© தமிழ்நாடு அரசு 2020
[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : ரூ. 1.60 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 7] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 12, 2020 தை 29, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி II—பிரிவு 2 இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை
அறிவிக்கை
[அரசாணை நிலை எண் 553, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல(Z1)த் துறை, 12 டிசம்பர் 2019.] தமிழ்நாடு 1926-ஆம் ஆண்டு செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் iii/1926) 11-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு (2)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு 1926-ஆம் ஆண்டு செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் சட்டத்தின் கீழ் வரும் விதிகளில் செய்யக் கருதியுள்ள கீழ்க்காணும் வரைவு திருத்தங்கள், இதனால் பாதிக்கப்படக்கூடிய அனைவரின் தகவலுக்காக மேற்சொன்ன சட்டத்தின் 11-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு 1-இன் கீழ் சொல்லியுள்ளவாறு, இதனால் வெளியிடப்படுகிறது.
2. இந்த அறிவிக்கை, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து முப்பது நாட்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்குப் பின்னர், இந்த வரைவுத் திருத்தங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும், இது தொடர்பாக, மேற்சொன்ன கால அளவான முப்பது நாட்கள் முடிவடைவதற்கு முன்னர், எவரிடமிருந்தேனும் வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்குமென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அவற்றை சென்னை-600 004, தமிழ்நாடு செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் மன்றம், பதிவாளர் வாயிலாக, அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு (இரு படிகளில்) அனுப்பி வைக்க வேண்டும்.
வரைவுத் திருத்தம்
மேற்சொன்ன விதிகளில்,-
(1) விதி 32-இல், ''பிரிவு i அல்லது ii'' என்ற சொற்றொடருக்காக, ''பிரிவு i, ii, iii, அல்லது iV" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
(2) விதி 32A-இல், ''பிரிவு i அல்லது ii'' என்ற சொற்றொடருக்காக, ''பிரிவு i, ii, iii, அல்லது iV" என்ற சொற்றொடர் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
(3) பிற்சேர்க்கை B-இன், படிவம் iV A-இல், ''படிவத்தை நிரப்புவதற்கான அறிவுரைகள்'' என்ற தலைப்பின் கீழ், இனம் (4)-இல், துணை தலைப்பு பிரிவு ii மற்றும் அது தொடர்பான பதிவுகளுக்குப் பின்னர், பின்வரும் துணை தலைப்புகள் மற்றும் அது தொடர்பான பதிவுகள், முறையே, சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன;-
[ 1 ]
DTP-ii-2-(7) (T Sup)—12 பிரிவு-iii
இந்தியாவில் உள்ள மற்றொரு மாநிலத்தில் முதலில் பதிவு செய்யாத செவிலியர்களின் பெயர்கள் கீழ்காணும் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும், அவையாவன;-
பகுதி A - பொது செவிலியர் (மூன்றாம் பாலின பெண் செவிலியர்கள்)
பகுதி B - பொது செவிலியர் (மூன்றாம் பாலின ஆண் செவிலியர்கள்)
பகுதி C - பேறுகால உதவியாளர் (மூன்றாம் பாலினத்தவர்)
பகுதி D - சுகாதார பார்வையாளர்கள் (மூன்றாம் பாலினத்தவர்)
பகுதி E - துணை செவிலியர்கள் (மூன்றாம் பாலினத்தவர்)
பிரிவு-iV
இந்தியாவில் உள்ள மற்றொரு மாநிலத்தில் முதலில் பதிவு செய்த செவிலியர்களின் பெயர்கள், கீழ்காணும் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும், அவையாவன;-
பகுதி A - பொது செவிலியர் (மூன்றாம் பாலின பெண் செவிலியர்கள்)
பகுதி B - பொது செவிலியர் (மூன்றாம் பாலின ஆண் செவிலியர்கள்)
பகுதி C - பேறுகால உதவியாளர் (மூன்றாம் பாலினத்தவர்)
பகுதி D - சுகாதார பார்வையாளர்கள் (மூன்றாம் பாலினத்தவர்)
பகுதி E - துணை செவிலியர்கள் (மூன்றாம் பாலினத்தவர்)
பீலா ராஜேஷ், அரசு செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
[அரசாணை (நிலை) எண் 6, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (J2)த் துறை, 6 ஜனவரி 2020.] 1948-ஆம் ஆண்டு குறைந்த அளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 9-ஆம் பிரிவின் படியும், 5 ஆம் பிரிவின் (1) உட்பிரிவின் (a) பகுதியிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், யாதொரு உள்ளாட்சி அமைப்புகளில் பணியமர்த்தப்படுவதற்கான குறைந்தளவு ஊதிய வீதங்களை திருத்தியமைப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டும், மாநில அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை இதனால் நியமிக்கிறார்:-
தனிநபர்கள்:-
(1) தொழிலாளர் நல இணை ஆணையர்- --i, சென்னை. தலைவர்
செயலாளர்
(2) தொழிலாளர் நல உதவி ஆணையர்- --iii வது வட்டம் (செயலாக்கம்),
சென்னை.
(3) உதவி இயக்குநர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை,
உறுப்பினர்
சென்னை--600 006.
3பணியாளர்களின் பிரதிநிதிகள்:
(1) திரு. தாடி. எம். இராசு,
உறுப்பினர்
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எண்.9, முதல் தெரு, யுனைடெட் இந்தியா நகர், அயன்புரம், சென்னை-600 023.
(2) திரு. கே.ஆர். கணேசன்,
உறுப்பினர்
இந்திய தொழிற்சங்க மையம், மாவட்ட குழு அலுவலகம், எண்.83/1, ஞானபிரகாசபுரம், பேகாம்பூர் அஞ்சல், திண்டுக்கல்-624 002.
(3) திரு. எ. ஜெயசந்திரன்,
உறுப்பினர்
இந்திய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு, எண்.119, கிழக்கு வன்னியர் தெரு, கே.கே. நகர், விருகம்பாக்கம், சென்னை-600 078.
வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள்:
(1) திருமதி ஜி. தனலட்சுமி
உறுப்பினர்
இணை இயக்குநர் (நிருவாகம்) நகராட்சி நிருவாக ஆணையரகம், ஊரக நிருவாக அலுவலக வளாகம், 75, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028.
(2) செல்வி ஆர். ராஜஸ்ரீ
உறுப்பினர்
கூடுதல் இயக்குநர் (நிருவாகம்), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனங்கள் இயக்ககம், F-14, ராஜ் திலக் அடுக்குமாடி குடியிருப்பு, ஜஸ்வந்த் நகர் விரிவாக்கம், முகப்பேர் மேற்கு, சென்னை-600 037.
உறுப்பினர்
(3) திரு. பி. மதுசூதனன் ரெட்டி, இ.ஆ.ப., துணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை-600 003.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
[அரசாணை (நிலை) எண் 9, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 7 ஜனவரி 2020.] 2019-ஆம் கணக்கு வைப்பிற்குரிய ஆண்டின் யாதொரு நாளில், 1996-ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பை முறைப்படுத்தலும் பணி நிலைமைகளும்) சட்டத்தின் 2-ஆம் பிரிவைச் சேர்ந்த 1 உட்பிரிவின் (j)-பகுதியின் பொருண்மைக்குட்பட்ட இருபதுக்கு குறைவான மற்றும் பத்துக்கு குறையாத தொழிலாளர்கள் பணிபுரிகின்ற அல்லது பணிபுரிந்த நிறுவனங்களுக்கு, 1965-ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல் சட்டத்தினை (மத்தியச் சட்டம் 21/1965) பொருந்தச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு கருதுவதாலும்;
எனவே, தற்போது, 1965-ஆம் ஆண்டு மிகை ஊதியம் வழங்கல் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 21/1965) 1-ஆம் பிரிவைச் சேர்ந்த, 3-உட்பிரிவின் வரம்பு நிபந்தனையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, 2019-ஆம் ஆண்டின் யாதொரு நாளில் தொடங்குகிற கணக்கு வைப்பிற்குரிய ஆண்டிலிருந்தும், அடுத்துவரும் ஒவ்வொரு கணக்கு வைப்பிற்குரிய ஆண்டுகளை பொறுத்தவரையிலும், மேற்சொன்ன நிறுவனங்களுக்கு, மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளை பொருந்தச் செய்கின்ற அவர்களின் நோக்கத்திற்கான அறிவிப்பு, இதில் கோரப்பட்டுள்ளவாறாக இதனால் அளிக்கப்படுகிறது.
4மேற்சொன்ன நிறுவனங்களுக்கு மேற்சொன்ன சட்டத்தின் விதித்துறைகளை பயன்படுத்துவதற்கு கருதப்பட்டது தொடர்பாக, இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடையும் நாளன்று அல்லது அதற்கு முன்னர், யாதொரு நபரிடமிருந்து வரப்பெறுகிற ஏதேனும் மறுப்புரை அல்லது கருத்துரையை தமிழ்நாடு அரசு பரிச்லிக்கும். மறுப்புரை அல்லது கருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை, 47/1, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரியிலுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் வாயிலாக, சென்னை- 600 009, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அரசுச் செயலாளருக்கு இருபடிகளில் அனுப்பி வைக்க வேண்டும்.
முகமது நசிமுத்தின்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.