©GOVERNMENT OF TAMIL NADU 2020 [Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [Price: Rs. 5.60 Paise.
| தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
No. 74A] சென்னை, வியாழக்கிழமை, பிப்ரவரி 20, 2020 மாசி 8, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி IV—பிரிவு 1
தமிழ்நாடு சட்டமுன்வடிவுகள்
2020-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாளன்று தமிழ்நாடு
சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோக்க காரண விளக்கவுரையுடன் சேர்த்து, தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை விதிகளின் 130-ஆம் விதியின் கீழ் பொதுத் தகவலுக்காக
வெளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 17/2020
தமிழ்நாடு மாநிலத்தின் காவேரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண்
நிலங்களைப் பாதுகாப்பதற்கானதொரு சட்ட முன்வடிவு.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட
தொடக்கம்.
வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பொருள் வரையறைகள்.
2. இந்தச் சட்டத்தில் தறுவாயின் தேவை வேறு பொருள் குறித்தாலன்றி,-
(a) "வேளாண்மை" என்பது உணவு, தீவனம், நார்ப்பொருள், உயிரி எரிபொருள் மற்றும் வேளாண்-தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நோக்கத்திற்காக தாவரங்கள் அல்லது பயிர்கள் சாகுபடி, வேளாண்மை, தோட்டக்கலை அல்லது தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு அல்லது காடு வளர்ப்பு அல்லது பிற செயற்பாடுகள் மூலம் உற்பத்தி எதுவும் என்று பொருள்படும்;
(b) "வேளாண் நிலம்" என்பது, வேளாண் பயன்பாட்டிலுள்ள அனைத்து
நிலங்களும் என்று பொருள்படும்;
(c) "அதிகாரஅமைப்பு" என்பது, 5-ஆம் பிரிவின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்;
(d) "மாவட்டம்" என்பது வருவாய் மாவட்டம் என்று பொருள்படும்;
Ex-IV-1-74A—1
Ex-IV-1-74A—2
[1]
Ex-IV-1-74A—2
Ex-IV-1-74A—1a2 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (e) "மாவட்ட ஆட்சியர்" என்பது மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளைச் செய்ய அரசால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள வேறு அலுவலர் எவரும் என்று பொருள்படும்;
(f) "அரசு" என்பது மாநில அரசு என்று பொருள்படும்;
(g) "வகுத்துரைக்கப்பட்ட" என்பது விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது
என்று பொருள்படும்;
(h) "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்" என்பது முதலாம்
இணைப்புப் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட பகுதி என்று பொருள்படும்;
(i) "இணைப்புப்பட்டியல்" என்பது இந்தச் சட்டத்தில் இணைக்கப்பட்ட
இணைப்புப் பட்டியல் என்று பொருள்படும்;
(j) "மாநிலம்" என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று பொருள்படும்;
வேளாண்மையின்
3. அரசு,
மேம்பாடு.
(a) வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு, இருக்கின்ற வேளாண் நிலங்களைப் பயன்படுத்தவும் மற்றும் வேளாணற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சியில் தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்;
(b) பயிர்கள் மற்றும் பண்ணைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும்;
(c) வேளாண் துறையில் வெள்ள நீர் மேலாண்மை மற்றும் பிற
இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காகவும்;
(d) நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும்
அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்துவதற்காகவும்;மற்றும்
(e) வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன்
மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் வளர்ச்சிக்காகவும்.
தடைசெய்தல். 4. (1) எந்தவொரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாம் இணைப்புப் பட்டியலில் குறித்துரைக்கப்பட்டுள்ள எந்த ஒரு புதிய திட்டத்தையோ அல்லது புதிய செயற்பாட்டையோ மேற்கொள்ளுதல் ஆகாது.
(2) (1) ஆம் உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும்,-
(a) இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது;
(b) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவற்றை பாதித்தலாகாது.
3 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஅதிகார அமைப்பின் அமைத்துருவாக்கம்.
5. (1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும்:-
i. முதலமைச்சர்
- தலைவர்;
ii. துணை முதலமைச்சர் - உறுப்பினர்;
iii. நிதித் துறை அமைச்சர் - உறுப்பினர்;
iv. சட்டத் துறை அமைச்சர் - உறுப்பினர்;
v. வேளாண்மைத்துறை அமைச்சர் - உறுப்பினர்;
vi. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் - உறுப்பினர்;
vii. நகராட்சி நிர்வாகம் மற்றும் - உறுப்பினர்;
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
viii. தொழில் துறை அமைச்சர் - உறுப்பினர்;
ix. ஊரக தொழில் துறை அமைச்சர் - உறுப்பினர்;
x. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் - உறுப்பினர்;
xi. மீன்வளத் துறை அமைச்சர் - உறுப்பினர்;
xii. அரசுத் தலைமைச் செயலாளர் - பதவி வழி உறுப்பினர்;
xiii. வேளாண் உற்பத்தி ஆணையர் - பதவி வழி உறுப்பினர்;
மற்றும் அரசு செயலாளர், செயலாளர்; வேளாண்மைத் துறை
xiv. அரசுச் செயலாளர், நிதித் துறை - பதவி வழி உறுப்பினர்;
xv. அரசுச் செயலாளர், கால்நடை - பதவி வழி உறுப்பினர்; பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை
xvi. அரசுச் செயலாளர், தொழில் துறை - பதவி வழி உறுப்பினர்;
xvii. அரசுச் செயலாளர், ஊரக வளர்ச்சி - பதவி வழி உறுப்பினர்;
மற்றும் ஊராட்சித் துறை
xviii. அரசுச் செயலாளர், சுற்றுச் சூழல் - பதவி வழி உறுப்பினர்;
மற்றும் வனத் துறை
xix. அரசுச் செயலாளர், வீட்டு வசதி - பதவி வழி உறுப்பினர்;
மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
xx. அரசுச் செயலாளர், - பதவி வழி உறுப்பினர்; பொதுப்பணித் துறை
xxi. துணை வேந்தர், தமிழ்நாடு - பதவி வழி உறுப்பினர்;
வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
xxii. அரசால் முன்மொழியப்படலாகும் - உறுப்பினர்கள்;
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை எடுத்துரைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்
xxiii. அரசால் முன்மொழியப்படலாகும் - உறுப்பினர்கள்;
மூன்று விவசாயப் பிரதிநிதிகள்
xxiv. அரசால் முன்மொழியப்படலாகும் - உ று ப் பி ன ர் க ள்;
வேளாண்அறிவியல், தோட்டக்கலை அறிவியல், கால்நடை மற்றும் விலங்கியல் துறையில் ஒவ்வொன்றிலும் ஒரு நிபுணர்4 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (2) அதிகார அமைப்பின் தலைமையிடமானது சென்னையில் இருத்தல்
வேண்டும்.
(3) அதிகார அமைப்பானது கூட்டுரும அமைப்பாக இருத்தல் வேண்டும். தொடர்ந்த நிலைப்பாடும் தனித்த ஓர் இலச்சினையும் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் மேற்சொன்ன பெயரில் தான் வழக்கிடுதலும் வழக்கிடப்படுதலும் வேண்டும்.
அதிகார அமைப்பிற்கு
6. (1) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அவருடைய நியமனத் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் காலம் பதவியிலிருப்பார் மற்றும் அவர் மறுநியமனம் செய்வதற்கு தகுதியுடையவராவர்;
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பணியமர்த்தத்திற்கான வரையறைகள் மற்றும் வரைக்கட்டுகள்.
வரம்புரையாக, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓர் ஆண்டு காலத்திற்கு அல்லது அவரது பதவிக்காலம் காலாவதியாகும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை பதவியிலிருப்பர் மற்றும் மறு நியமனத்திற்கு தகுதியுடையவராவர்.
(2) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் அரசுக்கு முகவரியிட்டு அவருடைய கைப்பட எழுதிய கடிதம் மூலமாக பதவியிலிருந்து விலகலாம். ஆனால் அவருடைய பதவி விலகல் கடிதம் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியிலிருத்தல் வேண்டும்.
(3) நியமனம் செய்யப்பட்ட ஓர் உறுப்பினர் பதவி விலகல், இறப்பு, பதவி நீக்கம், தகுதியிழப்பு அல்லது பிறவாறான வகையில் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாகும் பொழுது அரசு அத்தகைய காலியிடத்தை நிரப்புவதற்காக புதிய உறுப்பினர் ஒருவரை இரண்டு மாதங்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும்.
(4) அரசானது, கீழே குறித்துரைக்கப்பட்ட தகுதியிழப்புகளில் ஏதாவதொன்றினை நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் செய்திருக்கிறாரென்றால் அவரது பதவியிலிருந்து அவரை நீக்கலாம். அதாவது:-
(a) விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராகுதல் அல்லது
(b) குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டு சிறைத்
தண்டனைக்காக தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவரானால்; அல்லது
(c) மனநலம் பாதிக்கப்பட்டவராகுதல் மற்றும் தகுதியுடைய
நீதிமன்றமொன்றினால் அவ்வாறாக விளம்புகை செய்யப்பட்டிருத்தல்.
(5) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்பட்டவாறான அத்தகைய விகிதத்தில் பணி செய்வதற்கான கட்டணத்தை மற்றும் பயணப்படியைப் பெறுவதற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
அதிகார அமைப்பின்
கூட்டங்கள்.
7. (1) அதிகார அமைப்பு தேவைப்படலாகின்றவாறான அத்தகைய நேரத்தில் மற்றும் இடத்தில் கூடுதல் வேண்டும் மற்றும் தலைவரால் தீர்மானிக்கப்படலாகும் நடைமுறைகளின் விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
வரம்புரையாக அதிகார அமைப்பானது குறைந்தபட்சம் வருடத்திற்கு
இரண்டு முறையாவது கூடுதல் வேண்டும்.
(2) தலைவர், அதிகார அமைப்பின் கூட்டத்திற்கு தலைமை வகித்தல்
வேண்டும்.
(3) தலைவர் கலந்து கொள்ள இயலாத நிலையில், கலந்து கொள்ளும் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் ஒருவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார்.
(4) கூட்டத்திற்காக குறைவெண் வரம்பானது அதிகார அமைப்பின்
உறுப்பினர்களில் ஐம்பது விழுக்காடு இருத்தல் வேண்டும்.
5 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(5) அதிகார அமைப்பின் கூட்டங்களின் அறிவிப்பு மற்றும் அதிகார அமைப்பின் அலுவல் நடவடிக்கை தொடர்பான இடம் மற்றும் நடைமுறைகள் தலைவரால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.
8. அதிகார அமைப்பு பின்வரும் செயற்பணிகளை செய்தல் வேண்டும், அதிகார அமைப்பின் செயற்பணிகள்.
அதாவது:-
(a) உணவுப் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்புகளை வளர்ப்பதற்கான
நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
(b) வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பிற்காகவும் மேம்பாட்டிற்காகவும் கொள்கைகளை பரிந்துரைத்தல்;
(c) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பாசனம் மற்றும் வெள்ள
நீர் மேலாண்மைத் திட்டங்களை பரிந்துரைத்தல்;
(d) வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக
தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்;
(e) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் அடிப்படையிலான மற்றும் அது சார்ந்த தொழிலகங்களின் மேம்பாட்டினை எளிதாக்குதல்;
(f) வேளாண்மை மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுக்காக வேளாண் நிலங்களைப் பாதுகாத்து விவசாயப் பொருளாதாரத்திற்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
(g) போதுமான நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், தனியார் நிலங்களில் பண்ணை குட்டைகளை உருவாக்குதல் மற்றும் தடுப்பு அணைகள் போன்ற திறன் மிகுந்த மழைநீர் சேகரிப்பு முறைகளின் மூலம் நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்காக நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்;
(h) வேளாண்மையில் குறிப்பாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசனம் உள்ளடங்கலாக திறன் மிகுந்த நீர் பயன்பாட்டிற்காக நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
(i) ஒருங்கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரமிடுதல், மண் சோதனை அடிப்படையிலான உரப் பயன்பாடு, மாற்று பயிர் சாகுபடி, நெல் தரிசு நிலங்களில் பயறு சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை நடைமுறைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றினால் மண்ணின் வளத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
(j) பாசனம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக சூரிய சக்தியை திறம்பட பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
(k) பண்ணை வருமானத்தை அதிகரிக்க உழவர் சந்தைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான புற விற்பனையகம் போன்ற வேளாண் விளை பொருட்களின் நேரடி விற்பனை குறித்த பரிந்துரைகளை வழங்குதல்;
(l) வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய துறைகளுக்குத் தொடர்பான இடுபொருட்களை வழங்குதல் மற்றும் வேளாண் விளைபொருட்களை பதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவித்தல்;
(m) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் உணவு பூங்காக்கள் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகள் உருவாக்குவதை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வழிகளை கண்டுபிடித்தல்;
(n) வேளாண் நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் இயந்திரங்களின் உகந்த பயன்பாட்டை ஊக்குவித்தல்;
(o) வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு பங்களிப்பதற்கான காரணிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளின் விளைவு குறித்து பல்வேறு ஆய்வுகளைத் மேற்கொள்ளுதல்;
6 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(p) வேளாண் தொழிலாளர்களுக்கு போதுமான, நிலையான
வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை பரிந்துரைத்தல்;
(q) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் காடு வளர்ப்பு
மற்றும் சமூகக் காடு வளர்ப்பினை ஊக்குவித்தல்;
(r) மேற்சொன்ன வேளாண் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை
வகுத்தல் மற்றும் அத்தகைய திட்டங்களுக்காக நிதி திரட்டுதல்; மற்றும்
(s) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற செயல்பாடுகளைச்
செய்தல்.
மாவட்ட அளவிலான
9. (1) அதிகார அமைப்பிற்கு உதவுவதற்காக பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட ஒரு மாவட்ட அளவிலான குழு இருத்தல் வேண்டும், அதாவது:-
குழுவின் அமைத்துருவாக்கம்.
(a) மாவட்ட ஆட்சியர் - பதவி வழித் தலைவர்;
(b) வேளாண்மை துறை இணை - பதவி வழி
இயக்குநர்
ஒருங்கிணைப்பாளர்;
(c) கால்நடை பராமரிப்புத் துறை - பதவி வழி உறுப்பினர்;
இணை இயக்குநர்
(d) தோட்டக்கலைத் துறை துணை - பதவி வழி உறுப்பினர்;
இயக்குநர்
(e) வேளாண்மை விற்பனை மற்றும் - பதவி வழி உறுப்பினர்;
வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர்
(f) மீன்வளத் துறை துணை - பதவி வழி உறுப்பினர்;
இயக்குநர்
(g) மாவட்ட வன அலுவலர் - பதவி வழி உறுப்பினர்;
(h) செயற்பொறியாளர் (வேளாண்மை - பதவி வழி உறுப்பினர்;
பொறியியல்)
(i) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் - பதவி வழி உறுப்பினர்;
(j) செயற்பொறியாளர், நீர்வள ஆதார - பதவி வழி உறுப்பினர்;
அமைப்பு
(k) மேற்பார்வை பொறியாளர், - பதவி வழி உறுப்பினர்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
(l) மாவட்ட ஆட்சியாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளின்
இரண்டு பிரதிநிதிகள்
(2) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் அவர் நியமனம்
செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று வருட காலத்திற்கு பதவியில் இருப்பார் மற்றும் அவர் மறு நியமனம் பெற தகுதியுடையவர் ஆவார்.
(3) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர், அவரது கைப்பட மாவட்ட ஆட்சியருக்கு முகவரியிட்டு எழுதிய கடிதம் மூலமாக பதவியிலிருந்து விலகலாம். ஆனால் அவருடைய பதவிவிலகல் கடிதம் மாவட்ட ஆட்சியரால் ஏற்றுக் கொள்ளப்படும் வரை அவர் தொடர்ந்து பதவியில் இருத்தல் வேண்டும்.
7 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(4) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் பதவி விலகல், இறப்பு, பதவி நீக்கம், தகுதி நீக்கம் அல்லது பிறவாறான வகையில் உறுப்பினர் ஒருவரின் பதவி காலியாகும் போது, மாவட்ட ஆட்சியர் அத்தகைய காலியிடத்தை நிரப்ப புதிய உறுப்பினர் ஒருவரை இரண்டு மாதங்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும்.
(5) கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியின்மைக்கு அவர் உள்ளானால், மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரை அவருடைய பதவியிலிருந்து நீக்கலாம், அதாவது:-
(a) விடுவிக்கப்படாத நொடிப்பு நிலையராக
ஆகியிருக்கிறாரென்றால்;
(b) குற்றம் ஒன்றிற்காக தண்டிக்கப்பட்டுள்ளார் மற்றும் சிறைத் தண்டனைக்காக தண்டனைத் தீர்ப்பினைப் பெற்றவராக இருக்கிறாரென்றால்; அல்லது
(c) மனநிலை பாதிக்கப்பட்டவராக மற்றும் தகுதியுடைய
நீதிமன்றமொன்றினால் அவ்வாறு அறிவிக்கப்பட்டு இருக்கிறாரென்றால்
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் வகுத்துரைக்கப்படலாகிறவாறான அத்தகைய விகிதத்தில் அமர்வு கட்டணம் மற்றும் பயணப்படியைப் பெறுவதற்கு தகுதியுடையவராக இருப்பர்.
மாவட்ட அளவிலான
குழுவின் செயல்பாடுகள்.
10. (1) மாவட்ட அளவிலான குழுவானது, அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை நிறைவேற்றுதல் வேண்டும் மற்றும் மாவட்டத்தில் அதன் செயல்பாடுகளை நிறைவேற்ற அதிகார அமைப்பிற்கு உதவ வேண்டும்.
(2) மாவட்ட அளவிலான குழுவானது, அதன் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் தேவையானதாகக் கருதப்படும் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் கருத்தினை வேண்டலாம்.
அதிகார அமைப்பின் 11. (1) தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு நிதியம்
நிதியம்.
என்றழைக்கப்படும் நிதியம் ஒன்று அதிகார அமைப்பிற்கு இருத்தல் வேண்டும்.
(2) மாநில அரசுத் தொகுப்பு நிதியிலிருந்து அரசினால் செலுத்தப்படும்
அனைத்து பணங்களும் நிதியத்தில் வரவு வைக்கப்பட வேண்டும்.
(3) அதிகார அமைப்பினால் பெறப்பட்ட அனைத்து பணங்களும் நேர்விற்கேற்ப பாரத ஸ்டேட் வங்கி அல்லது ஏதேனும் பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் வைப்பீடு செய்யப்பட வேண்டும்.
செலவினம்.
12. அதிகார அமைப்பின் கீழ் பணியாற்றும் பணியாளரின் எதிர்பாராச் செலவினம் உள்பட சம்பளங்கள் மற்றும் படிகளுக்காக அதிகார அமைப்பினால் உட்படுத்தப்படும் செலவினம் நிதியத்திலிருந்து ஈடுசெய்யப்படுதல் வேண்டும்.
தணிக்கை.
13. (1) வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும்
அதிகார அமைப்பின் கணக்குகள் பேணப்பட வேண்டும்.
(2) அதிகார அமைப்பானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் முறையிலும் கணக்குகளின் ஆண்டறிக்கையை தயார் செய்ய வேண்டும்.
மையச்சட்டம் 18/2013
(3) 2013 ஆம் ஆண்டு நிறுமங்கள் சட்டத்தின் கீழ் ஒரு நிறுமத்தின் தணிக்கையாளராக செயல்பட தகுதியான நபர் ஒருவரால் ஆண்டிற்கு ஒரு முறை அதிகார அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும்.
Ex-IV-1-74A—3 Ex-IV-1-74A—3a Ex-IV-1-74A—4 Ex-IV-1-74A—4a8 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு (4) தணிக்கையாளரால் சான்றளிக்கப்பட்ட அதிகார அமைப்பின் கணக்குகள், தணிக்கை அறிக்கையுடனும், அதன் மீதான அதிகார அமைப்பின் கருத்துருக்களுடனும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய காலத்திற்குள் அரசிற்கு அனுப்பப்பட வேண்டும்.
(5) குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய காலத்திற்குள் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தலாம் மற்றும் அத்தகைய பணிப்புரைகளுக்கு, அதிகார அமைப்பானது உடன்படுதல் வேண்டும். அரசு, ஆணையினால், தீர்வு காணும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தகைய நடவடிக்கையை எடுக்குமாறு அதிகார அமைப்பிற்கு பணிப்புரை பிறப்பிக்கலாம்.
ஆண்டறிக்கை. 14. (1) அதிகார அமைப்பானது, ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிற்குப் பின்பு இயன்ற வரை விரைவில் அத்தகைய தேதிக்கு முன்பும் பரிந்துரைக்கப்பட்ட அத்தகைய வடிவத்திலும் முந்தைய ஆண்டில் அதன் செயல்பாடுகள் குறித்த கணக்கினைத் தெரிவிக்கும் ஓர் அறிக்கை மற்றும் நடப்பு நிதியாண்டில் அதிகார அமைப்பினால் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால், அந்த நடவடிக்கைக் கணக்கைப் பற்றிய அறிக்கை ஆகியவற்றை அரசுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) அரசானது, (1) ஆம் உட்பிரிவின் கீழ் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்பு இயன்றவரை விரைவில் அத்தகைய ஒவ்வொரு அறிக்கையையும் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தல் வேண்டும்.
அதிகார அமைப்பு
15. அதிகார அமைப்பு அல்லது மாவட்ட அளவிலான குழுவின் செயல் அல்லது நடவடிக்கை எதுவும், அதன் உறுப்பினர்களுக்கிடையே காலியிடம் எதுவும் இருக்கிறது அல்லது அதன் அமைத்துருவாக்கத்தில் குறைபாடு எதுவும் இருக்கிறது என்ற காரணத்தால் மட்டுமே செல்லத்தகாததாக ஆக்குதல் கூடாது.
அல்லது மாவட்ட அளவிலான குழுவின் நடவடிக்கைகளை செல்லத்தகாதது ஆக்குதல் கூடாது.
தண்டத்தொகை. 16. 4-ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிற எவரொருவரும், ஐந்து ஆண்டுகள் வரை நீடிக்கலாகும் ஆனால் ஆறு மாதங்களுக்கு குறையாத ஒரு கால அளவிற்கு சிறைத் தண்டனையும் மற்றும் ஐம்பது லட்சம் ரூபாய் வரை நீடிக்கலாகும், ஆனால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத மற்றும் தொடர்ச்சியான மீறலைப் பொறுத்த வகையில் கூடுதல் அபராதத்துடன், அத்தகைய மீறலின் ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தும் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
நிறுமங்களால்
செய்யப்படும் குற்றச்செயல்கள்.
17. (1) நிறுமம் ஒன்றினால் இந்தச் சட்டத்தின் படியான குற்றம் ஒன்று செய்யப்படுகிறவிடத்து குற்றத்தை செய்த நேரத்தில் இருந்த நபர் ஒவ்வொருவரும் மற்றும் அதற்கு பொறுப்பாக இருந்துள்ள நபரும் மற்றும் நிறுமத்தின் அலுவலரால் பணிகளைச் செய்வதற்கான அலுவலர் ஒவ்வொருவரும் அதே போல் நிறுமமும் அந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் அவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் அதன்படி தண்டிப்பதற்கும் கட்டுப்பாடுடையதாக இருத்தல் வேண்டும்.
ஆனால் இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும் அத்தகைய நபர் எவரும் அந்தக் குற்றம் அவருடைய அறிவுக்கு எட்டாத வகையில் நடைபெற்றிருக்கிறவிடத்து அல்லது அத்தகைய குற்றம் நடைபெறாத வண்ணம் அனைத்து உரிய நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருக்கிறார் என்று நிரூபிக்கிறாரென்றால் அவரை தண்டனைக்கு உள்ளாக்குதல் ஆகாது.
(2) உட்பிரிவு (1) ல் அடங்கியிருப்பது எது எவ்வாறிருப்பின் இந்தச் சட்டத்தின் படியான குற்றம் ஒன்று நிறுமத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் எவரும் பங்கு கொண்டிருப்பதன் பேரில் அவர் இசைவுடன் அல்லது மறைமுக ஆதரவுடன் அல்லது கவனமின்மை இருக்கத்தக்கதாக அந்தக் குற்றம் செய்யப்பட்டிருக்கிறதென்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதென்றால், அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் குற்றவாளி என்று கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு மற்றும் அதனடிப்படையில் தண்டிக்கப்படுதலும் வேண்டும்.
9 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுவிளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக,-
(a) "நிறுமம்" என்பது கூட்டுருமம் எதுவும் மற்றும் ஒரு நிறுவகம் அல்லது
பிற தனி நபர்களின் கழகம் என்று பொருள்படும்; மற்றும்
(b) ஒரு நிறுவகம் தொடர்பாக "இயக்குநர்" என்பது நிறுவகத்திலுள்ள
ஒரு கூட்டாளி என்று பொருள்படும்.
நுழைதல், தேடுதல்
மற்றும் பற்றுகைக்கான அதிகாரம்.
18. (1) வருவாய்த் துறையின் வருவாய் கோட்டாட்சியர் பதவிக்குக் குறையாத எந்தவொரு அலுவலரும் அல்லது இது தொடர்பாக அரசால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவரும் அல்லது துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத காவல்துறை அலுவலர் எவரும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக, சட்டத்தின் வகைமுறைகளின் இணக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம்; மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாகக் கருதப்படும் எந்தவொரு பொருள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம்; மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பானதொரு அறிக்கையை, நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள், அந்தப் பகுதியின் அதிகார வரம்பைக் கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவுக்கு அறிவிப்பு செய்தல் வேண்டும்.
மையச்சட்டம் 2/1974.
(2) இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்துத் தேடுதல்களும், 1972 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டத்தின் வகைமுறைகளுக்கிணங்கிய வகையில் செய்யப்படுதல் வேண்டும்.
பொருள், இயந்திரங்கள், 19. (1) 18 ஆம் பிரிவின் கீழ் கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின்னர், மாவட்ட அளவிலான குழுவானது, தான் பொருத்தமெனக் கருதினால், கைப்பற்றுதல் செய்த பொருள்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம்.
உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தல்.
(2)உரிமையாளருக்கு விசாரணைக்கான வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டாலன்றி, மாவட்ட அளவிலான குழுவினால் (1) ஆம் உட்பிரிவின் கீழ் பறிமுதலுக்கான ஆணை பிறப்பிக்கப்படுதல் கூடாது.
(3) (2) ஆம் உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்பில் ஏதேனும் குறைபாடு அல்லது முறைகேடு இருக்கின்ற, வெறும் காரணத்தினால், வகைமுறைகள் போதிய அளவு பின்பற்றப்பட்டிருந்தால், (1) ஆம் உட்பிரிவின் கீழ் பறிமுதல் செய்வதற்கான ஆணையானது, செல்லா நிலையது ஆகாது.
மீதூர்ந்தியங்கும் தன்மை.
20. இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் அப்போதைக்கு நடைமுறையிலுள்ள மாநிலச் சட்டம் எதிலும், இதற்கு முரணாக என்ன அடங்கியிருந்த போதிலும், செயல்பாட்டிற்கு வருதல் வேண்டும்.
நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு.
21. உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கைகள் எதுவும், இந்தச் சட்டத்தின் கீழ் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட எதற்காகவும் அதிகார அமைப்பு, மாவட்ட அளவிலான குழு அல்லது அதன் உறுப்பினர்கள் அல்லது ஏதேனும் அலுவலர் அல்லது அதிகார அமைப்பின் பணியாளருக்கெதிராக தொடரப்படுதல் ஆகாது.
இணைப்புப் பட்டியல்களை
திருத்துவதற்கான அதிகாரம்.
22. (1) அரசு, அறிவிக்கை வாயிலாக முதலாம் இணைப்புப் பட்டியலிலுள்ள எந்தவொரு பகுதியையும் சேர்க்கலாம் அல்லது விட்டுவிடலாம், மற்றும் அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டால், அதன்படி முதலாம் அட்டவணையானது திருத்தம் செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.
10 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு(2) அரசானது, அதிகார அமைப்பின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை வாயிலாக, இரண்டாவது அட்டவணையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாய முன்னேற்றங்களை மிகவும் பாதிக்கும் வேறு எந்த திட்டத்தையும் சேர்க்கலாம் அல்லது விட்டுவிடலாம் மற்றும் அத்தகைய அறிவிக்கை வெளியிடப்பட்டால் அதன்படி இரண்டாம் அட்டவணையானது திருத்தம் செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.
வரம்புரையாக, அதிகார அமைப்பானது வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய உறுப்பினர்களையுடைய தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அத்தகைய பரிந்துரைகளைச் செய்யலாம்.
விதிகளைச்
23. (1) அரசு, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்குச் செயல்திறம்
அளிப்பதற்காக, விதிகளைச் செய்யலாம்.
செய்வதற்கான அதிகாரம்.
(2) (a) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின் படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் அவை குறிப்பிட்டதொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(3) இந்தச் சட்டத்தின் கீழ், அரசால் செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அடுத்தக் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்பு அத்தகைய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏதொன்றிலும் மாறுதல் எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அந்த விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது போதல் வேண்டும். எனினும் அத்தகைய மாற்றம் அல்லது நீக்கம் எதுவும் அந்த விதி அறிவிக்கை அல்லது ஆணையின்படி முன்னதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமின்றி இருத்தல் வேண்டும்.
இடர்பாடுகளை
நீக்குவதற்கான அதிகாரம்.
24. இந்தச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயல்படுத்துவதில் இடர்ப்பாடு எதுவும் எழுமானால், அரசு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் ஆணை ஒன்றின் மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத் தேவையானதும் உகந்ததுமான அத்தகைய வகைமுறைகளைச் செய்யலாம்.
வரம்புரையாக, இந்தப் பிரிவின் கீழ் ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் தொடக்கத் தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைந்த பின்னர் பிறப்பிக்கப்படுதல் ஆகாது.
11 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுமுதலாம் இணைப்புப் பட்டியல்
[2(h) மற்றும் 22(1) ஆம் பிரிவுகளைக் காண்க]
பகுதி
1. தஞ்சாவூர் மாவட்டம்.
2. திருவாரூர் மாவட்டம்.
3. நாகப்பட்டினம் மாவட்டம்.
4. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள்.
5. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள்.
12 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுஇரண்டாம் இணைப்புப் பட்டியல்.
[4(1) மற்றும் 22 (2) ஆம் பிரிவுகளைக் காண்க.]
திட்டங்கள்.
1. துத்தநாக உருக்காலை.
2. இரும்புத் தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை .
3. செம்பு உருக்காலை.
4. அலுமினியம் உருக்காலை.
5. விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல்.
6. தோல் பதனிடுதல்.
7. எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கலான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல்.
8. கப்பல் உடைக்கும் தொழிற்சாலை.
13 தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடுநோக்க காரண விளக்கவுரை.
காவேரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்படுகிறது. இது, மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது, விவசாயிகளுக்கும் பண்ணைத் தொழிலாளர்களுக்கும், நாகரீகமான வாழ்க்கைத் தரத்தினை உறுதி செய்கின்றது. சமீப கால ஆண்டுகளில், சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள், இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து, மாநில உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில், வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு, சில நடவடிக்கைகளை தடைசெய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்டக் குழு ஒன்றினை இச்சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது.
இச்சட்ட முன்வடிவு மேற்சொன்ன நோக்கங்களை எய்த விழைகிறது.
இரா. துரைக்கண்ணு, வேளாண்மைத்துறை அமைச்சர்.
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.