Servants of Knowledge
Tamil Nadu Gazette · Government of Tamil Nadu

General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc., issued by Secretariat Departments.

Published 25 March 2020

Type
Ordinary
Gazette no.
13
Part
Part III
Notifications
Government Notifications and Tamil Translations--Environment and Forest Department--Amendments
Section
Section 1a-Sup.
Identifier
in.gazette.tamilnadu.2020-03-25.Ordinary_13_Part-III_Section-1a-Sup.
Languages
English, Tamil
Published at
Original source ↗

© தமிழ்நாடு அரசு 2020

[Regd. No. TN/CCN/467/2012-14. [R. Dis. No. 197/2009. [விலை : 2.40 காசு

தமிழ்நாடு அரசிதழ் ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 13] சென்னை, புதன்கிழமை, மார்ச் 25, 2020 பங்குனி 12, விகாரி, திருவள்ளுவர் ஆண்டு-2051

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை

[அரசாணை (நிலை) எண் 16, சுற்றுச்சூழல் மற்றும் வன(FR13)த் துறை, 7 பிப்ரவரி 2020.] தமிழ்நாடு 1882-ஆம் ஆண்டு வனச்சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் (5/1882) 26-ஆம் பிரிவு, 35 மற்றும் 63 ஆம் பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு 2010-ஆம் ஆண்டு மரம் சார்ந்த தொழிற்சாலைகளை முறைப்படுத்தும் விதிகளில் கீழ்க்காணும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில்,-

(1) விதி 2 ஆம் விதியைச் சேர்ந்்த துணை-விதி (1)-இல்,&

(i) பகுதி (a)-இல், "வன பாதுகாவலர்'' என்ற சொற்றொடருக்கு பதிலாக "வன பாதுகாவலர் அல்லது தலைமை வன பாதுகாவலர் அல்லது கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர்" என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்படவேண்டும்;

(ii) பகுதி (d)-க்குப் பின்னர், பின்வரும் பகுதி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது;&-

"(d-a) "தொழிற்பேட்டை என்பதற்கு மரம் சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக அரசால் அறிவிக்கையிடப்பட்ட பகுதிகள் என பொருள்படும்.'';

(iii) பகுதி (g)&க்கு பதிலாக பின்வரும் பகுதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-&

"(g) "முதன்மை தலைமை வன பாதுகாவலர்" என்பதற்கு தமிழ்நாடு முதன்மை தலைமை வன பாதுகாவலர் (துறைத் தலைவர், என பொருள்படும்'';

(iv) பகுதி (g)&க்கு பின்னர், மாற்றியமைக்கப்பட்டவாறு, பின்வரும் பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-&

"(g-a) "உருளை மரக்கட்டை'' என்பதற்கு இயற்கையாகவே மரப்பட்டையின் கீழ், மைய பகுதியில் முப்பது செண்டிமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றளவு உடைய வெட்டு மரத்துண்டு என பொருள்படும். மரப்பட்டை உரிக்கப்பட்ட அல்லது எளிதாகக் கொண்டுச் செல்வதற்காக மற்றும் / அல்லது சேமித்து வைப்பதற்காக தொழிலாளர்களைக் கொண்டு அல்லது பற்கள் போன்ற அமைப்பைக் கொண்ட மின்சாரத்தால் இயங்கும் எஃகு பட்டிவாள் அல்லது ஏனைய யாதொரு இயந்திரம் அல்லது சாதனத்தைக் கொண்டு அம்மரத்துண்டின் குறுக்குப் பகுதியை சதுரமாக அல்லது ஓரளவு சதுர வடிவில் மாற்றியமைக்கப்பட்ட அத்தகைய உருளை மரக்கட்டைகளும் இதில் அடங்கும்;

"(g-b) "மரம் அறுக்கும் ஆலை'' என்பதற்கு உருளை மரக்கட்டைகளை அறுக்கப்பட்ட மரக்கட்டைகளாக மாற்றுவதற்காக, நிர்ணயிக்கப்பட்ட வடிவில் அல்லது இணைப்பில் உள்ள கருவிகள் மற்றும் தளவாடங்கள் என பொருள்படும்;

"(g-c) "அறுக்கப்பட்ட மரக்கட்டைகள்'' என்பதற்கு உருளை மரக்கட்டைகளை அறுப்பதன் வாயிலாக பெறப்பட்ட தூலங்கள், குறிப்பிட்ட அளவில் வெட்டப்பட்ட மரத்துண்டுகள், பலகைகள், மரச்சட்டங்கள் மற்றும் இவை போன்ற ஏனைய பொருள்கள் என்று பொருள்படும்;

[ 1 ]

iii-1a-(13) (T Sup)—12 "(g-d)"குழு'' என்பதற்கு இந்த விதிகளின் 3&A ஆம் விதியின் கீழ் அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழு என பொருள்படும்:- --

(v) பகுதி (h)- -&க்கு பதிலாக பின்வரும் பகுதி அமைத்துக் கொள்ளப்பட வேண்டும், அதாவது:-

"(h)- - "மரம் சார்ந்த தொழிற்சாலை'' என்பதற்கு மரத்தை மூலப்பொருளாகக் கொண்டு செயல்படும் யாதொரு தொழிற்சாலை (மரம் அறுக்கும் தொழிற்சாலைகள்/ஒட்டு மென்பலகை/ஒட்டு பலகை/ அல்லது சந்தனம், கதா வகை வெட்டு மரக்கட்டைகள் (katha wood) முதலியவை போன்ற ஏனைய யாதொரு வடிவம்) என பொருள்படும்";

(2) விதி 3&இல், பின்வரும் வரம்பு நிபந்தனைகள் சேர்த்துக்கொள்ளபட வேண்டும், அவையான:-

"இருப்பினும், உள்நாட்டு உருளை மரக்கட்டைகளை பயன்படுத்தாத அல்லது முப்பது செண்டிமீட்டருக்கு அதிகமான விட்டமுடைய பட்டிவாள் அல்லது வெட்டு எந்திரம் அல்லது வட்ட இரம்பம் இன்றி செயல்படுகிற பின்வரும் தொழிற்சாலைகள் அல்லது செயல்பாட்டு இயந்திரங்களுக்கு உரிமம் தேவையில்லை, அதாவது:-

பின்வருவனவற்றை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் அல்லதுசெயல்பாட்டு இயந்திரங்கள்,-

-

(a) முறையான வழியில் பெறப்பட்ட அறுக்கப்பட்ட மரக்கட்டை, பிரம்பு, மூங்கில், நாணல், ஒட்டு பலகை, ஒட்டு மென்பலகை அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வெட்டு மரத்துண்டுகள்;

(b) முறையான வழியில் பெறப்பட்ட கரும்பலகை, நடுத்தர அடர்த்தியுடைய நார் பலகை அல்லது அதுபோன்ற மரம் சார்ந்த பொருட்கள்;

(c) வேளான் காடு வளர்ப்பு அல்லது வேளாண்மை பயிர்களாக அறிவிக்கப்பட்ட மற்றும்/அல்லது தமிழ்நாட்டில் மரம் வெட்டி ஏற்றிச் செல்லக்கூடிய பகுதிக்கான வரம்பெல்லையிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மர வகைகளிலிருந்து மற்றும் முறையான வழியில் பெறப்பட்ட உருளை மரக்கட்டை அல்லது மரக்கட்டை

ஆயினும், குறிப்பிட்ட சிறப்பு தேவையுடைய அத்தகைய தொழிற்சாலைகளில் 60 செண்டிமீட்டர் வரையிலான விட்டுமுள்ள வட்ட இரம்பம் நிறுவுவதை குழு அனுமதிக்கலாம் என வகைசெய்யப்பட்டுள்ளது. அத்தகைய தொழிற்சாலைகள் தமிழ்நாடு வனத்துறையிடம் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், அரசால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

(3) விதி 3&க்கு பின்னர், திருத்தம் செய்யப்பட்டவாறாக, பின்வரும் விதிகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையானவன:-

"3-A மாநில அளவிலான குழு.&(1) விதி 3&B-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக, மாநில அளவிலான குழுவை அரசு அமைக்க வேண்டும்.

(2) குழு பின்வரும் நபர்களைக் கொண்டிருக்கும்:--

(i) முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் : தலைவர் (துறைத் தலைவர்), தமிழ்நாடு

(ii) வனம் மற்றும் பருவநிலை மாற்றம், : உறுப்பினர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மண்டல அலுவலகத்தின் பிரதிநிதி

(iii) செயல்பாட்டு திட்டங்கள் அல்லது : உறுப்பினர் செயல்பாட்டு திட்டப்பணிகள் தயாரித்தலை கையாளும் வனப்பாது காவலர் பதவிதரத்திற்கு குறையாத பதவியிலுள்ள தமிழ்நாடு வனத்துறையின் பிரதிநிதி ஒருவர்

(iv) தொழில்துறையின் இயக்குநர் அல்லது : தலைவர் தொழில்துறை கூடுதல் இயக்குநர்

(v) வன மேம்பாட்டுக் கழகத்தின் ஒரு பிரதிநிதி : உறுப்பினர்

(vi) வனத்துறையின் தலைமையிடத்தில் : உறுப்பினர்/ செயலாளர் பணிபுரியும் வனப்பாதுகாவலர்கள் பதவிதரத்திற்கு குறையாத பதவியிலுள்ள அதிகாரி ஒருவர்

(vii) தமிழ்நாடு வனத்துறையின் மண்டலப் பிரிவிலிருந்து வனப்பாதுகாவலர்கள், தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களின் பதவிதரத்திற்கு குறையாத பதவியிலுள்ள, ஒரு அலுவலரை (உறுப்பினரை) இக்குழு தேர்வு செய்யும்.

(3) குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது குழு கூட்டப்பட வேண்டும்.

3

(4) கூட்டத்தின் குறைவெண் வரம்பு, தலைவர் நீங்கலாக ஐம்பது விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

(5) குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும், ஒரு சிறப்பு அழைப்பாளராக மரமறுக்கும் மர அறுவை ஆலை கூட்டமைப்பால் தொழில்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதியை குழு அழைக்க வேண்டும்.

3&B குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்.& குழு பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் அவையாவன:- -- (a) மரங்களின் தேவை மற்றும் வழங்கல் குறித்து உரிய ஆய்வினை மேற்கொள்வதன் வாயிலாக மாநிலத்தில் கிடைக்கப்பெறும் மரம் குறித்த மதிப்பீடு தொடர்பாக முடிவெடுக்கும் போது, வனப்பகுதிகள் பாதிக்கப்படாத வகையில் நீட்டித்த நிலையான மரம் பயன்பாட்டிற்கான உரிய ஏற்பாட்டு முறையை வகுக்க வேண்டும்.

(b) மேலே குறிப்பிட்ட புதிய வனம் சார்ந்த தொழிற்சாலைகளுக்காக, வனத்தின் வெளியிருந்தும், வனங்கள் முதலியவற்றிலிருந்தும் சட்டரீதியில் அத்தகைய மரங்கள் போதுமான அளவு கிடைக்கப்பெறுகின்றன என குழு கருதும் நேர்வில், உரிமம் வழங்கல் அல்லது தற்போதுள்ள உரிமத்தின் கால அளவை நீட்டிப்பதற்காக மரம் சார்ந்த புதிய தொழிற்சாலைகளின் பெயருக்கு ஒப்புதலளிப்பது குறித்துக் கருதிப்பார்க்கலாம்.

(c) மர அடிப்படையிலான தொழில்களிலிருந்து மீட்கப்பட்டவாறான தமிழ்நாடு வனத்துறையிடம் உள்ள அத்தகைய தொகை, காடுவளர்ப்பு நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

(d) சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திற்கு அரசால் குறிப்பிடப்பட்ட ஏனைய யாதொரு பொருண்மையையும் உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும்.

3&C. மரம் சார்ந்த தொழிலகங்களால் பயன்படுத்தப்படும் மரங்கள், ஆண்டு தோறும் மதிப்பிடப்படுகிறது.&

(1) (a) மரம் அறுக்கும் ஆலைகளின் மரத் தேவைகளை மதிப்பிடும் நோக்கத்திற்காக, அவை பின்வருமாறு பிரிக்கப்படலாம்,& (a) 10 குதிரைத்திறன் வரை மரம் அறுக்கும் ஆலைகள்

(b) 10 குதிரைத்திறனுக்கும் 20 குதிரைத்திறனுக்கும் இடையில் மரம் அறுக்கும் ஆலைகள்

(c) 20 குதிரைத்திறனுக்கும் 40 குதிரைத்திறனுக்கும் இடையில் மரம் அறுக்கும் ஆலைகள்

(d) 40 குதிரைத்திறனுக்கும் 60 குதிரைத்திறனுக்கும் இடையில் மரம் அறுக்கும் ஆலைகள்

(e) 60 குதிரைத்திறனுக்கும் மேல் மரம் அறுக்கும் ஆலைகள்

(b) தொழில்நுட்ப திறன்களின் அடிப்படையில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாடு அடிப்படையில், வெவ்வேறு திறன்களைக் கொண்ட மரம் அறுக்கும் ஆலைகளுக்கான உருண்டை வடிவிலான (round log) மரக்கட்டையின் ஆண்டுத் தேவைகள், குழுவால் நிர்ணயிக்கப்படலாம்.

(i) 10 குதிரைத்திறன் மற்றும் அதற்குக் குறைவான மரம் அறுக்கும் ஆலைகள்: 540 கன. சதுர மீட்டர் (அடிப்படை மதிப்பு)

(ii) 10 குதிரைத்திறனுக்கும் 20 குதிரைத்திறனுக்கும் இடையேயான மரம் அறுக்கும் ஆலைகள்: 810 கன. சதுர மீட்டர் (அடிப்படை மதிப்பில் 1.5 மடங்கு)

(iii) 20 குதிரைத்திறனுக்கும் 40 குதிரைத்திறனுக்கும் இடையிலான மரம் அறுக்கும் ஆலைகள் 1080 கன சதுர மீட்டர் (அடிப்படை மதிப்பின் 2 மடங்கு)

(iv) 40 குதிரைத்திறன் மற்றும் 60 குதிரைத்திறனுக்கு இடையிலான மரம் அறுக்கும் ஆலைகள்: 1620 கன சதுர மீட்டர் (அடிப்படை மதிப்பின் 3 மடங்கு)

(v) 60 குதிரைத்திறனுக்கு மேல் மரம் அறுக்கும் ஆலைகள்: 2160 கன சதுர மீட்டர் (அடிப்படை மதிப்பின் 4 மடங்கு) (2) பெங்களூரிலுள்ள இந்திய ஒட்டுப்பலகை தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் (iPiRTi) மதிப்பிட்டு செய்யப்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கான மரத்தேவை பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

(4) விதி 4 இல்,&

(i) துணை விதிகள் (1), (2) மற்றும் (3) ஆகியவை, முறையே, துணை விதிகள் (2), (3) மற்றும் (4) என மீண்டும் மறு இலக்கமிடப்பட வேண்டும்;

(ii) துணை விதிக்கு (2) முன்னால், அவ்வாறு மீண்டும் இலக்கமிடப்பட்டவற்றில் பின்வரும் துணை விதி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அவையாவன:-&

"(1) குழுவின் முன் ஒப்புதல் பெறாமல் மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு எந்த உரிமமும் வழங்கப்படாது'';

4

(iii) துணை விதி (4)க்குப் பின்னர், நினைவில் கொண்டுள்ளபடி பின்வரும் துணை விதி சேர்க்கப்பட வேண்டும். அதாவது:& ''(5)அருகிலுள்ள அறிவிக்கையிடப்பட்ட வனம் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லையிலிருந்து வான்வழித் தூரத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு தொழிற்பேட்டையில் அல்லது ஒரு நகராட்சிப் பகுதியில் மரம் சார்ந்த ஒரு தொழிற்சாலை நிறுவப்படலாம்'';

(5) விதி 5&இல், துணை விதி&(2)இல், "வனங்களின் மீதான பாதகமான தாக்கம்'' என்ற சொற்றொடருக்குப் பின்னர்'' "மற்றும் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்;

(6) விதி 6&இல், ''முதன்மை தலைமை வனப்பாதுகாவலரால் அவ்வப்போது வழங்கப்பெறும் வழிகாட்டலுக்குட்பட்டு'' என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "குழுவின் ஒப்புதலுக்குட்பட்டு'' "என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

(7) விதி 11&இல், துணை விதி (2)&க்குப் பின்னர், பின்வரும் துணை விதி சேர்த்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது;

"(3) உரிமம் வழங்கும் அலுவலர், குழுவின் அனுமதி பெற்ற பின்னரே, தொழிற்சாலையை இடமாற்றம் செய்திட அனுமதி வழங்கவேண்டும்"

(8) விதி 12&இல்.&

(i) துணை விதி (1)&க்குப் பதிலாக, பின்வரும் துணை விதி அமைத்துக்கொள்ளப்படவேண்டும், அதாவது:- -& "(1)(a) பின்வருவனவற்றுக்கு மறுக்கப்படுகிற யாதொரு நபர், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குள், அரசுக்கு மேல் முறையீடு செய்யலாம் அவையாவன:-&

(i) விதி 4&இன் கீழ் உரிமம் வழங்கல்; அல்லது (ii) விதி 5&இன் கீழ் உரிமம் புதுப்பித்தல்; அல்லது (iii) விதி 6&இன் கீழ் உரிமத்தை மாற்றம் செய்தல்; அல்லது (iv) விதி 11 இன் கீழ் மரம் சார்ந்த தொழிற்சாலையை இடமாற்றும் செய்தல்.

(b) விதி 10&இன் கீழ் எந்தவொரு நபரின் உரிமம் இரத்து செய்யப்படுமாயின், அத்தகைய ஆணை கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள், நேர்விற்கேற்ப வனப் பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநருக்கு மேல் முறையீடு செய்யலாம்.";

(ii) துணை விதி (2)&இல் "வனப் பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர்" என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "நேற்விற்கேற்ப அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர்" என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்;

(iii) துணை விதி (3)&இல் "வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர்", என்ற சொற்றொடருக்குப் பதிலாக, "நேர்விற்கேற்ப அரசு அல்லது வனப்பாதுகாவலர் அல்லது புலிகள் காப்பு வனத்தின் களப்பணி இயக்குநர்", என்ற சொற்றொடர் அமைத்துக்கொள்ளப்படவேண்டும்;

(9) படிவம்&iVக்குப் பின்னர், பின்வரும் பிற்சேர்க்கை இறுதியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும், அதாவது:- -&

"பிற்சேர்க்கை

மரத் தேவையின் மதிப்பீடல்

[விதி 3&C(2)ஐக் காண்க]

பெங்களூருவிலுள்ள இந்திய பிளைவுட் தொழில் ஆராய்்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (iPiRTi) என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாற்றங்கள் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு, ஒட்டு பலகை/வெனீர் அலகுகளில் 4 அடி மற்றும் 8 அடி அளவு நீளம் தோலுரிக்க ஒரு யூனிட்டுக்கான மரத் தேவையை ஒரு நாளைக்கு முறையே 5 கன மீட்டர் மற்றும 11 கன மீட்டர் என மதிப்பிட்டுள்ளது. தோலுரிக்கும் தொழிலகங்கள் ஓராண்டில் சராசரியாக 300 நாட்கள் என ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செய்கின்றன என்று கருதுவதன் வாயிலாக, வெனீர் அலகுகளில் (4 அடி அளவுள்ள தோலுரிக்கும் நீளத்தின் சாதாரண மரத்தேவை 1500 கன மீட்டர் ஆகும். 4 ஆடி நீளத்திற்கான தோலுரிப்பதற்கான இயந்திரங்களுக்கு சமமான எண்ணிக்கை கணக்கிடுவதன் வாயிலாகவும், அதன் இயல்பான நிறுவு திறனை ஆண்டுக்கு 1500 கன மீட்டராக எடுத்துக்கொள்வதன் வாயிலாகவும் தனித்தனி வெனீர் அலகுகளுக்கான மொத்த மரத்தேவையினை மதிப்பிடலாம்.

வட்ட மரத்துண்டுகள் வெனீர் அலகுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஒரு ஒட்டுப்பலகை அலகிற்கு மரத்தேவை 'ஒன்றுமில்லை' என எடுத்துக்கொள்ளப்படலாம். மேலும் ஒட்டுப்பலகை அலகுகள் இரண்டாம் பயனர்களாகவே இருக்கின்றன. அவை வெனீர் உற்பத்திப் பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துகின்றன. ஒட்டுப்பலகை தொழிலகங்கள் 8x4x6, 8x4x12, 8x4x15, 4x4x7, 4x4x10.A, 8x4x10, போன்ற பல்வேறு அளவுகளில் அழுத்தும் திறன் கொண்ட அழுத்து இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு 8'x4' அளவிலான 10 ஒட்டுப்பலகைத் துண்டுகள் தயாரிக்கும். அதே நேரத்தில் 8x4x15 அளவிலானஅழுத்தத் திறன் கொண்டவை ஒரு மணி நேரத்திற்கு 8'x4' அளவுள்ள 15 ஒட்டுப்பலகை தயாரிக்க முடியும். ஒட்டுப்பலகை தொழிலகங்களின் இயல்பான நிறுவப்பட்ட திறன் என்பது எண்ணிக்கை மற்றும் அழுத்தும் இயந்திரங்களின் வகையைப் பொறுத்தது. ஒவ்வொரு ஒட்டுப்பலகை அலகிலும்5 நிறுவப்பட்டுள்ள அழுத்து இயந்திரங்களின் வகை மற்றும் அவற்றின் எண்ணிக்கை குறித்து மதிப்பிடப்படலாம் அதன் பின்னர், அதற்குச் சமமான எண்ணிக்கை அல்லது 8x4x10 திறன் கொண்ட அழுத்து இயந்திரங்களை கணக்கிடலாம். 8x4x10 திறன் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த ஒட்டு பலகை அலகிற்கான ஆண்டு மரத்தேவை ஆண்டுக்கு 2000 கன மீட்டராக எடுத்துக் கொள்ளப்படலாம், அதன்படி ஒட்டு பலகை அலகுகளுக்கான மொத்த மரத்தேவைகள் கணக்கிடப்படவேண்டும்."

ஷம்பு கல்லோலிகர், அரசு முதன்மைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள், இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்

அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

Cite this issue. Tamil Nadu Gazette, Government of Tamil Nadu, 25 March 2020. Indian Gazettes, https://egazette.servantsofknowledge.in/details/in.gazette.tamilnadu.2020-03-25.Ordinary_13_Part-III_Section-1a-Sup./. Archive identifier in.gazette.tamilnadu.2020-03-25.Ordinary_13_Part-III_Section-1a-Sup..