[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
© தமிழ்நாடு அரசு 2020
[விலை : ரூ. 0.80 காசு.
| தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது. | ||
எண் 9] சென்னை, புதன்கிழமை, பிப்ரவரி 26, 2020 மாசி 14, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு–2051
பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு
துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்
1975-ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 44(1)ன் கீழான அறிவிக்கை
(ந.க. எண். 3946/ஆ5/2019)
கீழ்க்கண்ட சங்கம் 1975 ஆம் வருட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் பிரிவு 16(3)(b)-ன் படி, கோர்வைக்கு தாக்கல் செய்யவேண்டிய ஆவணங்களை சங்கங்களின் பதிவாளரிடம் கோர்வைக்கு தாக்கல் செய்யவில்லை எனத்தெரிகிறது. மேலும் சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளது.
எனவே, 1975ஆம் வருட தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டம் பிரிவு 44(1)ன் கீழ் அனுப்பப்படும் இந்த அறிவிப்பானது, இந்த அறிவிப்பு நாளிலிருந்து 1 மாதத்திற்குள் சங்கம் செயல்படுகிறதா? என்பது குறித்து பதில் இவ்வலுவலகத்தில் பெறப்படவில்லையாயின், சங்கத்தினை செயல்படாத சங்கமாக கருதி, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.
வ.எண் பதிவு எண்/ ஆண்டு பெயர்
01 53/1996 புதுக்கோட்டை நாடார் உறவின் முறை சங்கம்.
இரா. குமார்,
புதுக்கோட்டை, 2020, ஜனவரி 22. சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாவட்டப்பதிவாளர் (நிருவாகம் ).
1983-ஆம் வருடத்திய தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் பிரிவு 137(2)(b) இன் கீழ் கலைத்தல் மற்றும் கலைத்தல்
அலுவலர் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை
[TRY(HSG)18 மணப்பாறை வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்]
[ந.க.எண் 95/2018 சப]
2[TRY(HSG)19 இலால்குடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம்]
[ந.க. எண் 97/2018 சப]
மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி), திருச்சிராப்பள்ளி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த TRY(HSG)18 இலால்குடி வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் தனது முதன்மை பணியினை நீண்ட காலமாக மேற்கொள்ளாததால் 18-12-2019 அன்று கலைக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தை சட்டப்பிரிவு 138 (1) இன் கீழ் மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர்/கலைத்தல் அலுவலர் திரு.ஜோ.ரோச் சேகர் மேற்படி சங்கத்திற்கு கலைத்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
தி. சண்முகவள்ளி, திருச்சிராப்பள்ளி, 2020, பிப்ரவரி 7.
இணைப்பதிவாளர் (ஆய்வுக்குழு)/மண்டலத் துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) (முகூபொ)