Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILLS - No. 1 of 2020 to No. 3 of 2020 (Tamil)

Published 07 January 2020

Type
Extraordinary
Gazette no.
11
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2020-01-07.Extraordinary_11_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗

©

GOVERNMENT OF TAMIL NADU 2020

[Regd. No. TN/CCN/467/2012-14.

[R. Dis. No. 197/2009.

[Price: Rs. 4.00 Paise.

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 11A] சென்னை, புதன்கிழமை, ஜனவரி 8, 2020 மார்கழி 23, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2050

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

பொருளடக்கம்பொருளடக்கம்

சட்டமுன்வடிவுகள்:சட்டமுன்வடிவுகள்:

பக்கங்கள்.

எண் 1/2020—தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும் .. 2-4 எண் 2/2020—தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும் .. 5-8 எண் 3/2020—தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்)

9-10 திருத்தச் சட்டம் என்று வழங்கப்பெறும் .. ..

Ex-IV-1-11A(Hp-40)

[ 1 ]2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2020-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்ககாரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவைவிதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1/20202020 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 1

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும் 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன் வடிவு.திருத்தம் செய்வதற்கானதொரு சட்டமுன் வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபதாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும்

1. (1) இந்தச் சட்டம் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள்

தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.

(2) இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

புதிய பிரிவு 76-A ஐ

2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டப் பிரிவு 76க்கு

புகுத்துதல்.

தமிழ்நாடு சட்டம் 30/1983.

பின்பு பின்வரும் பிரிவைப் புகுத்துதல் வேண்டும், அதாவது:-

"76-A. குறித்த சில சூழ்நிலைகளில் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின்

தலைவர் அல்லது துணைத்தலைவரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்தல்:-

(1) பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் தலைவர் அல்லது

துணைத்தலைவர் கையாடலுக்கு முழு பொறுப்பாளராக இருந்தாலோ, கையாடல்

செய்திருந்ததாகவோ அல்லது நம்பிக்கை மோசடி அல்லது பதிவு செய்யப்பட்ட

சங்கத்தின் ஒட்டு மொத்த தவறான நிருவாகம் செய்திருந்ததாகவோ அல்லது

ஏதாவது குற்றத்தவறான நடத்தை அல்லது ஒழுக்கக்கேடான குற்றச் செயல்

செய்திருந்ததாகவோ புகார் மூலமாகவோ அல்லது வேறு வகையாகவோ

பதிவாளரின் கவனத்திற்கு கொண்டு வருகிறவிடத்து, முதல் நோக்கில்

தலைவர் அல்லது துணைத்தலைவருக்கு எதிரான சாட்சியம் இருக்கிறது

என பதிவாளர் கருதினால், பிரிவு 81ன் படி விசாரணை அல்லது பிரிவு 82ன்படி ஆய்வு அல்லது புலன் விசாரணை அல்லது குற்றத் தவறான நடத்தை அல்லது ஒழுக்கக்கேடு குற்றம் சம்பந்தப்பட்ட புலன் விசாரணை முடிவாகமலிருந்து, சங்கத்தின் நலன் அல்லது பொதுநலன் கருதி, தலைவர் அல்லது துணைத்தலைவரை பதிவாளர் ஒரு ஆணை பிறப்பித்து அவரை

ஆறு மாதங்களுக்கு மிகாமல் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம்.

(2) உட்பிரிவு (1)இல் என்ன சொல்லியிருப்பினும் பிரிவு 36ன் படி ஒரு

நடவடிக்கை தலைவர் அல்லது துணைத்தலைவர் மீது தொடங்கப்பட்டிருந்தால்

தற்காலிக பதவி நீக்கத்தை பதிவாளர், அதற்கான காரணத்தை எழுத்து வடிவில்

பதிவு செய்து, மேலும் ஆறு மாதங்கள் அல்லது பிரிவு 36ன் கீழ் இறுதி உத்தரவு

பிறப்பிக்கும் வரை இதில் எது முந்தியதோ அதுவரை அவ்வப்போது கால நீட்டிப்பு

செய்யலாம்.".

3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக் காரண விளக்கவுரைநோக்கக் காரண விளக்கவுரை

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தில் (தமிழ்நாடு சட்டம் 30/1983) பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அல்லது துணைத்தலைவர் கையாடல் அல்லது நம்பிக்கை மோசடி அல்லது ஒட்டுமொத்த தவறான நிர்வாகம் அல்லது குற்றமுள்ள தவறான நடத்தை அல்லது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் போது, பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தில் ஊதியம் பெறும் அலுவலர் அல்லது பணியாளரைப் போன்று தற்காலிகமாக பதவி நீக்கம் செய்ய தற்போதைய சட்டத்தில் வழிவகைகள் இல்லை. எனவே அரசானது தமிழ்நாடு சட்டம் 30/1983ஐ மேற்கூறிய நோக்கத்திற்காக தக்கவாறு திருத்தம் செய்யும் பொருட்டு வழி வகை செய்துள்ளது.

2. இந்தச் சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

செல்லூர் கே. ராஜூசெல்லூர் கே. ராஜூ,,

கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கி. சீனிவாசன்,

செயலாளர்.

4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

Ex-IV-1-11A—1 Ex-IV-1-11A—1a Ex-IV-1-11A—2 Ex-IV-1-11A—25 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு 2020-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்ககாரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/20202020 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2

2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டத்தை மேலும்

திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக

தொடக்கம்.

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) பிரிவுகள் 2 ,6 மற்றும் 7ஆகியவை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 16 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்தச் சட்டத்தின் எஞ்சியுள்ள வகைமுறைகள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

1 ஆம் பிரிவிற்கானத் 21/2012.

திருத்தம்.

2. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகச் சட்டத்தின் (இதன்பின்பு முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடுவதான) 1 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவிற்குப் பதிலாக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(1) இந்தச் சட்டம், 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர்.ஜெ ஜெயலலிதா

மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டம் என வழங்கப்பெறும்.".

7 ஆம் பிரிவிற்கானத் 3. முதன்மைச் சட்டத்தில் 7 ஆம் பிரிவில், -

திருத்தம்.

1) "வேந்தர்" எனும் சொல்லுக்குப் பதிலாக, அது வருகின்ற இடங்களிலெல்லாம் "அரசு" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

2) "அவர்" எனும் சொல்லுக்குப் பதிலாக, அது வருகின்ற இரு இடங்களிலும், "அவர்கள்" எனும் சொல்லானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

11ஆம் பிரிவிற்கானத் 4. முதன்மைச் சட்டத்தில், 11 ஆம் பிரிவில்,-

திருத்தம்.

(1) (2) ஆம் உட்பிரிவில், (ii) ஆம் இனத்தில், "மேலாண்மைக்குழு" எனும் சொற்றொடருக்குப் பதிலாக, "அரசு" எனும் சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;

(2) (2-A) எனும் உட்பிரிவிற்குப் பதிலாக, பின்வரும்

உட்பிரிவானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

"(2-A) துணை-வேந்தராக பணியமர்த்துவதற்காக, குழுவினால்

பரிந்துரை செய்யப்படும் நபர் ஒருவரானவர்-

(i) அதிகபட்ச திறன், நேர்மை, ஒழுக்கம் மற்றும் நிறுவனஅர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த கல்வியாளராக இருத்தல் வேண்டும்; மற்றும்

(ii) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஆணையின் பேரில், வேந்தருடன் கலந்தாலோசித்து, அரசால் குறித்துரைக்கப்பட்டவாறான, அத்தகைய கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்."

(3) (2-B) ஆம் உட்பிரிவில், "மேலாண்மைக் குழு" எனும் சொற்றொடருக்குப்

பதிலாக, "அரசு" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

துணை வேந்தர்

தொடர்ந்து பதவி வகித்தல்.

5. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தச் சட்டத்தின்படி திருத்தம் செய்யப்பட்டவாறான, இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசிதழில் உடனடியாக வெளியிடுவதற்கு முன்னர், பதவியில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அவர் பதவியேற்ற நாள் முதல் அல்லது எழுபது வயது நிறைவடையும் நாள் வரை, இதில் எது முந்தையதோ அதுவரை, அவர் அத்தகைய துணை-வேந்தர் பதவியில் மூன்றாண்டு காலத்திற்கு தொடர்ந்து பதவி வகிப்பார்.

"தமிழ்நாடு மீன்வளப்

6. முதன்மைச் சட்டத்தில், "தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம்" எனும் சொற்றொடருக்குப் பதிலாக, அது வருகின்ற இடங்களிலெல்லாம், "தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்" எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.

பல்கலைக்கழகம்" எனும் சொற்றொடருக்கான மாற்றீடு.

"தமிழ்நாடு மீன்வளப்

பல்கலைக்கழகத்தின்" மற்றும்

"தமிழ்நாடு மீன்வளப்

பல்கலைக்கழகச் சட்டத்தின்" சுட்டுகையின் பொருள்கோள்.

7. எந்தவொரு சட்டத்திலும் அல்லது எந்தவொரு விதி, அறிவிக்கை, நடைமுறை, ஆணை, ஒழுங்குமுறை விதி, துணை விதி அல்லது இதன் கீழ் அல்லது சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட பிற முறையாவணம் மற்றும் முதன்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அல்லது தொடர்ந்து நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் ஆகியவற்றில் "தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம்" மற்றும் "தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகச் சட்டம்" ஆகியவற்றின் சுட்டுகைகளானது, முறையே, "தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம்" மற்றும் "தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகச் சட்டம்" ஆகியவற்றின் சுட்டுகைகளாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும்.

7 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்கக்காரண விளக்கவுரை.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பெயரானது, அரசாணை (நிலை) எண்.21, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை, நாள் 16-02-2018 –இன் மூலம், தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2. மேலும், கூறப்பட்ட பல்கலைக்கழகமானது, ஒரு மாநில அரசின் நிதி பெறும் பல்கலைக்கழகமாகும் மற்றும் அதன் நிர்வாகத்திற்காகவும், பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும், நிதிகள் அரசால் ஒதுக்கப்படுகின்றன. கூறப்பட்ட பல்கலைக்கழகத்தினால் அரசு நிதியின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காக, ஆய்வு மற்றும் விசாரணை மீதான அதிகாரத்தை அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துணை வேந்தராக பணியமர்த்துவதற்காக, நபர்களைத் தேர்வு செய்ய வல்லுநர் குழுவில், அரசு பிரதிநிதி ஒருவரைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3. எனவே, அரசானது, மேற்சொன்ன நோக்கங்களுக்காக, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகச் சட்டத்தினை, (தமிழ்நாடு சட்டம் 21/2012) தக்கவாறு திருத்துவதென முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

D. ஜெயக்குமார், மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், ப(ம)நி.சீ).

8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

சட்டமியற்ற அதிகார ஒப்படைவு பற்றிய விவரக் குறிப்பு.

சட்ட முன் வடிவின் 4(2) ஆம் கூறானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்திற்காக வேந்தருடன் கலந்தாலோசித்து ஆணை பிறப்பிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

2. ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்கள் இயல்பானவே அன்றி தனித்தன்மை வாய்ந்தவை அல்ல.

D. ஜெயக்குமார், மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், ப(ம)நி.சீ).

கி. சீனிவாசன், செயலாளர்.

9 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

2020-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்ககாரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவைவிதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 3/20202020 சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 3

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல்

(ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு

சட்டமுன்வடிவு.சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்

பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்.

1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டம் என்று வழங்கப்பெறும்.

(2) இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு

வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

33 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

தமிழ்நாடு சட்டம் 27/1989. 2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் 33 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில் உள்ள வரம்புரையில் "எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்" என்கின்ற சொற்றொடருக்குப் பதிலாக "ஒன்பது ஆண்டுகள்" என்ற சொற்றொடர் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு அவசரச் சட்டம்

9/2019.

நீக்கறவு மற்றும் காப்புரை.

3. (1) 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) மூன்றாம் திருத்த அவசரச் சட்டம் ஈங்கிதனால் நீக்கம் செய்யப்படுகிறது.

10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

நோக்க காரண விளக்கவுரை.

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவானது, ஒரு புதிய சந்தைக்குழு அமைக்கப்படும் வரையில் மொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத ஒரு கால அளவிற்கு புதிய சந்தைக் குழுவினை அமைப்பது நிலுவையிலிருக்கும்பொழுது சந்தைக் குழுவின் அலுவல்களை மேலாண்மை செய்வதற்கு, தனி அலுவலர் ஒருவரை பணி அமர்த்தம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேற்சொன்ன வகைமுறையின் விளைவாக, மேற்சொன்ன சந்தைக் குழுக்களின் அலுவற் பணிகளை மேலாண்மை செய்வதற்கு சந்தைக் குழுக்களுக்கு தனி அலுவலர்கள் பணி அமர்த்தம் செய்யப்பட்டிருந்தனர்.

2. தனி அலுவலர்களின் பதவிக்காலம் காலத்திற்கேற்ப மேற்சொன்ன 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரையை திருத்தம் செய்வதன் மூலம் மேற்சொன்ன மூன்று ஆண்டுகள் காலத்திற்கு மேல் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 2/2019 தமிழ்நாடு சட்டத்தால் அவர்களுடைய பதவிக்காலம் எட்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. தனி அலுவலர்களின் பதவிக்காலம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதியுடன் முடிவடைவதன் பொருட்டு சந்தைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதாக இருப்பதால் மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 29.11.2019-க்கு பிறகு மேலுமான ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பதென்பது கட்டாயத் தேவையாக இருந்ததாலும் அல்லது சந்தைக்குழுக்களை மறுபடியும் அமைத்துருவாக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை பணி அமர்த்தம் செய்வதற்கு அரசு, அதன் காரணமாக மேற்சொன்ன நோக்கத்திற்காக மேற்சொன்ன 27/1989 தமிழ்நாடு சட்டத்தைத் திருத்தம் செய்வதென முடிவு செய்திருக்கிறது.

3. அதற்கிணங்க ஆளுநர், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதிக்கு பிறகு மேலுமான ஆறு மாத கால அளவிற்கு அல்லது சந்தைக் குழுக்களை அமைக்கும் வரையில், இவற்றில் எது முந்தையதோ அதுவரையில் நீட்டிப்பதற்கு 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (ஒழுங்கு முறைப்படுத்துதல்) மூன்றாம் திருத்த அவசரச் சட்டத்தைப் (தமிழ்நாடு அவசரச் சட்டம் 9/2019) பிறப்பித்தார் .

4. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன அவசரச் சட்டத்திற்குப் பதிலாக விழைகிறது.

இரா. துரைக்கண்ணு, இரா. துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 07 January 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-01-07.Extraordinary_11_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2020-01-07.Extraordinary_11_Part-IV_Section-1.