[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 6.40 காசு[விலை : ரூ. 6.40 காசு
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 9]
சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 26, 2020 மாசி 14, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051
பகுதி IV—பிரிவு 2 இன் இணைப்பு
2019 டிசம்பர் 31 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும்
அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 12/2019.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு அவரசச் சட்டம்.
தமிழ்நாடு சட்டமன்றமானது, அமர்வில் இல்லாதிருப்பதால் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் தற்போதுள்ள சூழ்நிலைகள் இதில் இதன்பின்பு காணப்படுகின்ற நோக்கங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக அவருக்காக அவசியமானதாக இருப்பதாக அவர் மனநிறைவடைந்திருப்பதால்;
தற்போது, ஆகையால் அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின் (1)-ஆம் கூறால் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் ஈங்கிதனால் பின்வரும் அவசரச் சட்டத்தைப் பிரகடனம் செய்கிறார்:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்த அவசரச் சட்டம், 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்
தொடக்கம்.
(ஐந்தாம் திருத்த) அவரசச் சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
261-A-ஆம் பிரிவுக் தமிழ்நாடு சட்டம்
கான திருத்தம். 21/1994.
2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் 261-A-ஆம் பிரிவில், "2019-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள்வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020-ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்பட வேண்டும்.
DTP-IV-2- (T Sup)—9
12
விளக்கவுரை
2016 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4-ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை மனு எண் 33984/2016 இல் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மூன்றடுக்கு ஊராட்சிகளில் கூறப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலம், அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள்வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
2. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ஆம் தேதியிட்ட நீதிப்பேராணை (உரிமையியல்) மனு எண் 1443/2019 உடனிணைந்த, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 ஆம் தேதியிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்கள்.5467- 5469/2017 இல் இடைக்கால மனு எண். 182868/2019 இல் மாண்புமிகு உச்சநீதிமன்றமானது, மற்றவற்றுடன் மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியகை நீங்கலாக கிராமம், இடைப்பட்ட மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து ஊராட்சிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு எதிர் மனுதாரர்-அதிகார அமைப்புகளுக்கு கட்டளையிட்டது. அதற்கிணங்கிய வகையில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்யவும், கிராம ஊராட்சிகளின் தலைவர் பதவிக்காகவும் தேர்தல் அட்டவணையை அறிவித்தது.
3. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமானது, கிராமப்புற உள்ளாட்சி அமைபுகளுக்கான வழக்கமான தேர்தல்களை அறிவித்த போதிலும், தேர்தல்களுக்கான அனைத்து செயல்பாடுகளும் 2020 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 11 ஆம் நாளன்றே முடிக்கப்படுதல் வேண்டும். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைப் பொறுத்த வரையில் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் தொகுதி மறு வரையறை முடிவடைந்த பின்பு மற்றும் அனைத்து மூன்று அடுக்கு ஊராட்சிகளில் இடஒதுக்கீடுகள் மற்றும் பதவிகள் ஆகியவை அறிவிப்பு செய்யப்பட வேண்டும் மற்றும் அதன்பின்பு மட்டுமே, இந்திய உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்கியபடி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வழக்கமான தேர்தல்கள் நடத்தப்படும்.
4. மேற்கண்ட சூழ்நிலைகளில், தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் தேதியன்று முடிவடைகிறது. அதன்காரணமாக தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அல்லது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல்களுக்குப் பின்பு நடத்தப்படும் கூட்டம் வரை, இதில் எது முந்தயதோ அது வரையில் நீட்டிப்பதற்காக, 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 21/1994) 261-A-ஆம் பிரிவினை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.
5. இந்த அவசரச் சட்டமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு) துறை.
32019 டிசம்பர் 31 அன்று ஆளுநரால் பிரகடனம் செய்யப்பட்ட பின்வரும்
அவசரச் சட்டமானது ஈங்கிதனால் பொதுத் தகவலுக்காக வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 13/2019.
தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்துவதற்கானதோர் அவசரச் சட்டம்.
மாநிலச் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாததாலும், இதன் பின்பு காணுகின்ற நோக்கங்களுக்காகத் தான் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதைத் தேவையானதாக்குகின்ற சூழ்நிலைகள் இருந்து வருகின்றன என்று தமிழ்நாடு ஆளுநர் தெளிவுறக் காண்பதாலும்;
எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 213 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, ஆளுநர் பின்வரும் அவசரச் சட்டத்தை இப்போது இதன்மூலம் பிறப்பிக்கிறார்:-
பகுதி-I.
முன்னுரையாக.
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்த அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள்
தமிழ்நாடு சட்டம் IV/1919
தொடக்கம்.
(ஆறாம் திருத்த) அவசரச்சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, உடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
பகுதி II.
1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு 414-B IV/1919.
க்கான திருத்தம்.
2. 1919 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தின் 414-B பிரிவில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி III.
1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 375-B V/1920.
க்கான திருத்தம்.
3. 1920 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் பிரிவு 375-B இல் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி IV.
1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் பிரிவு: 510-AAA
15/1971.
விற்கான திருத்தம்.
4. 1971 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி திருத்தச் சட்டத்தின் பிரிவு 510-AAA-ல் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி V.
1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சிச் சட்டத்திற்கான திருத்தம்.
511-AAA விற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
25/1981.
5. 1981 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி திருத்தச் சட்டத்தின் 511-AAA-ல் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
4பகுதி VI.
1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் பிரிவு 10-A விற்கான
27/1994.
திருத்தம்.
6. 1994 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10-A வில் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி VII.
1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் பிரிவு 10-A விற்கான
28/1994.
திருத்தம்.
7. 1994 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10-A வில் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி VIII.
1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் பிரிவு 10-A விற்கான
29/1994.
திருத்தம்.
8. 1994 ஆம் ஆண்டு சேலம் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10-(A) வில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி IX.
2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம் பிரிவு 9-A விற்கான
7/2008.
திருத்தம்.
9. 2008 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 9-(A)வில் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி X.
2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
பிரிவு: 9-A - விற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
8/2008.
10. 2008 ஆம் ஆண்டு ஈரோடு மாநகராட்சி சட்டத்தின் 9-A வில் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XI.
2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
பிரிவு: 9-A - விற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
26/2008.
11. 2008 ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 9-A வில் ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XII.
2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
பிரிவு: 9-A - விற்கான
தமிழ்நாடு சட்டம் திருத்தம்.
27/2008.
12. 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 9-A வில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
5பகுதி XIII.
2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 9-A - விற்கான 24/2013.
திருத்தம்.
13. 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 9-A வில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XIV.
2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி (திருத்தச் ) சட்டம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 9-A - விற்கான 25/2013.
திருத்தம்.
14. 2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 9-(A) வில், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XV.
2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 10 விற்கான 10/2019.
திருத்தம்.
15. 2019 ஆம் ஆண்டு ஓசூர் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10ல் உள்ள உட்பிரிவு (4)ல், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XVI.
2019 ஆம் ஆண்டு நாகர்கோயில் மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 10 விற்கான 11/2019.
திருத்தம்.
16. 2019 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10ல் உள்ள உட்பிரிவு (4)ல், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
பகுதி XVII.
2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சி சட்டத்திற்கான திருத்தம்.
தமிழ்நாடு சட்டம்
பிரிவு: 10 விற்கான 24/2019.
திருத்தம்.
17. 2019 ஆம் ஆண்டு ஆவடி மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 10ல் உள்ள உட்பிரிவு (4)ல், ''2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் வரை" என்ற சொற்றொடர் அமைக்கப்படுதல் வேண்டும்.
6விளக்கவுரை
சென்னை உயர்நீதிமன்றம், நீதிப்பேராணை மனு எண் 33984/2016-ல் 04-10-2016 தேதியிட்ட ஆணைக்கிணங்க பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பேரூராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் மேற்சொன்ன தனி அலுவலர்களின் பதவிக்கான பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, இறுதியாக 31-12-2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. அண்மையில், ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்ட 19-11-2019 தேதியிட்ட 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சியச் சட்டங்கள் (ஐந்தாம் திருத்த) அவசரச் சட்டமானது (தமிழ்நாடு அவசரச் சட்டம் 08/2019), மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வகை செய்துள்ளது.
3. மேற்குறிப்பிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழக்கமான தேர்தலை நடத்துவதற்காக தேவைப்படும் அனைத்து சட்டப்படியான மற்றும் சட்டப்படி அல்லாத படிவங்களை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும் நகர்ப்புற தேர்தல் ஏடுகள் மறு அச்சு செய்யப்படவும் வேண்டும்.
மேற்சொன்னதன் காரணமாக, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தினால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடான பணிகளை முடிப்பதற்காக, கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
4. மேற்கூறப்பட்ட சூழ்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலமானது 2019 டிசம்பர் 31 அன்றுடன் முடியவிருந்தது ஆதலால் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020 ஜூன் 30 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு அல்லது சாதாரண தேர்தல்களுக்கு பின்பு மன்றத்தின் முதலாம் கூட்டம் நடைபெறும் வரையில் இவற்றில் எது முந்தியதோ அது வரையில் நீட்டிப்பதற்கு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தொடர்பான சட்டங்களை திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.
5. இந்த அவசரச் சட்டமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ),
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
க.நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ்ப்பிரிவு) துறை.
7பின்வரும் அவசரச்சட்டமானது, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது பொதுத் தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:-
தமிழ்நாடு அவசரச்சட்ட எண் 10/2019.
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்
சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்குமானதோர் அவசரச் சட்டம்.
மாநிலச் சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறாததாலும், இதன் பின்பு காணுகின்ற நோக்கங்களுக்காகத் தாம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதைத் தேவையானதாக்குகின்ற சூழ்நிலைகள் இருந்து வருகின்றன என்ற தமிழ்நாடு ஆளுநர் தெளிவுறக் காண்பதாலும்;
எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 213 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, ஆளுநர் பின்வரும் அவசரச் சட்டத்தை இப்போது இதன் மூலம் பிறப்பிக்கிறார்:-
குறுந்தலைப்பு மற்றும் 1. (1) இந்த அவசரச் சட்டம், 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும்
தொடக்கம்.
சேவைகள் வரி (திருத்த) அவசரச்சட்டம் என்று வழங்கப்பெறும்.
(2) இது, பிரிவு 13 ஆனது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 1 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் இந்த அவசரச் சட்டத்தின் எஞ்சியுள்ள வகைமுறைகள் அனைத்தும் மாநில அரசினால் அறிவிக்கை வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
2 ஆம் பிரிவிற்கானத் 19/2017.
திருத்தம்.
2. 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவில், (4) ஆம் கூறில், "முன்னதாகத் தீர்மானிக்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" எனும் சொற்றொடருக்குப் பின்பு "முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" எனும் சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்.
3. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில்,-
10 ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவின் இரண்டாம் வரம்புரைக்குப் பின்பு பின்வரும்
விளக்கமானது புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"விளக்கம்.- இரண்டாம் வரம்புரையின் நோக்கத்திற்காக, வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விலக்கு மதிப்பு, லாபம் அல்லது தள்ளுபடி வாயிலான சலுகைகள் குறிப்பிடப்படுவதால் ஒரு மாநிலத்தின் வருவாயின் மதிப்பைத் தீர்மானிக்க அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுதல் ஆகாது."
(2) (2) ஆம் உட்பிரிவில்,-
(a) (d) கூறில், இறுதியாக வருகின்ற "மற்றும்" எனும் சொல்லை
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(b) (C) கூறில் "மன்றம்" எனும் சொல்லுக்குப் பதிலாக "மன்றம் மற்றும்"
எனும் சொற்றொடரானது மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (e) கூறிற்குப் பின்பு பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும்.
அவையாவன:-
"(f) அவர் ஒரு தற்செயல் வரிவிதிக்கத்தக்க நபராகவோ அல்லது ஒரு
குடியிராத வரி விதிக்கத்தக்க நபராகவோ இல்லாதிருத்தல்.";
(3) (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:-
8"(2A) இந்தச் சட்டத்தில் முரண்பாடாக கூறப்பட்டுள்ள எது எவ்வாறிருப்பினும், 9 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின் வகைமுறைகளுக்குட்பட்டு, பதிவு செய்யப்பட்ட நபர், (1) ஆம் மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளின் கீழ் வரி செலுத்தத் தகுதியானவர் அல்ல, ஆனால் மாநிலத்தின் வருவாயில் மூன்று விழுக்காட்டிற்கு மிகாமல் அத்தகைய வகுத்துரைக்கப்பட்ட வீதம் கணக்கிடப்பட்ட வரித் தொகையை 9 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் வரியை செலுத்துவதற்குத் தகுதியில்லாதவரால் செலுத்தப்பட வேண்டிய வரிக்குப் பதிலாக, ஒருவருடைய மொத்த வருவாய் முந்தைய நிதி ஆண்டில் ஐம்பது லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்-
(a) இந்தச் சட்டத்தின் கீழ் வரிவிதிக்கத்தகாத சரக்குகள் அல்லது
சேவைகள் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர் இல்லை எனில்;
(b) எந்த ஒரு மாநிலங்களுக்கிடையேயான வெளிப்புற சரக்குகள் அல்லது
சேவைகள் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர் இல்லை எனில்;
(c) 52 ஆம் பிரிவின் கீழ் மூலத்தில் வரி வசூலிக்க வேண்டிய ஒரு மின்னனு வர்த்தக இயக்குபவர் மூலம் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர் இல்லை எனில்;
(d) மன்றத்தின் பரிந்துரையின் பேரில் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட அத்தகைய சரக்குகளின் உற்பத்தியாளர் அல்லது அத்தகைய சேவைகளை வழங்குபவர் இல்லை எனில்; மற்றும்
(e) தற்செயலாக விதிக்கத்தக்க நபரோ அல்லது குடியிராத வரி விதிக்கத்தக்க நபரோ அல்லாதவர் இல்லை எனில்; வரி செலுத்தத் தகுதியானவர் ஆவார்.
மையச்சட்டம் 43/1961 வரம்புரையாக, ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நபர்கள் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டதின் கீழ் வழங்கப்பட்ட ஒரே நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட நபர் அனைவரும் இந்த உட்பிரிவின் கீழ் வரி செலுத்தத் தேர்வு செய்தாலன்றி, பதிவு செய்யப்பட்ட நபர் இந்த உட்பிரிவின் கீழ் திட்டத்தைத் தேர்வு செய்ய தகுதியற்றவராக இருக்கமாட்டார்.";
(4) (3) ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் "(1) ஆம் உட்பிரிவின் கீழ்" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது (2-A) உட்பிரிவு நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(5) (4) ஆம் உட்பிரிவில், "(1) ஆம் உட்பிரிவின் " என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது (2-A) உட்பிரிவு நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(6) (5) ஆம் உட்பிரிவில், "(1) ஆம் உட்பிரிவின் கீழ்"என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது (2-A) உட்பிரிவு நேர்விற்கேற்ப" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(7) (5) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் விளக்கங்கள் புகுத்தப்படுதல்
வேண்டும், அவையாவன:-
"விளக்கம்-1.- இந்தப் பிரிவின் கீழ் வரி செலுத்தத் தனது தகுதியை நிர்ணயிக்கும் ஒரு நபரின் மொத்த வருவாயை கணக்கிடும் நோக்கத்திற்காக, "மொத்த வருவாய்" என்ற சொற்றொடர், இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப் பொறுப்புடையவராய் இருக்கும் நாள் வரை ஒரு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நாளிலிருந்து அத்தகைய நபரால் வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பை உள்ளடக்கியது, ஆனால் வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விலக்கு மதிப்பு இதில் அடங்குவதில்லை. எனவே சலுகைகள் இதுவரை, இலாபம் அல்லது தள்ளுபடி வாயிலாக குறிப்பிடப்படுகின்றன."9 விளக்கம் -2.- இந்தப் பிரிவின் கீழ் ஒரு நபரின் வரிச் செலுத்தத்தை முடிவு செய்யும் நோக்கத்திற்காக, "மாநிலத்தின் மொத்த விற்பனை அளவு" பின்வரும் வழங்கல்களை உள்ளடக்காது, அவையாவன:-
(i) இந்தச் சட்டத்தின் கீழ் அத்தகைய நபர் பதிவு செய்யப்படப் பொறுப்புடைமையாகும் நாள்வரையுள்ள நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளிலிருந்து வழங்கல்கள் ; மற்றும்
(ii) வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் சேவைகள் வழங்கலின் விலக்களிப்பு, வழங்குகைகளின் இலாபம் அல்லது தள்ளுபடி மூலம் மறுபயன் குறிப்பிடுதல்."
22ஆம் பிரிவிற்கானத்
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவின், இரண்டாம் வரம்புரைக்குப் பின்பு பின்வரும் வரம்புரை மற்றும் விளக்கம் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"மேலும் வரம்புரையாக, அரசானது, மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கை செய்யப்பட்ட அத்தகைய கட்டுப்பாடு மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, சரக்குகளின் வழங்கலில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள நேர்வில் வழங்குநர், மொத்த சரக்குகளின் மொத்த விற்பனை அளவினை இருபது லட்சம் ரூபாயிலிருந்து நாற்பது லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உயர்த்தலாம்.
விளக்கம்:- இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக, ஒரு நபர் வைப்பீடுகள், கடன்கள் அல்லது முன்பணங்களை நீட்டிப்பதன் மூலம் சேவைகள் வழங்கலின் விலக்களிப்பு, வழங்குகைகளின் இலாபம் அல்லது தள்ளுபடி மூலம் மறுபயன் குறிப்பிடுதலில் ஈடுபட்டிருந்தாலும் கூட, சரக்குகள் வழங்கலில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ளவராகக் கருதப்படுவர்."
25 ஆம் பிரிவிற்கானத்
5. முதன்மைச் சட்டத்தின் 25ஆம் பிரிவில் (6) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவுகள் புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(6A) பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் உண்மையென சான்றளித்தளுக்கு உள்ளாதல் வேண்டும், அல்லது குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய கால அளவிற்குள் அத்தகைய வடிவம் மற்றும் முறையில் ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றை வழங்குதல் வேண்டும்:
வரம்புரையாக, பதிவு செய்யப்பட்ட நபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை எனில், குறித்துரைக்கப்பட்ட மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அரசால் அத்தகைய நபருக்கு, மாற்றான மற்றும் நிலையான அடையாளம் காணும் வழிமுறைகள் வழங்கப்படுதல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான சான்றுகளை வழங்கவோ அல்லது மாற்றவோ மற்றும் சாத்தியமான அடையாளம் காணும் வழிமுறைகளை வழங்கவோ தவறினால் அத்தகைய நபருக்கு ஒதுக்கப்பட்ட பதிவு செல்லாது எனக் கருதப்படும். மேலும் இச்சட்டத்தின் பிற வகைமுறைகள் அத்தகைய நபர்கள் பதிவு பெறாத போது பொருந்தும்.
(6B) அறிவிப்புத் தேதியிலிருந்து மற்றும் ஒவ்வொரு நபரும், பதிவு செய்வதற்குத் தகுயியுடையவர்களாக இருக்க அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். அத்தகைய முறையானது மன்றத்தின் பரிந்துரையின் பேரில் அரசின் அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படலாம்:
வரம்புரையாக, ஒரு நபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படவில்லை எனில், மன்றத்தின் பரிந்துரையின் பேரில், அந்த அறிவிப்பில் குறிப்பிடக்கூடிய வகையில் மாற்று மற்றும் சாத்தியமான அடையாளம் காணும் வழிமுறைகள் அரசின் அறிவிக்கையின் வாயிலாக குறிப்பிடப்படும்.
10(6C) அறிவிப்புத் தேதியிலிருந்து, தனிப்பட்ட நபரைத் தவிர ஒவ்வொரு நபரும், பதிவு செய்வதற்குத் தகுதியுடையவர்களாக இருக்க, அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்படுதல் வேண்டும் அல்லது குடும்பத் தலைவர், நிர்வாக இயக்குநர், முழு நேர இயக்குனர், அத்தகைய பங்குதாரர்கள், சங்கத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள், அறங்காவலர் குழு, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர் மற்றும் பிற வகை நபர்களின் ஆதார் எண்ணை ஆதாரமாக வைத்திருப்பதற்கு, அரசானது, மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில், கூறப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படலாம்.:
வரம்புரையாக, அத்தகைய நபர் அல்லது குறிப்பிட்ட வகை நபர்களுக்கு ஆதார் எண்ணை ஒதுக்கவில்லை எனில் அத்தகைய நபருக்கு அல்லது குறிப்பிட்ட வகையுள்ள நபர்களுக்கு மாற்று மற்றும் சாத்தியமான அறிவிப்புகளை வழங்க வேண்டும். இது மன்றத்தின் பரிந்துரைகளின் பேரில் அரசானது அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்படலாம்.
(6D) இந்த வகைமுறையின் (6A) ஆம் உட்பிரிவு அல்லது (6B) ஆம் உட்பிரிவு அல்லது (6C) ஆம் உட்பிரிவானது அத்தகைய நபர் அல்லது குறிப்பிட்ட வகை கொண்ட நபர்கள் அல்லது மாநிலத்தின் எந்த பகுதிக்கும் பொருந்தாது என மன்றத்தின் பரிந்துரையின் பேரில் அரசின் அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்படலாம்.
மையச் சட்டம் 18/2016.
விளக்கம்.- இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக, "ஆதார் எண்" என்பது 2016 ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் (நிதி மற்றும் பிற மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளை இலக்கு வைப்பது) சட்டத்தின் 2ஆம் பிரிவில் (a) கூறில் வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.".
31 A எனும் புதிய பிரிவைப் 6. முதன்மைச் சட்டத்தின் 31ஆம் பிரிவுக்கு பின்பு
புகுத்துதல்.
பின்வரும்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும். அவையாவன:-
"31A. பெறுநருக்கான மின்னணு பரிவர்த்தனை செலுத்தும் வசதி.- அரசானது, மன்றத்தில் பரிந்துரையின்பேரில், குறித்துரைக்கப்பட்ட அத்தகைய கட்டுப்பாடு மற்றும் வரையறைகளுக்கு மற்றும் அத்தகைய முறைக்குட்பட்டு, சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவரால் உருவாக்கப்படக்கூடிய இரண்டிற்குமே பெறுநருக்கு மின்னணு பரிவர்த்தனைக்கான குறித்துரைக்கப்பட்ட வகையினை வழங்குபவரின் பதிவு செய்யப்பட்ட நபரின் வகையினை குறித்துரைக்கலாம் மற்றும் அதன்படி பணம் செலுத்துவதற்கு அத்தகைய பெறுநருக்கு வாய்ப்பு வழங்குதல் வேண்டும்.".
39 ஆம் பிரிவிற்கான
7. முதன்மைச் சட்டத்தின் 39 ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1) ஆம் மற்றும் (2) ஆம் உட்பிரிவுகளுக்காக பின்வரும் உட்பிரிவுகள்
மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். அவையாவன:-
"(1) ஓர் உள்ளீட்டுச்சேவை விநியோகிப்பவராக அல்லது ஒரு குடியிராத வரிவிதிக்கத்தக்க நபராக அல்லது 10 ஆம் பிரிவின் அல்லது 51 ஆம் பிரிவின் அல்லது 52 ஆம் பிரிவின் வகைமுறைகளின் கீழ் வரி செலுத்துகிற நபராக அல்லாத, பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கும், சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு மற்றும் வெளிப்புற வழங்குகைகள், துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட வரி மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய பிற விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட அத்தகைய நேரத்தில் அளித்தல் வேண்டும்:
வரம்புரையாக, மன்றத்தின் பரிந்துரையின் பேரில் குறித்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, ஒவ்வொரு காலாண்டு அல்லது அதன் பகுதிகளுக்கு ஒரு வருவாயை அளிக்கும் பதிவு செய்யப்பட்ட நபர்களின் சில வகுப்பினருக்கு தெரிவிக்கலாம்.
11(2) 10 –ஆம் பிரிவின் வகைமுறைகளின் கீழ் வரி செலுத்தும் பதிவு பெற்ற நபர் ஒருவர் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உள்வரு வழங்குகைகள், செலுத்த வேண்டிய வரி மற்றும் செலுத்தப்பட்ட வரி விவரங்களை மின்னணுவியலாக அறிக்கை ஒன்றில் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய குறிப்பிட்ட நேரத்திற்குள் அளித்தல் வேண்டும்.";
(2) (7)ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும். அவையாவன:-
"(7) (1) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் அல்லது (5) ஆம் உட்பிரிவின் கீழ் அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டுறுத்தப்பட்டிருக்கும் பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், அத்தகைய வகைமுறைகளின் குறிப்பிட்ட நபரைத் தவிர அத்தகைய அறிக்கைக்கு இணங்க செலுத்த வேண்டிய வரியினை, அத்தகைய அறிக்கையை அளிப்பதற்கு அவர் வேண்டுறுத்தப்பட்டுள்ள கடைசி தேதிக்கு முன்னர் அரசுக்கு செலுத்துதல் வேண்டும்:
வரம்புரையாக, (1) ஆம் உட்பிரிவின் வகைமுறைகளின் கீழ், அரசுக்கு வரி செலுத்தும் பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆங்கில மாதத்திற்கும் அல்லது அதன் பகுதிக்கும் சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது அவை இரண்டின் உள்வரு மற்றும் வெளிப்புற வழங்குகைகள், துய்க்கப்பட்ட உள்ளீட்டு வரி வரவு, செலுத்த வேண்டிய வரி, செலுத்தப்பட்ட வரி மற்றும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்தில் மற்றும் அத்தகைய நேரத்தில் அளித்தல் வேண்டும்:
மேலும் வரம்புரையாக, (2) ஆம் உட்பிரிவின் வகைமுறையின் கீழ் அரசுக்கு வரி செலுத்தக்கூடிய பதிவு பெற்ற நபர் ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலாண்டிற்கும் அல்லது அதன் பகுதிக்கும் வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய படிவத்திலும் மற்றும் முறையிலும் மாநிலத்தில் விற்பனை அளவு, சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் உள்வரு வழங்குகைகள், செலுத்த வேண்டிய வரி மற்றும் அத்தகைய வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய நேரத்திற்குள் அளித்தல் வேண்டும்." .
44 ஆம் பிரிவிற்கான 8. முதன்மைச் சட்டத்தின் 44 –ஆம் பிரிவின் (1) –ஆம் உட்பிரிவில் பின்வரும்
திருத்தம்.
வரம்புரையானது புகுத்தப்படுதல் வேண்டும். அவையாவன:-
"வரம்புரையாக, ஆணையாளர் மன்றத்தின் பரிந்துரைகள் மற்றும் காரணங்களை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்படுவதன் மூலம் அத்தகைய பதிவு பெற்ற நபரின் வருடாந்திர வருவாயை வழங்குவதற்கான கால வரம்பை குறிப்பிட்ட அறிவிப்பின் மூலம் நீட்டிக்கலாம்.
மேலும் வரம்புரையாக, மத்திய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட எந்த ஒரு கால அளவு நீட்டிப்புமானது ஆணையரால் அறிவிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.".
49 ஆம் பிரிவிற்கானத் 9. முதன்மைச் சட்டத்தின் 49 –ஆம் பிரிவில் (9) ஆம் உட்பிரிவிற்கு பின்பு
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"(10) பதிவுபெற்ற நபர் ஒருவர் பொதுவான இணைய முகப்பில், இந்தப் பிரிவின் கீழ் மின்னணுப் பணப்பேரேட்டில் இருக்கக்கூடிய வரி, வட்டி, தண்டத்தொகை, கட்டணம் அல்லது பிற தொகை எதன் பொருட்டும் செய்யப்படும் பரிமாற்றமானது, வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய வரையறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு அத்தகைய முறையிலும் மற்றும் வகையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட வரி, மைய வரி, மாநில வரி அல்லது மேல்வரிக்காக, மின்னணுப் பணப் பேரேட்டிற்கு செய்யப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகைய பரிமாற்றமானது, இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணுப் பணப் பேரேட்டிலிருந்து திருப்பி செலுத்தப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.
12(11) இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணுப் பணப் பேரேட்டிற்கு மாற்றப்பட்ட தொகையானது (1) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள கூறப்பட்ட பேரேட்டில் வைப்பீடு செய்யப்பட்டது எனக் கருதப்படுதல் வேண்டும்.".
50 ஆம் பிரிவிற்கானத்
10. முதன்மைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவின், (1) ஆம்
திருத்தம்.
உட்பிரிவில், பின்வரும் வரம்புரை புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"வரம்புரையாக, ஒரு வரிக் காலத்தில் செய்யப்பட்ட பொருட்களுக்கு செலுத்த வேண்டிய வரி மீதான இலாபம் மற்றும் 39 ஆம் பிரிவின் விதிகளின் படி, உரிய தேதிக்குப் பிறகு வழங்கப்பட்ட காலத்திற்கான வருமானத்தின் அறிவிப்பு ஆகியவை 73 ஆம் பிரிவு அல்லது 74 ஆம் பிரிவின் கீழ் எந்தவொரு நடவடிக்கைகளையும் தொடங்கிய பின்னர், அத்தகைய வருமானம் தவிர, கூறப்பட்ட காலத்தைப் பொறுத்து மின்னணு பணப் பேரேட்டை பற்று வைத்தலின் மூலம் செலுத்தப்படும் வரியின் அந்தப் பகுதியினால் விதிக்கப்படும் ".
52-ஆம் பிரிவிற்கான
11. முதன்மைச் சட்டத்தின் 52-ஆம் பிரிவில்.-
திருத்தம்.
(1) (4) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரைகள் புகுத்தப்படுதல் வேண்டும்,
அவையாவன:-
வரம்புரையாக, ஆணையர் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, அறிவிப்பின் மூலம் அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட நபர்களின் அத்தகைய வகையை அறிக்கையை அளிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கலாம்:
மேலும் வரம்புரையாக, மைய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட கால வரம்பின் எந்தவொரு நீட்டிப்பும் ஆணையரால் அறிவிக்கப்பட்டது என்று கருதப்படுதல் வேண்டும்.";
(2) (5) ஆம் உட்பிரிவில், பின்வரும் வரம்புரைகள் புகுத்தப்படுதல் வேண்டும்,
அவையாவன:-
"வரம்புரையாக, ஆணையர் மன்றத்தின் பரிந்துரையின் பேரில் மற்றும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படுவதற்கான காரணங்களுக்காக, அறிவிப்பின் மூலம், அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள அத்தகைய பதிவு செய்யப்பட்ட நபர்களின் வகுப்பிற்கான ஆண்டறிக்கையை அளிப்பதற்கான கால வரம்பை நீட்டிக்கலாம்:
மேலும் வரம்புரையாக, மைய வரி ஆணையரால் அறிவிக்கப்பட்ட கால வரம்பின் எந்தவொரு நீட்டிப்பும் ஆணையரால் அறிவிக்கப்பட்டது என்று கருதப்படுதல் வேண்டும்.".
12. முதன்மைச் சட்டத்தில் 53-ஆம் பிரிவுக்குப் பின்பு, பின்வரும் பிரிவு
53A என்ற பிரிவினைப்
புகுத்துதல்.
புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"53A. குறிப்பிட்ட தொகைகளின் பரிமாற்றம்.-
இந்தச் சட்டத்தின் கீழ் மின்னணு பணப்பேரேட்டிலிருந்து எந்தவொரு தொகையும், மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் (மாநிலங்களுக்குச் சரியீடு வழங்குதல்) சட்டத்தின் கீழ் மின்னணு பணப்பேரேடுக்கு மாற்றப்பட்டால், அரசானது, மின்னணு பணப்பேரேட்டிலிருந்து மாற்றப்பட்ட தொகைக்குச் சமமான ஒரு தொகையை, மைய வரிக் கணக்கு அல்லது ஒருங்கிணைப்பட்ட வரிக்கணக்கு அல்லது மேல்வரிக்கணக்கிற்கு வகுத்துரைக்கப்படலாகும் அத்தகைய முறையிலும் மற்றும் அத்தகைய காலத்திற்குள்ளும் மாற்றுதல் வேண்டும்."
54-ஆம் பிரிவிற்கானத் 13. முதன்மைச் சட்டத்தின் 54 ஆம் பிரிவில் (8) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
13"(8-A) மைய அரசானது, திருப்பிச் செலுத்திய மாநில வரியினை பிரித்துக் கொடுத்தால், அரசானது திரும்பச் செலுத்தப்பட்ட தொகைக்கு சமமானதொரு தொகையை மைய அரசிற்கு மாற்றுதல் வேண்டும்"
95-ஆம் பிரிவிற்கானத் 14. முதன்மைச் சட்டத்தின் 95-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (a) கூறில்,-
(a) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடரானது புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) "100-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101C-ஆம் பிரிவின்" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) (e) கூறுக்கு பின்பு, பின்வரும் கூறு புகுத்தப்படுதல் வேண்டும்,
அவையாவன:-
"(f) "தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்பது 101 A-ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு என்று பொருள்படும்."
101A எனும் புதிய 15. முதன்மைச் சட்டத்தின் 101-ஆம் பிரிவிற்குப் பின்பு, பின்வரும் பிரிவு
பிரிவினைப் புகுத்துதல்.
புகுத்தப்படுதல் வேண்டும், அவையாவன:-
"101 A. மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகும்.- இந்த அத்தியாயத்தின் விதிகளுக்குட்பட்டு, இந்தச் சட்டத்தின் நோக்கங்களுக்காக, மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101A –ஆம் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பானது, இந்தச் சட்டத்தின் கீழ் முன்னதாகத் தீர்மானிக்கும் தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பாகக் கருதப்படுதல் வேண்டும்.".
102-ஆம் பிரிவிற்கானத்
16. முதன்மைச் சட்டத்தின் 102-ஆம் பிரிவில்.-
திருத்தம்.
(1) இரண்டு இடங்களில் வரும், "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(2) "அல்லது 101 ஆம் பிரிவு " என்ற சொற்றொடருக்குப் பதிலாக "அல்லது இந்தச் சட்டத்தின் 101 ஆம் பிரிவு அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101C-ஆம் பிரிவு" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) "அல்லது மேல்முறையீட்டாளர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "மேல்முறையீட்டாளர், அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும்.
103-ஆம் பிரிவிற்கானத்
17. முதன்மைச் சட்டத்தின் 103 –ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) (1) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல்
வேண்டும். அவையாவன:-
(1A) இந்த அத்தியாயத்தின் கீழ் தேசிய மேல்முறையீட்டு அதிகார
அமைப்பினால் அறிவிக்கப்பட்ட முன் தீர்மானமானது14 "(a) விண்ணப்பதாரர்கள் தனித்துவமான
மையச் சட்ட எண் 43/1961 நபர்களாக, மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101B –ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் தீர்ப்பை நாடியவர்கன் மற்றும் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்டுள்ள பதிவு செய்யப்பட்டத் துணைநபர்களும்;
(b) கூறு (a) இல் குறிப்பிட்டுள்ள
விண்ணப்பதாரர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகார வரம்பு அலுவலர்கள் மற்றும் 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரே நிரந்தரக் கணக்கு எண்ணைக் கொண்டுள்ள பதிவுசெய்யப்பட்ட நபர்களும்
(2) (2) ஆம் உட்பிரிவில் "(1) ஆம் உட்பிரிவில்" என்ற சொற்றொடருக்குப் பின்பு "மற்றும் (1-A) ஆம் உட்பிரிவு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
மையச் சட்ட எண் 43/1961 104 – ஆம் பிரிவிற்கானத்
18. முதன்மைச் சட்டத்தின் 104- ஆம் பிரிவில் (1) ஆம் உட்பிரிவில்,-
திருத்தம்.
(1) "அதிகார அமைப்பு அல்லது மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
(2) "101 -ஆம் பிரிவின்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக "இந்தச் சட்டத்தின் 101 ஆம் பிரிவின் அல்லது மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 101 C ஆம் பிரிவு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
105 ஆம் பிரிவிற்கானத் 19. முதன்மைச் சட்டத்தின் 105 –ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத் தலைப்பிற்குப் பதிலாக, பின்வரும் ஓரத் தலைப்பு மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"அதிகார அமைப்பு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் தேசிய
மேல்முறையீட்டு அதிகார அமைப்பு ஆகியவற்றின் அதிகாரம்";
(2) (1) ஆம் உட்பிரிவில், "மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்;
(3) (2) ஆம் உட்பிரிவில், இரண்டு இடங்களில் வரும் "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
106 ஆம் பிரிவிற்கானத் 20. முதன்மைச் சட்டத்தின் 106-ஆம் பிரிவில்,-
திருத்தம்.
(1) ஓரத்தலைப்பிற்குப் பதிலாக, பின்வரும் ஓரத்தலைப்பு மாற்றாக
அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-
"அதிகார அமைப்பு, மேல்முறையீட்டு அதிகார அமைப்பு மற்றும் தேசிய
மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு ஆகியவற்றின் நடைமுறைகள்"
(2) "மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடருக்குப் பின்பு, "அல்லது தேசிய மேல்முறையீட்டு அதிகார அமைப்பு" என்ற சொற்றொடர் புகுத்தப்படுதல் வேண்டும்.
171 ஆம் பிரிவிற்கானத் 21. முதன்மைச் சட்டத்தின் 171-ஆம் பிரிவில், (3) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு,
திருத்தம்.
பின்வரும் உட்பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும். அவையாவன:-
15"(4) (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள, அதிகார அமைப்பு கூறப்பட்ட துணைப் பிரிவின் கீழ் தேவைப்பட்டப்படியான ஆய்வினை நடத்திய பின்னர் (1) ஆம் உட்பிரிவின் கீழ் இலாபம் அடைந்த பதிவு செய்யப்பட்ட நபர் எவரும், அத்தகைய நபர் இலாபம் ஈட்டிய தொகையில் பத்து விழுக்காட்டிற்கு சமமான அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும்:
வரம்புரையாக, அதிகார அமைப்பினால் ஆணை நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து முப்பது நாட்களுக்குள் இலாபம் அடைந்த தொகை வைப்பீடு செய்யப்பட்டால் எந்தவொரு அபராதமும் விதிக்கப்பட மாட்டாது.
விளக்கம்:- இப்பிரிவின் நோக்கங்களுக்காக சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இலாபம் ஈட்டுதல் இரண்டின் மீதான வரி விகிதத்தைக் குறைப்பதனால் ஏற்படும் நன்மையை செயல்படுத்தாதன் பேரில் தீர்மானிக்கப்படும் தொகை அல்லது சரக்குகள் அல்லது சேவைகளின் அல்லது இரண்டின் விலையை உடனடியாகக் குறைப்பதன் மூலம் பெறுநருக்கு உள்ளீட்டு வரி வரவின் நன்மை என்று பொருள்படும்.
அறிவிக்கைக்கான
திருத்தம்.
22. (1) 2017 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 14 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் பக்கங்கள் 20-22-ல் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறையினால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/CTR/917 (e-2)/2017-ல் பிரிவு 2-பாகம் II-ல் 2017 ஆம் ஆண்டு ஜீன் திங்கள் 29 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் பக்கங்கள் 68-75 –ல் வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையினால் அட்டவணைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் II(2)/CTR/532(d-5)/2017 ல் பிரிவு 2- பாகம் II ல் பின்வரும் வ.எண் மற்றும் அது தொடர்பான உள்ளீடுகள் 2017 ஆம் ஆண்டு ஜீலைத் திங்கள் 1 ஆம் நாளன்று புகுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
| ( 1 ) | ( 2 ) | ( 3 ) |
| "103 A | 26 | செறிவூட்டப்பட்ட யுரேனியத் தாது" |
(2) (1) ம் உட்பிரிவின் நோக்கங்களுக்காக, எல்லா இன்றியமையா நேரங்களிலும், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் 11ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கூறப்பட்ட அறிவிப்பை முன் தேதியிட்ட பயனுடன் திருத்துவதற்கு அரசிற்கு அதிகாரம் உள்ளதைப்போன்று, (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பை முன் தேதியிட்ட பயனுடன் திருத்தம் செய்ய அரசிற்கு அதிகாரம் இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும்.
(3) வசூலிக்கப்பட்ட எல்லா வரிகளிலும் பணத்தைத் திரும்பப் பெற இயலாத ஆனால் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பானது, எல்லா இன்றியமையா நேரங்களிலும் நடைமுறையில் இருந்திருந்தால் அவ்வாறு வசூலிக்கப்பட மாட்டாது.
16விளக்கவுரை
2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 19/2017) சரக்குகள் அல்லது சேவைகளின் உள்-மாநில விநியோகத்தில் வரி விதிப்பதற்கான மற்றும் வரி வசூலிப்பதற்கான ஒரு ஏற்பாட்டை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
2. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிக்குழுவானது, 2019 ஜீன் திங்கள் 21 ஆம் நாளன்று நடத்தப்பட்ட அதனுடைய 35 ஆவது கூட்டத்தில், 2017 ஆம் ஆண்டு மைய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்திற்கான (மையச் சட்டம் 12/2017) பல்வேறு திருத்தங்களை பரிந்துரை செய்தது. மேற்சொன்ன பரிந்துரைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, மைய அரசானது மேற்சொன்ன மையச் சட்டத்தை, 01-08-2019 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 2019 ஆம் ஆண்டு நிதிச் (எண் .2) சட்டத்தின் (மையச் சட்டம் 23/2019) மூலம் திருத்தம் செய்தது. எனவே 2017 ஆம் ஆண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/2017) மீது தொடர்புடைய திருத்தங்கள் செய்வது அவசியமாகிறது. எனவே அரசானது தமிழ்நாடு சட்டம் 19/2017 ஐ தக்கவாறு திருத்துவதென முடிவு செய்துள்ளது.
3. இந்த அவசரச் சட்டம் மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. கோபி ரவிக்குமார்,
அரசுச் செயலாளர் (மு.கூ.பொ), சட்டத் துறை.
(தமிழாக்கம்)
க. நரசிம்மன், உதவி இயக்குநர், சட்ட (தமிழ் பிரிவு)த் துறை,
தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.