© தமிழ்நாடு அரசு 2019
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 25, 2019 மார்கழி 9, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 225, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (M2)த் துறை, 20 நவம்பர் 2019.] 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 112-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 1950 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். அதன் வரைவு, மேற்சொன்ன சட்டத்தின் 115-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 6-இன், துணை விதி (3)-இல், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(2) விதி 8-இன், துணை விதி (2)-இல், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
(3) விதி (10)-இன், "ஐம்பது ரூபாய்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இருநூறு ரூபாய்", என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்;
முகமது நசிமுத்தின்,
அரசு முதன்மைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
iii-1a-(52) (T Sup)—1