Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

BILL INTRODUCED IN THE LEGISLATIVE ASSEMBLY OF THE STATE OF TAMIL NADU-Under Rule 130 of the Tamil Nadu Legislative Assembly Rules, the following Bill which was introduced in the Legislative Assembly of the State of Tamil Nadu on 19th February, 2020

Published 19 February 2020

Type
Extraordinary
Gazette no.
67
Part
Part IV
Extraordinary Type
Tamil Nadu Bills
Section
Section 1
Identifier
in.gazette.tamilnadu.2020-02-19.Extraordinary_67_Part-IV_Section-1
Languages
English, Tamil
Published at
Original source ↗
© GOVERNMENT OF TAMIL NADU 2020 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Re. 0.80 Paise.
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது.

No. 67A] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 19, 2020 மாசி 7, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051

பகுதி IV—பிரிவு 1

தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாளன்று தமிழ்நாடு

சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,

நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்

பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக

வெளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 16/2020

2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தை மேலும் திருத்துவதற்கானதொரு சட்ட முன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஒன்றாவது ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைப்பு 1. (1) இந்தச் சட்டம், 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமை (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

மற்றும் தொடக்கம்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறித்திடலாகும் அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாடு

4-ஆம் பிரிவிற்கான சட்டம் 16/2003

திருத்தம்.

2. 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தின் 4- ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (a) எனும் உட்கூறுக்காக பின்வரும் கூற்றை மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும் :-

"(a) 2002-2003 ஆம் நிதியாண்டில் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டிலும் அந்த ஆண்டில் நிலவும் பொருளாதாரச் சூழலுக்கேற்ப வருவாய் வரவினத்திற்கும் வருவாய்ப் பற்றாக்குறைக்கும் உள்ள விகிதத்தை நூற்றுக்கு மூன்று விழுக்காட்டளவு முதல் ஐந்து விழுக்காட்டளவு வரை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வந்து, 2021-2022 ஆம் ஆண்டு வாக்கில் வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்குவதோடு அதன்பின் அதே நிலையைத் தொடர்ந்து பின்பற்றுதல் வேண்டும்". 268-Ex-IV-1-67A—1 [ 1 ] 2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு

neh¡f¡ fhuz és¡fÎiu

வருவாய்ப் பற்றாக்குறையை நீக்குவதற்கான கால அளவை நீட்டிப்பு செய்வதன் பொருட்டு, நிர்ணயிக்கப்பட்ட நிதி மேலாண்மை இலக்குகளைப் பராமரிப்பதற்கான காலஅளவை நீட்டிப்பு செய்வதற்காக, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிருவாகத்தில் பொறுப்புடைமைச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 16/2003) திருத்தம் செய்வதெனக் கருதப்பட்டுள்ளது.

2. இச் சட்ட முன்வடிவு மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

ஓ. பன்னீர்செல்வம்,

துணை முதலமைச்சர்.

கி. சீனிவாசன், செயலாளர்.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 19 February 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-02-19.Extraordinary_67_Part-IV_Section-1/. Archive identifier in.gazette.tamilnadu.2020-02-19.Extraordinary_67_Part-IV_Section-1.