற்றவியல் நடுவரின் நீதிமன்றத்திற்கு கீழ் நிலையிலுள்ள நீதிமன்றம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி தண்டிக்கத்தக்க குற்றச் செயல் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுதல் ஆகாது.

மையச் சட்டம், (5) 1973ஆம் ஆண்டு குற்றவியல் விசாரணை முறைத் தொகுப்புச் சட்டத்தில் (மையச் சட்டம் 2/1974) என்ன அடங்கியிருந்த போதிலும்,

2/1974 (1)ஆம் உட்பிரிவின்படி விதிக்கப்பட்ட அபராதமானது, வசூலிக்கப்படும் போது, 70-ஆம் பிரிவின்படி குறித்துரைக்கப்படும் நிதியத்தில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.

(6) (1) ஆம் உட்பிரிவின்படி தண்டிக்கப்படத் தக்கதும், அபராதம் விதிக்கப்பட்டதுமான ஒரு குற்றச் செயலுக்காக ஒரு குற்றவாளிக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்படுகிற ஒவ்வொரு நேர்விலும், நீதிமன்றமானது, அபராதம் செலுத்தத் தவறுகையில், அந்த தவறுகைக்காக, சட்டத்தால் அதிகாரமளிக்கப்பட்ட கால அளவு சிறைத் தண்டனையைச் சுமத்தலாம்.

குறிப்பிட்ட

நேர்வுகளில் நிருவாக அலுவலரையும் அமர்த்துவதற்கு அதிகாரம்

57. பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின், பொறுப்பாட்சியர் மற்றும் நிருவாகியின் பதவியில் காலியிடம் ஒன்று ஏற்பட்டிருக்கிற போது, மற்றும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் ஒப்பாவண வரையறைகளின்படி அமர்த்தப்படுவதற்கு எவரும் இல்லாத போது அல்லது பொறுப்பாட்சியராக செயல்படுவதற்கு நபர் எவருக்கும் உள்ள உரிமை குறித்து பூசல் இருக்கிறவிடத்து, நிருவாக குழுமமானது, வன்னிய குல சத்திரியர் சமுதாயத்தைச் சார்ந்த நபர் எவரையும், வகுத்துரைக்கப்படும் கால அளவிற்கு மற்றும் வகுத்துரைக்கப்படும் நிபந்தனைகளின் பேரில், நிருவாகியாகச் செயற்படுவதற்கு அமர்த்தலாம்.

பொறுப்பாட்சியர்

58. (1) பிற சட்டம் எதிலும் அல்லது பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் ஒப்பாவணத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், நிருவாகக் குழுமமானது, அந்தப் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி,- (a) 56-ஆம் பிரிவின்படி தண்டிக்கப்படத் தக்க ஒரு குற்றச் செயலுக்காகத் தண்டனைத் தீர்ப்பு மற்றும் நிருவாகியை அகற்றுதல்

அளிக்கப்பட்டிருப்பாராயின்; அல்லது

(b) குற்றமுறு நம்பிக்கை மோசடியாகிய குற்றச் செயல் எதற்காகவும் அல்லது ஒழுக்க நடத்தை உள்ளடக்கிய பிற குற்றச் செயல் எதற்காகவும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டிருந்து, அந்தத் தண்டனை தீர்ப்பு எதிர் மாறாக்கப்படாமல் மற்றும் அந்தக் குற்றச் செயல் தொடர்பாக முழுமையான மன்னிப்பு அளிக்கப்படாமல் இருந்தால்; அல்லது

(c) அவர் மனச் சீர்கேடு உடையவராக இருந்தால் அல்லது ஒரு பொறுப்பாட்சியாளரின் பதவிப் பணிகளைப் புரிவதற்கும் கடமைகளை ஆற்றுவதற்கும் அவரைத் தகுதியற்றவராக்கக் கூடிய பிற மன அல்லது உடல்நலக் குறைபாடு அல்லது ஊனத்தினால் அவதியுறுவாரானால், அல்லது

(d) அவர் விடுவிப்புப் பெறாத நொடிப்பு நிலையராக இருப்பாரேயானால்; அல்லது

(e) மதுபானத்தையோ அல்லது பிற ஆல்கஹால் தயாரிப்புகளையோ அருந்தும் பழக்கமுடையவராக இருக்கிறார் அல்லது மயக்க மருந்து சரக்குகள் எவற்றையும் உட்கொள்ளும் பழக்கமுடையவராக இருக்கிறார் என்று மெய்ப்பிக்கப்பட்டால்; அல்லது

(f) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சார்பாக அல்லது அதற்கு எதிராக, ஊதியம் பெறும் சட்டத் தொழிலாற்றுநராகப் பணியமர்த்தப்பட்டிருந்தால்; அல்லது

(g) நியாயமான காரணமின்றி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு வழக்கமாக கணக்குகளை வைத்துவரத் தவறினால் அல்லது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், 39ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின்படி கோரப்பட்டவாறு கணக்குகளின் ஆண்டு விவர உரையைப் பணிந்தனுப்பத் தவறினால்; அல்லது25 (h) பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் சொத்தினைப் பொறுத்து தற்போதிருந்து வரும் குத்தகையில் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எதிலும் அல்லது அதற்காக செய்யப்பட்ட பணி எதிலும், அல்லது அத்தகைய பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக் கொடைக்கு அவரால் கொடுபட வேண்டிய தொகை எதனையும் பொறுத்து நிலுவைத் தொகைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபாடு உடையவராகயிருப்பாரானால்; அல்லது

(i) தன்னுடைய கடமைகளைத் தொடர்ந்து புறக்கணித்தால் செய்தால் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை தொடர்பாக அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் பணம் அல்லது சொத்தினை பொறுத்த அளவில் நிதியங்களை தவறாக கையாண்டால், முரணாகக் கையாண்டால், முறைகேடாக பயன்படுத்தினால் அல்லது நம்பிக்கை மோசடி செய்தால்;

(j) இந்தச் சட்டத்தின் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதனின் வகைமுறை எதன்படியும் அரசால், நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட சட்டப்படியான ஆணைகளுக்கு வேண்டுமென்ற மற்றும் தொடர்ந்து கீழ்ப்படியாதிருப்பாரானால் ; அல்லது

( k ) பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் சொத்தினைத் தவறாகப் பயன்படுத்துவாரானால் அல்லது மோசடியாகக் கையாளுவாரானால் நிருவாகக் குழுமமானது, அந்தப் பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்றலாம்.

(2) பொறுப்பாட்சியர் பதவியிலிருந்து ஒரு நபரை அகற்றுவதானது பயனாளி என்ற நிலையிலோ அல்லது பிறதிறன்முறை எதிலுமோ, பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் சொத்து எதனையும் பொறுத்து, அவருக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், எவையேனுமிருப்பின், அவற்றைப் பாதிக்காது.

(3) நிருவாகக் குழுமமானது, வகுத்துரைக்கப்பட்ட முறையில் பொருட்பாடு குறித்து விசாரணை நடத்தி, நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத பெரும்பான்மையரால் அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலன்றி, (1) ஆம் உட்பிரிவின்படி அதனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுதல் ஆகாது.

(4) (1)ஆம் உட்பிரிவின் (c) முதல் (i) வரையுள்ள கூறுகளில் எதன்படியும் பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணையால் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சியர் ஒருவர் அந்த ஆணை அவரால் பெறப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள், அந்த ஆணைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம் மற்றும் அந்த மேல்முறையீட்டின் பேரில், நீதிமன்றத்தின் முடிவே அறுதியானதாகும்.

(5) (3)ஆம் உட்பிரிவின்படி நிருவாகி அல்லது பொறுப்பாட்சியர் எவருக்கும் எதிராக, விசாரணை எதுவும் நடத்தக் கருதப்பட்டிருக்கிறவிடத்து, அல்லது தொடங்கப்பட்டிருக்கிறவிடத்து, நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் நலன் கருதி, அவ்வாறு செய்வது தேவையானது என அது கருதுமானால், அந்த விசாரணை முடிவடையும் வரையில், அந்தப் பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை ஓர் ஆணை வாயிலாக தற்காலிகப் பதவி நீக்கம் செய்யலாம்:

வரம்புரை: ஆனால், பத்து நாட்களுக்கு மேற்பட்ட ஒரு கால அளவுக்குத் தற்காலிகப் பதவி நீக்கம் எதுவும், எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக, விசாரிக்கப்படுவதற்கு ஒரு நியாயமான வாய்ப்பு பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்குக் கொடுக்கப்பட்ட பின்பு தவிர, செய்யப்படுதல் ஆகாது.

மையச் சட்டம்,

v/1908

(6) (4)-ஆம் உட்பிரிவின் படி நீதிமன்றத்திற்குப் பொறுப்பாட்சியரால் மேல்முறையீடு எதுவும் முன்னிடப்படுகிறவிடத்து, நிருவாகக் குழுமமானது, மேல் முறையீட்டின் முடிவு நிலுவையில் இருக்கும்போது, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையினை நிருவகிப்பதற்கு ஒரு பாதுகாவலரை அமர்த்துவதற்காக நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் ஒன்றைச் செய்யலாம் மற்றும் அந்த விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, நீதிமன்றமானது, 1908-ஆம் ஆண்டு உரிமையில் விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், பொறுப்பாட்சியை அல்லது நிலைக் கொடையை நிருவகிப்பதற்குப் பாதுகாவலராக தகுந்த நபர் ஒருவரை அமர்த்துதல் வேண்டும், மற்றும் அவ்வாறு அமர்த்தப்பட்ட பாதுகாவலரை, பொறுப்பாட்சியரின் மற்றும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் வழக்காற்று உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு பணித்தல் வேண்டும்.

(7) (1) ஆம் உட்பிரிவின்படி பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி ஒருவர் அவரது பதவியிலிருந்து நீக்கப்படுகிறவிடத்து நிருவாகக் குழுமமானது. பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்து உடைமையினை, நிரவாகக் குழுமத்திடம் அல்லது இதன் பொருட்டு உரியவாறு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரிடமும் அல்லது அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பொறுப்பாட்சியர் அல்லது அதிகாரியாகச் செயற்படுவதற்காக அமர்த்தப்பட்ட நபர் எவரிடமும் அல்லது குழுவிடம் ஒப்படைக்குமாறு. பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை ஆணைவாயிலாகப் பணிக்கலாம்.

(8) இந்தப் பிரிவின் படி அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி ஒருவர், அவ்வாறு நீக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு கால அளவுக்கு, அந்தப் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் பொறுப்பாட்சியராக அல்லது நிருவாகியாக மீண்டும் அமர்த்தப்படுவதற்குத் தகுமையுடையவர் ஆகமாட்டார்.

26

59. (1) ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பொறுப்பாட்சியராக அல்லது நிருவாகியாக அமர்த்தப்படுவதற்குப் பொருத்தமான நபர் எவரும் கிடைக்கத்தக்கவராக இல்லாத விடத்து, அல்லது நிருவாகக் குழுமமானது, எழுதிப் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக, அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் பதவியில் காலியிடம் எதனையும் நிரப்புவதானது. பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் நலன்களுக்கு ஊறு செய்வதாக இருக்கும் என்று தெளிவுறக் காணுமிடத்து, நிருவாகக் குழுமமானது, அறிவிக்கை வாயிலாக, மொத்தத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாமல், அறிவிக்கையில் குறித்துரைக்கப்படலாகக்கூடிய கால அளவுக்கு அல்லது கால அளவுகளுக்கு பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் நேரடி மேலாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட கால பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நேரடி மேலாண்மையை நிருவாகக் குழுமம் ஏற்றுக் கொள்ளுதல்

(2) அரசானது, தானாக முற்பட்டோ அல்லது பொறுப்பாட்சியில் அல்லது நிலைக் கொடையில் அக்கறையுடைய நபர் எவரின் விண்ணப்பத்தின் பேரிலோ, (1)-ஆம் உட்பிரிவின்படி நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையின் சீர்மை, சட்டப்படியான தன்மை, முறைமை குறித்துதான் மனநிறைவடையும் நோக்கத்திற்காக நேர்வு எதனின் பதிவுருக்களையும் கோரிப் பெறலாம் மற்றும் தான் பொருத்தமெனக் கருதுகிற ஆணைகளைப் பிறப்பிக்கலாம் மற்றும் அரசால்அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எவையும், அறுதியானதாகும் மற்றும் அவை (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதல் வேண்டும்.

(3) ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்த பின்பு, கூடிய விரைவில், நிருவாகக் குழுமமானது. தன் நேரடி மேலாண்மையில் உள்ள ஒவ்வொரு பொறுப்பாட்சியையும் நிலைக் கொடையையும் குறித்து விரிவான அறிக்கை யொன்றை, அதில்:-

(i) அறிக்கையின் படியான ஆண்டிற்கு அடுத்து முந்திய ஆண்டிற்கான பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் வருமான விவரங்கள்.

(ii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் மேலாண்மை மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

(iii) பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையானது நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழ் இருந்த கால அளவு மற்றும் அந்த ஆண்டின் போது பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் மேலாண்மையை, மேலாண்மை பொறுப்பாட்சியரிடம் அல்லது நிருவாகியிடம் அல்லது குழு எதனிடமும் ஒப்படைப்பது இயலக் கூடியதாக ஏன் இல்லை என்பதற்கான காரணங்களை விளக்குதல், மற்றும்

(iv) வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருட்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, அரசுக்கு அனுப்புதல் வேண்டும்.

(4) அரசானது (3)-ஆம் உட்பிரிவின்படி அதற்கு பணிந்தனுப்பப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தல் வேண்டும் மற்றும் அவ்வாறு ஆய்வு செய்வதற்குப் பிறகு, தான் பொருத்தமென நினைக்கலாகிற பணிப்புரைகளை அல்லது அறிவுறுத்தல்களை நிருவாகக் குழுமத்திற்குப் பிறப்பித்தல் வேண்டும், மற்றும் அந்த நிருவாகக் குழுமமானது, அதனைப் பெற்றதன் பேரில், அந்தப் பணிப்புரைகளுக்கு அல்லது அறிவுறுத்தங்களுக்கு இணங்கி நடத்தல் வேண்டும்.

60 (1) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் கண்காணிப்பு அல்லது மேலாண்மை, பொறுப்பாட்சியின் ஒப்பாவணத்தின் மூலம் அமர்த்தப்பட்ட குழு எதனிடமும் உற்றமைந்திருக்கும் போதெல்லாம், இந்தச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், அந்தக்குழு, நிருவாகக் குழுமத்தால் கலைத்துக் கைக்கொள்ளப்படும் வரையில் அல்லது பொறுப்பாட்சி ஒப்பாவணத்தில் குறித்துரைக்கப்படலாகும் அதனுடைய கால அளவு முடிவடைதல், இவற்றில் எது முந்தியதோ, அதுவரை, தொடர்ந்து செயற்படுதல் வேண்டும்.

மேலாண்மைக் குழுவைக் கண்காணித்- தலும் கலைத்துக் கைக்- கொள்ளுதலும்

முதலாம் வரம்புரை: அந்தக்குழுவானது, நிருவாகக் குழுமத்தின், பணிப்புரை, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பின் கீழ் செயற்படுதல் வேண்டும் மற்றும் அவ்வப்போது நிருவாகக் குழுமம் பிறப்பிக்கலாகும் பணிப்புரைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும்.

இரண்டாம் வரம்புரை: ஒரு குழுவால், பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையை மேலாண்மை செய்வதற்கான திட்டம் எதுவும் இந்தச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி எதனின் வகைமுறைகள் எவற்றிற்கும் அல்லது பொறுப்பாட்சி ஒப்பாவணத்தின் பணிப்புரைகளுக்கு முரணாக உள்ளது என நிருவாகக் குழுமம் தெளிவுறக் காணுமாயின், அது, எந்த நேரத்திலும், பொறுப்பாட்சியின் ஒப்பாவணத்திற்கு அல்லது இந்தச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி எதனின் வகைமுறைகளுக்கு இணங்கியதாகச் செய்வதற்காகத் தேவையான முறையில் அந்தத் திட்டத்தை மாற்றமைவு செய்யலாம்.

(2) இந்தச் சட்டத்திலும், பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் ஒப்பாவணத்திலும் என்ன அடங்கியிருந்த போதிலும், நிருவாகக் குழுமானது எழுதிப் பதிவு செய்யப்பட வேண்டிய காரணங்களுக்காக:-

(1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட குழுவானது, உரியவாறும் மனநிறைவு அளிக்கும் வகையிலும் செயற்படவில்லை என்று அல்லது அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை தவறாக மேலாண்மை செய்யப்படுகிறது என்று அல்லது முறையான மேலாண்மையைக் கருத்திற்கொண்டு அவ்வாறு செய்வது27 தேவையாகிறது என்று தெளிவுறுக் காணுமாயின், ஆணை வாயிலாக அந்தக் குழுவைக் கலைத்துக் கைக்கொள்ளலாம் மற்றும் அவ்வாறு கலைத்துக் கைக்கொண்டதன் பேரில், பொறுப்பாட்சி ஒப்பாவண பணிப்புரை எதுவும், அந்தக் குழுவை அமைப்பதற்கு எந்த அளவு அது தொடர்புடையதாயிருக்கிறதோ அந்த அளவு, செயற்பாடு எதுவும் கொண்டிருப்பது அற்றுப்போகும்.

வரம்புரை: ஆனால், நிருவாகக் குழுமமானது, குழு எதனையும் கலைத்துக் கைக்கொள்கிற செய்கிற ஆணை எதனையும் பிறப்பிப்பதற்கு முன்பு, அதில் எடுக்கப்படவிருக்கிற நடவடிக்கைக்கான காரணங்களை விவரித்தும், நடவடிக்கை எதுவும் ஏன் எடுக்கப்படுதல் ஆகாது என்பதற்கு அறிவிப்பில் குறித்துரைக்கப்படலாகும். ஒரு மாதத்திற்கு குறையாத காலத்திற்குள் காரணம் காட்டுமாறு குழுவைக் கோரியும் அறிவுப்பொன்றை வழங்குதல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின் படி நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதல் வேண்டும், மற்றும் அவ்வாறு வெளியிடப்பட்டதன் பேரில், பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் அக்கறை எதுவுமுடைய அனைத்து நபர்களையும் கட்டுப்படுத்தும்.

(4) (2) ஆம் உட்பரிவின்படி நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்படும் ஆணை எதுவும் அறுதியானதாகும்.

வரம்புரை: (2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், அந்த ஆணையின் தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்.

(5) நிருவாகக் குழுமமானது, (2) ஆம் உட்பிரிவின்படி குழு எதையும் கலைத்துக் கைக்கொள்கிற போதெல்லாம், (2) ஆம் உட்பிரிவின் படி அதனால் பிறப்பிக்கப்பட்ட ஆணையினால் அதே சமயத்தில், புதிய மேலாண்மைக் குழு ஒன்றை அமைத்தல் வேண்டும்.

(6) முன்சென்ற உட்பிரிவுகளில் என்ன அடங்கியிருந்த நிருவாகக் குழுமமானது, (2) ஆம் உட்பிரிவின்படி குழு எதனையும் கலைத்துக் கைக்கொள்வதற்குப் பதிலாக, ஓர் உறுப்பினர் அத்தகைய உறுப்பினர் என்றமுறையில் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் நலன்களுக்குப் பாதகமான முறையில் தெரிந்தே செயற்பட்யிருக்கிறார் என அது தெளிவுறக் காணுமாயின், அதன் உறுப்பினர் எவரையும் அகற்றலாம் மற்றும் உறுப்பினர் எவரையும் அகற்றுவதற்கான அத்தகைய ஆணை ஒவ்வொன்றும், பதிவஞ்சல் வாயிலாக அவருக்குச் சார்வு செய்யப்படுதல் வேண்டும்.

வரம்புரை: ஆனால், உறுப்பினர் எவரையும் அகற்றுவதற்கான ஆணையானது, எடுக்கவிருக்கும் ந ட வ டி க் ை க க் கு எ தி ர ா க க் க ா ரண ங் க ா ட் டு வ த ற் கு அ வ ரு க் கு ஒ ரு நி ய ா ய ம ா ன வ ா ய் ப் பு கொடுக்கப்பட்டாலன்றி, பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

இரண்டாம் வரம்புரை: குழு உறுப்பினர் பதவியிலிருந்து தம்மை அகற்றுகிற ஆணை எதனாலும் பாதிக்கப்பட்ட உறுப்பினர் எவரும், அந்த ஆணை அவருக்குச் சார்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாள் கால அளவுக்குள் நீதிமன்றத்தில் அந்த ஆணைக்கு எதிராக மேலுமுறையீடொன்றை முன்னிடலாம் மற்றும் அந்த நீதிமன்றமானது மேல்முறையீட்டாளருக்கும் நிருவாகக் குழுமத்திற்கும் அவர்தம் தரப்பினரை விசாரிக்கப்படுவதற்கு நியாயமானதொரு வாய்ப்பினை அளித்த பின்பு நிருவாகக் குழுமத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணையை உறுதி செய்யலாம், மாற்றியமைக்கலாம் அல்லது எதிர்மாறாக்கலாம் மற்றும் அந்த மேல்முறையீட்டால் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஆணை எதுவும் அறுதியானதாகும்.

61. (1) நிருவாகக் குழுமமானது, தானே முற்பட்டோ அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் அக்கறையுடைய ஐந்துக்குக் குறையாத நபர்கள் செய்த விண்ணப்பத்தின் பேரிலோ, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையினை முறைப்படி செயலாட்சி செய்வதற்காக ஒரு திட்டத்தை உருவாக்குவது தேவையானது அல்லது உகந்தது என தெளிவுறக் காணும் போதெல்லாம், நிருவாகி அல்லது விண்ணப்பதாரருடன் கலந்தாய்வு செய்தபிறகு வகுத்துரைக்கப்பட்ட முறையில் பொறுப்பாட்சி, அல்லது நிலைக்கொடையின் நிருவாகத்திற்காக அத்தகைய திட்டத்தை ஆணை வாயிலாக, உருவாக்கலாம்.

(2). (1) ஆம் உட்பரிவின்படி உருவாக்கப்பட்ட திட்டம் ஒன்று, அந்தத் திட்டம் செயற்பாட்டிற்கு வரும் தேதிக்கு அடுத்து முன்பு, அத்தகையவராக அந்தப் பதவியை வகித்து வந்த பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் பொறுப்பாட்சியர் மற்றும் நிருவாகியை அகற்றுவதற்கு வகை செய்யலாம்.

பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் நிருவாகத்- திற்கான திட்டத்தை உருவாக்கு- வதற்கு நிருவாகக் குழுமத்திற்- குள்ள அதிகாரம் வரம்புரை: அந்தத் திட்டம் எதுவும், பரம்பரை பொறுப்பாட்சியர் எவரையும் அகற்றுவதற்கு வகை செய்கிறவிடத்து, அந்தத் திட்டமானது, அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையை முறையாக செயலாட்சி செய்வதற்காக, குழுவின் உறுப்பினர்களில் ஒருவரை அகற்றப்பட்ட பொறுப்பாட்சியருக்கு பரம்பரையில் அடுத்துள்ளவரை அமர்த்துவதற்கும் வகை செய்தல் வேண்டும்.

(3) (2) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒவ்வொன்றும், வகுத்துரைக்கப்பட்ட முறையில் வெளியிடப்படுதல் வேண்டும். அந்த வெளியீடே அறுதியானதாகவும் பொறுப்பாட்சியரையும், நிருவாகியியையும் அந்தப் பொறுப்பாட்சியில் அல்லது நிலைக்கொடையில் அக்கறையுடைய நபர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும்.

28

வரம்புரை: ஆனால் இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை ஒன்றினால் பாதிக்கப்பட்ட நபர் எவரும், ஆணையின் தேதியிலிருந்து அறுபது நாட்களுக்குள், நீதிமன்றத்திற்கு மேல்முறையீடொன்றைச் செய்யலாம் மற்றும் அந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த பின்பு, நீதிமன்றம், அந்த ஆணையை உறுதி செய்யலாம், எதிர்மாறாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.

முதலாம் வரம்புரை: நீதிமன்றமானது, இந்தப் பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையின் செயற்பாட்டை நிறுத்தி வைப்பதற்கு அதிகாரம் எதுவும் கொண்டிராது.

4. நிருவாகக் குழுமமானது, இந்தத் திட்டச் செயற்பாட்டுக்கு வருவதற்கு முன்பு அல்லது பின்பு பிறப்பிக்கப்பட்ட ஆணை வாயிலாக, எந்த நேரத்திலும், அந்தத் திட்டத்தை அறவு செய்யலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.

(5) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் முறையான செயலாட்சிக்காக திட்டத்தை உருவாக்குவது நிலுவையில் இருக்கும்போது, நிருவாகக் குழுமமானது, அதன் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியின் பதவிப்பணிகள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் ஆற்றுவதற்கும் அந்தப் பொறுப்பாட்சியர் மற்றும் நிருவாகியர் அதிகாரங்களை செலுத்துவதற்கு, கடமைகளைப் புரிவதற்கும் நிருவாக அலுவலர் ஒருவரை அமர்த்தலாம்.

பொறுப்பாட்சி

மற்றும் நிலைக் கொடையின் செயலாட்சி தொடர்பான விசாரணை

62. பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் அக்கறையுள்ள நபர் எவரும், பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் நிருவாகம் தொடர்பான விசாரணை ஒன்றைத் தொடங்குவதற்காக உறுதி மொழி ஆவணம் ஒன்றுடன் சேர்ந்த விண்ணப்பம் ஒன்றை நிருவாகக் குழுமத்திற்குச் செய்யலாம் மற்றும் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் விவகாரங்கள், தவறாக மேலாண்மை செய்யப்படுகின்றன என்று நம்புவதற்கு நிருவாகக் குழுமத்திற்கு நியாயமான காரணங்கள் இருக்குமாயின், அது பொருத்தமென நினைக்கிற நடவடிக்கையை அதன்பேரில் எடுத்தல் வேண்டும்.

63 (1) நிருவாகக் குழுமமானது, 62-ஆம் பிரிவின் படி பெறப்பட்ட விண்ணப்பம் ஒன்றின் பேரிலோ விசாரணை

அல்லது தானாக முற்பட்டோ-

நடத்தும் முறை

(a) வகுத்துரைக்கப்படலாகும் முறையில் விசாரணை ஒன்றை நடத்தலாம்; அல்லது

(b) ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான பொருட்பாடு எதனையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக, இதன் பொருட்டு நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர் எவருக்கும் அதிகாரமளித்து, தான் பொருத்தமென நினைக்கிற நடவடிக்கையை எடுக்கலாம்.

மையச் சட்டம்

v/1908 (2) இந்தப் பிரிவின் படியான விசாரணை ஒன்றின் நோக்கங்களுக்காக, நிருவாகக் குழுமம் அல்லது இதன்பொருட்டு அதனால் அதிகாரமளிக்கப்பட்ட நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர், சாட்சிகளின் வருகையை முயன்று பெறுவதற்கும் ஆவணங்களை முன்னிடுவதற்கும், 1908-ஆம் ஆண்டு உரிமையியல் விசாரணைமுறை தொகுப்புச் சட்டத்தின்படி உரிமையியல் நீதிமன்றத்திடம் உற்றமைந்திருக்கிற அதே அதிகாரங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

அத்தியாயம் XI

நிருவாகக்குழுமத்துடன் கலந்தாய்வு செய்து ஒரு பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அமர்த்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு அரசுக்குள்ள அதிகாரம்.

பொறுப்பாட்சியர்

64. பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் ஓர் ஒப்பாவணம் அல்லது ஆவணம் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் மேலாண்மைக்கான திட்டம் எதுவும், நிருவாகக் குழுமம் அல்லாத பிற அதிகார அமைப்பு அல்லது நீதிமன்றம், ஒரு பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியை அமர்த்தலாம் அல்லது அகற்றலாம் அல்லது மேலாண்மை திட்டத்தை நிலைப்படுத்தலாம் அல்லது மாற்றியமைக்கலாம் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் மீது கண்காணிப்பைப் பிறவாறு செலுத்தலாம் என்பதாக வகை செய்கிறவிடத்து, அந்தப் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் ஒப்பாவணத்தில், தீர்ப்பாணையில், ஆணையில் அல்லது திட்டத்தில் என்ன அடங்கியிருந்தபோதிலும், மேற்சொன்ன அத்தகைய அதிகாரங்கள், அரசால் செலுத்தத்தக்கதாக இருக்கும்;

அல்லது நிருவாகியை அமர்த்துவ- தற்கான அதிகாரம், அரசால் எப்போது செலுத்தப்- படுதல் வேண்டும்

வரம்புரை: ஆனால், ஒரு நிருவாகக்குழுமம் அமைக்கப்படுகிறவிடத்து, அத்தகைய அதிகாரங்களைச் செலுத்துவதற்கு முன்பு, நிருவாகக் குழுமத்தைக் கலந்தாய்வு செய்தல் வேண்டும்.

அத்தியாயம் XII

நிருவாகக் குழுமத்தின் நிதி

அரசினால்

65. அரசானது, நிருவாகக் குழுமத்திற்கு, அரசு தக்கதெனக் கருதக்கூடிய அத்தகைய பணத்தொகைகளை மானியம் என்ற அளவில் வழங்கலாம்.

மானியம் வழங்கப்படுதல்29 நிருவாகக்

குழுமத்திற்குச் செலுத்ததக்க ஆண்டுப் பங்களிப்பு 66. (1) நிகர ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒவ்வொன்றின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அந்தப் பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையினால் பெறப்படும் நிகர ஆண்டு வருமானத்திலிருந்து வகுத்துரைக்கப்படலாகும் ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு பத்து விழுக்காட்டிற்கு மேற்படாத பங்களிப்பினை, அந்தப் பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக் கொடைக்கு நிருவாகக் குழுமம் செய்த சேவைகளுக்காக, நிருவாகக் குழுமத்திற்கு ஆண்டுதோறும் செலுத்துதல் வேண்டும்.

விளக்கம் I : இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, "நிகர ஆண்டு வருமானம்" என்பது, பின்வருவனவற்றைக் கழித்தபின்பு, ஓராண்டில் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் தொகுப்பு நிதியின் பங்களிப்பாக ஆகாத நன்கொடைகள் உள்ளடங்கலாக, அனைத்து வழிவகையிலிருந்துமான, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் மொத்த வருமானம் என்று பொருள்படும்:-

(i) அதனால் அரசுக்குச் செலுத்தப்பட்ட நிலவரி;

(ii) அமைப்புக்கு அதனால் செலுத்தப்பட்ட கட்டணங்கள், வரிகள், உரிமக் கட்டணங்கள்;

(iii) பின்வரும் நோக்கங்களுக்காக, அதாவது

(a) பாசனத்தின் மூலதனச் செலவுத் தொகையை உள்ளடக்காத பாசனப்பணிகளைப் பேணி வருதல் அல்லது பழுது பார்த்தல்;

(b) விதைகள் அல்லது நாற்றுக்கள்

(c) உரம்;

(d) வேளாண் கருவிகளை வாங்குதல் மற்றும் பேணி வருதல்,

(e) பயிரிடுதல் தொடர்பாக கால்நடையை வாங்கிப் பேணி வருதல்:

(f) உழுதல், நீர்ப்பாய்ச்சுதல், விதைத்தல், நாற்றுநடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் பிற வேளாண் செயற்பாடுகளுக்கான கூலிகள் ஆகிய அனைத்திற்காகவும் அல்லது அவற்றுள் எதற்காகவும் செய்ய நேர்ந்த செலவுகள்.

வரம்புரை: ஆனால் இந்தக் கூறின்படி செய்ய நேர்ந்த செலவுத் தொகை அனைத்தையும் பொறுத்து, மொத்தக் கழிவானது, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடைக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருமானத்தில் நூற்றுக்கு இருபத்தைந்து விழுக்காட்டிற்கு மேற்படுதலாகாது.

(iv) வாடகைக்கு விடப்பட்ட கட்டடங்களிலிருந்து பெறப்படும் ஆண்டு வாடகை அல்லது பழுது பார்த்தலுக்கான உள்ளபடியான செலவு, இவற்றில் எது குறைவானதோ அதில் நூற்றுக்கு பத்து விழுக்காட்டிற்கு மேற்படாமல் வாடகைக் கட்டடங்களின் சிறு பழுதுகளுக்கான செலவுத் தொகை:

(v) அசையாச் சொத்துக்களின் விற்றுமுதல்கள், அல்லது அசையாச் சொத்துக்கள் தொடர்பான அல்லது அதிலிருந்து எழலாகிற உரிமைகள், அந்த விற்றுமுதல்கள், அந்தப் பொறுப்பாட்சிக்காக அல்லது நிலைக்கொடைக்காக வருமானத்தை ஈட்டும் பொருட்டும் மீண்டும் முதலீடு செய்யப்படுமானால்:

வரம்புரை: ஆனால், பின்வரும் வரவுகளின் இனங்கள் இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக வருமானமாகக் கொள்ளப்படுதல் ஆகாது:-

(a) திரும்பப் பெறப்பட்ட முன்பணங்களும் வைப்பீடுகளும், பெறப்பட்ட அல்லது, திரும்பப் பெறப்பட்ட கடன்கள்.

(b) வேலை பெறுநர்கள், குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள், பிற வைப்பீட்டாளர்கள் ஆகியோ® எவரேனுமிருப்பின் அவர்களால் பிணையமாக செய்யப்பட்ட வைப்பீடுகள்:

(c) வங்கிகளிடமிருந்து எடுக்கப்பட்டவைகள் அல்லது திரும்பப் பெறப்பட்ட முதலீடு;

(d) நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட செலவுகளுக்காக பெறப்பட்ட தொகைகள்;

(e) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் மொத்த தொகுப்பு நிதிக்கு பங்களிப்புகளாக நன்கொடையாளர்களால் பணமாகவே, பொருளாகவோ அளிக்கப்பட்ட நன்கொடைகள்.

வரம்புரை: ஆனால், அத்தகைய நன்கொடைகளிலிருந்து வந்தடைகிற வருமானத்தின் பேரிலான வட்டி இருப்பின், அது மொத்த ஆண்டு வருமானத்தைக் கணக்கிடுகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(f) பொறுப்பாட்சியால் அல்லது நிலைக்கொடையால் புரியப்பட வேண்டிய குறித்துரைக்கப்பட்ட சேவைக்காகவும் அத்தகைய சேவையின் பொருட்டு செலவு செய்த தொகைக்காகவும், பணமாகவோ, பொருளாகவோ, பெறப்பட்ட தம் விருப்பமான பங்களிப்புகள்;

(g) தணிக்கையின் மூலம் மீளப் பெறுதல்கள்;

30

விளக்கம் II : இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக :-

நிகர ஆண்டு வருமானத்தைத் தீர்மானிக்கையில், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனாலும் அதனுடைய ஊதியம் நல்கும் நிறுவனம் எதிலிருந்தும் பெறப்பட்ட நிகர இலாபம், ஏதேனும் இருப்பின், அது மட்டுமே வருமானமாக கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஏழையர் இல்லங்கள் ஆதவற்றோர் விடுதிகள் அல்லது இவைப்போன்ற பிற ஊதியமளிக்காத நிறுவனங்களைப் பொறுத்தவரை, அரசாலோ அல்லது பிற உள்ளாட்சி அதிகார அமைப்பு எதனாலுமோ அளிக்கப்பட்ட மானியங்கள், அல்லது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள் அல்லது கல்வி நிறுவனங்களின் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணங்கள், வருமானமாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(2) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒன்றின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி (1) ஆம் உட்பிரிவின்படி தன்னால் செலுத்தத்தக்க பங்களிப்புகளை, பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையிடமிருந்து பணப்பயன் சார்ந்த அல்லது பிற முக்கிய நலன் எதனையும் பெறுவதற்கு உரிமையுடைய பல்வேறுபட்ட நபர்களிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். ஆனால் அத்தகைய நபர்களில் எவர் ஒருவரிடமிருந்து வசூலிக்கத்தக்க தொகையானது. அத்தகைய நபரால் பெறப்படத்தக்க நலன்களின் மதிப்பு பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் மொத்த நிகர ஆண்டு வருமானத்திற்கு என்ன விகிதத்தில் அமைந்திருந்ததோ அதே விகிதத்தில் செலுத்தத்தக்க மொத்தப் பங்களிப்புத் தொகைக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்:

வரம்புரை: ஆனால், பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் (1)-ஆம் உட்பிரிவின் படியான பங்களிப்பு அல்லாத பிற வருமானம் எதுவும், இந்தச் சட்டத்தின்படி கொடுபட வேண்டியவைகளாகச் செலுத்தத்தக்க தொகைக்குக் கூடுதலாக இருக்குமாயின், மற்றும் அத்தகைய பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் ஒப்பாவணத்தின்படி அல்லது ஆவணத்தின்படி செலுத்தத்தக்க தொகைக்குப் கூடுதலாக இருக்குமாயின், பங்களிப்பானது அந்த வருமானத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

(3) பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடை ஒன்றினைப் பொறுத்து, (1)–ஆம் உட்பிரிவின்படி செலுத்தத்தக்க பங்களிப்பானது அரசுக்கு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு எதற்கும் கொடுபட வேண்டியவை எவையும் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் சொத்தின் மீது பிற சட்டப்படியான முதல் சட்டபிணைப் பொறுப்பு எதுவும் அல்லது அதன் வருமானம் எதுவும் முன்னதாகச் செலுத்தப்படுவதற்கு உட்பட்டிருத்தல் வேண்டும் மற்றும் தொடர்புடைய பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகிக்கு விசாரிக்கப்படுவதற்கு ஒரு வாய்ப்பளித்த பின்பு நிருவாகக் குழுமத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் பேரில், நிலவரி நிலுவையைப் போன்றே மீளப் பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும்.

(4) பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் வருமானத்தினை பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி பெறுவாரானால், மற்றும் அத்தகைய பங்களிப்பைச் செலுத்த மறுப்பாரானால் அல்லது செலுத்தாது இருப்பாரானால், மேற்சொன்ன முறையில் அவரிடமிருந்து அல்லது சொத்திலிருந்து மீளப்பெறப்படலாகும் அத்தகைய பங்களிப்பிற்கு, அவரும் தனிப்பட்ட முறையில் கடப்பாடு உரியவர் ஆவார்.

(5) இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்குப் பின்பு பொறுப்பாட்சியின் பொறுப்பாட்சியர் அல்லது நிலைக் கொடையின் நிருவாகி, பணிந்தனுப்புவதற்காகக் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், நிகர ஆண்டு வருமானத்திற்கான விவரவுரையைப் பணிந்தனுப்பத் தவறுகிறவிடத்து, அல்லது முக்கியமான விவரம் எதிலும் சரியற்றதாக அல்லது பொய்யானதாக இருக்கிறது அல்லது இந்தச் சட்டத்தின் அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதி அல்லது ஆணை எதனின் வகைமுறைகளுடன் இணங்காதிருக்கிறது என முதன்மை நிருவாக அலுவலர், கருதுகிற விவரவுரை ஒன்றைப் பணிந்தனுப்புகிறவிடத்து, முதன்மை நிருவாக அலுவலர், அந்தப் பொறுப்பாட்சி மற்றும் நிலைக் கொடையின் நிகர ஆண்டு வருமானத்தை, தன்னுடைய நன் தீர்ப்பின் அடிப்படையில் கணக்கிடலாம் அல்லது பொறுப்பாட்சியர் மற்றும் நிருவாகியால் பணிந்தனுப்பப்பட்ட விவரவுரையில் காட்டப்பட்ட நிகர ஆண்டு வருமானத்தை திருத்தி அமைக்கலாம் மற்றும் அவ்வாறு கணிக்கப்பட்ட அல்லது திருத்தி அமைக்கப்பட்ட நிகர ஆண்டு வருமானம், இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் நிகர ஆண்டு வருமானமாகக் கொள்ளப்படுதல் வேண்டும்:

வரம்புரை: பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால் பணிந்தனுப்பப்பட்ட நிகர ஆண்டு வருமானக் கணிப்பு அல்லது விவர உரை திருத்தியமைக்கப்படுதல் ஏதுவும், அத்தகைய கணிப்பு அல்லது விவர உரை திருத்தியமைக்கப்படுதல் ஏன் செய்யப்படுதலாகாது என்பதற்கு அறிவிப்பில் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் காரணங்காட்டுமாறு, பொறுப்பாட்சியரை அல்லது நிருவாகியைக் கோருகிற அறிவிப்பொன்றைக் கொடுத்த பின்பு தவிர, செய்யப்படுதல் ஆகாது மற்றும் அத்தகைய கணிப்பு அல்லது திருத்தியமைவு ஒவ்வொன்றும் பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால் கொடுக்கப்பட்ட மறுமொழி ஏதேனும் இருப்பின் அதனைப் பரிசீலனை செய்த பின்பு, செய்யப்படுதல் வேண்டும்.

(6) (5) ஆம் உட்பிரிவின்படி முதன்மை நிருவாக அலுவலரால் செய்யப்பட்ட கணிப்பு அல்லது திருத்தியமைப்பினால் பாதிக்கப்பட்ட பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி எவரும், அந்தக் கணிப்பினை அல்லது விவர உரை திருத்தியமைக்கப்பட்டதைப் பெற்ற தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், நிருவாகக் குழுவிற்கு மேல் முறையீடொன்றை முன்னிடலாம் மற்றும் அந்த நிருவாகக் குழுமமானது, மேல்முறையீட்டாளருக்கு அவர்தம் தரப்பை விசாரிப்பதற்கு ஒரு நியாயமான வாய்ப்பினைக் கொடுத்த பின்பு, கணிப்பினை அல்லது விவர உரை திருத்தியமைக்கப்பட்டதை உறுதி செய்யலாம், எதிர்மாறாக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம் மற்றும் அதன் பேரில் நிருவாக்குழுமத்தின் முடிவே அறுதியானதாகும்.

31

(7) எந்தக் காரணத்திற்காகவேனும், இந்தப் பிரிவின் படி விதிக்கத்தக்க பங்களிப்பு அல்லது அதன் பகுதி எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கோ முன்போ அல்லது தொடங்கியதற்குப் பின்போ, எந்த ஆண்டிலும் வரிக் கணிப்பிலிருந்து தப்பியிருக்குமானால், முதன்மை நிருவாக அலுவலர், தப்பிய வரிகணிப்பு எந்த ஆண்டுடன் தொடர்புடையதாக இருக்கிறதோ அந்த ஆண்டின் கடைசித் தேதியிலிருந்து ஐந்தாண்டுகளுக்குள் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு, கணிப்பிற்குத் தப்பிய பங்களிப்பு அல்லது அதன் பகுதி எதனையும் கணிக்கிற அறிவிப்பு சார்வு செய்த தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் பணச் செலுத்தத்தைக் கோருகிற அறிவிப்பொன்றைச் சார்வு செய்யலாம் மற்றும் இந்தச் சட்டத்தின் மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிகளின் வகைமுறைகள், கூடுமான வரையில், முதல் நேர்வில் இந்தச் சட்டத்தின் படி அந்தக் கணிப்பு செய்யப்பட்டிருந்தாற் போன்றே பொருந்துதல் வேண்டும்.

67. (1) அப்போதைய நடைமுறையில் உள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், நிருவாக முதன்மை அலுவலர் அவ்வாறு செய்வது தேவையானது அல்லது உகந்தது என்று தெளிவுறக் காணுவாரானால், பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக் கொடைக்குச் சொந்தமான பணம் எதுவும் எந்த நபரிடம் வைப்பீடாக உள்ளதோ அந்த நபர் எவரையும் வைப்பீடு என்ற வகையில் அல்லது பிற முறையில் எதிலும் பொறுப்பாட்சியின் மற்றும் நிலைக் கொடையின் கணக்கில் இருக்கலாகும் பணத்திலிருந்து 66-ஆம் பிரிவின்படி விதிக்கத்தக்க பங்களிப்பினைச் செலுத்துமாறு பணிக்கிற, ஆணையொன்றைப் பிறப்பிக்கலாம் மற்றும் அந்த ஆணையை பெற்றதன் பேரில் அத்தகைய நபர் (3)-ஆம் உட்பிரிவின்படி மேல்முறையீடு எதுவும் முன்னிடப்படாதவிடத்து அந்த ஆணைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும். அல்லது (3)-அம் உட்பிரிவின்படி மேல்முறையீடொன்று முன்னிடப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகைய மேல் முறையீட்டின்பேரில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும்.

பணச் செலுத்தம் செய்யுமாறு வங்கியை அல்லது பிற நபரைப் பணிப்பதற்கு முதன்மை நிருவாக அலுவலருக் குள்ள அதிகாரம்.

(2) (1) ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதனையும் ஒட்டி நபரால் செய்யப்பட்ட செலுத்தம் ஒவ்வொன்றும் அவ்வாறு செலுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை அந்த நபரின் கடப்பாட்டிற்கு ஒரு முழு விடுவிப்பாகச் செயற்படுதல் வேண்டும்.

(3) செலுத்தம் எதனையும் செய்யுமாறு (1) ஆம் உட்பிரிவின்படி ஆணையிடப்பட்ட நபர் எவரும், ஆணையின் தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள், அந்த ஆணைக்கு எதிரான மேல்முறையீடொன்றை நீதிமன்றத்தில் முன்னிடலாம் மற்றும் அத்தகைய மேல்முறையீட்டின் பேரில் அந்த நீதிமன்றத்தின் முடிவே அறுதியானதாகும்.

(4) (1) ஆம் உட்பிரிவின்படி அல்லது நேர்வுக்கேற்ப (3) ஆம் உட்பிரிவின் படி பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு நியாயமான காரணம் எதுவுமின்றி இணங்கி நடக்கத் தவறுகிற நபர் ஒவ்வொருவரும், ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாகும் ஒரு கால அளவிற்குச் சிறைத்தண்டனையோ அல்லது எட்டாயிரம் ரூபாய் வரை நீடிக்கலாகும் அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவர் ஆவார்.

கடன் 68. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் நோக்கத்திற்காக, நிருவாகக் குழுமமானது, அரசின் முன் ஒப்பளிப்புடன், அரசு தீர்மானிக்கலாகும் பணத் தொகையை தீர்மானிக்கலாகும் வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் கடன் வாங்கலாம்.

வாங்குவதற்கு நிருவாகக் குழுமத்திற்- குள்ளாக அதிகாரம்.

(2) நிருவாகக் குழுமமானது, கடன் வாங்கிய பணத்தை, கடனின் வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்க அதனைப் பொறுத்துக் கொடுபட வேண்டிய வட்டி எதனையும் அல்லது செலவுத் தொகைகள் எவற்றையும் அதனுடன் சேர்த்து, திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.

69. (1) ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் நிருவாகப் பொறுப்பிலிருக்கிற நிருவாகக் குழுமத்தின் முன் ஒப்பளிப்புடன் தவிர பொறுப்பாட்சியர், நிருவாகி அல்லது பிற நபர் எவரும் பொறுப்பாட்சிக்கு அல்லது நிலைக் கொடைக்குச் சொந்தமான பணம் எதனையும் அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்து எதனையும் கடனாகக் கொடுத்தலோ அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடை நோக்கங்களுக்காக, பணம் எதனையும் கடன் வாங்குதலோ ஆகாது.

பொறுப்பாட்- சியரோ நிருவாகியோ ஒப்பளிப்பின்றி பணத்தைக் கடன் கொடுத்தலோ வாங்குதலோ ஆகாது.

(2) நிருவாகக் குழுமமானது, ஒப்பளிப்பு வழங்குகையில், (1)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட நபருக்கு, எந்த வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் பணம் எதனையும் கடனாகக் கொடுப்பதற்கு அல்லது கடன் வாங்குவதற்கு அல்லது பிற சொத்து எதனையும் குத்தகைக்கு விடுவதற்கு தன்னால் அதிகாரமளிக்க பட்டதோ அந்த வரையறைகளையும் நிபந்தனைகளையும் குறித்துரைக்கலாம்.

(3) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு மீறுகையாக பணம் எதுவும் கடனாகக் கொடுக்கப்படுகிற விடத்து அல்லது பணம் எதுவும் கடன் வாங்கப்படுகிறது விடத்து அல்லது பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் பிற சொத்து எதுவும் வாடகைக்கு விடப்படுகிறவிடத்து:-

(i) எந்த நபரால் அந்தத் தொகை கடனாகக் கொடுக்கப்பட்டதோ அல்லது பெறப்பட்டதோ அந்த நபரின் சொந்த நிதியத்திலிருந்து, அதன் பேரில் கொடுபட வேண்டிய வட்டியுடன் சேர்த்து, அவ்வாறு கடனாகக் கொடுக்கப்பட்ட அல்லது கடனாக வாங்கப்பட்ட தொகைக்குச் சமமானதொரு தொகையை மீளப் பெறுவது.

இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு மீறுகையாக கடனாகக் கொடுக்கப்பட்ட பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் சொத்தின் உடைமையானது, எந்த நபருக்கு வாடகைக்கு விடப்பட்டதோ, அந்த நபரிடமிருந்து அல்லது எந்த நபருக்கு வாடகைக்கு விடப்பட்டதோ, அந்த நபரின் மூலம் அந்தச்32 சொத்திற்கு உரிமை மூலத்தைக் கோருகிற நபரிடமிருந்து மீளப்பொறுவது, முதன்மை நிருவாக அலுவலருக்குச் சட்டப்படியானதாகும்.

வன்னியர் குல

70. (1) இந்தச் சட்டத்தின் படி நிருவாகக் குழுமத்தால் பெறப்பட்ட அல்லது மீளப் பெறப்பட்ட பணங்கள் அனைத்தும், மற்றும் நிருவாகச் குழுமத்தால் நன்கொடைகளாக, அறக்கொடைகளாக அல்லது மானியங்களாகப் பெறப்பட்ட பிறபணங்கள் அனைத்தும், வன்னிய குலசத்திரியர்களின் பொது அறநிலையப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகளின் (பாதுகாப்பு மற்றும் பேணுகை) நிதியம் என்று அழைக்கப்படும் நிதியமொன்றை அமைத்து, நிருவாக குழுமத்திடம், உற்றமைந்திருத்தல் வேண்டும்.

சத்திரியர்களின் பொது அறநிலையப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகளின் பாதுகாப்பு பேணுகை நிதியம்

(2) நிருவாகக் குழுமத்தின் நோக்கங்களுக்காக, நன்கொடைகளாக, அறக்கொடைகளாக அல்லது மானியங்களாக நிருவாகக் குழுமத்தால் பெறப்பட்ட பணங்கள் அனைத்தும், வைப்பீடு செய்யப்பட்டு கணக்கு காட்டப்படுதல் வேண்டும்.

(3) இந்தப் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நிதியமானது:-

(a) நிருவாகக் குழுமத்தால், கடன் வாங்கப்பட்ட கடன் எதனையும் திருப்பிச் செலுத்துவதற்கும், அதன் பேரிலான வட்டியைச் செலுத்துவதற்கும்,

(b) நிதியத்தின் மற்றும் பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் தணிக்கைச் செலவுகளை செலுத்துவதற்கும்,

(c) நிருவாகக்குழுமத்தின் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் சம்பளத்தினையும் படித் தொகைகளையும் செலுத்துவதற்கும்,

(d) நிருவாகக்குழுமத்தின் தலைமையர், உறுப்பினர்கள் மற்றும் நிருவாகக் குழுமத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்குப் பயணப்படித் தொகைகளைச் செலுத்துவதற்கும்.

(e) இந்தச் சட்டத்தினாலோ அல்லது அதன் வழியாலோ சுமத்தப்பட்ட கடமைகளைப் புரிவதற்கும், அதிகாரங்களைச் செலுத்துவதற்கும் நிருவாகக் குழுவினால் செய்ய நேர்ந்த செலவுத் தொகைகள் அனைத்தையும் செலுத்துவதற்கும்.

(f) அப்போதைக்குச் செல்லாற்றலிலுள்ள சட்டம் எதனாலுமோ அல்லது அதன்படியோ அதன்மீது சுமத்தப்பட்ட கடப்பாடு எதனையும் தீர்ப்பதற்காக, நிருவாகக் குழுமத்தால் செய்ய நேர்ந்த செலவுத் தொகைகள் அனைத்தையும் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

(4) (3)-ஆம் உட்பிரிவில் சுட்டப்பட்ட செலவுத் தொகைகளைச் செலவு செய்த பிறகு மீதித் தொகை ஏதேனும் இருக்குமாயின், நிருவாகக் குழுமமானது, பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்துக்களைப் பேணுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அல்லது அது பொருத்தமெனக் கொள்ளலாகும் பிற நோக்கத்திற்காக, அந்த மீதித்தொகையின் பகுதி எதனையும் பயன்படுத்தலாம்.

அத்தியாயம் XIII

நிருவாகக் குழுமத்தின் வரவு-செலவுத் திட்டம், கணக்குகள் மற்றும் தணிக்கை

நிருவாகக்

71. (1) நிருவாகக் குழுமமானது, ஒவ்வொரு ஆண்டிலும், வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும், நேரத்திலும், அந்த நிதியாண்டின்போது மதிப்பிடப்படும் வரவுகளையும், செலவினங்களையும் காட்டுகிற அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதன்படி ஒன்றை அரசுக்கு அனுப்புதல் வேண்டும்.

குழுமத்தின் வரவு- செலவுத் திட்டம்

(2) (1)-ஆம் உட்பிரிவின்படி அதற்கு அனுப்பப்பட்ட வரவு செலவுத் திட்டத்தைப் பெற்றதன் பேரில், அரசானது, அதனைப் பரிசீலனை செய்து, தான் பொருத்தமெனக் கருதுகிற, அதில் செய்யப்பட வேண்டிய மாறுதல்கள், திருத்தங்கள் அல்லது மாற்றமைவைகளை ஆலோசனையாக முன் வைத்தல் வேண்டும் மற்றும் அந்த ஆலோசனையை, நிருவாகக் குழுமத்திற்கு அதன் பரிசீலினைக்காக அனுப்பி வைத்தல் வேண்டும்.

(3) அரசிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றதன் பேரில், அரசால், ஆலோசனையாக கூறப்பட்ட மாறுதல்கள், திருத்தங்கள் அல்லது மாற்றமைவுகள் குறித்து அரசுக்கு எழுத்து வடிவிலான முறையீடுகளை நிருவாகக் குழுமம் செய்யலாம் மற்றும் அரசானது, அந்த முறையீடுகளை பரிசீலனை செய்த பின்னர், அதனைப் பெற்ற தேதியிலிருந்து மூன்று வார கால அளவுக்குள், அந்த பொருட்பாடு தொடர்பான தன் இறுதி முடிவை நிருவாகக்குழுமத்திற்குத் தெரியப்படுத்துதல் வேண்டும் மற்றும் அரசின் முடிவே அறுதியானதாகும்.

(4). (3)-ஆம் உட்பிரிவின்படி அரசின் முடிவைப் பெற்றதன் பேரில், நிருவாகக் குழுமமானது, அரசால் முடிவாக ஆலோசனை கூறப்பட்ட மாறுதல்கள், திருத்தங்கள், மாற்றமைவுகள் அனைத்தையும் அந்த வரவு-செலவுத் திட்டத்தில் சேர்த்தல் வேண்டும் மற்றும் அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது மாற்றமைவு செய்யப்பட்ட அந்த வரவு-செலவுத் திட்டம் நிருவாகக் குழுமத்தால் நிறைவேற்றப்படும் வரவு-செலவுத் திட்டமாக இருக்கும்.

33

நிருவாகக் 72. நிருவாகக் குழுமமானது, வகுத்துரைக்கப்படலாகும் படிவத்திலும், முறையிலும், தன கணக்குகள் தொடர்பான கணக்குப் புத்தகங்களும், பிற புத்தகங்களும் வைத்து வரப்படுமாறு செய்வித்தல் வேண்டும். குழுமத்தின் கணக்குகள்.

நிருவாகக் 73. (1) நிருவாகக் குழுமத்தின் கணக்குகள், அரசால் அமர்த்தப்படலாகும் தணிக்கையரால், ஆண்டுதோறும், தணிக்கை செய்யப்பட்டு ஆய்வு செய்யப்படுதல் வேண்டும்.

குழுமத்தின் கணக்குகளின் தணிக்கை.

(2) தணிக்கையர், தனது அறிக்கையை அரசுக்குப் பணிந்தனுப்புதல் வேண்டும் மற்றும் தணிக்கையரின் அறிக்கையானது, மற்றவற்றிற்கிடையே, நிருவாகக் குழுமத்தின் நேரடி மேலாண்மையின் கீழுள்ள பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை ஒவ்வொன்றின் கணக்குகள், தனியாக வைத்து வரப்படுகிறதா என்பதையும், அந்தக் கணக்குகள் ஆண்டுதோறும், உள்ளாட்சி நிதியங்களின் நிலையங்களின் மாநில ஆய்வாளரால் தணிக்கை செய்யப்படுகிறதா என்பதையும் குறித்துரைத்தல் வேண்டும் மற்றும் முறைதவறிய, சட்டமுரணான அல்லது முறையற்ற செலவினம் குறித்த அனைத்து நேர்வுகளையும் அல்லது அசட்டையினாலோ அல்லது தவறான நடத்தையினாலோ ஏற்பட்ட பணம் அல்லது பிற சொத்தினை மீளப்பெறத் தவறுதல் குறித்த அனைத்து நிகழ்வுகளையும் மற்றும் அறிக்கை செய்வது தேவையென தணிக்கையர் கருதுகிற பிற பொருட்பாடு எதனையும் கூட குறித்துரைத்தல் வேண்டும்; மற்றும் அந்த அறிக்கையானது, அந்தச் செலவினத்திற்கு அல்லது தவறுகைக்குப் பொறுப்பானவர் எனத் தணிக்கையர் கருதுகிற நபர் எவரின் பெயரையும் கூட கொண்டிருத்தல் வேண்டும்: மற்றும் அந்தத் தணிக்கையர், அத்தகைய ஒவ்வொரு நேர்விலும், அந்தச் செலவு அல்லது இழப்புத் தொகையை, அந்த நபரிடமிருந்து கொடுபட வேண்டியதாக உறுதிச்சான்றளித்தல் வேண்டும்.

(3) தணிக்கைக்கான செலவுகள், 70 – ஆம் பிரிவின் படி குறித்துரைக்கப்பட்ட நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

74. அரசானது, தணிக்கையரின் அறிக்கையை ஆய்வு செய்தல் வேண்டும் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்பாடு எதுவும் குறித்து, நபர் எவரிடமும் விளக்கம் கோரலாம் மற்றும் அந்த அறிக்கையின் பேரில், தான் பொருத்தமென நினைக்கிற ஆணைகளைப் பிறப்பித்தல் வேண்டும்.

தணிக்கையரின் அறிக்கையின் பேரில் அரசு ஆணைகள் பிறப்பித்தல்.

நிருவாகக் 75 (1) 73 – ஆம் பிரிவின் படியான தனது அறிக்கையில், தணிக்கையர் ஒருவரால் நபர் எவரிடமிருந்தும் கொடுபட வேண்டியது என உறுதிச் சான்றிடப்பட்ட தொகை ஒவ்வொன்றும், நிருவாகக் குழுமத்தால் கேட்பு அறிவிப்பு சார்வு செய்யப்பட்ட பிறகு, முப்பது நாட்களுக்குள் அந்த நபரால் செலுத்தப்படுதல் வேண்டும்.

குழுமத்திற்குக் கொடுபட வேண்டியவை நிலவரி நிலுவை போன்று வசூலிக்கப்- படுதல்.

(2) அந்தச் செலுத்தம், (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகளுக்கிணங்க செய்யப்படவில்லையானால், செலுத்தத்தக்க தொகையானது, நிருவாகக்குழுமத்தால் வழங்கப்பட்ட சான்றிதழின் பேரில், தொடர்புடைய நபருக்குக் கேட்கப்படுவதற்கான வாய்ப்பொன்றைக் கொடுத்ததற்குப் பிறகு, நிலவரி நிலுவை போன்று மீளப்பெறப்படலாம்.

76. 1908 – ஆம் ஆண்டு உரிமையியல் விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தில் அல்லது குறித்த சில அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்த போதிலும்,

மையச் சட்டம் V/1908

(1) நிருவாகக் குழுமத்தால் அல்லது அதன் சார்பாக –

நேர்வுகளில் பாதுகாவலரை அமர்த்துதல்.

(a) நீதிமன்றத் தீர்ப்பாணையை அல்லது ஆணையை நிறைவேற்றுகையில், பொறுப்பாட்சியின் அல்லது நிலைக் கொடையின் சொத்தாக இருக்கிற அசையாச் சொத்து எதனின் விற்பனையையும் தள்ளுபடி செய்வதற்காக;

(b) பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் சொத்தாக இருந்து, அதன் பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால், நிருவாகக் குழுமத்தின் ஒப்பளிப்பின்றி அல்லது ஒப்பளிப்பிற்கு இணங்கியவாறு அல்லாமல் மற்றப்படி, மதிப்புறு மறுபயனுக்காகவாயினும் சரி அல்லது இல்லாவிடினும் சரி, செய்யப்பட்ட அசையாச் சொத்து எதனின் உரிமை மாற்றத்தைத் தள்ளுபடி செய்வதற்காக:

(c) (a) கூறில் அல்லது (b) கூறில் சுட்டப்பட்ட சொத்தின் உடைமையை மீளப் பெறுவதற்காக அல்லது தொடர்புடைய பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் பொறுப்பாட்சியருக்கு அல்லது நிருவாகிக்கு அந்தச் சொத்தின் உடைமையைத் திரும்ப அளிப்பதற்கு; அல்லது

(ii) பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்தாக இருந்து, முந்தைய பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகியால், நிருவாகக் குழுமத்தின் ஒப்பளிப்பிற்கு இணங்கியவாறு அல்லாமல் பிறவாறு, மதிப்புறு மறுபயனுக்காகவாயினும் அல்லது இல்லாவிடினும், எதிர்வாதியின் உடைமையில் இருக்கிற அசையாச் சொத்தினை மீளப் பெறுவதற்காக பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால் உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடுக்கப்படுகிறவிடத்து, அல்லது தொடங்கப்படுகிறவிடத்து, நீதிமன்றமானது, வாதியின் விண்ணப்பத்தின் பேரில், அந்தச் சொத்திற்குப் பாதுகாவலர் ஒருவரை அமர்த்தலாம் மற்றும் சொத்தின் வருமானத்திலிருந்து, அவ்வப்போது, அந்த உரிமை வழக்கை மேலும் தொடருவதற்காகத் தேவையென நீதிமன்றம் கருதுகிற தொகையை வாதிக்குச் செலுத்துமாறு பணிக்கலாம்.

34

பதிவு

செய்யப்படாத பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சார்பாக உரிமையைச் செயலுறுத்து வதற்குத் தடை

77. (1) அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு இணங்க, பதிவு செய்யப்பட்டிராத பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதுவும், அது தொடங்கப்பட்டதற்குப்பிறகு, அதன் சார்பாக உரிமை எதனையும் செயலுறுத்துவதற்காக, உரிமை வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் அல்லது அத்தகைய அதன் தொடக்கத்திற்கு முன்பு, உரிமை வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் தொடுக்கப்பட்டிருக்கிற அல்லது தொடங்கப்பட்டிருக்கிறவிடத்து, அத்தகைய உரிமை வழக்கு, மேல்முறையீடு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும் அந்த பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கிணங்க பதிவு செய்யப்பட்டிருந்தாலன்றி, அந்தத் தொடக்கத்திற்குப்பிறகு நீதிமன்றம் எதனாலும் தொடரப்படுதலோ, கேட்கப்படுதலோ, விசாரணை செய்யப்படுதலோ அல்லது தீர்மானிக்கப்படுதலோ ஆகாது.

(2) (1)-ஆம் உட்பிரிவின் வகைமுறைகள், சரியீட்டுக்கான உரிமைக்கோரிக்கைக்கு அல்லது இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கிணங்க, பதிவு செய்யப்பட்டிராத பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதனின் சார்பாகச் செய்யப்பட்ட உரிமைக்கோரிக்கை எதற்கும் கூடுமான வரையில், பொருந்துதல் வேண்டும்.

நிருவாகக்

குழுமத்திற்கு எதிராக தரப்பினர்களால் உரிமை வழக்கு குறித்த அறிவிப்பு

78. நிருவாகக் குழுமத்தால் செய்யப்படவிருப்பதாக புலப்படுகிற செயல் எதனையும் பொறுத்து, இந்தச் சட்டத்தினை அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகள் எவற்றையும் ஒட்டி, வழக்கு மூலம், வாதியின் பெயர், விவரிப்பு, குடியிருப்பிடம் மற்றும் அவர் கோருகிற தீர்வழி ஆகியவற்றைக் குறிக்க எழுத்துவடிவிலான அறிவிப்பொன்று நிருவாகக் குழுமத்திலும் சார்வு செய்யப்பட்ட அல்லது அதன் அலுவலகத்தில் விட்டுச்செல்லப்பட்ட பிறகு, இரண்டு மாதங்கள் முடிவடையும் வரை, நிருவாகக் குழுமத்திற்கு எதிராக உரிமை வழக்கு எதுவும் தொடுக்கப்படுதல் ஆகாது; மற்றும் அந்த வாதுரை, அந்த அறிவிப்பு சார்வு செய்யப்பட்டது அல்லது விட்டுச் செல்லப்பட்டது என்பதான விவரவுரையைக் கொண்டிருத்தல் ஆகாது.

நீதிமன்றங்களால்

79 (1) பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்திற்கான உரிமை மூலம் அல்லது உடைமை தொடர்பான அல்லது ஒரு பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி அல்லது பயனாளரின் உரிமை தொடர்பான உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை ஒவ்வொன்றிலும், அந்த உரிமை வழக்கை அல்லது நடவடிக்கையைத் தொடுக்கிற தரப்பினரின் செலவில், நிருவாகக் குழுமத்திற்கு அறிவிப்பினை வழங்குதல் வேண்டும்.

உரிமை வழக்குகளுக்- கான அறிவிப்பு முதலியவை

(2) பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்து எதுவும், நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்பாணையை, நிறைவேற்றுகையில் விற்பனைக்காக அல்லது அரசு அல்லது உள்ளாட்சி அதிகார அமைப்பு, சட்டமுறையிலான அதிகார அமைப்பு அல்லது அரசு நிறுமம் எதற்கும் கொடுபட வேண்டிய வருவாய், கட்டணங்கள், அல்லது வரிகளை வசூலிப்பதற்காக அறிவிக்கை செய்யப்பட்டிருக்கிற போதெல்லாம், நீதிமன்றத்தால், ஆட்சியரால் அல்லது எவரது ஆணையின் பேரில் விற்பனைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதோ அந்த நபரால் நிருவாகக் குழுமத்திற்கு அறிவிப்பு கொடுக்கப்படுதல் வேண்டும்.

(3) (1) –ஆம் உட்பிரிவின்படியான அறிவிப்பு ஒன்று இல்லாதிருக்கையில், உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை எதிலும் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணை அல்லது ஆணை எதுவும், நிருவாகக் குழுமமானது, அந்த உரிமை வழக்கு அல்லது நடவடிக்கைக் குறித்து அது அறிந்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள், இதன் பொருட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்தால், விழலானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

(4) (2)-ஆம் உட்பிரிவின்படியான அறிவிப்பு ஒன்று இல்லாதிருக்கையில், அந்த விற்பனையானது, நிருவாகக்குழுமம், அந்த விற்பனை குறித்து அது அறிந்ததிலிருந்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு அல்லது எந்த பிற அதிகார அமைப்பின் ஆணையின் கீழ் விற்பனை நடைபெறுகிறதோ அந்த அதிகார அமைப்பிற்கு இதன் பொருட்டு விண்ணப்பத்திருந்தால், விழலானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

80. பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையைப் பொறுத்த அல்லது பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் சொத்து எதனையும் பொறுத்த உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை எதிலும், நிருவாகக் குழுமம், முன்னிலையாகி, அந்த உரிமை வழக்கின் அல்லது நடவடிக்கைகளின் தரப்பினராக வாதிடலாம்.

நிருவாகக் குழுமம் உரிமை வழக்கிற்கு அல்லது நடவடிக்கைக்- குத் தரப்பினரா யிருத்தல்.

பொறுப்பாட்சியரால்

81. பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை சொத்தின் உரிமை மூலம் சொத்து, அல்லது பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகிக்கு உள்ள உரிமை தொடர்பாக, ஓர் பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின், பொறுப்பாட்சியரால் அல்லது நிருவாகியால் அல்லது அவருக்கு எதிராக நீதிமன்றம் எதிலும் உள்ள உரிமை வழக்கு அல்லது நடவடிக்கை எதுவும், நிருவாகக் குழுமத்தின் ஒப்பளிப்பின்றி, இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளப்படுதல் ஆகாது.

அல்லது நிருவாகியால் அல்லது அவருக் கெதிராக உரிமை வழக்கை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்- குத் தடை35

அத்தியாயம் XIV

பல்வகைப்பட்டவை

நிர்வாகக்

குழுமத்தை கலைத்து கைக்கொள்வ- தற்கான அதிகாரம்.

82. (1) நிருவாகக் குழுமமானது தனது கடமைகளை செய்ய இயலாதிருக்கிறது அல்லது, தனது கடமைகளைப் புரிவதில் தொடர்ந்து தவறுகை செய்கிறது அல்லது தன் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது அல்லது வேண்டுமென்றேயும், போதிய காரணமின்றியும் அரசால் பிறப்பிக்கப்படும் பணிப்புரை எதற்கும் இணங்கி நடக்கத் தவறுகிறது என்று அரசு கருதுமானால், அல்லது ஆண்டு ஆய்வுக்குப் பிறகு பணிந்தனுப்பப்பட்ட அறிக்கை எதனையும் ஓர்வு செய்ததன் பேரில், அந்த நிருவாகக் குழுமம் தொடர்ந்திருப்பது, பொறுப்பாட்சியின் அல்லது நிலைக்கொடையின் நலன்களுக்குப் பெரும்பாலும் ஊறு செய்வதாக இருக்கக்கூடும் என்று அரசு தெளிவுறக் காணுமானால், அரசு, அறிவிக்கை வாயிலாக, ஆறுமாதங்களுக்கு மேற்படாத ஒரு கால அளவுக்கு அந்த நிருவாகக் குழுமத்தைக் கலைத்துக் கைக்கொள்ளலாம்.

வரம்புரை:

ஆனால், இந்த உட்பிரிவின்படி அறிவிக்கையொன்றைப் பிறப்பிப்பதற்கு முன்பு, அது ஏன் கலைத்துக் கைக்கொள்ளப்படுதல் ஆகாது என்பதற்குக் காரணம் காட்டுவதற்கு நிருவாகக் குழுமத்திற்கு நியாயமான காலம் ஒன்றை அளித்தல் வேண்டும் மற்றும் நிருவாகக் குழுமத்தின் விளக்கங்கள் மற்றும் மறுப்புரைகள் எவையேனுமிருப்பின், அவற்றைப் பரிசீலனை செய்தலும் வேண்டும்.

(2) நிருவாகக் குழுமத்தைக் கலைத்துக் கைக்கொள்ளுகிற, (1)-ஆம் உட்பிரிவின்படியான அறிவிக்கை ஒன்று வெளியிடப்படுவதன் பேரில் –

(a) நிருவாகக் குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவரும், கலைத்து கைக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து, அத்தகைய உறுப்பினர்கள் என்ற தம் பதவிகளைக் காலி செய்தல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளினாலோ அல்லது அதன்படியோ நிருவாகக் குழுமத்தினால் அல்லது அதன் சார்பாகச் செலுத்தப்படலாகும் அதிகாரங்கள் அல்லது புரியப்படலாகும் கடமைகள் அனைத்தும், கலைத்துக் கைக்கொள்ளப்பட்ட கால அளவின்போது, அரசு பணிக்கலாகிற நபர் அல்லது நபர்களால் செலுத்தப்படுதலும் புரியப்படுதலும் வேண்டும்; மற்றும்

( c ) நிருவாகக் குழுமத்திடம் உற்றமைந்துள்ள சொத்து எதுவும், கலைத்துக் கைக்கொள்ளப்படும் கால அளவின்போது, அரசிடம் உற்றமைதல் வேண்டும்.

(3) (1)–ஆம் உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்ட கலைத்துக் கைக்கொள்ளும் கால அளவு முடிவடைவதன் பேரில், அரசானது,

(a) அது தேவையென கருதலாகும் மேலுமான ஒரு கால அளவிற்கு கலைத்துக் கைக்கொள்ளும் காலத்தை நீட்டிக்கலாம், அல்லது

(b) 9-ஆம் பிரிவில் வகை செய்யப்பட்ட முறையில் நிருவாகக் குழுமத்தை மறு அமைப்பு செய்யலாம்.

நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாதுகாப்பு.

83. உரிமை வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தின்படி நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக்கருதப்பட்ட எதனையும் பொறுத்து நிருவாகக் குழுமத்திற்கு அல்லது முதன்மை நிருவாக அலுவலருக்கு அல்லது இந்தச் சட்டத்தின்படி உரியவாறு அமர்த்தப்பட்ட பிற நபர் எவருக்கும் எதிராகத் தொடுக்கப்படுதல் ஆகாது.

நிருவாகக் மையச் சட்டம் XLV/1860

84. (1) நிருவாகக் குழுமத்தின் தலைமையாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆய்வு அலுவலர் நிருவாக முதன்மை அலுவலர், தணிக்கையர் உள்ளடங்கலான அலுவலர்கள் ஒவ்வொருவரும் மற்றும் இந்தச் சட்டத்தினால் அல்லது அதன்படி செய்யப்பட்ட விதி அல்லது ஒழுங்குமுறை விதி அல்லது ஆணை எதனாலும் அமர்த்தப்பட்ட கடமைகள் எவற்றையும் ஆற்றுவதற்கு உரியவாறு அமர்த்தப்பட்ட பிற ஒவ்வொரு நபரும், இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின், 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியராகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

குழுமத்தின் தலைமையாளர், உறுப்பினர்கள், ஆய்வு அலுவலர், நிருவாக முதன்மை அலுவலர் மற்றும் அலுவலர்கள் பொது ஊழியர்களாக இருப்பர்.

மையச் சட்டம் XLV/1860

(2) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளின் படியோ அல்லது பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையின் ஒப்பாவணம் எதன்படியோ அமர்த்தப்பட்டிருப்பினும் இல்லாவிடினும், பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் பொறுப்பாட்சியர் அல்லது நிருவாகி ஒவ்வொருவரும், நிருவாக அலுவலர் ஒவ்வொருவரும் மற்றும் ஒரு பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடையில் பதவி எதனையும் வகிக்கிற ஒவ்வொரு நபரும், இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியராகக் கொள்ளப்படுதலும் வேண்டும்.

36

ஆவணங்கள்

85. அப்போதைக்குச் செல்லாற்றலில் உள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை தொடர்பான பதிவுரு, பதிவுரு அறிக்கை அல்லது பிற ஆவணம் எதனின் அல்லது பொறுப்பாட்சி மற்றும் நிலைக்கொடையின் சொத்தாக இருக்கிற அசையாச் சொத்து எதனின் பாதுகாப்பையும் கொண்டிருக்கிற நபர் எவரையும், தேவையான செலவுத் தொகை செலுத்தப்படுவதற்குட்பட்டு, அத்தகைய பதிவுரு, பதிவேடு, அறிக்கை அல்லது ஆவணம் எதனின் படிகளை அல்லது அதிலிருந்து எடுகுறிப்புகளை அளிக்குமாறு கோருவது நிருவாகக் குழுமத்திற்கு அல்லது முதன்மை நிருவாக அலுவலருக்குச் சட்டப்படியானதாகும் மற்றும் அத்தகைய கோரிக்கை செய்யப்படுகிற ஒவ்வொரு நபரும், இயன்ற அளவு விரைவில், நிருவாகக் குழுமத்திற்கு அல்லது முதன்மை நிருவாக அலுவலருக்கு, கோரப்பட்ட பதிவுரு, பதிவேடு, அறிக்கை அல்லது பிற ஆவணத்தின் படிகளை அல்லது எடுகுறிப்பினை அளித்தல் வேண்டும்.

முதலானவற்றின் படிகள் அளிக்கப்பட வேண்டுமென்று கோருவதற்கு நிருவாகக்- குழுமம் மற்றும் முதன்மை அலுவலருக்கு அதிகாரம்

86. 1963-ஆம் ஆண்டு கால வரம்புச் சட்டத்தில் என்ன அடங்கியிருந்த போதிலும், பொறுப்பாட்சி அல்லது நிலைக்கொடை எதிலும் அடங்கியுள்ள அசையாச் சொத்தின் உடைமைக்கான அல்லது அத்தகைய சொத்தில் உள்ள அக்கறை பெற்றிருத்தல் எதற்குமான உரிமை வழக்கு எதற்கும் பொருந்துதல் ஆகாது.

பொறுப்பாட்சி அல்லது நிலைக் கொடையின் சொத்துக்களை மீளப் பெறுவதற்கு மையச் சட்டம் 36/1963 பொருந்தாது.

87. (1) அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.

விதிகளைச் செய்ய அதிகாரம்

(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் செயற்பாட்டுக்கு வருவதாக வெளிப்படுத்தப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் செயற்பாட்டுக்கு வருதல் வேண்டும்.

(b) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும், அவை குறிப்பிட்டதொரு நாளில் செயற்பாட்டுக்கு வருவதாக வெளிப்படுத்தப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் செயற்பாட்டுக்கு வருதல் வேண்டும்.

(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி ஒவ்வொன்றும் , அல்லது பிறப்பிக்கப்படும் அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும், அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்பு, கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்த கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு, அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் பேரவை மாறுதல் எதனையும் செய்யுமாயின், அல்லது அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை செய்யப்படுத்தலோ பிறப்பிக்கப்படுதலோ ஆகாது என பேரவை முடிவு செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை, மாற்றமைவு செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்வுக்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றமைவு அல்லது நீக்கம் எதுவும், அந்த விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட எதனின் செல்லுந் தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.

நிருவாகக்

88. (1) நிருவாகக்குழுமமானது, அரசின் முன் ஒப்பளிப்புடன், இந்தச் சட்டத்தின்படி அதன் அலுவற்பணிகளை நிறைவேற்றுவதற்காக, இந்தச் சட்டத்திற்கு அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளுக்கு இணங்கியதாக ஒழுங்குமுறை விதிகளைச் செய்யலாம்.

(2) ஒழுங்குமுறை விதி அல்லது அதன் நீக்கம் அல்லது மாறுதல் எதுவும், அவை அரசினால் குழுமத்தால் ஒழுங்குமுறை விதிகள் செய்யப்படுவ- தற்கான அதிகாரங்கள்.

ஏற்பளிக்கப்படுகிற வரை, செயல் வடிவம் கொள்ளுதல் ஆகாது.

(3) அரசானது, அறிவிக்கை வாயிலாக, இந்தப் பிரிவின்படி செய்யப்பட்ட ஒழுங்குமுறை விதி எதனையும் தள்ளறவு செய்யலாம் மற்றும் அதன் பேரில் அந்த ஒழுங்குமுறை விதி, செயல்வடிவம் கொள்ளுவது அற்றுப்போகும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை, குறிப்பிட்டதொரு நாளில் செயற்பாட்டுக்கு வருவதாக வெளிப்படுத்தப்பட்டாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளன்று செயற்பாட்டுக்கு வரும்.

இடர்ப்பாடுகளை அகற்றுவதற்- கான அதிகாரம்

89. (1) இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு, ஆணை வாயிலாக, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாததும், இடர்ப்பாட்டினை அகற்றும் நோக்கத்திற்குத் தேவையானது அல்லது உகந்தது எனத் தோன்றுகின்ற எதனையும் செய்யலாம்.

37

வரம்புரை

அத்தகைய ஆணை எதுவும், இந்தச் சட்டத்தின் தொடக்க தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.

(2) இந்த உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையானது, அது பிறப்பிக்கப்பட்ட உடனேயே, கூடிய விரைவில், சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்.

இந்தச் 90. இந்தச் சட்டத்தின் வெளிப்படையாக வகை செய்யப்பட்டவாறு தவிர, இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு அடுத்து முன்பு செயற்பாட்டிலிருந்த பிற சட்டம் எதுவும்,-

91. (i) எந்தப் பொருட்பாடு குறித்து இந்தச் சட்டத்தில் வகைமுறை எதுவும் செய்யப்பட்டிருக்கிறதோ

சட்டத்தின் மேலோங்கி நிற்கும் திறன்.

அந்தப் பொருட்பாடு எதனையும் பொறுத்து; மற்றும்

(ii) அத்தகைய பிற சட்டத்தின் வகைமுறைகள், இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள வகைமுறைகள் எவற்றுக்கும் முரணாக இருக்கிற அளவுக்கு வன்னியகுல சத்திரிய சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களால் உருவாக்கப்பட்ட பொது அறநிலைப் பொறுப்பாட்சிகளுக்கு அல்லது நிலைக்கொடைகளுக்குப் பொருந்துவது அற்றுப்போகும்.

(குடியரசுத்தலைவரின் ஆணைப்படி)

சு.ச. பூவலிங்கம், அரசுச் செயலாளர், சட்டத் துறை.

(தமிழாக்கம்)

க. நரசிம்மன்,

உதவி இயக்குநர்,

சட்ட (ஆட்சிமொழிப்பிரிவு)த் துறை.

PrInTeD anD PubLISheD by The DIrecT or of STaTIonery anD PrInTIng, chennaI on behaLf of The goVernmenT of TamIL naDu

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 04 December 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-12-04.Ordinary_49_Part-IV_Section-2T-sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-12-04.Ordinary_49_Part-IV_Section-2T-sup.