[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2019
[விலை : ரூ. 1.60 காசு[விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 51] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 18, 2019 மார்கழி 2, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைகள்அறிவிக்கைகள்
[அரசாணை நிலை எண் 218, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 13 நவம்பர் 2019.] தமிழ்நாடு 1926 ஆம் ஆண்டு வணிக சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 16/1926) 29ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு 1927ஆம் ஆண்டு வணிக சங்கங்களின் ஒழுங்குமுறை விதிகளில் செய்யக்கருதியுள்ள கீழ்க்காணும் வரைவுத் திருத்தம், மேற்சொன்ன சட்டத்தின் 30ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு அதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், தொழிலாளர் (ம) வேலைவாய்ப்புத் துறையால் குறிப்பிடப்படும் நாளில் இந்த வரைவுத் திருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், அது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவு முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகளை தமிழ்நாடு அரசுதமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எவையேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 006-இல் உள்ள தொழிலாளர் ஆணையர் வாயிலாக அரசு முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, புனித ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திருத்தம்திருத்தம்
மேற்சொன்ன ஒழுங்குமுறை விதிகளில், 3ஆம் ஒழுங்குமுறை விதிக்குப் பின்னர், பின்வரும் ஒழுங்குமுறை விதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-
"3-A. மேற்சொன்ன சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் பதிவு தொடர்பான அத்தகைய ஒழுங்குமுறைவிதிகளுக்கும் இணக்கமாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் உள்ளதாக, வணிக சங்கங்களின் பதிவாளர், மன நிறைவுடைவாராயின், அத்தகைய விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள், வணிக சங்கத்தை பதிவு செய்து, அதற்கான பதிவுச் சான்றிதழை வழங்குவார்.
முகமது நசிமுத்தீன்முகமது நசிமுத்தீன், ,
அரசு முதன்மைச் செயலாளர்.
( தமிழாக்கம்) ந. அருள்,ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி(மொழிபெயர்ப்பு)த் துறை.
[ 1 ]
DTP-II-2-(51) (T Sup)—12 [அரசாணை (2D) எண் 87, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J1)த் துறை, 21 நவம்பர் 2019.]
1948ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியிலும், 5ஆம் பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன சட்டத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (a) பகுதியின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையை கருதிப்பார்த்தப் பின்னர், தமிழ்நாடு மாநிலத்தில், இரசாயன தொழிற்சாலையில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழேயுள்ள விவர அட்டவணையின் (2) நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகையினருக்கு வழங்க வேண்டிய குறைந்தளவு அடிப்படை ஊதியவீதங்களை அந்த விவர அட்டவணையின் (3) நெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இதனால் நிர்ணயம் செய்கிறார்.
2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து அந்நாள் முதற்கொண்டும் செயலுக்கும் வரும்.
விவர அட்டவணைவிவர அட்டவணை
இரசாயன தொழிற்சாலையில் வேலைவாய்ப்புஇரசாயன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
பணியாளர்களின் வகைகள் மாதமொன்றுக்கான தொடர் எண்
(1)
(2) குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்கள் (ரூ)
(3)
தொழில்நுட்ப பணியாளர்கள்
(1) தொழில்நுட்ப மேலாளர் (இரசாயனம் இயந்திர/மின்/கட்டுமானம்/கருவியியல் 10,500
(2) பொறியாளர் (இரசாயனம்/இயந்திர/மின்/கட்டுமானம்/கருவியியல்) (3) மேற்பார்வையார் (இரசாயனம்/இயந்திர/மின்/கட்டுமானம்/கருவியியல்) 10,000
9,600
பாதுகாப்பு அலுவலர்:
1. பாதுகாப்பு அலுவலர்
9,600
நிருவாகப் பணியார்கள்:
(1) நிருவாக மேலாளர்
(2) நிருவாக உதவியாளர்
(3) அலுவலக உதவியாளர்/உதவியாள்
(4) ஓட்டுநர்
9,200
8,400
8,050
8,400
தொழிலாளர் வகை:
(1) இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்
(2) மின் தொழில்நுட்ப வல்லுநர்
(3) கருவிகளை இயக்கும் வல்லுநர்
(4) நீரிலிருந்து கனிமப்பொருட்களை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை இயக்குபவர் (De-Mineralised Water Plant Operator)
(5) பி.டி.சி. (PDC) கருவி இயக்குபவர்
(6) பாரந்தூக்கி (Forklift) இயக்குபவர்
(7) கொதிகலன் இயக்குபவர்
8,850
8,850
8,850
8,850
8,850
8,850
8,850
(8) இந்திய கொதிகலன் ஒழுங்குபடுத்துதல் விதிகளின் கீழ் வரக்கூடிய கொதிகலன்களை
பற்றவைக்கும் பணிகளை மேற்கொள்பவர் (IBR Welder) (9) பற்றவைப்பவர்
(10) பொருத்துநர்
(11) கருவிகளை ஆயத்த நிலைக்கு ஏற்பாடு செய்து நிறுவுபவர் (Rigger)
8,850
8,850
8,850
8,850
(12) இரசாயன பொருட்கள் பயன்பாட்டுக் கருவிகளை இயக்குபவர் (Chemical Operator) 8,850
(13) பணியாள்
8,850
விளக்கங்கள்: (1) அகவிலைப்படி: மேலே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு அடிப்படை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
(i) அகவிலைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக்குறியீட்டு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது கணக்கிடப்பட்ட 161 புள்ளிகள்). 161 புள்ளிகளுக்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.50/- (ஐம்பது ரூபாய் மட்டும்) கூடுதலாக அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.
3(ii) முந்தைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை) சராசரி விலைக்குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாளன்று அகவிலைப்படி கணக்கிடப்பட வேண்டும்.
(iii) முந்தைய ஆண்டிற்கான சென்னை மாநகர நுகர்வோர் சராசரி விலைக் குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில்தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.
(2) பணியின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும்போது, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் எவ்வித வேறுபாடும் இருக்கக்கூடாது.
(3) நாள் ஊதியத்தைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியத்தை 26 ஆல் வகுக்க வேண்டும்.
(4) தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தளவு ஊதியங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்குமிடங்ளிளெல்லாம் அதே ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
முகமது நசிமுத்தீன், , முகமது நசிமுத்தீன் அரசு முதன்மைச் செயலாளர்.
( தமிழாக்கம்)
ந. அருள்,ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.