Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

Notifications or Orders of specific character or of particular interest to the public issued by Secretariat Departments

Published 25 December 2019

Type
Ordinary
Gazette no.
52
Part
Part II
Notifications
Government Notifications - Tamil Translations
Section
Section 1-T-Sup
Identifier
in.gazette.tamilnadu.2019-12-25.Ordinary_52_Part-II_Section-1-T-Sup
Languages
English, Tamil
Published at
Original source ↗
©

தமிழ்நாடு அரசு 2019

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 0.80 காசு.

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 52] சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 25, 2019 மார்கழி 9, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2050

பகுதி II—பிரிவு 1 இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 129, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும்

பொது விநியோகத் துறை, 6 நவம்பர் 2019.]

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம்

(நுகர்வோர் விவகாரங்கள் துறை), ஆணை, புது தில்லி, 29 செப்டம்பர் 2019.

S.O.3540(E)–1955-ஆம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் (10/1955) 3ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள் குறித்த உரிமம் பெறுதல், இருப்பு வரையறைகள் மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நீக்குதல் ஆணையில் மேற்கொண்டும் திருத்தம் செய்வதற்காக, பின்வரும் ஆணையை இதனால் பிறப்பிக்கிறது, அதாவது:-

1. குறுந்தலைப்பும் தொடக்கமும்.-—

(1) இவ்வாணை 2019 ஆம் ஆண்டு குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு குறித்த (உரிமம் பெறுதல், இருப்பு வரையறைகள் மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடுகளை நீக்குதல்) இரண்டாம் திருத்த ஆணை என்று அழைக்கப்படும்.

(2) இவ்வாணை உடனடியாக செயலுக்கு வரும்.

2. 2016-ஆம் ஆண்டு குறிப்பிட்ட உணவுப் பொருட்களுக்கு உரிமம் பெறுதல், இருப்பு வரையறைகள் மற்றும் கொண்டு செல்வது குறித்த கட்டுப்பாடு ஆகியவற்றை நீக்குதல் ஆணையின் 3ஆம் பகுதியைச் சேர்ந்த (2) உட்பகுதியில், இனம் (iii)-க்குப் பின்னர், பின்வரும் இனம் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

''(iv) அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கான வர்த்தகர்கள் மீதான பின்வரும் இருப்பு வரையறைகளுடன் 30-11-2019 வரையிலான கால அளவிற்கு, வெங்காயம்.

மொத்த விற்பனையாளர்: 50 மெட்ரிக் டன் மற்றும் சில்லரை விற்பனையாளர் 10 மெட்ரிக் டன்"

[F.No. S-10/3/2017-ECR&E]ஏ.கே செளத்தரி, பொருளாதார ஆலோசகர். ][ 1 ] DTP—II-1 (T-Sup.) (52) 2 குறிப்பு: முதன்மை ஆணை 29-9-2016 ஆம் நாளிட்ட G.S.R. 929(E) எண்ணிட்ட மத்திய அரசின் சிறப்பு வெளியீட்டில் பாகம் II இல் பிரிவு 3 ஐச் சேர்ந்த (i) உட்பிரிவில் வெளியிடப்பட்டுள்ளது. (காண்க: 27-10-2016 நாளிட்ட S.O. 3341(E) எண்ணின்படியும், அதனைத் தொடர்ந்து, 25-04-2017 ஆம் நாளிட்ட S.O. 1288(E) எண்ணின்படியும், 17-05-2017 ஆம் நாளிட்ட S.O. 1600(E) என்ற எண்ணின்படியும், 25-08-2017 ஆம் நாளிட்ட S.O. 2785(E) எண்ணின்படியும், 27-09-2017 ஆம் நாளிட்ட S.O. 3136(E) என்ற எண்ணின்படியும், 23-10-2017 ஆம் நாளிட்ட S.O. 3397(E) என்ற எண்ணின்படியும், 25-10-2017 ஆம் நாளிட்ட S.O. 3422(E) என்ற எண்ணின்படியும், 27-12-2017 ஆம் நாளிட்ட S.O. 4079(E) என்ற எண்ணின்படியும், 13-06-2018 ஆம் நாளிட்ட S.O. 2414(E) என்ற எண்ணின்படியும் மற்றும் 06-08-2019 ஆம் நாளிட்ட S.O. 2826(E) என்ற எண்ணின்படியும் உள்ள இந்திய அரசிதழ்களின் வெளியீட்டின்படி திருத்தம் செய்யப்பட்டது.)

(ஆளுநரின் ஆணைப்படி மீண்டும் வெளியிடப்படுகிறது)

தயானந் கட்டாரியா, அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 December 2019. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2019-12-25.Ordinary_52_Part-II_Section-1-T-Sup/. Archive identifier in.gazette.tamilnadu.2019-12-25.Ordinary_52_Part-II_Section-1-T-Sup.