| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 9] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 26, 2020 மாசி 14, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு
அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை
அறிவிக்கைஅறிவிக்கை
[அரசாணை (நிலை) எண் 08, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (H1)த் துறை, 7 ஜனவரி 2020.] 1961-ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 40-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) மற்றும் (2) ஆகிய உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1965 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் விதிகளில், பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார். இதன் வரைவு மேற்சொன்ன சட்டத்தின் 40 ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவில் கோரியுள்ளவாறு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தங்கள்திருத்தங்கள்
மேற்சொன்ன விதிகளில், -
(1) விதி 4-இல்,-
(a) துணை விதி (1)-இல், ''தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, ''மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)'' என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்;
(b) துணை விதி (5)-இல், ''தலைமை ஆய்வாளர்'' என்ற சொற்றொடர் இடம்பெறுகிற இடங்களிளெல்லாம் அதற்குப்பதிலாக, "மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்;
(2) விதி (5)-இன், துணை விதி (2)-இல் ''தலைமை ஆய்வாளர் என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மோட்டார் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டின் அதிகாரவரம்பெல்லையைக் கொண்டுள்ள சம்பந்தப்பட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்;
(3) விதி (7)-இன், துணை விதி (1)-இல் ''தலைமை ஆய்வாளர் அல்லது" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(4) விதி (8)-இல், (2)-ஆம் துணை விதியின் இரண்டாவது வரம்பு நிபந்தனையில் ''தலைமை ஆய்வாளர் அல்லது" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(5) விதி (11)-இல்-
(a) துணை விதி (1)-இல் ''தலைமை ஆய்வாளர் மற்றும்" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
(b) துணை விதி (2)-இல் ''தலைமை ஆய்வாளர் அல்லது" என்ற சொற்றொடர் விட்டுவிடப்பட வேண்டும்;
2(7) படிவம் எண். II-க்குப்பதிலாக, பின்வரும் படிவம் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
அதாவது:-
"படிவம் எண்.II
[5-ஆம் விதியைக் காண்க]
1961 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (3) உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்
படிவம்
பதிவு எண். கட்டணம் ரூ.
1961 ஆம் ஆண்டு மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1961) விதித்துறைகளுக்கும் அதன் கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்கும் உட்பட்டு அந்த ஆண்டில் ஏதாவது ஒரு நாளில் .............................. க்கும் மேற்படாத நபர்களை பணியமர்த்தி, .................... என அழைக்கப்படுகிற மோட்டார் போக்குவரத்து சேவைகளை இயக்குவதற்கு.............(தொழிலாளரின் பெயர்) என்பவருக்கு பதிவுச் சான்றிதழ் இதனால் வழங்கப்படுகிறது.
இதனால் வழங்கப்பட்ட இந்தப் பதிவுச் சான்றிதழ், அடுத்த இரண்டு ஆங்கில ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும்.
நாள்:
தொழிலாளர் துறை உதவி ஆணையர் (செயலாக்கம்)
புதுப்பித்தல்.
புதுப்பிப்பு நாள் செலுத்தப்பட்ட கட்டண காலாவதி ஆகும் நாள் தொழிலாளர் துறை
தொகை
உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4)
திருத்தங்கள்.
திருத்தம் செய்யப்பட்ட திருத்தத்தின் தன்மை செலுத்தப்பட்ட கட்டண
தொழிலாளர் துறை நாள்
தொகை மற்றும் நாள்
உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4)
மாற்றல்.
மாற்றல் நாள்
மாற்றல் செய்பவரின் பெயர்
மாற்றலுக்குரியவரின்
பெயர்
மாற்றல் செய்வதற்கான காரணம்
செலுத்தப்பட்ட கட்டண தொகை மற்றும் நாள்
தொழிலாளர் துறை உதவி ஆணையரின் (செயலாக்கம்) கையொப்பம் (1) (2) (3) (4) (5) (6)
முகமது நசிமுத்தின்,முகமது நசிமுத்தின், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள், ந. அருள், இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.